ஊருக்குள்ளே நுழைஞ்சப்ப மணி ஆறேமுக்கால். இந்தளூர் விட்டுக் கிளம்பி வரும்போதே வழியில் சிலபல கோவில்கோபுரங்கள் கண்ணில் பட்டுச்சுன்னாலும் இருட்டுமுன் காரைக்கால் போய்ச்சேரணுமேன்னு வேறெங்கேயும் இறங்கலை. இதுக்குள்ளே காரைக்காலில் தங்க இடம் வேணுமேன்னு வலையில் தேடுன கோபால் ஒரு ரிஸார்ட் இருக்குன்னார். ஓக்கேன்னு அதுக்கு செல் பேசுனப்ப அறை இருக்கு. நீங்க ஊருக்குள்ளே வந்ததும் ஃபோன் செய்யுங்க. சரியான வழி சொல்றோமுன்னாங்க. அதே போல் செஞ்சு வழி கேட்டுக்கிட்டாலும் புது இடமா இருப்பதால் கொஞ்சம் முழிக்கத்தான் செய்தோம். பாரதியார் சாலையில் போய்க்கிட்டு இருக்கும்போது அங்கிருந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம் விசாரிச்சால் ( குட் ஈவ்னிங் ஆப்பீஸர்,. ஹாலிடேஸ் ரிஸார்ட் க்கு எந்தப்பக்கம் போகணும்?)அவர் விவரிச்சுக்கிட்டு இருக்கும்போதே அங்கே இருந்து கிளம்பும் ஒரு ஜோடி, அந்தப்பக்கமாத்தான் நாங்க போறோம். எங்களை ஃபாலோ பண்ணுங்கன்னு சொன்னாங்க.
காரைக்கால் பஸ் ஸ்டாண்டுலே இருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரம். கடற்கரையை ஒட்டிய இடம். அக்கரைவட்டம் மெயின் ரோடு. முன்னே போன ஜோடி நம்மை வாசல் கேட் வரைக்கும் கொண்டு விட்டுட்டுப்போனாங்க. உள்ளே ரிஸப்ஷன் கந்தரகோளமா இருக்கு. பெயிண்டிங் வேலை நடக்குதாம். ஃபார்மாலிட்டி முடிச்சதும் அறைக்குக்கூட்டிப்போனாங்க. கீழ்தளம். ஊஹூம்..... சரிப்படாது. அடுத்த கட்டிடத்து மாடியில் ஒரு அறை. இதுவும் எனக்கு ஊஹூம்..... சுவர் கலர் சரி இல்லை! அதே மாடியில் அடுத்த பக்கத்து அறை ஓக்கே ஆச்சு. லாவண்டர் (Lilac)நிறம்.
வெளியே நிறைய மரஞ்செடிகள். அதனால் கொசு இருக்குமோன்னு பயந்துக்கிட்டு சுத்திப்பார்க்க வெளியில் வரலை. ரூம் சர்வீஸ்லே ராச்சாப்பாட்டை முடிச்சுக்கிட்டோம். குளியலறை ஜன்னலில் பார்த்தால் தூரத்தில் கடல் இருக்கும்போல! லேசான அலை ஓசை!
காலையில் எழுந்து கடமைகளை முடிச்சோம். இப்பெல்லாம் இமெயில் பார்ப்பதும் அத்யாவசியமான கடமைகளில் ஒன்னு ! டிவியில் திருமால் பெருமை பாடல்கள் ஓடிக்கிட்டு இருக்கு. டிவி இல்லாம கோபாலால் இருக்கவே முடியாது:(
இன்னைக்குத்தான் ஆங்கிலத்தேதியின் படி கோபாலுக்கும் நம்ம துளசிதளத்துக்கும் பொறந்தநாள்! வாழ்த்துகளை பரிமாறிக்கிட்டோம். வெளியே வெராந்தாவுக்கு வந்து நின்னால்.... சுத்திவர சூப்பரான பழ மரங்கள். அட! மாங்கான்னு நினைச்சுக்கிட்டே உத்துப்பார்த்தேன். இலைகள் வேறமாதிரி இருக்கேன்னு ... இது இலவம்பஞ்சு மரம்! முந்தியெல்லாம் ஸ்பிண்டில் ()போல நீளக்காய்கள் இருக்கும். இப்ப என்னன்னா மாங்காய் போலக் கொத்துக்கொத்தாய் காய்ச்சுக்கிடக்கு. பஞ்சில் வேற வகை!
இந்த ஃபார்ம்ஸ் & ரிஸார்ட்லே மொத்தம் 14 அறைகள் . இதுலே பத்து அறைகள் டீலக்ஸ் ரூம்ஸ். மூணு ஃபேமிலி ரூம்ஸ், ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரு ஸ்யூட். தனித்தனியா கட்டிடங்கள். ஒவ்வொரு கட்டிடத்திலும் மாடியில் ரெண்டு கீழே ரெண்டுன்னு நாலு அறைகள். சுத்திவர அகலமான வெராண்டா, பால்கனி. நிறைய பூச்செடிகளுக்கிடையில் நடைபாதை, நீச்சல் குளம் இப்படி நல்லாத்தான் இருக்கு. ஏராளமான தெங்குகள்.
வார இறுதிகளில் அறைகள் எல்லாம் நிறைஞ்சு போயிருமாம். நாம் ஞாயிறு மாலை வந்ததால் இடம் கிடைச்சதாம். நடைபாதை வழியா விடுவிடுன்னு மார்னிங் வாக் போய்க்கிட்டிருந்தார் ஒருத்தர். நம் வீட்டு வாசல் வழியா ஏழெட்டு ரவுண்டு வரை கண்ணில் பட்டார். நாங்களும் கீழேவந்து சுத்திப்பார்த்துக்கிட்டே ரெஸ்ட்டாரண்ட் /டைனிங் ஹால் போனோம். அறை வாடகையில் 'ப்ரேக்ஃபாஸ்ட்'ம் சேர்த்தி.
மற்ற ஹொட்டேல்ஸ் போல இல்லாமல் இங்கே வாகன ஓட்டிகளுக்கும் படுத்துறங்க ஒரு தனி இடம் இருக்கு. வட இந்தியாவில்நாம் பயணம் போனப்ப எல்லா விடுதிகளிலும் ஓட்டுனர்களுக்கு உறங்க அறையும் குளியலறை வசதிகளும் உண்டு. இது ரொம்ப நல்ல விஷயம். ட்ரைவர்கள் தூங்கி ஃப்ரெஷானால் மறுநாள் பயணம் நல்லதாவே அமைஞ்சுரும். இங்கே தென்னிந்தியாவில் இந்த வசதிகள் அவ்வளவா இல்லை. அப்படி இருக்குமிடத்திலும் நம்ம சீனிவாசன், ' வண்டிக்குள்ளேயே படுத்துக்குவேன் மேடம். இதுதான் பழகிப்போச்சு' ன்னுடுவார்.
எட்டரை மணி போல அறையைக் காலி செஞ்சுக்கிட்டு கிளம்பி ஊருக்குள் போனோம். புராதச்சின்னங்களை அப்படியே விட்டு வைக்கணும் என்பதைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு இருக்கு உள்ளுர் நகர சபையும், யூனியன் கவர்மெண்ட்டும்:( வீடுகளுக்கு முன் ஓடும்(!) திறந்த சாக்கடை. யக்:(
சாக்கடையைக் கடந்து வீட்டுக்குப்போக வீடுகளுக்கு முன்னால் மட்டும் கற்பலகை. குறைஞ்சபட்சம் இதையே வரிசையா வச்சு தெருவோரத்தை மூடி வைக்கலாம். திருட்டுபயம்(?) இருக்குன்னா இப்பதான் மூணு மீட்டர் நாலு மீட்டர்ன்னு நல்ல நீளமான காங்க்ரீட் ஸ்லாப்கள் வருதபதையாவது வச்சு மூடலாம். கொஞ்சம் கவனிக்கப்டாதோ? மற்றபடி வாச்ல்பக்கம் சின்னத் திண்ணைகளும் தூண்களும் அமைஞ்ச ஓட்டு வீடுகள் நல்லாத்தான் இருக்கு. அந்தத் திண்ணையில் உக்கார்ந்து (சுத்தமான) காத்து வாங்க முடியுமா ன்னு இன்னொரு கேள்வி!
நேத்து ஊருக்குள்ளே வந்த அதே பாரதியார் சாலை. இந்தத்தெருவில் பரவாயில்லை. அங்கங்கே சாக்கடை மூடிபோல ஒன்னு இருக்கு. மெயின் ரோடு என்பதால் கொஞ்சம் கவனிப்பு இருக்குமோ என்னவோ?
இதே சாலையில் கொஞ்ச தூரத்தில் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவில்! பெரிய முன்வாசல்கதவுகள். தெருவில் இருந்து பார்த்தாலே தெரியும் கொடிமரம். கடந்தால் குட்டிவிமானத்தோடு பெரியதிருவடி பெருமாளைப்பார்த்தபடி. கோவில் முகப்பின் மேல் அரவணையில் துயிலும் அரங்கன் காட்சி தர்றார்.
சுவையான கோவில் நிகழ்வின் கல்வெட்டு! போனவருசம்( நம்ம பயணம் 2012 செப்டம்பர்) ஆகஸ்ட் 4 2011 கருடபஞ்சமி. அன்றைக்கு அக்கம்பக்கத்து ஊர்க்கோவில்களில் ஏழில் இருந்து (திவ்ய தேசங்கள்) எம்பெருமான்கள் கருடவாகனத்தில் ஒன்னாய்ச்சேர்ந்து இங்கே எழுந்தருளி இருக்காங்க. திருமஞ்சனமும் தீபாராதனையுமா அமர்க்களப்பட்டுருக்கு! ஸப்த கருட சேவைத் திருவிழா!!!! ஹைய்யோ!!!! எழு பேரா!!! இதுவரை நான் கேட்டதும் இல்லை பார்த்ததுமில்லை:(
தெப்பத்திருவிழா வேற 37 வருசமா நின்னு போயிருந்துச்சாம்.அதுவும் அந்த வருசம் (2011)மாசி மாதம் மீண்டும் தொடங்கியிருக்கு! ரொம்ப மகிழ்ச்சி!
பிரமாண்டமான அளவில் கோவில் இல்லை என்றாலும் அழகா அம்சமான கோவில்தான் இது. மூலவர் ரங்கநாதரை சேவிச்சுக்கிட்டோம். நல்ல தூக்கம்! கிடந்தாரே கிடந்தார். நமக்கோ....ஏகாந்த சேவை! கோவிலில் இருந்த நபர்கள் எல்லாம் பக்கத்து சந்நிதியின் முன்னே கூடி இருந்தனர். ஸ்ரீ ரங்கநாயகித் தாயார். முன் மண்டபத்தில் திரைக்குப்பின் உற்சவர்களுக்கு அலங்காரங்கள் நடக்குது. நேற்றுமுதல் நாலு நாளைக்கு திருப்பவித்ரோத்ஸவம்
ஒரே பிரகாரம்தான் கோவிலை வலம் வந்தோம். கருவறை சுவர்களின் வெளிப்புறம் எல்லாம் புடைப்புச் சிற்பங்கள் , அவை சொல்லும் சேதிகள்! சூப்பர். பிரம்மன் உலகில் படைத்த முதல் பெண்ணும் ஆணும் கூட!
கருவறையின் மேல் குட்டி விமானம். ஏதோ விழா நடந்து முடிஞ்சுருக்கு. மக்களை வரிசை கட்டி அனுப்பக் கட்டிவைத்த மூங்கில்கள் இன்னும் அங்கங்கே!
தசாவதார வரிசையில் புத்தரும் இருக்கார். அப்ப ஏகாதசாவதாரமோ ? குருவாயூரப்பன், பாண்டு ரங்கன், , திருப்பதி வெங்கடாசலபதி, பூரி ஜகந்நாதன் இப்படி யாரையும் விட்டு வைக்கலை. ஸ்ரீ வைகுண்டத்தில் பரமபத நாதர் நித்யசூரிகளுடன் காட்சி தருகிறார்.
சின்னதா ஆஃபீஸ் போல இருந்த இடத்தில் நின்னுருந்தவரிடம் படம் எடுக்கலாமான்னு அனுமதி கேட்டதுக்கு அவர் இன்னொரு பெரியவரைக் கை காமிச்சார். அவர் திரு ரங்கநாதன். தலைமை பட்டர். மூலவரை விட்டுட்டு படம் எடுத்துக்க அனுமதித்தார்.
கோவிலுக்கு இடப்பக்கம் புஷ்கரணி. சந்திர தீர்த்தம். நல்ல அழகான பெரிய, சுத்தமான குளம். சுத்திவர கல்பாவிய தரையும் ஒழுங்கான படிக்கட்டுகளுமா அருமை. நடுவிலே ஒரு நீராழி மண்டபம். நடைப்பயிற்சி செய்ய வர்றவங்களுக்கு நடந்த தூரம் தெரியும் வகையில் ஒரு தகவல் பலகை. மூணுதரம் சுத்துனா ஒரு கிலோ மீட்டர்!
மூணுமுறை கண்ணால் சுத்திட்டு குளத்தைத் தாண்டி அடுத்தபக்கம் போனால் இன்னொரு கோவில் இருக்கு. என்னன்னு பார்க்கலாமேன்னு கம்பிக்கதவைத் திறந்து போனோம். ஆஹா....என்ன ஒரு இன்ப அதிர்ச்சி! காரைக்கால் அம்மையாரின் சந்நிதி!!!! இந்தப்பக்கம் இன்னொரு சந்நிதியில் புள்ளையார் இருக்கார்.
காரைக்கால் அம்மையார் புனிதவதியின் சரிதம் சொல்லும் ஓவியங்கள். சொன்ன கதையைப் படம் பார்த்துப் புரிஞ்சுக்கிட்டார் கோபால். மாங்கனித் திருவிழாவின் முக்கியத்துவம் சொன்னேன். மாங்கனித் திருவிழான்னதும் அவர் பாட்டுக்கு ஹரியானாவின் மேங்கோ ஃபெஸ்டிவலை நினைச்சுக்கப்போறாரேன்னு .... எனக்குக் கவலை.
(நேத்து மாலை காரைக்கால் வந்துட்டியான்னு கேட்ட கோபாலுக்கு வந்துட்டேன்னு சொல்லி, காரைக்கால் அம்மையார் யாருன்னு கேட்டால்.... பனிரெண்டு அவதாரங்களில் ஒன்னுன்னார். ஆமாம். உங்களையும் சேர்த்துன்னேன். வாத்தியார் வூட்டு ஆளுங்க மக்குன்னு சும்மாவா சொல்லி இருப்பாங்க:-)))))))))
நம்பதிவர்களில் யாருக்காவது காரைக்கால் அம்மையாரைப்பற்றித் தெரியலைன்னா இங்கேபாருங்க. பதிவின் நீளம் கருதி நம்ம நடையில் இங்கே இந்த முறை கதை சொல்லலை:( அடிச்சுச்சொல்லணுமுன்னு நாக்கு துடிக்குது. அப்புறம் ஒரு 'தனி' வாசிக்கலாம்)
நன்றி விக்கியண்ணன்.
சந்நிதிகள் ரெண்டும் ஒரு மூலையில் இருக்க , இந்த இடம் ஒரு பெரிய ஹால் போல பரந்து கிடக்கு. ஒரு பக்கம் மேடை. , ஆஹா.... ஆன்மிகச் சொற்பொழிவு, திருமணம் போன்ற நிகழ்ச்சி, விசேஷங்களுக்கான அரங்கம். என்ன ஒரு ஐடியா !!! இப்படி இந்த ரெண்டு இடத்துக்கும் நடுவில் குளம் அமைச்சது! குளத்து நேரடியா வர ஒரு பெரிய கம்பி கேட் தெருவைப் பார்த்தபடி. சாமி கும்பிட வேணாமுன்னா நடக்கவாவது வந்து போன்னு சொல்றமாதிரி இல்லே?
சாலையின் எதிர் சாரியில் இன்னுமொரு கோவில். அஞ்சு நிலை கோபுரத்துடன் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி திருக்கோவில். சாலையைக் கடந்து போகலாமான்னு நினைக்கும்போதே மேள வாத்தியம் கேட்டுச்சு. ஆஹா... அலங்காரம் முடிஞ்சுருச்சு போல ! அங்கே ஓடினேன். பெருமாள் தாயார்களுடன் ஜொலிக்கிறார். கோஷ்டி சொல்லி தீபாரதனை முடிஞ்சதும் ஆரத்தியை கண்ணில் ஒத்திக்கிட்டுக் கிளம்பினோம்.
தலைமைப் பட்டர் திரு ரங்கநாதன் அவர்களிடம் கோவிலைப்பற்றி எழுதப்போறேன். உங்கள் படம் போடலாமான்னு அனுமதி கேட்டதுக்கு, தாராளமாப் போடுங்க. நீங்க சொல்லாமலே போட்டாலும் எனெக்கென்ன தெரியவா போகுதுன்னு சொல்லிச் சிரிச்சார். ரெங்கனின் முத்தங்கி படம் ஒன்றையும் கொடுத்து வாழ்த்தினார்.
அழகா .. தோ..... வந்துக்கிட்டே இருக்கேன். பரிமளன் செஞ்சதுபோல கதவைச் சாத்திராதே......
ஆமாம்...பெரிய திருமங்கைன்னு நினைப்பு!
தொடரும்.........:-)
அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்து(க்)கள்.
![]()

சக்கரத்தாழ்வார் சந்நிதி சேவித்து மறுபக்கம் திரும்பினால் நம்ம ஆண்டாளம்மா. கருவறைச் சுவர்களில் பளிங்கில் செதுக்கிய திருப்பாவைகள் முப்பதும். எனக்கு ரொம்பப் பிடிச்சுருந்தது. அல்லிக்கேணியில் கல்லில் செதுக்கியது உள்பிரகாரத்தில் ஆண்டாள் சந்நிதிப்பக்கம் மேற்கூரையுள்ள மண்டபச் சுவரில். சிங்கை ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் கருவறைச் சுற்றும்போதே மூணு பக்கமும் பாட்டு ஸீன்களுடன் புடைப்புச் சிற்பங்களோடு வெள்ளைப்பளிங்கில் கருப்பெழுத்துக்களாய் இருந்ததை சமீபகாலமாக் காணோம். வெறும் சிற்பங்கள் மட்டுமே இருக்கு. புண்ணியவான்கள் எவரோட ஆலோசனையோ எழுத்து மிஸ்ஸிங்:(