சொன்னா , சொன்ன நேரத்துக்குக் கிடைக்காம இருப்பதில் அந்தக்காலத்திலே முதலிடம் தையல்காரருக்கும் தட்டாருக்கும்தான். ரெண்டு இடத்திலும் எப்பப்போனாலும் ' இன்று போய் நாளை வா' தான். சின்னப்புள்ளையா இருந்தப்ப தையக்கடையிலே பழியாக் கிடப்பேன். இம்சை தாங்காம குறைஞ்சபட்சம் என் உடையையாவது தைச்சே கொடுக்கும்படியா ஆயிரும் தையக்காரருக்கு.
இப்பப் பாருங்க எல்லாம் ரெடிமெடு. கடைக்குப் போனோமா, வாங்கினோமா, போட்டு ' அழகு' பார்த்தோமான்னு வாழ்க்கை ஓடுது. துணிக்கடை கூட கொஞ்சம் பரவாயில்லை. இந்த நகைக்கடைகள்தான்...... பழைய நகையை மாற்றிப் புதுசு எடுக்கும்போது அன்றைய தங்க விலைக்கே எடுத்துக்கறோமுன்னு விளம்பரம் செஞ்சாலும் ஏதேதோ கணக்குப்போட்டு என்னத்தையோ குறைச்சு அதிலும் குறைவாத்தான் மதிப்பீடு வருது. முந்தி மாதிரி இல்லாம எல்லாத்தையும் கம்ப்யூட்டரே தரம் குணம் மணம் பார்த்துட்டுக் கணக்குப்போடுவதால் நாம் வாயைத் தொறக்க முடியலை.
இந்தப்பயணத்தில் ஜிஆர்டிக்குப்போய் ஒரு செயினை மாத்தி வேற டிஸைன் வாங்கலாமுன்னு பழைய (வாங்கி இதுவரை போடாமலே வச்சுருந்த ஒன்னு) நகையைக் கொடுத்தால் கம்ப்யூட்டர் சொல்லுதாம் அதுக்கு மாத்து கம்மின்னு! என்னப்பா அநியாயமா இருக்கு. இது சிங்கப்பூரில் முஸ்தாஃபா கடையில் வாங்குனதாச்சேன்னால்..... இதுலே 916ன்னு முத்திரையைக் காணோம் பாருங்க. எப்ப வாங்குனீங்க? அது இருக்கும் ஒரு ஏழெட்டு வருசம். அப்போ ஒரு வேளை 916 கட்டாயம் போடவேண்டிய ரூல்ஸ் அங்கே இருந்துருக்காதுன்னு பதில்வருது. நெசமாவா?????
சிங்கை முஸ்தாஃபா இப்படிப்பண்ணுமோன்னு மனசுக்குள்ளே ரொம்ப நாளைக்குக் குடைச்சல் இருக்கும். அடுத்தமுறை சிங்கை போகும்போது இதன்கூட வாங்கிய ஜோடிச்செயினைக் கொண்டுபோய் கேக்கணும்.
பேசாம ஜி ஆர் டியில் மாற்றாமல் வேறொரு கடையில் இதேபோல கம்ப்யூட்டர் பரிசோதிக்கும் கடையில் கொண்டு போய் மதிப்பு பார்த்திருக்கலாமோ? ஒரு டபுள் செக்தான். கடைசியில் 31 கிராம் செயினுக்கு 3.7 கிராம் வேஸ்டேஜ்ன்னு போயிருச்சு:( நகைகள் வாங்கும்போது கேடி எம் பத்தவைப்பு. விக்கும்போது வேஸ்ட் வராதுன்னு அப்போ ஒரு கூடுதல்விலையை நம்ம தலையில் கட்டிடறாங்க. இப்ப வேஸ்டேஜ் வந்துருதாம் எல்லாத்துக்குமே! என்னவோ போங்க........... இத்தனைக்கும் அந்த செயின் டிஸைனில் வேஸ்டேஜே வராது. மாத்தி எடுக்கும்போது உங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லைன்னு விற்பனையாளர் அடிச்சுச் சொன்னாராம் கோபாலுக்கு. எங்கே? சிங்கை முஸ்தாஃபாவிலே!
இதுக்குத்தான் சொல்றது என்னைக் கூடக் கொண்டு போகாமல் நகை எதுவும் வாங்காதீங்கன்னு! ஆனால் நான் பக்கத்துலே இல்லைன்னா மட்டும் இவருக்கு எனக்குத் தங்கம் வாங்கியே ஆகணுமுன்னு ஒரு வெறி வந்துருது போல! வாங்கறேன்னு தொலைபேசியில் கூப்புட்டுச் சொன்னாருதான். கண்ட டிஸைனையும் வாங்கிடப்போறீங்க இப்ப வேணாமுன்னு (அட! வாழைப்பழம் வேணாமுன்னு சொல்ற யானைகூட இருக்கு பாருங்க!!!) சொன்னதுக்கு கடைக்காரர் இதுலே வேஸ்டேகிடையாது. எப்ப வேணுமுன்னாலும் இதே எடைக்கு வேற மாத்திக்கலாமுன்னு சொன்னதாகச் சொல்லி வாங்கியே வாங்கிட்டார். ஆனா ஒன்னு இவ்ளோ தயாள குணம் என்கூட கடைக்கு வரும்போது(ம்) இருக்கலாம்தானே?
இந்த அழகில் அந்த ரெட்டைக்கு ஒரு முகப்பு(மோப்பு) வேற! அது எனக்கு ரொம்பப்பிடிச்சுருந்துச்சு என்பது உண்மை:-)))
ரெட்டை வடம் சங்கிலியில் இருந்த முகப்பை மாற்ற மனசில்லாமல் அதையே ஒரு பெண்டண்ட்டா ஆக்கினால் என்னன்னு தோணிச்சு. தி நகர் மங்கேஷ் தெருவில் இருக்கும் சிலபல வருசங்களுக்கு முன்னேயிருந்து தங்கவேலை செஞ்சுக்கிட்டு இருந்த ஸ்ரீநிவாச ஆச்சாரி (அவர் பெயரே இதுதான்.' சாதியைச் சொல்லிப்புட்டாள்' ன்னு குய்யோ முறையோ வேணாம் ப்ளீஸ்)கடையைத் தேடிப்போனோம். போனமுறை கொடுத்த கார்ட் கைவசம் இருந்துச்சு.
அந்த விலாசத்தில் இப்போ இருக்கும் கடை என்னவோ நடுவில் சுவர் எழுப்பிப் பாகம் பிரிச்செடுத்த மாதிரி அரையாக் கிடக்கு. மிஞ்சிமிஞ்சிப்போனால் ஆறடி அகலம். உள்ளே நீளமா ஒரு பதினைஞ்சு பதினாறு அடி இருக்கலாம். கார்டைக் காமிச்சு இந்தக்கடைதானா ன்னு கேட்டால்...இதுதாங்க. இப்போ வேற புதுக் கார்டு அடிச்சுட்டோமுன்னு சொல்லி வேறொரு கார்டைக் கொடுத்தார். சாயிபாபா பக்தரா மாறிட்டார்ன்னு தெரிஞ்சது. ஷிர்டி பாபா.
கடையில் நாலு பேர் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. எல்லோருமே சொந்தக்காரர்கள்தானாம். இந்த வேலையில் புது ஆட்களை வேலைக்கு வச்சுக்கறது ரிஸ்க்காம். நான் எப்படி வேணுமுன்னு சொன்னதைக் கவனமாக் கேட்டுக்கிட்டு, நம்ம கண் எதிரில் சொன்ன டிசைனைச் செஞ்சு கொடுத்தார். இத்துனூண்டு கடையில் ரெண்டு பிளாஸ்டிக் ஸ்டூல் கொண்டு வந்து போட்டு உபசாரம் வேற ! கையைக் காலை நீட்டாம அடக்க ஒடுக்கமா உக்கார்ந்துக்கிட்டால் நமக்கு நல்லது:-) குமுட்டி அடுப்பு மாதிரி ஒன்னு இருக்கும் பாருங்க தங்கத்தை உருக்க. அது கடைக்கு வெளியில் ஒரு சாஸ்த்திரத்துக்கு வச்சுருக்கே தவிர ரொம்ப மாடர்னா சின்னதா ஒரு கேஸ் கேன் வச்சு உருக்கல் வேலை நடந்துருது.
அதைப் பத்தவச்சதும் வரும் மெல்லிய தீச்சுவாலையைதொரு சின்னதா இருக்கும் குழல் ஒன்னை வச்சு மெள்ள ஊதி தீ நாக்குகளை தங்கத்தின் மீது செலுத்திய பத்து நொடிகளில் தங்கம் அப்படியே உருகிருது! நடனமாடும் தீ நாக்குகளை பார்க்கும்போதே ஒரு அழகு கேட்டோ! பாபு என்ற இளைஞர் நமக்கான வேலைகளை வாய் திறக்காமச் செஞ்சு கொடுத்தார். பெயர் என்னன்னு கேட்டதுக்கே.... திகைப்பும் வெட்கமும் முகத்தில் படர'பாபு' ன்னு மெல்லிய குரலில் சொன்னதும் ஒரு அழகு. உறவினர்தானாம். ஆனால் தனிக்கடை வச்சு நடத்தறாராம் வேறொரு பேட்டையில். இங்கே கூடுதல் வேலைன்னா வந்து செய்ஞ்சு கொடுப்பாராம்.
ஒரு நோட்டுப்புத்தகத்தை வச்சுக்கிட்டு அதுலேதான் ஆர்டர் எடுக்கறது, நாம் கொடுக்கும் தங்கத்தின் எடை , கேரட் எல்லாம் எழுதிக்கிறார். பக்கத்துலேயே அதே தெருவில் தங்கத்தின் தரம் பார்க்கும் கம்ப்யூட்டர் மெஷீன் கடை ஒன்னு இருக்கு. அங்கே கொண்டுபோய் தரம் பார்த்து எடுத்து, நமக்கு நகையைத் திருப்பிக் கொடுக்கும்போதும் தரம் பார்த்தே கொடுக்கறார். அதனால் நம்பிக்கை ஏற்பட்டுப் போகுது.
கொஞ்சம் ரிப்பேர் பண்ண வேண்டிய நகைகளையெல்லாம் கூட இந்தமுறை கொண்டு போயிருந்தேன். த்வாரகைப் பயணத்தில் வாங்குன ரெண்டு ஜெம் ஸ்டோன்களையும் வெள்ளியில் பதிச்ச பெண்டெண்ட்டாக செஞ்சு கொடுத்தார் மகளுக்கு. இந்தக் கால யுவதிகள் தங்க நகையை விட வெள்ளியை விரும்புவது எனக்கு(ம்) ரொம்பவே பிடிச்சுப்போச்சு:-)
ஸ்ரீநிவாச ஆச்சாரியிடம் ஒரு பழக்கம் நமக்கான ரிப்பேர் வேலைகளை செய்வதற்கிடையில் தன் பக்கத்தில் இருக்கும் சின்ன மேஜை இழுப்பறையைத் திறந்து எதாவது ஒரு சின்ன நகையை கம்மல், பெண்டன்ட், மூக்குத்தி இப்படி. எடுத்து நீட்டுவார். நான் கைநீட்டி அதை வாங்குனதும் கோபால் கண்ணில் திகில் பரவ முழிப்பதைப் பார்க்கும்போது என்னால் சிரிப்பை அடக்க சிரமம்:-)
சும்மா ... ஒரு ஐடியாவுக்கு சொல்வார் ஸ்ரீநிவாசன். நானும் ரசிச்சுப் பார்த்துட்டு நம்ம கருத்தைச் சொல்லிட்டுத் திருப்பிக் கொடுப்பேன். பின்னூட்டம் பழக்கமாகிருச்சு பாருங்க:-))) ஒரு நாள் ஒரு செயினை எடுத்துக் காமிச்சார். புது டிஸைனா நல்லா இருந்துச்சு. பார்த்துக்கிட்டு இருக்கும்போதே அதை ஆர்டர் செய்தவர் வாங்கிப்போக வந்துட்டார். பக்கத்துலே இருக்கும் சூர்யா டச் ( Surya Touch. # 7 Mangesh St) கடைக்கு அனுப்பி தரம் பார்த்து வந்தவுடன் பைக்குள் இருந்த ரூபாய் நோட்டுக் கட்டுகளை மகிழ்ச்சியா எடுத்துக் கொடுத்துட்டு போனார். எல்லாம் கேஷ் பிஸினஸ்தான். கார்டு தேய்க்கும் வசதி ஒன்னும் இங்கே இல்லை. சின்னநகைகளுக்குப் பரவாயில்லை. அதிக அளவில் வாங்கணுமுன்னா கொஞ்சம் யோசிக்கணுமோ? சேல்ஸ் டாக்ஸ்க்கு என்ன ஏற்பாடுன்னு தெரியலை.....
ஏற்கெனவே ரெண்டு முறை அறுந்து போன ஒரு செயினை (இங்கே நியூஸியில் அதைப் பத்த வைக்க ரொம்ப அலைய வேண்டியதாப் போச்சு. ஒன்பது கேரட் சமாச்சாரங்கள்தான் இங்கே! இது ஹை கேரட். எங்களால் ரிப்பேர் செய்ய முடியாதுன்னு சொல்லிடறாங்க) மாத்திட்டு இந்த டிஸைனில் செஞ்சுக்கலாமான்னு தோணுச்சு. என் செயினை எடுத்துக் கொடுத்ததும் கடைக்காரப் பையன் தரம் பார்க்கப்போனவன் வாயெல்லாம் பல்லாக வந்தான். ' அசலு! பூராவும் தங்கமாம் !' என்றதும் எனக்கும் திருப்தியா இருந்துச்சு. இது (சமீபத்தில்) 27 வருசத்துக்கு முன்னே பாங்காக்கில் வாங்குனது.
சேதாரம் பற்றிப் பேச்சு வந்தப்ப..... கையால் செய்யும் நகைகளுக்கு சேதாரம் அவ்வளவா இருக்காது. மெஷீன் கட்டிங் அண்ட் பாலிஷிங் என்றால் மட்டும் கூடுதலா வரும். தங்கத்தூள் பறக்கும். அதைப்பிடிச்சு எடுப்பது ரொம்பக்கஷ்டம் என்றார். ஆனாலும் ஒரு விதமா துகள்களைப் பிடிப்பீங்கதானேன்னு கேட்டதுக்கு அப்படிப் பிடிச்சாலும் அது நமக்கு வராது. அந்த மெஷின் வச்சுத் தொழில் செய்றவங்களுக்குத்தானென்றார்.
பேசாம ட்ரெய்னீயா சேர்ந்துக்கிட்டுத் தொழில் படிக்கலாமான்னு ஒரு யோசனை வந்துருக்கு :-)
நடுவில் கொஞ்சகாலம் தொழில் மந்தப்பட்ட நிலையில் சென்னையின் பிரபல நகைக் கடைகளுக்கு வேலை செஞ்சாராம். இப்போ அதெல்லாம் இல்லை. இங்கே நமக்கு வர்ற வாடிக்கையாளர்கள் கொஞ்சம்தான் என்றாலும் ஒரு மாதிரி குடும்பச்செலவுக்கு சரிஆகிருது. பிள்ளைகள் படிச்சு வேற வேலைகளுக்குப் போயிட்டாங்க. என்னாலே முடிஞ்சவரைக்கும் நகைத்தொழிலை செஞ்சுக்கிட்டே இருப்பேன். அப்புறம் கடவுள் விட்ட வழின்னு மேலே சாமிப்படத்தைப் பார்த்தார். என் கண் அங்கே இருந்த விஸ்வகர்மா படத்தில் நின்னது. வடக்கே பலகோவில்களிலும் விஸ்வகர்மா அன்ன வாகனத்தோடு இருக்கார்.
மூணு நாளில் செஞ்சு தரேன்னு சொன்னவர், மறுநாள் மாலையே செல்லில் கூப்பிட்டு உங்க செயின் ரெடி ஆயிருச்சுன்னார். அவர் கூப்பிட்டப்பதான் நாங்க மால்குடியில் சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். மறுநாள் வந்து வாங்கிக்கறேன்னு சொல்லி வச்சேன்.என்னம்மா... நீ பாட்டுக்கு செயினைக் கொடுத்துட்டு வந்துட்டேன்னு கோபால்தான் வழியெல்லாம் நேத்து புலம்பிக்கிட்டே இருந்தார். மறுநாள் போய் செயினை வாங்கிக்கிட்டோம். மகளுக்கும் டிஸைன் ரொம்பப் பிடிச்சதுன்னு சொன்னது எனக்குத் திருப்தி. கோபாலை எதுக்கு விட்டு வைப்பானேன்னு அவர் மோதிரத்தையும் புது டிஸைனில் மாத்தச் சொன்னேன். இப்ப கிண்னுன்னு இருக்கு:-)
திருப்திகரமான சேவை என்பதால் கொஞ்சம் விலாச அட்டைகளை வாங்கி வச்சுக்கிட்டு அண்ணியிடம் சேதி சொல்லி அழிச்சுச் செஞ்சதுகளையெல்லாம் காமிச்சவுடன், 'இவ்ளோ நாளா இங்கே இருக்கோம் இந்தக்கடை விவரம் தெரியலையே'ன்னாங்க. எல்லா கார்டுகளையும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் 'நான் பெற்ற இன்பம்' வகையில் கொடுத்ததும்தான் மனசு ஆறுச்சு. தேவைப்படும் பதிவுலக நண்பர்கள் இவரிடம் தைரியமா நகை செஞ்சு வாங்கிக்கலாம்.
முக்கியமா நம்ம நேரத்துக்குச் செஞ்சு கொடுக்கறார் என்பதே நல்ல விஷயம். என்ன ஒன்னு.... கடையில் வாங்கும் பொருள் போல பஞ்சு எடை இல்லாம, காத்திரமாத்தான் செய்யறார். ராத்திரி தூங்கும்போது கம்மலைக் கழட்ட வேணாம். கூலி அதிகமா எனக்குத் தெரியலை. ஒரு மூணரைப்பவுன் செயினுக்கு ஐநூறு கொடுத்தோம். (எங்கூர் காசு பனிரெண்டரை. அதுக்கு இங்கே மிஞ்சிப்போனா சைனீஸ் டேக் அவேயில் ஒரு ஃப்ரைடு ரைஸ் கிடைக்கும்!)
சென்னைச் சமாச்சாரங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு நாளைக்கு ஆன்மீகப்பயணம் கிளம்பலாம். ஒரு அஞ்சாறு நாளைக்கு வேண்டிய துணிமணிகளை எடுத்துக்கிட்டு தயாராகுங்க.
தொடரும்.............:-)
![]()