Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1475

கள்ளி மலருக்குக் கொண்டாட்டம்.....

$
0
0
இது கள்ளி பூக்கும் காலம்! நல்ல வெய்யில் இல்லை என்றால் கள்ளி பூக்கவே பூக்காது. ஆனால் நம்ம வீட்டில் பூத்துருக்கு. அப்படி என்ன வெயில் காயுதான்னு பார்த்தால் ஊஹூம்..............  பின்னே?

க்ரீன் ஹௌஸ்(பச்சை வீடு) போட்டதன் பலன் இது!  வெளியே பதினெட்டு, பதினாலுன்னு இருந்தாலும் அந்த வூட்டுக்குள்ளே முப்பது, முப்பத்தியஞ்சு, சிலநாள் நாப்பதுன்னு    கனகனன்னு கிடக்கு.    நாலைஞ்சு வகைகள் பூத்து நிக்குது.





அதுலே  ஒன்னு பகலில் மலர்ந்து, வெயில் தாழ மூடிரும்.  இன்னொன்னு  ஜஸ்ட் ஒரே ஒருநாள் மட்டும் பூ த்து, அன்றைக்கு மாலையோடு கதை முடிஞ்சது.  இன்னொன்னு ஏராளமா மொட்டுகள் விட்டு  தினம் நாலைஞ்சா பூக்குது. சிலநாட்கள் அப்படியே இருந்துட்டு,  பின்னே ஒவ்வொன்னா  காய்ஞ்சு போறதுதான்.

ஒரே ஒரு  கள்ளியைத் தவிர மற்றவையெல்லாம் என்னமோ சொல்லி வச்சாப்லெ பிங்க் நிறப் பூக்களே!








பச்சை வீட்டுக்குள்  ரொம்ப சூடா இருக்கேன்னு சில பல செடிகளை எடுத்து வெளியில் வச்சுட்டு, இடம் பாழாப்போகுதேன்னு  ஒரு கட்டில் போட்டு வச்சோம்.  என்னமோ தனக்குத்தான் போட்டுருக்காங்கன்னு  ரஜ்ஜுவுக்கு நினைப்பு:-)





முந்தி இப்படித்தான் மொட்டு விட்டு மலரும் நாளுக்கு முன்  திடீர்னு  பனிமழை. மொட்டு அப்படியே  கருகிப்போச்சு:( இத்தனைக்கும் அது ஏப்ரல் மாசம்தான்.  எங்கூர் இலை உதிர்காலம்.










இந்த வருசம் என்னமோ   அக்டோபர் முதல் வாரம்வரை  ஃப்ராஸ்ட், குளிர் என்று இருந்தாலும்  கடந்த ஒரு வாரமா பரவாயில்லாம  இருக்கு. இந்தக் காலநிலை இன்னும் சில மாசங்களுக்காவது 'நிலைச்சு'நின்னால்  கள்ளிகளுக்குக் கொண்டாட்டம்!


சரியான கள்ளிச் செல்லம்மா:-)))))




Viewing all articles
Browse latest Browse all 1475

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>