எங்க நியூஸியில் எனக்கு ரொம்பப்பிடிச்ச ஒரு வழக்கம் இருக்குதுங்க. எதாவது ஒரு போட்டியில் எடுத்துக்காட்டா உலகக்கோப்பை ஆட்டத்தில் வெற்றின்னு வச்சுக்குங்க... அந்தக் கோப்பையை நாடு முழுவதும் இருக்கும் நகரங்களுக்குக் கொண்டுவந்து காமிப்பாங்க.
மக்கள் வரிப்பணத்தில் இதுக்கும் ஒரு பகுதியை அரசு செலவழிக்குதில்லையா? அதனால் இதைப் பார்க்கும் உரிமையும் நமக்கு வந்துருது பாருங்க:-)
நடந்து முடிஞ்ச ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளில் நியூஸி 13 பதக்கங்களை ஜெயிச்சுருக்கு.
ஆறு தங்கம்
ரெண்டு வெள்ளி
அஞ்சு வெண்கலம்.
உலகளவில் பதக்கப் பட்டியலில் நியூஸி பதினைஞ்சாவது இடம் பிடிச்சுருக்கு.
நாலே மில்லியன் சனம் இருக்கும் சின்ன நாட்டுக்கு இது மகத்தான வெற்றின்னே நான் நினைக்கிறேன்.
லண்டனில் இருந்து திரும்பி வந்த விளையாட்டுக்காரகளுக்கு அரசு தரப்பில் முதல் வரவேற்பு இங்கே நம்மூரில் (கிறைஸ்ட்சர்ச்) இன்னிக்கு நடக்குது.இப்போ அதுக்குப்போய்வந்துதான் அவசர அவசரமா இந்தப்பதிவை எழுதறேன்.
சுடச்சுடத் தருவதில் உள்ள மகிழ்ச்சி எனக்கு வேணாமா? :-))))
அதென்ன பெரிய ஊரான ஆக்லாந்தை விட்டுட்டு நமக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைச்சதுன்னா.... நம்மூர்தானே மெயின் லேண்ட். அதுக்காகவோ?
ஊஹூம்..... நாம்தான் நிலநடுக்கப்புகழ் ஊரா ஆகிட்டோமே:( நடந்து போன அழிவுகளால் மனம் உடைஞ்சு இருக்கும் மக்களைக் கொஞ்சமாவது மகிழ்ச்சிப்படுத்தணுமுன்னு அரசு எடுத்த முடிவு இது.
நகர மையம் இப்போ இல்லாததால் கொஞ்ச நாளா விசேஷங்கள், விழாக்கள் எல்லாம் கிறைஸ்ட்சர்ச் ஹேக்ளி பார்க்கில் (பொட்டானிக் கார்டன்) நடக்குது. போன வாரம் முழுக்க விடாமல் பெய்ஞ்ச மழையால் அங்கே நிறைய பகுதிகளில் தண்ணீர் சரியா வடியாமல் தேங்கி நிக்குது. நிலநடுக்கத்தில் ஊரின் வடிகால் குழாய்களுக்கும் ஆபத்து வந்துருந்துச்சே:( அவைகளைத்தான் முதலில் பழுது பார்க்கும் வேலை நடக்க ஆரம்பிச்சு இன்னும் நடந்துக்கிட்டே இருக்கு.
இதனால் ஹேக்ளி பார்க்கை ஒதுக்கிட்டு உள்ளூரில் இருக்கும் சிட்டிக்கவுன்ஸில் ஸ்போர்ட்ஸ் சென்ட்டர் ஒன்னில் விழாவை நடத்த முடிவு செஞ்சாங்க. வெள்ளிக்கிழமை (இன்னிக்குதான்) பகல் பனிரெண்டு முதல் ஒன்னரை வரை விழா.
கட்டாயம் போய்ப் பாருன்னு மகள் சொல்லிட்டு ரெண்டு முறை மின்மடலும் அனுப்பி நினைவூட்டினாள். தாய்க்கு, மேட்டர் தேத்தித்தர எவ்வளோ ஆர்வம் பாருங்களேன்:-))))
பதினொன்னரைக்குக் கிளம்பிப்போனோம். பக்கத்துத் தெருவிலே கிடைச்ச இடத்தில் வண்டியை நிறுத்திட்டு ஓடுனோம். அஞ்சு நிமிச நடையில் திடலில் கால் பதிச்சோம். அழகான சின்ன நீரோடைக்கரையில் அமைஞ்சுருக்கு இந்த பயோனியர் ஸ்போர்ட்ஸ் சென்ட்டர். Pioneer Recreation and Sport Centre.
பச்சைக்கார்பெட் வரவேற்பு:-)
நல்ல கூட்டம். இருபதாயிரம் இருக்குமுன்னார் கோபால். என் வழக்கபடி ரெண்டால் பெருக்கினேன். கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் எப்படியும் முப்பதாயிரம் வரும்! இன்றைய ஸ்பெஷலா வெளியே க்ரவுண்டில் பிள்ளைகளுக்குப் பொழுது போக்க,விளையாட ஏற்பாடுகள் செஞ்சுவச்சுருந்தாங்க. ஓட்டம், சாக்குப்பை ரேஸ், வாலி பால், ஃபுட் பால் இப்படி.
ஃபிட்னஸ் செஞ்சுக்க ரோயிங் சைக்ளிங் மெஷீன்களைப் போட்டு வருங்கால விளையாட்டுக்காரர்களை ஊக்குவிக்கும் வகை இன்னொரு இடத்தில்.
பெரிய திரை வச்சு நிகழ்ச்சிகள் ஓடிக்கிட்டு இருக்கு. உள்ளே செண்டரில் நடக்கும் நிகழ்ச்சிகள்தான். செண்ட்டர் உள்ளே வெறும் 700 பேர் மட்டுமே கொள்ளும் சின்ன இடம் என்பதால் இந்த ஏற்பாடு. நாம் கொஞ்சம் லேட்டாப்போயிட்டோம்:( உள்ளே ஹௌஸ் ஃபுல்!
வரும் மக்களுக்கு இலவசத்தீனி ஏற்பாடு ஒரு பக்கம். சுடச்சுட சாஸேஜ்! இன்னொரு பக்கம் ரெண்டு காஃபி வண்டிகள்.
பள்ளிக்கூடங்கள் பல, பஸ் ஏற்பாடு செஞ்சு பிள்ளைகளைக் கூட்டி வந்துருக்காங்க. பலவகை நிறங்களில் சீருடைகள்.
பூம்பிஞ்சு முதல் மூத்தவர் வரை நிறைஞ்சு வழியும் கூட்டம். செல்லங்களுக்கும் குறைவில்லை.
நியூஸிலாந்து ஆர்மி பேண்ட் ஒன்னு வாசிக்க ரெடியா இருக்கு. தூக்கமுடியாத அளவு பெருசா இருக்கும் ஒரு இசைக்கருவியை வாசிக்கும் பெண்கள் நம்ம கெமெராவுக்கு ஆகா போஸ் கொடுத்தாங்க. ஒரு சிறுவனுக்கு அதை எப்படித் தூக்கி வச்சு வாசிக்கணுமுன்னு தெரிஞ்சுக்கணுமாம். நோ ஒர்ரீஸ்:-))))
சரியா பனிரெண்டுக்கு செண்ட்டர் உள்ளே மவொரி வரவேற்பு கொடுத்து விளையாட்டுக் குழுவை மேடை ஏத்துனாங்க. பதக்கம் வென்றவர்கள் முன்வரிசையில் நிற்க மொத்தக்குழுவும் (சுமார் 100 பேர்) மேடையில். அஃபிஸியல் ஒலிம்பிக் ஸாங் பாடப்பட்டது. நகரத்தந்தை வரவேற்றுப் பேசுனார்.
உள்ளூர் ரேடியோக்காரர்கள் நிகழ்ச்சிகளை நடத்திக்கிட்டும் பதக்கம் வென்றவர்களை நேர்காணல் செஞ்சுக்கிட்டும் இருந்தாங்க. முக்கிய கேள்வியா 'பதக்கம் வாங்க மேடையில் ஏறி நிற்கும்போது, நாட்டுக்கொடி கம்பத்தில் உயர்ந்து ஏறும்போதும் தேசிய கீதம் பாடும்போதும் எப்படி உணர்ந்தீங்க?'
பதில் சொல்லிட முடியுமா? அப்போ எவ்ளோ எமோஷனலா இருந்திருக்கும்? டிவியில் மெடல் செரிமனி பார்க்கும் போதெல்லாம் நானே எப்படி உணர்ச்சிவசப்பட்டேன்! இதுக்காகவே ராத்திரி ரெண்டு மணி வரையெல்லாம் முழிச்சுருந்தோமே!
உள்ளே நிகழ்ச்சி முடிஞ்சு வெளியே இருக்கும் நமக்காக விளையாட்டுக்காரர்கள் வெளிவரப்போவதாச் சொன்னாங்க. வாசிச்சுக்கிட்டு இருந்த நியூஸி ஆர்மி பேண்டை அம்போன்னு விட்டுட்டு இடப்பக்க வாசலுக்கு விரைந்தோம்.
போன முறையும் இந்த முறையும் வெற்றி வாகை சூடிய தங்க மங்கை வேலரி ஆடம்ஸ் (Valerie Adams shot put) இன்னும் நியூஸி திரும்பலை. ஐரோப்பாவில் நடக்கும் வேறு போட்டிகளுக்காக ஸ்விட்ஸர்லாந்தில் பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்காங்க. அவுங்களை சந்திக்க முடியலையேன்னு எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்.
மார்க் டொட் (Mark James Todd,equestrian )தான் முதலில் வெளியே வந்தார். 56 வயசு. இது ஆறாவது மெடல். 1984 1988 ( லாஸ் ஏஞ்ஜலீஸ், ஸியோல்) ரெண்டு ஒலிம்பிக்ஸ்களிலும் தங்கம் வென்றவர். ரெண்டு தங்கம், ஒரு வெள்ளி, மூணு வெங்கலம் இதுவரை!
பாராட்டிட்டு மெடலைத் தொட்டுப் பார்த்தேன். வெண்கலம்!
அடுத்து வந்தவர் முகத்தைக்கூடக் கவனிக்க முடியாமல் அப்படிக்கூட்டம். என் கண்ணு மட்டும் தங்கத்துலேயே இருந்துச்சு. தொட்டுத் தூக்கிப்பார்த்தேன். யம்மா..... நல்ல கனம் 400 grams! அம்பது பவுனா???
ஊஹூம்....உள்ளே பூராவும் வெள்ளி. ஆறு கிராம் தங்கத்தை மேலே பூசி இருக்காங்களாம்.
வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்த கோபாலிடம், மெடலைத் தொட்டுப் பாருங்கன்னேன். வாழ்க்கையில் இது போல இன்னொரு ச்சான்ஸ் கிடைக்குமா? தொட்டுப் பார்த்தார்.
எங்கூர் மக்கள்ஸ் கொஞ்சம் வெகுளிகள்தான். தங்கம் ஜெயிச்சுட்டோம் என்ற மண்டைகனம்கூட இல்லை. நான் பதக்கத்தைத் திருப்பித்திருப்பிப் பார்க்கும் வரை அப்பாவியாக் காத்திருந்தார்.
இந்த நிகழ்ச்சி முடிவடைஞ்சதும் வெற்றிபெற்ற ஆட்டக்காரர்களை சில குழுக்களாப் பிரிச்சு சில முதியோர் இல்லங்கள், சில பள்ளிக்கூடங்கள், எங்கூர் பொது மருத்துவமனை இங்கெல்லாம் கூட்டிப்போறதா ஏற்பாடு.
வரமுடியாதவர்களை அப்படிக் கண்டுக்காம விட முடியுமா சொல்லுங்க? இதுகூட எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு பிடிச்சிருக்கு.
மனசு பூரா மகிழ்ச்சியா அங்கிருந்து கிளம்பினேன். நீரோடையில் ஒரு வாத்து நீந்தும்போட்டிக்குப் பயிற்சி செஞ்சுக்கிட்டு இருந்துச்சு. ஃப்ரீ ஸ்ட்ரோக். கோ ஃபார் கோல்ட் ன்னு சொல்லிட்டு வந்தேன்:-)
![]()