Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1475

நந்தியாரே, நலமா? (பயணத்தொடர், பகுதி 13)

$
0
0
மலை ஏறிப்போறதே, வியூ பார்க்கன்னும் சொல்லலாம். கோவிலில் இருந்து இறங்கி வரும் பாதையில் ஒரு ஆறேழு நிமிட் ட்ரைவில் இடப்பக்கம் ஒரு ரோடு பிரியுது.  இதுக்குப் பக்கத்திலேயே லுக் அவுட்  ஒன்னு கட்டி இருக்காங்க. மேடையில் டெலஸ்கோப் கூட இருக்கு! ஆனால் கிட்டப்போக முடியாமல் பயங்கரக்கூட்டம். கட்டைச்சுவரையொட்டி, இளைஞர் கூட்டம் ஒன்னு சர்க்கஸ் செஞ்சுக்கிட்டு இருக்கு.  கரணம் தப்பினால்.... மரணம்தான். அதென்ன செல்ஃபி மோகமோ?


நாங்க ஒரு பக்கமா நின்னு மைஸூரைப் பார்த்தோம். தெரிஞ்ச இடமா லலித் மஹால் கண்ணில் பட்டது:-) போதும், பார்த்ததுன்னு கிளைபிரியும் சாலையில் போறோம். சுமார் மூணரை கிமீ பயணம். பெரிய நந்தி இங்கேதான் இருக்கு!  சாமுண்டி கோவிலில் இருந்து கீழே போகும் படிகளில் நடந்து வந்தால் எண்ணூறு மீட்டர்தான்.  கார் போகும் சாலை வளைஞ்சு வளைஞ்சு இருப்பதால் தூரம் அதிகமாயிருது!

வண்டியை ஓரங்கட்டிட்டு, ஒரு சரிவான பாதையில் மேலேறிப்போனால்  நந்தி ஸார் பிரமாண்டமான மேடையில் காலை மடிச்சுப்போட்டு உக்கார்ந்துருக்கார்! உக்கார்ந்த நிலையிலேயே பதினாறடி உயரம். நீளம் ஒரு இருபத்தியஞ்சடி! ஒரே கல்லில் செதுக்கிய சிற்பம்!
கழுத்து நிறைய மணிகளும், மாலைகளும், கயிறும் குஞ்சலமும், நகையும் நட்டுமா எல்லா அலங்காரமும்  செதுக்கலில் !  ஹைய்யோ!!!  என்ன அழகு!




போனமுறை பார்த்தப்பக் கருப்பு நிறமா இருந்தவர், இப்போ என்னவோ வெள்ளையா இருக்கார். ஏழுநாள் சிகப்பழகு க்ரீம் பூசிக்கிட்டு இருந்துருப்பாரோ?
நந்தி தேவருக்கு அந்தாண்டை ஒரு குகைக்குள் சிவன் இருக்கார்.கொஞ்சம் ஏறிப்போகணும் போல....  இங்கிருந்தே ஒரு க்ளிக்ஸ் ஆச்சு. நந்திக்கு எதிரில் இன்னொரு மேடை/ மொட்டைமாடி போன்ற  இடத்தில்  இருக்கை ஒன்னு!  இங்கிருந்து நந்தியைக் க்ளிக்கினால் எல்லாம் தெளிவாக இருக்கு! கொஞ்சம் தள்ளி சின்னதா ஒரு சந்நிதி. புள்ளையார் இருக்கார்!
நந்தி தேவர் சிலைக்கு வயசு ஒரு முன்னூத்தியம்பது  இருக்குமாம். மன்னர்  Dhதொட்ட தேவராஜ உடையார் காலத்துலே செதுக்கி இருக்காங்க. இந்த அரசர் காலத்துலேதான் கீழே அடிவாரத்தில் இருந்து மலைமேல் இருக்கும்  சாமுண்டி கோவிலுக்கு வர்றதுக்கு அந்த ஆயிரத்தெட்டுப் படிகளும் உண்டாக்குனாங்களாம்!


திறந்தவெளிக் கோவில் என்பதால் எப்ப வேணுமுன்னாலும் போய் தரிசிக்கலாம். ஆனால் ராத்திரி பத்து மணிக்கு மேல் மலைக்குப்போகும் பாதையில் அனுமதி இல்லை. காலையில் அஞ்சு மணி முதல் அனுமதி உண்டு.

நந்தி  ஸார் அமர்ந்திருக்கும் மேடையின் முன்பக்கம் குருக்கள் நின்னு  தீபாராதனை காட்டினார்! இவரே மொட்டை மாடிக்கும் வந்து புள்ளையாருக்கும் தீபம் காட்டினார்.
மணி ஆறரை ஆச்சே... இருட்டிக்கிட்டு வருதேன்னு கிளம்பி வண்டி நிக்கும் இடத்துக்கு வந்தப்ப அங்கிருந்த  விளம்பர தட்டியில் ஒரு சுவாரஸ்யமான தகவல் கண்ணில் பட்டது.   நல்லா இருக்கேன்னு ச்சும்மா ஒரு க்ளிக்!

தொடரும் .....  :-)


Viewing all articles
Browse latest Browse all 1475

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>