Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1476

ஆலமரத்தின் வயசு அஞ்சாயிரத்துக்கும் மேலே !!!!(இந்திய மண்ணில் பயணம் 37)

$
0
0
முதலில் போன இடம் வ்யாஸ் கத்தி. Gaddi, Gaddhi  னு  உச்சரிப்பு இருக்கணும்.  இதுக்கு இருக்கைன்னு  தமிழில்  சொல்லலாம்.   வியாஸர்  அமர்ந்த இருக்கை. இடம்.....  வியாசமுனிவரின் குகை !  இங்கே வியாசர் தவம் செஞ்சுருக்கார். பெரிய வளாகம்தான்.
5096 வயசான ஆலமரம்  முதலில் காட்சி கொடுக்குது. ப்ராச்சீன்!  'ஃபோட்டோ கீச்னா மனா ஹை 'பார்த்துட்டு பயந்து போயிட்டேன்.  வெளியே  நின்ன இடத்தில் இருந்தே சில க்ளிக்ஸ்.


உள்ளே போனதும் படம் எடுக்க அனுமதி உண்டான்னு  வேதவியாஸர் சந்நிதியில் உக்கார்ந்துருந்த  பண்டிட்டைக் கேட்டதுக்கு, தாராளமா   எடுத்துக்கோங்கன்னுட்டார்!   இவர் பெயர் அஜய் சாஸ்த்ரி.
கோவிலைப்பற்றிய  விவரங்களும்  சொன்னார்.  வ்யாஸ மஹரிஷி இங்கே இருந்துதான் வேதங்களைத் தொகுத்துக் கொடுத்தாராம்.  அதனால்தானே அவரை வேதவ்யாஸர்ன்னு சொல்றோம்!    பதினெட்டு புராணங்கள்,  வேதங்கள், பாகவதம்,  மஹாபாரதம்னு  பட்டியலைச்   சொல்றாங்க!

பக்தர்களின் வசதிக்காக ஒரு ஐம்பத்தியோரு அறைகள் இருக்கும் கட்டடம்  கட்டப்போறாங்களாம்.  ரொம்ப நல்ல சமாச்சாரம். எல்லாம் தனியார் ஆஷ்ரமங்கள்தான் செய்யறாங்க.  இது இல்லாம இன்னும்  சில கோவில்கள்,  சந்நிதிகள்னு  பெரிய திட்டம் இருக்கு.  நன்கொடை வசூல்  அஞ்சு லக்ஷம் தொடங்கி.... அதுபாட்டுக்குப் போகுது.  நாம் ஒரு தொகை  கொடுத்தோம்.  ரொம்ப சந்தோஷமா அதை வரவு வச்சுக்கிட்டு ரசீது கொடுத்தார்  அஜய் சாஸ்த்ரி.  அவரையும் ஒரு க்ளிக் :-)


கடைசியில் இங்கே  சக்கரம் வந்து நின்ன காடு எங்கே போகுமோ தெரியலை.  ஏற்கெனவே எங்கே பார்த்தாலும் சின்னதும்பெருசுமா ஊர் (!) முழுக்கக் கோவில்களாத்தான் கண்ணில் பட்டுக்கிட்டே இருக்கு!   இனி  காட்டைத் தேடத்தான் வேணும். இப்படிக் காட்டையே கரைச்சுடாங்களே...........

ஆமா...  அது என்ன சக்கரம் வந்து நின்ன சமாச்சாரம்?

ஒரு காலத்துலே  பனிரெண்டு  மஹரிஷிகள் சேர்ந்து, ஒரு பனிரெண்டு வருச காலம் தவம் செய்ய தீர்மானிச்சாங்க. அப்போ அதுக்கு ஏத்த இடம் எதுன்னு  பிரம்மாவிடம் போய் கேட்டதும், அவர் ஒரு தர்பைப் புல்லை எடுத்து வட்டமா சுத்தி அதை பூலோகத்தில் உருட்டி விட்டார். உருண்டு போன  அந்த வளையம் போய் நின்ன இடம்தான் இந்தக் காடு! சக்கரம் போல உருண்டோடிச்சாமே !
இடத்துக்குப்பெயர்கூட இப்படி வந்ததுதான். நேமி ன்னா சக்கரம். அது போய் நின்ன இடம் ஆரண்யம். நேமி ஆரண்யம்  இப்ப நைமிசாரண்யமா  ஆகி இருக்கு!  நமக்கு இப்படின்னா வடக்கர்களுக்கு இந்த இடம் நீம்சார்!
இன்னும் கொஞ்சம் இதைப் பற்றி  சொல்லணும். அது அடுத்த பதிவில் :-)


மூக்கு முழி ஒன்னும் தெரியாத வகையில் ஜிலுஜிலுன்னு  அலங்காரத்துணிகள் போட்டுக்கிட்டு இருக்கார் மஹரிஷி வேத வியாசர். அப்புறம் இன்னொரு சந்நிதியிலும் இருக்கார்.


இன்னொரு சந்நிதியில்  பலராமன், க்ருஷ்ணன், சுபத்ரான்னு  இருக்காங்க.
எல்லா சந்நிதிகளையும் தரிசனம் பண்ணிக்கிட்டு அங்கிருந்து கிளம்பினோம். பெரிய கோவில்னு சொல்ல முடியாது. ஆனால் முக்கியமான கோவில். கட்டாயம் தரிசனம் செஞ்சுக்க வேண்டிய இடம்.

இந்தக் கோவிலுக்குத் தொட்டடுத்து  ராதாவிஹாரி கோவில் ஒன்னு ஆஷ்ரமத்தோடு இருக்கு!
எங்கே பார்த்தாலும்  ஆஷ்ரமங்கள்தான். வெவ்வேற குருக்கள் ஆரம்பிச்சு வச்சு, அவர்களின் பக்தர்களால் நிரம்பி வழிஞ்சுக்கிட்டு இருக்கு மொத்த ஊருமே!  இதுலே எல்லா ஆஷ்ரமக் கோவில்களிலும் எல்லா சாமிகளும் இருக்காங்க என்பதால் எங்கே போய்க் கும்பிட்டாலும் சரிதான்!
ஆதிகாலத்தில் இங்கே எம்பத்தியெட்டாயிரம் முனிவர்கள் தங்கி தவம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்களாம்.  அவ்ளோ பேரும் இருக்கும் அளவில் காடு ரொம்பவே பெருசாத்தான் இருந்துருக்கும், இல்லே?

தொடரும்........  :-)



Viewing all articles
Browse latest Browse all 1476

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>