அஞ்சாவது மாடி முழுசும் கலைகளுக்காக ஒதுக்கியாச்சு. ஓவியங்கள், செதுக்குச் சிற்பங்கள், வரிசைகளில் Quilting & Patchwork கைவேலைகளுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. கொஞ்சம் வயசான பெரியவங்க, இதை ஒரு ஹாபியா தைக்கறாங்க. இவுங்களுக்கான க்ளப்கள், ஒன்று கூடல்கள் இதெல்லாம் நிறைய நடக்குது இந்த நாட்டிலே! அவுங்களோட இளமைக் காலத்துலே மனசை அலையவிட டெலிவிஷன், ஸெல்ஃபோன், வாட்ஸப், நெட், கம்ப்யூட்டர் எல்லாம் இல்லை பாருங்க. அதனால் ஆக்கப்பூர்வமா எதாவது செஞ்சுக்கிட்டு இருந்துருப்பாங்க. இந்தக் கலை ஆரம்பிச்சது 3400 B.C.ன்னு ஒரு சரித்திரக்குறிப்பு இருக்கு!
திமிங்கிலப்பல்!
மீனின் எலும்பில் செஞ்ச தட்டு. டோஸ்ட் செஞ்ச ப்ரெட் ஸ்லைஸ்கள் வைக்க!
அங்கங்கே இப்படி மடிக்கணினிகளும் இருக்கைகளும் வச்சுருப்பதால் காட்சிப்பொருட்களின் மேல் விவரம் அங்கேயே தேடிப் பார்த்துக்கலாம்.
இவுங்களை எப்படியாவது வலை உலகுக்குள் நுழைச்சே ஆகணுமுன்னு இலவச கணினி வகுப்புகளை அரசு பல இடங்களில் நடத்திக்கிட்டு இருக்கு. யார் வேணுமானாலும் போய் கணினி கத்துக்கலாம். நாம் என்ன ஜாவாவா கத்துக்கப்போறோம். கணினி இயக்குதல், மற்ற வேர்டு, ஆஃபீஸ், மெயில் அனுப்ப, வலைமேய இப்படிச் சொல்லிக் கொடுக்கறாங்க. ஆறு வாரம் ட்ரெய்னிங் இருக்கு. இலவசக் கணினி வகுப்புன்னதும் நானும் ஒருநாள் போய்ப் பார்த்தேன். மேலே சொன்னதெல்லாம் ஏற்கெனவே(வீட்டுலேயே முட்டி மோதி) தெரிஞ்சுக்கிட்டதால் முதல் நாள் வகுப்போட நிப்பாட்டிக் கிட்டேன். அந்த நேரத்துக்கு ஒரு பதிவு எழுதிக்கலாம் இல்லெ? பாருங்க என்னவோ சொல்லவந்து எங்கியோ போயிட்டேன்!
பழங்காலத்துக் கலையை இப்ப மாடர்ன்காலக் கலையா மாத்திக்கிட்டு பலர் புது முறையில் இந்தக் கைவேலைகளை தையல்மெஷீன் வச்சுச் செய்யறாங்க. கையில் தைச்ச காலம் போயே போச். இதுக்கான துண்டுத் துணிகள் விற்கும் கடைகள்கூட இருக்கு! துண்டுத்துணிகள் கேட்டு வாங்கிக்க டெய்லர் கடைகள் என்ற அந்தக் காலத்துச் சமாச்சாரம் கூட இப்ப இங்கே இந்த நாட்டுலே இல்லவே இல்லை. வீடுகளில் தன் குடும்பத்துக்குத் தைச்சுக்கறவங்க உண்டு.
இந்தக் கலைகளில் தேர்ந்தவர்களின் கலைப்படைப்பை ஒரு பெரிய ஹாலில் தொங்கவிட்டுருக்காங்க. ஒவ்வொன்னும் ஒரு அழகு! கண்காட்சி முடிஞ்சதும் படைப்புகள் உரியவர்களுக்குப்போய்ச் சேர்ந்துரும். இந்த மாதிரி கடன் வாங்கி காட்சிக்கு வைப்பது இங்கே பரவலாத்தான் இருக்கு! ரொம்பவே கவனமெடுத்து, கடன் வாங்கிய பொருட்களைப் பத்திரமாத் திருப்பிக் கொடுப்பதுடன், காட்சிக்கு வைக்கும்போது கடன் கொடுத்தவரை சரியான முறையில் acknowledge செய்வதாலும் கடன் கொடுக்க ஆர்வமாக இருப்பவர்களே இங்கு அதிகம்.
ரெட்டை இலை எங்களுக்கில்லை! ரெட்டைப்பூக்கள்தான்:-)
இன்னொரு இடத்தில் மூன்று பெரிய மேஜைகளைப்போட்டு ரெண்டுபக்கமும் இருக்கைகளைப்போட்டு வச்சுருந்தாங்க. மேஜைகளில் Kerry Ann Lee என்ற கலைஞரின் Knowledge on a beam of starlight என்ற தலைப்பில் உள்ள படங்களை கண்ணாடிக்கு அடியில் வச்சுருந்தாங்க. ஏராளமான வெள்ளைக் காகிதங்களும், பென்ஸில்களுமாக ஒரு பக்கம் குவிச்சு வச்சுருந்தாங்க. நம்முடைய படம் வரையும் ஆர்வத்தை (!) வளர்க்குறாங்களாம்.
எங்கே அவுங்க மனசு நோகுமோன்னு நானும் ஒரு சின்னப் படத்தை வரைஞ்சுக்கிட்டேன். அவுட்லைனை ஜஸ்ட் ட்ரேஸ் எடுக்கும் வகைதான். அதுக்கப்புறம் நகாசு நாம் செஞ்சுக்கலாம் என்றாலும், வரவர கை நடுக்கம் அதிகமாவது படத்தைப் பார்த்தாலே புரிஞ்சுரும்:-)
ஓவியங்கள் ஒரு பக்கம் இருந்தன. அதில் புது வருசம் பிறக்கும் ஓவியத்தின் கற்பனை அபாரம்! பழைய வருசம் தண்ணீரில் (!!)மூழ்கவும், புதுவருசம் பிறந்து வெளிவரவும் சரியாஇருக்கு! The death of the year (1910-1912) ஓவியர் சார்லஸ் ஸிம் வரைஞ்சே நூறு வருசத்துக்கு மேல் ஆச்சு!
ஹம்மா.... எவ்ளோ பெரிய மரம்! மனிதக் கால்கள் படாத இடத்தில் எப்படி முளைச்சு நின்னுருக்கு பாருங்க!!! வெட்டஎப்படித்தான் மனம் வந்துச்சோ:(
இன்னொரு பகுதியில் 'மென் மோர் மென் வாண்ட்டட்'னு இருக்கேன்னு விசாரிச்சால் உலகப்போரில் கலந்துக்க ஆண்கள் தேவையாம்! சின்ன நாட்டுலே இருந்து சண்டைக்கு ஆள் சேகரிப்பு. பட்டாளத்துலே சேருங்கன்னதும் போய்ச் சேர்ந்தவங்க, கடைசியில் போயே சேர்ந்துட்டாங்க:( வீடு திரும்பியவர்களை விரல்விட்டு எண்ணிடலாம்.........
நாங்க டெ பாபா பார்க்கப் போனது ஏப்ரல் மாசம் அஞ்சாம் தேதி. இந்த ஏப்ரல் மாசம் ஒரு புனிதமான(!!?) மாசம் நியூஸியைப் பொறுத்தவரை. அதுவும் ஏப்ரல் 25 தான் ரொம்பவே புனிதம். அரசு விடுமுறை நாள். 'உலகப்போரில் கலந்துக்கக் கிளம்பி வா,ன்னு பிரிட்டிஷ் அரசு சொன்னதும், என்ன ஏதுன்னு வாயைத் திறந்து கேக்காமல் மஹாராணியின் உண்மைப் பிரஜைகளா உடனே கிளம்பிப்போய், தவறான இடத்தில் ( Gallipoli ) ஆப்டுக்கிட்டு எதிர்பாராத வகையில் 2721 வீரர்களை களப்பலி கொடுத்த நாள் இந்த ஏப்ரல் 25. நாங்க மட்டுமில்லை, இந்த பலியில் 8709 அண்டைநாட்டு ஆஸித் தலைகளும் உருண்டதே மிச்சம்.
Australian and New Zealand Army Corps (ANZAC) நாள் என்று படைவீரர்களின் நினைவுநாளாக நியூஸியிலும் ஆஸியிலும் அனுசரிக்கிறோம். இந்த சம்பவம் நடந்து சரியா 100 வருசம் ஆகப்போகுது இன்னும் இருபதே நாட்களில். அதற்காகப் பெரிய அளவில் டெ பாபாவில் ஒரு பகுதியில் கல்லிப்போலி என்று சரித்திர சம்பவங்களைக் காட்சிப்படுத்தப் போறாங்க. அதற்கான ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு இப்ப.
நூறாவது நினைவு நாளுக்கு ஒரு வாரம் முன்பாகவே ஏப்ரல் 18, 2015 க்கு பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கறாங்க. மூணு வருசம்வரை (2018) இதைக் காட்சிக்கு வைக்கப்போறாங்க. (பார்க்கலாம் இன்னொருமுறை வெலிங்ட ன் போக வாய்ப்புக் கிடைக்குமான்னு!) நேரில் காட்சியைக் காண வரமுடியாதவர்களுக்கா வலையிலே கொஞ்சம் பார்த்துக்கும்படியான ஏற்பாடும் இருக்கு. ஆர்வம் உள்ளவர்கள் இங்கே எட்டிப் பார்க்கலாம்.
கல்லிப்போலி டெ பா(ப்)பா
வே(ட்)டா வொர்க்ஷாப் டைரக்டர் ஸர். ரிச்சர்ட் டேலர் தன்னுடைய குழுவினரோடு தீவிரமா இதில் ஈடுபட்டு வேலைகள் மளமளன்னு நடக்குது. இப்போதைய இளையதலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் ரொம்ப நல்லாவே செட் அமைச்சுச் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.
கீழே படத்தில் செட்டில் ஸர். ரிச்சர்ட் டேலர் (Sir Richard Taylor)
கடைசியா ஆறாவது தளத்துக்குப் போனால்.... பார்க்க அவ்வளவா அதிகம் ஒன்னுமில்லை. ஆனால் அத்தனையும் பொக்கிஷம்! எல்லாமே நூறு வயசுக்கு மேலான அரும்பொருட்கள்! கலெக்ட்டர்ஸ் ஐட்டம்ஸ்.
அங்கேயே கட்டிடத்தின் வெளியே வியூ பார்க்க ஒரு மொட்டை மாடி! கதவைத் திறந்ததும் காத்து அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது! இந்த யானையையே தூக்குதுன்னா பாருங்க!
இதுதான் டெ பா(ப்)பாவின் லோகோ!
டெ பா(ப்)பாவில் சில கண்காட்சிகள் நிரந்தரமாக வச்சுருந்தாலும், சில கால மாற்றத்துக்கு ஏத்தமாதிரி தாற்காலிகமாகவும் இருக்கு. என்னதான் தாற்காலிகம் என்றாலும் அதுவும் குறைஞ்சது 6 மாசமாவது இருக்கும்தான். இப்போதைக்கு மொத்தம் 21கண்காட்சிகள் அங்கே!
Contraception என்று குழந்தைப் பிறப்பைக் கட்டுப்படுத்த இதுவரை என்னென்ன ஏற்பாடுகள் நடந்ததுன்னு சொல்லும் பகுதியும் (Discover the hidden history of birth control in New Zealand ) நாலாவது மாடியில் இந்த மே மாசம் ஆரம்பிச்சு இப்போ நடந்துக்கிட்டு இருக்கு! இதுவும் வரும் ஜனவரி வரை 6 மாசத்துக்கு இருக்கும்.
நமக்குத்தான் நேரம் இருக்கணும் எல்லாத்தையும் ஒன்னுவிடாமல் பார்த்து முடிக்க:-(
நாமும் அங்கே வெறும் அஞ்சு மணி நேரம்தான் இருந்தோம். கால் வலி கட்டாயம் வரும் என்று தெரிஞ்சுதான் எல்லா தளங்களிலும் இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க. ஆனாலும்...........
கீழே இறங்கி வரும்போது இன்ஃபோ டெஸ்க்கில் தினமும் வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை விசாரிச்சேன். சராசரியா தினமும் மூவாயிரம் பேர் வர்றாங்களாம். ஆனால் இன்றைக்கு ஆறாயிரம் , ஈஸ்ட்டர் ஹாலிடே பாருங்க, என்றார்! சின்ன நாட்டுலே ஆறாயிரம் என்பது பயங்கரக்கூட்டம்தானே! அதுதான் எங்கே பார்த்தாலும் மக்கள் வெள்ளமா இருந்துச்சா:-)
ஒன்னு நினைவு வச்சுக்கணும், வருசம் 365 நாட்களும் டெ பா(ப்)பா திறந்து இருக்கு!
லாங்க் வீக் எண்டு வந்தால் ஏர்நியூஸிலாந்து நல்ல சலுகை விலையில் டிக்கெட்டுகளை அள்ளி விடுது. என்ன ஒன்னு, ரெண்டு மூணு மாசத்துக்கு முன் புக் பண்ணிக்கணும். மக்கள்ஸ் இங்கே அங்கேன்னு உள்நாட்டுக்குள் பயணம் போக ரொம்பவே வசதி. இதே சலுகையில் ஹொட்டேல்ஸ் கிடைச்சால்....... கனவு காணலாம்:(
மணிக்கு 4 என்னும் கணக்கில் 20 டாலர் கார் பார்க்கிங் காசு கட்டுன்னு மெஷீன் சொல்லுச்சு. கட்டிட்டு வெளியே வந்தோம்.
டெ பா(ப்)பாவை ஓரளவாவது பார்க்க முடிஞ்சதே என்ற திருப்தியும், இன்னொருக்கில் ஆகட்டே என்ற நம்பிக்கையும் ஒரே சமயம் வந்துச்சு:-)
தொடரும்............:-)
![]()