Quantcast
Channel: துளசிதளம்
Viewing all 1431 articles
Browse latest View live

Krish and Chris (சிங்கைப்பயணம் 3)

$
0
0

நிதானம் ப்ரதானமுன்னு  இன்னிக்கு  எல்லாமே கொஞ்சம் தாமதம். நம்ம அறை  எதிர்த்த வரிசையில் இருந்துருந்தால் கோபுரதரிசனமாவது கிடைச்சிருக்கும். இப்ப ரேஸ்கோர்ஸ் சாலைக்கு எதிர்பக்க மைதானம்தான்  முதல்காட்சி.  இதுதான் அந்த ஃபேர்ரர் பார்க் போல!  போகட்டும் அட்லீஸ்ட் பச்சை. கண்களுக்கு  இதம்.



கோவிலுக்குள்  நுழையும் முன்  இடப்பக்கம்  செரங்கூன் சாலையில் இருந்து பிரியும் சாலைக்கு பெருமாள் ரோடுன்னு  பெயர்!   மணி ஒன்பதரை ஆகி இருந்துச்சு. கோவிலுக்குள்ளே நல்லகூட்டம். யாக குண்டத்தில் தீயும் புகையுமா இருக்க  ஒரு பத்துப்பதினைஞ்சு பேர் ஜோடிகளா மாலையும் கழுத்துமா இருக்காங்க.  கம்யூனிட்டிக் கல்யாணமோ ன்னால்.... இல்லையாம். அன்றைக்கு யாகத்துக்கு  டிக்கெட் வாங்குனவங்களாம். ஒரு மாசத்துக்கு முன்னேயே பதிவு செஞ்சுக்கணுமாம். கடைசி நேரத்தில் போனா.....   நோ டிக்கெட்.  ஹௌஸ் ஃபுல் ஆகிருது!  ஒரு மேடையில்  அலங்கரிக்கப்பட்ட  வெள்ளிக் கும்பம்!

கோவிலுக்கு வருமானம் வரட்டுமே! பக்கத்துலே இருந்த ஹாலை இடிச்சுட்டு புதுக் கட்டிடம் எழுப்பிக்கிட்டு இருக்காங்க. செலவு நிறைய இருக்குல்லையா?  வரவர மக்கள்ஸ்க்கு பக்தி கூடிக்கிட்டே வருதுன்னு  புரிஞ்சுக்க முடியுது.  யாக குண்டம் ரெண்டுவிதமா இருக்கு போல. அன்னிக்கொருநாள் பார்த்தது அழகா வட்டமா இருந்தது. இன்னிக்கு  சதுரமான ஒன்னு.

சாமி ப்ரீதிக்கு  வட்டம். ஆசாமி  ப்ரீதிக்கு சதுரம். இருக்குமோ என்னவோ?

ஆனால் யாகசாலைன்னு ஒன்னு தனியா இல்லை. நல்லவேளைன்னு நினைக்கணும். இல்லேன்னா அந்த  அறை கரிபிடிச்சுக் கிடக்கும்!




மொத்த கூட்டமும் யாக குண்டத்தைச் சுற்றி இருப்பதால் கோவிலில் மற்ற சந்நிதிகளெல்லாம்   அமைதியாக் கிடக்கு.  சாமிகள் மட்டும் தேமேன்னு இருக்காங்க மூலவர் உட்பட! நாங்களும் ஆற அமர ஒவ்வொரு சந்நிதியாப்போய் கும்பிட்டோம். மூலவருக்கு முன் மண்டபத்தில் உற்சவர் அலங்காரத்தோடு  எங்கோ வெளியில் புறப்படத் தயாரா இருக்கார். (ஓ...அதனா   குடைகூட  விரிச்சு வச்சு ரெடியா இருப்பது? வழக்கமான பெருமாள் குடை இல்லை. கொஞ்சம் சின்னதுதான்! ) பக்கத்தில் இன்னொரு  செட் உற்சவர்கள்   திருமஞ்சனம் செஞ்சுக்க ரெடியா நிக்கறாங்க.  எதிர்ப்பக்கம் பெரிய திருவடி  கூப்பின கைகளும் மலர்மாலைகளுமா விநயத்தோடு.



நம்ம இடம் இன்னிக்கு நமக்கில்லை என்பதால்  நாங்க ஆஞ்சநேயடு சந்நிதிக்குப்போய் மண்டபத்தின் ஓரமா உக்கார்ந்து   ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்க ஆரம்பிச்சோம்.  யாகக் குழுவினரின்  பதின்மவயதுப் பிள்ளைகள்  நம்ம ஆஞ்சி மண்டப ஓரத்தில் இடம்பிடிச்சு செல்லும் கையுமா  பிஸியா இருக்காங்க.  திடீர்னு  பக்தர் ஒருத்தர் வந்து ஆஞ்சி வடை விநியோகம் செஞ்சார்.


நம்ம வாசிப்பு முடிஞ்சதும்  நாளைக்கும் வரேண்டான்னு சொல்லிட்டு  நேரா முஸ்தாஃபா கடைக்குப் போனோம். 24 மணி நேரமும் திறந்து இருப்பதால்  கொஞ்சம் மேனேஜபிள் கூட்டமா இருக்கு.  கோபாலுக்கு ஷர்ட்ஸ் வாங்கிக்கணுமாம்.  இவர் துணிகளை செலெக்ட் செய்வதைப் பார்த்தால் எனக்கு கண்ணீர் வரும். அதுவும் ரத்தக் கண்ணீர்.  அழுதுவடியும்  கலரில்  ஒரே மாதிரி ரொம்பச் சின்ன வித்தியாசங்களோடு  எடுத்திருப்பார்.  கையில் உள்ள   கலரும், டிஸைன்ஸ்  எல்லாம்  ஆயிரம் முறை நான் துணிகளை வாஷிங் மெஷீன்லேபோடும்போது பார்த்திருப்பேன்.  இதே மாதிரி ஏற்கெனவே இருக்கேன்னா......  அதுலே  கொஞ்சம் பெரிய கோடு. இது நல்ல ஃபைன் கோடு பாரும்பார்.  ஆமாம் அது 0.005  மிமீ  என்றால் இப்போ கையில் உள்ளது  0.004 ஆக இருக்கும். இதுலே ஒவ்வொன்னா போட்டுப் பார்த்து  சரியா இருக்கான்னு நம்ம அபிப்ராயம் வேற கேட்பார்.  ஒரே அழுக்கு க்ரே, நீலம், வெள்ளையில் அழுக்குக்கோடு, நீலக்கோடு  இவைகளைப் பார்த்துப்பார்த்து என்  ஓட்டைக் கண்களே பூத்துருமுன்னா பாருங்க.  பிஸினெஸ் ஷர்ட்ஸ்தான் இப்படின்னா, கேஷுவலா போட்டுக்க நல்ல பளிச்சுன்னு வாங்கிக்கப்டாதோ?  இல்லையே:( அதுக்கும் இப்படி அழுதுவடியும் கலர்ஸ்தான்! ஆனா சின்னதாக் கட்டம் போட்டுருக்கும்:-) இவ்ளோ ஏன்? இப்பக்கூட இப்படி  லைட் நீலத்துலே ஒரு கோடுதான் போட்டுக்கிட்டு இருக்கார்:-)


ஆம்பளைகளுக்குக் கொஞ்சம் கலர் ப்ளைண்ட்னஸ் உண்டு என்பதால்  முகத்தில் எந்த உணர்வும் வராமலிருக்க நான் பாடுபடுவேன். 'நோக்கக் குழையும் கணவர் ' என்று வேற தாடி சொல்லிவச்சுருக்காரே!

ஷர்ட்ஸ் செ(ல)க்‌ஷனில் நேரம் போனதே தெரியலை(யாம்)  செல்லில் கால் வருது  தோழி வந்து ஹொட்டேல் லாபியில் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு!  இன்னிக்கு இன்னொரு எழுத்தாளர் தோழி வர்றாங்க . ஷர்ட்ஸ் எங்கே போகப்போகுது?அப்புறம் பார்த்துக்கலாமுன்னு அப்படியே கிளம்பி அரக்கப்பரக்க ஓடுனோம்.

சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். 23 வருசமா  சிங்கை வாசம்.  வருசத்துக்கு குறைஞ்சது மூணு புத்தகம் வெளியீடு. எல்லா உள்ளூர் வெளியூர் பத்திரிகைகளிலும்  கதை கட்டுரைன்னு விடாம எழுதறாங்க. இவுங்களைப் பற்றியும் இவுங்க எழுத்துக்களைப்பற்றியும் எழுதப்போனா சுமார் 10 இடுகை கேரண்டீ.  இவுங்களும் நம்ம மரத்தடி காலத்துத் தோழிதான். இவ்ளோ பெரிய எழுத்தாளர் என்ற தலைக்கனம் சிறிதும் இல்லாதவர்.அதனாலென்ன? எனக்கு அந்தத் தலைகனம் இருக்கே...... இம்மாம் பெரிய ஆள் என் தோழின்னு:-)))

மேலே அறைக்குப்போய்  ( கடந்த எட்டு மாசத்தில் விட்டுப்போன) அரட்டையைத் தொடர்ந்தோம்.   சிங்கை(யின் ஒரே) தமிழ் தினசரியில் இப்போ வேலை செய்யறாங்க.  புது வேலை கிடைச்சதைக் கொண்டாட இன்னிக்கு விருந்து கொடுக்கறாங்க நமக்கு!

ஒரே மாதிரி சாப்பாடு வேணாமேன்னு  ரேஸ் கோர்ஸ் சாலைக்குப்போனோம். ஹொட்டேல் பின் தெருதான்.  ஒரு சர்ச் கண்ணில் பட்டது.  ஃபூச்சௌ என்ற பெயரைப் பார்த்ததும் நம்ம பூச்ச (பூனை, மலையாளம்)  நினைவுக்கு வந்துட்டான்.  உள்ளெ போனோம்.  நல்ல  அழகா  அம்சமா இருக்கு. கீழ்தளத்தில் ஹால்.  மேல்மாடியில்  வழிபாட்டுக்கான ஆல்ட்டர்  &  இருக்கை அமைப்புகள்.

1890களில் தென் சீனா  ஃபூச்சௌ வட்டத்திலிருந்து  இந்தப்பகுதிக்கு வந்து குடியேறிய  மக்களில்  மெத்தடிஸ்ட் சர்ச் மக்கள் பலர் இருந்துருக்காங்க.  பெரும்பாலோருக்கு  கைவண்டி இழுப்பது,  கூலி வேலை , முடி திருத்துவது போன்ற தொழில்களே. தங்களுக்குள் ஒன்னு சேர்ந்து சாமி கும்பிட்டுக்க ஒரு திருச்சபை வேணுமுன்னு  அவுங்க ஆரம்பிச்சதுதான் இது. மதபோதகர் ஆண்ட்ரீ சென் உதவியால்  1897 இல் திருச்சபை ஆரம்பிச்சு, மேற்படி அங்கத்தினர்களுக்கு  எழுதப்படிக்க,பாட்டுப் பாடன்னு சொல்லிக் கொடுத்துருக்காங்க. நல்லதொரு சமூக சேவை.

ஒரு நாப்பது வருசம்போல வாடகைக் கட்டடத்தில் சர்ச் நடந்துக்கிட்டு இருந்துருக்கு. இங்கே அங்கேன்னு மூணுமுறை வெவ்வேற இடமுன்னு மாத்தி இருக்காங்க.ஒரு கட்டத்தில்  சொந்தமா ஒரு இடம் இருக்கணுமேன்னு  நிதி சேகரிச்சு இந்த ரேஸ்கோர்ஸ் ரோடிலே இப்போ நாம் பார்த்துக்கிட்டு இருக்கும் கட்டிடத்தை 1937 இல் வாங்கிட்டாங்க. சர்ச் இங்கே நல்லா நடக்குது. உலகப்போர் நடந்தப்ப இதன்மேல் குண்டு விழுந்து  முன்பக்கம் இடிஞ்சு போச்சு:(  கஷ்டப்பட்டு மீண்டும் முன் இருந்த மாதிரியே எடுத்துக் கட்டிட்டாங்க.  இப்ப இந்த சர்ச்,  சிங்கையின் பாரம்பரியக் கட்டிடத்தில் ஒன்னா இருக்கு!  ரொம்ப நல்ல பராமரிப்பு. படு நீட்.


இருக்கைகளின்  முதுகில் சர்ச்சில் பாடும் பாட்டுகள்  உள்ள புத்தகமும், பைபிளும்   வச்சுருக்காங்க.  எடுத்து வாசிச்சுச் சாமி கும்பிட்டதும் திருப்பி வச்சுட்டு போனால் ஆச்சு.  கையை வீசிக்கிட்டுக் கோவிலுக்குப்போகலாம்:-)


நாங்கள் உள்ளே போய் சுத்திப் பார்த்தபோது வேற யாரும் அங்கே இல்லை.  கொஞ்சம் படங்களை க்ளிக்கிட்டு,ரெண்டு நிமிசம் உக்கார்ந்து  சாமி கும்பிட்டுட்டு வந்தேன். ஞாயிறுகளில்  மலை ஏழு மணிக்கு தமிழ் மொழியில்  பூஜை செய்யப்படுமாம்!

படங்கள் அப்போ & இப்போ!

ஸ்பைஸ்  ஜங்ஷன் என்று ஒரு ரெஸ்ட்டாரண்ட் கண்ணில் பட்டது. கேரள யானைகளின்  முகபடாம் பார்த்ததும் சட்னு உள்ளே நுழைஞ்சோம். தமிழ்மொழி விழா, டேஸ்ட் ஆஃப் ஹெரிடேஜ்.  புட்டும் கடலைக்கறியும்  என்று படம்  போட்டுருக்கு.

ஓக்கே..... இன்னு அதுதன்னே அய்க்கோட்டே!  மெனு பார்த்தால் எல்லாம் கேரளா ஸ்டைல்களே! ஆப்பம், அவியல், கப்ப புழுங்கியது, புட்டு, கடலைக்கறின்னு வாங்கினோம்.  பரவாயில்லாம  சுமாரா இருந்துச்சு.


தொடரும்..............:-)






வாரம் ஒரு முறை ரீசார்ஜ் செஞ்சால்தான் வாழ்க்கை (சிங்கைப்பயணம் 4)

$
0
0
சாப்பாடு ஆனதும் அப்படியே  திரும்பி   Chander ரோடு பக்கம் போனால்  வெஸ்ட்டர்ன் யூனியன் வாசலில் பெரிய வரிசை நிக்குது.  ஊருக்குப் பணம் அனுப்பக் காத்திருக்கும் மக்கள்ஸ். இன்னிக்கு ஞாயித்துக்கிழமை பாருங்க. தொழிலாளர்களுக்கு லீவுநாள்.  மதியம் முதலே இந்த ஏரியாவுக்கு வரத் தொடங்கிருவாங்க. பணம் அனுப்பிட்டு, மற்ற நண்பர்களுடன் கலந்து பேசி மகிழ்ந்து இங்கேயே ராச்சாப்பாட்டையும் முடிச்சுக்கிட்டு  அடுத்த ஒரு வாரத்துக்கு வேண்டிய மனோ பலத்தையும், மகிழ்ச்சியையும் சுமந்துக்கிட்டுப் போவாங்க. சுருக்கமாச் சொன்னா ,  மனசுக்கு ரீசார்ஜ் ஏத்திக்கறது!

மகிழ்ந்துன்னு சொல்றேனே தவிரக் கவலை படிந்த முகங்களே கண்ணில் பட்டன என்பதே உண்மை. எனக்குத்தான் கண்ணில் கோளாறோன்னு கூடஒரு சமயம் நினைச்சேன்.  கடின உழைப்பினால் மெலிந்துபோன உடல்கள்...ப்ச்.....:(


ஆஹா....அதான்  அறையை விட்டுக்கிளம்புமுன்  ஜன்னலில்  பார்த்தபோது, பார்க் பகுதி புல்வெளியிலும் மரநிழலிலும் அங்கங்கே  சின்ன முடிச்சுகளா உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்களோ!

முந்தி  ஒரு  இருபத்தியெட்டு வருசங்களுக்கு முன்  வீரமாகாளியம்மன் கோவில் வாசல் மட்டுமே  தமிழகத்தொழிலாளி மக்கள் கூடுமிடமா இருந்துச்சு. நானும் அப்ப  அவங்களோடு கோவில் வாசலில் உக்கார்ந்து கதை பேசி இருக்கேன். மிஞ்சிப்போனா ஒரு முப்பது நாப்பது ஆட்கள் இருப்பாங்க.

 இப்ப?ஆயிரக்கணக்கானவர்கள்!  இத்தனை பேரின் உழைப்பால் சிங்கை ஜொலிச்சுக்கிட்டு இருக்கு!


இந்தத் தெருவிலேயும் ஏராளமான உணவகங்கள் இருக்கு.  தூரக்கே மூணு வடக்கிந்திய வகை கோபுரங்கள் . என்ன கோவிலா  இருக்கும்? இந்தப்பக்கமெல்லாம் வந்ததே இல்லையேன்னு காலை வீசிப்போட்டோம்.லக்ஷ்மிநாராயண் மந்திர். உள்ளே போனோம்.  நல்லபெரிய ஹால்.  நல்ல கூட்டம். குழந்தையும் குட்டிகளுமா  ஜேஜேன்னு  இருக்கு. ஒரு பக்கம் மேடையில் நாலு சின்ன சந்நிதிகள்.




ராதா கிருஷ்ணர், ராமர் சீதை லக்ஷ்மணன், லக்ஷ்மி நாராயணர் எல்லாம்  ஜிலுஜிலுன்னு  வடக்கத்திய  துணிமணிகளோடு  யூனிஃபாம் போட்டுக்கிட்டு இருக்காங்க.நல்ல அழகான முகங்கள்.

மேடையைச் சுற்றி இருக்கும் இடைவெளியில் வலம் வர இடம் விட்டுருக்காங்க.   நந்தி இருக்காரேன்னு சிவலிங்கம் தேடினால்  எல்லோரும் வெண்பளிங்கி இருக்க இவர் மட்டும் கரும்பளிங்கில்!


சிம்மவாஹினி, சரஸ்வதி, லக்ஷ்மி  மூவரும் தனிச்சந்நிதியில். சஞ்சீவி மலையுடன் நம்ம நேயுடு/!



இந்தப் பக்கம் புள்ளையார். பக்கத்தில்  நிறைய முகங்களோடு ஒரு சாமி.  பண்டிட்டிடம் விவரம் கேட்டால்... 'வோ......  ஆப்லோக் கா  முர்கா ஹை. ஆர்மோகம்'என்றார். அட...  ஆமாம்...ஆறுமுகம்!




 மேடைச் சந்நிதியை மூடிட்டு, ஒருபக்கமா உக்கார்ந்து பக்தர்களுக்கு  பூ, சிந்தூர் கொடுத்து ஆசிகள் வழங்கிக்கிட்டு இருக்கார் பண்டிட். முக்கியமா, சின்னப்பசங்களைக் கூப்பிட்டு  பிரசாதம் கொடுத்தார்.

நாங்களும் குங்குமம் வாங்கிக்கிட்டு வெளியே வந்தோம். கோவில் ஹால் முழுசும்  வடக்கர்கள்  கூட்டம். தமிழ்முகம் நாங்க மூணுபேர்மட்டுமே!


கீழ்தளத்தில்கோவில்.  மாடியில் குடியிருப்புகளோ என்னவோ?  தனியார் கட்டிடமாத் தெரிஞ்சது. நாலே எட்டில்   குடை கேன்டீன் தமிழ்நாடு ஸ்பெஷல் என்ற இடம்.  உள்ளே வெவ்வேற உணவுக்கடைகள் இருக்கு போல. வெளியே இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க. மக்கள் வெள்ளம்.

'ஒரு வாரத்துக்குரிய பிஸினெஸ் இன்னிக்கு ஒரே நாளிலே நடந்துரும் போல'ன்னார் கோபால்.  உண்மைதான்!





 இதுக்கு எதிரிலும் ஒரு ஹெரிட்டேஜ் பில்டிங் இருக்கு. 1900 வது ஆண்டு கட்டப்பட்டது.  அப்போ கட்டப்பட்ட சைனீஸ் வில்லா ஸ்டைல் வீடுகளில் எஞ்சி இருப்பது  இது ஒன்னுதான்..   அந்த நாளில்  ஒரு சீன வியாபாரி தன் மனைவிக்குக் கட்டிய வீடாம். எட்டு அறைகள். Residence of Tan Teng Niah. தமிழன் பேட்டையில் தைரியமா இடம்புடிச்ச சீனர்!

இப்போ   உலகத்தில் உள்ள எல்லா கலர்களிலும் பெயிண்ட் அடிச்சு அழகுபடுத்தி(??? !!!)  வியாபார நிறுவனம் ஒன்னுக்கு லீஸ்லே விட்டுருக்காங்க.  இந்த ஏரியாவில்  ஏழெட்டு மாமரங்கள் நிழல் கொடுக்குது.  பூவும் பிஞ்சுமா பார்க்கவே அருமை!

அப்படியே செராங்கூன் சாலைக்குள் புகுந்து நம்ம அறையை நோக்கிப் போறோம். காரைக்குடியில் இளநீர் குடிக்க ஒரு ஸ்டாப் போட்டோம். முந்தி இங்கே சிங்கையில் கிடைக்கும் தாய்லாந்து இளநியைக் காணோம்.  இப்ப மலேசியாவில் இருந்து வருதாம்.  பார்க்க பெருசே தவிர ருசி அதைப்போல் இல்லை:(


திடீர்னு , 'கணேஷ், கணேஷ்'ன்னு கோபால் உரக்கக் குரல் கொடுக்கறார். புள்ளையார் வர்றாராக்குமுன்னு   எட்டிப் பார்த்தால்  அட! நம்ம கணேஷ்!  குடும்பத்தோடு எதிர்சாரியில் நடந்து போய்க்கிட்டு இருந்தவர்,  சட்னு தன் பெயரை உரக்க யாரோ கூப்பிடுறதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்துட்டு  சாலையைக் கடந்து இந்தப்பக்கம் ஓடி வந்தார்.


நியூஸியில் இருந்தவர்.  இவர் இல்லாம நம்ம வீட்டுலே  எந்த விசேஷமும் நடக்காது.  எல்லாத்துக்கும் புள்ளையார் முதலில் வேணாமோ?   அஞ்சு வருசங்களுக்கு முந்தி இந்தியாவுக்குத் திரும்பிப்  போனவர்  அங்கே வேலையில் சேர்ந்து  சென்னையில் ஒரு அழகான வீட்டையும் கட்டிட்டார். அந்த க்ரஹப்ரவேசத்து சமயம் நாங்க இந்தியாவுக்குப் போயிருந்தாலும்  அந்த குறிப்பிட்ட நாள்   போடியில் மாமியார் வீட்டுக்கு விஜயம்.    அன்றைக்கு இரவுதான்  சென்னைக்குத் திரும்பி வர்றோம்.  மறுநாள்தான் புது வீட்டைப்போய்ப் பார்க்க முடிஞ்சது. சென்னை வெயிலுக்குப் பிள்ளைகள் எல்லாம் கருத்துப்போய் கிடந்தாங்க.

கோபாலின் மணிவிழாவுக்கு அவுங்க வந்தப்ப, சிங்கையில் வேலை கிடைச்சுருக்குன்னும்,  முதலில் அவர் மட்டும் போவதாகவும் சொல்லி இருந்தார்.  பிள்ளைகளுக்கு அந்த வருசப்படிப்பு முடிக்கணுமே.  இங்கே சிங்கையில் கல்வி ஆண்டு,  ஜனவரி -டிசம்பர் என்பதால்   ஏப்ரலில் இங்கேயே  கொண்டு வந்து சேர்த்துட்டாராம்.  எந்தப்பள்ளிக்கூடமுன்னு விசாரிச்சால், எனக்குத் தெரிஞ்சதுதான். நம்ம சித்ரா அங்கேதான் டீச்சர்.  சித்ரா டீச்சரைத் தெரியுமான்னு அவர்களை வர்ணித்தால் ரொம்ப நல்லாத் தெரியும், என் வகுப்பு டீச்சர்தான் என்றது சின்னது.   ஆஹா..... உலகம் எப்படிச் சுருங்கிருச்சு பாருங்க! எல்லோரையும் எல்லோருக்கும் தெரியுது:-)))))

மறுநாள் பகலுணவு எங்களோடு சாப்பிடச் சொல்லி அழைச்சோம்.  எங்க எல்லோருக்கும் தெரிஞ்ச இன்னொரு தோழி மறுநாள் வர்றாங்க. அவுங்களும்  நியூஸியில் இருந்துட்டுப் போனவங்கதான். கணேஷுக்கு வேலை இருப்பதால்  அவர் மனைவியும் பிள்ளைகளும் வரேன்னாங்க.
திரும்ப அறைக்குப்போய் கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தோம். மூணரைக்குக் கிளம்பிட்டாங்க. அன்றைக்கு மாலை பதிவர் சந்திப்பு இருக்குன்றதை நினைவு படுத்தினேன். முடிஞ்சால் அங்கே வந்து கலந்துக்கறேன்னு சொன்னாங்க.

சிங்கை சைனீஸ் கார்டன் கார்டன் போகணுமுன்னு ஒவ்வொரு முறையும் நினைப்பேன். ஆனால்  ஒவ்வொரு முறையும் எதோ குறுக்கீடு வந்துரும். இன்றைக்கு ஒரு எட்டுப்போயிட்டு வரலாமுன்னா....  அந்த இடம் முந்தி போல இல்லை. பாழடைஞ்சு போச்சு. விஸிட்டர்ஸ் யாரும் போவதில்லை. அதுவுமில்லாமல்  எம் ஆர் டி யில் போனாலும் இறங்கி நிறைய நடக்கணுமுன்னு  நண்பர் சொன்னதால்  இந்தமுறையும் போகலை:(   நடைக்குப் பயந்த என்னை நடக்க வைக்கணுமுன்னு 'அவன்'முடிவு செஞ்சுட்டான்.

கிடைக்காது என்பது கிடைக்கவே கிடைக்காது போல! போயிட்டுப்போகுது போன்னு  இருக்கலாம்.

சாண்ட்ஸ் ஹொட்டேல் பக்கத்துலே கார்டன் வேலையெல்லாம்  முடிஞ்சுருச்சாம். அதையும் கையோடு பார்த்துக்கணுமுன்னு முடிவு செஞ்சோம்.  லிட்டில் இண்டியா ஸ்டேஷனுக்குப்போய்  ரயில்  எடுத்தோம்.


  போற வழியில் ஒரு கடையில்  பத்துமலையான் சிரிச்சுக்கிட்டு 'அங்கே பார'என்றான். சுண்டைக்காய், முருங்கக்கீரை, சின்ன பாவக்காய் , மாங்காயெல்லாம் விற்பனைக்கு வச்சுருக்காங்க. ஆஹா ஆஹான்னு பார்க்க ஃப்ரெஷா வேற இருக்கு.





வீட்டுலே சமைச்சுச் சாப்பிடும் நிலையில் உள்ள சிங்கைவாசிகள் நிறைய புண்ணியம் பண்ணி இருக்காங்க!





சிங்கைச் சிங்கங்களுடன் ஒரு இனிய சந்திப்பு (சிங்கைப்பயணம் 5)

$
0
0
'சிங்கையில் ஒரு வசதி, விதவிதமான இடங்களில் பதிவர் சந்திப்பு நடத்தலாமு'ன்னு நம்ம கோவியார் சொல்வார்.  மழையா இருந்த  ஒரு சமயம் மாலில் இருக்கும் ஃபுட் கோர்ட்லே கூட சந்திப்பு வச்சுருவாங்க.  இப்பக் கொஞ்சநாளா மெரீனா Bபே யில்  நடக்குது. மழை வந்தா அந்த அகலமான பாலத்துக்கடியில்  கூட்டம் போட்டுருவோம்:-) அதான் திடீர் திடீர்ன்னு பொழுதன்னிக்கும்  மழை வந்துருதே!

ரயிலில்  ஏறி மெரினா பே வந்திறங்கினோம். நடுவில் நாலு ஸ்டேஷந்தான்.  வெளியே போனால்  கொஞ்சதூரத்தில் ஸாண்ட்ஸ் 'படகு'தெரியுது. நாம் போக வேண்டிய இடம் அதுக்கும் அந்தாண்டை! இஞ்சி தின்ன 'என்னவோ ஒன்னு'மாதிரி முழிச்சேன். ரயில் ரயில்ன்னு பிடுங்கி எடுத்தது நாந்தான்:(   பெரிய  ப்ரிட்ஜ் எல்லாம் போட்டுருக்காங்க. அதை வேடிக்கை பார்த்துக்கிட்டேபோகலாமே! நட ராஜா நட ராணி!



வெயிலில் போகாம ஸாண்ட்ஸ் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் உள்ளேயே போனோம்.  அட்டகாசமா இருக்கு!  லைவ் ம்யூஸிக்  ப்யானோ, செல்லோ & ட்ரம்ஸ்  வாசிச்சுக்கிட்டு இருக்காங்க.

வெளியே  பெரிய பெரிய்ய்ய்ய்ய்ய தொட்டிகள்,குளம்போல் நிறைஞ்சு வழிய, தாமரை, அல்லி மலர்கள் கண்ணை இழுக்குது. மஹாலக்ஷ்மி ஒவ்வொன்னிலும் வாசம் செய்யட்டும்.ஊர் கொழிக்கட்டும்.

Gardens by the Bay ன்னு பெரிய  தோட்டங்கள். அதுலே  சிப்பியைக் கவுத்து வச்ச மாதிரி  ரெண்டு கன்ஸர்வேட்டரி. (Flower Dome)  இது கட்டிக்கிட்டு இருந்த சமயம் ஸாண்ட்ஸ் மொட்டைமாடியில் இருந்து பார்த்தோம். உள்ளே போய்ப் பார்க்க  ஒரு ரெண்டு மணி நேரமாவது ஒதுக்கணும்.  இந்த முறை கிடைக்கலை. அடுத்த முறை போகலாம், என்ன? தூண்களே இல்லாமல் கட்டி இருக்காங்களாம்.

இப்ப நமக்குப் பதிவர் சந்திப்புக்குப் போகணும். டூரியன் பில்டிங் முன்புறமா போகலாம்.வழி இருக்குன்னு  போனால்...... பராமரிப்புப் பணின்னு பாதை அடைபட்டு இருக்கு:(  ஐயோ  ரொம்பச் சுத்திக்கிட்டுல்லே போகணும்! சந்திப்புக்கு தாமதமாப்போறோமே என்ற கவலையோடு  நடந்தேன்.  ஒருவழியா டூரியன் ஷாப்பிங் சென்டருக்குள்ளே போனதும் கோவியாருக்கு  ஒரு ஃபோன் போட்டார் கோபால்.  அவரும் வெற்றிக் கதிரவனும்  பாலத்துக்கருகில் இருக்காங்களாம்.

கொஞ்சதூரம் நடந்து ஒரு புல்வெளியில் இடம்பிடிச்சோம். ஒவ்வொருத்தரா வந்து சேரக்கொஞ்ச நேரம் ஆச்சு. நம்ம செந்தில்(சிங்கை)நாதன் வழக்கம்போல் பதிவர் சந்திப்பு ஸ்பெஷல்  இனிப்பு கொண்டு வந்துருந்தார். அவருடைய தங்க்ஸ்க்கு நன்றி சொல்லிக்கறேன். செந்திலின் தங்க்ஸ் நமக்கு இன்னொரு விதத்தில் நெருங்கியவர்.  மதியம் சந்திச்சேன்னு சொன்ன கணேஷின் தங்க்ஸும், செந்திலின் தங்க்ஸும் ஒரே ஊர், ஒரே பள்ளின்னு  சின்னவயதுமுதல் நண்பிகள். சச் அ ஸ்மால் வொர்ல்ட் யூ ஸீ:-)

சொஜ்ஜியப்பம் சூப்பர். இல்லே பதாம் பூரியா?  அச்சச்சோ...பேச்சு சுவாரசியத்துலே  பெயரை நினைவு வச்சுக்க மறந்துட்டேனே:(   பல் இருக்கறவங்களுக்குப் பாவக்காய் பகோடாவும் குட்டித் தேன் குழலும் கோபாலின் வகை. எதைப் பற்றி விவாதித்தோம்(!!!)  என்று கேக்காதீங்க. இது ஜஸ்ட் ஒரு பதிவர் குடும்ப சந்திப்பு.  எனக்கு எப்படியும் ரெண்டு வருசத்துக்கு ஒரு முறையாவது நம்ம சக பதிவர்களைக் கண்டு குசலம் விசாரிக்கணும். அந்த வகையில்  பட்டது இது . சந்திப்பு ஏற்பாடு செய்த நம்ம கோவி.கண்ணனுக்கு  என் மனமார்ந்த நன்றியை இங்கே பதிவு செஞ்சுக்கறேன்.



அகில உலக முதல் பதிவர் சந்திப்பு (2005) 



2007 


2009

2011

முந்திய சந்திப்புகளில் சில இந்தச் சுட்டிகளில்:-)


சிங்கையில் ஒரு கங்கை



இதென்ன இப்படி ஒரு அன்பு



ஞாயிறு முழுதும் நண்பர்களுடன்



சிங்கைப்பெருமக்கள்ஸ்


கோவியாரின் குடும்பத்துடன் ஒரு நெருக்கமேற்பட்டுப் போச்சு. பூர்வஜன்ம பந்தமுன்னு நான் நினைச்சா,  'நாமெல்லாம் சொந்தம் ஆகிட்டோம்'னு கோவியார் சொல்றார்:-))) சிரமம் பார்க்காமக் குடும்பத்தோடு வந்து நம்மைக் கண்டுக்கறது,  எனக்கும் மனசுக்குத் திருப்தியா இருக்கு.

இன்றைய சந்திப்புக்கு  வந்திருந்தவர்கள், செந்தில்நாதன்,  சத்திரியன், கோவி.கண்ணன்,  (நான்) ஆதவன், பாஸ்கரன்,  வெற்றிக்கதிரவன், பிரியமுடன் பிரபு, கிஷோர் ஆகியோர்.  இவர்களில் சமீபத்துலே   ரெண்டு பேரா ஆனவங்க  இப்போ  மூணு பேரா ஆகி இருக்காங்க.  இளம் தந்தையர்! முகம்பூராவும் ஜொலிப்பு. குடும்பத்தின் புதுவரவுக்கு எங்கள் ஆசிகள்.

நம்ம அறுபதை மனசில் வச்சுக்கிட்டு  செந்தில்நாதன் ஆசி வழங்கக் கோரினார். அன்புக்கும் ஆசிகளுக்கும் நம்மிடத்தில் பஞ்சமுண்டா என்ன? அள்ளி வழங்கிட்டோமுல்லெ:-))))



சிங்கையில் நம் மக்களின் பிஸி வாழ்க்கையில்  சந்திப்புக்குன்னு  வர்றதும் ஒரு  கஷ்டமே. முகாந்திரம் ஒன்னு(ம்) வேணும் பாருங்க. இன்று அது துளசி கோபால் வருகை:-)))

ரெண்டு மணி நேரம் அரட்டைக்குப்பிறகு சந்திப்பின்  நினைவுக்காக குரூப் ஃபொட்டோ ஒன்னை இருட்டில் எடுத்துக்கிட்டு  அவரவர் பாதையில் போனோம். மெர்லயனைப் பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு  அந்தப்பக்கம் நடையைக் கட்டுனோம்.  மெரினா பே அலங்காரத்தில் இப்போ சிங்கம் ரொம்பக்கத்தில் வந்திருச்சு:-)

ஒளிமயமான அலங்காரம். ஜொலிக்கிறார் சிங்கர்.  மீன் உடம்பும் சிங்கத்தலையுமா  ஸ்மார்ட்டா இருக்கார்  இந்த கடல்கன்னர். இவர்  ஆண்பிள்ளைதானாம்!  போன வருசம் (2012) இவருக்கு வயசு நாற்பது முடிஞ்சது. சிங்கபுரத்துக்கு அடையாளமா  சிங்கரைத் தெரிவுசெஞ்சது 1964. அப்போதிருந்து  சுற்றுலாத்துறை இவர் படத்தைப்போட்டே விளம்பரம் செய்ய ஆரம்பிச்சது. சிங்கையில் மட்டும் புகழ்பெற்ற அஞ்சு சிங்கர்கள்  இருக்காங்க. அதுலே உருவத்தில் பெரியவர் ஸென்டோசாத் தீவில் இருக்கார்.  ஆனாலும் நாம் இப்போ பார்க்கும் இவர்தான்  அதிகாரபூர்வமான  சிலையா  ஆனவர்.  செப்டம்பர் 15, 1972 இல் -Prime Minister Lee Kuan Yew  திறந்து வச்சுருக்கார். நான் 28 வருசம் முந்தி அவரை ஆத்தங்கரையில்தான் பார்த்தேன்.

 புதுசு புதுசா கட்டிடங்கள் எல்லாம் வானுயர வந்தபிறகு , இவரைச் சரியாப் பார்க்க முடியலைன்னு சிங்கை நதியின் முகத்துவாரத்தில் இருந்தவரை, 2002  இங்கே இடம் மாத்திட்டாங்க.  சிங்கப்பூர்ன்னு சொல்றதுக்குண்டான நினைவுப்பரிசு இந்த சிங்கம்தான்.  உள்ளூர் மக்கள்ஸ், வெளிநாட்டு நண்பர்களுக்கு  இதைத்தான்  நினைவுப்பரிசா  பெரும்பாலும் கொண்டு போறாங்க.

ஆத்தங்கரையில் இருந்து  இவரை இங்கே கொண்டுவர  மூணுநாள் ஆயிருக்கு.  அதுவும் ஒரு 120 மீட்டர் பயணம்தான். இருவது  எஞ்சிநீயர்கள்,  ஐநூறு டன்வரை தூக்கும்  வசதியுள்ள க்ரேன்கள் வச்ச ரெண்டு படகுகள் தேவைப்பட்டிருக்கு.  பாலத்துக்குப் பக்கம் படகு வந்தப்ப அப்படியே க்ரேனில் அலாக்காத் தூக்கி இந்தப்பக்கம்  வச்சுருக்காங்க.  முப்பது வருசம் ஒரே இடத்துலே இருந்தவரை  மூணே நாளில்  இங்கே கொண்டு வந்துட்டாங்க பாருங்க. சிங்கருக்குள்ளே ரெண்டு பம்புகள்.ஒன்னு பழுதானால் அடுத்த விநாடியே வேறொன்னு  வேலை செய்ய ஆரம்பிச்சுரும்.

அவர் வாயிலிருந்து வரும்  நீரூற்று ஒரு அழகுன்னா, அதில் இருக்கும் நீர்த் திவலைகளைச் சுமந்து வந்து நம் மீது  பன்னீர் தெளிக்கும்  இளங்காற்று , பகலெல்லாம் சுட்டெரிச்ச சூட்டுக்கு  இதமா இருக்கு!  நீளப்படிக்கட்டுகளில்  மக்கள் எதையோ எதிர்பார்த்து  நேராக் கண்ணு நட்டு உக்கார்ந்துருந்தாங்க.  நாமும் ஜோதியில் கலந்தோம். எதிரில் இருக்கும் ஸாண்ட்ஸ் ஹொட்டேல் மாடியில் இருந்து  லேஸர் ஷோ ஒன்னு ஆரம்பிச்சது. ஹைய்யோ!!!!  வண்ணவண்ண கதிர்கள் அங்கும் இங்கும் பாய்ஞ்சு அந்த ஏரியாவையே ஒளி வெள்ளத்தில் மூழ்கடிக்குது. எல்லாம் ஒரு 15, 20  நிமிஷங்கள்தான்.  தேவலோகத்தில் இருக்கமோன்னு  மனம் மயங்குனது உண்மை .



எட்டரை ஆகுது, நாமும் 'பொழுதோடு' அறைக்குப் போகலாம். டாக்ஸி கிடைக்குமான்னு பார்த்தால் கிடைச்சது.  வெறும் அஞ்சு நிமிசத்துலே ஹொட்டேலுக்குக் கொண்டு வந்து விட்டுட்டார்  ஒரு  சீன இளைஞர்.  வேலைக்குப் புதுசாம். ஆனால் ஜிபிஎஸ் இருக்க பயமேன்?

ராச்சாப்பாடு இன்னிக்கு எங்கே?  லைட்டா சாப்பிடலாமுன்னா  கோமளவிலாஸ் பக்கம் கூட்டம் குறையலை.  ஸ்மால் வாக்.  வாழையிலைக்குப்போய் சாப்பிடலாம்.  அங்கொன்னும் இங்கொன்னுமா சிலர்.  தோசைக்கல்லு சூடாவேஇருக்கு போல!  வெங்காயம் மட்டும் வதங்கிக்கிட்டு இருக்கு.  மாவைக் கிண்ணத்தில் எடுத்து அதில் சடார்னு விசிறியடிச்சார் செஃப். ரெண்டே நிமிசத்தில் மூணு ஆனியன் ரவா தோசை முறுமுறுன்னு!   அவரவர்க்கு வேண்டியதை ஆர்டர் செஞ்சோம்.

 நான் வாங்குன ப்ளெய்ன் வாட்டருக்கு  இருபது செண்ட்!
திரும்பி அறைக்கு வரும்போது  ஒரு மூலைக் கடையில் காய்கறிகடை. புடலங்காய், கோவைக்காய் எல்லாம் பார்க்க ஆசையா இருந்துச்சு. இன்னொரு மூலைக் கடையில் தட்டுதட்டா சீர்வரிசை. மாம்பழம்! சீஸன் தொடக்கமாம். கிலோ பத்து டாலர்கள். செராங்கூன் சாலையில்   வலது பக்கம் முழுசும் பிரிந்து  போகும்    சின்னத்தெருக்கள் ஏராளமான  இருப்பதால் மூலக்கடைகள் அதிகம்:-)

காளியம்மன் கோவில் பக்கம் இன்னும் கூட்டம் வடியலை. ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போகலாமுன்னு  ஒரு அஞ்சாறுபேர் நிக்கும்  குழுவைப் பார்த்து  எப்படி இருக்கீங்க? இன்னிக்கு லீவான்னதும் 'ஆமாம்மா'ன்னு  சொன்னவங்க வாழ்க்கை எப்படிப்போகுதுன்னு சொன்னது கேக்கவே விசனமா இருந்துச்சு.  வேலை செய்யுமிடத்துலேயே தங்கிக்குவாங்களாம்.  ஞாயிறுகளில்  வேன், ட்ரக் இப்படி எதாவதொன்னில்  கொண்டு வந்து  இங்கே காளியம்மன் கோவிலாண்டை விட்டுருவாங்களாம். ராத்திரி 11 மணிக்கு மேல்  திரும்பிக் கூட்டிப்போக அஞ்சாறு ட்ரிப் அடிப்பாங்களாம். பன்னெண்டரை , ஒன்னு ஆகிருமாம். மறுநாள் காலை எட்டுக்கு வேலைக்குத் தயாரா இருக்கணுமாம்.  ஊரில் இருக்கும் கடனைக் கட்டவேற வழி தெரியலை. இப்படியேதான் இன்னும் சில வருசங்கள் இருக்கணும் என்று கம்மிய குரலில் சொன்னார்.

ஞாயிறு கூட்டத்தில் மொத்த இந்தியாவும் இருக்குன்றதே உண்மை. இதுலே பங்ளாதேசிகள், பாகிஸ்தானிகள் , தாய்லாந்து, பிலிப்போனோ  மக்கள்ஸ் கூட்டமும் சேர்ந்து உலக மக்கள் ஒன்று கூடலா ஆகுது. இன்னிக்குப் பாருங்கரெண்டு நியூஸிகளும் அங்கே நிக்கறாங்க.

தொடரும்...........:-)






கடவுள் இருக்காண்டா கொமாரு!!!!!

$
0
0
இன்னும்  நாலுநாள்தான் இருக்கு. இதுவரை படிகட்டும் வேலையைப்பத்தி யோசிக்கவே  இல்லை. அதான் போன வருசத்து கேஸட்ஸ் (செங்கல்) ப்ளாக்ஸ் எல்லாம் அப்படிக்கப்படியே இருக்கே!   நம்ம ஹேண்டிமேன் கிட்டே சொல்லி ஒரு கொலுப்படிக்கட்டு செஞ்சு நிரந்தரமா(???)  வச்சுக்கணும் என்று கொள்ளை ஆசை. அதான் இன்னும் நாளிருக்கே.... செஞ்சுறலாம் செஞ்சுறலாமுன்னு சொல்லியே நாட்கள் கடந்து போயிருந்தன.

இதுக்கு நடுவில் நம்ம கல்பட்டார் ஐயா, அவருடைய மருமான் வீட்டுக் கொலுப்படி செய்முறைப் படங்களை அனுப்பி வச்சார்.  சமயத்துக்கு ப் பயன்படுத்திட்டுக் கழட்டி எடுத்து வச்சுடலாம். அவ்வளவா இடம் பிடிக்காதுன்றது ஒரு ப்ளஸ் பாய்ண்ட்.

மேலே உள்ள படங்கள்,  உபயதாரர்  கல்பட்டு ஐயாவுக்கு என் நன்றிகள். 


டாக்டர் அப்பாய்ண்ட்மெண்டை முடிச்சுட்டு வரும்போது , மனசுலே  தோணுச்சு ஈக்கோ ஷாப் போயிட்டுப்போகலாமுன்னு.  இது நம்ம சிட்டிக் கவுன்ஸில் நடத்தும் ரீசைக்ளிங் சென்டர்.  வீட்டுவீட்டுக்கு வேண்டாத சாமான்கள் வருசாவருசம் எப்படியோ சேர்ந்து போகுது பாருங்க. அதை ஸ்ப்ரிங் க்ளீனிங் என்ற பெயரில் கழிச்சுக்கட்ட டம்ப்( DUMP)க்குக் கொண்டுபோய்  காசு கட்டிட்டுப் போட்டுட்டு வர்றதுதான் வழக்கம். அங்கே பயனுள்ள, உடையாத சாமான்களை பிரிச்செடுத்து  மறுசுழற்சிக் கடைக்கு அனுப்புவாங்க. சிலபல சமயங்களில்  புத்தம்புதுசான பொருட்கள் கூடக் கிடைக்கும்.   வியாபாரம் திவாலாச்சுன்னா.... அங்கிருக்கும் பொருட்களை இதுக்குத் தானமாக் கொடுக்கும் வியாபாரிகளும் இங்கே ஏராளம்.  வீடு கட்டிக்க உதவும் செங்கல் (நிஜம்) முதற்கொண்டு, டைல்ஸ்,  கப்போர்டுகள், பாத் டப்ஸ் இப்படி  வந்தா அடுக்கடுக்கா விற்பனைக்குக் கிடைக்கும்.  எல்லாம் புதுசு வேற!

அங்கெபோய் ச்சும்மா ஒரு சுத்து சுத்திவந்தால் நமக்குத் தேவையான(??!!) ஒன்னு  எதாவது கண்ணில் ஆப்டாமப்போகாது. (கண்ணுலே படற பொருளைத் தேவையானதா நினைச்சுக்குவேன் என்பதையும் தனியாச் சொல்லணுமாக்கும்!)

இன்றையத் தேடல் மாடிப்படி(!!)  கிடைக்குதா என்பது!  அஞ்சு இல்லை ஏழு படி கிடைச்சால் போதும்.

கருநீலத்துணி போட்டு வச்சுருந்த சின்ன படிக்கட்டு ஒன்னு கண்ணில் ஆப்ட்டது. சரியா அஞ்சு படிகள்.  ஆனால்; இது மாடிப்படிக்கட்டு இல்லை. சின்னதா க்யூட்டா இருக்கு.  கோபாலிடம் இதை வாங்கறோமுன்னு  சொன்னேன்:-) கடைக்கார ஆட்களில் ஒருத்தர்  கை வண்டியில் வச்சுத்தள்ளிக்கொண்டு வந்து காரில் ஏத்திவிட்டார்.  இந்தக் கடையில் வேலை செய்யும் அத்தனைபேரும் தன்னார்வலர்கள் என்பதைச் சொல்லியே ஆகணும்.   சாமான்கள் வித்துக் கிடைக்கும் காசு முழுசும் தர்மக்காரியங்களுக்கே போகுது.


வீட்டுக்கு வந்ததும் நான் கேமெரா கொண்டு வர்றதுக்குள்ளே  இவர் தடதடன்னு அந்த நீலத்துணியைப் பிய்ச்சு எடுத்துட்டார். (கொஞ்சம் அழுக்காத்தான் இருந்துச்சு. நல்லா ஸ்ட்டேப்பிள்  பண்ணி நீட்டா வச்சுருந்தாங்க.) உள்ளே பளீர்னு புது ஜொலிப்போடு  மரத்தில் அம்சமாச் செஞ்சுருக்கும்  படிக்கட்டு ஷெல்ஃப்.

படிகளின் அகலம்தான் ரொம்பச் சின்னது.  85 செமீ நீளம், 10 செமீ அகலம்தான். போயிட்டுப் போகுது. நம்ம வீட்டு பொம்மைகளும் சின்னதுதானே? சரியாத்தான் இருக்கும்,இல்லே?  கொஞ்சம் ஃபர்னிச்சர் பாலீஷ்  ஸ்ப்ரே செய்து துடைச்சதும் இன்னும் பளீர்.

இன்னும்கூட நம்பவே முடியலை.....  வேணுங்கறது எப்படி சரியான நேரத்துக்குக் கிடைச்சதுன்னு!  எதுக்காக இதை செஞ்சுருப்பாங்க.  எதாவது டிஸ்ப்ளே செய்யவோ?  வெள்ளைக்காரன் கொலு வைப்பானா என்ன?  நதிமூலம் ரிஷிமூலத்தோடு இதையும் சேர்த்தேன்:-)

மேலே துணிகூடப் போர்த்தவேண்டாம். மரத்தின் அழகே நல்லா இருக்குன்னு முடிவு செஞ்சோம்(!)

கடவுள் உனக்கு நல்லா ஹெல்ப் பண்றாருன்னு கோபால் சொல்றார்.

"எனக்கா? எனக்கா? உங்களுக்குத்தான் உண்மையான ஹெல்ப் பண்ணி இருக்கார். இல்லேன்னா படி கட்டுறேன் பேர்வழின்னு கேஸட்ஸ் செங்கல் வச்சு மரப்பலகை, அது இதுன்னு அமர்க்களப்பட்டு இருக்கும்."

"ஆமாம்.... கூடவே  உங்கிட்டே பா(தி)ட்டு வேறு வாங்கிக்கணும். "

"அது...படிகட்டக் கிடைக்கும் கூலியும் போனஸூமில்லையோ":-))))

"அப்டீங்கறே?"

"கடவுள்  இருக்காண்டா கொமாரு!!!"


அமாவாசைக்கு  நைவேத்தியம் சமர்ப்பியாமின்னு சக்கரைப்பொங்கலும் வெண்பொங்கலுமாச் செஞ்சு  மரப்பாச்சிகள் ரெண்டையும் அழகுபடுத்தி  சாஸ்த்திர சம்ப்ரதாயப்படி  ரெண்டு பேரையும் தாயாரும் பெருமாளுமா மேல்படியில் நிக்க வச்சாச்சு.  மற்றபடிகளை நம்ம துளசிவீட்டுச் சம்ப்ரதாயப்படி யானைகளும் பூனைகளுமா  வந்து இடம்பிடிச்சு இப்போ கொலு ரெடி. முதல் விஸிட்டரா நம்ம 'ராஜலக்ஷ்மி'வந்து பார்த்தார். (என்னவோ நடக்குது மர்மமா இருக்குது.....)

 மூவர் சிங்கையில் இருந்து வந்தாங்க. சீனர்கள் எவ்ளோ அம்சமாப் பண்ணி இருக்காங்கன்னு பாருங்களேன்!!!!

மாடர்ன் அடுக்களை இந்தியன் ஸ்டைல்:-)  இது மட்டும்  இன்டராக்டிவ் சமாச்சாரம்.  என்னென்ன இருக்குன்னு கையில் எடுத்துப் பார்த்து ரசிக்கலாம். நாட்டுலே இப்போதைக்கு முக்கியம் எதுன்னு குறிப்பால் உணர்த்துது.  மூணு வாட்டர்ஸ் !!!  ஃபில்ட்டரில் கேண்டில் கூட இருக்கு.பேஷ் பேஷ். (சண்டிகரில் வாங்கினேன்)

கீழே:  சென்னை ஸ்பெஷல். மஹாபலிபுரம் செட்.  அடுக்குனதுதான் கொஞ்சம் கீக்கிடமாப்போச்சு:(  மகாபலிபுரம் என்றொரு புத்தகம் வாங்கியாந்தேன்.  நல்ல சமயத்தில் அதை காணோம்!  பஞ்சபாண்டவர் ரதம் அடுக்குனதில் பிழை உண்டு:(

நம்ம வீட்டுக் கும்பவாஹினி!!!!


பதிவுலக அன்பர்கள் அனைவரும் ஒரு நடை வந்துட்டு போங்க.

இன்றைய ஸ்பெஷல் வேர்க்கடலை சுண்டல்.

அனைவருக்கும் நவராத்ரி பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.


PIN குறிப்பு : பாட்டு நான் பாட மாட்டேன். யாரும் பயமின்றி வரலாம்:-)


என்னம்மா இவ்ளோ லேட்டு?

உன்னை மாதிரியா ரஜ்ஜூ?  ட்ரெஸ் பண்ணிவர வேணாமா?


ராமனைக் கண்ணாரக் கண்டோமே..... (சிங்கைப்பயணம் 6)

$
0
0
இனிமே எப்போக் கிடைக்குமோன்னு  ஒரு எண்ணம் வந்தவுடன் மனசு  ஆலாய்ப் பறக்குது பார்த்தீங்களா? பொழுது விடிஞ்சதும் இன்றே (இப்படம் ) கடைசி என்ற  நிலை.  மதியம் ஒரு மணிக்கு செக்கவுட்.  அதுக்கு முன்னால் வெளியே போய்வருவதையெல்லாம் முடிச்சுக்கிட்டோமுன்னால், மதியம் பொட்டிகளை  கீழே  வச்சுட்டு  பாக்கி இருக்கும் சமாச்சாரங்களை நிதானமா முடிச்சாலாச்சு.

முதல் கடமை முதலில். ஒரு இட்லி, ஒரு மசால்வடை!  கோபாலுக்கு  மசாலா தோசை, அப்புறம் ஆளுக்கொரு சவுத் இண்டியன் ஃபில்ட்டர் காஃபி.  ஆளில்லாத செராங்கூன் ரோடில் காலை வீசிப்போட்டு நடந்து  எட்டேமுக்காலுக்குக் கோவிலுக்குள் நுழைஞ்சோம். வழக்கமான சுற்று. இதிலும் ரொம்ப நிதானம் இன்றைக்கு.  காரணம்........  இனிமே எப்போ?

 ஆண்டாள் சந்நிதியில் ரெண்டு பிஞ்சுகள் கை கூப்பி நின்னதுகள். அக்கா, தம்பிக்குக் குங்குமம் இட்டுச் சரி செஞ்சாள். ஹௌ ஸ்வீட்!!!! நல்லா இருங்கடா செல்லங்களா!

பெருமாள் ஓசைப்படாமல் தேமேன்னு நிக்கறார். மேளமும் நாயனமும் வாசிக்க தயாராகிக்கிட்டு இருக்காங்க.  அதுவரை நம்ம வேலையைப் பார்க்கலாமுன்னு  நேயடு சந்நிதிக்குப் பக்கமா உக்கார்ந்து   ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் வாசிக்க ஆரம்பிச்சோம். இனி  இங்கே எப்போ என்பதால்  நடை வேகத்தில்  மெள்ள ஒவ்வொரு வரியாக......

 மேளச்சத்தம் ஒலிக்க ஆரம்பிச்சது.  நான் கவனமாக ஆழ்ந்து வாசிக்கும்போது பாதியில்  கோபால் அங்கே பாருன்னார்.  குடையுடன் அலங்கார பூஷிதனாக,   வேதமந்திரம்  ஒலிக்க வாசலை நோக்கிப்போறார் நம்ம  சீனு. தீவட்டியுடனும், சீர்வரிசைகளுடனும்  ஃபாலோயர்ஸ் வேற!  எங்கே போறாருன்னு பார்த்தால் வாசலைக் கடந்து உள்ளே வரும்  ராமனுக்கு பூரணகும்பத்துடன் எதிர் சேவை!


அடடடா..... என்ன விசேஷம்?  வடபத்ரகாளி கோவிலில்  இருக்கும்  ஸ்ரீராமர், நம்மசீனுவைச் சந்திக்க வர்றாராம். ஆஹா.... பதிவர் சந்திப்பு நாம் நடத்துனோமுன்னா.....  கடவுளர், கடவுள் சந்திப்பு நடத்துறாங்களா!!!! பேஷ் பேஷ்.



ரெண்டு கோவில்களின் மூணு மேளசெட், ரெட்டை நாயனமா அவுங்க தூள் கிளப்புறாங்க. சீனுவின் ஒத்தை செட் கூடச்சேர்ந்து வாசிப்புன்னு  மூணு தவில், மூணு நாதஸ்வரம். கோவில் சூழலில்  வாசிப்பு கேட்கும்போது மனசெல்லாம் கரைஞ்சு போகுது. நமக்கு இதைப் பார்க்கக் கிடைச்சதேன்னு நினைக்கும்போது  நெஞ்சில் மகிழ்ச்சியும்  பரவசமுமாய்  திக்கித் திணறித்தான் போனேன். இவ்ளோ அமர்க்களத்திலும் இருந்த இடத்தை விட்டு துளி அகலாமல்  கூப்பிய கைகளுடன் கோபால்.  (இருக்குமிடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே!!)

கோவிலில் இருக்கும் மற்ற எல்லா சந்நிதிகளுக்கும்  ராமுவும் சீனுவுமா ஜோடியாப் போய் தீபாரதனைகளை  ஏத்துக்கிட்டு  வலம் வர்றாங்க. அப்பக்கூடப்பாருங்க ... ஆண்டாளம்மாவைக் கண்டுக்கலை:(






ஹாய் ஹாய் சொல்லி முடிச்சு  ராமனுக்கு வேண்டிய  மாலை மரியாதை ஆரத்திஎல்லாம் செஞ்சு  ரெண்டு பேரும் பக்கத்துப் பக்கத்துலே இருந்து (உலககாரியங்கள்) பேச ஆரம்பிச்சுருப்பாங்க போல!  கலியுகத்துக்காரரைக் காண வந்த த்ரேதா யுகத்துக்காரருக்கு   விஷயங்கள் எவ்ளோ இருக்கும்  பேசுவதற்கு!!!!

ஒரு பதினொரு நிமிச வீடியோ க்ளிப் ஒன்னு போட்டுருக்கேன். நேரம் இருப்பவர்களும், சிங்கைக்கோவில் சமாச்சாரம் என்னன்னு  பார்க்க விருப்பம் உள்ளவர்களும் ராம்  மீட்ஸ்  சிங்கைச் சீனுவை(யும்)  தரிசிக்கலாம்.

ஸ்ரீராமனை  ஆட்கள் தோளில் தூக்கி வர, நம்ம சீனு  ரொம்ப மாடர்னா யாரையும் சுமக்க வைக்காமல்  வீல் சேரில்... சாரி.....   சக்கரம் வச்ச மேடையில் ஜாலியா சுத்தி வர்றார்.  எனக்கு ரொம்பப்பிடிச்சது.  கோவில்களில்கூடப் பாருங்க  பெருமாள் வீதிவலம் வரும்போது  சின்னதா மோட்டர் வச்சு தேரை இழுக்கலாமில்லையா?

திருப்பதி ப்ரம்மோத்ஸவம்  பார்க்கையில்  இப்படி நினைப்பேன். நல்ல செழுமையா இருக்கும் பட்டர்கள் பலரும் ஏறி நிற்கும் பல்லக்கைச் சுமந்து வரும் திருப்பாதம் தாங்கிகளை நினைச்சால் மனசு வலிக்கும். சின்னதா ஒரு  எஞ்சின் வச்சு இழுக்கலாமா இல்லையா?  நம்ம அடையார் அனந்தபத்மநாபன் கோவிலில்  மாதம் ஒருமுறை திருவோணம் நட்சத்திரம் தினம் , தேரில் பவனி உண்டு. சின்ன மோட்டர் வச்சுதான் இழுப்பாங்க.  கட்டளைக்காரர்கள் பேருக்குக் கொஞ்சம் இழுப்பது போல் போஸ் கொடுத்தால்போதும். சாமி கோச்சுண்டாரா என்ன?

நெருங்கிய தோழி ஒருவரிடம்,  மேற்படி சமாச்சாரம் சொல்லிப் புலம்பியபோது..........  அரை விநாடி யோசிச்சவர், ஆகம விதிகளில் இப்படியெல்லாம்  இருக்காதுல்லையா.அதான் விதிப்படி நடத்தறாங்கபோல என்றார்.

ஓ.... அப்ப கஷ்டப்பட்டு நாலைஞ்சு மணி நேரம் வரிசையில் காத்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்யக்கிட்டக்கப்போய் நிக்கும் அதே நொடியில்  கிங்கரர்போல பக்தரின் கையைப்பிடித்து இழுத்துக் கடாசும்படி ஆகமத்தில் எழுதி இருக்கா என்ன?  பெருமாளும் இந்தக் கூத்தை எல்லாம் பார்த்துண்டுதானே இருக்கான்?

அட! ஆமால்லென்னு தோழி முகத்தில் ஒரு குழப்பம்.

 கருட வாகனத்தை உருட்டிக்கிட்டு வர்றாங்க!  ஆஹா.... இதுவும் அட்டகாசமான ஐடியா! எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!


 திருமஞ்சனத்துக்குக் காத்திருக்காங்க!


திரும்பப்போய் உக்கார்ந்து  பாக்கி வச்ச சகஸ்ரநாமத்தை வாசிச்சு முடிச்சோம். அப்ப  ஒரு  பெரியவர் வந்து நம்ம பக்கத்தில் உக்கார்ந்தார்.  பெரியவர்னு சொன்னது  மிஷ்டேக். அநேகமாக எங்க வயசுக்காரராத்தான் இருப்பார்.  திடீர்னு சட்டைப் பையில் இருந்து ஒரு சின்னப் பொட்டலத்தை எடுத்தவர், அதைப்பிரிச்சு உள்ளே இருந்த சங்கிலியை என்னிடம் காமிச்சு நல்ல தங்கம்தானான்னு கேட்டார்.  நம்மகிட்டே ஏன் கேக்கறார்ன்னு கோபால்  முழிக்க,  ஆஹா....  அவருக்கு நம்மைப்பத்தித் தெரிஞ்சுருக்கேன்ற பெருமையோடு கையில் வாங்கிப் பார்த்தேன்.  பார்க்க தடிமனா இருக்கே தவிர கனம் கொஞ்சம் கம்மியா இருக்கு.  இருவது கிராம்தானாம்.  தாம்புக்கயிறு  டிசைன்.  அணிமணியில் வாங்கி இருக்கார். நல்லகடைதான். நானும் முந்தி ஒருக்கில் வாங்கி  இருக்கேன்.

நல்ல டிஸைன்ஸ் வருதே, ஏன்  தாம்புக்கயிறு?  மகனுக்குக் கல்யாணம் ஆகப்போகுதாம். வரப்போகும் மருமகளுக்கு வாங்குனதாச் சொன்னார். நல்ல மாமனார். அந்தப்பொண்ணு கொடுத்து வச்சுருக்கணும்!

நல்ல தங்கம்தான். பயப்பட வேணாம் என்றதும் அவருக்கு மகிழ்ச்சி. இப்படிப் பொட்டலத்தைப் பாக்கெட்டில் போட்டுக்காம  பில்லை மட்டும் தனியா பையில் வச்சுக்கிட்டுச் செயினைக் கழுத்தில் போட்டுக்குங்கன்னு  என் (2 செண்ட்) ஆலோசனையை எடுத்துவிட்டதும், கொஞ்சம் கூச்சத்தோடு கழுத்தில் போட்டுக்கிட்டார்.  செயின் தெரிவது போல் போஸ் கொடுங்கன்னதும் அதே அப்பாவிச் சிரிப்புடன்  சட்டையின் மேல் பட்டனை திறந்தார்.  அவரை க்ளிக்கிட்டு, படத்தை காமிச்சதும் முகம் முழுசும் மகிழ்ச்சி. நம்மால் ஒருவருக்கு  மனமகிழ்ச்சின்றதைப் பார்த்து நமக்குமொரு மகிழ்ச்சி.


அப்போ கண் எதிரில் தோன்றினார் சித்ரா அப்பா.  சும்மாக் கோவிலுக்கு வந்தாராம்.  பத்து நிமிசம் போல பேசிக்கிட்டு இருந்தோம். எங்கேயும் போயிறாதீங்க. இதோ அஞ்சு நிமிசத்தில் வடபத்ர காளி கோவில்வரை போயிட்டு வரேன்னார்.  நாம் ஒரு காமணி இருந்து பார்த்துட்டுக் கிளம்பினோம். எனக்கு நம்ம சீனுவிடம் கொஞ்சம்பேசி உத்தரவு வாங்கிக்கணும். மூலவராண்டை ஈ காக்கா இல்லை. இருக்கும் கூட்டம் மொத்தமும் ராமு அண்ட் சீனுவைச் சுற்றி:-)

இனி எப்போடா உன்னைப் பார்க்கப்போறேன்னு கொஞ்சம் புலம்பினேன்.  நல்ல நல்ல தரிசனம் கொடுத்து சேவை சாதிச்சே. அதுக்கு ரொம்ப தேங்க்ஸ்டா. இந்தப் பயணத்தில் உடம்புக்கு ஒன்னும் வராமலும் காப்பாத்திட்டாய். எல்லாத்துக்கும் தேங்க்ஸ்ன்னு சொல்றதைத் தவிர வேற என்ன செய்யமுடியும் என்னாலே?  கண்ணை மூடிப்புலம்பிய பின்  கண்ணைத் திறந்தால்  ஒரு பட்டர் ,இது ஏதடா பைத்தியம்?'என்ற பார்வை.

வெளியூரான்னார். ஆமாம். வருசாவருசம் வருவேளா?  அப்படிச் சொல்ல முடியாது.....   அவன் கூப்பிடணுமே!  கொஞ்சம் இருங்கன்னுட்டு வெத்திலை பாக்கு, பழம் பூ எடுத்து எனக்குக் கொடுத்தார்.  பெருமாளே தாம்பூலம் கொடுத்துட்டான்னு மகிழ்ச்சியா அதை வாங்கிக்கிட்டு, உங்க பெயர் என்னன்னு பட்டரிடம் கேட்டேன்.  பதில் வந்துச்சு, ஸ்ரீநிவாஸன்.  பெருமாளே... பெருமாளே!

மனசில்லா மனசோடு கிளம்பி முஸ்தஃபாவுக்கு வந்தோம். நேத்து பார்த்து வச்சுட்டுப்போன ஷர்ட்ஸ் அதே இடத்தில் இருக்கு.  இன்னும் கொஞ்சநேரம் ஆராய்ந்து மூணு ஷர்ட்ஸ் வாங்கிக்கிட்டார். கூடவே நெக் பில்லோ ஒன்னும். பத்தரை மணி நேரம்  பறக்கும்போது கழுத்து வலியாம். சொந்தப்பயணத்தில் எகானமி வகுப்புன்றதால்,  இன்னும் கொஞ்சம்  அலட்டல் எல்லாம் உண்டு:-)  நானும் ரொம்ப நாளா வாங்கிக்கணுமுன்னு நினைச்சுக்கிட்டு இருந்த ஒரு சமாச்சாரம் வாங்கிக்கிட்டேன். இனி நியூ லுக்தான்:-)))))  தலைக்கு மேலே அடையாளம் தெரியலைன்னா  பயந்துறமாட்டீங்கதானே?

அறைக்குத் திரும்பும் வழியில் சில நகைக்கடை ஜன்னலில் வேடிக்கை(மட்டும்) தான். வரவர ஜிமிக்கியின் அளவு பெருசாகிக்கிட்டே போகுது. குடை ஜிமிக்கி ஏறக்கொறைய குடை சைஸுக்கு!  திடீர் திடீர்னு வரும் மழைக்கு  நீ குடையாவாய்...........

இன்னொரு கடையில்  இந்த வருச கொலுவுக்கு  ஒரு பஞ்சமுகப் புள்ளையார், லக்ஷ்மி, சரஸ்வதின்னு  மூணு பொம்மையுள்ள செட் வாங்கினேன்.  என் ஷாப்பிங்  ஃபினிஷ்டு:-)



நம்ம சாமிகளையெல்லாம் சீனர்கள் பட்டுப்போல் அழகாச் செஞ்சுட்டாங்க! ஒவ்வொன்னும் ஒரு அழகு!

செக்கின் செய்யப்போகும் ஃபைனல் மூட்டைகளைக் கட்டியாச்சு.  என் கேபின் பேகில் பத்துமலைக்காரன்!

தொடரும்..............:-)







நாய் பிடிச்சுருப்பா............ (சிங்கைப்பயணம் 7 )

$
0
0
Fusion  எங்கெல்லாமிருக்கலாம்? ஐய்ய..... எங்கெங்க முடியுமோ அங்கெல்லாம் இல்லையோ?  கோமளாஸ் ஃப்யூஷன் ஃபைன் டைனிங் ரெஸ்ட்டாரண்டுக்குள் நுழைஞ்சோம். அப்பர் டிக்ஸன் ரோடில் இருக்கு. நாம் வழக்கமா(!!) போகும் கோமளவிலாஸுக்குப் பக்கத்துத் தெருதான்.  எங்க கூட நம்ம கஸ்தூரி  இருக்காங்க.

நம்ம வீட்டுப் பூஜைபுனஸ்காரங்கள் செஞ்சு வைக்கும் லேடி பண்டிட் இவுங்க:-) இன்னும் கொஞ்சம் இவுங்களைப்பத்தித் தெரிஞ்சுக்கணுமுன்னா இங்கே பாருங்க. ஒருத்தரையும் விட்டுவைக்கமாட்டேனாக்கும்:-))))


ஆக்லாந்துக்கு இடம் மாறிப்போனவங்க  அப்படியே சிங்கைக்குத் திரும்பிட்டாங்க.  மச்சினர் வீட்டுலே இருந்த மாமியார் (90+) இப்போ இவுங்க பொறுப்பில். ஆனாலும்  நமக்கு கஸ்தூரியின் தொடர்பு இதுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கு(டச் வுட்!) சனிக்கிழமை  அவுங்களுக்கு ஃபோன் செஞ்சு வந்திருக்கும் விவரம் சொல்லி சந்திக்க நேரம் கேட்டுருந்தேன்.  ஒருநாள் சமையலில் இருந்து ரெஸ்ட் கிடைக்கட்டுமேன்னு  எங்களோடு சாப்பிடச் சொல்லி அழைப்பு.  இன்னிக்கு லஞ்சுக்கு வரேன்னு சொல்லி இருந்தாங்க. நாங்களும்  கோவில் போய்வந்து  அவுங்களுக்காக வெயிட்டிங்.  12 வரைக்கும் ஆளைக் காணோமேன்னு  ஃபோன் செஞ்சால்,  கஸ்தூரியின் ரங்க்ஸ் எடுத்துப் பேசறார்.  பேரக்குழந்தைக்கு பேபி ஸிட்டிங் ட்யூட்டி அவருக்காம். கஸ்தூரி மட்டும் நம்மைச் சந்திக்க வந்துக்கிட்டே இருக்காங்களாம். 'இந்நேரம் வந்துருக்கணுமே'ன்னார்.  ஃபோனை வச்ச அஞ்சாம் நிமிசம் வந்துட்டேன்னு  லாபியில் இருந்து  கூப்பிட்டாங்க.

இப்ப சிலவருசங்களா,  ஹொட்டேல்களிலிருக்கும்  லிஃப்ட்கள்,  கார்டு போட்டால்தான் வேலை செய்யுது. ரொம்ப நல்ல விஷயம். நான் கீழேபோய் அவுங்களை நம்ம அறைக்குக் கூட்டி வந்தேன். விட்டுப்போன சமாச்சாரங்களைப் பேசிக்கிட்டு இருந்தோம்.  ஒருமணி ஆனதும் அறையைக் காலி செஞ்சு, பொட்டிகளை எல்லாம் இழுத்துக்கிட்டுப்போய் கீழே concierge service டெஸ்க்கில் ஒப்படைச்சோம்.

நம்மைப்போலவே அன்றைக்குக் கிளம்பும் ஹொட்டேல் கெஸ்ட்டுகள் கூட்டம் நிறைஞ்சுருக்கு.  டூர் க்ரூப் போல.  மனவாடுகள்.  ஒவ்வொருத்தர்  கையிலும் ஒரு 32 இஞ்ச்  எல் இ டி  டிவி.  ஒரு டிவியைத் தூக்கிப் பார்த்தேன். கனமே இல்லை!  சிங்கையில் விலை மலிவுன்னு சொன்னார்  டிவிக்காரர்.

நாங்கள் பொடி நடையில் சாப்பிடக்கிளம்பி  அப்பர் டிக்ஸன் தெரு கோமளாஸுக்கு வந்துருந்தோம். 1947 இல் ஆரம்பிச்ச கோமளவிலாஸ் காலத்துக்கு ஏற்றபடி மாறிக்கிட்டே இருக்கு.  (இப்பெல்லாம் வட இந்திய சாப்பாடும், சீனச் சாப்பாடும் சென்னையில் கூட பெருகிப்போச்சு பாருங்க:(  சவுத் இண்டியன் சாப்பாடுன்னு கேட்டாலே நம்மை ஒருமாதிரியில்லே பார்க்கறாங்க நம் சிங்காரச்சென்னையில்!)

கோமளவிலாஸின் ஓனர்  இறந்தபின் அவருடை ரெண்டு மகன்களும் வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்துனாங்க, வெவ்வேற ஸ்டைலில்.  பெரியவர், பாரம்பரிய வகையைத் தொடரும்போது, இளையவர்  ஃபாஸ்ட்  ஃபுட்,  ஃப்யூஷன்  ஃபைன் டைனிங் இப்படி  ஆரம்பிச்சார்.  இருக்கும் இடம் இந்தியர்கள் மேயும் இடமாக அமைஞ்சுட்டதால் எல்லா விதமானதும் ஓஹோன்னு  நடக்குது. பழைய ஒரிஜனல் கடையை ஒட்டியே ஒரு முட்டாய்க்கடையும் இருக்கு. யாராவது கவனிச்சீங்களா?    அங்கிருந்துதான் நமக்குத் தேவையான முறுக்கு சீடை தட்டை வகைகள், இனிப்புகள் எல்லாம் சப்ளை ஆகுது. எப்படியும் ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை வருது.  நம்மாள் போகும்போது லிஸ்ட் மட்டும் சொன்னால் போதும்:-)


 எனக்கு சவுத் இண்டியன் சாப்பாடுன்னதும் கோபாலும் எனக்கும்னார். கஸ்தூரி வட இந்திய வகை வாங்கிக்கிட்டாங்க. ருசி ஒன்னே போல இருந்தாலும் பரிமாறும் அமைப்பு(மட்டும்) வேற மாதிரி. மலிவான  த்ரோ அவே ப்ளாஸ்டிக்  கிண்ணங்கள் இல்லை. ( ஒருவேளை அதுதான் மேலோ?  திருப்பி பயன்படுத்தமாட்டாங்க என்பதே ஒரு ஆறுதல் இல்லையோ? )   ஃப்யூஷன் என்பதால்  விலை கொஞ்சம் அதிகம்.  கூட்டம் அவ்ளவா இருக்காதுன்னு நினைச்சால்.......  ஊஹூம்.

பேசிக்கிட்டே சாப்பிட்டு, சாப்பிட்டுக்கிட்டே பேசின்னு  ஒருமணி நேரம் ஓடியே போச்சு. அங்கிருந்து கிளம்பி பஃபெல்லோ ரோடு வழியா பொடிநடை போட்டு , லிட்டில் இண்டியா எம் ஆர் டி ஸ்டேஷனுக்கு வந்து  கஸ்தூரிக்கு பை பை சொல்லிட்டு நாங்க டெக்கா ஷாப்பிங் செண்டருக்குள் நுழைஞ்சோம். மணி மூணுதான் ஆகுது. ஒரு அஞ்சு மணிக்கு டாக்ஸி பிடிக்கலாம் ஏர்ப்போர்ட் போக.

டெக்கான்னு சொல்வதன் பொருள் மூங்கில் புதர்கள்.  ஒரு காலத்துலேஇந்தப் பகுதியில்  ரோச்சர் (Rocher  Canal Road) கெனாலை ஒட்டி நிறைய மூங்கில் குத்துகள்தான் இருந்துச்சாம். அப்ப இங்கே செராங்கூன் சாலை ஆரம்பிக்கும் இடத்தில் (இடதுபக்கம்)  ஒரு பெரிய வெட் மார்கெட் இருந்துருக்கு. அப்போ கேகே (Kandang Kerbau )மார்கெட் என்று பெயர்.  மலேய்ச் சொல். பொருள்: எருமை கிடை என்பதாம். buffalo pens. எருமைக் கொட்டாய்ன்னு வச்சுக்கலாம். 1920 ஆம் ஆண்டுவரை எருமைகளை மேலே அனுப்பும் ஸ்லாட்டர் ஹௌஸ்  இதுதான். ( அட! இதையொட்டி இருக்கும்  தெருதான் பஃபெல்லொ ரோடு! பெயர்க் காரணம் இப்போ புரிஞ்சு போச்சே!!!)  இறைச்சி விக்கறதுக்குன்னு  ஒரு மார்கெட் கட்டியது 1915 லே. அப்புறம் இங்கேயே மீன், கோழின்னு  மார்கெட்  பெருசானதும்  எருமை வெட்டு வேற இடத்துக்கு மாறியிருக்கு.  மார்கெட் பெருசானதும் இங்கேயே பச்சைக் காய்கறிகள், பழங்கள், பலசரக்குக் கடைன்னு  விரிவாகிப்போய்  நல்லாதான் நடந்துச்சு.

1985லே முதல்முறையா சிங்கப்பூர் போயிருக்கோம்.   செராங்கூன் ரோடு  முழுசும்  ரெண்டு பக்கமும் திறந்த சாக்கடைக் கால்வாய். .  அந்த ஏரியாவிலேயே சுமாரான ஹொட்டேல் 'ப்ராட்வே ஹொட்டேல்'தான்.  நம்ம அறையிலே இருந்து பார்த்தால்.....  அக்கம்பக்கம்  பூராவும் ஓடு வேய்ஞ்ச  இருப்பிடங்கள். ஐய்ய.... இதுவா சிங்கப்பூருன்னு இருந்துச்சு.  இப்ப முஸ்தஃபா கடை இருக்குமிடத்தில்  வேற  பெயர்களில்  சிலகடைகள். அதிலொன்னு கல்யாணசுந்தரம் எலெக்ட்ரானிக்ஸ் கடைன்னு நினைவு.

செராங்கூன் சாலை ஆரம்பத்தில்  'புகிட் டிமா மார்கெட்'.  அதுக்குப் பக்கத்தில்தான்  ஒரு கட்டணக் கழிப்பறை.  இருபத்தியஞ்சு சதம் கொடுத்துட்டு பயன்படுத்திக்கலாம்.  காசு கொடுத்ததும் கொஞ்சூண்டு டாய்லெட் பேப்பர் கிழிச்சுக் கொடுப்பாங்க. அப்ப  எதுத்தாப்லே  டெக்கா செண்டர் மால்   என்ற ஒன்று  இல்லவே இல்லை. 2003 லேதான்  இது கட்டப்பட்டது.  ஆச்சு பத்து வருசம்.

இந்த இருபத்தியெட்டு வருசங்களில் செராங்கூன் ரோடு  மாறிக்கிட்டே வந்துருக்கு. எல்லாம் நல்ல மாற்றங்களே!   முஸ்தாஃபா ஒரு ஹொட்டேல்கூட  நடத்துனாங்க.  இப்ப  அது இல்லை.  மொத்த இடத்தையும் விரிவுபடுத்தி  பிரமாண்டமான  கடையா மாத்தியிருக்காங்க இப்போ. நகைக்குன்னு ஒரு தனிக் கட்டிடம் கூட வந்தாச்சு.  1973 வது வருசம்  வெறும் 900 சதுர அடியில் ஆரம்பிச்ச கடை இப்போ  தரைத்தளம் மட்டும் நாப்பதாயிரம் சதுர அடி. அஞ்சு மாடிகள் வேற .1862 பணியாட்கள்,  மூணு லட்சம்  வகையில்  பொருட்கள் .  725 மில்லியன் டாலர்  யாவாரம்!




டெக்கா ஷாப்பிங் செண்டருக்கு இப்போ வேற பெயர்.The Verge.  குட்டி இந்தியாவின்  முதல் மாடர்ன் ஷாப்பிங் மால் இதுதான். எப்ப சிங்கப்பூர் போனாலும்  இதுக்குள்ளே போய் ஒரு சுத்தாவது சுத்திட்டு வருவோம்.  அடித்தளத்தில் இருக்கும் ஒரு சூப்பர் மார்கெட் என் ஃபேவரிட். அங்கே மல்லிப்பூ (உதிரியாக) கிடைக்கும்.  வாங்கிக் கோர்த்துக்குவேன்.


பழவகைகள் அருமையா வெட்டி வச்சுருப்பாங்க. கூலர் செக்‌ஷனில்  இப்போப் பார்த்தால் வெங்காயம், பூண்டு எல்லாம் உரிச்சு அழகான பொதிகளாய் இருக்கு. விலையும் மலிவே!   பூச்செடிகள் விற்பனைப்பகுதியில்  நான் ரொம்பநாளாத் தேடிக்கிட்டு இருக்கும் டெவில்'ஸ் ஐவி. (நம்ம வீட்டுச் செடிகளை குடித்தனக்காரர்கள் சாகடிச்சுட்டாங்க:( அப்புறம் உள்ளுரில் தேடிக்கிட்டே இருக்கேன். ஊஹூம்....)

 போனால் கிடைக்காதுன்னு பலாப்பழம் கொஞ்சம் வாங்கிக்கிட்டோம். நேரா கோமளவிலாஸ் முட்டாய்க்கடை அடுத்த ஸ்டாப். நொறுக்குத் தீனிகள் வாங்கும்போது கண்ணில் பட்டது  இருட்டுக்கடை அல்வாவும் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் பால்கோவாவும். இருட்டு மட்டும் ஒரிஜனலான்னு ஒரு சந்தேகம். கடைக்காரம்மா ,  நான் கேரண்டீ தரேன்னு சொல்றாங்க. நல்லா இல்லேன்னா அடுத்தமுறை போகும்போது தாளிக்கலாம். அவுங்களையும்  பலவருசமாப் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கோம்.

 ஸ்ரீவி போனபோதும்கூட பால்கோவாவைக் கண்ணால் தின்னதோடு சரி. எல்லாம் ஒரு பயம்தான்.  பயணத்தில் கவனமா இருக்கணுமே!  இப்ப இன்னும் கொஞ்ச நேரத்தில்  கிளம்பிருவோம். நாளைக்கு வீடு. அதனால் தைரியமா ஒரு பால்கோவா (100 கிராம்) பொட்டலம் வாங்கிக்கிட்டேன்.

ஒரு பூக்கடையில்  கொஞ்சம் மல்லிகைப்பூ.  இந்த பயணத்தில் இது கடைசி.  நாளைக்கு ஊரில் இறங்குமுன் மறக்காம  எடுத்துக் களைஞ்சுறணும்.
 லிட்டில் இண்டியா ஆர்கேட் கடைகள்.

நாலரை ஆச்சு. கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பி அங்கே போய் ரெஸ்ட் எடுக்கலாம்.  பொழுதன்னிக்கும்  ஷாப்பிங் (!) என்ன வேண்டி இருக்கு என்றார் கோபால்.  அவர் பயம் அவருக்கு:-)

விமானநிலையம் வந்து சேர்ந்தப்ப  நாலு அம்பத்தியொன்னு!  ட்ராஃபிக் ரொம்ப இல்லைன்னு 'லீ'சந்தோஷப்பட்டார்:-)

டிக்ளேர் பண்ண வேண்டிய ஐட்டங்களை  எல்லாம் கேபின் பேகில் எடுத்து வச்சுட்டு மற்ற பெட்டிகளை இன்னொருக்கா அடுக்கினார் கோபால். நம்மவருக்கு இந்த பெட்டி அடுக்கல் ரொம்பப்பிடிச்ச  சமாச்சாரம்:-)   எப்படியோ மகிழ்ச்சியா இருந்தாச்  சரி :-)))

ஏற்கெனவே  நெட்டில் புக் பண்ணிவச்ச ஸீட்டை மாத்தி  மூணு பேர் அமரும் ஸீட்டை மாற்றி வாங்கினார் கோபால். நடு இருக்கை காலி என்பதால் தூங்க இடம் கிடைக்குமாம்.

செக்கின் செஞ்சுட்டுச் சும்மாக் கொஞ்ச நேரம் வேடிக்கை. அப்புறம்  பலாச் சுளைகளைத் தின்னு முடிச்சோம். பழம் தின்னு கொட்டை போட்டாச்சுக் குப்பைக்கூடையில். இன்னும் கொஞ்சம்  வேடிக்கை. அப்புறம் ஒரு கப்புச்சீனோ.

மகள் கேட்ட 'MAC' brand   சமாச்சரத்துக்கான தேடல். அது  வேறொரு டெர்மினலில்  இருக்கு. அதனால் என்ன? ரயில்தான் இருக்கே! அங்கே போனால்..... நமக்கானது மட்டும்  ஸ்டாக் இல்லை!

திரும்ப நம்ம டெர்மினலுக்கு வந்தோம்.  அப்பதான்  நம்ம  ஃப்ளைட் ரீஷெட்யூல் பண்ணி இருப்பதாக  டிவி மானிட்டரில்  அறிவிப்பு. இன்னும் ஒரு மணி நேரம் தாமதமாகக் கிளம்புமாம். எதுக்குன்னு சொல்லக்கூடாதா?  குறைஞ்சபட்சம் நம்ம கேட்டுக்குண்டான  லவுஞ்சிலாவது  எழுதி ஒட்டி இருக்கலாம்.  தெரிஞ்சிருந்தா  எதாவது சாப்பிடக் கொண்டுவந்துருக்கலாம். அதான் கேபின் பேகில் தீனி இருக்கேன்றார் கோபால்.அட!  ஆமாம்லெ.  பையைத் திறந்தால் ஆண்டாள் . மில்க் சமாச்சாரம் இங்கே நியூஸியில் கொண்டுவரத்தடை உண்டு. Mad Cow  பயம்தான்.

பால்கோவாவில் பாதியை முழுங்கிட்டு மீதிப் பொட்டலத்தைக் கைப்பையில் வச்சேன்.  ஒருமணி நேரம்  கழிச்சு  விமானம் ஏறும்போது  நம்ம  கையில் SIA நோட்டீஸ்  ஒன்னு  கொடுத்தாங்க. கிறைஸ்ட்சர்ச்சில்  ஒரே  fog. அதனால் விமானம் தரையிறங்கக் கஷ்டம் என்பதால்  ஒரு மணி தாமதமாகப் புறப்படுவதற்கு வருந்துகிறார்களாம்.  ஆமாம்..... பொல்லாத வருத்தம்.  இதை முதலிலேயே சொல்லி இருந்தால்  இன்னும் நிதானமா வேடிக்கை பார்த்திருப்பேனில்லையோ?

ஃப்ளைட் உள்ளே  போய் உக்கார்ந்தால் இன்னொரு அதிர்ச்சி.  என் பக்கம் ஜன்னலைக் காணோம். யாரோ எடுத்துட்டாங்க!!!!!!!.  அதான் இந்த வரிசை காலியா இருந்துருக்கு.  நல்லதாப்போச்சு. தூங்கலாமுன்னு சொல்றார் இவர். நறநற..........



நல்ல தூக்கம்முடிஞ்சு,  போது விடிஞ்சால் ப்ரேக்ஃபாஸ்ட் வருது.  யாராவது  இந்த ஏர்லைன்ஸ்க்குச் சொல்லப்டாதோ?  எண்ணெய் வழியும் குல்ச்சாவும்  உருளைக்கிழங்குக் கறியும்  காலை  உணவா?  அடப்போங்கப்பா........  முந்தியெல்லாம் இட்லி, வடை, உப்புமான்னு  வரும். இப்போ இதுவும் வடக்கா மாறிப்போயிருக்கு:(

வேணாமுன்னு ஒதுக்கி வச்சுட்டு  சீப்பை எடுக்க கைப்பையைத் திறந்தால்...........  நம்ம பால்கோவா!  நல்லவேளை இப்பவாவது  கண்ணில் பட்டதேன்னு  விழுங்கினோம். தலையில் இருக்கும் பூவை மறக்காமல் எடுத்துக் குப்பையில் போட்டேன். அபராதம் 200 டாலர்.

தரை தொட்ட விமானத்தில் இருந்து ஏர்ப்ரிட்ஜில் காலை வைக்கும்போது நம்மையெல்லாம் இடிச்சுத் தள்ளிக்கிட்டு முன்னால் ஓடிய பொடியன், 'மம்மி தண்ட் லக்ரஹா ஹை'ன்னு  அலறினான்.  குல்ச்சாவைத் தின்னுமா?  டூரிஸ்ட் போல! இப்பத்தான் ஜூன், இன்னும் மூணுநாலு மாசத்துக்குத் தண்டே தண்டுதான்:-)


பெட்டிகளுக்காகக் காத்திருந்தபோது   ஏர்ப்போர்ட் மோப்பநாய்  ரோந்து வந்தது.  அப்படியே என்பக்கம் வந்து நின்னு  துப்பட்டாவைத் தொட்டது.  அதற்குள் நாயாளர் பொண்ணு நம்மிடம் வந்துட்டாங்க.   தூரத்தில் நின்னு பொட்டிகளை எடுத்துக்கிட்டு இருந்த கோபால், என்ன ஆச்சோன்னு ஓடி வர்றார். எக்ஸ்க்யூஸ் மீ. உங்க ஹேண்ட் பேகைப் பார்க்கணும்.  பார்த்துக்குங்கன்னு  கொடுத்தேன்.  உள்ளே  சந்தேகப்படும் வஸ்து ஒன்னும் இல்லை.  ஆனாலும் நாய் பிடிச்சுட்டதால்  எல்லாப்பொட்டிகளையும் திறந்து காமிக்கத்தான் வேணும். அந்த வரிசையில் போனோம்.  ஒரு பையை மட்டும் திறந்த MAF  அதிகாரி,  வேறெதாவது  டிக்ளேர் செய்யணுமான்னார்.  தீனிப்பை மட்டும்தான்னு  காமிச்சதும் ஓக்கேன்னு க்ளியர்  ஆச்சு.

நல்ல பால்கோவாதான் போல.  நாய்க்கு  ரொம்பப் பிடிச்சிருச்சு:-)  ஸ்மார்ட் நாய். வெல் டன்.

ரெண்டு வாரங்களில்  நம்ம மூணு நாட்டுப் பயணம்  இப்படியாக முடிஞ்சது. கூட வந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றீஸ்.

பயணம் உள்ளத்திற்கும் உடலுக்கும் நல்லது.
ஆதலால் பயணம் செய்வீர்!


முற்றும்..:-))))))




என்ன, மாட்டுக்குத் தண்ணி காமிக்கிறீங்களா?

$
0
0

நல்லா ஊறவச்ச புண்ணாக்கை இப்படித்தான் கழனித்தண்ணீயிலே கலக்கி விடணும். சுவருக்கு ரெண்டாடி தள்ளிநின்னு   அப்படியே சுவத்துப் பக்கம் சாய்ஞ்சு இடக்கையின் அஞ்சு விரல்களையும்  ( புதுக்கல்யாணம் முடிஞ்சதும்   மஞ்சளில் கையை முக்கி சுவரில்  அச்சுப்போடுவது போல) பதிச்சாப்லெ  வச்சுக்கிட்டு  கொஞ்சம் லேசாக் குனிஞ்சு சோத்துக் கையால்  தொட்டித்தண்ணியைக் கலக்கணும். மாடு வந்து சர்ன்னு உறிஞ்சிக் குடிக்கும்போது நமக்கே படு திருப்தியா இருக்கும்,பாருங்க.

கலக்கிக்கிட்டு இருந்தார் நம்ம கோபால். வலது தோள்பட்டைக்கீழே மார்லே சதைப்பிடிப்பு.கையைத் தூக்கமுடியலை.  டாக்குட்டர்  அம்மா,  கைக்குத் தொட்டில் கட்டிவிட்டு, ரெண்டு நாளைக்கு பெயின் கில்லர் கொடுத்தாங்க. அப்புறம் பிஸியோகிட்டே போகணுமாம்.  சிரமேற்கொண்டு  ரெண்டு நாளானதும்  போயிட்டு வந்தார்.  மாட்டுக்குத் தண்ணி காமிக்கச் சொன்னது அப்போதான். தினம் மூணு வேளை மாட்டுக்குத் தண்ணி காமிச்சுக்கிட்டு இருந்தார். நான் நம்பமாட்டேன் என்பதால் கண் முன்னே தண்ணீ காமிச்சாகணும்.

இடது கைக்கு என்ன பயிற்சின்னா  ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டுவது.  வலது கைக்கு  திருகைக்கல்லில் மாவு திரிப்பது. ஆச்சா,  இன்னும் கிணத்துலே இருந்து தண்ணீர் இறைச்சு ஊத்துவது,  தோள்பட்டை கிண்ன்னுன்னு இருக்க  உரலில் நெல்லைப்போட்டுக் குத்தி எடுப்பது, ஸிட்டப் செஞ்சுக்க இருக்கவே இருக்கு அடுப்படி.  எழுந்து, உக்கார்ந்துன்னு நாளுக்குப் பலமுறை சமையல் கட்டுலேயே  பயிற்சி ஆறது. இன்னும் தேங்காய் துருவுதல், அரிவாள் மணையில் கறிகாய் நறுக்குதல் எல்லாம் தரையில் உக்காந்தபடியேதான்.  ஆத்தங்கரைக்குப்போய் துவைச்சு, குளிச்சுன்னு  சகஜீவன்களுடன் பேசியபடியே...   மாலையில் கோவிலுக்கு ஒரு விஸிட். இதுதான் அந்தக் கால லேடீஸ் க்ளப்.

இப்படியெல்லாம்  உடற்பயிற்சி செய்யும்போதே வீட்டு வேலைகளும் ஆகிக்கிட்டு இருந்துச்சே! நாகரிகம் என்ற பெயரில் அருமையான வாழ்க்கையைத் தொலைச்சுட்டு, இப்ப டாக்டருக்கும்  பிஸியோதெரப்பிஸ்ட்டுக்கும் காசை அழுதுக்கிட்டு இருக்கோமேன்னு............ மனசுக்குள்ளே தன்னிரக்கம்.

தரையில் உக்கார்ந்து  இலை போட்டுச் சாப்பிட முடியலை பாருங்க.  இவ்ளோ ஏன்?  ஃப்ரீஸர் கடைசி ஷெல்ஃப்லே என்ன இருக்குன்னு பார்க்கக் குனிஞ்சு க்டைசியில் தொப்புன்னு கீழே உருண்டதுதான் மிச்சம்.

உடம்பு வணங்குவதில்லை. அதிலும்  'அவசியமான'உட்காரலுக்கும் கூட  குத்துக்கால் போட்டு உக்காரமுடியலை.  எல்லாத்துக்கும் மேடையா ஆகிப்போச்சே:(

பேசாம பழைய வாழ்க்கைக்குத் திரும்பினால் என்ன?

ஊஹூம்.... இனி அது நடக்காத காரியம்.  Gym  போனால்  rowing machine,  treadmill, Power bench, Exercycle  இன்னபிற சாதனங்களை வச்சுக்கிட்டு  இதே  பயிற்சிகளைச் செஞ்சுறலாமே!

செய்யலாம்தான். ஆனால் டூ இன் ஒன்  ஆகாதே! அப்ப ஒன்னு செய்யலாம்.......  நம் பழங்கால வாழ்க்கை முறையை  மீண்டும் கொஞ்சநாள் ஒரு ரெண்டு வாரமோ,  இல்லை ஒரு மாசமோ நடத்திப்பார்க்க ஒரு ஹெரிடேஜ் ஹொட்டேல் நடத்தலாம்.

வர்ற கெஸ்ட்டுங்க  தாமே எல்லாப் பொருட்களையும் பயன்படுத்திச் சமைச்சுச் சாப்பிடணும்.  கூடமாட ஒத்தாசைக்கு வேணுமுன்னா ரெவ்வெண்டு பேர் உதவி செய்வாங்க.  தனித்தனி வீடுகள்,  காலை 6 முதல் இரவு எட்டுவரை  உதவியாளர்கள். இப்படி ஒன்னு ஆரம்பிக்கலாமா?

அதான் 'ஆனந்தம்'இருக்கேன்னால்..... சமையல் செஞ்சுக்க முடியாதில்லையா?

நாமே ஒன்னு ஆரம்பிச்சால் என்ன? யாருகண்டா.....  ஒருவேளை க்ளிக் ஆகலாம்.

சரி சரி....ரொம்ப யோசிக்காம புண்ணாக்கை நல்லாக் கரைச்சு விட்டு மாட்டுக்குத் தண்ணி காமிங்க.

படங்கள் சப்ளை செய்த  கூகுளாண்டவருக்கு நன்றி. அவர்தான் செல்வியின் பதிவுக்கு நம்மைக் கொண்டுபோய் விட்டவர். செல்விக்கு நம் நன்றிகள்.

மாறாதது கடவுள் மட்டுமா??

$
0
0
என்றும் மாறாதது  சாமி மட்டுமா?  நம்ம வீட்டு மெனுவும்தான்:-)  விஜயதசமியன்னிக்கு ஒரு சின்ன அளவில்  பூஜை செய்ஞ்சுக்கறது   இப்போ ஒரு  பதினைஞ்சு வருசப்பழக்கம்.  சாமி வந்தாரில்லையா? பாவம் அவர் தேமேன்னு  இருந்தாலும் , நமக்கு இவ்ளோ செய்யும்  அவருக்காக  நாம் எதாவது செய்யணும் என்று ஆரம்பிச்சதுதான்.  குறைஞ்சபட்சம் வருசத்துக்கு ஒரு நாள் கூடி இருந்து குளிர வேணாமா?

சாமி வந்தது  இங்கே:-))))

 

சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல்,  எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், ததியன்னம், சுண்டல், பாயசம்  இதுதான் நைவேத்யத்துக்குள்ள மெனு. இந்தப் பதினைஞ்சு வருசமா மாறாதது இது ஒன்றே:-)

 பிர'சாதம்' பெயர் பொருத்தம் சூப்பர்.  எல்லாம் சாத வகைகளே:-))))


சாயங்காலம் சாமி கும்பிட்ட பிறகு ராத்திரி டின்னரும் சேர்த்து வச்சுக்கிட்டா,  கெஸ்ட்டுகளுக்கு வீட்டுலே போய் சமைச்சுச் சாப்பிடும் வேலை மிச்சம். ஒருவேளையாவது  வீட்டம்மைகளுக்கு ரெஸ்ட் கிடைக்கட்டுமே!

 ஆதி காலத்துலே (1999)  எனக்கு நம்ம வீட்டுலேயே டின்னருக்கு சமைக்கும் தெம்பு இருந்தது.  முப்பது பேர்வரை வருவாங்க. அஞ்சாறு வருசத்துக்குப்பின்  ( அது நாம் புது வீடு மாறி வந்த வருசம் . சுநாமி நடந்து  மூணே மாசம்  ஆனநிலை.  கிரகப்பிரவேசம் என்று தனியா யாரையும் அழைச்சுக் கொண்டாடவும் இல்லை )  நட்பு வட்டம் கொஞ்சம் பெருசாகிப் போனதாலும் ,பிரசாதம் மட்டும் வீட்டுலே, டின்னர் சமாச்சாரம் வெளியிலேன்னு ஒரு ஏற்பாடு. உள்ளூரில் அப்போ ஆரம்பிச்சுருந்த புது இண்டியன் ரெஸ்ட்டாரண்ட்லே இருந்து வரவழைச்சோம். ஓனரும் அருமையா தன்கைப்பட நல்லா சமைச்சுக் கொடுத்தார். பூஜை புனஸ்காரங்களுக்கு நல்ல தட்டில் சாப்பாடு போடணுமுன்னு எவர்சில்வரில் அம்பது தட்டுகளும் அம்பது டம்ப்ளர்களும்  வாங்கி வந்துருந்தாராம்.  அதையும் பயன்படுத்திக்குங்கன்னு  தாராள மனசும் காமிச்சார்.  தட்டின் திறப்பு விழா நம்ம வீட்டில்தான்:-))))

இடையில் ஒரு ரெண்டு வருசம் இந்தியவாசம் என்றானதில் சென்னையில் இருந்தப்ப சங்கீதாவும், சண்டிகரில் இருந்தபோது கோபால்ஸ்ம் (கடை பெயரே அதுதான்) பூஜையில் உதவி செய்ஞ்சாங்க:-)


மீண்டும் இங்கே வந்து சேர்ந்தப்ப,  நிலநடுக்கம் காரணம் நம்ம நண்பர்கள் கூட்டம் நகரைவிட்டுப் புலம் பெயர்ந்து போனதால்  எண்ணிக்கையில் குறைஞ்சு போச்சு. இருபத்தியஞ்சு,  இருபதுன்னு  தேய்ஞ்சு போய் இந்த வருசம்  பதினான்கே பேர் நம்ம ராஜலக்ஷ்மியையும் சேர்த்து. அதிசயத்திலும் அதிசயமாக மகளும் வந்திருந்தாள். நவராத்திரி ஒன்பதுநாளும் தவறாமல் கொலுவுக்கு வந்து போனதுக்கே ராஜலக்ஷ்மிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லணும்.

இந்தமுறை நாமே வீட்டுலே சமைச்சுக்கலாமுன்னு  கோபாலுக்கு ஒரு எண்ணம். சமையல் கத்துக்கறார் இல்லையோ?  நண்பர்களுக்கு அழைப்பு சொல்லும்போதே எதாவது சமைச்சுக் கொண்டுவரட்டான்னு கேட்டாங்க. செஃப் யாருன்னு தெரிஞ்சதால் பயம் வந்திருக்கலாம்:-) அதெல்லாம் ஒன்னும் வேணாம். சமாளிச்சுடலாம்.  சின்ன அளவுதானேன்னு சொல்லி இருந்தோம்.

டின்னருக்கு சிம்பிளா  ஒரு சாம்பார், ரசம், ரெண்டு கறிகள் போதும் என்றதால்  ஞாயிறு  காலையில்  மேற்கண்டவைகளை சமைச்சு முடிச்சோம்.  அதுலேயே லஞ்சுக்கும் கொஞ்சம் எடுத்துக்கலாம். முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி பொரியல்,  உருளைக்கிழங்கு காரம் போட்ட கறி. முருங்கைக்காய் சாம்பாரில் போட்ட ஃப்ரோஸன் முருங்கைக்காய்,  மரத்தில் செஞ்சது போல. தனியா அரைமணிக்கூறு வேகவைத்தும் கூட கட்டை,கட்டைதான்!  கூடவே சில கத்தரிக்காய்களையும் போட்டதால்  ஒருவழியா ஒப்பேத்தமுடிஞ்சது.

தோழிகளும்   வெல்லச் சாதம், புதினா வடை, மைசூர் பாகு,  ஃப்ரைடு ரைஸ், வத்தக்குழம்புன்னு  கொண்டு வந்து விருந்தை ஜாம்ஜாமென்று நடத்திக்கொடுத்துட்டாங்க.



இந்த முறை அதிசயமா வெத்தலையும் மாவிலையும் ( ரெண்டும் பப்பத்து) கிடைச்சது இண்டியன் கடையில்.  பாக்கு?  பச்சைப்பாக்கு   வச்சுருக்காங்க. தூள் பண்ணிக்கிட்டாலும்  வாயில் போட்டதும் நெஞ்சடைப்பு நிச்சயம். வீக்கெண்டில் ஆம்புலன்ஸ் வர அஞ்சு நிமிசத்தாமதம் என்பதால் ரிஸ்க் எடுக்கலை நான். வாசனைத் தூள் பாக்கு கிடைக்குதான்னு  ஒரு கண் வச்சுக்கணும் இனிமேல்.

மாவிலைகளால் கும்பவாஹினியை  அலங்கரிச்சேன்.  கூந்தலும் அமைஞ்சது.  ஏது?சவுரியான்னு கேட்ட தோழிக்கு.... வுல் என்றேன்:-))))
மாலை ஏழுமணிக்கு பூஜையை ஆரம்பிக்கலாம் என்ற ஏற்பாடு. நமக்கு இங்கே டே லைட் ஸேவிங்ஸ் தொடங்கிட்டதால்  ஏழுமணிக்குப் பளிச்ன்னு சூரியன்:-)  சாகற காலத்துலே சங்கரா சங்கரான்றது போல இங்கத்து சூரியனுக்கு  மறையும் நேரம்தான் தன்னுடைய கடமை நினைவுக்கு வரும்.  ஒரு அரைமணி பளிச்சிட்டதும் மீண்டும் தூக்கமே:-)
பல ஆண்டுகளுக்குப்பின் சூரியன் இப்படி வந்துட்டுப்போனார்:-)




பூஜைன்னு வச்சால் விஸ்தரிச்சு ஒன்னுமில்லை கேட்டோ. அதெல்லாம்  நம்ம பண்டிட் கஸ்தூரி இங்கிருந்த காலத்தோடு போச்சு. பதினாறு நாமங்களைச் சொல்லி புள்ளையாரைக் கும்பிட்டுவிட்டு,  எம் எஸ் எஸ் அம்மாவின் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஸிடி ப்ளேயரில் ஓடவிட்டு, கூடவே நாமும் சொல்லிக்கிட்டே போகணும். ஜஸ்ட் அரைமணிக்கூர்.  மக்கள்ஸ்க்கு  தமிழிலும் ஆங்கிலத்திலுமா ப்ரிண்டவுட் எடுத்து வச்சுருப்பதைக் கொடுத்தால் ஃபாலோ பண்ணிக்கிட்டே வருவாங்க.
அப்புறம் நெய்விளக்கு ஆரத்தி எடுத்து, நைவேத்யங்களைக் கை காமிச்சால் ஆச்சு. நண்பர்கள் அனைவரும் தீபாராதனை செய்து மலர் தூவி வழிபடுவார்கள்.



இந்த முறை மகளிர் குழுவினர்  எல்லோரும் அவரவர் மொழியில் (மூணு தெலுங்கு, ஒரு மலையாளம், ரெண்டு தமிழ்) இருக்கும் ஸ்லோகப் புத்தகத்தைக் கொண்டு வந்ததால்  மகனர்களுக்கு மட்டும் ஆங்கில 'எஸ் வி எஸ் என்'கொடுத்தோம்.

சொல்ல ஆராம்பிச்சதும், 'அட தொடங்கியாச்சா?'ன்னு  வந்த ராஜலக்ஷ்மி,  கொலுவைக்கிட்டப்போய் பார்த்துட்டு நட்ட நடுவில் உக்கார்ந்து  தெய்வீக ஒலியில் லயித்துப்போனது அருமை!

எல்லாம் நல்லபடியாக நடந்து முடிஞ்ச மகிழ்ச்சியில் டின்னர் ஆரம்பமாச்சு. நம் வீட்டு வழக்கப்படி, லேடீஸ் ஃபர்ஸ்ட், அப்புறம் மற்றவர்கள்.  பரிமாறும்  வேலை மிச்சம் என்று அவரவர்க்குத் தேவையானதைத் தட்டில் போட்டு எடுத்துப்போய் கூடத்தில் உக்கார்ந்து  பேசிக்கிட்டே  சாப்பிட்டோம்.




கடைசி கெஸ்ட் போகும்போது மணி  ஒன்பதேமுக்கால்.  பாவம், ராஜலக்ஷ்மிதான்  ஒன்னும் சாப்பிடாமல் குறுக்கும் நெடுக்குமாப்போய் (பந்தி விசாரித்து) கொண்டு இருந்தாள்.

கிளறும் வேலைமுழுசும் கோபால் ஏற்றெடுத்தார். கிளறிக் கிளறியே தசைப் பிடிப்பு  முக்கால்வாசி சரியாச்சு அவருக்கும். கைகளுக்குப் பயிற்சி.    வேலை வாங்கியே எனக்கு ரொம்பக் களைப்பாப் போச்சுன்னா பாருங்க:-)))))


இந்த வருசப்பூஜை  இவ்வளவு நல்லா நடந்தது  சந்தோஷம். பொழைச்சுக் கிடந்தால் அடுத்த வருசம் எப்படி வருதோ அப்படி.

ஆச்சு  தசரா. நாளை முதல் தீபாவளி கொண்டாட ரெடியாகணும்.  இந்த வருசம் அநேகமாக ஆறுமுறைதான் கொண்டாடப் போறோம். முதல் தீவாலி நாளை மாலை. ஃபிஜி இண்டியர் குழு.

அனைவருக்கும் இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்து(க்)கள்.






ஓடி வா வா கஜாமுகானே !!!

$
0
0
காத்ரீன்,  மேடையிலேறி மைக் பிடிச்சு,  புள்ளையார் வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி விருந்தினர்களுக்குச் சொல்லிக்கிட்டு  இருந்தாங்க.  'வீ ஆல்வேஸ் டு கணேஷ் வந்தனா பிஃபொர் வீ  ஸ்டார்ட்   எனி  ப்ரேயர்ஸ் , ரிச்சுவல்ஸ் அண்ட் அன் ஈவண்ட்'.

மேடையில் இருந்த இசைக்குழு பாட ஆரம்பிச்சாங்க.  'ஜெய்  கண பதி தேவா' ஹிந்தி பஜன். சரியாச் சொன்னால் போஜ்புரி ஹிந்தி.  அடுத்து இன்னொரு பாடல். என்னமோ தமிழ்ச் சொல் காதுலே விழுதேன்னு கவனிச்சேன். ஓடி வா வா கஜாமுகானே... அய்யப்பசாமி கஜாமுகானே....

ஆதிகாலத்துலே (1879களில்) ஃபிஜிக்குக் கரும்புத்தோட்ட வேலைக்குப்போன தமிழ்மக்கள்  கூடவே கொண்டுபோன பொக்கிஷங்களில் ஒன்னு. நூத்தி நாப்பது வருசங்களுக்கு முன் சாமிப் பாட்டுகள் எப்படி இருந்துருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்.  உண்மையில் சொன்னால் நாகரிக உலகில் இதுமட்டும் மாறவே இல்லை! அந்த ட்ரெடிஷன் பழமை மாறாமல் அப்படிக்கப்படியே இருக்கு! இசைக்குழுவுக்கும் சரி,  கூடி இருந்த ஃபிஜி இந்தியர்கள், வெள்ளைக்காரர்கள், சீனர்கள் கொரியர்கள் இப்படி  யாருக்கும்  மருந்துக்கும் தமிழில் ஒரு சொல் தெரியாது எங்கள் இருவரைத்தவிர!


எது எப்படியாயினும் தமிழ்ப்பாட்டு கேட்டதும் அட! என்று ஒரு வியப்பும் மகிழ்ச்சியும் வந்ததே உண்மை.

விழா நிகழ்ச்சி மாலை ஆறுக்குன்னு தெரிஞ்சதால் ஆறரைக்குப்போய்ச் சேர்ந்தோம். முதலில் சாப்பாடு.  இந்த முறை சாப்பாட்டை பாலிஸ்டைரீன்  பாக்ஸில் பரிமாறி, ஆட்கள் வரவர எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.  தட்டில் விளம்பி, மக்கள்ஸ் அதைக்கீழே போட்டு, சுத்தம் செஞ்சுன்னு நடக்கும் அட்டகாசங்களைக் குறைச்சுக்க இந்த ஏற்பாடு.  ஆனாலும் நம்மாட்கள் இதையுமே கீழே போட்டு வாரி எடுத்ததும் உண்மையே:(


நிலநடுக்கத்துக்குப்பின் ஹால் கிடைப்பது கஷ்டமாகி வருது. தப்பித் தவறிக் கிடைக்குமிடத்திலும்   சுத்தமாத் திருப்பித்தரணும் இல்லையா?

திரையைத் திறந்தவுடன் ஆரம்ப வரவேற்பு கொடுத்தவர்கள் அஞ்சு  ப்ளஸ் ரெண்டுன்னு  ஏழுபேர் உள்ள ஜப்பான் இளைஞர் குழு.   ட்ரம்ஸ் அட்டகாசம்!  அடடா..... என்ன ஒரு கோஆர்டிநேஷன்!!! கலக்கிட்டாங்க போங்க.

நிகழ்ச்சியை ஆரம்பிச்சு வச்ச இப்போதைய தலைவர்,  நிகழ்ச்சிகளுக்கு நடுவில் சாப்பாட்டுக்குன்னு இடைவெளி விட்டால்  அடுத்த பாதி மேடை நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் இரைச்சலும் குழறுபடியும் ஆகிறதுன்னுதான்  போன வருசம் முதல்,  வந்ததும்  ஆறு மணிமுதல் ஏழு மணிவரை சாப்பாடு முடிஞ்சு போனால்,  நிம்மதியா மேடை நிகழ்ச்சிகளைப் பார்க்கமுடியும் என்று  ஏற்பாடு செஞ்சதாவும்,  ஆனால் மக்கள்ஸ் பலர்  ஏழரை எட்டுன்னு லேட்டா வந்துட்டு  சாப்பாடு வேணும் என்று நெருக்கடி கொடுப்பதாகவும் சொல்லி வருத்தப்பட்டார். வேறென்னதான் செய்யலாமுன்னு நீங்களே சொல்லுங்கன்னு வேண்டுகோளும் வைத்தார். ஐடியா ஒன்னும் இதுவரை மனசில் வரலை:(

கணேஷா வந்தனாவுக்குப்பின் நியூஸிலாந்து தேசிய கீதம். நியூஸிக்கு ரெண்டு மொழி வெர்ஷன் உண்டு. மவொரி, ஆங்கிலம்.  இன்றைக்கு அங்கே பாடியது  இதுவரை நான் கேட்காத  முழு வெர்ஷன்.   முழுப்பாட்டு  ஏழு நிமிசம் வரும்.  மக்கள்ஸ்க்குப் பொறுமை இல்லாததால் பொதுவா  ரெண்டு நிமிசம் வரும் பாட்டையே பாடுவாங்க. இன்றைக்குத்தாம்  மொத்தமும் கேட்டேன்.  பாட்டுடன் திரையில் கண்ட காட்சிகளைப் பார்த்தால் ஆஹா... எவ்ளோ அழகான நாட்டில் இருக்கோம் என்ற திருப்தி வர்றதைத் தடுக்க முடியாது.  முந்தியெல்லாம் காலை 10க்கு டிவி ஆரம்பிச்சதும் முதலில்  தேசியகீதம் வரும். அப்புறம் இந்த 24 மணி நேரச்சேனல்களா ஆனவுடன் காணாமப்போனது தேசிய கீதமே:(

இந்தியாவில் இருந்த போதும் ஜயா டிவியில் 'செந்தமிழ்  நாடென்னும் போதினிலே'ன்னு ஆரம்பிக்கும்போது எனக்கு மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கும். நாட்டில் உள்ள மைனஸ் பாயிண்டையெல்லாம் புறம் தள்ளிட்டு  பாட்டும்  அதனோடு வரும் காட்சிகளும் அட்டகாசம் என்று அனுபவிப்பேன்.  இப்போ அங்கேயும் 24 மணி நேரச்சேனல் ஆனதால் இதுக்கு  ஆப்பு வச்சுட்டாங்கன்னு நினைக்கிறேன்.  தெரிந்தவர்கள் விபரம் சொல்லுங்கள்.

நியூஸி தேசிய கீதம்முடிஞ்சதும் உக்காரப் போனவங்களைத் தடுத்தாட்க்கொண்டது ஃபிஜியின் தேசிய கீதம்.  சொன்னா நம்பமாட்டீங்க..... ஆறு வருசம் அங்கே குப்பை கொட்டிய நாங்க, இப்போதான் முதல்முறையா இதைக் கேக்கிறோம்!! எத்தனை விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறோம்..... ஒரு இடத்தில்கூட கேட்டதில்லைன்னா.......... என்னன்னு சொல்றது:(

ஃபிஜியின் தேசிய கீதத்துக்கு மூணு வெர்ஷன் இருக்கு.  ஃபிஜியன் மொழி (இதுக்கு எழுத்துரு இல்லை. ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்தறாங்க.) ஆங்கிலம் அப்புறம் மூணாவதா ஹிந்தி மொழி. பொதுவா நிகழ்ச்சிகளில் ஆங்கிலம் மட்டுமே பாடுறாங்க. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால் நாங்க ஃபிஜியில் இருந்த காலத்துலே அங்கே டெலிவிஷன் ஒலிபரப்பு கிடையாது.  வீடுகளில் இருக்கும் டிவி, நாங்க விஸிஆர் வச்சுப் படம் பார்க்கமட்டுமே! அதான் தேசிய கீதம் காதில் விழலை.

சங்கத்தலைவர் மனைவி வந்து மேடையின் ஒருபுறம் அலங்கரிச்சு வச்சுருந்த  மஹாலக்ஸ்மி படத்துக்கு விளக்கேத்தி ஆரத்தி செஞ்சாங்க. மஹாலக்ஸ்மியை ஏன் வழிபடணும் என்று காத்ரீன் சபைக்கு விளக்கினாங்க.

நம்மூரில் கடந்த ஏழாண்டுகளாக பரதநாட்டிய வகுப்பு நடத்தும் அனுராதா, (இலங்கைத் தமிழர்) ஒரு நடனம் ஆடினார். எப்போதும்போல் நடனம் அருமை. போனவாரம்தான்  அவர்களுடைய நடன நிகழ்ச்சிக்குப் போய் வந்திருந்தோம். பல வயதுகளில்  ஒரு முப்பது மாணவிகள் நடனம் கற்றுக் கொள்கிறார்கள்.

அடுத்த நிகழ்ச்சியா பசங்க  கொரியன் டான்ஸ், பாலிவுட் ஐட்டம் ஸாங், நேபாளிகளின் நடனம் என்று சில பல இருந்தாலும் எல்லோரும் ஜல்ஸாவுக்குக் காத்திருந்தோம்.

கிறைஸ்ட்சர்ச் நகரில் முதல்முறையா நடக்கும் இண்டியன் துணிமணி வகைகளுக்கான ஃபேஷன் ஷோ இது.   வட இந்திய உடை வகைகளில் இப்போ என்ன ட்ரெண்ட் ன்னு தெரிஞ்சு போச்சு.  ஜிலுஜிலுன்னு கற்கள் பதிச்சது போல மின்னும்  ஸல்வார் செட், காக்ரா செட், புடவைகள்  எல்லாம் ஒரேஅமர்க்களம்.  அதிலும் வெள்ளைக்கார இளம்பெண்கள் இந்திய அலங்காரத்தில் ஜொலித்தார்கள்.  நம்ம நாட்டு ஆடை ஆபரணங்களுடன்,  நெற்றியில் பொட்டும் வச்சு  பூனை நடை நடந்தப்ப  அரங்கமே அதிர்ந்ததுன்னு சொல்லணும்.  பொதுவா இந்தத் தலைமுறையின் உயரம் கூடுதலாக இருப்பதால் புடவை பொருந்தி வருது.  குஜராத்தி ஸ்டைலில் புடவையுடன்  வந்த 'மாடல்'சூப்பர் கேட்டோ!  ஜப்பான், சீனா, கொரியா நாட்டுப்பெண்களும் புடவையில் வந்து கலக்குனாங்க. என்ன ஒன்னு........ நடையில் நளினம்தான் மிஸ்ஸிங்:-)


நம்ம ஃபிஜி இந்தியன் பெண்களும், சில இந்திய ஆண்களும் கூட மாடல்களாக வந்து பூனை நடை போட்டனர். உள்ளூரில் புதிதாக துணிக்கடை வைத்துள்ள ஒரு ஃபிஜி இந்தியரின் ஏற்பாடு இது. புது ஐட்டம் & புதுக் கடைக்குப் ப்ரமோ!  ஒரே கல்லில் மாம்பழம் ரெண்டு:-)



 ஃபிஜியன் மேகே  நடனம்,  ஜெய் ஹோ, கண்பதி பப்பா மோரியான்னு ஒரு ரீமிக்ஸ் பாட்டுக்கு நடனம்,  இன்னொரு பாலிவுட் டான்ஸ், இதுலே  சமோவன் இண்டியன் குழந்தைப் பொண் ஏழு வயசு,  அட்டகாசமாக ஆடினாள்.  இன்னும்  நாலுநாளில் கொண்டாடப்போகும் தீவாலி (இண்டியன் க்ளப்)  விழாவுக்கு இன்னுமொரு ப்ரமோ என்ற வகையில் பிரபு தேவா (ABCD) நடனம் ஒன்றை ஆடினார் ஒரு புது இளைஞர்.  பஞ்சாப் இறக்குமதின்னு நினைக்கிறேன்.

இன்னும் ஏகப்பட்டவை பாக்கி இருக்குன்னாலும்  நமக்குப் பார்க்க சக்தி வேணாமோ?  இப்பவே பத்தரை ஆச்சுன்னு கிளம்பி வந்துட்டோம்.

எனிவே ஒன் திவாலி டௌன். ஃப்யூ மோர் டு கோ:-))))

PIN குறிப்பு: இந்தப் பதிவில் அவசியம் கருதி யூ ட்யூப் வீடியோ க்ளிப்பிங்ஸ் சில போடும்படியாச்சு. எல்லாம் மூணுநாலு நிமிசங்கள்தான். எதைவிட எதைப்போடன்ற குழப்பம்தான் கேட்டோ!!!





எலியும் கிலியும் !

$
0
0
 கண்ணெதிரில் ஆடாமல் அசையாமல் இருக்கும் எலியைப் பிடிக்க முடியலையேன்னு  பூனைக்கு மகா வருத்தம்.  தட்டிக்கொட்டி  டிங்கரிங் வேலைகளும் மராமத்தும் நடந்து கொண்டிருந்தாலும்  பழைய வண்டி எப்பவும் அதே வேகத்தில் ஓடமுடியாதில்லையா?

கொஞ்சநாளா மெஷினின் பாகங்கள் எல்லாம் ஒன்னொன்னா மக்கர் செய்ய ஆரம்பிச்சுருக்கு. அந்த வரிசையில் இப்போ ஒரு வாரமா சுட்டுவிரல்.   ஆளைக் காமிக்கவே முடியலையாக்கும் கேட்டோ!

கணினி மௌஸைக் கையில் பிடிக்கவோ,  க்ளிக் பண்ணவோமுடிவதில்லை. ரைட் க்ளிக் எப்போதுமேவா பயன்? ஊஹூம்........

இப்பதான் நடுவிரலுக்குப் புது ரோல் கொடுத்துப் பழக்கிக்கிட்டு இருக்கேன். கொஞ்சநாள் செல்லலாம் அதுக்குப் பாடம் படிக்க. அதுக்கும்தானே வயசாச்சு இல்லையோ?  கேன்னாட் டீச் நியூ ட்ரிக்ஸ் டு அன் ஓல்ட் டாக்:-)

அதுவரை?  வாசிக்கலாமே! படித்ததில் பிடித்ததுன்னு  நிறைய எழுதலாம். ஆனால்  கிலி பிடிச்சுக்கிடக்கே!

அன்பு எழுதிவரும் இமயமலைப் பயணம் இதுவரை வந்த ஆறு பகுதிகளையும் வாசித்தேன். (ஒரு சில எழுத்துப்பிழைகளை பொருட்படுத்த வேண்டியதில்லை) நன்றாக எழுதுகிறார்.  சாருவுடன் போன பயணம் இது என்பதையும் குறிப்பிடத்தான் வேணும்.

நம்ம பதிவர்களின் விடுபட்ட பதிவுகள் பலவற்றையும் பார்த்தேன்.படித்தேன் அண்ட்  ரசித்தேன். ஆனால் யாருக்கும் பின்னூட்டமிடலை. கை துருதுருன்னாலும் கைவலி  வேற இருக்கே! அதென்ன வலி குடியிருக்குமிடம்  ஒரு ஒற்றைவிரல்?  மஹா ஆச்சரியமான விஷயம்........

துளசிதளத்தில் ஒரு நாலைஞ்சு இடுகைகளுக்குப் பதிலொன்னும் போடலை இதுவரை.  காரணம் விரல் வலி. வாசகர் வட்டம் மன்னிக்கணும் ப்ளீஸ்.

கை வலி என்பதால் வீட்டு வேலையில் இப்போ முக்கால் வாசி நம்ம கோபாலுக்கு. சமையல் அல்மோஸ்ட்  கத்துக்கிட்டார்னு நினைக்கிறேன்.
கொஞ்சம் மேலாகப் பார்த்தால் இடாலியக் குடும்பங்களுக்கும் இந்தியக் குடும்பங்களுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமை.(No wonder Sonia well settled in Indai)  The fortunate pilgrim  வாசிச்சுக்கிட்டு இருக்கேன். Mario Puzo .  என்ன ஒரு ரைட்டர்ப்பா! அந்தக் காலத்தில் Khartoum தலை இல்லாம  கனவில் வந்து பயமுறுத்தி இருக்கு:-)

சன் டிவியில் விருந்தினர் பக்கத்தில் நம்ம பா ராவைப் பார்த்தேன்.  கையில் மின்னும் புது மோதிரம் ஷிர்டி சாய்பாபா உருவம் பதித்ததாம்!
ஊர் விவகாரங்கள் ஏகப்பட்டவை பாக்கி நிக்குது.  ஒருநாள் நிதானமாகப் பார்க்கலாம்.

மற்றபடி  எல்லோருக்கும் அன்பும் நன்றியும். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

என்னுடைய வியப்பெல்லாம்,  எப்படி ஒருவிரலுக்கு மட்டும் இவ்ளோ வயசாகி இருக்கு? !!!!!

என்றும் அன்புடன்,
டீச்சர்.



மனைவியைக் கடத்தியவனுடன், கணவன் சண்டை!

$
0
0
இவனுக்கு நேர்ந்த கதியைப் பார்த்துட்டுத்தான் 'தாடி'பிறன்மனை விழையாமை எழுதி இருப்பாரோ!!!
இதையே  திருமூலர் கூடச் சொல்லித்தான் வச்சார் இப்படி.... .

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனிஉண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடர் உற்றவாறே.




கத்திக் கதறி அழுதுகிட்டே போன மனைவி, மரத்தடியில் உக்கார்ந்து, எப்படியும் புருசன் வந்துருவாருன்னு  காத்திருக்காள்.

பத்துத்தலைக்காரனுடன் போர் நடக்குது.



மயக்கம் போட்ட தம்பியைப்பார்த்து  அண்ணங்காரன்  துடிக்க,  சம்யசஞ்சீவியா சஞ்சீவி மலையைத் தூக்கிட்டு வர்றார் அண்ணனின் பக்தர்.



காட்டுக்குப்போனவங்கதிரும்பி வந்ததைப்பார்த்து  வழி காமிக்க விளக்கேத்தி வச்சு  ஊர்மக்கள் எல்லோரும் கூடி நின்னு மகிழ்ச்சியா ஆடிப்பாடறாங்க.

இதெல்லாம் வார்லி சித்திரவகையைச் சேர்ந்தது.

மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில் உள்ள ஆதிவாசிகளின் கைவண்ணம் இவை.  தமிழ்நாட்டுலே அரிசி மாவுக் கோலம்தரையில் போடுவோமே அதேபோல அரிசிமாவைப் பயன்படுத்திச் சுவரில்  வரையும் சித்திரங்கள். செம்மண்ணால் சுவரை மெழுகிட்டு அதில் அரிசிமாவைக் கொண்டு வரைகிறார்கள். அசாத்யப்பொறுமை இருக்கணும் முதலில். பெரும்பாலும் அன்றாட வாழ்க்கைச் சித்திரங்களே! சிலசமயம் இதிகாசங்கள்!

 இப்போ சில வருசங்களாக  வியாபார ரீதியிலும் சித்திர விற்பனை வெற்றியடைஞ்சு வருது. இந்தச் சித்திரக்கலைக்கு வயசு அஞ்சாயிரத்துக்கும்  மேலே!

நாலு நாளைக்கு முன் இந்த வகைச் சித்திரத்தைப் பார்க்க நேர்ந்தது.  எளிமை ஆனால் வரைவது கஷ்டம்!

ஃபில்ம் டிவிஷன் எடுத்த ஒரு பதினேழு நிமிச வீடியோ இணையத்தில் கிடைச்சது. நேரம் இருந்தால் பாருங்கள். அனுபவம் புதுமை! அவர்களுக்கு என் நன்றி. Thanks to  Film Division.



தீபாவளி, நார்த்தீஸ்களுக்கு  ராமாவதாரம் சம்பந்தப்பட்டது. ஆனால்  தெற்கீஸான நமக்கோ கிருஷ்ணாவதாரம் தான் காரணம். அட! வெவ்வேற யுகம்! ஆனால்  ஒரே  மாசம் அடுத்தடுத்த நாளில் கொண்டாடுறோம். நம்ம தீபாவளியன்னிக்கு  நார்த்தீஸ் எல்லாம் தந்தேரஸ் கொண்டாடுவாங்க. இது மஹாலக்ஷ்மி பூஜை. தன் தேரஸ்( Dhan- தனம்- செல்வம்)ன்னு வேண்டறோம்.

 உண்மையிலே இது தனம் வேண்டிச் செய்யும் பூஜை இல்லை. நம்ம கிட்டே இருக்கும் காசு பணத்தில் கொஞ்சத்தை எடுத்து, நம்மைவிட ஏழ்மையில் இருக்கும் மக்களுக்கு 'தானம்'செய்யவேண்டியது நம்ம ஒவ்வொருவருடைய கடமை. இந்த 'தான்'எப்படியோ இப்ப 'தன்'னாகிப் போச்சு. மக்களும் விடாம சாமிகிட்டே எனக்கு இதைக்கொடு, அதைக்கொடுன்னு பேரம் பேசிக்கிட்டே இருக்கோம்:((((

வெளிநாட்டு மக்கள்ஸ்க்கு   கிறிஸ்மஸ்,ஈஸ்டரைத் தவிர்த்து  எதா இருந்தாலும் பலமுறை கொண்டாடித் தீர்த்தால்தான் திருப்தி:-) இந்தக் கணக்கில் நமக்கு இது ரெண்டாம் தீபாவளி. எதையும் ஊருலகத்துக்கு முன்னாடி செஞ்சிறணும் என்பது இங்கே முக்கியம்:-) நியூஸி பார்லிமெண்டில் கூட இப்ப சில வருசங்களா தீவுளி கொண்டாடுவது ஒரு வழக்கமாப் போச்சு. 2006  வருச மக்கள் கணக்கெடுப்பின் படி  அறுபத்தி நாலாயிரம்  ஹிந்துக்கள் நியூஸியில் இருக்காங்க(ளாம்)  the second largest faith-based community.ஆக்லாந்து, கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன்  ஆகிய பெரிய நகரங்களிலும்  சிட்டிக்கவுன்ஸில் ஃபண்டிங் கொடுத்து பண்டிகையைக் கொண்டாட வைக்குது.  Good over evil என்பது கேட்ச்சிங் பாய்ண்ட் கேட்டோ:-)

எங்கூர் கொண்டாட்டம் மூணுநாளைக்கு முன்னால் நடந்து முடிஞ்சது.  இண்டியன் சோஸியல் அண்ட் கல்ச்சுரல் க்ளப் (ஸ்தாபகர் நம்ம கோபால்)  இதை முன்னின்று  கடந்த பலவருசங்களாக்கொண்டாடுது.  1997 இல் ஆரம்பிச்ச இந்த க்ளப்பில்  எல்லா வருசமும் அங்கத்தினர்கள் சேர்ந்து கொண்டாடிக்கிட்டு இருந்தோம்.  ஓரளவு கம்யூனிட்டி ஃபண்டிங் கிடைச்சுக்கிட்டு இருந்தது.  திடீர்னு இப்ப  ஆறு வருசமா wider communityக்கான பப்ளிக் ஃபங்ஷனாக் கொண்டாடிக்கிட்டு இருக்கோம்.  சிட்டிக் கவுன்ஸில்  கொஞ்சம் தாராளமாக் கொடுக்குது.  ஸ்பான்ஸார்களும் கிடைச்சுடறாங்க.  நடுவிலே 2011 வதுவருசம்  கொண்டாடலை. ஊரே நிலநடுக்கத்தில்  அழிஞ்சு போய்க் கிடக்கும்போது  பண்டிகையும் பட்டாஸும் கேக்குதா?

இந்த வருசம் நம்ம சிங்கப்பூர்  ஏர்லைன்ஸ், மெயின் ஸ்பான்ஸார். இங்கே எங்கூரில் இருந்து  இந்தியா போகணுமுன்னா சிங்கப்பூர் ஏர்லைன்ஸை விட்டால் வேறொன்னுமில்லை. போட்டி இல்லாம ஜாலியா இருக்காங்க. பீக் சீஸன் டிக்கெட் விலை கேட்டால்  ஆடிப்போயிருவோம்.  ஆனால் வேறு வழி? அப்பதானே நமக்கு லீவும் கிடைக்குது:(   நம்மகிட்டே  அடிச்சதுலே  கொஞ்சூண்டு கிள்ளிக் கொடுத்துருக்காங்க.

விழா நடக்குமிடம்  CBS Canterbury Arena.  எங்க நாட்டு மதத்துக்காக கட்டுனது.  எங்கள் மதம் ஸ்போர்ட்ஸ் தான். 1999 வது வருசம் உலக நெட்பால் போட்டிகள்  நம்மூரில் நடக்கப்போகுதுன்னு முடிவானதும் அவசர அவசரமா 1998இல் கட்டி முடிச்சுட்டாங்க.  ஆச்சு 15 வருசம்.  இதையே மற்ற நிகழ்ச்சிகளுக்கும்  வாடகைக்கும் விடறாங்க.  நெட் பால், பாஸ்கெட் பால் ஆட்டங்கள் என்றால் 7200 பேர்   அமரலாம். மற்ற இசை, நாடக நிகழ்ச்சின்னால்  8888 நபர்கள்!   இது தவிர  இருக்கைகளை  ஒரு பக்கம் ஒதுக்கிட்டு நடுவில் ஹோம் ஷோ, ட்ராவல் எக்ஸ்போ, கேம்பர் வேன், மோட்டர் ஹோம்  ஷோன்னு  இன்னும் சில நடக்கும்.  எப்படிப் பார்த்தாலும்  வருசத்துக்கு   52 வீக் எண்டுகள்தானே! அநேகமா எதாவது ஒன்னு நடத்திக்கிட்டுத்தான் இருப்பாங்க.

டிக்கெட் கவுண்ட்டருக்குப் பக்கத்தில்  ஒரு கண்பதி.  விக்ன விநாயகர். இன்றைய நிகழ்ச்சி எந்த அசம்பாவிதமும் இல்லாம ஒழுங்க நடக்கணுமே..புள்ளையாரப்பா!

 டிக்கெட்டுன்னதும்  மனதை நிரடும் ஒன்றை இங்கே சொல்லிட்டுப் போறேன்.  நம்ம சிட்டிக் கவுன்ஸிலின் ஸ்டேடியம் இதுன்னாலும்  இதுக்கு ஒரு நாள் வாடகை இருபத்தியிரண்டு  ஆயிரம் டாலர்கள்.  கம்யூனிட்டிக்குக் குறைஞ்ச ரேட்டில் கொடுக்கப்டாதோ?  கொடுத்தாங்க. ஒரு பக்கம் கொடுக்கறமாதிரி கொடுத்துட்டு இன்னொரு பக்கம்  வாங்கறமாதிரி வாங்கவும் செஞ்சாங்க. இந்த வருசம் கார்பார்க் கட்டணம் இல்லை. ஆனால் அரங்குப் பகுதிக்குப் போக ஆளுக்கு அஞ்சு டாலர் கட்டணம்.  இது பிரச்சனை இல்லை. ஆனால்  காசை வாங்கிக்கிட்டு டிக்கெட் ஒன்னும் கொடுக்காம  கையை நீட்டுன்னு சொல்லி புறங்கையில் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்( திவாலி  ஃபெஸ்டிவல்)  போட்டு விட்டது எனக்குச் சரியாப் படலை.  என்ன கணக்கு? எத்தனை பேர் வந்தாங்கன்னு ஒரு விவரமும் கிடைக்காதில்லையா?  என்னமோ போங்க.  இதுலே சிட்டிக் கவுன்ஸில் இந்தக் காசை  எடுத்துக்குமாம். வாடகையில் துண்டு விழுவதை க்ளப் கொடுக்கணும் போல! இன்னும் விசாரிக்கலை.  அடுத்தமுறை  க்ளப் மீட்டிங்கில் கேக்கணும்.

இதுலே  புறங்கையில் ஸ்டாம்பு வாங்கினவுங்க எல்லாம் இன்னொரு கவுண்டரில் போய்  ஒரு படிவத்தில் நம்ம ஜாதகத்தையே  எழுதி அதை அங்கிருக்கும் பொட்டியில் போட்டுடணுமாம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்  குலுக்கிப் பார்த்து ரெண்டு ரிட்டர்ன்  ஃப்ளைட் பரிசா கொடுக்கப் போறாங்களாம். ஆயிரம் கண்டிஷன்களோடு ஆஃப் சீஸனில் கொடுப்பாங்க. நீங்களே வச்சுக்குங்கன்னுட்டு அரங்குக்குப்போகும் வழியில் நுழைஞ்சோம்.

அரங்கத்தின் நுழைவு வாயிலில் தாஜ்மஹால் டிஸைன். தீவாலிக்கும் தாஜுக்கும் என்ன சம்பந்தம்?  இந்தியான்னதும் வெள்ளையர்களுக்கு  உலக அதிசயத்தில்  ஒன்னான தாஜ்தான் நினைவுக்கு வரும் என்பது பொதுப்படையான ஊகம் போல!

ஒரு பெரிய ரங்கோலி போட்டு வச்சுருந்தாங்க.  பரவாயில்லாம  நல்லாவே இருக்கு. அதுக்கு அடுத்த டிஸ்ப்ளேதான் நாம் மேலே பார்த்த வார்லி சித்திரங்கள். எனக்கு ரொம்பப் பிடிச்சது !

PIN குறிப்பு: பதிவின் நீளம் கருதி மீதி அடுத்த பதிவில்.





எங்கூர் திவாலிக் கொண்டாட்டம்

$
0
0
கொஞ்ச நேரம் ஆகும்  நம் கண்கள் இருட்டுக்குப் பழக!  வண்ண விளக்குகள் மட்டும் ரொம்ப உசரத்துலே இருந்து சன்னமா ஒளி வீசுது. வரிசையா வெள்ளையில் பந்தல்கூடாரங்கள்.

பகல் மூணு மணியில்  இருந்தே மேளாவில் சாப்பாட்டுக் கடைகளும் மற்ற கடைகளும் திறந்து வச்சு பயங்கரக்கூட்டமா இருந்துச்சு நாங்க போகும்போது. பாதி அரங்கம்  கடைகளுக்கும் மீதிப்பாதி ஸ்டேஜ் ஷோவுக்குமா பிரிச்சு வச்சது நல்லாத்தான் இருக்கு.


பதினைஞ்சு   உணவுக்கடைகளும் ஒருபக்கம் வரிசை கட்டி நிக்க, இன்னொரு புறம்  வர்த்தக வகைப் பந்தல்கள்.  பேங்க், ட்ராவல்ஸ், விஷன் ஏஷியான்னு  சாட்டிலைட் டிவி சமாச்சாரங்கள், டெலிகாம்,  இன்ஷூரன்ஸ்,  இண்டீரியர் டெகரேஷன், ரேடியோ ஸ்டேஷன் இப்படி இதுகளுக்கிடையில்  அழகு அலங்காரம் என்று ஒரு ஜல்ஸா துணிக்கடை (ஃபேஷன் ஷோ ஒன்னு பதிவில் பார்த்தோம் பாருங்க அவுங்க கடைப்பொருட்கள்)  மெஹந்தி வச்சுவிடும்  கடை(பாடி ஆர்ட்!) ஆர்ட் ஆஃப் லிவிங் யோகா 'ஏஜண்ட்'ஒருத்தரும் பந்தல் போட்டுருக்கார். உள்ளெ எட்டிப் பார்த்தால் யாருக்கோ தோள்பட்டை மஸாஜ் நடந்துக்கிட்டு இருந்துச்சு. நம்ம கலை கலாச்சாரம் எல்லாம் கொஞ்சமாவது எடுத்துச் சொல்லும் ஸ்டால்கள் ஒன்னுமே இல்லை.  போனாப்போகுதுன்னு  அகல்விளக்குக்கு கலர் ஏத்திக்கோன்னு ஒரு சில்ட்ரன் ஆக்டிவிட்டி.






குழந்தைகளுக்கு விளையாடும் பகுதின்னு  ஒரு இடம் ஒதுக்கி இருந்தாங்க. மத்தபடி பாதிக்கூட்டம் ஏற்கெனவே அரங்குப்பகுதியில் இடம் பிடிச்சு உக்கார்ந்துட்டாங்க.  எல்லோர் கையிலும்  ஸ்டால்களில் வாங்கிப்போன சாப்பாடுகள்.



பாவ்பாஜி, பேல்பூரி, சமோஸான்னு அங்கங்கே இருந்தாலும் உள்ளூர் ரெஸ்ட்டாரண்டுகள்  வழக்கமான பட்டர் சிக்கன்,நான், நவ்ரத்தன் குருமா, பாலக் பாஜின்னு இந்தியன் உணவையே  வச்சுருந்தாங்க. ஒன்னு ரெண்டு ஸ்டால்களில் மசால் தோசை (பத்து டாலர்!) தந்தூரி பேலஸ் உரிமையாளர் மனைவி, 'உங்க மசால் தோசா நம்ம கடையில் இருக்கு வாங்க வாங்க'ன்னு  கூப்பிட்டாங்க. (கொல்லன் தெருவில் ஊசி விற்கும் முயற்சி)



கூட்டம் லைன் கட்டி நின்னது தோஸா ஹட் என்ற கடையில். இங்கத்து தோசையின் ருசி அப்படி மக்களை ஈர்ப்பதில் என்ன ஆச்சர்யம்? மாவு ஆட்டுனது  நம்ம துளசிவிலாஸ் கிரைண்டர் ஆச்சே:-))))

பஞ்சாபி தாபாவில்  பளபளன்னு செப்புப் பாத்திரங்களின் அணிவகுப்பு சூப்பர்!
பெரிய ஐஸ் கட்டி வச்சு  சின்ன நீர்த்தாரை மூலம் அதுலே தாஜ்மஹலைச் செதுக்கிக்கிட்டு இருந்தார் ஒரு கலைஞர். (இங்கேயும் தாஜ் தானா!)




ரெண்டு மூணு கடைகளில் மேங்கோ லஸ்ஸி மூணு, நாலு டாலர்களில் விற்பனை. நம்ம ஸ்வாமி நாராயன் மந்திரும் ஸ்டால் போட்டுருந்தாங்க. போட்டிக்கு யோகி டிவைன் சொஸைட்டியினரும்:-)


எலெக்ட்ரிக் தந்தூர் வச்சு சுடச்சுட 'நான் 'ஒரு பக்கம்!

இந்த வருச ஸ்பெஷல்ஸ் ரெண்டு சமாச்சாரம்.  ஒன்னு  ஒடிஸாவிலிருந்து  வந்த நாட்டியக் கலைஞர்கள். ரெண்டாவது அரங்கத்தினுள்ளேயே பட்டாஸ் (ஃபயர்வொர்க்ஸ் டிஸ்ப்ளே) கொளுத்துதல். நம்ம ஊரில் பட்டாஸ், மத்தாப்பு எல்லாம் மனம்போன நாளில் வாங்கவும் முடியாது கொளுத்தவும் முடியாது.  ப்ரிட்டிஷ் நரகாசுரனை வதைச்ச  நாளான கைஃபாக்ஸ் டே நவம்பர் 5க்குத்தான் பட்டாஸ் வெடிக்கணும். அதுக்கு  நாலுநாள் முந்திதான் பட்டாஸே கடைக்கு வரும். நவம்பர் அஞ்சு மாலையோடு  விற்பனை முடிவு. இதெல்லாம் முந்தி பலமுறை எழுதி இருக்கேன். சாம்பிளுக்கு ஒன்னு  'சரித்திரத்தில் நரகாசுரன்' இங்கே:-))))


அந்த சமயம் கிடைக்கும்  கம்பி மத்தாப்புகளை வாங்கி ஸ்டாக் வச்ச்சுக்கிட்டால்  அக்டோபர் மாதத்துலே வரும் தீபாவளிக்கு ஆச்சு. ஓசைப்படாமல் தோட்டத்தில் நாலு  மத்தாப்பைக் கொளுத்துவோம். சம்ப்ரதாயத்தை மீறலாமோ:-)))

நகரக் கவுன்ஸிலே  அனுமதி கொடுத்து வருசத்தில் நாலுமுறை ஃபயர் ஒர்க்ஸ் டிஸ்ப்ளே இருக்கும். அதுக்குப்போய் 'கண்ணால்'கண்டு மகிழ்வதோடு சரி. ஆனா பிரமாதமா இருக்கும் என்பதும் உண்மையே! குறைஞ்சபட்சம் ஹண்ட்ரட் தௌஸண்ட் டாலர்  கோவிந்தா. எல்லாம் நம்ம வீட்டுவரிப் பணம்.

இன்றைக்கு முக்கிய விருந்தாளி  நம்ம ஊர் மேயர்தான்.  இங்கெல்லாம் நகரக்கவுன்ஸிலும்  மேயர் பதவியும்  நம்ம இந்தியாவில் இருக்கும் மாநில அரசு போலச் செயல்படும். முதலமைச்சருக்குள்ள அத்தனை அதிகாரமும் மேயருக்கு உண்டு, கருப்புப் பூனைப் பாதுகாப்பு தவிர:-)))) ரெண்டு வாரம் முன்பு கவுன்ஸில் தேர்தல் நடந்தது. எல்லாம் போஸ்ட்டல் ஓட்டுகள்தான்.  எலெக்‌ஷன் டேன்னு தனியா வைப்பதில்லை.

புது மேயர் பதவிக்கு வந்துருக்காங்க.   லேடி மேயர் கேட்டோ! நமக்கு நல்லாத் தெரிஞ்சவுங்கதான். உள்ளூர் எம் பியும் கூட. இவுங்க உள்ளூர் தேர்தலில் நிக்கறாங்கன்னு உறுதியானதும்  அப்போதைய மேயர், தன் தோல்வி உறுதியாச்சுன்னு  தீர்மானிச்சு  வரும் தேர்தலுக்கு நிக்கப் போறதில்லைன்னு அறிவிச்சுட்டார்.  புத்திசாலி. சும்மா நின்னு மூக்கு உடையணுமா?   எழுபதாயிரத்துச் சொச்சம் ஓட்டு வாங்கி ஜெயிச்சாங்க நம்ம லியான்.  தேர்ந்த அரசியல்வியாதி.  அந்தந்த விழாக்களில் பங்கேற்கும்போது  அந்த மொழியில் ரெண்டு சொற்கள் பேசிருவாங்க.(நம்மூர் கூட்டங்களில் வரும்  வடக்கர்கள் 'வனக்கம்'சொல்வது போல:-)

இங்கேயும் சரியான நேரத்துக்கு  செல்ஃப்  ட்ரைவிங்  செஞ்சு  வந்தாங்க. போனாப்போகட்டுமுன்னு  கட்டிடத்துக்குப் பக்கத்துலே காரை நிறுத்த இடம் வச்சுருந்தோம்:-) ரெண்டு நாட்டு தேசிய கீதமும் பாடினதும் 'நமஸ்தே'சொல்லி குத்துவிளக்கேத்தி  விழாவை தொடங்கி வச்சாங்க. மேயர் ஆனதும் கலந்து கொள்ளும்  முதல் கம்யூனிட்டி நிகழ்ச்சி இதுதான். (மேயரை எப்படி அட்ரஸ் செய்யணும். ப்ரொட்டகால் என்னன்னு தெரியாததால்  நான் போய்ப் பேசலை. நமக்கு ரெண்டுவரிசை முன்னாலேதான் உக்கார்ந்துருந்தாங்க)

உள்ளூர் எம் பி ஒருத்தர்  ஜம்முன்னு புடவை கட்டிக்கிட்டு வந்துருந்தார். பார்க்க ரொம்பவே நல்லாவும் இருந்துச்சு.

நேற்று பத்திரிகையில் வந்த ஒரு செய்தி. இங்கே கிறைஸ்ட்சர்ச் மேயருக்கு ஒரு தனி கார் ( Audi 2 L) லீஸுக்கு எடுத்துக்கும் சம்ப்ரதாயத்தைத் தேவை இல்லைன்னு ஒதுக்கிட்டாங்க.  'எனக்கு ஆடம்பரமான வண்டியே வேணாம்.  லீஸுக்கு எடுக்கும் காரும் தேவை இல்லை. பொது விழாக்களுக்குப் போகும் சமயம் மட்டும் ஒரு ட்ரைவர் வச்சுக்க எதாவது வழி உண்டா?'ன்னு  கவுன்ஸிலர், மேயர்களுக்குச் சம்பளம் நிர்ணயிக்கும் கமிஷனிடம் கேட்டுருக்காங்களாம்.  ஸோ பார்க்கிங் ப்ராப்ளம் அவுங்களுக்கும் வந்துருச்சு போல:-))))


PINகுறிப்பு: நிறைவுப்பகுதி நாளை.


ஹைய்யோ!!! என்னப்பா... இது? இவ்ளோ கூட்டமா!!!

$
0
0
Pyrotechnic மூலம்  அரங்கில் பட்டாஸ் கொளுத்தினாங்க.  முதலில் இங்கேயும் தாஜ்மஹல்தான்:-) குளிரில் போய் நிக்காமல் உக்கார்ந்த இடத்தில் இருந்தே பார்ப்பதும் நல்லாத்தான் இருக்கு.  இப்ப இங்கே புதுசா ஆரம்பிச்சுப் பரவும் சமாச்சாரம் இது. பொதுவா  பெரிய நாடகங்கள், இசை நிகழ்ச்சின்னு  குறைந்த பட்சம் இருநூறு டாலர் டிக்கெட் காட்சிகளில் நடக்கும் சமாச்சாரம் இப்போ பொது மேடைகளுக்கு வந்துருக்கு!  (1984-ல் மைக்கேல் ஜாக்ஸன் அவருடைய ஷோ ஒன்னில் இந்த Pyrotechnic பயன்படுத்தினாராம்.





இந்த டெக்னிக் கற்றுக்கொள்ள ரெண்டு நாள்  பயிற்சி வகுப்பு இங்கே எங்கூரில் நடத்தறாங்க. $ 2150 தான்  கோர்ஸ் சார்ஜ்.  வருசத்துலே ரெண்டே முறை ரெவ்வெண்டு நாட்கள் வகுப்பு.

'கணேஷ் வந்தனா'வுடன் நிகழ்ச்சி ஆரம்பிச்சது.  அப்புறம் வழக்கமான  பாலிவுட் டான்ஸ்கள்.  பாங்ரா நடனங்கள், குஜராத்தி கர்பா, கேரளாவின் திருவாதிரைக் களி, மராத்தி லாவணி நடனம், நாடன் பாட்டு ஃப்ரம் கேரளா, 100 years of Indian Cinema ன்னு   தொடர்ந்து வந்த நிகழ்ச்சியில்  இடைக்கிடை  பட்டாஸ் டிஸ்ப்ளே.

காம்பியரிங்  ஸ்டைலுன்னு ஒன்னு  சமீபத்துலே தொடங்கி இருக்கே அதை அனுசரித்து   ரெண்டு பேர் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தறோமுன்னு  மேடைக்கு வந்து பார்வையாளர்களை  அறுத்துத் தள்ளிட்டாங்க.  நம்ம ஊர் பரதநாட்டிய பள்ளி ஒரு ஐட்டம் செஞ்சாங்க. அதை ஏற்கெனவே ப்ரோக்ராம் புத்தகத்தில்  'தில்லான். டமில்  ஃபோக் டான்ஸ்'ன்னு போட்டு வச்சுருக்காங்க. மேடையில் அறிவிச்சது,    'இண்டியன்   ஃபோக் டான்ஸ் ஃப்ரம் த லேண்ட் ஆஃப் ரஜினி'  பாவம் அந்த டீச்சர்:(  லால்குடி ஜயராமன் அவர்களின் தில்லானா பட்ட பாடு!

நிகழ்ச்சிக்குப்பிறகு அவரைப் பார்த்தபோது ,  பரத நாட்டியத்தைப்போய் இப்படி இண்டியன் ஃபோக் டான்ஸ்ன்னு சொல்லிட்டாங்களேன்னா........   ஐயோ இண்டியான்னா சொன்னாங்க. நான்  ஸ்ரீலங்கன் ஆச்சேன்னாங்க. போதுண்டா சாமின்னு இருந்தது எனக்கு.  அப்படியே நடனம் நல்லா இருந்ததான்னு கேட்டவரிடம், அடுத்த முறை ஒரு சேஞ்சுக்கு பாலமுரளியின் தில்லானா ஆடுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.


ஒடிஸா குழு முகமூடி நடனம் என்று ரெண்டு  ஐட்டம் ஆடுனாங்க. ஆடுமுன் அதற்கான விளக்கம் ஒன்னும்கொடுக்கலை.  Trinetra Chhau Dance Centre இண்டியன் கவுன்ஸில் ஃபார் ஆர்ட் அண்ட் கல்ச்சர் ரிலேஷன்ஸ்  வகையில் இப்போ  நியூஸியில்  முக்கிய நகர தீபாவளியில் ஆடி மகிழ்விக்க வந்துருக்காங்க.  நாம்  எடுத்த படங்களும் சரியா வரலை:(



இந்தவகை நடனங்களை சண்டிகர் வாழ்க்கையில் சிலமுறை பார்த்திருக்கிறேன்.  காவடி போல பெரிய அளவில் உள்ளமுகமூடிகளை வச்சு ஆடுவாங்க.  இதற்கான இசையும் அட்டகாசமாக ஒரு கிராமியத்தனத்துடன் இருக்கும்.   பெரிய முரசு போன்ற ட்ரம், சின்ன கெட்டில் ட்ரம்ஸ், ரெட்டை நாயனம் போல ஒரு வகை ஷனாய்ன்னு ...... ஒருவேளை வெளிநாடுகளுக்கு  அவற்றையெல்லாம் கொண்டு வர சிக்கலிருந்ததோ என்னவோ!

மேலே உள்ள படம் சண்டிகரில் எடுத்தது.

மொத்தம் முப்பத்தி மூணு ஐட்டங்களில்   முதல் ரெண்டு மூணு முடிஞ்சதும் மேயரும்,  மற்ற சில கவுன்ஸிலர்களும்,  ஓசைப்படாமல் எழுந்து போயிட்டாங்க.  ஒவ்வொரு  மூணாவது  நிகழ்ச்சியும் பாங்ராவா இருக்கும்படி 'பார்த்து'அமைச்சிருந்தாங்க போல.  பாங்ரான்னு அறிவிச்ச அடுத்த விநாடியே  அரங்கத்தில்   அங்கங்கே இருக்கும் அத்தனை பஞ்சாபிகளும் வேலை மெனெக்கெட  இறங்கிப்போய்  மேடைக்கு முன்னே இருக்கும் இடத்தில் குவிஞ்சு நின்னு  கூடவே ஆடுறாங்க.  சோம்பல் என்பதே இல்லை. இருட்டானாலும்  டோண்ட் கேர். ஆடியே ஆகணும். எதோ ரிச்சுவல் மாதிரி  ஒவ்வொரு முறையும் வந்து ஆடிட்டு இருக்கைக்குத் திரும்பியது ,  ஒற்றுமையைக் காமிக்குதோ?

பாலிவுட் டான்ஸ் என்ற பெயரில்  எல்லா நடனக்குழுவும் தனித்தனியா வந்து லுங்கி டான்ஸ் ஆடிட்டுப் போனாங்க. சலிப்பா இருந்துச்சு.  போதாக்குறைக்கு   பேஷன் ஷோ  என்ற பெயரில்  அங்கங்கே கேப் ஃபில்லர் போல நாலைஞ்சு முறை. ஆனாலும் ஃபிஜி இண்டியன்ஸ் நடத்திய ஜல்ஸா அளவுக்கு இது மனதைக் கவரவில்லை:(















 மராத்தி லாவணி மொத்தத்தில் சூப்பர்!  பூனா வாழ்க்கை நினைவுக்கு வந்தது!
நம்மூரில்முதல்முறையா ஆடி இருக்காங்க. வெல் டன்!

ஒன்னு சொல்லணும், இந்த வருச  இண்டியன் க்ளப் செயற்குழு அட்டகாசமா  எல்லா ஏற்பாடுகளையும்  பண்ணி இருந்தாங்க.  உழைப்பு நல்லாத் தெரிஞ்சது.  ஒடிஸா குழுவைத் தவிர்த்து ஆடியவர்கள் அனைவரும் தொழில்முறை ஆட்டக்காரர்கள் அல்ல.  ஆறுமாசம்  வீக் எண்டுகள் தவறாமல் பயிற்சி எடுத்துருக்காங்க.  ரெண்டு கேரளா க்ளப்பும் தனித்தனி கடைகளும் ஐட்டங்களுமா ஜமாய்ச்சாங்க.





மக்கள் வருகை  இருபதாயிரமுன்னு  மைக்கிலே சொன்னதை நாம் பொருட்படுத்த  வேண்டாம். அவ்ளோ கூட்டம் இங்கே ஏது?   நாம் ரெண்டால் வகுத்துக்கலாம். பிரச்சனை இல்லை:-)   அந்தப் பத்தாயிரத்தை  மீண்டும்  ரெண்டால் வகுத்தால் நம்மாட்கள்.  இவ்ளோ இந்தியர்களை ஒருசேரப் பார்ப்பது இதுவே முதல் முறை!  நிறையப் புது முகங்கள்.  பஞ்சாப், ஆந்திரா, கேரளா என்னும் வரிசையில் இருக்கலாம்.

எட்டரை மணியாகுதே. எதாவது சாப்பிடலாமுன்னு  அடுத்த பகுதிக்குப்போனால் நம்ம தோசைக் கடையில்தான்  வரிசை கட்டி நின்னு வாங்குது சனம்.  வேறெதாவது  சாப்பிடலாம்னு பார்த்தால் பாவ்பாஜி இருக்கு. பேல்பூரி, பானி பூரி எல்லாம் காலி.  கேரளா க்ளப் ஜஸ்ட்டின் , நம்மைப் பார்த்ததும் கையோடு இழுத்துக்கொண்டு போய் கடையில் விட்டார். தோசை, சட்டினி சாம்பார், ஆளுக்கொரு  மேங்கோ லஸ்ஸி.  சாப்பிட்டு முடிச்சுக் காசு கொடுத்தால்..... யாருமே வாங்கிக்க மாட்டேங்கறாங்க. ஒரே குடும்பத்துலே காசு எதுக்குன்னு பதில் வருது!

ஓசிச் சாப்பாட்டுடன் தீபாவளி ரெண்டு இனிதே முடிந்தது.

நாளையும் மற்ற நாளும் ப்ரைவேட் தீபாவளி.  நாலு  இடத்தில் கொண்டாடணும்.  நாளை பகல் நம்ம வீட்டில், மாலை இன்னொரு தோழி வீட்டில் பூஜை. ஞாயிறு இன்னொரு தோழி வீட்டில் பாட்லக் லஞ்சு. அன்று மாலை கோவிலில் இப்படி.

 இவ்ளோ பிஸியா இருந்தாலும்  இருட்டுனதும்  கொஞ்சம் கம்பி மத்தாப்பு (போன வருச ஸ்டாக்)  கொளுத்தணும்.டே லைட் ஸேவிங்ஸ் இருக்கு. இருட்ட எப்படியும் பத்தாகிரும்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்து(க்)கள்.

PINகுறிப்பு :ஒரு வாரம் தீபாவளி விடுமுறை விட்டுறலாமா?  விரலுக்கு ஓய்வு வேணுமாம்:-)




கொஞ்சநாள்......சும்மா இரு! (????)

$
0
0
கொதிக்கும் உடம்போடு வீட்டுக்குள் நுழைஞ்சவர் விடுவிடுன்னு நேரா உள்ளே போய் படுத்துட்டார். தொட்டுப் பார்த்தால் நல்ல ஜுரம். கொஞ்ச நேரம் தூங்கட்டும் என்று விட்டுட்டு நான் போய்க் கொஞ்சம் கஞ்சி வைக்க அடுப்பைப் பத்த வச்சேன்.

சீன தேசம் போனவர் இப்படி  ஜுரம் பிடிச்சு வந்துட்டாரேன்னு கலக்கம். மூணு நாள் முன்னால்தான்  எங்கூரில் இருந்து ஆக்லாந்து போய் அங்கிருந்து ஏர் நியூஸிலேண்ட்  விமானத்தில்  ஷாங்காய் போயிருந்தார்.  இது ஒரு நீண்ட நெடும்பயணம்தான். நடுராத்திரி நேர ஃப்ளைட் என்பதால் தூங்கிக்கிட்டேப் போய்ச் சேரலாம். பனிரெண்டரை மணி நேரம் பறந்தபின்  சீன நேரம் காலை எட்டரைக்கு ஹொட்டேல் அறைக்குப் போனவுடன் குளிச்சு ரெடியாகி பத்து மணிக்கு ஃபேக்டரிக்குப் போயிட்டார்.  அதுவும் கிட்டத்தட்ட ஒரு மணி நேர கார் பயணம். தொழிற்சாலைகள் எல்லாம் எப்பவும் நகருக்கு வெளியில்தானே!

ஆரம்பகட்ட  வேலைகளை முடிக்கவே மணி மூணரைக்கும் மேல். பகல் சாப்பாடு இன்னும் நடக்கலைன்னு வயிறு ஒரு பக்கம் கூவ ஆரம்பிச்சு ரொம்ப நேரமாயிருக்கு. சின்ன ஊர் என்பதால் சாப்பிடும்  இடங்கள் ஒன்னும் சரியில்லை.அப்போதைக்கு கூச்சலை அடக்க ஒரு இடத்தில் சாண்ட்விச் வாங்கி சாப்பிட்டு இருக்காங்க இந்தக்குழுவினர்.  ட்டூனா சேண்ட்விச்சாம்.

நம்ம புள்ளி மறுநாள் விடிகாலையில் வயித்து வலியோடு எந்திரிக்கிறார். என்னை ஃபோனில் கூப்பிட்டு வலியைச் சொன்னதும் ஹொட்டேல் டாக்டரைப் பார்க்கச் சொன்னேன். நம்ம அதிர்ஷ்டம் பெரிய ஹோட்டேலா இருந்தும் டாக்டர் இல்லை(யாம்)  பக்கத்தில் ஒரு மருத்துவமனை இருக்குன்னு வரவேற்பில் சொன்னதும் அங்கே போயிருக்கார். இண்டர்நேஷனல் பிரிவு ஒன்னு தனியா அங்கே இருக்காம்.

இன்றைக்குக் காலை எட்டுமணிக்கு இவரை வேறொரு ஃபேக்டரிக்குக் கூட்டிப்போக வண்டி வரும். ரெண்டரை மணி  நேரப் பயணம் அங்கே போய்ச்சேர. நமக்கு வயித்து வலி என்பதால் மற்றவர்களைப் போகச் சொல்லிட்டு இவர் மருத்துமனைக்குப் போயிருக்கார். ஃபுட் பாய்ஸனிங் என்று பழியை ட்டூனாவின் மேல் போட்ட  டாக்டர்  சிங்கையில் உள்ள இன்னொரு டாக்டரிடம்   கலந்து பேசிட்டு  ஆண்ட்டிபயாடிக் கொடுத்து ஒரு பாட்டில் ஸலைனும் ஏத்தியிருக்கார். கூடவே ஆயிரம் டாலர்கள் சார்ஜ்.

வயித்துவலி என்பது  உண்மையா வலது பக்க மார்புக்கூட்டின் கீழே பிச்சுப்பிடுங்கும் வலி. சீனாவிலிருந்து எனக்கு ஃபோனில் வலி விவரம் சொல்லி பயணத் திட்டத்தை கேன்ஸல் செஞ்சு  அன்றே அங்கிருந்து கிளம்பலாமுன்னா, சீன மருத்துவர் பயணம் செய்யும் நிலையில்  உடல் இல்லைன்னு சொல்லிட்டார்:(  அப்படியும் மறுநாளாவது அங்கிருந்து  புறப்பட்டே ஆகணுமுன்னு  டிக்கெட்டை  மாத்திட்டார் நம்மவர்.


என்னுடைய நெருங்கிய தோழி இங்கே நியூஸியில் நம்மூரில்  மருத்துவர். அவருக்குத் தகவல் சொன்னதும், வலப்பக்க வலி என்றால் உடனே கவனிக்கணும். ஜூரம் எவ்ளோ இருக்குன்னு கேட்டுச் சொல்லுங்கன்னார். டிக்கெட்டை மாற்றியெடுத்த விவரமும், சனிக்கிழமைக்கு பதிலாக வெள்ளியே வருகிறார் என்றும்  தகவல் தந்தேன்.  சீனத்தில் வியாழன்  பகல் ரெண்டேகாலுக்கு ஃப்ளைட். விமானம் ஏற வந்தவரைக் காய்ச்சல் காரணம்  பயணம் செய்ய அனுமதிக்கலை. நாம்  அந்த வழியில் நடந்து வரும்போதே நம் உடல் வெப்பநிலையை ஸ்கேன் செஞ்சு அளக்கும் கருவிகள் அங்கே வச்சுருக்காங்க. சிங்கையிலும் பார்த்திருக்கேன்.

உடனடியாக ஊர் திரும்பியே ஆகணுமுன்னு இவர் பிடிவாதமாக் கேட்டு விமானத்துக்குள்ளே  வந்துட்டார்.  ரெண்டு நாளா கொலைபட்டினி. வெறும் தயிர் மட்டும் கொஞ்சம் சாப்பிட்டுருக்கார். சீனதேசத்து ஹொட்டேலிலும் கஞ்சி செஞ்சு கொடுத்தாங்களாம். அவுங்க நல்லா இருக்கணும்.

பனிரெண்டு மணி நேர ஃப்ளைட். எப்பவும்  கிழக்கு நோக்கிய பயணம் என்றாலே டெயில் விண்ட் காரணம் கொஞ்சம் சீக்கிரமா  வந்துருவோம். காலை ஏழுமணிக்கு ஆக்லாந்து வந்ததும் எனக்குத் தகவல் சொல்லிட்டு,  லோக்கல் ஏர்ப்போர்ட்  வந்து, ஒன்பது மணி ஃப்ளைட் பிடிச்சு நம்மூருக்கு வந்துட்டார்.   வாசலில் டாக்ஸி  வந்து நின்னப்பச் சரியா பதினோரு மணி.
தோழி இடைக்கிடை  ஃபோன் செஞ்சு நிலவரத்தைக் கேட்டுக்கிட்டே இருந்தாங்க. பதினொன்னரைக்குக்  கூப்பிட்டாங்க 'வந்தாச்சா?'  வந்து ஜுரத்தோடு படுத்துத் தூங்கறார்.


எவ்ளோ ஜுரம் இருக்குன்னு பார்த்தியா?  இல்லை. இதோ பார்க்கிறேன். 39.5.  உடனே ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிப்போங்க. குடும்ப டாக்டர் வேணாம். நேரடியா மருத்துவ மனைக்கே போயிருங்கன்னதும் 'ஆம்புலன்ஸைக் கூப்பிடவா'ன்னேன். "வேணாம்.  கணவரை  அனுப்பறேன்.அவர் உங்களை ஆஸ்பத்திரியில் கொண்டு விடுவார்.  அவருக்கு ஒரு நைட் ட்ரெஸ் மட்டும் கையோடு எடுத்துக்குங்க"

நண்பர் (தோழியின் கணவர்)  வந்தவுடன் கிளம்பிப் போனோம். உடம்பின் நடுக்கம் தாங்கமுடியாமல் பெரிய ஜாக்கெட் ஒன்றை போட்டுக்கிட்டார் நம்ம கோபால்.

மெயின் ரோடில் இப்பெல்லாம் பயங்கர  ட்ராஃபிக்:(  நிலநடுக்கம் வந்தபின் கிழக்குப்பகுதி மக்களும், வியாபார நிறுவனங்களும் நம்ம மேற்குப் பகுதிக்கு இடம் பெயர்ந்ததால்  எங்க ஏரியா எப்போதும் ஒரே கஜகஜன்னு கிடக்கு!

நம்ம வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் ஆறே கிமீ தூரம்தான். முந்தியெல்லாம் அஞ்சாறு நிமிசத்துலே போயிருவோம். இப்ப அதுவும் இன்னிக்கு இருவது நிமிசத்துக்கு மேலாச்சு. எமெர்ஜென்ஸியில் இறக்கிவிட்டுட்டு, பார்க்பண்ணிட்டு வரேன்னு சொன்ன நண்பரை வேண்டாம்.நீங்க ஆஃபீஸ்போங்க. நான்  எதாவது தேவைன்னா ஃபோன்  செய்யறேன். இல்லேன்னா 'டெக்ஸ்ட்'பண்ணிடறேன்னு ஜம்பமாச் சொன்னேன்.

அவசர சிகிச்சையில் கொஞ்சம்பேர் காத்திருக்காங்க. முதலில் ஒரு கவுண்ட்டரில்  இருக்கும் நர்ஸ்களிடம் பிரச்சனை என்னென்னு சொல்லிட்டு அடுத்த கவுண்ட்டரில் நம்ம பெயரை ரெஜிஸ்ட்டர் பண்ணிக்கணும்.  'ஜுரத்தோடு ஓவர்சீஸ்லே இருந்து திரும்பி இருக்கார்'சொன்னேன். பக்கத்து கவுண்டரில் நம்ம ஸர் நேம் சொன்னதும் நம்ம ஜாதகம் முழுசும் கணினியில் காமிச்சது.  தற்போதைய விலாசமும் தொலை பேசி, அலைபேசி எண்களை சரிபார்த்தபின்  இருக்கைகளில் காத்திருக்கச் சொன்னார்கள். நாலெட்டு நடந்து உட்காருமுன்  நம்மைத்தேடி ஓடிவந்த மருத்துவமனைப் பணியாளர்  நம்மை உள்ளே கொண்டு போயிட்டார். ஓவர்சீஸில் இருந்து  ஜுரத்தோடு  வந்தால்  போச்சு. அதுவும் சீனத்திலிருந்து வந்துருக்கார்.  பறவை, பன்றின்னு எத்தனையோ காய்ச்சல் இருக்கு. நம்மால் அவை  கம்யூனிட்டிக்குள் பரவிவிட்டால்............   ஐயோ:(  Threat to the communityன்னு  நம்மை ஐஸொலேட்  பண்ணிருவாங்க. 

ஆஸ்பத்ரி ட்ரெஸ் போட்டுக்கச்சொல்லி  கவுனைக் கையில் கொடுத்ததும்  எனக்கு 'தலைகால்'புரியலை. தனி அறை ஒன்றில் படுக்கவைத்து பரிசோதனைகள், கேள்விகள்  எல்லாம் ஆரம்பிச்சது.  நான் ஒரு பக்கம் இருக்கையில் உக்கார்ந்து  கவனித்துக்கொண்டு இருந்தேன். ஏழெட்டு ஒயர்களுடன்  மார்புப்பகுதியை  மானிட்டரில் இணைச்சுட்டு, நாடித்துடிப்பைக் கவனிக்க  வலது கை பெருவிரலுக்கு தொப்பியும் போட்டாச்சு. ஐவி  ட்ரிப்ஸ் போட ஊசியும் குழாயும் குத்தி வச்சுட்டாங்க. ரொம்ப தெரிஞ்சமாதிரி மாறும் பச்சை எண்களைப் பார்த்துக் கிட்டு  இருந்தேன்.

ரெண்டு மூணு மருத்துவர்கள்,  மேல் அண்ட் ஃபீமேல் நர்ஸுகள் இப்படி மாறி மாறிவந்து மீட்டிங் போட்டுட்டு அப்பப்ப என் பக்கம் திரும்பி நோ ஒர்ரீஸ். ஹி வில் பி ஆல்ரைட்ன்னு சொல்லிட்டுப் போனார்கள்.  இதுக்கிடையில் எனக்கு காஃபி டீ எதாவது வேணுமான்னு செயிண்ட் ஜான்ஸ் ஊழியர்களின் உபசரிப்பு வேற.

இப்படியே ஒரு மணி நேரம் ஓடிப்போனது. படுக்கையுடன் கட்டிலை உருட்டிக்கிட்டே எமெர்ஜன்ஸி  ஏரியாவின் இன்னொரு  பகுதியில் இருந்த  அறைக்குக் கொண்டு போனாங்க. 'மேல்நர்ஸ்'ஒரு நாற்காலியைத் தூக்கிவந்து போட்டு இதில் உக்காந்துக்குங்கன்னு உபசரிச்சார்.

எனக்கு வேற ஒரு பிரச்சனை.  இப்ப ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக மருந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.  சாப்பாட்டுக்கு அரை மணி முன் மருந்து உள்ளே போகணும்.  அரைமணிக்குப் பின்  சோறெங்கேன்னு வயிறுசண்டை போட்டுரும். இன்னிக்கு  மருத்துவமனைக்கு  வருமுன் மருந்தை விழுங்கிட்டு, கையோடு லஞ்ச் கொண்டு வந்திருந்தேன்.  இவரோ அப்பப்ப,  போய் சாப்பிடுன்னு  சொல்லிக்கிட்டே இருக்கார்.  கொஞ்சம்நேரம் ஆகட்டும். வெளியே போய் சாப்பிடறேன்னு சமாளிச்சுக்கிட்டே இருந்தேன்.

பகல் ரெண்டரை ஆகி இருந்தது. இவரும் கண்ணை மூடி  உறங்க ஆரம்பிச்சார். நான் பூந்தோட்டம் உள்ள நதிக்கரைக்குப் போனேன். போனவருசம் இதே சமயம் மகளுக்கு உடல்நலமில்லாமல் மருத்துவமனையில்  அதிக நாட்கள் இருந்தாள். அப்போ தினமும் வந்து போனதில் (எங்கே போறது? காலையில் வந்தால் நாள் முச்சூடும் இங்கேதான் இருப்பேன்)  எதெது எங்கெங்கேன்னு  ஏறக்குறைய எல்லா இடங்களும் அத்துபடி.  

லஞ்சை முடிச்சுட்டு (அரிசி உப்புமா!)  அலைபேசியை எடுத்து மகளுக்கு டெக்ஸ்ட் ஒன்னு கொடுக்க ஆரம்பிச்சேன்.  இது ஒரு பெரிய விஷயமான்னு  நினைப்பீங்க. எனக்கு இது ஏதோ மலையைப் புரட்டும் சமாச்சாரம். வளர்ந்து விட்ட டெக்னாலஜிகளில்  இந்த செல்ஃபோன்  மட்டும் மூளைக்குள் நுழையமாட்டேங்குது. ஒவ்வொருமுறை டெக்ஸ்ட் (எஸ் எம் எஸ்) அனுப்பறதுக்குள்ளே தலையால் தண்ணி குடிச்சது போல்தான்:(  இந்த  அழகுலே  இது எனக்கு புது ஃபோன் வேற. மகள் புதுசு வாங்குனதும் பழசு எனக்கு வந்துரும்.  ஒரு அவசரம், ஆபத்துக்குன்னுதான் செல்ஃபோன் வச்சுருக்கேனே தவிர அதோடு குடித்தனம் பண்ணுவதற்கில்லையாக்கும் கேட்டோ!

தட்டித்தடுமாறி 'அப்பா   எமெர்ஜென்ஸியில்' சேதி அனுப்பிட்டேன். இதுக்கே காமணி ஆச்சுப்பா:(  திரும்ப அவசர சிகிச்சைக்குள் போய்  உள்ளே இருக்கும் நோயாளியைப் பார்க்கணும்.நான்  நோயாளியின் மனைவி'என்றதும்  ஒரு பட்டனை அமுக்கி  என்னை உள்ளே அனுமதிச்சாங்க. நேரா இவர் இருந்த அறைக்குப் போனால்........... ஆளைக் காணோம். அறை காலி!

தொடரும்........

PINகுறிப்பு:விஸ்தரிப்புக்கு  மன்னிக்கணும். இது கோபாலின் சேமிப்புக்கு:-)





நாச்சியாரின் இழப்பு.

$
0
0
பதிவுலக நட்புகளுக்கு,

நம்முடைய 'பதிவர்   நாச்சியார்'வல்லி சிம்ஹனின் அருமைக்கணவர் திரு நரசிம்ஹன் நேற்றிரவு  இறைவனடி சேர்ந்தார்.

என்ன செய்வது என்ற மனக்கலக்கத்துடன் இருக்கும் வல்லிக்கு(ரேவதிக்கு) பதிவுலகின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்.

ப்ச்...............  என்னப்பா இப்படி ஆகிப்போச்சு:((((





ஊருக்கு ஒரு பேட்டர்ன் (சிங்கைப்பயணம் 1)

$
0
0

பழகின ஊர் ஒவ்வொன்னுக்கும் ஒரு பேட்டர்ன் வச்சுருக்கேன்.  சிங்கைன்னா  சீனுவை தரிசனம் செஞ்சு,  அங்கேயே உக்கார்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் வாசிச்சு அந்த நாளை  ஆரம்பிக்கணும். இந்த சகஸ்ரநாமம் வாசிப்பது  ஒரு எட்டுவருசங்களா  நடக்குது.  அதென்னமோ அங்கே கோவிலில் உக்கார்ந்து வாசிக்கும்போது  பெருமாளே பக்கத்தில் வந்து உக்கார்ந்துக்கற மாதிரி தோணும். வேறெந்த  ஊர் கோவில்களுக்கும்  இது நம்ம நடைமுறை இல்லையாக்கும், கேட்டோ!  இது சிங்கை ஸ்பெஷல்:-)

இன்னிக்குக் காலையில் எழுந்து கடமைகளை முடிச்சுட்டு நேரா கோமளவிலாஸ் ப்ரேக்ஃபாஸ்ட்.  கோபாலுக்கு இட்லி வடை, எனக்குப் பொங்கல் வடை. கூடவே ஃபில்ட்டர் காஃபி. கல்லாவிலிருந்த பெண்மணி, 'எப்ப வந்தீங்க'ன்னு சிரிச்சமுகத்தோடு கேட்டாங்க.  நாமும் கடந்த  29 வருசமா அவுங்களைப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கோம்:-)

காலை ஒன்பதுக்கு முன்  நகரத்தின் பிஸியான சாலைகளில் ஒன்னான செராங்கூன் சாலையில் நடப்பது ஒரு தனி அனுபவம். ராத்திரி பெய்த மழையால் சாலை பளிச்சுன்னு ஈரத்துடன் கிடக்கு.  சாலைக்கு எதிர்ப்புறம் இருந்தே வீரமாகாளிக்கு  ஒரு கும்பிடு. 'அப்புறம் வாறேன் ஆத்தா.'

ரொம்பப்பொடி நடையில்  சீனுவின் கோவிலுக்குப்போய்ச் சேர்ந்தோம். முக்கால் கிலோமீட்டர். புள்ளையாருக்கு  ஒரு தேங்காய் உடைக்கணும்.  கோவிலுக்குள் நுழைஞ்சதும்  நேரா கண்ணை ஓட்டினால் கொடிமரமும் அதன் பின்னே இன்னும்கொஞ்ச தூரத்தில் திறந்த கண்ணோடு நிற்கும் பெருமாளும்!  'ஒரு சுத்து சுத்திட்டு வரேண்டா'  என்ற முணுமுணுப்போடு   ஒரு தேங்காயை மட்டும் வாங்கினோம். புள்ளையார் முன்னால் இருக்கும்  தொட்டியில்  சூறைத்தேங்காய்  உடைச்சார் கோபால்.

இந்தத் தேங்காய் உடைக்கும் தொட்டி அமைப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். செட்டிநாட்டுக் கோவில்களில்  முக்கியமாகப் பிள்ளையார்பட்டி  கோவிலில்  உள்ள  இந்த முறை  ரொம்ப 'நீட் ' என்றே நினைப்பேன்.  உடைஞ்ச ஓட்டாஞ்சில்லுகள் யார் காலிலும் மிதிபடாது பாருங்க.
புள்ளையார் சந்நிதியில்  தங்க முலாம் பூசிய வெள்ளிக் கவசத்தில் இருக்கும் மூலவர், பஞ்சலோக உற்சவருடன் தம்பியும் வேலாக நின்னு சேவை சாதிக்கிறார்.  பெருமாள் கோவிலில் தம்பி எப்படி இடம்பிடிச்சு நின்னார் பாருங்களேன்!!!!

தனிக் கட்டிடமா இருக்கும் இதில்  இடது பக்கம் புள்ளையார், வலது பக்கம் சுதர்ஸனர். ரெண்டு சந்நிதிகளுக்கும் இடையில்  பின்புறம் கொஞ்சம் தள்ளி விஷ்ணுதுர்கை.  முன்னால் நின்னு பார்த்தால் மூன்று சந்நிதிகளையும்  ஒரு சேரப் பார்த்து சேவிக்கலாம்.

 ஸ்ரீ சுதர்ஸனருக்குப் பின்பக்கம்  வழக்கம்போல் நரசிம்ஹர், சிரிச்ச முகத்துடன்.    சுதர்ஸனர் சந்நிதியின் வெளிப்புறம் இரண்டு பக்கங்களிலும்  குமுதவள்ளி நாச்சியார் &திருமங்கை ஆழ்வார்  ஒரு புறமும், நம்மாழ்வார் & பெரியாழ்வார் மறு புறமும்  இருக்காங்க.  சந்நிதிகளின் வெளிப்புறச் சுவர்களில் அவரவருக்கு  தனித்தனி டிஸைன்களில்  யானை, சிம்ஹம் இப்படி வேலைப்பாடுகள்.  சும்மாச் சொல்லக்கூடாது  பார்த்துப் பார்த்துதான்  கட்டி இருக்காங்க. ஒவ்வொரு சந்நிதியையும் தனித்தனியாச் சுற்றிவரலாம்.

பிரசாத விநியோகம் நடக்குது. எட்டிப் பார்த்தேன்.  புளியோதரையும், ததியன்னமும்  துளித்துளி கோபாலுக்கும்  கேஸரி துளியூண்டு எனக்குமாக வாங்கிக்கிட்டேன்.  தெரிஞ்சிருந்தால் கோமளவிலாஸ்  போகாம நேரா இங்கே வந்திருக்கலாம். (என்ன தான் சொல்லுங்க பார்க் ராயல் (நியூபார்க்) வசதி வராது. கோவிலுக்கு ரொம்பப்பக்கம்.  ஆனால்.... அநியாயத்துக்கு  அறை வாடகை வச்சால் எப்படி? புத்தம்புது கிராண்ட் சோழாவா இருந்தால்கூடப் போனாப்போகுதுன்னு இருக்கும். இங்கே நியூ பார்க் என்ற பெயரை பார்க் ராயல்ன்னு மாத்தினதும் வாடகை எல்லாம் டபுள் ஆக்கினது  அடுக்குமா?)


அட்டகாசமான ருசி. அதென்னமோ  சாமிப் பிரசாதம் என்றாலே  .......     என்ன ஒன்னு. இங்கே பயமில்லாமல் சாப்பிட்டுக்கலாம்.  சுத்தமாச் செய்யறாங்க. சமைக்குமிடத்தைப் பார்த்தாலே அட்டகாசமா இருக்கு.

மஹாலக்ஷ்மி  தாயாரை  ஸேவிச்சுட்டுக் கோவிலை வலம் வந்தோம்.  ஆண்டாள் சந்நிதியில் 'தூமணி மாடம்' ஆச்சு.  எதிரில் துளசி மாடம்.  அப்புறம் எம்பெருமான்  தரிசனம்.  யாரும்  'ஜருகு ' சொல்லி விரட்டாமல் நிம்மதியா  நம்மிஷ்டம் போல் மனம் கொள்ளுமளவுக்கு  ஸேவிக்கலாம்.  இவர் ஸ்ரீநிவாசன். திருப்பதி  ஸ்ரீநிவாசனே  அனுப்பி  வச்சுருக்கார்.

எப்ப வந்தாராம்?  கோவிலைக் கட்டும் எண்ணம் வந்தது 1800 களில்.பெருகி வரும் வைஷ்ணவர்களுக்கு ஒரு பெரு(ம்) ஆள்  வேணும். அந்தக் காலக்கட்டத்தில்  இந்தியாவும் ப்ரிட்டிஷ் ஆட்சியிலே இருந்துச்சே!  கிழக்கிந்தியா கம்பெனி!  மாடர்ன் சிங்கப்பூர் உருவாகி  இருந்த சமயமும் அதுதான்.   மருத்துவர்கள், வக்கீல்கள் னு பெரியபடிப்பு படிச்சவுங்க முதல், வியாபாரிகள்,  நடுத்தர வர்க்கத்தில் பட்ட  குமாஸ்தாக்கள், ஆசிரியர்கள், போலீஸ், தபால் ஊழியர்கள் இப்படி வெள்ளைக்காலர்  வேலை செய்பவர்கள்,   கட்டிட வேலை,  கூலிவேலைன்னு செய்யும் சாதாரணத் தொழிலாளிகள் இப்படிப் பலரும்  இங்கே வந்து குடியேறினாங்க.

அருணாச்சலம் பிள்ளை,  கூத்தபெருமாள் பிள்ளை, ராமசாமி பிள்ளை, அப்பாசாமி பிள்ளை, சொக்கலிங்கம் பிள்ளை, ஜமீன்தார் ராமசாமி  என்பவர்கள் சேர்ந்து  ரெண்டு ஏக்கருக்கும் கொஞ்சம் அதிகமா நிலம் ஒன்னு ( 2 acres 2 woods and 24 poles )  நம்ம கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து வாங்கினாங்க. இருபத்தியாறு ரூபாய் எட்டணா செலவாச்சு.  ஒரே கம்பெனி என்பதால் அங்கத்துக் காசும் இங்கத்துக் காசும் (சிங்கப்பூர் செட்டில்மெண்ட்) ஒரே மாதிரி செல்லுபடி ஆனதாம். அப்ப 1851 வது  ஆண்டு. பலவருசங்களா இடத்தை அப்படியே போட்டு வச்சுருந்துட்டு,  1885 லே கோவில்கட்டி பெருமாளை வச்சாங்க. அவர் நரசிங்கப் பெருமாள்.

சிலவருசங்கள் கழிச்சு கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த  இன்னும் கொஞ்ச இடங்களையும் வாங்க முடிஞ்சது. ரெண்டு பக்தர்கள் அந்த இடங்களை வாங்கி கோவிலுக்கு நன்கொடையாக் கொடுத்தாங்க. ஆகஸ்ட் 15, 1912  இல் Mohammedan Hindu Endowments Board இன்னும் கொஞ்சம் இடத்தை 999 வருச லீஸ் எடுத்துக் கொடுத்து உதவி இருக்கு. தமிழக இஸ்லாமியர்கள்தான்  முதலில் இங்கே குடியேறினார்களாம். இந்த போர்டுதான் 1907 முதல்கோவில் நிர்வாகத்தையும்  பார்த்துக்கிட்டவங்க.

1950 வரை  இப்படியே நடந்துக்கிட்டு இருந்த கோவிலை, இன்னும் பெரிய அளவில் கட்டலாமுன்னு போர்டு முடிவு செஞ்சது.  அப்படியும் பத்து வருசமாயிருச்சு  அதுக்கான பொருள் சேர்க்க.  கோவிந்தராஜப்பிள்ளை என்ற புரவலர்  பணம் செலவு செய்ய முன்வந்தார். 1960 இல்  கோவிலைக் கொஞ்சம் பெருசாக் கட்டி முடிச்சாங்க. 1965 இல்  இவரது முயற்சியால் கல்யாணம் போன்ற சுபகாரியங்களுக்காக ஒரு ரெண்டு மாடி ஹால் கூடக் கட்டினாங்க. சுதந்திர சிங்கப்பூரின் முதல் ஜனாதிபதி   Enche Yusoff Bin Ishak அவர்கள்  இந்த ஹாலைத் திறந்து வச்சார்.

  அதுக்குப்பிறகு இன்னும் ஒரு வருசம் கழிச்சு (1966)  புள்ளையார் இருக்கும் கட்டிடமெல்லாம்  கட்டி முடிச்சுருக்காங்க. அந்த சமயம்தான்  பெரியோர்கள் பலர்  சேர்ந்து , மூலவரை மாத்தலாமுன்னு முடிவு செஞ்சு,   கோபமா இருக்கும் நரசிம்ஹனுக்கு பதிலாக காருண்யமான ஸ்ரீநிவாசனை மூலவராக்கிட்டாங்க.  அப்ப அருள்மழை பொழிய ஆரம்பிச்சவர்தான் நம்ம சீனு. 1979இல் ராஜகோபுரம் கட்டியாச்சு.  இதைக்கட்டவும் பெருமளவில்  உதவுனவர் நம்ம கோவிந்தராஜப் பிள்ளைதான்.  1978 இல் கோவில் சிங்கையின் பாரம்பரியக் கட்டிடமா அறிவிக்கப்பட்டது. இதுவரை மூணு முறை புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் ஆகி இருக்கு. வெளிப்புறம் மதில் கட்டுமுன் எடுத்த(சுட்ட) படம் இது. கோவிலுக்கு நன்றி.

எப்பப்போனாலும் பளிச்ன்னு கோவில் சுத்தமா இருப்பதோடு பூஜை விசேஷங்கள் எல்லாம் அருமையா அந்தந்த நேரத்தில்  சரியான முறையில்  நடக்குது.  எந்த மதக்காரரா இருந்தாலும் கோவிலுக்குள் வரத்  தடை ஏதுமில்லை. தாராளமா க்ளிக்கவும் செய்யலாம்.  தைப்பூசத்துக் காவடிகள் பால்குடங்கள் ஊர்வலம் எல்லாம் இங்கிருந்து கிளம்பிதான் டேங் ரோடு தண்டபாணி கோவிலுக்குப் போகுது.  சைவ வைஷ்ணவ ஒற்றுமைச் சின்னம்.

நம்ம தூண் காலியாத்தான் இருக்குன்னு  அங்கே உக்கார்ந்து  கையோடு கொண்டு போயிருந்த (பெரிய எழுத்து) ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகத்தை வாசித்தோம்.  அரைமணி நேரம்  ஆகும் வாசிச்சு  முடிக்க. வலது பக்கம் நம்ம நேயுடு தனிச்சந்நிதியில்,வெற்றிலை மாலையில் ஜொலிக்கிறார்!

பொடிநடையில் மீண்டும் அறைக்கு வந்தோம். இன்னும்  கொஞ்ச நேரத்தில் நம்ம தோழி வர்றாங்க .

தொடரும்..........:-)






கிவ் ஹிம் அ ஹக். ........... ஆல் ஈஸ் வெல்!

$
0
0
பயந்து போன நான் அவசர சிகிச்சைப் பகுதியில்  நடுவில் தீவு போலக் கவுண்ட்டர்கள் போட்டுக்கிட்டுக் கணினியும் கையுமா இருந்த பணியாளர்களிடம் கேட்டேன். நமக்குத்தான் ஸர்நேம் தகராறு இருக்கே. அதனால் NHI  நம்பரைச் சொல்லிக்கேட்டேன்.  வேற ஒரு அறையில் இருக்காருன்னு சொல்லி அடையாளம் சொன்னாங்க.  ஆஸ்பத்திரியில் நம்ம  நம்பரைச் சொன்னதும் முழு ஜாதகமும் கணினியில் வந்துருது.

சொன்ன இடத்துக்கு ஓடினேன். பெரியதொரு  ஹாலில் திரைச்சீலை தடுப்புகள் போட்டு அறைகளாகப் பிரிச்சுருக்காங்க. சுற்றுச்சுவர்கள் முழுசும் ஏராளமான ஒயர்களோடு  பலவித உபகரணங்கள்.  சட்னு பார்க்க சினிமாக்களில் காண்பிக்கும் ஆபரேஷன் தியேட்டர் போல இருக்கு. ஆக்ஸிஜன் சிலிண்டர்ன்னு ஒன்னு தனியா இல்லாம, விமானங்களில்  நம்ம தலைக்கு மேலே ஆக்ஸிஜன் மாஸ்க் இருக்குன்னு  திரையிலோ அல்லது  எதாவது ஒரு விமானப் பணிப்பெண்ணோ காமிப்பாங்க பாருங்க அதைப்போல!

மூச்சுத் திணறினால் சட்னு  இழுத்து  மாட்டிக்கலாம். எனக்கே அங்கே மூச்சுத் திணறுவதுபோலத்தான் இருந்துச்சு. எல்லாம் பயம்தான்.....  அதுக்குள்ளே மகள் வந்து வெளியில்  எமர்ஜென்ஸி வரவேற்பறையில் இருப்பதாக டெக்ஸ்ட் அனுப்பினாள்.நான் வெளியே போய் அவளைக் கூட்டிக்கிட்டு திரும்ப கோபாலின் அறைக்கு வந்தேன். மகளைப் பார்த்ததும்  கோபாலின் கண்ணில் கண்ணீர் வழிய ஆரம்பிச்சது.  'ஒன்னும் ஆகாது தைரியமா  இருங்க'ன்னு நானும் கண்ணில் நீர் வழியச் சொன்னேன்.  சட்டென்று டிஷ்யூக்களை உருவிக் கையில் திணிக்கிறாள் மகள். தாகமா இருக்குன்றார் கோபால்.   கால் கப் குடிதண்ணீர் கொண்டுவந்து கொடுத்தேன். கைக்கெட்டும் தூரத்தில் இருக்கே!

எக்ஸ்ரே பிரிவுக்குக் கொண்டு போனாங்களாம்.  டாக்டர்கள் ரெண்டு மூணு பேராக வருவதும்  தங்களுக்குள் மீட்டிங் போடுவதுமாக நேரம் போகுது. கொஞ்ச நேரத்தில் படுக்கையை உருட்டிக்கிட்டே  ஸ்கேன் செய்யும் பிரிவுக்குக்கொண்டு போயிட்டாங்க.  கூட வர்றதா இருந்தால் வாங்க. இல்லைன்னா இங்கியே வெயிட் செய்யுங்கன்னு சொன்னாங்க. இப்பத் திரும்பி வந்துருவோமென்றதால் நானும்  மகளுமாக  'அப்பாவின் அட்டகாசங்களைப் பற்றிப் பேசி'எங்கள் கவலையை மறக்கப் பார்த்தோம்.

'எப்படி அதுக்குள்ளே வந்தே? திரும்பி ஆஃபீஸ் போகலையா'ன்னு மகளிடம் கேட்டதுக்கு, இது ஃபேமிலி எமர்ஜென்ஸி இல்லையா....... அதான் திரும்ப வரவேண்டியதில்லைன்னு  ஹெச் ஓ டி சொல்லிட்டாங்கன்னாள். இவள் இப்போது போன மாசம் முதல் புது வேலையில் சேர்ந்திருக்காள்.  முதல் மூன்று மாசம் ப்ரோபேஷனரி பீரியட்.

ஒரு முக்கால்மணி நேரத்தில் எல்லோரும் திரும்பினாங்க. பித்தப்பையில் குழறுபடி!  இயல்புக்கு மாறா பெருசா வீங்கி இருக்கு.  பித்தப்பையில்  உருவாகும் கல் ஒன்னு பெருசா இருப்பதோடு பித்தப்பையின் வாசலுக்கு வந்து  அடைச்சு நின்னுருக்கு. உடனே  அறுவை சிகிச்சை செய்தே ஆகணும்னு சொன்னாங்க.

கோபாலைத் திருப்பிக் கொண்டுவந்தவுடன், தாகமா இருக்குன்னார். கால் கப் தண்ணீர் கொடுக்கும்போதே, இனி தண்ணீர்  குடிக்க வேண்டாமுன்னு சொல்லி  ட்ரிப் ஏத்திட்டு போனாங்க.  அதுலே இன்னொரு சின்ன பாக்கெட்டையும் இணைச்சு, அது  சொட்டி முடிஞ்சதும் கூப்பிடுங்கன்னு மகளிடம் ஒருபொறுப்பும் கொடுத்தாங்க. திரை அறைக்குள் நாங்க மூணு பேர். சுற்றிலும்  மானிட்டர்கள்   என்னென்னவோ காமிச்சுக்கிட்டு இருக்கு.

அறுவை  சிகிச்சை முறைகளை விளக்கி  எதாவது  Gகட்பட் (ஹிந்தி)  ஆச்சுன்னா நாங்க ஜவாப்தாரி இல்லைன்ற வழக்கமான படிவத்தில் கையெழுத்தெல்லாம் ஆச்சு. மகள் பார்க்கிங் மீட்டரில் காசு போடப் போனாள். எந்தொரு சல்யம்!  அதிகபட்சமா ரெண்டு மணி நேரம்தான் வண்டி நிறுத்தமுடியும் என்பது அபத்தமா இருந்துச்சு. இருக்கற கஷ்டத்துலே ஒவ்வொரு ரெண்டு மணியையும் ஞாபகம் வச்சுக்க முடியுமா?  அட்லீஸ்ட் லாங் டைம் பார்க்கிங்  மீட்டர் வைக்கப்டாதா? என்னவோ போங்க.

மகளை அனுப்பிட்டு இவர் பக்கம் திரும்பினால்  உதடுகள் துடிக்க நடுங்கிக்கிட்டு இருக்கார். ரொம்பக் குளிருதுன்னதும்,  நர்ஸப்பனிடம் இன்னொரு கம்பளி வாங்கி வரலாமுன்னு 'தீவு'க்குப் போனால்....   என்னன்னு கேட்டவரிடம், குளிரால்  உடம்பு  நடுங்குது. இன்னொரு ப்ளாங்கெட் என்று சொல்லி வாய் மூடுமுன் பாய்ஞ்சு வந்த நர்ஸப்பர்  ஏற்கெனவே போத்தி இருந்த போர்வையை சட்னு உருவி எடுத்துட்டார்.

ஜன்னி வந்தது போல் உடம்பு உதறுச்சுன்னு  கேள்விப்பட்டதை நேரில் பார்க்கிறேன். பயப்படாதீங்க. டெம்ப்ரேச்சர் இறங்கும் சமயம் இப்படித்தான் இருக்கும். கொஞ்ச நேரத்தில் சரியாகும் என்று சொல்றார். ஆஸ்பத்திரிக்காரர்களுக்கு தினம்  ஆயிரம் கேஸ். எல்லாம் பார்த்துப் பழக்கப்பட்டவங்க. நாம் அப்படியா?  கண்கொண்டு பார்க்க முடியலை. கோராமையா இருக்கு.  பாதங்களைப் பரபரன்னு தேய்ச்சு சூடு பண்ணிக்கிட்டு  இருக்கேன். பெருமாளே! ஏண்டா  இப்படிப் படுத்தறே.....   மனதுக்குள் ஓலம்:(

ஒன் பாத்ரூம் போகணுமுன்னு  'நோயாளி' சொன்னதும்  கூப்பிடு மணியை அழுத்த 'மேல் நர்ஸ்'வந்து  ஆவன செய்ய தயாரானார். ஆனால் நம்மாளு, நான் நடந்து பாத்ரூம்வரை போறேனேன்னதும் ஸலைன் பையை இடது கையில் தூக்கிப்பிடிச்சுக்கிட்டு  போகலாம் என்றார்.  ஸ்டேண்ட் இல்லையான்னு கேட்டேன். ஏகப்பட்ட ஆக்ஸிடெண்ட்  ஸ்டேண்டால் ஆகிப்போச்சுன்னு   அவைகளை அப்புறப்படுத்திட்டாங்களாம். திரும்ப அறைக்கு வந்தப்ப,  ஸலைன் பைக்குள் ரத்தம் கலந்துருந்துச்சு. எல்லாம் பேக் ஃப்ளோதான்:(

உறக்கமும் விழிப்புமா இருக்கார் கோபால். மற்ற பிரிவுகளைச் சேர்ந்த டாக்டர்கள்,  ஐ யூஸிப் பிரிவு, மயக்கமருந்து கொடுக்கும் மருத்துவர்,  அறுவை சிகிச்சை நிபுணர் என்று  சின்னச் சின்னக் குழுவா வாறதும் போறதுமா இருந்தாங்க
'எவ்ளோ நேரமாச்சு ஒன்னுமே குடிக்கலையே'ன்னு பரிவாப்பேசி காஃபி கொண்டு வந்து எங்களுக்குக் கொடுத்துட்டு போனாங்க ஒரு தன்னார்வலர்(ஸெயிண்ட் ஜான்ஸ்)

தூக்கிப்போட்டுக்கிட்டு இருந்த உடம்பு மெதுவா   சமநிலைக்கு வந்து கண்களை மூடி உறங்க(?) ஆரம்பிச்சார். நான்  அறையை விட்டு வெளியே   காரிடோருக்கு வந்து  தோழிக்கு  ஃபோன் செஞ்சேன். விவரம் சொன்னதும்  அங்கே  உனக்கு சாப்பாடு கொண்டு வர்றதுக்குத்தான் அவசரமா சமைச்சுக்கிட்டு இருக்கேன். பத்துப் பதினைஞ்சு நிமிசத்துலே வரேன்னாங்க.

அதேபோல் வந்தாங்க ரசம் சாதத்துடன்.சோறு இறங்கும் நிலையிலா நான் இருக்கேன்? மகளும் திரும்பி வந்துருந்தாள்.  இன்னொரு டாக்டர் குழு வந்தது.   கொஞ்சம்  ஆபத்தான நிலைதான்.  முதலில் கீ ஹோல் (Laparoscopy)  முறையில்  முயற்சி செய்வோம். பித்தப்பை  அழுத்தம் தாங்காது வெடிச்சுட்டால்   ரொம்பக் கஷ்டம்.  சரிவருமான்னு பார்த்துட்டு முடியலைன்னா அந்தப்பகுதியில்  அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டி இருக்கும் என்று விளக்கினாங்க.  தோழியைப் பரிச்சயமுள்ளவர்களா  இருந்தாங்க, இவுங்கெல்லாம். (தோழி மருத்துவர்)
இன்ஃபெக்‌ஷன் கூடுதலாகிப்போனதால்  சிறுநீரகம், நுரையீரல் எல்லாம் பழுதாகி இருக்காம்:(

ஏழே முக்கால் மணியாகி இருந்துச்சு. தியேட்டருக்குக் கொண்டு போக ஆள் வந்தாச்சு. 'கமான்.   கிவ் ஹிம் அ ஹக் அன்ட்  ஸே குட்பை' என்றார் நர்ஸப்பர்.  பழைய பஞ்சாங்கத்துக்கு  இதெல்லாம் டூ மச் இல்லையோ?   கையை ஆட்டி விடை கொடுத்தோம்.

பத்தரை மணிக்கு ஐ யூ ஸிக்கு கொண்டு வந்துருவோம். அங்கே வந்து பார்க்கலாமென்றார். அதுவரை  நோயாளியின் உறவினர்களுக்கான அறை  ஒன்று தியேட்டர் பக்கம் இருக்கு. அங்கே  காத்திருக்கும் நேரத்தில் பயன்படுத்திக்க, காஃபி டீ  தயாரிச்சுக்கும் வசதிகள்,  டிவி, பத்திரிகைகள்  நல்லவசதியான சோஃபாசெட் எல்லாமிருக்கு.

. இன்னொரு முறை காசு போடக் கிளம்புன மகளிடம்,  நீ வீட்டுக்குப்போய் ஜூபிட்டர் & ஸூஸ் Jupitor & Zeus  (பூனைகள்) க்கு சாப்பாடு போட்டுட்டு, அப்படியே 'அம்மா'வீட்டுக்குப் போய்  நீயும் சாப்பிட்டுவிட்டு  நம்ம ராஜலக்ஷ்மிக்கும்  சாப்பாடு கொடுத்துரு.  இங்கெ நிலமை என்னன்னு அப்பப்ப  டெக்ஸ்ட் அனுப்பறேன்னு சொல்லி அவளை அனுப்பி வச்சுட்டு  உள்ளே வந்தால்...........சும்மா எதுக்கு தேவுடு காக்கணும்? வீட்டுக்கே போயிட்டு வரலாமுன்னு தோழி சொன்னாங்க.  தயங்கினேன். பத்தரைக்கு நாமெல்லாருமே வரலாம். உன்னுடைய ஆரோக்கியமும் முக்கியம். சும்மா ஏன் இங்கே அடைஞ்சு கிடப்பானேன்? நியாயம்தான்.

கிளம்பி தோழி வீட்டுக்குப்போனோம். சாப்பிட  உட்கார்ந்த போதுதான்  சோறு ஆக்கலைன்னு  தெரியுது. பதற்றத்தில்  ரைஸ் குக்கரில் அர்சி வைக்க மறந்து போயிருக்காங்க.   அரைமணியில் சோறு ரெடியானதும்  சாப்பிட்டோம்.
மகளிடமிருந்து  'எங்கே இருக்கே?'ன்னு டெக்ஸ்ட். பத்தரைக்கு  ஆஸ்பத்திரிக்கு வந்துருவேன். நீயும் கிளம்பி வான்னேன். தோழியும் அவர் கணவரும் நானுமாக் கிளம்பி நம்ம வீட்டுக்கு வந்து  ராஜலக்ஷ்மி என்ற ரஜ்ஜுவுக்கு  சாப்பாடு கொடுத்துட்டு மருத்துவமனைக்குப்போய்ச் சேர்ந்தோம்.

இரவு ஒன்பது மணிக்கு விஸிட்டிங் டைம் முடிஞ்சுரும். குழந்தைகள் வார்டுக்கும், ஐஸியூ வுக்கும்  குடும்ப நபர்களுக்கு  24 மணி நேரமும் அனுமதி உண்டு.  வழக்கமான கலகலப்பெல்லாம் ஓய்ஞ்சு, வரவேற்பு ஜிலோன்னு இருக்கு. செக்யூரிட்டி  ஆட்கள் மட்டும் இருக்காங்க.  நாம் போய் விவரம் சொன்னதும்   வார்டு நர்ஸிடம் விசாரிச்சு,  விஸிட்டர் என்ற  பேட்ஜ் நம்ம சட்டையில் ஒட்டிட்டு உள்ளே போக விடறாங்க.
அப்பதான் ஐஸியூவுக்குக்கொண்டு வந்துருக்காங்க.  வழியெங்கும் நிறைச்சு வச்சுருக்கும்  ஸ்டெரிஜெல்லைக் கையில்  பூசிக்கிட்டு உள்ளே  போகணும்.  ஏகப்பட்ட மெஷீன்களுக்கிடையில் மயக்கத்தில் இருக்கார்.  மூச்சு விட ஆக்ஸிஜன் மாஸ்க் போட்டுருக்காங்க.  இங்கே பனிரெண்டு  படுக்கைகள்தான்.  ஆனால்  ஒவ்வொரு நோயாளிக்கும்  ஒவ்வொரு நர்ஸ் என்ற வகையில் ஒன் டு ஒன். நோயாளியின் கால் பக்கம் மேஜை நாற்காலி போட்டு உக்கார்ந்துருக்காங்க.

நல்ல வேளையாக, நம்ம தோழிக்குப் பரிச்சயமான நர்ஸ்.  ப்ரைவஸி ஆக்ட் நியூஸியில் தீவிரம் என்றபடியால்  குடும்பம் இல்லாத மற்றவர்களுக்கு  நோயாளியின் நிலை, விவரம் கொடுக்க மாட்டாங்க.  ஆனால் நான் விவரம் கேட்கும்போது பக்கத்தில்  நிக்கறவங்க காதில் விழுமா இல்லையா:-)

நல்லவேளையா  கீ ஹோல் சர்ஜரிதானாம்.   பயப்படவேணாமுன்னு சொன்னாங்க. அதுக்குள்ளே மகளும் வந்து சேர்ந்தாள். அப்பாவின்  கிடப்பைப் பார்த்ததும்  முகத்திலொரு நெகிழ்ச்சி !

காலை எட்டு மணிக்கு  டாக்டர் வரும் நேரம். அவரிடம் பேசணும்  என்றதால்  மகள் காலையில் என்னை இங்கே கொண்டு வந்து விடுவதாகச் சொன்னாள்.
ஆபத்தான கட்டம்  தாண்டியாச்சு.  ஆல் ஈஸ் வெல்!

தொடரும்............






ஊருக்கெல்லாம் ஒன்னே ஒன்னு!

$
0
0
நம்ம நம்பள்கியின் பின்னூட்டம் பார்த்ததும்  நம்மூர் ஆஸ்பத்திரியைப் பற்றி(யும்) கொஞ்சம் விஸ்தரிக்கலாமேன்னுதான் தோணுது. 1850 வருசம். இங்கிலாந்தில் இருந்து நாலு கப்பல்களில் மக்கள்ஸ் புது நாட்டுக்குப் புலம்பெயர்ந்து வர்றாங்க. நாலு கப்பலுக்கும் சேர்த்து மொத்த பயணிகள் எண்ணிக்கை 753.

இங்கே லேண்ட் ஆஃபீஸில் பதிவு செஞ்சுக்கறாங்க. வரப்போகும் நகரத்தில் கால் ஏக்கரும், நகருக்கு வெளியில் விவசாயம்/பண்ணைகளுக்கு 20 ஏக்கர் நிலமும் ஒவ்வொருத்தருக்கும் அலாட் ஆகுது. நகர வடிவமைப்பு உருவாக்கி   நட்டநடுவில் ஒரு தேவாலயமும் அதைச் சுற்றி  நாலு பக்கமும் அவ்வஞ்சு தெருக்களும் இதையெல்லாம் சுத்தி நாலு பக்கமும் பார்டர் போட்டது போல் மரங்கள் வரிசையாக நட்ட அவென்யூகளுமா இருக்கணுமுன்னு முடிவாச்சு.   அவென்யூக்களுக்கு உள்புறம்தான் நகரம். இதுக்கு ஒரு ஆயிரம் ஏக்கர் ஒதுக்கினாங்க.   ஆளில்லாத காலியிடத்துலே   எல்லாமே  நம்ம இடம்தான்.  ஆத்துலே போறதை அள்ளிக் குடிக்கிற மாதிரி.........   யாரைக் கேக்கணும்?  நகருக்குள் நாலு சதுக்கங்கள் வேற அங்கொன்னு இங்கொன்னுன்னு. இதுலே தேவாலயத்துக்கு  மேற்கே  அஞ்சு தெருதாண்டி வரும் அவென்யூவுக்கு  வெளியிலே ஒரு பெரிய தோட்டம் திட்டத்தில் இருக்கு. அதுக்கு ஒரு எழுபத்தினாலு ஏக்கர்!

தென்கோடிக்குப்போக சாலை போட்டப்ப இந்த  தோட்டத்தின் குறுக்காலே  அதைப் போடும்படி ஆச்சு.இல்லைன்னா மேற்குப் பகுதி கடக்க சுத்த வேண்டியதாப் போயிரும் பாருங்க.  நார்த் ஹேக்ளி பார்க், சௌத்  ஹேக்ளி பார்க்ன்னு  ரெண்டாப் பிரிஞ்சதுஅப்போதான்.


மக்கள்ஸ் வீடுகட்டி, பண்ணைகள் வச்சு நிம்மதியான வாழ்க்கையை ஆரம்பிச்சதும் நோய்நொடிகள் வர ஆரம்பிச்சது. அதுவும் குளிர்காலங்களில் அதிகம். ஊருக்கு ஒரு மருத்துவ மனை வேணும் என்ற நினைப்பில்  1861 வது ஆண்டு திட்டம்போட்டு, 1862இல் புதுசா மருத்துவமனைக்  கட்டிடங்கள் ரெண்டு  பெரிய Barn மாதிரி  ரெண்டடுக்கு வந்துச்சு. செலவு  £1,500. புது சாலை போட்டாங்க பாருங்க  அந்தஓரத்தில்.  அவ்ளோதான், 'அது என்னமா தோட்டத்தில் கட்டிடம் கட்டப்போச்சு'ன்னு மக்கள்ஸ் கொஞ்சம்பேர்  "Hands off Hagley"குமுறிட்டாங்க.  Provincial  Government  ஆட்சி செய்யும் காலக்கட்டம்.

அப்ப மிஞ்சிப்போனா நகரின் மக்கள்தொகை ஒரு பதினைஞ்சாயிரம் இருக்கலாம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு  கொஞ்சநாளில்  இதை எடுத்துருவோமுன்னு  சொல்லி  இந்தா அந்தான்னு 1917 இல் தான்  அதை  இடிச்சாங்க. அதுக்குள்ளே  கொழும்புத் தெருவில்  பெண்களுக்கான பேறுகால மருத்துவமனை  ஒன்னு தனியாக் கட்டினாங்க.  ஹேக்ளியை ஒட்டுன மாதிரி  புது மருத்துவமனை ஒன்னும்  உருவாச்சு.


அப்போ நர்ஸ்களின் சீருடைகள், ஆஸ்பத்திரி அறைகள்  , மருத்துவப் பயன்பாட்டுக் கருவிகள் எல்லாம் எப்படி இருந்துச்சுன்னு தெரிஞ்சுக்கும் விதமா  இப்போதைய ஃபோயரில்  ஒரு பொம்மைக்கொலு இருக்கு.

ஆஸ்பத்திரிக்கு முன்னால் ஒரு அரைக் கிலோமீட்டரில்  அதே ஹேக்ளி பார்க்கிலொரு ஹெலிபேட் அமைப்பு இருக்கு.  மலை ஏற்றம், காடுகளுக்குள்ளே போய்  சுத்தி வர்றது போன்ற செயல்களால்  ஆபத்தில் மாட்டிக்கிட்டவங்களை  மருத்துவமனைக்குச் சீக்கிரமாக் கொண்டுவர  ஹெலிக்காப்டர் தேவையாத்தானே இருக்கு.

இப்போது இருக்கும் 550 படுக்கை வசதி போதலையேன்னு  நானூறு மில்லியன் செலவில்  புதுக் கட்டிடம் 450 படுக்கை வசதிகளோடு கட்டஒரு திட்டம் இருக்கு. மொட்டை மாடியில் ஹெலிபேட் வசதிகளோடு  வருதாம்.  2009 வது ஆண்டு ஆரம்பிச்சு  அடுத்த வருசம் முடியவேண்டியது. நிலநடுக்கம் காரணம் வேலையில் கொஞ்சம் தொய்வு. நகரை மீண்டும் நிர்மாணிக்கும் வேலையும் சேர்ந்துருச்சு பாருங்க.

இங்கே  தனியார் மருத்துவமனைகள் கிடையாது.  இப்போ ஒரு இருபது வருசமாகத்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ்  கம்பெனி ஒரு  ஹாஸ்பிட்டல் கட்டி இருக்கு. இங்கே  ஏற்கெனவே முடிவு செய்த அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடக்கும். இந்தக் கம்பெனியில்  அங்கத்தினராக உள்ளவர்களுக்கு மட்டும்  இந்த ஆர்கனைஸ்ட் ஸர்ஜரி. பொது மருத்துவமனை டாக்டர்கள் தான்  இங்கேயும்  வந்து அறுவை சிகிச்சை செய்வார்கள்.

மத்தபடி கேண்டர்பரி ஹெல்த் போர்டு நடத்தும் மருத்துவமனைகள் தான் ஊருக்கே!. இதுலே அஞ்சு மருத்துவமனைகள் அடங்கும். இப்போ  நாம்  பார்க்கும் பொது மருத்துவமனை,  ரெண்டாவதாக முதியோர்களுக்கான  சிறப்பு மருத்துவமனை,  மூணாவதாக, ஸர்ஜரி நடந்தவுடன்  ஆஃப்டர் கேர் என்ற வகையிலும்,  உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு, கஷ்டமில்லாமல்  தங்கள் அன்றாட வேலைகளைச் செய்து கொள்ள ஆக்குபேஷனல் தெரபி  கொடுப்பது, இடுப்பு, முழங்கால்  ரீப்ளேஸ்மெண்ட் செஞ்சுக்கிட்டவங்களுக்கு  அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப பயிற்சின்னு சேவைகள். ஒவ்வொரு ஆஸ்பத்திரியா மாறி,இப்போ இங்கே தான் நம்ம தோழி வேலை செய்யறாங்க. இந்தக் கட்டிடமும் நிலநடுக்கத்தில் ஆப்டுக்கிட்டது.  பாதிக்கப்பட்ட பகுதிகளை இடிச்சுட்டு  நானூறு படுக்கை வசதிகளுடன் தனித்தனி  அறைகளும், அட்டாச்ட் பாத்ரூமோடும் கட்டஆரம்பிச்சு இருக்காங்க.

நாலாவது  மருத்துவமனை  மனநலம் குறைந்தவர்களுக்கு.  பயங்கர செக்யூரிட்டி உள்ள இடம்.  இந்த ரெண்டாவது, மூன்றாவது நாலாவது  மருத்துமனைகள் நகரின் வெவ்வேறு பகுதிகளில் அமைச்சுருக்காங்க.

அஞ்சாவது  மட்டும் பொது மருத்துவமனையின் பக்கத்துலேயே புதுக் கட்டிடம் கட்டிக்கிட்டு வந்துருக்கு பெண்களுக்கானது. நம்ம பொது மருத்துமனை அஞ்சு நட்சத்திர ஹொட்டேல் போல என்றால் இந்த  பெண்கள் பேறுகால மருத்துவமனை ஸெவன் ஸ்டார் ஸ்பெஷல்!  பளபளன்னு  ஜொலிக்குது. இங்கே பேறுகாலத்துக்கு  முற்றிலும்  இலவசம்தான்.  தனித்தனி அறைகளும் அட்டாச்ட் பாத்ரூமுமாய்  சூப்பர் போங்க.

எங்க ஜில்லா முழுசுக்குமான  சுத்துவர பதினெட்டு பட்டிக்குமான  மருத்துவ வசதிகள் இந்த ஹெல்த் போர்டால் கொடுக்கப்படுது. அஞ்சரை லட்சம் மக்கள் பயனடைவர்.  இதுலே எங்க நகர மக்கள் தொகை மூணரை லட்சம் முழுசுக்கும்  பொதுமருத்துவமனையே கதி. ஆனா.... சும்மா சொல்லக்கூடாது......   அருமையான கேஃபே, புக்‌ஷாப், ஸலூன், போஸ்ட் ஆஃபீஸ், பேங்க், கிஃப்ட் ஷாப், ஃபார்மஸின்னு தரைத்தளத்தில் வச்சுருக்காங்க. ப்ளவர் பொக்கே கடையும் உண்டு. வார்டுகளில் ஒரு அறையில் இருக்கும் ஃப்ளவர் வாஸை நாம் பயன்படுத்திக்கலாம். ஒரு சில வார்டுகளில்  மட்டும் பூக்களுக்கு அனுமதி இல்லை.

ஒரு Chapel  தரைதளத்தில் உண்டு. நல்ல இருக்கைகள்போட்டு வச்சுருக்காங்க. ஆல்டர்  மாதிரி ஒரு மேஜை. அதில் பூக்கள் மட்டும். யார் யாருக்கு என்ன சாமியோ அதை மனதில் நினைச்சு சாமி கும்பிட்டுக்கலாம்.

ஒரு நோயாளி மருத்துவமனையில் தங்கும்போது அவருக்கான ஒரு நாள் செலவு 700 டாலர்கள். மக்களின் நலத்துக்கு அரசே பொறுப்பு என்பதால் நாம் பணம் ஒன்னும் கட்டவேண்டியதில்லை. மிகப்பெரிய செல்வந்தரோ, இல்லை ஒன்றுமில்லாத (??!!) ஏழையோ என்ற வித்தியாசம் பார்ப்பதில்லை.  அனைவருக்கும் ஒரேமாதிரி மருத்துவ சேவை. சமத்துவம்!

சகல சிகிச்சைகளும் அறுவை, எம் ஆர் ஐ உட்பட அனைத்தும் இலவசமே. ஆனால் இந்த  வசதிகள் எல்லாம் சும்மா வரலை. மக்கள் வரிப்பணம் சரியான முறையில் செலவழிக்கப்படுது என்பதே உண்மை. இங்கே வரிகள் அதிகம்தான்.  பெரிய உத்தியோகம் என்றால் சம்பளத்தில் பாதி வரிகள். 35 % வருமானவரி, அப்புறம் நாம் வாங்கும்சாமான்களுக்கு 15% சேவை வரி. பத்து  பைசா முட்டாயாக இருந்தாலும் அதுலே வரி இன்க்ளூடட்:(

என்னதான் குறைஞ்ச சம்பளமென்றாலுமே  அதற்கேற்ற வரிகள்  கட்ட வேணும்.  யாரும் வரி கொடுக்காமல்  ஏமாற்ற முடியாது.  வரிகள் பிடித்தம் போகத்தான் சம்பளமே கைக்கு வரும்.  நாம் தப்பித்தவறி கொஞ்சம் காசு சேர்த்து பேங்கில் போட்டாலும் அதில் வரும் வட்டிப்பணத்தில் 20% வரியா எடுத்துருவாங்க. இவ்ளோ ஏன்.... அரசு  கொடுக்கும் வெல்ஃபேர்  பெனிஃபெட்டில் கூட வரியைப் பிடிச்சுக்குவாங்க. அவன் (அரசு)கொடுக்கும் காசுக்கு வரிபோட்டுஅதையும் அவனே கட்டிருவான்:-)))))

நம்மூர்  ஆஸ்பத்திரி எமெர்ஜன்ஸி  பகுதி, அஸ்ட்ராலாசியாவிலேயே மிகப் பெரியது. இங்கேயே 55 படுக்கை வசதிகள் உண்டு. பெரும்பாலும் நோயாளிகளை எட்டுமணி நேரத்தில் இங்கிருந்து அனுப்பிருவாங்க. ஆபத்தில் இல்லாதவர்களை வீட்டுக்கும் மற்றவர்களை  வேறு வார்டுகளுக்கும் அனுப்புவதுதான்.  24 மணி நேரமும் பயங்கரபிஸியான இடம் இது. வீக் எண்டுகள் என்றால் சொல்லவே வேணாம்......  ரக்பி விளையாடி முகத்தை ஒடைச்சுக்கிட்டு வர்றவங்கதான் அதிகம். நாட்டின் மதம் ஸ்போர்ட்ஸ் என்றால் அதுக்கேத்த  மதக்கலவரம், கேஷுவல்டி  இருக்காதா?





ச்சே..... இது ராசி இல்லாத புடவை..........

$
0
0
எப்படாப் பொழுது விடியுமுன்னு காத்திருந்து  ப்ரம்ம முஹூர்த்தத்தில் எழுந்து  ரஜ்ஜுவுக்கு 'ஹேப்பி தீபாவளி'சொல்லிட்டு அதுக்கான சாப்பாட்டைக் கொடுத்தேன். காலையில் கண்ணைத் திறக்கும்போதே 'திங்கத்தா திங்கத்தா'உயிரை எடுத்துருவான்.  நாம் எழுந்திருக்கும் அடையாளம் இல்லைன்னா, கட்டிலைச் சுற்றிச் சுற்றிவந்து  பரபரன்னு ச்த்தம் வர்றமாதிரி கார்பெட்டை  நகங்களால் பிச்சு எடுப்பான். அதென்னவோ இப்படிஒரு சுபாவம்.

குளிச்சு முடிச்சு சாமி விளக்கேத்தி எம்பெருமாளுக்கும் தாயாருக்கும், இன்னபிற பரிவாரங்களுக்கும் 'ஹேப்பி தீபாவளி' சொல்லிட்டு காஃபி நைவேத்யம் செஞ்சேன்.  காலை ப்ரேக்ஃபாஸ்ட்  முடிச்சு ரெடியானபோது மகள்  வந்துட்டாள்.  அவளுக்கும்  தீபாவளி வாழ்த்து சொன்னேன். அப்பா உடம்பு சுகமாகி வீட்டுக்கு வந்ததும் ஒரு நாள் தீபாவளி  கொண்டாடணும்.

மருத்துவமனை வாசலில் இறக்கிவிட்டுட்டு  மகள் போய்விட்டாள்.  உள்ளே இருக்கும் சாப்பலில்  ஒரு நிமிசம் போய் உக்கார்ந்து , 'என்னடா பெருமாளே  இப்படி பண்டிகை கொண்டாட விடமாட்டேங்குறயே........  அதுவரை  ஆபத்துலே இருந்து காப்பாத்துனதுக்கு முதல்நன்றி சொல்லணும். சொல்லிக்கறேன்.  ஆனாலும் இன்னும் கொஞ்சம்  கருணை காட்டு'ன்னு  விண்ணப்பம் போட்டுட்டு,  மாடியில் இருக்கும் ஐஸியூவுக்குப் போனேன்.

கதவுக்கு வெளியே இருக்கும் தொலைபேசியை எடுத்தால் உள்ளே இருந்து 'எஸ்'குரல் கேட்கும். நோயாளியின் பெயரைச் சொன்னதும் நோயாளியைக் கவனிக்கும் நர்ஸ் வந்து நம்மை உள்ளே கூட்டிப் போவாங்க.  கதவைத் திறந்த நர்ஸம்மா,  கோபால் கண்ணைத் திறந்துட்டார்.  மயக்கம் எல்லாம் போச்சு. டாக்டர்ஸ் பார்த்துக்கிட்டு இருக்காங்க என்றார்.  ஐஸியூ முழுக்க முழுக்க பெண் நர்ஸ்கள்தான்.  அதிலும் எல்லோரும் நல்ல ஸ்மார்ட்.  கவனம் சிதறாமல் கொடுத்த பொறுப்பை சமாளிக்கும் குணம் பெண்களுக்கு இயல்பா இருக்குதானே!


நேற்று இரவு  அறுவை சிகிச்சை நடத்திய ஸர்ஜன், நோயாளியின் நிலை எபடி இருக்குன்னு பரிசோதிச்சுட்டு  மேற்கொண்டு என்ன செய்யணுமுன்னு  சொல்லிக்கிட்டு இருந்தார். நான் போனதும்  யார் என்ற அறிமுகம் செய்து கை குலுக்கியவர்,  சரியான நேரத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தீங்க. இன்னும் அரைமணி தாமதாப் போயிருந்தா  burst டாகி இருக்கும் . அப்படி ஆயிருந்தால்  அது மேஜர் ஜாப். குடலையெல்லாம் வெளியே எடுத்துக் கழுவி அடுக்க வேண்டி இருக்கும்.  ஜஸ்ட் ஆன் டைம் என்றார்.  இவர் எப்படி தமிழ் சினிமா பார்த்துருப்பார்? டயலாக் சரியாச் சொல்றாரே:-))))))))))

கல் ரொம்பப் பெருசு தானாம். லேபுக்கு அனுப்பி இருக்குன்னார். (பெரிய கல்லுன்னா பெண்டண்ட் செஞ்சுக்க சரியா இருக்கும்,இல்லே!)  ஊஹூம்....ச்சுப்.

எப்ப சரியாவேன்னு  கோபால் கேக்க, ஆல்ரெடி சரியாயாச்சு.  நீங்க எது வேணுமுன்னாலும் செய்யலாம் என்றார்.  வேறு வார்டுக்கு மாத்தப்போறேன்.  இன்னும் கொஞ்ச நேரத்துலே அங்கே போய் ஓய்வெடுங்கன்னார்.  காலையிலேயே வாயில் இருந்த ட்யூபை  அகற்றி இருந்தாங்க.  ப்ரேக்ஃபாஸ்டும் கொடுத்தாங்களாம்.   தயிரும், வாழைப்பழமும்.

டாக்டரின் உத்தரவை  'ஸாரா 'வார்டுக்குச் சொல்லி அங்கே படுக்கையைத் தயார் செய்யச் சொன்னாங்க நர்ஸ். அதுக்குள்ளே  ஆர்டர்லி  இன்னொரு கட்டிலை உருட்டிக்கொண்டு வந்து நம்ம அறையில்  வச்சார்.  சுவரிலிருந்த கருவிகளில்  கொடுத்திருந்த இணைப்புகளையெல்லாம்  இந்தக் கட்டில் இருந்த மெஷீனில் இணைச்சு, கோபாலையும் இந்தக் கட்டிலுக்கு மாத்தினாங்க.

எங்களுக்கு இப்பதான் ஒரு வார்த்தை பேசக்கிடைச்சது. 'ஹேப்பி தீபாவளி'ன்னு வாழ்த்தியவுடன், முகத்தில் ஒரு திகைப்பு.  போன தீபாவளிக்கு இதே ஐஸியூவில் தவம் கிடந்தோம். அப்போ மகளுக்கு  ரொம்பவே உடல்நலமில்லை.  உயிர் பிழைப்பது உத்திரவாதமில்லைன்னு சொல்லிட்டாங்க. நாலுநாள் அல்லும்பகலும்  ஐஸியூ. அந்த நாலு நாளும் நரகவேதனைதான். ;ஷீ இஸ் இன் குட் ஹேண்ட்ஸ்.  முதல்தரமான கவனிப்பு' .பயப்படாதேன்னு மருத்துவர் தோழிதான் அப்ப(வும்)சொன்னாங்க.

கோபாலின்  அறுபதுக்கு  சென்னை போனபோது  முகூர்த்தத்துக்கு  ஒன்னும் மாலை வரவேற்பு ஒன்னுமா ரெண்டு புடவை வாங்கினோம். வரவேற்புக்கு வாங்குனதை என்னமோ அன்னிக்குக் கட்ட  மனம் இல்லைன்னு  பழைய புடவை ஒன்னையே கட்டிக்கிட்டேன்.  இந்தப் புதுப்புடவை அதோட நாளுக்காகக் காத்திருந்தது.  போன தீபாவளிக்குக் கட்டிக்கலாமுன்னு நினைச்சேன். தீபாவளியன்னிக்கு  மருத்துவமனை வாசமாப் போனதால்....  இந்த வருசம் கட்டிக்கலாமுன்னு நினைச்சேன்.  ஆனால் இந்த வருசமும்  அதே மருத்துவமனை, அதே ஐஸியூ.  போதுண்டா  சாமி.

நாங்க பேசிக்கிட்டு இருந்த சமயம், இவர் படுத்திருந்த ஐஸியூ படுக்கை அடுத்த நோயாளிக்குத் தயாராகுது.  க்ருமி நாசினி போட்டு கட்டில் கால், சக்கரம் உட்பட தேயோதேயுன்னு தேய்ச்சாங்க. படுக்கை விரிப்புகளை மாத்தினபோதுதான் தெரியுது  அஞ்சு விரிப்புகள் ஒன்னுமேலே ஒன்னாக!  எல்லாத்தையும் எடுத்துட்டு புது செட் இன்னும் அஞ்சு  விரிச்சாங்க. தலையணை உறைகளும் டபுள் டபுளா இருக்கு. மாத்து அதையும்!  சுவரில் இருக்கும் கருவிகளின் ட்யூப்கள், ஒயர்கள் இப்படி ஒன்னு விடாம கிருமிநாசினி தொட்டு பயாங்கரமா துடைச்சாங்க. இவ்ளோவேலை இந்தப் படுக்கைக்கு இருக்குன்னு நமக்கே அப்போதான் தெரியுது!

சுமார் ஒருமணி நேரமாச்சு. அதுக்குள்ளே தரை சுத்தம்செய்யும் பணியாளர் வந்தாங்க. இந்திய முகம் இருக்கேன்னு விசாரிச்சேன். நேபாளியாம்.  நேபாளிகளை பார்த்துருக்கீங்களான்னு (அபத்தமா) ஒரு கேள்வி.  ஏன்? நிறையமுறை மணிஷா கொய்ராலாவைப்  பார்த்திருக்கேன்  என்றதும் ஒரே சிரிப்பு.  வந்து மூணு வருசமாகுதாம்.  இங்க  எந்த வேலையும் கீழ்த்தரமானதில்லை. சம்பளமும் குறைஞ்சபட்சம் மணிக்கு  16  டாலர் கிடைச்சுரும். சமோவன்களும், ஃபிஜியர்களும் ஃபிஜி இந்தியர்கள் உட்பட க்ளீனிங் வேலையில்  ஏராளமானவர்கள் இருக்காங்க. எட்டுமணி நேர வேலை.  சீருடை எல்லாம்போட்டுக்கிட்டு பளிச்ன்னு இருக்காங்க.

ஸாராவில்  இடம் ரெடின்னு ஆர்டர்லி வந்து படுக்கையைத் தள்ளிக்கிட்டுப் போனார்.  நோயாளியின் ஃபைல் கூடவே வருது. நர்ஸம்மா கூட்டிப்போய் அந்த வார்டு  நார்ஸம்மாவிடம் இவரை  ஒப்படைச்சாங்க.

இது Surgical Assessment & Review Area வார்டு. இங்கே ஒரு இருவது நோயாளிகளுக்கு  இடம் உண்டு. ஒரு பெரிய அறையில்  திரைச்சீலைகளால்  சுவர் வச்சுப் பிரிச்சிருக்காங்க. நடுவில் நடைபாதை விட்டு வலமும் இடமும் மும்மூணு படுக்கைகள். கோபாலுக்கு  ஜன்னலோரமா இடம்!  ஆஹா....வ்யூன்னு எட்டிப்பார்த்தால்  இன்னொரு கட்டிடம்  மலைபோல் நிக்குது:(  இந்த வார்டில் பூக்களுக்கு  அனுமதி இல்லை.   மேலும் இங்கே   ஆண் பெண்களுக்கான தனித்தனி வார்டு ஏற்பாடுகள் கிடையாது.  குழந்தைகளுக்கு மட்டுமே தனி வார்டு. மற்றவைகள் எல்லோருக்கும் பொதுவே!

SARA  நர்ஸ் வந்து அறிமுகம் செஞ்சுக்கிட்டு  பல்ஸ், பிபி, டெம்பரேச்சர்ன்னு  பலதையும்  செக் செஞ்சாங்க. பகல் ஒருமணி ஆகி இருந்துச்சு. இன்னிக்கு இங்கே சாப்பாடு  கொஞ்சம் லேட்டாம். மகளும் வந்துட்டாள்.  பகல் சாப்பாடும் வந்துச்சு. யுவர் வெஜிடேரியன் மீல். எஞ்சாய்!  மேஷ் பொட்டேட்டோ, பாயில்ட் வெஜ்ஜீஸ்,  பேக்டு பம்ப்க்கின்,  மஷ்ரூம் ஸூப்,  கஸ்டர்ட் ஸ்கொயர், பனானா!

இங்கே ஆஸ்பத்திரிகளில்  சாப்பாட்டு மெனு நாமே தெரிஞ்செடுக்கலாம். ஒவ்வொருத்தருக்கும் தனியா மூணு கோர்ஸ் உணவு.  ஸூப், மெயின்ஸ், டிஸ்ஸர்ட்,  கூடவே எக்ஸ்ட்ரா  ஃப்ரூட்  இப்படி மெனு கார்டை நம்மிடம் கொடுக்கும்போது நாமே அதில் செலக்ட் செஞ்சு டிக் செய்யலாம். உணவின் அளவு கூட நாம் சொல்லலாம். ஸ்மால்.மீடியம், லார்ஜ். இதனால் சாப்பாடு வீணாவதைத் தடுக்கலாம்.

ஒருவேளை உணவு  கொண்டு வரும்போதே அடுத்த வேளைக்கான மெனு கொடுத்துருவாங்க. இதில்லாம  நாலு வேளை  காஃபி, டீ, மைலோ இப்படி. இடைப்பட்ட நேரத்தில் கூடுதல் காஃபி டீ வேணுமுன்னா  ஒவ்வொரு  வார்டுக்கும்  நாமே இவைகளைத் தயாரிச்சுக்கும் வசதிகள் உண்டு.  ரெண்டு மூணு வகையான பால் சின்ன ஃப்ரிட்ஜில் இருக்கும்.  ZIP Water heaters  கொதிக்கும் வெந்நீரோடு  24 மணி நேரமும் தயார் நிலையில்  ஒரு கப்போர்டில் காபித்தூள், டீ பேக்ஸ்,சக்கரை எல்லாம் இருக்கும். தெர்மாக்கோல் டம்ப்ளர்களும் அடுக்கி வச்ச்சுருக்கும்.  இது போதாதா?யதேஷ்டம்!

பகல் ஒன்னுமுதல்மூணு மணி வரை ரெஸ்ட்டிங் டைம்  என்பதால் விளக்குகளையெல்லாம் அணைச்சு செயற்கை இருள்  ஏற்படுத்தினாங்க. நாங்களும் கோபால் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கட்டுமுன்னு   கிளம்பி  வீட்டுக்கு வந்தோம்.

தீபாவளி விருந்து  தாய்க்கும் மகளுக்கும். நேத்து செஞ்ச சமையல் அப்படியே இருந்ததை  ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து சுடவச்சுச்  சாப்பிட்டோம்.






இனி எல்லாம் நலமே!

$
0
0
முகம் பளிச்ன்னு  இருக்கு.  என் கண்கள் விரிவதைப் பார்த்ததும் ஷேவ்  பண்ணிக்கிட்டேன்.  'டூத் ப்ரஷ், அண்ட் பேஸ்ட், ஷேவிங் கிட்  கொடுத்தாங்க'ன்னார். பல் சமாச்சாரம் மட்டும் தெரியும். ஆனா ஷேவிங் கிட் கொடுப்பாங்கன்னு  இப்பதான் தெரியும்.

கண்ணாடி இல்லைன்னு   கொஞ்சம் மனவருத்தம்.  சீப்பு வேற இல்லையாம்:(  ஆஹா ஆஹா....  குணமாகிக்கிட்டு வர்றார்.  உடல் சரியில்லைன்னா  அழகு ரெண்டாம் பட்சம் இல்லையோ? தலைவாரிவிட்டதும் இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட் லுக் வந்துருச்சு:-)  நாங்க அஞ்சே முக்காலுக்கு  வந்துருக்கோம்.அதுக்குள்ளே டின்னர் முடிஞ்சுருக்கு! (இங்கே நியூஸியில் இதுக்குப்பெயர் டீ. ! கிவி வழக்கம்)

இது தெரியாமல்  இங்கே வந்த புதிதில், தோழி ஒருவர் சில நண்பர்களை 'டீ'க்கு வாங்கன்னு சொல்லி இருக்கார். நம்மூர் தேநீர் விருந்து என்ற அனுமானம்.  சில நொறுக்ஸ் வகைகளும்  கெட்டில் நிறைய தேநீரும் போட்டு வச்சாச்சு.  வந்தவங்க எல்லோரும்  இண்டியன் ஸ்நாக்ஸ் தின்னு டீ குடிச்சுட்டு உக்கார்ந்து பேசிக்கிட்டே இருக்காங்க.

என்னடா இது. இன்னும் உக்கார்ந்திருக்காங்க? அவுங்க எப்பப்போறது,நாம் டின்னர்  எப்போ சமைக்கறதுன்ன்னு யோசனை.   பொறுத்துப்பொறுத்து பார்த்த  விருந்தினர் ஒருத்தர் சமையல் ஆகிருச்சான்னு    கேட்டுட்டாங்க. இவுங்க  தயங்கித் தயங்கி இல்லே இனிமேல்தான்ன்னு இழுத்தவுடன்  எல்லோருக்கும் அதிர்ச்சி:-)

அப்பதான்  தோழிக்கு  விவரம் கிடைக்குது. அவுங்க  கிவி டீ க்கு வந்திருக்காங்க.தோழி இண்டியன் டீ கொடுத்துருக்காங்கன்னு:-)))))  அப்புறம் போய் கொஞ்சம் டேக் அவே  வாங்கிவந்து சமாளிச்சாங்களாம். வெறும் டீ குடிக்கக் கூப்பிடணுமுன்னா,  'ஜஸ்ட் கம் ஃபார் அ கப்பா' னு சொல்லணும்.




கைப்பையில் இருந்து சீப்பை எடுத்துக் கொடுத்தால் கையைத்  தூக்கி தலை வார முடியலை பாவம்:(  வேனிட்டி அறை  ரெண்டு இருக்கு. எழுந்து அதுக்குப்போக முடியலை. Catheter  போட்டுருக்கே.  ஸலைன் ட்ரிப் வேற போய்க்கிட்டு இருக்கு.  கொஞ்சம் நடக்கலாமான்னு நர்ஸம்மாவிடம் கேட்டதுக்கு   அவுங்கஒரு ஸ்டேண்ட் கொண்டுவந்து  சகல இணைப்பையும்  ஸ்டேண்டிலுள்ள மெஷீனுக்கு மாத்தி விட்டாங்க.  திரும்பி வந்ததும் சுவற்றில் ப்ளக் பண்ணிக்கலாமுன்னும் சொன்னாங்க. டிவிடி பிரச்சனை வந்துருமேன்னு  அதுக்கான தனி ஸ்டாக்கிங்ஸ் போட்டுவிட்டுருக்காங்க நேத்து சர்ஜரியின் போது.  இப்போ நடக்கணுமென்றதும்  வழுவழு என்றுள்ள தரையில் வழுக்கிட்டால் என்னசெய்வதுன்னு  AntiSilp socks கொண்டுவந்து காலில் மாட்டிவிட்டாங்க நர்ஸம்மா.

மெள்ள  அந்தக் காரிடாரில்  மெது நடை. அப்படியே அங்கங்கே என்ன இருக்குன்னு  எக்ஸ்ஃப்ளோர் செஞ்சோம்.  நாலு செட்ஸ் ஆஃப் பாத்ரூம், கழிவறைகள், வேனிட்டி ரூம் (அட்டகாசமா லைட்டிங், ட்ரெஸ்ஸிங் மிர்ரர் எல்லாம் பளபள!)  வார்டின் கடைசியில் ஒரு  டிவி ரூம். ஒரு பத்து வசதியான இருக்கைகள் போட்டு  32 இஞ்ச்  எல் ஸி டி டிவியை  சுவத்துலே பொருத்தி இருக்காங்க.

நாளைக்கு வரும்போது  டாய்லெட்ரி பேக்  கொண்டு வரேன்னேன்.  பொழுதன்னிக்கும்  பயணம் போய்வருவதால்  பயணப்பொட்டியில் எப்பவும் தயாராக இருக்கும்தான்.  நேத்து பயணம் முடிச்சுக் கொண்டு  வந்த பெட்டிகள் எல்லாம் வீட்டுக்கூடத்தில்  அம்போன்னு கிடக்கு.  போட்டது போட்டபடி ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்தோமுல்லெ!

ஆஸ்பத்திரி கௌனில்  பார்க்கும்போது நோயாளி லுக் வந்துருது:(  நமக்கு விருப்பமென்றால்  நாம் வழக்கமா அணியும் உடைகளைப் போட்டுக்கலாம். பொதுவா இங்கே நோயாளிகளின் உரிமை என்ற ப்ரோஷர்கள் வச்சுருக்காங்க. அதில் நமக்குச் சாதகமாகவே நிறைய  உரிமைகளுண்டு.  எதாவது நம்ம மனசு பாதிக்கும்படி  பணியாளர்கள் (டாக்டர்கள் உட்பட!) நடந்தால்  உடனே புகார் செய்யலாம்.  ஆங்கில மொழி தெரியலைன்னா   ஒரு மொழி பெயர்ப்பாளரையும் நமக்கு எற்பாடு செய்வாங்க. இந்தப் பட்டியலில்  ஹிந்தி கூட இருக்கு!  ஆஸ்பத்திரி முழுக்க அங்கங்கே புகார் பெட்டி. அதை கவனமா எடுத்துப் பார்த்து ஆவன செய்யறாங்க.

இன்னிக்கு ஒரு அஞ்சாறு நிமிச நடை போதும்.  தள்ளாட்டம் வேற இருக்கு. இன்னும் கொஞ்சம் முகம் மலரட்டுமேன்னு  என் கைப்பையில் இருந்த  கோபாலின் மொபைல் ஃபோனை எடுத்துக் கொடுத்தேன்.  கோடி சூர்யப்ரகாசம். ஒரு அம்பதறுபது மெயில்கள்  வந்துருக்கு. எல்லாம் குசலம் விசாரிச்சுத்தான்.

தோழியும் கணவரும் வந்தாங்க.  கொஞ்சநேரம் விசாரிப்புகள். டூஸ் அண்ட் டோண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க.

கையோடு  கொண்டுபோயிருந்த  நைட்டி(பஜாமாஸ்)யை  அலமாரியில் வச்சுட்டு மறுநாள் சார்ஜர் கொண்டு வரேன்னுட்டு நாங்கள் கிளம்பி வீட்டுக்கு வந்துட்டோம்.

அடுத்தநாள் காலையில்  எனக்கு அழைப்பு.  எல்லாம் இவர்தான். அதான் கையில் ஃபோன் இருக்கே!  காலை உணவு முடிச்சுட்டாராம். இன்னிக்கு ஞாயிறு ஆனதால்  நாங்க ரிலாக்ஸா சாயங்காலம் வந்தால் போதுமாம்.  ராத்திரி கொஞ்சம் ஜுரம் வந்ததாம்.சின்னதா மூச்சுத் திணறல். ஆக்ஸிஜன் வச்சாங்களாம். இப்போ பிரச்சனை இல்லைன்னார்.

நாங்கள் ஒரு நாலரைக்குப் போனோம்.  புள்ளியைக் காணோம்.  டிவி அறைக்குப் போனேன்.  நினைச்சது சரி.  அங்கேதான் ஓய்வா உக்கார்ந்துருந்தார்.  வீட்டு உடுப்பு அதன் மேல் ஆஸ்பத்த்ரி கௌன். கதீட்டர் அவுட்! குளிச்சாராம்.  இப்போ ஜூரம் இல்லை.வயித்துவலி போயே போயிந்தி. இட்ஸ்   Gகான்:-)  ஒரே ஒரு குறை.....  டிவி ரிமோட்டை சுவரில்  ஃபிக்ஸ் பண்ணி இருக்காங்க:(



அதானே....  போகட்டும். ஆளாளுக்கு கையில் வச்சுக்கணுமுன்னா   ஒரு பத்திருவது ரிமோட் வாங்கிப் போடணுமில்லையோ? அந்த அறையிலிருந்து வியூ அருமையா இருக்கு.  நம்மூர் ஏவான்  ஆறு. தொட்டடுத்து  போட் ஷெட்.  வாடகைக்குப் படகு(Kayak)  எடுத்துக்கிட்டு நாமே சுத்தலாம்.  வேணாமுன்னா punting  கூட உண்டு.

உள்ளூர் நண்பர்கள்  மூணு பேர் குடும்பத்துடன் விஸிட் வந்து போனார்கள். நாலு ஸ்பூன் தயிர்சாதம் குட்டியூண்டு  தூக்கில் கொண்டு போயிருந்தேன்.  சோறு கண்டவுடன் முகம் மலர்ந்தது.

திங்கள் காலையிலே போயிட்டேன்.  லஞ்ச் சமயம்  மகள் வந்து  வீட்டுக்குக் கூட்டிப் போனாள். மாலை வேலை முடிஞ்சு வந்ததும் மகளும் நானுமா அப்பாவைப்போய்ப் பார்த்துவந்தோம்.  நேத்து இரவும் காய்ச்சல் வந்துச்சாம்(  மற்றபடி கெட்டிங் பெட்டர், டே பை டே. (டச் வுட்)  ஐவி கூட எடுத்தாச்சு. ஆனால் கையில் குத்திவைப்பு அப்படியே இருக்கு.  ஒரு அவசரமுன்னா சட்னு கனெக்ட் பண்ணிடலாம்.

செவ்வாய் காலை போனால்......  டாக்டர் குழு கூடி இருக்கு. டிஸ்சார்ஜ் வேணுமுன்னு ஒத்தைக் காலில் நிக்கறார். 24 மணி நேரம் ஜுரமில்லாம இருந்தால்தான் வீடுன்னு கண்டிப்பாச் சொல்றாங்க. நேத்து இரவும்  ஜுரம் வந்து போயிருக்கு.  "அதெல்லாம் ஒன்னுமில்லை. கட்டிலுக்குப் பக்கத்தில் ஹீட்டர் இருப்பதால்  ஜுரம் போல இருக்காம்."

'சரி.  வீட்டுக்கு விடறோம். ஆனால் எதாவது  பிரச்சனைன்னா உடனே  வரணும்'என்றதோடு டிஸ்சார்ஜ் எழுதிக் கொடுத்தார் டாக்டர்.  எல்லா ஃபார்மாலிட்டீஸ் முடிய  ஒன்னரை மணி நேரமாச்சு. அதுக்குள்ளே வார்டில் இருந்த எல்லாருக்கும் டாடா பைபை சொல்லி முடிச்சார்:-)

 வார்டு சுத்தம் செய்யும்  பெண்  (ஃபிஜி)  'பையன் நல்லவன்.  சந்தேகமே வேண்டாம். பேசிப்பார்'என்றதும் எனக்குக் குழப்பம்!

மகளுக்கு சம்பந்தம் பேசி இருக்காங்க.  இவர் 'மகளைக் கேக்கணும்'என்று சொல்லி இருக்காராம். என்ன கதை? ன்னு கேட்டேன்.  ரெண்டு மூணுநாளா மகளைப் பார்த்ததும்   இவரிடம் விசாரிச்சு இருக்காங்க.'சொந்தக்காரப்  பையனுக்கு   பொண் பார்த்துக்கிட்டு இருக்கோம்  நல்ல பையன். நல்ல வேலையில் இருக்கான்.  என்ன சொல்றீங்க'ன்னு  கேட்டாங்களாம். ஸோ...திருமணங்கள்  ஹாஸ்பிட்டலிலும் நிச்சயிக்கப்படும்:-)

மகளுக்கு சேதி சொல்லிட்டு (ஐ மீன், டிஸ்சார்ஜ் ஆனதை)  ஒரு டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு வந்தோம்.

நம்ம மருத்துவர் தோழி தினமும் வந்து பார்த்துட்டுப் போனாங்க.

இவருக்கு ஓரளவு குணமானதும்  சனிக்கிழமை கோவிலுக்குப் போனோம். நம்ம கோவிலில் தீபாவளி, புது வருசம், அன்னக்கூட்  எல்லாம் நடந்து முடிஞ்சுருக்கு.  நாம் ஏன் வரலைன்னு கேட்டு துளைச்செடுத்துட்டாங்க. அன்னக்கூட் ப்ரசாதம் எடுத்து வச்சுருந்தது கிடைச்சது.

மறுநாள் நம்ம வீட்டில் தீபாவளி. அன்றைக்குக் கார்த்திகை தீபமாகவும் அமைஞ்சு போனதால்..... எடு புடவையை.  புதுசு கட்டிக்கோ. கொண்டாடுன்னு .....    மகளும் வந்தாள்.  போனவருசம் வாங்கி வச்ச பட்டாஸ் பொதியில் இருந்து கம்பி மத்தாப்பை எல்லாம் எடுத்து கொளுத்தினோம்.






அடுத்த தீபாவளிக்குப் புதுப்புடவை வாங்கி வைக்கலாமா வேணாமான்னு இப்போ யோசனை:-)))))

இனி எல்லாம் நலமே!

ரொம்ப அலைஞ்சுட்டே... கொஞ்சநாள் சும்மா இரு என்றார்.

எப்படி????

கொஞ்சநாள் சமைக்காம இரு.
கொஞ்சநாள் காய்கறி நறுக்காமல் இரு.
கொஞ்சநாள் துணி துவைக்க வேணாம்.
கொஞ்சநாள் பாத்திரம் தேய்க்காமல் இரு

இப்படியெல்லாம் சொல்லப்டாதோ?

கொஞ்சநாள் டைப்பிங்க செய்யாம இரு(வாம்)!!!!


Viewing all 1431 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>