Quantcast
Channel: துளசிதளம்
Viewing all 1431 articles
Browse latest View live

ஆத்தா........ மாரியாத்தா....மலேசிய மாரியாத்தா.... (மலேசியப் பயணம் 7 )

$
0
0
'உள்ளே போய் நிறுத்த எங்களுக்கு  அனுமதி இல்லை. அப்படியே வெளியே நிறுத்தினால் நீங்க இறங்கிப்போயிக்குவீங்களா'ன்னார்  டிரைவர்.  ரெட் டெக்ஸியில் போய்க்கிட்டு இருக்கோம், இப்போ.  அப்படி என்ன  மேன்மை பொங்கி வழியும் இடமுன்னு ......     பெருமைக்கு உசரம் கூடித்தான் போச்சு போல!

பெட்னோராஸ் ரெட்டைக் கோபுரத்தைப் பார்த்துக்கலாமுன்னு  வந்துருக்கோம். பிரமாண்டமான வளாகம். நேரே போய் கீழ்த்தளத்தில்  இருக்கும்  டிக்கெட் கவுண்டருக்குப் போறோம்.  அட்வான்ஸ்புக் பண்ணிக்கணுமாம்!  இது என்னடா இப்படி? ஆனானப்பட்ட அமெரிக்க ரெட்டைக் கோபுரத்துக்கே  நேராப் போனமா, டிக்கட்டை வாங்கினமா,  லிஃப்ட் தூக்கிப்போய் மாடியில் விட்டுச்சான்னு  பார்த்தமே! ப்ச்.....இப்ப அதுவே இல்லைன்னு ஆகிருச்சு போங்க:(


வந்த கையோடு கடமையை முடிச்சு விடலை பாருங்களேன்! வெவ்வேற  டைமிங்ஸ்  இருக்கு. எந்த நேரம் வேணுமுன்னு கேக்கறாங்க. இன்னிக்கு  இடம் இல்லை.  நாளைக்கு  நமக்கு முடியாது. அப்ப ஆறாம்தேதி காலை 10 மணி (ஷோ) புக் பண்ணிக்கலாம்.  நாம் எந்த ஊருன்னு கேக்காமலேயே  இண்டியான்னு எழுதிக்கிட்டார்,  பதிவு  செய்கிறவர்.  அடுத்த கேள்வி  வயசு எத்தனை?  நம்ம வயசு கேட்டு என்னாகப்போகுதுன்ற குறுகுறுப்புடன்  மெள்ள   சிக்ஸ்டி ப்ளஸ்ன்னேன்.  அப்ப உங்களுக்கு அம்பது பெர்ஸன்ட் டிஸ்கவுண்ட் என்றார்.  அடிச்சக்கை.  அப்ப எம்பதுன்னா  எழுபத்தியஞ்சா:-))))))



ச்சும்மா   பேஸ்மெண்டைச் சுத்திப் பார்த்தோம்.  நல்ல ஷாப்பிங் செண்டர் போலக்கிடக்கு.  மத்ததை நாளை கழிஞ்சு மற்ற நாள் பார்த்தால் ஆச்சு. இப்போ இதுக்கு ஒதுக்குன நேரத்தில் வேறெங்கே..........  இங்கே ஒரு மாரியம்மன் கோவில் இருக்காமே...... மழைவேற நசநசன்னு  ஆரம்பிச்சிருக்கு.

கோவில்வாசலில் போய் இறங்குனோம். ஒரு ரெட் டெக்ஸிதான். மீட்டர் எல்லாம்  போடலை. முப்பதுன்னு பேரம் பேசிக்கிட்டார். வாசலிலேயே நம்ம ஆன்மீகச்செல்வர் ஜிரா நினைவுக்கு வந்தார். 'குராங்கன் லாஜூ' :-)))  (அவர் தன் முதல் மலேசியப்பயணத்தில் ஜலான் என்பதை லேண்ட் மார்க்கா வச்சதுபோல  நானும் முந்தி குராங்கன் லாஜுவை வச்சுருந்தேன்!!!   ரெண்டுமே வேலைக்காகாது கேட்டோ!  முன்னது தெரு, பின்னது ஸ்லோ டௌன்)


சட்னு பார்த்தால் கோவில் இருக்குமிடம் தெரியாமல் கட்டிடங்களுக் கிடையில்  ஒளிஞ்சு இருக்கு வாசல்.  கொஞ்சம் வித்தியாசமான பெரிய  தூண்கள். சற்றே தலையை உசத்திக் கண்களை அனுப்பினால்....  ஆஹா....அஞ்சு நிலைக்கோபுரம்!  228 பொம்மைகளுடன்,  75 அடி உசரத்தில் கம்பீரமா ஜொலிக்குது. 1972 இல் தமிழ்நாட்டுலே இருந்து வந்து  இங்கே கோபுரத்தைக் கட்டிக்கொடுத்துட்டுப் போனவர் முனியப்ப ஸ்தபதி அவர்கள். அடுத்தவருசமே மகா கும்பாபிஷேகமும் ஆச்சு.

ரெண்டரையாள் உசரக் கோபுரவாசல் கதவு!  பளிச்ன்னு  ரெண்டு பக்கமும்  ஒரு ஷூ படம்.  காலணியோடு உள்ளே வராதே!  அட ராமா......   முதலில் கண்ணில் படுவது செருப்பா:(   அப்படியா சனம் செருப்புக்காலோடு  போகுது????



உள்ளே  கண்ணெதிரே கருவறை. தங்கக்கொடி மரம்.  ஜொலிக்கிறாள் மாரி! அமர்ந்த திருக்கோலம். முன்மண்டபம் ரொம்பப் பெரூசு.   நம்ம கவலை நமக்குன்னு  கோவில் அலுவலகம் தேடி ஓடினேன்.  'எஸ் ஃபொட்டோக்ராஃபி'  வயிற்றில்  பாலும் தேனும் பஞ்சாமிர்தமுமாய் வார்த்தார். நல்லா இருக்கணும்!   இனி மகளே உன் சமர்த்து என்று சிரிக்கிறாள் மாரி. மாரியம்மா....  மாரியம்மா, திரிசூலியம்மா..... சூலியம்மா....

பளிச்சுன்னு  சுத்தமாக இருக்கு  கோவில்.  கருவறையும் முன் மண்டபமும் நடுவிலும், சுற்றி வர  பெரிய பிரகாரமும், ஓரங்களில்பெரிய வராந்தா போன்ற மண்டபங்களுமாய் அட்டகாசமா இருக்கு.  வராந்தா மண்டபச் சுற்றுச்சுவர்களில் நேர்த்தியான  ஓவியங்களும் சிற்பங்களுமாய்  சந்நிதிகள்.

கருவறை வெளிப்புற சுவர்களில் அம்பாளின் திவ்ய சொரூபங்கள் கண்ணாடித் தடுப்பின் பின்னே மாடங்களில்.

கோலாலம்பூரின் முதல் ஹிந்துக் கோவில் என்ற பெருமையும் பணக்காரக்கோவில் என்ற பெருமையும் ஒன்னாச்சேர்ந்து இருக்கு மாரியம்மனுக்கு!  மொத்தமாப் பார்த்தால் மலேசியாவில் 311 ஹிந்துக்கோவில்கள்  இருக்குன்னு அரசு பதிவு செஞ்சுருக்கு. அதில் 21 கோவில்கள்  நம்ம கோலாலம்பூரில் இருக்கு.


1873 வருசம் தம்புசாமி என்றவர், தன்னுடைய குடும்பக்கோவிலா இதைக் கட்டி அம்மனை ஆராதிச்சு வந்துருக்கார்.  கே எல் ரயில்வே ஸ்டேஷனுக்குப்பக்கத்தில்  கொஞ்சநாள் இருந்த கோவிலை, இப்போ இருக்கும் இடத்துக்கு மாத்தினது 1885 ஆம் ஆண்டு. அப்போதையக் காலக்கட்டத்தில் இருந்தவைகளைப்போலவே இங்கேயும்  மரம் வச்சுச் சுவர் எழுப்பி மேலே பனை/தென்னை ஓலைக்கீற்றால் வேயப்பட்ட கூரையுடன் கோவில்.  அக்கம்பக்கத்து மக்களும் வந்து கும்பிட்டுக்கிட்டுப் போயிருக்கணும். ரெண்டு வருசம் கழிச்சு ,செங்கல் தயாரிப்பு கைவந்த கலையா மாறிட்டதால்  செங்கல் கட்டிடமா மாத்திப்பிட்டாங்க.சீனர்களும் தொட்டடுத்துள்ள  மற்ற இடங்களை வாங்கி சைனா டவுனா இந்த இடம் மாறிக்கிட்டு இருந்துருக்கு. மாரி சட்னு இடம்பிடிச்சு நகராம உக்கார்ந்துட்டாள்.




 சிலபல ஆண்டுகளில் ஊர் மக்கள் எல்லோருக்கும் பொதுவா இருக்கட்டுமேன்னு  கோவிலையே தூக்கிக் கொடுத்துட்டாங்க  பெரிய மனசுள்ள தம்புசாமியும் குடும்பத்தினரும். ஒரு ட்ரஸ்ட் பொறுப்பை ஏத்துக்கிச்சு.  அதுக்குப்பிறகு வளர்ச்சி அமோகம். புள்ளையாரும் முருகனுமா புள்ளைங்க ரெண்டு பேரும் அம்மா கூடவே குடியேறிட்டாங்க.

தேர் திருவிழாகூட நடக்க ஆரம்பிச்சது. அந்தக் காலத்துலேயே மரத்தேர் ஒன்றை, அம்பதாயிரம் மலேசிய வெள்ளி செலவில் தமிழ்நாட்டுலே செஞ்சு இங்கே கொண்டு வந்துருக்காங்க.  கோவிலின் செல்வவளம் பெருகப்பெருக மரத்தேர்  இப்போ அசல் வெள்ளித்தேரா மாறி இருக்கு.  முன்னூத்தியம்பது கிலோ அசல் வெள்ளியில் மூணரை லட்சம் மலேசிய ரிங்கிட் செலவில் 240 வெள்ளி மணிகளும், அச்சு அசலா ரெண்டுகுதிரைகளுமா ஜொலிக்குது.  மொத்தம் பனிரெண்டு தனித்தனி பாகங்களாச் செஞ்சு தமிழ்நாட்டிலே இருந்து இங்கே கொண்டு வந்து ஒன்னாச் சேர்த்துப் பொருத்தி இருக்காங்க. தேரின் உசரம்  ஆறரை மீட்டர்.

தைப்பூசத் திருவிழாவுக்கு  இங்கே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து முருகன்  வள்ளி தேவசேனா சகிதம் வெள்ளித்தேரில் புறப்பட்டு பத்து மலைக்கு விஸிட் போயிட்டு வர்றாராம். 25 கிலோமீட்டர் தூரம். அன்னிக்கு தேரோடும் பாதையில்  பொதுவான போக்குவரத்துகள் மாத்தி அமைச்சுக்கொடுத்து அரசு உதவுதாம்.

தேருக்கு வெளிச்சம் போடும் வழக்கமான விளக்குகளை சமீபகாலமா மாற்றிச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத LED  bulbs போட்டு க்ரீன் சிக்னல் வாங்கிட்டாங்க.




 குழந்தை ஸ்மிதா (இன்னும் ரெண்டு நாளில் முதல் பொறந்தநாள்!) வுக்காக , நேர்ந்துக்கிட்டு  பால்சாதமும், வெள்ளைக் கொண்டைக் கச்சான் சுண்டலும் செஞ்சு கொண்டுவந்து  அம்மனுக்கு படைச்சுட்டு  பக்தர்களுக்கும்  விளம்பினாங்க. நல்ல  டேஸ்ட்!

பிரகாரத்தின் மூலைகளில்  நாட்டார் தெய்வங்களுக்கான சந்நிதியில் பெரியாச்சி பேச்சி அம்மனும், மதுரை வீரனும், முனியாண்டி, வீரபத்திரர்  இருக்காங்க.

இன்னொரு சந்நிதியில் துர்க்கை அம்மன். தகதகக்கும் பெரிய கண்களோடும் எலுமிச்சை மாலையோடும் !

 ராவு காலத்தில் எலுமிச்சம்பழம்/காய்  மூடிகளில் விளக்கேற்றிக் கும்பிடறாங்க உள்ளூர் மக்கள். நாம் போன சமயம் கொஞ்சம் பிந்திப்போச்சு என்ற அவசரத்தில் எலுமிச்சங்காய்களை அங்கேயே உக்கார்ந்து வெட்டி விளக்கு தயாரிச்சுக்கிட்டு இருந்தாங்க உள்ளூர் சகோ ஒருத்தர். அன்றைக்குச் செவ்வாய் என்பதால் மூணு நாலரை ராகுகாலம்.  முகத்தில் பதைப்பைக் கண்டு விசாரிச்சதில்  பிந்தினபிறகு போட்டால் பலிக்காதோ என்ற சம்சயம்:(

'கவலையை விடுங்க.  அந்த சரியான நேரத்தில்  விளக்குப் போடணுமேன்னு நினைச்சீங்களா இல்லையா'ன்னேன். ஆமாவாம்.  ஐயோ...  பிந்திருமேன்னு நினைச்சேன்னாங்க.  அப்ப அதுக்குண்டான பலன் கிடைச்சுருச்சு.  அம்மனுக்குத் தெரியாதா..... என்ன காரணத்தால்  பிந்திப்போச்சுன்னு. அதெல்லாம் மன்னிச்சுட்டாள்னு அடிச்சுச் சொன்னதும் ஆமாவா ஆமாவான்னு முகத்தில் நிம்மதி வந்துச்சு. கைகள் மட்டும் பரபரன்னு எலுமிச்சைகளை வெட்டி உள்ளே இருக்கும் சதைப் பற்றுகளை கத்தியால் சுரண்டிப் போட்டுக்கிட்டு இருந்தவேகம் பார்த்திருக்கணும் நீங்க!  வீட்டுலேயே செஞ்சு கொண்டு வந்திருந்தால்  சாயங்காலம் எலுமிச்சை சாதம் மெனுவில் இருக்கும்!

கோவில்  சுத்தமாத்தான் இருக்குன்னாலும்..... தரையில் பதிச்ச பளிங்கு ஓட்டின்  நிறமோ என்னமோ 'அந்த பளிச் ' மிஸ்ஸிங்.  நம்ம கோவில்களுக்கு வெள்ளை நிறம் சரிப்படாதுன்னு மனசைத் தேற்றிக்கிட்டேனாக்கும்.

பெருமாளுக்கும் ஒரு தனிச்சந்நிதி உண்டு. தாயார்களுடனும் சிறிய திருவடியுடனும் சேவை சாதிக்கிறார்.  கோவில் முன்மண்டபத்தின் வலது பக்கமும்  தனிச்சந்நிதிகளில் உற்சவர்கள் இடம்பிடிச்சு இருக்காங்க.

அறங்காவலர்கள் வரிசைகளில்  மலேசிய அரசின் அங்கங்களான  தமிழமைச்சர்கள் பங்கு பெறுவதால்  எல்லாம் நல்லபடியாகவே நடக்குது.

வெளியே பூமாலைக்கடையில் எனக்குத் தலையில் சூட்டிக்க ரெண்டு முழம் மல்லிகை வாங்கிக் கொடுத்தார் கோபால். சென்னையில் பூக்கட்டி விற்பவர்களிடம் இந்தப் படத்தைக் காண்பிக்கவே கூடாது!


தொடரும்...........:-)







கொல்லன் தெருவில் ஊசி விக்கறாங்க போல!!! (மலேசியப் பயணம் 8 )

$
0
0
உலகத்தின் விலை உயர்ந்த கைக்கடிகாரம் வேணுமா?  ரெண்டே முக்கால் அமெரிக்கன் டாலராமே.... அம்பது ரிங்கிட்டுக்குப் பேரம் பேசி வாங்க ஆசையா?  Rolex, Cartier எல்லாம் தண்ணிபட்ட பாடு! இல்லே,  வேற எதாவது ப்ராண்டட் பொருள் வாங்கணுமா...பேசாமக் கிளம்பி  ஜலான் பெடாலிங் வந்து சேருங்க. இங்கெதான் நம்ம மாரியம்மன் கோவிலுக்குத் தொட்டடுத்து இருக்கு இந்தத் தெரு. ஒரு நிமிச நடை.












சீனச்சாமி Guan Di கோவில் கொண்டுள்ளார். வீரத்துக்கான சாமி.  பழைய காலத்தில்  போர் வீரர் என்னும் அந்தஸ்த்து எவ்ளோ உயர்வா இருந்துருக்கு பாருங்க. இவரை வழிபட்டால்  மனசில்  தைரியம் கூடும் என்பதுதான் விசேஷம். இப்பவும் வாழ்க்கையில் வேறுவிதமாப் போராடத்தானே வேண்டி இருக்கு. நின்னு ஜெயிக்க மனோதிடம் வேண்டாமோ?  உள்ளே போய் வேண்டிக்கலாமுன்னா கோவில் மூடிட்டாங்க. வெளியெ நின்னே கொஞ்சூண்டு தைரியம் கொடுன்னு வேண்டிக்கிட்டு  அங்கிருந்து ஒரு நிமிச நடையில் புகழ்பெற்ற Jalan Petaling  தெருவுக்குள் நுழைகிறோம்.






 சின்னச்சின்னப் பூச்செண்டுகள்  சிரிச்சு வரவேற்குது. மலர்களைக்கொடுத்து மகிழ்விக்கும் ஒரு நல்ல கலாச்சாரம் சீனர்களுக்கிடையில் இருக்கு.  வெறுங்கையா,  யாரையும் பார்க்கப் போவதில்லையாக்கும் கேட்டோ!

இதுக்காக அதிகம் செலவு பண்ணனுமுன்னு அவசியம் இல்லை.வெறும் மூணு ரிங்கிட் முதல்.....


பெரிய பலாப்பழங்களை வெட்டி வச்சு, சுளை பிரிச்சு சின்ன ட்ரேயில் அடுக்கி மூடி வச்சுருக்காங்க.  சல்லீசு. ஆனால்  இப்படி ஒரு அடர்ந்த நிறமான்னு  நம்ம கோபாலுக்கு யோசனை!


லோகத்தின் எல்லா பொருட்களுக்கும் போலி  இங்கே கிடைக்குதுன்னா...  பழத்திலுமா இருக்கும்? சினிமாக்களின் டிவிடிக்கள் கொட்டிக் கிடக்கு. படம் ரிலீஸ் ஆகுமுன்னே கூட இங்கே கிடைச்சுருது !


பொதுவா சீனர்களுக்கு  வெளியே உணவு உண்ணும் கொண்டாட்ட மனநிலை அதிகமா இருக்குன்னு என் தோணல். எங்கூரிலும் பாருங்க..... சீன உணவுக்கடைகளில் சீனர்களே கூட்டம்கூட்டமா குடும்பத்தோடு வந்து சாப்பிடுறாங்க. அதே சமயம் நம்ம  இந்திய ரெஸ்டாரண்டுகளில்  வெள்ளையர்கள்தான் இங்கொன்னும் அங்கொன்னுமா இருந்து  சாப்பிடுவாங்க.  நம்மைப்போலுள்ள  மக்கள்ஸ், வீட்டுலேசெய்யும் அதே சாப்பாட்டை, அங்கே போய்க் காசைக்கொட்டிக் கொடுத்துத் திங்கணுமா என்ற நினைப்புதான்.



பொதுவா நீங்க கவனிச்சீங்கன்னா.... சீனாவைத் தவிர்த்த ஏனைய நாடுகளில் இருக்கும் பெரிய ஊர்களில் சைனாடவுன் என்ற ஒன்னு இருப்பதைப் பார்த்திருப்பீங்க.  அதிலும் வெள்ளைக்கார நாடானால்....  இந்த ஏரியாவே தனிச்சுத்  தெரியும்.  அங்கே  24 கேரட் சுத்தத் தங்க நகைக்கடை கூட இருக்குமுன்னா பாருங்க. எங்கூரில் ஒரு ஏரியா (நம்மூட்டாண்டைதான்) இப்பதான் மெள்ள மெள்ள சைனா டவுனா டெவலப் ஆகிக்கிட்டு  வருது. இன்னும் ஒரு பத்து வருசத்தில்  கூரையில் சிகப்புக் கலருடன், சிங்கச் சிலைகளும் ட்ராகன்களுமா மாறப்போவது உறுதி. பலசமயங்களில் சீனர்களின் ஒற்றுமை பார்த்தால்  வியப்பாத்தான் இருக்கு எனக்கு! நாடு முழுசும் ஒரே மொழி என்பதும் ஒரு  காரணமோ?

இங்கே கோலாலம்பூரிலும் வெள்ளீயச்சுரங்கத்தில் வேலைக்குன்னு சீனர்கள் வர ஆரம்பிச்சது, இந்த சைனா டவுனுக்கு  விதை போட்டது. 1873 ஆவது வருசம். அப்பத்தான் மாரியாத்தாளும் இங்கே இடம்பிடிச்சு உக்கார்ந்தாள். போட்டின்னா விலகிப்போறவளா :-)  சுரங்க வேலையில் சீனர்களுக்கு எப்படி இவ்ளோ ஈடுபாடுன்னு தெரியலைங்க. நம்ம நியூஸியிலும் கூட  1862 இல் தங்கம் இருக்குன்னு கண்டுபிடிச்ச கையோடு முதன்முதலில்  சீனர்கள்தான் சுரங்கவேலைக்கு தயார்னு வந்து இறங்கினாங்க. அவுங்க தலைமுறைகள் இங்கே  இப்போ வந்து குடியேறும் சீனர்களிடமிருந்து வேறுபட்டுத்தனியா பெருமிதத்தோடு நிக்குதுன்றது வேற கதை.

சிகப்பு நிறத்தில் நாலைஞ்சு பேப்பர் லேண்டர்னைக் கட்டிவிட்டதும் ஏரியாவுக்கே ஒரு களை வந்துருது பாருங்க.

Buskers என்ற பெயரில் கொல்லன் தெருவில்  ஊசி விக்கறாங்க. அன்னாடக் கைச் செலவுக்கு ஆச்சு பாருங்க.


தெருவோர உணவுக்கடைகள் ரொம்பி வழியுது இங்கே. எல்லாம் கூடியவரை சுத்தம்தான். ஆனால் நம்ம நாக்கு சங்கீதாவையில்லெ தேடுது.  அங்கே இங்கேன்னு விசாரிச்சுக்கிட்டுப்போய்ச் சேர்ந்தோம்.  இந்த ஏரியாவில் ஏழெட்டு இந்திய உணவகங்கள். பெயர்ப்பலகைகள் எல்லாம் தமிழிலும் இருக்கு, ஜோதிஜி.





முதல்  Franchise  கொடுத்த  2005 முதல் சங்கீதா  மலேசியாவில் இயங்குது . Kopatha  group (நகை வியாபாரம்)  எடுத்து நடத்துது. நம்ம சிங்காரச் சென்னையில் 1984 இல் அர்மீனியன் தெரு (சைனா பஸார்) வில்  'முதல் சங்கீதா ' ஆரம்பிச்சு இப்ப சென்னையில் ஏராளமான கிளைகளுடனும், சில வெளிநாடுகளில் Franchise கொடுத்தும் வளர்ந்துக்கிட்டே இருக்காங்க. இவுங்க க்ரூப்பில் இப்போதைக்கு 2700 பேர் வேலை செய்யறாங்களாம். இப்போ நாம் சாப்பிடப் போற இந்தக் கிளையில் 25 பேர் வேலையில். நமக்கு பரிமாற வந்தவர் மணிகண்டன். கும்மோணத்துக்காரர். இளைஞர்.  மெனு கார்டை வாங்கிப் பார்த்தேன். இளந்தோசையாம். எப்படி இருக்கும்? ஆவல்தான். ஸ்டாட்டரா  ஒரு வெங்காயப் பக்கோடா.





கோபாலுக்கு ஒரு செட்  கல்தோசை & எனக்கொரு செட் இளம் தோசை.  மெட்ராஸ் ஃபில்ட்டர் காஃபி இருக்காம். அசல் பாலா? ஆமாம்.  அஞ்சு நாளாச்சு காஃபி டவராவைக் கண்ணுலே பார்த்து.....

ஸ்வீட்ஸ் கார்னர் என்று ஒரு பக்கம் கண்ணைப் பறிக்குது. எங்க கிறைஸ்ட்சர்ச் மாநகரில் இல்லாத அரிய காட்சி. மறுநாள் கொண்டாட்டத்துக்காக கொஞ்சம் இனிப்புகள் பார்ஸல் ஆச்சு. எண்ணி ரெவ்வெண்டுதான், ரெண்டு வகையில்.

 கோபாலுக்கு 'அல்வா' கொடுக்கலாமுன்னு ரொம்பநாளா இருந்த ஆசையை....  நிறைவேற்ற நல்ல நாள் நாளைக்கு!











'பத்துமலை போயாச்சா?' ன்னார் மணிகண்டன். நாளைக்குன்னேன். அங்கே பெருமாள் இருக்கார்னு வாய்மொழிந்ததும் பரபரப்பு தொத்திக்கிச்சு. எங்கே எங்கேன்னேன். போனவுடன் தெரியும் என்ற அருள்வாக்கு:-)

நம்ம அங்கலாய்ப்பு தெரிஞ்சு, பெருமாள் எப்படியெல்லாம்  சேதி அனுப்பறான் பாருங்க!

மழை இன்னும் விட்டபாடில்லை. கொஞ்சம் காத்திருப்புக்குப்பின் ரெட் டெக்ஸி கிடைச்சு , நம்ம பார்க் ராயல் வந்திறங்கினோம். தொட்டடுத்துள்ள சூப்பர் மார்கெட் போய்  ப்ரேக் ஃபாஸ்டுக்கான சில பொருட்களை ( ம்யூஸ்லி, நறுக்கிய பழங்கள்.  ஒரு லிட்டர்  அஸ்ட்ராலியா இறக்குமதி பால், அரைக்கிலோ சக்கரை, ஒரு சின்ன நெஸ்காஃபி பாட்டில்)வாங்கிக்கிட்டோம். இன்னும் மூணு நாள் இருக்கு.  தினம் காலை  உணவுக்காக ரயில் பிடிச்சுப்போய்னு அலைய முடியாது கேட்டோ!




வரும் வழியில் இரவு லைட்  அலங்காரத்தோடு பெட்ரோனாஸ் கோபுரங்கள் ஜொலிச்சது. அழகாத்தான் இருக்கு!


தொடரும்.........:-)

PIN குறிப்பு:  நாளைய  (ஜூன் 5)கொண்டாட்டத்துக்காக கொஞ்சம் நிறைய இனிப்புகளைப் போட்டு இருக்கேன். யார் யாருக்கு எது விருப்பமோ அவைகளை தாராளமா எடுத்துக்கலாம்.


மாமனும் மருமகனும் இப்படி மலையையே பிடிச்சுக்கிட்டா (மலேசியப் பயணம் 9)

$
0
0
முந்திக் காலத்துலே கிராமங்களில்  பார்த்தீங்கன்னா..... ஒரு தெரு முழுசுமே அடுத்தடுத்து சொந்தக்காரங்களாவே இருப்பாங்க. கூடி வாழ்ந்தால் கோடி நன்மைன்னு நினைச்ச காலம்!

அப்படித்தான்  இங்கேயும்  மருமான் வீட்டுக்குப் பக்கத்துலே  மாமனும் அவர் மச்சானுமா,  வேண்டப்பட்டவங்க எல்லோரும் கூட்டணி அமைச்சுக் கிடக்குறாங்க.

இன்னிக்குக் காலையில் அறையிலேயே ப்ரேக்ஃபாஸ்ட்டை முடிச்சுக்கிட்டு எட்டுமணிக்கெல்லாம் ரெடியாகிக் கீழே வந்து  நம்ம ஹொட்டேல் வாசலில் டெக்ஸிக்குக் காத்திருந்தோம். ஹொட்டேல் பணியாளர் நமக்கு அதிகம் செலவில்லாத டெக்ஸி கிடைக்க அரும்பாடு பட்டார். ப்ளூ டெக்ஸி வேணவே வேணாமுன்னு அவருக்கு ஒரு அபிப்ராயம். கடைசியில்  ப்ளூதான் கிடைச்சது. மீட்டர் போடறேன். பயப்படாம ஏறுங்கன்னார்  அப்துல் ரெஹ்மான்.

வயசு சொன்னபோது ஆடிப்போயிட்டேன், எழுபது ப்ளஸ்.  இந்தியாவிலிருந்து  அவர் அப்பா இங்கே வந்து செட்டில் ஆனப்பப் பிறந்தவராம். குடும்ப வியபாரத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்துருக்கார். பிள்ளைகள் இப்போ தலையெடுத்து வியாபாரத்தைக் கவனிச்சுக்கறாங்க.  இந்தியாவில் இருந்து  கோவில், பூஜை சம்பந்தப்பட்டப் பொருட்களை இறக்குமதி செஞ்சு விக்கறாங்க. இந்து சமய சம்பந்தப்பட்ட சாமான்கள் பெயரெல்லாம் தண்ணிபட்ட பாடு.  தாத்தா காலத்து வியாபாரமாம். மகள் இப்போ  யுனிவர்சிட்டியில்  படிக்கிறாங்க. மற்ற பிள்ளைகள் எல்லோருமே கல்லூரிப்படிப்பை முடிச்சவங்கதானாம். இவர்தான் வேலையிலிருந்து  ரிட்டயர் ஆகிட்டாலும் பொழுது போகலை,  டாக்ஸி பெர்மிட் இருக்கே, அது சும்மாக்கிடக்கும் நேரத்துலே நாம் ஒரு நாலைஞ்சு மணி நேரம் ஓட்டிக்கலாமேன்னு  வண்டி ஓட்டிக்கிட்டு இருக்காராம். அதிகாலை ஓட்ட ஆரம்பிச்சு ஒரு பத்து பதினொன்னுக்கு முடிச்சுக்கிட்டு  வீட்டுக்குப் போயிருவேன்னார். வீடு கூட இங்கே பத்துமலைக்குப்போகும் வழியில்தானாம்.  வாழ்க்கை நல்லாவே போய்க்கிட்டு இருக்கு பிரச்சனை இல்லைன்னார்.

ஒரு இருபத்தியஞ்சு நிமிசத்துலே கோவிலாண்டை கொண்டு விட்டார். சிட்டி விட்டு வெளிவரும்வரை கொஞ்சம் ட்ராஃபிக் ஜாம் இருந்துச்சு. அதுக்குப்பின்.....  ஆஹா, பேஷ் ரகம் சாலை!  'திரும்பிப்போக வெயிட் பண்ணனுமா'ன்னார். ' நன்றி. ஆனால் எவ்ளோ நேரம் இருக்கப்போறோமுன்னு  முடிவு செய்யலை. நாங்க வேற வண்டி பார்த்துக்கறோமு'ன்னோம். 'டெக்ஸி நிறையக் கேப்பாங்கதான். முப்பதுக்கு மேலே கொடுக்காதீங்க'ன்னுட்டு  நம்மிடம் 24 ரிங்கிட் வாங்கிக்கிட்டார்.  இதுலே கோவில் வளாகத்துக்குள்ளே வண்டி கொண்டுவந்து நிறுத்த அங்கே வசூலிக்கும் சார்ஜ் உட்பட எல்லாமே சேர்த்துதான் .

எப்ப வண்டி வேணுமுன்னாலும் கூப்பிடுங்கன்னுட்டு  அவர் ஃபோன் நம்பர் பெயர் உள்ள டெக்ஸி சிட் கொடுத்தார். இங்கே இதுக்குன்னே அச்சடிச்சு விக்கறாங்க போல. நாம் சந்திச்ச டெக்ஸிக்காரர்கள் எல்லாம்  பெயர் எழுதுன கார்டைக் கொடுத்துக்கிட்டுதான் இருந்தாங்க. ஆனா நம்ம அப்துல் ரெஹ்மான்  தனி விஸிட்டிங் கார்டுல்லே அச்சடிச்சு வச்சுருக்கார்!  My 1 Taxi services!

வண்டியை விட்டு இறங்குனதும்  ஒரு  பார்வையிலேயே  வலதுபக்கம் வானுயர்ந்த முருகனும் இடதுபக்கம் ஆனந்த நிலைய விமானமும் பளிச் பளிச்.

முதலில் மலை ஏறுவதா இல்லே  கீழே அடிவாரக்கோவிலான்னு மனம் நினைக்கும்போதே  கால்கள் தானாக  அடிவாரத்தின் இடதுபக்கம் போக ஆரம்பிச்சது. அம்யூஸ்மெண்ட் பார்க்  வளாகத்துலே இருக்கமோன்னு நினைக்கும் வகையில் அழகான கல்பாவிய தரையும் வெட்டி ஒழுங்குபடுத்தப்பட்ட புல்தரைகளுமா ஜொலிக்குது.  இடக்கோடியில்  நம்ம நேயுடு,  கமான் ஹியர்ன்னார். வளாகம் முழுசும் அவர் வழித்தோன்றல்கள் இங்கும் அங்கும் தாவி ஓடுவதும் அழகுதான்.

நாம் பாலியில் பார்த்த  அதே Macaque இனம் தான். ஆனால்  எதையெடுத்தாலும் பிடுங்கிக்கொண்டு ஓடாமல் கொஞ்சம் பண்பட்டவையா இருக்கு.  மெல்லிய ப்ளாஸ்டிக் பை மட்டுமே  அதன் பார்வையில் படும்.  ப்ளாஸ்டிக்  ஒழிப்பு உலகம் முழுசும் நடந்துச்சுன்னால்.....   வேற வகைப் பைகளுக்கு  மாத்திக்குமுன்னு நினைக்கிறேன்.


இங்கிருக்கும்  கோவில்வரிசையில்  மிகவும் சமீபத்தில் லேட்டஸ்ட்டா வந்தவர்  இவர்தான்.  அம்பதடி உசரம். நெஞ்சப் பிளந்து காமிக்கிறார், தன் இஷ்டதெய்வமான ராமனையும் சீதையையும். இவரைக் கடந்தால் இவருக்கான கோவில் ஒன்னு பச்சை நிறத்தில்.  2011 ஆம் வருசம் நவம்பர் 27 மஹாகும்பாபிஷேகம் நடந்துருக்கு. கூப்பிய கரங்களுடன்  மூலவரும் உற்சவரும் வெற்றிலை மாலையெல்லாம்போட்டுக்கிட்டு அருள் பாலிக்கிறாங்க.





கும்பிட்டுத் திரும்பி வந்தால் அடுத்து  பெருமாளும் தாயாரும். தான் திருப்பதி வெங்கடாசலபதின்னு காமிக்க  ஒரு பத்து படிகளுக்கு மேலேறிப்போகும் உசரத்தில்.  கிழக்கு நோக்கிய பெருமாளும் தெற்கு நோக்கிய தாயாரும்.  இங்கே பட்டர் ஒருத்தர் இருந்து  அர்ச்சனை செய்து பிரசாதம் (லட்டு) கொடுத்தார்.

 மேற்கண்ட ரெண்டு கோவில்களிலும் ஏகாந்த ஸேவை லபிச்சது. பெருமாள் சந்நிதிக்குமுன் இருக்கும் கம்பித்தடுப்பையொட்டி நின்னு தலையை இடப்பக்கம் திருப்பினால் தாயார்  சந்நிதி. ரெண்டுபேரோடும் ஒரே நேரத்தில் பேசக்கொள்ள நல்ல சௌகரியம் நமக்கு.  தாயாரே, பெருமாளே..... இன்னிக்கு 39 ன்னு சொன்னேன்.







பிரகாரம் சுற்றி வரும்போது இருந்த உண்டியல் இவர் திருப்பதிசாமிதான்னு அடிச்சுச்சொல்லுது:-))))


பெருமாள் சந்நிதிக்கு முன் செல்லம் போல பெரிய திருவடி.  கோபால் அவருடைய வழக்கம்போல் ஒரு தூணுக்குப் பக்கத்தில் அமர்ந்து  'சிவனே'ன்னு  இருந்தார். தியானமுன்னு நினைச்சுக்கலாம்தான்:-)

பெருமாளும் தாயாரும் இங்கே கிளை தொடங்கியது  2007 ஆண்டு. அந்த ஆண்டு சுதந்திர தின ஸ்பெஷல்(ஆகஸ்ட் 31) திறப்பு விழா. ஆச்சு  ஆறு வருஷம்.  வேற சந்நிதிகள்ன்னு பிக்கல்பிடுங்கல் இல்லாம  ஜாலியா ரெண்டு பேரும் நிம்மதியா இருப்பதைப்போல் எனக்கு ஒரு தோணல். ஆண்டாள் கூட இல்லைன்னா பாருங்களேன்!

கிளம்பும் சமயம் ஒரு குழந்தையும் தாயும்   இன்னொரு பெண்மணியும் வந்தாங்க.  நெய் விளக்கேத்திக் கையில் ஏந்தி சுத்தி வரும் பழக்கம் இங்கெல்லாம் இருக்கு போல. குழந்தை, சூடு தாங்காமலோ என்னமோ விளக்கைக் கீழே போட அது உடைஞ்சு நெய்யெல்லாம் பளிங்குத்தரையில் சிதறிவிழ. அம்மா கடுஞ்சொல் சொல்லி, தரையைத் துடைக்க பேப்பருக்கு அல்லாடினாங்க:( குழந்தை முகம் கோணி அழத் துவங்க.......   ப்ச்.  எதுக்குப்பா இதெல்லாம்?(


படிகளில் இறங்கித் தரைக்கு வந்தால் அங்கொரு  அழகான சின்ன அளவான குடும்பம், ரெண்டு குழந்தைகளுடன் .  நம்மை  க்ளிக்கித்தாங்கன்னு  கேமெராவைக் கொடுத்தேன். சின்னப்பேச்சில் , அவுங்க சுற்றுலாவுக்காக  யாழ்பாணத்துலே இருந்து வந்ததாச்  சொன்னாங்க. நிலமை எப்படின்னு கேட்டதுக்கு இப்பப் பரவாயில்லையாம்.

மேலே இருந்து கொட்டும் நீர்வீழ்ச்சி, அடியில்  அழகான  ஒரு தடாகம். செயற்கை நீரூற்றுகள்  தண்ணீரை  மேலே பீச்சியடிக்குது.  இதையொட்டிய  கட்டிடத்தின் பால்கனியில்  சிவனும் பார்வதியுமா சிட்டிங்.  சிட் அவுட் என்பதை சரியாப் புரிஞ்சுக்கிட்ட ஜோடி.  இதோ வரேன்னுட்டு


அடுத்த வீட்டுக்குப்போனோம். வழிநெடுக வரிசையா ஆறு (படை) வீடுகள்.  'அங்கே 'இருக்கும் அதே திருக்கோலங்களில் இங்கே(யும்) சின்னச்சின்ன  வெள்ளை மாடங்கள் அழகாத்தான் இருக்கு.






 கோவிலுக்குள் புள்ளையார்  அட்டகாசமான அலங்காரத்தில் இருக்கார். குருக்கள் தீபாராதனை காட்டி விபூதி  கொடுத்தார். அடுத்த சந்நிதியில்  மதுரை மீனாக்ஷி. கருவறை சுற்றியுள்ள வெளிப்ரகாரத்தில்  மீனாக்ஷி கல்யாண கோலம்,    ஒருதலையில் ரெட்டையானைகள் இப்படி  அழகழகான சிற்பங்கள். எல்லாம் சுதைச்சிற்பங்களே. தலவிருட்சம்,வாகனங்கள் எல்லாம்  இருக்கு.   நடராஜர் ஆடிக்கிட்டே இருக்கார்.




 மாடிப்படிகளில் ஏறிப்போனால்  யானைகள் வரவேற்கின்றன, மாடியில் அக்கடான்னு தனியா இருக்கார் லிங்கரூபத்தில்  சிவன். அவருக்கு எதிரே நந்தியும் பலிபீடமும் இருந்தாலும்  எதிரே கைப்பிடிச்சுவர் தாண்டி  ரொம்பவே அழகான பெரிய நந்தி ஒன்னு  கம்பீரமாக் காலை மடிச்சுப்போட்டு  உக்கார்ந்துருக்கு.  சந்நிதியைச் சுற்றிவர முடியும். ஒருபக்கசுவர் முழுசும் பனிபடர்ந்த  ஹிமயம், வரைஞ்சு வச்சுருக்காங்க.




பசங்கதான்  சுவாதீனமா மாடிக்குத் தாவி வந்து பக்தர் ஒருவர் கையிலிருந்த பையைப் பிடுங்கிக்கிட்டுப் போச்சுங்க.

படிகளிறங்கி கீழே வந்தோம்.  முருகனும் வள்ளியும் தேவயானையும், புள்ளையாரும், சிவனும் பார்வதியும்,மதுரை மீனாக்ஷியும்,  மயிலோடு நிற்கும் முருகனுமா தகதகன்னு மின்னும் உற்சவர்கள் தனித்தனி மாடங்களில் சுவரோரமாக நின்னு அருள்பாலிக்கிறாங்க.








ஆச்சு... எல்லோரையும் தரிசனம் செஞ்சு முடிச்சாச்சு. முருகா,ஹியர் ஐ கம்!

தொடரும்...........:-)




முருகா...என்பது உனைத்தானோ? (மலேசியப் பயணம் 10 )

$
0
0

கிட்டே போய் அண்ணாந்து பார்த்ததும் பிரமிப்பு !.  140 அடி உசரமாம்.  விஸ்வரூபம் எடுத்தது போல் நெடுநெடுன்னு நிக்கறான்.  முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.  உலகில் பெரிய முருகன் என்று பதிவாகிட்டான். பெரியது எதுன்னு  அவ்வையை இப்போ கேட்டிருக்கணும். பத்துமலை முருகனென்று பதில் வந்திருக்கும்:-)

இவனும்  வந்து சரியா ஏழு வருசம் ஆகி இருக்கு. 2006 இல் பிரதிஷ்டை.  மொத்தம் பதினஞ்சு  சிற்பிகள் . எல்லோரும்  மூணு வருசமா உழைச்சதின் பலன்.  தமிழகத்தின் திருவாரூரில் இருந்து தியாகராஜன் என்னும் தலைமைச் சிற்பியும் குழுவினருமா  வந்திருந்து  இவனை உருவாக்கி நிக்கவச்சுட்டாங்க.  இவர் ஏற்கெனவே மலேசியாவில் பல கோவில்களின் கட்டுமானத்தில் பணி செய்தவரே. போன பதிவில் பார்த்த அந்த அம்பதடி ஆஞ்சநேயரும்கூட இவர் கைவண்ணமே!  'பெரிய'முருகனுக்கு  1550 கன டன்  காங்க்ரீட் . தாய்லாந்துலே இருந்து  300 லிட்டர் தங்கக் கலவை இப்படி எல்லாம்  அதிக அளவில் பயன்படுத்தி இருக்காங்க.  மொத்தம் ரெண்டரை மில்லியன் ரிங்கிட் செலவு.

சிலையின் திறப்பு விழாவுக்கு, ஏற்கெனவே  தங்கமாலையுடன் ஜொலிக்கும் முருகனுக்கு  பொன்நிற மஞ்சள் சாமந்திப்பூ மாலை சூட்டுனாங்க பாருங்க, அதுவே பதினைஞ்சாயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள  ஒரு டன் எடையுள்ள  பூமாலை. ஆயிரம் கிலோவைத் தூக்கிக் கழுத்தில் போட மனிதக்கைகளால் முடியுமோ?  இயந்திரக்கைகளுக்கு அந்தபாக்கியம் கிடைச்சுருக்கு.  அந்த க்ரேன் என்ன புண்ணியம் பண்ணியதோ!  2006 வது வருச தைப்பூசம் , என்றும் மனதில் நின்னுபோச்சு  நம்ம மலேசிய மக்களுக்குன்னே சொல்லலாம்.

மலையேறலாம் என்று இந்தப்பக்கம் வந்து நின்னதும் மலைத்தேன்!  272 படிகள்.  என்னால் முடியுமான்னு  எனக்கே கவலை. நல்லவேளையா 16 படிகளுடன் பகுதிபகுதியா இருக்கு  கேசவா, நாராயணா, கோவிந்தா, மாதவா, மதுசூதனா, த்ரிவிக்ரமா,  வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா,  பத்மாநாபா,தாமோதரா, ஹரி, ராமா, க்ருஷ்ணா, கோபாலா, வாசுதேவான்னு  ஒவ்வொரு படிக்கும் சொல்லி மெள்ள ஏறினதும் ஒரு செக்மெண்ட்  முடிஞ்சுரும். ஒருநிமிச  ரெஸ்ட்.  அடுத்த  செட் படிக்கட்டில் கால் வைக்க இடையில்  பத்தடி சமதரை. திரும்பி நின்னு கண்ணில் பட்டதையெல்லாம்  க்ளிக் க்ளிக்.

மறுபடி கேசவா, நாராயணான்னு  ஆரம்பிச்சு இன்னொரு 16 படி. ஒரு மினிட் ரெஸ்ட். க்ளிக் க்ளிக். இப்படியே மெள்ள மெள்ள போய்க்கிட்டே இருக்கேன்.  நம்ம சனம் மூணு வரிசைப்படிகளிலும்  ஏறுவதும் இறங்குவதுமா இருக்காங்க. அவர்கள் கையில் இருக்கும் ப்ளாஸ்டிக் பைகளைக் குறி வச்சு  மூணு வரிசைகளிலும்  தாண்டிக்குதிக்கும்  குரங்கன்ஸ் இப்படி ஒரே கோலாகலம்.


நானும்  ஒருவழியா 17 முறை 16 நாமம் ஜெபிச்சு மேலே போய்  குகைக்குள் காலடி வச்சேன்.  ஒரு 25 நிமிசத்துலே  ஏறிட்டேனேன்ற (தற்)பெருமையுடன்  கண்ணை ஏறிட்டால், மயிலுடன் நிற்கும் முருகன் ,'என்னம்மா முட்டிவலி எப்படி இருக்குன்னு  சிரிச்சுக்கிட்டே வரவேற்கிறான்.

அவன் நிற்கும்   பாறைப்பகுதியின்  பக்கவாட்டுப் பொந்துக்குள்ளே ரெண்டுமூணு பேர்  உத்துப்பார்த்துக்கிட்டு இருக்காங்க. 'க்யா ஹே'ன்னேன். 'அந்தர் த்தோ ஸாஃப் ஹே'ன்னார்  டர்பன் தலைக்காரர்.  கஹாங்? குச் பி நை திக்தா...

என் கண்பார்வை இருக்கும் அழகுக்கு பாம்பு கண்ணுலே பட்டுட்டாலும்...... எதுக்கும் இருக்கட்டுமுன்னு க்ளிக்கி வச்சேன். சட்டை கிடக்கு!  என்ன தைரியம் பாருங்களேன் அந்தப் பாம்புக்கு! மயில் நிற்கும் பாறைக்கு அடியிலேயே  வாழ்ந்துக்கிட்டு இருக்கு! முருகன் இருக்கான்,பார்த்துப்பான்  என்ற தைரியமோ!!!!

நினைவுப்பொருட்கள் கடைகள் நிறைஞ்ச பகுதியைக் கடந்து  ஒரு பத்துப்படிகள் போல கீழே இறங்கினோம்.  வெளிச்சத்தில் இருந்து வந்துருக்கோம். உள் இருட்டு கண்ணுக்குப் பழக ரெண்டு நிமிசம் ஆச்சு. நல்ல பெரிய இடமாத்தான் இருக்கு. குகையைச் சுத்திக் கண்ணை ஓட்டுனால்  உள்சுவர்களுக்கு ஒட்டுனாப்போல  இடும்பன் சந்நிதி. இன்னும் சில படைவீடுகளின்  காட்சிகள்.  கொஞ்சதூரத்தில் மூலஸ்தானம் என்று போட்ட அம்புக்குறி. மஞ்சளா மின்னும்  விளக்கின்  பளீர்.


சின்னதா கருவறையும் முன்மண்டபமுமா கச்சிதம்.

அர்ச்சனை சீட்டு வாங்கப்போனால்..... மூணு வெள்ளி, சில்லறையாக் கொடுங்கன்றார் கவுண்ட்டர்காரர். கோவில்களில் சில்லறை மாத்துமிடம் கோபாலுக்கு நல்லாவேத் தெரியும். நேரா குருக்கள் கிட்டேபோய் அம்பதுக்கு ஒத்தை வெள்ளியா கைநிறையக் கத்தையா வாங்கிக்கிட்டு வந்தார்.

சீட்டு வாங்கிப்போய் குடுத்துட்டு அர்ச்சனையை கேட்டும், பார்த்தும் தரிசனம் செஞ்சுக்கிட்டோம். கற்பூர ஆரத்தி காமிச்சு விபூதி ப்ரஸாதம் கொடுத்தார்  குருக்கள். குட்டியூண்டு குகைக்குள் நிற்கும் வேலாயுதர் ஸ்வாமி அருள் பொங்கப் பார்க்கிறார். மன நிறைவுடன் நின்றேன்.

 நாம் ஒன்னும் (வழக்கம்போல்) வாங்கிப் போகலைன்னாலும் ஒரு வாழைப்பழம், தேங்காய் மூடி ஒன்னு, வெத்தலை பாக்கு கிடைச்சது.  வாழைப்பழத்தை மட்டும் கையில் எடுத்துக்கிட்டு மற்றவைகளை கோபாலின் கைப்பையில் போட்டேன். நல்ல ராசியான பை. லலிதா ஜுவல்லரியில்  கோபால் எனக்கு வைர ஒட்டியாணம் (!!!) வாங்கியபோது  இலவசமாக் கிடைச்சது:-)))(இது என்ன ஒட்டியாணக் கதைன்னு  தெரிஞ்சுக்க விருப்பமுன்னா 'என்னங்க வாங்கிறலாமா? 'போய் பாருங்க)



கையில் இருந்த பழத்தைப் பார்த்ததும்  கிட்டே வந்த செல்லத்துக்குக் கொடுத்தேன்.  அதில் அவன் பெயர் எழுதி இருக்கு:-)
இன்னொரு  நாலு வரிசைப்படிகள் மேலே போகுதேன்னு பார்த்தால்  அங்கே  வள்ளி தெய்வானையோடு முருகன் இருக்கானாம். முப்பத்தியஞ்சு படிகள். ஏறிப்போனால் பளீர்ன்னு இருக்கு  குகை. அண்ணாந்து பார்த்தால் ஓப்பன் சிஸெமீன்னு  பெரிய துவாரத்தில் ஆகாயம் தெரியுது.


குகையில் இயற்கையாக அமைஞ்ச  மேல் திறப்பு.  இதுவும் பெரிய இடமே! இங்கும் இடதுபக்கமா முன்மண்டபதோடு ஒரு கருவறை. சந்நிதியில்  வள்ளி தேவானை சமேதரா  சிரிச்சமுகத்தோடு நிக்கறான். மனைவிகளை விட்டுட்டு தனக்கு மட்டும் சந்தனக் காப்பு. நல்லா இருக்குடா நியாயம்?







சமீப காலங்களில் ஆண்களுக்கு(ம்) சிகப்பழகு க்ரீம்கள் மார்க்கெட்டில் அதிக அளவு பெருத்துக் கிடக்குன்னு இவனுக்கும் புரிஞ்சு போயிருக்கு:-)
இங்கும்  தரிசனம் சூப்பரா அமைஞ்சது.  கோபால் எழுந்து போனவர்,  கைநிறையக் கற்பூரக்கட்டிகளுடன் வந்து ' இந்தாம்மா, கொளுத்து'ன்றார்.  எதுக்கு இவ்ளோன்னால் அப்படித்தான் தர்றாங்கன்றார். ஏற்கெனவே எரியும்  கற்பூரக்கூட்டத்தில் இதையும் சேர்த்தேன். அப்புறம் நெய் விளக்கு ஒன்னை ஏத்தி,ஏந்திக்கிட்டு வர்றார்.  நாலுபேரைப் பார்த்துப் படிக்கணும்தான், அதுக்காக.....



 மண்டபத்துலே கொஞ்சநேரம் உக்கார்ந்து  தலைமேல் தெரியும் ஆகாயம் பார்த்துக்கிட்டு இருந்தேன். பெருமழை பெய்தால் தண்ணீர் உள்ளே தேங்காதோ?

பள்ளிக்கூட லீவுன்னு  குடும்பத்துடன் ஈப்போவிலிருந்து,   கே எல் வந்த தமிழ்ச்செல்வன் நண்பனானார்:-) தமிழ்பேசத் தெரியுமாம்.  பள்ளிக்கூடத்துலே தமிழ் சொல்லித்தர்றாங்களாம்! அப்படிப்போடு என் ராஜா!


 சரி,  வாங்க ....  கொஞ்ச நேரம் இப்படி சந்நிதி முன்மண்டபத்துலே உக்கார்ந்து  கால்களுக்கு ஓய்வு கொடுத்துக்கிட்டே  குகைக் கதையைச் சொல்றேன். கவனமாக் கேட்டுக்குங்க. பரீட்சைக்கு வரும் பகுதி இது:-)))

வெறும் நானூறு மில்லியன் ஆண்டுகள் வயசுதான் இந்த பத்துமலையில் இருக்கும் சுண்ணாம்புக்கல் குகைகளுக்கு.  ஆதியில் பழங்குடி மக்கள் பயன்படுத்திக்கிட்டு இருந்துருக்காங்க. அவுங்க காலத்துக்கு முன்னேயே வௌவால்கள்  குகைமுழுக்கச் சொந்தம் கொண்டாடிக்கிட்டு இருந்துருக்குங்க.(இப்பவும்தான், ஆனால் எண்ணிக்கை குறைஞ்சு போயிருக்கு)

மலையைச்சுத்தி ஏராளமான ரப்பர் தோட்டங்கள். மலையை ஒட்டியே ஓடும் ஆறு ஒன்னு இருக்கு. Batu river.  சில பல ரப்பர் தோட்டங்களுக்கு  பத்து எஸ்டேட், பத்து வில்லேஜ் எஸ்டேட் ன்னு ஆற்றின் பெயரையே அடையாளமா வச்சுருந்தாங்க. அதுவே பக்கத்தில் இருந்த மலைக்கும் பெயராச்சு. Batu என்ற பெயரை தமிழில் எழுதும்போது ஒரு  சங்கடம். பது, படு என்றால் சரியான உச்சரிப்பு வர்றதில்லை. வேற வழி இல்லாம நானும் பத்து என்றே சொல்லிக்கிட்டுப் போகப்போறேன்:(

ரப்பர் எஸ்டேட் ன்னு சொன்னதும் அங்கே வேலை செய்ய இந்தியாவில் இருந்து  இங்கே கொண்டுவரப்பட்ட தமிழர்களின் நினைவு வராமல் இருக்காது இல்லையோ?

ஈயச்சுரங்கம் காரணம் ஏராளமான சீனர்களும்  (1860)வந்து சேர்ந்துருந்தாங்க. சாப்பாட்டுக்கான காய்கறித் தோட்டம் போட்டுக்கறதிலே அவுங்க கில்லாடிங்க. எங்க கிறைஸ்ட்சர்ச்சில் கூட சீனர்கள் வந்த பிறகுதான்  நமக்குப் பரிச்சயமான வெள்ளைப்பூசணி, பாவக்காய்,சுரைக்காய், முள்ளங்கி, பீர்க்கங்காய், சில கீரைவகைகள் எல்லாம் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு.  ஹாட் ஹௌஸ் வச்சு விளைவிக்கறாங்க!

தோட்டத்துக்கு உரம் போட வௌவால் எச்சங்களைச் சேகரிக்க இந்த சுண்ணாம்புக் குகைகளுக்குள்ளே வந்துட்டு போயிருக்காங்க. ஆனால் இடத்தைப் பற்றி 'மூச்' விடலை. குன்றின் மேலே ஏறிப்போக வழி? மரத்தின்  வேர்கள், செடி கொடிகளைப் பிடிச்சுக்கிட்டு  மெள்ளமெள்ள ஏறிப்போகணும்.

 ரப்பர் தோட்ட வெள்ளைக்கார முதலாளிகளில்  இயற்கை நேசிகளா  இருந்த சிலர்  அக்கம்பக்கம்    குன்றுகள் காடுகளில்  எல்லாம் சுத்திப் பார்த்தபோது வெள்ளைக்காரர் வில்லியம் ஹோர்னடே (1878)  இந்த  குகை சமாச்சாரத்தை வெளியே சொல்லி இருக்கார். ரப்பர் தோட்ட தொழிலாளிகள்   தங்கள் ஓய்வு நேரத்தில்  வௌவால் பிடிக்க வந்து போய்க்கிட்டு இருந்தாங்க. அப்படியே அடிவாரத்துலே இருக்கும் குட்டையிலும் மீன் பிடிச்சுக்கிட்டுப் போறதுதான். இந்தக் குட்டைதான் இப்ப பெரிய தடாகமா இருக்கு. படம் போன இடுகையிலிருக்கு. பார்வதி பரமசிவன் பால்கனியில் இருந்து பார்க்கிறாங்களே அதே தடாகம்தான்.

கோலாலம்பூருக்கும்  இந்த குன்றுக்கும் இடைவெளி அதிகம் ஒன்னுமில்லை. வெறும் எட்டு மைல்தானாம்.  காயாரோகணம் என்றவர் கனவில் மாரியம்மா வந்து, மகனுக்கு ஒரு கோவில் இந்த குகையில் கட்டுன்னு சொல்லி இருக்காங்க.  மலையைத் தேடிக்கிட்டு வந்து பார்த்திருக்கார்.  கீழே இருந்து பார்க்கும்போது குகையின்  வாசல் ஒரு வேல் போல இருந்துருக்கு.

 அப்போ  இருந்த  கேப்டன் யாப்   ஆ   லோய் (Kapitan Yap Ah Loy, founder of modern Kuala Lumpur. செங்கற்சூளைக்கு  ஐடியா கொடுத்து அதுக்குன்னு  இடம் பார்த்து ஒதுக்கியவர் இவரே)) என்றவருக்கு  உதவியாளாரா இருந்தவர்தான் இந்தக் காயாரோகணம். நல்ல செல்வாக்கோடு  இருந்துருக்கார். காடுகளை அழிச்சு  தோட்டம் வைக்க ஏராளமான ஆட்கள் தேவைப்பட்டபோது, தமிழ்நாட்டுக்கு வந்து உழைப்பாளிகளை, வேலைவாய்ப்பு இருக்குன்னு சொல்லி மலேயாவுக்குக் கூட்டிப்போனவர் இவர்தான். நம்ம கோலாலம்பூர் மாரியாத்தா கோவில் கட்டிய தம்புசாமி இந்த காயாரோகணத்தின் மகன்தான். மகாமாரியம்மன் கோவிலை செங்கல் கட்டிடமாக் கட்ட அடிக்கல் நாட்டுனது  காயாரோகணம்தான். கோவில் வளர்ந்ததைப்பார்க்கக் கொடுப்பினை இல்லாமல் போச்சு.

அப்பாவின் கனவில் மாரியம்மா வந்து சொன்னதை அடிக்கடி நினைச்சுக்கிட்டு இருந்த தம்புசாமி, தகப்பன் மறைஞ்ச ரெண்டாவது வருசம்  1888 முதல்முறையா   சுண்ணாம்புக்கல் குகைக்கு  ஏறிப்போய்ப் பார்த்தார். கூடவே போனது  கந்தப்பத்தேவர் என்ற குடும்ப நண்பர்.  கோவில் ஒன்னு எழுப்பவேண்டியதுதான் என்ற எண்ணத்தோடு    வேல் ஒன்றை நட்டு வழிபாடு ஆரம்பிச்சு இருக்காங்க. முருகன் வந்துட்டான் என்ற சேதி தெரிஞ்ச அக்கம்பக்கத்துத் தோட்டத்தொழிலாளிகள் வர ஆரம்பிச்சது அப்போதான்.

மூணாம் வருசம் 1891 இல் முதல்முறையா தைப்பூசம் கொண்டாட்டம். அக்கம்பக்கத்து மக்கள் வந்து கலந்துக்கிட்டாங்க. குகைக்கு பது கேவ்ஸ்  என்ற பெயரும் ஆச்சு.  குகையில் ஹிந்து சாமி வழிபாடு நடக்குதுன்னதும், கோலாலம்பூர் நகர(!) கலெக்டர் ஜியார்ஜ் துரை, அந்த வேலைப் பிடுங்கிப்போடச் சொல்லி உத்தரவு போட்டார்.

சாமி மேலே கை வைக்க விடுவமான்னு  தமிழாட்கள் கூட்டம் குமிஞ்சது. கலெக்ட்டருக்கு எதிரா  கேஸ் போட்டுட்டாங்க. அப்போ நம்ம தம்புசாமி, புகழ்வாய்ந்த வெள்ளைக்கார  வக்கீல் டேவிட்ஸனுக்கு  உதவியாளராவும் மொழிபெயர்ப்பாளராவும்  இருந்தார். வழக்கு நீதிமன்றத்தில் நடந்துச்சு. வெற்றி, கடைசியில் முருகனுக்கே!

முருகன் ஒரு இடுகையில் அடங்கமாட்டேன்றான். பதிவின் நீளம் கருதி பாக்கியை அடுத்த இடுகையில் பார்க்கலாம்.


தொடரும்......:-)





வரம் தருவாய் முருகா .....(மலேசியப் பயணம் 11 )

$
0
0
வேரைப்பிடிச்சுத் தொங்கிக்கிட்டே எவ்ளோ நாள்தான் மலையேற முடியும்?  1920 ஆம் ஆண்டு,அங்கங்கே கொஞ்சம் வெட்டிச் சரியாக்கி மரப்படிகள் வச்சுக் கட்டுனாங்க. தைப்பூசம் களை கட்ட ஆரம்பிச்சது. இப்படியே  ஒரு பத்தொன்பது வருசம் ஓடுச்சு.  முருகனின் புகழ் பரவ ஆரம்பிச்சு உச்சத்துக்குப்போகும் நிலை பார்த்து, 1939 ஆம் ஆண்டு ராமசந்திர நாயுடு என்பவர், கெனிசன் ப்ரதர்ஸ் நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு ரெட்டைப் படிகள் வரிசை ஏற்பாடு செஞ்சார்.  தோட்டத்தொழிலாளிகள் அனைவரும் தோள்கொடுத்தாங்க. அவுங்களின் ஒரு நாள் சம்பளம் முருகனுக்குப் போச்சு. அந்தக் காலக்கட்டத்தில் ஒரு நாளைக்கு அரை ரிங்கிட்தான்  தினக்கூலி(யாம்)

கட்டி முடிச்சப்ப அது 272 படிகளா அமைஞ்சது.  அதிக அளவில் தைப்பூசத்துக்குக் காவடிகள் எடுத்துவர ஆரம்பிச்சாங்க. கட்டுப்படுத்த முடியாமல் போனபோது இன்னொரு வரிசைப்படிகளையும் காவடிக்குன்னே   1975 ஆம் ஆண்டு  கட்டிவிடும்படி ஆச்சு. இப்போ அழகான மூன்று வரிசைகள்.

பத்து  ஆற்றின் கரையில் இருந்து அலங்கரிச்ச காவடிகள் புறப்பட்டு வரும். தைப்பூசம் வரப்போகுதுன்னவுடனே  ஒரு செண்ட் காசுகளை சேகரிக்கத் தொடங்குவாங்களாம். திருவிழா சமயம்  படிகளில் வரிசையா  இடம்பிடிச்சு உக்காந்துருக்கும் பிச்சைக்காரர்களுக்கு  ஒவ்வொரு செண்ட் காசாப் போட்டுக்கிட்டுப் போறது சின்னப்பிள்ளைகளுக்கு பயங்கர அட்ராக்‌ஷனா இருந்துருக்கு.  நல்லவேளை இந்தக்காலத்தில்  பிச்சைக்காரர்கள் யாரும்  இப்படி  படிகளில்  உட்காருவதில்லை. ஓரளவு  நல்ல வாழ்க்கை அமைஞ்சுருக்கு போல!

ஆரம்ப காலங்களில் கார்த்திகை தீபம் சமயங்களில்  மாட்டுவண்டி நிறைய பப்பாளிக் காய்களை ஏத்திக்கிட்டு வந்து அதை நெடுகா, நீண்டவாக்கில்  ரெண்டா வகுந்து உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிட்டு , எண்ணெய்  ஊத்தி அகல்விளக்குகளா  தீபமேத்தி இருக்காங்க. வாவ்......  என்ன ஒரு  கவிதை!!!

திருத்தணியில் நடப்பதுபோல இங்கேயும்  படித்திருவிழா கூட ஆண்டுக்கு ஒரு முறை செய்யறாங்களாமே!!!!

இனம், மதம் இப்படி எந்தப் பாகுபாடும் இல்லாம  எல்லோருமே மலையேறி வரலாம்.  எல்லாமும், எல்லாருக்கும் என்பது எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.  காலணி கூடப் போட்டுக்கிட்டே போகலாம்.  சந்நிதிக்குள் போகுமுன் வெளியே கழட்டினால் போதும். குரங்கன்ஸ் கூட  செருப்பு திருடத் தெரியாத  அப்பாவிகள். மூலவரைப் படம் எடுக்கக்கூட எந்த ஒரு தடையும் இல்லை. கெமெரா சார்ஜ்? மூச்! அப்படி ஒன்னு இருப்பதே இங்கத்து மக்களுக்குத் தெரியாது போல!

தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை கோவில் திறந்துருக்கு.  காலையில் கொஞ்சம் சீக்கிரமா மலையேறிட்டால் அவ்வளவாகக் களைப்பு தெரியாது. இடையில் நடை அடைக்கிறாங்களா என்ன? கே ஆர் எஸ் சொல்றாரே! 

தைப்பூசம் விழா சமயத்தில்  ஒரு படிக்கட்டு , காவடிகளுக்குன்னே ஒதுக்கிருவாங்க.  வெறும் காவடியும் பால்குடமுன்னாலும் கூடப் பரவாயில்லை. உடம்பு முழுசும் வேல் குத்திக்கிட்டு கூண்டு போல் இருக்கும் பெரிய காவடியும் தூக்கி மலையேறும் பக்தர்களைப் படத்தில் பார்க்கும்போதே... எனக்கு மனசெல்லாம் சிலிர்த்துப்போகுது.  பக்தின்றதே பெரிய போதையா இருக்கு(ம்) போல!!!!!

போன திருவிழாக் காட்சிகளை இங்கே படங்களாப் புடிச்சுப் போட்டுருக்கார் ஒரு புண்ணியவான். அவருக்கு நன்றி சொல்லிக்கிறேன். விருப்பம் இருந்தால் க்ளிக்கிப் பார்த்துட்டு அவருக்கும் அங்கே ஒரு நன்றி போட்டீங்கன்னா நல்லது

ஆரம்பநாட்களில்  ஒருநாள் விழாவா இருந்த தைப்பூசத் திருவிழா, இப்ப ஏழுநாள் கொண்டாட்டமா ஆகிப்போச்சு. கடைகளும் வேடிக்கை விநோதங்களுமா  எக்கச்சக்கமான  கூட்டம் அம்மும் பெரிய திருவிழா இது. இந்த 2013 தைப்பூசத்துக்கு  16 லட்சம்பேர் கூடி இருந்தாங்களாம்.

தைப்பூசத் திருவிழாவில் அரசாங்கப் பிரதிநியாகக் கலந்துகொள்ள பிரதமரே வருகிறார்.  மதம் என்பது  இங்கே தடையே இல்லை பாருங்களேன்!  இந்த வருசம் பிரதமர் நஜீப் அவர்கள் ஊரில் இல்லை என்பதால் துணைப்பிரதமர்  மொய்தீர்,  விழாவில் கலந்து கொண்டாராம்.

கோலாலம்பூர் மஹா மாரியம்மன் கோவிலில் இருந்து  தைப்பூசத்துக்கு முதல்நாள்  மாலை , முழு அலங்காரத்துடன் தயாரா இருக்கும் வெள்ளிரதத்தில்  முருகன் குடும்பசமேதரா ஏறினதும்  நடு ராத்திரி 12 மணிக்குப் புறப்படும் ரதம், இந்த 13 கிலோமீட்டர் தூரமும் பக்தர்கள் புடை சூழ, மேளதாளங்கள் ஒலிக்க   பத்துமலைக்கு மறுநாள் காலை பத்துமணிக்கு வந்து சேர்ந்துருமாம். வழி நெடுக தண்ணீர் பந்தலும், பக்தர்களுக்கு  பிரசாத விநியோகங்களுமா  ஜேஜேன்னு  இருக்குமாம். நினைக்கும்போதே.... ஒருமுறை சான்ஸ் கிடைக்காதான்ற .... நப்பாசை.

தமிழர்கள் மட்டுமில்லாமல்  மலேய்களும் சீனர்களும் கூட அலகு குத்திக்கிட்டுக் காவடிகளைச் சுமந்து வந்து  முருகனை வழிபடறாங்க! விதவிதமான அலங்காரக் காவடிகளைப் பார்த்து ரசிக்கவே ஒரு கூட்டம் வருதாமே!


காவடிகளுக்கு  மயிற்பீலிகளால் அலங்காரம் செஞ்சு தர அதிகபட்சமா அஞ்சாயிரம் ரிங்கிட்  ஆகுதாம். சிம்பிள் அலங்காரமுள்ள சின்னக் காவடிகள் நூறு ரிங்கிட்டுக்குக்  கிடைச்சுருமுன்னு சொன்னார்  அலங்காரத்தொழிலில் பலகாலமா ஈடுபட்டிருக்கும் அன்பர். முந்தியெல்லாம் மயிற்பீலிகள் மலிவாக் கிடைச்சது. அம்பத்தி ஏழு சென்ட்தான். இப்ப ஒவ்வொன்னும் ஒரு வெள்ளின்னு விலை ஏறிப்போச்சுன்னு காரணம் சொல்றாங்க. மயில்  பீலி கனமே இல்லைன்னாலும் அலங்கரிச்ச காவடிகள் சிலசமயம் நூறு கிலோ எடை வந்துருமாமே!

 அம்மாடியோவ்....  அதையும் சுமந்து 272 படிகள் ஏறணுமுனால்......  அந்த முருகந்தான்  சக்தி கொடுப்பான் போல!

இந்தியாவில் இருந்து மயிற்பீலி இறக்குமதியாகுது. எனக்கு  மயிற்பீலி ரொம்ப ஆசை. எங்கூருக்குள்ளே கொண்டுவர  அனுமதி இல்லை:( அதனால் க்ளிக் க்ளிக் மட்டுமே!




பத்துமலையின் மொத்த கோவில்களையும் பொறுப்பேத்து நடத்துவது ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானம்தான்.  நான் முதல்முறை (2003)கே எல் வந்தப்ப முருகன் மட்டும் குகைக்குள்ளே தனியா நின்னு இருந்தார்.  தனியா நிக்கறவனிடம் என்ன பேச்சுன்னு பேசாமப்போயிட்டேன்:-)  இப்ப என்னன்னா பெரிய குடும்பியா சுற்றம் சூழ!!!

நம்மாட்கள் எல்லோரும்   பக்தர்களை வந்து கண்டுக்கிட்டதும் கையில் உள்ள ஒரு தேங்காய் மூடியைத் தட்டிக்கிட்டுப்போய் ஒரத்தில் உள்ளதை முடிஞ்சவரை பல்லால்  சுரண்டித் தின்னுட்டு,      பல்லுக்கு எட்டாத நிலை வந்ததும் தூக்கிப்போட்டுட்டு வேறொரு பக்தரை வழிமறிப்பதுமா இருப்பதைப் பார்த்துட்டு, நம்ம பையில் இருக்கும் தேங்காய் மூடியை உடைச்சே கொடுக்கச் சொல்லி கோபாலிடம் சொன்னேன்.  தேங்காய்ச்சில்லா  இருந்தால் திங்க சுலபமா இருக்காது?

அதேபோல்  உடைச்சுக் கொடுத்தார்.  பயபுள்ளைக்கு அப்படித் தின்னத் தெரியலை! கையில் எடுத்துப் பார்த்துட்டு, வேணாமுன்னு சொல்லிட்டுப் போகுது.  பழக்க தோஷம்!!!




கீழே போகலாமுன்னு  எந்திருச்சு வந்தோம்.  இந்த மேல் குகையின்  உட்புறச்சுவர் ஓரங்களிலும் தகப்பன்சாமி காட்சி தர்றார். நடராஜரின் பொன்னம்பலம் விமானம் இன்னொரு புறம்.  உத்துப் பார்த்தால் குகையின் மேல்கூரையை ஒட்டி சிலபல வௌவால்கள் தலைகீழ்த் தவம். சுண்ணாம்புப் பாறைகள்  அப்படியே கீழிறங்கி வருது.





நினைவுப்பொருட்கள்  கடையில் முருகர் குவிஞ்சு கிடக்கார்.  200 ரிங்கிட் முதல்  விலை மேலே போகுது. அடிவாரத்தில் பார்த்துக்கலாமுன்னு படி இறங்க ஆரம்பிச்சோம்.  எண்ணி பதினாலே நிமிசத்தில் கீழே வந்தாச்சு.   வழியிலேயே இருட்டுக் குகை ஒன்னு இருக்கு. பழம்தின்னி வௌவால்களும் இன்னும் சிலபல மிருகங்களும் இருக்காம்.  வனத்துறை பாதுகாக்கும் இடம் என்பதால் போகலை.  குறிப்பிட்ட எண்ணிக்கையில்  சிலநாட்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டாம்.

மேலே முருகனின் குகைகளைத் தவிர இந்த மலையில்  இன்னும் சிறுசும் பெருசுமா பதினெட்டு குகைகள் இருக்குன்னும் அடிவாரத்தில்   ராமாயணக்குகை என்பதில்  ராமாயணக் காட்சிகளையும், வள்ளுவர் கோட்டம் என்பதில் குறள் சொல்லும் சேதிகளைக் காட்சிப்படுத்தி இருக்காங்கன்னும் இன்னும் கலைக்கூடம் ஒன்னும் இருக்குன்னு  அப்புறமாக் கேள்விப்பட்டேன். (நெவர்  மைண்ட்.நெக்ஸ்ட் டைம் (இதுதான் எங்க கிவி ஆட்டிட்யூட்!)
ஆனாலும் வால் ரொம்பத்தான் நீளம்:-)))



தங்க முருகனுக்கு இடப்புறம்  இன்னொரு சந்நிதி  சனீஸ்வரனுக்கு. மூலவராக சனி இருக்க, அவர் முன்னே மண்டபத்தில்  நவகிரகங்கள் இருக்காங்க.  சுவரில் நவகிரக ஸ்தோத்திரங்கள் எழுதி வச்சுருக்காங்க.

அங்கேயும் ஒரு கும்பிடு போட்டுட்டு அடுத்துள்ள சின்ன வணிக வளாகத்துக்குள் நுழைஞ்சோம். புத்தகக்கடை ஒன்னு கண்ணில்பட்டது.  வழக்கமான 'ஆன்மீக'புத்தகங்களுக்கிடையில் பத்துமலை என்றதைப் பார்த்து  சரித்திரம் தெரிஞ்சுக்கலாமுன்னு வாங்கினோம்.  ஜெயபக்தி ட்ரஸ்ட் போட்டுருக்கும் souvenir வகை. முதல் பத்துபக்கங்களில்  டடோ (Dato)ஸ்ரீ சாமிவேலு அவர்கள்,(மலேசிய இந்தியக் காங்ரெஸின் தலைவர்)   ஸ்ரீ மஹாமாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் நடராஜா  அவர்கள், பதிப்பாளர்  ஜெயபக்தி ட்ரஸ்ட்  ஆகியோரின் வாழ்த்துரை, முன்னுரைகளுடன், முருகன் பெருமைகளும், தலவரலாறுமாக இருக்க மீதி உள்ள எழுபத்தி இரண்டு பக்கங்களும் படங்களே!  அதிலும் ராமாயணக்குகை, கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம் பற்றியவைகளே அதிகம்.  நேரில் பார்க்கவில்லையே என்ற மனக்குறை  தீர்ந்ததுன்னே சொல்லலாம்.

புத்தகத்தின் தலைப்புதான்..... எனக்குக் கொஞ்சம்.......   பத்துமலை என்று தமிழிலும், Batu Caves என்று ஆங்கிலத்திலும்.  போயிட்டுப்போகுது போங்க.


கடையில் விற்பனையாளரா இருக்கும் இளைஞர் , யாழ்பாணத்துக்காரர். வந்து மூணு மாசம் ஆச்சாம். உறவினர் மூலம் இந்த வேலை கிடைச்சதுன்னார்.

இன்னும் சிலபல நினைவுப்பொருட்கள் கடைகளும்,  ரெடிமேட் உடைகளும்  கைவினைப்பொருட்களும்  விற்கும்  கடைகளும் இருக்கு. கூடவே சில உணவுக்கடைகளும். தாகமா இருக்கேன்னு ஆளுக்கொரு இளநீர்.  அஞ்சு விலை என்றாலும்  ஃப்ரிட்ஜுக்குள் வைத்திருந்ததால்  ஆறு என்றார் கடைக்காரர்.

இப்பெல்லாம் தினமுமே குறைஞ்சது மூவாயிரம் பேர் பது குகைகளுக்கும், முருகன் தரிசனத்துக்கும் வந்து போறாங்களாம். அதுவும் வார இறுதின்னால் இன்னும்  கொஞ்சம் கூடுதலாம். மலேசிய அரசு, இந்த இடத்தை மேம்படுத்தி  அலங்கார விளக்குகளும்  அடிப்படை வசதிகளும் அமைக்க சுற்றுலாத்துறையின் மூலம்  3.6 மில்லியன் ரிங்கிட்டுகள்  செலவு செய்துகொள்ள  பிரதமரே அனுமதி   கொடுத்தாருன்னு  கோவில் நிர்வாகம் அறிக்கையில் சொல்லி இருக்காங்க.  அடிவாரத்துலே இருக்கும் 16 ஏக்கர்  இடமும் அப்பழுக்கின்றி ஜொலிப்பது பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.

இதுக்குப்பின் இன்னுமொரு 4.6 மில்லியன் ரிங்கெட் அரசு ஒதுக்கித் தந்ததை வாங்கிய தேவஸ்தானம் பத்துமலை அடிவாரத்துலேயே ஒரு பள்ளிக்கூடம் கட்டி விட்டுருக்கு. கல்விதான் கடவுள் என்பது ரொம்பச் சரி. கல்வி கிடைச்சாலே மக்கள்  மேன்மையடைஞ்சுருவாங்க.  எல்லோருக்கும் கல்வி வேண்டும், முருகா.

முருகனை  நம்ம வீட்டுக்குக்கொண்டு போகணும். சில கடைகளில் விசாரிச்சப்போ... சரிவரலை.  என்னவோ தோணலுடன் கண்ணில் பட்ட இன்னொரு கடைக்குள் சட்னு நுழைஞ்சேன். அங்கெல்லெ நமக்காகக் காத்துக்கிட்டு இருக்கான், அப்ப எப்படி வேற கடைகள் சரியாகும்?

நெடுந்தொலைவு பயணப்படும் முருகனை நல்லபடி  பேக் பண்ணிக் கொடுத்தார் கடைக்காரர். என் கேபின் பேக் இனி முருகனுக்கே!

பட்டைபட்டையாத் தொங்கும் மயிற்பீலிகளை அடுக்கிட்டால் நம்ம காவடி ரெடி. எழுத்துக்கலை கைகூடிவர , வரம் தருவாய் முருகா.......

நூற்றி இருபத்தியஞ்சுன்னு  இருந்தவர் நியூஸி வரும் ஆசையில் சட்னு எம்பதுக்கு இறங்கி வந்தார்.  நம்ம  ஜிராவின் ஆசை இப்படி நிறைவேறுச்சு:-)



(நம்ம வீட்டுக்குள் வந்ததும் அண்ணன் பக்கத்தில் இடம் புடிச்சார். அவுங்க குடும்பக்கார்னர் அங்கேதான் இருக்கு)

மணி  பனிரெண்டரை ஆச்சே, திரும்பிப் போக என்ன டெக்ஸின்னு பார்த்தால்  ரெண்டும் கலந்த ஒன்ணு நமக்கு.  முப்பத்தியஞ்சுக்கு  செண்ட்ரல், பேரம் சரியாச்சு.

பார்வையில் இருந்து தப்ப முடியாதவனிடம், போயிட்டு வரேண்டான்னு  சொல்லிட்டு  வண்டி ஏறினோம்.

தொடரும்...............:-)

PIN குறிப்பு:  பத்துமலையில் எடுத்த படங்கள் எல்லாவற்றையும் எடிட்செய்யாமல் கூகுள் ப்ளஸ் ஆல்பத்தில் போட்டுருக்கேன். நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம்,

https://plus.google.com/u/0/photos/106551900495801732302/albums/5914700996316280753

கோவில் வரலாறு , இன்னும் மற்ற சில தகவல்கள் எல்லாம் கோவிலின் வலைப்பக்கத்துலே இருந்தும், நாம் வாங்கின புத்தகத்துலே இருந்தும், இன்னும் சில மலேசியத் தோழியரிடமிருந்தும் தெரிந்து கொண்டதே!  அவர்கள் அனைவருக்கும் துளசிதளத்தின் நன்றி.




இலை போட்ட சாப்பாடு......(மலேசியப் பயணம் 12 )

$
0
0
ஒத்தைப் பருக்கையை விடாம அப்படியே வழிச்சுத் தின்னுருக்கேன். என்ன ஆச்சுன்னு இவர் திகைச்சுப்போய் பார்க்கிறார். அப்படி ஒரு பசியா? இல்லை  சம்பிரதாயமான  சாப்பாட்டைப் பார்த்து  ரொம்பநாளாயிருச்சேன்ற நினைப்பா?  ஒன்னு ரெண்டு மூணுன்னு விரல்விட்டு எண்ணிப்பார்த்து  எட்டுநாளாச்சு  நம்மசாப்பாட்டைப் பார்த்துன்னேன். அப்ப பாலியில் தின்னது?  ஐய்ய.... அது நார்த் இண்டியன் சாப்பாடில்லையோ?

சரவணபவன் (சென்ட்ரல்) வாசலில் இறக்கிவிட்டுட்டார் டெக்ஸிக்காரர். உள்ளே போய் மெனுகார்டைக் கையில் எடுத்தால்  சவுத் இண்டியன் லஞ்ச்  ஆன் பனானா லீஃப்.  ஆஹா..... இன்னிக்கு விருந்து சாப்பிடவேண்டிய நாள்தான்.  இலைச்சாப்பாடுதன்னே அய்க்கோட்டே!

மெனுகார்டை ஆராய்ஞ்சவர், மோர்மிளகாயைத் தட்டில் காணோமேன்னு விசாரிச்சதும், பரிமாறுபவர் ஓடிப்போய்க் கொண்டுவந்து விளம்பினவர், நிறையப்பேர் அதை சாப்பிடாமல் தட்டுலேயே வேஸ்ட்டா விட்டுட்டுப்போயிடறாங்க. அதான் கேளுங்கள் கொடுக்கப்படும் வகையில் சேர்த்தாச்சுன்னார்.

இலை போட்ட சாப்பாட்டில் சாம்பார், ரசம், மோர், ரெண்டு கறி வகைகள், கூட்டு, ஸ்பெஷல் குழம்புன்னு ஒரு புளிக்குழம்பு, மோர்க்குழம்பு, தயிர்பச்சடி, ஒரு இனிப்பு,  ஊறுகாய், மோர்மிளகாய் அப்பளம், அளவுச்சோறு . இதுக்கு பத்து ரிங்கிட்,நாப்பது சென்ட்  சார்ஜ். இங்கெல்லாம்  சாப்பாட்டுக்கு  6 % வரி கூடுதலா தனியா பில்லில் சேர்க்கறாங்க.

திருப்தியா சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு கல்லாக்காரரிடம்  அருமைன்னு சொல்லிட்டுக் கிளம்பினோம். வலக்கைப்பக்கம் நடந்தால் மோனோ ரயிலுக்கான சென்ட்ரல் ஸ்டேஷன் வருமாம்.  இந்த சாலை முழுசும் ஏகப்பட்ட ரெஸ்டோரன்கள்.  மீன் தலை இங்கே ஸ்பெஷாலிட்டி ஐட்டம்போல!  பல இடங்களில் காட்சிக்கு உக்கார்ந்துருக்கு.

 சாலை பிரியும் ஒரு இடத்தில் கூடாரம் ஒன்று போட்டு சுறுசுறுப்பான வியாபாரம். பஜ்ஜி, போண்டா, வடை வகையறாக்கள்.. எல்லாம் மகளிரணி தயாரிப்பு. நல்ல சுவையாக இருக்கும்போல்.... கூடியிருக்கும் கூட்டமே சொல்லுது. வடை இழுத்தாலும் வயிற்றில் இப்போ இடமில்லை:(




ஹொட்டேல் டி செண்ட்ரல் , பார்க்க நல்லாவும்  அறைவாடகை விலை குறைவாகவும் இருப்பதாகத் தோணுச்சு. அடுத்து ஒரு  தமிழ்சினிமா  ஸி டி கடை.  தமிழ்ப்பாட்டு முழக்கமா இருக்கு.  சும்மா எட்டிப்பார்த்தேன்.  வாங்கிக்கத் தோணலை. நம்ம வீட்டுலேசினிமா சினிமான்னு  தேடித்தேடிப் பார்க்கும்  நபர் உள்ளே போய்  விசாரிச்சுட்டு வந்தார்.


புகிட் பின்டாங் ரயில் நிலையத்துக்கு  தானியங்கி இயந்திரத்தின் மூலம் பயணச்சீட்டு வாங்கிக்கிட்டு  மாடியேறிப்போய் ரெயிலைப் பிடிச்சோம்.  ரயிலில் போகும்போது கண்ணுக்குத் தெரியும் காட்சிகள் எல்லாம்  அதிக தூரமுமில்லாமல் ரொம்பப்பக்கத்திலும் இல்லாமல் இல்லாமல் நம்ம கெமெராக் கண்களுக்குப் பொருத்தமா இருக்கு. க்லாங் நதி அமைதியா நகரத்துக்குள்ளெ ஓடுது. கூவத்துக்கு விடிவுண்டோ என்ற எண்ணம் வந்து தொலைக்குது:(

அறைக்கு வந்ததும் கொஞ்சநேரம் ஓய்வு.  உண்ட மயக்கம் இல்லையோ!  இன்றைக்கு மாலை நம்ம பேட்டையிலேயே வேடிக்கை பார்க்கலாம்.  ஷாப்பிங் டிஸ்ட்ரிக்ட் என்ற பெயர் புகிட் பின்டாங்குக்கு இருக்கே.

மாலை கிளம்புமுன்,  கொண்டாட்டத்தின் ஆரம்பமாக , காலையில்  முதலில் ருசிக்க நினைச்சு, மறந்து போன  இனிப்பை உள்ளெ தள்ளினோம். மாலைப்பொழுது(ம்) இனிதாக இருக்கட்டும்! ததாஸ்து.....

கூடாரம் என்னும் புது ஷாப்பிங் மால் இப்போதைக்கு மிகப்பெருசு என்னும் வரிசையில்முதலில் நிக்குது.  பதிமூணு லக்ஷத்து எழுபதாயிரம் சதுர அடிகள் பரப்பு.  ஐநூறு  கடைகள். எல்லாமே விஸ்தாரமாத்தான்.  காலை பத்துக்குத் திறந்தால் இரவு பத்துக்கு மூடுவாங்க. நின்னு நிதானமா ஷாப்பிங் செய்யலாம்.  நமக்கு விண்டோ ஷாப்பிங் செய்ய கசக்குதா என்ன?

கூடாரத்தின் நுழைவு வாசலில் ஒரு நீரூற்று. Liuli Crystal Fountain . இதுதான் மிகவும் உயரமான செயற்கை நீரூற்று என்று பதிவாகி இருக்கு. முழுசும் கண்ணாடி. மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்திப்பூ  இடம்பிடிச்சுருக்கு.  ஆறு மீட்டர்  விட்டமும்  3.6 மீட்டர் உயரமும்.  வெவேறு நிறமுள்ள  ஒளி வரும்படி அமைச்சுருக்காங்க. பிரமாதமான லைட்டிங்ஸ்.  மால் ஆரம்பிச்சது 2007 என்றாலும்   இந்த நீரூற்று வச்சது என்னமோ 2009 இல்தான்.





மூணு பெரிய கண்ணாடிப் பாத்திரங்கள்,  மலேசியாவின் பல்வேறு இனமக்கள் இணைஞ்சு வாழும் கலாச்சாரத்தைக்குறிப்பிடுதாம்.  (Malaysia's multiracial culture living)  மலேசியாவின் சுற்றுலாத்துறை வெகுவாகப் பாராட்டி இருக்கு.

Teh tarik (literally "pulled tea")  இதை 'ஒரு மீட்டர்  டீ'ன்னும் சொல்றாங்க:-) எப்படி டீயை இழுப்பாங்க?  நம்மூர்  நாயர் கடையில் போய்ப் பாருங்க. அவர் எல்லா டீயையுமே இழுத்துருவார் !   டீயை  பெரிய (mug) மக்  இரண்டில்  இந்தக் கைக்கும் அந்தக் கைக்குமா மாத்தி மாத்தி ஆத்தறதுதான் இங்கே tarik! தலைக்கு மேல் கையை உசரத்தில் வச்சு  அங்கிருந்து  டீ அடுத்த மக்குக்குள் சிந்தாமல் சிதறாமல் பாய்வது' ஆ'ன்னு வாயைப் பொளந்து பார்க்கும் அதிசயம் வெள்ளைக்காரனுக்கு!
 சுட்ட படம்


நாலைஞ்சு தளத்தில் கடைகள் இருக்கே தவிர  வானம் நோக்கிப்போகும்  அடுக்கு மாடிகளில் ஆடம்பரமான வீடுகள்தானாம்.  விலைக்குத் தர்றோம் வேணுமான்னு  கேட்டதுக்கு மறு பேச்சில்லாம  தலையை மட்டும் இடதுவலதா ஒரு ஆட்டு.  பெவிலியன் டவர். வெறும் இருவது மாடிகள்தானாம்,   (ரொம்பப் புளிக்குதே இந்தப்பழம்) யாருக்கு வேணும்?

ச்சும்மாச் சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம். ஒரு கேஃபேயில் வெளி வராந்தாவில்  உக்கார்ந்து சாப்பிடும் அமைப்பு ரொம்பப் பிடிச்சது. சுவரிலேயே ஒட்டிப்பிடிக்கும் இருக்கையும் மேசையும். அறுவது  உணவுக்கடைகள் இதுக்குள்ளே  இருக்குன்னு  தகவல்.   இன்னொரு மாடியில் ஃபுட் கோர்ட் ஒன்னும் இருக்கு. இந்தியா வகைகள் கூட கிடைக்குமாம்.

போய்ப் பார்க்கலாமுன்னு போனால்....   அது ஒரு Teh Tarik Station  ரொட்டிச்சனாய் (பயந்துறாதீங்க. நம்மூர்  பரோட்டா தான்) தேத்தண்ணி ஆர்டர் கொடுத்தோம். ச்சாயா இப்ப   ஸ்பெஷல் டீலில் இருக்கு. வழக்கம் போல் அரை லிட்டர்  டீ.

பெவிலியன் மாலில் சுத்திட்டுப் பக்கத்து கடையில் ஷாப்பிங் செஞ்சோம். கோபாலுக்கு   ரெண்டு சட்டைகளும், மகளுக்கு  ரெண்டு க்ரீமும்.  எனக்கு? இந்த முறை மெலமைன் வாழை இலைத் தட்டு  வேணும் . கொக்குக்கு ஒன்றே மதி!  நோக்கமில்லாமல் எந்தக் கடைக்குள்ளும் நுழையமாட்டேன் கேட்டோ:-)

நல்ல தரமான ஷூஸ்  இருக்குன்னு  செருப்புக்கடைகளில் புகுந்து புறப்பட்டார்.  லேடீஸ்தான் ஷாப்பிங்கில் அதிக நேரம் செலவழிப்பாங்களாமே!  அது பொய் என்பது உறுதியாச்சு:-)

மறுநாளைக்கு தேவையான பழங்கள் வாங்கிக்கிட்டு அறைக்குத் திரும்பினோம்.

தொடரும்............:-)






ஸ்கை ப்ரிட்ஜ் .பெட்ரோநாஸ் ரெட்டைக் கோபுரம்....... (மலேசியப் பயணம் 13 )

$
0
0
அரசர் நீடுழி வாழ்கன்னு நிரந்தமான  சொற்களோடு  Daulat Tuanku பிரமாண்டமா நிற்கும் இரட்டைக்கோபுர வளாகத்தில்  போய் இறங்குனப்ப  மணி  ஒம்பதே முக்கால் கூட ஆகலை.  காமணிக்கு முன்னாலே வந்துறனுமுன்னு  நமக்கு உத்தரவாகி இருக்கேன்னு  காலையில்  ரெடியாகி, ப்ரேக்ஃபாஸ்டை அறையிலே முடிச்சுக்கிட்டு கீழே வந்தவுடன் சட்னு டெக்ஸி கிடைச்சிருச்சு.


  பத்து நிமிசத்துக்கும் குறைவான பயணம். மண்ணச்சநல்லூர்காரர்  பழனிச்சாமியின் ரெட்  டெக்ஸி. சின்னப்பேச்சை ஆரம்பிச்சு முதல் கேள்வியை முடிக்குமுன் நாம் இறங்க வேண்டிய இடம் வந்துருச்சு. வழக்கம் போல் வளாகத்தின் வெளியே இறக்கிவிடப்பட்டோம். அநியாயத்துக்கு காசு பிடுங்கிடுவாங்கன்னு சொன்னார்.

நாம் போய் ஆஜர் சொல்ல இன்னும் அரைமணி இருக்கேன்னு  ஷாப்பிங் பகுதிக்குள் நுழைஞ்சோம். கடைகள் எல்லாம் பத்து மணிக்குத்தான் திறக்கறாங்க.  அங்கங்கே இருக்கும் சின்னச் சின்ன  கடைகள் படுதாவுக்குள்! அங்கங்கே ஒரு சில  கடைகள் திறக்க ஆரம்பிச்சுருந்தாங்க..

பிரமாண்டமான மேல் கூரைகளுடன்  காலியா இருக்கும் போது ஒருவிதமான அமைதி அங்கே! ஒவ்வொரு கடைகளும் இருக்கும் விதம் பார்த்தால்....   ஊருக்குப்போய் வீட்டை வித்துக் கொண்டு வந்தாலும் பத்தாமல் போகும் என்று நினைப்பு.  வீடு இருக்கட்டுமே நமக்கு.

வெளியே போய்  ரெட்டை கோபுரங்களை கொஞ்சம் க்ளிக்கலாமுன்னு முன்புறம்வந்தோம். அலங்கார  நீரூற்று.  கோபுரத்தின் பிம்பம் தண்ணீரில் தெரிய  சான்ஸே இல்லை.   இன்னும் தள்ளிப்போகணும், இன்னும், இன்னுமுன்னு சொல்லிக்கிட்டே வளாகத்தின் எதிர்மூலைக்குப் போயிருந்தோம்.  ஒரு ஃப்ரேமில் அடங்கும் சமாச்சாரம் இல்லை என்பதுரொம்பவே லேட்டாப் புரிஞ்சது:-)





ஒரு நாளைக்கு  24 முறை, ஒவ்வொரு முறைக்கும்  20 பேர்கள் என்ற கணக்கில் கொண்டுபோய் காமிக்கிறாங்க. காலை 9 மணிக்கு முதல் குழு.  ரெண்டாவது  குழு  ஒன்பதே காலுக்கு.  அதுக்குப்பின்  ஒவ்வொரு முழுமணிக்கும்  அதைதொடர்ந்து வரும் கால் மணிக்கும் ஒரு ரெண்டு  குழு. இரவு எட்டுக்கும் எட்டேகாலுக்கும்  கடைசி குழுக்கள்.  9,915. 10, 10.15, 11, 11.15 இப்படி.

ஒவ்வொரு முழுவிலும் 20 பேர்தான் அதிகபட்சம்.   இதுதான் மேனேஜபிள் எண்ணிக்கை போல. அப்புறம் தெஞ்சுக்கிட்டது, ஒரு லிஃப்ட்டுலே 26 நபர்கள்தான் போகமுடியும் என்பது.


பத்து மணிக்கு நாங்கள் வரிசையில் போய் நிற்கிறோம்.  விஸிட்டர் என்ற அடையாள அட்டையை நம் கழுத்து அலங்கரிக்கணும்.  எதோ விமான நிலையத்தில் இருப்பதைப்போல்  செக்யூரிட்டி செக். நம்ம கைப்பைகள் எல்லாம்கூட ஸ்கேன் செஞ்சு அடுத்த பக்கம் வருது.

ஒவ்வொரு குடும்பம்/குழுவையும்  தனித்தனியா  ஒரு கருப்பு பேக்ட்ராப் முன்னால் நிக்கவச்சு ஒரு ஃபோட்டோ வேற, ஏதோ லைன் அப் படம் எடுக்குறமாதிரி.  நமக்கெதாவது  ஆகிருச்சுன்னா.....  செக்யூரிட்டி இல்லை எவிடென்ஸுக்கு  எடுக்கறாங்கன்னு (மடத்தனமா) நினைச்சுக்கிட்டேன்.


அப்புறம்  நாம் எப்படி நடந்துக்கணுமுன்னு சின்னதா ஒரு  அறிவிப்பு. இப்போ நாம் பார்க்கப் போற 'அதிசயத்தை' பற்றி:-) ஒரு லிஃப்ட் வந்து நின்னு கதவு திறந்ததும் எங்க இருபது பேரையும் அதுக்குள்ளே அடைச்சாங்க. விர்ன்னு மேலே எழும்பி , போய் நின்னது 41 வது மாடியில்.  வெளியே வந்த இடம் ஸ்கை ப்ரிட்ஜ். ரெண்டு கோபுரங்களையும் இணைக்கும் பாலம்!

மலேசியாவின் பல்வேறு இனங்கள் எப்படி ஒன்னுக்கொன்னு ஆதரவா இருக்குன்றதை உருவகப்படுத்தும் விதமா இந்த ரெட்டைக்கோபுரங்கள் ஒன்னுக்கொன்னு ஆதரவா  கை பிடிச்சு நிற்கும்விதமா இந்த பாலம் ரெண்டு கோபுரங்களையும் இணைச்சுப்பிடிச்சிருக்கு.

தரையில் இருந்து 170 மீட்டர் அந்தரத்துலே இருக்கோம் இப்போ!  யாராவது கீழே சாடிட்டால்? நோ ச்சான்ஸ். முழுசுமா கண்ணாடிச்சுவர்.  கோபுரத்தின் முன்னும்பின்னும் இருக்கும் காட்சிகள் கண்ணுக்குத் தெரியுது. தூரக்கே அந்த பத்து மலை. நம்ம முருகன்  இருக்கானான்னு  பார்த்தால் ஊனக்கண்ணுக்குத் தெரியலை.  ஞானக்கண்ணுக்கு தெரியுமோன்னு எதுக்கும் க்ளிக்கி வச்சேன்.


 வெளியே கண்ணாடிச்சுவர்களைச்சுத்தம் செய்யும் பணிசெய்கிறார் ஒருவர்.

அதிகப்பட்சமா இந்த  வானப்பாலத்தில் பதினைஞ்சு நிமிசம் நாம் நடக்கலாம். மனுச சுபாவம் தெரிஞ்சதால் பத்து நிமிசம் இங்கே இருந்து காட்சிகளைப் பாருங்கன்னு  சொல்றாங்க:-) நாம் அப்படி இப்படின்னு இன்னும் ஒரு அஞ்சு நிமிசம் நீட்டிக்குவோம். இந்தக் குழுவின் கூடவே வரும்  ரெட்டை கோபுர பார்வையாளர் குழுக்களுக்கான  பொறுப்பு வகிப்பவர்  ஒருத்தர்  கூடவே வந்துக்கிட்டு இருக்கார்.  எதாவது சந்தேகம் இருந்தால் அவரைக் கேட்டுக்கலாம்.  இருக்கும் பத்து நிமிசத்தில்  வேடிக்கை பார்ப்போமா, பரவசம் அடைவோமா,  க்ளிக்குவோமா, இல்லே சும்மா இங்கேயும் அங்கேயுமா நடப்போமா ? பாலத்தின் நீளம் அம்பத்தியெட்டு புள்ளி நாலு மீட்டர்!

எவ்ளோ நேரம்  அங்கே இருக்கலாமுன்னு ஒரு சிம்பிள் கேள்வி கேட்டேன்:-)


காணும் காட்சிகள் விவரம்  டச் ஸ்க்ரீனில் பார்த்துக்கலாமே!~




ஒரு கோபுரத்துலே  எதாவது ஆபத்துன்னா  அங்கே இருப்பவர்கள்  இந்தப் பாலம் வழியா அடுத்த கோபுரத்துக்கு  வந்துறலாமாம்.

Entrapment படத்தின் க்ளைமாக்ஸ் இந்த ஸ்கைப்ரிட்ஜ்லே எடுத்தாங்க. (அப்பாடா...சினிமாவில் ஆக்ட் கொடுத்தாச்சு சினிமாப்புகழ்)

எல்லோரையும் ரவுண்டப் பண்ணி இன்னொரு மின்தூக்கிக்குள் அடைச்சாங்க.  முழுக் கட்டிடத்துக்குள்ளே  29 டபுள்டெக்கர்  லிஃப்ட் ஒவ்வொரு கோபுரத்துக்கும் இருக்காம்.  ஆனா நாம் போகும் லிஃப்ட்டில்  அடுக்கடுக்கா  தளவரிசைக்கான  எண்கள் போட்டுருந்தாலும்   ரெண்டே ரெண்டு தளத்துக்கான லிமிட்டட்  ஆக்ஸெஸ்தான்.

தொடரும்......... :-)




பதிவர் மாநாட்டில் ஏமாற்றம் :(

$
0
0
நேரலை ஒளிபரப்பு வருதுன்னு லேப் டாப்பில் தேவுடு காத்தேன். அங்கே காலை  ஒன்பது என்றால் எங்களுக்கு அது  பிற்பகல் மூணரை. ரொம்ப வசதியான நேரம்.

ஆனால்...... ஒன்னும் வரலை.   துண்டுதுண்டாக  ஒரு ரெண்டு நிமிசம்படம் கலங்கலாத் தெரிஞ்சது. ஆடியோ....   சுத்தம்.ஸீரோ.

யார் யார் யாரென்பதும் என்னதான் சொல்றாங்க என்பதும்  கண்டும் கேட்டால்தானே ஆனந்தம்?

ஒரு சமயம் நம்ம மோகன் குமார் என்னவோ வாயை அசைத்தார். ஆளைத் தெரியும் என்பதால்  அவர்தான் எனக் கண்டுபிடிக்க முடிஞ்சது!

யாராவது  யூ ட்யூபில்  நிகழ்ச்சியை வலை ஏத்தி இருக்காங்களா?  இல்லைன்னா தனிப்பட்ட முறையில்  வீடியோ எடுத்தீங்களா?

புண்ணியவான்கள் யாராவது  ரெக்கார்ட் செஞ்சு இருந்தால் சுட்டி ப்ளீஸ்.

ஏமாந்து போய் மண்டை காய்ஞ்சு நிக்கறேன்:(


நல்ல வேளை.... பொதுப் பெயரா அமைஞ்சு போச்சு (மலேசியப் பயணம் 14 )

$
0
0
ஒவ்வொரு கோபுரக் கட்டடத்துக்குள்ளேயும் பத்து எஸ்கலேட்டர் இருக்காம். நமக்கு ரெண்டே ரெண்டுலேதான் போய்வர வாய்ச்சது, கீழ்தளத்துலே டிக்கெட் வாங்க போனபோதும் ஷாப்பிங்  ஏரியா சுத்திவரும்போதும்.


அடுத்துப்போய் இறங்குனது  எம்பத்தி ஆறாவது தளம்.  நாப்பத்தி ஒன்னுலே இருந்து நேரா எம்பத்தி ஆறு.நான்ஸ்டாப்.

   ஃபோயரில், உலகின்   அதிக உயரமுள்ள   கோபுரங்கள்  என்னென்ன இருக்கு.  எத்தனை மீட்டர்?  அந்த ரெக்கார்டை முறியடிச்சது  எது?  எந்த ஆண்டுன்னு  விபரங்கள் பலதும் இருக்கு. 2004 வது ஆண்டுவரை   இந்த பெட்ரோனாஸ்  கோபுரம்தான்  நம்பர் ஒன். சரித்திரம்  முக்கியம்!


 இங்கே   எண்பத்தியாறில் 360 டிகிரி சுத்திச் சுத்திப் பார்க்கலாம்.  கீழே நாப்பத்தியொன்னில் கண்ணில் பட்டவை எல்லாம்  இப்போ தொலைதூரத்தில் கீழே ! ஒவ்வொரு திசையைப் பார்த்தும் ஹைய்யோ, ஆஹா, சூப்பர் வியூன்னு பாராட்டிக்கிட்டே க்ளிக்கோ க்ளிக்தான்.

அங்கங்கே சில இருக்கைகளும், தொலைதூரம் பார்க்க  பைனாகுலர்ஸும் இருந்தாலும்  உக்கார்ந்து ஓய்வெடுக்க எல்லாம் நேரமில்லையாக்கும் கேட்டோ!  அனுமதிப்பது 25 நிமிசமே!

ஹாலின் நடுவில் ரெட்டைக்கோபுரத்தின்  மாடல் ஒன்னு இருக்கு.

அது என்ன பெயர் பெட்ரோனாஸ்? ஏன் இப்படின்னு பார்த்தால்   Petroliam Nasional Berhad,  என்பதின் சுருக்கம்தான். பெட்ரோலியம் நேஷனல் லிமிட்டட். 1910 ஆண்டே பெட்ரோலியம் எடுக்கத் தொடங்கிட்டாலும்  அப்போ வெள்ளையர்கள் ஆட்சி காலம். ஷெல் கம்பெனிதான்  பெட்ரோல் எடுத்துக்கிட்டு இருந்துச்சு

மலேயாவின் மற்ற தீவுகள் எல்லாம் சேர்ந்து  மலேசியான்னு ஆனதும் ப்ரிட்டிஷாரிடம் இருந்து  1957 இல் சுதந்திர நாடாக  ஆனதும் முந்தி  சொன்னது நினைவிருக்கோ?

1974 வது வருசம்  பெட்ரோலியம் நேஸனல் லிமிட்டட்  என்ற பெயரில்  எண்ணெய் கம்பெனி உருவாச்சு.  இவ்வளவு வேகமா  வளர்ச்சியடைஞ்சது  பார்த்தா  வியப்புதான். இப்போ வருசத்துக்கு ரெண்டாயிரத்து ஐநூறு பில்லியன் ரிங்கிட் வியாபாரம்.  நாட்டின் பணம் காய்ச்சி மரம்!

அந்தக் காலக்கட்டதில் பிரதமரா இருந்தவர் (1981-2003) டுன் டாக்டர் மஹாதிர் மொஹம்மத்.  மாடர்ன் மலேசியாவுக்கு  ஒரு  அடையாளச் சின்னமா இருக்கும்படியான  கட்டிடம் ஒன்னு  பணம் காய்ச்சி மரத்துக்கு பெருமை சேர்க்கும் விதமா இருக்கணும் என்ற  ஆவலில்  உருவானதே இந்த ரெட்டை கோபுரங்கள்.

எட்டு மூலை நட்சத்திர டிஸைன். இஸ்லாமியக் கட்டிடக் கலையம்சமா இருக்கணுமுன்னு  முதலிலேயே தீர்மானிச்சுட்டாங்க.  அதே  சமயம்  கட்டிடங்கள் மினாரா போல் தோற்றமளிக்கணும். architect César Pelli என்னும் அர்ஜெண்டீனாக்காரர் வடிவமைச்சார். இவருடன்கூட பல்வேறு நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்கள் பலரும் ரெட்டைக்கோபுரம் உருவாக வேலை செஞ்சுருக்காங்க.  தலைமையா இருந்த  César Pelli க்கு அப்போ வயசு ஒன்லி  76. இவருக்கு பொழுது போக்கே உசரமான கட்டிடங்கள் கட்டுவதுதான் போல:-))))

1992 ஜனவரி பூமி பூஜை!  ஒன்னேகால் ஆண்டு திட்டமிடல். 1993 ஆம் ஆண்டு அஸ்திவாரம் தோண்ட ஆரம்பிச்சாங்க. கட்டிட உயரத்துக்குத் தகுந்தாப்போல  முப்பது மீட்டர் ஆழம்  தோண்டனும். 395,000 சதுர மீட்டர் பரப்பளவு. தினம்  தோண்டுன மண்ணை வாரிப்போடவே  500 ட்ரக்குகள் ராவும் பகலுமா வேலை செஞ்சுருக்கு.

அஸ்திவாரத்துக்கு  காங்க்ரீட்  ஊத்தும் வேலை இடைவெளிவிடாமல் ஒரேதடவையில் நடக்கணுமே. அதுக்கு  13,200 க்யூபிக் மீட்டர் காங்க்ரீட் , தொடர்ச்சியா 54 மணி நேரம் ஒவ்வொரு டவர் கட்டிடத்துக்கும் ஊத்தியிருக்காங்க. அம்மாடியோவ்!!! நம்ம வீட்டுக்கு வெறும் ரெண்டாயிரத்து அறுநூத்துப்பத்து சதுர  அடிக்கே  ஏழெட்டு  ட்ரக்  சிமெண்ட்/காங்க்ரீட்  வந்துச்சுன்னா....  அங்கே எத்தனை லோடு  வந்திருக்கும்!வர்றது என்ன? அங்கேயே வச்சுக் கலக்கி அடிச்சுருப்பாங்க!!!


மொத்தம் மாடிகள் 88தான். அதில் 86 இல் இப்போ இருக்கோம். அப்ஸர்வேஷன் டெஸ்க் இங்கேதான்.

452 மீட்டர் உயரத்தில் கட்டிடம் மேலே முடிஞ்சு போனதும் கும்மாச்சியா கோபுரம் ஒன்னு தனித்தனியா ரெண்டு டவர்களுக்கும். பதினாலு வளையங்கள் உள்ள பந்து. அதுக்குள்ளில் இருந்து புறப்படும்  கூம்புக்குச்சி எழுபத்தி மூணரை மீட்டர். உச்சாணிக்கொம்பில் விமான ஓட்டிகளுக்கு எச்சரிக்கை தரும் சிகப்பு விளக்கு இரவில் ஒளிரும்.

மேலே அசலும்  கீழே நகலும்:-)


முந்தி கே எல் டவர்தான் உசரமான கட்டிடமா இருந்துச்சு.  இப்ப அது Bபச்சா! உயரம்  வெறும் 420 மீட்டர்தான். ஆறே மாடிகள். அதுவும் தூணில் மேல் உக்கார்ந்திருக்கும்  கூண்டுப்பகுதியில்.  1996 இல் இது கட்டி முடிச்சு திறப்புவிழா நடந்த சமயம் பெட்ரோநாஸ் வளரத்தொடங்கி  நாலுவருசமாகி இருக்கு. கே எல் டவர் முழுசும்  டெலி கம்யூனிகேஷன் துறைக்குன்னே இப்போ   பயன்படுதாம்.

இந்த ரெட்டை கோபுரங்களில்  ஒரு கட்டிடம் முழுசும் பெட்ரோநாஸ் பயன்படுத்திக்குது.  இவுங்களுக்குத்தான் ஏகப்பட்ட சமாச்சாரம் இருக்கே. நூற்றுக்கும்  மேற்பட்ட சேவைகளுக்குப் புரவலராகவும், நாப்பது  தொழில்களில் கூட்டுச் சேர்ந்துகிட்டும், ஹெல்த், எஜுகேஷன், பேங்கிங், போக்குவரத்து, மெக்டோனால்ட்ஸ், கென்டக்கின்னு எதையும்விட்டு வைக்கலை.

தரையில்  ஹ்ருதயகமலம் கோலம்போட்டு வச்சுருக்காங்கப்பா!!!


கிடைக்கும் தரமான பெட்ரோலை ஏற்றுமதி செஞ்சுட்டு, நாட்டுக்குத் தேவையான பெட்ரோலை  இறக்குமதி செஞ்சு விநியோகமாம். இதுலேயே பயங்கர வருமானம் வருது. யாரிடமோ பேசினப்ப வந்து விழுந்த சமாச்சாரம். எப்போ? யாரு? ன்னுதான் இப்போ நினைவுக்கு வரலை:(நாட்டில் மட்டும் 1670 பெட்ரோல்(ஸ்டேஷன்) Bபங்குகள்  இவுங்களோடதுதான்.

பெட்ரோல்காரவுஹளா இருந்துக்கிட்டு  மோட்டர் ஸ்போர்ட்ஸ் ஆதரிக்கலைன்னா எப்படி?  BMW Sauber Formula One teamக்கு முழு சப்போர்ட் இவுங்கதான்.   2008 முதல்  PETRONAS TOYOTA TEAM TOM'S (Super GT series) க்கு ஸ்பான்ஸார் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. ரெட்டை கோபுர நுழைவு வாசலிலேயே இதைச் சொல்லியாச்சு இப்படி:-)

மலேசிய அரசின் அழைப்பை ஏற்று Universiti Teknologi PETRONAS என்று ஒரு  யூனியையே கட்டிப்போட்டு வுட்டுருக்காங்கன்னா பாருங்க. ஏழாயிரம் மாணவர்கள் படிக்கிறாங்க இதுலே!

கோபுரத்துக்குக் கண்ணாடிகளும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலுமா   வாரி இறைச்சுருக்காங்க. ஒவ்வொன்னும் அட்டகாசமாப் பொருந்தி இருக்கு.  சூரியனுடைய கடுமையையும் வெளிப்புற சப்தங்களையும்  உள்ளேவிடாம இருக்கும் விசேஷக் கண்ணாடிப்[ பேனல்கள் 77,000 சதுர மீட்டர்  அவைகளைத்தாங்கி நிற்கும்  ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் cladding மட்டும்  83,500 சதுர மீட்டர். ஒவ்வொரு கோபுரத்துக்கும் அடியில் கனம் தாங்கி நிற்க 104  ராக்ஷஸ தூண்கள்.  அதுக்குப் பயன்படுத்திய  ஸ்டீல் கம்பிகள்  36,910 டன்.

நம்ம விஜயகாந்துக்கு  இந்த கட்டிடம் ரொம்பப் பிடிக்கலாம். எக்கச்சக்கப் புள்ளி விவரங்கள் அடக்கம். அங்கங்கே  தகவல்கள் அடங்கிய   இண்ட்டராக்டிவ் டச் ஸ்க்ரீன்கள்.  தொட்டுத்தொட்டுப் பார்த்தால்..... எல்லாத்தையும் புட்டுப்புட்டு வைக்குது.  நோகாம  நாமும்  பிஹைண்ட் த ஸ்க்ரீன் சமாச்சாரங்களைத்  தெரிஞ்சுக்கலாம், கேட்டோ!

1999 வது ஆண்டு ஆகஸ்ட் 31 (மலேசிய சுதந்திர தினம்) கோலாகலமான திறப்பு விழா. கனவு நனவாகிய மகிழ்ச்சியில் YAB Dato Seri Dr Mahathir Mohamad திறந்து வைத்தார்.  நல்ல வேளை....  பொதுப் பெயரா அமைஞ்சு போச்சு . சொந்தப்பெயரைச் சூட்டிக்கும் வழக்கம் தெரியாது போல!

 கோபுர தரிசனம் முடியச்  சரியா முக்கால் மணி நேரம்.  லிஃப்ட் நம்மைக் கீழே கொண்டு வந்து  தள்ளிரும்.லிஃப்ட்டில் நுழையுமுன்னே நம்ம கழுத்து மாலையை உருவிடறாங்க:-)   அதன்பின் அடுத்துள்ள நினவுப்பொருட்கள் கடையில்  சின்னதா ஒரு சுத்து. உருண்டை வடிவத்திலும்,  ஆயிரம் துண்டுகள் வகையிலும்  Puzzle ஒன்னு பார்த்துட்டு, ஐயோ நம்ம மயில் இன்னும் அப்படியே கிடக்கேன்னு  கவலை அதிகம் ஆச்சு:(
வெளிவரும் சமயம் நம்மை துரத்திப் பிடிச்சுக் கூட்டிப்போய் படங்காமிச்சாங்க. பின்னணியில் கோபுரங்கள் கம்பீரமாய் நிற்க, நாங்களும் நிக்கறோம். லைன் அப் ஃபோட்டோ இதுக்குத்தானா?  இதைவிட நாம் எடுத்ததே நல்லா இருக்குமுன்னாலும்....   மனநிறைவுடன் பரவச நிலையில் இருக்கும் நாம்.....    'சரி  முப்பத்தியஞ்சு ரிங்கிட் போனாப் போவுது, இருந்துட்டுப்போகுது 'போன்னு நினைப்போமில்லையா?

திங்கட்கிழமை  ரெட்டை கோபுரத்துக்கு லீவு.  அன்னிக்கு நோ விஸிட்டர்ஸ்.  வெள்ளிக்கிழமைகளிலும்  பகல் 1 முதல் 2 15  வரை    உள்ள நேரம்  பார்வையாளர்களுக்குத் தடா. அது சாமி கும்பிடும் நேரம்.  இதை மனசில் வச்சுக்கிட்டுப் பயணத் திட்டம் போடுங்க.

தொடரும்............. :-)




அரண்மனை (வாசம்) (மலேசியப் பயணம் 15 )

$
0
0

ராமசந்திரன், மஹேந்த்ரன், மொஹம்மெட் ராஜேன்ட்ரன், மொஹமெத் ரஃபி , மரத்தாண்டவர்  எல்லோரும் கூட்டாளிங்களாம். தொழில் முறையிலும் இனம் முறையிலும்.  நாம்  ட்வின் டவர் வளாகத்தை விட்டு வெளியில் வந்ததும்  கூட்டமா நின்னு பேசும் மேற்படியாரை நோக்கிப்போனார் கோபால். நம்மைப் பார்த்ததும் என்னமோ ஆதிகால முதலே பழக்கமானவங்க போல ஒரு புன்சிரிப்பு அனைவர் முகங்களிலும்.



சில இடங்களைச் சுத்திப் பார்க்கணுமுன்னு நம்மவர் சொன்னதும் எங்கெங்கே போகணுமண்ணேன்னாங்க.  இவர் டூரிஸ்ட் மேப்பைப் பிரிச்சு  இது இதுன்னு காமிக்க எல்லார் தலையும்  கூர்ந்து பார்த்துச்சு. தலைவர் போல் இருந்த ராமசந்திரன் இந்த அஸைன்மெண்ட்க்கு நூத்தம்பதுன்னு ஆரம்பிச்சவர்,  சட்னு மனம் மாறி நூறு வெள்ளி கொடுத்துருங்கண்ணேன்னு சொல்லி  ஒருத்தரை நமக்கு அலாட் செஞ்சார்.  எல்லோரும் ரெட் டெக்ஸி ஓட்டுனர்கள்தான்.  உள்ளே வர அனுமதி இல்லை பாருங்க. அதான் வெளியே கூடி நின்னு பேசிக்கிட்டு இருப்பது வழக்கமாம்.

நமக்கு டெக்ஸி ஓட்டுனவரிடம் சின்னப்பேச்சு பேச ஆரம்பிச்சேன். பெயர்  மரத்தாண்டவர் ராவ்.  மரமா.... ரெண்டாம் முறை கேட்டப்ப டெக்ஸியில் வச்சுருக்கும் விவரக் கார்டு எடுத்துக் கையில் கொடுத்தார். அதில் ஆங்கிலத்தில்  மரத்தாண்டவர் என்றே எழுதி இருக்கு.  இங்லீஷ் தெரிஞ்ச நண்பரிடம் எழுதி வாங்கிக்கிட்டாராம்.

குடும்பம் பற்றி விசாரிச்சேன். தாத்தா காலத்துலே மலேயாவுக்கு வந்துருக்காங்க. பாட்டி தெலுகுன்னார்.  இப்ப மூணு தலைமுறை பிறந்து வளந்தது எல்லாம் இங்கேயேதான். ரெண்டு பிள்ளைகளாம். மூத்தது பொண்ணு, ரெண்டாவது பையன்.  நான் பொதுவே கொஞ்ச அதிக நேரம் யாரோடாவது  செலவளிக்க நேரும்போது  குடும்பம், குழந்தைகுட்டி பற்றி எல்லாம் விசாரிப்பேன். இதுனாலே அவர்களுக்கு நம்மோடு ஒரு சிநேகம் ஏற்பட்டுப்போகும். மனதுக்கு நெகிழ்ச்சியாகவும் இருக்கும் போல.

மனைவி சமீபத்துலே இறந்துட்டாங்கன்னதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு.  அஞ்சு மாசம் ஆச்சாம்.  உடம்பு சரி இல்லாம மருந்து மாத்திரைன்னு இருந்தாங்களாம். பிள்ளைங்க சின்னதுங்க. அவருடைய அம்மாதான் பார்த்துக்கறாங்களாம். அவுங்களுக்கும் வயசாகிப்போச்சு. அதனால் இவர் சாயங்காலம் அஞ்சு மணியோடு வண்டி ஓட்டுவதை நிப்பாட்டிக்குவாராம். பிள்ளைங்க பள்ளிக்கூடத்துலே இருந்து திரும்பி வர்ற நேரமாம். இவர் வீட்டுக்குப்போய் சமையல் செஞ்சு போடுவாராம்.  ஆனாலும் எப்படியும் வாரம் ரெண்டு முறையாவது வெளியில் சாப்பாடு வாங்க வேண்டி வந்துருதாம்.  கொஞ்சம் லேட்டாப் போனால்...பசங்க பசி தாங்காதுன்னார். ப்ச்.... ஒவ்வொருவருக்கு ஒரு கஷ்டம் பாருங்க:(

முதலில்  அரண்மனை பார்த்துறலாமுன்னு அங்கே போய்க்கிட்டு இருக்கோம்.  போற வழியில்  நின்ன ஒரு கட்டிட அமைப்பு கண்ணை இழுத்துச்சு.   மலேசியாவில் இருந்து  போகும் ஹஜ்  யாத்திரைக்காரர்களுக்கான  உதவி செய்யும்  நிதி ஒதுக்கீடு அலுவலகமாம். Lembaga Tabung Haji Headquarters.  இந்த புண்ணிய காரியம் செய்ய ஆரம்பிச்சது 1962 இல் இருந்து. இப்போ 1984 இல் சொந்தக் கட்டிடம் கட்டிட்டாங்க. இதுலேயும்  பலமாடிகளை வாடகைக்கு விட்டு அதுவும் பயண நிதியில் சேருதாம்.

இந்த அமைப்புள்ள கட்டிடம் என்னவாக இருக்குமுன்னு  கொஞ்சநேரமுன்னே  கோபுரத்தில் இருந்து பார்த்தபோது  யோசனை.  கீழே வருமுன் மறந்தும் போச்சு. இப்போ கண்ணில் பட்டதும்  விசாரிச்சால் அது  கலைநிகழ்ச்சிகளுக்கான  தியேட்டர்.



ட்வின் டவரில் இருந்து எடுத்த படங்கள் கீழே.


அரண்மனைக்குப் போகும் வழியில்  மேலே சொன்னவைகளை க்ளிக்கிக்கிட்டே  போறோம்.  கொஞ்சம் மேடான பகுதியில் தனியா ஒரு   புத்தம்புது சாலை  ப்ளை ஓவரா பிரிஞ்சு போகுது.  Daulat Tuanku  (அரசர் நீடூழி வாழ்க)  என்பதைப் பார்த்ததும் சரியான சாலைதான்னு  உறுதியாச்சு.  இப்போதைய அரசர் அங்கே வசிக்கிறார்.  அதென்ன இப்போதைய?

மலேசியாவில் அரச குடும்பம் மட்டும் ஒன்பது பேர் இருக்காங்க. இவுங்க  அஞ்சு வருசத்துக்கு  ஒரு குடும்பமுன்னு  நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தறாங்க. அடுத்த வாரிசா மகன் இருக்கணும் அரசாளன்னு வேற இருக்கு. பெண்குழந்தைகள் இருந்தால் அவுங்கமுறை போயிருமேன்னு  குடும்பத்தில் ஆண் வாரிசுக்காக  ஒன்னுக்கு மேற்பட்ட திருமணங்களும் நடப்பதுண்டு. ஒருத்தர் அஞ்சு வருசம் ஆண்டுட்டால் அவருக்கு அடுத்த முறை வர எப்படியும் 45 வருசமாகிரும்.

அரண்மனையில் ஒவ்வொரு அஞ்சு வருசத்துக்கும் புது ராஜா  வந்து குடியேறுவார். இப்போ இருக்கும் அரசர், புது அரண்மனை கட்டிக்கலாமுன்னு முடிவு செஞ்சு அதை  லண்டன் பக்கிங்ஹாம் பேலஸ்  மாதிரி ஒரு ஸ்டைலில் கட்டிமுடிச்சு குடியேறிட்டார். 28 ஏக்கர் நிலப்பரப்பில்  பெரிய தோட்டத்துக்கு நடுவில் பிரமாண்டமாக் கட்டி இருக்காங்க. பத்து லட்சம் சதுர அடிகள் கட்டுமானம்.

அரண்மனைக்கு  ஆன செலவு மட்டும் 258 மில்லியன் டாலர்னு ஒரு பக்கம்   மக்கள்ஸ் (ஓசைப்படாமல்) புலம்பிக்கிட்டு இருந்தாங்க. மன்னராட்சியில் இதெல்லாம் சகஜமில்லையோ?  அதுவுமில்லாமல்,  இப்போதைய மன்னரின் பதவி காலம்முடிஞ்சதும் அடுத்த அஞ்சு வருசத்துக்கு ஆளவருபவரும் இங்கேதானே வந்து வசிக்கப்போறார்.அந்த மன்னர் கட்டுனதை நான் பயன்படுத்த மாட்டேன்.  அதை வேறொன்னா மாத்தணும் என்றெல்லாம்  சொல்லமாட்டாங்க தானே?

பழைய அரண்மனை நல்லாத்தானே இருக்குன்னு சொன்னவர்களுக்கு  , நோ ஒர்ரீஸ். அதை ம்யூஸியமா மாத்திக்கலாம். வேஸ்ட்  ஆகாதுன்னு  உத்திரவாதம் கிடைச்சது. என்ன ஒன்னு.... கட்டி முடிக்கக் கொஞ்சம் தாமதமாகிப்போச்சு என்பதைத் தவிர வேறொரு  குழப்பமும் இல்லை.

மன்னர்   ரெண்டு வருசத்துக்கு முன்னாலே (2011) புது (அரண்)மனையில் குடியேறிட்டார்.

பெரிய வளாகத்துக்குள்  வண்டிகள் நிற்க ஏராளமான பார்க்கிங் இருக்கு.  சுற்றுலாத்துறை விடும்  ஹாப் ஆன்  ஹாப் ஆஃப் பேருந்துகள் இங்கேயும் பயணிகளைக் கொண்டு வந்து காமிச்சுட்டுக் கூட்டிப் போகுது. மத்தபடி பஸ் வசதிகள் இல்லை. காரிலோ, டெக்ஸியிலோ போறதுதான் சுலபம்.

அரண்மனைக்குள் போய்ப் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. வாசக்கேட்டுக்கு வெளியில் இருந்து பார்த்துட்டு க்ளிக்கிட்டுப் போகலாம்.



பெரிய கம்பி கேட்டுக்கு ரெண்டு புறமும் ரெண்டு மாடங்களில் குதிரையும் அதன்மேலமர்ந்து காட்சி கொடுக்கும் வீரரும். ப்ரிட்டிஷ் யூனிஃபார்ம் போல சிகப்பு நிறத்தில் உடை அணிஞ்சு இருக்காங்க. இடையில் உள்ள  காவல் மாடத்தில் வீரர்கள் எல்லாம் மலேயா ஸ்டைல் தொப்பியும்  Songket  என்ற வகை  அரைச் சராங்குமா இருக்காங்க.




இதான் அரண்மனைன்னு சுட்டிக் காட்டறார் நம்மவர்:-)

கம்பி கேட்டென்பதால  ஓரளவுக்கு உள்ளே இருக்கும்  இஸ்லாமிய ஸ்டைல் கட்டிடங்களைப் பார்க்கமுடியுது.  வெங்காயக் கூம்புகள் போல் இல்லாம புது மோஸ்தரா மாடர்னாவும் இருக்கு! பகல் 12 மணிக்கு சேஞ்சிங் ஆஃப் கார்ட்ஸ் இருக்காமே! அதைப்பார்க்க நல்லகூட்டம் வந்துருக்கு. எங்களுக்குத்தான் கொஞ்சம் பிந்திப் போச்சு. ஒரிஜனல் பக்கிங்ஹாம் பேலஸில் பார்த்தது (14 வருசம் முன்னே) நினைச்சுக்கிட்டேன்.



சுற்றிலும் பசுமையா இருக்குன்னாலும் பூச்செடிகள் அவ்வளவா இல்லை.  வளாகத்தில் நின்னால் ஒரு புறம் ரெட்டைக் கோபுரங்கள் கண்ணில் விழுந்தன.

மிஞ்சிப்போனால் இருவது நிமிசத்துக்கு மேல் பார்க்க ஒன்னுமில்லை. வெளி முற்றம் நிழல் இல்லாமல்  உலகத்து வெயிலை எல்லாம்  இழுத்து நம் தலையில் போடுது.  அதுவும் மட்ட மத்தியான வெயில்:(

நாமும்  தௌலத் டுவான்கு Daulat Tuanku (அரசர் நீடூழி வாழ்க)  சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

தொடரும்..........:-)





என் கொடுமைகளில் இருந்து தப்பித்தார் பிள்ளையார்!

$
0
0
வருசாவருசம் கொழக்கட்டை என்றபெயரில் புள்ளையாரைக் கொடுமைப்படுத்திக்கிட்டே இருக்கோமேன்ற கவலையில் நானா உக்கார்ந்து யோசிச்சு இந்த வருசம் புதுமாதிரி கொழக்கட்டைகள் செஞ்சு அவரைக் குஷிப்படுத்தி இருக்கேன்.

இனிப்பு மோதகம், காய்கறி மோதகம்,  பால்கொழுக்கட்டை, கார்ன்   & பட்டாணி சுண்டல், பழங்கள்.

பனைவெல்லம் சேர்த்த பூரணம்.

பனைவெல்லம், தேங்காய்த்துருவல், முந்திரித்துருவல்,  சுல்த்தானா ( உலர்ந்த திராக்ஷை)ஏலக்காய் சேர்த்து பூரணம் கிளறிக்கணும்.
மேல்மாவுக்கு  ஒரு கப் அரிசி மாவு.  அரிசிமாவில் ஒரு கப் கொதிக்கும் தண்ணீரை  ஊத்தி கால் டீஸ்பூன் உப்புத்தூள் சேர்த்து  நன்றாக பிசைஞ்சு வச்சேன்.

காய்கறிக்கொழுக்கட்டைக்கு  புட்டுமாவு ஒரு கப். நம்மூரில் இப்போ மயில் மார்க்  புட்டுமாவு கேரளத்தில் இருந்து இறக்குமதி.  அரைத்தேக்கரண்டி உப்புத்தூள் சேர்த்த கொதிக்கும் தண்ணீர் ஊற்றி பிசைஞ்சு உருட்டிவச்சேன் ஒரு கால்மணி  நேரம். அரைக் கப் தேங்காய்த்துருவல்,  அரைக் கப் பச்சைபட்டாணி,  துருவிய கேரட்  ரெண்டு டேபிள் ஸ்பூன்  அளவு  எடுத்து பிசைஞ்சு வச்ச மாவை உதிர்த்து அதில் சேர்த்துக் கலந்து வச்சேன்.

சண்டிகரில்  வாங்குன ஒரு ரைஸ்குக்கரில் ஸ்டீமர் பாத்திரம் ஒன்னு வச்சுருந்தாங்க. அதில் ஒரு துண்டு ச்சீஸ் க்ளாத்தை நனைச்சுப் பரத்திட்டு,  சென்னையில் வாங்கிய ஒரு மோதக அச்சு (கேட்ஜட் ட்ராவில் தேடிக்கண்டு பிடிச்சேன்) கொண்டு  காய்கறி சேர்த்தமாவில் மோதகம் செஞ்சு  ஸ்டீமரில் அடுக்கி வச்சேன் ஃப்ரோஸன். பத்து நிமிசத்தில் ஆவி வந்து வெந்தும் போச்சு.





 மேல்மாவு எடுத்து வச்சுப்பிசைஞ்சால் கையில் ஒட்டாமல் அட்டகாசமா இருக்கு.   மோதக அச்சைத் திறந்து ரெண்டு பக்கமும் கொஞ்சம் மேல்மாவு  வச்சு நடுவில் கொஞ்சம் பூரணம் சேர்த்து அச்சைக்  கெட்டியா  மூடித்திறந்தால் ..... ட்டாய்ங்!  மேஜிக் போல மோதகம் தயார்.  எண்ணி ஏழு இதேபோல் செஞ்சு அதையும் ஸ்டீமரில்  ஆறு நிமிட்  வச்சு எடுத்தேன்.

கொதிக்கும் வெந்நீரில் ஃப்ரோஸன் கார்ன் & க்ரீன்பீஸ் ,  அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து  ரெண்டு மினிட்  வேகவச்சு தண்ணீரை வடிச்சுட்டு ஒரு டீஸ்பூன் நெய்யில் சீரகப்பொடி அரைத்தேக்கரண்டி சேர்த்து சூடாக்கி  வெந்திருந்த மக்காசோளம், பச்சைப்பட்டாணி சேர்த்து ஒரு கிளறு. சத்தான சுண்டலும் ரெடி.

 மேல்மாவு செஞ்சு வச்சுருந்தேன்பாருங்க. அதில் கொஞ்சம் எடுத்து மணத்தக்காளிக் காய் சைஸில் மணிமணியா உருட்டி வச்சேன்.  அரை க்ளாஸ் தண்ணீரும்  ரெண்டு க்ளாஸ் பாலும் சேர்த்து  அடுப்பில் வச்சேன். கொதிக்கும் பாலில்  மாவு மணிகளைச்சேர்த்து பத்து நிமிட் வேகவிட்டேன். அப்பப்ப லேசா கிளறிவிட்டேன். உடையாமல் கரையாமல்  நீட்டா வ(வெ)ந்துச்சு.  அரைக் கப் சர்க்கரை, ஏலக்காய் தூள், கொஞ்சம் குங்குமப்பூ  சேர்த்துக் கலந்தபின்  சுண்டவச்ச பால்  ஒரு டின் சேர்த்துச் சூடாக்குனதும் பால்கொழுக்கட்டை தயார்.

இந்த வருசம் புள்ளையாரை ரொம்பப் படுத்தாமல்  சத்துள்ள நைவேத்தியங்கள்  செஞ்சு படைச்சு, தின்னும் ஆச்சு. புள்ளையார் கோலம்கூட போட்டாச்சு!

நம்ப இவனுக்கு குங்குமப்பூ வாசனை ரொம்பப்பிடிக்குது போல! ஸ்ரீகண்ட் செஞ்ச நாள்  அடுக்களையை விட்டு நகராமல் இருந்தான்னு பார்த்தால் இன்னிக்குப் பால்கொழுக்கட்டை வாசனை புடிச்சுக்கிட்டு சாமி அறைக்குள் போக தவம் செய்யறான்.

அனைவருக்கும்  புள்ளையார் சதுர்த்திக்கான  இனிய வாழ்த்து(க்)கள்.





PIN குறிப்பு: அதெப்படி குழப்பம் ஒன்னுமே வராமப்போச்சு?

அதானே?  

இன்னிக்கு  கேரமலைஸ்ட்  தேங்காய்  பர்பி(யும்) செஞ்சேனே:-)))))

A Day Out with புள்ளையார்!!

$
0
0

ஈரக்களிமண் புள்ளையார்  கடந்த  நாப்பத்தினாலு  வருசங்களில் ஒன்னே ஒன்னில் கிடைச்சார்.  அப்போ  அவரைக் கொண்டுவந்து வீட்டில் வச்சு அலங்கரிச்சு பதிவெல்லாம் கூட போட்டுட்டேன்.  அது இங்கே:-)

சிங்காரச்சென்னையில் வாசம் அப்போது. நல்ல சுத்தமான கடற்கரையில் கொண்டு போய் அவரைக் கரைக்கணுமுன்னு  வேண்டுதல்.   அக்கம்பக்கம் நல்ல பீச் இருக்கான்னு  நாலைஞ்சுமுறை போய்ப் பார்த்தேன். திருவான்மியூர் கடற்கரை சுத்தமா இருகுன்னு கேள்விப்பட்டு அங்கே போனால் முதல் நாள்  பத்து(ஆனந்தச் சதுர்த்தசி)  என்று புள்ளையார்களைக் கொண்டுபோய்  கடாசிட்டு வந்துருக்கு சனம். கையும் காலும் தலையுமா உடைபட்ட புள்ளையார்கள்  தண்ணீருக்குப் போகுமுன்னேயே தெருவோரங்களில்:(

மனசுக்கு வேதனையாப் போச்சு.  நம்ம புள்ளையாருக்கு நல்ல இடம் பார்க்கலாமுன்னு காத்திருந்தேன். காலமும் கடந்து ஓடிக்கிட்டே இருந்தது. அதுக்குள்ளே நம்ம புள்ளையார் பூஜை அறையில் நிரந்தர இடம் புடிச்சு உக்கார்ந்துட்டார்.  ஈரக்களிமண் எல்லாம்  போய் இப்ப உ(ண)லர்ந்தவராக இருந்தார். டீஹைட்ரேஷன் ஆகிப்போனதால் உடம்பு கனமும் காத்தாப்போச்சு.

நாலு மாசம் ஆனபிறகு , இனி(யும்) அவரைப் படுத்த வேணாமேன்னு  காலையில்  பூச்சர மாலை சூட்டி, பூஜை செஞ்சு காரில் உக்கார்த்திவச்சுக்கிட்டுக் கிளம்பினோம்.


முதலில் போன இடம் கோவளம் கடற்கரை. நல்ல இடம்தான்  ஆனால்....ஈ காக்கா இல்லை.  மணி பதினொன்னரை.  பேசாம மஹாபலிபுரம் கடற்கரைக்குப் போயிடலாமுன்னு  அங்கிருந்து புறப்பட்டு மஹாபலிபுரம் போய்ச் சேர்ந்தோம்.

அங்கே போனதும் முதலில் கொஞ்சம் சுத்திப் பார்த்துட்டு நல்ல இடம் தெரிஞ்செடுத்துப் புள்ளையாரைக் கரைக்கலாம். அவர் பாட்டுக்கு காரில் அதுவரை உக்கார்ந்திருக்கட்டும் என்ற நல்ல எண்ணத்துடன் கடற்கரைக்கோவில் போய் சுத்திப் பார்த்தோம். வெளியில்  டிக்கெட்டு கவுண்ட்டர், கேட் வாட்ச்மேன் எல்லாம்போட்டு அமர்க்களமா இருக்கு.பெரிய தோட்டம். நடுவில் நடைபாதை எல்லாம் ஜோர். கேமெராவுக்கு நாம் டிக்கெட் வாங்குனோமா என்பதில்தான் காவல்காரர் கவனம் எல்லாம்:-)

வராகங்கள் மட்டும் ரொம்பவே  சுதந்திரமா  தோட்டமெங்கும் அலையுதுகள். இதைக்கொஞ்சம் கவனிக்கக்கூடாதோ?

சுனாமி வந்த பிறகு கடற்கரைக்கோவில் வெளிப்பிரகாரத்துச் சிலைகள் எல்லாம் மண்ணீல் இருந்து தலை காமிச்சிருக்கு. அதையெல்லாம் இன்னும் ஆழமாகத் தோண்டி வச்சுருக்காங்க. அடடே.... இதெல்லாம் புதுசு! மகிழ்ச்சியுடன் சுற்றிப்பார்த்தோம். கடற்கரைக்கு முந்திமாதிரி ஆக்ஸெஸ் இல்லை. வலைத்தடுப்பு இருக்கு.

கடற்கரைக்கோவில்களில் பூஜை நடப்பதில்லை. கம்பிக்கதவு போட்ட கருவறைகளை எட்டிப்பார்க்க முடிகிறது.  அநந்தன் மேல் சயனித்திருக்கும்  பெருமாள், அரை இருட்டில் பாவமா இருக்கார்.


பன்னிரெண்டு பட்டை சிவலிங்கம் ஒன்னு  மேற்பாகம் சிதைஞ்ச நிலையில். சுவரில் இருக்கும் குடும்பப்படம் அது யாரோட அறைன்னு சொல்லுது!

உயிர்ப்பலி கூடாதுன்னு சொல்லப்டாதோ?  கடா வெட்டிட்டாங்கப்பா!


நம்ம கோகி மாதிரி  சிரிச்சமுகம் இவனுக்கு:-)

இதுக்குள்ளே பசி நேரம். INDeco ஹொட்டேலின்  ரெஸ்ட்டாரண்ட்  கடற்கரைக்  கோவிலுக்குப்பக்கத்துலேயே  கண்ணில்பட்டது. Pongamiya restaurant. நாம் முந்தி ஒருக்கா இந்த  ஸ்வாமிமலை ஆனந்தம் ரிஸார்ட்டில் தங்கினோம் பாருங்க,அதை  இந்த INDeco தான் நடத்துது. அதனால் இங்கே நல்லாதான் இருக்குமென்று நம்பினோம். நம்பிக்கை வீண்போகலை.  தனித்தனியா ரெண்டு  ஸ்டேண்டுகள் போட்டு நான்வெஜ்ஜும்  வெஜ்ஜுமா வச்சுருக்காங்க.

பஃபே முறை.  பருப்பும், பரோட்டாவும் சோறும் கிடைச்சது எனக்கு. டிஸ்ஸர்ட் பக்கம் போனால் ஐஸ்கிரீமும் குலோப் ஜாமூனும்.  ரெண்டாவதை வாங்கிக்கிட்டேன்.

அழகான தோட்டத்துக்குள் இந்த ரெஸ்ட்டாரண்ட் இருக்கு. சுத்திவர வெளிவராந்தா முழுசும்  சாப்பிட வசதியா இருக்கைகளும் மேஜையுமா இருக்கு.  வரிசைகட்டி நிக்கும் டெர்ரகோட்டா ம்யாவ்ஸ் அழகுன்னா அப்படி ஒரு அழகு.  உள்ளே  அந்தக்கால தயிர் மத்து ஒன்னு:-) யசோதா எப்படிக் கடைஞ்சாளோ? ரெண்டு மணிகளைத் தொங்கவிட்டு  அடிச்சுக்கோன்னாங்க. நான்...ஊஹூம்.... இவரோ?   (போர்டு) சொன்னால் கேக்கமாட்டார்:-)




சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு  அப்படியே இவுங்க ம்யூஸியத்துக்குள் போனோம். மரக்கடிகாரக்கூண்டும்,  பாய்மரப்படகோட்டியுமா சிலபல சமாச்சாரங்கள். வாசக்கதவுக்கு நேரெதிரா கொஞ்ச தூரத்தில் கடல். அவ்ளோதூரம்  போக அதுவும் மண்டைகாயும்வெயிலில் போக ஒரு சோம்பல்:(


அர்ஜுன் தபஸ் நோக்கிப்போனோம். வழியில் இருந்த கிருஷ்ண மண்டபத்துக்குள் வகைவகையான  சிற்பங்கள். கோவர்தனகிரியைத் தாங்கி நிற்கும் கண்ணன்.  அங்கேயும் விடாமல்  பால் கறக்கும் கோபன். சுவர் முழுக்க கோகுலம்தான்.



முப்பது மீட்டர் உயரமும் அறுபது மீட்டர் அகலமும் உள்ள பெரிய பாறையில் சுமார் 150சிற்பங்கள். ஒரு பிலத்துள் மூணு நாகர்கள். பக்கத்துலேபெரிய யானைகள்.  பாசுபத அஸ்த்திரம் வேண்டி தவம் செய்யும் அர்ஜுனன்.  விலா எலும்புகள் எல்லாம் எண்ணலாம்.  அவனைப்போலசீரியஸா தவம் செய்யும் குண்டுப்பூனையார்.  போலிகளை நம்பி ஏமாந்து போக  எப்பவுமே ஒரு கூட்டம் உண்டு என்று சிம்பாலிக்காச் சொல்லும் எலிகள் கூட்டம் பூனையாரைச்சுற்றி.

 

ஸ்தல சயனப்பெருமாள் கோவில் (108 இல் ஒன்னு)  பகல் வேளையில் பூட்டிக்கிடக்கு.  எப்ப  மகாபலிபுரம் வந்தாலும்  அநேகமா இந்த நேரம்தான்.  சாயங்காலம் நாலரைக்குக் கோவில் திறப்பாங்க என்றாலும் அதுவரை காத்திராமல் மற்ற இடங்களைச் சுத்திட்டுக் கிளம்புவதே  வாடிக்கை என்பதால் ... இன்னிக்கு  விடுவதில்லை என்று சொன்னேன்.

கிருஷ்ணனின் வெண்ணெய் உருண்டை கல்லாக மாறி கனகாலமாச்சு!

வெண்ணெய்க்கு  அந்தாண்டை  திருமூர்த்தி கோவிலை நோக்கிப் போனோம்.
நம்மாட்கள் எல்லா இடங்களிலும்  சுத்தித் திரியறாங்க.

இங்கேதான் பீமன் சமையல் செஞ்சானாம்.   ரெண்டு பிரமாண்டமான பாறைகளுக்கிடையில்  அடுப்பு அணையாம நல்லா எரிஞ்சிருக்கும். பீமனின் ஸிங்க் இதுதான் போல!

சிவன், விஷ்ணு, ப்ரம்மன் ஆகியோருக்குத் தனித்தனி சந்நிதிகளா  குகைக்கோவிலில் செதுக்கி இருக்காங்க. அத்தனையும் அற்புதம்!
கடலைகளுக்குப்பஞ்சமே  இல்லையாக்கும்!

பீமனுடைய  பேண்ட்ஸ்க்கு  ஸிப் வச்சுருக்கோ?  கற்களை  தையல் போட்டு இணைச்சது அபாரம்!

வந்தவழியே திரும்பி எதிர்த் திசையில்  போறோம்.  அழகான புல்தரையில் நாயர்கள் ஆழ்ந்த உறக்கத்தில்.வெயிலுக்கு சுகமா இருக்கு போல!
எதிர்ப்புறம் கொஞ்சம் ஏற்றம்.  சின்னச் சின்ன மண்டபங்கள். அதில் ஒன்னில்  சந்தனக்காப்பில் ஜொலிக்கும்  புள்ளையார்.  சித்தப்பா வரும்வரை பொறுப்பில் இருக்கும் குட்டிப்பையன் கணேஷ். விபூதி குங்குமத்தட்டு ஏந்தி நின்னால்போதும். 'வருவது வரட்டும்' என்ற நம்பிக்கை!  நம்பிக்கை எப்போதாவது பாழாகி உள்ளதா? ஊஹூம்...:-)



ஏறுமுகத்தில் வரிசையா நிற்கும் கற்களில் ஒன்னையும் விட்டு வைக்கலை. லக்ஷ்மி வராஹமூர்த்தி,  ஈரேழு உலகம் அளந்த திருவிக்ரமன்,  கஜலக்ஷ்மி இப்படி ஆளுக்கொன்னுன்னு  கல்மண்டபமும் சந்நிதியுமாக.


கிட்டத்தட்ட குன்றின் மேல் கடைசிப்பகுதிக்கு வந்தால் கைக்கெட்டும் தூரத்தில் கலங்கரை விளக்கம் இருப்பதுபோல்  கண்கட்டு வித்தை!
உச்சியை விட்டு வைக்காமல் அங்கொரு கோவில் கட்டிக்க ஏற்பாடு ஆகி  வேலை பாதியில் நிக்குது. இம்மாம்பெரிய மண்டபத்துக்கு மேற்கூரை எப்படிப் போட்டுக்கும் ஐடியாவா  இருக்கும்?

மலையின் பக்கங்களில் அடர்ந்த காடு! பூத்துக்குலுங்கும் கொன்றை மரங்கள்.  ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பயங்கர சரிவில்  இறங்கி கடலை வறுக்கும் வாசம்!  கால் வழுக்கினால் இத்துடன் தொலைஞ்சது. ஒருவேளை  இப்படியாவது தொலையட்டும் என்றோ?  தொலைவில் ஊர்!

கவனமாக்கால்வச்சுக் கீழே இறங்கி கலங்கரை விளக்குப் பக்கம் போனோம். வழியெல்லாம் சிற்பக்கடைகள். சும்மாச் செதுக்கிப்போட்டு வச்சுருக்காங்க. இன்னொரு பெரிய பாறையில் அர்ஜுன் தபஸ்.  ப்ராக்டீஸ் செஞ்சிருக்காங்க.

திரும்பி  ஐந்து ரதங்கள் பகுதிக்குப் போனோம். கொஞ்சம் கூட்டம் அதிகம்தான்.  போகும்வழியில் ஒரு சின்ன வணிக வளாகம். அதைச் சுற்றியுள்ள தோட்டத்தில்  மயிலுக்குப் போர்வை தந்தபேகன், புலியை முறத்தால்  துரத்திய வீரப்பெண்மணி இப்படி  காங்ரீட் சிற்பங்கள்.  காலத்தால் அழியாது நிற்கும் பேசும் கற்சிற்பக் கலைக்கு ப் போட்டியாக  இது! சரியான ஐ ஸோர்:(

ரதங்கள் ஒவ்வொன்னும்  அழகோ அழகு!  இந்தப் பாறைகளுக்கு இப்படி ஒரு கொடுப்பனை.  ஐடியா எப்படி உதயமாகி இருக்கும்!!!!



நம்ம யானையுடன் நான்:-)

இங்கேதான்  நாட்டியாஞ்சலி நடக்குமாம்.

காம்பவுண்டு சுவர் போல் கல்வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு புள்ளையார்!

வணிக வளாகத்தில் சில கடைகள். தியானம் செஞ்சு உருக்குலைஞ்ச புத்தர்! ஆன்மீகம்

அம்மிக்கல்லும், குட்டிக்கல் உரலுமா  இன்றையத் தேவைகளுக்கு .... லௌகீகம்.

ஸ்தலசயனப் பெருமாள் தரிசனம் ஆச்சு. உள்ளே மூணு புள்ளையார் ஒருசேர.  இவரை வழிபட்டால்  அதிர்ஷ்டம் என்று சேதியை  யார் காதிலாவது ரகசியமா  ஓதி வச்சால் போதும். கோவிலுக்குக் கூட்டம்  படையெடுக்காதோ?
இத்தனை ஊர் சுற்றலுக்கும் வாயைத் திறக்காமல் நம்ம புள்ளையார் பின்ஸீட்டில். அநேகமா இவர் நம்ம வீட்டுக்குத் திரும்பிவரும் எண்ணத்தில் இருக்கார் போல!

மறுபடியும்  கோவளத்துக்குள் நுழைஞ்சோம். இதுவரை பார்த்ததில் இந்தக் கடற்கரைதான்(ஓரளவு) சுத்தமா இருக்கு.  ஊருக்குள் நுழைஞ்சு கடற்கரைக்குப் போகும் வழியில்  ஒரு தர்கா.  அஜரத் தம்ம் அன்ஸாரி அஸ்ஸாபே ரஸூல்.ஸல் என்று அலங்கார வளைவு சொல்கிறது.
அல் அன்ஸாரி மதீனாவில் பிறந்தவராம்.  முஹம்மது நபியின் நெருங்கிய தோழர்களில் ஒருவர். இந்தியாவுக்கு எப்ப வந்தார் ? எப்படி வந்தார்?

 இவருடைய மறைவுக்குப்பின்  சவப்பெட்டியில் உடலை வச்சு  கடலில் விட்டுட்டாங்களாம். அதுவே அவருடைய  ஆக்ஞையாக இருந்தது. பெட்டி கடைசியில் வந்து கரை ஒதுங்கியது இந்தக் கோவளத்தில்தான்.  அவருடைய பூத உடல் புதைக்கப்பட்ட இடம்தான் இந்த தர்கா.  ஆற்காட் நவாப் இந்த தர்காவை கட்டினாராம். ரொம்ப பவர்ஃபுல் இடமுன்னு சொல்றாங்க. வேண்டுதல் எல்லாம் பலிக்கும் என்ற நம்பிக்கை. ஒவ்வொரு பௌர்ணமிக்குப்பிறகு வரும் முதல் வியாழன் இங்கே விசேஷம். அன்று காலை அஞ்சு முதல் இரவு 10 வரை வழிபாடு நடத்துறாங்க.  கூட்டம் அம்மும் தினமாம் அது. குறி சொல்லுவார்களாம்.கெட்ட ஆவிகளை மந்திரிச்சு விரட்டுவாங்களாம்.  மனித மனசுக்கு ஆறுதல் தருவது  கடவுளின் ட்யூட்டிகளில் ஒன்னு,இல்லையோ? நதிமூலம் எதுக்கு?

உள்ளே போய்ப் பார்க்க ஆசை இருந்தாலும், பொழுது சாயுமுன் புள்ளையாருக்கு ஒரு வழி காமிக்கணுமேன்னு  கையெடுத்துக் கும்பிட்டுட்டு கடந்து போனோம்.  இதோ காலையில் பார்த்த கடற்கரை. கட்டுமரங்களுக்கு சின்னதா  எஞ்சின் வச்சு ஓட்டுறாங்க. காலையில் பார்த்தவைகளை இப்போ காணோம். கடலுக்குள் போய் இன்னும் திரும்பலை போல!

விரிந்து பரந்த மணல் வெளியின் ஒரு பக்கம் கண்ணியம்மன் கோவில் ஒன்னு.

நம்ம புள்ளையாரை மணலில் வச்சு ஒரு க்ளிக்.  கோபால் வரைத்தூக்கிட்டுத் தண்ணீரை நோக்கிப்போறார். (கோபாலுக்கு அலையில் கால் நனைப்பது ரொம்ப்பிடிக்கும்)

குனிஞ்சு அவரைத் தண்ணீரில் வைக்கப்போறார். நான் கெமெராவை ஃபோகஸ் பண்ணறேன்.  எல்லாம் ஒரு மைக்ரோ செகண்ட் நேரம்தான்.  பட்டனை அமர்த்துமுன்...........  வியூ ஃபைண்டரில் பார்த்தால் புள்ளையாரைக் காணோம். இடுப்பளவு  உயர அலையில் நம்ம கோபால்.


நாலு மாசம் நம்மோடு வாழ்ந்த அவஸ்தை போதுமுன்னு  துண்டைக் காணோம் துணியைக் காணோமுன்னு தண்ணீரைத் தொட்டதும் காணாமப் போயிட்டாருப்பா புள்ளையார்! என்ன சொல்லுங்க.... கோபாலுக்கு இருக்கும் பொறுமை புள்ளையாருக்கு இல்லை:-)

செண்ட் ஆஃப்க்கு ஒரு குட்பை சொல்ல முடியலைன்னு எனக்கு மகா வருத்தம்.

PIN குறிப்பு: நாலு வருசமா ஒவ்வொரு புள்ளையார் சதுர்த்திக்கும் மனதில் ஓடும் குறும்படம். இன்று உங்களுக்காக வெளியிடப்பட்டது:-)


ஜெய் ஜவான்!!! (மலேசியப் பயணம் 16 )

$
0
0
வார் மெமோரியல் இருக்குன்னு தெரிஞ்சா நான் ஒருநாளும் தவறவிடமாட்டேன்.இங்கே நியூஸியில்  இருபதுபேர் வசிக்கும் சின்ன ஊரா இருந்தாலும் அங்கிருந்து போரில் கலந்து கொண்டவர் ஒரே ஒரு நபரா இருந்தாலும் கூட அங்கே ஒரு  நினைவுச்சின்னம் வச்சுருவாங்க. ஆன்ஸாக் டேன்னு சொல்லப்படும் ஏப்ரல் 25 ஆம்தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் அந்த நினைவுச் சின்னங்களுக்கு  மலர்வளையம் வச்சு மரியாதை செய்வது  ஒரு சடங்கு.  இந்த நாளை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளனர்.

நாங்களும் நியூஸியில் எந்த ஊர்ப்பக்கம் சுற்றுலாவுக்குப் போனாலும் போர் நினைவுச் சின்னத்திற்குப்போய் ஒரு நிமிசம்  பிரார்த்தனை செய்துட்டுத்தான் வருவோம்.நாட்டுக்காக உயிர் துறந்த உத்தமர்களுக்கு நாம் செய்யும்  ஒரு மரியாதை. ராணுவத்தின் பணி  மகத்தானது என்பதை நெருக்கடி காலங்களில் புரிந்துகொள்ள முடியும்.


மரத்தாண்டவர் நம்மைக்கொண்டு போய் இறக்கியது  நேஸனல் மெமோரியல். அழகான தோட்டத்துக்கு நடுவில்   கட்டி இருக்காங்க.முன் வாசல் கேட் கடந்தால் எதிரில் ஒரு செனடாப். இந்த சாலைக்கு ஜலான் செனடாப் என்றுதான் முந்தி பெயராம். இப்போ Jalan Tugu என்று பெயர்.

நம்ம சிங்காரச்சென்னையிலும் செனடாப் ரோடு இருக்கே..... அங்கே எதாவது செனடாப்பைப் பார்த்த நினைவு எனக்கு இல்லை.  உங்களுக்கு  இருக்கோ?  எப்படி செனடாப் ரோடு என்று பெயர் வந்திருக்கும்?

இங்கே  ஒன்னு சொல்லாம இருக்கமுடியலை. நம்ம சிங்காரச் சென்னையில் போர் நினைவுச்சின்னம் ஒன்னு இருக்கு பாருங்க  தீவுத்திடல் போகும் வழியில் கோட்டைக்குப் பக்கம்.  அங்கே ஒருநாள் எட்டிப் பார்த்தப்ப,  இடத்தின் அருமை தெரியாத சனம் துண்டு விரிச்சுத் தூங்கிக்கிட்டு இருக்கு:(

மலேசியா தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்று இந்த நேஸனல் மான்யூமெண்ட். முதல் உலகப்போரிலும், ரெண்டாவது உலகப்போர் காலத்தில்  ஜப்பான் மலேயாவைக் கைப்பற்றி  வச்சிருந்த போதும், மலேயன் எமெர்ஜென்ஸின்னு 1948 முதல் 1960 வரை இருந்த சமயங்களிலும், பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் வேண்டி நின்ற சமயங்களிலும் நாட்டுக்காக உயிர்துறந்த  ராணுவவீரர்கள் நினைவாகக் கட்டப்பட்டதே இது.




இந்த  நினைவுத்தூணுக்கு பின்னே   ஆங்கில   'C' யை படுக்க வச்ச மாதிரி இன்னுமொரு  அழகான கட்டிடம்.  தளத்தின் மேல்  இஸ்லாமிய கலையைக் காட்டும்  வெங்காய கூம்புகள் நடுவிலே ஒன்னும் ரெண்டு பக்கங்களில் ஒவ்வொன்னுமா  மூன்று.


படிகளேறி உள்பக்கம் போனால் கட்டிடத்துக்கு மறுபுறம் பெரிய செயற்கைக் குளமும் அத்ல் மிதக்கும் செயற்கைத் தாமரை அமைப்புகளுமுள்ள நீரூற்று.  அதுக்கும் அந்தாண்டை ஒரி பிரமாண்டமான சிலை. படையினர் கையில்  தேசியக்கொடியும் படைக்கலன்களும் ஏந்தி நிக்கறாங்க. கொஞ்சம் கூர்ந்து பார்த்தால்  காலடியில்  கீழே விழுந்திருக்கும் வீரர்களின் உடல்கள்:(

அவர்களின் ஆன்மசாந்திக்கு வேண்டி ஒருநிமிடப் பிரார்த்தனை.

இந்த வார் மெமோரியல் கட்டிடமும் நினைவுத்தூணும் கட்டியது 1960 ஆம் வருசத்தில்.  நாடு சுதந்திரம் அடைந்த பின் பதவிக்கு வந்த முதல்பிரதமர் டுன்கு அப்துல் ரெஹ்மான் அவர்கள்  அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குப் போயிருந்தப்ப , வர்ஜீனியாவில் உள்ள  Marine Corps War Memorial போயிருக்கார். அந்த  நினைவிடத்தின் அழகிலும் கருத்திலும் வெகுவான ஈர்ப்பு வந்திருக்கு.

1948 முதல் 1960 வரை  மலேயன் எமெர்ஜென்ஸி(காமன்வெல்த் படையினருக்கும்மலேயாவின்  லிபரேஷன் பர்ட்டியின் மிலிட்டரியினருக்கும் நடந்த கொரில்லாப் போர்)  சமயம்  உயிரிழந்த பதினோராயிரம் வீரர்களின் நினைவுக்காகவும், முதல் இரண்டாம் உலகப்போர்களில்  போரிட்டு வீழ்ந்துபட்ட வீரர்களின் நினைவுக்காகவும் இதே போல் ஒரு நினைவிடம்  கட்டணும் என்ற எண்ணம் வந்து,  அதே Felix de Weldon என்ற சிற்பியைக் கொண்டு  இங்கே அமைத்த  சிலைதான் இது.

1966 இல் சிலை உருவாகி திறந்து வைக்கப்பட்டது. நம்மூர் கொடிநாள் போல இங்கே வாரியர்ஸ் டேன்னு  ஜூலை மாதம் 31 ஆம் தேதியில் படையினரை நினைவு கூறுகிறார்கள். இந்த நாளில் அரசரும் பிரதமரும் மற்ற பார்லிமெண்ட் அங்கங்களும் வந்து  மலர்வளையங்கள் வைத்து மரியாதை செலுத்தறாங்க.



நாட்டின் மிகப்பெரிய வெண்கலச்சிலை என்ற  பெயரில்  49 அடி உயரச் சிலையா அமைஞ்சுருக்கு. அதுவும் மேடை மேல் இருப்பதால்  அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும் உயரமே!


இடம் அப்பழுக்கில்லாமல் படு சுத்தமா இருக்கு. சுத்திவர இருக்கும் செயற்கைக் குளங்களில் அழுக்கு சேரவிடாமல் சுத்தப்படுத்திக்கிட்டே இருக்காங்க.


நீர்நிலைகள் அது செயற்கையோ இயற்கையோ ...பார்த்தாலே மனசுக்கு மகிழ்ச்சியாத்தான் இருக்கு. அதுவும் சுத்தமா இருந்தால் கேக்கவே வேணாம்! 



தரைகளில் கோலங்களா என்ன?

சுற்றுலாப்பயணிகள் நடமாட்டம் அதிகமாத்தான் இருக்கு. பெரிய தோட்டத்துக்குள் இருப்பதால் வெயிலின் கொடுமை அவ்வளவாத் தெரியலை.
கொஞ்சதூரத்திலேயே டுன் அப்துல் ரஸாக் அவர்களின் நினைவாலயம் இருக்கு. இவர் மலேசியாவின் இரண்டாவது பிரதமர்./ நம்ம டுன்கு அப்துல் ரெஹ்மான் (முதல் பிரதமர்) அவர்களை தேசத் தந்தை என்று அன்போடு விளித்த மக்கள், டுன் அப்துல் ரஸாக் அவர்களை  Father of Development என்று போற்றினர்.  (இங்கே  உள்ளே போய்ப் பார்க்காமல் போறபோக்கிலேயே ஒரு வணக்கம் போட்டுட்டுப் போனேன்)


இஸ்லாமிக் ஆர்ட் ம்யூஸியம் ஒன்றைக் கடந்தோம். கட்டிடத்தின் முகப்பில் அரபி எழுத்துக்கள் அழகா டிஸைன் போட்டதுபோல் இருக்கு.



தொடரும்...........:-)





Dataran Merdeka (மலேசியப் பயணம் 17 )

$
0
0

அடுத்த நிறுத்தம் எங்களுக்கு மெர்டெகா சதுக்கம். மலே(ய்)  சொல் மெர்டெகாவுக்கு சுதந்திரம் என்று பொருள்.  சுதந்திரச் சதுக்கம். இங்கே நெடுநெடுன்ற உசரத்தில் ஒரு கொடிக்கம்பம்.   இந்தக் கொடிக் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த  ப்ரிட்டிஷாரின் கொடியை  1957 ஆகஸ்ட் 30, நள்ளிரவு 12.00 க்கு இறக்கிட்டு  சுதந்திர மலேசியாவின் கொடியை 12.01 மணிக்கு  உச்சிக்கு ஏற்றிப் பறக்கவிட்டுருக்காங்க. ஆகஸ்ட் 31  நாட்டின் சுதந்திரத் திருநாள்.

இந்த சதுக்கத்தில்தான் சுதந்திரதின அணிவகுப்பு , மரியாதைகள் எல்லாம் நடக்கும். முப்படையினரும் அணிவகுக்க,  மன்னர், பிரதமர் மற்ற எல்லா  முக்கிய அங்கங்களும் கலந்துகொண்டு  கொண்டாடுவர்.

பிரிட்டிஷார் காலத்தில் இது அவர்களின் க்ரிக்கெட் மைதானம். ஒரு பக்கம்  ஸ்டேண்டு போட்டு வச்சுருந்தாங்க.  மற்ற சீஸன்களில்  இங்கே கால்பந்து, ஹாக்கி போன்றவைகளை விளையாடி மகிழ்வார்களாம்.


உச்சாணிக் கொம்பில்  மலேசியக்கொடி கம்பீரமாப் பறந்துக்கிட்டு இருக்கு. உயரம் காரணம்  வெகுதூரத்துக்கு கண்ணில் படுகிறது. உலகின் உயர்ந்த கொடிமரமாம்! நூறு மீட்டர் உசரம்!

சுதந்திரச் சதுக்கத்தில்  இதுவரை  ஆட்சியில் இருந்த /இருக்கும் பிரதமர்களின் படங்களை வரிசையா வச்சுருக்காங்க. மொத்தம் ஆறு பேர்.. தற்சமயம்  2009 முதல்  பதவியில் இருப்பவர்  திரு நஜீப் ரஸாக்.


நாட்டின் அரசர்  Yang di-Pertuan Agong  என்ற பதவியில் இருக்கார்.   பட்டத்து ராணிக்கு   ஸுல்த்தானா Raja Permaisuri Agong  என்ற  பெயர்.  (அட! ராஜ பரமேஸ்வரி !!!) இப்போதைய அரசர் டுவான்கு அப்துல் ஹலீம் அவர்களுக்கு  பெருமை சேர்க்கும் விஷயமா ரெண்டு முக்கியத்துவம் இருக்கு. இவர்தான் இதுவரை ஆண்ட அரசர்களில்  வயதில் மூத்தவர். (86 நடக்குது இப்போ!)  அஞ்சு வருசத்துக்கு ஒரு அரசர் என்ற  வகையில் இவர் ஒருவரே இப்போ ரெண்டாம் முறையா அரசாள்கிறார்.  ராணியம்மா சின்னவயசா இருக்காங்களேன்னு பார்த்தால், இவர்  ரெண்டாவது மனைவியாம். முதல்ராணி சாமிகிட்டே போய் வருசம் பத்தாகுது.



சதுக்கத்தில் இந்த  இடம்ரொம்பவே அழகான பலவகை நிறமுள்ள செடிகளுடன் பளிச்ன்னு இருக்கு.பக்கத்தில் ஒரு  செயற்கை நீரூற்று. இதுவுமே சரித்திரத்தில் இடம் பிடிச்சதுதான். Horse Fountain என்று பெயர். 1887 இல் கட்டி இருக்காங்க.  இங்கிலாந்தில் இருந்து  இறக்குமதி.  முதலில்  செண்ட்ரல் மார்கெட்  நாற்சந்தியில்  இருந்ததை, போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்குன்னு பொலீஸார்  சொல்ல, அதன் பிறகு இங்கே இடம் மாத்தி இருக்காங்க. சுத்திவரக் குதிரைகள் நிற்க  அவற்றின் வாயில் இருந்து  தண்ணீர் பொழிவது போன்ற அமைப்பு.  நாம் பார்த்த சமயம் பராமரிப்புக்காக தண்ணீரை நிறுத்தி இருந்தாங்க:(

சதுக்கத்தின் எதிர்ப்புறம்  ஸுல்தான் அப்துல் ஸமத்  கட்டிடம் ஒன்னு கலை அழகோடு இருக்கு. ஆதிகாலத்தில் அரசாங்க அலுவலகங்களா  இருந்து அப்புறம்  வழக்காடு மன்றமா இருந்து, இப்போ சரித்திரச் சான்றா ஆகிக்கிடக்கு.  இந்த ஏரியாவில் ஆற அமரப் பார்க்க ஏராளமான  இடங்கள், கட்டிடங்கள் எல்லாம் உண்டு. நடந்து போகும் தூரம்தான்!  முந்தாநாள்  நாம் பார்த்த செண்ட்ரல் மார்கெட் கூட ரொம்பப் பக்கமே!
















சதுக்கத்தின்  மேற்கே ஒரு சர்ச். செயிண்ட் மேரீ'ஸ். புகிட் அமான் என்ற சின்னக் குன்றின் மேல்  1887 வது ஆண்டு வெறும் மரப்பலகை வச்சுக் கட்டுனது .  சர்ச்சுக்கு வரும் கூட்டம் அதிகமானதும் இடம் பத்தலைன்னு  தேடுனப்ப,  வெள்ளையர்களின் க்ரிக்கெட் மைதானத்துக்கு அருகில்  கொஞ்சம் இடம் கிடைச்சது.   1895 ஆம் ஆண்டு  இங்கே செங்கல்வச்சுக் கட்டுனதுதான் இப்போ நாம் பார்க்கும் சர்ச்.  சாமி கும்பிட்டு முடிச்சுட்டு விளையாடலாம். இல்லேன்னா விளையாடி முடிச்சுட்டு சாமி கும்பிடலாம். நல்ல சௌகர்யம் இரண்டுக்குமே!  அப்போ இருந்த ப்ரிட்டிஷ் அரசாங்கம்,  சர்ச் கட்ட அஞ்சாயிரம்  டாலர்கள் கொடுத்துச்சாம்.


சர்ச் உள்ளே ஆரம்பகால இருக்கைகள், அலங்காரங்கள் எல்லாம் அப்படிக்கப்படியே  இருக்கு. பழமைமாறாமலே பழுது பார்த்துருக்காங்க. ரொம்பப் பெருசு ஒன்னும் இல்லை. நடுத்தர அளவுதான். 180 நபர்கள் உட்காரமுடியும்.

 புனித நீர் வைக்கும்   தீர்த்த ஸ்டேண்டு.

கருவறைக்கூரை  நல்ல உயரம்!


செலாங்கூர் க்ளப்  ( The Royal Selangor Club) வழியாகப் போறோம்.  1884 இல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது மலேயா ப்ரிட்டிஷாரின் வசம் இருந்துச்சே. அவர்களுக்கு ஒரு சோஸியல் க்ளப் வேணும். சீமான்களும் சீமாட்டிகளும்  சந்திச்சு அளவளாவ ஒரு இடம் வேணுமே!  நல்ல படிப்பும் சமூக அந்தஸ்த்தில்  மேல்தட்டில் இருக்கும்  வெள்ளைமக்கள் மட்டுமே அங்கத்தினராக முடியும். இந்தக் கணக்கில் 140 நபர்கள் மட்டுமே  பதிவாகி இருந்தாங்க. க்ளப்புக்கு  வரலைன்னாக்கூட  மெம்பர்ஷிப் எடுத்தவர்களும் உண்டு. ப்ரெஸ்டீஜியஸ் க்ளப் ஆச்சே!



ஜப்பான்காரர்களின் பிடியில் மலேயா வந்தபோது  க்ளப்பில் இருந்த ஆவணங்களை அழிச்சுட்டாங்க. மிச்சம்மீதி தப்பிப் பிழைச்சதை 1970 தீ, தின்னு முடிச்சுருச்சு.

இந்த க்ளப்புக்கு  'ஸ்பாட்டட் டாக்' ( Spotted Dogs) என்ற செல்லப்பெயர்  மக்களால் வைக்கப்பட்டிருந்துச்சு:-)  இன்னும் சுருக்கி 'த டாக் '  என்றும் சொல்லிக்குவாங்க. காரணம்?  இதன் ஸ்தாபகரின் மனைவி இங்கே வரும்போதெல்லாம்  அவருடைய செல்லங்களான ரெண்டு டால்மேஷியன் நாய்களைக் கூடவே கூட்டி வந்து வெளியே காவல்காரர் அருகில் கட்டி விட்டுருப்பாராம்.

ப்ரிட்டிஷார்  வெளியேறின பிறகும்,  செலாங்கூர்  ஸுல்த்தான் அவர்களின்  ஆதரவால்  சரித்திர முக்கியம் உள்ள இது இருந்துட்டுப்போகட்டுமுன்னு  விட்டு வச்சுட்டாங்க.  நூறு வயசைத் தாண்டிய க்ளப் இது. இதுவும் ஆரம்ப காலத்தில் மரக்கட்டிடமா இருந்து அப்புறம் செங்கல் கட்டிடமா ஆனதே.

இந்த மெர்டெகா சதுக்கத்தைச் சுத்தி பழமை மாறாத கட்டிடங்கள்  அப்படியே இருக்க இவைகளுக்கு அரணாக  வானைத்தொடும் உயரக்கட்டிடங்கள்  வரிசை கட்டி நிற்பது கூட பார்க்க நல்லா இருக்கு!

இன்னும் கொஞ்ச தூரம் போனால் லிட்டில் இந்தியா பகுதி.

லிட்டில் இந்தியாவுக்குள் நுழையறோம். வளைவு டிஸைகள் வரவேற்கின்றன.  யானைக்காரிக்கு வரவேற்பு  தரும் யானை நீரூற்று. 7.6 உச ரம்.  யானையும் மயிலுமா பார்க்க அழகா இருக்கு. ஆனாலும் யானைகள் என்னவோ போஷாக்கா இல்லையாக்கும்:( ஒல்லி உடம்பு!

இந்த லிட்டில் இந்தியாப் பகுதியை அழகுபடுத்த  35 மில்லியன்  ரிங்கிட் செலவு செஞ்ச மலேசிய அரசு, நம்ம இந்தியப் பிரதமர்  டாக்டர் மன்மோஹன் சிங் அவர்களை அழைச்சு அவர் கையால்  திறப்பு விழாவை நடத்தி இருக்கு.  இந்திய மலேசிய உறவு பலப்பட்டுப் போச்சு!


லிட்டில் இந்தியாப் பகுதியில்  சனிக்கிழமைகளில்  இலவசமா  வாக்கிங் டூர்  கூட்டிப்போய் காண்பிக்க அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாடு செஞ்சுருக்கு.  காலை 9 மணிக்கு விவேகானந்தர்   ஆச்ரமம் வாசலில் இருந்து கிளம்பினால்  பகல் 11.30  க்கு  திரும்பிடலாம். நமக்கு சனி கிடைக்கலை:(

இந்தியான்னதும் அந்தப்பகுதி கலகலன்னு  இருக்கு. துணிமணி நகைநட்டு, சாப்பாடுன்னு எல்லாமே  கிடைக்குது. நாம் வழக்கம்போல்(!!!) சரவணபவன் வாசலில் இறங்கிக்கிட்டோம்.  மரத்தாண்டவரை  சாப்பிடக் கூப்பிட்டால்  அன்போடு மறுத்துட்டார். அவர் சேவை முடிஞ்சது.

நேத்துப் போலவே  இலை போட்ட சாப்பாடு. ஆனால் நேற்றைய சுவை இல்லை. எல்லாமே கொஞ்சம் காரம் அதிகம். கல்லாவிலிருந்தவரிடம் புது சமையல்காரரான்னேன். இல்லையாம். நேற்று சமைச்சவர்தானாம்.

"ஓ... அப்ப வீட்டுலே சண்டையா இருக்கும்."

"இல்லீங்க. அவர் குடும்பம் ஊருலே இருக்கு."

"அதனால் என்ன ? ஃபோனில் சண்டை போட முடியாதா?"

"ஙே"    (இது கல்லாக்காரர்!)

தொடரும்...........:-)





மாவேலிக்கொரு தாலப்பொலி

$
0
0
நம்மைக்காண மாவேலித் தம்புரானுக்கு  ஆவல் அதிகமானதால்  திருவோணத்துக்கு வரவேண்டியவர் ரெண்டு நாள் முன்னதாக்கிளம்பி பூராடத்துக்கு வந்து சேர்ந்தார்.  பாதாளலோகத்தில்  பசுமை அதிகமோ என்னவோ.... ஆளைக் கண்டாலே மனஸிலாயி அவிடே எல்லாம்  இஷ்டம்போலேன்னு! ( மாவேலி = மஹாபலி. ப்ரஹலாதனின் பேரன்)

தங்கக்குடை பிடிச்சு தம்புரான் வர அவரை வரவேற்கும் மங்கையர் தாலப்பொலித் தட்டுகளுடன் பின்னாலே ஓடிவரும்படி ஆச்சு.


வெள்ளிக்கிழமை இரவு சமையல் செய்யத்தொடங்கி சனிக்கிழமை காலை  ஒன்பது வரை ஆக்கலோ ஆக்கல். எனக்கு  இந்த வருசமும் ரஸம்.  விருந்தினர்  வருகை  வழக்கத்தைவிடக் கூடுதல் என்றபடியால்  அது அஞ்சில் தொடங்கி பத்துன்னு முடிவாச்சு. கடைசியில் செலவானது எட்டு. லிட்டர் கணக்கைச் சொன்னேன்.

க்ருத்யம் பத்து மணிக்குப் பரிபாடி என்றதால்,  காலை  ஒன்பதுக்கு  ரஸம் செஞ்சு  தாளிப்பு முடிச்சதும்  கோபால் ஹாலுக்குக் கொண்டு போய் வச்சுட்டு வந்தார்.. சமையல் செய்வதைவிட அதைக் கொட்டிக் கவிழ்க்காமல் ஹாலுக்குக் கொண்டு போக அதிகம் திறமை வேண்டித்தான் இருக்கு.  ஒரு பெரிய அட்டைப்பெட்டியில்  ரெண்டு டவல்ஸ் விரிச்சுப்போட்டு அதன் மேல் நியூஸ் பேப்பர்ஸ் கத்தைகளை அடுக்கி அதன் மேல்  க்ளாட்ராப் சுத்தின பாத்திரம், அதை அசையவிடாமல் நிறைய அட்டைப்பெட்டிகளை அண்டக்கொடுத்து ஒரு வழியாக பத்திரமாய் சேர்ப்பிச்சுட்டு வந்துட்டார்.'நீ கூடவராததால் கத்தல் இல்லாம அமைதியாக் கொண்டுபோனேன்'னு எனக்கு பாராட்டு வேற:-)

ஜீவிச்சிருந்நெங்கில் அடுத்த கொல்லம் வேறேதாவது  செய்யக் கிடைக்கணும் பகவானே!  ரஸம் உண்டாக்கி மடுத்து:(

முதல்நாள் இரவே பூக்களம் தயாராகத் தொடங்கியது.  நாங்களும்  கறிவைப்பினு  சஹாயிக்கான் போயி.  கொஞ்சம் லேட்டாப்போயிட்டோம். அதுக்குள்ளே  காய்கறிகள் வெட்டி முடிச்சு முக்கால்வாசி சமையலே முடிஞ்சு போயிருந்தது. ஸ்டேஜ் அலங்காரம், பலூன் ஊதிக் கட்டுதல்,  சமைக்கும் இடத்தைச் சுத்தப்படுத்தி, பாத்திரங்களைக் கழுவி ஒழுங்கு செய்துன்னு  முக்கிய வேலைகளை எல்லாம் ஆண்கள் கூட்டம் ஏற்றெடுத்து.

மறுநாள் (சனிக்கிழமை)  காலையில் பத்துக்குப் போனால்  ஓணம்விழா நடக்கும் சர்ச் முன்புறத்து ஹாலில் கோலம் தேமேன்னு இருக்கு. நிலவிளக்கைக் காணோம். ஐஸ்வர்யக் கேடல்லோன்னு விசாரிச்சால் குத்துவிளக்கு உள்ளே ஸ்டேஜுக்கு முன்னால் கீழே இருக்காம்.

தென்னை மரத்துலே தேங்காய் உண்டல்லோ:-)

இதோ இப்ப அஞ்சு மினிட்டில் தொடங்காம் போகுன்னுன்னு  சொல்லிக்கிட்டே  இருக்காங்க.  ம்யூஸிக் சிஸ்டம்  சரியில்லை. எதோ குழப்பம்.  க்ருத்தியம் பதினொன்னுக்கு ஆரம்பிச்சாங்க.  மேடம் ப்ரெஸிடெண்ட் எல்லோரையும் வரவேற்றாங்க.  நம்ம நேரம் பாருங்க.....  22  ஸ்டேஜ் ஐட்டம்ஸ் இருக்கு.  ஓணவிருந்தே 21 ஐட்டம்தான். இது அதையும் பீட் பண்ணிருச்சு.


மாவேலித் தம்புரான் விளக்கு  ஏற்றி ஆரம்பிச்சு வச்சார்   திருவாதிரைக்களி நடனமும், நாடன்பாட்டுகளும் சினிமாப் பாட்டும் குத்தாட்டங்களுமா எல்லாம் கலகல.  இதுக்கிடையில்  க்ளப்புக்கு நிதி சேர்க்க   லக்கி டிப் பரிசுச்சீட்டு குலுக்கல் நடந்தது.  நம்ம கோபால் மேடைக்குப்போய்  பரிசுக்குரிய ரெண்டு சீட்டுகளை எடுத்தார்.  12 அண்ட் 13 !  என்ன குலுக்கலோ!!!



எனக்கும் மேடையேற ஒரு சான்ஸ் கிட்டி.  ஓணம் வாழ்த்துகளை எஸ் எம் எஸ் அனுப்பினவர்களில் ரேண்டம் முறையில் ஒருவரைத் தெரிவு செய்தனர்.  வாழ்த்து அனுப்பிய எண்களில் ஒன்றை நாம் திருப்பிக்  கூப்பிட்டபோது  செல்லை எடுத்துப் பேசியவருக்கு  ஒரு பரிசு. அதை வழங்கியது துளசிதளம் ப்ளொக் உரிமையாளர்:-)  கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்குக் கொடுத்தது போல!

இப்ப நம்ம கேரளா அசோஸியேஷனில்  வயசன்மாரா இருப்பது  நாம்தான்! அதற்குரிய மரியாதை:-)





 பெஸ்ட் ட்ரெஸ்ஸுடு  மலையாளி மங்ககளும் மங்கன்களும்  போட்டி:-)




இடைக்கிடையில்  சின்னச் சின்ன கேள்விகள் சில.

மாவேலி  ஆட்சி செய்ததாகச் சொல்லப்படும் பகுதி தற்போதைய கேரளத்தில் எங்கே?

த்ருக்காக்கரா  (Thrikkakkara)   இங்கே வாமன மூர்த்திக்கு ஒரு கோவிலுண்டு அந்த 108 இல் ஒன்னு.)

எந்த ஆண்டு முதல் ஓணம் தேசிய விழா என்று அறிவிக்கப்பட்டது?

1960

பூக்களம் வரைகிறோமே அது எதற்காக?  எது அதன் குறியீடு?

Unity (மாவேலி வருந்ந திவஸம் மனுஷ்யரெல்லாம் ஒன்னு போல!)

பத்து நாள் ஓணம் என்பது எந்த நாள் துடங்கி எந்த நாள் வரை?

அத்தம்,  சித்திர, சோதி, விசாகம், அனிழம், கேட்ட,மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம்

(ஹஸ்தம், சித்திரை , சுவாதி, விசாகம், அனுஷம்,  கேட்டை ,மூலம் , பூராடம், உத்திராடம் .திருவோணம்)

'காணம் விற்றும்  ஓணம் உண்ணனும்' என்ற பழமொழியில் காணம் என்றால் என்ன ?

காணத்துக்குப் பொருள்?  பொன் பொருளேதான். பொன்/ தங்கம்

இப்படி நாலைஞ்சு.

தமிழ்சினிமா குத்துப்பாட்டுகள் கேரளத்து மக்கள்ஸ்க்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.    நேரம் (பிஸ்தா ), சென்னை எக்ஸ்ப்ரெஸ் (லுங்கி)  ஒன்  டு த்ரீ ஃபோர், துப்பாக்கி  ( கூகுள் ) எல்லாம் மேடையில்  அதிரும்போது,இவுங்களுக்குன்னே பாடல்கள் தமிழ் சினிமாவுலே வருதோன்னு தோணுச்சு/

கிளாஸிகல் நடனம்(பரதநாட்டியம்)  ஒன்னு.அதன்பின்  செமி க்ளாஸிகல் என்று ஒரு ஃப்யூஷன் ம்யூஸிக்.பாட்டு என்ன சொல்லுங்க பார்க்கலாம்? எந்தரோ மஹானுபாவலந்திரிக்கு வந்தனமு!!!


பாய்ஸ் திருவாதிரைக்களி. ரெண்டு வருசம் முன்னே செய்த நடனத்தின்  திருத்தி அமைக்கப்பட்ட  ஐட்டம்:-) அப்போ பார்க்காதவர்களுக்காக இந்தச் சுட்டி.





கடைசி ஐட்டம் பாட்டுன்னு  அறிவிச்சவுடன்,  எல்லோருக்கும் போய்க்கிட்டு உசுரு மீண்டும் வந்தாப்போல்  ஆனது மெய்.



 இனி ஓண சத்ய!  வழக்கம்போல்(!) இலை போட்ட சோறு!  பருப்பு, நெய், எரிசேரி, காளன், ஓலன், தோரன், சக்கரைவரட்டி,ஏத்தக்காய் சிப்ஸ், இஞ்சிக்கறி, அவியல், பீட்ரூட் மெழுக்குபுரட்டி,  அச்சாறு, பப்படம், சாம்பார், ரஸம்,பச்சமோரு, ரெண்டுகூட்டம் பாயஸம் ( அடப்ரதமன், பருப்பு  ) மோர்மிளகாய்,  பழம்,  குடிக்கான் சீரகவெள்ளம் இப்படி மெனு!
சும்மா சொல்லக்கூடாது. மொத்தப்பொறுப்பும் இளைஞர் கையில். 'எந்து வேணும் ஆண்ட்டி, எந்து  வேணும் அங்கிள்'னு பாய்ஞ்சு பாய்ஞ்சு பரிமாறின வேகத்தைப் பார்க்கணுமே!!  வெல்டன் பாய்ஸ்!



சாப்பிட்டு  முடிச்சு கைகழுவி வந்தப்ப ஒரு குழந்தை என் கைக்கு வந்தாள். பெயர் மேக்னா.  ஒரு ஆறேழு  மாசம் இருக்கலாம்.  யாரோட குழந்தைன்னு விசாரிச்சவங்களுக்கு ஒரே பதில்....' யாருக்குத் தெரியும்?'

வயிறும் மனசும் நிறைஞ்சு வழியக்  காலிப் பாத்திரத்தை (ரஸம் கொண்டு போனது)  எடுத்துக்கிட்டு வீடு வந்தப்ப மணி க்ருத்தியம் மூணே கால்.

இன்று  ஓணப் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் துளசிதளத்தின் மனமார்ந்த ஓணம் வாழ்த்து(க்)கள்.

எல்லாம் நன்னாயி வரட்டேன்னு ஈஸ்வரனோடு ப்ரார்த்திக்குன்னு.




வடையை விடுவதாக இல்லை! (மலேசியப் பயணம் 18)

$
0
0

"என்ன இந்தப்பக்கம் திரும்பாம நேராப்போறே?"   அட...யார்றா நம்மைக் கூப்பிடறான்னு பார்த்தால்... வடைமலை! கூடாரத்துக்குள்ளே சின்னமலைகளா எகப்பட்ட ஐட்டம். இப்பதானே  சாப்பாடு முடிஞ்சது. வயித்துலே இடம் இல்லையேன்னு  இருந்தாலும்,  இன்றே இந்தப் பக்கம் வருவது கடைசி என்றபடியால் கிட்டே போனேன்.

நமக்கு வேண்டிவற்றை  இடுக்கியால் எடுத்துச் சின்னக் கூடையில் போட்டு நீட்டினால் அவற்றை  எண்ணிப் பார்த்து பாய்ண்ட்  ஆறால் பெருக்கினால் வடை ..  ஸாரி விடை வரும். மசால் வடை, மெதுவடை, வாழைக்காய் பஜ்ஜி,  வெள்ளையில் ஒன்னும்  கருப்பில் ஒன்னுமா ரெண்டு போண்டாக்கள். மூணு ரிங்கிட் ஆச்சு.  மாலை டீ டைமுக்குக் கட்டாயம் தின்னுடணும்.

வடைக்காரம்மா சரோஜினி,  இங்கே நல்லமுறையில் தயார் செய்யும் பண்டங்களுக்கு ரசிகர் பட்டாளமே இருக்குன்னார். அதுவும் லஞ்சு டைமில் பார்த்தால் கூட்டம்  அதிகம் என்றார். ஆமாம். அம்முது!  நேத்து கவனிச்சேன்னு சொன்னேன்.

அறைக்கு வர ரெயில் ஏறினால், 'வடை' யும்  பயணம் பண்ணுது சீனப்பெண்மணியின்  கையிலே!

டுன் சம்பந்தன் ரெயில் நிலையம் வருமுன் கந்தசாமி தெரியறான்னு  கண் நட்டேன்.  மேல்தளத்தை எட்டிப்பார்க்கும் குட்டிக்குட்டி விமானங்கள்!

சாலைகள் எல்லாம் ரொம்ப நீட்டா இருக்கு!


மசூதிகளும் சீனக்கோவில்களும் பொலீஸ் தலைமையகம்  எல்லாம் கைக்கெட்டும் தூரம்:-)


ரெயில் கண்ணாடி வழியா தெரியும் காட்சிகளைக் கிளிக்கிட்டே வந்தேன்.





என்ன ஒரு பசுமை! நகரத்துக்குள்ளே  இத்தனை  புல்வெளிகளா!!!!   சூப்பர்!

தனக்கு வேண்டிய எல்லாம்(!) மலேசியாவில் மலிவு என்ற எண்ணம் கோபாலுக்கு! மணி ரெண்டுதான் ஆகுது.  இங்கே பக்கத்துலே ஒரு கடையில் ஸூட்கேஸ் ஒன்னு பார்த்தேன். அதை வாங்கிக்கலாமுன்னு  சொன்னார்.  நமக்கும் எதாவது தேறாதான்னு தலையை ஆட்டினேன்.பெவிலியனுக்குப் பக்கத்து பில்டிங்.

பைப்ரியர் ஒரு  ஸூட் கேஸ் வாங்கிக்கிட்டார்.  கிச்சன் கேட்ஜெட்ஸ் பிரிவில்  புது வகையா ஒன்னும் இல்லை:(  ஒரு கத்தியைத் தேடிக்கிட்டே இருக்கேன். கண்ணில் ஆப்டலை:(

அறைக்குத் திரும்பி  வடைகளைத் தின்னு  ஒரு சாதா (!) டீ போட்டுக் குடிச்சோம்.

நாலரைக்குத் தம்பி வந்தார் எங்களைக் கூட்டிப்போக.  சொந்தமா லா ஃபர்ம் வச்சு நடத்துறார். அக்காவின் தோழிகள் அனைவரையும்  தன் கூடப் பிறந்த அக்கான்னே  நினைச்சுப் பழகும் தங்கத்தம்பி.

இவருடைய வீடு இருக்கும் பகுதிக்கு(Taman Yarl) டமன்  யார்ல்/ யாழ் என்று பெயர்.   அரசு , முந்தி  நகரத்தை விரிவாக்கும்போது , குடி இருப்புகளுக்காக  நிலங்களைச் சரிப்படுத்திக் கொடுத்து விற்ற சமயம் இலங்கைத் தமிழர்களுக்கு  அதிலும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்குன்னு ஒதுக்கிய பகுதி இது. யாழ்பாணத்துக்காரரா இருந்தால்தான்  வீடு கட்ட நிலமே  கிடைக்குமாம்.

அப்ப எப்படி இவருக்கு இங்கே இடம் கிடைச்சது? மனைவி யாழ்பாணத்துக்காரர். ஆஹா.... ஜப்பனைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்  டிஸைன் செய்துக் கட்டித் தந்துருக்கார்.  இன்னும் மூணு வீடு கட்டும்விதமா  (எனக்கு ரொம்பப்பிடிச்ச  )பெரிய புல்வெளி வீட்டு முன்முற்றத்தில்.

இப்போ நிலைமை மாறிப்போச்சு. இந்தப் பகுதியில் ஏராளமான வீடுகள் விற்பனைக்கு  வருது. யார் வேண்டுகானாலும் வாங்கலாம்.

என் நியூஸித் தோழியின் தம்பிதான் இவர்.  பத்து வருசங்களுக்கு முன் தோழியுடன் (இந்தியா வரும் வழியில்) இங்கே வந்திருக்கேன். அப்பவே மொத்த குடும்பமும் நம்மை ஸ்வீகாரம் செஞ்சாச்சு. அதன் பிறகு அவர்கள் குடும்பத்தில் யார் நியூஸிக்கு (தோழி வீட்டுக்கு) வந்தாலும் நம்ம வீட்டுக்கு வராமல் போகவே மாட்டாங்க. வேற்றுமனிதர்கள் என்றில்லாமல் அன்பை உணர்ந்த தருணம் அவைகள் எனக்கு.

தம்பி மகள்  கே எல்லில் ஒரு ஃபேஷன் மாகஸீன் எடிட்டர்.  திருமணம் ஆகி எம்பதுநாள் ஆகி இருந்தது.  தம்பதிகள் இருவருமே  வழக்கறிஞர்கள். அந்தக் கல்யாணத்துக்குப் போகணுமுன்னு ஏற்பாடு செஞ்சு கடைசி நிமிசத்தில்  போகமுடியாமல் போச்சு எனக்கு:(

தம்பியின் மற்ற அக்காக்கள் (உடன்பிறந்த  & உடன் பிறவாத) அனைவரும் நம்மை எதிர்பார்த்து வீட்டில் கூடி இருக்காங்க.  சரியா சொன்னது சொன்னபடி நாலரைக்கு வந்து நம்மை வீட்டுக்குக் கூட்டிப்போனார் தம்பி. போன கொஞ்ச நேரத்தில் எனக்கு ஃபோன்கால். நியூஸியில் இருந்து  தோழி கூப்பிட்டு சரியான நேரத்தில் பிக்கப் செய்தாரான்னு கேக்கறாங்க:-)  இன்னொரு தோழி அங்கே நம்மை சந்திக்க வருவதாக  இருந்தவர்  கொஞ்சம் உடல்நிலை சரியில்லைன்னு சொன்னதால் நான் பரவாயில்லை நெக்ஸ்ட் டைமுன்னு சொல்லி இருந்தேன்.  நியூஸித்தோழிக்கு விவரம்  சொன்ன அடுத்த  கால்மணியில் , உடல்நிலை சரியில்லாதவர் வந்து சேர்ந்தார்!  (பரவாயில்லையே!)  நியூஸியிலிருந்து மிரட்டல் வந்ததாம்:-)


புதுமணமக்கள் வரவை எதிர்பார்த்துக்கிட்டே நொறுக்குத் தீனிகளை உள்ளே தள்ளிக்கிட்டு இருந்தோம்.  அங்கேயும் எனக்காக வடைவகைகள் காத்திருந்தன.  ஆனால்.... வேகவைச்ச கச்சான் (நிலக்கடலை)  பொடியாக அரிஞ்ச வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், உப்பு சேர்த்த ஆரோக்கிய நொறுக்கு எனக்குப் பிடிச்சிருந்தது.

தம்பியின் தந்தை, ப்ரிட்டிஷார் ஆண்ட காலத்தில் மலேயா ரெயில்வேஸில் வேலை செய்ய தூத்துக்குடிப் பக்கமிருந்து (வீரபாண்டிப் பட்டினம்)  வந்தவர். அப்புறம்  கல்யாணம் கட்ட நாட்டுக்குத் திரும்பிப்போய்  கொல்லத்தில் பெண் எடுத்தாராம்.  உலகப்போர் சமயம் அரிசி உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்ட 'கதை'களையெல்லாம் பெரியக்கா சொல்ல நான் 'ஆ' என்று கேட்டுக்கிட்டு இருந்தேன்.

சின்னக்குழந்தைகளுக்காக  கொஞ்சம் அரிசியை ரயிலில் கொண்டு வந்து  அவுட்டரில் வண்டி நிற்கும்போது கீழிறங்கி  பையை ஒளிச்சு  வச்சுருவாராம்.வேலை முடிஞ்சு வரும்போது  புதரில் இருந்து எடுத்துவருவாராம்.  இவரை ஒரு நாள் கையும் களவுமாப் பிடிச்சுச் சிறையில் அடைச்சுருக்காங்க. நாலுநாளுக்குப்பிறகு   குழந்தைகள் நிலையைப் புரிஞ்ச அரசு விடுதலை செஞ்சுருச்சாம். ஒருவேளை அப்போ முடிவெடுத்துருப்பார் போல.... குடும்பத்தில் வக்கீல்கள் வேணுமுன்னு!  இப்போ மூணு வக்கீலன்மார்.

பத்துமலை ஏறிப்போனேன்னவுடன்,  272 படிகளுமான்னு அவுங்க எல்லோருக்கும் வியப்பு.  நம்ம முட்டிவலி உலகப்பிரசித்தமா ஆயிருந்துச்சு போல!

எங்க யார் கழுத்திலும் துளித் தங்கமில்லை.  உங்களுக்கும் தெரிஞ்சுருச்சான்னாங்க. அதான் டெக்ஸியில் உபதேசம் கிடைச்சுருதேன்னேன்.  உண்மைதான் என்று சொன்ன குரல்களில்  வருத்தம் இருந்துச்சு.  அம்மச்சியிடம் விலாசம் கேட்பது போல் சின்னச் சீட்டைக் காமிச்சுருக்காங்க. அவுங்க ஜன்னல்கிட்டே போய்  எட்டிப்பார்த்துச் சீட்டை படிக்கும்போது  சடார்னு  கழுத்துச் சங்கிலியை அறுத்துக்கிட்டு ஓடின சமாச்சாரம் என் காதுவரை வந்திருந்ததே!  இத்தனைக்கும் ஜன்னலில் க்ரில் போட்டு வச்சுருந்தாலும்  கை நீட்டி பறிப்பது நொடிகளில்  நடந்து போச்சு!

அப்பதான்  இன்னொரு டெக்ஸிக்காரர் சொன்னது நினைவுக்கு வந்துச்சு எனக்கு.  நடைபாதையில் ரெண்டு இந்தியப்பயணிகள் (சுற்றுலா வந்தவர்கள்)  கட்டிடங்களையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி நடந்து போய்க்கிட்டு இருக்காங்க.  ரெண்டு பேரும் சினிமாவில் வரும் வில்லன்களைப்போல  கொஞ்சம் பெரிய உருவம் வேற! அப்போ மோட்டர்சைக்கிளில்  ரெண்டு பேர் பக்கத்துலே நடைபாதை ஓரமா வந்துருக்காங்க. பின்னாடி உக்கார்ந்திருந்தவர் சடார்னு இறங்கி  நடந்துபோய்க்கிட்டு இருந்த  (வில்லன்) ஒருவரின்  கையைப்பிடிச்சு, அதிலிருந்த கனத்த(வில்லன்மாரின் ப்ரத்தியேக சைஸ்)  ப்ரேஸ்லெட்டை  மெட்டல் கட்டரால்  வெட்டி  எடுத்துக்கிட்டு  திரும்பிப்போய்  பில்லியனில் உக்கார்ந்து போயிட்டாராம்.  எல்லாம்  ஒரு ரெண்டு மூணு விநாடி சமாச்சாரமாம்.  டெக்ஸிக்காரர் சொல்லிக்கிட்டே என் கையைப் பார்த்த ஞாபகம்.  நான் சட்னு துப்பட்டாவால் கைகளை மறைத்தேன்.  பதிவு எழுத கை வேண்டித்தானே இருக்கு:-)

தமிழ்நாடு & கேரளா சமையல்தான் எப்பவும்.  என்ன ஒன்னு  மூத்த அக்காமாரைத் தவிர வேற யாருக்கும் தமிழோ மலையாளமோ பேசத் தெரியாது.  வீட்டின் முதல் கல்யாணம் கொண்டாட மூணு நாலு மாச  விடுமுறையில் வந்த  சொந்தங்கள் எல்லாரும் கூடி வீடே கலகலப்பா இருக்கு.  வர்ற வாரம் எல்லோரும் ஒவ்வொருத்தரா திரும்பிப் போறாங்க. நாம் வேற இங்கே வந்து தங்காமல் ஹொட்டேலில் ரூம் போட்டுட்டோமுன்னு  கொஞ்சம்  மனவருத்தம் .

வேலைக்குப்போயிருந்த  குடும்ப அங்கத்தினர் எல்லோரும் ஒவ்வொருத்தரா வந்து சேர்ந்தார்கள். அரட்டையடிச்சுக்கிட்டு இருந்த கூட்டமப்படியே டைனிங் ஹாலுக்குக் குடி பெயர்ந்துச்சு:-)

அவியல் ,தோரன் , காளன், சாம்பார், ரசம் , கோழி வறுவல், மீன் குழம்புன்னு  டைனிங் டேபிள்  நிறைச்சுப் பண்டங்கள்.  தம்பி குடும்பம் கிறிஸ்துவர்கள். தம்பி மனைவி மட்டும் ஹிந்து.  இப்போ தம்பிக்கு மருமகனா வந்துள்ள புது மாப்பிள்ளை ஹிந்து இப்படி மதங்கள் வேறாகவும்  மனிதர்கள் ஒன்றாகவும் இருக்கோம்.

கிளம்பும் சமயம்,  உடல்நிலை சரி இல்லைன்னு சொல்லி  கடைசியில் வந்து சேந்த தோழி என் காதருகே மெள்ளக் கேட்டாங்க...."இப்பவும் கலெக்‌ஷன் இருக்கா?"

"இருக்கு."

"அப்படியா! உங்களுக்கு ஒரு யானை கொண்டாந்துருக்கேன்."

ஆஹா ஆஹா..... இவர் ஆஃப்ரிகன் எலிஃபெண்ட் வகை.    தோழி வேலை செய்வது ஒரு ஆஃப்ரிக நாட்டு எம்பஸியில்.

எல்லோருக்கும் பைபை சொல்லிட்டு, தம்பியிடம் டெக்ஸி ஸ்டாண்டில் விட்டால் போதுமுன்னு  சொன்னோம்.  பக்கத்துலேதான் இருக்குன்னு சொல்லி எங்களை வண்டியில் ஏத்திக்கிட்டவர் கொண்டு போய் விட்டது ஹொட்டேல் வாசலில்:-)

ஒரு நிமிச நடையில் இருக்கும் ஏ டி எம்மில் இருந்து கொஞ்சம் ரிங்கிட்ஸ்  எடுத்தோம்.  நகைத்திருடு ஒருபக்கமுன்னா, எங்கியாவது நம்ம கடனட்டையையோ, டெபிட் கார்டையோ பயன்படுத்தினால்  அந்த எண்களை வச்சு நம்ம கணக்கில் இருக்கும் மொத்த காசையும் வழிச்சு எடுக்கும் வித்தை பல இடங்களில் நடக்குது.  நம்ம கோபால் அடிக்கடி ஜோஹூர் பாரு போய் வருவார். அங்கே இவுங்களுக்கு ஒரு ஃபேக்டரி  இருக்கு.  அங்கே முதலிரண்டு முறை என்னமோ  (என்னமோ என்ன எல்லாம் சினிமாதான்)  வாங்கப்போய் கடனட்டையைப் பயன்படுத்தி இருக்கார். உடனே நம பேங்கில் இருந்து  மலேசியாவில் பயன்படுத்தியதால்  அட்டையை முடக்கி  வச்சுருக்காங்கன்னு தகவல் வந்துச்சு.  அப்புறம்  அதைக் கேன்ஸல் செஞ்சுட்டு புது அட்டை வேற எண்ணில் கொடுத்தாங்க.

பேசாம அட்டை அனுப்பும்போதே  எந்தெந்த நாடுகளில் பாதுகாப்பில்லைன்னு  ஒரு வரி சொல்லப்டாதோ?

இதனால் மலேசியாவில் எங்குமே க்ரெடிட் கார்ட் பயன்படுத்தலை.  அதுக்கு பதிலா அரசாங்க வங்கியின் ஏடிஎம்மில் நம்ம டெபிட் கார்டைப்போட்டு பணம் எடுத்துக்கிட்டோம்.  தினம் அறையைவிட்டுக் கிளம்பி முதல் வேலையா கொஞ்சம் காசு எடுத்துகிட்டு மத்த வேலையைப் பார்ப்பது இந்த நாலு நாளில் பழக்கமா இருந்துச்சு.  நாளைக்கு விமானநிலையம் போக டெக்ஸி சார்ஜ் வேணுமேன்னுதான்  இப்பக் கொஞ்சம் ரிங்கிட்ஸ் எடுத்தோம்.

ஓ இட் வாஸ் அ லாங் டே!   கொஞ்சம் பொட்டிகட்டி வச்சுட்டு, நல்லா ஓய்வெடுக்கணும். கே எல்லை விட்டு நாளைக்குக் கிளம்பறோம்.  குட்நைட்:-)

தொடரும்............:-)








வெள்ளிக்கிழமை விரதம்! (மலேசியப் பயணம் 19)

$
0
0
முக்கால்மணி நேரமா லவுஞ்சில்  காத்திருக்கோம்.  சிகப்போ நீலமோ எது இருந்தாலும் கவலை இல்லை!  நீங்க எதுக்கு இங்கே ? உள்ளே போய் உக்காருங்க. டெக்ஸி வந்தவுடன்  நான் ஏத்தி விடறேன் என்கிறார்  ஹொட்டேல் (தமிழ்) பணியாளர்.

'வெள்ளிக்கிழமை பாருங்க..... அப்படித்தான் இருக்கும் ' என்றார்.

"வெள்ளிக்கிழமை என்ன விசேஷம்?"

"தொழுகைக்குப்  போவாங்களே."

"ஆனா... அது பகல் 12 மணிக்குத்தானே?"

'மலாய்க்காரனுங்க வெள்ளிக்கிழமை வந்தாவே எங்கியும் போகமாட்டாங்க '(காவல்காரர் முணுமுணுக்கிறார்.


நேரமோ ஓடுது. நமக்குப் பொறுமை வேணுமே!  எவ்ளோ நேரம்தான் லாபியில் இருக்கும் மலர்களை க்ளிக்குவது.








இத்தனைக்கும் சீக்கிரம் எழுந்து, குளியல், ப்ரேக்ஃபாஸ்ட் எல்லாத்தையும் முடிச்சுட்டு எட்டரைக்கு  கீழே வந்து ஹொட்டேல் கணக்கையும் செட்டில் பண்ணிட்டுக் காத்திருக்கோம்.

ஒரு வழியா ஒன்பது பத்துக்கு  ஒரு டெக்ஸி கிடைச்சது. சீனப்பெரியவர். ரெட் டெக்ஸி.  ஃபிக்ஸட்  ப்ரைஸ். 100 ரிங்கிட். வழியில் டோல் உள்பட.  இதாவது கிடைச்சதேன்னு மகிழ்ச்சிதான். இன்னும்  ஒரு அரைமணி முன்னால் கிடைச்சிருந்தா புத்ரஜெயாவை ஒரு சுத்து சுத்திட்டுப் போயிருக்கலாம். புது ஏரியா.அலுவலகங்கள் பலதும் இங்கே மாத்தி வச்சுருக்காங்க. எல்லாமே விதவிதமான அழகுள்ள புதுக்கட்டிடங்கள்.  நெவர்மைண்ட் நெக்ஸ்ட் டைம்!

புத்ரஜெயா டோல்கேட்டுக்குள்ளே புகுந்து போகுது சாலை.  அங்கங்கே தெர்ஞ்ச ஒன்னு ரெண்டு  கட்டிடங்கள் நல்லாதான் இருக்கு.

பத்தரைக்கு  அந்த லோ காஸ்ட் விமானநிலையம்  வந்து சேர்ந்தோம்.  12க்கு ஃப்ளைட் . சிங்கப்பூர்  போறோம்.   ஒருமணி நேர ஃப்ளைட். ஆனால் ஏரேஸியாவின் வழக்கம்போல் லேட்டாக் கிளம்புச்சு.


டெர்மினல் சந்தைக் கடையாட்டம்  இருக்கு.  பழவகைகள் நறுக்கி விற்பனைக்கு வச்சுருக்காங்க. ஒரே ஈ:(  கரும்பு ஜூஸ் கிடைக்குமான்னு பார்த்தால் கரும்பு மட்டும் காத்திருக்கு. கடைக்காரரைக் காணோம்.


ட்யூட்டிஃப்ரீ கடைகளைப் பார்வையிட்டேன்.  போறது சீப்  லோ (க்ளாஸ்) காஸ்ட்  டிக்கெட்டுலே , இதுலே ட்யூட்டி ஃப்ரீ வேற கேக்குதா என்ற  வகையில்  இருக்கு பொருட்கள். நமக்கான கேட்டுக்குள்  உள்ளேபோனால் திரும்பிவரமுடியாது.   நோ பாத்ரூம் என்ற எச்சரிக்கை வேற ! (கொடுக்கற காசுக்குக் கழிப்பறை கேக்குதோ?)  சின்னப்பிள்ளைகள் வச்சுருப்பவர் பாடு திண்டாட்டம். வேளைகெட்ட நேரத்தில்தான்  பசங்களுக்கு  'வரும்'! இமிக்ரேஷன் & கைப்பை, ஹேண்ட் லக்கேஜ்  செக்கிங்லே மறக்காமல் தண்ணி பாட்டில்களைப் பிடுங்கிக் கடாசினாங்க. நல்ல ஒரே விஷயம் என்னன்னா..... மலேசியாவில்  உள்ளே போறதுக்கோ (ஐ மீன்  நாட்டுக்குள்ளே)  நாட்டை விட்டுப் புறப்படும்போதோ  விஸா, ஏர்போர்ட் டாக்ஸ் இப்படி ஒன்னும் இல்லை.

நல்லவேளையா அதிகம் நடக்க வைக்கலை. மழை வந்துச்சுன்னா.... நனையாமப்போக குடை ஸ்டேண்டு வச்சுருக்காங்க. நல்லவேளையா மழையும் இல்லை!

சிங்கப்பூர் வந்து இறங்கினால்  இமிக்ரேஷனில்  திருவிழாக் கூட்டம்.  கோபாலின்  APEC Card  இருந்ததால் சட்னு வெளியே வரமுடிஞ்சது.  அதென்னவோ சிங்கை மண்ணை மிதிச்சதும் ஒரு பாதுகாப்பு உணர்வு வந்துருது.   அக்கம்பக்கம் திருட வர்றானான்னு பயந்து பயந்து சாக வேணாம் பாருங்க!  அதே கிராண்ட் சான்ஸ்லர் (செரங்கூன் ரோடு) போய்ச் சேர்ந்தோம்.  இதுக்கே ரெண்டு மணி ஆயிருச்சு.  வழக்கமா  பகல் மூணு மணிக்கு செக்கின் என்பவர்கள்  பெரும்கருணை வச்சு அறை ரெடியா இருக்குன்னு உடனே கொடுத்தார்கள்.



நம்ம திட்டம் எல்லாம் முழுக்க முழுக்க  ஜகா வாங்குன நாள்! ஒரு மணிக்கு லேண்டிங்.  டாக்ஸி பிடிச்சு நேரா ஹொட்டேல் ஒன்னரை மணிக்குள். மூணுமணி செக்கின் என்பதால் பொட்டிகளைப்  போட்டுட்டு நேரா கோமளவிலாஸ். பகல் சாப்பாடு எப்படியும் ஒன்னேமுக்காலுக்குள்  ஆரம்பிக்கலாம்.  இன்னிக்கு ரொம்ப சீக்கிரமா காலைஉணவு ஆச்சு.  லோ காஸ்ட்லேயும்  ஸ்நாக் ஒன்னும் இல்லை.

அறை  போனவுடனே கிடைச்சதால், அறையில் கொண்டு போய் பொட்டிகளைப் போட்டோம். நான்ஸ்மோக்கிங் ஃப்ளோர் என்ற பெயரே தவிர  என்னமோ ஒரு நாத்தம்:( அறையிலும் குளிமுறியில் அதே துர்நாத்தம்.  வெளியில் காரிடாரில் இருந்த  க்ளீனிங் (சீன) பெண்மணியிடம்  கொஞ்சம் சுத்தப்படுத்தித் தாங்கன்னு  சொன்னதுக்கு   தலையாட்டும்போதே என்னமோ கொஞ்சம் முறைப்பாப் பார்த்தமாதிரி இருந்துச்சு.  ஒரு வேளை கொலைப்பசியில் அப்படி நமக்குத் தோணுச்சோ?

கோமளவிலாஸை நெருங்கும்போதுதான்  சிங்கைக் காசு கையில் இல்லைன்னு  ஏடிஎம் தேடி ஓடறார் இவர். இதுலே 'நீ போய் ஆர்டர் கொடுத்துட்டு சாப்பிட ஆரம்பி. நான் வந்து சேர்ந்துக்கறேன் ' வேற!

அடராமா..... சிஸ்டம் எல்லாம் மாறி ரொம்பநாளாச்சே.... இப்பெல்லாம்  டிஃபன்  மட்டு சாப்பிட்டபிறகு பில் வரும். சாப்பாடுன்னா.... முதலில்  காசைக் கட்டுனால்தான்  வாயில் புவ்வா.

முஸ்தாஃபா பக்கம்தான்  மணி சேஞ்ச் செஞ்சுக்க  ஏழெட்டு இடங்கள் இருக்கே தவிர  இந்தப்பக்கம் டெகா மால் சைடில்  பார்த்த நினைவில்லை.  கோபால் வரும்வரை நம்ம வீரமாகாளியம்மன் வாசலில் நின்னப்ப,  காளி எனக்கு ஸீன்ஸ் காமிச்சாள். சுற்றுலாப்பயணிகள்  சைக்கிள் ரிக்‌ஷாவில்  செராங்கூன் ரோடைச் சுற்றிப் பார்க்கிறார்கள்.



இலையில் கை வச்சப்ப சரியா ரெண்டே முக்கால்.  சுமாராத்தான் இருக்கு ருசிகூட.  பழைய கோமளவிலாஸ் போல இனி வராது:(  அறைக்குத் திரும்ப வந்து கொஞ்சநேரம் ஓய்வு.

மாலை  அஞ்சுக்குக் கிளம்பி அதே கோமளவிலாஸில் ஒரு காஃபி மட்டும் குடிச்சுட்டு டன்லப் தெருவழியா நடந்து போறோம். தளதளன்னு  பச்சைக் காய்கறிகள் கண்களை  இழுக்குது.  கத்திரி முருங்கை இருக்கட்டும், வாழைப்பூ வச்சுருக்காங்க!

அப்துல் கஃபூர் மசூதியைக் கடந்து போறோம்.   105 வருசப் புதுசு. நல்லா பளிச்ன்னு இருக்கு. வெளிப்புற சுவர்களில்  நட்சத்திரங்களும் பிறை நிலாவுமா  டிஸைன் வரைஞ்சுருக்கு.  நான் இதுவரை எங்கேயும் இப்படி டிஸைன் போட்ட மசூதிச் சுவர்களைப் பார்த்ததே இல்லை.
சிங்கையின் பாரம்பரியக் கட்டிடங்களிலிந்த மசூதியும் ஒன்னு.

ஸிம்லிம் ஸ்கொயர்  கடந்து  வாட்டர்லூ தெரு கிருஷ்ணனைப் பார்க்க போய்க்கிட்டு இருக்கோம்.  கிருஷின் யானைகளைப் பார்க்கணும் எனக்கு. அப்படியே பக்கத்தில் இருக்கும் சீனக்கோவிலுக்கு போகணும். இது வழக்கமான ரவுண்டுதான் நமக்கு.

சீனக்கோவிலில் (Kwan Im Temple)  குலுக்கு ஆரூடம் பார்த்துக்கிட்டோம்.  (விவரம் வேணுமுன்னா இங்கே  பாருங்க. ரெண்டு வருசத்துக்கு முந்தி எழுதி இருக்கேன்) சீனமாதா ( Guanyin, the Chinese Goddess of Mercy) சொல்லுவது சரியா இருக்காதா? 1884 இல் கட்டப்பட்ட கோவில் இது.


கிருஷ்ணா கிருஷ்ணா இக்கடச்சூடண்டி கிருஷ்ணா

இந்தக் கோவிலில் எப்பவும் கூட்டம் அலைமோதும்.  வாசலில் இவுங்க குவிச்சு வச்சுருக்கும் ஊதுபத்திகளில்  சில எடுத்து நாமே கொளுத்திவச்சுக் கும்பிடலாம்.

ஸ்ரீ கிருஷ்ணர் வழக்கம்போல் புல்லாங்குழலும் கையுமா இருக்கார்.  கருவறை முன் மண்டபம்தான் இங்கே அட்டகாசமா இருக்கும்.  இந்தக் கோவிலுக்கு போனமுறை வந்திருந்தப்பதான்  தூண்களுக்கு யானை செஞ்சு பொருத்திக்கிட்டு இருந்தாங்க.  எப்படி இருக்கு பசங்கள்னு பார்த்தால்..... தூண்களுக்கெல்லாம்  துணி  உறைகள்:(  அழகா திருமண், சங்கு சக்கரம், யானை, அன்னம், பூக்கள் என்று டிஸைன் இருந்தாலும்   அழகான தூணுக்கு எதுக்கு மறைப்புன்னு தெரியலை:(


யானைத்தூண்கள். இங்கே:-)


கொஞ்சம் படங்களைக் க்ளிக்கிட்டு கோவிலை வலம் வந்தோம். பெருமாள் பாம்புப் படுக்கையில் தேமேன்னு படுத்துருக்கார்.  நம்ம ஆஞ்சி செல்லம்போல் இருக்கார் . Study Award  கொடுக்க ஆரம்பிச்சுருக்கு கோவில்  நிர்வாகம்.  ரொம்ப நல்ல சமாச்சாரம். அங்கிருந்து கிளம்பி பூகீஸ் போனோம். வழியெல்லாம்  கடைகளோ கடைகள்.  இந்தச் சதுக்கம் எப்பவுமே கலகலன்னுதான் இருக்கும்

அப்படியே காலாற பூகீஸ் தெரு ஷாப்பிங்  சென்டர் பக்கம் காலை வீசிப்போட்டோம்.  வழியெல்லாம்  கடைகளோ கடைகள். சிங்கையின் மிகப்பெரிய  ஷாப்பிங் பகுதி இது.

பழங்கள்தான் பார்க்கவே அமர்க்களம். பூகீஸ் மாலுக்குள் நுழையும்போதே மழை பிடிச்சுக்கிச்சு.  மகளுக்கான ஒரு மேக்கப் சாமானைத் தேடிக்கிட்டு இருக்கோம். சிவப்புத்தோல்களுக்குன்னே கிடைக்குதே தவிர, மாநிறத்துக்கு ஒன்னுமே இல்லை. இந்தியாவில் குறிப்பா சென்னையிலு இதே கதைதான்.   பொதுவா தமிழர்கள்  மாநிற  மக்களே. ஒரு 25 சதம் மக்கள்  வெளுப்பா இருப்பாங்க. அப்ப மற்ற 75 சதம் மக்களுக்குன்னு ஒன்னுமே தயாரிக்க மாட்டாங்களா என்ன?  அநியாயமாத் தோணுது எனக்கு?  இல்லேன்னா சிகப்பழகு க்ரீம் போட்டு ஏழே நாளில் சிகப்பாயிருவோம் என்ற நம்பிக்கையா?

கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்துட்டு, மழை நின்னதும் கிளம்பி மார்கெட் ஏரியாவில் போய் பழவகைகள்  மூணு ட்ரே பத்து டாலருன்னு வாங்கிக்கிட்டு அறைக்குத் திரும்பினோம்.  வழியில் ஒரு ப்ரௌஸிங் செண்டர்.  மெயில் செக் பண்ணலாமான்னு  கேட்டார் கோபால்.  வாழைப்பழம் வேணாமுன்னும் குரங்கு உண்டோ?  அரைமணிக்கு ஒரு வெள்ளி. இன்னொரு முறை சாப்பாட்டுக்குன்னு வெளியே போக சோம்பல். பஃபெல்லோ ரோடு கோமளவிலாஸில்  இட்லி வாங்கிக்கிட்டோம் கையோடு.

நம்ம கோவியாருக்கு சிங்கை வந்த விபரம் சொல்லி ஒரு சேதி அனுப்பிட்டு சாப்பாட்டை முடிச்சுட்டு பழப்பொதியைத் திறந்தால்.......
 யக்:(   பலாப்பழம் கெட்டுப்போய் இருந்துச்சு.

மாம்பழமும் கொய்யாவும்  ஓக்கே!

தொடரும்.............:-)






ஊருக்கு ஒரு பேட்டர்ன் (சிங்கைப்பயணம் 1)

$
0
0

பழகின ஊர் ஒவ்வொன்னுக்கும் ஒரு பேட்டர்ன் வச்சுருக்கேன்.  சிங்கைன்னா  சீனுவை தரிசனம் செஞ்சு,  அங்கேயே உக்கார்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் வாசிச்சு அந்த நாளை  ஆரம்பிக்கணும். இந்த சகஸ்ரநாமம் வாசிப்பது  ஒரு எட்டுவருசங்களா  நடக்குது.  அதென்னமோ அங்கே கோவிலில் உக்கார்ந்து வாசிக்கும்போது  பெருமாளே பக்கத்தில் வந்து உக்கார்ந்துக்கற மாதிரி தோணும். வேறெந்த  ஊர் கோவில்களுக்கும்  இது நம்ம நடைமுறை இல்லையாக்கும், கேட்டோ!  இது சிங்கை ஸ்பெஷல்:-)

இன்னிக்குக் காலையில் எழுந்து கடமைகளை முடிச்சுட்டு நேரா கோமளவிலாஸ் ப்ரேக்ஃபாஸ்ட்.  கோபாலுக்கு இட்லி வடை, எனக்குப் பொங்கல் வடை. கூடவே ஃபில்ட்டர் காஃபி. கல்லாவிலிருந்த பெண்மணி, 'எப்ப வந்தீங்க'ன்னு சிரிச்சமுகத்தோடு கேட்டாங்க.  நாமும் கடந்த  29 வருசமா அவுங்களைப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கோம்:-)

காலை ஒன்பதுக்கு முன்  நகரத்தின் பிஸியான சாலைகளில் ஒன்னான செராங்கூன் சாலையில் நடப்பது ஒரு தனி அனுபவம். ராத்திரி பெய்த மழையால் சாலை பளிச்சுன்னு ஈரத்துடன் கிடக்கு.  சாலைக்கு எதிர்ப்புறம் இருந்தே வீரமாகாளிக்கு  ஒரு கும்பிடு. 'அப்புறம் வாறேன் ஆத்தா.'

ரொம்பப்பொடி நடையில்  சீனுவின் கோவிலுக்குப்போய்ச் சேர்ந்தோம். முக்கால் கிலோமீட்டர். புள்ளையாருக்கு  ஒரு தேங்காய் உடைக்கணும்.  கோவிலுக்குள் நுழைஞ்சதும்  நேரா கண்ணை ஓட்டினால் கொடிமரமும் அதன் பின்னே இன்னும்கொஞ்ச தூரத்தில் திறந்த கண்ணோடு நிற்கும் பெருமாளும்!  'ஒரு சுத்து சுத்திட்டு வரேண்டா'  என்ற முணுமுணுப்போடு   ஒரு தேங்காயை மட்டும் வாங்கினோம். புள்ளையார் முன்னால் இருக்கும்  தொட்டியில்  சூறைத்தேங்காய்  உடைச்சார் கோபால்.

இந்தத் தேங்காய் உடைக்கும் தொட்டி அமைப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். செட்டிநாட்டுக் கோவில்களில்  முக்கியமாகப் பிள்ளையார்பட்டி  கோவிலில்  உள்ள  இந்த முறை  ரொம்ப 'நீட் ' என்றே நினைப்பேன்.  உடைஞ்ச ஓட்டாஞ்சில்லுகள் யார் காலிலும் மிதிபடாது பாருங்க.
புள்ளையார் சந்நிதியில்  தங்க முலாம் பூசிய வெள்ளிக் கவசத்தில் இருக்கும் மூலவர், பஞ்சலோக உற்சவருடன் தம்பியும் வேலாக நின்னு சேவை சாதிக்கிறார்.  பெருமாள் கோவிலில் தம்பி எப்படி இடம்பிடிச்சு நின்னார் பாருங்களேன்!!!!

தனிக் கட்டிடமா இருக்கும் இதில்  இடது பக்கம் புள்ளையார், வலது பக்கம் சுதர்ஸனர். ரெண்டு சந்நிதிகளுக்கும் இடையில்  பின்புறம் கொஞ்சம் தள்ளி விஷ்ணுதுர்கை.  முன்னால் நின்னு பார்த்தால் மூன்று சந்நிதிகளையும்  ஒரு சேரப் பார்த்து சேவிக்கலாம்.

 ஸ்ரீ சுதர்ஸனருக்குப் பின்பக்கம்  வழக்கம்போல் நரசிம்ஹர், சிரிச்ச முகத்துடன்.    சுதர்ஸனர் சந்நிதியின் வெளிப்புறம் இரண்டு பக்கங்களிலும்  குமுதவள்ளி நாச்சியார் &திருமங்கை ஆழ்வார்  ஒரு புறமும், நம்மாழ்வார் & பெரியாழ்வார் மறு புறமும்  இருக்காங்க.  சந்நிதிகளின் வெளிப்புறச் சுவர்களில் அவரவருக்கு  தனித்தனி டிஸைன்களில்  யானை, சிம்ஹம் இப்படி வேலைப்பாடுகள்.  சும்மாச் சொல்லக்கூடாது  பார்த்துப் பார்த்துதான்  கட்டி இருக்காங்க. ஒவ்வொரு சந்நிதியையும் தனித்தனியாச் சுற்றிவரலாம்.

பிரசாத விநியோகம் நடக்குது. எட்டிப் பார்த்தேன்.  புளியோதரையும், ததியன்னமும்  துளித்துளி கோபாலுக்கும்  கேஸரி துளியூண்டு எனக்குமாக வாங்கிக்கிட்டேன்.  தெரிஞ்சிருந்தால் கோமளவிலாஸ்  போகாம நேரா இங்கே வந்திருக்கலாம். (என்ன தான் சொல்லுங்க பார்க் ராயல் (நியூபார்க்) வசதி வராது. கோவிலுக்கு ரொம்பப்பக்கம்.  ஆனால்.... அநியாயத்துக்கு  அறை வாடகை வச்சால் எப்படி? புத்தம்புது கிராண்ட் சோழாவா இருந்தால்கூடப் போனாப்போகுதுன்னு இருக்கும். இங்கே நியூ பார்க் என்ற பெயரை பார்க் ராயல்ன்னு மாத்தினதும் வாடகை எல்லாம் டபுள் ஆக்கினது  அடுக்குமா?)


அட்டகாசமான ருசி. அதென்னமோ  சாமிப் பிரசாதம் என்றாலே  .......     என்ன ஒன்னு. இங்கே பயமில்லாமல் சாப்பிட்டுக்கலாம்.  சுத்தமாச் செய்யறாங்க. சமைக்குமிடத்தைப் பார்த்தாலே அட்டகாசமா இருக்கு.

மஹாலக்ஷ்மி  தாயாரை  ஸேவிச்சுட்டுக் கோவிலை வலம் வந்தோம்.  ஆண்டாள் சந்நிதியில் 'தூமணி மாடம்' ஆச்சு.  எதிரில் துளசி மாடம்.  அப்புறம் எம்பெருமான்  தரிசனம்.  யாரும்  'ஜருகு ' சொல்லி விரட்டாமல் நிம்மதியா  நம்மிஷ்டம் போல் மனம் கொள்ளுமளவுக்கு  ஸேவிக்கலாம்.  இவர் ஸ்ரீநிவாசன். திருப்பதி  ஸ்ரீநிவாசனே  அனுப்பி  வச்சுருக்கார்.

எப்ப வந்தாராம்?  கோவிலைக் கட்டும் எண்ணம் வந்தது 1800 களில்.பெருகி வரும் வைஷ்ணவர்களுக்கு ஒரு பெரு(ம்) ஆள்  வேணும். அந்தக் காலக்கட்டத்தில்  இந்தியாவும் ப்ரிட்டிஷ் ஆட்சியிலே இருந்துச்சே!  கிழக்கிந்தியா கம்பெனி!  மாடர்ன் சிங்கப்பூர் உருவாகி  இருந்த சமயமும் அதுதான்.   மருத்துவர்கள், வக்கீல்கள் னு பெரியபடிப்பு படிச்சவுங்க முதல், வியாபாரிகள்,  நடுத்தர வர்க்கத்தில் பட்ட  குமாஸ்தாக்கள், ஆசிரியர்கள், போலீஸ், தபால் ஊழியர்கள் இப்படி வெள்ளைக்காலர்  வேலை செய்பவர்கள்,   கட்டிட வேலை,  கூலிவேலைன்னு செய்யும் சாதாரணத் தொழிலாளிகள் இப்படிப் பலரும்  இங்கே வந்து குடியேறினாங்க.

அருணாச்சலம் பிள்ளை,  கூத்தபெருமாள் பிள்ளை, ராமசாமி பிள்ளை, அப்பாசாமி பிள்ளை, சொக்கலிங்கம் பிள்ளை, ஜமீன்தார் ராமசாமி  என்பவர்கள் சேர்ந்து  ரெண்டு ஏக்கருக்கும் கொஞ்சம் அதிகமா நிலம் ஒன்னு ( 2 acres 2 woods and 24 poles )  நம்ம கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து வாங்கினாங்க. இருபத்தியாறு ரூபாய் எட்டணா செலவாச்சு.  ஒரே கம்பெனி என்பதால் அங்கத்துக் காசும் இங்கத்துக் காசும் (சிங்கப்பூர் செட்டில்மெண்ட்) ஒரே மாதிரி செல்லுபடி ஆனதாம். அப்ப 1851 வது  ஆண்டு. பலவருசங்களா இடத்தை அப்படியே போட்டு வச்சுருந்துட்டு,  1885 லே கோவில்கட்டி பெருமாளை வச்சாங்க. அவர் நரசிங்கப் பெருமாள்.

சிலவருசங்கள் கழிச்சு கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த  இன்னும் கொஞ்ச இடங்களையும் வாங்க முடிஞ்சது. ரெண்டு பக்தர்கள் அந்த இடங்களை வாங்கி கோவிலுக்கு நன்கொடையாக் கொடுத்தாங்க. ஆகஸ்ட் 15, 1912  இல் Mohammedan Hindu Endowments Board இன்னும் கொஞ்சம் இடத்தை 999 வருச லீஸ் எடுத்துக் கொடுத்து உதவி இருக்கு. தமிழக இஸ்லாமியர்கள்தான்  முதலில் இங்கே குடியேறினார்களாம். இந்த போர்டுதான் 1907 முதல்கோவில் நிர்வாகத்தையும்  பார்த்துக்கிட்டவங்க.

1950 வரை  இப்படியே நடந்துக்கிட்டு இருந்த கோவிலை, இன்னும் பெரிய அளவில் கட்டலாமுன்னு போர்டு முடிவு செஞ்சது.  அப்படியும் பத்து வருசமாயிருச்சு  அதுக்கான பொருள் சேர்க்க.  கோவிந்தராஜப்பிள்ளை என்ற புரவலர்  பணம் செலவு செய்ய முன்வந்தார். 1960 இல்  கோவிலைக் கொஞ்சம் பெருசாக் கட்டி முடிச்சாங்க. 1965 இல்  இவரது முயற்சியால் கல்யாணம் போன்ற சுபகாரியங்களுக்காக ஒரு ரெண்டு மாடி ஹால் கூடக் கட்டினாங்க. சுதந்திர சிங்கப்பூரின் முதல் ஜனாதிபதி   Enche Yusoff Bin Ishak அவர்கள்  இந்த ஹாலைத் திறந்து வச்சார்.

  அதுக்குப்பிறகு இன்னும் ஒரு வருசம் கழிச்சு (1966)  புள்ளையார் இருக்கும் கட்டிடமெல்லாம்  கட்டி முடிச்சுருக்காங்க. அந்த சமயம்தான்  பெரியோர்கள் பலர்  சேர்ந்து , மூலவரை மாத்தலாமுன்னு முடிவு செஞ்சு,   கோபமா இருக்கும் நரசிம்ஹனுக்கு பதிலாக காருண்யமான ஸ்ரீநிவாசனை மூலவராக்கிட்டாங்க.  அப்ப அருள்மழை பொழிய ஆரம்பிச்சவர்தான் நம்ம சீனு. 1979இல் ராஜகோபுரம் கட்டியாச்சு.  இதைக்கட்டவும் பெருமளவில்  உதவுனவர் நம்ம கோவிந்தராஜப் பிள்ளைதான்.  1978 இல் கோவில் சிங்கையின் பாரம்பரியக் கட்டிடமா அறிவிக்கப்பட்டது. இதுவரை மூணு முறை புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் ஆகி இருக்கு. வெளிப்புறம் மதில் கட்டுமுன் எடுத்த(சுட்ட) படம் இது. கோவிலுக்கு நன்றி.

எப்பப்போனாலும் பளிச்ன்னு கோவில் சுத்தமா இருப்பதோடு பூஜை விசேஷங்கள் எல்லாம் அருமையா அந்தந்த நேரத்தில்  சரியான முறையில்  நடக்குது.  எந்த மதக்காரரா இருந்தாலும் கோவிலுக்குள் வரத்  தடை ஏதுமில்லை. தாராளமா க்ளிக்கவும் செய்யலாம்.  தைப்பூசத்துக் காவடிகள் பால்குடங்கள் ஊர்வலம் எல்லாம் இங்கிருந்து கிளம்பிதான் டேங் ரோடு தண்டபாணி கோவிலுக்குப் போகுது.  சைவ வைஷ்ணவ ஒற்றுமைச் சின்னம்.

நம்ம தூண் காலியாத்தான் இருக்குன்னு  அங்கே உக்கார்ந்து  கையோடு கொண்டு போயிருந்த (பெரிய எழுத்து) ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகத்தை வாசித்தோம்.  அரைமணி நேரம்  ஆகும் வாசிச்சு  முடிக்க. வலது பக்கம் நம்ம நேயுடு தனிச்சந்நிதியில்,வெற்றிலை மாலையில் ஜொலிக்கிறார்!

பொடிநடையில் மீண்டும் அறைக்கு வந்தோம். இன்னும்  கொஞ்ச நேரத்தில் நம்ம தோழி வர்றாங்க .

தொடரும்..........:-)






இன்று முதல் பத்து ஆரம்பம்.

$
0
0
நாளும்பொழுதும் யாருக்காகவாவது காத்து நின்னதுண்டோ?  காலஓட்டத்தில் அப்படியே  அடிச்சுக்கிட்டு போகுது நாட்களும் வருடங்களும். அந்தக் கணக்குப்படி இன்று ஒன்பது  கழிஞ்சு பத்தாம் வயசு ஆரம்பம்  நம்ம துளசிதளத்துக்கு!

பத்து டிகிரி இன்னிக்கு.ஆனாலும் பூத்துக்குலுங்குது:-)


(ஆஃப்ரிக யானை. தோழியின் பரிசு)


வின்னராக  ஓடி ஜெயிக்க முடியலை என்றாலும் இன்னும்  மெது ஓட்டத்தில்  ஓடிக்கிட்டு இருக்கு.  திரும்பிப் பார்த்துக்கறதும் அப்பப்ப உண்டு.  செய்யும் தொழிலில் கொஞ்சம் நேர்மையும் உழைப்பும் வேணும்தானே?  அதை மனசாட்சிக்கு பங்கம் வராமல் காப்பாத்திக்கிட்டு இருக்கும்  முயற்சியும் தொடர்ந்தே வருது.


நல்லதும் கெட்டதுமா,  உருப்படியும் மொக்கையுமாக் கணக்குப் பார்த்தால் இந்த இடுகைக்கு  1490ன்னு ப்ளொக்ஸ்பாட் சொல்றார்.

தளத்தின் புரவலர், பயணக்கதைகளுக்குக் காரணகர்த்தா , பின்னூட்டப்ரேமி கோபாலுக்கும்  இன்று பிறந்தநாள்.  எல்லா நன்மைகளும் பெற்று அவர் நீடூழி வாழ்கவென்று  மனதார வாழ்த்துகின்றேன்.


அன்பும் ஆதரவுமா வாசிக்கும் , பின்னூட்டமளிக்கும்  நண்பர்களுக்கும் ஓசைப்படாமல் வந்து போகும் அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

அனைவருக்கும் என் அன்பு.  நல்லா இருங்க மக்கள்ஸ்.

ஃப்ளவர் லைக்கிங்?   ஸேம் ஸேம்....



அதென்ன கெமிஸ்ட்ரியோ!!! (சிங்கைப்பயணம் 2)

$
0
0
பதிவர், எழுத்தாளர் என்பதையெல்லாம் கடந்து ஏதோ ஒன்னு  நட்புகளை பிணைக்கும்  அதிசயம்தான்  கடந்த பத்துவருசமா நடந்துக்கிட்டு இருக்கு.  சிலநண்பர்கள் குடும்ப நண்பர்களா ஆகிப்போனதும் ஒரு  விசேஷம்தான் இல்லையோ?  முதலிரண்டு முறை  ஊரைச் சுற்றிப்பார்க்கும் ஆவல் அதிகமா இருந்தது போல  இப்போ இல்லை.  ஷாப்பிங் ஷாப்பிங்ன்னு அலைஞ்ச காலமும் போயிருச்சு. உலகம் முழுசும் எல்லாமே சீனத் தயாரிப்பு. அப்புறம் எங்கே வாங்கினால் என்ன? சிங்கையில்   மலிவாக் கிடைக்குதேன்னு  பார்த்தால் தரமும் குறைவாகத்தான் இருக்கு:(

சிங்கைச்சீனுவுக்கு முன்னுரிமை,  அப்புறம் நண்பர்கள் சந்திப்பு.வேறொன்னும் அவ்வளவு முக்கியமாத் தோணறதில்லை இந்த சிங்கப்பூரில்.  அடிக்கடி வந்து போவதால்  வேற்றூரென்ற எண்ணம்கூட வர்றதில்லை.

மரத்தடி காலத்து நண்பர்களுடனும், இணைய நண்பர்களுடனும்  சேர்ந்து இண்டர்நேஷனல்  சந்திப்பு ஒன்னை ஆரம்பிச்சு வச்சது துளசிதளம் என்று சொன்னால் நம்புவீங்களா?


இங்கே பாருங்க.  அட!  பயணக் கட்டுரையை வெறும்  பத்தே பகுதியில் முடிச்சுட்டேனே!!!!! அதுவும் ஒன்பதுநாள்  ஒரே ஊரில்  இருந்துருக்கோம்! சபாஷ்!


தோழி வந்தாச்சு.  சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷ். நாம் எப்போ சிங்கை போனாலும் அவுங்க வீட்டுலே ஒரு ஃபுல் கட்டு கட்டிட்டுத்தான் வருவோம்.  எழுத்து நம்மை இணைக்குதுன்னு பார்த்தால்  நம்ம கோபால் கூட நேரம் கிடைச்சால் அங்கே போய் ஒரு கட்டு கட்டாமல் வர்றதில்லையாக்கும்!  சித்ராவின்  கணவர் ரமேஷ் எங்கேன்னதுக்கு  'தென்னாப்பிரிக்காவில்  ரமேஷ்'னு சொன்னாங்க. (சினிமாவையும் தமிழனையும் பிரிக்கவே முடியாது!)  ராஜுதான் போகலை. ரமேஷாவது  போய்வரட்டுமே!  இவரும் மரத்தடி எழுத்தாளரே.  ஆனால் ரொம்பநாளா  ஒன்னும் எழுதலை:( அவுங்க மகனுக்கு  போன டிசம்பரில் கல்யாணம்.  போக ரெடியா நின்னவளை குடும்பக்காரணம் ஒன்னு இழுத்துப்பிடிச்சது ஒரு சோகக் கதை:(


என்னதான் வீடியோவில் கல்யாணத்தைப் பார்த்துட்டாலும் மருமகளை நேரில் காண்பது இதுதான் முதல்முறை எனக்கு. தோழியின் கூடவே  (மாமியார் மெச்சிய) மருமகளும் வந்துருந்தாங்க. சின்னதா ஒரு பரிசுப்பொருள் வாங்கி வச்சுருந்தோம்.  கொஞ்சநேரம் விட்டுப்போன  (எட்டுமாசக்) கதைகளையெல்லாம் பேசி முடிச்சு(?) சாப்பிடக் கிளம்பினோம்.

இன்னிக்கு இப்போ முன்னுரிமை மருமகளுக்கே!

கைலாச பர்வதம் போகலாமான்னாங்க.  அட! தாண்டிக் குதிச்சால் ஆச்சு:-)

நாம் தங்கி இருக்கும் ஹொட்டெலின் ஒரு பகுதிதான் இது.  என்ன ஒன்னு ரெண்டு கட்டிடத்துக்கும் நடுவிலே ஒரு லேன் போகுது.  அங்கேயும் மாடியில் தங்குவதற்கான அறைகள் உண்டு.  கைலாசத்தின் அடுத்த வாசல் செரங்கூன் சாலையில். நம்ம காளியம்மன்  கைலாசமலைக்குப் பக்கத்து வூடு!  படு பொருத்தமா அமைஞ்சு போச்சு பாருங்க:-)

முல்சந்தானி சகோதரர்கள்  சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்கள்.  1940லே கராச்சியில் பானி பூரி வித்துக்கிட்டு இருந்தாங்க.  பிஸினஸ் நல்லாப் போய்க்கிட்டு இருக்கு. 1947 இல் பாகிஸ்தான் பிரிவினை ஆனதும்  இந்துக்களுக்கு  நடக்கும்கொடுமை தாங்காமல் ஊரை (நாட்டை)விட்டே ஓடிவரவேண்டிய நிலைமை. கலவரம் நடக்கும் காலத்தில் என்னத்தைன்னு மூட்டை கட்டிக்கிட்டுக் கிளம்பறது? திகைச்சுப்போனவங்க..... விலைமதிப்பு வாய்ந்தபொருட்களை அம்போன்னு விட்டுட்டு,  கையிலே தொழில் இருக்கு. எப்படியும் பிழைச்சுக்கலாமேன்னு பானி பூரி, ரக்டா செய்யும் பாத்திரங்களைச் சுமந்துக்கிட்டு  பார்டர் தாண்டி வந்து  பம்பாய்க்குப் போய்ச் சேர்ந்தாங்க.

முதலில் தெருவோரக்கடையா  இருந்து, பின்னே கைலாஷ் பர்பத்  (வடக்கருக்கு 'வ' வராதுல்லெ!) என்ற சின்னக்கடை  கொலாபா மார்கெட்டாண்டை ஆரம்பிச்சது 1952 இல். வியாபாரம் சூடு பிடிச்சது. படிச்சவன், படிக்காதவன், ஏழை பணக்காரன்,  குமரன் குமரி, கிழவன் கிழவின்னு  எல்லோரையும் ருசிக்கு அடிமையாக்கிட்டாங்க. பானி பூரி ஸ்பெஷலிஸ்ட் என்றாலும்  பஞ்சாபி, சிந்தி உணவு வகைகளும் தயாரிச்சதும் நல்ல பேர் கிடைச்சுப் போச்சு.

அதுக்குப்பிறகு  இந்தியாவிலேயே முக்கிய நகரங்களில்  கிளைகள் திறந்து அமோகமா இருக்காங்க. சிங்கை ஒரு குட்டி இந்தியாவா ஆனதும்  எப்படி நம்ம சரவணபவன், அடையார் ஆனந்தபவன், சங்கீதா எல்லாம்  இங்கே  இடம்பிடிச்சதோ  அதே வகையில் கைலாசமலை  இங்கே சிங்கையிலும் கிளை நீட்டி இருக்கு. வந்த கொஞ்சநாளிலேயே நல்ல பெயரும் புகழும்.  இந்திய ருசி & சிங்கைத் தரத்தில் சர்வீஸ். பின்னே கேட்பானேன்?

கைலாசமலையில் அமர்ந்து ஒரு சாட்


உணவு ஆர்டர் செய்யும் பொறுப்பும் மருமகளுக்கே!  சாட் ஸ்பெஷாலிட்டியா இருக்கு என்பதால்  சாட் ப்ளேட்டர், பட்டூரா ப்ளேட்டர் (எல்லாத்திலும் நவ்வாலு வகை)  சனாக் கறி, குல்ஃபி ஃபலூடா, மலாய் குல்ஃபி, ரசகுல்லா, ஆப்பிள் புதினா ஜூஸ்,  லஸ்ஸி, மசாலா டீ ன்னு   உள்ளெ தள்ளினோம்.  சும்மாச் சொல்லக்கூடாது ,நல்ல ருசிதான். ரெஸ்ட்டாரண்டும்  நல்லா சுத்தமா இருக்கு.  என்ன ஒன்னு சர்வீஸ் சார்ஜ்ன்னு ஒரு பத்து சதமானமும், ஜி எஸ் டின்னு இன்னும் ஒரு ஏழு சதமானமும் வாங்கிடறாங்க.

சித்ராவைவிட அவுங்க அம்மா எனக்கு ரொம்ப நெருங்கியவங்களா ஆகிப் பலவருசங்களாச்சு.  'சந்திக்க வரலாமா'ன்னு ஃபோன் போட்டால், 'இது என்ன கேள்வி? இது உன் வீடு எப்ப வேணுமுன்னாலும் வரலாம். சட்னு கிளம்பி  வா'ன்னு வாய்நிறையச் சொல்லும் அன்புக்கு நான் அடிமை.

பேச்சு வாக்கில் ஊரிலே அம்மா அப்பா எப்படி இருக்காங்கன்னு கேட்டால்,  இங்கே சிங்கைக்கு வந்துருக்காங்கன்னு இன்ப அதிர்ச்சி கொடுத்தாங்க சித்ரா.  "அடடா.... ஏன் கூடக்கூட்டிக்கிட்டு வரலை?"

தம்பி வீட்டில் இருக்காங்கன்னதும்  ரொம்பக்கிட்டக்கத்தானேன்னு பேசிக்கிட்டே  பொடி நடையில் அங்கே போனோம். சர்ப்பரைஸா இருக்குமோன்னு  நினைப்பு. 'கவலையே படாதே. எல்லாவிவரமும் அம்மாவுக்குச் சொல்லியாச்சு'ன்றாங்க.

கேட்டைக் கடந்ததும் பெரிய நீச்சல்குளம் உள்ள அருமையான அடுக்கு மாடி வீடு.  ஒரு சமயம் பெய்த பெருமழையில் மொத்த சிங்கப்பூரும்  வெள்ளத்தில் மிதக்க, காம்பவுண்டுக்குள்ளே வந்த  வாடகைக்கார், நேரா போய் நின்னது(!) நீச்சல்குளத்துக்குள்ளே!  தரை தெரியாமல் தண்ணின்னா பாவம் புது  ட்ரைவருக்கு குளம் விவகாரம் எப்படித் தெரியும்? இப்படியாக உள்ளூர் பத்திரிகை மூலம் வீட்டின் புகழ் பரவிருச்சு:-)

தம்பி வீட்டின் உள் அலங்காரம் படு பிரமாதம். இருக்காதா பின்னே?  யானையாரும் பூனையாரும்  இருக்காங்களே!

 அப்ப விஜய் டிவியின் அவார்ட் ஃபங்க்‌ஷன் நடக்குது. சினிமா அண்ட் டிவி உலகில் யாரு இருக்கான்னுகூட தெரியாத எனக்கு, சித்ரா அப்பா முதல் முழுக்குடும்பமும்  திரையில் வரும் அனைவரின் ஜாதகத்தைப் புட்டுப்புட்டு வச்சாங்க!  எம்பத்தினாலு வயசுக்கு  அப் டு டேட், இல்லையில்லை  செகண்ட்  தெரிஞ்சு வச்சுக்கும்  விளையாட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சது:-)  ரிட்டயர்டு லைஃப் மஜாவாப் போகுதுன்னு  கிண்டல் செஞ்சேன்:-)   ரெண்டு மணி நேரம் செம அரட்டை:-)))) இன்னுமொரு மாசம் இருந்துட்டுக் கிளம்பறாங்களாம்.


நாங்க கிளம்பினபோது, ஒரு ஷிர்டி சாய்பாபா படமும் ஒரு மாம்பழமும் சாமி ப்ரஸாதம் கிடைச்சதுன்னு  கொடுத்தார்  சித்ரா அப்பா.  நிறைய கோவில்கள் , பூஜைகள், கச்சேரிகள் என்று  பொழுது நல்லாப் போகுதாம்.   நாம் அங்கே போன பாதையிலேயே பொடிநடையில்  செராங்கூன் சாலைக்குப் போயிட்டோம். ராமகிருஷ்ணா மிஷன் கட்டிடத்தைக் கோபாலுக்குக் காண்பிக்கலாமுன்னு நோரீஸ் தெருவுக்குள் நுழைஞ்சு ,  தேடிக்கிட்டுப் போறேன். காணோம்.  அப்பதான் உறைக்குது தப்பான தெருவில் நுழைஞ்சுட்டேன் என்பது. ஆனால்  அட்டகாசமான ஒரு  கட்டிடத்திலே சர்ச் ஒன்னு இருப்பதைக் கவனிச்சேன்.

இன்னும் கொஞ்சம்  தூரம் போய் காய்கறிக்கடைகளில் புதுசா வந்து இறங்கி விற்பனைக்குத் தயாரா இருக்கும் காய்கறிகளைக்  கண்ணால் பார்த்து, பெருமூச்சு விட்டு, க்ளிக்கிட்டு  நடந்தால் ஒரு கடையில் நாவல்பழங்கள்! ஹைய்யோ!  எவ்ளோ நாளாச்சு!  கொஞ்சம் ஒரு அரைக்கிலோ  வாங்கினோம்.



அப்புறம் ஜோதி 'புஸ்ப'க்கடையில் வழக்கமா ஒரு சுத்து. விலையெல்லாம் தாறுமாறாய் ஏறிக்கிடக்கு! நம்ம வீட்டுக்கு வழக்கமா வாங்கும் ஊதுவத்தி  எட்டு டாலர் சமாச்சாரம் இப்போ பதினெட்டு டாலர்!  பொம்மைகளும் பூஜை சாமான்களும்  வழக்கம் போல் கொள்ளை அழகு.




சும்மாவே ஆடுவேன்.  சலங்கை கட்டிக்கிட்டால்.............:-))))






இன்னொரு கடையில்  'பொம்மைக்கொலு' பார்த்துட்டுக் கிளம்பும் சமயம்   நம்மை மாலை எட்டுக்குச் சந்திக்க வர்றதாச் சொன்ன  கோவி.கண்ணன்  குடும்பம்,  ' வரலை'ன்னு  செல்லில் கூப்பிட்டுச் சொன்னார்.  மறுநாள்  பார்க்கலாமுன்னு  முடிவாச்சு. நாங்களும்  பஃபெல்லோ தெருவில் இருந்த இன்னொரு கடையில் ஊதுபத்தி விசாரிக்கப்போனால் அங்கேயும் பதினெட்டே! இதென்னடா  ஊதுவத்திக்கு  வந்த வாழ்வுன்னு  ஒரு பேக்கெட் மட்டும் வாங்கிக்கிட்டு  அருகில் இருக்கும் கோமளவிலாஸில்  அஞ்சு இட்லிகளை பார்ஸல் வாங்கிக்கிட்டு அறைக்குப் போயிட்டோம்.  சூடு ஆறுவதற்குள்  சாப்பிட்டும் ஆச்சு.

அப்ப  நம்ம கோவியார்  செல்லில் கூப்பிட்டு  அவரும் குழலியுமா நம்மைச் சந்திக்க வந்துக்கிட்டு இருக்கோமுன்னு  சொன்னார்.  அஞ்சு நிமிசத்துலே கீழே லாபியில் இருக்கோமுன்னு  செய்தி. நாங்க பரபரப்பா கீழே போனால் அங்கே மொத்தக் குடும்பமும் ! நமக்கோ  இன்ப அதிர்ச்சி.

குழந்தைகளுக்குப் பசியா இருக்குமேன்னு  உடனே  சாப்பிடப் போனோம்.   இப்போ முன்னுரிமை குழந்தைகளுக்கு. நம்ம  செங்கதிர்  இன்னும்  சின்னக்குழந்தை என்பதால்  அக்கா சொன்னபடி  சிங்கை ஸ்டைல் உணவு கிடைக்கும் ரெஸ்ட்டாரண்டுக்குள் போனோம்.

நமக்குத்தான் இன்னொரு வயிறு இல்லை:( கம்பெனி கொடுக்கன்னு  ஒரு ஸ்வீட் மட்டும் வாங்கிக்கிட்டேன். பேச்சு எங்கள் மூச்சாக இருந்துச்சு. இடைக்கிடை ஒரு வாய் உணவு.

'ப்ளொக் இனி அவ்ளோதான். அதன் மவுசு குறைஞ்சுக்கிட்டு வருது'ன்னுகுழலி சொன்னதும்  கோபால் ஆடிப்போயிட்டார்! நாலு வரி எழுதும்  ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு ட்ராஃபிக் நிறையன்னதும், கவலையோடு 'இப்ப என்னம்மா செய்யப்போறே?' ன்னு கேள்வி வேற!!!

'இனி என்றால் இன்றோடுன்னு  பொருள் இல்லை.  அததுக்கு  ஆயுள் உள்ளவரை  வண்டி ஓடத்தான் செய்யும்' என்று நான் ஆசுவாசப்படுத்தினேன்:-)

மணி பத்தரைக்கு மேல் ஆச்சு. குழந்தைகளுக்கு தூக்க டைம்ன்னு  நினைச்சால். அழகான கண்களை இன்னும் அழகாத் திறந்து  தூக்கம்ன்னா என்னன்னு  கேட்கும் பார்வையை   என் மீது வீசறார் செங்கதிர்.

மறுநாளைக்கான  பதிவர் மாநாடு 'வழக்கமான இடத்தில்' மாலை அஞ்சு மணிக்குன்னு  சொல்லிட்டுக் கிளம்பினார் கோவியார்.  நம்ம குழலிக்கு  மறுநாள் வரமுடியாமல்  முக்கிய வேலை ஒன்னு இருப்பதால் இன்றைக்கே  நம்மைச் சந்திக்க வந்தாராம்.   ஹௌ நைஸ்!!!! ஹௌ நைஸ்!!

இப்போ தலைப்பு சரியா வருதா? :-)

தொடரும்......:-)







Viewing all 1431 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>