Quantcast
Channel: துளசிதளம்
Viewing all articles
Browse latest Browse all 1471

சிப்பிக்குள்ளே என்ன இருக்கும் ? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 116)

$
0
0
கிட்டத்தட்ட 250 ஏக்கர் இடம்!   நிலப்பகுதி ரொம்ப இல்லாத சின்ன நாட்டுக்கு இது பெரிய சமாச்சாரம் இல்லையோ!   கார்டன்ஸ் பை த பே (Gardens by the Bay) என்று பெயர்! இதைக் கட்டிக்கிட்டு இருந்த சமயம் ( 2011 வது வருசம்) ஸான்ட்ஸ் ஹொட்டேல்    மொட்டை மாடியில் இருந்து பார்த்துருக்கோம்.
பெரிய கிளிஞ்சல்களைத் திறந்து கவுத்து வச்சதுமாதிரி இருந்தது.   அடுத்த வருசமே  வேலை முடிச்சுத் திறந்துட்டாங்க. இந்த சுறுசுறுப்பில் மட்டும்  சிங்கையை யாருமே அடிச்சுக்கமுடியாது!  அரசு  நிர்வாகம் சரியா இருந்தால் எல்லாம் சௌக்கியம்தான்!
நாமும் கடந்த ஆறேழு வருசமா, வருசத்துக்கு ரெண்டு முறையாவது சிங்கை  வந்துக்கிட்டுத்தான் இருக்கோம் என்றாலும்  எதுக்கும் ஒரு வேளைன்னு ஒன்னு வரணுமுல்லே?  இன்றைக்கு வந்தது.  ஒரு டாக்ஸி பிடிச்சு  அங்கே போய் இறங்குனோம்.
வெளிப்புறம் இருக்கும் தோட்டத்துக்கு அனுமதி இலவசம். புதுவிதமான மரங்கள்  ஏராளம். எப்படி முளைச்சுருக்குன்னு பார்த்தால்..... சூப்பர்!  சூப்பர் ட்ரீன்னே பெயரும் வச்சுட்டாங்க:-) சின்னதும் பெருசுமா அங்கங்கே!  சின்னது 25 மீட்டர், பெருசு 50 மீட்டர் உசரமா 'வளர்ந்துருக்கு'!  ராத்திரியில் விளக்கு அலங்காரம் இருக்காம்.  நாம்தான் பகலில் போயிருக்கோமே.....  மரத்துக்கு ரொம்பக்கிட்டத்தில் மேலே போய் பார்த்துக்கிட்டே நடக்க ஒரு பாலம் போட்டுருக்காங்க.  இதுக்குத் தனி டிக்கெட் உண்டு.  எட்டு டாலர் கொடுக்கணும்.
வெளியே சுத்திப் பார்க்க ஷட்டில் வசதி உண்டு. மூணு வெள்ளிக்கு டிக்கெட் வாங்கினால் அங்கங்கே இறங்கி வேடிக்கை பார்த்துட்டு அடுத்து வரும் வண்டியில் ஏறிக்கலாம். பப்பத்து நிமிட்டுக்கு ஒரு வண்டி.  பேசாமக்   கூட்டிப்போனால் மூணு. அங்கங்கே என்ன ஏது இருக்குன்னு நமக்குச் சொல்லிக்கிட்டே கூட்டிப்போக இன்னொரு வகை வண்டி இருக்கு. நம்மாண்டை பேசிக்கிட்டே கூட்டிப்போக கூட ரெண்டு வெள்ளி சேர்த்துக் கொடுக்கணும். அஞ்சு.
101 ஹெக்டர் நிலம். உள்ளே வெளியேன்னு முழுசும் சுத்திப் பார்க்க ஒரு நாள் போதாது.  நம்மால்தான் போனேன் வந்தேன்னு இருக்க முடியாதே..... ஒவ்வொன்னையும் நின்னு நிதானிச்சுக்   கெமெராக் கண்ணால் விழுங்கணுமோ இல்லையோ?  கவுந்துகிடக்கும் சிப்பிக்குள்தான் முக்கியமான சமாச்சாரங்கள்!  டூரிஸ்டுகளுக்கு  டிக்கெட் ஒரு ஆளுக்கு 28 சிங்கப்பூர் டாலர்.  அதிகமோன்னு ஒரு நிமிட் நினைச்சுட்டு, 'வாங்கிடுங்க'ன்னேன். ரெண்டு கன்ஸர்வேட்டரிகளுக்குள் போக இது செல்லுபடியாகும்.
ஃப்ளவர் டோம், க்ளௌட் ஃபாரஸ்ட்ன்னு இது ரெண்டும்தான் இன்னைக்கு நாம் பார்க்கப் போறோம். சில சமாச்சாரங்கள் எல்லாம் சொல்லில்  எழுதமுடியாது என்றது உண்மை. பார்க்கணும். அப்பதான் நம்புவோம்!

பூக்களான பூக்கள்.  இதுலே  ஏறக்கொறைய பாதிக்கு மேல் நியூஸியில் இருக்கு. ஆனால் ட்ராப்பிகல் செடிகளுக்கும் பூக்களுக்கும் நாங்க எங்கே போறது?  எங்கூர் தோட்டத்துலே  கொஞ்சம் செடிகளை கண்ணே கண்ணு பொன்னே பொன்னுன்னு க்ளாஸ் ஹவுஸில் காப்பாத்தி வச்சுருக்கோம். அனுமதி  இலவசம்தான்:-) கண்ணு நிறைய நிறைய பார்த்துக்கிட்டே போனோம். ஆயிரம் வயசான ஆலிவ் மரத்தைக் கூட அப்படியே கொண்டு வந்து வச்சுருக்காங்கபா!

( பேசாம ஆல்பம் போட்டு வச்சுத்தான் ஆகணும்.  ரெண்டு இடத்துக்கும் தனித்தனியாப் போட்டு வைக்கிறேன். சரியா?)

குரங்கு வருசம் என்றதால் எங்கெ பார்த்தாலும் குரங்குகள்தான்:-) குரங்கு ராஜா இருந்தாராமே!   அபூர்வ சக்தி படைச்சவர். 72 விதமா உருமாறுவாராம்.  பறக்கறதுலேயும், கனம் தூக்குறதுலேயும், இவரை யாராலும் வெல்ல முடியாது.  ஸ்பீடோ ஸ்பீடுதான்!  ஆஹா....    நம்ம ஆஞ்சியா இருக்குமோ!  புத்தர்தான்  குரங்கு ராஜாவை  அடக்கி ஆண்டு,  ஒரு ஐநூறு வருசத்துக்கப்புறம்  ரிலீஸ் பண்ணாராம். இப்படிப் போகுது சீனர்களின் பழங்கதை ஒன்னு!
தோட்டமும் காடுமா இப்படி இம்மாம் பெரிய கண்ணாடிச் சிப்பிக்குள் இருக்கறதே ஒரு அதிசயமுன்னுதான் சொல்லணும். சவுத் அமெரிகா, சவுத் ஆஃப்ரிகா, கலிஃபோர்னியா, அஸ்ட்ராலியா, மெடிட்டரேனியன் இப்படி உலகின் பல பகுதிகளில் இருக்கும் செடிகொடிகளின் வகைகளும் தோட்டமான தோட்டங்கள்!  கால் வலிச்சா  உக்கார்ந்துக்க அங்கங்கே இருக்கைகள்!
சொன்னா நம்பமாட்டீங்க....  தீ பிடிச்சா எரியாத மரம் கூட இருக்காமே! தீ பிடிச்சு அணைஞ்சபிறகுதான் இந்த விதைகளே முளைக்குமாம்.... தகவல்கள் கொட்டிக்கிடக்கு!


முடிஞ்சவரை சுத்திட்டு வெளியே வரும் வழியில் வழக்கமா இருக்கும் நினைவுப் பொருட்கள் கடை. ப்ரூச் எல்லாம் அழகுதான். ஆனால்  வாங்குற விலையில் இல்லை.... நீங்களே பாருங்க.......

சிங்கக்கூட்டம் இருக்கும் இடத்தில் போய் உக்கார்ந்து  ஆளுக்கொரு ஐஸ்க்ரீம் வாங்கினோம்.  நமக்கென்ன பயமா? சிங்கத்தின் வாயிலெ கை  நுழைக்கமாட்டோமா என்ன? அங்கேயே உக்கார்ந்து தின்னுட்டு அடுத்த பகுதியான க்ளைட் ஃபாரஸ்ட்டுக்குள் நுழைஞ்சோம். ஹைய்யோ!!!!!
இதுதான் எனக்கு ரொம்பவே பிடிச்சுருந்தது!  முப்பத்தியஞ்சு மீட்டர் உசரத்துலே இருந்து  விழும் நீர்வீழ்ச்சி!  தண்ணீர் திவலைகளை தெளிச்சுக்கிட்டே இருப்பதால்  குளுமையா இருக்கு அந்த இடமே!  ரொம்பக் கிட்டப்போனால் நனைஞ்சுருவோமேன்னு  கவனமா இருந்தேன். தரையெல்லாம் ஈரம்.

ஒரு மலையையே கொண்டு வந்து உள்ளே வச்சுருக்காங்க.  மலைக்குள்ளே ஏழு மாடிகள். கால் திடமா இருக்கும் மக்கள் படியேறிப்போகலாம்.  நமக்கு இருக்கவே இருக்கு லிஃப்ட்.  உச்சிக்குப் போனா, மலையை வெளியே போய் சுத்திப் பார்க்கும் வகையில் மலையைச் சுத்தி நடை பாதை! க்ளௌடு வாக் !



நாலாவது மாடியில் இருக்கும் க்றிஸ்டல் மலை பார்த்தப்ப மகள் நினைவு வந்துச்சு. கல் ப்ரேமி அவள் :-)


வெயிலுக்குப் பஞ்சம் இல்லாத நாடு என்பதால்  கூடியவரை  அங்கங்கே ஸோலார் பேனல்கள் வச்சுருக்காங்க.  பலவிதமான கருவிகளின் இயக்கம்  இதனால் ! தடை இல்லாத மின்சாரம்!
கீழ் தளத்துக்கு சின்ன எஸ்கலேட்டர் போட்டுருக்காங்க.  அங்கே Earth Check! உலகத்தின் வெப்ப நிலை கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகிக்கிட்டே போகுதாம். உண்மைதானே.... என்னா சூடு என்னா சூடு..... அரை டிகிரி அதிகமானாக் கூடத் தாங்கமுடியாமப் போயிருமுன்னு  எச்சரிக்கை.  சனம் வேற கூடிக்கிட்டே போகுது.  பூமா தேவி பாரம் தாங்கமுடியாமல் கஷ்டப்படப்போறாள்....  2050க்குள்ளே உலகின் சில பகுதிகளில் ஜனத்தொகை இப்போ இருப்பதை விட மூணு மடங்காகிருமாம்....
சுதந்திரம் கிடைக்குமுன்  முப்பது கோடி சனம்தான் பாரதத்தில். தேவர்கள் அப்போ மனுசனை பீட் பண்ணிட்டு முப்பத்து முக்கோடியா  இருந்தாங்க.  இப்ப அவுங்க அப்படியேதான் எண்ணிக்கையைக் கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்காங்க.  ஆனா நாம இந்த  எழுபது வருசத்துலே  அந்த   முப்பது சொச்சத்தை,   கிட்டத்தட்ட நூத்திமுப்பது சொச்சமா ஆக்கிட்டோம் பார்த்தீங்களா?  எங்கெ போய் முடியப் போகுதோ.....  கடைசியில் கல்கி வந்தே வந்துரும் போல !  அதுவும் வெள்ளைக்குதிரையிலே.....

வெளியேறும் வழி ஒரு ரகசிய தோட்டத்துக்குள்ளே!  ரொம்பவே பழைய காலத்துலே, வரலாறே எழுதப்படாதக் காலக்கட்டத்துலே  உலகம்  எந்த மாதிரி இருந்துருக்கும், அப்போ எப்படிப்பட்ட சூழல் இருந்துருக்குமுன்னு  கோடி காமிப்பது போல  அமைச்சுருக்காங்க. யார் கண்டா....  நெசமாவே இப்படித்தானோ என்னவோ.....  ஆராய்ச்சியளர்கள்  கண்டுபிடிச்சுச் சொல்லி இருக்காங்களாமே....
இந்த வழியூடே போனால்....  முதலைகளையும் மீன்களையும் கடந்து  ஆரம்பத்துலே பார்த்த நீர்வீழ்ச்சியின் அடிப்பாகத்துக்கு வந்துடறோம்!  கால் வலி ஆரம்பிக்குதேன்னு  கொஞ்ச நேரம் உக்கார்ந்து  தூரக்கே தெரியும்  ஊரைக் க்ளிக்கும் சமயம் கேமெரா பேட்டரி  உசுரை விட்டுருச்சு. ....  எக்ஸ்ட்ரா பேட்டரி இப்போ கைவசம் இல்லை....  போகட்டும்போன்னுட்டு  செல் கேமெராவில் சில க்ளிக்ஸ்.

வெளியே வந்தால் சூப்பர் மரங்கள் வாவான்னு கூப்பிட்டன.  இன்னொருக்கா வரேன்னுட்டு  ஒரு டாக்ஸி பிடிச்சு செராங்கூன் சாலை , டெகா மாலாண்டை இறங்கிட்டோம். இன்றைக்கு மதிய சாப்பாட்டை விட்டுருந்தோமேன்னு கோமளவிலாஸுக்குள் போய்  பஜ்ஜியும் காஃபியுமா முடிச்சுட்டு எதிரில் இருக்கும் வீரமாகாளியம்மன் கோவிலுக்குப் போனோம்.  காலையில்  காஃபி குடிச்சுட்டு வரேன்னு  சொன்ன சொல்லை  இப்பக் காப்பாத்திட்டேன்.

தொடரும்..........:-)

ஃப்ளவர் டோம்  இங்கே!

க்ளௌட்  ஃபாரஸ்ட்   இங்கே!


Viewing all articles
Browse latest Browse all 1471

Trending Articles


Django Unchained (2012) Tamil Dubbed Movie HD 720p Watch Online


ஏதாச்சும் வழி இருக்கா?


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 862 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


என் பைத்தியக்காரத்தனத்தை 45 வருடமாக என் மனைவி தாங்கினார்: பாலுமகேந்திரா உருக்கம்


பதினேழு வயதுக் கிராமத்துப் பெண்


எடப்பாடி பழனிசாமிக்கு 2026 எப்படி இருக்கும்? அதிமுகவில் காணாமல் போன 13 சதவீத...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


சகல காரிய சித்திக்கான கணபதி மந்திரங்கள்


எந்த பிரச்சனைக்கு என்ன மூலிகை நீர் அருந்தவேண்டும்?


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


நகரவாசியைக் கிண்டலடிக்கும் கிராமவாசி


அம்பேத்கரியப் பார்ப்பனியம் -2


சேலம் அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது


ஆசீர்வாத மந்திரங்கள்


புத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2


சொந்த ஊரில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து 4 லட்சம் பேர்...


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


கோவை எக்ஸ்பிரஸ் - திருநங்கை 2019 பதிவு சமீபத்திய பின்னூட்டங்கள்