Holly tree
இந்த மரத்துக்கு ஒரு விசேஷம் உண்டு.இதன் அடியில் நின்னு காதலர்கள் முத்தமிட்டுக் கொண்டால் , கல்யாணம் உறுதியாகிருமாம். அதுக்காக ஒரு மரக்கிளையை உடைச்சு கையில் பிடிச்சுக்கிட்டு, கையை தலைக்கு மேல் தூக்கி வச்சுக்கிட்டு (மரத்தடியில் நிக்கறமாதிரின்னு ) உண்மைக்காதலர்கள் கிஸ் பண்ணிக்குவாங்க. நம்ம வீட்டு மரத்தில் அப்பப்ப கிளைகள் ஒடிஞ்சுருப்பதைப் பார்த்தால் இது நெசம்தான் போல!!!!
வெள்ளையும் பச்சையும் கலந்த இலைகள். பச்சை இலையில் வெள்ளை பார்டர் ! இலைகளில் ஓரத்தில் முள் இருக்கும் கேட்டோ! அழகு அவ்வளா இல்லாத சாதாரண வெள்ளைப்ப்பூக்கள். ஆனால் இதுலே வர்ற பழங்கள்தான் கண்ணைக் கவரும் விதத்தில் இருக்கும். மிளகு சைஸில் சிகப்பு நிறத்தில் . ஏராளமான பறவைகள் பழத்துக்காகவே வந்து அம்மும்.
கிறிஸ்மஸ் விழா அலங்காரத்தில் இந்த மரத்தின் ஒரு கிளையை சாஸ்த்திரத்துக்கு வைக்கறாங்க(ப்ளாஸ்டிக் செயற்கை கிளை) சம்ப்ரதாயமான கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளில் இதன் இலைகள் தவறாமலிடம் பெறும். கிறிஸ்மஸ் ரீத் இந்த இலைக்கொத்துகளை வச்சுத்தான் கட்டுவாங்க.
நம்ம வீட்டு மரம் நான் நட்டது இல்லை. இந்த இடத்தின் பழைய ஓனர் நட்டு வச்சு வளர்த்தது. ஆனால் அவுங்களுக்கு மரத்தடி எபிஸோடில் நம்பிக்கை இல்லையோ என்னமோ கடைசிவரை கல்யாணம் கட்டாமல் வாழ்ந்து தன் 80 வது வயசில் எங்களுக்கு வீட்டை வித்துட்டு முதியோர் இல்லம் போயிட்டாங்க. பழைய வீட்டில் 95 % இடம் தோட்டமாகவும் நடுவில் ரெண்டு அறையுள்ள வீடுமா இருந்துச்சு. நாங்க எல்லாத்தையும் எடுத்துட்டு வீட்டுக்கு 32 %ம்தோட்டத்துக்கு 68% வச்சுருக்கோம்.
இது மல்லி வகைகளில் ஒன்னு. நல்ல வாசம் இருக்கு. ஆனால் சட்ன்னு வாடிரும். தொடுத்துவச்சால் ஒரு மணி நேரத்தில் புளியம்பூ:(
Lobelia இதுவும் பலவகை நிறங்களில் இருக்கு.
hollyhock இதுலேகூட 60 வகைகள் இருக்காம். அசப்புலே வெண்டைச்செடி இலைகள் பூக்கள் போல இருக்குன்னு இதன் மேல் எனக்கு அலாதியா ஒரு ஆசை. நெடுநெடுன்னு 12 அடி உசரம்வரை வளரும் தண்டில் வரிசை பூக்கள் ஒரு அழகு! கம்பத்தில் லௌட் ஸ்பீக்கர் கட்டி வச்சாப்லெ:-))))
Pansy . இதுக்கு நான் வச்ச பெயர் நாய் மூஞ்சு. பொமெரெனியன் நாய் முகம் என்று எனக்குத் தோணும். அதே சிரிச்ச முகம். இதுவும் பல நிறங்களில் உண்டு. முகம் இல்லாத ப்ளெய்னும் உண்டு.
Flemingo plants இதிலும் ஒவ்வொரு மகரந்தத்தண்டையொட்டி வரும் இலைகளே பூவாகிருது. அந்த குறிப்பிட்ட இலை மட்டுமே சிகப்பு நிறமா மாறிடும். நம செடியில் இப்போதான் நிற மாற்றம் உண்டாகுது. நம்ம ராமலக்ஷ்மி, குடியரசு தின மலர்க்கண்காட்சியில் பார்பி டால் ட்ரெஸ் Anthurium என்று சொன்னவைகளே இவை.
Petuniaகொஞ்சம் சுலபமா வளர்க்கக்கூடியவை. இதிலும் ஒரு 35 வகை இருக்கு. ஒன்னோட நிறுத்திக்க முடியாதாமா இந்த இயற்கைக்கு:-)
Lilyபல நிறங்கள் உள்ளன. கிறிஸ்மஸுக்கு பூ வேணுமுன்னா சரியா 100 நாளைக்கு முன் lily Bulb நட்டுவச்சால் போதுமாம். தண்ணீர் தேங்கி நிற்காத நிலம் என்றால் ஒரு வருசம் நட்டுவச்சது தொடர்ந்து வருசாவருசம் பூத்துரும்.
Helianthus 52 வகைகள். நமக்கெல்லாம் ரொம்ப பரிச்சயமான பூக்கள்தான். சன் ஃப்ளவர் என்று பெயர்:-) சூரியகாந்தி. நெடுநெடுன்னு வளர்ந்து போகும் தண்டின் உச்சியில் ஒரு பெரிய பூ ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுன்னு வருது. தினம் தினம் அதன் வளர்ச்சியைக் கவனிச்சு வியந்தேன். மொட்டு இதழ்விரியுமுன் கண்ணாமூச்சிக்குக் கண் பொத்தி வைப்பதைப்போல இதழ்கள் எல்லாம் ஒன்னையொன்னு அணைச்சு சேர்த்து மூடிபோட்டு வைக்குது.
இதில் டெட்டிபேர் வகைச் செடிகள் குள்ளமா இருந்தாலும் கிளைவிட்டு வளர்ந்து ஒரு செடியில் ஏழெட்டு பூக்கள் வரை முளைக்குது. ஆரம்பத்தில் மையப்பகுதி வழக்கமான சூரியகாந்தி போல மேத்தமெடிக்கல் டிஸைன் நடுவில் இருந்தாலும் பூ முழுசுமா மலர்ந்த பிறகு பார்த்தால் செண்டுப்பூ போல இருக்கு.
Hibiscus. செம்பருத்தி. பல நிறங்களில் உண்டு. நமக்கு கிடைச்சது இவைகளே. அதிலும் ஒன்னு மட்டும் நம்மோடு ஒத்துழைக்கலை. பேபிச் செடியா வாங்கினதுதான், பார்த்தால் செம்பருத்தி மாதிரி இருக்கேன்னு ..... மொட்டு வந்து பூவின் நிறம் தெரியுமுன் உதிர்ந்து போகுது. சாமிக்குத்தம் ஆகிருச்சோ?
பீச் கலரில் இப்போ ஒரு மொட்டு . காத்திருக்கிறேன்,க்ளிக்க.
Bougainvillea கிட்டத்தட்ட 18 வகைகளிருக்காமே! ஒரு சமயம் கோவை விவசாயக்கல்லூரி சுற்றுச்சுவரை ஒட்டி பல நிறங்களில் காகிதப்பூ பார்த்த நினைவு. இப்பவும் இருக்கான்னு தெரிஞ்சவுங்க (நம்ம பழனி.கந்தசாமி ஐயா) சொன்னால் தேவலை.
நம்ம வீட்டில் ஒரு ரெண்டு வகை இருக்குன்னு சொல்லிக்கறேன்.
இந்த பக்கங்களில் பூச்செடிகள், தோட்ட சம்பந்தமான பொருட்களும், செல்லங்களுக்கு சாப்பாடுவகைகளும் (Pet Foods) பில்லியன் டாலர் பிஸினெஸ்கள். ஹார்ட் வேர் கடைகளில்கூட சாஃப்ட் வேரா பூச்செடிகளை விக்கறாங்கன்னா பாருங்க. நாம் விதைகளை வாங்கி விதைச்சு வருமா வராதான்னு தேவுடு காக்க வேண்டாம். அதெல்லாம் ரகம் ரகமா பூ, கனி, காய் விதைகள் ஏராளமா கிடைக்குதுன்னாலுமே.... குளிரில் சரியா முளைச்சு வருவது கஷ்டம்தான். நோகாம கார்டன் சென்டர்களில், மார்கெட்டுகளில் பேபி ப்ளான்ட்ஸ் வாங்கினால் மலிவு. என்னை மாதிரி கொஞ்சம் சோம்பேறிக்கு இன்னும் வாகா கொஞ்சம் வளர்ந்த செடிகள், மொட்டு பிடிச்சு வரும் சமயம் கிடைப்பதை வாங்கிக்கலாம். விலை கொஞ்சம் அதிகம், ஆனால் ரொம்ப மெனெக்கெட வேணாம். என்ன நிறமுள்ள பூன்னும் தெரிஞ்சுக்கலாம்:-)))
சிலசமயம் Exotic plants, Tropical Plants வகைகள் அபூர்வமா கிடைக்கும். நம்ம வீட்டு வாழை, கருவேப்பிலை, காஃபிச் செடி, செம்பருத்தி, போகெய்ன்வில்லா எல்லாம் அப்படி வாங்குனதுதான்.
கட்டக்கடைசி கட்டித்தங்கம் நம்ம தாமரை! இந்த வருசம் நிறைய பூக்கள். ஆனா ஒரு பூ பூத்த பிறகு தினம் இரவில் மூடிப் பகலில் திறந்தாலும் நாலு நாட்கள்தான் ஆயுள்:(
இடம் போதாது. அடுத்தவருசம் பொழைச்சுக்கிடந்தால் ( ஐ மீன் நான் ) வேற ஒரு பெரிய தொட்டிக்கு ஏற்பாடுகள் செய்யத்தான் வேணும். மகாலக்ஷ்மி இல்லையோ!!!!
இன்னும் சில வகை பூக்களை அப்பாலிக்கா எப்பவாவது பார்க்கலாம். இப்ப எதுக்கு நம்மூட்டு சமாச்சாரமுன்னா..... நாளைக்கு எங்கூர் மலர்க் கண்காட்சி தொடங்குது. அதையும் போய் க்ளிக்கிட்டு வரத்தான் போறேன். ஆனால் அரசனைப் பார்த்த கண்ணுக்கு புருசனைப் பிடிக்காமப்போயிருச்சுன்னா?
அதான் முந்திக்கிட்டேன்:-))))
அடுக்களை ஜன்னல் வழியாக:-)
எல்லாம் சேர்ந்து நில்லுங்க ஒரு க்ரூப் ஃபோட்டோ எடுக்கலாம். ரெடி ஸ்டடி....க்ளிக்!!!!!
