நல்ல கூட்டம். நடராஜர் சந்நிதியில் பூஜைகள் ஆரம்பமாகி இருந்துச்சு. சுற்றிவர இருக்கும் திண்ணை போன்ற அமைப்பில்தான் நிற்க இடம் கிடைச்சது. ஆனால் பார்வையின் வீச்சு நேராப்போகும் உயரமான சந்நிதி. நமக்கிடப்பக்கம் கோவிந்தராஜன், 'எதுக்கு அங்கே நிற்கிறாய்? இங்கே வா' ன்னான். அட! இங்கியா இருக்கேன்னு ஓடினேன். பெருமாள் கோலாகலமாய் ரொம்ப ஹாயாப் படுத்துண்டு சேவை சாதிக்கிறார். கூட்டம் முழுசும் நடராஜரின் தீபாராதனையில் லயித்திருந்துச்சு. நான் இங்கொரு கண்ணும் அங்கொரு கண்ணுமாய்!
இசைக்கருவிகளின் ஒலியையும் மிஞ்சும் பக்தர்களின் குரல்.
ஓம் நமசிவாயா !!!!
கோவிந்தராஜன் பற்றி வந்த ஒரு சினிமா நீங்க எல்லோரும் பார்த்துருப்பீங்கதானே? கடலில் போட்டாலும் திரும்பி வந்துட்டார். சிவனின் ஆனந்த நடனம் பார்க்க வந்தவர் இவர். ஷோ முடிஞ்சால் எழுந்து போகலாமுன்னு பார்த்தால்.... எங்கே.... அவர் ஆடுவதை நிறுத்தினால்தானே?
நின்னு பார்த்துக் கட்டுப்படியாகாதுன்னு கிடந்தார் ! ஒரே படுத்த படுக்கை.
திருச்சித்திரக்கூடம் என்ற பெயர் இவருடைய கோவிலுக்கு. அந்த நூத்தியெட்டு (வைணவ திவ்ய தேசம்) கோவில்களில் இது இருக்கு. இவரைப்பாடவந்த திருமங்கை ஆழ்வார், ஷிவா டான்ஸுக்கு மேட்சா இருக்கட்டுமுன்னு சிவனுக்குப்'பிடிச்ச ' சங்கராபரண ராகத்திலேயே முதல் பத்து பாட்டு பாடிட்டுப்போயிருக்கார்! இங்கே அவர் பாடுனது மொத்தம் 32.
ஜோடியா நின்னு ஆடி மகிழ்ந்தால் போதாதா? பாதி உடம்பையே கொடுத்தவனுக்கு என்ன ஈகோ? " வர்றியா ரெண்டு பேரும் ஆடலாம். யார் ரொம்ப நல்லா ஆடறாங்கன்னு ரெண்டுலே ஒன்னு பார்க்கலாம்."
தீர்ப்பு சொல்ல மச்சானையே கூப்புட்டு வந்தால்? ஹாய் மச்சான்! சீக்கிரம் வாரும்! ஜட்ஜா வந்தவரும் சபாஷ் சரியான போட்டின்னு ஆட்டம் பார்க்க ஆரம்பிச்சார். நல்லாதான் போய்க்கிட்டு இருந்துச்சு ஆரம்பத்தில். அப்புறம் பெண்களுக்கே உரிய நளினமான நடன அழகில் எங்கே தங்கைக்கு ஓட்டு போட்டுருவாரோ என்ற நினைப்பில் அராஜக ஆட்டம் ஆட ஆரம்பிச்சார் நட 'ராஜர்'.
'சீச்சீ.... இப்படியெல்லாம் என்னால் கால் தூக்கமுடியாது' என்ற வெட்க உணர்வில் பார்வதி தயங்க..... ' த வின்னர் ஈஸ்.... ' ன்னு சிவன் பெயரைச் சொல்லிட்டார் கோவிந்த 'ராஜர்'. ராஜரும் ராஜரும் ராஜியா(வே) இருக்காங்க. பாவம் (திக்கற்ற ) பார்வதி.
வெற்றி தந்த எக்களிப்பில் கனகசபையில் நின்னு, ஓயாத நடனம். இந்த பொன் அம்பலத்துக்கு பொன் கூரை வேய்ந்து கொடுத்த சோழ மன்னருக்கு பொன்வேய்ந்த பராந்தகன் என்ற பெயரே நிலைத்துவிட்டதாம்.
21,600 தங்க ஓடுகள் ! அதைப்பொருத்த 72 ஆயிரம் பொன் ஆணிகள்.
கனகசபையின் மேல் கோபுரத்தைப் பார்த்தால் அங்கே ஒன்பது கலசங்கள் இருக்கு. வாம சக்தி, ஜ்யேஷ்ட சக்தி, ரெளத்ரி சக்தி, காளி, காலிவிகாரினி, பலி, பாலவிகரணி, பலப்ரமதனி, மனோன்மணி ன்னு நவசக்திகளை பிரதி்ஷ்டை செஞ்சுருக்காங்களாம். .
உட்கூரையில் குறுக்கும் நெடுக்குமா 64 விதமான மரத்தாலான உத்திரங்கள் அதில் வேலைப்பாடுகள்! இவை 64 கலைகளைக் குறிக்கும்.
21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும்.
72,000 ஆணிகள் . நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.
இப்படியெல்லாம் கணக்குச் சொல்லி நம்மை வாய் பிளக்க வைக்கிறார்கள்! .
கோவிலின் உட்பிரகாரத்தில் படம் எடுக்க வேணாமுன்னு அடங்கி இருந்தேன்.
மேலே உள்ள மூன்று படங்களையும் அருளிச்செய்த கூகுளாண்டவருக்கு நன்றிகள்.
வீர வைஷ்ணவர்களும் வீர சைவர்களுமா ஒருத்தரையொருத்தருக்கு ஆகாம இருந்த அந்தக் காலக்கட்டத்தில் சைவமும் வைணவமும் சேர்ந்து ' ஹம் தோனோ பாய் பாய்' ன்னு கூடிக் குலவுன இடம் இது என்பது ரொம்பவே விசேஷம்.எங்க அம்மம்மா (இன்னும் ) இருந்துருந்தால் இந்தக் கோவிலுக்குள் வந்துருப்பாங்களா என்பது சம்ஸயம்தான்.
தீபாராதனை முடிஞ்சதும் நடராஜ தீக்ஷதர் வந்து கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு ஒரு படிக்கட்டைக் காமிச்சுட்டுப் போனார். குடிக்கத்தண்ணி வேணுமுன்னு கோபால் கேட்டதுக்கு கொண்டு வரேன்னார். எதுக்கு திடீர்னு இவர் தண்ணி கேட்டாருன்னுகூட எனக்குப் புரியலை.பேசாம உக்கார்ந்து மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். எழுந்து போய் இன்னொருக்கா கோவிந்தராஜனைப் பார்த்திருக்கலாம். கொஞ்ச நேரம் கழிச்சு, ஷிவா என்ற பெயருள்ள இளைஞர் தண்ணி பாட்டில் கொண்டு வந்து நீட்டினார். தீக்ஷதரின் மகன். பார்த்தால் ரொம்பச் சின்னவயசாத் தெரியும் நடராஜ தீக்ஷதர்க்கு இவ்ளோ பெரிய மகனான்னு வியப்பு. அதிலும் இவர் இளைய மகனாம்!!!!
அது என்னவோ கண்ணில் விழுந்தது எதுவும் மனசில் படியாமல் ஒரு நிலை. பயணக்களைப்போ, இல்லை மகள் பத்திரமாப்போய்ச் சேரணுமே என்ற கவலையோ .... மணிவிழா நல்லபடியா நடந்து முடிஞ்சதும் டென்ஷன் விடுபட்ட தாலோ.... இல்லைன்னா என்னோட நெகடிவ் தாட்ஸ் எதாவது மூளைக்குள் ஒளிஞ்சுருந்து ஆடும் ஆட்டமோ... என்னவோ ஒன்னு.
மறுபடி தீக்ஷதர் வந்து மூலவருக்கு இடப்பக்கம் இருக்கும் வழியாக படிகள் மேலே ஏறிப்போகச் சொன்னார். ஆடும்சிவனை கொஞ்சம் அருகில் இருந்து பார்க்குமிடம். நடராஜ தீக்ஷதர் தாமே பூஜை செய்து தீபம் காமிச்சு சிவனின் வலப்புறம் இருந்த சிகப்பு நிற பட்டுத்துண்டை விலக்கி இது சிதம்பர ரகசியம். நல்லா பார்த்துக்குங்கோன்னு சொன்னார். ஒன்னுமே இல்லை!! ஆனால்ஒரு இலை போன்ற ஜொலிப்பு கண்ணில் பட்டது. அப்புறம் தெரிந்துகொண்டது அது தங்க வில்வ இலை மாலையாம்.
நடராஜரைத்தான் மூலவர் என்று நினைச்சேன். ஆனால் ஒரிஜினல்மூலவர் , லிங்க உருவில் திருமூலநாதர் என்ற பெயரில் சுயம்புவாக வளாகத்திலேயே தனிக்கோவில் கொண்டிருக்கிறார். பிள்ளையார் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கிப்போனபோது வலப்பக்கம் இருந்தது இவர்தான். அமைதியா இருந்தால் யார் கவனிக்கிறாங்க? ஆர்ப்பாட்டமும் வேண்டி இருக்கே! சிதம்பரம் கோவிலில் மவுசு என்னமோ ஆடும் சிவனுக்குத்தான்!
பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் வானம். வானத்துக்கு எல்லை இல்லாமல் எங்கெங்கும் விரிந்து பரந்திருப்பது போல கடவுள் எல்லா இடத்திலும் நீக்கமற இருக்கிறார் என்று உணர்த்துகிறது இந்த வெற்றிடம்.
ஆடும் சிவனின் இடப்பக்கம் சின்னதா ஒரு பகுதியில் அம்பாள் சிலை உருவங்கள் இருந்தன. அலங்காரம் அருமையா இருந்துச்சு. தரிசனம் முடிஞ்சு அந்தப்படிகள் வழியாகவே கீழே இறங்கி உள்பிரகாரத்தில் நின்னோம். தீக்ஷதர் வந்து நம்மைக்கூட்டிட்டுப்போய் பிரகாரத்தின் ஓரத்தில் பொன் கூரைக்கு எதிரில் உக்காரவச்சு சின்னதா ஒரு பூச்சரத்தை கோபாலுக்கு மாலையாப்போட்டு குடும்ப நலனுக்கான மந்திரங்களைச் சொல்லி பிரசாதங்கள் கொடுத்து நம்மை ஆசீர்வதிச்சார். நாங்களும் தட்சிணை கொடுத்து அவரை வணங்கினோம்.
திரும்ப எங்களை கோவிலுக்கு வெளியில் கொண்டு வந்து விட்டவர், தங்க இடம் வேணுமுன்னா புதுசா ஒரு இடம் இப்போ திறந்துருக்காங்கன்னார். கோபால் ஏற்கெனவே வேற இடம் வலையில் பார்த்து வச்சுருப்பதால் , ' அது சரி இல்லைன்னா உங்களுக்கு ஃபோன் செய்யறேன்'னு சொன்னதும் சரின்னு அவர் கோவிலுக்கும் நாங்கள் கார் நிறுத்ததுக்கும் கிளம்பினோம்.
இங்கே இந்தக்கோவிலில் அர்த்தஜாம பூஜை மற்ற எல்லா கோவில்களிலேயும் முடிஞ்சபிறகுதான் நடக்குமாம். நடராஜரின் பூஜைக்கு மற்ற எல்லாதெய்வங்களும் தேவதைகளும், ரிஷிகளும் முனிவர்களுமா வந்து கலந்துக்க உண்டான ஏற்பாடாம் இது. இந்த பூஜை ரொம்பவே அட்டகாசமா இருக்கும் என்பதோடு அப்போ நாமும் இங்கிருந்தால் அனைத்து தெய்வங்களின் ஆசிகளும் கிடைச்சிருமுன்னு ஒரு ஐதீகம். கட்டாயம் இந்த பூஜையைப் பாருங்கன்னு அபி அப்பா சொல்லி இருந்தார். இந்தப்பூஜைக்கு வேற ஒரு பெயர் சொல்லி இருந்தார் அபி அப்பா. எனக்குத்தான் நினைவில்லை:( ராத்திரி பத்து மணிக்கு இங்கிருந்தால் போதும் என்பதால் அறை ஏற்பாடுகளைப் பார்த்துட்டு வரலாமுன்னு இருந்தேன்.
க்ராண்ட் பேலஸ் ஹொட்டேல்! பேரே பிடுங்கித் தின்னுது! கோவிலில் இருந்து ஜஸ்ட் ஒன்னரைக்கிலோ மீட்டர் தூரம்தான். ஊருக்கு ஒதுக்குப்புறமா ரயில்வே ஸ்டேஷனைத் தாண்டி இருக்கு. நமக்குக் கொடுத்த அறையில் என்னவோ (துர்) மணம்:( மாடியில் இன்னொரு அறையைக் காமிச்சாங்க. அங்கே பாத்ரூமில் தண்ணிக்குழாய் சரி இல்லை. டிவியும் வேலை செய்யலை(யாம்) அப்புறம் முதல் மாடியில் அறை எண் 109. நாட் பேட். ஒரிரவுதான் தங்கல். இந்த அறை அறையா போன கலாட்டாக்களுக்கிடையில் நம்ம சீனிவாசன் ஓசைப்படாமல் போய் சாப்ட்டுட்டு வந்துருக்கார்.
ரூம் சர்வீஸ் ' மெனுத்தாள்' மேசை மேல் இருந்துச்சு. கிங்'ஸ் கிச்சன். ஓ..... கண்ணை ஓட்டினேன். ஆஃப்கான் மஷ்ரூம், ஆலுஜீரா, வெஜிடபிள் பால் மஞ்சூரியன்.... ஊஹூம்..... ராச்சாப்பாட்டுக்கு வேற எங்கியாவது போகலாமுன்னு கீழே வந்தால் ஒரு ஓட்டல்லே இட்லி ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு சொல்றார் சீனிவாசன். சரி அங்கேயே போகலாமுன்னு நாங்களும் கிளம்பினோம்.
தில்லை ஸ்ரீ கணேஷ் ! பரவாயில்லாம கொஞ்சம் நீட்டாவே இருக்குன்னு உள்ளே போய் உக்கார்ந்ததும் கண்ணில் பட்டது நோட்டீஸ்.
சிதம்பரம் (கத்தரிக்காய்) Gகொத்ஸ். இது நம்ம KothS இல்லையாக்கும் கேட்டோ:-)
பதிவுகளிலும் சாப்பாட்டுக்கடை சமாச்சாரங்களிலும் மாய்ஞ்சு மாய்ஞ்சு இதைப்பற்றி நிறைய பேர் எழுதிட்டாங்க. அதிலும் நம்ம கீதா சாம்பசிவம் தீக்ஷதர் வீட்டு(லேயே கேட்டு) செய்முறை விளக்கம் எல்லாம் கொடுத்துருக்காங்க. பதிவு எழுதும்போது அடிக்கடி கீதாவின் ஆன்மிகப் பயணத்துக்குப்போய் வந்தேன்., அங்கே ஹிட்ஸ் எகிறி இருந்தால் அதுக்குக் காரணம் அடியேள்தானாக்கும்:-) ஆனா... இது கத்தரிக்காய் சமாச்சாரத்துக்கு இல்லையாக்கும் !!!
சிதம்பரம் நடராஜர் கோவில் சரித்திரம், பூசை முறைகள் விளக்கம் இப்படி ஏராளமான ரகசியங்களை எழுதித்தள்ளி இருக்காங்க நம்ம கீதா. தலைப்பே சிதம்பர ரகசியம்தான். கோவிலை சரிவரப் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிட்டதால் கடந்த ரெண்டு நாட்களா அங்கே(யே) குடியிருந்து எல்லாம் வாசித்து முடிச்சேன் . 2007 மார்ச்சில் தொடங்கி , ஃபிப்ரவரி 3 2009 வரை விடாம அடிச்சு ஆடி இருக்காங்க. ரெண்டு வருசம் ஒரே சப்ஜெக்ட்டு! 95 இடுகைகள். அசுர சாதனை! பாராட்டத்தான் வேணும்!
சரி வாங்க கொஸ்துவைப் பார்க்கலாம். கொத்ஸ், கொஸ்து இதில் எது சரி? 'ஸ்'எங்கே வருதுன்னு பட்டிமன்றம்கூட வைக்கலாம் போல இருக்கே!
கொண்டு வா(ங்க) அந்த கொஸ்துவைன்னு சொன்னதும் சின்ன கிண்ணத்தில் தளதளன்னு எண்ணெய் மினுக்கலோடு, முழுசா மிதக்கும் சின்ன வெங்காயத்தின் பளபள ஒளிச்சிதறலோடு வந்துச்சு! விருப்பத்தோடு உண்ணும் சோதனை எலியை வியப்போடு பார்த்தேன். கண் விழிகள் அப்படியே மேலே போய் செருக, இமைகள் பாதி மூடிய தவம்! ரொம்ப நல்லா இருக்காம்!
இன்னும் ஒரு கிண்ணம் கொண்டுவரட்டா என்று பரிவோடு கேட்ட பரிமாறுகிறவரை நோக்கி, தலை ஆட்ட இருந்த ஒரு விநாடியில் ..... கோபாலுக்கு மெள்ள ஒரு இடி . ஒரு பிடி அவல் போதும் என்றாளாம் ருக்கு!
பழி வாங்கிட்டார். அறைக்குத் திரும்பும்போது மணி ஒன்பது. தூக்கம் கண்ணைக் கட்டுதாம். அர்த்த ஜாம பூஜைக்கு கோவிந்தா.... கோவிந்தா!
அடடா.... கோவிந்தராஜன் நாபித் தாமரையில் 'நின்ற நான்முகனாமே'! கவனிச்சுப் பார்க்கலையேன்னு மனசு கிடந்து அடிச்சுக்கிட்டது நிஜம். சும்மா அங்கே உட்கார்ந்திருந்த நேரத்தில் கூட எழுந்துபோய் பார்த்திருக்கலாம். தோணலையே...... ராத்திரிக்கு மீண்டும் வரும்போது .... என்ற அசட்டை:(
'இந்த முறை கிடையாது போ' என்ற விதி இருந்துருக்கு. போகட்டும்.
மனதில் அவ்வளவா பதியாத கோவிலின் உள்பிரகாரத்தை தினமலர் 360 டிகிரியில் சில முறை நேற்று பார்த்தேன். உங்களுக்கு பார்க்கணுமுன்னா இங்கே:-)
வெளிப்ரகாரம் : கிழக்கு & தெற்கு கோபுரவாசல்களுக்கிடையில்
உள்ப்ரகாரம்
பொன் அம்பலம்
தொடரும்............:-)
![]()