Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1474

குளிர் பழக்கப்பட்டுப் போச்சாமே........ சிவ சிவா......

$
0
0
பொதுவா  ஜூன் மாசத்தில்    குறிப்பிட்டுச் சொல்லும்படியான  பண்டிகைகளோ, விழாவோ வர்றதில்லைதான். ஆனால் இந்த வருஷம்  நம்ம கோவில் விசேஷம் ஒன்னு வந்துருக்கு !  சிவலிங்கம் ப்ரதிஷ்டை !!!
எங்கூர் மக்களுக்கு அருள் செய்ய சிவன் வந்துருக்கார்.  ஆக்லாந்து நகரில் இருக்கும் ஒரு ஃபிஜி நண்பரின் அன்பளிப்பு !   நம்ம மஹாமாரியம்மன் கோவிலின் ஆஸ்தான பூஜாரி திரு ஷிவ் பிள்ளை, சிவனோடு இங்கே வந்துருக்கார் ! 

பாருங்க....   அரசு கணக்குப்படி  ஜூன் முதல் குளிர் இங்கே ஆரம்பம்.  இந்தக்குளிரில் இங்கே சிவன்  வரணுமா ?  ஆமாவாம்.  கைலாயத்தில்   குளிருக்குப் பழக்கப்பட்டுப் போனவராம் !  

இப்பதான் ஒரு ஒன்னரை மாசத்துக்குமுன் மதுரை வீரனும், மஹா மாரியம்மனும் நம்ம கோவிலில் ப்ரதிஷ்டை ஆனாங்க.  இவுங்களைப் பிரிஞ்சு இருக்கமுடியாமல் சிவன் பின் தொடர்ந்து வந்துருக்கார் !  ரொம்ப சந்தோஷமா இவருடைய பிரதிஷ்டையில் கலந்து கொள்ளக் கிளம்பிட்டோம்.

முதலில் மஹாமாரியம்மனுக்கு அபிஷேகம், அப்புறம்  சிவலிங்க பிரதிஷ்டைன்னு நிகழ்ச்சி நிரல்.
கோவிலுக்குப் பக்கம் கூடாரம் போட்டாச்சு.  இங்கே இதைப்போலக் கூடாரம் போடும்  கம்பெனிகளில் இருந்து வாடகைக்கு எடுக்கறோம்.  அவுங்களே கொண்டு வந்து போட்டுவிட்டு, அப்புறம் பிரிச்செடுத்தும் கொண்டு போயிடுவாங்க.  கொஞ்சம் செலவு பிடிக்கும் சமாச்சாரம்தான்..... ஆனால் எங்களுக்கு வேற வழி இல்லை.  நிரந்தரமா ஒரு இடம் மாரிக்குக் கிடைச்சபின்தான்  கட்டடமாக்  கட்டுவதை ஆரம்பிக்கணும். 

நாங்க  போய்ச் சேர்ந்தப்பக் கூடாரத்தில்  ஹீட்டர் பத்த வைக்கிறாங்க.  சூடே தெய்வம்னு சுத்தி நின்னோம். 


அம்மனுக்கு அபிஷேகம் ஆரம்பம் ஆச்சு.  வாசனைத் தைலத்தில் ஆரம்பிச்சு, மஞ்சள், பால், தயிர், தேன், சந்தனம்,  இளநீர், பஞ்சாமிர்தம்னு  எல்லாம் கிரமப்படி !  நம்ம பொண்ணு மிஷல், இப்போ நம்ம பூஜாரி ஐயாவுக்கு அசிஸ்டண்ட் ஆகிட்டாள்.  சின்ன வயசில் இறை ஈடுபாடு ரொம்ப நல்லதே ! 







திரை போட்டு அலங்காரம் ஆரம்பிச்சது. எப்படியும் அரைமணி நேரமாவது ஆகும்.  அதுவரை, ராமாயணம் வாசிப்பு !  ஃபிஜி மக்களுக்கு  எந்த பூஜை, எந்த விழா, எந்த நிகழ்ச்சி என்றாலும் ஸ்ரீ ராமாயணம் வாசிப்பு  உண்டு.  குளிருக்கு இதமா டீ   விநியோகம் !




நல்ல பெரிய பாணலிங்கம் !  பார்த்தவுடனே நம்ம இலங்கைப் பயணத்தில் காயத்ரி ஆஷ்ரமத்து 108 பாணலிங்கங்கள்  மனசுக்குள் வராமல் இருக்குமோ ?   
அன்றைக்கு வேலைநாளாக இருந்ததால்....   கொஞ்சம் லேட்டாத்தான் மக்கள்ஸ் வந்து சேர்ந்தாங்க. 








சிவலிங்கத்துக்கு அபிஷேகம் ஆரம்பமாச்சு. குடங்குடமாப் பாலும் தேனும் தயிரும், இளநீருமா  அபிஷேகம் நடப்பதைக் கண்குளிர தரிசித்தோம். 

 அபிஷேகம் முடிஞ்சதும் நம்ம மதுரைவீரன்  வீரன் இருக்கும் மேடையின் இடப்பக்கம்  தனி மேடையில் சிவன் குடிபுகுந்தார். கருவறையைக் கவனிக்கிறார்!   கண்ணோடு கண் நோக்க...... 
கிடைக்கும் மலர்களால்  அலங்காரம் ஆச்சு.  இனி தாராபிஷேகத்துக்கு கூரையில் கொக்கி போடணும்.  அதுவும் விரைவில் நடக்கும் ! 
பக்தர்களுக்கான மஹாப்ரஸாதம் மகளிர் குழுவினரின்  ஏற்பாடு....  இவுங்க உழைப்பைப் பாராட்டியே ஆகணும்.  இந்தக் கோவில் நம்ம தென் இந்திய சன்மார்க  ஐக்கிய சங்கத்தைச் சேர்ந்ததுன்னு உங்களுக்குத் தெரியும்தானே !


தென்னாடுடைய சிவனே போற்றி!   என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி ! 
ஓம் நமசிவாய !!!!!



Viewing all articles
Browse latest Browse all 1474

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


பில்லி சூன்யம் ஏவல்


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சேலம் அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது


ஆசீர்வாத மந்திரங்கள்


சென்னையில் வாழ்தல் –கடிதம்


திருச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக 10 அரசு...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்


கோவை எக்ஸ்பிரஸ் - திருநங்கை 2019 பதிவு சமீபத்திய பின்னூட்டங்கள்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>