மாதங்களில் நான் மார்கழின்னு மஹாவிஷ்ணு தன்னுடைய முத்திரை பதிச்சுக் கொண்டாட்டங்கள் நடந்து வரும் நேரம் அதே மார்கழியில் ஒரு தெய்வக்குழந்தை பிறந்தது. ஆச்சு ரெண்டாயிரத்துச் சொச்சம் வருசங்கள். சரியான தேதியும் காலமும் இன்னும் 100% ஒத்துவரலைன்னு சிலபல சர்ச்சுகள் சொன்னாலும் அநேகமா எல்லா மேற்கத்திய சர்ச்சுகளும் டிசம்பர் 25ன்னு உறுதிப்படுத்திருச்சு. கிழக்கத்திய கிறிஸ்தியன் சர்ச்சுகள் ஜனவரி 6 ன்னு ஒரு பனிரெண்டு நாள் பிறப்பைத் தள்ளிப்போட்டு வச்சுருந்துச்சுன்னாலும் கடைசியில் அவுங்களும் டிசம்பர் 25க்கே வந்து சேர்ந்துக்கிட்டாங்க. அதனாலெ என்ன? அதுவும் மார்கழியில்தானே வருது பார்த்தீங்களா!
கிறைஸ்ட்சர்ச்சில் ஒரு கிறிஸ்துமஸ்.
கிறிஸ்மஸ் என்றால் எப்படி உணர்கின்றீர்கள் என்று உள்ளூர் மக்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்துனா 98 சதம் மக்கள் சொன்னது ஹாலிடேஸ்! உண்மைதான். எங்களுக்கு இப்போ கோடை காலம். வராது வந்த மாமணியா சூரியன் காயும்போது கிறிஸ்மஸ் பண்டிகையை ஒரு சாக்கா வச்சு வெளிச்சத்தைக் கொண்டாடி மகிழ்வதுதான் நிஜம். விடுமுறையை வேணாமுன்னு சொல்வாருண்டோ? நடுக்கும் குளிரா என்ன கோவிலுக்குள் போய் அடைஞ்சுக்க:-))))
நம்ம கேரளா க்ளப்பில் கிறிஸ்மஸ் பார்ட்டி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களோடு சனிக்கிழமை இரவு. அதற்கு ரெண்டு நாளுக்கு முன்னே ராத்திரி பத்தரைக்குக் கேரளா க்ளப் பாய்ஸ், வீட்டு முற்றத்தில் வந்து கேரல்ஸ் பாடினாங்க. வேலை நாள் என்பதாலும் நிறைய வீடுகளுக்குப்போய் பாடி வருவதாலும் லேட்டாயிருச்சுன்னு சொன்னதை நானும் கணக்காக்கலை கேட்டோ:-)
எட்டு, ஒன்பது வருசங்களுக்கு முன்னே ஆரம்பிச்ச பரிபாடி, அந்த வருசத்தோடு நின்னு போய் இப்போ மறுபடி ஆரம்பிச்சது வளரே நன்னாயி.
எங்கூர் பேரே கிறைஸ்ட்சர்ச் என்பதால் நிலநடுக்கத்துக்கு இந்த சர்ச் என்னும் சொல் ரொம்பவே பிடிச்சுப்போய் குலுக்கி எடுத்துருச்சு. அதுக்காக மூலையில் முடங்க முடியாது. எங்கூர் மக்கள் எதற்குமே கலங்கமாட்டாங்க. இட் இஸ் நாட் எண்ட் ஆஃப் த வொர்ல்ட் (It is not end of the world) என்பதே எங்கள் தாரகமந்த்ரம். அதனால் கிறிஸ்மஸை இந்தச் சர்ச்சுகளாவது குறைஞ்சபட்சம் கொண்டாட வேணுமா இல்லையா? இடிபாடுகளுக்கிடையில் ஒரு கிறிஸ்மஸ் மரம் வச்சாலும் போதும். அப்படியே ஆகட்டுமுன்னு ஆண்டவன் ஆசீர்வதிச்சுட்டார்.
நாங்களும் கிறிஸ்மஸ் மரங்களைப் பார்க்கக் கிளம்பினோம். கண்ணில் பட்டவை யாவும் உங்களுக்கே!
இன்று மாலை 6 மணி முதல் கடைகண்ணிகள் எல்லாம் மூடியாச்சு. இனி நாளை கழிஞ்சு மற்றநாள் காலை 9 மணிக்குத்தான் கடைத்திறப்பு. அமைதியா இருக்கும் நகரத்தை ஒரு வலம் வந்தோம். விதவிதமான கிறிஸ்மஸ் மரங்கள். கண்டெய்னர் மாலில் கண்டெய்னர்கள் மீதெல்லாம் மரங்கள் இடம்பிடிச்சு உக்கார்ந்துருக்கு.
மாலில் அழிவுக்குத் தப்பிப்பிழைச்ச கட்டிடமான பாலன்டைன் ஸ்டோரில் மட்டும் வழக்கம்போல் கிறிஸ்மஸ் அலங்காரங்கள் இருந்தன. எல்லாம் இயக்கம் உள்ள அலங்காரங்கள். புதுசா வெளிப்புறச் சுவரில் முழுசுமா கேன்வஸ் ப்ரிண்டிங் படங்கள், சூப்பர் போங்க!
ஃப்ரெண்ட்ஷிப் கார்னர்ன்னு ஒரு இடத்துக்குப்பெயர் இருக்குன்றதையே இன்னிக்குத்தான் பார்த்தேன். இதுக்குத்தான் தரையைப்பார்த்து நடக்கணுமுன்னு எங்க அம்மம்மா தலைதலையா அடிச்சுக்கிட்டாங்க. மதிச்சுக் கேட்டுட்டாலும்...........
லேட்டிமர் சதுக்கத்துக்கத்துலே கேரல்ஸ் பை கேண்டில் லைட்ஸ், கிறிஸ்மஸ் ஈவ் ஸ்பெஷல் நடந்துக்கிட்டு இருக்கு. லேசான மழை ஆரம்பிச்சதுன்னாலும் அசராம உக்கார்ந்து கேட்கும் மக்கள் கூட்டம்! ( அஞ்சு பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்று கொள்க! ) ஆபத்து ஏற்பட்டால் உடனடி உதவிக்கு ஆம்புலன்ஸ் ஒன்னும் ரெடி.
ஆர்ச் பிஷப் விக்டோரியா ஒத்தைக்காலில் நின்னு வீம்பு பிடிச்சுக் கட்டும் அட்டைக்கோவில் ஒரு பக்கம் வளர ஆரம்பிச்சுருக்கு. கதீட்ரல் இடிப்பைத் தாற்காலிகமா நிறுத்தி வச்சுருக்கு கோர்ட் என்றாலும் விட்டேனா பார்ன்னு ஸேவ் த கதீட்ரல் குழுவோடு (நானும் இதுலே இருக்கேன்) சண்டை! இப்ப கிறிஸ்து பிறப்பு சமாதானகாலம் Peace On Earth enpathaal ரெண்டு வாரத்துக்கு Truce :-)
வீட்டுக்குப் பக்கம் இருக்கும் சர்ச்சுலே இப்படி ஒரு மரம். நாங்களும் சிம்பாலிக்காச் சொல்வொம்லெ!
ஆனால்..... செயிண்ட் ஜேம்ஸ்லே ஒன்னு வச்சுருக்காங்க பாருங்க............. அழிவில் இருந்து....
நல்ல கிரியேட்டிவிட்டி! யாருடைய ஐடியாவோ அவுங்களுக்கு இனிய பாராட்டுகள்.
பதிவுலக நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் மெர்ரி க்றிஸ்மஸ்
