அலங்கார நுழைவு வாசலே.... நம்ம கோவிலோன்னு ஒரு சம்ஸயம் கொடுத்தது உண்மை. உச்சியில் பெருமாள் சங்குசக்ரதாரியா நிக்கறார்! வாசலின் ரெண்டு பக்கத் தூண்களிலும் ஜயவிஜயர்கள்.
கேட்டைக் கடந்து உள்ளே போறோம். கண்ணுக்கு நேரா கொடி மரம்! நம்ம பக்கமேதான்! பலிபீடம் அடுத்த கொடிமர மேடையிலேயே ஒரு பக்கம் நம்ம புள்ளையாரும், இன்னொரு பக்கம் நாகர்களும். இது மாதிரி இதுவரை வேறெங்கேயும் பார்த்ததே இல்லை.
கொடிமரத்துக்கு இந்தாண்டை மாடத்தில் நான் :-) கம்பி வலைக்குள் பிடிச்சு வச்சுருக்காங்க. இனி ஊர் சுத்த முடியாது !
கட்டட முகப்பிலேயே நடுவில் பெருமாளும், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நிற்க, ரெண்டு பக்கமும் அவ்வஞ்சு என்ற கணக்கில் தசாவதாரக் கோலங்கள். சம்ஸயம் தீர்ந்தது... கட்டடமுகப்பில் இருந்த எழுத்துக்களால். ஸ்ரீ திருப்பதி பாலாஜி மந்திர் வைகானஸ சமாஜம்.
வசூல்மன்னன்.... ஒரு ஊரையும் விட்டு வைக்கறதில்லை. அதிலும் பக்தர்கள் கூடும் புகழ்பெற்ற ஊருன்னா கேக்கவே வேணாம்.... ப்ராஞ்சு ஆஃபீஸ் தொறந்துட்டுத்தான் மறுவேலை! இப்படிக் காசு மேலே கண்ணும் கருத்துமா இருக்கத் தெரிஞ்சவன்..... அவனுடைய சொந்த இடத்தில் எப்படிக் கண்ணை மூடிக்கிட்டு இருக்கான்னு நினைக்கும்போது.... எனக்குக் கோவம் வரத்தான் செய்யுது? இதே எளிமையுடன் அங்கெ(யும்) காட்சி கொடுக்கலாமில்லையா? வேணுமுன்னே டிமாண்ட் க்ரியேட் பண்ணிக்கிட்டு, அதைக் கடைப்பிடிக்க கோவில் ஊழியர் என்ற பெயரில் அரக்கர்கள் புடைசூழ இருக்கான்.... இருந்துட்டுப் போகட்டும்............ ப்ச்....
கட்டடத்துக்கு இடமும் வலமுமா ரெண்டு கோடியில் ரெண்டு வாசல்கள். ஆனாலும் இடப்பக்க க்ரில்கேட் தான் திறந்துருக்குன்னு அதுலே நுழைஞ்சோம். இங்கே மட்டும் படிகளின் ரெண்டு பக்கமும் நம்ம யானைகள் :-)
பக்கத்துலே இன்னொரு தனி மாடத்தில் யாரோ குருவின் சிலை போல. ஸ்ரீ டோங்ரெபாபு ஜி மஹராஜ்னு எழுதி இருக்கு. இவர் யாருன்னு கேக்கணுமுன்னு நினைச்சு கடைசியில் மறந்துட்டேன்.... இப்ப இதை எழுதும்போதுதான் நினைவுக்கு வருது.....
உள்ளே நுழைஞ்சதும் கண்ணுக்கு நேரா மஹாலக்ஷ்மித் தாயார்! சந்நிதி முன்னால் ஏழெட்டு பேர் உக்கார்ந்துருக்க, பட்டர் எதோ பூஜை நடத்தி வச்சுக்கிட்டு இருக்கார். குடும்பவிழா போல!
உள்ளே மூணு சந்நிதிகள். நடுவிலே பெருமாள். பெருமாளுக்கு வலப்பக்க சந்நிதி மஹாலக்ஷ்மித்தாயாருக்கு! இடப்பக்க சந்நிதி நம்ம ஆண்டாளம்மாவுக்கு!
முன்மண்டபத்தில் மூணு இடங்களில் சின்னச்சின்ன கூட்டமா இருக்கும் பக்தர்களுக்கு அவர்கள் தேவையை நிறைவேற்றிக்கிட்டு இருக்கும் பட்டர்கள். கூட்டத்தைப் பார்த்தால் தெலுகு மக்கள்னு தோணல். ரொம்ப விஸ்ராந்தியா உக்கார்ந்துருக்காங்க எல்லோரும்.
நாங்க போய் பெருமாளையும் தாயார்களையும் ஸேவிச்சுக்கிட்டு தீர்த்தம், சடாரி வாங்கிக்கிட்டோம்! பெருமாளுக்கு நேரெதிரா பெரிய திருவடி, தங்கமா நிக்கறார்!
வெளியே வளாகத்தில் ஒரு பக்கம் செயற்கை நீரூற்று. நடுவில் பாம்பு சோஃபாவில் ஒய்யாரமா சாய்ஞ்சு உக்கார்ந்து வலது கால் நீட்டி, இடது காலை மஹாலக்ஷ்மிக்குக் கால் அமுக்கிவிடத்தோதாய் வச்சுக்கிட்டு ஒரு போஸ். பெருமாளின் வலதுகாலாண்டை பெரிய திருவடி! அழகான உருவங்கள். தண்ணீர் கொஞ்சம் சுத்தமாவும், இன்னும் குளத்துலே ரொம்பியும் இருந்தா இன்னும் அழகா இருக்கும்!
இந்தாண்டை இன்னொரு செயற்கை நீரூற்று. இதுலே நடுவில் சின்ன மேடையில் ராதையும், குழலூதும் க்ருஷ்ணனும். மேடையைச் சுத்தி எட்டு கோபிகைகள் கைகூப்பிய நிலையில். தண்ணீர் அளவு, அழுக்கு எல்லாம் ஸேம் ஸேம். அதானே பாரபட்சமா இருந்தா நல்லாவா இருக்கும்?
ஒரு இடத்துலே நைமிசாரண்யத்தில் தரிசனம் செஞ்சுக்க வேண்டிய முக்கிய கோவில்கள், இடங்களின் பட்டியல்! ரொம்ப நல்ல சமாச்சாரம்! உடனே க்ளிக்கிவச்சேன் :-) ரெக்கார்ட்.....
இன்னொரு சந்நிதியில் நவகிரஹங்கள். அவரவருக்கான நிறங்களில் அவரவர்கள். வாஹனம்தான் தப்பான இடத்துலே பார்க் பண்ணிக்கிட்டு ஒரு தப்பான சிலையில் போய் உக்கார்ந்துருக்கு :-)
மாட்டுக்குத் தனி கேட் !
ராஜகோபுரம் ஒன்னு கட்டிக்கிட்டு இருக்காங்க. வாசல் உயரம் அதிகம். கோபுர உயரம் குறைவுன்னு....
வெளியில் இருந்தே கோவில் பார்த்தும் கொடிமரம் பார்த்தும் இன்னும் ஒரு கும்பிடு போட்டுக்கிட்டுக் கிளம்பிட்டோம்.
நூத்தியெட்டு திவ்யதேசக் கோவில்களில் இது இல்லைன்னு புரியுது. சமீபத்திய கோவில்தான்.
பெருமாளை வன உருவில்தான் கும்பிட்டுக்கணும். கோவிலைத் தேடி அலையாதீங்கன்னு நண்பர் சொல்லி இருந்தார்.
இப்ப வனத்தைத் தான் தேடணும் போல..... பெருமாளே.... எங்கிருக்கீர்?
தொடரும்......... :-)
![]()