உள்ளூர் சமாச்சாரம் இது. முக்கியமான விஷயத்தை விவாதிக்கணும். சனிக்கிழமை 2 மணிக்கு வந்து சேருங்கன்னு கோவிலில் இருந்து கடுதாசி வந்தது.
கோவிலில் இருந்துன்னா.... கோவில் கட்டடத்தில் இருந்து இல்லை. ஏது கட்டிடம்? அதான் நிலநடுக்கத்தில் இடிஞ்சு போயிருச்சே.
அஞ்சு வருசமாச்சு இப்பப்போன ஃபிப்ரவரி 22 ஆம் தேதியோடு.
இடிபாடுகளை அகற்றி, நிலத்தைச் சரி செய்யுமுன் இன்ஷூரன்ஸ் கிடைக்கக் காத்திருந்தோம். ஒரு வழியா கிடைச்சது. ஆனால் விலைவாசி ஏறிக்கிடக்கும் இந்நேரத்தில் கிடைச்ச காசு புதுசு கட்டப்போதுமா என்ன?
சொந்த நிலம் என்பதால் அங்கேயே புதுசு கட்டிடலாமுன்னு இருந்தோம். கட்டடத்துக்கான திட்டம், வரை படம் எல்லாம் முடிச்சுக் கவுன்ஸில் அனுமதிக்கு அனுப்பி ஒரு வழியா அது பாஸ் ஆகி வந்ததும், நிலத்தைச் சீர்படுத்தி, இடிஞ்சு விழுந்த கட்டடக் குவியல்களை வாரிப்போட்டுன்னு எல்லாம் ஆச்சு.
போன வருசம் மார்கழியில் பூமி பூஜையும் ஆச்சு, தெரியுமோ? தெரியாதவர்கள்இங்கே க்ளிக்கலாம் :-)
கவுன்ஸில் அனுமதி கிடைச்ச ஆறு மாசத்தில் கட்டட வேலை தொடங்கணும். அதுக்கப்புறம் எவ்ளோ நாளானாலும் பிரச்சனை இல்லை. அதான் வெட்டு குழியைன்னு...... சேஷனை இறக்கியாச்சு.
அதுக்குப்பிறகு அந்த பக்கம் போகும்போதெல்லாம் கதி என்னன்னு பார்த்துட்டுப் போறதுதான்.
கோவில் சமாச்சாரங்கள் எல்லாம் மின்மடலில் அனுப்பி வச்சுக்கிட்டுத்தான் இருந்தாங்க. கோவில் கட்டடம்தான் இல்லையே தவிர பூஜைகள், வெளிநாட்டு இஸ்கான் முக்கியஸ்தர்கள் வருகை, சொற்பொழிவுகள், பகவத் கீதை வகுப்புகள் எல்லாம் வழக்கம்போல்.... வீடுகளிலும், கிடைக்கும் சமூகக்கூடங்களிலுமா இடைவிடாமல் தொடர்ந்தது.
இன்றைய மீட்டிங் கூட ஒரு சமூகக்கூடத்தில்தான். ரெண்டு மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். ஒரு அம்பது பேர் வருகை.
போகும் வழியிலேயே புதுக்கோவில் வளர்ச்சியை எட்டிப் பார்த்துட்டுத்தான் போனோம்.
கடவுள் வாழ்த்தாக வழக்கமாப் பாடும் பாடலைப்பாடினோம். பெங்காலி மொழியில் உள்ளதை வெள்ளைக்கார உச்சரிப்பில் வழவழா கொழகொழான்னுதான் பாடிக்கிட்டு இருக்காங்க. ரொம்ப ஓசை வேணாமுன்னு ஒரே ஒரு ஜால்ரா.
nama om vishnu-padaya krishna-preshthaya bhutale
srimate bhaktivedanta-swamin iti namine
namas te saraswate deve gaura-vani-pracharine
nirvishesha shunyavadi pashchatya desha tarine
முழுப்பாட்டையும் பாடி முடிச்சு ஹரி போல் சொல்லி, அனைவரையும் வரவேற்று இப்ப இருக்கும் தலைவர் கோவில் கட்டடம் அநேகமா இந்த டிஸம்பர் மாதம் முடிஞ்சுரும். அப்ப இங்கே வருஷாந்திர விடுமுறை சீஸன் என்பதால், கட்டிமுடிச்சதை இன்ஸ்பெக்ஷன் செஞ்சு இனி இதைப்பயன்படுத்திக்கலாமுன்னு அனுமதி வழங்குவதில் தாமதம் ஆகிரும் என்றார்.
இங்கெல்லாம் எந்தக் கட்டடம் கட்டினாலும் ஒவ்வொரு முக்கிய நிலை முடிஞ்சாட்டு ஒரு இன்ஸ்பெக்ஷன் நடக்கும். இப்படி அஞ்சு முறை. கடைசிக்குத்தான் ஜனவரியில் காத்திருப்பு.
மார்ச் மாசம் திறப்பு விழா வச்சுக்கலாமுன்னு ஏகமனதா முடிவெடுத்தாச்சு. மூணு நாள்விழா. அதுலே என்னென்ன நிகழ்ச்சிகள் வைக்கலாம் என்பதற்கான ஆலோசனைகள் கேட்டாங்க.
மேலும் விழா சம்பந்தப்பட்ட வேலைகளில், சுத்தப்படுத்துதல், கோவிலுக்குப் பூக்கள் அலங்காரம், ஸ்வாமி சிலைகளுக்கு பூமாலை தயாரிப்பு, வரும் விருந்தினரைத் தங்கள் வீடுகளில் தங்க வைக்க விருப்பம் உள்ளவர்கள், சமையல் வேலைகளில் உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் என்று எல்லா வேலைகளுக்கும் தன்னார்வலர்கள் தங்கள் பெயரைப் பதிவு செஞ்சுக்கச் சொன்னாங்க. ஹால் சுவரில் ஒட்டி வச்சுருந்த போஸ்டர் தாளில் எதுக்கு உதவப்போறோமுன்னு எழுதி வைக்கணும்.
நம்மவர் சமையல் வேலைகளில் உதவி (!!!) செய்யப்போவதாகச் சொல்லி பேரை எழுதி வச்சார். 'நீ என்னம்மா செய்யப்போறே?'ன்னதுக்கு, கோவிலைப் பத்தி எழுதப்போறேன்னு சொன்னேன். நம்ம தொழில் எழுத்து இல்லையோ!
கோவிலுக்கான வெப் சைட் ஒன்னு ஆரம்பிச்சு வச்சுருப்பதை ஒரு இளைஞர் சொல்லி அது எப்படி இருக்கும்னு விளக்கிக்காட்டினார். வெப் டிஸைனிங் செய்யறாராம்.
இப்பதான் க்வாட்டர் வருது!
டாக்டர் மண்டேலா வொயிட் என்ற பக்தர் ( மந்திரா மணி தாஸி) என்பவர், கோவில் வேலைகள் முழுசும் நல்லபடியாக முடிக்கணுமுன்னா இன்னும் ஒரு கால் மில்லியன் தேவைப்படுதுன்னு சொன்னாங்க. அதுக்கான நிதி வசூலுக்கு ஒரு கம்பெனியை ஏற்பாடு செஞ்சுருப்பதாகவும், அவுங்களோட பக்கத்துலே போய் இவ்ளவு தரேன்னு பதிஞ்சுட்டு நம்ம வங்கிக் கணக்கு கொடுத்தால் போதுமுன்னு சொன்னாங்க.
க்வாட்டர் மில்லியன் வேணும். அதுக்காக ஒரு கம்பெனியை வசூலிக்கச் சொல்றது சரி இல்லைன்னு நம்மவர் சொன்னார். என் பிரச்சனை என்னன்னா.... ஒரேதா காசு கொடுன்னு சொல்றதை விட, சின்ன அளவில் கொடுங்கன்னு கேட்டா யாரா இருந்தாலும் சட்னு கையில் இருப்பதைக் கொடுக்கத் தயாராத்தான் இருப்பாங்க. கேஷா கொடுக்கறவங்ககிட்டே, 'வேணாம்...நீ பேங்க் அக்கவுண்ட் கொடுத்து அதுலே இருந்து பணம் அனுப்புன்னா கொஞ்சம் யோசனையாத்தானே இருக்கும் இல்லையோ! எனக்குள் இருக்கும் அந்நியள் பேசறாள். நூறு நூறு டாலரா ஒரு ஆயிரம் பேர் கொடுத்தால்..... பப்பப்பத்து டாலரா ஒரு பத்தாயிரம் பேர் கொடுத்தால்......
இதுதான் நியூஸியில் ஒரு பிரச்சனை. வீட்டு வாசலில் வந்து தர்ம கைங்கரியத்துக்கு பணம் வசூலிக்க வர்றவங்க, கேஷாக் கொடுத்தா வாங்கிக்க மாட்டாங்க. மாசாமாசம் இவ்ளோ தரோமுன்னு கமிட் பண்ணிக்கச் சொல்வாங்க. நாளைக்கு என்ன நடக்குமுன்னு யாருக்குத் தெரியும்? அப்படியெல்லாம் மாசாமாசம் பணம் கொடுக்க முடியுமா?
அதுவும் ஒரு சாரிட்டின்னாகூட ஓக்கே.... ஏகப்பட்டவைகளுக்கு ஆளாளுக்கு வந்து கமிட் பண்ணிக்கோன்னா எப்படி? எனக்கு எரிச்சல்தான் வரும். நம்மவர் இருந்தால் விளக்கம் எல்லாம் கேட்டு வாங்கிப்பார். நான் மட்டும் வீட்டில் இருந்தால் வெள்ளைக்காரன் கண்டுபிடிச்ச அதே வார்த்தையைச் சொல்லிருவேன். ஸாரி. இதேதான்..... எங்க சாமி பெருசுன்னு சொல்லிக்கிட்டு வர்ற கூட்டத்துக்கும்.
நான் என்ன தர்மம், எங்கே, எப்படிப் பண்ணப்போறேன்னு நாந்தானே முடிவு செய்யணும், இல்லையோ!
இன்னொருத்தர் வந்து, இளைய தலைமுறைக்கு எப்படி பக்தியை அடுத்துக் கடத்தப்போறோமுன்னு கவலையுடன் அதற்கான ஏற்பாடுகள் என்னென்னன்னு விளக்கினார். பவர் பாய்ண்ட் ப்ரஸன்டேஷன்.
பிள்ளைகளை என்னதான் பார்த்துப் பார்த்து வளர்த்தி எடுத்தாலும், சின்னக்குழந்தைகளா இருக்கும்போது நம்ம கூட கோவிலுக்கு வர்றது, சாமி கும்பிடறதுன்னு இருப்பவர்கள், வளர்ந்து பெருசாகி, தானே சிந்திக்கும்போது எப்படி மாறிடறாங்கன்னு சொல்ல எனக்கும் ஒரு அனுபவம் இருக்கோல்யோ?
சரி சரின்னு தலையாட்டிட்டு, நம்ம பண்டிட் கிஷோர் (தமிழ்க்காரர்) கிட்டே கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். குடும்பம் இப்போ இந்தியாவுக்குப் போயிருச்சு. பையன் ஊர்லே படிக்கிறானாம். இன்னொரு பக்தை லக்ஷ்மியுடன் (திருநெல்வேலிக்காரவுஹ) கொஞ்சம் பேசிட்டு, சாமி ப்ரஸாதம் வாங்கிக்கிட்டுக் கிளம்பினோம்.
Custard slices :-)
பார்க்கலாம் எப்படி இந்த ஃபண்ட் ரெய்ஸிங் போகுதுன்னு.... நமக்கும் ஒரு தொகை கோவிலுக்குக் கொடுக்கும் எண்ணம் இருக்கு. ஆனால் இந்தக் கம்பேனி மூலம்கொடுக்கும் எண்ணமில்லை. என்னதான் சாரிட்டின்னு சொல்லிக்கிட்டாலும், அவுங்களுக்கு ஒரு பகுதியைப் பிடிச்சுக்குவாங்க. அது வேணுமான்னு இப்போ.... யோசனை........
ஆங்.... சொல்ல விட்டுப்போச்சே.... இங்கே நம்மூருக்கு இந்த பக்தி இயக்கம் வந்து இப்ப ஆச்சு அம்பது வருசம்! அரை நூற்றாண்டு! ஸ்பெஷலா புதுக்கோவில் வேணுமுன்னு 'அவன்'தீர்மானிச்சுட்டான் !!!
ஹரி போல்! ஹரே க்ருஷ்ணா.....
![]()