Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1475

இன்று முதல் பதிவர் குடும்ப சந்திப்புகள் (இந்திய மண்ணில் பயணம் 96)

$
0
0
குடும்பத்துப் பெரியோர்கள்,  ஆன்மிகநாட்டம்  கொண்டு இறைவனுக்குத் தொண்டு செய்யும் குடும்ப நண்பர்கள், குட்டிக் குருவாயூரா வீட்டையே மாத்தி வச்சுருக்கும்  இனிய தோழி,  அந்தக் கண்ணனையே குழந்தையாக  அடைந்த பதிவுலகத் தோழி & தோழர் குடும்பம்,  இப்படி  இன்று முழுசும்  அன்பு நிறைஞ்சு வழிஞ்ச சந்திப்புகள்தான்.
இந்தியப்பயணம் முடிவுக்கு வருது.  கூடுமானவரை  நம்மக்களைச் சந்திக்கணும். இப்ப விட்டால்.... பின்னே எப்பவோ?


நம்ம லோட்டஸில் இருக்கும்  தோழியருடன் ஆரம்பிச்ச க்ளிக்ஸ்  .....   ஓயவே இல்லைன்னா பாருங்க :-)


தங்கையும்  அவருடைய கணவரும்!  கணவர் வீ ஆர் எஸ்  வாங்கினதும்,  விஷ்ணு கோவில்களில் பிரபந்தம் வாசிக்கும் குழுவில் தன்னை இணைச்சுக்கிட்டார்!    துளசிதளம் தொடர்ச்சியா வாசிக்கும் வாசக நண்பர்களுக்கு ஒரு கூடுதல் தகவல்.....  தங்கை வத்ஸலா, நம்ம பூனா கோமளா மாமியின்   இளைய மகள். அப்ப மூத்தது?  நாந்தான்  :-)

எனக்கொரு மகன் கிடைத்தான்..... 


வித்யா அவர்கள் வீட்டுக்குப் போகும் வழியில்  நம்ம புள்ளையார்!







பெரிய எழுத்தாளர் என்ற பந்தா ஒன்னுமே இல்லாமல் ஏதோ நெடுநாட்கள் பழகிய தோழியுடன் பேசிட்டு வந்தாப்லெ இருந்தது.... நம்ம வித்யா சுப்ரமணியம்  அவர்களுடன் நடந்த சந்திப்பு!   

வீடே கோவில்!  கயிலை ரிட்டர்ன். இவுங்களைப் பார்ப்பதே புண்ணியம். எனக்கு இப்படிக் கயிலையை தரிசிக்கும்  புண்ணியம்  கிடைப்பது இப்ப மூணாம் முறை!

(முதல் முறை நம்ம கீதா சாம்பசிவம் தம்பதி, ரெண்டாம் முறை... நம்ம கைலாஷி !   முருகானந்தம்! ) 

மனநிறைவோடு அங்கிருந்து கிளம்பினால்.... கயிலையாம் மயிலை கோபுரதரிசனமும் போனஸாக் கிடைச்சது! 

அன்று பகல் சாப்பாடு நமக்கு சரவணபவன், மாடவீதியில்!

 தொடரும்......:-)

PINகுறிப்பு :  பிற்பகல் சந்திப்புகளை வரும் பதிவில்  பார்க்கலாம் :-)

Viewing all articles
Browse latest Browse all 1475

Trending Articles