அன்பு நட்புகளுக்கு,
துளசி டீச்சர் எழுதிக்கொள்வது.
நீங்கள் அனைவரும் நலம்தானே?
உங்கள் அபிமான(? !!) துளசிதளம் தன்னுடைய பத்தாண்டு பயணத்தை முடித்து பதினொன்றாம் ஆண்டில் காலெடுத்து வைத்துள்ளது. நீங்கள் இதுவரை அளித்த அன்பும் ஆதரவும் இனி வரும் ஆண்டுகளிலும் முன்பு போலவே தொடர வேண்டும் என்று எம் பெருமாளை வேண்டுகின்றேன்.
இப்படிக்கு ,
உங்கள் டீச்சர்,
துளசி.
கடிதம் எழுதிக் கனகாலமாச்சேன்னு எழுதிப் பார்த்தேன். சரியா வரலை. அதுவும் எழுத்துக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கு பாருங்க அந்த மொழி இப்பெல்லாம் உண்மைக்குமே வரமாட்டேங்குது:( பத்து வருசம் 'பேசிப்பேசி'உங்களையெல்லாம் படுத்துனதுக்கு இப்படி ஆகும் போல:-))
இன்றைக்கு நம்ம கோபாலின் பிறந்தநாளும் கூட. அதான் துளசி(தளத்தை)யும் கோபாலையும் பிரிக்கமுடியாமல் வச்சுட்டேனே:-)
நம்ம வல்லியம்மா, அன்பின் மிகுதியால் முகநூலில் நம்ம பொறந்தநாளை கடந்த ரெண்டு நாளாக் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. இந்த அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யமுடியும், சொல்லுங்க?
இந்த நட்பும் அன்பும் எல்லாம் இணையமும், தமிழும், தமிழ்மணமும் கொடுத்த கொடையல்லவோ!!!
தன்னுடைய பிறந்தநாளுக்கு 'அங்கே'வாழ்த்திய அனைவருக்கும் கோபால் தன் இனிய நன்றியையும் அன்பையும் என் மூலம் தெரிவித்துக் கொள்கின்றாராம்.
வாசக அன்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

.jpg)