Quantcast
Channel: துளசிதளம்
Viewing all 1456 articles
Browse latest View live

ஆண்டாளம்மா.... அவள் 'ஆண்டாள்'அம்மா! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 25)

$
0
0


ராயல் கோர்ட்லே  இருக்கும்  க்றிஸ்டல் ரெஸ்ட்டாரண்ட்க்குக் காலை ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போறோம். யாருமே இல்லை!  எல்லோரும் எட்டரை மணிக்கு மேலேதான் வர்றாங்களாம். நமக்கு சீக்கிரம் கிளம்பணும். தொலைதூரம் போகணுமே!

ரெஸ்ட்டாரண்ட்  பணியாளரிடம்,  மதுரை ஸ்பெஷல் என்னன்னதும் திருதிருன்னு முழிச்சவர் வடை  என்றார். ஒரு பக்கம் ஹைய்யா நம்ம வடைன்னு மகிழ்ச்சியா  இருந்தாலும்,  வடையா?ன்னதுக்கு,  தோசைன்னார். குறைஞ்சபட்சம் இட்லின்னுசொல்லி இருக்கப்டாதோ?  மல்லிப்பூ இட்லி!  திகைச்சுப்போன பணியாளர் 'நான் இந்த  ஊர் இல்லீங்க'ன்னார்:-)))
அப்புறமா ஒருசிலர் சாப்பிட வந்தாங்க.



இந்த வருச இந்தியப்பயணத்தின் மொத்த நோக்கமே  சேரநாட்டுதிவ்ய தேசங்களை  தரிசிப்பதுதான். இடையில் மதுரை மாநாடு, நமக்குக் கிடைச்ச போனஸ்!  முதலில் போட்ட திட்டம் இதனால் கொஞ்சம் மாறிப்போச்சு. அதனால் என்ன ... இன்னொருமுறை போகலாம் என்று தீர்மானிச்சு, மதுரைக்கு முன்னுரிமை கொடுத்தேன்.

மதுரையில் இருந்து தேனி வழியா போடிநாயகனூர். (கோபாலின் அவதார ஸ்தலம்!) உறவினர்களைச் சந்திச்சுட்டு, அப்படியே பூட்டிக் கிடக்கும் வீட்டையும் ( மாமனார் & மாமியார் ரெண்டு பேரும் சாமிகிட்டே போய்  3 வருசம் ஆகுது) எட்டிப் பார்த்துட்டு போடிமெட்டு வழியா மூணார். அங்கே ஒரு ரிஸார்ட்டில்  இரவு தங்கிட்டு, மறுநாள்  கோட்டயம்.

ஆனால் இடைவிடாது பெய்த பெருமழையில் போடிமெட்டு பாதையில் நிலச்சரிவும், கற்கள் விழுந்து பாதைகள் மூடியிருக்குன்னும் சேதி. வேற வழி என்னன்னு பார்த்தால்  ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி , செங்கோட்டை வழியா செங்கண்ணூர் போயிடலாம்.

ஸ்ரீவில்லின்னதும் உள்மனசுக்குள்ளே மகிழ்ச்சிதான். நம்ம ஆண்டாள் இருக்காளே!  போனமுறை கொஞ்சம் இருட்டும்நேரம் போனதால் சரியாப் பார்க்கலை என்ற மனக்குறை வேற பாக்கி. இப்பப் பகல்  பொழுது என்பதால்  கூடுதல் மகிழ்ச்சி.

ஆனால்....நம்மவர், 'அதிகநேரம் கோவிலில் இருக்கமுடியாது. சாமி தரிசனம் செஞ்சுக்கிட்டுக் கிளம்பினால்தான்  அதிகமா இருட்டுமுன்  கேரளா போய்ச் சேரலாம். இதுக்கும்  மலைப்பாதை வழியாத்தான் போகணும்'என்றார்.

என்ன ரூட்ன்னு  வலையில் பார்த்தால்  தென்காசி வழி! ஆஹா.... குற்றாலம். பார்த்துட்டுப் போகலாம்தானே? தேவதைகள் சதாஸ்து சொன்னார்கள்!




திருப்பரங்குன்றம், திருமங்கலம்,  க்ரிஷ்ணன்  கோவில் வழியா  ஸ்ரீவில்லிக்குள் நுழையும்போது மணி பத்து.  மதுரையிலிருந்து  கிளம்பி சுமார் ஒன்னரை மணிநேரம் ஆகி இருக்கு.  எண்பது கிமீதான்.  கோபுரவாசலில் கொண்டு போய் நிறுத்தினார் சீனிவாசன்.





நீண்டு போகும் பாதையில் யாருமே இல்லை.  என்ன இப்படின்னு நடந்து போனால், கொஞ்ச தூரத்தில்  காவல்துறைக்காரர்,  இதன்வழியா அனுமதி இல்லைன்னார். ஆமாம்.... இதை கோபுரவாசல் அருகிலேயே உக்கார்ந்து சொல்லக்கூடாதா?  நோ எண்ட்ரி போர்டாவது  வச்சுருக்கலாமுல்லெ? இல்லைன்னா ஒரு கம்பித்தடுப்பு.... அதான் நேராப்போகும்  சாலைகளில் ஏகப்பட்டது  வச்சு வேகத் தடுப்பா  ஆகி இருக்கே!

சரின்னு வலது பக்கமாச் சுத்திக்கிட்டுப்போறோம். எதிரில் பூக்காரம்மா.  ஒரு முழம் தலைக்கு வாங்கிக்கிட்டேன். இன்னும் அஞ்சே முழம்தான் இருக்குன்னு.... இழுத்தாங்க. சரி சூடிக்கொடுத்தவளுக்கே  ஆகட்டுமே!


 இன்னிக்குச் சீக்கிரமா வீட்டுக்குப்போய்  வீட்டுவேலையை முடிக்கப்போறேன்னு சந்தோஷமாச் சொன்னாங்க. பெயரென்னங்கன்னதுக்கு  'கோதை'ன் னு பதில் !




கோவிலுக்குள் போய்  ஆண்டாளம்மாவை தரிசித்தோம். பூவை வாங்கி அவளுக்கு மாலையாகச் சார்த்தினார் பட்டர். (காலடியில் வீசி எறிய இன்னும் படிக்கலை போல. அவரை சென்னை, வெங்கட்நாராயணன் சாலை திருப்பதி தேவஸ்த்தானக்கோவில் பட்டர்களிடம் ட்ரெய்னிங் அனுப்பணும்!)

கண்ணாடிக்கிணறை எட்டிப்பார்த்துட்டு ஏற்கெனவே வந்து போய் எழுதியும் ஆச்சு என்பதால் பக்கத்துலே இருக்கும் நந்தவனத்துக்குப் போனோம்.




கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் இங்கே:-)



ஆண்டாள்  அவதாரம் செஞ்ச இடம். திருப்பூர நந்தவனம்.  போனமுறை உள்ளே போகலையேன்னு பார்த்தால் சந்நிதி காலி. பட்டர் தேவுடு காத்துக்கிட்டு இருந்தார். உள்ளே போய் ஸேவிச்சுக்கிட்டு அப்படியே வடபத்ர சாயி தரிசனத்துக்குப் போனோம்.

 இடது பக்கம் சக்கரத்தாழ்வாருக்கு அழகான மண்டபமும் சந்நிதியும். சக்கரத்தாழ்வாருக்கு  ஒரு கும்பிடு நேர் எதிர்ப்புறம் வானுயரக் கம்பீரமாய் எழுந்து நிற்கும் ராஜகோபுரம்.

படிகள் ஏறி மேலே போனால்....மூலவருக்கு முன் பெரிய திரை! தைலக்காப்பு !

இதென்னடா, இப்போ  ஐப்பசிதானே? இல்லையோன்னுன்னு விசாரிச்சால்..... இங்கே ஐப்பசிக்கு(ம்) இப்படியாம். வலதுபக்கத்துலே  உற்சவர்களை வச்சு அங்கேதான்  தினப்படி பூஜை நடக்கறது.சடாரி, தீர்த்தம் கிடைச்சது.


 பாருங்களேன் பெருமாள் பண்ணும் அக்கிரமத்தை! மார்கழியில் பார்க்கமுடியலைன்னுதானே  இப்ப ஐப்பசிக்குக் கிளம்பி வந்துருக்கேன். இப்பவும் இப்படிச் செஞ்சா எப்படி?  என்னப்பா....இப்படிச் செய்றீங்களேப்பா............  ன்னு சொல்லணுமோ!

நூத்தியெட்டு திவ்யதேசக்கோவில்களில்(108)  நம்ம ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு  நாப்பத்தி எட்டாவது இடம்(48)

இந்த முறையும்  கோவில் குளத்தையும், தேர் நிற்குமிடத்தையும் பார்க்கவே இல்லையேன்னு  இப்ப இந்தப் பதிவு எழுதும்போதுதான் நினைவுக்கு வருது:(


நாப்பதே நிமிசத்தில்   தரிசனம் முடிச்சு ஸ்ரீவில்லிபுத்தூரை விட்டுக் கிளம்பி, மடவார்வளாகம் ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி கோபுரம் பார்த்து  வண்டியில் இருந்தே ஒரு கும்பிடு. ஏனோ நம்ம வடுவூர் குமார் நினைவுக்கு வந்தார்:-)





வழியில் ஒரு குன்று, ப்ரேக் இன்ஸ்பெக்ட்டர்களின் ஊர்வலம், இன்னொரு குன்றின்மேல்  கோவில்(என்ன கோவிலோ?) அப்புறம் சேத்தூர் வெயிலுக்குகந்த விநாயகர் திருக்கோவில் சிலபல சமாதிகள் இப்படி  எல்லாம் கடந்து போறோம்.

விவசாயம் நல்ல முறையில் நடக்குதுன்னு கண்ணுக்கு எதிரில் தெரியும் காட்சிகள் சொல்கின்றன.



கடைய நல்லூர் கடந்து தென்காசி நோக்கிப்போகும்போதே சாரலின் குளிர்மை மனசுக்குள் வந்துருச்சு. இடது பக்கம் திரும்பி தென்காசி ஊருக்குள்ளே போகாமல் நேராகக் குற்றாலம்தான் அடுத்த நிறுத்தம்.


எல்லாரும் குளிக்க ரெடியாகுங்க.

தொடரும்.....:-)





ஆண்டாளம்மா.... அவள் 'ஆண்டாள்'அம்மா! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 25)

$
0
0




ராயல் கோர்ட்லே  இருக்கும்  க்றிஸ்டல் ரெஸ்ட்டாரண்ட்க்குக் காலை ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போறோம். யாருமே இல்லை!  எல்லோரும் எட்டரை மணிக்கு மேலேதான் வர்றாங்களாம். நமக்கு சீக்கிரம் கிளம்பணும். தொலைதூரம் போகணுமே!





ரெஸ்ட்டாரண்ட்  பணியாளரிடம்,  மதுரை ஸ்பெஷல் என்னன்னதும் திருதிருன்னு முழிச்சவர் வடை  என்றார். ஒரு பக்கம் ஹைய்யா நம்ம வடைன்னு மகிழ்ச்சியா  இருந்தாலும்,  வடையா?ன்னதுக்கு,  தோசைன்னார். குறைஞ்சபட்சம் இட்லின்னுசொல்லி இருக்கப்டாதோ?  மல்லிப்பூ இட்லி!  திகைச்சுப்போன பணியாளர் 'நான் இந்த  ஊர் இல்லீங்க'ன்னார்:-)))
அப்புறமா ஒருசிலர் சாப்பிட வந்தாங்க.







இந்த வருச இந்தியப்பயணத்தின் மொத்த நோக்கமே  சேரநாட்டுதிவ்ய தேசங்களை  தரிசிப்பதுதான். இடையில் மதுரை மாநாடு, நமக்குக் கிடைச்ச போனஸ்!  முதலில் போட்ட திட்டம் இதனால் கொஞ்சம் மாறிப்போச்சு. அதனால் என்ன ... இன்னொருமுறை போகலாம் என்று தீர்மானிச்சு, மதுரைக்கு முன்னுரிமை கொடுத்தேன்.

மதுரையில் இருந்து தேனி வழியா போடிநாயகனூர். (கோபாலின் அவதார ஸ்தலம்!) உறவினர்களைச் சந்திச்சுட்டு, அப்படியே பூட்டிக் கிடக்கும் வீட்டையும் ( மாமனார் & மாமியார் ரெண்டு பேரும் சாமிகிட்டே போய்  3 வருசம் ஆகுது) எட்டிப் பார்த்துட்டு போடிமெட்டு வழியா மூணார். அங்கே ஒரு ரிஸார்ட்டில்  இரவு தங்கிட்டு, மறுநாள்  கோட்டயம்.

ஆனால் இடைவிடாது பெய்த பெருமழையில் போடிமெட்டு பாதையில் நிலச்சரிவும், கற்கள் விழுந்து பாதைகள் மூடியிருக்குன்னும் சேதி. வேற வழி என்னன்னு பார்த்தால்  ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி , செங்கோட்டை வழியா செங்கண்ணூர் போயிடலாம்.

ஸ்ரீவில்லின்னதும் உள்மனசுக்குள்ளே மகிழ்ச்சிதான். நம்ம ஆண்டாள் இருக்காளே!  போனமுறை கொஞ்சம் இருட்டும்நேரம் போனதால் சரியாப் பார்க்கலை என்ற மனக்குறை வேற பாக்கி. இப்பப் பகல்  பொழுது என்பதால்  கூடுதல் மகிழ்ச்சி.

ஆனால்....நம்மவர், 'அதிகநேரம் கோவிலில் இருக்கமுடியாது. சாமி தரிசனம் செஞ்சுக்கிட்டுக் கிளம்பினால்தான்  அதிகமா இருட்டுமுன்  கேரளா போய்ச் சேரலாம். இதுக்கும்  மலைப்பாதை வழியாத்தான் போகணும்'என்றார்.

என்ன ரூட்ன்னு  வலையில் பார்த்தால்  தென்காசி வழி! ஆஹா.... குற்றாலம். பார்த்துட்டுப் போகலாம்தானே? தேவதைகள் சதாஸ்து சொன்னார்கள்!














திருப்பரங்குன்றம், திருமங்கலம்,  க்ரிஷ்ணன்  கோவில் வழியா  ஸ்ரீவில்லிக்குள் நுழையும்போது மணி பத்து.  மதுரையிலிருந்து  கிளம்பி சுமார் ஒன்னரை மணிநேரம் ஆகி இருக்கு.  எண்பது கிமீதான்.  கோபுரவாசலில் கொண்டு போய் நிறுத்தினார் சீனிவாசன்.



















நீண்டு போகும் பாதையில் யாருமே இல்லை.  என்ன இப்படின்னு நடந்து போனால், கொஞ்ச தூரத்தில்  காவல்துறைக்காரர்,  இதன்வழியா அனுமதி இல்லைன்னார். ஆமாம்.... இதை கோபுரவாசல் அருகிலேயே உக்கார்ந்து சொல்லக்கூடாதா?  நோ எண்ட்ரி போர்டாவது  வச்சுருக்கலாமுல்லெ? இல்லைன்னா ஒரு கம்பித்தடுப்பு.... அதான் நேராப்போகும்  சாலைகளில் ஏகப்பட்டது  வச்சு வேகத் தடுப்பா  ஆகி இருக்கே!



சரின்னு வலது பக்கமாச் சுத்திக்கிட்டுப்போறோம். எதிரில் பூக்காரம்மா.  ஒரு முழம் தலைக்கு வாங்கிக்கிட்டேன். இன்னும் அஞ்சே முழம்தான் இருக்குன்னு.... இழுத்தாங்க. சரி சூடிக்கொடுத்தவளுக்கே  ஆகட்டுமே!






 இன்னிக்குச் சீக்கிரமா வீட்டுக்குப்போய்  வீட்டுவேலையை முடிக்கப்போறேன்னு சந்தோஷமாச் சொன்னாங்க. பெயரென்னங்கன்னதுக்கு  'கோதை'ன் னு பதில் !














கோவிலுக்குள் போய்  ஆண்டாளம்மாவை தரிசித்தோம். பூவை வாங்கி அவளுக்கு மாலையாகச் சார்த்தினார் பட்டர். (காலடியில் வீசி எறிய இன்னும் படிக்கலை போல. அவரை சென்னை, வெங்கட்நாராயணன் சாலை திருப்பதி தேவஸ்த்தானக்கோவில் பட்டர்களிடம் ட்ரெய்னிங் அனுப்பணும்!)

கண்ணாடிக்கிணறை எட்டிப்பார்த்துட்டு ஏற்கெனவே வந்து போய் எழுதியும் ஆச்சு என்பதால் பக்கத்துலே இருக்கும் நந்தவனத்துக்குப் போனோம்.










கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் இங்கே:-)



ஆண்டாள்  அவதாரம் செஞ்ச இடம். திருப்பூர நந்தவனம்.  போனமுறை உள்ளே போகலையேன்னு பார்த்தால் சந்நிதி காலி. பட்டர் தேவுடு காத்துக்கிட்டு இருந்தார். உள்ளே போய் ஸேவிச்சுக்கிட்டு அப்படியே வடபத்ர சாயி தரிசனத்துக்குப் போனோம்.



 இடது பக்கம் சக்கரத்தாழ்வாருக்கு அழகான மண்டபமும் சந்நிதியும். சக்கரத்தாழ்வாருக்கு  ஒரு கும்பிடு நேர் எதிர்ப்புறம் வானுயரக் கம்பீரமாய் எழுந்து நிற்கும் ராஜகோபுரம்.



படிகள் ஏறி மேலே போனால்....மூலவருக்கு முன் பெரிய திரை! தைலக்காப்பு !

இதென்னடா, இப்போ  ஐப்பசிதானே? இல்லையோன்னுன்னு விசாரிச்சால்..... இங்கே ஐப்பசிக்கு(ம்) இப்படியாம். வலதுபக்கத்துலே  உற்சவர்களை வச்சு அங்கேதான்  தினப்படி பூஜை நடக்கறது.சடாரி, தீர்த்தம் கிடைச்சது.








 பாருங்களேன் பெருமாள் பண்ணும் அக்கிரமத்தை! மார்கழியில் பார்க்கமுடியலைன்னுதானே  இப்ப ஐப்பசிக்குக் கிளம்பி வந்துருக்கேன். இப்பவும் இப்படிச் செஞ்சா எப்படி?  என்னப்பா....இப்படிச் செய்றீங்களேப்பா............  ன்னு சொல்லணுமோ!



நூத்தியெட்டு திவ்யதேசக்கோவில்களில்(108)  நம்ம ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு  நாப்பத்தி எட்டாவது இடம்(48)

இந்த முறையும்  கோவில் குளத்தையும், தேர் நிற்குமிடத்தையும் பார்க்கவே இல்லையேன்னு  இப்ப இந்தப் பதிவு எழுதும்போதுதான் நினைவுக்கு வருது:(



நாப்பதே நிமிசத்தில்   தரிசனம் முடிச்சு ஸ்ரீவில்லிபுத்தூரை விட்டுக் கிளம்பி, மடவார்வளாகம் ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி கோபுரம் பார்த்து  வண்டியில் இருந்தே ஒரு கும்பிடு. ஏனோ நம்ம வடுவூர் குமார் நினைவுக்கு வந்தார்:-)













வழியில் ஒரு குன்று, ப்ரேக் இன்ஸ்பெக்ட்டர்களின் ஊர்வலம், இன்னொரு குன்றின்மேல்  கோவில்(என்ன கோவிலோ?) அப்புறம் சேத்தூர் வெயிலுக்குகந்த விநாயகர் திருக்கோவில் சிலபல சமாதிகள் இப்படி  எல்லாம் கடந்து போறோம்.



விவசாயம் நல்ல முறையில் நடக்குதுன்னு கண்ணுக்கு எதிரில் தெரியும் காட்சிகள் சொல்கின்றன.









கடைய நல்லூர் கடந்து தென்காசி நோக்கிப்போகும்போதே சாரலின் குளிர்மை மனசுக்குள் வந்துருச்சு. இடது பக்கம் திரும்பி தென்காசி ஊருக்குள்ளே போகாமல் நேராகக் குற்றாலம்தான் அடுத்த நிறுத்தம்.






எல்லாரும் குளிக்க ரெடியாகுங்க.

தொடரும்.....:-)

ஒரு வீட்டுக்கு ரெண்டு அடுக்களை இருக்கலாமா? (ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் : பகுதி 2)

$
0
0

ஒரு வீட்டைக் கட்டி முடிச்சுட்டு அப்படியே விட்டுடக்கூடாது. அவ்வப்போது சின்னச் சின்ன மராமத்து வேலைகளை விடாமல் செய்வதோடு, நம் சௌகரியத்துக்கு ஏற்றபடி  மாற்றி அமைக்கத்தான் வேண்டி இருக்கு. உள்ளூர் சட்டப்படி  வெளிப்புற அமைப்பில் கை வைக்க முடியாது. வீட்டுக்குள்ளேயே  செஞ்சுக்கலாம். இதுக்கு  தொழில்நுட்பம் தெரிஞ்சவங்க வேணும்.நாம் பாட்டுக்கு  வீட்டு பாரம் தாங்கும் சுவரை (வெயிட்பேரிங் வால்) இடிச்சுட்டோமுன்னா வம்பாயிரும். நஷ்டத்துக்கு  காப்பீடு செஞ்சுருக்கும் காசுக்கும் நாமம்தான்.

இதையெல்லாம் கருத்தில் வச்சுக்கிட்டுக் கவனமா  வீட்டைப்  பராமரிக்கணும்.  யானை அசைஞ்சு தின்னும், வீடு ஆடாமல் தின்னும் என்றொரு பழஞ்சொல் இருக்கே!

ஒரு வீட்டுக்கு ரெண்டு அடுக்களை இருக்கலாமா?

ஏன்? தனித்தனியா சமைச்சுக்கப் போறீங்களான்னு கேக்கப்டாது கேட்டோ:-)  இப்ப இருக்கும் அடுக்களை பெருசுன்னாலும்,  ஒர்க் ஸ்பேஸ்ன்னு பார்த்தா கொஞ்சமாத்தான் இருக்கு. நாலு பக்கங்களில் ஒரு பக்கம் பூராவும் அலமாரிகள். இன்னொரு பக்கம் அடுப்புகள்! மூணாவது பக்கம் பாத்திரம் கழுவும் ரெட்டை ஸிங்க். இதுலே வேஸ்ட் மாஸ்டர் வச்சுருக்கு.  நாலாவது பக்கம் தான் ஒர்க் பெஞ்சு( மேஜை) ன்னு சொல்லிக்கலாம். இதையே காலை உணவுக்கான ப்ரேக்ஃபாஸ்ட் டேபிளாவும் பயன் படுத்திக்கலாம்.  எதிர்ப்பக்கம்  பார் ஸ்டூல்கள் போட்டு வச்சுருக்கு.  மூணாவது பக்கமும் நாலாவது பக்கமும் சேரும் மூலையில்  அடுக்களை மெஷீன்களுக்குரிய  அலமாரி.

மிக்ஸி, டோஸ்ட்டர், கெட்டில், காஃபி மில், இப்படி சாமான்களை வச்சுக்கலாம். உள்ளேயே ப்ளக் பாய்ண்ட்ஸ் போட்டுருப்பதால் தேவை ஏற்படும்போது அலமாரிக்கதவைத் திறந்து  தேவையான உபகரணங்களை  ஜஸ்ட் வெளியில் கொஞ்சமா இழுத்து வச்சு  வேலை முடிஞ்சதும்  உள்ளே தள்ளிக் கதவை மூடிட்டால்....  கப்சுப்.  யாருக்கும்  ஒன்னும் தெரியாது:-)))))

சமையலறை உபகரணங்களில் இப்பெல்லாம் ரைஸ் குக்கர்,  மைக்ரோவேவ் இதுக்கெல்லாம் இடம் வேண்டித்தானே இருக்கு. இதை இந்த  கேட்ஜெட் அலமாரியில் வச்சுக்க முடியாது.  கிச்சன் பெஞ்சுலே வச்சுக்கலாமுன்னா..... இடத்தை அடைக்குது.  இந்த அழகுலே  வெட் க்ரைண்டர் என்னும் சமாச்சாரம் ஒன்னும் இருக்கே!

முந்தி பாருங்க  சாதாரணமான மின்சார ஆட்டுக்கல்தான். டில்ட்டிங்  டைப்.  கீழே வச்சுக்கிட்டு அரைச்சமா, அப்படியே சாய்ச்சு மாவை எடுத்தோமா, தண்ணீர் அந்த க்ரைண்டரில் ஊத்தி  ரெண்டு நிமிசம் மெஷீனை ஓடவிட்டுக் கழுவனோமான்னு இருந்துச்சு.  நமக்கும் ஒன்னு கப்பலில் வந்து சேர்ந்துச்சு. ஊருக்கே  முதல் ஆட்டுக்கல்.  நண்பர் ஒருவர் இந்தியா (செட்டிநாடு)  போனபோது இதுபோல ஆட்டுக்கல் வந்துருக்குன்னு பத்திரிகை விளம்பரம் (அப்பெல்லாம்(1990) குமுதம் ஆ.வி. சந்தா கட்டி வாங்குன காலம்.  ஏர் மெயிலில் வரும்!) பார்த்தேன்னு சொல்லி என்ன விலைன்னு விசாரிச்சுக்கிட்டு வாங்கன்னுகேட்டுக்கிட்டேன்.

நண்பர் ,வெட்டிக்கிட்டு வான்னு வெட்டி , அதைக் கட்டி எடுத்துக்கிட்டு வரும் ரகம். திரும்பி வந்தவர், உங்க  ஆட்டுக்கல் கப்பலில் வருதுன்னார். அடராமா!  ரெண்டு மாசம் கழிச்சு   துறைமுகத்துலே இருந்து  ஃபோன் வருது.  ஒரு பொட்டி வந்துருக்கு. வந்து காசை அடைச்சு க்ளியர் பண்ணிக்கிட்டுப் போங்கன்னு. அதுக்குக் கப்பல் கூலி, க்ளியரன்ஸ்  சார்ஜ்,  உள்ளூர்  சேவை வரின்னு  கட்டி வீட்டுக்குக் கொண்டாந்தோம். சுண்டைக்காய் காப்பணம், சுமைகூலி முக்காப்பணம் கதைதான்.  ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கல்லுக்கு ஆயிரம் டாலர் வரை  செலவாகிருச்சு.

நாட்டுக்கே ஒரு கல் என்ற நினைப்புதான்.  அதை எங்கே வச்சு அரைப்பதுன்னு  யோசனை . எல்லா ஏரியாவும் கார்பெட் என்பதால் தண்ணீர் சிந்தாம அரைக்கணும். கழுவி எடுக்கணும். அப்புறம் அதை ஒரு இடத்தில் ஸ்டோர் பண்ணியும் வைக்கணும். தினமுமா அரைக்கப்போறோம்? சம்மர் காலத்துலே வாரம் ஒரு நாள். அந்த மூணுமாசம் போச்சுன்னா..... அவ்ளோதான் இட்டிலியும் தோசையும். மாவு வேற புளிக்காது  இந்தக்குளிரில். அதுக்கு வைத்தியம் செய்யறேன்னு அவனுக்குள் வச்சு  மறந்து போய் அது இட்லிப்பவுடர் ஆன கதையெல்லாம்  இருக்கு:-) கிச்சன் மேஜைக்கு அடியில்  வச்சுக்கிட்டு தேவையான போது  இழுத்து வெளியில் வைக்கலாமுன்னு அதை ஒரு  நாலு சக்கரமுள்ள  பலகையில்  வச்சு ஃபிக்ஸ் செஞ்சதெல்லாம் தனிக்கதை:-)

பத்துப்பனிரெண்டு வருசம் உழைச்ச கல் அப்புறம் சுத்தமாட்டேங்குது.  பெல்ட் தளர்ந்து போச்சுன்னு நம்மூட்டு எஞ்சிநீயர் சொன்னார்.  அப்புறம் இவர் ஊருக்குப்போனப்ப ஒரு டேபிள் டாப் கிரைண்டர் வாங்கியாந்தார். மூணு குழவிக்கல்.  இது நல்லாவும்,சீக்கிரமாவும் அரைக்குதுன்னாலும்  கம்பி வச்சு உருளைகளைத் தூக்கி  எடுத்து  மாவை வழிச்செடுக்கணும்.  பின்னே எல்லாத்தையும்  கொண்டுபோய் சிங்க்கில் வச்சுக் கழுவி துடைச்சுன்னு பெரிய பேஜார். நமக்கோ தோள் வலி (!) அதிகம்:(

சராசரி இந்தியர்களை விட (நான் சொல்றது எங்க தலைமுறை ஆட்கள்) இங்கே பொதுவா மக்கள்ஸ்,  கொஞ்சம் உயரம்தான்.   அதுக்கேத்தமாதிரிதான்  அடுக்களை கப்போர்ட், பெஞ்சு டாப் எல்லாம் செய்வாங்க. முழு கிச்சனும் செஞ்சு  விக்கறாங்க. ஏற்கெனவே ரெடிமேடா தயாரிச்சு இருக்கும் அடுக்களைன்னா மலிவாவே கிடைக்கும். எல்லாமே ஒரு ஸ்டேண்டர்டு சைஸுலே செஞ்சுருக்கும்.

 நானோ உயரம் கம்மி. வீட்டுக்குள்ளே செருப்பு போட்டுக்கும் பழக்கமும் இல்லை. உயரம் என்னதான் 10, 15 செண்டி மீட்டர் கூடுனாலும், கை வலி, தோள்பட்டை வலி வந்துருது.  இது  இன்னும் வலியை அதிகப்படுத்திருதுன்னுதான்  நம்ம வீட்டு அடுக்களையை  செஞ்சப்ப உயரம் கொஞ்சம்  குறைச்சுச் செஞ்சோம். ஒர்க் பெஞ்சுக்கு மட்டும் இன்னும்  ஒரு பத்து  செ.மீ குறைச்சேதான்  வச்சோம்.அதுக்காகவே என்னுயரத்துக்குத் தகுந்தமாதிரி ஸ்பெஷலா செய்யறோம். (அதானே.........பதிவு எழுதும் கைக்கு வலி வரலாமா? )

இந்த பட்டர்ஃப்ளை  ஆட்டுக்கல்லை கிச்சன் பெஞ்சுலே நிரந்தரமா வச்சுக்கிட்டா நல்லது.  கீழே கப்போர்ட்லே இருந்து தூக்கி வச்சு அரைச்ச பின் கீழேமறுபடி இறக்கி வச்சுன்னு..... வேலைப்பளு அதிகமா இருக்கு. ஆனால் பெஞ்சு டாப்லே போதுமான இடம் இல்லையே:(

அதான்.... இன்னொரு அடுக்களை ,இல்லேன்னா இந்த அடுக்களையைப் பெருசா மாற்றி அமைப்பது ன்னு எதாவது செஞ்சாகணும்.  முன்னாலேயே சொன்னபடி  மீண்டும் கிச்சன் ஸ்பெஷலிஸ்ட்டைக் கூப்பிட்டு  எதாவது செய்யமுடியுமான்னு பார்க்கலாம். ஜஸ்ட்  இதுக்கே இங்கே காசைத் தீட்டிருவாங்க. சுலபமான வழின்னால் இன்னொரு அடுக்களை.

நம்ம வீட்டில் டைனிங் ஏரியாவை ஒட்டி  வெளிப்புறம் போக  ஒரு ஸ்லைடிங் டோர்ஸ் போட்டுருக்கோம் பாருங்க. அந்த இடம்  வீடு கட்டும்போதே காங்க்ரீட் போட்ட தரையாக  செஞ்சுக்கிட்டதுதான். திறந்த வெளியாக ரெண்டு பக்கம் மட்டும் சுவருள்ளதாக  இருக்கும். அளவு கூட  நாலு மீட்டர் பை ரெண்டு புள்ளி நாலு மீட்டர் இருக்கு.  கிட்டத்தட்ட 96 சதுர அடிகள்.  நம்ம கிச்சன் கிங்  வீடு கட்டிய புதுசுலேயே அதுக்கு மேலே  ஒரு சரிந்த கூரை  போட்டு,  மூணாவது பக்கத்துக்கு  ட்ரெல்லீஸ் வச்சு  , நாலாவது பக்கத்துக்கு நம்ம பழைய வீட்டுலே இருந்து கழட்டி எடுத்த  ஸ்லைடிங்  டோர்ஸ் எல்லாம் இங்கே சரிப்படுத்தி வச்சு இதை ஒரு அறையா அமைச்சுக் கொடுத்திருந்தார்.

அங்கே ஒருமேஜை போட்டு ஒரு ரெண்டு பர்னர் கேஸ் அடுப்பு,  டேபிள் டாப் ஆட்டுக்கல்  வச்சுக்கிட்டு இருந்தேன்.  நம்ம கிச்சன்  சாமான்கள்   மின்சாரத்துலே இயங்கும்  கடாய், தோசைக்கல்,  ஹாட் ஏர் அவன், வடை மேக்கர் ன்னு ஒவ்வொன்னாக் கூடி வர வர   அந்த மேஜையில் இடம் போதலை:(

இன்னொரு சுவர்ப்பக்கம் ஒரு நீள பெஞ்சு (இதுவும் என் தையல் மெஷீன், ஓவர் லாக்கர் வைக்க  கவுத்துப்போட்ட 'ட' டிஸைனில் கோபால் செஞ்சதுதான்.  அப்புறம் ஒரு காராஜ் ஸேலில்  தையல் மெஷீன் வைக்கன்னே ரெடிமேடா வரும்  ஸோயிங் டேபிள் கிடைச்சதால் , நம்ம 'ட'வை நீட்டிக்கொடுத்துட்டார்  கிச்சன் கிங்) அதுலேயும் பக்கத்துலே ஒரு பிரம்பு ஸ்டேண்டிலும் நம்ம காக்டஸ் செடிகளை வச்சு இதை காக்டெஸ் கன்ஸர்வேட்டரியாகவும் வச்சுருந்தேன்.

வீட்டுப்ளானில் வீட்டுக்குள் ஒரு அடுக்களை மட்டுமே வைக்கணும் என்பது  சட்டம். ப்ளம்பிங் எலக்ட்ரிகல் வேலைகள் எல்லாம் இருக்கே. ரெண்டு அடுக்களைக்கு சிட்டிக்கவுன்ஸில்  அனுமதி தரமாட்டாங்க.

 ஆனால்....வீட்டுக்கு வெளிப்புறம் பார்பக்யூ ஏரியா ஒன்னு வச்சுக்க  அனுமதி உண்டு.சுட்டுத் திங்கும் சமாச்சாரத்துக்கு  இடம்  ஒதுக்கிக்கலாம்.
இங்கெல்லாம் வீடு கட்டிக்கணுமுன்னா வீட்டுப்ளானை சிட்டிக் கவுன்ஸிலுக்கு அனுப்பி அவுங்க அனுமதி வாங்கிக்கணும். கட்டும்போதே ஒவ்வொரு கட்டத்துக்கும் வந்து பார்த்து  சரியா இருக்கு. மேலே கட்டலாம் என்ற சான்றிதழ்  கொடுப்பாங்க.  இது கிடைக்கலைன்னா   கட்டும் வேலையைத் தொடர முடியாது. இதைப்பற்றியெல்லாம் நம்ம வீடு வா வாங்குது தொடரில் விளக்கமா(!)எழுதி இருக்கேன். வெறும் 46 பகுதிதான்:-)


அங்கே ஒரு பெஞ்சு  டாப் & கப்போர்டு வச்சுக்கலாமுன்னு  நம்ம மகள் வீட்டுக் கிச்சன் செஞ்சுதந்த கம்பெனியைக் கேட்டோம்.  சொன்ன விலை ரொம்பவே அதிகம்.  மற்ற ஹார்ட் வேர் கடைகளில்  ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்  டாப்  போட்ட மெட்டல் ஒர்க்  பெஞ்ச் கிடைக்குது. அளவு தான் நமக்கு  ஒத்துவரலை. அவை 2.4 மீட்டர் நீளம். நம்ம இடம்  இதே நீளத்துக்கு இருக்குன்னாலும்  ஸ்லைடிங் கதவில் இடிக்கும்.

தேடுதல் தொடர்ந்த நிலையில் ஒரு கடையில்  2.2 மீட்டர் நீள பெஞ்சு டாப் பலகை பார்த்தோம்.  இப்ப இதுக்குக் கீழே கப்போர்டு செஞ்சுக்கலாமுன்னு கோபால் சொன்னார். கார்ட் லெஸ் ட்ரில், மத்தபடி சுத்தி , அரம் இப்படி  மரவேலைக்கான சாமான்களை,  அப்பப்ப  சாண்ட்டா க்ளாஸ் தந்துருக்காரே.

எனக்கு ஹார்ட் வேர் கடையில் சுத்திப்பார்க்கறது சூப்பர் மார்க்கெட்டை விட சுவாரஸியமான பொழுது போக்கு. இன்னொருநாள் பார்த்தால்  கிச்சன் கேபினெட் பேஸ்  வச்சுருக்காங்க.வெவ்வேற அளவுகளில்  இருக்கு. நாம் அதை வாங்கி அஸெம்பிள் செஞ்சுக்கணும்.

2.2 மீட்டருக்கு  எந்தெந்த அளவு  கேபினட் வாங்கலாமுன்னு கணக்குப்போட்டு,  முன்னூறில் ரெண்டு, அறுநூறில் ஒன்னு,  நாப்பதில் ஒன்னுமா வாங்கினோம். மீதி இருக்கும் இடம்கேஸ் ஸிலிண்டர் வச்சுக்கன்னு  ஐடியா.

கேபினட்  மட்டும் தயாரிச்சுட்டு விக்காம,  அதுக்குண்டான Hinge, Knob எல்லாம்  தனித்தனியா அவுங்களே செஞ்சு வச்சுருக்காங்க.  இதை வாங்கினவன் அதையும் வாங்கித்தானே ஆகணும்! Kaboodle என்ற பெயரில் சீனத் தயாரிப்பு.

சும்மாச் சொல்லக்கூடாது.... நான் பார்த்தவரையில் இங்கே இறக்குமதி ஆகும் சீனத்தயாரிப்புகளுக்கு  அஸெம்ப்ளிங் இன்ஸ்ட்ரக்‌ஷன்  அருமையா இருக்கு.  எதெது எங்கே இணைக்கணும். எந்த பார்ட் எதுக்கு, எந்த ஆணி எதுக்குன்னு ஒரு சின்ன தகவல் பிழைகூட இல்லாமல் இருக்கும். தைரியமா நம்பி வாங்கலாம்.



வாங்கி வந்த  மறுநாள் ஒரு முன்னூறு கேபினெட்டைப் பொருத்திவச்சுப் பார்த்தார் கோபால். சுலபமா செய்ய வருது.  க்றிஸ்மஸ் லீவுக்கான அஸைன்மெண்டா இதை ஒதுக்கி வச்சுக்கிட்டோம். லீவு ஆரம்பிச்சதும்  வேலையை ஆரம்பிக்குமுன்  சரியான கணக்கைப் போட்டுக்கலாமுன்னு நினைச்சேன். ஸிலிண்டருக்கு விட்ட காலி இடம்  வேண்டாமுன்னு தோணுச்சு. பெஞ்சு டாப்புக்கு அடியில் இன்னுமொரு நாற்பது  செமீ  கேபினெட் போடலாமா?  இன்னொருக்காக் கணக்குப்போட்டுப் பார்த்து  ரெண்டு நாற்பது, ஒரு அறுபது,  ஒரு எண்ணூறுன்னு போட்டால் என்ன?

அடடா...  ஏற்கெனவே தப்புக்கணக்கில் வாங்கி வந்தவைகளை என்ன செய்வது?  இங்கெல்லாம் நோ ஒர்ரீஸ். பாக்கிங் பிரிக்காம அப்படியே இருந்தால்  திருப்பிக்கொடுத்துட்டு மாத்திக்கலாம். வேணவேவேணாமுன்னு நினைச்சால்  திருப்பிக் கொடுத்துட்டுக் காசையும்  வாங்கிக்கலாம். என்ன ஒன்னு.... சாமான்கள் வாங்கின ரசீதைக் கடையில் காமிக்கணும்.

அதேபோல வேண்டாதவைகளைக் கொடுத்துட்டு  எண்ணூறு வாங்கிக்கிட்டோம். ஒரு முப்பது தான்,  அஸெம்பிள் பண்ணிட்டதால்  திருப்ப முடியலை. இருந்துட்டுப்போகட்டும். குச் காம் கோ ஆயேகா!
ஒருநாள் மடமடன்னு வேலையைப் பார்த்தார். நானென்ன செஞ்சேன்னு கேக்கபிடாது.  செய்முறை விதிகளைப் படிச்சு அததுக்குத் தேவையானவைகளை எடுத்துக்கொடுப்பது என் வேலை. சுருக்கமாச் சொன்னால்...சித்தாள்! கூடவே  க்ளிக்கும் வேலையும் இருக்கே:-)



 அதிக உயரம்  வேண்டாம் என்பதால்  கேபினெட் பொதியில் இருந்த கால்களுக்கான பீடத்தை வைக்கலை.

காக்டஸ் கன்ஸர்வேட்டரியை முதலில்  காலி செஞ்சு இடத்தைச் சுத்தப்படுத்தினோம்.  செஞ்சு வச்ச கேபினெட்களை  அடுக்கிப் பார்த்தால்.....
வீட்டில் ஒரு கேஸ் அடுப்பு அவனோடு கூடியது  சும்மாத்தான் இருக்கு. பழைய வீட்டில் இருந்து கொண்டு வந்தது.  அது  விலை கூடியதும் கூட . அது வாங்கி  நாலாம் வருசம்  வீடு மாறிட்டோம்.  மகள் வீட்டுக்குப் போடலாமுன்னு வச்சுருந்து,  வச்சுருந்து அதுக்கு நேரங்காலம் அமையலை. ச்சும்மா  பொதிஞ்சு கிடக்கும் அடுப்பை இங்கே கொண்டு வந்து போட்டுக்கலாமுன்னு நினைச்சேன். பொதியைப் பிரிச்சுப் பார்த்தால் புதுக்கருக்கு மாறலை.  அவன் உட்பட முழு சமையல் செய்யலைன்னாலும்  தேவைப்பட்டால்  ஸ்டவ்டாப் மட்டும்  பயன்படுத்திக்கலாம்.  மேலும் அதிலுள்ள அவன் பகுதி, வார்மர் எல்லாம் ஸ்டோரேஜ் ஸ்பேஸாகவும் பயன்படுமே!

ஒருவழியா  வேலை முடிஞ்சதும் பார்த்தால்  இடமே பளிச்!   உடனே அவுட் டோர் சிட்டிங் இருக்கட்டுமுன்னு  நாற்காலிகள் போட்டுப் பார்த்தால் அமர்க்களம். நடுவில் வைக்க ஒரு சின்ன வட்ட மேஜை, மார்கெட்டில் நமக்காகவே காத்திருந்தது இன்னும் விசேஷம். ஒரே ஒரு சின்ன ப்ராப்ளம் என்னன்னா...



மேற்  கூரையில்  பாலிகார்பனேட் இணைச்ச இடங்கள் சிலதில்  சன்னமான இடைவெளி வந்துருக்கு போல. லேசான ஒழுகல். நம்ம கிச்சன் கிங் இருந்தால் தகவல் சொல்லிட்டு நாம் நிம்மதியா இருக்கலாம்.  வேலை முடியும்வரை தூங்கமாட்டார் அவர்.  இந்தக்கூரை அவர் போட்டது இல்லை. அவர் போட்ட கூரையில்  ஆலங்கட்டி மழை விழுந்து   நிறைய இடங்களில்  பொத்தல் விழுந்துருச்சுன்னு  மாத்த வேண்டியதாப்போச்சு.  கிங்,நாட்டை விட்டுட்டு  இப்போ அமெரிகாவில் இருக்கார்.  அவர் தம்பிதான் இப்போ நமக்கு  அப்பப்ப எதாவது வேலைக்கு வந்து செஞ்சுட்டுப் போவார்.  ரெண்டாவது கூரை மாத்தியது தம்பிதான். கிங் போல வேலையில் அவ்ளோ சரி இல்லை இவர்.  ரொம்பவே சுமார்தான்.

நானே கூரை மாத்தப்போறேன்னு ஆரம்பிச்சார் நம்மவர்.  முதல் வேலையாத் தடா போட்டேன்.  காசுக்குப் பிடிச்ச கேடு. மாற்று மருத்துவமா என்ன செய்யலாமுன்னு யோசிச்சபோது,  இன்னொரு மெட்டீரியல் கிடைச்சது அதே ஹார்ட் வேர் ஷாப்பில்.  நல்ல கனம் கூடிய  ப்ளாஸ்டிக் ஷீட். மீட்டர் கணக்கில் வாங்கிக்கலாம். இங்கே Shade Cloth ஆக பயன்படுத்தறாங்க. அதில் தேவையான அளவு வாங்கி இருக்கும் கூரையின் மேலேயே  விரிச்சு  அங்கங்கே  மரத்தோடு இணைக்கும்  ஆணிப்பட்டைகளை வாங்கி அடிச்சுப் பார்க்கலாமே!
செஞ்சோம்.  மழை வந்தால் தாங்குமா, இல்லே ஒழுகுமான்னு பார்க்க, கார்டன் ஹோஸ் எடுத்து தண்ணீர் அடிச்சுப் பார்த்தால்.....   வெற்றி வெற்றி!

என்ன ஒன்னு இப்போ கூரைக்கு அடியில்  நாற்காலிகளில் உக்கார்ந்தால்  சூடு அதிகமாத் தெரியுது. எப்பவாவது வரும் சூரியன் என்றாலுமே வந்துட்டான்னா..... கூரையைப் பொத்துக்கிட்டுல்லே வர்றான்.

நமக்கென்ன ஐடியாவே வராதா என்ன?  போடு ஒரு ஷாமியானா:-)  தேடிப் பார்த்ததில்  அனிமல் தீம் உள்ளது மாட்டுச்சு.  ஆணிப்பட்டை வச்சு இதையும் ஒரு வழியாப் பொருத்தி இருக்கோம்.

எல்லாம் நல்லபடி அமைஞ்சதில் நம்ம வீட்டுத் தொழிலாளிக்கு  ரொம்பவே மகிழ்ச்சி. இதே மகிழ்ச்சியோடு  இங்கே சமைச்சுக்குங்கன்னு சொல்லி மகிழ்ச்சியை அதிகரிச்சுட்டேன்:-)

தொழிலாளியின் மற்ற தொழில் விவரங்கள்  அடுத்து வரும் பதிவுகளில் வரும்!

PINகுறிப்பு:    நியூஸி ரிட்டர்ன் ஆட்டுக்கல்  புராணம்: இந்திய வாசம்  சமயம் இங்கிருந்து  கொண்டுபோன சாமான்களுடன் சாந்தாவையும் தூக்கிப்போட்டோம். சென்னையில் அதை ரிப்பேர் செஞ்சால் ,  நம்ம ஹோப் ஃபவுண்டேஷனுக்கு  பயன்படுமான்னு கேட்டால்,  மலர்விழி (ஹோப் இயக்குனர்)  உடனே வந்து எடுத்துக்கிட்டுப் போனாங்க. ஹோப் ஹோமுக்கு கல் வேண்டி இருந்த சமயமாம். 'இருவது ரூபாய் செலவில் இந்த பெல்ட்டையே வெட்டி ஒட்டுனதும், ஜோராய் அரைக்குது மேடம். உங்க பெயர் சொல்லி குழந்தைகளுக்கு இன்னிக்கு இட்லி'ன்னு  ஃபோனில் சேதி சொன்னாங்க.   பயனாகுது என்பதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி!




குற்றால அருவியிலே குளித்தது போல் ....... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 26)

$
0
0
கண்  போகும் திசை எல்லாம் பச்சைப் பசேல்னு இருக்குப்பா!  தென்காசி ஊருக்குள் போகாமலேயே பைபாஸ் செஞ்சு போய்க்கிட்டு இருக்கோம்.  அலங்கார தோரணவாசல் வச்சு குற்றால சிறப்பு நிலை பேரூராட்சி அன்புடன் வரவேற்றது!

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 86 கிமீ. ஒன்னேமுக்கால் மணி நேரம்  எடுத்தது. இப்ப  நடுப்பகல் 12.30.

ஐந்தருவி, சிற்றருவிக்கு இந்தப்பக்கம் போ. புலியருவிக்கு அந்தப்பக்கம் போன்னு எந்தெந்த அருவிக்கு எந்தத் திசை போகணுமுன்னு தகவல்.  பேஷ் பேஷ். சுற்றுலாப்பயணிகள் ஏராளமாக வரும் இடம். இதெல்லாம்  இருக்கணும்தான். இருக்கு என்பதே மகிழ்ச்சி.

மெயின் அருவிக்கு இன்னும் அறுநூறு மீட்டர்கள்தான் என்றதைப் பார்த்ததும் மனசு ஜிவ்ன்னு பறந்தது. இதே குற்றாலத்துக்கு  ஒரு நாப்பத்திநாலு வருசங்களுக்கு  முன் வந்திருக்கேன்.

 மே மாசம். நல்ல  வெயில் காலம்.  ஒரு சுற்றுலாக்குழுவில் சேர்ந்துக்கிட்டோம் நானும் என் தோழியும். அதுலே போக வேண்டிய குடும்பங்களில்  கடைசி நாட்களில்  சிலர் ஜகா வாங்க, அந்த இடம் எங்களுக்கு ரொம்ப மலிவான விலையில் கிடைச்சது.  பஸ் பயணம்.  12 நாட்கள். எல்லாம் கோவில் விஸிட்களே.  இடையில்  இந்தக் குற்றாலம் வாய்ச்சது. அருவியைப் பார்க்க துள்ளிக் குதிச்சு ஓடோடிப் போறோம். போனால்.....

சுத்தம்.  சொட்டுத்தண்ணி இல்லை:(  பளிச்ன்னு காஞ்சு நிற்கும் மலைதான் கண் முன்னே!  கிட்டக்கூடப் போய்ப்பார்க்கலை. அதான் தண்ணி இல்லையேன்னு இலஞ்சிநாதர் கோவிலுக்குப்போய் கும்பிட்டுட்டுத் திரும்பிட்டோம்.

அப்பெல்லாம் பக்தி அதிகமுன்னு சொல்லமுடியாது. ஜஸ்ட் வேடிக்கை பார்க்கும் மனோபாவமே. கோவில்களுக்குப் போனாலும்  பழக்க தோஷத்தில் கையெடுத்துக் கும்பிடுவதோடு சரி. நம்ம வீடுகளில் குழந்தைகளை இப்படித்தான் பழக்கி வச்சுடறோம் இல்லையா?  

சிற்பங்களை உத்துப் பார்த்து ரசிப்பது எல்லாம் பின்னால் வந்தது. சரியாச் சொன்னால்..... கோவிலே இல்லாத வெளிநாடுகளுக்குப் போனபின் நாம் விட்டு வந்த நாட்டின் நல்ல விஷயங்களை  'இப்போது இழந்துட்டோம்'என்ற மனோபாவம் வருதே... அப்ப இருந்துதான்  சாமி சாமின்னு அலையறேன். அதுகூட நம்ம வீட்டுக்கு  சாமி வந்துட்டார் பாருங்க, அப்போலே இருந்து அதிகம். வயசும் ஏறிக்கிட்டே போகுதே....!கோவில் கோவிலா...  இப்போ பார்க்கலைன்னா பின்னே எப்போ?  அதுக்காக இன்னொரு ஜென்மம் எடுக்க  வேணாமேன்னுதான், கேட்டோ:-)


இப்போ தண்ணீர் இருக்கான்னு கேக்க வேண்டிய அவசியமே இல்லை.  நீர்வீழ்ச்சியின் ஓசை  இங்கேயே கேக்குது.  திருக்குற்றாலம் பேரருவிக்கு ஒரு அலங்கார நுழைவு வாசல்!

நல்லவேளையாக அருவிக்குப் பக்கம்வரை வண்டி போகும் நல்ல சாலையாகவும் இருக்கு.  இதோ கண் முன்னே  அருவி தெரிய ஆரம்பிச்சதும் உள்ளம் துள்ளியது உண்மை. ரொம்ப நடக்க வேணாம்.


வண்டியை விட்டு இறங்கும்போதே  மலை முகட்டில் இருந்து பொங்கி வழியும் தண்ணீர்  ஒரு பரவசத்தைக் கொடுப்பது உண்மை. ஹைய்யோ!  பெருமாளே!  என்னவெல்லாம் படைச்சு விட்டு, எங்களை அனுபவிக்கச் சொல்றீரே !



கார்பார்க்கிலிருந்து அருவிக்குப்போகும் பாதையில் ரெண்டு பக்கமும் சின்னச்சின்னக் கடைகள். எதா இருந்தாலும் திரும்பி வரும்போது பார்த்துக்கலாம். முதலில் தண்ணி!

கம்பித்தடுப்புகள் போட்டு வச்சுருக்காங்க. அருவித்தண்ணீர் வழிஞ்சு ஆறாக ஓடுது. குறுக்கே ஒரு பாலம்.  பாலத்துக்கு அந்தாண்டை பெண்கள் கூட்டம்.  இந்தாண்டை ஆண்களுக்குத் தனி இடம்.



அருவி யாருக்கும் வஞ்சனை  காமிக்குதுன்னு சொல்ல இயலாது. இரைச்சலோடு பொங்கி வழியுது!


ஆண்கள் பகுதியில் ஏகப்பட்ட கூட்டம்.  பெண்களில் பலர் அருவி வழிஞ்சு ஆறாகஓடும் இடத்தில் பாலத்துக்குக் கீழே இருக்கும் பாறைத் தரைகளுக்கிடையில்  தண்ணீரில் கிடக்குறாங்க. மனசின் மகிழ்ச்சி பூராவும் முகத்தில்!

இருட்டினபிறகும் குளிக்கமுடியும். நிறைய விளக்குகள் போட்டு வச்சுருக்காங்க. இங்கே பவர் கட் இருக்காதுன்னு நம்புவோமாக. வெய்யில் அதிகம் இருப்பதால் ஸோலார் லைட்ஸ் போட்டும் வைக்கலாமில்லையா?

தண்ணீர், எல்லோர் வயசையும் குறைச்சுச் சின்னப்புள்ளைகளா ஆக்கிருது. இதுக்குள்ளே நம்ம  ஆஞ்சீ குடும்பத்தினர்  இடது பக்க மலைச்சரிவிலிருந்து இறங்கி வரஆரம்பிச்சாங்க.குழந்தையும் குட்டியுமா பார்க்கவே குஷி!
கீழே கிடக்கும் காலி தீனிப்பைகளை எடுத்துத் திறந்து பார்க்கும் முகத்தில் ஏமாற்றம்:(

பசங்களுக்கு எதாவது தரலாமேன்னு நினைச்சவுடன் காரில் இருக்கும்  சரவணபவன்  பன் ஞாபகம் வந்துச்சு. காருக்குப்போய் எடுத்துக்கிட்டு வந்தார் கோபால். வரும்போதே பொதியைத் திறந்து  கொஞ்சம் கிள்ளி அருகில் வந்துக்கிட்டு இருந்த சின்னவனுக்குக் கொடுத்ததும் எல்லோரும் இங்கே ஓடி வந்தாங்க.

'சட்னு  பன்களை வெளியே வீசிப்போடுங்க'ன்னு சொன்னதும்  அப்படியே ஆச்சு.  ஆளாளுக்குக் கிடைச்சதை எடுத்துக்கிட்டுத் தனியே போய் தின்ன ஆரம்பிச்சாங்க. கிடைக்காததுகள் பாவம்.... அடுத்தவனிடம் இருந்து பிடுங்கப் பார்க்குதுகள்.

பசங்க, இங்கே வேற வகை. கொஞ்சம் சிவந்த நிறம். அழகு கொஞ்சும் முகம்!


இதுக்குள்ளே அருவியில் குளிச்சு முடிச்சுத்  திரும்பும்  ஒரு இளைஞர் குழுவில் ஒருத்தர்  ஒரு 'இவன் 'பக்கத்தில் உக்கார்ந்து 'அவனிடமிருந்து கொஞ்சம் பன்  வாங்கறேன் பாரு'ன்னு நண்பர்களிடத்தில் சவால் விட்டுக்கிட்டு இருந்தார். இவர் கை நீட்டுனதும் அவன் சட்ன்னு அந்தப்பக்கம் திரும்பித் தின்ன ஆரம்பிச்சான்.





இவர் கெஞ்ச, அவன் மிஞ்சன்னு  ஒரே சிரிப்பும் கலாட்டாவுமா ....
இவர் பெயர் ராஜகோபால். விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டு, உங்க படங்கள் உலகெல்லாம் போகப்போகுதுன்னு சொன்னவுடன்,  வெட்கம் கலந்த  முகத்தில்  நன்றி சொன்னார்.  குளிச்சு முடிச்சாச்சா, இல்லை மீண்டும் வருவீங்களான்னா....  வருவாங்களாம். ரெண்டு நாளா  அருவியில் அதிகமாத் தண்ணீர் வரத்து இருந்ததால் யாருக்கும் குளிக்க அனுமதி  இல்லையாம். இன்றைக்குத்தான்   குளிக்க அனுமதி கிடைச்சது. அதான் வழக்கத்தை விடக் கூட்டம் அதிகம் என்றார்.

பசங்களைப் பார்ப்பதே ஒரு ஆனந்தம் தானே:-)))







அருவி பொங்கிப்பெருகி ஆறாக ஓடும் இந்த இடத்தில் தண்ணீர் சிக்கனம் குறிச்சு ஒரு விளம்பரம்!




நாங்களும்  தண்ணீரில் காலை நனைச்சுட்டுக் கிளம்பினோம்.  அருவியை  க்ளிக்குவதைத்தான் நிறுத்தமுடியலை என்னால். அதேதான் குரங்கன்களையும்...    திரும்பி வரும்போது  நெல்லி,  கொய்யா, கருவேப்பிலைன்னு பார்க்கவே ஆசையா இருந்துச்சு.  கூடை முடைஞ்சு விற்கும் அம்மாவின் புன்சிரிப்பு  மனசுக்குப் பிடிச்சது.  கூடையும் அழகுதான்.  ஆனால்  கொண்டு போக முடியாதே!  டீ குடிச்சுக்குங்கமான்னு  கொஞ்சம் காசு கொடுத்துட்டு  வண்டிக்குத் திரும்பினோம்.




சின்னதா இருக்கும் கடைத்தெரு என்றாலும் பயணிகளுக்கான குளியல் சாமான்களுக்குக் குறைவில்லை. கூடவே டீக்கடைகளும் தீனியும்.  குளிச்சு , தின்னு, குளிச்சு தின்னுன்னு இருக்கலாம். பயணிகள் உடமைகளைப் பாதுகாத்து வைக்கும் லாக்கர் வசதிகளும் இருக்கு.



திரும்பி வரும்போதுதான் கவனிச்சேன் 'கண்ணும் கண்ணும்' சினிமாவில் நடிச்ச பங்களாவை! க்ளிக் க்ளிக்.   எதுக்கு ஜன்னலை செங்கல் வச்சு அடைச்சுட்டாங்க? தளவாய் ஹவுஸ் என்னும் பெயராமே!

கோவிலுக்குப் போகலாமுன்னால்.... மணி ஒன்னு. கோவில் மூடி இருக்குமாம்.  மாலை நாலு வரை காத்திருக்க நமக்கு நேரமில்லை:(
ஆதியில் பெருமாள் கோவிலா இருந்து அப்புறமா சிவன் கோவிலாக ஆச்சுன்னும்,  பெருமாள் அரூபமா இருக்கார் அங்கேன்றதும் சுவையான தகவல்கள்.


சரி.இங்கேயே பகல் சாப்பாட்டை முடிச்சுக்கலாமுன்னு கோபால் சொன்னதும், வரும்வழியில் 'அருணா ஆப்பக்கடை 'பார்த்தேன்னேன். அங்கேயே போனோம். சாரல் ரிஸார்ட்டின் ரெஸ்ட்டாரண்ட் இது.


நல்ல நீட்டா இருக்கு. உள் அலங்காரம் பரவாயில்லை.  அங்கோர்வாட்,  ஸ்ரீரங்கம், குற்றாலம்  ஆகிய படங்கள் சுவர்களில்.  டிவியில் எதோ  ஹிந்தி  சினிமா ஓடிக்கிட்டு இருக்கு.  வேலை செய்பவர்கள் எல்லோரும்  வடக்கர்களாம்.   சூப்பர்வைசர் சொன்னார்.  அவரும் முந்தி பம்பாயில் பல வருசங்கள் இருந்ததால் , இவர்களிடம் அவர்கள் மொழியில் பேசி வேலை வாங்கமுடியுதுன்னார்.



ஆப்பக்கடையில் ஆப்பத்தைத் தவிர  மத்ததெல்லாம் இருக்கு:(  தமிழ்நாடு முழுசும்  வட இந்திய, சீன வகைகள் சாப்பாடுதான்.  ப்யூர் வெஜ் ஃபேமிலி ரெஸ்ட்டாரண்ட் என்ற பெயரில் எல்லா நான் வெஜ் சமாச்சரங்களும் கிடைக்குதுன்னு மெனு சொல்லுது.  ஒருவேளை மாடியில் இருக்கும் நான் வெஜ் ரெஸ்ட்டாரண்டுக்கும் சேர்த்து ஒரே மெனு கார்டு போல!
கீழே அருணான்னா மாடியில் டயானா:-)

நமக்கு  சப்பாத்தி, சாதம், தயிர்,  தால், மிக்ஸட் வெஜ்ன்னு எதோ ரெண்டு கறிகள்  கிடைச்சது.      நமக்குப் பரிமாறின  பெண்,   ஹரியானாவாம்.  நாம் சண்டிகரில் இருந்துருக்கோம் என்றதும்   முகம் மலர்ச்சியும் லேசா சோகம் இழையோடும் கண்களும் ஒருசேர...... ப்ச்...யாரா இருந்தாலும் சொந்த ஊர் நினைவு கொஞ்சம் படுத்தத்தான் செய்யுது, இல்லை?

  நல்ல மிருதுவான  ஃபுல்கா.  சமையல் யாருன்னா .... அவரும் பஞ்சாபியாம்.

ஓய்வறைகள்  பரவாயில்லை.

ஒன்னு நாப்பதுக்கு கிளம்பி செங்கோட்டை  நோக்கிப் போறோம். பத்தே நிமிசம்தான் ஆச்சு இந்த எட்டு கிமீ வர்றதுக்கு!  சாலை சூப்பர்!
தொடரும்...  :-)








பசுமைப் பயணம் ஒரு வனத்துக்குள்ளே... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 27)

$
0
0
செங்கோட்டை நகராட்சி நம்மை அன்புடன் வரவேற்கிறது.  நகருக்குள் நுழைந்து போகிறோம். சபரிமலை இங்கிருந்து  வெறும் 160 கிமீதானாம்! நகரின் பரபரப்பைத் தாண்டிப் போறோம். தண்ணீர் வளம் இருப்பதால் எங்கும் பசுமை.  பெரிய பெரிய அடுக்குச் செம்பருத்திப் பூக்கள்  சாலைக்கு ரெண்டு பக்கங்களிலும்.

 தேசிய நெடுஞ்சாலை 208 இல் பயணம். (NH208 Kollam Thirumangalam Highway.  ) செங்கோட்டையில் இருந்து  கிட்டத்தட்ட ஒன்பது கிமீ தொலைவில் இருக்கும்  புளியரை என்ற இடத்தில்    தணிக்கைச்சாவடி. (RTO Check post ) சீனிவாசன்  வண்டியைக் கொஞ்சம்மெதுவாக ஓட்டும்போதே....வண்டி எண்ணைப் பார்த்துக் குறிச்சுக்கிட்ட பணியாளர் ,  வண்டிக்குள்  லேசாய் எட்டிப் பார்த்துட்டுக்  கையை ஆட்டிப் போகச் சொல்லிட்டார்.
 ஒன்லி டாஸ்மாக் அலௌடு:-) மற்ற மாநிலங்கள் சாராயக்கடை நடத்துதா என்ன?

தென்மலை வனத்துக்குள்ளே போகும் பாதை இது.  தெங்கும் வாழையுமா  வரிசை கட்டி நிற்குமிடத்தில் அங்கொன்னும் இங்கொன்னுமா  பனைகளும்! கொஞ்ச தூரத்தில்  ஒரு மேடான பகுதியில் எதோ ஷெட் போல இருக்குமிடத்தில் கருப்பசாமி கோவில் என்றொரு போர்டு.  வனத்தின் காவல் தெய்வம் இருக்கு போல. இறங்கிப்பார்க்கலை:(






சாலையில் அங்கொன்னும் இங்கொன்னுமா ஒரு சில ஓட்டு வீடுகள்.  வனத்துறை மக்கள் வசிக்கிறாங்கன்னு நினைச்சுக்கிட்டேன்.  புளியரையில் இருந்து ஒரு எட்டரை கிமீ தொலைவில் ஆர்யன்காவு  செக் போஸ்ட். தமிழிலும் பெயர் எழுதி இருக்காங்க. கேரளத்துக்குள் நுழையறோம்.
 கேரளாவில் 'கள்ளு'தவிர வேறெங்கும் தமிழெழுத்துகளைப் பார்ப்பது அரிது!



சீனிவாசன்  இறங்கிப்போய் ஒரு கட்டணம் கட்டிட்டு அடுத்த மாநிலத்துக்குள் நுழைய அனுமதி வாங்கி வந்தார். ஒரு வாரத்துக்கு அனுமதி கொடுத்துருக்காங்களாம். நமக்கு இது போதும். ட்ராவல்ஸ் வண்டி என்பதால் கட்டணம் கட்டணுமாம். தனியார் வண்டிகளுக்கு  இதெல்லாம் இல்லை என்றாலும்.....  (ம்ம்ம்..... வேணாம் விடுங்க.....  )மேற்கொண்டு  காசு உண்டான்னேன். உண்டுன்னார்.


வனத்தினூடாகப் போகும் சாலை  அருமையாகவே இருக்கு. எதிரில்  அவ்வளவா போக்குவரத்து இல்லை. எதோ ஒன்னுரெண்டு.... வண்டிகள். மக்கள் சபரி மலைக்குப் போகும் சீஸனில்  இதே சாலை மூச்சுமுட்டிக் கிடக்கும், இல்லே?  தமிழ்நாட்டில் இருந்துதான் ஏராளமான மக்கள் சபரிமலை யாத்திரைக்குப் போறாங்கன்னு எனக்குத் தோணுது!




ரயில்பாதைக்கான  பாலம்  ஒன்னு ரெண்டு பார்த்தோம். இடதுபக்கம் சாலையை ஒட்டியே வரும் ஆறு. பெயர் தெரியலை.   எதோ  ஆஃபீஸ் பிக்னிக் கூட்டம் போல இருந்துச்சு. சாப்பாடு நேரம்.

ஆத்துக்கு அந்தாண்டை தென்னந்தோப்புக்குள்ளே  நிறைய வீடுகள் . பாரதியார் பார்த்தால் மகிழ்ச்சி  அடைஞ்சுருப்பார். ஆற்றுக்குள்ளே அங்கங்கே பாறைக்குவியல்கள்.  மனிதர்கள் கொண்டு வந்து போட்டமாதிரி இருக்கு. எதுக்கு? ஒருவேளை  நீர்ப்பெருக்கைக் கட்டுப்படுத்தவோ?  இல்லே குறுக்கே பாலம் கட்டப்போறாங்களோ என்னவோ?


அலிமுக்கு என்ற இடம் வந்துச்சு.  கடைத்தெரு வழியாத்தான் சாலை போகுது.  கால்மணியில் பத்தனாபுரம் வந்துருந்தோம்.  பெரிய ஊர்தான். அம்பிளி புஷ்ப வியாபாரம். கடையில்  பூக்கள் சரம்சரமா..... என்றும் வாடாமல் இருக்கும் வகை:(

அடுத்து வந்தது புனலூர்.  'தீர்த்தாடகர்க்கு  ஸ்வாகதம்' ( தீர்த்த யாத்திரையாளர்களுக்கு நல்வரவு)சொல்லும் ஏசு நாதர். செயிண்ட் ஜியார்ஜ்  கத்தோலிக்கத் திருச்சபையின் செயிண்ட் ஜூட் பில்க்ரிம் சென்ட்டர்.  சத்திரம்.

ஹிந்துக்கள் அலங்கரிக்கும்விதமாத்தான் இங்கே  கிறிஸ்தவர்களும் அலங்கரிக்கறாங்க. இது அந்தந்தப் பகுதியில் உள்ள கலை கலாச்சாரம் என்பதால் மதங்கள்  பொருட்படுத்துவதில்லை. நம்ம குத்துவிளக்குகள் போலவே  செஞ்சு, உச்சியில் அன்னப்பறவைக்குப் பதிலா சிலுவை வச்சுருப்பாங்க.  கோவில்கொடிமரங்களும் இப்படித்தான்.  உச்சியில் சிலுவையோடு இருக்கும். குறைஞ்சபட்சம் இந்த ஒற்றுமையாவது மதங்களிலிருக்கேன்னு மகிழ்ச்சிதான்.

அடுத்த பதினைஞ்சு நிமிசத்தில் ஆடூர். பாஸி நினைவு வந்துச்சு. நல்ல நடிகர். பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் மக்கள்ஸ். ஒரு ஒழுங்கு வரிசையில்தான் இருக்காங்க.

சாலை நல்ல அகலமாவே இருக்கு. பயணமும் சுகமே.  அதிகப் பட்சமா ஒவ்வொரு  இருவது நிமிசத்துக்குள்ளே ஒரு ஊர் என்று கடந்து போறோம். அடுத்த காமணியில் பந்தளம். அய்யப்பனுடைய  நாடு! பந்தள ராஜகுமாரன் அல்லவா!

செங்கண்ணூர் வருது ஒரு  இருவது  நிமிசத்துலே.  இதுதான்  இன்னிக்கு நாம்  தங்கப்போகும் ஊர்.  இந்தமுறை எங்கேயும் ஹொட்டேலுக்கான முன்பதிவை நியூஸியிலிருந்து செஞ்சுக்கலை.  போற போக்கில் பார்த்துக்கலாமுன்னு இருந்தோம். தங்கப்போகும் ஊரில் என்ன வசதி இருக்குன்னு முதல்நாள் வலையில் பார்த்து ஒரு இடம் தேர்ந்தெடுத்து  செல்லில் சொல்லி வைப்பதுதான்.

குற்றாலத்தில் இருந்து  111 கிமீ வந்துருக்கோம், பெருமாளே! செங்கோட்டையில் இருந்து செங்கண்ணூர் வர,  கூகுள்  சொன்ன  ரெண்டு மணி  இருபத்தியிரண்டு நிமிசமெல்லாம் கடந்து,   நமக்கு மூணரை மணி நேரம் ஆகி இருக்கு.  பரவாயில்லை. இருட்டுமுன் வந்ததுதான் முக்கியம்.  நம்ம சீனிவாசன், இந்தப்பக்கங்களில் வர்றது இதுதான் முதல் முறையாம்.  கொஞ்சம் நிதானமா ஓட்டுங்கன்னு சொல்லி இருக்கோம்.


பகவதி கார்டன்ஸ் போறோம். வழியெங்கும்  பந்தல் போட்டாப்லெ தோரண வரிசைகள்.   வெய்யிலில் தகதகன்னு மின்னும் வெள்ளி. புது மாதிரியா இருக்கு. கடைத்தெருவிலேயே இருக்கு  இந்த ஹொட்டேல்.  வாசலிலேயே காரை நிறுத்திக்கலாமாம்.  முன்பக்க  கட்டிடம் பார்த்தால் ஓக்கேன்னுதான் இருக்கு.

எதுக்கும் அறையை ஒருமுறை பார்த்துக்கலாமேன்னு கேட்டேன்.  டீலக்ஸ் ரூம் தரேன்.  பாருங்கன்னார்.  இந்த ஊருக்கு இதுதான்  பெரிய ஹொட்டேல் என்றார்.

நாலாவது மாடியில் அறை. பெருசுதான். குளியலறையும்  பரவாயில்லை.  ஆனால்  அறையில் இருக்கும்  மரச்சாமான்கள் தான் ...ப்ச்:(    எதுக்கும் இருக்கட்டுமுன்னு க்ளிக்கி வச்சேன்:-)

ட்ரைவருக்குத் தனியா  இடமில்லை. ஆனால்... இங்கே வரவேற்பில் இருக்கும் ஒரு அறையில் படுத்துக்கலாமுன்னு  சொன்னாங்க.  குளியலறை கீழே பேஸ்மெண்டிலே இருக்காம்.

நாமும் ஒரு அரை மணி ஓய்வெடுத்துக்கிட்டுக் கிளம்பலாம்.

தொடரும்.........:-)




நான் செத்து வா...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 21)

$
0
0
திருமயத்தில்  இருந்து  34 கிலோ  மீட்டர் பயணம். நம்ம சீனிவாசன் இந்தப் பக்கங்களில் வந்ததில்லையாம். அங்கங்கே வழியை விசாரிச்சுக்கிட்டு வந்து சேந்தப்ப மணி சரியா மாலை 5.20.  நாட் பேட். அம்பது நிமிசத்துலே வந்துட்டோமே!


மழை பேய்ஞ்சு சதசதன்னு இருக்கு, கோவிலுக்கு முன்னால் இருக்கும் கார் பார்க். வசதி ஒன்னும் இல்லைன்னாலும்  பார்க்கிங் சார்ஜ் வசூலிக்கக் கரெக்ட்டா வந்துர்றாங்க.  கொஞ்சம் புகழ் பெற்ற கோவில் என்பதால் கூட்டமும் அதிகம் வருதே!


108 திவ்யதேசங்கள்  வரிசையில் இந்தக் கோவிலுக்கு 42 வது இடம்.
( இந்தப் பட்டியல்களைச் சரிபார்க்கலாமுன்னா....  வலையில் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேற எண் வரிசை. சில கோவில்களில் அவுங்களே எழுதிப் போட்டுருப்பது  நம்பக்கூடிய தகவல்.  ஆனா எல்லாக் கோவில்களிலும் இந்தத் தகவல்கள் எழுதி இருக்காங்களான்னு தெரியலை. ஒருவேளை எழுதிப்போட்டுருப்பது என் கண்களில் படவில்லையோ என்னவோ!)
(கூகுளாண்டவர் அருளியது)
ஸ்ரீ சௌம்ய நாராயணப் பெருமாள் திருக்கோவில், திருக்கோட்டியூர் (திருக்கோஷ்டியூர்)

எனக்கென்னமோ திருக்கோஷ்டியூர் என்பதுதான் சரியான பொருளில் இருக்கு.  தமிழ்ப்படுத்தறோமுன்னு  கோட்டி பண்ணிட்டாங்க போல. ஆமா.... கோட்டின்னா பைத்தியம் இல்லையோ?

அட!  ஆமால்லெ?

( ஆழ்வாரே கோட்டியூர் என்றுதான் சொல்லி இருக்கார் என்பதே உண்மை! யாரும் நீ எப்படிச்சொல்லப்போச்சுன்னு வரிந்து கட்டிக்கொண்டு விவாதம் செய்யமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்) 

 அதென்ன கோஷ்டிதான் சரியா இருக்குன்னா எப்படி?

இதோ கதை...:-)

ஹிரண்யகசிபு இல்லாத அட்டகாசம் எல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கான்.  வாங்குன வரம் இப்படி  அவனுக்கு அகம்பாவத்தைக் கொடுத்து, துளிர்விட்ட திமிர் இப்போ பெரிய மரமாகிக் கிடக்கு. வீட்டுக்கு உள்ளேயோ  வெளியேயோ, பகலிலேயோ, இரவிலேயோ, கடவுளாலோ, மனிதனாலோ, மிருகத்தாலோ,  இப்படி ஏகப்பட்ட  கண்டிஷன்ஸ் போட்டு வரம் வாங்கி இருந்தானில்லையா?

மனிதர்களை மட்டுமில்லாம தேவர்களையும் துன்புறுத்த ஆரம்பிச்சதும்தான்  கொடுத்த வரத்தின் ஆழம் புரியுது. குய்யோ ,முறையோன்னு  அடிச்சுக்கிட்டு மஹாவிஷ்ணுவைத் தேடி வர்றாங்க தேவர்கள் எல்லோரும்.  கூட்டமா வந்தார்கள். இல்லைன்னா கோஷம் போட்டுக்கிட்டு  கோஷ்டியா வந்தார்கள். சரியா?  மஹாவிஷ்ணுவை  சந்திச்சு, என்ன செய்யலாம், எப்படிச்செய்யலாம் என்பதற்கு மந்த்ராலோசனை நடக்குது இங்கே.

டைம், இடம் எல்லாம் சரியாச்சு. ஆனால் மனிதனா மிருகமா என்பதைத்தான் இன்னும் கொஞ்சம் டீப்பா ஆலோசிக்கணும்.  யோசிச்சாங்க.  ஆ.... கிடைச்சுடுத்து!  பாதி மிருகம், பாதி மனிதன்  என்ற ஐடியா கிடைச்சு சிங்கமும் மனுஷனும் என்று நரசிம்ம  அவதாரத்துக்கு அடிக்கல் நாட்டுனது  இங்கே!

அவதாரம் பார்க்க எப்படி இருக்குமுன்னு கேட்டவங்களுக்கு  மேக்கப் டெஸ்ட் போட்டுக் காமிச்சிருக்கார்  மஹாவிஷ்ணு.  ஸோ.... நரசிம்மனுக்கும் இந்த ஊருக்கும்  ஒரு பொருத்தம் அமைஞ்சது இப்படித்தான்:-)

போகட்டும். கோஷ்டியா வந்தவங்க கோஷ்டியாத்தான் திரும்பிப் போயிருப்பாங்க, இந்த (திரு) கோஷ்டியூரில் இருந்து:-)  இப்ப ஒரு மாதிரி பெயர்க்காரணம் புரிஞ்சுருக்கணுமே!

ஆமாம்....   எதுக்கு இந்த இடத்தை மீட்டிங் போடத் தேர்ந்தெடுந்தாங்களாம்?  அரக்கர்கள் யாரும் அண்ட முடியாத இடம் இதுதானாம். கடம்ப மகரிஷியின் ஆசிரமம் இது. அவரும் அரக்கத்தொல்லை இல்லாத இடம் வேணுமுன்னு  தவமிருந்து இந்த இடத்தை வரமா வாங்கியிருந்தாராம். அரக்கர்கள் இதுக்குள்ளே நுழைஞ்சால் அவர்கள் தலை'டமார்'னு  வெடிக்குமோ என்னவோ!

மழை விட்ட அந்த நிமிஷம் கோவிலுக்குள் நுழையறோம். அதுக்கு முன் வண்டியிலிருந்து இறங்குனதும் சில க்ளிக்ஸ்.  கோபுரத்தைப் பார்த்தால் கொஞ்சம் சிவாலய ஸ்டைல் இருக்கோ?

உள்ளே நுழையும் நாம் முதலில் பார்க்கும் சந்நிதி சிவனோடதே!   பெருமாள் கோவிலுக்குள்ளே சிவனா!!!!   பெரிய நந்தியும் லிங்கமுமா இருக்கார்! சுயம்பு லிங்கம் என்கிறார்கள். நின்றான்  இருந்தான் கிடந்தான்னு  விஷ்ணுவின் மூணு கோலங்களைச் சொல்வது போல் சிவலிங்கத்துக்கும்  இருக்காம். ஆவுடையார் அளவும் லிங்கத்தின் அளவும் ஒன்னா இருந்தால்   இருந்தா(ன்)ர். ஆவுடையாரைவிட லிங்கம் உசரமா இருந்தால் நின்றா(ன்)ர்.  ஆவுடையாரைவிட லிங்கம் சின்னதா இருந்தால் கிடந்தா(ன்)ர் என்று கிடைச்ச தகவலின் படி இங்கே லிங்கர் கிடக்கிறார்!

அவரை  வணங்கிட்டு உள்ளேபோறோம். இடப்பக்கம் திரும்பும்போதே....  சந்நிதிகள் சில இருக்கு.  நவநீத கிருஷ்ணன் என்று நினைவு. (இல்லை சந்தான கோபாலனா? )  கண்ணுக்கு நேரா ஒருஇடத்தில் ஏழெட்டுப்பேர்  கூட்டமா உக்கார்ந்து  ப்ரபந்தம்  சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அங்கே இடதுபக்கம் போகக் கை காமிச்சதால்...படிகள் ஏறிப்போறோம்.

திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் எம்பெருமாள்  இருக்கார்! புஜங்க சயனத்தில்  உரக மெல்லணையான். நாம் போன நேரம், சாமி  சாப்பிட்டுமுடிச்சு ப்ரஸாத விநியோகம். கும்பிட்டகையோடு சுடச்சுட  ததியன்னம், சுண்டல் கிடைச்சது.  நெடுநெடுன்னு நின்ற ஒருத்தர், இந்தப் பக்கம் வாங்க. பிரஸாதம் வாங்கிக்குங்க என்றெல்லாம் சொல்லி நம்மை கைடு பண்ணறார்.   கோவில் காரியஸ்தராக இருக்கணும்.

நாங்க  மீண்டும் படி இறங்கி கீழ்தளத்தில் சுத்திவரலாமுன்னு போறோம். ஒரு மண்டபம் மாதிரி இருக்குமிடத்தில் ஏராளமான அகல்விளக்குகள் (எரியாதவை) இருக்கு.  என்னன்னு தெரியலை. யாரைக் கேக்கணுமுன்னும் புரியலை. முக்கியமா படம் எடுக்கலாமா? இதுக்கு எங்கே விசாரிக்கணுமுன்னு புரியாம ஆஃபீஸ் எங்கேன்னு தேடறேன்.

அதுக்குள்ளே நாம் மேலே பார்த்தவர்,  'வாங்க,  விமானம் பார்க்கணுமுன்னா வாங்க'ன்னு  கம்பீரமான குரலில்  சொல்வது காதில் விழுந்து அவரைப்பின் தொடர்ந்தோம். பெருமாள் தரிசனத்தில் நம்ம கூட நின்ன கூட்டம் இப்ப இவர்கூடவே வருது.  தாயார்சந்நிதிக்குப் பின்னால் ஒரு சின்ன படிக்கட்டுகள் மேலே போகுது. அதில் ஏறி தளத்தில் நின்னா.... அங்கிருந்து இன்னும் மேலே போகும் குறுகிய வழியைக் கைநீட்டிக் காமிக்கிறார்.
நன்றி: சுஜாதா தேசிகன்

நாலுபடி ஏறிப் பார்த்துட்டு, இது எனக்கில்லைன்னு கீழே இறங்கிட்டேன். மற்ற கூட்டம் எல்லாம் மேலேறிப் போய்க்கிட்டு இருக்காங்க. நம்ம சீனிவாசனும் மேலேறிட்டார்.   வரலையான்ன  கோபாலிடம் நீங்க போய் பார்த்துட்டு வந்து சொல்லுங்கன்னேன். அவரும் மேலேறிப் போனார். படிக்கட்டையே அண்ணாந்து பார்த்துக்கிட்டு இருந்தவளை, அந்தக் கம்பீரக்குரல்  'நீங்களும் ஏறி வாங்கம்மா'ன்னு கூப்பிட்டது.

தயக்கத்தோடு இன்னும் நாலைஞ்சு படி ஏறினேன். தலைக்கு மேலே ஒரு பொந்து போல இடம். படிகளின் அளவு ரொம்பக் குறுகிக்கிடக்கு. கால் வச்சா வழுக்கி விழுவேன்.  ரிஸ்க் எடுக்கணுமான்னு யோசனை.
'இடதுபக்கம் நீட்டிக்கிட்டு இருக்கும் கல்லைப் பிடிச்சுக்கிட்டுக் காலை அழுத்தமா வச்சு இந்தப்பக்கம் வலதுகையால் இந்தக் கல்லைப்பிடிச்சு வாங்க'ன்னது குரல். கேசவா நாராயணா கோவிந்தான்னு மனசுக்குள்ளே முணுமுணுத்துக்கிட்டே  குரல்சொன்னதைக் கேட்டேன். முதுகில் கைப்பை வேற ஒரு கனம். பொந்தைக் கடந்ததும் தவழ்ந்து போய்  நாலடியில் நிமிர்ந்து நின்னது நினைவுக்கு வருது.

வலதுபக்கம் கருவறை விமானம் அடுக்குகளா மேலே போகுது. எதோ வேலை நடப்பதால்  கட்டங்கட்டமா மூங்கில் சாரங்கள் விமானத்தைச் சுத்தி.
குரலுக்குச் சொந்தக்காரர்  திரு.பழனியப்பன்.  ரொம்ப வருசமா கோவில் ஊழியம் போல.  மொத்தக் கூட்டத்தையும்  வழிநடத்தும் பாங்கு அருமை. நான்  நின்ற இடத்தில் இடது பக்கம் இன்னொரு கட்டைச் சுவர். அதனிடையில் இருக்கும்  த்வாரம் வழியா அடுத்த பக்கத்துக்குப் போகணும்.  உடம்பை  ரெண்டா மடிச்சுக்கணும்.  முதுகு பத்திரம்.  நிமிர்ந்தப்ப  விமான அடுக்குகளில்  ஒன்று இதுன்னு புரிஞ்சது.


எல்லோரும் வந்தோமான்னு உறுதிப்படுத்திக்கிட்டு அந்தப்பக்கம் தெருப்பார்த்து உட்கார்ந்திருக்கும் ஸ்ரீ ராமானுஜர் சிலையைக் காமிச்சு திருக்கோஷ்டியூர் நம்பி 'கதை'யைச் சொல்ல ஆரம்பிச்சார் கம்பீரக்குரலுக்குச் சொந்தக்காரரான  பழனியப்பன்.


ராமானுஜர், திருக்கோஷ்டி நம்பியிடம் உபதேசம்  பெற ஸ்ரீரங்கத்தில் இருந்து கிளம்பி நடந்தே திருக்கோஷ்டியூர் வந்து சேர்வாராம். (அப்போ ஏது கார்? இல்லேன்னா வண்டி கட்டிக்கிட்டு வரணும்.)  நம்பிகள் வீட்டுக் கதவைத் தட்டறார். யார் என்று குரல் வீட்டுக்குள்ளே இருந்து வருது.  'நான் ராமானுஜன் வந்துருக்கேன்'என்கிறார். 'நான் செத்த பின் வா 'என்று வீட்டுக்குள்ளே இருந்து பதில் குரல்.

 சரி.நாம் வந்த வேளை சரி இல்லை போல இருக்கேன்னு ராமானுஜர் திரும்பிப் போயிடறார். இப்படியே பதினேழு முறை நடந்துருக்கு.  ஒவ்வொரு முறையும் நடந்து வந்து நடந்து போய்.....  போகவர  160 மைல் . பதினெட்டாவது முறை வந்து கதவைத் தட்டறார்.  யார்? குரலுக்கு பதிலாக 'அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன்'என்றதும் கதவு திறக்குது.

'நான்' என்ற  சொல்லில் உள்ள  என்னவோ ஒன்னு (அகம்பாவமோ?)  இத்தனை முறை நடக்க வச்சுருச்சு பாருங்க.

ஆனாலும் பொறுமையுடன், முயற்சியைக் கைவிடாமல் பதினேழுமுறை வந்து போன  ராமானுஜனைத் தன் சீடராக ஏத்துக்கிட்டு மந்த்ரோபதேசங்கள்  செய்யறார்.   அதுலே முக்கியமான ஒன்னு .... எட்டெழுத்து மந்திரம்.  மோட்சம் கிடைக்கும் வழி. 'வேற யாருக்கும் சொல்லப்படாது. சொன்னியோ.... உனக்கு நரகம்தான்'என்று கண்டிப்பாச் சொன்ன நம்பிகள், 'ஓம் நமோ நாராயணா'வை  உபதேசம் செஞ்சார்.

அங்கிருந்து கிளம்பின அடுத்த நிமிஷம்,  கோவில்  விமானத்துக்கு மேலே ஏறி, (இப்ப நாம் வந்த வழியிலேதான் ஏறிப்போயிருப்பார், இல்லே!  அப்பெல்லாம்  மக்கள் ஒல்லியா இருந்துப்பாங்க. அதுவும் இவர்  நடையோ நடைன்னு  நடந்தவராச்சே!)  'ஓம் நமோ நாராயணா'வை ஊரெல்லாம் கேட்கும்படிச் சொல்லிட்டார்.  எல்லோருக்கும் மோட்சம் கிடைக்கட்டுமுன்னு நினைச்ச பரந்த மனசு.

வீட்டு வாசலில் இருந்தோ இல்லை மாடியில் இருந்தோ  இதை நம்பிகளும் பார்த்திருப்பார்தானே?  'நரகத்துக்குத்தான் போகப்போறே.  வெளியே சொல்லக்கூடாத ரகசியமுன்னு சொல்லி  உனக்கு மட்டும் உபதேசிச்சதை  எப்படி ஊரைக்கூட்டிச் சொல்லப்போச்சு'ன்னு கடிந்ததும்,  'நான் ஒருத்தன் நரகத்துப் போனாலும், மற்ற உயிர்கள் அனைத்தும்  மோட்சத்துக்குப் போகும்தானே'என்றார் ராமானுஜர்.

நீரே 'எம்பெருமானார்' என்று வாழ்த்தி அப்படியே  சீடர் ராமானுஜரை  கட்டித்தழுவி ஆசீர்வதித்தாராம் திருக்கோஷ்டியூர் நம்பிகள்.
அதோ அந்த வீடுதான்  நம்பிகள் வீடுன்னு காமிச்சார் பழனியப்பன்.
நன்றி: சுஜாதா தேசிகன்

 கண்முன்னே விரிந்த தெருவில்  ரெண்டு பக்கமும் வீடுகளே இருக்க,எது எதுன்னு ராமானுஜர் சிலையின் தோள்வழியா எட்டிப் பார்த்தேன்.
அதோ....முன்னால் சார்ப்புப் போட்டு  மேலே ஜன்னல் பக்கம் ஒரு  போர்டு இருக்கு பாருங்கன்னார் . 'கல் திருமாளிகை'ன்னு எழுதி வச்சுருக்காங்களாம்.

மறுபடி உடம்பை ரெண்டாய் மடிச்சு  கட்டைச்சுவரின் இடைவெளியில் இந்தப்பக்கம் வந்ததும்  விமானத்தை வலம் வந்தோம். இங்கேயே மூணடுக்குகள் !
(கூகுளாண்டவர் அருளியது)

ஒவ்வொன்னா சுற்றி ஏறிப்போய்ப் பார்க்கப் படிகள் இருக்கு.  கிடந்தும், நின்றும் இருந்தும்  அருள் பாலிக்கிறார்  நம்ம பெருமாள்.  கம்பிக்கதவு வழியாக் கண்குளிர தரிசிக்கலாம். பழங்காலச் சித்திரங்கள் !

அஷ்டாங்க விமானம் என்றும் சொல்லி, இப்போ விமானத்துக்குத் தங்கத்தகடு போர்த்தும் வேலை நடப்பதையும் சொன்னார்.  நம்மால் ஆன ஒரு தொகையை கைங்கரியத்துக்குத் தரணுமுன்னு உடனே முடிவு செஞ்சோம்.

மறுபடி கீழே இறங்கிப் போகணுமேன்னு நினைச்சதும் மலைப்பு!

 திகைச்சுப்போய்  கீழே பார்த்துக்கிட்டே  எதிர்சுவரில் இருந்த மூலைக் கல்லின் நீட்டிய முனையைப் பிடிச்சேன்.  'அதேதாம்மா. இங்கே இதுக்குக்கீழே ஒரு கால் வச்சு மெதுவா இறங்கிடலாம் 'என்றார்,   பொந்து வழிக்கு மேல் இருக்கும்  கட்டைச்சுவத்துக்குப் பின் இருந்த பழனியப்பன்.


பெருமாளே என்று மனசுக்குள் அரற்றிக்கிட்டே  கால் வச்சவள் எப்படியோ படிகள் வழியா கீழே இறங்கி வந்தே வந்துட்டேன்!  இப்ப நினைச்சாலும் ப்ரமிப்பா இருக்கு.... இத்தனை பெரிய  யானை எப்படி மேலே போய் வந்துச்சுன்னு:-)))

ஆயிரக்கணக்கான வருசங்களா  வழி இப்படியே இருக்கு பாருங்க. இனியும் இப்படியேதான்  இருக்கும்!

இன்னும் கோவில் பிரகாரங்களைச் சுற்றிப் பார்த்திருக்கலாம். ஆனால் நமக்கோ காலில்  திளைக்கும் கஞ்சி. இன்னுமொரு கோவிலையும்  பார்த்துக்கிட்டு மதுரை போய்ச் சேரணும் ரொம்ப இருட்டும் முன். இன்னொரு முறை வரத்தான் வேணும். அவன் கூப்பிடுவான்தானே?

இன்னொருக்கா சிவனைக் கும்பிட்டு விட்டு லிங்கத்தின் அளவைப் பார்த்தால்  இவர், உள்ளே  கிடக்கும் பெருமாளுக்குக் கம்பெனி கொடுப்பதைப்போல்  சின்ன சைஸிலே சயனலிங்கமா இருக்கார்.

 பேயாழ்வார்,  பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் என்று அஞ்சு ஆழ்வார்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்ச இடம். மொத்தம் 37 பாசுரங்களாம்.

கொம்பினார் பொழில்வாய்க் குயிலினம் கோவிந்தன் குணம்பாடு சீர் செம்பொனார் மதில்சூழ் செழுங்கனி யுடைத் திருக்கோட்டியூர் நம்பனை நரசிங்கனை நவின்றேத்து வார்களைக் கண்டக்கால் எம்பிரான்தன் சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வனே.

பெரியாழ்வார்  பாடிய பாசுரங்களில் ஒன்று மேலே!  (தினமலரில் போட்டுருக்கு!)

குலசேகரன் வந்து பார்த்து சரியான்னு சொல்வார் என்று நினைக்கிறேன்.

ஆனால் இப்படி வெவ்வேற இடத்தில் இருந்து எடுத்துப்போடுவது  எனக்கு விருப்பமில்லாத செயல். அதனால்தான் பதிவுகளில் பாசுரங்களை  (நாலாயிரத்தில்  நானே தேடிப் பார்த்தாலொழிய )போடுவதில்லை.  ஜஸ்ட் ஒரு கோடி காமிச்சுட்டுப்போய்க்கிட்டே இருந்தால் அதிக ஆர்வம் உள்ளவர்கள் தேடிப்பார்த்துப் பயனடைவதோடு நமக்கும் பின்னூட்டம் மூலம் தெரிவித்தால் நன்றி உடையவளாக இருப்பேன்!


பார்க்கிங் சார்ஜ் அடைச்சுட்டு  மதுரை போக வழி கேட்டுக்கிட்டு இருந்தார் சீனிவாசன். அப்படி என்ன சொல்லிட்டாருன்னு இப்படி விறைப்பா!!


சுலபமா இருக்குமுன்னு ஒரு வழியைச் சொல்லிப்பிட்டுக் கடைசியா இப்படியேப்போனா வருமுன்னு நினைக்கிறேன்னாராம்:-))))

ரிஸ்க் வேணாமுன்னு  நாம் அங்கே போன பாதையிலே திரும்பி வந்து மெயின் ரோடில் சேர்ந்துக்கிட்டோம்.

நல்ல நேரத்தில் போயிருக்கோமென்று மனசு கொண்டாடியது உண்மை.  தினமும்  சாயரக்ஷை பூஜை முடிஞ்சதும்  கோபுரப்ரவேசம்  கொண்டுபோய் எல்லாத்தையும் நல்லாவே விளக்கிச் சொல்றார் பழனியப்பன்.  ரொம்ப லேட்டாப்போயிருந்தோமுன்னால் தவறவிட்டிருப்போமில்லையா!

மனசுக்கு ரொம்ப நிறைவா  இருந்துச்சு.

 "எப்படிமா? எப்படி?"

"எல்லாம் பெரும் ஆள் க்ருபை!  ஏத்தி இறக்கிப்பிட்டான், இல்லே!"

 தொடரும்.............:-)


PIN குறிப்பு:  இந்தப் பதிவுக்கும் படங்கள்கிடைக்குமான்னு தேடியதில் நம்ம சுஜாதா தேசிகன் எடுத்தது  கிடைச்சது.  அதுலே ஒரு ரெண்டை இங்கே போட்டுருக்கேன். அவருக்கு  என் மனம் நிறைந்த நன்றிகள்.


மார்பு முடிகளை மறைக்கும் T Shirtக்கு வயசு இப்போ 102!

$
0
0


"ஏங்க , நீங்க எப்ப முதல்முதலா  டி ஷர்ட் போட்டீங்க?  "

"அது ஃபிஜி வந்த புதுசில்.  கடைகளில் இதுதான் ஏராளமாத் தொங்குது. தெருக்களில் நிறையப்பேர் போட்டுக்கிட்டு உலாத்தறாங்க. அதைப் பார்த்துட்டுத்தான்  வீக் எண்ட்க்கு வீட்டுலே போட்டுக்கலாமுன்னு ஒன்னு வாங்கினேன்."

"ஏன் நாம் இந்தியாவில் இருந்தப்போ  வாங்கிக்கலை?  "

"அப்ப ஏது?   மூணாவது வீட்டுப் பையன் துபாய்லே ( அப்பெல்லாம் எந்த மிடில் ஈஸ்ட் நாடாக இருந்தாலும் எல்லாத்துக்கும் நம்ம மக்கள்ஸ் சொல்லும் பெயர்  துபாய்தான்!)  இருந்து வந்தப்போ, எனக்கு ஒரு சிகரெட் பாக்கெட் கொண்டு வந்து கொடுத்தானே அப்ப ஒன்னு போட்டுக்கிட்டு இருந்தான்.  எதோ படம் முன்பக்கம் இருந்துச்சுன்னு நினைவு."

எங்க கேண்டர்பரி ம்யூஸியத்துக்குப் போகும் வழியில்  பேசிக்கிட்டே போறோம். முந்தியெல்லாம் ஞாயிறுகளில் பார்க்கிங் மீட்டரில் காசு போடவேணாம். இப்ப என்னன்னா  காலை 9 முதல் மாலை 6 வரை காசு போடணுமாம். ஆறுமணிக்கு மேலே போகலாமுன்னா ம்யூஸியம் அடைச்சுருவாங்களே:(

வரவர சிட்டிக் கவுன்ஸில் கொஞ்சம் அல்பமாத்தான் நடந்துக்கிட்டு இருக்கு.  சிட்டி புனர் நிர்மாணத்துக்குக்  காசு சேர்க்குது போல. போயிட்டுப்போகட்டும். மூணு டாலர் பத்து செண்ட் ஒரு மணி நேரத்துக்கு சார்ஜ். காசைப்போட்டுட்டு, மெஷீன் துப்பும் ரசீதை காருக்குள்ளே டேஷ் போர்டு மேலே வெளியே தேதியும் நேரமும் தெரியறாப்ல வச்சுடணும்.  இல்லைன்னா.... வண்டிக்கு க்ளாம்ப் போட்டுட்டுப் போயிருவாங்க. அதுக்கு ஒரு பெரிய தண்டம் அழணும்:(

எங்க ஊர்லே இப்ப கோடைகாலத்துக் கொண்டாட்டங்கள் நடந்து முடிஞ்சுருக்கு.  அதன் நீட்சி இன்னும் ஒரு மாசத்துக்கு  லேசா இருக்கும். கேரண்டியா சொல்ல முடியாது. நேத்து 28. இன்னிக்கு 14. இப்படித்தான் என்றாலும் சூரியனைப் பார்க்க முடியும்.

எங்க ம்யூஸியத்துலே   T Shirt Unfolding  என்ற Theme காரணம் 800 டி ஷர்ட் காட்சிக்கு இருக்குன்னு  சேதி கிடைச்சது.  போனோம்.

உள்ளே நுழைஞ்சதும்  டி -வொர்ல்ட் ( T shirt world)என்ற புத்தகம் ஒன்னு விற்பனைக்கு.  விலை $39.90 என்பதால் வாங்கிக்கலை. வரவேற்பில் இருந்த  பெண்மணியிடம்  டி ஷர்ட் எங்கேன்னு கேட்டால்....  Pபாவாவுக்குப் போகும் வழின்னாங்க.

இது நியூஸி பாவா சிப்பிகள் வச்சுக் கட்டினவீடு இருக்குமிடம்.  ம்யூஸியத்துக்குள்ளே நெசமாவேஒரு வீடு இருக்குன்னு சொன்னா நம்பணும். ஐயம் இருந்தால் இங்கே பாருங்க.


நமக்கு வழி தெரியாதா என்ன! விடுவிடுன்னு அங்கே போய் ஹாலுக்குள் நுழைஞ்சால்.... நம்ம தலைக்கு மேலே எதோ கொடிக்கயித்துலே தொங்க விட்டாப்லெ வரிசை வரிசை  டிஷர்ட்டுகள்.  வானவில் பார்க்கறாப்லெ.....ஆரஞ்சு, நீலம்,  பச்சை, சிகப்பு, மஞ்சள், வெள்ளை, கருப்பு (வானவில்லில் வெள்ளையும் கருப்பும்  எங்கேன்னு கேக்கப்டாது கேட்டோ!)

ரெண்டு பக்கமும்  சுவர்கள் போல  போர்டு பலகைகள் வச்சு டியின் சரித்திரம்!  அப்பத்தான் மனசுக்குப் பட்டது... இது ச்சும்மா வந்து பார்த்துட்டுப்போற சமாச்சாரம் இல்லை. ஒரு பதிவுக்கானது என்று.  நாமும் சரித்திரத்தைத் தெரிஞ்சுக்கிட்டு, நம்ம மக்கள்ஸ்க்கும் சொல்லும் கடமை உணர்ச்சியை என்னன்னு சொல்ல:-))))

1913தான்  ஆரம்பம்.  அமெரிகக்கப்பல் படையினர்  போட்டுக்கும் உள்ளாடையா இது உருவாச்சு.  மார்பில் இருக்கும் கொசகொச மயிர்கள் வெளியே அசிங்கமாத் தெரியுதுன்னு  'இதைப்போட்டு அதை மறைச்சுக்கோ'ன்னு சொல்லிட்டாங்க. முழுக்க முழுக்கப் பருத்தியினால்   ஆன உள்ளாடை.  வட்டக்கழுத்தையும்  ரெண்டு பக்கமும் நீட்டிக்கிட்டு இருக்கும் குட்டைக் கையுமா பார்க்கறதுக்கு T  போலவே இருந்ததால் இதுக்கு டிஷர்ட் என்ற பெயர்.

பின்னாட்களில் இந்த  டி ஒரு சரித்திரம் படைக்கப்போகுதுன்னு அப்ப யாருமே ஊகிக்கலை!!!

வேலை சமயத்து சீருடைகளைக் களைந்து ஓய்வா  இருக்கும்போது  கேஷுவலா இந்த டியை வெளிப்புற ஆடையாப் போட்டுக்கவும் ஆரம்பிச்சாங்க கடற்படை மக்கள்ஸ்.

(ஆமாம்... இது நம்மூரு கை வச்ச பனியனில்லையோ!!!!)

1920 இல்  டிக்ஷ்னரியில் டி ஷர்ட் என்றசொல் இடம்பிடிச்சுருச்சுன்னு சொல்றாங்க.இதுக்குள்ளே  இந்த டி  வெளியே உள்ளேன்னு ஆல்பர்ப்பஸ் உடையாக  ஆகி இருந்துச்சு.

1938 லே  25 காசுக்கு ( அமெரிக்கக்காசு, க்வாட்டர்) டிபார்ட்மெண்ட்  ஸ்டோர்களில் விக்க ஆரம்பிச்சாங்க.

1939 லே விஸ்ஸர்ட் ஆஃப் ஓஸ் ( Wizard of OZ) படத்துலே சோளக்கொல்லை பொம்மைக்கு  இந்த டி யைப் போட்டு , உள்ளே வைக்கோல் அடைச்சு முகப்பில் OZ என்று பெருசா அச்சடிச்சு வச்சதுதான் முதல் டிஸைன். பச்சைக்கலர் சட்டையில் வெள்ளை எழுத்துகள்!
1942 இல் லைஃப் பத்திரிகையில் அட்டைப்படத்தில் இடம் பிடிச்சது  அச்சடிச்ச படங்களுடன் இருந்த டி சட்டை. லாஸ்வேகாஸில் இருக்கும்  Aircorp Gunnery School  படையினர்  போட்டுக்கிட்டு இருந்துருக்காங்க.

1945  ரெண்டாவதுமுறை நடந்த  உலகப்போரில் கலந்துகிட்ட  ஆர்மி ஆட்களுக்கு  சப்ளை செஞ்சுருந்தாங்க. உள் ஆடை இப்போ வெளி ஆடையா மாறி இருந்துச்சு.

1948 லே டி ஷர்ட் அரசியலுக்குள் நுழைஞ்சது. இல்லே அரசியல் டி ஷர்ட்டுக்கு(ள்ளு)ம் நுழைஞ்சுருச்சுன்னும் சொல்லலாம். Dew -it with Dewey  என்று  அச்சடிச்ச  டி சட்டைகளை Newyork Governor Thomas  E Dewey , அவர் சார்ந்துள்ள கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிச்சு  நடக்கும் தேர்தல் கூட்டங்களில் அறிமுகப்படுத்தி  இருக்கார்.

1951 இல் சினிமா பிரவேசம்.  சினிமாக்காரர் சொல்றதைக் கேட்பதில் அமெரிக்கர்களும் இந்தியரும் ஒன்னு போல!  மார்லன் ப்ராண்டோ ,  வெள்ளை டி ஷர்ட் போட்டுக்கிட்டு A streetcar named desire  என்ற படத்துலே நடிச்சதைப் பார்த்துட்டு இளைஞர்களிடம்  டி ஷர்ட் புகழ் பத்திக்கிச்சு.  அந்த வருசம் மட்டும்  180 மில்லியன் அமெரிகன் டாலர் விற்பனை!  சந்தர்ப்பத்தை விடாமல் சட்னு  ஒரு கம்பெனி, டிஸ்னிலேண்ட்  மிக்கிமவுஸ், இன்னபிற டிஸ்னி நடிகர்கள்  படம் போட்டுக்கும் ஷர்ட் டிசைனுக்கு பிரத்யேக லைசன்ஸ் வாங்கிருச்சு. இந்த கார்ட்டூன் படங்கள்  சக்கைப்போடு போட்டுக்கிட்டு இருந்த காலக்கட்டம் அது.

அப்புறம் 1955 வருசம்தான்  டிஸ்னிலேண்ட் என்ற தீம் பார்க் ஆரம்பிச்சார்  வால்ட் டிஸ்னி. அதிலிருந்து  வளர்ச்சிதான்! சுற்றுலாப்பயணிகள்தான்  ஏராளமா வந்துக்கிட்டு இருந்தாங்களே  டிஸ்னிலேண்டுக்கு!  அப்ப  ஒரே ஒரு டிஸ்னிலேண்ட்தான். அதுக்கப்புறம்தான் டிஸ்னி வொர்ல்ட் என்ற பெயரில்  1971 இல் ஃப்ளோரிடாவில் கிளை ஆரம்பிச்சது. இப்பப் பலநாடுகளில்  கிளைகள் விரிஞ்சு கிடக்கு!

என்னமோ இதைப் போட்டுக்கிட்டாவே பெரிய புரட்சி என்பது போலெல்லாம் இருந்துருக்கு!

  Rebel without a cause என்ற 1955 வது ஆண்டு திரைப்படமே சாட்சி. எல்விஸ் ப்ரெஸ்லி இன்னும்  கொஞ்சம் மேலே போய்  ஜீன்ஸ் பேண்ட்ஸ், டி ஷர்ட், அதுக்கு ஒத்து ஊத லெதர் ஜாக்கெட்ன்னு போட்டு  இன்னொரு ஸ்டைலைக் கொண்டுவந்தார். (ஜீன்ஸ் வந்தது 1871 லே!  இன்னும் கோயிங் ஸ்டெடி:-)

1959 லே புதுசா  ஒரு  அச்சு மை  கண்டுபிடிச்சாங்க.  ஒரு இடத்துலே மொத்தையா உக்காராம  விரிந்துகொடுக்கும் தன்மைஉள்ள மை. இதனால் சட்டையைக் கழுத்து வழியாப்போடும்போது  விரிஞ்சு கொடுக்கும் துணிக்கு ஏத்தாப்போல இந்த மையால் அச்சடிச்ச படமும் விரிஞ்சு கொடுத்துச்சு.  இப்ப நுணுக்கமான படங்களும் போட்டுக்கலாம் என்பதால்  கூடுதல் மகிழ்ச்சியே!

முந்தியெல்லாம்  ஸ்ப்ரே பெயிண்ட்தான் பயன்படுத்துனாங்களாம் டி சட்டைக்கு. இந்த ஸ்ப்ரே பெயிண்ட் சமாச்சாரம் ஒன்னும் இன்னிக்கு வேற இடத்துலே பார்த்தோம். அதைப்பற்றி பின்னொருநாளில் எழுதறேன். சட்டையே பெரிய கதையால்லே இருக்கு:-)))


இப்படியே டி ஷர்ட் புராணம் விரிஞ்சுக்கிட்டே போகுது. 1913இல் ஆரம்பிச்ச சமாச்சாரம்  எந்தெந்த முக்கிய வருடங்களில் என்ன ஆச்சுன்னு  2013 வரை சுருக்கமா ஒரு சுவரில் அடக்கி வச்சுருக்கு எங்க ம்யூஸியம். படங்களாவே போட்டு வச்சுருக்கலாம் நான், இல்லே!

பெரிய ஹாலின் நடுவில் வச்ச  இந்தத் தடுப்புக்கு எதிரில் வச்ச இன்னொரு தடுப்புச்சுவர்(!)  சட்டையில் போட்ட விதவிதமான படங்களைக் காமிக்குது.


ரெண்டு  டி சட்டை ப்ரேமிகள்,  (T Shirt Enthusiasts   Julien Potart and Dimitri Pailhe  )மூணு வருச காலம் எடுத்து  தயாரிச்ச டி ஷர்ட் கதை   படப்பிடிப்பு,  2011 வது வருசம்  பூர்த்தியாகி  இப்போ ஒரு மணி நேரக் குறும்படமா  வந்துருக்கு. அதை இங்கே காமிச்சுக்கிட்டு இருக்காங்க.  வசதியா உக்கார்ந்து பார்க்க  இருக்கை  எல்லாம் போட்டு வச்சுருக்காங்கன்னாலும் நமக்கு ஏது நேரம்? பார்க்கிங் கூட ஒரு மணி நேரத்துக்குத்தானே எடுத்துருக்கோம்.


தடுப்புக்கு அடுத்த பக்கம் வந்துருக்கோம்.  இங்கே  ரொம்பப் பிரசித்தமான  டிஷர்ட் டிஸைன்களைச் செஞ்சவர்களைப் பற்றிச் சின்னக்குறிப்புடன்.
க்ளென் ஜோன்ஸ் (கிவி. நியூஸிக்காரர்.) இவர்.  Glennz என்ற சொந்தத்தயாரிப்பு . உள்ளூரிலும்  அதிகமான புகழ் உண்டு.


ஐ லவ் நியூயார்க் பார்க்காதவர்களை விரல்விட்டு எண்ணிடலாம். அதுக்குப்பிறகு இந்த வகை ப்ரிண்டுகள்  டூரிஸ்ட்டுகள் அதிகம் போகும் நாடுகளில் காப்பி அடிக்கப்பட்டுச்சு:-)

மேலே படம்: ஒரிஜினலை முதல்முதலா செஞ்ச  மில்டன் க்ளேஸர்.


ரெக் மொம்போஸா இன்னும் ஒரு படிமேலே போய்  சிக்கலான படங்களை வரைஞ்சு தள்ளி அவைகளைச் சட்டைகளில் போட்டு பிரசித்தி அடைஞ்சார்.  நல்ல கடுமையான உழைப்பு. விவரமான படங்கள் இல்லையோ!
அந்தந்த காலக்கட்டத்தில் புகழ்பெற்றவர்களின் முகங்களும் டி ஷர்ட்டில் இடம்பெறத்தவறலை:-)


இப்படிரெண்டு பக்கச் சுவர்களிலும் பார்த்துக்கிட்டேபோகும்போது  டி ஷர்ட் ப்ரிண்டிங் செய்யும் தொழிற்சாலைப்படங்களைப் பார்க்கும்போது சட்னு நம்ம ஜோதிஜி நினைவு வந்துச்சு. ஏன்?எதுக்குன்னு கேட்டாச் சொல்லத்தெரியலை:-)
சில பல சமாச்சாரங்களைப் பார்க்கும்போது  அதில் எதாவது வகையில் சம்பந்தப்பட்ட பதிவர்கள் நினைவு வருவது இப்பெல்லாம் இயல்பா ஆகிக்கிடக்கு.




யானை, பூனை, வடை எல்லாம் பார்த்தால் என் நினைவு உங்களுக்கு வரணுமே!  இல்லைன்னு சொன்னால் நீங்கள் பதிவர் குடும்பத்தில்  இதுவரை சேர்ந்துக்கலைன்னுபொருள்:-)))

ஒரு பெரிய திரையில்  சிலபல டி ஷர்ட் டிஸைன்களை  ஒரு மூணு நிமிசப்படமா தொடர்ந்து காமிச்சுக்கிட்டு இருந்தாங்க. அதுலே ஒரு பூனை கூட வந்துச்சு:-)

மத சம்பந்தமான சமாச்சாரங்களை டிஷர்ட்டில்  போட்டு வைப்பது கொஞ்சம் ஆபத்தானதுதான். பலநாடுகளில் இதுக்கு மக்களின் எதிர்ப்பு இருக்கு.ஒரு கார்ட்டூன் போட்டவங்க கதி என்னாச்சுன்னு தெரியும்தானே?

சில தடை செய்யப்பட்ட ப்ரிண்ட் உள்ள  சட்டைகளும்  இருக்கு என்பதே உண்மை. நியூஸியில் ஏற்கெனவே  ஒரு சட்டையை தடை செஞ்சுருந்தாங்க.  இப்ப   மக்கள் மனசை நோகடிக்கும் விதமா ஒரு டி சட்டையை (Offensive t-shirt in Canterbury Museum exhibition) இங்கே வச்சுருக்காங்க. இதுக்கான மிரட்டல்களை  ம்யூஸியம் பொருட்படுத்தலை. இது கிறிஸ்துவமதம் சம்பந்தமுள்ளது என்பதால்  மெத்தனமா இருக்காங்க போல.  ஆனால் இதை திறந்த வெளியில் வைக்காம, சின்னதா ஒரு தடுப்புகளை வச்சு மறைச்ச  அறை(!)யில்  சுழலும்  கண்ணாடிப்பெட்டிக்குள் வச்சுருக்காங்க.

வேடிக்கை பார்த்துக்கிட்டே இந்தப்பகுதிக்கு நாங்க வந்தபோது இதைக் கவனிச்சோம். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமானது இந்த டிஸ்ப்ளே. அறைவாசலில் ஒரு  ம்யூஸியம் செக்யூரிட்டி  இருக்காங்க. நம்மைப் பார்த்தவுடனே  பதினெட்டு வயசுக்கான சான்றிதழ் தேவைப்படாததால்  உள்ளே அனுமதிச்சவங்க, 'நோ ஃபோட்டோ ப்ளீஸ் 'என்றதை  சரின்னு தலையாட்டி ஏத்துக்கிட்டேன்.

இதை எப்படி வைக்கப்போச்சுன்னு  பலர்  புகார் செஞ்சுருக்காங்கன்னு  சேதி. ஆன்லைனில்  புகார்  கொடுக்கலாமாம். ஆயிரக்கணக்கானவர்கள் புகார் செஞ்சுருக்காங்க இதுவரை.

ம்யூஸியம் டைரக்டர்,  இதுவும் டி ஷர்ட் ஸ்டோரியில்  முக்கிய இடம் வகிக்குது. அதனால்  நல்லது சொல்லும்போது கெட்டதையும் மக்களுக்குச் சொல்லத்தான் வேணும் என்கிறார்.  நியூஸி  chief censor சொன்னபடி செஞ்சுருக்கோம் என்று பதில் சொல்லி இருக்கார்.

New Zealand's  ruled the t-shirt objectionable in 2008 but granted the museum an exemption to display it provided it was kept in a separate space from other exhibits and was age restricted.

இந்த  டிஷர்ட்  கண்காட்சி சுமார் மூணு மாசத்துக்கு  இருக்கு.  ஃபிப்ரவரி 14 முதல்மே மாசம் 10 வரை.  அனுமதிக்கட்டணம் கூட இல்லை. இலவசமே! ம்யூஸியமே கூட  இலவச அனுமதிதான். நம்ம வரிப்பணத்துலேதானே நடக்குது!


ஹாலை ரெண்டு பாகமா தடுப்பு வச்சுப் பிரிச்சதால்  நாலு சுவர்கள் கிடைச்சு, சம்பந்தமுள்ள நிறைய சமாச்சாரங்களை நம்மால் பார்த்துத் தெரிஞ்சுக்கமுடியுது.  பேக்கிங், ப்ரிண்டிங், இதுக்கான ரெஃபரன்ஸ் புத்தகங்கள், ஸ்டிக்கர்ஸ், ஸ்டென்ஸில்ஸ் இப்படி  பலவகை.

மெல்பெர்ன் (அஸ்ட்ராலியா) நகரைச் சேர்ந்த  Eddie Zammit அவர்களின்  சொந்த சேகரிப்பில் இருக்கும் டிஷர்ட்டுகளைத்தான் நமக்குக் கடனாகக் கொடுத்துருக்கார்.இவர்தான்  T-world  என்ற புத்தகத்தின் பதிப்பாளரும் ஆவார்.
அச்சுத்தொழில் முடிஞ்சுபோச்சுன்னு சொல்றது உண்மை இல்லைன்னு சொல்றார்  நம்ம  Eddie Zammit .

நமக்கும்  நம்ம எழுத்து அச்சுலே புத்தகமா வந்துருச்சுன்னா எவ்ளோ மகிழ்ச்சின்னு  நான் சொல்லித்தான் தெரியணுமா என்ன?




நிறையப்படங்கள் இருக்கேன்னு கூகுள்+ இல் ஆல்பமாப் போட்டேன்.ரெண்டு முறை லோடு செஞ்சும்  ஆல்பத்தைக் கண்ணில் காமிக்கமாட்டேங்குது:(

போட்டும். ஒருக்கா ஃபேஸ்புக்கில் போட்டுப் பார்க்கிறேன். வந்துச்சுன்னா இங்கே சுட்டி கொடுக்கலாம்.  கொடுத்துட்டேன்.  ஆர்வம் உள்ளவர்கள் கண்டு களிக்கலாம்:-)




அபிதாவின் அரங்கேற்றம்.

$
0
0
எங்கூரில் எனக்குத் தெரிஞ்சு  இது முதல் பரதநாட்டிய அரங்கேற்றம். அழைப்பிதழை நேரில் கொடுக்க வந்த  நாட்டியமணியின் பெற்றோர் , நாங்க வீட்டில் இல்லாததால் தபால் பெட்டிக்குள் வச்சுட்டுப் போயிருந்தாங்க.
மறுநாள் தொலைபேசி, சமாச்சாரம் சொன்னவங்களிடம் கட்டாயம் வர்றோமுன்னு சொன்னேன்.

நியூஸிக்கு அவுங்க வந்தநாள் முதல் நமக்குத் தெரிஞ்சவங்கதான். அது ஆச்சு பதினாறு வருசம். கோயமுத்தூர் என்பதால் தமிழ்பேசும்  கேரளத்தினர். நமக்கு ரெண்டு வகையிலும் பேசலாம்:-)

எங்க ஊரில்  சுமார் பத்து வருசமா பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கும்  பள்ளி நடந்துக்கிட்டு இருக்குன்னா நீங்கள் நம்பணும்!

 வெலிங்டன் நகரில் நாட்டியப்பள்ளி நடத்திவரும் விவேக் கின்ரா (பஞ்சாப் மாநிலம்) நம்ம  கலாக்ஷேத்ராவில் படிச்சவர். அவர் க்ளாஸ்மேட் உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்ச ஒருத்தர்தான். நடிகை அமலா.  விவேக்தான் எப்பவாவது  ரெண்டு வருசத்துக்கோ, மூணு வருசத்துக்கோ ஒருமுறை எங்க க்றைஸ்ட்சர்ச் நகருக்கு வந்து நாட்டிய நிகழ்ச்சி நடத்திட்டு போவார். மூணு நாள். நாளுக்கொன்னா மூணு ஷோ. தவறாமல் போய்ப் பார்த்துட்டு வந்துருவோம்.  அவரும் கூட நடனமாடும் ஒரு பெண்ணுமா வருவார்.

லைவ்  ம்யூஸிக் எல்லாம் கிடையாது. ஆரம்பத்தில்  பாட்டுகள் எல்லாம் டேப். அப்புறம் சி டி யாகிருச்சு.

ஒரு சமயம்  அவர் கூட ஆட வந்தவங்க நம்ம  ஃபிஜி அக்காவின் மருமகள். பெங்களூர் பொண்ணு. கையில் மூணு மாசக்குழந்தை. நம்ம வீட்டில்தான்  தங்குனாங்க. நமக்கு அந்த முறை ஓசி டிக்கெட்டும் கிடைச்சது. குழந்தையை மடியில் கிடத்திக்கிட்டு முன்வரிசை  வி ஐ பி ஸீட்டில் உக்கார்ந்துருக்கேன்.  குழந்தை அழுதா வெளியில் தூக்கிக்கிட்டுப் போயிறலாமுன்னு கோபால் சொல்லி இருந்தார். ஆனால்.... அந்தப் பிஞ்சு பாருங்களேன்....நாட்டியம் ஆரம்பிச்சது முதல்  முடியும்வரை நிம்மதியான தூக்கம்!   அம்மா ஆட்டத்தை என்னை அனுபவிக்க விட்டுச்சு, என் செல்லம்:-)

அப்புறம் இங்கேயே நடனப்பள்ளி வந்த  பிறகு விவேக்கின் வருகை குறைஞ்சுதான் போச்சு. அப்படியும்  இங்கே நடக்கும் பாடி ஃபெஸ்டிவல் என்ற திருவிழாவில்  ஒருநாள் வந்து ஆடினார். இந்தமுறை அவர்கூட ஆடியவங்களும் வெலிங்டனில் இருந்து வந்த ஒரு பெண்(குஜராத்) என்றாலும் நம்மூர் நடனப்பள்ளி ஆசிரியை அனுராதாவும்  ரெண்டு நடனங்களில் விவேக்குடன் சேர்ந்து ஆடினார்.

விவேக்கின் நடன நிகழ்ச்சிகளில் படம் எடுக்கத் தடை உண்டு. ஏமாற்றம்தான் என்றாலும் கலைஞரை மதிக்க வேணும் இல்லையா?

இதுதவிர  அனுராதா அவர்களும் அவ்வப்போது  விவேக்கின் முத்ரா டான்ஸ் ஸ்கூலுக்கு (வெலிங்டன். நியூஸியின் தலைநகர்) போய்  மேற்கொண்டு சிறப்புப் பயிற்சியும் பெற்றுகொண்டு வருவார்.  எந்தக் கலை என்றாலும் அதில்  மேம்படணும் என்றால் கற்றலை விடக் கூடாதில்லையா?

அனுராதா, இலங்கைத் தமிழர். இங்கே நியூஸிக்கு வந்த நாள் முதல் நமக்குப் பரிச்சயம் உண்டு. தொழில் வகையில்  ஒரு எஞ்சிநீயர். (University of Liecester.UK) இலங்கையில் இருந்தப்பவே தன்  ஆறாவது வயசில் நாட்டியக்கலையை கத்துக்க ஆரம்பிச்சாங்க. குருவாக அமைஞ்சவர் கலாக்ஷேத்ராவில் படிச்சவர். பலவருசப்படிப்பு வீண்போகாமல் இங்கே எங்களுக்கான நாட்டியப்பள்ளி ஆரம்பிச்சது எங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சியான விஷயம்.  ஆரம்பத்தில் வெறும் மூணே மூணு மாணவிகள்தான்!  சமீபகாலமா இவுங்களும் தன் பள்ளி மாணவிகளுடன் 'நாட்டியம்'என்று  ஒரு ஷோ கேஸ் ப்ரோக்ராம் வருசாவருசம் நடத்தறாங்க. இப்போ இங்கே  சில வெள்ளைக்காரக் குழந்தைகளும் பரத நாட்டியம் கத்துக்கறாங்க என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்!



சின்னச் சின்னப்பிஞ்சுகள் மேடையில் ஆடுவது  நமக்கும் பார்க்க நல்லாவே இருக்கு. தாய்தகப்பனுக்கும்  தங்கள் குழந்தைகளை மேடையில் பார்ப்பது மகிழ்ச்சிதானே! இதில் கலையின் நேர்த்தி முக்கியமில்லை. பயம் இல்லாமல்  ஆடுவதே முக்கியம்.  பொதுவா இந்த நிகழ்ச்சிகளில்  ஆடும் குழந்தையின் தாத்தாபாட்டி, அப்பா அம்மா, உடன்பிறந்தோர் என்று பெரிய கூட்டமா  இருப்பதே சபை நிறைஞ்சுருக்குமுன்னு சொல்லலாம்:-)))

இப்படியாக நடனப்பள்ளியின் வளர்ச்சியை வருசந்தோறும் பார்த்து வருகிறோம். பள்ளியின் பெயர்,பரதநாட்டியம் க்ரூப் ஆஃப் கிறைஸ்ட்சர்ச்.


இந்த ஊரில் நூத்தியெழுபத்தியஞ்சு  (மனித) இனங்கள் இருக்குன்னு ஒரு சமயம் நகரத்தந்தையுடன் பேசிக்கிட்டு இருந்தப்பச் சொன்னார். எல்லா இனங்களும் சேர்ந்து கொண்டாடும் விதமா கல்ச்சர் கலோர் (Culture Galore) என்ற பெயரில் ஒரு விழா, மார்ச் மாச முன் பாதியில் எதாவது ஒரு சனிக்கிழமைகளில் கடந்த 15 வருசமா நடந்துக்கிட்டு இருக்கு. இங்கத்து கோடைகாலம் ஃபிப்ரவரியோடு முடிஞ்சுரும். மிச்சம்மீதி இருக்கும் வெயிலை எதுக்குப் பாழாக்கணும்?

திறந்த வெளியில் உள்ளூர்  பார்க் ஒன்னில்  மேடை அமைச்சுருவாங்க.  மேடைக்கென்றே ஒரு பெரிய வேன் இருக்கு. கண்டெய்னர்  போல இருக்கும் இதைக் கொண்டு வந்து நிறுத்தி பக்கவாட்டுக் கதவைத் திறந்துட்டால்.....  மேடை!

இதிலும் நம்ம அனுராதாவின் பரதநாட்டியப்பள்ளியின் பெரிய க்ரேடு  மாணவிகள்  ரெண்டு நடனம் ஆடுவதுண்டு.  இப்படிப் பள்ளியின் வயசும் அபிதாவின் நாட்டியக் கல்வியின் வயசும் ஒன்னாவே தொடர்ந்து வருது.
இந்தப் பதிவை வெளியிடும் இன்று  கல்ச்சர் கலோர் 2015 நாள். பிற்பகல் 12 முதல் 4 வரை நடக்கும்விழா. கம்யூனிட்டி ஈவண்ட்.  போயிட்டு வந்தோம்.

இப்ப நம்மூரில் இன்னும் சில நாட்டியப்பள்ளிகள் (!) ஆரம்பிச்சு நடக்குதுன்னு கேள்வி!  அதுலே ஒரு பள்ளியின் மாணவிகள் நம்ம கேரளா க்ளப் ஓணம் விழாவில் ஆடுனாங்க.

குறிப்பிட்ட நாளில் நடன அரங்கேற்றத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். பள்ளிக்கூடத்தின்  ஹால்.  ஆம்பி தியேட்டர் போன்ற அமைப்புள்ளது.   ஒரு 150 பேர் அமரும் வசதி.  ஹாலின் முகப்பிலேயே   டென்னியும் ஆன்ஸியும் வரவேற்றாங்க. சொல்ல மறந்துட்டேனே.... இது நம்ம அனுராதாவின் மாணவிகள் கூட்டத்தில் முதல் அரங்கேற்றம். அவுங்களும் பரபரப்பாத்தான் இருந்தாங்க. சகல விவரங்களோடுள்ள நிகழ்ச்சிநிரல் நமக்குக் கொடுத்தாங்க.

அபியின் பெற்றோர்


குறிச்ச நேரத்துக்கு நிகழ்ச்சி ஆரம்பிச்சது.  கடவுள் வாழ்த்துப் பாடிய அனுராதா, நடராஜரின் பாதங்களில் வச்சுருந்த சலங்கைகளை எடுத்து அபிதாவிடம் கொடுத்து ஆசீர்வதிச்சாங்க. மேடையில் வந்து நின்ன பெற்றோருக்கும் பாட்டிக்கும் வணக்கம் செஞ்ச நடனமணி  உள்ளே போய் சலங்கையைக் காலில் அணிஞ்சு வந்ததும்  சலங்கை ஒலி ஆரம்பமாச்சு.





கஜானனம் சொல்லி பிள்ளையாரை வணங்கி புஷ்பாஞ்சலி, அலாரிப்பு  முடிஞ்சு நாட்டியக் கடவுளுக்கு  வணக்கம்.

உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்    
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

சேக்கிழாரின் பெரிய புராணத்தில் உள்ள காப்புச் செய்யுள்.

ரெண்டாவதா ஜதிஸ்வரம். கால்களைக் கவனிச்சுக்கிட்டு இருந்தேன்.  பாதவேலைகள் அருமை.

மூணாவதா சப்தம். இதுக்குண்டான பாட்டு...  ராகமாலிகையில் அமைஞ்சது. காம்போதி, ஷண்முகப்ரியா, பிலஹரி, மத்யமாவதி  ராகங்கள்.

"ஆயர் சேரியர் அறிந்திடாமலும்,
அன்னை தந்தையர் அறிந்திடாமலும்
நேயர் கோபியர்  நெஞ்சம் கவர்ந்திட
மாயவன் குழல் ஊதுறான்
எங்கள் யாதவன் குழல் ஊதுறான்.

முகபாவங்கள் அருமை.   நடனத்துக்கு  கிருஷ்ணனும் ராமனும்  பொருத்தமா இருப்பது போல் வேற யாரும் இல்லைன்னு எனக்கொரு தோணல்.  அம்பாளும் சக்தியாக  இருந்து ஆடுவதும், சிவனின் தாண்டவமும் கூட  ரொம்பவே அழகுன்னாலும்  என் ஓட்டு க்ருஷ்ணனுக்கே!

வர்ணத்துக்கு ஒரு முருகன் பாட்டு. இயற்றியவர் ஆண்டவன் பிச்சை.  இந்தப்பெயரை இவருக்கு அளித்தவர் காஞ்சி மஹாபெரியவாதான்.  ஒரு சமயம் பெரியவர்  ஒரு கிராமத்துக்குப்போயிருக்கார். ஊர் மக்கள் பூரணகும்பத்தோடு காத்து நிக்கறாங்க. அப்போ ஒரு தம்பதிகளைப் பார்த்தவர்,வீட்டுள்ளே  பாத்திரம் தேய்க்கும் சிறுமியை அழைச்சு வரச்சொல்லி  இவள் ஆண்டவன் (போட்ட) பிச்சை என்றாராம்!

அதன்பிறகு  அந்தச் சிறுமி ஏராளமான பாட்டுகளை இயற்றி இருக்கார்.  முதலில் இவரைப் பற்றி எனக்கு அவ்வளவாத் தெரியாது. அப்புறமாத் தெரிஞ்சுக்கிட்டேன்.  நமக்கெல்லாம் ரொம்பவே தெரிஞ்ச 'உள்ளம் உருகுதையா  முருகா'என்ற பாட்டை எழுதியவர்.  அதைப் பாடிப் புகழ்பெறச் செய்தவர் நம்ம டி எம் எஸ்தான்.  1889 முதல் 1990 வரை  வாழ்ந்த இவர் ரிஷிகேஷில்   உலகவாழ்வை நீத்தார். இவர் முருகனின் பக்தை. இன்றைக்கு  அவர் எழுதிய முருகன் பாட்டுக்குத்தான் அபிநயம் பிடிச்சாங்க அபிதா.

பாட்டின் ஆரம்ப வரிகள் நினைவிலில்லை. மயில் மீதமர்ந்த அழகன் முருகனைக் கண்ணெதிரில்  கொண்டுவந்த  அபிநயத்தில் மெய்மறந்துட்டேன்னு சொல்லிக்கவா?

இன்றைக்கு (இந்தப்பதிவு எழுதிய நாள்) கல்ச்சர் கலோர் விழாவுக்குப் போயிருந்தேன்.அங்கு அனுவைப் பார்த்துப்பேசியபோது பாட்டுவிவரம் கேட்டுத்தெரிஞ்சுக்கிட்டேன்.  கொஞ்ச நேரத்தில் பாதிப்பாட்டு மனதில் நிக்கலை. அவுங்க பரதநாட்டியப்பள்ளியின்  நிகழ்ச்சி இருந்தது. மூன்று மாணவிகளுடன் சேர்ந்து ஒரு தில்லானா  ஆடுனாங்க. 

நிகழ்ச்சி முடிஞ்சதும் மறுபடி அனுவைச் சந்திச்சு பாட்டின் முதலடியைக் கேட்டு மனசுக்குள் வச்சுக்கிட்டேன். பாருங்க...ஒரு பதிவுக்கு என்ன கஷ்டமெல்லாம் படறேன்:-))))

"நீ மனமிரங்கி வந்தருள் புரிவாய் முருகா நீலமயில் மீது........"

இடைவேளைன்னு  ஒரு  அரைமணி நேரம்.  ட்ரெஸ் மாத்திக்க அவகாசம் கொடுக்கவேணாமா?

ச்சும்மா நின்னு பேசாதீங்க. இதைச் சாப்பிட்டுக் கொண்டே பேசுங்கன்னு  ஒரு ஏற்பாடு செஞ்ச அபிதாவின் பெற்றோரைப் பாராட்டத்தான் வேணும்.  லட்டு, மசால்வடை,சமோஸாவுடன் ஆரஞ்சு ஜூஸ்!




அடுத்த பகுதியாக நடன நிகழ்ச்சியில்  நம்ம ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் 'மரகத மணிமயசேலா'. இவரைப்பற்றித் தெரியாதவர்கள்  மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இருப்பாங்க. 'அலைபாயுதே கண்ணா'கேட்காதவர்கள் உண்டோ?  இதை எழுதியவர் இவரே. தமிழிலும், சமஸ்க்ருதத்திலும் மொழிப்புலமை உள்ளதால்  இந்த ரெண்டு மொழிகளிலுமே பாட்டுகள் எழுதி இருக்கார்.


'மரகதமணிமய சேலா, கோபாலா மதனா கோடி சௌந்தர்ய விஜிதா பரமானந்தா  கோவிந்தா முகுந்தா' ன்னு பாட்டு போகும்.  ரொம்பவே அழகான பாட்டு.  இதை நம்ம யேசுதாஸ் பாடுனது யூ ட்யூபில் இருக்கு. கேட்டுப்பாருங்க.

நான் சொல்லலை....கிருஷ்ணனும் ராமனும் நாட்டியத்துக்கு ரொம்பப்பொருத்தமுன்னு! அதே போல் அடுத்த  பாட்டு ஒரு பஜனைப்பாடல். துளஸிதாஸின்

 "ஸ்ரீ ராம சந்த்ர க்ருபாளு பஜமன  ஹரண பவபய தாருணம்
நவ கஞ்ச லோசன கஞ்ச முக கர கஞ்ச பத கஞ்சாருணம்"

எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காத ஒரு பஜனைப்பாடல். இதை நம்ம லதா குரலில் கேக்கணும்!  ஹைய்யோ!!!!


தேன் குடிச்ச நரியாட்டம் இருந்தேன்னு சொன்னால் அது பொய் இல்லை. (ஆமாம்....நரி தேன் குடிக்குமோ? ) கரடின்னு வச்சுக்கலாம்.  தேன் குடிச்ச கரடி:-)

ஸ்ரீராமனின் கம்பீரமும் வில் பிடிச்சுருக்கும் அழகும்  அப்பப்பா!!!!
நிகழ்ச்சியின் கடைசிப்பகுதிக்கு வந்துருந்தோம். தில்லானா.  பாட்டாக இல்லாமல்   இசைக்கருவிகளால் மட்டுமே  'நெய்த'இசை.


அரங்கேற்றத்தில் ஆடிய தில்லானாவை இங்கே  யூ ட்யூபில் வலையேத்தி இருக்கேன்.


அடுத்து மங்களம் ஆடி முடிச்சுட்டாங்க.

உடை மாத்திக்கும் காரணம் இடைக்கிடை சில  சொற்பொழிவு, வயலின் & செல்லோ  ம்யூஸிக் என்று  சில.

மாலை ஆறுமணிக்கு ஆரம்பிச்ச நிகழ்ச்சியை கச்சிதமா எட்டரைக்கு முடிச்சுட்டாங்க. கலை ஆர்வத்துக்கு மதம் ஒரு தடையே இல்லைன்னு நிரூபிச்சுட்டாங்க  கிறிஸ்துவரான  அபிதா!

மனநிறைவோடு  அபிதாவை வாழ்த்திட்டு, நாங்களும் வீடு வந்தோம்.

மகளிர்தின சிறப்புப் பதிவாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

வணக்கம்.








Bபீம்பாய் Bபீம்பாய், இந்த Gகதை உம்மோடதா!! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 28)

$
0
0
ட்ரெஸ் கோட் நினைச்சால்தான் கொஞ்சம்  பயமா இருக்கு. எதுக்கும் இருக்கட்டுமுன்னு  கொண்டு போயிருந்த முண்டு செட்டையும், வேட்டி, மேல் வேட்டி செட்டையும் எடுத்துப் பையில் வச்சுக்கிட்டார் கோபால்.

கீழே போய் வரவேற்பில் விசாரிச்சால்.... கோவில் திறந்துதான் இருக்கும். அவ்வளவா தூரமில்லை. ஒரு நாலரைக் கிலோமீட்டர்தான்  வரும் என்றார், பொறுப்பில் இருந்தவர். பகவதி கார்டன்ஸைத் தொட்டடுத்து இருந்த ஒரு  பேக்கரி கடையில்  சில  மேசை நாற்காலிகள் போட்டு வச்சுருக்காங்க.  ஒரு பையன் எண்ணெய் உருளிக்கு முன்னால்.

பழம்பொரியான்னு கேட்டேன்.  'அதே. வேணோ'என்றான்.  'சாய உண்டோ?'என்றால் 'இருக்யூ' (உக்காரு)என்று பதில். மூணு சாயா  மாத்திரம் வாங்கிக்கிட்டோம். வேறேதும் தின்னத் தோணலை!


நாயர் கடையில் உக்கார்ந்து  டீ குடிக்கணும், கூடவே ஒரு பருப்பு வடை என்ற ஆசை  இன்னும் நிறைவேறலை:(

திருப்புலியூர் கோவிலுக்குப்போறோம். ஆதி காலத்தில் இந்த ப்ரதேசத்துக்கு  குட்டநாடு என்ற பெயராம். அங்கே இங்கேன்னு வழி கேட்டுத்தான் போனோம். பத்தேல் பள்ளிபெருநாள் நேத்தும் முந்தாநாளுமா நடந்துருக்கு. வழியெங்கும் திருவிழா முடிஞ்ச  காட்சிகள்.  இந்தப் பள்ளி (சர்ச் என்பதை கேரளத்தில் பள்ளி என்று சொல்வார்கள்.  அதனால் பள்ளிக்கூடத்தையும் பள்ளியையும் சேர்த்துக் குழப்பிக்க வேணாம் கேட்டோ!)  பள்ளி முக்கு திரும்பிய  ஆறாவது மினிட் நாம் கோவிலுக்கு வந்திருந்தோம்.

ஒரு பத்திருவது படிகள் ஏறிப்போகணும். கோவில் முகப்பில் பள்ளிகொண்ட பெருமாள். திருப்புலியூர் மஹாவிஷ்ணு கோவில் என்று மலையாளம், தமிழ், இங்கிலீஷ்,ஹிந்தின்னு நாலு மொழிகளிலும் எழுதி வச்சுருக்காங்க.  ரொம்ப நல்லது. படிகளின்  முடிவில் இருந்தவர் , 'ஷர்ட் ஊரிக்கோ'என்றார். சீனிவாசனுக்கு முழி பெயர்த்தேன்.  அவர் சட்டையைக் கழற்றிக் கையில் வச்சுக்கிட்டார் .  நமக்கு சல்வார் ஒக்கே போல. யாரும் ஒன்னும் சொல்லலை. நிம்மதி.

மேலேறிப்போய் முன்னால் இருக்கும் மண்டபத்தைக் கடந்தால்  கண்ணெதிரே  மிகப்பெரிய வளாகம். தரையெல்லாம் கலர் டைல்ஸ் பதிச்சு பளிச்!



 நெடுநெடுன்னு கொடிமரம் மேலே போகுது!  கல்லால் ஆன தீபஸ்தம்பம் புது மாதிரி!   பதினொரு குழிப்பணியாரக் கல்லை அடுக்கி வச்சது போல்  !   அதுவும்   முன்மண்டபத்தின் ரெண்டு பக்கத்திலும் ஒவ்வொன்னு!  அடடா... இதுலே விளக்கேத்தி இருந்தால் எப்படி இருக்குமுன்னு மனக்கண்ணில் தீபமேற்றிப் பார்த்தேன். ஹைய்யோ!

நம்மாள் அதுக்குள்ளே  வேஷ்டிக்கு மாறி இருந்தார். அசலாயி:-)

இந்தப்பக்கம்  மேடை மேல்  ஒரு பெரிய  Gகதை

கொடிமரம் பலிபீடம் கடந்து  அடுத்த பிரகாரத்திற்குள் போகணும். திண்ணைச்சுவர் வச்ச  உம்மரம். 'ஓம் நமோ நாராயணா. ஓம் நமோ பகவதே வாசுதேவாய 'ன்னு ரெண்டு வரிகள்  தலைக்குமேல் எழுதி இருக்கு. இடத்துவசம்...  பூஜா நேரங்கள்  எழுதி வச்ச போர்டு.


சின்னதா  நடுவில் மனிதர் (மட்டும்) உள்ளே போகும் வழி. அதில்மரக்கட்டைகள் வச்சு  பிடிப்பிச்சு, ஒரு நாலு இஞ்சு இடைவெளி. பாதத்தைக் கஷ்டப்பட்டுத் திருப்பி நுழைச்சு அடுத்த பகுதி படிக்கட்டில் காலு குத்தணும். எண்டே நாராயணா.....

உம்மரத்தில்  உக்கார்ந்திருந்த  ஒருவரிடம் படம் எடுக்க  அனுமதி வாங்கிக்கிட்டேன். வெளிப்புறம் மட்டும் எடுத்துக்கலாம்.நோ ஒர்ரீஸ்.

அடுத்த வாசலில் நுழைஞ்சால்  பெரிய திண்ணைகள் ரெண்டு பக்கமும் வச்ச இடைநாழி.  அது கடந்து போனால்  தாழ்ந்த கூரை உள்ளதும் இடுப்பளவு உயரம் வரும் திண்ணைத்தரையுமாக ஒரு மண்டபம். ஒரு பெரிய சதுர மேடைக்கு மேல் கூரை போட்டாப்போல!

கொஞ்சம் உடலைக்குறுக்கிக் குனிஞ்சு பார்த்துக் கும்பிடறாங்க முன்னே போன ரெண்டு லேடீஸ். நாமும் அதே போல் செய்தால் ஆச்சுன்னு குனிஞ்சேன். ஹைய்யோ!

ரொம்ப தூரத்தில் ஏராளமான எண்ணெய் தீபங்களின் ஒளியில் சந்தனக்காப்பில் கண்ணெழுதி பொட்டு தொட்டு நின்றகோலத்தில் இருக்கார் மாயபிரான்! இந்த மண்டபத்தை இடமோ வலமோ வந்தால் கருவறைவாசலில் நிற்போம். அஞ்சு படிகள் ஏறிப்போகணும்.  நாம இல்லை.  பட்டர் ஸ்வாமிகள். படிக்கு  ரெண்டு புறமும் மக்கள்ஸ் நிற்கலாம்.ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாப் பிரிச்சு இல்லை. ஒருவேளை நாம் போனபோது  கூட்டம் இல்லை என்பதாலோ என்னமோ!

நான் வலமாகப்போய் நிற்கும்போதே, இடதுபக்கம் நின்ற அந்தப் பெண்கள் கருவறை  வலம்வரப்  போயிட்டாங்க. நமக்கு ஏகாந்த தர்ஸனம்!  நல்லா  என் பார்வையை உள்ளே செலுத்தினேன்.  இந்த அஞ்சு படிகள் முடிஞ்சு  உள்ளே ஒரு சின்ன  அறை. அதைக்கடந்து இன்னும் ஐந்து சின்னப்படிகள். அதுக்கும் மேலேஇருக்கும் இடத்தில்தான் பெருமாள் நிக்கறார். பெருமாள் முகத்துக்குத் தங்கக்கவசம்.  இது மஞ்சளா மின்னியதைத்தான் தூரத்திலிருந்து பார்த்துட்டுச் சந்தனக்காப்புன்னு நினைச்சிருந்தேன்.  உள்கூரையில் இருந்து தொங்கும் சரவிளக்குகள், கீழே ஆறேழு குத்துவிளக்குகள்.  இதில்லாமல் அகல்போல்  வரிசையா இன்னும் விளக்குகள் வேற.  நல்ல ப்ரகாசமான கருவறை.

நாம் நிற்குமிடத்தில்   நம் கண் முன்னால்  ரெண்டு சர விளக்கு  படிக்கட்டின் பக்கத்துக்கொன்னா தொங்குது. அதில்  ஒற்றை திரியில்  தீபம்.  திடீருன்னு  சின்னதா  மேள ஒலி. சட்னு திரும்பிப் பார்த்தேன்.  எனக்கு வலதுபக்கம் கருவறைச் சுவரை ஒட்டிய இடத்தில்  நம்மூர் உடுக்கை  போன்ற ஒரு மேளத்தை தோளில் தொங்கவிட்டுக்கிட்டு  மெல்லிய பிரம்பால் வாசிக்கிறார் ஒருத்தர். பெரிய சைஸ் உடுக்கை போல நடுவில்  இடை சிறுத்தும் இருப்பதால்தான் இதுக்கு இடெக்கான்னு பெயர் வந்துருச்சோ என்னவோ!

 மோஹினியாட்டம்,  கதகளி. க்ருஷ்ணனாட்டம் நிகழ்ச்சிகளில் எல்லாம் இது  ஒரு முக்கியமான  வாத்தியம்.  சிவபெருமானே இதை வடிவமைச்சு  தன் பக்தனான பாணாசுரனுக்குக் கொடுத்தாராம். அதனால் இது தெய்வீக இசைக்கருவியாக  ஆகிருக்கு. ஆஹா....  சிவபெருமானே  டிஸைன் செஞ்சதா!!!  அதான் தன்னுடைய உடுக்கைப்போலவே  செஞ்சு கொடுத்துட்டார் போல!

நம்மூர் கோவில்களில் சாயரக்ஷை பூஜை சமயம் தவில், நாதஸ்வரம் வாசிக்கிறாங்க பாருங்க அதைப்போல் கேரளத்தில்  சந்தியா  நேரப்பூஜைக்கு  இதை வாசிக்கன்னே கோவில் ஒரு கலைஞரை நியமிச்சிருக்கு.
டுணுக்கு டுணுக்கு டுக்கு  டுணுக்கு டுணுக்கு டுக்குன்னு ஒரே லயத்தில் வாசிக்கிறார்.  கேட்ட நமக்கும் மோஹினியாட்ட  அசைவுகள் தானே வர்றதுபோல எனக்குத் தோணல்.


படம்  : முன்னே நம் பதிவுகள் ஒன்னில் மோஹினியாட்டம் பற்றி எழுதினபோது போட்டது.  மேடை நிகழ்ச்சி என்பதால்  கலைஞர்  ஷர்ட் போட்டுருக்கார். ஆனால் கோவிலில் ஷர்ட் பாடில்லா.


பூஜைகள் ஆரம்பிச்சது. படிக்கட்டுகள் ஏறி கருவறைக்குப் போகும் இடங்கள் எல்லாமே   உயரம்  ரொம்பவே குறைவான தாழ்ந்த கூரை என்பதால் நம்பூதிரி உடம்பை ரெண்டாக மடிச்சுக் குனிஞ்சு நடந்து பெருமாள் முன் உக்கார்ந்துக்கறார்.

முன்பக்கம் மல்லிகைப்பூக்கள் கொட்டி வச்சுருக்கு.  பெருமாளுக்கும் மல்லிகைச் சரங்களால் அலங்காரம். மல்லிகைப்பூக்களால் அர்ச்சனை செய்து,  கெண்டி நீர் ஊற்றி கைகாட்டி, திருவிளக்குகள் சுத்தி  தீபாராதனை  காமிச்சுன்னு ஒவ்வொன்னாக நடக்குது.

பூஜை முடிஞ்சதும்  ரெண்டாக  உடலை மடிச்சுக் குனிந்த வாக்கிலேயே  தீபாராதனை காமிச்ச  திருவிளக்கைக் கொண்டுவந்து படிக்கட்டின்  இடதுபுறக் கல்லில் வச்சவர்  கிடுகிடுன்னு இறங்கிப்போயிட்டார். இதுக்குள்ளே கருவறை வலம் முடிச்சு வந்த சிலர்   தீபாராதனை ஜோதியை  லேசாத்தொட்டு வணங்கிட்டு பக்கவாட்டில் திண்ணை மண்டபத்துலே  இருந்தவரிடம் கை நீட்ட அவர் துளிச் சந்தனத்தைக் கிள்ளி எறிந்தார். அது 'சொத்' என்று அவர்கள் உள்ளங்கையில்  விழுந்துச்சு.

ஓஹோ.... இதுதான் இங்கே முறைன்னு பார்த்துப் படிச்சுக்கிட்டேன். நாமும் கருவறை சுற்றி வரப்போனோம்.  வட்டமான கருவறை. ரொம்பப் பெருசாவே இருக்கு. கருவறை விமானம் பழுது பார்க்கறாங்க போல! தென்னோலைகளால் மூடி வச்சுருக்காங்க.  வெறும் ஓடுகளால் ஆன கும்மாச்சி போலத்தான் தெரியுது.

அகலமான பிரகாரத்தின்  வலம் வரும்போது  நமக்கிடது பக்கம்  வெராந்தா போல் இருப்பது முழுசும் திண்ணை உயரத்தில்.  அதுலே அங்கங்கே    குட்டி அறைகள் போல  அமைப்பு. மடப்பள்ளி,பிரசாதம் விளம்பும் இடம் என்றெல்லாம்  இதுலேயே இருக்கு போல. திண்ணையின் ஒரு பக்கம் விளக்குகளும் உருளிகளும், கெண்டிகளுமா தேய்ச்சு மினுக்கிக் கவுத்து வச்சுருக்காங்க.

வட்டக்கருவறையில் ஒரு இடத்தில் சின்னதா  மாடம் போல் சந்நிதி  இருக்கேன்னு எட்டிப்பார்த்தால் புள்ளையார் இருக்கார்.

கருவறைக்கு பின்பக்கத் திண்ணையின்  வலது மூலையில் ஒரு சின்ன அறை. தாயார் சந்நிதி!  பொற்கொடி நாச்சியார்!  திண்ணை மேலேறி தரிசிக்கலாம்.  அப்படியே வலம் வந்து முன்புறத்திண்ணை மண்டபத்துக்கு அருகில் வரும்போது அங்கே ஒரு கிணறு!

அதுக்கு எதிர்ப்புறம் வரும் திண்ணைச்சுவரில் ரெண்டு  தமிழ்பாசுரங்கள் எழுதி வச்சுருக்காங்க. கருப்புப் பளிங்கில் செதுக்கி வச்ச எழுத்துகள். நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் ஆளுக்கொரு பாடல் பாடி இருக்காங்க.

மறுபடி திண்ணைமண்டபத்துக்கு வந்து சந்தனத்துக்கு இருகைகளையும் ஒன்றுக்கு மேல் ஒன்று  வச்சு நீட்டினேன். சின்ன வாழை இலை நறுக்கில் சந்தனமும் ரெண்டு மல்லிகையும்வச்சு   இரு ஒரங்களிலும் பிடிச்சு நம் கைகளில்  மெதுவாகத் தூக்கிப் போட்டார். வேற்று மாநிலத்தினருக்கான மரியாதையாக  இருக்கலாம்!

கருவறைக்கு அக்கம்பக்கம் தட்டில்  போட்ட தக்ஷிணைகளோ, உண்டியலோ இல்லை . யாரும் பக்தர்களிடமிருந்து காசை எதிர்பார்க்கலை. இதை எதிர்பார்க்காத எனக்கு  ஒரே ஆச்சர்யம்தான்.

இடைநாழி கடந்து, முன்வாசல் (உம்மரம்) வந்து  தடுப்பு வச்ச முன்படிகளைத் தாண்டி வெளியே ஏறக்குறைய குதிச்சேன்னு சொல்லலாம்.

இப்ப வெளிப்ரகாரத்தை வலம் வருவோம்,சரியா? நல்ல உயரமான   சுவரும், ஓட்டுக்கூரையுமா இருக்கு. அதில் சுவரில் ஆளுய மரச்சட்டத்தை அங்கங்கே வரிசையா அடிச்சு அதில்  விளக்கு வைக்கும் பித்தளை அகல்களைப் பொருத்தி வச்சுருக்காங்க. கேரளக்கோவில்களில் வழக்கமா  நாம் பார்க்கும் விளக்குச் சட்டங்கள் வரிசை இல்லை.




இந்தக் கோவிலுள்ள இடத்துக்குப் புலியூர் பெயர்க்காரணம் என்னன்னு  சொல்லிக்கிட்டே வரேன். கேட்டுக்கிட்டே நீங்களும்  வாங்க.

நம்ம சிபிச்சக்ரவர்த்தியின்  (புறாவுக்காக தன் தசையை வெட்டிக்கொடுத்தவர்)  மகன் வ்ருஷாதர்பி இந்தப்பகுதியை ஆண்டுக்கிட்டு இருக்கார். அப்போ பெரிய வெள்ளம் வந்து  நாடே கஷ்டத்தில் இருக்கு. அப்பப்பார்த்து சப்த ரிஷிகள் இங்கே வர்றாங்க. நாடு இருக்கும் நிலையில் தானம் தர தன்னால் இயலாதுன்னு மன்னர் சொல்றார். நாட்டை வளமாக்கினால் தானம் தருவேன்னும் சொல்றார்.

தானம் வாங்கவந்தவர்கள்னு தங்களை  நினைச்சதுலே ரிஷிகளுக்குக் கோபம்.  அரசருக்கு பயம் வந்துருது. அவர்களுக்குப் பழங்கள் கொடுத்து உபசரிக்கிறேன்னு பழங்களுக்குள்ளில்  கொஞ்சம் தங்கம் ஒளிச்சு வச்சு அனுப்பறார்.  ஞானதிருஷ்டியால் ரிஷிகளுக்கு விவரம் தெரிஞ்சதும் பழங்களை வேணாமுன்னு சொல்லி திருப்பிஅனுப்புனதும் மன்னருக்கு மகாகோபம்!   ரிஷிகளை ஒழிச்சுக்கட்ட ஒரு யாகம்செஞ்சு,  யாகத்தீயில் இருந்து ஒரு துர்தேவதை  வருது. அவள் பெயர் க்ருத்யை என்று எங்கோ வாசிச்ச நினைவு.

இதை உணர்ந்த ரிஷிகள் மஹாவிஷ்ணுவை வேண்டினதும்,  இந்திரனை ஒரு புலியாக மாறி தேவதையைத் தாக்கச் சொல்லி  அனுப்பறார் விஷ்ணு. புலி  துர்தேவதையைக் கொன்னு ரிஷிகளைக் காப்பாற்றுச்சு. அதான் புலியூர் பெயர் வந்த காரணம்.  சப்த ரிஷிகளுக்குத் தரிசனம்  தந்து மோட்சம் கொடுத்தார் விஷ்ணுன்னு கதை முடியுது!

"அப்ப மாயபிரான் என்று மூலவரை ஏன் சொல்லணும்? புலியூரான் என்று சொல்லக்கூடாதா?"

"ஹாஹா... வாங்க,  இன்னொரு  புராணக்கதை கேட்க."

நாரதருக்கு ஒரு சமயம் ரொம்பபோர் அடிச்சது. இந்த முறை கலகத்தை   கண்ணனின் மனைவிகளிடம் ஆரம்பிக்கலாம் என்று திட்டம் போட்டார். முதலில் ருக்மணி வீட்டுக்குப்போறார். அங்கே  மனைவிக்குத் தாம்பூலம் மடிச்சுக் கொடுத்துக்கிட்டு இருக்கறார் க்ருஷ்ணர்.  ஆஹா.... இனி மற்ற மனைவிகள் /துணைவிகள் வீட்டுக்குப்போய் போட்டுக்கொடுக்கலாம் என்ற குஷியில் ராதையின் வீட்டுக்குப்போறார் நாரதர்.

அங்கே ராதைக்காக தன் புல்லாங்குழலில் அழகான  இசையை வாசிச்சுக் காட்டும் கிருஷ்ணர். இது எப்படி? இப்பத்தானே  வெத்தலை பாக்கு மடிச்சுக்கொடுத்துக்கிட்டு இருந்ததைப் பார்த்தேன் என்ற குழப்பத்தோடு, சத்யபாமா வீட்டுப்பக்கம் நடையைக் கட்டுனார் நாரதர்.  அங்கே என்னன்னா, கணவருக்கு  ஆசை ஆசையா சாப்பாடு ஊட்டிக்கிட்டு இருக்காங்க மனைவி.
என்னடா..இதுன்னு  ஜாம்பவதி வீட்டுக்குக் காலைவீசிப் போட்டு வர்றார் நாரதர். அங்கே ஓய்வா படுத்திருக்கும்  கிருஷ்ணருக்கு ஜாம்பவதி கால் அமுக்கி விட்டுக்கிட்டு இருக்காங்க.

நம்ம கோள்மூட்டல்  நடக்கலையே.... இப்படி மாயக்கண்ணனா எங்கே பார்த்தாலும் இருக்காரேன்னு  நாரதர் 'அன்றைக்கான'கலக எண்ணத்தை விட்டார். அதனால் இங்கே  மூலவருக்கு  மாயபிரான் என்று பெயராம்.

கோவில் திறந்திருக்கும் நேரம் காலை அஞ்சு முதல் பதினொன்னு, மாலை அஞ்சு முதல் எட்டுன்னு  சொன்னாங்க. நூத்தியெட்டு திவ்யதேசக்கோவில்கள் வரிசையில் திருப்புலியூர் கோவில்  அறுபத்தி மூணாவதா இருக்கு.


வெளிப்ரகாரத்தின்  ஒரு மூலையில்  அம்மன் சந்நிதி ஒன்னு இருக்கு. விஷ்ணு துர்கைன்னு நினைச்சேன். புவனேஸ்வரி அம்மன்னு சொன்னாங்க.

ரொம்பத்தள்ளி  தூரமா ஒரு நாகர் ப்ரதிஷ்டை.  சர்ப்பக்காவு!  ஏழுதலை ஆதிசேஷன்!


'விஸ்தாரமா ரொம்ப பெரிய கோவிலா இருக்குல்லே'என்றார் கோபால்.

"இருக்காதா பின்னே? பீமன் கட்டுன கோவிலாமே. அவன் சைஸுக்குத்தானே  இருக்கும்"

ஓ... அதுதான் இங்கே Gகதை இருக்கா!!!!

தொடரும்.........:-)

PIN குறிப்பு:இந்த முறை  நம்ம இந்தியபயணத்தின் நோக்கமான   சேரநாட்டு திருப்பதிகள்  என்ற  அஸைன்மெண்ட்  இன்னிக்குத்தான் ஆரம்பிக்குது! முதல் தரிசனமே மனசுக்குத் திருப்தியாக அமைஞ்சது மகிழ்ச்சி! 











சாமிக்கும் 'அந்த'மூன்று நாட்கள் ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 29)

$
0
0
திருப்புலியூர் மாயபிரானைக் கும்பிட்ட கையோடு கோவில் வெளிமண்டபத்தில்  இருந்த ஒருவரிடம், 'பகவதி அம்பலம் எவிடெயாணு'ன்னு விசாரிச்சதும்,  'ரெயில்வே ஸ்டேஷனடுத்து'ன்னவர், நாம் தங்கி இருக்குமிடத்தைக் கேட்டார். மார்கெட் ரோடு பகவத் கார்டன் என்றதும், அங்கிருந்து கோவில் ரொம்பப் பக்கம்தான்.  சீக்கிரமாப் போகணுமுன்னா ஒரு  ஓட்டோ எடுத்தோன்னார். நமக்கும் புது இடம் என்பதால் தடுமாற்றம் இருக்கு. இருட்ட ஆரம்பிச்சது வேற .....

வந்தவழியே  திரும்பிப்போயிடலாமுன்னு  சீனிவாசன் சொன்னதால் நாங்க பகவத் கார்டன் வந்து வண்டியை நிறுத்திட்டு,   ஒரு ஆட்டோ ரிக்‌ஷா பிடிச்சு நாங்க மூணு பேருமா   மஹாதேவர் கோவிலுக்குப்  போனோம். 20 ரூ ஆச்சு. கோவிலுக்குப் பக்கத்தில் கொண்டு வந்து விட்டார் ஆட்டோக்காரர்.  திரும்பி வரும்போது ஆட்டோ ஸ்டாண்டு போகணுமுன்னு சொல்லி அந்த ஸ்டாண்டையும் வரும்வழியில் காமிச்சார்.

செங்கண்ணூர் மஹாதேவர் க்ஷேத்ரம். சபரிமல எடத்தாவளம் , செங்கண்ணூர் தேவஸ்வம் என்ற  போர்டு. சபரிமலைக்குப்போகும் பக்தர்கள் அனைவருமே பயணத்தினிடையில் இங்கு வந்து, மஹாதேவரையும் பகவதியையும் தரிசனம் செஞ்சுட்டுத்தான் போவாங்களாம்.

பாரதப்போரில்  அசுவத்தாமா (என்ற யானை) இறந்துவிட்டது உண்மைன்னு, பொய் சொன்ன தருமர்,  இங்கே வந்து  மஹாதேவரையும் பகவதியையும் வழிபட்டு தன் பாவத்தை மன்னிக்கும்படி  வேண்டினாராம்.

ஆதிகாலத்தில் இங்கே இடைவிடாது யாகங்கள் நடந்தபடி இருக்குமாம். யாகப்புகை எப்போதும் சூழ்ந்திருக்கும்  சிவந்த குன்று என்பதால் செங்குன்று ஊர்ன்னு சொல்லப்போய் கடைசியில் செங்கண்ணூரென்று மருவியதுன்னு  சொல்லக்கேள்வி.

யாரும் ஒன்னும் சொல்லாமலே  ஷர்ட்டை ரெண்டு பேரும் கழட்டித் தோளில் போட்டுக்கிட்டாங்க. அப்பதான் கவனிச்ச நான், 'எப்போ வேஷ்டியில் இருந்து பேண்ட்ஸுக்கு மாறினீங்க'ன்னு கோபாலைக் கேட்டால்.... ட்ரவுசரை அவுக்காமல் அதுக்குமேலேதான் வேட்டியைக் கட்டிக்கிட்டேன் என்றார்:-)))

தங்கம்போல் மின்னும் உலோகத்தகடு போர்த்திய கொடிமரம் நெடுநெடுன்னு நிக்குது.  அதைப் பார்த்தாப்போல ஒரு நந்தி இருக்கார்.  பெரிய  கேரள அரண்மனை டிஸைனில் கோவில்.  மூணுமாடிக்கட்டிடம். ஓடுகள் வேய்ஞ்சுருக்கு. பெரிய பெரிய தூண்களோடுள்ள முன்மண்டபம் கடந்து உள்ளே போறோம். உள்பிரகாரத்துக்கு நடுவில் வட்டமாக இருக்கும் கருவறை.  கூரைக்  கூம்பின் உச்சியில் செம்புத்தகடு போர்த்தி இருக்காங்க(ளாம்)


இங்கேயும்  கருவறை முன்னே திண்ணை மண்டபம்.  அஞ்சு படிகள் ஏறி கருவறைக்குள்ளே போகணும்.  இப்பப் பார்த்துட்டு வந்த  திருப்புலியூர் ஸ்டைல்தான். சிவலிங்கத்துக்கு மேல்  தங்கத்தால் ஆன  கவசம்.  அதில் சிவனும் சக்தியுமா அர்த்தநாரீஸ்வரக் கோலம்.  இப்ப மல்லிகை சீஸனோ என்னவோ......முழுசுமே மறைக்கிறாப்போல் பூச்சரங்கள்.

சந்தியா பூஜை எல்லாம் முடிஞ்சு போயிருச்சு. மாலை ஆறரை முதல் ஏழுவரை தீபாராதனை. இப்ப மணி ஏழு அஞ்சு.  பக்தர்கள் வந்து கருவறை முன் நின்னு கும்பிட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்காங்க.

தினமும் அதிகாலை மூணு அம்பதுக்குத் திருப்பள்ளி எழுச்சி. அப்புறம் அபிஷேகம்,  உஷத்காலப்பூஜை, ஹோமம், கலச பூஜை, உச்சிகால  பூஜைன்னு வரிசையா நடந்து பதினொன்னரைக்கு  நடையை சாத்திடறாங்க. அப்புறம்  மாலை அஞ்சு மணிக்குத் திறந்து ஏழுக்கு தீபாராதனை, ஏழரைக்கு அர்த்தஜாமம், எட்டுமணிக்கு  ஸ்ரீபலின்னு நடை அடைச்சுடறாங்க.

 நாமும் வணங்கிவிட்டு, கருவறை சுத்தறோம். சரியா சிவன் சந்நிதிக்குப் பின்பக்கம்  இன்னொரு கருவறை வாசல். முன்னால் சின்னதா ஒரு திண்ணை மண்டபம்.

என்னன்னு எட்டிப்பார்த்தால்  செங்கண்ணூர் பகவதி! முழுக்க முழுக்க மல்லிச்சரங்களால் ஆன அலங்காரம்! மூலவரே பஞ்சலோகச் சிலைதான்.  ஆதிகாலத்துச் சிலை  தீவிபத்தில் போயிருச்சுன்னு சொன்னாங்க.

  திண்ணை மண்டபம் தாண்டி  சின்னதா ஒரு கொடிமரம்.  முன் மண்டபம் போல இன்னும்  ஒன்னு. என்னடான்னு பார்த்தால் பகவதிக்குத் தனி வாசல் ! சிவன் கிழக்கு பார்த்து இருக்கார். பகவதி மேற்கு பார்த்து !  இங்கே  நாம்  இந்த ரெண்டு வாசல் வழியாகவும் வரலாம். போகலாம். மேற்கு வாசலுக்கு  வெளியே வந்து பார்த்துட்டு அங்கிருந்து உள்ளே ஒரு க்ளிக்.

பகலில் வந்து பார்த்திருக்கணும். இப்போ நமக்கு வழிவாசல் இறம்புறம் ஒன்னும் சரியாத்தெரியலை. எடுத்த சில படங்களும் முக்காலிருட்டில்  சரியா வரலை. பொதுவா எனக்கு கோவில் போன்ற இடங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஃப்ளாஷ் பயன்படுத்த விருப்பமில்லை.

இந்த செங்கண்ணுர் பகவதி க்ஷேத்ரம் ஒரு சக்திபீடக் கோவில்.
புருஷன் மனைவி சண்டையில் மனைவியின் தீக்குளிப்பு  படிச்சிருக்கீங்க தானே?  இல்லைன்னா  இங்கே பார்க்கலாம்:-)


குடும்பச் சண்டையில் மனைவி தீக்குளிப்பு



மாமனார் வீட்டுக்கு வந்து ஆடித்தீர்த்தது

அம்பத்தியோரு துண்டுகளா வெட்டப்பட்ட சதியின் உடல் பாகங்கள்  விழுந்த இடங்களைத்தான் சக்தி  பீடம் என்று சொல்றாங்க. சதியின்  அடிவயிற்றுக்குக் கீழே உள்ள அரைப்பகுதி விழுந்த இடம்  இது என்று கோவில் சொல்லுது.. அஸ்ஸாமில் இருக்கும் காமாக்யா கோவிலையும்  இப்படி இதே பாகம் விழுந்த இடமுன்னுதான் சொல்றாங்க.  உடலைத் துண்டாக்கி எறியப்பட்ட போது இடுப்பின் கீழுள்ள அரைப்பகுதி  இங்கேயும் அஸ்ஸாமிலுமா  அரை அரையா விழுந்துச்சுன்னு வச்சுக்கலாம்.

இந்தக்கோவிலில்  ஒரு சிறப்புத்திருவிழா நடக்குது. த்ரிப்பூத்தராட்டு  என்ற பெயர் இந்த விழாவுக்கு. பகவதி வீட்டுவிலக்காகறாங்கன்னு  நடக்கும் விழா. தினமும் காலை அபிஷேகத்தின் போது  முதல்நாள்  சாமிக்கு உடுத்தி இருந்த புடவையைக் களையும்போது அதில் இருந்த ஒரு கறையைக் கண்ட மேல்சாந்தி (அர்ச்சகர்)  புடவையை , கோவிலுக்குப் பொறுப்பான பாரம்பரிய (தரவாடு) மடமான  வங்கிப்புழாவில் இருக்கும் மூத்த பெண்களிடம்  கொண்டுபோய்க் காட்டியிருக்கார். அவர்கள் இது வீட்டு விலக்கான தீட்டுஅடையாளம் என்றதும். அம்மன் சிலையை  அங்கிருந்து எடுத்து இன்னொரு அறையில் வச்சு, மூத்த பெண்கள் வெளியில் காவலுக்கு இருக்க ஏற்பாடு செஞ்சுருக்காங்க.  மூணுநாள் இப்படி வேறொரு அறையில் தங்கிய  அம்மனை  நாலாம் நாள்  அருகில் உள்ள  ஆற்றுக்குக் கொண்டுபோய் நீராட்டி ( ஆராட்டு) அலங்கரிச்சு யானை மேல் ஏற்றி ஊர்வலமாகக் கோவிலுக்குக் கொண்டு வந்து அம்மனின் சொந்த இடத்தில்  கருவறையில் மீண்டும் வைக்கிறாங்க.   இளம் கன்னியர் பூப்பெய்ததும் நடக்கும் விழா போலத்தான்.  அம்மன்   மீண்டும் கோவிலுக்குள் வரும் சமயம்,  சிவன் வாசலில் நின்று வரவேற்று, பிரகாரங்களில் இருவரும் ஊர்வலமாகப்போய் பின்னே தனிசந்நிதிகளுக்குப்போயிருவாங்களாம்.

இந்தியாவில் வேறெங்கும் இப்படி ஒரு விழா நடப்பதே இல்லையாம். ஐ மீன் சாமிக்கு.  சாமிக்கு அதிலும் பஞ்சலோக விக்ரஹத்துக்கு இப்படியெல்லாம் நடக்குமான்னு  கேள்வி கேட்கக் கிளம்பாம  இருந்தால்  நல்லது. கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதான். இதையும் நம்பிட்டுப் போறதால் நமக்கென்ன நஷ்டம்?

மனிதன் தனக்குள்ள எல்லாமும் சாமிக்கும் இருக்கும் என்று  நம்பறான். அதனால்தானே  சாமியை மனிதரூபமாகச் செஞ்சு  நகை நட்டு, பட்டு, பீதாம்பரமுன்னு போட்டு அலங்கரிக்கிறோம். அன்பே கடவுள் என்றிருக்கும்போது சாமிக்குக் கோபம் வருமா என்ன?  ஆனால் நமக்குக் கோபம் வருதே. அதனால் சாமிக்குக் கோபம் என்கிறோம்.  சாமிக்குத்தம்  அதனால்தான் கஷ்டம் ஏற்படுதுன்னு  சொல்றோம்.  அசுரனை வதைத்த நாள்,  போருக்குப்போய் சம்ஹாரம் செய்தது,   ஜென்ம நக்ஷத்திரம் (பிறந்தநாள்) திருக்கல்யாண உற்சவங்கள்,  இப்படி எல்லாம்  நடத்தும்போது, இதையும் நடத்தினால் தப்பே இல்லை.

கொண்டாட்டங்கள் எது என்றாலும் ஊர்மக்கள், சொந்தபந்தம் எல்லாம் சேர்ந்து கூடிக்களித்து, ஆக்கித் தின்னு மகிழ்ச்சியா இருப்பதற்குத்தானே வழி செய்யுது.
ஆதிகாலத்தில்(!) மாதா மாதம் நடந்துக்கிட்டு இருந்த விழா இப்போ சில வருசங்களா வருசத்துக்கு மூணு, இல்லை நாலுமுறைன்னு நடக்குதாம். மே பி பகவதி  இஸ் கோயிங் இன்டு மெனொபாஸ்.  வருங்காலத்தில்  இந்த விழா நின்னு போனால்கூட வியப்பில்லை.   மக்கள் சிந்தனைகள் மாறிவர்றதுக்கு ஏற்பதான் கோவில்களும், சாமிகளும் இல்லையா?

இந்த சமயம் என் மனசில் ஒரு பழைய பாட்டு வந்து போச்சு. அச்சனும் பப்பயும் என்ற மலையாளப் படம் (1972) யேசுதாஸ் பாடியது. வயலார் எழுதிய அருமையான பொருள் அடங்கியது.

மனுஷ்யன் மதங்களை ச்ருஷ்டிச்சு
மதங்கள் தெய்வங்களை ச்ருஷ்டிச்சு
மனுஷ்யனும் மதங்களும் தெய்வங்களும் கூடி
மண்ணு பங்கு வச்சு, மனசு பங்குவச்சு....


உண்மைதான், இல்லை!!!!!


 இங்கே பகவதிக்கு வளை இடல் என்றொரு உற்சவமும் நடக்குது.  கோவிலின் வலைப்பக்கம் பார்த்தால்  சில படங்கள் கிடைச்சது.  அதை  சுட்டுக்கிட்டேன்.  எண்டே பகவதி... ரக்ஷிக்கணே!



இன்னொரு கதையும் இந்த பகவதிக்கு இருக்கு. இந்த பகவதிதான் சிலப்பதிகாரத்துக் கண்ணகிஎன்பவர்களும் உண்டு. மதுரை மாநகரை தீக்கிரையாக்கிட்டு அங்கிருந்து விடுவிடுன்னு நடந்து  இங்கே வந்து இந்தச் செங்குன்றுமேல் ஒரு மரத்தடியில்  நின்னு தவம் செய்தாள். அப்பதான் கோவலன், இந்திரனுடைய  புஷ்பக விமானத்தில் வந்து அவளை தேவலோகம் கொண்டு சென்றான் என்று ஒரு கதை. இதே கதையை கொடுங்கல்லூர் பகவதிக்கும் சொல்றாங்க.



பகலில் வந்துருந்தால் கோவிலை இன்னும் நல்லாப் பார்த்திருக்கலாமேன்னு மனசுஅடிச்சுக்கிச்சுதான்......

ஆட்டோ ஸ்டேண்டுக்கு வந்து ஒரு வண்டி எடுத்துக்கிட்டு  மூணு பேரும் கிளம்பினோம். அப்போ ஆட்டோக்காரரிடம், நல்ல வெஜிடேரியன் ஹோட்டல் இருக்கான்னு விசாரிச்சதில்  நம்மை நேரா ஆர்யாஸ்க்குக் கொண்டு விட்டார். லோக்கல் லேங்குவேஜ் தெரிஞ்சிருப்பதால் பயணம் ரொம்பவே சுலபமாத்தான் இருக்கு.

நம்ம திருநெல்வேலி ஆர்யாஸ் தானாம். கல்லாவில் இருந்த தின்னேலிக்காரர்  சொன்னார். எங்களுக்கு  ஸ்பெஷல் தோசை. நல்லாவே இருந்துச்சு.

 நூற்றியெட்டு திவ்ய தேசக்கோவில்களில்  சேரநாட்டுலே  பதிமூணு இருக்கு.  இதுலே ரெண்டு கோவில்களை (திருவனந்தபுரம்,திருவட்டாறு) முந்தையப் பயணங்களில் தரிசனம் செஞ்சுட்டதால்  மீதி இருக்கும் பதினொரு கோவில்களை இந்தப் பயணத்தில் தரிசிக்கத்தான் வந்துருக்கோம். இதில் செங்கண்ணூரைச் சுத்தியே அஞ்சு கோவில்கள் இருக்கு. மறுநாள்  என்ன பார்க்கலாமுன்னு  கொண்டு போயிருந்த  விவரங்களை கோபால் ஒரு பக்கம் பார்க்க, நான் இந்தமுறை மறக்காமல் கையோடு கொண்டு போயிருந்த  '108 வைஷ்ணவ திருத்தல மகிமை' (நர்மதா வெளியீடு) புத்தகத்தையும் எடுத்துப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.


கண்டிப்பா ஆண்கள் வேஷ்டி கட்டணும் என்று இருந்தால் சீனிவாசன்  உள்ளே வரமுடியாதேன்னு  அவரிடம் வேஷ்டி கொண்டு வந்தீங்களான்னு கேட்டால்.... இல்லையாம்.  லுங்கி வச்சுருக்காராம். பக்கத்துலே இருந்த துணிக்கடைக்குள் நுழைஞ்சு  ஒரு வேஷ்டி வாங்கிக்கொடுத்தோம்.அப்ப கடைக்காரர்  ராமேந்திரனுடன் இத்திரி ஸம்பாஷணம்.

ரொம்ப ஆர்வமா விவரம் சொன்னாங்க, அவருடன்  பேசிக்கிட்டு இருந்த நண்பர்கள் இருவரும்கூட.

செங்கண்ணூர் கோவில்களில் என்னென்ன பார்த்தீங்கன்னு  கேட்டாங்க. த்ருப்புலியூர்  மாத்ரம் என்றேன்.  பஞ்சபாண்டவர்கள்  இங்கே வந்துருந்தபோது ஆளுக்கொரு கோவில் கட்டுனாங்க. நீங்க பார்த்தது பீமன் கட்டியது. மற்ற நாலண்ணம் என்னென்னன்னு  சொல்லிட்டு, குந்தி கூட ஒரு கோவில் கட்டி இருக்காங்கன்னு புதுத்தகவல் ஒன்னும் சொன்னாங்க. எங்கேன்னு கேட்டதுக்கு மூணுபேருமா, தலையைச் சொறிஞ்சு யோசிச்சுக்கிட்டே நின்னாங்க:-)

ஆதித்யபுரம் சூரியன் கோவிலைச் சொல்றாங்க  போல. இது குந்தி,  கர்ணனுக்காகக் கட்டியதுன்னு   ரொம்ப காலத்துக்கு முன் எங்கோ வாசிச்ச நினைவு. போகமுடியுமான்னு தெரியலை. பார்க்கலாம்.

இன்னொரு ஆட்டோ பிடிச்சு மூவரும் பகவத் கார்டன்ஸ் வந்தோம். மூணே நிமிசத்தில் கொண்டு வந்து விட்டுட்டார். பேசாம நடந்தே வந்திருக்கலாமோ!  ஆனால்  இருட்டில் வழி?

நாளைக்குக் காலையில் ஆறுமணிக்குக் கிளம்பி கோவிலுக்குப்போய் வந்துட்டு  ப்ரேக்ஃபாஸ்ட்க்கு ஆர்யாஸுக்குப் போகலாம், கேட்டோ!

தொடரும்...........:-)



ராசாவை இப்படிக் கையேந்திப் பிச்சை எடுக்க வச்சுட்டாங்கப்பா:(

$
0
0
வடை வேணுமான்னு  கேட்டுருக்கலாம்,  ஒரானா போகலாமான்னு கேட்டதுக்குப் பதிலா!  கடைசியாப் போய் ஒரு  பதினேழு பதினெட்டு வருசமாகி இருக்கலாம்.  எப்போன்னு கேட்டதுக்கு  அடுத்த ஞாயிறுன்னார்.  அன்றைக்கு வேறேதும் நிகழ்ச்சி இல்லைன்னு உறுதிப்படுத்திக்கிட்டு, பெயர் கொடுத்துருங்கன்னேன்.  ஆஃபீஸ் ஓசி டிக்கெட் கொடுக்குது:-)  NZ Plastic  ஏற்பாடு செஞ்சுருக்கும் ஃபேமிலி டே & பிக்னிக்.  கோபாலோட  கம்பெனியும் இதுலே அங்கம் என்பதால்  இங்கிருக்கும் மக்களுக்கு அழைப்பு அனுப்பி இருக்காங்க.

பத்து மணிக்கு பார்க் திறக்கறாங்க. சல்லியமா விட்டுவிட்டு மழை வேற.  இன்னிக்கு  நிகழ்ச்சி இருக்கா இல்லையான்னு சம்ஸயம் வேற.  பத்து மணி போல் வானம் வெளிறினதும்  போய்த்தான் பார்க்கலாமுன்னு கிளம்பிப்போறோம்.

நம்மூர்  ஏர்ப்போர்ட்டின்  வலதுகை   ரன்வே  ஆரம்பிக்கும் இடத்தில் லெஃப்ட் எடுத்து  உள்ளே போகணும். நம்ம வீட்டில் இருந்து ஒரு 17 கிமீ தொலைவில்  இருக்கு இந்த  ஒரானா  வொய்ல்ட்லைஃப் பார்க்.


மொத்தம் 80 ஹெக்டேர் (197 Acre) நிலம்.  NZ's only open range Zoo.  1970 வது ஆண்டு திட்டம் தீட்டத்தொடங்கி  அடுத்த ஆறு ஆண்டுகளில் (1976) Zoo  ஆரம்பிச்சு இப்போ  39  வருஷம் ஆகுது.

நம்ம நியூஸி தவிர நாலு கண்டத்து உயிர்கள்,   அஸ்ட்ராலியா, ஆசியா, ஆஃப்ரிகா,  அமெரிகான்னு.  இதுலே(யும் ) ஆசியர்களே அதிகம்!


இந்த பார்க் பற்றியும்  மீர்கேட்ஸ் பற்றியும்போட்ட பதிவு இது. திரும்ப எழுதவேணாமேன்னு சுட்டி கொடுத்துருக்கேன். இது எழுதி  மூணே வருசம் தான் ஆச்சு. இப்போ விலைவாசிகள் ஏறிப்போனதால் கட்டணங்களுக்கும்  ஏற்றம் வந்தாச்சு.  முந்தி ஒரு காலத்தில்  Friend of Orana என்ற அமைப்பில்  மெம்பர்ஷிப் எடுத்திருந்தோம். அதுலே வருசத்துக்கு ஒரு கட்டணம் கட்டுனால் போதும். ஜூலை முதல் அடுத்த ஜூன்வரை  எத்தனை முறை வேணுமானாலும் இங்கே வந்து போகலாம். குடும்பத்துக்கு  எம்பது டாலர்தான். இப்ப அதுவும் ஏறிப்போச்.




போய்ச்சேரும்போதே பத்தரை மணி.  கம்பெனி  கூட்டங்களுக்குத் தனி கவுண்ட்டர் வச்சுருந்தாங்க. பெயரைச் சொன்னதும்  எழுதிக்கிட்டு, நீலப்பட்டை ஒன்னை கையில் கட்டிக்கக் கொடுத்தாங்க. கூடவே பார்க்கின்  வரைபடம் ஒன்னு. அவ்ளோதான்.  உள்ளே போறோம்.  ஆரம்ப வரவேற்பே  நம்ம மீர்கேட்ஸ்கள்தான். ஒருவிநாடி கூட ஒரு இடத்துலே நிக்காம பயங்கரபிஸி ஒவ்வொன்னும். அப்பப்ப ரெண்டு காலில்  நின்னு தூரத்துலஏன்ன நடக்குது, எதிரி வர்றானான்னு பார்த்துக்கணும் போல!



  'நிக்கமுடியலை போ'ன்னு ஒன்னு கல்லு மேலே ஏறி உக்கார்ந்துருக்கு:-)

பத்தே முக்காலுக்கு ஃபீடிங் டைம் ஃபார் ஓட்டர்ஸ்.   அங்கே போனால் நாலுபேர்.  'நண்பேண்டா'ன்னு ஒன்னாவே போறதும், ஒன்னாவே உக்கார்றதும்,  மரத்தண்டு மேலே ஏறுவதுமா இருக்காங்க.  பார்க்கில்  வேலை செய்யும் நபர்களையும், தன்னார்வத்தொண்டர்களையும்  நல்லாவே அடையாளம் தெரியுது.  இன்றைக்கு  நம்மோடு இருந்த ஏவர்லீ யைப் பார்த்ததும் நாலு ஜோடிக் கண்கள்   அவுங்க மேலே மட்டுமே. எந்தத் திசை போறாங்களோ அங்கே பார்வை தன்னாலே போகுது.ஆனாலும் அறிவுக்காரப் பசங்களா இருக்கானுங்க.






இன்னிக்கு சாப்பாடு கொஞ்சம் லேட். பேபி ஸால்மன் மீன்கள்தான் கொடுக்கறாங்களாம்.  இதோ வந்துட்டாங்க  பக்கெட் மீன்களோடு.  நாலும் மரத்தண்டிலேறி நின்னு ரெண்டு கையையும் நீட்டி மீனை வாங்கி வாயில் போட்டுக்குதுங்க!  அடச் செல்லங்களா!

அடுத்து 11.15க்கு  சாப்பாடு கொடுக்கப்போறது கியா பறவைகளுக்கு.  இது நியூஸின் விசேஷப்  பறவை.  பாதுகாக்கப்பட்ட இனம். பருந்து சைஸில் இருக்கும்  மலைக்கிளின்னு சொல்லிக்கலாம். மூக்கு  நல்லா வளைஞ்சு பயங்கரக் கூர்மை. தோல் பொருட்கள், ரப்பர் சமாச்சாரமெல்லாம் ரொம்பப்பிடிக்கும்.  தெற்குத்தீவின் காடுகளுக்கு நாம் போறோம். வண்டியை பார்க்கிங்கில் விட்டுட்டுப்போய்  திரும்பி வர்றதுக்குள்ளே  கார் ஜன்னலில் இருக்கும்  ரப்பர் லைனிங் ஒன்னும் ஆகாம இருந்தால் நீங்க ரொம்பவே அதிர்ஷ்டசாலி!

நம்ம கோபாலின் லெதர் ஷூ பிடிச்சுப்போச்சு போல. மெள்ளவந்து லேஸை இழுத்து முடிச்சை அவிழ்த்திட்டு கடிச்சுப் பார்த்தது ஒன்னு.இன்னொன்னு ஒரு பையனுடைய தலைமேல் போய் உக்கார்ந்ததும், நீங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்னு சொன்னேன்:-)

இங்கே  மேலேயும் எல்லாப் பக்கங்களைச் சுற்றிலும் வலைக்கம்பி அடிச்சு வச்ச ஏவியரிக்குள்ளே இருக்குதுங்க.இந்தப் பறவைகளின் இறக்கைக்கு உட்புறம் ரொம்பவே அழகான ஆரஞ்சு நிறம். எனக்கு எப்பவும் ரொம்பப்பிடிக்கும்.  மனிதர்களோடு பழகிட்டா அச்சு அசல் கிளி தான்.

 உணவூட்டுபவர் சொன்னதெல்லாம் கேக்குது. சின்னக் கல்லைக் காமிச்சு தூக்கிப்போடுன்னால்  அலகால் கவ்வி எடுத்து தூரக்கே வீசுது. பேசாம இதுகளை வச்சு கிளி ஜோஸியம் பார்க்கலாம்.  ஆளுக்குப் பத்து டாலர்னு சொல்லி வசூலிச்சு சீட்டு எடுத்துக் கொடுக்கச் சொன்னால்  எடுத்துக் கொடுக்காதா என்ன? எப்படி நம்ம பிஸினெஸ் மைண்ட்:-))))

ஒரு சின்ன வீடியோ க்ளிப் எடுத்து யூ ட்யூபில் போட்டுருக்கேன். அஞ்சு நிமிசம்தான்.  முடிஞ்சால் பாருங்க.நல்லா இருக்காங்களேன்னு சொல்லிட்டு எங்க நாட்டு ஸ்பெஷல் கிவி பறவைக்கு வந்துருந்தோம். இது இரவு நேரப்பறவை. வெளிச்சமே பிடிக்காதுன்னாலும் நமக்காக வெளியில் நின்னுக்கிட்டு இருந்தது. பழசுதான். ஆனாலும்  பராமரிப்பு சரியாக இருக்கு.

நியூஸிக்கே சொந்தமான  tuatara, gecko species இருக்கும் கட்டிடத்துக்குள்ளே வேலை நடப்பதால் கண்ணாடிக் கூண்டுகள் காலி. Bell Frog என்னும்  ஒரே ஒரு  தவளை மட்டும் (தேரை போல இருக்கு) ஊஞ்சலில் உக்கார்ந்துருச்சு.

பதினொன்னரைக்கு  ப்ளாக் அண்ட் ஒயிட் ரஃப்டு லெமூர்க்கு சாப்பாடு. குரங்கினம்தான். மடகாஸ்கர் தீவுக்காரங்க. சின்ன நாய் மூஞ்சு. விரல்கள் எல்லாம் நீளநீளமா இருக்கு. இதுகளுக்குச் சாப்பாடு நாம் கூடக் கொடுக்கலாம். ஆளுக்கு நாப்பது டாலர் கட்டணம்.  ஒருநாளைக்கு நாலு டிக்கெட் மட்டும்தான் .




மடிமேல் வந்து உக்கார்ந்து கைநீட்டி வாங்கித்தின்னும்போது பார்க்க வேடிக்கையாவும் அழகாவுமிருக்கு.. மூணு பேர்  தீவுக்கு உள்ளே போய் உக்கார்ந்துருந்தாங்க. விரைவாக அழிஞ்சு வரும் இனம் என்பதால் கவனிப்பு இங்கே அதிகமா இருக்கு.

இவ்ளோ பெருசா தெரியும் உடம்பு நம்ம வீட்டில் ரஜ்ஜுவுக்கு வச்சுருக்கும் சைஸிலுள்ள கேட் டோர்  வழியாக  அதுக்கான கட்டடத்துக்குள்ளே போய் வருது!!!




சுமித்ரன் டைகர்ஸ். இதுவும் அழிஞ்சுக்கிட்டு இருக்கும் இனம்தானாம்:(  கம்பிவலைத்தடுப்புப் போட்ட தனித்தனிப் பகுதிகளில் இருக்காங்க  ரெண்டு பேர்.  ஆனாலும் நம்மை  விசாரிச்சுட்டுப்போக   வந்தவங்களை ஒரே ஃப்ரேமில் பிடிக்க முயற்சி செஞ்சேன்:-) இன்னொரு லுக் அவுட்டில் இருந்து பார்த்தால் இன்னும் ரெண்டு பேர் இருந்தாங்க.

ஈமு கோழி(?!)களைக் கடந்து டாஸ்மானியன் டெவில்ஸ். அண்டை நாட்டு சொந்தம். மெல்பேர்ன் Zooவில் இருந்து இப்ப கிறிஸ்மஸ் பண்டிகைக்குக் கொஞ்சம் முன்னாலே இந்த நாலுபேர்  (Evelyn, Harris, Brodie and Pumba) வந்துருக்காங்க. ஆயுசு இதுகளுக்கு வெறும் ஏழே வருசமாமே!  ப்ச்....

சிங்கவீட்டைப் பார்த்ததும்தான்  உள்ளே போக டிக்கெட் வாங்கிக்கலையேன்னு  நினைவுக்கு வந்துச்சு. ரெண்டு மணிக்குள்ளே வாங்கினால் ஆச்சுன்னு  நம்மவர் சொன்னாலும் டிக்கெட் சீக்கிரம் வித்துப்போகுமுன்னு  வாசிச்சது ஞாபகம் வந்துச்சேன்னு  வேக நடையில்  பார்க் முகப்பில்  இருக்கும் டிக்கெட் கவுண்டருக்கு வந்தோம்.  ஆல்ரெடி ஸோல்ட் அவுட்.  மணி பனிரெண்டேகால்தான் . அதுக்குள்ளே....   நெவர் மைண்ட் நெக்ஸ்ட் டைம் .

ஒருநாளைக்கு 20 நபர்கள்  மட்டுமே சிங்கவீட்டுக்குள் போகமுடியும். உயரம் 1.4 மீட்டருக்குக் குறைவாக இருந்தால் அனுமதி இல்லை. ஆளுக்கு 40 டாலர் கட்டணம்.  ரெண்டுமணிக்கெல்லாம்  குறிப்பிட்ட இடத்துக்கு வந்துட்டால்  ரெண்டரைக்கு சிங்க வீட்டுக்குள்ளே போகலாம்.

இந்த டிக்கெட்டை நாம் பரிசுப்பொருளாவும் கொடுக்க முடியும்:-) கிஃப்ட் வவுச்சர். முன்கூட்டியே வாங்கி வச்சு நமக்குப் பிடிக்காதவங்களுக்குக் கொடுத்துட்டோமுன்னா... அவுங்க  சிங்க வீட்டுக்குள் போனதும்  அது அடிச்சுத் தின்னுரும்.நமக்கும் தொல்லை விட்டது:-))))

லஞ்சு டைம் ஆகிருச்சேன்னு  அங்கே இருந்த  'ரெஸ்ட்டாரன்ட்'டில்  ஆளுக்கொரு ஸாண்ட்விச்சு வாங்கித்தின்னுட்டு,  ஆளுக்கொரு ஐஸ்க்ரீம் வாங்கிக்கிட்டு வெளியே போட்டுருக்கும் இருக்கைகளுக்குப்போய்  ஒட்டைச்சிவிங்கியைப் பார்த்தாப்போல் உக்கார்ந்தோம்.

 முந்தி இங்கே 'ஸெரங்கேட்டி  Serengeti 'ன்னு  ஒரு ரெஸ்ட்டாரன்ட்  இருந்துச்சு.  தீவு போன்ற அமைப்பில் ஒரு பாலம் கடந்து அங்கே  போவோம். இப்ப அதைக் காணோம்!

உறியில் வச்சுருக்கும் வெண்ணெயை எடுக்கும் வகையில்  தூக்கி மாட்டி இருக்கும்  கம்பிவலைப்பொட்டியில் இருந்து  வைக்கோல் மாதிரியான காய்ஞ்ச புற்களை  நாக்கை நீட்டித் துழாவி எடுத்துத் தின்னுக்கிட்டு இருந்துச்சு ஒன்னு.

தரையில் இருக்கும் புல்லைத் தின்னக்கூடாதான்னு கோபால் சொல்லிக்கிட்டு இருந்தப்ப, நீண்ட கால்களும் கழுத்துமா இருக்கும்போது குனிஞ்சு தின்னக் கஷ்டமுன்னு நான் பதில் சொல்லிக்கிட்டு இருக்கும்போதே.... 'யூ ஆர்  ரைட் துள்சி 'என்பதைப்போல்  நின்னுக்கிட்டு இருந்த ஒன்னு தரையில் கால் மடிச்சு உக்கார்ந்து. கழுத்தை நீட்டித்  தலையை மட்டும் கொஞ்சதூரத்துக்குக் கொண்டுபோய் புல்லைக் கடிச்சுக் காமிச்சது:-))))


இங்கே  அஞ்சு நாட்டு உயிர்கள் இருக்குன்னாலும்...ஆஃப்ரிகா வகைகள்தான் அநேகம். நல்ல சூடான தேசத்துலே இருந்து இப்படிக் குளிரான ஊருக்குக் கொண்டு வந்து  உன் இனம் அழியாமக் காப்பாத்தறோமுன்னு  பெருமை அடிச்சுக்கிட்டாலும்....  பாவம் அவைகள்.  சாப்பாடு போட்டால் மட்டும் ஆச்சா? உள்ளூர் காலநிலை உடலுக்கு ஒத்துப்போய்  புது வாழ்வு தொடங்க அதுகளுக்கும்தானே  கஷ்டம் இல்லையா?

இந்த அழகில் குடும்பம் நடத்திப் பெத்துப்போடுன்னா?  ஐயோ.....

இதனால் எதாவது புதுக்குழந்தை பொறந்துட்டா ஊரே கொண்டாடும். குழந்தைன்னா... சும்மாவா?

பொறந்தாலும் சரி, போனாலும் சரி எங்களுக்குப் பெரிய செய்திதான் கேட்டோ!.ஒருபத்திரிகை விடாமல் சேதி வந்துரும். ( இருப்பதே ஒரே ஒரு தினசரிதான்! காசுகொடுத்து வாங்கும் வகை. ஞாயித்துக்கிழமை இதுவும் வராது. அன்னைக்கு லீவு! )  இது இல்லாமல் ஓசி பேப்பரா வாரம்  மூணு,   எல்லார் வீட்டுக்கும் தபால்பெட்டியில் போட்டுட்டுப் போயிருவாங்க. இதுவும் காசு பத்திரிகையில் வந்த சேதியைக் காப்பி பண்ணிப் போட்டுரும்.

வெள்ளைக்  காண்டா மிருகம் பெயர் Tamu.  17 மாச கர்ப்பகாலம் முடிஞ்சு  ,  காதலர் தினத்துலே குட்டி போட்டுருக்கு. இன்னும் பேர் வைக்கலை. அதுக்கும் விளம்பரம் பண்ணி ஊர் மக்களைக் கேட்டு ஒன்னு  தேர்ந்தெடுப்பாங்க. அன்னைக்கு அது 22  நாள் குட்டி. அம்மாவை ஒட்டிக்கிட்டே நிக்குது.  சோறு கண்ட இடம் சொர்க்கம்!  பிள்ளைகளுக்குத் தாயின் தேவை வேண்டித்தான் இருக்கு, வளரும்வரை!



சிறுத்தைகள்  இருக்குமிடத்துக்குப் போனோம். பழைய பசங்க  இப்ப பெரியாளா ஆகிட்டானுங்க.

மூணு பையன், ஒரு பொண்ணுன்னு புதுபிள்ளைகள் நாலு பொறந்துருக்கு. Matata, Kanzi, Gorse and Nia (3 boys and 1 girl), எல்லாம் மூணு மாசக்குட்டிகள்.  பிள்ளைகளை இடம் மாற்றி  சிங்க வீட்டுக்குப் பக்கத்தில் வச்சுருந்தாங்க. பொண்ணு ரொம்ப  'ஷை'என்பதால்   ரூமுக்குள்ளே இருந்துச்சு. சிறுத்தைக்குட்டியா இருந்தாலும் பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா வளரணும் போல!  பசங்க மட்டும்  வெளியே உலாத்தல்.

திபேத்தியன் யாக் இருக்கு. எல்லாம்  ரொம்பவே ரிலாக்ஸா உக்கார்ந்துருக்குதுகள். இந்த  இனத்தில் க்ராஸ் ப்ரீட் செஞ்சு பிறந்ததுதான் நாம்  ரெண்டு வருசத்துக்கு முன்னால் சுநிதாவின் வீட்டில் பார்த்த பேட் மேன்:-)

வரிக்குதிரைகள் அழகோ அழகு! எனக்கு ரொம்பவே பிடிக்கும்!





எங்கூர் கால நிலை யானைக்குச் சரிப்படாது என்றாலும் கூட இன்றைக்கு ரெண்டு யானைகள் அங்கே:-)))

வாட்டர் பக்  ஒரு ஜோடி. ஆனால் ரொம்பவே இடைவெளிவிட்டு உக்கார்ந்துருக்காங்க. சண்டையோஎன்னவோ!







வாட்டர் பஃபெல்லோவாம்.  நம்மூர் எருமைகள் இல்லையோ!  இதன் கொம்பை , காண்டாமிருகம் கொம்புன்னு சொல்லி ஏமாத்தி விற்கும் கூட்டமொன்னு இருக்காமே!!! காட்டெருமைகளை மனிதன் பழக்கி வீட்டெருமைகளா மாத்தி இப்போ அஞ்சாயிரம் வருஷமாகுதாம்! கிட்டத்தட்ட 16 கோடி வீட்டெருமைகள்.   இன்னும் 4000  காட்டு எருமைகள்  தனி இனமாவே இருக்காமே!  இந்தப்புள்ளிவிவரங்கள் எல்லாம் அங்கங்கே வச்சுருக்காங்க.

மணி  ரெண்டாகுதேன்னு  சிங்க வீட்டுக்கு வந்தோம்.  உள்ளே போகமுடியலைன்னாலும் வெளியே இருந்து வேடிக்கை பார்க்கத் தோதா மேடை கட்டி விட்டுருக்காங்க. அப்போ சுற்றுலாப்பயணிகள் கூட்டம் ஒன்னு கொஞ்ச தூரத்துலே போய்க்கிட்டு இருப்பதைப் பார்த்தேன்.  இந்தியர்கள். உடைகள் சொல்லிருச்சே!

ரெண்டரைக்கு  லயன் என்கௌண்ட்டர். காத்துக்கிட்டு இருந்தோம். மேடையில் கூட்டம் சேர ஆரம்பிச்சது. தூரக்கே ஒரு  கூட்டம் படுத்திருப்பதை  காலையில் பார்த்திருந்தோமே...  அவைகளில் ஒரு பெரியவர் மட்டும் மெள்ள எழுந்து வந்து நம்ம மேடைக்கு வலதுபக்கம் இருந்த மர நிழலில்  உக்கார்ந்தார். கொஞ்ச நேரத்தில் இன்னொன்னு மெதுவா வந்து சேர்ந்துச்சு. இப்படியே மெள்ள மெள்ள அங்கிருந்த ஏழு பேரும் இங்கே வந்து சேர்ந்தாங்க.மணி அப்போ ரெண்டேகால்.

ரெண்டரைக்குச் சாப்பாடுன்னு  தெரிஞ்சுருக்கும்தான். ஆனால் இப்ப மணி ரெண்டரை ஆகப்போகுதுன்னு எப்படித் தெரியும் ?

ஒன்னு ரெண்டு வந்து நம்ம பக்கக் கம்பிவலைக்கு அப்புறத்தில் நின்னு ஏறிட்டுப் பார்த்தன.  'இன்றைய லஞ்சு நான் இல்லையாக்கும்'கேட்டோ!

ஆச்சு மணி ரெண்டரை. ஒரு பெரிய கூண்டுக்குள்  மனிதர்களை ஏற்றி இருந்தாங்க. முழு வண்டியுமே ட்ரைவர் கேபின் உட்பட  கம்பிக் கூண்டுக்குள்ளே!  உள்ளே  'அந்த'இந்தியர்கள். 20 நபர்களுக்கு மட்டும் அனுமதி என்பதால் பாக்கி ஆட்கள் நம்ம மேடையில்!  எல்லாம், ச்சூஸ்கொண்டி,  மனவாளே:-)

இதோ உங்களுக்காக நான் புடிச்சாந்த வீடியோ!  (காப்பி ரைட்டு யாரும் கிளம்பாம இருக்கணுமே, பெருமாளே !)

காட்டுக்கே  ராசா.  ஒரு பெரிய மிருகத்தை அடிச்சு அப்படியே கடிச்சுத் தின்னால்தான் சாப்பிட்ட திருப்தி இருக்கும். ஆனால் பிச்சைக்காரன் போல கையேந்த வச்சுட்டாங்களேன்னு எப்பவும் போல என் மனசு அடிச்சுக்கிச்சு என்பதே உண்மை. அதை நம்ம ஏவர்லீ யிடம்(வாலண்டியராக இங்கே  வீக் எண்டில் வந்து வேலை செய்யறாங்க) சொல்லிப் புலம்பினேன். ஒவ்வொரு முறை இங்கே வரும்போதும் நான் இப்படிப் புலம்புவதற்கு,  வழக்கமாக் கிடைக்கும் பதில்தான் இப்பவும்.

 "இது சும்மா  ஒரு ஸ்நாக் போலத்தான். விஸிட்டர்ஸ்கள்  பார்க்கட்டுமேன்னு . மாலையில் ஆளுக்கு  அஞ்சாறுகிலோ பெரிய துண்டு  இறைச்சியைக் கொடுப்போம்.  ஆனால் ஒருநாள் விட்டு  ஒருநாள்தான் சாப்பாடு. தினம் சாப்பிட்டால் ஜீரணமாறதில்லை"

அதானே....நாளுக்கு 20 மணி நேரம் தூங்குனா எப்படி செரிக்கும், இல்லே!

கூண்டுக்குப்பின் ஓடியவர்கள் எல்லோரும் பெண்களே. ராசா கூண்டின் மேலே ஏறி நின்னுக்கிட்டு இருந்தார்.  இப்பெல்லாம்  தலைவாரிப்  பின்னிக்கக் கஷ்டம் போல ! தாடியும் காணோம். க்ளீன் ஷேவ்!  எதுக்கு இப்படின்னா..... ஒரே குடும்பத்தில்  உறவு கூடாது என்பதற்காகவாம். மொட்டை அடிச்சுக்கிட்டவுடன், தான் ஒரு ஆண் என்பதையே  ராசா மறந்துருவாரோ என்னவோ!

இங்கே 20 சிங்கங்கள் இருந்து இப்போ  13  ஆகக் குறைஞ்சுபோச்சு:(  அடுத்த  வீட்டில் இன்னும் சிலர்  உள்ளே இருந்தாங்க. சிலர் வெயிலில் படுத்து நல்ல உறக்கத்திலும்.

பொதுவாக் காட்டில் பெண் சிங்கங்கள் போய் வேட்டையாடிக்கொண்டு வந்ததைத்தான் கூட்டத் தலைவர் சாப்பிடுவார். அதுவும் முதலில். இங்கேயும் அது மட்டும் மறக்கலை. நாந்தான் பொண்களிடம், 'இன்றைக்கு விமன்ஸ் டே. நீங்க மொதல்லே சாப்பிடுங்கடீ'ன்னா.... கேக்கலையே:(

ரொம்ப அதிக அளவில் மிருகங்கள் இல்லை . 80 ஹெக்டேரில் 400 எண்ணிக்கை.  இதில் வாத்துகளும் அன்னங்களும் அடக்கமே! ஆனா எல்லோருக்கும் வசதியா   நடமாட  ஏராளமான இடங்கள்  பிரிச்சுக் கொடுத்துருக்காங்க.

எங்கே பார்த்தாலும் நீர்நிலைகளும்  தெளிவான தண்ணீருமா அருமை. நிறைய நடந்தாச்சு. ஷட்டிலில் ஏறவே இல்லை. ஒரு மாசத்துக்கான நடை. சுமார் அஞ்சு மணி நேரம் .

காருக்குள்ளே வந்து உக்கார்ந்ததும் கால் வலின்னு முணங்கினேன்:-))))



தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கணுமாமே!.... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 30)

$
0
0
இன்னும் இந்த ஊரில் நாலு கோவில்கள் பார்க்கணும்.  எல்லாத்தையும்  மதியத்துக்குள்ளே முடிச்சுட்டால்  வேற ஊருக்குப் போயிடலாம். கோவில்கள் எல்லாம் இங்கே அதிகாலை  நாலு நாலரைன்னு திறந்துடறாங்க. நம்மூர் கோவில்கள் பகல் 12க்கு அடைப்பதைப்போல் இல்லாமல்  காலை பத்து, பதினொன்னு இப்படி....

நேத்தே  வலையில் பார்த்து  கோவில் நேரங்களை க் குறிச்சு வச்சுக்கிட்டோம். அதுக்காக காலை நாலு மணிக்குப் போவதெல்லாம் டூ மச். ஆறுமணிக்குக் கிளம்பினாலும் போதும் என்ற கணக்கு.

நான் நாலரைக்கே எழுந்து குளிச்சு முடிச்சுத் தயாராகிட்டேன். கோபாலும் கொஞ்ச நேரத்தில் ரெடி. அஞ்சரைக்கு சீனிவாசனை செல்லில் கூப்பிட்டு ரெடியான்னு கேட்டால்.....  'பாத்ரூம் இருப்பது வெளிப்புறத்தில். ஆனால் சரி இல்லை'ன்னு சொன்னார். இது மூணு நட்சத்திர ஹொட்டேலுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க!  பேசாம மாடியில் நம்ம  அறைக்கு வந்து குளிச்சிருங்கன்னதும் தயக்கத்தோடு வந்தார்.

ஆறேகாலுக்குக் கிளம்பிட்டோம். திருச்சிட்டாறு  என்ற இடத்துக்குப் போறோம்.  எதுக்கும் இருக்கட்டுமுன்னு வழியில்  பார்த்த ஒருவரிடம் வழி கேட்டோம். முதலில்  நாம்கேட்ட திருச்சிட்டாறு அவருக்குப் புரியலை.  கொஞ்சம் விளக்கிச் சொன்னதோடு  தருமன்  என்றதும்,  'ஓ  அதோ? ட்ரிச்சிட்டாட்டு   மஹாவிஷ்ணு அல்லே! வளரே அடுத்தாணு. ஒரு அரை கிலோமீட்டர்  நேராயிட்டு ஈவழி போயிட்டு பின்னே இடத்து வசத்தே ஒரு கிலோ மீட்டர் போயால் மதி 'என்றார்.


அதே போல் ஆச்சு.  இந்தப்  பேட்டைக்குக்கு  முண்டன்காவு என்ற பெயர். அலங்காரதோரண வாசல் கடந்து  இதோ கோவிலுக்கு முன்வாசலில்  நிக்கறோம். நூத்தியெட்டு திவ்யதேசக்கோவில்களின் வரிசையில் இதற்கு  அறுபத்திநாலாவது இடம். கோவிலின் தீர்த்தமா இருப்பது சிற்றாறு என்ற ஆறேதான். கோவில்குளமொன்னும்  இருக்கு. பார்க்கிங் என்று தனியா ஒன்னும் இல்லை. வண்டியை இங்கேயே நிறுத்திக்கிட்டோம், இந்தக் குளத்தையொட்டியே.  இதைக்கடந்து இருக்கும் காம்பவுண்ட்க்குள்ளில் போனால் கோவில்.

ரொம்பவே பழைய கோவிலா இருக்கு. அவ்வளவாக  பராமரிப்பு இல்லைன்னு தோணல். கொடிமரம் பலிபீடம் கடந்து  முன்னால் இருக்கும் சின்ன  உம்மரம் கடந்து உள்ளே போறோம். திண்ணகள் இருபுறமும் இருக்க  ஒரு நடை.  அது கடந்து  சின்னதா ஒரு  திண்ணை மண்டபம்.  அப்புறத்தே கருவறை.  அதே அஞ்சு படிகள் ஏறிப்போகணும், பட்டர்.

உள்ளே நின்ற கோலத்தில் இமயவரப்பன். மேற்கு பார்த்து இருக்கார். சிவனுக்கு தரிசனம் கொடுத்தவர்! தாயார் பெயர்  செங்கமலவல்லி. கோவிலில் பட்டரைத் தவிர வேற யாருமில்லை. அவரும் பிரகாரத்தின் பின்புறமிருக்கும்   கதவுக்கருகில் எதோ வேலையாக இருந்தார். நமக்கு ஏகாந்த தரிசனம் லபிச்சது.  மினுமினுக்கும் நெய் விளக்கில் ஜொலிக்கும் பெருமாள்.  சின்ன திருவுருவம்தான். ரெண்டரை  அடி உசரம் இருந்தால் அதிகம்.

நன்றி:  கூகுளாண்டவர் அருளிச்செய்த  திருச்செங்குன்றூர் கருவறைப் படங்கள்.


நிம்மதியாக் கும்பிட்டு முடிச்சு பிரகாரத்தை வலம் வந்தோம். வட்டக் கருவறைதான் இங்கும்.



பாரதப்போர் முடிஞ்சது.  தருமனுக்கு முடி சூட்டியாச்சு. பாண்டவர்கள்   அஸ்தினாபுரியை   ஆண்டு வர்றாங்க.  தருமனுக்கு ஒரே குற்ற உணர்வு. தான் சொன்ன  பொய்யால்தான்   குரு த்ரோணர்   உயிரிழக்க நேர்ந்தது.  என்ன இருந்தாலும் அசுவத்தாமா (என்ற யானை)இறந்தது உண்மை என்று  சொல்லி இருந்துருக்கக்கூடாது. சொல்லிட்டேனே.....  பாவமன்னிப்பு  வேண்டி தல யாத்திரை போனால் மனசுக்கு நிம்மதி கிடைக்கும் என்று கிளம்பறார்.  அண்னனை விட்டுப்பிரிய மனமில்லாமல்  ஐவரும் கூடவே வர்றாங்க.  அப்போதான் ஆளுக்கு ஒரு கோவிலா  இந்தப்பகுதியில் கட்டி இருக்காங்க. கருவறை எல்லாம் ஒரே ஸ்டைல். அதைத்தான்   அவுங்க கட்டி இருப்பாங்க. இப்போ இருக்கும்  முன்பக்க மண்டபங்கள், மற்ற  அமைப்புகள் எல்லாம்  கலிகாலத்தில் கட்டுனதாக இருக்கணும்.   இந்த இமயவரம்பர் கோவிலைக் கட்டுனது   யுதிஷ்ட்டிரர். (தருமர்.)

செய்த தவறுக்கு  மனம் வருந்தி மன்னிப்பு கேட்டாருன்னும் அவருடைய பாவத்தை பெருமாள் மன்னிச்சாருன்னும்  கதை போகுது.  அதனால் பாவமன்னிப்பு  வேணுமுன்னால்  இங்கே வந்து கும்பிடலாமுன்னு  சேதி.  அதான் மன்னிப்பு கிடைக்குதேன்னு  வேணுமுன்னே பாவம் செஞ்சுட்டு வந்தால்  நோ மன்னிப்பாக ஆகிரும் , ஆமா.

நம்மாழ்வார் இவரை தரிசனம் செஞ்சு பதினோரு பாசுரங்கள் பாடி மங்களசாஸனம் செஞ்சுருக்கார். திருச்செங்குன்றூர் என்பது பழைய பெயராம். அவர் பாடலிலேயே  பெருமாள் பெயரையும் ஊரின் பெயரையும், ஆற்றின் பெயரையும்குறிப்பிட்டு இருக்கார் பாருங்களேன்.

எங்கள் செல்சார்வு யாமுடை அமுதம்
இமையவர் அப்பனென் அப்பன்
பொங்குமூ வுலகும் படைத்தளித் தழிக்கும்
 பொருந்துமூ வுருவனெம் அருவன்
 செங்கயல் உகளும் தேம்பனை புடைசூழ்
திருச்செங்குன் றூர்திருச் சிற்றாறு
அங்கமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர்மற்  றெனமர் என் துணையே.
நம்மாழ்வார் ( 3597 )

மேலே ஒரிஜினல். கீழே பதம் பிரிச்சுப் போட்டது. சரியான்னு சொல்லுங்களேன், ப்ளீஸ்.

எங்கள் செல்சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்தளித்தழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயலுகளும் தேம்பனை புடைசூழ்
 திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியானல்லால்
யாவர் மற்று என் அமர்துணையே.


கோவிலுக்குத் தலப்புராணம்  இவ்ளோதான்னு நினைச்சுறாதீங்க. இன்னொரு முக்கியமான  சமாச்சாரம் இங்கே நடந்துருக்கு!

நம்ம சிவன் இருக்காரே.... அவருக்கு ரொம்பவே இளகிய மனசு. யாராவது அவரை தியானிச்சு தவம் இருந்தால் போதும். உடனே  அவர்களுக்கு தரிசனம் கொடுத்துருவார். அதோடு நிறுத்திக்கத் தெரியாது. பக்தா...உன் பக்தியை மெச்சினோம். என்ன வரம் வேண்டுமானாலும் கேள் என்ற வழக்கமான டயலாகை எடுத்து விடுவார்.

இப்படித்தான்  சுகன் என்ற அரக்கன் ஒருவனுக்குப் பிறந்த  பத்மாசுரன் என்ற அரக்கன் சிவனைத் தியானிச்சு  தவம் செய்தான்.  சிவனும்  தரிசனம் கொடுத்து வழக்கமான  டயலாகைச் சொன்னார்.  ரொம்பப் பணிவோடு பத்மாசுரன் கேட்ட வரம்.....அவன் யார் தலையில் கை வச்சாலும் அவர்கள் அப்படியே  எரிஞ்சு பஸ்மம் ஆகிறணும் என்பதே!  சிவனும் ஓக்கேன்னு சொல்லிட்டார்.

  (இவன் பத்மாசுரனா இல்லை பஸ்மாசுரனான்னு எனக்கு இப்போ ஒரு சந்தேகம். வரம் கிடைச்சதும் பெயரை மாத்திக்கிட்டானோ?)

இப்போ அந்த வரம் சரியா ஒர்க்கவுட் ஆகுதான்னு பரிசோதிச்சுப் பார்க்கணும் அசுரனுக்கு! கண் எதிரில்  வேற யாருமே இல்லை சிவனைத் தவிர!  சிவன் தலையில் கை வச்சுப் பார்த்தால் ஆச்சுன்னு  கிட்டே போறான்.  சட்னு சிவனுக்கு நடக்கப்போகும் ஆபத்து  தெரிஞ்சதும் ஓடிப்போய் ஒளிஞ்சுக்கிட்டார்.  'பெருமாளே என்னைக் காப்பாத்து'ன்னு மனசில் நினைச்சார்.

மச்சானைக் காப்பாற்ற மஹாவிஷ்ணு  வந்தார்.  என்ன நடந்ததுன்னு  தெரிஞ்சதும், பஸ்மாசுரனை   எப்படி அழிக்கலாமுன்னு  ரொம்ப நேரமெல்லாம் யோசிக்கலை.  மோஹினியா  உருவத்தை மாற்றிக் கொண்டார். ஏற்கெனவே  போட்ட வேஷம்  என்பதால் இன்னும் மெருகேறி எல்லாம் கனக்கச்சிதம்.

பஸ்மாசுரன் முன்னே ஒயிலாக இடுப்பை அசைச்சு   அசைச்சு ஒரு ஒய்யார நடை.   'நிர்பயமா'தன் முன்னே நடந்து போகும்  இளசைப் பார்த்ததும்  அவனுக்குக் காமவெறி ஏறிப்போச்சு.  அவளிடம் தன் இச்சையைச்  சொல்றான்.  அரக்கனா இருந்தாலும் அத்துமீறி நடக்கலை.நேர்மையா தன் விருப்பத்தைச் சொல்றான் பாருங்க.

மோஹினியும் ரொம்ப பிகு பண்ணிக்காமல்,  'பார் ,உன் உடம்பெல்லாம் அழுக்கு நிறைஞ்சும் , தலைமுடி எல்லாம்  சிக்கு பிடிச்சும் கிடக்கு. ஒரே துர்நாற்றம்.  நல்லா எண்ணெய் தேய்ச்சு ஒரு குளியல் போட்டுட்டு வா. நாம் இன்பமா இருக்கலாமு'ன்னு  சிரிச்சமுகத்தோடு சொல்றாள்.

அட இவ்ளோதானா  விஷயம். இதோ போய் குளிக்கறேன்னு  எண்ணெயை எடுத்துத்  தேய்ச்சுக்கத் தன் தலையில்  கை வச்சான்.  ஆட்டம் க்ளோஸ். பஸ்மம் ஆனான். தீக்குளியல் ஆனதும்   சிவன் மெதுவா ஒளிஞ்சிருந்த இடத்தில் இருந்து வெளியில் வந்தார்.  மோஹினியைக் கண்டார்.  முதல்முதலா இப்படி ஒரு    சொல்லமுடியாத பேரழகைப் பார்த்ததும்  கண்கள் விரிஞ்சது. அவருக்கும்  ஆசை!

ஏன் பாற்கடலைக் கடைஞ்சு அமுதம் எடுத்தபோது, அதை தேவர்களுக்கு மட்டும் விளம்பணும் என்ற எண்ணத்தோடு மஹாவிஷ்ணு மோஹினி அவதாரம் எடுத்தாரே... அப்ப சிவன் கண்டு மோஹிக்கலையான்னு யாரும் கேக்கப்பிடாது. அப்பதான் அவர் ஆலகால விஷத்தை முழுங்கி மயக்கத்துலே கிடந்தாரே!  அது நினைவிருக்கட்டும், ஆமா!

சிவனும் மோஹினியும்  இணைஞ்சதால்   ஹரிஹர புத்திரனாக  ஐய்யப்பன்  பிறந்தார் என்பது  உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்தானே!   அப்படி ஒரு முக்கியமான சம்பவத்துக்கு அடிக்கல் நாட்டிய இடம் இதுன்னு இப்பத் தெரிஞ்சுக்கிட்டீங்களா!

நம்ம சீனிவாசனை  அப்பப்ப ஒரு ஃபொட்டாக்ராஃபரா மாத்திருவேன்:-) செல்ஃபோன் கேமெரா வந்தபின்  எல்லோருமே படம் எடுக்கும் நிபுணர்களா மாறிட்டாங்கதானே !

கோவிலில் பெருமாள் பெயரைக் கேட்டது முதல் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற அரசனின் பெயர் மனசின் ஒரு மூலையில் ஓடிக்கிட்டே இருக்கு.  வரப்பருக்கும் வரம்பனுக்கும்  சம்பந்தம் இருக்கோ என்னவோ! உள்ளூர் சாமி பெயரை வைப்பதுன்ற ஒரு வழக்கம் இருக்கே... ஒருவேளை அதன்படியோ?

தொடரும்...........:-)




திருவமுண்டூர் என்னும் திருவண்வண்டூர் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 31)

$
0
0
காலையில் அறையில் இருந்து கிளம்பிய அரைமணிக்குள் இங்கே  திருச்சிட்டாறு  வந்தோமா  கும்பிட்டோமான்னு  இருந்துருக்கோம். மணி இப்போ ஏழடிக்கப் பத்து மினிட். இன்னும் ரெண்டு கோவில்கள் இந்தப் பக்கத்துலேயேதான் இருக்கு. அவ்வளவா தூரமில்லை. அவைகளையும் முடிச்சுக்கிட்டே போனால் ஆச்சு.

இப்ப இங்கே கேரளாவில் மழைக்காலம். துலாவர்ஷம். துலா (நம்ம ஐப்பசி) மாசத்தில் இந்த மழை தவறாது வரும். இது மழைகளிலேயே நல்ல குணமுடைய மழையாக்கும் கேட்டோ! 'மாதங்களில் நான் மார்கழி என்றவன் மழைகளில் நான் ஐப்பசி'ன்னும் சொல்லி இருப்பான் போல:-) தினமும் மாலையில் ஆரம்பிச்சு  நள்ளிரவு  கடந்து  நின்னுரும். நாங்க கேரளாவிலிருந்தபோது மத்யானம் மூணரை மணிக்கு ஆரம்பிக்கும். பள்ளிக்கூடம் விட்டு வரும் பிள்ளைகள் எல்லாம்  மழையில் ஆட்டம் போட்டுக்கிட்டு வருவாங்க. இப்போ அதுக்கும்  என்னவோ கோளாறு. க்ளோபல் வார்மிங் காரணமுன்னு சொல்லிக்கலாம். நமக்குத் தொந்திரவு வேணாமேன்னு  ராத்திரி பத்துக்குமேல் ஆரம்பிச்சு பொழுது விடியுமுன் நின்னுருது.

திருசிட்டாறுக்கு நாம் வந்த பாதையையிலேயே திரும்பிப்போய் மெயின்  ரோடிலே (இதுக்குப் பெயரே மெயின் சென்ட்ரல் ரோடுதான்)சேர்ந்ததும்  செங்கண்ணூர் போகும்  வலது பக்கம் திரும்பாமல் இடது பக்கம்திரும்பி  கொஞ்சதூரம் போனால்  பம்பா நதி பாலம் வரும். ஏராளமான முறை கேட்ட  பெயர் என்பதால் பம்பா என்றதும்  பரவசத்தோடு, எங்கே எங்கேன்னு எட்டிப் பார்த்தேன்.

பாலம் கடந்து  கொஞ்ச தூரத்தில் மரம் அறுக்கும்  வேலை செய்யும் ஆட்களிடம்,  திருவண்வண்டூர் கோவில் எந்தப்பக்கம் என்று விசாரித்ததில்,  ஒரு நிமிட் தீர்க்கமா ஆலோசிச்சுட்டு, 'மஹாவிஷ்ணு க்ஷேத்ரமாணோ?  அது திருவமுண்டூரா.  ஈ வழிதன்னே  ரெண்டு கிலோமீட்டர் நேராயிட்டு போணும். ப்ராவடியில் இடத்து வசம் திரிச்சால்  பின்னேயும் ஒரு ரெண்டு கிலோ மீட்டர்.'

ஏது ப்ராவடியான்னு  இழுத்தப்போ... "அவிடத்தன்னே உண்டாகும்.  காணாம் பற்றும்"

இங்கெல்லாம் வழி கேட்டால்  அஞ்சு நிமிஷம் ட்ரைவ், பத்து நிமிஷ ட்ரைவ்ன்னு காலக்கணக்கில் யாரும் சொல்றதில்லை.  எல்லாம் மெட்ரிக் அளவுதான்.  அஞ்ஞூறு மீட்டர். நானூறு மீட்டர்ன்னு க்ருத்யமாகக் கணக்கு சொல்றாங்க. எங்களுக்கு இது ஒரு வேடிக்கையாப் போச்சு. அப்போ முதல், எங்கே வழி கேட்டாலும் மீட்டர் கணக்கு சொல்லும்போது  மனசுக்குள் ஒரு சிரி:-) ஆனா ஒன்னு, யாரும் தெரியலைன்னு சொல்றது இல்லை. அக்கம்பக்கம் ஆட்களிடம் விசாரிச்சாவது 'சரியான' வழியைச் சொல்லிடறாங்க. மனஸிலாயோ?

சரி.ரெண்டு கிலோமீட்டர் போனதும் பார்க்கலாம். வேற யாரிடமாவது விசாரிச்சால் போச்சு. ஆனால்.... வேடிக்கை பார்த்துக்கிட்டே வந்த என் கண்ணில் சட்னு ஆப்ட்டது  அது.  பெரிய தூணின் மேல் கட்டி இருக்கும் புறாக்களின் மாடம். புறாவின் கூடு .  ஓ....இதுதானா   அந்த ப்ராவடி என்னும் ப்ராவின் கூடு!ஆமாம்.  இதுதான் என்று காமிக்க அங்கே ஒரு புறாவும் உக்கார்ந்திருந்தது.

 எதுக்கும் இருக்கட்டுமுன்னு அங்கே நின்றிருந்தவரிடம், 'திருவமுண்டூர் க்ஷேத்ரம்' னு ஆரம்பிச்சப்ப ...இடதுபக்கம் கை காமிச்சு  'ஒரு ரெண்டு கிலோ  மீட்டர்'என்றார்.  வளரே நன்னி.

சின்ன  அலங்கார வளைவுக்குள்  போய்க்கோவில் வாசலில் இறங்கினோம். பெரிய மரக் கதவுகளில்  திட்டிவாசல் போல்  இருக்கு . விசேஷநாட்களில் முழுக்கதவுகளையும் திறப்பாங்கபோல! முகப்பு வாசலிலிலேயே  பக்கத்துக்கொருவராய்பெரிய சிறிய திருவடிகள் கைகூப்பிய நிலையில்!



 உச்சியில்  காளிங்கன் மேலாடும் க்ருஷ்ணன்.  கீழே கஜேந்திர மோக்ஷம். ரெண்டு பக்கங்களிலும்  நாரதரும், மிருதங்கம் வாசிக்கும் நந்தியும். அடுத்து இன்னும் கீழே ஒரு  ஹயக்ரீவர். இரு பக்கங்களிலும் ரெவ்வெண்டு  அவதாரங்கள். மச்சம்,  கூர்மம் ஒரு பக்கமும், நரசிம்மரும், வாமனரும் இன்னொரு பக்கமுமாக. இந்த  முகப்பு வாசலே அட்டகாசமா இருக்கு!

 காளிங்கனின்  உடல் வளைஞ்சு நெளிஞ்சு போய்,  வால் நாரதர் மாடத்துக்கு மேல் எட்டிப் பார்ப்பது ஜோர்:-)

கதவைக்கடந்து அந்தப்பக்கம் போய் முகப்பு வாசலைத் திரும்பிப்பார்த்தால்... ஹைய்யோ!   பரசுராமர், ராமர், பலராமர், க்ருஷ்ணன், வராக அவதாரங்களும்,  கீதோபதேசம், ப்ரம்மா, ஐய்யப்பன் என்று அழகோ அழகு! சின்னதா ரெண்டு திண்ணைகள்  கதவுக்கு ரெண்டு புறமும்.  சூப்பர்!!!


மிகப்பெரிய வளாகம்!  கண்  முன் கொஞ்ச தூரத்தில் இருக்கும் ஒரு  மண்டபத்தில் நிலவிளக்கொன்னு கத்திச்சு வச்சு , அடடா....   ஒரு ஃப்ளோலெ மலையாளம் வந்துருச்சு.... க்ஷமிக்கணும் கேட்டோ!

குத்து விளக்கு ஒன்றை ஏத்தி வச்சு  ஒரு ஒன்பது பெண்மணிகள் சுத்தி இருந்து கைகொட்டிக் களி என்னும் நடனம்(!)  ஆடுறாங்க. பாட்டு? நம்ம எல்லோருக்கும் தெரிஞ்சபாட்டுதான்.







ஹரே ராமா ஹரே ராமா, ராமராமா  ஹரே ஹரே.
ஹரே க்ருஷ்ணா  ஹரே க்ருஷ்ணா,க்ருஷ்ண க்ருஷ்ணா ஹரே ஹரே!

நானும் கூடச்சேர்ந்து  நாலுவரி பாடிட்டு நகர்ந்தேன்.
எதோ வழிபாடு போலத் தெரிஞ்சது. வழிபாடு=ப்ரார்த்தனை.



பளபளன்னு ஜொலிக்கும் கொடிமரம்.  சுற்றிவர பல  மண்டபங்களும் கட்டிடங்களுமா இருக்கு. இந்த வெளிப்ரகாரம்  கடந்து  உள்ளே போறோம். கூரையிட்ட முன்பகுதிக்குள் பலிபீடம். அதையும் கடந்தால்  ரெண்டு பக்கமும் திண்ணைகள் வச்சுருக்கும் நடை. அதுக்கு அப்புறம் திண்ணை மண்டபம்.  கருவறை  இப்படி. கேரளக்கோவில்கள் எல்லாம்  ஒன்னுபோலவே இருக்கே!

கருவறையில்  பாம்பணையப்பன் நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார். பாம்பணைன்னா ஆதிசேஷன் இல்லையோன்னு கொஞ்சம் முழிச்சேன். இல்லையாமே.... பம்பா நதி இந்தக் கோவிலைச் அணைச்சுக்கிட்டுச் சுற்றி ஓடுதாம். அந்தப் பம்பாதான் இங்கே பாம்பா ஆகிப்போச்சு போல! பம்பா நதி அணை அப்பன்!

நம்மாழ்வார் இங்கே வந்தும் பதினொரு பாசுரங்கள் பாடி மங்கள சாஸனம் செஞ்சுருக்கார்.

தாயார் பெயர் கமலவல்லி நாச்சியார்!  பெருமாளுக்கும் கமலநாதன் என்றும் ஒரு பெயர் உண்டு இங்கே!


கருவறையைச் சுற்றி உள்ப்ரகாரத்தில் வலம் வர்றோம். அதே  வட்டக் கருவறை. உச்சியில் செப்புத்தகடால் ஆன கூம்பு விமானம்.

பாண்டவர்களில் நகுலன் கட்டிய கோவில் இது.

இந்த ஊரில் வேறெதுக்கோ பூமியைத் தோண்டும்போது பெருமாளின் சிலைகள்   சில  கிடைச்சதாம். அவைகளைக் கோவிலுக்குள் கொண்டு வந்து  சந்நிதிகள் கட்டி பிரதிஷ்டை செஞ்சுருக்காங்க. வெளிப்ரகாரத்தில் நாம் பார்க்கும் அத்தனை மண்டபங்களும் சந்நிதிகளும் இப்படி  கட்டப்பட்டவைகளாம்.

வெளிப்ரகாரம் சுற்றி வந்தப்ப  கோபாலகிருஷ்ணன் சந்நிதியில் நல்ல கூட்டம். ஹை!  நம்ம கோகி!  தீபாராதனை நடந்துக்கிட்டு இருந்தது. துளசியும் பிரசாதமாகக் கிடைச்சது.

சிவனுக்கும் சாஸ்தாவுக்கும் தனிச்சந்நிதிகள்  இருந்தன.
பஞ்சபாண்டவர்கள் கட்டிய  ஐந்து கோவில்களில்   இங்கேதான்  அடிக்கடி  விழாக்களும் நிகழ்ச்சிகளும் நடக்குதாம். அதனால் கோவில் ரொம்ப நல்ல நிலையில் இருக்கு.

சிரஞ்சீவிகளில் ஒருவரான மார்கண்டேயருக்கு இங்கே தரிசனம் கொடுத்துருக்கார் கமலநாதன். கூடவே தன் மனைவி கமலவல்லியுடன்  என்பது விசேஷம். ஏற்கெனவே சிவனைத் தன் கண்ணாரக் கண்டவராச்சே. இப்ப விஷ்ணுவும்!  இருவரையும்  பார்த்த ஒருவர் ,இவர் மட்டுமே!

கோவிலுக்கு ஒரு புராணக்கதையும் உண்டு. நம்ம நாரதருக்கும் ப்ரம்மாவுக்கும்  ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தில்  கோபம் அடைஞ்ச ப்ரம்மா தன் மானஸீக புத்திரனான நாரதரை சபிச்சிட்டார்.  தந்தையிடம்  சாபம்  வாங்கிய நாரதர் , இங்கே வந்து கடுமையான தவம் செஞ்சுருக்கார். ப்ரத்யக்ஷமான பெருமாளிடம், 'உலகத்துக்குத் தத்துவ ஞானத்தை உபதேசிக்கும் தொழில் தனக்கு வேணும்'என்று  வரம் கேட்டுருக்கார்.  அப்படியே ஆச்சு.இருபத்தியஞ்சாயிரம்  கிரந்தங்களில்  ஞான உபதேசங்களும், ஸ்ரீ நாராயணனை எவ்விதம் வணங்க வேண்டும் என்ற வழிமுறைகளையும் நாரதீய புராணமாக இயற்றி இருக்கார் நாரதர்.

ஓ  அதுதான் கோவில் முகப்பு அலங்காரத்தில் நாரதரும் தும்புருவும் இருக்காங்களோ! அப்ப அது நந்தியாக இருக்காது!  நாந்தான் தப்பா நினைச்சுருக்கேன்:(

திவ்யதேசக் கோவில்களின் வரிசையில் இக்கோவில் இருப்பது அறுபத்தி ஏழில். ஒவ்வொரு பட்டியலிலும் ஒவ்வொரு எண் சொல்லிடறாங்க. அதனால் இனி பேசாம திவ்யதேசக் கோவில்களில் ஒன்னு என்று சொல்லப் போறேன். அதுதான் உத்தமம்.

நம்மாழ்வார் பத்து பாசுரங்கள் பாடி மங்களசாஸனம் செஞ்சுருக்கார்.
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, திருவன்வண்டூர் மஹாக்ஷேத்ரம் என்று ஒரு போர்டு வச்சுருக்கு.

திருச்சிட்டாறு கோவிலில் இருந்து இங்கே வர  மொத்தமே அஞ்சரை கிலோமீட்டர் தூரம்தான். போக்குவரத்து அதிகம் இல்லாத ரோடாக இருப்பதால்  காமணியில் வந்து சேர்ந்திருந்தோம்.வந்து சேர்ந்த  இருபதே நிமிசத்தில் தரிஸனம் முடிச்சுக் கிளம்பியாச்சு. மணி இப்போ ஏழரைக்கு நாலு நிமிட்.

கோவில் திறந்திருக்கும் நேரம் காலை நாலரை முதல்  பதினொன்னு வரை. மாலை அஞ்சு முதல் எட்டு.

வாங்க அடுத்த ஒரு கோவிலுக்கும் போயிட்டுப் போயிறலாம்.

தொடரும்....:-)





தெரு ஓவியங்கள் கலைகளில் சேருமா?

$
0
0
எனக்குத் தெரிஞ்ச 'தெருவில் வரைந்த ஓவியங்கள்'னு பார்த்தால் என் சிறுவயதில் சென்னை ப்ளாட்ஃபாரங்களில் பிள்ளையார், சிவன், முருகன் இப்படி சாக்பீஸால் வரைஞ்சு  வச்சுருந்ததே. அதுவும் பஸ் நிறுத்ததையொட்டியேதான் . அப்பதானே பஸ்ஸில் இருந்து இறங்குறவங்களும் பஸ்ஸுக்காகக் காத்துநிற்பவர்களும்  பார்ப்பாங்க.  ஐயோ... எங்கே 'சாமி'யை மிதிச்சுடப்போறோமுன்னு  கவனமா காலடி எடுத்து வச்சு வருவேன். இதை வரையும் ஓவியர்கள் பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகளா இருந்தாங்க அப்போ. இது அவர்களுக்கு ஒரு ஜீவனோபாயம் என்றாலும்கூட   கலை உணர்ச்சி இருப்பதால்தானே வரையவும் வருது இல்லையா?  சாக்பீஸ் என்பதால்  மழை வந்தால் ஓவியம் அழிஞ்சுபோயிரும். தினம் தினம்  வெவ்வேறு இடமென்றாலும்  தினம் வரைஞ்சு வச்சால்தான்  எதோ ரெண்டு காசு கிடைக்கும்.  ப்ச்....   பாவம்தானே?


இப்ப எதுக்கு இந்த நினைவு? காரணம் இருக்கே! எங்கூரில்  ஆர்ட் ஃபெஸ்டிவல் வருசாவருசம் நடக்குது பாருங்க, அதில் இந்த தெரு ஓவியம்  ஸ்ட்ரீட் ஆர்ட்  விசேஷ இடத்தைப் பிடிச்சிருக்கு. அதிலும் இந்த வருசம் கூடுதல் விசேஷம்.
நிலநடுக்கத்தால் அழிஞ்சு போன ஊரில் அங்கங்கே தப்பிச்சு நின்னு இருக்கும் கட்டிடங்களை விரல்விட்டு எண்ணிடலாம். வெறும் மொட்டை வெளிகள் தான்  பாக்கி அத்தனையும்.  பார்க்கப்பார்க்க  ரத்தக்கண்ணீர்தான்.








 நல்லவேளை, இப்போ எல்லா இடிபாடுகளையும்  அகற்றி அந்த இடங்களைச் சமன் செஞ்சு வச்சுட்டதால்  கொஞ்சம் நிம்மதி.  இனி அதற்கான காப்பீடுகளை வச்சு மட்டும் புதுக்கட்டிடத்தை  இடத்தின் உரிமையாளர்  கட்டமுடியுமான்னா  முடியாது. விலைவாசிகள் தாறுமாறா ( முக்கியமா கட்டிட சம்பந்தமுள்ள பொருட்களின் விலைவாசிகளைச் சொல்றேன்) எகிறிப்போய்க் கிடப்பதால்   இன்னும் கூடுதல் நிதிக்கு அவர்கள் ஏற்பாடுகள் செய்து  கட்டும் வரை  அது அப்படியேதான் இருக்கப்போகுது.  இந்த நிலையால்  நிறையப்பேர்,அந்த இடங்களையே இப்போ வித்துக்கிட்டு இருக்காங்க.  வாங்கறவன் அவனிஷ்டம் போல் கட்டிக்கட்டுமே!  எங்கே பார்த்தாலும் ஃபார் ஸேல் போர்டுகள். இந்த ஏரியா நகரின் மையப்பகுதி என்பதால் நிலமெல்லாம்  ப்ளாட்டினம் (எவ்ளோநாள்தான் பொன் பொன்னுன்னு சொல்வதாம்?)விலையைக் காட்டிலும் அதிகம்.

ஆமாம்....Californium 252 னு ஒன்னு இருக்காமே . ஒரு கிராம்  விலை 27 மில்லியன் அமெரிகன் டாலராமே!  இதுலே காசுமாலை செஞ்சு போட்டுக்கிட்டா நல்லாவா இருக்கும்?  பார்க்கவே சகிக்காது. சீச்சீ எனக்கு வேணாம்ப்பா!





கட்டிடத்தைத் தொட்டடுத்து நிற்கும்  மொட்டை  வெளிகளில் கண் போகாமல்,  நிற்கும் கட்டிடத்தின் சுவரில்  பார்வையைச் செலுத்தினால் துக்கம் கொஞ்சம் குறையுமேன்னு ஒரு ஐடியா யாரோ புண்ணியவானுக்குத் தோன்றி இருக்கு.


ஊரில் அங்கங்கே படங்களை வரைஞ்சு தள்ளிட்டாங்க.  ஒவ்வொன்னும் பார்க்க அள்ளிக்கிட்டுப்போகுது.

எங்கூர் காலநிலைக்கு  யானையை வச்சுக் காப்பாத்த முடியாது.வீட்டுயானை மட்டும் எப்படியோ தப்பிச்சுருது:-)அப்படி இருக்க, ஒரு நாள் மகள் ஒரு படம்  எடுத்து அனுப்பினாள். நாலுயானைகள்!  பார்த்ததும் என் நெனப்பு வந்துச்சாம்லெ:-)


எங்கே இருக்குன்னு கேட்டுக்கிட்டேன். அப்பதான்  நம்ம  சிட்டிக்கவுன்ஸில்  ஊருக்குள்ளே படம்போட  உதவி செஞ்சுக்கிட்டு இருப்பது தெரியவந்தது.


அம்பத்தியொரு படங்கள் இருக்காம். எது எது எங்கெங்கேன்னு சொல்லலைன்னா எப்படி?அதுக்கு ஒரு ப்ரோஷர் அச்சடிச்சுக்கொடுத்துட்டாங்க. இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்!

ஒரு வீக் எண்ட் இதுக்குன்னே ஒதுக்கி வச்சேன்.  ஊரைச் சுத்தப்போனோம். கிடைச்சதெல்லாம் இங்கே உங்களுக்கும் விளம்பியாச்சு:-)

ஊருக்குள்ளே  கட்டிடவேலைகளும் ரோடு வேலைகளும் தொடந்து நடந்துக்கிட்டே இருப்பதால் ஒன்வே, டு வே இவைகள் இல்லாம, அங்கங்கே  ட்ராஃபிக் டைவர்ஷன் என்று  ட்ராஃபிக் ஸைன்  வச்சு திருப்பி விடும் சமாச்சாரங்களால்   காரில் போவதைவிட  நடந்துபோனால் இன்னும் நிறைய படங்கள் கிடைச்சுருக்கும்தான்.  நான்.....நடந்துட்டாலும்.....:(




காலிச்சுவர் கிடைச்சா  கண்ணீர் அஞ்சலிகளும், அரசியல் வியாதிகளின் அல்லக்கைகள் போட்டு வைக்கும் விளம்பரமும் ,   கண்ட்ரி டாக்குட்டர்ஸ்களின்   மூலத்துக்கான ஸ்பெஷல் மருத்துவசேவைன்னு  சொல்லிக்கும் சமாச்சாரங்களும் இருக்குமோன்னு பார்த்தால்.....  சீச்சீ... இந்த கலாச்சாரம் இதுவரைக்குமிங்கே வந்து சேரலை பாருங்க:(

இதுலே,  காலி  மனையில் கட்டிடம் வந்துட்டா .... (செலவு பண்ணி)'போட்ட படம் போச்சே'ன்னு ஆகிருமேன்னு ஒரு கூட்டம் கிளம்புச்சு.  அதுக்காக  ஊரை  மொட்டையா விடமுடியுமா?  அழகு படுத்தினோமுன்னா  அதைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளால்  நமக்கு நன்மைதானே? அப்படியே உள்ளூர் கலைஞர்களை வளர்த்தாப் போலவுமாச்சு, இல்லையோ? ஒரு கல்லில் ரெண்டு மாம்பழம்:-)


PINகுறிப்பு:  நிறைய சமாச்சாரங்களும் அதற்கேற்ற படங்களுமா இருப்பதால்   மீதி நாளைக்கு:-)




இனி மேல் ஆயகலைகள் அறுபத்தியஞ்சு, இதையும் சேர்த்தால்!:-)

$
0
0

தெரு ஓவியம் தொடர்ச்சி....

இங்கே கலர்கலராக் கிடைக்கும் ஸ்ப்ரே கேன்களை வச்சு  சுவர்களில்  அசிங்கமாக் கண்டபடி  அடிச்சு வச்சுட்டுப் போகும் 'graffiti'கலாச்சாரம் ரொம்ப வருசமா இருக்கு.  அப்படிச் செஞ்சவனைப் பிடிச்சு நாலு சாத்து சாத்தாம... 'இளைஞர்கள் தங்கள் மன அழுத்தத்தை இப்படி வெளிப்படுத்தறாங்க'ன்னு  சப்பைக் கட்டுக் கட்டும் கூட்டம்தான் அதிகம்.

மனித உரிமை என்ற  பெயரில்  குண்டு போட்டு நூத்துக்கணக்கான உசுருகளைப் போக்கியவனுக்கும்,  பிஞ்சுக்குழந்தைகளை பாலியல் வக்ரமத்துக்கு  இரையாக்கும் கொடியவர்களுக்கும்,  ஒருதலைக் காதலா இவனா நினைச்சுக்கிட்டு, அவள் உடன்படலைன்னதும் முகத்தில் ஆஸிட் ஊத்திட்டு,  ஒரு தண்டனைக்கும் உள்ளாகாமல் வெளியே நடமாடும் மிருகங்களுக்கும் ஆதரவு காமிக்கும்  வகை போல இது  இல்லை என்றாலுமே.... 

தங்கள் வீட்டையோ, கட்டிடத்தையோ அசிங்கம் பண்ணிட்டுப்போறவனை ஒன்னும் செய்யமுடியாமல்  திரும்பத்திரும்ப  செலவு செஞ்சு  சரிப்படுத்தும் மக்களை நினைச்சால் பாவமாத்தானே இருக்கு! இன்ஷூரன்ஸ் கூட  பணம் கொடுக்காது,  இப்படியான க்ளெய்ம்களுக்கு:-(

கொஞ்சம் கொஞ்சமா இவுங்களே,  செய்யும் செய்கைக்கு அழகூட்டுவது போல செஞ்சுக்கலாமேன்னு நினைச்சுருப்பாங்க போல. திருடனாப் பார்த்துத் திருந்தினால்தான் உண்டு.  கொஞ்சம்   நல்லபடியாப் படம் போட ஆரம்பிச்சதும் இதை  'graffiti-style murals'என்று கொண்டாட ஆரம்பிச்ச நாடு இது:-)

இந்த விடலைகளைப்போல் இல்லாமல் உண்மையாகவே  இதை ஒரு கலை போலவே ஆராதிச்சு அருமையா சித்திரம் வரையற கலைஞர்களும் உருவாகிட்டாங்க  என்பதே உண்மை.  இதே கலர் கேன்ஸ்தான். ஆனால் வரைஞ்ச படங்களிருக்கே.... ஒவ்வொன்னும் அற்புதம்! எப்படி இதுலேயே  ரொம்பவே லைட்டாகவும், அதிகமான அழுத்த நிறமாகவும் ஸ்ப்ரே செஞ்சுருப்பாங்கன்னு என்னால் நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை. இந்தக் கலையும் ஆரம்பிச்சது  நம்ம பிக் ஆப்பிள் என்னும் நியூயார்க் நகரத்திலேதானாம்,  Graffiti  Artist  Donald J. White aka "Dondi" 1961-1998  என்பவரால்.


எங்கூர்  ஒய் எம் ஸி ஏ கட்டிடத்தில்  இந்தவகை தெரு ஓவியங்கள்  இருக்குன்னதும் எதுக்கு விடணுமுன்னு கிளம்பிப் போயிருந்தோம்.

அன்றைக்குத்தான்  அந்த டிஷர்ட் காட்சிக்கும் போய்வந்தது.

வாசல் முகப்புச் சுவரிலேயே மாண்டேலா  இருந்தார். வெறும்  காங்க்ரீட் சுவர்தான்.  அதுலே கண்ணைக் கவரும் படங்கள்.  முதல்தளத்துக்குப் போனோம். இந்தக் கலையை ஆரம்பிச்சு வச்ச Dondi க்கு ஒரு முதல்மரியாதையாக  இது.






முதலில்  ஒரு ஹாலை ரெண்டாத்தடுத்து ஒரு OP Shop. நமக்கு  வேண்டாத பொருள் இன்னொருவருக்கு ரொம்பவே வேண்டிய பொருளாகப் போயிருதே!

அதன்பின் ஒரு பெரிய ஹால் முழுக்கக்  கண்டமானம்  வரைஞ்சு தள்ளியவை. தரையிலிருந்து கூரை வரை!




அடுத்து இன்னொரு ஹாலில்  க்ராஃபிட்டி வீடியோ!!!  பல வண்ணங்களில் மாறிமாறிவந்தது பிடிச்சிருந்தது. லிமிட்லெஸ் என்ற தலைப்பாம்!  பத்து மில்லியன் மக்கள்ஸ் பார்த்துட்டாங்களாமே! ஒரு ஒன்னரை நிமிச வீடியோ வலை ஏத்தி இருக்கேன். நேரமிருந்தால்  பாருங்க.

அடுத்த  அரை அறையில்   ஒரு ஸிட்டிங் , டைனிங், ஆஃபீஸ் செட்டப்.  Panic Room! சரிபாதி அறை இப்படி! லேப்டாப்கூட இருக்கு.  ஆனால்....  மௌஸைக் காணோம்:-)


நெட்  ஒர்க் பண்ணலைன்னு சலிச்சுக்கிட்டே அடுத்த இன்னொரு இருட்டறைக்குள் போனால் இரவு வானம்.  நட்சத்திரங்கள்  அப்பப்ப  லேசா ஒளி வீசுது:-)  DTR Crew   Dcypher from Los Angeles.

இவர் ( Dcypher) பெயர் Guy Armstrong Boston Ellis.  ஒரு கிவிதான். இங்கே எங்கூரில்தான்  (கிறைஸ்ட்சர்ச்)  ஆர்ட்ஸ்  &  டிஸைன்ஸ் பட்டப்படிப்பு முடிச்சுட்டு, illustration and Graphic Design செய்வதில் கவனம் செலுத்தியிருக்கார். இப்ப வசிப்பது எல் ஏவில். இவருடைய வலைப்பக்கத்தைப் பார்த்தால்ப்ரமிப்புதான்.


 கையால் அவுட்லைன் வரையாம எப்படி ஓவியமாக்கறாங்கன்னு தோணிக்கிட்டே இருந்ததுக்கு  இவருடைய ஃபேஸ்புக்கில் இருக்கும்  அஞ்சு விநாடி வீடியோவிலும்,  இன்னொரு ஒன்னரை மினிட்டுக்கும் குறைவான வீடியோவிலும்  பதில் கிடைச்சது!



என்ன இருந்தாலும் எங்கூர்க்காரர் பாருங்க.  அதனாலேயே  ஒரு கர்வம் (எனக்குத்தான்) வந்தது என்பதே உண்மை:-)))


கட்டக்கடைசியா ஒரு பிரமாண்டமான ஹாலில்  எட்டு ஸ்ப்ரே கேன்களை நிறுத்தி வச்சுருக்காங்க. ஒவ்வொன்னும்  நாலரை மீட்டர் உசரம்!  அசப்புலே பார்த்தால் நம்ம திருமலைநாயகர் மஹல் தூண்களே! அதோட  மூக்கிலே இருந்து ஒளிவெள்ளம் பாய்ஞ்சு எதிர் சுவத்துக்குப் போகுது. அங்கே?

எட்டு  பெயிண்ட்டிங்ஸ்.  கூடத்தின் ஒரு கோடியில் இருந்து மறு கோடிவரை!

எதிர்ச்சுவரில் இருக்கும்  ஓவியத்துக்கு நேரா இருக்கும் ஒவ்வொரு  ஸ்ப்ரே கேனிலும்  அதை வரைந்த ஓவியக் கலைஞரைப் பற்றிய குறிப்புகள். இதுலே நாலு கிவி, ரெண்டு ஆஸி, ஒருத்தர் அமெரிகர், ஒருத்தர் ஃப்ரெஞ்ச்.




வெறும் காங்க்ரீட் ப்ளாக்ஸ் வச்சுக் கட்டுன சுவரில்  மந்திரம்  போட்டுட்டாங்க!

'வாய்  பிளந்து நின்னேன்'னு சொன்னால் அது பொய் இல்லையாக்கும்!






ஏம்ப்பா.... எதுக்காக பதிவு எழுதறீங்க? காசு சம்பாரிக்கவா?

$
0
0
நமக்குத் தெரிஞ்ச நாலு நல்ல விஷயங்களையோ, கெட்ட விஷயங்களையோ நம்ம மக்களுக்குச் சொல்லிக்கணும் என்பதால் தானே?

இல்லை ....இதுலே வரும் வருமானம்தான் பொழைப்பு நடத்தன்னு நினைக்கிறீங்களா?

பதிவுகளின் தலைப்பு நம்மை இழுக்குதுன்னு உள்ளே போறோம். அடுத்த விநாடி அதைப் பார்க்கக்கூட விடாம பக்கம் பூராவும் ரொப்பி விளம்பரம் வந்து கொட்டுது.

நீங்க கஷ்டப்பட்டு (!!!!) எழுதுன பதிவை நாங்க பார்க்கணும் என்ற எண்ணம் துளிகூட இல்லையா உங்களுக்கு?

இன்னிக்குப் பொழுது விடிஞ்சதும்  ப்ரேக்ஃபாஸ்ட்க்கு தமிழ்மணம் வந்ததும் கண்ணில் பட்டது கொழுப்பு. நமக்குத்தான் எக்கச்சக்கமாக் கிடக்கே.  டஜன் டிப்ஸ் தர்றாங்களாமே.... ஒன்னு ரெண்டு நமக்கானது கிடைக்காதான்னு க்ளிக்கினதும்......

உலக மகா எரிச்சல்.

கோபத்தால் கொழுப்பு கூடும் என்பதை(யும்) சொல்லத்தான் வேண்டி இருக்கு.



பேசாம ஒரு லிஸ்ட் போட்டு வச்சுக்கணுமுன்னு பார்த்தால்  நடக்காது போல இருக்கு.

ஏகப்பட்ட பேர் இப்படிக் கிளம்பி இருக்காங்களே:(

இனி புதியவர்களை  'ஊக்கு விக்கப் போக வேணாம்.'நல்லாத் தெரிஞ்சவர்களின் பதிவுகளை மட்டுமே  வாசிக்கணும் போல!

எதையும் தாங்கும் இதயத்தில் குடி புகுந்தவள் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 32)

$
0
0
ஸ்ரீ வல்லப க்ஷேத்ரம் .  பாண்டவர்களில் சகாதேவன் கட்டிய கோவில். இந்த ஐவரில்  மிகவும் அறிவு பூர்வமாக சிந்திப்பவனும், சமநிலையில் இருப்பவனும்  சகாதேவன்தான் என்கிறார்கள். அதானே... இல்லாமலா  'பாரதப்போருக்கு நாள் குறிச்சுத் தா'ன்னு துரியோதனனே கேட்டுருப்பான்!

திருவமுண்டூர் க்ஷேத்ரத்தில் இருந்து திரும்பி மீண்டும் புறாவடிக்கு   வந்து  மெயின் ரோடில்  இடத்து வசம் திரும்பி மேலே  வடக்கோட்டு போயால்  திருவல்லா மார்கெட் பஸ் ஸ்டொப் எத்திக்காணும். பின்னே வீண்டும் இடத்து வசம் திரிச்சு ஒரு ரெண்டு கிலோ மீட்டர்.    மஹாவிஷ்ணு க்ஷேத்ரத்தின் படியில் எத்தி. சொல்றதுக்கு ஆகும்  நேரம் தான் அதிகம்.  மொத்ததில் வெறும் 7.3  கிமீ தொலைவுதான். 22 நிமிட் பயணம்:-)

திரு வல்லபன் வாழும் இடம்தான் திருவல்லா என்ற இந்த ஊர்.

ரோடு சைடில் வண்டி நிறுத்தும் இடத்திலேயே  ஒரு  கொடிமரம்! கோவில்  முன்மண்டபமா இப்ப இருக்கும் கட்டிடத்துக்கு வலது பக்கம். தொன்மையான கோவிலுக்குப் பொருந்தாத வகையில்  இருக்கும்  புதுச்சேர்க்கை:(




கொடிமரத்துக்குப்பின் இருக்கும் வாசல்வழியேதான் முந்தி கோவிலுக்குள் போயிருப்பாங்கபோல. இப்ப சிமெண்டு வச்சுக் கட்டினதா  இருப்பது ....  பிற்காலச் சேர்க்கை. கொஞ்சம் நல்லாதான் இல்லே:(  ஆனால்  இதுக்கு முன்னால்  ஒரு சின்ன சந்நிதியில் கருடாழ்வார் இருக்கார். இங்கே மற்ற கோவில்களில் இப்படி நான் பார்த்ததில்லை தமிழ்நாட்டுக் கோவில்கள் தவிர.


தினசரி பூஜா விபரங்கள் எழுதிப் போட்டுருக்காங்க.


இந்தக் கோவில் காலை நாலு மணிக்கே திறந்துடறாங்க. பதினொன்னரைக்கு  நடை அடைப்பு. மாலை அஞ்சு முதல் எட்டு.

உள்ளே  பெரிய வளாகமா இருக்கு.  ஆனை மண்டபம் உசரமா நிக்க அடுத்து  ஒரு மூணுநிலையில் கேரள ஸ்டைலில் அழகான கட்டிடம். இதுகூட பிற்சேர்க்கையாத்தான் இருக்கணும்.  அடுத்து  ஒரு கொடிமரம். இந்தப்பக்கம் ஆலயமணி. கொடிமரம்கடந்து போனால்  உம்மரம். திண்ணை வச்ச  நடை. உள்ப்ரகாரம். கருவறைக்கு முன் உயரம் குறைஞ்ச கூரையுடன்  திண்ணை மண்டபம் , வட்டக்கருவறை  இப்படி  காலையில் நாம் பார்த்த   கோவில்களைப்போலவே!

ஸ்ரீவல்லபர் என்னும் கோலப்பிரான் கிழக்கு நோக்கி நின்னு ஸேவை சாதிக்கிறார். தென் திருப்பதின்னு இந்தக் கோவிலைச் சொல்றாங்க.  நம்மாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் வந்து பாடி மங்களசாஸனம் செஞ்சுருக்காங்க என்பதால் இது 108 கோவில்களில் ஒன்னாக இருக்கு.

இங்கே மூலவரிடம் நாம் நின்னுக்கிட்டு இருக்கும்போது நாம் எதிர்பாராத ஒரு சேவையும் கிடைச்சது நம் பாக்கியமுன்னு சொல்லணும். கருவறையில் இருந்து சின்னதா இருக்கும் சிலையை  (உற்சவரோ?) ஒரு பட்டர்  தன் கைகளால்  அணைச்சுப்பிடிச்சாப்போல் ஏந்தி வெளியே வர,   சின்னதா ஒரு இடைக்கா மட்டும் ஒலிக்க திடீர்னு அங்கே  வந்த பட்டர்கள் ஏழெட்டுப்பேர் பின் தொடர  கருவறையைச் சுற்றி ஒரு ஊர்வலம்! பின்னே வெளியில் இருக்கும் கொடிமரம் வரை போய் திரும்பி வந்தாங்க. தினமும் காலை எட்டுக்கு நடக்கும் சீவேலியாம்!  நமக்கும் பின்னாலே போகணுமுன்னு ஆசை இருந்தாலும் அந்தக்கூட்டத்தில் பெண்கள் யாரும் கூடப்போகாததால்  நான் போகலை.  என்னால் இவரும் போகலை. புதுசாப் போகும் கோவில்களில் என்னென்ன நியமம் இருக்கோ,  யாருக்குத் தெரியும்?

கருவறை சுற்றி வந்தப்ப....  பெருமாளுக்குப் பின்பக்கம் இருக்கும் சக்கரத்தாழ்வாரை நாம் தரிசிக்கும் விதத்தில்  ஒரு ஜன்னல் போல ஒன்னு இருக்கு. பக்தர்களைக் காக்க தன் சக்கரத்தைக் கூடவே வச்சுருக்கார் என்று ஐதீகம்.

பிரஸாதமாச் சந்தனம் கொடுத்த வாழை நறுக்கில் துளி விபூதியும் இருந்துச்சு! சைவம் வைஷ்ணவம் ஒற்றுமை!  ஒரு சமயம் தனுர் மாசம் (நம்ம மார்கழி ) திருவாதிரை நட்சத்திர நாளில்  சிவபெருமான்,  வல்லபரை தரிசிக்க வந்தாராம். அந்த நினைவுக்காக  திருநீறும்  கொடுப்பது ஒரு வழக்கமா ஆகி இருக்கு.

 தாயாரின் பெயர்  செல்வத் திருக்கொழுந்து நாச்சியார். வாத்ஸல்ய தேவி. பெருமாளுக்கு இங்கே திருவாழ்மார்பன் என்ற பெயரும் உண்டு. ஏன்? கதை இருக்கான்னு கேட்டால், இருக்கே!

நரசிம்ஹ அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்ய வந்த  சமயம், கோபாவேசத்தால் உடல் அதிர்ந்துக்கிட்டு  இருக்கு. பயந்து போன  மஹாலக்ஷ்மி அந்தக்கணம்  அவளிருக்கும்  இடத்தை( விஷ்ணுவின் திருமார்பு)  விட்டு அகன்று தனியே வந்துட்டாள். இதுவும் நல்லதுக்குத்தானாம். அவள் கூடவே இருந்துருந்தால்  அந்த வதம் நடக்கவே விட்டுருக்கமாட்டாள்.  அவ்வளவு இரக்கம் உள்ள மனசுக்காரி. கெட்ட அசுரனுக்கும்  கூட தயை காமிக்கும் தாய் உள்ளம்.

வதம் முடிஞ்சாட்டும், கோபாவேசம் அடங்கலை.  அப்போதான்  பக்தன் ப்ரஹலாதனை  சிம்ஹத்தின்  கண் முன் காமிச்சு சமாதானப்படுத்துனதுன்னு கதை போகும்.  இன்னொரு வர்ஷனில்  தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி  சிவன், சரபேஸ்வரர் உருவமெடுத்து  நரசிம்ஹனைக் கட்டித் தழுவி  கோபத்தை ஆற்றினார் என்று புராணம் சொல்கிறது.  சரி, இப்போ லக்ஷ்மியைப் பார்க்கலாம்.

பெருமாளை விட்டகன்ற  மஹாலக்ஷ்மி, இங்கே வந்து தவம் செய்ததாயும், அப்போ மஹாவிஷ்ணு தோன்றி மீண்டும்  அவளை தன் மார்பில் இருத்திக்கொண்டார் என்றும் ஆனதால் திரு (செல்வம். செல்வத்தின் அதிபதி  மஹாலக்ஷ்மி)வாழ்கின்ற மார்பனாக  மீண்டும் மாறிவிட்டார் என்பதே கதை.
இப்போள் நல்லோணம் மனஸிலாயிக்காணும், அல்லே?

ஏகாதசி விரதம் இந்தக்கோவிலில் ரொம்பவே பிரபலம். இதுக்கும் ஒரு கதை வச்சுருக்காங்க.  முன்பொரு காலத்தில்  சங்கர மங்கலம் கிராமத்தில் இருந்த ஒரு  பெண்மணி (இவுங்களை சங்கரமங்கலத்து அம்மைன்னு சொல்றாங்க)  ஒவ்வொரு ஏகாதசிக்கும் விரதம் இருந்து மறுநாள் துவாதசிக்கு சமையல்  செஞ்சு ஒரு பிரம்மச்சாரிக்கு முதலில் அன்னமிட்டபின் அவுங்களும் சாப்பிட்டு விரதம் முடிப்பாங்களாம்.

அப்போ இருந்த  தோலாகாசுரன் என்ற ஒரு அசுரனுக்கு இது பிடிக்கலை. அதனால் எப்பவும் விரதபங்கம் செய்வானாம். யாரும் அவுங்க வீட்டுக்கு வரவிடாமல் தடுப்பானாம். இது அவுங்களுக்கு ரொம்ப மன உளைச்சலைக் கொடுத்தது. பெருமாளிடம் மனம் உருகி பிரார்த்தனை செஞ்சுக்கிட்டே இருந்துருக்காங்க. ஒரு ஏகாதசிநாள் இரவில்   யாரோ வீட்டுக்கருகே சண்டை போடறமாதிரி சப்தம் கேட்டது.  வெளியே போய்ப் பார்த்தால் அரக்கன்  உயிரை விட்டுருந்தான். மறுநாள் காலை துவாதசி நாளில் ஒரு அழகிய பிரம்மச்சாரி வீட்டுவாசலில் நின்றிருக்கார். அவருக்கு அன்னம் கொடுத்து உபசரிச்சுட்டு, இவுங்களும் சாப்பிட்டு விரதம் முடிச்சுக் கோவிலுக்குப்போய்  பெருமாள் முன் நின்னு  அவருக்கு நன்றி சொல்லிக் கும்பிட்டு நிமிர்ந்தபோது , பெருமாளின் உடலில் அந்த பிரம்மச்சாரி இளைஞனின்  உருவம் தோன்றி மறைஞ்சதாம். அப்போதான் தெரிஞ்சது இவர்கள் வீட்டுக்கு வந்துபோனதும் அரக்கனை வதம் செஞ்சதும் சாக்ஷாத் பெருமாள்தான் என்று.

நமக்குப் பொதுவாக வைகுண்ட ஏகாதசிக்கு உள்ள முக்கியத்துவம் மாதா மாதம் வரும் ஏகாதசிக்கு இருப்பதில்லை. நாங்கள் பூனாவில் இருந்தபோது  அங்கே எதிர் வீட்டில் இருந்த ஒரு கேரளப் பெண்மணி,  வளர்பிறை தேய்பிறைன்னு வரும் ரெண்டு ஏகாதசிக்கும் விரதம் இருப்பாங்க. நான்?  விரதமுன்னு நினைச்சாலே கபகபன்னு பசி வந்துரும், ஜென்மம் :(

நாம் போன சமயம்,  அங்கே எட்டு நாட்களுக்கு ஒரு விசேஷ பூஜை (உத்தான ஏகாதசி வ்ரதாசரணம்) நடக்குதுன்னு  தெரிஞ்சது. நேத்துதான் (அக்டோபர் 27) ஆரம்பிச்சுருக்கு.  நவம்பர் 3 வரை நடக்குமாம்.

கோவிலில் உள்ள தீர்த்தத்தின் பெயர் கண்டா கர்ண தீர்த்தம். கண்டா கர்ணனுக்கும் இங்கே பெருமாள் தரிசனம் கொடுத்தாராம். கதையும் இருக்கு.
கண்டாகர்ணன் என்பவன்  சிவனுடைய பூதகணங்களுக்குத் தலைவனாக இருந்தவனாம். மக்களை  இம்சை செய்வது அவனுக்கு வெல்லம் தின்னாப்போல.  சிவனுக்கு அவர்களை நரபலியாக் கொடுத்துட்டு, இறந்த உடலை தின்னுடுவானாம்.  இந்த சிவபக்தியால் தனக்குக் கட்டாயம் முக்தி கிடைக்கும் என்று இருந்தவனிடம், 'தீவிரவாத வெறியுடன் இருக்கும் பக்திக்கு மோக்ஷம் கிடையாது. சாந்த ஸ்வரூபனாக இருக்கும் விஷ்ணுவை தியானம்செய்தால்தான் முக்தி கிடைக்கும்'என்று சிவபெருமான்  சொல்லி அவனை இங்கே அனுப்பினார்.

'ஓம் நமோ நாராயணாய'என்ற எட்டெழுத்து மந்திரத்தை இடைவிடாமல் சொல்லிக்கிட்டே தவம் செய்ய ஆரம்பிச்சுருக்கான்.  இதைத்தவிர மற்ற ஓசைகள் ஏதும் செவிக்குள் ஏறாமல் இருக்க  காதை மறைத்து  என்னவோ  பொன்னால் ஆன காதணிகூடப் போட்டுருந்தானாமே!  இவனுக்கும் தரிசனம் கொடுத்துருக்கார்  திருமகள் எப்போதும் குடி இருக்கும் மார்பை உடைய திருவாழ்மார்பன்!



இந்தக்கோவிலில்  இன்னும் ஒரு விசேஷம் தினமும் நடக்குதுன்னு சொன்னால் நம்புவதற்கு முடியாதுதான். அது என்னவாம்?   தினம் கதகளி நாட்டியம் நடக்குதாம். ஒவ்வொருநாளும்  இரவு பத்து மணிக்கு ஆரம்பிச்சு பொழுது விடியவிடிய நடக்குதாமே!  காலை நாலுமணி வரை நடக்குமுன்னு நினைக்கிறேன்.அப்பதானே நடை திறக்கும் நேரம். பார்க்கக்கொடுத்து வைக்கலை நமக்கு. முதலிலேயே தெரிஞ்சு இருந்தால் கூடுதலா ஒரு நாள் செங்கன்னூரில் தங்கி இருக்கலாம்.


ஓ...அதுதானா....கோவிலின் முன்பகுதி ஹால் மண்டபத்தில் கதகளி படங்களெல்லாம் வச்சுருந்தாங்க! அப்போ இதைப் பார்த்தாலும் என்ன ஏதுன்னு விசாரிக்கத் தோணலை பாருங்க:(


வெளிப்ரகாரம் வலம் வந்தப்ப தூரத்தில் ஒரு யானை! ஆஹான்னு  அங்கே போக இருந்தவளைத் தடுத்து , 'ஆனைக்கு மதம் இளகிட்டுண்டு.  அடுத்துச் செல்லேண்டா'என்றார் கோவில் ஊழியர். ப்ச்....  பாவம்.  சின்ன வயசுக்காரந்தான்.  என்ன ஆச்சோன்னு மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு. தலையைத் தலையை ஒரு மாதிரி ஆட்டிக்கிட்டே இருந்தான். ஐயோ...பெருமாளே....



இங்கே ஸ்ரீவல்லபன், ப்ரம்மச்சாரி என்பதால் பெண்கள்  சந்நிதி முன்பு வந்து கும்பிடக்கூடாது. வெளியே நின்னுதான் கும்பிடணுமுன்னு  ஒரு காலத்தில் நியமம் இருந்துருக்கு. என்ன பிரம்மச்சாரியோ? அதான்  மஹாலக்ஷ்மி  அவன் மார்பில் வாழ்ந்துக்கிட்டுத்தானே இருக்காள்! வருசத்தில் ரெண்டே நாட்களுக்கு மட்டும் அனுமதின்னு ஆச்சாம். தனுர் மாசத்தில் வரும் திருவாதிரை நக்ஷத்திர நாளிலும்,  புது வருசப்பிறப்பு  விஷூபண்டிகை நாளிலும் மட்டும் என்று.  நல்லவேளை அந்த  வேண்டாத நியமங்கள் எல்லாம் 1968 வருசம் போயே போச்.   இப்ப பிரச்சனை ஒன்னுமில்லையாக்கும்.


இப்ப யார்யார் கோவிலுக்குள் வரக்கூடாதுன்னு ஒரு நோட்டீஸ் போட்டு வச்சுருக்காங்க:(  எல்லாம் மனுஷ்யர் பண்ணும் (தலை) விதிகள்,  அட்டகாசம். என்னவோ போங்க.


ரொம்பவே அதிகாலையில் எழுந்து கிளம்ப முடியுமுன்னால்  செங்கண்ணூரில் இருந்து நேரா இங்கே வந்து தரிசனம் முடிச்சுக்கிட்டு, திருவமுண்டூர், முண்டன்காவுன்னு முடிச்சுட்டுப்போய்க்கிட்டே இருக்கலாம். பாருங்க நாம் காலை ஆறேகாலுக்கு அறையில் இருந்து கிளம்பி மூணு திவ்யதேசங்களை தரிசனம் செஞ்சுட்டு இப்போ எட்டரைக்குத் திரும்பி இருக்கோம்.  தென்திருப்பதியில் இருந்து பகவத் கார்டனுக்கு (நம்ம ஹொட்டேல்) திரும்பிவர  பத்தே கிலோ மீட்டர்தான்.

வாங்க,  போய்  நம்ம  ஆர்யாஸில்  காலை உணவை முடிச்சுக்கலாம் சரியா?

தொடரும்............:-)


ஆரன்முளான்னு கேட்டால் உங்களுக்கு என்ன தோணும்? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 33)

$
0
0
எனக்குச் சட்னு தோணியது ஓணசமயத்து அவிடே நடக்குன்ன  வள்ளம்களி. ஸ்நேக் போட் ரேஸ்ன்னு சொல்வாங்க.பாம்பு போல நீளமான படகுலே ரெண்டு பக்கமும் துடுப்புப்போடும் ஆட்கள் வரிசையா உக்காந்து துடுப்பு வலிக்க,  அவுங்களை உற்சாகப்படுத்தும்  பாட்டுக்காரர்கள்  பாட, பகுதி பகுதியா ஒவ்வொன்னுக்கும் ஒரு  டீம் லீடர் போல  நின்னு  'ஆகட்டும், இன்னும் வேகமா துடுப்பைப் போடுங்க'ன்னு  படகில்  நடுவில் இருக்கும் மேடையில்  நிற்கும் ஒரு எட்டாளுன்னு  அட்டகாசம்தான் போங்க.

இந்தப் படகுகளுக்குப் பள்ளியோடம் என்ற பெயர்.  ஒவ்வொரு படகிலும் ஸ்ரீ மஹாவிஷ்ணு  இருக்கிறார்னு ஒரு ஐதீகம். அதனால்  போட்டின்னதும் ஒருத்தரோடு ஒருத்தர் போட்டி போட்டுக்கிட்டு வருவாங்கன்னு நினைக்கப்டாது.  வஞ்சிப்பாட்டு என்றொரு  ஸ்டைலில் இருக்கும் பாட்டுப் பாடிக்கிட்டே கருடன் முகப்பு இருக்கும் பெருமாளின் படகுக்குத் துணையா வரும் பாம்புப் படகுகள்தான் இவை.   39  பகுதிகளில் இருந்து வருபவை.
படகின் நீளம் 103 அடி! துடுப்பு வலிக்கும் ஆட்கள்  64  பேர்னு  கோலாகலம்தான்.

 கடைசியில் இவுங்க கோவிலுக்குப் பின்னால் இருக்கும் கடவுக்கு வந்து சேர்வாங்க.  'உத்திரட்டாதி  வள்ளம்களி'ன்னு இதுக்குப்பெயர்!  சரியாச் சொன்னால் இது ஓணம் பண்டிகை முடிஞ்சு நாலாம் நாள் உத்திரட்டாதி நட்சத்திர தினத்தில் நடக்கும். இதெல்லாம் நம்ப  பம்பாநதியில்தானாக்கும், கேட்டோ!

இந்த 64 பேர் என்ற எண்  அறுபத்திநான்கு கலைகளையும், பாம்பின் தலைப்பகுதியில் நிற்கும்  நாலு மேஸ்திரிகள்  நான்கு வேதங்களையும், மேடையில்  நிற்கும் எட்டு ஆட்கள் அஷ்டதிக் பாலகர்களையும் குறிக்குதுன்னும் ஒரு ஐதீகமுண்டு.  இந்த படகு  தயாரிக்க ஆகும் செலவு ஒரு 16 லக்ஷம்  ரூபாய் !  குறைஞ்சது ரெண்டு வருசமாகுமாம் ஒரு பாம்புப் படகு தயாரிக்க.

படகுக்கும் கோவிலுக்கும் ஏன் இவ்வளவு முக்கியமாம்?   இங்கே பிரதிஷ்டை செய்ய மூலவரைக் கொண்டு வந்தப்ப, ஒரு காட்டு வழியில்  வெகுதூரம் வரவேணுமேன்னு  காட்டில் இருக்கும்  மூங்கில்களில்  ஆறு மூங்கில்களை வெட்டி அதை இணைச்சுக்கட்டிய தெப்பத்தில்   சாமியை வச்சுப் பம்பா நதியில்  ஓடம் போல ஓட்டிக்கிட்டு, இங்கே   கொண்டு வந்தாங்களாம்.   ஆரண்முளா.  (ஆறு மூங்கில்கள், ஆரண்யத்தில் இருக்கும் மூங்கில்கள்  ) இவ்ளோ கஷ்டப்பட்டது யாருன்னால்....எல்லாம் நம்ம அர்ஜுனன்தான். வில்லாளி!

பாரதப்போர் முடிஞ்சாட்டு  பல ஆண்டுகள் ஆட்சி செஞ்ச பாண்டவர்கள் , பேரன் பரீக்ஷித்துக்குப் பட்டம் கட்டுனபிறகு  மன நிம்மதி வேண்டி  யாத்திரை வந்தாங்கன்னு  ஆரம்பத்திலே சொன்னேன் பாருங்க அப்ப ஒவ்வொருத்தரும் ஒரு கோவிலாக் கட்டி எழுப்பி இருக்காங்க.

கர்ணன்,  தங்கள் அனைவருக்கும் மூத்த சகோதரன் என்ற விவரம் அறியாமல்,  போர்க்களத்தில், அவன்  பூமியில் அழுந்தியிருந்த தேர்ச்சக்கரத்தை  வெளியே இழுக்கும்  சமயத்தில் , வஞ்சகமா அவனைக் கொன்னுட்டோமேன்னு  அர்ஜுனனுக்கு மனதில்  ஓயாத குற்ற உணர்ச்சி. நினைச்சு நினைச்சு வெம்பிக்கிட்டு இருக்கான்.  'இதுதான் சமயம், அவனைக்கொன்னுடு'ன்னு சொன்ன  கிருஷ்ணன் பேச்சைக் கேட்டோமேன்னு வேற குமுறல்.
கிருஷ்ணனை தியானிச்சு, இப்படி என்னை பாவம் பண்ணவச்சுட்டீரேன்னு புலம்பும் சமயம், பெருமாளே  பார்த்தசாரதி உருவத்தில்  தரிசனம் கொடுத்துருக்கார்.  ஆனால் கையில்  வெறும் சாட்டை மட்டுமில்லாமல், வலது கையில் சக்கரமும் வச்சுருக்கார்!

 பீஷ்மர் மேல் அம்பு எய்ய விருப்பம் இல்லாமல்  அர்ஜுனன் தயங்குனது பொறுக்காமல் 'இப்ப நீ அவரைக் கொல்லத் தயங்கினால் நான் போய் கொல்லப்போறேன்'னு  அங்கே கீழே விழுந்திருந்த தேர்ச்சக்கரத்தைத்  தூக்கி வீசப்போறார்.  அப்போ அர்ஜுனன்,  'போர்க்களத்தில் ஆயுதம் ஏந்தமாட்டேன்னு வாக்கு கொடுத்தது மறந்து போச்சா'ன்னு கேட்டு அதைத் தடுத்து நிறுத்தினான்.

  அதுக்குப்பிறகுதான் பீஷ்மர் மேல் அம்பெய்தது.  பீஷ்மர் அம்புப் படுக்கையில்  இருந்தது.  அதன் பிறகுதான் அதுவரை போரில் பங்கெடுக்காமல் ஒதுங்கி இருந்த கர்ணன்  படைத்தலைமை ஏற்று பாரதப்போரில்  கலந்து கொண்டதுன்னு  பாரதக்கதை போய்க்கிட்டே இருக்கும். பாரதமுன்னு  ஒரு வார்த்தை சொன்னாலே எப்படி நீண்டு போய்க்கிட்டே இருக்கு பாருங்க:-)

 ஆர்யாஸில் எனக்கு  இட்லி, கோபாலுக்குப் பூரின்னு கிடைச்சது. சீனிவாசன் தோசை, பொங்கல் னு  வாங்கிக்கிட்டார். காஃபி   எப்படி இருக்குமோன்னு பயந்து, நாங்க டீ வாங்கிக்கிட்டோம். அறைக்குப்போய் சாமான்களை ஒதுக்கி ரெடியா வச்சுட்டு,  கீழே ரிஸப்ஷனில்  இருந்த  நந்தகோபாலிடம் (அப்படித்தான் நினைக்கிறேன்)எதுக்கும் இருக்கட்டுமுன்னு  ஆரண்முளா கோவிலுக்கு வழி கேட்டுக்கிட்டோம்.   ஒரு பத்து கிலோமீட்டர்தான்  தூரம் என்றார்.  இப்போ மணி ஒன்பதரைதான். இஷ்டம்போல் சமயம் உண்டு என்றார்:-)  கிளம்பிய இருவது நிமிசத்தில் கோவிலுக்கு வந்துட்டோம்.  சபரிமலைக்கு இதே ரோடில்தான் போகணுமாம்.



திருவாறன் விளை என்பது புராணப்பெயரா இருந்தாலும் இப்ப இந்த  இடத்துக்கு ஆரன்முளா என்ற பெயரே நிலைச்சுருச்சு.

கொஞ்சம் உயரத்தில் இருக்கு கோவில். எத்தனை படிகள் என்று  (என் வழக்கம்போல்)  எண்ணிப்பார்த்தேன். பதினெட்டு!  அந்தப் பதினெட்டுக்குப் பதிலா இந்தப் பதினெட்டு அய்க்கோட்டே!

படிகள் கடந்து கோவிலுக்குள் நுழையறோம். ரெண்டு பக்கமும் பிரமாண்டமான திண்ணைகளும் நடுவில்  விசாலமான  இடைநாழியுமா இருக்கு. ஒரு திண்ணையில் நிறைய சாமி படங்களுடம்,  வாமன அவதாரமோ என்று நான் நினைச்ச ஒரு  சிலையும். தாழங்குடை பிடிச்ச அந்தணர்.
இன்னொரு திண்ணையின் சுவரில்.....  ஆஹா....எல்லாம் நம்மாட்கள்!!!


கஜ சாம்ராட்  திருவாரன்முளா பார்த்தசாரதி,  கஜ ராஜன் திருவாரன்முளா ரகுநாதன்  கஜ கேசரி  திருவாரன்முளா மோஹனன்!  பெரிய படங்கள்.  தும்பிக்கை தரையில் மடங்கிக் கிடக்கு. அவ்ளோ நீளம். இப்ப இவுங்க யாருமே இங்கே  பகவான் சேவையில் இல்லை. சாமிக்கிட்டேயே போயிட்டாங்க.
இப்ப இருப்பவரைக் காணோம். வெளியே போயிருக்கலாம்.



முன்மண்டபம் ரொம்பவே பெருசு. அடுத்து  ரெண்டு பக்கமும் பெரிய தீபஸ்தம்பம், நடுவில்  வெயிலுக்கு ஷாமியானா போட்டு வச்சுருக்காங்க. அங்கங்கே வயசான பெரியவர்கள் பலர்.






தங்கக்கொடிமரம்  தகதக. கொடிமரத்தின் அடிப்பாகத்தில் சுற்றிலும்  அழகழகான  சாமி விக்கிரஹங்கள்!  தீபஸ்தம்பங்களின் உச்சியில் கைகூப்பிய கருடர்!




துலாபாரம் கொடுப்பது இங்கே விசேஷமாம். தராசுக்குப்பக்கத்தில் நிற்கும்  இன்னொரு சின்ன தீபஸ்தம்பத்திலும் வித்தியாசமான கருடர்.  மூக்கு..... அப்பப்பா...சூப்பர். காலத்தில் மூத்தது!   இதே போல் ஒன்னு கிடைக்குமான்னு கடைகளில் தேடிப் பார்த்தேன்.ஊஹூம்.:(

கேமராவை மரியாதையாகப்  கைப்பைக்குள் வச்சுட்டு  வெளிப்பிரகாரம் கடந்து கருவறைக்குப்போறோம். மூலவர் பார்த்தஸாரதி, நின்ற கோலத்தில் சாதிக்கிறார். கிழக்குப் பார்த்த சின்ன உருவம்தான்.  தங்கக்கவசம் போர்த்திக்கிட்டு இருந்தார். கையில் சக்கரம் இருக்கான்னு பார்த்தேன். இருக்கு! ப்ரயோகச் சக்கரம்!  இப்ப நினைச்சால் புறப்பட்டுப்போகும் வகையில்:-)

ப்ரம்மாவுக்கும்  வேதவ்யாஸருக்கும்  இங்கே தரிசனம் கொடுத்துருக்காராம்.
மூலவருக்குத்  திருக்குறளப்பன் என்ற பெயரும் உண்டு. ஓஹோ....அதான் வாமன ரூபச் சிலை திண்ணையில் இருக்கோ! வாமனரூபம்  காணவேண்டும் என்ற ப்ரம்மாவுக்காக  வாமனராக காட்சி கொடுத்ததாகவும் சொல்றாங்க.

சரியாகத்தான் இருக்கும்.  வாமனராக இருந்து  உருவம்பெருக்கி உலகளந்தான் ஆகி சத்யலோகமும் தாண்டி  பாதம் போயிருக்கும்போதுதானே ப்ரம்மாவும் பாத தரிசனம் செஞ்சுருப்பார்.

தாயார் பெயர் பத்மாஸனி நாச்சியார். பரசுராமருக்கும் தனியா  சந்நிதி இருக்கு.
பெரிய கோவில்தான். வெளிப்ரகாரம் சுற்றி வடக்குவாசல் வந்தால்  அந்தாண்டை பம்பா நதி.  நதிக்கரைக்குப்போக  57 படிகள் இறங்கணும்.

கோவில் உள்பிரகாரச்சுவர்களில்  ம்யூரல் வகை ஓவியங்கள் ஏராளம். எல்லாம்  பதினெட்டாம் நூற்றாண்டில் வரைந்தவையாம்!

சபரிமலை ஐயப்பஸ்வாமியின் திருவாபரணங்கள் எல்லாம் இங்கேதான்  பத்திரமா வச்சுருக்காங்க. மகரவிளக்கு சமயம் நகைப்பெட்டியையும்  ஐயப்பனுக்கு  உடுத்திக்கொள்ள தங்க அங்கியும் இங்கே இருந்துதான் செண்டைமேளதாளத்தோடு ஊர்வலமா எடுத்துக்கிட்டுப்போறாங்க. அதானால் ஐயப்ப சாமி பக்தர்களுக்கு இது ரொம்பவே வேண்டப்பட்ட க்ஷேத்திரம்!

1973 இல் மன்னர் சித்திரைத்திருநாள் அவர்களின் காணிக்கை இந்த தங்க அங்கி.

இந்த ஆரண்முளா பார்த்தஸாரதி கோவிலில் இருந்து சபரி மலைக்கு  75  கிமீதான் தூரம். ரெண்டுமணி நேரத்தில்  போயிடலாம்.  பதினெட்டாம் படி ஏறிப் போகணுமுன்னால்தான் நியமங்கள் அதிகம். ஒவ்வொரு மலையாள மாசத்திலும் முதல்  அஞ்சு நாட்கள் மட்டுமே நடை திறந்து வைப்பதால் டிமாண்ட் அதிகம். ச்சும்மா அதுவரை போய் பார்த்திருக்கலாமோன்னு  இப்பத் தோணுது.

நம்மாழ்வார் இங்கே வந்து  பெருமாளை தரிசனம் செஞ்சு  பத்துப்பாசுரங்கள் பாடி மங்களசாஸனம் செஞ்சுருக்கார்.  நூற்றியெட்டு திவ்யதேசக் கோவில்களில் இதுவும் ஒன்று.

அதிகாலை நாலரை முதல் பனிரெண்டரை வரையும்  மாலை ஐந்து முதல் எட்டு வரையும் கோவில் திறந்திருக்கும். நின்னு நிதானமாக்  கும்பிட்டு வரலாம்.

இங்கே நடக்கும் சில திருவிழாக்கள் வேறெங்கும் நான் கேள்விப்படாதவையாத்தான் இருக்கு. அதுலே ஒன்னு 'வல்லிய சத்யா'பெரிய விருந்துன்னு சொல்றதைவிட பிரமாண்டமான விருந்துன்னு சொல்லலாம்.  வள்ளம் களி முடிஞ்சதும்,  படகில் வந்த அந்த  39 பகுதிமக்களுக்கும்,  திருவிழாவுக்குக் கூடி இருக்கும் மற்றவர்களுக்கும் கோவில் ஒரு விருந்து சமைச்சுப்போடுது.  போனமுறை நாப்பாதாயிரம் மக்கள் விருந்துலே கலந்துக்கிட்டாங்களாம்!

இன்னுமொரு ஸ்பெஷல்,  இங்கே நடக்கும் காண்டவ வனம் தகனம் . கோவிலுக்குமுன்னால்  காடு போல்  தோற்றம் தரும் வகையில் (ஒரு  அடையாளமாத்தானாக்கும், கேட்டோ!) மரக்கிளைகளைகள் செடிகள் எல்லாம் நட்டு(!)  அதுக்குத் தீமூட்டி எரிச்சு  மகாபாரத சம்பவத்தை  நினைவூட்டும் திருவிழா.

தனுர் மாசத்திலே நடக்குது. இது நம்ம மார்கழி மாசம்தான். குளிருக்கு இதமா இருக்கும்:-)

கோவிலில் இருந்து வெளிவரும் சமயம் திண்ணையில் இருந்த ஒரு முதியவரிடம்,  கோவிலில் ஏகப்பட்ட முதியோர்,  மண்டபங்களில் அங்கங்கே  இருப்பதின் காரணம் என்னன்னு கேட்டேன். இங்கே  வேறெந்தக் கோவிலிலும் இப்படி ஒன்னு இதுவரை பார்க்கலை!  கோவில் நடத்தும் முதியோர் இல்லத்து மக்களாம். சாப்பாடு அங்கே மூணு வேளையும்  கிடைக்குதாம். சும்மா அங்கே போரடிச்சுக் கிடக்காம இப்படிக் கோவிலில் வந்து இருக்காங்களாம்.   இதர செலவுகளுக்கு  கொஞ்சம் காசு இங்கே வரும் பக்தர்களால் கிடைக்குது என்பதே காரணம் என்றார்.


மலைநாட்டு திவ்யதேசங்கள் பட்டியல் ஒன்னு போட்டு வச்சுருக்காங்க.


மீண்டும் பதினெட்டுப்படிகள்  இறங்கி  வந்தால் படிகளின் ஓரத்தில் சிலர்  இருந்து சட்னு கையை நீட்டுனாங்க. அவுங்க தமிழர்கள் என்று பேச்சில் தெரிஞ்சது:(

இதுவரை பார்த்த கோவில்கள் போல் இல்லாமல் இங்கே நிறைய கோவில்கடைகள் தெருமுழுசும்.  ஆரன்முளா கண்ணாடி என்பது இங்கே ரொம்ப ப்ரசித்தம். பஞ்சலோகத்தில் செஞ்சது. போலிகள் இதிலுமிருக்கு என்பதால்  இந்தக் கடைகளில் வாங்க யோசனையா இருக்கு.  நல்லதாக வாங்கணுமுன்னா அதுக்கான கடைகளைத் தேடிப்போகணும்.  நமக்கு எப்பதான் நேரமிருக்கு? ஹூம்...

திருவாறன் விளை பார்த்தஸாரதி கோவில் சுற்றி, தரிசனம் செஞ்சு கிளம்ப இருபதே நிமிசம்தான் ஆகி இருக்கு.  பார்த்தஸாரதின்னதும்  நம்ம தில்லக்கேணி, முறுக்கு மீசையும் விரித்த கண்களுமா, ஆஜானுபாகுவா  ஏழடி உசரத்தில் நிகுநிகுன்னு நிற்பவன்  'டான்'ன்னு நினைவுக்கு வந்துட்டான்:-)

இந்த பஞ்சபாண்டவர்கள் கட்டிய அஞ்சு கோவில்களும்  இதே செங்கண்ணுர் பகுதிலே இருக்கு பாருங்க, இதை இங்குள்ளவர்கள் அஞ்சம்பலம் என்று சொல்றாங்க.

சரியான திட்டம்போட்டால் ஒரு அரை நாளிலே இந்த அஞ்சு கோவில்களையும்  தரிசிக்கலாம். கோவில் நேரங்கள்  காலை நாலு முதல் பனிரெண்டரைன்னு நினைவில் வச்சுக்கணும்.  இதுலே நாலு கோவில்கள்  செங்கண்ணூருக்கு வடக்குப் பக்கம்தான்.  காலையில் ஏழுமணிக்குக் கிளம்பினாலும் அவைகளை ஒரு மூணு மணி நேரத்தில் பார்த்துடலாம். அதன்பின்  இந்த  ஆரண்முளாக் கோவிலுக்கு  வரலாம்.  இது ஒன்னுதான் பகல் பனிரெண்டரை வரை திறந்துருக்கு.

நம்மூர்க் கோவில்கள் போல  கோபுரங்கள், மண்டபத்தூண் சிற்பங்கள் இப்படி ஒன்னும் இல்லாமல் ரொம்பவே சிம்பிளா, ப்ளெய்னா இருக்கு எல்லாமே! சாமிகளின் சிலைகளும் கூட  அதிகபட்சம்  மூணடி வரை இருக்கும் சின்ன உருவங்களே! ( திருவனந்தபுரம்  பதுமனுக்குத்தான் ஒரு   உசரக்குறைவான அகலக்கோபுரம். பதுமனும் 18 அடி நீளமானவன்! ) ஆடம்பரம் இல்லாமல் அமைதி தவழும் இடங்களாக் கோவில்கள் இருப்பது அபூர்வம்தான் இந்தக் காலங்களில்.


மனத்திருப்தியுடன்  செங்கண்ணூர் திரும்பி  ஹொட்டேலுக்கு வந்து அறையைக் காலி செஞ்சுட்டுக் கிளம்பிட்டோம்.

தொடரும்...........:-)

PIN குறிப்பு: இதென்ன இந்தப்பதிவில்  நிறைய இடங்களில்  18, பதினெட்டுன்னே வந்துருக்கு!

வயசு பத்தாச்சு இந்த வீட்டுக்கு ! (ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் : பகுதி 3 )

$
0
0
ஆச்சு இப்போ மார்ச் மாசம் 27 தேதி. எங்க கோடை காலம் முடிஞ்சும்  இப்போ  27 நாளாகிப்போச்சு. அடுத்த கோடை வரும்வரை  ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒவ்வொரு கோடை காலத்துக்கும் (டிசம்பர்  1 முதல் ஃபிப்ரவரி கடைசி வரை)  அந்த வருசத்துக் கடமைகளில் என்னென்ன  செய்ஞ்சுக்கணுமுன்னு ஒரு பட்டியல் போட்டு வச்சுக்கறது  ஒரு  வழக்கம். பெரும்பாலும் பெயிண்ட் வேலைகள் தான். பெயிண்ட் கடைக்காரர்களும் சம்மர்  ஸ்பெஷலுன்னு  இதைத்தான் டிவியிலும் பத்திரிகையிலும்,  ரேடியோவிலுமா கூவிக்கூவி விப்பாங்க.  தாய் தகப்பன்  வண்ணம் பூசும் வேலையில் பிஸின்னா.... பசங்களுக்குப் போரடிக்காம இருக்க பரமபதம்  விளையாடலாமாம். கடையின் உபயம்:-)


அதென்ன வருசா வருசம் பெயிண்டிங்கன்னா.... அப்படித்தான். மொத்த வீட்டுக்கும் ஒரே சமயம் பெயிண்ட் அடிச்சுக்க முடியாது.  வேலைக்கு ஆளா இருக்கு?  எல்லா வேலையும், ஹார்பிக் பயன் படுத்துமிடம்  உட்பட நாம்தானே செய்யணும்!  ஒவ்வொரு சம்மருக்கும்  ஒவ்வொரு பகுதியா  வேலையை முடிக்கணும். மொத்தம் முடியறதுக்குள்ளே  முதலில் ஆரம்பிச்ச இடத்துக்கு  பெயிண்ட் அடிக்கும் நாள் வந்திருக்கும்.

எங்க நண்பர் ஒருவர் ( போலீஸில் பெரிய வேலையில் இருக்கார்)  வீட்டில்  பெயிண்ட் அடிக்கப் போட்டு வச்ச சாரம் (scaffolding) வீட்டைச் சுற்றியே வெவ்வேற பகுதிகளில் எப்போதுமே நிரந்தரமா இருக்குது. அவுங்கவீடு  ரொம்பபெரிய மாளிகை என்றாலுமே வெளியே மரச்சட்டங்களால் ஆனது.  wooden  cladding வுட்டன் க்ளாடிங்.  நல்லவேளையா  வெள்ளை நிறக் கட்டிடம் என்பதால்  பார்த்தவுடன் அவ்வளவா  பழைய புதிய பெயிண்டிங் வித்தியாசம் தெரியாது. அவருக்கு ஓய்வு கிடைக்கணும். அப்போ கொஞ்சமாவது வெயிலும் இருக்கணும்.பெயிண்ட் அடிக்கக் கிளம்பிருவார்.

எங்க பழைய வீட்டை வாங்குனதும்,  கோடை  வந்தவுடன் முதலில்  செய்ய ஆரம்பிச்சது  வீட்டுக்குள் ஸிட்டிங் & லிவிங் ரூம் நிறத்தை மாற்றும் வேலைதான்.  பழைய ஓனரின் மனைவிக்கு என்ன ஆச்சோ.... அவுங்க  கடும் பச்சை நிறம் (ஆலிவ் கலர்) அடிச்சு வச்சுருந்தாங்க. அதை  ஹானஸ்ட் என்ற ஒரு வகை  இள ரோஜா வண்ணத்துக்கு மாத்தினோம். வாழ்க்கையில் முதல்முறையா பெயிண்ட் ப்ரஷைக் கையில் எடுத்தோம்.

பச்சையை மாத்த மூணு கோட்டிங் அடிக்க வேண்டியதாப் போச்சு. நமக்கோ ஒருஅனுபவமும் இல்லை பாருங்க.... அதனால் சரியா வரலைன்னதும், ரோலர் பிரஷ் மேலே பழியைப் போட்டுருவார் கோபால். அந்த வீட்டுக்குப் பக்கத்தில்  ஒரு ஹார்ட் வேர் கடை இருந்துச்சு. நான் ஓடிப்போய்  வேறொரு செட் பிரஷ்களை வாங்கியாருவேன்.  இப்படியே  வாங்கி வாங்கி பெயிண்டுக்கு செலவான காசைவிட பிரஷ்களுக்கும் ரோலர்களுக்கும் தான் அதிக செலவு:-)

(நான் கொஞ்சம் பெயிண்டிங்  செஞ்ச காலம் உண்டு. அது கலை!  ஆரம்பகால பூனா வாழ்க்கையில்  வாழ்த்து அட்டைகளைச் செய்யக் கத்துக்கிட்டேன். அங்கே ஒரு இடத்தில் கிடைக்கும் ஹேண்ட்மேட் பேப்பரில் படங்கள் வரைஞ்சு  உள்ளே வெள்ளைக் காகிதம் வச்சு வாழ்த்து அட்டைகள் தயாரிச்சு,  டிஃபென்ஸ் டாட்டூ நடக்கும்போது  ஸ்டால் போட்டு விற்கும் மகளிர் அணிக்கு நன்கொடையாக க் கொடுத்துருவோம்.  ஆர்மி, நேவி, ஆஃபீஸர்ஸ் மனைவிகளின் மகளிர் அணி இது:-)

நான் எப்படி அந்தக் கூட்டத்துலே போனேன்?  அப்ப நாங்கள் பூனா போன புதுசு.  வீடு கிடைப்பது  மகா கஷ்டம் அங்கே.  எங்கள் நண்பரின் உறவினரான  நேவி கமாண்டரின்  பிரமாண்ட மாளிகையில்  ஒரு மூணு மாசம் தங்கி இருந்தோம். கமாண்டரின் மனைவியும் நல்லா நட்பாக பழகுவாங்க.  பகல் முழுசும் நாங்க ச்சும்மா இருந்த காலங்கள்.  வீட்டுவேலைகளுக்குத்தான் ஏகப்பட்ட பணியாட்கள் இருந்தாங்களே!  லேடீஸ் க்ளப்,  சாரிட்டி ஒர்க் இப்படி எதாவது செய்வதுதான் முழுநேரப்பொழுது போக்கு! ஹை சொசைட்டி லேடீஸ் பாருங்க!

ஆனா ஒன்னு சொல்லணும், அந்த மூணு மாசங்களில்  மெழுகுவத்தி தயாரித்தல், பதீக் டிசைன் போட்டு  வண்ணம் சேர்ப்பது, பெயிண்டிங்,  வாயால் உபச்சார மொழிகள் பேசுதல்,  ரொம்ப  தாழ்மையாக இருப்பது போல் காட்டிக்கிட்டு ,'ஏய் உன்னைவிட நான் உசத்தியாக்கும்'என்று சொல்லாமல் சொல்லிக்கும் மேட்டுக்குடிப் பேச்சு, அதுக்கான பார்வை, உடல்மொழின்னு  நிறையத்தான் கத்துக்கிட்டேன்:-) நல்ல வேளையா வேற இடம் கிடைச்சு சாதாரண நிலைக்கு நான் திரும்பிட்டேன். இல்லைன்னா நம்ம கோபாலுக்கு ரொம்பவே கஷ்ட ஜீவனமா ஆகி இருக்கும்:-))))

வரைய ஆரம்பிச்ச புதுசில் வரைஞ்சவைகள்  எங்கியோ பரணில் போட்ட பெட்டிகளில் இருக்கணும். ஒருநாள் தேடிப்பார்க்கணும். ரெண்டு படங்கள் மட்டும் ஆப்ட்டது. இங்கே போட்டுருக்கேன். ஆரம்ப நிலை என்பதால் கொஞ்சம் க்ரேஸ் மார்க் போட்டுவிட்ருங்க:-)


எங்கியோ போயிட்டேன்....சரி. இப்போ வீட்டுக்குப் பெயிண்ட் அடிப்பதைப் பார்க்கலாம். புது வீடுன்னா முதல் அஞ்சு வருசத்துக்குப்பின்  பெயிண்ட் அடிக்கத்தான் வேணும். அப்படி பார்த்துப் பார்த்து வீட்டை மெயின்டெய்ன் செய்வதால்தான்  அம்பது அறுவது வருஷப்பழைய வீடுகள் கூட  எதோ சமீபத்துலே கட்டுனதைப்போல் இருக்கு, இங்கெல்லாம்.

நம்ம சென்னை வாழ்க்கையில்  பெஸண்ட் நகர் வீட்டுக்கு முதல் முதலில் வீடு பார்க்கப்போனபோது  கட்டிடத்தின் பக்கவாட்டு சுவரின் வெளிப்புறம் ஒரே பச்சை நிறத்தில் பாசி பிடிச்சு அழுக்காக் கிடந்துச்சு.  என்னன்னு விசாரிச்சதில்  ஓவர்ஹெட் டேங் தண்ணீர் ரொம்பி வழிஞ்ச  அடையாளமுன்னு சொன்னாங்க.  வீட்டு முன்புறமும் கூட ரொம்ப சுமார்தான். கடைசியில் பார்த்தால் அந்த வீடு கட்டியே ரெண்டரை வருசம்தான் ஆச்சாம்!   கடற்கரை, உப்புக் காத்து இப்படி பல காரணங்களும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

நம்ம வீட்டுக்கும்  அஞ்சு வருசம் ஆனதும் பெயிண்ட் அடிக்கணும்.  அரசாங்கமே உள்ளேயும் வெளியேயுமா மொத்த வீட்டுக்கும் பெயிண்ட் இலவசமா அடிச்சுக் கொடுத்துருச்சு. எப்படி? அதான் நிலநடுக்கத்தில் டேமேஜ் ஆனவைகளை எர்த் க்வேக்கமிஷன் ரிப்பேர் செஞ்சு கொடுக்குதே. நம்ம வீட்டுக்கு பெருசா ஒன்னும் ஆகலை .கட்டுமானவேலைகளில் பழுது ஒன்னும் ஆகலை. வெளிப்பூச்சுகளிலும், உள்ளே  ஜிப் பூச்சு வேலைகளிலும்  கொஞ்சம்  காஸ்மெடிக் டேமேஜ்தான்.  அதைப் பழுதுபார்த்து  மொத்த வீட்டுக்கும்  பெயிண்டிங் வேலை முடிச்சுக் கொடுத்ததால் நமக்கு வேலை மிச்சம்.

ஆனாலும் வீட்டைச் சரி செஞ்சாங்களே தவிர  முன்வாசல் ஸ்டாம்ப்டு காங்க்ரீட்டையும் சுத்தப்படுத்திக் கொடுத்துருக்கலாமுல்லெ:-)

ஆகக்கூடி, இந்த சுத்தப்படுத்தும்வேலை,  ஃபென்ஸுக்குப் பெயிண்ட் அடிக்கும் வேலை, முன்வாசல் கதவுக்கு எண்ணெய் பூசும் வேலையெல்லாம் நம்ம மெத்தனத்தாலே  சும்மாவே கிடந்தது. இனியும் தள்ளிப்போடக்கூடாதுன்னு இந்த சம்மர் ப்ராஜெக்ட்டாக் குறிச்சு வச்சுக்கிட்டோம்.

நம்ம வீட்டுத் தொழிலாளியும், சித்தாளுமா வேலையை  ஆரம்பிச்சு ஒவ்வொன்னா முடிச்சோம்.


 வாட்டர் ப்ளாஸ்டர் ஒன்னு வாங்கினதும் காங்க்ரீட் வேலை முடிஞ்சது. இங்கே தண்ணீர் கஷ்டம் இல்லை. தண்ணீருக்கும் மீட்டர் கிடையாது.  தண்ணீர் இருப்பு குறைஞ்சால் சிட்டிக் கவுன்ஸில் சிக்கனமா இருக்கச் சொல்லும். வீட்டு கதவிலக்கம் அனுசரிச்சு , வாரம் எந்தெந்த நாள்  செடிக்குத் தண்ணீர் விடலாம் என்று சொல்வாங்க. நாங்களும் சொன்னபேச்சைக் கேட்போம்.

Before 

After
அழுக்கு போனதும்  தரை பளிச்:-)

ஸ்ப்ரே கன் ஒன்னு வாங்கினதால் ஃபென்ஸ்க்கு பெயிண்ட் அடிப்பது  கஷ்டமில்லை. ஆனா  கைவிரல்கள்தான் மரத்துப்போச்சுன்னார்.  ஓடிப்போய்  மேங்கோ மில்க் ஷேக்  செஞ்சு கொடுத்தேன். கருவேப்பிலை மரத்தை(!) பெரிய தொட்டிக்கு மாத்தணுமுன்னு  வாங்கி வந்த நீலத்தொட்டிக்கு  பச்சை வண்ணம் அடிச்சு பசுமைப் புரட்சி(யும்) செஞ்சுட்டோம்லெ!


 Before
After


கட்டக்கடைசியா ஒரு வேலை பாக்கி இருந்தது. வாசக்கதவுக்கு  எண்ணெய் பூசுவது.  மரக்கதவு.  தேவதாரு மரம். இதுக்குன்னு கிடைக்கும் எண்ணெயைக் கதவு முழுசுக்கும் பெயிண்ட் ப்ரஷால் பூசணும். அதுக்கு முன் நல்லா அழுக்கைத் துடைச்சுட்டு, ஸ்டீல் வுல்  வச்சு லேசா தேய்ச்சு பழைய பிசுக்கை எடுக்கணும்.    பிசுக்குன்னு  பிசுக்கா இருக்காது. ஷுகர் ஸோப் போட்டும் கழுவலாம். மரத்தில் ஊறிப்போன எண்ணெய்ச் சுவடுகள்.

எண்ணெய்க்கு  ஆர்டர் கொடுத்துட்டு வந்த மூணாம்நாள் தயாரா இருக்குன்னு கூப்பிட்டுச் சொன்னாங்க. இவுங்க கடையில் 'கஷ்டமர்  மெம்பர்ஷிப்'எடுத்துக்கிட்டா  நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்குமாம்.  சரின்னு எழுதிக்கொடுத்தோம். கார்டு வரும்வரை ஒரு தாற்காலிக  அட்டை கொடுத்தாங்க.  அதுலே  இப்போ வாங்கும் எண்ணெய்க்கும் 20% கழிவு  தரேன்னு சொன்னது சூப்பர்!  ஒரு மாசம் கழிச்சு  கார்டு வந்துருச்சு என் பெயரில்:-)




தெரு வாசல் கதவுகள் ரெண்டு இருக்கு.  வேலை முடிஞ்சதும் மாவிலை தோரணம் ஒன்னு கட்டி விட்டோம்.  இந்த வீடு கட்டி, குடிவந்து  பத்து வருசம் ஆகுது.  கிரகப்பிரவேசமுன்னு ஒன்னும் அப்போ செஞ்சுக்கலை. வெறும் பால் காய்ச்சுனதோடு சரி. அதனால் இன்றைக்கு விசேஷமா எதாவது செய்யணுமுன்னு  நினைச்சதுலே.....  பெருமாளுக்கு நன்றி சொல்லிட்டு, ஒலகக்கோப்பை ஓப்பனிங் ஸெரிமனிக்குப் போய் கொண்டாடிட்டு வந்தாச்சு:-)

இனி அடுத்த கோடையில் என்ன வேலைன்னு  கோடை ஆரம்பிச்சதும் பார்க்கலாம். அதுவரை  கோபாலுக்குக் கொஞ்சம் ஒய்வு கொடுக்க முடிவு.
ஆனா ஒன்னு , அததுக்கான  கருவிகளை வாங்கிக் கொடுத்துட்டதால்    அவ்வளவாக்  கஷ்டப்படாம வேலைகளை சுலபமாச் செஞ்சு முடிச்சுட்டார் கோபால்:-)))

வேலைக் களைப்புத் தெரியாமல் இருக்க அப்பப்ப, ரோஸ்மில்க், ஃபலூடா, மேங்கோ, ராஸ்பெர்ரி  மில்க்‌ஷேக் வகைகள் செஞ்சு உபசரிப்பது இந்தச் சித்தாளின் வேலையாக்கும், கேட்டோ!





 கைவசம் தொழில் இருக்கு. பிழைச்சுக்கலாம்!



PIN குறிப்பு:தொழிலாளியின் பலவகைத்தொழில்களின் படம் பதிவில் அங்கங்கே!  

தோட்டத்தொழிலாளி படங்கள் பின்னொரு நாளில் வரும்



மார்பு முடிகளை மறைக்கும் T Shirtக்கு வயசு இப்போ 102!

$
0
0


"ஏங்க , நீங்க எப்ப முதல்முதலா  டி ஷர்ட் போட்டீங்க?  "

"அது ஃபிஜி வந்த புதுசில்.  கடைகளில் இதுதான் ஏராளமாத் தொங்குது. தெருக்களில் நிறையப்பேர் போட்டுக்கிட்டு உலாத்தறாங்க. அதைப் பார்த்துட்டுத்தான்  வீக் எண்ட்க்கு வீட்டுலே போட்டுக்கலாமுன்னு ஒன்னு வாங்கினேன்."

"ஏன் நாம் இந்தியாவில் இருந்தப்போ  வாங்கிக்கலை?  "

"அப்ப ஏது?   மூணாவது வீட்டுப் பையன் துபாய்லே ( அப்பெல்லாம் எந்த மிடில் ஈஸ்ட் நாடாக இருந்தாலும் எல்லாத்துக்கும் நம்ம மக்கள்ஸ் சொல்லும் பெயர்  துபாய்தான்!)  இருந்து வந்தப்போ, எனக்கு ஒரு சிகரெட் பாக்கெட் கொண்டு வந்து கொடுத்தானே அப்ப ஒன்னு போட்டுக்கிட்டு இருந்தான்.  எதோ படம் முன்பக்கம் இருந்துச்சுன்னு நினைவு."

எங்க கேண்டர்பரி ம்யூஸியத்துக்குப் போகும் வழியில்  பேசிக்கிட்டே போறோம். முந்தியெல்லாம் ஞாயிறுகளில் பார்க்கிங் மீட்டரில் காசு போடவேணாம். இப்ப என்னன்னா  காலை 9 முதல் மாலை 6 வரை காசு போடணுமாம். ஆறுமணிக்கு மேலே போகலாமுன்னா ம்யூஸியம் அடைச்சுருவாங்களே:(

வரவர சிட்டிக் கவுன்ஸில் கொஞ்சம் அல்பமாத்தான் நடந்துக்கிட்டு இருக்கு.  சிட்டி புனர் நிர்மாணத்துக்குக்  காசு சேர்க்குது போல. போயிட்டுப்போகட்டும். மூணு டாலர் பத்து செண்ட் ஒரு மணி நேரத்துக்கு சார்ஜ். காசைப்போட்டுட்டு, மெஷீன் துப்பும் ரசீதை காருக்குள்ளே டேஷ் போர்டு மேலே வெளியே தேதியும் நேரமும் தெரியறாப்ல வச்சுடணும்.  இல்லைன்னா.... வண்டிக்கு க்ளாம்ப் போட்டுட்டுப் போயிருவாங்க. அதுக்கு ஒரு பெரிய தண்டம் அழணும்:(

எங்க ஊர்லே இப்ப கோடைகாலத்துக் கொண்டாட்டங்கள் நடந்து முடிஞ்சுருக்கு.  அதன் நீட்சி இன்னும் ஒரு மாசத்துக்கு  லேசா இருக்கும். கேரண்டியா சொல்ல முடியாது. நேத்து 28. இன்னிக்கு 14. இப்படித்தான் என்றாலும் சூரியனைப் பார்க்க முடியும்.

எங்க ம்யூஸியத்துலே   T Shirt Unfolding  என்ற Theme காரணம் 800 டி ஷர்ட் காட்சிக்கு இருக்குன்னு  சேதி கிடைச்சது.  போனோம்.

உள்ளே நுழைஞ்சதும்  டி -வொர்ல்ட் ( T shirt world)என்ற புத்தகம் ஒன்னு விற்பனைக்கு.  விலை $39.90 என்பதால் வாங்கிக்கலை. வரவேற்பில் இருந்த  பெண்மணியிடம்  டி ஷர்ட் எங்கேன்னு கேட்டால்....  Pபாவாவுக்குப் போகும் வழின்னாங்க.

இது நியூஸி பாவா சிப்பிகள் வச்சுக் கட்டினவீடு இருக்குமிடம்.  ம்யூஸியத்துக்குள்ளே நெசமாவேஒரு வீடு இருக்குன்னு சொன்னா நம்பணும். ஐயம் இருந்தால் இங்கே பாருங்க.


நமக்கு வழி தெரியாதா என்ன! விடுவிடுன்னு அங்கே போய் ஹாலுக்குள் நுழைஞ்சால்.... நம்ம தலைக்கு மேலே எதோ கொடிக்கயித்துலே தொங்க விட்டாப்லெ வரிசை வரிசை  டிஷர்ட்டுகள்.  வானவில் பார்க்கறாப்லெ.....ஆரஞ்சு, நீலம்,  பச்சை, சிகப்பு, மஞ்சள், வெள்ளை, கருப்பு (வானவில்லில் வெள்ளையும் கருப்பும்  எங்கேன்னு கேக்கப்டாது கேட்டோ!)

ரெண்டு பக்கமும்  சுவர்கள் போல  போர்டு பலகைகள் வச்சு டியின் சரித்திரம்!  அப்பத்தான் மனசுக்குப் பட்டது... இது ச்சும்மா வந்து பார்த்துட்டுப்போற சமாச்சாரம் இல்லை. ஒரு பதிவுக்கானது என்று.  நாமும் சரித்திரத்தைத் தெரிஞ்சுக்கிட்டு, நம்ம மக்கள்ஸ்க்கும் சொல்லும் கடமை உணர்ச்சியை என்னன்னு சொல்ல:-))))

1913தான்  ஆரம்பம்.  அமெரிகக்கப்பல் படையினர்  போட்டுக்கும் உள்ளாடையா இது உருவாச்சு.  மார்பில் இருக்கும் கொசகொச மயிர்கள் வெளியே அசிங்கமாத் தெரியுதுன்னு  'இதைப்போட்டு அதை மறைச்சுக்கோ'ன்னு சொல்லிட்டாங்க. முழுக்க முழுக்கப் பருத்தியினால்   ஆன உள்ளாடை.  வட்டக்கழுத்தையும்  ரெண்டு பக்கமும் நீட்டிக்கிட்டு இருக்கும் குட்டைக் கையுமா பார்க்கறதுக்கு T  போலவே இருந்ததால் இதுக்கு டிஷர்ட் என்ற பெயர்.

பின்னாட்களில் இந்த  டி ஒரு சரித்திரம் படைக்கப்போகுதுன்னு அப்ப யாருமே ஊகிக்கலை!!!

வேலை சமயத்து சீருடைகளைக் களைந்து ஓய்வா  இருக்கும்போது  கேஷுவலா இந்த டியை வெளிப்புற ஆடையாப் போட்டுக்கவும் ஆரம்பிச்சாங்க கடற்படை மக்கள்ஸ்.

(ஆமாம்... இது நம்மூரு கை வச்ச பனியனில்லையோ!!!!)

1920 இல்  டிக்ஷ்னரியில் டி ஷர்ட் என்றசொல் இடம்பிடிச்சுருச்சுன்னு சொல்றாங்க.இதுக்குள்ளே  இந்த டி  வெளியே உள்ளேன்னு ஆல்பர்ப்பஸ் உடையாக  ஆகி இருந்துச்சு.

1938 லே  25 காசுக்கு ( அமெரிக்கக்காசு, க்வாட்டர்) டிபார்ட்மெண்ட்  ஸ்டோர்களில் விக்க ஆரம்பிச்சாங்க.

1939 லே விஸ்ஸர்ட் ஆஃப் ஓஸ் ( Wizard of OZ) படத்துலே சோளக்கொல்லை பொம்மைக்கு  இந்த டி யைப் போட்டு , உள்ளே வைக்கோல் அடைச்சு முகப்பில் OZ என்று பெருசா அச்சடிச்சு வச்சதுதான் முதல் டிஸைன். பச்சைக்கலர் சட்டையில் வெள்ளை எழுத்துகள்!
1942 இல் லைஃப் பத்திரிகையில் அட்டைப்படத்தில் இடம் பிடிச்சது  அச்சடிச்ச படங்களுடன் இருந்த டி சட்டை. லாஸ்வேகாஸில் இருக்கும்  Aircorp Gunnery School  படையினர்  போட்டுக்கிட்டு இருந்துருக்காங்க.

1945  ரெண்டாவதுமுறை நடந்த  உலகப்போரில் கலந்துகிட்ட  ஆர்மி ஆட்களுக்கு  சப்ளை செஞ்சுருந்தாங்க. உள் ஆடை இப்போ வெளி ஆடையா மாறி இருந்துச்சு.

1948 லே டி ஷர்ட் அரசியலுக்குள் நுழைஞ்சது. இல்லே அரசியல் டி ஷர்ட்டுக்கு(ள்ளு)ம் நுழைஞ்சுருச்சுன்னும் சொல்லலாம். Dew -it with Dewey  என்று  அச்சடிச்ச  டி சட்டைகளை Newyork Governor Thomas  E Dewey , அவர் சார்ந்துள்ள கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிச்சு  நடக்கும் தேர்தல் கூட்டங்களில் அறிமுகப்படுத்தி  இருக்கார்.

1951 இல் சினிமா பிரவேசம்.  சினிமாக்காரர் சொல்றதைக் கேட்பதில் அமெரிக்கர்களும் இந்தியரும் ஒன்னு போல!  மார்லன் ப்ராண்டோ ,  வெள்ளை டி ஷர்ட் போட்டுக்கிட்டு A streetcar named desire  என்ற படத்துலே நடிச்சதைப் பார்த்துட்டு இளைஞர்களிடம்  டி ஷர்ட் புகழ் பத்திக்கிச்சு.  அந்த வருசம் மட்டும்  180 மில்லியன் அமெரிகன் டாலர் விற்பனை!  சந்தர்ப்பத்தை விடாமல் சட்னு  ஒரு கம்பெனி, டிஸ்னிலேண்ட்  மிக்கிமவுஸ், இன்னபிற டிஸ்னி நடிகர்கள்  படம் போட்டுக்கும் ஷர்ட் டிசைனுக்கு பிரத்யேக லைசன்ஸ் வாங்கிருச்சு. இந்த கார்ட்டூன் படங்கள்  சக்கைப்போடு போட்டுக்கிட்டு இருந்த காலக்கட்டம் அது.

அப்புறம் 1955 வருசம்தான்  டிஸ்னிலேண்ட் என்ற தீம் பார்க் ஆரம்பிச்சார்  வால்ட் டிஸ்னி. அதிலிருந்து  வளர்ச்சிதான்! சுற்றுலாப்பயணிகள்தான்  ஏராளமா வந்துக்கிட்டு இருந்தாங்களே  டிஸ்னிலேண்டுக்கு!  அப்ப  ஒரே ஒரு டிஸ்னிலேண்ட்தான். அதுக்கப்புறம்தான் டிஸ்னி வொர்ல்ட் என்ற பெயரில்  1971 இல் ஃப்ளோரிடாவில் கிளை ஆரம்பிச்சது. இப்பப் பலநாடுகளில்  கிளைகள் விரிஞ்சு கிடக்கு!

என்னமோ இதைப் போட்டுக்கிட்டாவே பெரிய புரட்சி என்பது போலெல்லாம் இருந்துருக்கு!

  Rebel without a cause என்ற 1955 வது ஆண்டு திரைப்படமே சாட்சி. எல்விஸ் ப்ரெஸ்லி இன்னும்  கொஞ்சம் மேலே போய்  ஜீன்ஸ் பேண்ட்ஸ், டி ஷர்ட், அதுக்கு ஒத்து ஊத லெதர் ஜாக்கெட்ன்னு போட்டு  இன்னொரு ஸ்டைலைக் கொண்டுவந்தார். (ஜீன்ஸ் வந்தது 1871 லே!  இன்னும் கோயிங் ஸ்டெடி:-)

1959 லே புதுசா  ஒரு  அச்சு மை  கண்டுபிடிச்சாங்க.  ஒரு இடத்துலே மொத்தையா உக்காராம  விரிந்துகொடுக்கும் தன்மைஉள்ள மை. இதனால் சட்டையைக் கழுத்து வழியாப்போடும்போது  விரிஞ்சு கொடுக்கும் துணிக்கு ஏத்தாப்போல இந்த மையால் அச்சடிச்ச படமும் விரிஞ்சு கொடுத்துச்சு.  இப்ப நுணுக்கமான படங்களும் போட்டுக்கலாம் என்பதால்  கூடுதல் மகிழ்ச்சியே!

முந்தியெல்லாம்  ஸ்ப்ரே பெயிண்ட்தான் பயன்படுத்துனாங்களாம் டி சட்டைக்கு. இந்த ஸ்ப்ரே பெயிண்ட் சமாச்சாரம் ஒன்னும் இன்னிக்கு வேற இடத்துலே பார்த்தோம். அதைப்பற்றி பின்னொருநாளில் எழுதறேன். சட்டையே பெரிய கதையால்லே இருக்கு:-)))


இப்படியே டி ஷர்ட் புராணம் விரிஞ்சுக்கிட்டே போகுது. 1913இல் ஆரம்பிச்ச சமாச்சாரம்  எந்தெந்த முக்கிய வருடங்களில் என்ன ஆச்சுன்னு  2013 வரை சுருக்கமா ஒரு சுவரில் அடக்கி வச்சுருக்கு எங்க ம்யூஸியம். படங்களாவே போட்டு வச்சுருக்கலாம் நான், இல்லே!

பெரிய ஹாலின் நடுவில் வச்ச  இந்தத் தடுப்புக்கு எதிரில் வச்ச இன்னொரு தடுப்புச்சுவர்(!)  சட்டையில் போட்ட விதவிதமான படங்களைக் காமிக்குது.


ரெண்டு  டி சட்டை ப்ரேமிகள்,  (T Shirt Enthusiasts   Julien Potart and Dimitri Pailhe  )மூணு வருச காலம் எடுத்து  தயாரிச்ச டி ஷர்ட் கதை   படப்பிடிப்பு,  2011 வது வருசம்  பூர்த்தியாகி  இப்போ ஒரு மணி நேரக் குறும்படமா  வந்துருக்கு. அதை இங்கே காமிச்சுக்கிட்டு இருக்காங்க.  வசதியா உக்கார்ந்து பார்க்க  இருக்கை  எல்லாம் போட்டு வச்சுருக்காங்கன்னாலும் நமக்கு ஏது நேரம்? பார்க்கிங் கூட ஒரு மணி நேரத்துக்குத்தானே எடுத்துருக்கோம்.


தடுப்புக்கு அடுத்த பக்கம் வந்துருக்கோம்.  இங்கே  ரொம்பப் பிரசித்தமான  டிஷர்ட் டிஸைன்களைச் செஞ்சவர்களைப் பற்றிச் சின்னக்குறிப்புடன்.
க்ளென் ஜோன்ஸ் (கிவி. நியூஸிக்காரர்.) இவர்.  Glennz என்ற சொந்தத்தயாரிப்பு . உள்ளூரிலும்  அதிகமான புகழ் உண்டு.


ஐ லவ் நியூயார்க் பார்க்காதவர்களை விரல்விட்டு எண்ணிடலாம். அதுக்குப்பிறகு இந்த வகை ப்ரிண்டுகள்  டூரிஸ்ட்டுகள் அதிகம் போகும் நாடுகளில் காப்பி அடிக்கப்பட்டுச்சு:-)

மேலே படம்: ஒரிஜினலை முதல்முதலா செஞ்ச  மில்டன் க்ளேஸர்.


ரெக் மொம்போஸா இன்னும் ஒரு படிமேலே போய்  சிக்கலான படங்களை வரைஞ்சு தள்ளி அவைகளைச் சட்டைகளில் போட்டு பிரசித்தி அடைஞ்சார்.  நல்ல கடுமையான உழைப்பு. விவரமான படங்கள் இல்லையோ!
அந்தந்த காலக்கட்டத்தில் புகழ்பெற்றவர்களின் முகங்களும் டி ஷர்ட்டில் இடம்பெறத்தவறலை:-)


இப்படிரெண்டு பக்கச் சுவர்களிலும் பார்த்துக்கிட்டேபோகும்போது  டி ஷர்ட் ப்ரிண்டிங் செய்யும் தொழிற்சாலைப்படங்களைப் பார்க்கும்போது சட்னு நம்ம ஜோதிஜி நினைவு வந்துச்சு. ஏன்?எதுக்குன்னு கேட்டாச் சொல்லத்தெரியலை:-)
சில பல சமாச்சாரங்களைப் பார்க்கும்போது  அதில் எதாவது வகையில் சம்பந்தப்பட்ட பதிவர்கள் நினைவு வருவது இப்பெல்லாம் இயல்பா ஆகிக்கிடக்கு.




யானை, பூனை, வடை எல்லாம் பார்த்தால் என் நினைவு உங்களுக்கு வரணுமே!  இல்லைன்னு சொன்னால் நீங்கள் பதிவர் குடும்பத்தில்  இதுவரை சேர்ந்துக்கலைன்னுபொருள்:-)))

ஒரு பெரிய திரையில்  சிலபல டி ஷர்ட் டிஸைன்களை  ஒரு மூணு நிமிசப்படமா தொடர்ந்து காமிச்சுக்கிட்டு இருந்தாங்க. அதுலே ஒரு பூனை கூட வந்துச்சு:-)

மத சம்பந்தமான சமாச்சாரங்களை டிஷர்ட்டில்  போட்டு வைப்பது கொஞ்சம் ஆபத்தானதுதான். பலநாடுகளில் இதுக்கு மக்களின் எதிர்ப்பு இருக்கு.ஒரு கார்ட்டூன் போட்டவங்க கதி என்னாச்சுன்னு தெரியும்தானே?

சில தடை செய்யப்பட்ட ப்ரிண்ட் உள்ள  சட்டைகளும்  இருக்கு என்பதே உண்மை. நியூஸியில் ஏற்கெனவே  ஒரு சட்டையை தடை செஞ்சுருந்தாங்க.  இப்ப   மக்கள் மனசை நோகடிக்கும் விதமா ஒரு டி சட்டையை (Offensive t-shirt in Canterbury Museum exhibition) இங்கே வச்சுருக்காங்க. இதுக்கான மிரட்டல்களை  ம்யூஸியம் பொருட்படுத்தலை. இது கிறிஸ்துவமதம் சம்பந்தமுள்ளது என்பதால்  மெத்தனமா இருக்காங்க போல.  ஆனால் இதை திறந்த வெளியில் வைக்காம, சின்னதா ஒரு தடுப்புகளை வச்சு மறைச்ச  அறை(!)யில்  சுழலும்  கண்ணாடிப்பெட்டிக்குள் வச்சுருக்காங்க.

வேடிக்கை பார்த்துக்கிட்டே இந்தப்பகுதிக்கு நாங்க வந்தபோது இதைக் கவனிச்சோம். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமானது இந்த டிஸ்ப்ளே. அறைவாசலில் ஒரு  ம்யூஸியம் செக்யூரிட்டி  இருக்காங்க. நம்மைப் பார்த்தவுடனே  பதினெட்டு வயசுக்கான சான்றிதழ் தேவைப்படாததால்  உள்ளே அனுமதிச்சவங்க, 'நோ ஃபோட்டோ ப்ளீஸ் 'என்றதை  சரின்னு தலையாட்டி ஏத்துக்கிட்டேன்.

இதை எப்படி வைக்கப்போச்சுன்னு  பலர்  புகார் செஞ்சுருக்காங்கன்னு  சேதி. ஆன்லைனில்  புகார்  கொடுக்கலாமாம். ஆயிரக்கணக்கானவர்கள் புகார் செஞ்சுருக்காங்க இதுவரை.

ம்யூஸியம் டைரக்டர்,  இதுவும் டி ஷர்ட் ஸ்டோரியில்  முக்கிய இடம் வகிக்குது. அதனால்  நல்லது சொல்லும்போது கெட்டதையும் மக்களுக்குச் சொல்லத்தான் வேணும் என்கிறார்.  நியூஸி  chief censor சொன்னபடி செஞ்சுருக்கோம் என்று பதில் சொல்லி இருக்கார்.

New Zealand's  ruled the t-shirt objectionable in 2008 but granted the museum an exemption to display it provided it was kept in a separate space from other exhibits and was age restricted.

இந்த  டிஷர்ட்  கண்காட்சி சுமார் மூணு மாசத்துக்கு  இருக்கு.  ஃபிப்ரவரி 14 முதல்மே மாசம் 10 வரை.  அனுமதிக்கட்டணம் கூட இல்லை. இலவசமே! ம்யூஸியமே கூட  இலவச அனுமதிதான். நம்ம வரிப்பணத்துலேதானே நடக்குது!


ஹாலை ரெண்டு பாகமா தடுப்பு வச்சுப் பிரிச்சதால்  நாலு சுவர்கள் கிடைச்சு, சம்பந்தமுள்ள நிறைய சமாச்சாரங்களை நம்மால் பார்த்துத் தெரிஞ்சுக்கமுடியுது.  பேக்கிங், ப்ரிண்டிங், இதுக்கான ரெஃபரன்ஸ் புத்தகங்கள், ஸ்டிக்கர்ஸ், ஸ்டென்ஸில்ஸ் இப்படி  பலவகை.

மெல்பெர்ன் (அஸ்ட்ராலியா) நகரைச் சேர்ந்த  Eddie Zammit அவர்களின்  சொந்த சேகரிப்பில் இருக்கும் டிஷர்ட்டுகளைத்தான் நமக்குக் கடனாகக் கொடுத்துருக்கார்.இவர்தான்  T-world  என்ற புத்தகத்தின் பதிப்பாளரும் ஆவார்.
அச்சுத்தொழில் முடிஞ்சுபோச்சுன்னு சொல்றது உண்மை இல்லைன்னு சொல்றார்  நம்ம  Eddie Zammit .

நமக்கும்  நம்ம எழுத்து அச்சுலே புத்தகமா வந்துருச்சுன்னா எவ்ளோ மகிழ்ச்சின்னு  நான் சொல்லித்தான் தெரியணுமா என்ன?




நிறையப்படங்கள் இருக்கேன்னு கூகுள்+ இல் ஆல்பமாப் போட்டேன்.ரெண்டு முறை லோடு செஞ்சும்  ஆல்பத்தைக் கண்ணில் காமிக்கமாட்டேங்குது:(

போட்டும். ஒருக்கா ஃபேஸ்புக்கில் போட்டுப் பார்க்கிறேன். வந்துச்சுன்னா இங்கே சுட்டி கொடுக்கலாம்.  கொடுத்துட்டேன்.  ஆர்வம் உள்ளவர்கள் கண்டு களிக்கலாம்:-)




Viewing all 1456 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>