Quantcast
Channel: துளசிதளம்
Viewing all 1428 articles
Browse latest View live

வெள்ளையர்களின் நரகாசூரன்.

$
0
0
இன்னிக்கு கைஃபாக்ஸ் டே!  ராத்திரி ஒன்பது மணிவாக்குலே பீச்சுக்குப் போகணும்.  எப்படியும் சம்பவம் நடக்கப்போவது  ஒன்பதையொட்டித்தான்  இருக்கும்.  ஒரு பதினைஞ்சு நிமிசத்துக்குள்ளே  முக்கியமான விஷயம் நடந்து முடிஞ்சுருக்கும்.  அதுவரை பாட்டுக்கச்சேரி. டே லைட் ஸேவிங்ஸ் இருப்பதால் பிரச்சனை இல்லை. சிட்டிக் கவுன்ஸில் வேற வாவான்னு கூப்புடுது.

வேற வேலைவெட்டி இல்லைன்னா சீக்கிரமா ஒரு ஏழரைக்கே போய் மணலில்  உக்கார்ந்து கச்சேரி கேட்டவாக்கில் கொண்டு போற சாப்பாட்டை சாவகாசமாத் தின்னுட்டு  சம்பவத்தையும் பார்த்துட்டு ஆஹா ஓஹோன்னு  புகழ்ந்துக்கிட்டே வீடு வரலாம். நமக்குத்தான் காலிலே கொதிக்கும் கஞ்சியாச்சே:(  அதுவுமில்லாம.......  ஆமாம்..போ. இளையராஜா கச்சேரியா கெட்டுப்போகுதுன்னு....

முதலில் பத்து நாள்ன்னு இருந்தது 'ஆபத்துகள்'  ஏற்பட ஆரம்பிச்சதும்  தேய்ஞ்ச்ய் தேய்ஞ்சு இப்போ நாலே நாளுக்கு வந்து நின்னுருக்கு.  பட்டாசைத்தான் சொல்றேன்.  நவம்பர் 2 முதல் நவம்பர் அஞ்சு வரை  அதுவும்  அஞ்சாம்தேதிமாலை அஞ்சரைவரைதான் விற்பனை.குறிப்பிட்ட கடைகளில் மட்டும் விற்பனை.  பொட்டி பொட்டியா   தரையில் அடுக்கி வச்சுருக்கு.  குறைஞ்சபட்சம் பத்து டாலர் அதிகபட்சம் 200 டாலர்.   ஒரு குடும்பம் 200 $ பொட்டியை எடுக்குது.   அதுவும் வாங்கும் மக்கள் வயசு 18க்கு கீழ் இருக்கப்டாது.  பதினெட்டுக்குக்கீழ் உள்ள எல்லாப் பொடிசுகளும் தாய்தகப்பனோடு வந்து அது வாங்கலாம் இது வாங்கலாம்னு சொல்லிக் காசைக் கரியாக்கத் துடிக்குதுங்க.


பொதுவா தள்ளுவண்டியில்(ட்ராலி) சாமான்களை அள்ளிப்போட்டுக்கிட்டே கடை முழுசும்  சுத்திட்டு வரும் மக்கள்ஸ்க்கு வச்சாங்க வேட்டு. பட்டாஸ் வாங்குன கையோடு கேஷ்கவுண்டருக்கு நடையைக் கட்டணும். வண்டியிலே வச்சுக்கிட்டு சுத்தறதெல்லாம் வேலைக்காகாது.  சுத்தணுமா.... எல்லாத்தையும் சுத்திப் பார்த்துட்டுக் கட்டக்கடைசியா பட்டாஸ் பகுதிக்கு வா.


நமக்கு தீபாவளிக்கு சாஸ்த்திரப்பிரகாரம் பட்டாஸ் வேணுமேன்னு  இந்த சந்தர்ப்பங்களில் வச்சுக்குவோம்.  தீபாவளி எப்பவும் ஒரே தேதியிலெயா வருது? அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை  அது எப்பவேணுமுன்னாலும் வரும். ஆனா கண்டிப்பா வரும் ! வருது.  அந்தந்த வருசம்  எப்போன்னு பார்த்து வச்சுக்கிட்டு நவம்பர் அஞ்சுக்கு அப்புறமுன்னா  நிம்மதி. இல்லைன்னா  வருசாந்திர பட்டாஸுலே கொஞ்சம் எடுத்து  பத்திரமா வச்சுக்கணும்.

ஒரு பாக்கெட் கம்பி மத்தாப்பு , ஒரு பாக்கெட்  பூச்சட்டி பூமழை வகைகள் நம்ம வீட்டுக்கு.


கைஃபாக்ஸ் விவரம் தெரியாத புதியவர்களுக்கு.................


முதலாம் எலிஸபெத் மகாராணியாரை யாருக்காவது நினைவிருக்குதுங்களா? என்ன........ இல்லையா? போனாப்போகட்டும். இப்ப இருக்கும் மகாராணியார் ரெண்டாம் எலிஸபெத் அவர்கள் என்றதால் முதலாவதா ஒருத்தர் இருந்துதானே ஆகணும்.  அவுங்க காலத்துலே அதாவது அவுங்க மரணமடைந்தபிறகு நடந்த கதை இது. ராணியம்மா 1603 வது வருசம் மறைஞ்சாங்க.  அரசுக்கு வந்தவர்  (முதலாம்)ஜேம்ஸ். ராணியம்மாவுக்குக் கத்தோலிக்கப் பிரிவு மக்கள் மேலே அவ்வளவா பாசம் இல்லை. ஆனா இப்ப வந்துருக்கும் ராசா ஒருவேளை நம்ம மேல் பாசமா இருப்பாருன்னு  கத்தோலிக்க மதத்தினர் சிலர் நினைச்சாங்க. ராசாவோட அம்மா கத்தோலிக்கராச்சே.  ஆனால்..... நினைப்புப் பொய்யாப் போச்சு.

ஒரு சின்னக் குழுவினர் சரியாச் சொன்னா 13 பேர் சேர்ந்து இதை எதிர்க்கணுமுன்னு திட்டம் போட்டாங்க. ( அய்யோ.... 13 என்றது வெள்ளைக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாத எண் இல்லையோ?)
குழுவுக்குத் 'தலை'யா இருந்தார் ராபர்ட் கேட்ஸ்பை.

பார்லிமெண்ட் கட்டிடத்தை வெடி வச்சுத் தகர்த்து நம்ம எதிர்ப்பைக் காமிக்கணுமுன்னு திட்டம். அய்யய்யோ.....இளவரசர்கள், பிரபுக்கள் எல்லாம் செத்துட்டா? போகட்டுமே.....

வெடி வைக்க  வெடி மருந்து வேணுமுல்லே?  கொஞ்சம் கொஞ்சமா 36 பேரல் கன் பவுடரைச் சேகரிச்சாங்க. சேர்த்ததைக் காப்பாத்தி வச்ச இடம் பிரபுக்கள் சபைக் கட்டிடத்தின் சுரங்க அறை.  சபை கூடி இருக்கும் நேரம் கட்டிடம் வெடிச்சால் பொதுமக்களில் பலரும் இறக்க நேரிடுமேன்னு சிலர் கவலைப்பட்டாங்க. இன்னும் சிலர், எல்லாருமேவா ராசாவை ஆதரிக்கிறாங்க? கத்தோலிக்கப் பிரிவின் நண்பர்களா இருக்கற சிலரும் மேலே போயிருவாங்களேன்னு கலங்குனாங்க. ரெண்டு பேர் இருந்தாக்கூட அவரவர் எண்ணம் தனின்னும்போது 13ம் ஒரே கருத்தா இருக்குமோ? குழுவில் ஒருத்தர் தனக்கு வேண்டப்பட்ட ஒரு பிரபுவுக்கு, நவம்பர் அஞ்சாம் தேதிக்கு மட்டும் பார்லிமெண்ட் பக்கம் தலை வச்சும் படுக்காதீங்கன்னு கடுதாசி அனுப்புனாருன்னு ஒரு வதந்தி. கடுதாசி அங்கே இங்கேன்னு கை மாறிக் கடைசியாக் கிடைச்சது ராசா கையில்.


36 பீப்பாயைக் காவல்காத்துக்கிட்டு இருந்தார் கைடோ ஃபாக்ஸ் (Guido Fawkes)என்றவர். பொழுது விடிஞ்சும் விடியாமலும் இருந்த பொழுதில் சுரங்க அறையிலே பீப்பாய்களோடு சேர்த்து இவரைப் பிடிச்சாங்க. இன்னொரு வதந்தி என்னன்னா.... இந்த கன் பவுடர் எல்லாம் நாள்ப்பட்டது. தீவச்சு இருந்தாலும் வெடிச்சிருக்காது. உண்மையான 'உண்மை' என்னன்னு இதுவரை யாரும் எழுதி வைக்கலை(-:

ஆனால்...சம்பவம் மட்டும் மனசில் முக்கியமா ராசாங்க அதிகாரிகள் மனசில் பதிஞ்சு போச்சு. இன்றளவும்  ஆட்சியில் இருக்கும் அரசரோ அரசியோ  பார்லிமெண்ட்க்கு ( அதுவும் வருசத்துக்கு ஒரு முறைதானாமே) விஜயம் செய்யும்போது, முன்னதாகவே சுரங்க அறைகள், இன்னும் சுற்றுப்புறமெல்லாம் ஆபத்து இருக்கான்னு ஆராய்ஞ்சுறணும் என்றது ஒரு விதியா ஆகிப்போய் இருக்கு.

இந்த கைடோ என்றவர் , ஸ்பானிஷ் படையில் வேலை செஞ்சவர். வெடிமருந்து வேலைகளில் கெட்டி. அதனால்தான் இந்தப் பொறுப்பு இவருக்குக் கிடைச்சது. இவர் பிடிபட்டப்போது, தீக்குச்சி, கடிகாரம், பத்தவைச்சு எரிக்கும் மரத்துண்டு எல்லாம் இவரோட பாக்கெட்லே இருந்துச்சாம்.

ராசா நல்ல தூக்கத்துலே இருக்கும்போது  கை(டோ) ஃபாக்ஸைப் பிடிச்சுக்கிட்டுப் போய், ராசாவின் படுக்கை அறைக்கு வெளியே நிறுத்திவச்சுட்டு, இவனை என்ன செய்யலாமுன்னு ராசாவைக் கேட்டதுக்கு, சிறையில் அடைச்சு லேசாச் சித்திரவதை செஞ்சு இன்னும் யார்யார் கூட்டுன்னு விசாரிங்கோன்னு சொல்லிட்டாராம்.


கை வாயைத் திறக்கலை. யாரையும் காமிச்சுக்கொடுக்க விருப்பம் இல்லை.
லேசான சித்திரவதையின் கொடூரம் கூடிக்கிட்டே போயிருக்கு.  இதுக்குள்ளே சதித்திட்டம் தீட்டுன  (இந்த பாக்கி 12 பேரை)  ஆட்களை வளைச்சுப் பிடிக்கப் பார்த்தாங்க.  சண்டையில் சிலர் செத்துட்டாங்க. கடைசியில் எட்டுப்பேர் ஆப்ட்டாங்க. தூக்கில் தொங்கவிட்டு உசுரு போனதும் இழுத்துக்கிட்டுப்போய் நாலு துண்டா நறுக்கிப்போடணுமுன்னு தீர்ப்பு.


ஜனவரி 31, 1606 வருசம் ( பிடிபட்ட 88வது நாள்) தண்டனையை நிறைவேத்துனாங்க. பொதுமக்களுக்கு விவரம் தெரியணும், சதித்திட்டம் தீட்டும் ஆட்களுக்குப் பயம் வரணுமுன்னு  பிடிபட்ட நாள் நவம்பர் 5 ஆம் தேதியை பட்டாஸ் கொளுத்தி பான்ஃபயர் நைட்டாக் கொண்டாடுனாங்களாம்.
கையோட கொடும்பாவியைக் கொளுத்தும் விழாவா ஆரம்பிச்சு, பிரிட்டிஷ் மக்கள் எங்கெங்கே புலம் பெயர்ந்து போனாங்களோ அங்கெல்லாமும் இது ஒரு பண்டிகையா ஆகிக்கிடக்கு. இங்கிலாந்து மக்கள், அவுங்க போன இடமெல்லாம் அவுங்க விழாவைக் கொண்டுபோனது சரிதானே? இப்ப நாம் தீபாவளியை உலகம் பூராவும் கொண்டு போகலையா?

தீபாவளின்னதும் நினைவுக்கு வருது. 'மேற்படி சம்பவம்' நடந்ததும் ஒரு ஐப்பசி மாசம் என்றபடியால் ஏறக்குறைய நம்ம பண்டிகை சமயம்தான் இது வருது. இந்த சாக்குலே,  பட்டாஸ் நமக்கும் கிடைக்க ஒரு வழி பொறந்துருக்கு. இல்லேன்னா இந்த நாடுகளில் பட்டாஸ் விற்பனை எல்லாம் கிடையாது.  நாங்க இங்கே நியூஸி வந்த புதுசுலே நவம்பர் 5க்கு ரெண்டு வாரத்துக்கு முன்னே பட்டாஸ் விற்பனை இருக்கும். ராக்கெட்ன்னு வானத்துலே விடறதெல்லாமும்கூட  இருந்துச்சு. சின்னப் பசங்க வாங்கிவச்சுக்கிட்டுச் சும்மா இருக்குமா? சின்னச்சின்னதா விபத்துகள். இந்த அழகுலே 18 வயசுக்குட்பட்டவர்களுக்கு பட்டாஸ் விற்பனை செய்யக்கூடாது. (ஆனால் பதினைஞ்சரை வயசுலே கார் ஓட்ட ட்ரைவிங் லைஸன்ஸ் எடுக்கலாம்)

கழுதை தேஞ்சுக் கட்டெறும்பா ஆனது போல ரெண்டு வாரம் சுருங்கித் தேய்ஞ்சு இந்த வருசம்  நாலே நாள்தான் விற்பனை. அதுவும் ஆபத்தில்லாம வெடிக்கும்(????) கம்பி மத்தாப்பூ, பூச்சட்டி, கொஞ்சமா மேலே போய் அங்கே இருந்து பூச்சொரியும் சின்ன பயர் பால்ஸ் இப்படிச் சில.  பட்டாஸ் பெட்டிகளில் இருக்கும் பெயர்களைப் பார்த்தால் அரண்டு போயிருவீங்க. என்னமோ ஏதோன்னு:-) இதையுமே  அஞ்சாம்தேதி மாலை 6 மணிக்கு அப்புறம் விக்கக்கூடாது.  வெள்ளைக்கார நரகாசூரன் வருசாவருசம் ஒரே தேதியில் வருவதைப்போல நம்மூர் நரகாசூரன் வர்றதில்லையே. அதுக்காக நம்ம பண்டிகையை விடமுடியுதா? கொஞ்சம் வாங்கி ஸ்டாக் வச்சுக்குவோம். நரகாசூரன் வரும்போது நாம் ரெடி:-))) தோட்டத்துலே போய் கொஞ்சமாக் கொளுத்திக்குவோம்.

ஒவ்வொரு நகரிலும் இருக்கும் கவுன்ஸில்கள், நம்ம காசை வச்சு( அதான் வீட்டுவரியைக் கறக்கறாங்களே, அதுலே ஒரு பகுதியை) ஃபயர் ஒர்க்ஸ் டிஸ்ப்ளேன்னு அதுக்குன்னு ஒரு ஆளைவச்சு வெடிக்க வைப்பாங்க.  நதிக்கரை ஓரமா இருந்தா நல்லதுன்னு நீர்நிலைகள் அருகில் விழா நடக்கும்.

இப்ப ஒரு பத்து வருசமா எங்க ஊரில்  கடலில் pier கட்டுனபிறகு, விழா அங்கேதான் நடக்குது. மாலை 7 மணிபோல இசைக் குழு( கிறைஸ்ட்சர்ச் சிம்போனி ஆர்கெஸ்ட்ரா) பாடத்தொடங்கும். சரியா 9 மணிக்கு வாணவேடிக்கை. பத்தவைக்கன்னே நிபுணர் வெளிநாட்டில் ( ஆஸ்தராலியா) இருந்து வருவார். பத்தே பத்து நிமிசத்துலே நம்ம காசு ரெண்டு லட்சம் டாலரைக் கரியாக்கிருவாங்க.  ஆனாக் கண் கொள்ளாக் காட்சியா இருக்கும்.

ஆகாயத்துலே போறதை அம்மா அள்ளிக்கோ..... ஐயா அள்ளிக்கோ தான். இசை நிகழ்ச்சி உக்கார்ந்து கேட்கும் பொறுமை இல்லை. அதுவுமில்லாம வரும்போது ட்ராஃபிக்லே மாட்டிக்குவோம்.  நமக்குத்தான் நோகாம நோம்பு கும்பிடணுமே.  9 அடிக்க ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி (கண்டுபிடிச்சு வச்சுருக்கும்) ஒரு மேடான இடத்துக்குப் போய்ச் சேருவோம். கடற்கரையில் இருந்து ஒரு ரெண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு. ஒரு குறிப்பிட்ட கோணத்தில்  அட்டகாசமாத் தெரியும் வாணவேடிக்கையைப் பார்க்க வேண்டியது. கடைசியா (ஃபினாலி) பட்டாஸ் அடைமழையா அஞ்சு நிமிசம் விடாமப் படபடன்னு பாய்ஞ்சு வர்ணம் உமிழ்ந்துகிட்டு ஜெகஜோதி காட்டும் நிகழ்வு முடிஞ்ச கையோடு வண்டியைக் கிளப்பிறணும். அஞ்சு நிமிசம் பால்மாறுனா......போச்சு. நம்மைப்போல நினைப்பு எத்தனைபேருக்கு இருக்கும்?

அடிச்சுப்பிடிச்சு ரோடைப் பிடிச்சா 12 நிமிசத்துலே வீடு.

இன்னிக்குத்தான் வெள்ளைக்கார நரகாசூரன் கை ஃபாக்ஸ் தினம். எங்கூர் பெருசுங்க,  உள்ளூர் தினசரியில் இளவட்டங்களுக்கு இன்றைய சரித்திரம் தெரியலையேன்னு புலம்பல் விட்டுருந்தாங்க.  அவுங்களுக்குத் தெரியலைன்னாப் போகுது....உங்களுக்கு? சரித்திரத்தை நம்ம சரித்திர வகுப்புக்கு கொணாந்துட்டேன்.  உங்களுக்கும் சொல்லிக்கொடுத்தது போல ஆச்சு. இல்லீங்களா?



பின்குறிப்பு: நம்ம தளத்துலே ஒரு நாலு வருசத்துக்கு முன்னே எழுதுன 'சரித்திரத்தில் நரகாசூரன்' பதிவில்  இருந்து கொஞ்சம் எடுத்து ரீமிக்ஸ் செஞ்சுருக்கேன். எங்கியோ ஏற்கெனவே  வாசிச்ச ஞாபகம் இருக்கேன்னு  ஒரு நினைப்புவந்தா......... நல்லது:-))))











வேங்கட க்ருஷ்ணனின் குடும்பம்.

$
0
0


உள்ளுர் தினசரியில் அன்றைக்கு வந்த விளம்பரத்தைப் பார்த்து வாய் பிளந்து நின்னது என்னவோ உண்மை. இவ்வளாம் பெருசா? எப்போ? அந்தப்பக்கம் எத்தனை முறை பகலிலும் இரவிலுமாப்போயிருக்கோம்? கண்ணுக்கே தெம்படலை!!!   அல்லும்பகலும் நெருக்கியடிக்கும் போக்குவரத்து  நெரிசலிலே  மாட்டிக்கிட்டு  பயப்பிராந்தியோடு சாலையிலேயே கண்ணு நட்டுக்கிட்டு இருந்தால் அக்கம்பக்கம் யானையே நின்னாலும்  கண்ணுக்குத் தெரியுமா?

அண்ணா சாலையில்தான்னு சொல்றீங்க..... இன்னிக்குக் கட்டாயம் கண்ணால் பார்க்கணும் என்ற முடிவோடு இருந்தேன். ராத்திரிக்கு எப்படியும் விமானநிலையம் போயாகணும்.வர்றாள். அப்ப மறக்காமல் யானையைப் பார்க்கலாம்.

சனிக்கிழமையா இருக்கேன்னு பார்த்தசாரதியை தரிசிக்கக் கிளம்பினோம்.  ஏழுமணி வாக்கில்பதிவர் சந்திப்பு ஒன்னு இருக்கு.  தில்லக்கேணி ஐயா வழக்கம்போல் இருக்கார்.  ஸ்பெஷல் தரிசனம் இப்போ சீக்ர தரிசனம் ஆகி இருக்கு.  நேரக்குறைவு காரணம் சீக்ரமா எனக்குப் பெருமாளை ஸேவிக்கணும். சந்நிதிக்கு இடப்புறம் டிக்கெட் கொடுக்கறாங்க. கூடவே கொஞ்சம் மஞ்சள் குங்குமப்ரசாதமும்.  நேரா நம்மைக்கொண்டுபோய்  மூலவருக்கு  முன்வாசலில் விட்டாறது. தர்ம தர்சனம் வரிசைக்குப் பாரலலா ஒரு வரிசையில் போய் நிக்கணும்.ரெண்டே நிமிசத்தில்  முழிச்சுப் பார்க்கும்  மூலவர் முன் சடாரி, தீர்த்தம் எல்லாம் ஆச்சு.  வழக்கத்துக்கு மாறா மூலவர் பளிச்ன்னு இருக்காரேன்னால் நல்ல மின்விளக்கு ஃபோகஸ் செய்யுது அவர் முகத்தை!அடடா.... பாரதப்போரின் விழுப்புண்கள் ,அம்பு கொத்திய இடங்கள் எல்லாம் தழும்புகளாய்த் தெரியுதே!!!!

மூலவரை நாம் பார்த்த(னின் தேரை ஓட்டிய )ஸாரதின்னு சொல்றோமே தவிர இவருக்கு  அசல்பெயர் வேங்கடக்ருஷ்ணன். ரெண்டே கைகளுடன் குடும்ப சமேதராய் இங்கே காட்சி கொடுக்கிறார்.  அண்ணனும், தம்பியும், மனைவியும்,மகனும் பேரனுமா கூட்டம்தான். மூணுதலைமுறை!  ஆனால் நட்ட நடுவில் ஒன்பதடி உசரத்தில் ஆஜானுபாகனாய் முறுக்கு மீசையுடன் புஷ்ப அலங்காரங்களுடன்  ஜொலிப்பவனை விட்டு  இந்தப்பக்கம் அந்தப்பக்கம் கண்களை ஓட்டினால்தானே குடும்பம் தெரியும்? எங்கே ஓட்ட விடறான். முட்டைக்கண்ணால் நம்ம முழிச்சுப் பார்க்கிறானே!!! அவன் கண்ணைவிட்டு அகலுதா நம் கண்கள்?

இடக்கையில் இருக்கும் சங்கு வலக்கையில் வந்துருக்கு. சக்கரத்தை விஷ்ணு லோகத்துக்கு அனுப்பி இருக்கார், சாரதி வேஷம் கட்டுனப்ப! அதான் போரில்ஆயுதம் எடுக்கமாட்டேன்னு துரியோதனனுக்கு வாக்குக் கொடுத்துருந்தாரே! கையில் ஒரு சாட்டை தேர்க் குதிரைகளை விரட்ட. ஆனால் இடுப்பில் இருந்து தொங்கும் வாள் எதுக்கு? இது ஆயுதம் இல்லையோ????  ஒருவேளை தற்காப்புக்கோ? என்னவோ போங்க 'சாமி'யைப் புரிஞ்சுக்கவே முடியலை. சப்தரிஷிகளுக்கும் தரிசனம் தந்துருக்கார். நமக்கும்தான்........... இல்லையோ?

மீசைக்காரனை மீசையில்லாமல் கூட தரிசிக்கலாமாம். வருசத்துக்கு அஞ்சு நாட்கள்.  பகல்பத்து உற்சவத்தின் ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரை! சென்னைக்கு வரும்போதெல்லாம் தவறாமல் ஒருமுறையாவது வந்து தரிசிக்கும் கோவில் என்றாலும்  இதுநாள்வரை  மைனஸ் மீசை பார்க்கக் கிடைக்கலை. ராப்பத்து மட்டும் ஒரே ஒருநாள் கிடைச்சது.ஸ்ரீராமர் அலங்காரம்.

சீக்ர தரிசனத்துலே வந்தால் நாம்  மிஸ் பண்ணுவது  ராமனையும் ரங்கனையும்:(  பக்கத்துலே கம்பித் தடுப்பு வரிசைகளில் வரும் சனம் பார்வையை மறைச்சுருது. கூட்டம் இல்லேன்னா.....  அப்ப எதுக்கு சீக்ரம்? பொது தரிசனத்துலே வந்தால் மூணு சந்நிதிகளையும் தரிசிக்கும்   சான்ஸ்  கிடைச்சுருமே!  என்னவோபோங்க..........இடப்பக்கம் இருக்கும் ஹனுமனையும் ஆழ்வார்களையும்  மட்டுமே சேவிக்க முடிஞ்சது.

கோவிலை வலம் வந்து வேதவல்லித்தாயார், யோக நரசிம்மர்,  கஜேந்திர வரதர், நம்ம ஆண்டாளம்மா எல்லோரையும் தரிசனம் செஞ்சுக்கிட்டு  கருவறை விமானத்துக்குக் கண்ணைச் செலுத்தும்போது கீழே முற்றத்தில் (யோகநரசிம்மர் சந்நிதிக்குப்பின்பக்கம்)  மேடையில் குழலூதும் கிருஷ்ணனும் பசுவுமா ஒரு சுதைச்சிற்பம். புதுசு. என்னவோ அங்கே இருக்கும்  பழைய அமைப்புக்கு ஒட்டாமல் இருந்ததா  கோபால் சொன்னார்.  பெருமாள் திருவடிகளைக் கும்பிட்டுவிட்டு, பக்கத்துலே கண்ணாடிப்பொட்டியில்,  கோவில் எப்படி இருக்குன்ற டிஸ்ப்ளே  பார்த்தால்  அருமையான அமைப்புதான்.  ஆனால் கோவில் உள்ளே நிஜமாவே நாம் இருக்கும்போது  அந்த  ஒரிஜனல் அழகு தெரியறதில்லை:( பஞ்சமூர்த்திகள் உள்ள  திருக்கோவில்!!!

பிரஸாத ஸ்டாலில்    புளியோதரையும் மைசூர்பாகும் சக்கரைப் பொங்கலும்கிடைச்சது.  இங்கே சக்கரைப் பொங்கல் ரொம்ப விசேஷம்.  ஆண்டாள் சொன்ன முழங்கைநெய்வார என்பதைக் கடைப் பிடிக்கிறார்கள்.  போரில் சும்மா இருந்தவரையும் எதிரிகளின் அம்பு தாக்கி காயம் ஆச்சே.  புண்கள் ஆறிக்கிட்டணுமேன்னு  ரொம்ப காரம் இல்லாமல் வெறும் மிளகுப்பொடி மட்டும் சேர்த்த  புளியோதரையும், ஏகப்பட்ட நெய்யும் முந்திரிப்பருப்புமா கலந்து செஞ்ச  சக்கரைப்பொங்கலும்  சூப்பர். ஒரு கிலோ அரிசிக்கு 700 கிராம்  முந்திரியும் 350 கிராம் நெய்யுமாம். !!!! (எனக்குக் கிடைச்ச சக்கரைப் பொங்கலில்  மூணே முந்திரிதான் இருந்துச்சு. நான் ஒன்னும் சொல்லப்போறதில்லை  மூச்....)

ப்ருந்தாரண்யத்தில் இருந்து கிளம்பினோம்.  ஆஹா... அதென்ன?  இதுதான் பழைய பெயராம் இந்த தலத்துக்கு. துளசிவனம்.  அப்புறம்தான் அல்லிக்கேணியாச்சு.  பீச் ரோடுவழியா திரும்பி வந்தோம்.  விவேகாநந்தர் இல்லத்தில்  150 வது பிறந்தநாள் விழான்னு  நடந்துக்கிட்டு இருக்கு.  மறுநாள்  மாலை 4 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சி வச்சுருக்காங்க.



அறைக்கு வந்தகொஞ்ச நேரத்தில்  பதிவர் மின்னல்வரிகள்  பாலகணேஷ் வந்தார்.  புதுமுகம் என்ற  பிரமிப்பு  ஒன்னும் இல்லாமல் எதோ காலங்காலமா தினமும் பார்த்துப்பேசிவந்ததைப் போல் ஒரு  தோணல்.  நேத்து விட்ட இடத்துலே இருந்து பேச ஆரம்பிக்கிறோம். பதிவர் குடும்ப லக்ஷணம் என்பது இதுதான்.  அவருக்கும் அநேகமா இப்படித்தான் இருந்துருக்கணும்.  விதிவிலக்காக நம்ம கோபால் மட்டும்  இருந்தார்:-)))))

நேரம் போறது தெரியாமல் ஒரு அரட்டை.  அவர் வீட்டு புத்தக அலமாரியை ஒரு நாள் அபேஸ் பண்ணிடணுமுன்னு இருக்கேன்.  பதிவுலகம் ஒன்னு இப்படி அராஜகம் பண்ணிக்கிட்டு இருக்குன்னு அவருக்கு ரொம்பநாளாத் தெரியாதாம். அப்புறம்தெரிஞ்சதும்  கண்ணைத்  திறந்துக்கிட்டே  கடலில் குதிச்சுட்டாரு:-)))))  இப்பதான் ஒரு வருசம் ஆகி இருக்குன்னார். மனம்கவரும் அருமையான பதிவுகளை எழுதிவரும் நண்பர்களைப்பற்றி, ' இதைப்படிச்சீங்களா? அதைப்படிச்சீங்களா? ன்னு  விசாரிச்சுக்கிட்டோம். விழாவுக்குக் கட்டாயம் வந்துருங்கன்னு சொல்லி நினைவூட்டுனதும் நண்பர் ஒருவரையும் கூட அழைச்சுக்கிட்டு வரேன்னார்.  நண்பர் பெயரை நான் சட்னு சொன்னதும்  வியப்புதான்.  ஒரே  குட்டையில் இருக்கும் மீன்களுக்கு  ஒன்றையொன்று புரியாதா?:-))))))) இவ்ளவு பேசுனவ சரிதாவைப் பற்றி மட்டும் ஒன்னும் விசாரிச்சுக்கலை!

விமானநிலையம் போகணுமுன்னு கோபால் நினைவுபடுத்தினார். போறவழியில் கவனிச்சுக்கிட்டே வந்தேன். ஆஹா.... அட்டகாசமான விளக்கொளியில் மின்னுவதை எப்படித்தவறவிட்டேன்?

இன்னிக்குத்தான் திறப்புவிழா.  அதான் பளிச் பளிச்.

இத்தனைநாள்  எப்படியோ மறைச்சு வச்சுருந்தாங்க போல. பிரமாண்டமாத்தான் நிக்குது! மகளுடன் திரும்பி வரும்போது  யானையைக் காமிச்சேன்.  மெட்ரோ வேலைகள் நடப்பதால் முழு வியூவும் பார்வைக்கு அகப்படலை.  ஒருநாள் போகத்தான் வேணும்.  மகளுக்குப் பிடிக்கும்.

அடுத்த ரெண்டு நாட்களும் மகளுக்குத் துணிகள் எடுப்பது தைக்கக்கொடுப்பது, உறவீனர் வீடுகளுக்கு விஸிட் என்று  அலைஞ்சோம்.  எங்க வீட்டு இமெல்டா மார்கோஸ் என்ற பட்டத்துக்கு உரிய  மகளை  எகஸ்ப்ரெஸ் அவென்யூவுக்குக் கூட்டிப் போனோம்.  நானும் ஒரு கிளாஸ் மனப்பால் குடிச்சுட்டுக் கிளம்பினேன். எனக்கு அங்கே ஸ்ரீரங்கா ஜுவல்லர்ஸ்  பார்க்கணும்.  (கவனிக்க: பார்க்கணும்)  சான்ஸ் கிடைச்சா எதாவது சின்னதா.............

எனக்கு முன்னாலேயே என் அதிர்ஷ்டம் (ஒருவேளை கோபாலின் அதிர்ஷ்டமாகக்கூட  இருக்குமோ?)    அங்கே போய் உக்கார்ந்துவிட்டது. மூணுதளமும் மாறிமாறி ஏறி இறங்கினது மிச்சம். கடையைக் காணோம்:(  போச்சு என் காமதேனு...........

எனெக்கென்னமோ   இங்கே பார்க்கிங் சார்ஜ் கூடுதல் என்று தோணுது.  ஒருவேளை எங்கூர் மால்களில்  எல்லாம் இலவச பார்க்கிங் என்பதால் இருக்கலாம். பார்க்கிங் மட்டுமா...உள்ளே இதர சாமான்களும் இப்படித்தான் தீ பிடிச்ச விலை.  சாதாரண ப்ரிண்ட் (மயிலிறகு டிஸைன்) உள்ள புடவை பத்தாயிரத்துச் சொச்சம்.   புளிப்பு திராக்ஷை!

வீட்டு அலங்காரச் சாமான்கள் கடையில்  யானை மந்தைகள். எல்லாமே ரொம்ப அழகா நீட்டா வச்சுருக்காங்க. அசப்பில் எங்கூர் கடைகள் போல ஒரு ஃபீலிங்ஸ். அதான் ஒன்னும் வாங்கிக்கலை:-)










பகலுணவு நேரமாச்சேன்னு ஃபுட்கோர்ட் பக்கம் போனால் நளாஸ் ஆப்பம் கண்ணில் பட்டது.  நம்ம பதிவர் மோகன்குமார் ஒரு பதிவில் குறிப்பிட்ட நினைவு வரவே அங்கேயே சாப்பிடலாமுன்னு முடிவு.  முதலிலேயே காசைக் கட்டணும். மீதிச் சில்லறை கிடைக்காதுன்னு பதிவுகளின் மூலம் தெரிஞ்சதால்  சரியாக் கணக்குப் போட்டு அதுக்குண்டான தொகையை மட்டும் கட்டி  ப்ரீபெய்டு  கார்டு  வாங்கினோம்.  எக்ஸ்ட்ரா எதாவது வேணுமுன்னா.... மூச்.   இந்த சிஸ்டம்  சரியானதில்லைன்னு எனக்குப் படுது.  மீதியை நம்ம  டெபிட் கார்டுக்கு அனுப்பக்கூடாதா?  இல்லை சாப்பாட்டு பில்லை சாப்பிட்டப்பிறகு நம்ம க்ரெடிட் கார்டைக் கொண்டு கட்டலாம் என்று இருக்கக்கூடாதா?  இங்கெல்லாம் அப்படித்தானே செய்யறோம்.  என்னவோ போங்க..... உள்ளுர் விவகாரம் ஒன்னும் புரிபடமாட்டேங்குது:(


அறைக்குத் திரும்பும்  வழியில்  அண்ணாசாலையில் ஒரு ஆண்டீக் கடை பெயர்பலகை பார்த்தது நினைவுக்கு வர அங்கே போனோம். ஒரே இருட்டு. தட்டுத்தடவி  கண்கள் இருட்டுக்குப் பழக்கமானதும்  ரெண்டு மனிதர்கள் இருப்பதைக் கண்டேன். பவர் கட்டாம்.  இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம் வெளிச்சம் வர.  ஜன்னல் வழியா சூரிய ஒளி புக முடியாமல் அடைச்சுவச்ச சாமான்கள்.   தெருபக்கம் ஷோ விண்டோ.  பொருட்கள் ஒன்னும் சரிவரலைன்னு நினைச்ச சமயம் உள்ளே இருந்து ஒரு மணியைக் கொண்டுவந்தார்.  பித்தளை மாதிரி இருக்கு.  ஆனால்...ஏழு உலோகங்களின் கலவை. Tibetan Prayer Bell  தியானத்துக்கானதாம்.  ஒரு மரக்கட்டையால் விளிம்பைச் சுத்தினால்  ஒருமாதிரி 'ஓம்' என்ற ஒலி வருது.

ரெண்டு சைஸ் இருக்கு. கொஞ்சம் பெரியதை (11 செமீ விட்டமும்  20 செ.மீ உயரமும்) வாங்கினோம். பேரம் பேசத் தோணலை.கடை இருக்கும் அழகைப் பார்த்தால் அன்றைக்குப் பூராவும் நாங்க மட்டுமே  கஸ்டமராக இருப்போம் போல. ரெண்டு பேர் காலையில் இருந்து கடையைத் திறந்துவச்சுக்கிட்டு  மொட்டு மொட்டுன்னு உக்கார்ந்துருக்காங்க. போயிட்டுப் போகுது போ!




ஒரு 46 விநாடி  வீடியோ இது. நின்னு நிதானமா  கட்டையை சுத்திவர ஓடவிட்டா நல்ல சப்தம் வருது. இங்கே அவசரடியா ... ச்சும்மா ஒரு சாம்பிள்.




ஃபுல்லுக்கட்டும் புல்லுக்கட்டும்...............

$
0
0


காலையில் ஃபோன் பண்ணி  டேபிள் ரிசர்வேஷன் செய்யலாமுன்னா.... இன்னும்  முழுசா செயல்பட ஆரம்பிக்கலை. நீங்கள் மாலை ஏழுமணிக்கு இங்கே வந்துருங்கன்னாங்க.  ட்ரெஸ் கோட்  இருக்கான்னு தெரியலை. ஆனாலும் நட்சத்திரத்துக்குரிய அந்தஸ்தை தரத்தானே வேணும்.

ஹொட்டேல் க்ராண்ட் ச்சோழா. பெஷாவ்ரி ரெஸ்ட்டாரண்ட். மொத்தம் பத்து உணவகம் உள்ளே இருக்குன்னு தகவல். ஆனால் திறந்து இன்னிக்கு மூணே நாள் ஆனபடியால்  பெஷாவ்ரி மட்டுமே திறந்துருக்கு.

புது ஹொட்டேலில் பத்துமாடிகள். 600 அறைகள். 1000 கார்களுக்கான பார்க்கிங் வசதி. பணத்தின் ஜொலிப்பு தகதகன்னு எங்கெபார்த்தாலும் தெரிஞ்சது. அரண்மனைகளைப்போல வெளிப்புறச் சுவர்களும் அதில் சுற்றிவர நிற்கும் ரெட்டை யானைகளுமா அட்டகாசம் போங்க. அருமையான தோட்டம், செயற்கை நீரூற்று. லாபியில்  விதானம் முழுக்க வரிசைகட்டி நிற்கும் விளக்குகள்.  பிரமாண்டமான ஷாண்டிலியர்கள். தரையில் தாமரைக்குளம். எல்லாம் மாசுமருவில்லாமல் தூய்மை! ( நிஜத் தாமரைப் பூக்களைப் போட்டு வைக்கப்டாதோ?) 



தமிழ்நாட்டுலே மின்வெட்டு இருக்குன்னு சொல்றாங்க?  தனி பவர் ஸ்டேஷன் வச்சால்தான் இப்படி தாளிக்கமுடியும்!!!!



கான்ஃப்ரன்ஸ் ஹால்கள், பார்கள் , ஏழு லவுஞ்சுகள் இப்படி அங்கங்கே  நிறைய 'கள்'கள்தான். ஒத்தைபடையா ஒன்னுமே இல்லை ஒன்னைத்தவிர !

சோழன் வந்திறங்கிய குதிரை ஒன்னு மட்டும் நின்னது:-)))

எட்டு ஏக்கர் நிலத்தை வளைச்சுப் போட்டுருக்காங்க. அம்பத்தியேழு வகையான  பளிங்கு/மார்பிள் கற்களை வச்சு இழையோ இழைன்னு இழைச்சுவச்சுருக்காங்க.  இதுமட்டும் பத்து லக்ஷம் சதுர அடிகள். எல்லாம் இடாலி  இறக்குமதி. தனியா ஒரு க்வாரி  அங்கே இதுக்குன்னே  வேலை செஞ்சுருக்கு.  உள் அலங்காரத்தில் நுணுக்கமான வேலைகளுக்கு நம்ம மாமல்லபுரத்தில் இருந்து  நாலாயிரம் சிற்பக் கலைஞர்களைக் கொண்டு வந்தாங்களாம். சோழப்பேரரசு  காலத்து  திராவிடக் கலை  கட்டுமானம்னு சொல்றாங்க.  இந்த அரசர்களின் அரண்மனையை விட்டு வச்சுருக்கக்கூடாதோ?  அட்லீஸ்ட் கம்பேர் பண்ணிக்க வசதியா இருக்குமே! சிங்கையில் இருக்கும் அமெரிக்க கம்பெனி ஒன்னு வடிவமைச்சுக் கொடுத்துருக்கு. இந்தியாவில் மூணாம் பெருசு இது.

செலவு கூட அவ்வளோ அதிகமில்லை. ஆயிரம் கோடி  பட்ஜெட். ஆனால் எதுதான் நினைச்ச பட்ஜெட்டுலே அடங்குது.  நகைக்கடைக்கும் புடவைக்கடைக்கும் போன அனுபவம் எல்லாருக்கும் இருக்குமே!  ஒரு 20 சதம் கூடிப்போயிருச்சு.  ஆயிரத்து இருநூறு கோடிகள்.  ( அட இவ்ளோதானா?  அப்ப ஒரு லட்சத்துக்கு  எழுபத்தி ஆறாயிரம் கோடிகளுக்கு  இதைப்போல  எத்தனை கட்டலாமுன்னு அசட்டுத்தனமாக் கணக்குப்போடும் மனசை அதட்டி உக்காரவச்சேன்)

  ஏகப்பட்ட பணியாட்கள். நாலாயிரமாம்.  வரவேற்பில் பெண்களுக்கு  யூனிஃபார்ம் அருமையான டிஸைனில் புடவைகள். போகட்டும்.... நிறைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள். மகளிர்  மட்டும் என்று ஒரு முழு மாடி.  ஹொட்டேலில் தங்கவரும் பெண் விருந்தினர்களுக்கு மட்டும்! ஆஹா.... அந்தப்புரம்!!!  ஆண்களுக்கு  அனுமதி இல்லை கேட்டோ!

ப்ரெசிடென்ஸியல் ஸ்யூட்  ஒன்றின் பெயர் கரிகாலன் ஸ்யூட்!  கலை என்ற பெயரில் ஒரு கலையரங்கம் கூட இருக்கு.  நாப்பத்தியஞ்சே பேர் தான் உக்காரமுடியும். ஸோ.... பதிவர் சந்திப்புக்குப் போதாது கேட்டோ:(

பெயர் வைப்பதில் கில்லாடிகள் நாம் என்று நிரூபிச்சுட்டாங்க.  ஹெல்த் ஸ்பா இருக்கும் இடத்துக்கு காயகல்பம் என்று பெயர்!

சுற்றுச்சூழல் எனர்ஜிக்கான  பசுமைச் சான்றிதழ் 'லீட் ' கிடைச்சுருக்கு.  அதிலும் தர வரிசையில் மேலான ப்ளாட்டினம் சான்றிதழாம். ( Leadership in Energy and Environmental Design (LEED), an internationally recognised green building certification system. ) கூடிய விரைவில் மொட்டை மாடியில் ஹெலிபேட்  ஒன்னு வருதாம்.  அதானே..... ட்ராஃபிக்லே மாட்டிக்காம ஜம்முன்னு வந்து இறங்கிக்கலாம், இல்லை?


அளவுக்கு மீறிய பணிவோடு அழைச்சுப்போய் உக்காரவச்சு நமக்கு பிப் எல்லாம் மாட்டி மெனுப்பலகையைக் கொண்டுவந்து வச்சாங்க. ஒரு பக்கம் வெஜ் மறுபக்கம் நான் வெஜ் பட்டியல்.

உட்காரும் இடத்துக்கு டபுள் மடங்கு சமையலறை. பெரிய மேடைகளுக்குள்ளே ஒளிஞ்சுருக்கும் தந்தூரி அடுப்புகள்.  எல்லாமே படு சுத்தம்.  இந்த செட்டிங்ஸ், பாத்திர பண்டம் எல்லாமே  தில்லி மௌரியாவில் இருக்கும் பெஷாவ்ரி போலவே அச்சு அசலா இருக்குன்னார் கோபால். நெசமாவான்னதுக்கு .... ஒன்னே ஒன்னைத்தவிர....ன்னு இழுத்தார்.  அவர் கண் போன இடத்தைப் பார்த்தவுடன் புரிஞ்சு போச்சு. மெனுவின்  வலது பக்கம்......  ஓ.... குறைவா இல்லை அதிகமா? கொஞ்சம் மலிவுதான்னார்:-)

சமையல் நிபுணர்களைக்கூட தில்லியில் இருந்துதான் கொண்டு வந்துருக்காங்களாம். போகப்போக  உள்ளூர் மக்களுக்குப் பயிற்சி தருவாங்களா இருக்கும்.

சாப்பாடு வகைகளின் ப்ரஸண்டேஷன், ருசி ,  சர்வீஸ் எல்லாம் அருமை. விலை கொஞ்சம் அதிகம் என்றாலும்  தினந்தினம் வரமாட்டோமுல்லெ. எப்பவாவது ஒரு நாள் என்றால்  சரிதானே?  நல்ல பெரிய சர்விங் என்பதால் நீங்கள் கொஞ்சம் பார்த்து ஆர்டர் செய்யுங்க.  சாப்பிட்டுட்டுக்  கூடுதல் வேணுமுன்னா   அப்புறம்  ஆர்டர் செஞ்சுக்கலாமே! ஃபுல்லா  கட்டணுமுன்னு நினைச்சால்  ஒரு வேளை பட்டினி கிடந்துட்டுப்போனால்.....ஜஸ்டிஃபை  பண்ணிக்கலாம்:-)

ரெஸ்ட்டாரண்டில்  கூட்டமே இல்லை. ஒரு பத்துப்பதினைஞ்சு பேர் இருந்தாலே அதிகம்.  பீடா, பான் வகைகள் எல்லாம் கூட அருமையாத்தான் இருந்துச்சு. அங்கங்கே பூச்சாடியில்  சிம்பிளான பூக்கள் அலங்காரம் , பளபளக்கும் ரெஸ்ட் ரூம்ஸ் என்று  எல்லாம் மனசுக்குப்பிடிச்ச மாதிரி பாந்தமா இருக்கு. அறிமுகச் சலுகையா அறை வாடகையைக்கூட அம்பது சதமானம்போல  குறைச்சுருக்காங்க.  முதலிலேயே தெரிஞ்சுருந்தா ஒரு மூணுநாள் வந்து தங்கி இருக்கலாம். மகளுக்கும்  மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.  ( போகட்டும் அடுத்த ஹொட்டேல் கட்டும்போது வந்து தங்கினால் ஆச்சு:-))))

வெளிப்புறச் சுவர் யானைகளைக் கிட்டக்கப்பார்த்தால்.........  வேறென்னவோ மாதிரி தெரியுதே:(   இதென்னடா   யானைக்கு வந்த சோதனை????   கண்ணாடி மாத்தணுமோ என்னவோ! 

மறுநாள் சில கோவில்களுக்குப் போகலாமுன்னு கொஞ்சம் சீக்கிரமாவே கிளம்பினோம். நம்ம கெஸ்ட் ஹவுஸ்லே  காலை ஏழரை முதலே ப்ரேக்ஃபாஸ்ட்  கிடைச்சுருது.  அறைவாடகையோடு  இதுவும் சேர்த்தி என்பதால்  ஒருவிதத்தில் சௌகரியமாத்தான் இருக்கு. இன்னிக்குக் காலையில்   நம்ம சீனிவாசன்  கண் முழிச்ச நேரம் சரியில்லை போல!

அண்ணாசாலையில் போய்க்கிட்டு இருக்கோம்.  இடது பக்கம் திரும்பி பாரதிதாசன் சாலைக்குள்  நுழையணும்.  எங்களுக்கு  இடதுபுறமிருந்து  ஒரு நானோ வேகமா வந்து   ஒரு அறிவிப்பும்  கொடுக்காம  சடார்னு  நம்ம வண்டிக்கு முன்னால் ரைட் லேனுக்குப் பாய்ஞ்சது. சீனிவாசன்  சடார்னு ப்ரேக் போட்டாலும்  முடியாம  நானோவைப் பின்புறம் தட்டும்படி ஆச்சு.  எதிர்பாராத  சடன்ப்ரேக்கால் நான் முன்சீட்டில்  முகத்தை இடிச்சுக்கிட்டேன்.  என் லிப்ஸ்டிக் எல்லாம் முன்ஸீட்டின் முதுகுலே  ஒட்டிக்குச்சுன்னா பாருங்க!  மகளும் கொஞ்சம் இடிச்சுக்கிட்டாள்தான்.  ஸீட் பெல்ட் ஏன் இந்த வண்டியில் இல்லேன்னு அவள் விசாரம்.

இதுக்குள்ளே அங்கே சின்னதா ட்ராஃபிக் ஜாம் ஆகி  போலீஸ்காரர்  ஓடிவந்தார். ரெண்டு வண்டிகளையும் ஓரம் கட்டியாச்சு.  போலீஸோடு பேச்சுவார்த்தை நடக்குது. என்ன  ஆக்‌ஷன் எடுக்கப்போறாங்கன்னு  எனக்குத் தெரிஞ்சுக்கணும்.  அதெல்லாம்  ஒன்னும் வண்டியை விட்டு இறங்க வேணாம். ஸ்ரீநிவாசன்  பேசிக்குவார்ன்னு கோபால் சொல்றார்.  இறங்கிப்போய்ப் பார்க்கலைன்னா அம்,மாக்கு மண்டை வெடிச்சுருமுன்னு  மகள்  சொல்ல அதானே...ன்னு கீழே இறங்கிப்போய்ப் பார்த்தேன்.  நானோவைப் பார்த்ததே இல்லைன்னு சொல்லிக்கிட்டே இருந்தவளுக்கு நானோவைப் பக்கத்துலே பார்க்க ஒரு சான்ஸ்:-)


லெஃப்ட்லே  வந்து ஓவர்டேக் பண்ணியவர்  தன்னுடைய தப்பு எதுவுமே இல்லைன்றமாதிரி நிக்கறார்.  இன்ஷூரன்ஸ் இருக்கான்னு (எங்கூர் வழக்கப்படி) கேட்டேன்.  இருக்குன்னார்.  அதுக்குள்ளே கோபால் இறங்கி வந்து  எங்கே அடிபட்டுருக்குன்னு  பார்த்துக்கிட்டே  விவகாரம் எப்படி தீரப்போகுதோன்னு  கவலை முகத்தை மாட்டிக்கிட்டார்.  மகள் வேற தனியா உக்கார்ந்துருக்காளேன்னு நான் நாலைஞ்சு க்ளிக் செஞ்சுக்கிட்டு போயிட்டேன்.

விவகாரம்  முடிவுக்கு  வர எல்லாம் ஒரு இருவது நிமிஷம் எடுத்துருக்கு.  இன்னொரு போலீஸ்  ஆப்பீஸர்  வந்து சேர்ந்தார். எந்த வண்டி  பின்னாலே  இடிச்சதோ அதடோ தப்புதான்னு ஆப்பீஸ்ஸர் முடிவு செஞ்சார். லெஃப்ட்லே இருந்து  ரைட்டுலே பாய்ஞ்சு ஓவர்டேக் செய்யலாமா என்பதெல்லாம்  பிரச்சனையே இல்லை(யாம்!)  கேஸ் புக் பண்ணனுமுன்னு சொன்னாராம்.

இதுக்குள்ளே ட்ராவல்ஸ்க்கு ஃபோன் செஞ்சு விஷயத்தைச் சொன்னதும் வேற வண்டி அனுப்பறேன்னுட்டார் ஓனர்.  கொஞ்ச நேரத்துலே வண்டியும் வந்துருச்சு.  எங்களை அதுலே ஏத்திவிட்ட  சீனிவாசன்  நான் பார்த்துக்கறேம்மா. நீங்க   கவலைப்படாதீங்கன்னார்.

எல்லா ட்ரைவர்களுக்கும் அவரவருக்கு  ஒரு ரூட் இருக்கும்போல!  புது ட்ரைவர் நல்ல (!!) சாலையில் போகாம, குழி தோண்டிப் போட்டுருக்கும்  சின்னச்சின்னத் தெருக்கள் வழியா  உலுக்கி உலுக்கிக்,குலுக்கிக் குலுக்கி  வண்டியை ஓட்டிக்கிட்டு ஈஸிஆர் ரோடுலே போய்ச் சேர்ந்தார்.

அதுக்குள்ளே சீனிவாசனின் ஃபோன் வந்துச்சு. விவகாரம் செட்டில் ஆயிருக்கு. ஆயிரம் ரூபாய் கட்டச் சொன்னாராம் ஆப்பீஸ்ஸர்.  யாருக்குன்னு புரியலை!  ஒரு வேளை பசித்த மாட்டுக்குப் புல்லுக்கட்டோ? ட்ராவல் கம்பெனி கொடுக்காதாம். இவரே சொந்தக் காசுலே கட்டிருவாராம். ஆமாம்..... ட்ராவல்ஸ் நடத்துறவங்க  அவுங்க வண்டிகளுக்கு இன்ஷூரன்ஸ்  எடுத்துக்கமாட்டாங்களா?  குறைஞ்சபட்சம் தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ்?





துளசி வதம்

$
0
0
அனைத்து நட்புகளுக்கும்  விழாக்காலத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள். என்னடா இவ.... தீவுளி போய் இம்மாநாளாச்சு இப்பச் சொல்றாளேன்னு பார்க்கறீங்களா? பரவாயில்லைங்க. அதான் கந்த சஷ்டி, கார்த்திகை தீபம்  விழாக்கள் எல்லாம் வரிசைகட்டி நிக்குதே!

போன வார இறுதியில் தெருக்கூத்து பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது. விஷ்ணு புராணம்.  எதோ ஒரு அசுரனின் வதம்.  கூத்துக் கட்டியங்காரர்....அசுரனின் பெயர் குந்த மகராஜ்  என்றார். ஃபிஜி இந்தியர்கள் நடத்திய கூத்து என்பதால் எனக்குத் தலையும் புரியலை வாலும் புரியலை.

உங்களுக்காக விழுந்து விழுந்து தீபாவளிப் பலகாரங்கள் செஞ்சுக்கிட்டே இருந்ததில் நாட்கள் பறந்தது தெரியலை:-)

இதெல்லாம் போதுமான்னு பாருங்க!   நம்மூர் கோவிலில் நேத்துதான் அன்னக்கூட் விழா நடந்து முடிஞ்சது. இதுவும் தீபாவளியை ஒட்டி வரும் விழாதானே!







சொன்னால் நம்ப மாட்டீங்க.....மொத்தம்  பதினோராயிரம் அறைகள்  இருக்கும் 'மாளிகை'யில் ஏழாயிரத்து  ஐநூறு அறைகளுக்குச்  சின்னதும் பெருசுமாப் பாதிப்பு.  எல்லாம்  கடந்துபோன  நிலநடுக்கம்  ஆட்டி வச்ச கூத்து.  அங்கே (தாற்காலிகமாக)  வசிக்கும் மக்களுக்கு அதிகம் பாதிப்பு நேராத வகையில் பழுது பார்க்கும் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.  அரசு மருத்துவமனை.


இது ஒரு தனி உலகம். ஒரு ஒன்பது நாட்களாக  அநேகமா இங்கேதான் இருக்கேன். மகளுக்குக் கொஞ்சம் உடல்நிலை சரி இல்லை.  அறை சன்னலில் இருந்து பார்த்தால் அட்டகாசமான காட்சி. பேசாம இந்தப்படத்தைப் பிட்டுக்கு அனுப்பி இருக்கலாம், இல்லை?

பெரிய (குறு) நாவல் எழுதும் அளவுக்கு விவரங்கள் சேகரிச்சுக்கிட்டே இருக்கேன்.  தலைப்பு மட்டும்  முடிவு செஞ்சுட்டேன். அதான்  மேலே பார்த்தீங்களே!  உங்களை வதைக்காமல் விடுவதில்லையாக்கும் கேட்டோ!!

பின்குறிப்பு:தனி மடலிலும் பதிவின் பின்னூட்டங்களிலும் தீபாவளி வாழ்த்துகளை அனுப்பிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் அன்பும் , ஆசிகளும் நன்றிகளும் இத்துடன்.









அந்த மூன்று சொற்கள்.

$
0
0

இங்கே பக்கத்துலே தான் இருக்கு.  நானும்  ஒருமுறை  அங்கே அண்ணன் குடும்பத்தோடு போயிருக்கேன்.  மாயாஜாலைத் தொட்டடுத்து வந்துரும்.  கண்ணில் படாமப்போக சான்ஸே இல்லை. அங்கேயே ஒரு காஃபியைக் குடிச்சுக்கலாம்.

ஆனா....காணோம்!  மெயின் ரோடில் குத்துக்கல்லாட்டம் கம்பீரமா நின்னதைக் காணோம்!!! வழிதவறிட்டோமோ? நோ ச்சான்ஸ்:( இதோ இருக்கே மாயாஜால். அப்ப அது எங்கே? காக்கா வூஷ்..... அறுசுவை அரசு காணாமல் போச்சுதே!  போகட்டும் மாயாஜாலுக்குள் நுழைஞ்சோம்.  காஃபிக்கு முன்னால் ஓய்வறைக்குப்போயிட்டு வரலாமுன்னு போனேன்.  ஊஹூம்.... ஒன்னும் சரி இல்லை.  என்னவோ போங்க..........   காஃபியும் வேணாம்  ஒன்னும் வேணாம்......

நித்தியகல்யாணப் பெருமாள் கோவிலில்  வண்டியைவிட்டு இறங்கும்போதே ஓடி வந்து வரவேற்றார் ஒரு மாடு பாப்பா. இருடா உள்ளே போயிட்டு வரேன்னுட்டு, வழக்கத்துக்கு மாறா ஒரு மாலை வாங்கிக்கிட்டேன்.

இந்தக் கோவில் சமாச்சாரம் தெரியுமோ?   இங்கிருக்கும் உற்சவர்  தினம்தினம் கல்யாணம் பண்ணிக்கிறார்.  கல்யாணக்க்வலையில் இருப்போர் ஜோடி மாலை வாங்கிப்போய் பட்டரிடம் கொடுத்தால் அவர் அவைகளைப் பெருமாளுக்குச் சாத்திட்டு, அதில் ஒரு மாலையைக் கொண்டுவந்து  கவலையில் இருக்கும் பொண்ணுக்கோ, பையருக்கோ  தருவார். அதைக் கழுத்தில் போட்டுக்கிட்டு ஒன்பது சுத்து சுத்திவரணும்.   விளக்கமா கதை சொல்லி முன்னே ஒருக்கில் எழுதியதுஇங்கிருக்கு. பார்த்துக்குங்க.

பிரார்த்தனையான்னு கேட்ட பட்டரிடம் அதெல்லாம் ஒன்னும் இல்லை. சும்மாப் பெருமாளுக்குச் சார்த்திடுங்கோன்னேன். அவரும் சார்த்தியதும், பழக்க தோஷம் காரணமா  அந்த மாலையை எங்களுக்கே பிரசாதமாக் கொடுத்துட்டார்! கல்யாணக் கவலையில் இருப்போருக்கு  கைமேல் பலன்! எனக்கும்தான் பலிதம் ஆச்சு. ஹிஹி..... பெருமாளுக்கு மாலை சாத்தின மூணாம்நாள் எங்க (அறுபதாம்) கல்யாணம் கேட்டோ!!!

வெளியில் வந்தால் மாடுப்பாப்பா வழிமேல் விழிவச்சுக் காத்திருந்தது.  நந்தகோபாலிடம் இளநீர்களை  வாங்கிக் குடிச்சுட்டு உள்ளே இருக்கும் தேங்காயை, பாப்பாவோடு ஷேர் பண்ணிக்கிட்டோம். குழந்தை ஆசையாச் சாப்பிட்டான்.

கொடிசம்பங்கின்னு சொல்வோமே அந்தப்பூக்கள் அதிசயமாக் கிடைச்சது.  பச்சையை விடமுடியுதா?


ஒரு மூணுவருசத்துக்கு முன்னே  சென்னையில்  இஸ்கான் கோவிலைத் தேடிப்போனோம். புதுக்கோவில் ஒன்னு பக்கத்துலேயே கட்டிக்கிட்டு இருந்தாங்க.  அடுக்கடுக்கான கோபுரங்களும் அலங்காரமுமா இருந்துச்சு. அந்தக் கோவில் முழுசும் கட்டி முடிச்சு இப்போ  ஏப்ரல் மாசம் திறந்துட்டாங்கன்னு  பத்திரிகை செய்தி பார்த்தது நினைவில் இருந்ததால் அங்கேயும் ஒரு எட்டு எட்டிப்பார்த்துடலாமேன்னு  போனோம்.  ஈஸிஆர்  ரோடிலேயே விஜிபி தாண்டி கொஞ்ச தூரத்தில்  எதிர்ப்புறமா  நுழைவுக்கான அலங்கார வளைவு வச்சுருக்காங்க.

வளைவு தாண்டி ஒரு ரெண்டு ரெண்டரைக்கிலோமீட்டர் உள்ளே போகணும். சாலை  ஒன்னும் அவ்வளவா சரி இல்லை. வெறும் மண் ரோடு.  கோவில் அமைஞ்சுருக்கும் இந்தப்பகுதிக்கு அக்கரைன்னு பெயராம்.  பெரிய அன்னப்பறவை வந்து இறங்கி நிற்பதுபோல் தூரத்தே  வெள்ளை மாளிகையாத் தெரியுதுகோவில். ஒன்னரை ஏக்கர் நிலமாம். 10 கோடி ரூ  செலவு. அகலமான முன்படிகளுக்கு ரெண்டு புறமும் நம்மை மாலையும் (தும்பிக்)கையுமா  வரவேற்கும் யானைகள். உள்ளே ஏறிப்போனதும் 'ம்மா..........'ன்னு சொல்லும்  (தோட்டத்தில் மேயும் வெள்ளைப்)பசுவும் கன்றும்.





நல்ல பெரிய முன்முற்றம்தான். அதைக்கடந்தால் பிரமாண்டமான ஹால்!  நேரெதிரா ஒரு அரங்கமேடை. விழாக்களுக்கும் பிரசங்கங்களுக்கும் பயன்படுத்துவாங்களா இருக்கும். இதெல்லாம் கீழ்த்தளம்.  ஹாலுக்குள்ளே இருந்தும் மாடிக்குப்போக வழி இருக்கு.

வெளியே பசுவுக்கு ரெண்டு பக்கங்களிலும் மாடிக்குப்போகும் படிகள்.  படிகள் ஆரம்பிக்கும் இடத்தில்  ரெண்டு பக்கமும் ஒரு அறை போன்ற அமைப்பு. இதுதான்  இவர்கள் வெளியிடும் புத்தக விற்பனைக்கான ஸ்டால்.  மாடிப்படிகளின் முடிவில்   அகலமான டபுள் கதவுகளுக்கப்பால்  பிரமாண்டமான ஹாலும்  கருவறை மேடையும்.   ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோவில்.

அசப்பில் பார்த்தால் சண்டிகர் இஸ்கான் கோவிலின் ஜாடை, அந்த மேடை!  மூன்று பகுதிகளா அமைச்சுருக்காங்க. நடுவில்  குழலூதும் கண்ணனும் ராதையும் தோழிகள் லலிதா & விசாகாவுடன்.  இடதுபக்கம்  Nitai Gauracandra  சந்நிதியும் வலப்பக்கம் அண்ணன் பலராமன் தங்கை சுபத்ராவுடன் ஸ்ரீ  கிருஷ்ணர் சந்நிதியுமா இருக்கு. நடுச்சந்நியின் முன்பக்கம்  பண்டிட் ஓரமா உக்கார்ந்து  பிரசாதம் தர்றார்.

எல்லாமே பளிங்கு மூர்த்திகள்.  முன்புறம்  தனிமேடையில் அவரவர்களின் பாதச்சுவடுகள் பளிங்கில். (படம் எடுத்துக்க அனுமதி கிடைச்சது) பனிரெண்டரைக்கு ஆரத்தி இருக்குன்னார்.  இருந்து சேவிச்சுட்டே போகலாமுன்னு நாங்களும் மெதுவா ஒவ்வொரு இடமாப் பார்த்துக்கிட்டே வந்தோம்.  யசோதாவும் கண்ணனுமா ஒரு சின்ன மண்டபத்தில். ரொம்பவே ஹாயா உக்கார்ந்துக்கிட்டு  ஒரு உத்தரணி தீர்த்தம்( துளிப்பால்) வழங்கினார்  கோவில் வாலண்டியர்களில் ஒருவர்.  இவரைப்போல் பல இளைஞர்கள்  அப்பப்போ வந்து கோவில் வேலைகளில் பங்கெடுத்துக்கறாங்களாம்.

சந்நிதி மேடைக்கு நேரா எதிர்ப்புறம் ஹாலின் மறு கோடியில் ஸ்ரீ ப்ரபுபாதா அவர்களின் சிலைஉருவம். ஹரே க்ருஷ்ணா இயக்கத்தை வெளிநாட்டுக்குக் கொண்டு போனவர் இவர்.  வெறும் மூன்றேசொற்கள்தான் சொல்லணும்.  ராமா, கிருஷ்ணா, ஹரே  இதையே வெவ்வேற  வகையில்  மாத்தி மாத்தி அமைச்சுட்டா மகாமந்த்ரம் வந்துருதுன்னார்.

நம்மூர்ப்பக்கங்களில் அந்தக் காலக்கூட்டுக்குடும்பங்களில்  எப்படியும்  ரெண்டு பாட்டி தாத்தாக்கள் இருப்பாங்கதான். " வயசாயிருச்சுல்லே...  யாரையும் தொந்திரவு பண்ணாம  பேசாம ராமா கிருஷ்ணான்னு திண்ணையில்  உக்கார்ந்துக்கப்டாதோ? எதுக்கு இன்னும் உள்வீட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கணும்?"  வயசான மாட்டுப்பொண்களின்  குமுறல்கள்.  ஏன்னா அவுங்களுக்குமே மாட்டுப்பொண்களும்  மாப்பிள்ளைகளும்  பேரன் பேத்திகளுமா  வீடே நிறைஞ்சு  வழியும்.  இன்னும் சில வருசங்களில் போறவழிக்குப் புண்ணியம் தேடிக்க அதே ராமா கிருஷ்ணாவைச் சொல்லிக்கிட்டுத் திண்ணையில் இடம் பிடிக்கப்போவது இவுங்கதான் என்பது (வசதியா) மறந்து போயிருக்குமோ என்னவோ!

அந்த ரெண்டு சொற்களுடன் ஒரு ஹரே வைக் கூடச்சேர்த்துக்கிட்டால்  மகாமந்த்ரம் சொல்லி நாம சங்கீர்த்தனம் பாடிட முடியும்.  ஸ்ரீ சைதன்ய மகாப்ரபு   1486 வது ஆண்டு அவதரித்தார்.  கிருஷ்ணனும் ராதையுமா சேர்ந்து ஒரே உருவத்தில்  சைதன்யராகப்பிறந்தார் என்று ஐதீகம். வேதங்களிலும் உபநிஷதுகளிலும்  நிபுணத்துவம்  அடைஞ்சவர்.  இறைவனை அடைய எளியவழி நாம சங்கீர்த்தனம்தான். வெறும் மூன்றே சொற்களை மாத்தி மாத்திப்போட்டு  சாமியை  வசீகரிக்கலாம் என்றார்.

ஹரே ராம  ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

அவ்ளோதான் இந்த மந்த்ரம்.  மஹா மந்த்ரம்.  சொல்லிச் சொல்லி நாமும் மந்த்ரவாதி ஆகிடலாம். எவ்ளோ ஈஸி பாருங்க!!!!

கோவிலுக்கு வலதுபக்கம் பழைய கோவில் கட்டிடம் அப்படியேதான் இருக்கு.  அங்கிருந்த சிலைகளில்  பூரி ஜகந்நாத் க்ரூப் மட்டும் இங்கே புதுக்கோவிலில் ஒரு சந்ந்தியில் இடம் பிடிச்சுருக்கு.  மற்ற சிலைகள் உலோகம் என்பதால் உற்சவமூர்த்திகளாக  வச்சுருக்கலாமுன்னு நினைக்கிறேன்.

புதுக்கோவில் திறந்து அஞ்சு மாசம்தான் ஆகுது.  வெளியே தோட்ட நிர்மாணம் ஒன்னும்  ஆரம்பிக்கலை.  நிலத்தைச் சுத்தப்படுத்தும் வேலைகள் நடக்குது. பெண் தொழிலாளர்களுக்கு  புடவை யூனிஃபார்ம் கொடுத்துருக்காங்க.  வளாகத்தின் ஒரு மூலையில் கழிப்பரை(?) இருக்கு.  மழைக்காலங்களில்  அங்கே போய் வரும் சனம் சகதியைக் கொண்டுவராமல் இருக்கணும்.   வெளிவேலைகள் முடிஞ்சதும்  மேற்கூரையுடன் நடைபாதை போடுவாங்கன்னு எனக்குள்ளே  சொல்லிக்கிட்டேன்.

மகளுக்குக் கொஞ்சம் போரடிச்சது. படிக்கட்டுகளிலும் அங்கேயும் இங்கேயுமா உக்கார்ந்து அரைமணி நேரம் போக்கினாள்.  ஆரத்தி சமயம் சமீபிச்சதும்  கொஞ்சம் மக்கள்ஸ் வந்து சேர்ந்தாங்க.  பனிரெண்டு மணிக்கு சந்நிதியை மூடிட்டு ஆரத்திக்காக பனிரெண்டரைக்கு   சங்கொலியுடன் திறக்கறாங்க. ஒரே சமயத்தில் மூன்று பண்டிட்டுகள்  மூன்று சந்நிதிக்கதவுகள் முன்னே நின்னு  ' சங்கே முழங்கு................பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்'

ஸ்விட்ச் போட்டதுபோல மூணு ஜோடிக் கதவுகளும்  ஒன்னாத்திறக்க  மூலவர்களுக்கு உபசாரங்கள் ஒரே சமயம் ஒன்னுபோல நடக்குது.  ஜோதித்திரிகளுடன் அடுக்கு தீப ஆரத்தி!  இதுவரைக்கும் எல்லாமே அருமையோ அருமை!   எல்லா தீபங்களையும் ஒரு தட்டுலே வச்சு  தீவட்டி மாதிரி புகையோடு எரிய எரிய அப்படியே தூக்கி வந்து  ஸ்ரீப்ரபுபாதா  சிலைக்கு ஆரத்தி காமிச்சுட்டு  மக்கள்ஸ்க்கு  தொட்டுக்கும்பிட(!!) தட்டை நீட்டறாங்க.

அநேகமா இன்னும் ஒரு வருசத்துலே புதுக்கருக்கு அழிஞ்சு கரிப்புகை பிடிக்காம இருந்தால் பாக்கியம்!வேறென்ன சொல்ல?:(

பழைய கட்டிடத்துக்கும் புதுக்கட்டிடத்துக்கும்  நடுவில் இருக்கும் இடைவெளியில் மேற்கூரையா துணிப்பந்தல் போட்டு பிரசாத விநியோகம். ரவா கேஸரி கிடைச்சது.


ISKCON  அன்றும் இன்றும்என்று ஒரு ஆல்பம் போட்டு வச்சேன்.  நேரமும் விருப்பமும் இருந்தால் பாருங்க. மகள் எடுத்தவையும் இதுலே இருக்கு.



மால்குடிப்போகலாமுன்னு   கிளம்பிப்போனால் புது ட்ரைவருக்கு  வழி தெரியலை.  ஈஸிஆர் ரோடில் இருந்து அலங்கார வளைவுக்குள் நுழையறோம் பாருங்க  அந்த வளைவை ஒட்டியே மால்குடிக்கு வாசல் இருக்கு.  அதைத் தவறவிட்டுட்டால்..... வளைவுக்குள் நுழைஞ்சதும் இடதுபுற வழியா ச்சட்னு  நுழைஞ்சுடலாம்.  மால்குடின்னு கீழ்ப்பகுதியில் இருந்ததை கண் பார்க்கலை:(

வாசலைத் தவறவிட்டு ஈஸிஆரில் இன்னொரு சுத்துப்போய் ரைட் எடுத்து மீண்டும் வந்து சேர்ந்தோம்.வளாகத்தில் ரெண்டு உணவகம். அந்த இன்னொன்னுதான் அந்த பஞ்சாபி தாபா. பெயர் ஸ்வதேஷ்! . சென்னை விஜயத்தில் ரெண்டு முறை மால்குடிக்கு வந்ததில் கோபாலுக்குப் பிடிச்சுப்போச்சு. மகளை அங்கே கூட்டிப்போய் சாப்பிடவைக்கணுமுன்னு   நேர்ந்துக்கிட்டார் போல:-)

எனக்கு அங்கிருக்கும் திண்ணை, நவநாகரீக (!!)மண் அடுப்புகள் எல்லாம் ரொம்பப்பிடிக்கும். மகளுக்கும் இடம் ரொம்பப் பிடிச்சதுன்னாள். கிராமத்து செட்டிங், கிணறு, குடிசை , தோட்டத்துலே உக்கார்ந்து சாப்பிடும்வகையில்  இருக்கைகள், குட்டியா ஒரு அல்லிக்குளம் இப்படி. ஊதுபத்தி, மெழுகுவர்த்தி,  வாசனை எண்ணெய், ஸ்கார்ஃப்கள்ன்னு  விற்கும் சின்னக் கடை. சுற்றுலாப்பயணிகளைக் கவனத்தில் வச்சு செஞ்சுருந்த அமைப்பு.  சுவாரசியமாவே இருக்கு.

அவரவர் விருப்பத்தில் சாப்பாடு ஆச்சு. உள்ளூர் மக்கள்தான்  கண்ணில் பட்டாங்க.  அறைக்குப்போய் கொஞ்ச நேரம் ஓய்வு.  புது ட்ரைவரையும்  வண்டியையும்   திருப்பி அனுப்பிட்டோம்.  காலையில் நடந்த களேபரம்  முடிஞ்சுருச்சு. நானே வந்துருவேன்னு சீனிவாசன் கூப்பிட்டுச் சொல்லி இருந்தார்.

மாலையில் அவர் வந்ததும் 'கண்டுபிடிச்சு' வச்சுருந்த கடைக்குப்போனோம்:-)

பிகு: அடுத்த பதிவு வரும்வரை அந்த மூன்று சொற்களை  பிடிச்ச மாதிரி மாற்றிப்போட்டு பிடிச்ச ராகத்துலே பாடிக்கிட்டே  இருக்கலாமா?   கடவுளைக் காண  ஈஸி ரூட் இதுதானாம்!!!





வூட்டாண்டை வந்துருச்சு இப்ப எல்லாமே!

$
0
0

எல்லாம் இந்த ரெண்டு வருசமாத்தான்.  நகர மையம் அழிஞ்சு போச்சு பாருங்க அப்போதிருந்துதான்.  ஊர் போயிருச்சுன்னு  மூலையிலே உக்காந்து அழுதுகிட்டே இருந்தா என்ன பயன்? நடக்கவேண்டியது நடந்தாகணுமே!

ஸேண்ட்டா க்ளாஸ் மக்களுக்கு கிறிஸ்மஸ் ஸ்ப்ரிட்டை ஊ(ற்ற)ட்ட  வழக்கமா பண்டிகைக்கு ஒரு மாசம் முந்தி வர்றதுண்டு. அதைப்பார்த்ததும்தான்  ஐயோ...பண்டிகை நெருங்கிருச்சே....இன்னும் வாங்க வேண்டியதை வாங்கலையேன்னு கடைகளுக்கு மக்கள் ஓடுவாங்க.  முக்கியமா பரிசுப்பொருட்கள்.  பரிசுப்பொருட்கள் வாங்கி, அழகா  கிறிஸ்மஸ் தீம் உள்ள  கிஃப்ட்பேப்பரில் பொதிஞ்சு கிறிஸ்மஸ் மரத்தடியில்  வச்சுடணும்.  மத்தபடி  நடுராத்திரியிலோ  இல்லை காலையிலோ சர்ச்சுக்குப்போய் சாமி கும்பிட வேண்டிய அவசியம் எல்லாம் இல்லையாக்கும் கேட்டோ!!!


 அலங்காரவண்டிகள் ஊர்வலம் நடக்கக் கட்டக்கடைசியில் ஸேண்ட்டா தன்னுடைய ரெயின்டீர் இழுக்கும் வண்டியில் வருவார்.  அநேகமா எல்லா வருசமும் ஒரேமாதிரி வண்டிகள்தான் ஊர்வலத்தில் வரும்.  அலங்காரங்களை எடுத்துப் பத்திரப்படுத்தி வச்சுக்குவாங்க. இதுக்குன்னே ஒரு ட்ரஸ்ட் உண்டு.  யாரு அதிகமா  டொனோஷன் கொடுக்கறாங்களோ அவுங்க பெயரைப் போட்டுக்குவாங்க. எல்லாம் ஒரு விளம்பரம்தான். இந்த வருசம் ஸ்மித் சிட்டிக்காரங்க.


சிட்டிக்கவுன்ஸிலுமொரு நல்ல தொகையை ட்ரஸ்ட்டுக்குக் கொடுக்குது.  உள்ளுர் பத்திரிகைகள்  பெரிய அளவில் விளம்பரம் கொடுத்து மக்களுக்கு  இன்ன தேதி, இந்த நேரம் என்று நினைவூட்டிக்கிட்டே இருப்பாங்க.  எந்த சாலையில் புறப்பட்டு  எந்த  சாலையில் ஊர்வலம் வரப்போகுது, எங்கே முடிவு, எத்தனை மணிக்குக் குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும், அணிவகுப்பு  நடக்குமுன் ரெடியா  வரிசை கட்டி நிற்கும் வண்டிகள் எந்தத் தெருவுக்கு எப்போ வந்து சேரணும் என்றெல்லாம் விவரமாப் போட்டுருவாங்க.அணிவகுப்பு வண்டிகள் நிற்கும் அந்தக் குறிப்பிட்டத் தெருவுக்குப் போக்குவரத்து அன்றைக்குக் காலை 8 மணி முதல் ரத்து. அங்கே வசிக்கும் மக்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.


 ஊர்வலம் ரெண்டு மணிக்குத் தொடக்கமுன்னா அது போகும் வழியில் போக்குவரத்து ஒரு மணி  நேரத்துக்குமுன்னேயே நிறுத்தப்படும்.  மக்கள் வந்து கூட நேரம் எடுக்குமில்லே?  பார்க்கிங் கிடைக்காம சைடு தெருக்களில் நிறுத்திட்டு குஞ்சு குளுவான்களையெல்லாம் இழுத்துக்கிட்டு வரணுமா இல்லையா?


நாங்களும் ஒரு ஒன்னரைக்குப்போய்ச் சேர்ந்தோம்.  சாலையின் ரெண்டு பக்கங்களிலும் மக்கள்  உக்கார்ந்துருந்தாங்க. எங்கூரில் தெருவிலே தைரியமாத் தரையில்  'உக்காரலாம்' :-))  இருக்கைகள் கொண்டு வந்த பாக்கியவான்கள்  இன்னும் மஜாவா இடம் பிடிச்சு இருந்தாங்க.  வீட்டுப்பின்பக்கத்தில்  வைக்கும்  அவுட்டோர் ஏரியா அம்பர்லாவைக்கூட ஒருத்தர் கொண்டு வந்துருந்தார்.  பெரிய குடும்பி!!!

எங்க கோடைகாலம் நேத்துதான் ( டிசம்பர் 1) ஆரம்பிச்சுருக்கு. இன்றைக்கு 25 டிகிரி வரப்போகுதுன்னதும்  முன் ஜாக்கிரதையாத்தானே இருக்கணும்! ஏன்னா....இங்கே  நிலவரம் இப்படி. ஏகப்பட்ட  (melanoma)ஸ்கின் கேன்ஸர். ஓஸோன் லேயரில் பெரிய பொத்தல் எங்க தலைக்கு மேலே இருக்காம்.

Slip, Slop, Slap  என்ற ஸ்லோக(ம்)ன் எங்கள் வேதம்.  Slip on a shirt, Slop on the 30+ sunscreen, Slap on a hat, Seek shade or shelter, Slide on some sunnies. - "Slip, Slop, Slap, Seek, Slide"   sunglasses இல்லாம வெளியே போகாதே!!!! கேன்ஸர் சொஸைட்டியின் எச்சரிக்கை!


ஒன்னரைவயசு அலெக்ஸ் நம்ம பக்கத்தில் இருந்தார்.  முழு வளர்ச்சி அடைந்த வர்தான். ஆனால் நம்ம கோகியைவிடச் சின்ன உருவம்!
காவல்துறை மகளிர் அணி முழுப்பொறுப்பும் எடுத்துக்கிச்சு.


வந்தார், ஆசனத்தில்  அமர்ந்தார் பார்த்தார்:-)


சரியா ரெண்டு மணிக்கு  ப்ராஸ் பேண்ட் இசை முழங்க பரேடு ஆரம்பிச்சு நம்ம பக்கம் வரும்போது ரெண்டு அஞ்சு.  மிஸஸ் ஸேண்ட்டா வீட்டு அடுக்களைக் கரடிகள்,  கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முதல்நாள் ராத்திரி எப்படி சிம்னி வழியா ஸேண்டா பரிசுப்பொருட்களைக்கொண்டு வந்து நல்ல பிள்ளைகளுக்குத் தர்றார்ன்னு (பசங்க இன்னுமா இதை நம்புது?????) சேதி  சொல்லும் காட்சிகளுடன் ஊர்வலம் நகருது.

நாட்டுக்கு ராணுவம் எவ்ளோ முக்கியமுன்னு  காமிக்க  எங்க ஊர்ப்பக்கம் இருக்கும் ராணுவமுகாம் வீரர்கள் ஊர்வலத்தில் முதல்முறையாக வந்தாங்க. நிலநடுக்கம் வந்தவுடனே அழிவில் இருந்து ஆட்களை மீட்க  அவசரநிலை அறிவிப்பு வந்தவுடன் ஆரம்பிச்ச இவுங்க வேலைகள் இன்னும் இங்கே முடியலை.  மிடுக்கோடு மிடுக்கா ரெண்டு சின்னப்பிள்ளைகளைத் தோளில் சுமந்து போனது எனக்குப் பிடிச்சுருந்துச்சு. நாளைய ராணுவ வீரர்கள்!!!

அடுத்து வந்தவங்களும் ஆபத்துதவிகளே. தீயணைக்கும் படை!  தீமட்டும் அணைக்காம  சாலைவிபத்துகளுக்கும் இவுங்க உதவி தேவைப்படுது.


உள்ளுர்  பாலே நடனப்பள்ளிகள்,  ம்யூஸிக் ஸ்கூல்ஸ் எல்லாம் இடைக்கிடைக்கு வந்துக்கிட்டே இருந்துச்சு.  குழந்தைகளுக்கு பரிச்சயமான தொலைக்காட்சி கேரக்டர்ஸ் ,மிஸ் பிக்கி, பனானா இன் பைஜாமாஸ், சூப்பர்மேன், த்ரீ லிட்டில் பிக்ஸ், பினொக்கியோ, பீட்டர் பேன்,  ஹாண்டட் ஹௌஸ் என்னும் பேய் வீடு, லைஃப் எஜுகேஷன் ட்ரஸ்ட் லோகோ ஒட்டகச்சிவிங்கி , உள்ளுர் விலங்கியல் பூங்காவான ஒரானா பார்க் வாசிகள் இப்படி.

Star wars  Return of the Jedi மவுசு இன்னும்தீரலை!

பிள்ளைகள் கைதட்டி ஆரவாரத்தோடு எல்லோரையும்  கவனிச்சுப்பெயர் சொல்லிக் கூப்பிடுதுங்க.

பெரியவங்களுக்கு இப்போதைய ஆர்வம்  சிமெண்ட் மிக்ஸ் வண்டிகளும் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி வண்டிகளும்தான்.  ஊரை திரும்பக்கட்டி எழுப்பும்  வேலை நடந்துக்கிட்டு இருக்கே!  சின்ன சின்ன பில்டிங் கம்பெனியெல்லாம் கூட இப்பச் செழிப்பா வளர்ந்துபோச்சு.  எலெக்ட்ரீஷியன்களுக்கும் ப்ளம்பர்களுக்கும்  பயங்கர டிமாண்ட்.  உலகின் பலநாடுகளில் இருந்து தாற்காலிகமா வந்து இங்கெ வேலை செய்யறாங்க.

jesus the great christmas present னு ஒரு அலங்கார வண்டி.
புது சர்ச் ஒன்னு ஆரம்பமாகி இருக்கு போல. இதுவரை  நான் பார்க்காத ஒன்னு. என்ன ஏதுன்னு விசாரிச்சால்..... இது(வும்)  இங்கிலாந்து சமாச்சாரம். 1990 கடைசியில்  அங்கே சில மக்களால் தொடங்கப்பட்டு பத்தே வருசத்தில் கடல்கடந்து வந்துருக்கு. இங்கே ஏற்கெனவே  பாரம்பரியமா இருந்து வரும் சர்ச்சுகளை  வேணாமுன்னு விலக்கி புதுசுபுதுசா  வெவேற பெயரில்  உருவாகிவரும்  சர்ச்சுகள்  உண்டு.

டெஸ்டினி சர்ச்சுன்னு ஒன்னு 1998 லே தொடங்கி நடந்துக்கிட்டு இருக்கு இந்த நாட்டில்.  (இதைப்பற்றிச் சொல்ல ஏராளமா இருக்குன்னாலும் இப்போ இங்கே வேணாம்.பின்னொருக்கில் கேட்டோ!)  கும்பிடுவது ஒரே சாமி. ஆனால் இதுலே ஆயிரத்தெட்டு பிரிவுகள். என்னமோ போங்க!
சுருக்கமாச் சொன்னா நம்மூர்  ஆஸ்ரமங்களும் மடங்களும் நினைவுக்கு வந்தாச் சரி.


இங்கிருக்கும் வெவ்வேற தேச மக்கள் அவுங்கவுங்க நாட்டுக்கொடிகளும் அலங்காரமுமா  ஊர்வலத்தில் போனாங்க. இந்தியமக்கள் மிஸ்ஸிங். ரெண்டே பேர் வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் இருந்தாங்கன்னு சொல்லிக்கலாம். பிலிப்பீனோஸ், கம்போடியன்ஸ்,ஜாப்பனீஸ், இந்தோநேஷியன்ஸ், ரஷ்யன்ஸ்னு  நல்லத்தான் இருந்துச்சு.  ஆனால் பெரிய அளவில்  கூட்டமாக் கலந்துக்கிட்டவங்க சீனர்கள்தான்.   வெவ்வேறு குழுவா விதவிதமான உடைகளிலும் விதவிதமான இசைக்கருவிகளோடும்  அலங்கார வண்டிகளும் கால் நடையுமாக(!)வும் பிரமாண்டமான சீனக்கொடி பிடிச்சுப்போனாங்க.   எங்கூர் மக்கள் தொகைக்கணக்கில் பார்த்தால் அடுத்த வருசம் பரேடில்  75% , அதுக்கடுத்தவருசம் 100%  இவுங்கதான் இடம்பிடிக்கப்போறாங்க கேட்டோ!

சீனத்து சின்னமேளம்!


சிகப்பும் மஞ்சளும் வெள்ளையுமா மூணு சிங்கங்கள் ஜல்ஜங் ஜல்ஜங்ன்னு கொட்டுமேளத்தோடு வண்டியிலே ஆடிக்கிட்டே போனதுகள். எனக்கு இந்த சிங்க ஆட்டம் ரொம்பப்பிடிக்கும்.  ரசித்தேன்.

ரெண்டு ட்ராகன்கள் வேற  வளைஞ்சும் நெளிஞ்சும் பறந்தும் ஆடுனதுகூட எனக்குப்பிடிச்சது.


சீனாவில் தடை செய்யப்பட்ட ஃபலூன் டாஃபா குழுவினர்   இங்கே இதுவரை காணாத அளவில் பெருகி இருக்காங்க. மேளதாளத்தோடு  படை திரண்டு போறாங்க!!!


எங்கூர்லே என்ன விசேஷமுன்னா, நம்ம ஹரே கிருஷ்ணா கோவில் தேரும் இந்த ஊர்வலத்தில் வரும். சின்மயானந்தா குழுவினரும் அட்டகாசமாப் புடவையெல்லாம் கட்டிக்கிட்டு வருவாங்க. இந்த வருசம் இவுங்களைக் காணோம். கோயிலே இடிஞ்சு விழுந்து இப்பத்தான் இடிபாடுகளை எடுத்துக்கிட்டு இருக்கும் நிலையில் ஊர்வலம் வான்னு கூப்பிட்டால் அநியாயம் இல்லையோ?

கம்போடியாக்குழுவினர் கொடியில்  அங்கோர்வாட் படம் போட்டுருந்துச்சு.  அழகான அலங்காரத்தோடு ஊர்வலத்தில்  வந்தாங்க.

சாலை முழுசையும் பொதுப் போக்குவரத்துக்கு மூடி வச்சுருக்காங்களே..... ஜாலியா நடு ரோட்டில் போகக்கூடாது?  இப்பவும் ஒழுங்கு குலையாம ஊர்வல வண்டிகள் எல்லாம் இடது பக்கம் நடுக்கோட்டைத் தொடாமல் போகுது பாருங்க.  எல்லாரையும் இந்தியாவில் கொண்டு போய்விடணும்.

நியூஸிலெண்ட் வின்டேஜ் மெஷினரி க்ளப், பழையகாலத்து சைக்கிள்கள் (பென்னி ஃபார்த்திங்)  எல்லாம் ரசிக்கும்படி இருந்தாலும்,   காவல்துறையின் கென்னல் க்ளப் (போலீஸ் டாக்ஸ்) அணிவகுப்பு சூப்பர். எல்லாம் சிங்க நாய்கள்! (அல்சேஷியன்ஸ்க்கு நம்மூட்டுச் செல்லப்பெயர்)



உள்ளூர் ரக்பி ஆட்டக்குழு 'க்ருஸேடர்ஸ் ' குதிரைகளோடு தோன்றியதும் பலத்தவரவேற்பு. முக்கியமான ஆட்டக்காரர்கள் எல்லாம் நடந்தே போய்  கையில் உள்ள ரக்பி பந்துகளை   குழந்தை ரசிகர்களுக்குப் போட்டுப்பிடிச்சு வேடிக்கை காட்டிக்கிட்டே போனது பிடிச்சிருந்துச்சு. நாட்டின் தேசிய விளையாட்டை விட்டுடமுடியுதா என்ன?


குதிரைன்னதும்  என்னோட ஃபேவரிட் குதிரை வகைகளான க்ளைட்ஸ்டேல் ஹார்ஸஸ் பூட்டிய  வண்டியை இழுத்துக்கிட்டுக் கம்பீர நடையில் போனதுகள்.  என்ன திடமான கால்கள்!! நல்ல கொண்டை போட்ட வால்!!!! சூப்பர்ம்மா:-)))

ஊர்மக்களை விட்டுக்கொடுக்காம  நம்ம டவுன் க்ரையர், நம்மூர் விஸர்ட்  எல்லாமும் பங்கெடுத்துக்கிட்டது  எங்க எல்லோருக்கும் மகிழ்ச்சியே! உள்ளுர் இன்ஷூரன்ஸ் கம்பெனி, ரேடியோ ஸ்டேஷன்ஸ், அந்தக்கால  அண்ட் இந்தக்கால ஆம்புலன்ஸ் வண்டிகள்,  செயிண்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் சர்வீஸில் பணிபுரியும் மக்கள், கேர்ள் கைட்ஸ், பாய்ஸ் ஸ்கௌட் ன்னு  நீண்டுகிட்டே போன ஊர்வலம் கடைசியா ஸேண்ட்டா வண்டியில் ஜிங்கிள் பெல்ஸ் பாடிக்கிட்டே  வந்து மக்களுக்கு  கை உயர்த்தி ஆசி வழங்குனதோடு முடிஞ்சது. சரியா ஒன்னேகால் மணி நேரம்.


சேண்ட்டா வண்டிக்குப்பின் போலீஸ் வண்டி அதுக்குப்பின் குப்பை அள்ளும் வண்டி  ஊர்வல விநியோகத்தில் பறந்து விழுந்த மிட்டாய்த்தாள்களையும், விளம்பரத்தாள்களையும் பெருக்கிப்பொறுக்கிப் போட்டுக்கிட்டே  போய் ஊர்வலம் முடிஞ்ச அஞ்சாவது நிமிசம்  சாலை எல்லாம் பளிச் பளிச்.


கடைசி காமணி நேரத்துலே என் கெமெரா பேட்டரி மண்டையைப் போட்டுருச்சு:( அதான் கோபால் கெமெரா இருக்குல்லேன்னு பார்த்தால்.... கார்ட் ஃபுல் ஆகிருச்சும்மான்றார்.


ரெண்டு பேரும் எடுத்த படங்களைஇங்கே ஒரு ஆல்பத்தில்போட்டு வச்சுருக்கேன். எடிட் பண்ணிக்கலை. ரெண்டு செட் கூடுதல்தான்.  எப்படியும் இன்னும் ஒரு வாரத்துலே உலகம் அழிஞ்சுறப் போகுதாம். அப்புறம் அம்மான்னா வருமா ஐயான்னா வருமா?  இப்பவே பார்த்து ரசிச்சுக்க வேண்டியதுதான்.

பொழைச்சுக்கிடந்தா எல்லோருக்கும் மெர்ரி க்றிஸ்மஸ்:-)))








ஒரு புதிர் பூ!!!!

$
0
0
இன்று பூவில் ஒரு புதிர்!






படத்தில் இருக்கும் பூ என்ன பூவோ??????

இனிமேல் வருசத்துக்கு மூணு.!!!

$
0
0


கண்ணைப்பறிக்கும் கொள்ளை அழகில் ஏகப்பட்ட வகைகள் குமிஞ்சு  நிக்கும்போது   எதை எடுக்கன்னு முடிவு செய்ய மக்கள்ஸ் படும்பாடு இருக்கே.... அப்பப்பா....  ஆனாலும் ஒரு சிலர்  கடுமையான பார்வையுடன், உதட்டைப்பிதுக்கி வேணாம் இது வேணாமுன்னு    அழகையெல்லாம் ஒதுக்கித்தள்ளும் போது , இவுங்களால் மட்டும் எப்படி முடியுதுன்னு எனக்கு வியப்புதான்.

இந்த வருசத்துக்கு  இந்த இனத்துலே புதுவரவாக  லவ்விங் மெமொரி, ப்ளூ ஸ்கை, ப்ராஸ்பெரோ  என்று வாங்கிவந்தோம். இதுலே இந்த ப்ராஸ்பெரோதான் போன பதிவின் புதிரில் வந்துச்சு:-)

பர்ப்பிள் கலரும்  க்ரிம்ஸன் கலரும் கலந்த ஒரு கலவையான நிறம்.  அடுக்குச் செம்பருத்திபோல அடர்த்தியான இதழ்கள். நுனி ஓரத்தில் நெளிநெளியா இருக்கு.  மொட்டாக இருக்கும்போது பார்த்தால் எல்லா நெளிகளும் ஒன்று சேர்ந்து  அழகோ அழகு! கரும்சிகப்பு நுனிகள் சட்னு பார்த்தால் என்னமோ காய்ஞ்சுபோன பூவோன்னு நினைக்க வைக்கும். வித்தியாசமா இருந்தாக்கா எனக்கு உடனே பிடிச்சுரும் அந்தக் கணக்கில்தான் இது வூட்டுக்கு வந்துருக்கு.


எங்கூர்லே  ஞாயித்துக்கிழமைகளில் சண்டே மார்கெட்டுன்னு ஒரு சந்தை கூடும்.  அங்கேதான்  ஒரு ரோசாச்செடி  விற்பனையாளர் வாரந்தவறாமக் கடை போட்டுருவார். அவர் ப்ரீடரா இருக்கச் சான்ஸே இல்லைன்னு நான் நினைக்கிறேன். ப்ரீடர்கிட்டே இருந்து வாங்கி விற்கறாருன்னு என் நினைப்பு.
பொதுவா இங்கே பூச்செடிகள் விற்கும் கார்டன் செண்டர்ஸ்களைவிட இங்கே ஒன்னு ரெண்டு டாலர் விலை மலிவு. முக்கியமா நமக்கு ச்சாய்ஸ் அதிகம்.  ஒரு  அம்பதறுபது வகைகள் இருக்கலாம். பொதுவா ரோஜாக்களில் நூத்துக்கு மேலே வகைகள் இருக்கு. எங்கூர்  தாவரவியல் பூங்காவிலேயே 104 வகை இருக்குன்னா பாருங்க.


அடிப்படை நிறங்கள்  ஏழுதான்னு சொன்னாலும்.....அதுலெ கலப்படம் பண்ணியே  நூத்திநாலு செஞ்சுட்டாங்க இல்லே!!!!  செடிகளை ஒன்னோடொன்னு  ஒட்டவச்சே புதுவகைகளை உருவாக்கி அதுகளுக்கு ஒரு பெயரும் கொடுத்து  அந்தப்பூக்களுக்கு  காப்புரிமை வாங்கிக்கிட்ட  பெரிய புகழ்பெற்ற  ப்ரீடர்களிலே  (இனவிருத்தியாளர்?)  டேவிட் ஆஸ்டின்  ஒருவர். இங்கிலாந்துக்காரர். 1928 இல்  இவர் ஜனனம். தன்னுடைய 37 வயசில் முதல் ரோஜாவை ரிலீஸ் செஞ்சுருக்கார்.  இவர் கண்டுபிடிச்ச (!) இந்த ப்ராஸ்பெரோவின் ஜனனம் 1982.  சுமார் நாற்பது இதழ்களுக்குக் கேரண்டீ! இங்கிலீஷ் ரோஸ்  ஷ்ரப் வகை.  ஷேக்ஸ்பியரின்  ஒரு நாடக (டெம்பஸ்ட்) கதாபாத்திரத்தின்  பெயரைத்தான் இதுக்கும் வச்சுருக்காராம். இவரது சேவையைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு கௌரவிச்சு இருக்கு.  கடந்த ரெண்டு வருசங்களா   "Great Rosarian of the World" என்ற பட்டமும் கிடைச்சுருக்கு.


  Blue Sky கண்டுபிடிச்சவர் ஜப்பான்காரர்.  இவர் பெயர் Seizo Suzuki. 1973யில் பிறந்த நீலவானத்துக்கு நல்ல அருமையான மணம் இருக்கு. லேவண்டர், க்ரே, கொஞ்சூண்டு பிங்க் நிறக்கலவை. ஒரு கோணத்தில் பார்த்தால் இதழ் நுனிகளில் லேசான நீலநிறம் உண்டு.


லவ்விங் மெமொரி பொறந்தது 1981 இல். வடக்கு ஜெர்மனியில் உள்ள  Kordes Roses International b.v. என்ற கம்பெனியின் தயாரிப்பு. 120 வருச அனுபவம் உள்ளவர்களாம். கென்யா, நெதர்லாந்துன்னு பல நாடுகளில் கிளைகள் வளர்ந்துள்ள வியாபாரம்.


நல்ல அழுத்தமான சிகப்பு நிறத்தில் மணம் உள்ள வகை இந்த லவ்விங் மெமொரி.  பூக்களும் பெரிய சைஸில் இருக்குதுகள். நிறைய நாட்களுக்கு  தொடர்ந்து  பூக்கும் வகை.


வெறும் ரோஜாக்குச்சிகளை அதில் வரப்போகும் பூவின் படத்தோடு  குறைந்த விலையில் குளிர்கால நடுவில் விக்கறாங்க இங்கே.  படத்தை நம்பி வாங்கலாமான்னு லேசா ஒரு தயக்கம். குச்சி பிழைக்கலைன்னா போட்ட காசு, கயா:( அதனால்  செடிகள்  ஒரு ரெண்டடி உசரம் வரை வளர்ந்து பூக்கத்தொடங்கியவுடன் கண்முன்னால் தெரியும் பூக்களைப்பார்த்து எது வாங்கலாம் எது நம்மிடம் ஏற்கெனவே இருக்குன்னு முடிவு செய்வது சுலபமுன்னு எனக்குத் தோணல்.


போன வருசம் வாங்குன மூணும் இந்தவருசம் நல்லாவே பூத்துக்குலுங்குது.

இது கோல்ட்  மெடல்

இது டான்ஸிங் பிங்க்


இது ஃபெல்லோஷிப்  1992 பிறந்தாள்.

சில வருசங்களுக்கு முன்னே   வேற இடங்களில் இருந்து  வாங்கி வச்சவைகளில் பிழைச்சுக்கிடப்பது,   பீச் கலர் ரோஸும்  சிகப்பு நிறமுள்ள ஒன்னும்தான். இந்த சிகப்புப்பூவிலும் இதழ்கள்  உட்புறம் மட்டுமே சிகப்பாகவும் இதழ்களின் பின்புறம்  வெள்ளி நிறத்திலும் உள்ளது.  இந்தவகைக்கு ரோனால்ட் ரீகன்  என்ற  பெயர்.  இந்த ரெண்டும்  ஒன்றுக்கொன்று அருகிலேயே இருக்கு. இந்த பீச் கலர் ரோஸுக்கு என்ன பெயர்ன்னு தெரிஞ்சதும்   ஆச்சரியம் வந்தது  உண்மை. நான்ஸி ரீகனாம்!!!!
ரோனால்ட் ரீகன்


நான்ஸி ரீகன்!


இந்த லேவண்டர் நிறமுள்ளதும்  கொஞ்சம் பழசுதான்.'Lagerfeld' என்று பெயர்.  சீஸன் ஆரம்பிச்சதும் ஒரே ஒருமுறை மட்டுமே பூக்கும்.  மூணு நாலு மொட்டு வந்து மலர்ந்துட்டால் அப்புறம் அப்படியே ச்சும்மாவே நிக்கும்:(

இந்த டபுள் டிலைட் மட்டுமே வீடு கட்டி குடிவந்த நாள்  நட்டுவச்சது.  பழைய வீட்டில் இருந்து  குச்சிகளை வெட்டிக் கொண்டுவந்து நட்டேன்.  அதுபாட்டுக்கு விடாமல் பூத்துக்குலுங்கும் ஒரு மூணு மாசத்துக்கு!

இந்த  ரோஸ் இண்டஸ்ட்ரீ  ரொம்பப்பெருசா விஸ்தாரமா இருக்கும்போல.  நூத்திநாலு வகைகளுக்கு ஆயிரத்தெட்டு பெயர்கள்.  ஒவ்வொரு ப்ரீடரும் வெவ்வேற பெயர் வச்சுருக்காங்க போல! எனக்கு இப்பதான் ரோஜாவில் கவனம் கூடி இருப்பதால்  மார்கெட்டுக்குப்போகும்போது தேடிப்பார்க்கணும்.

எல்லாத்துலேயும்  வந்தமாதிரி இதிலும் ஹைப்ரிட் வகைகள் ஏராளமா வந்துஇருக்கு.  ஹைப்ரிட் டீ ரோஸ் என்று இருக்கும் வகைகள் எல்லாமே  ஒரு ஒழுங்கு முறையோடு இருக்கு:-)))) வெரி பாப்புலர். பராமரிப்பு வேலைகளும் குறைவு என்பது முக்கிய காரணம்.


இனிமே வருசத்துக்கு மூணு என்ற வகையில் கட்டாயம் வாங்கணும்.  அதென்ன மூணு? மூணா வாங்கினா விலை மலிவு:-)))



அட! இவர் மார்கழியில் பிறந்தார்!!!!

$
0
0

மாதங்களில் நான்  மார்கழின்னு மஹாவிஷ்ணு தன்னுடைய  முத்திரை பதிச்சுக் கொண்டாட்டங்கள் நடந்து வரும் நேரம் அதே மார்கழியில்  ஒரு தெய்வக்குழந்தை பிறந்தது. ஆச்சு ரெண்டாயிரத்துச் சொச்சம் வருசங்கள்.  சரியான தேதியும் காலமும் இன்னும் 100%  ஒத்துவரலைன்னு  சிலபல சர்ச்சுகள் சொன்னாலும் அநேகமா  எல்லா மேற்கத்திய சர்ச்சுகளும் டிசம்பர் 25ன்னு  உறுதிப்படுத்திருச்சு. கிழக்கத்திய  கிறிஸ்தியன் சர்ச்சுகள்  ஜனவரி 6 ன்னு ஒரு பனிரெண்டு நாள் பிறப்பைத் தள்ளிப்போட்டு வச்சுருந்துச்சுன்னாலும் கடைசியில் அவுங்களும் டிசம்பர் 25க்கே  வந்து சேர்ந்துக்கிட்டாங்க. அதனாலெ என்ன?  அதுவும் மார்கழியில்தானே வருது பார்த்தீங்களா!



கிறைஸ்ட்சர்ச்சில் ஒரு கிறிஸ்துமஸ்.


கிறிஸ்மஸ் என்றால்  எப்படி உணர்கின்றீர்கள் என்று உள்ளூர் மக்களிடம் ஒரு  கருத்துக்கணிப்பு நடத்துனா  98 சதம் மக்கள் சொன்னது  ஹாலிடேஸ்!  உண்மைதான். எங்களுக்கு  இப்போ கோடை காலம்.  வராது வந்த மாமணியா சூரியன் காயும்போது   கிறிஸ்மஸ்  பண்டிகையை  ஒரு சாக்கா வச்சு  வெளிச்சத்தைக் கொண்டாடி மகிழ்வதுதான்  நிஜம்.  விடுமுறையை  வேணாமுன்னு சொல்வாருண்டோ? நடுக்கும் குளிரா என்ன கோவிலுக்குள் போய் அடைஞ்சுக்க:-))))




நம்ம கேரளா க்ளப்பில் கிறிஸ்மஸ் பார்ட்டி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களோடு  சனிக்கிழமை இரவு. அதற்கு ரெண்டு நாளுக்கு முன்னே  ராத்திரி பத்தரைக்குக் கேரளா க்ளப் பாய்ஸ், வீட்டு முற்றத்தில் வந்து  கேரல்ஸ் பாடினாங்க.  வேலை நாள் என்பதாலும்  நிறைய வீடுகளுக்குப்போய் பாடி வருவதாலும்  லேட்டாயிருச்சுன்னு சொன்னதை நானும் கணக்காக்கலை  கேட்டோ:-)


எட்டு, ஒன்பது  வருசங்களுக்கு முன்னே  ஆரம்பிச்ச  பரிபாடி,  அந்த வருசத்தோடு நின்னு போய் இப்போ மறுபடி ஆரம்பிச்சது வளரே நன்னாயி.


எங்கூர் பேரே கிறைஸ்ட்சர்ச் என்பதால் நிலநடுக்கத்துக்கு இந்த சர்ச் என்னும் சொல் ரொம்பவே பிடிச்சுப்போய் குலுக்கி எடுத்துருச்சு.  அதுக்காக  மூலையில் முடங்க முடியாது.  எங்கூர்  மக்கள்   எதற்குமே  கலங்கமாட்டாங்க.  இட் இஸ் நாட் எண்ட் ஆஃப் த வொர்ல்ட்   (It is not end of the world) என்பதே எங்கள் தாரகமந்த்ரம்.  அதனால் கிறிஸ்மஸை இந்தச் சர்ச்சுகளாவது  குறைஞ்சபட்சம் கொண்டாட வேணுமா இல்லையா?   இடிபாடுகளுக்கிடையில்  ஒரு கிறிஸ்மஸ் மரம் வச்சாலும் போதும். அப்படியே ஆகட்டுமுன்னு   ஆண்டவன்  ஆசீர்வதிச்சுட்டார்.

நாங்களும் கிறிஸ்மஸ் மரங்களைப் பார்க்கக் கிளம்பினோம். கண்ணில் பட்டவை யாவும் உங்களுக்கே!




இன்று மாலை 6 மணி முதல் கடைகண்ணிகள் எல்லாம் மூடியாச்சு. இனி நாளை கழிஞ்சு மற்றநாள் காலை 9 மணிக்குத்தான்  கடைத்திறப்பு.  அமைதியா இருக்கும் நகரத்தை ஒரு வலம் வந்தோம்.  விதவிதமான கிறிஸ்மஸ் மரங்கள்.  கண்டெய்னர் மாலில்  கண்டெய்னர்கள் மீதெல்லாம் மரங்கள் இடம்பிடிச்சு உக்கார்ந்துருக்கு.

மாலில் அழிவுக்குத் தப்பிப்பிழைச்ச கட்டிடமான பாலன்டைன்  ஸ்டோரில் மட்டும் வழக்கம்போல்  கிறிஸ்மஸ் அலங்காரங்கள் இருந்தன. எல்லாம் இயக்கம் உள்ள  அலங்காரங்கள். புதுசா வெளிப்புறச் சுவரில்  முழுசுமா கேன்வஸ் ப்ரிண்டிங் படங்கள், சூப்பர் போங்க!


ஃப்ரெண்ட்ஷிப் கார்னர்ன்னு ஒரு இடத்துக்குப்பெயர் இருக்குன்றதையே  இன்னிக்குத்தான் பார்த்தேன்.  இதுக்குத்தான்  தரையைப்பார்த்து நடக்கணுமுன்னு எங்க அம்மம்மா தலைதலையா அடிச்சுக்கிட்டாங்க.  மதிச்சுக் கேட்டுட்டாலும்...........



லேட்டிமர் சதுக்கத்துக்கத்துலே  கேரல்ஸ்  பை  கேண்டில் லைட்ஸ், கிறிஸ்மஸ் ஈவ்  ஸ்பெஷல் நடந்துக்கிட்டு இருக்கு.  லேசான மழை ஆரம்பிச்சதுன்னாலும் அசராம உக்கார்ந்து கேட்கும்  மக்கள் கூட்டம்! ( அஞ்சு பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்று கொள்க! )  ஆபத்து ஏற்பட்டால்  உடனடி உதவிக்கு ஆம்புலன்ஸ்  ஒன்னும் ரெடி.


ஆர்ச் பிஷப் விக்டோரியா  ஒத்தைக்காலில் நின்னு வீம்பு பிடிச்சுக் கட்டும் அட்டைக்கோவில் ஒரு பக்கம் வளர ஆரம்பிச்சுருக்கு.  கதீட்ரல் இடிப்பைத்   தாற்காலிகமா நிறுத்தி வச்சுருக்கு கோர்ட் என்றாலும்  விட்டேனா பார்ன்னு  ஸேவ் த கதீட்ரல் குழுவோடு (நானும் இதுலே இருக்கேன்) சண்டை! இப்ப  கிறிஸ்து  பிறப்பு சமாதானகாலம் Peace On Earth   enpathaal ரெண்டு வாரத்துக்கு   Truce :-)




வீட்டுக்குப் பக்கம் இருக்கும் சர்ச்சுலே  இப்படி ஒரு மரம். நாங்களும்  சிம்பாலிக்காச் சொல்வொம்லெ!

ஆனால்..... செயிண்ட் ஜேம்ஸ்லே  ஒன்னு வச்சுருக்காங்க பாருங்க.............  அழிவில்  இருந்து....

நல்ல கிரியேட்டிவிட்டி!  யாருடைய  ஐடியாவோ அவுங்களுக்கு இனிய பாராட்டுகள்.


பதிவுலக நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும்  மெர்ரி க்றிஸ்மஸ்



















ஆங்கிலப் புத்தாண்டு ..........2013

$
0
0

அன்பு நட்புகளுக்கு,

ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

மேட்டர் தேத்த சின்னப் பயணம் போகின்றேன்.

அதுவரை பார்க்க ஒரு படம் .



உன்னை நினைச்சுப் பாட்டுப் படிச்சேன் தங்கமே .....ஞானத்தங்கமே!!!!!

என்றும் அன்புடன்,
 துளசி.





தென் துருவம் நோக்கி.............

$
0
0
தென் துருவத்தை  நோக்கி ஒரு பயணம் போக வேணும் என்று எப்போதும் நினைத்திருக்கும்      எண்ணம் இப்படி  சட்னு  ஆரம்பிக்குமுன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை. வெள்ளிக்கிழமை மாலை ஒரு ஆறுமணி இருக்கும்போது,  இன்னும் ஒரு வாரம் கோபாலின் விடுமுறை பாக்கி இருக்கேன்னு.........  எங்கியாவது போகலாமா?  போலாமேன்னார்,  பொறியில் மாட்டப்போவதை அறியாமல்:-)

இன்வர்கார்கில் போகலாம். அப்படியே விண்ட்டன்,  ப்ளஃப், ஸ்டீவர்ட் தீவு . ஓக்கேதானே?  கூகுளில் பார்த்தால்  ஏழரை மணி நேர ட்ரைவ்.  அங்கங்கே ஓய்வெடுத்து, வேடிக்கை பார்த்துக்கிட்டே போனால்  எப்படியும்  பத்துமணி நேரம் ஆகும். வழியில் தெக்கப்போ ஏரி வருது, அதை ஒரு ரவுண்டு பார்க்காமல் போக  மனசு வராதே......

பேசாம விமானத்தில் போயிறலாமேன்னால்  அங்கே ஊர் சுத்த வண்டி?  ஒவ்வொரு விஷயமா  முடிவு செய்யலாம்  நின்னு நிதானமா யோசிக்க நேரமில்லை.  முதல்லே  எப்பப் போறோம்? எத்தனை நாள்? எங்கே தங்கல்?

விமான டிக்கெட் கிடைக்குமான்னு வலையில் பார்த்தால்  ஞாயிறு காலை  ஃப்ளைட் இருக்குனுச்சு.  திரும்பி வர ,  வியாழன் காலை.  இந்த வருசம் ரெண்டு நாள் அடுத்த வருசம் ரெண்டு நாள்! புது வருசத்தை வேற ஊரில் கொண்டாடினால் ஆச்சு.

வலையில் தேடினதில் அகப்பட்டது  க்வெஸ்ட் சர்வீஸ்டு அபார்ட்மெண்ட்.  மற்ற மோட்டல்கள் எல்லாம்  நிறைஞ்சு வழியுதாம். இப்போதானே நியூஸியின்  கோடை காலம். பயணிகள் உலகமெங்கிலும் இருந்து  வர்ற சமயமாச்சே!

சின்னதா ஒரு 1.3 இல்லை 1.6 வண்டி கிடைச்சால் போதுமுன்னு பார்த்தால்  அதுவும்  பிரபலமா இருக்கும் நிறுவனங்களில் கிடைக்கலை.  எல்லாமே ஃபுல்!  தேடு தேடுன்னு  வலைவீசுனதில் பெகாஸஸ் கம்பெனி கண்ணில் பட்டது.  விவரம் அனுப்பினால் ,  நீ கேட்கும் சைஸில் வண்டிகள் எல்லாம் ஏற்கெனவே வெளியில் போயிருச்சுன்னு பதில் வருது.  தொலைபேசினால்.....

கொஞ்சம் பெரிய வண்டி மிட்சுபிஷி இருக்கு, அது வேணுமுன்னா....  சரி. எடுத்துக்கறோம்.  தேவையை அனுசரிச்சு  ரேட் உயருது.  டபுள் டபுள்:(

ச்சலோ!

என்னுடைய மாணவி ஒருத்தர்  விண்ட்டனில் இருக்காங்க. கிறைஸ்ட்சர்ச்காரர்தான் என்றாலும் ஒரு ரெண்டு வருசம் இடமாறி இருக்காங்க, மகளுக்கு உதவியாக இருக்க. பேத்தியைப் பார்த்துக்க ஆள் இல்லை.  வர்றேன்னு தொலைபேசினேன்.  எத்தனை மணிக்கு லேண்டிங்ன்னு கேட்டதுக்கு  இன்வர்கார்கில் வந்துட்டு  போன் செய்யறேன்னு  சொன்னேன்.  என்ன... வந்த பிறகா? நாங்க உடனே கிளம்பினாலும் அரைமணி நேரம் ஆகுமே?

பரவாயில்லை. பெட்டிகளை அறையில் போட்டுட்டு நாங்களே ரெண்டல் காரில் கிளம்பி விண்டன் வர்றோம் என்றதும்......... என்னது  மோட்டலில் தங்கப்போறீங்களா?  இங்கே  நம்மவீட்டில் அறைகள் காலியாத்தானே இருக்கு .  தோழியின் குரலில் ஏமாற்றம்.  தமிழ் படிக்க என்னிடம் மாணவியாக  வந்து சேர்ந்து அப்புறம்  நெருங்கிய தோழியாக ஆனவர் இவர்.

 கொஞ்சம் சீக்கிரம் எழுந்திரிக்கணுமுன்னு  அலாரம்  வைக்கப்போனால்....  காப்பிக்கடை எல்லாம்  ஆரம்பிக்காம சட்னு குளிச்சுட்டுக் கிளம்பிடலாம். அங்கே லவுஞ்சில்  ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டால்  ஆச்சுன்னு கோபால் சொல்லிட்டார். மகானுபாவன். நல்லா இருக்கணும்:-)

உள்நாட்டு விமானப் பயணம் கடைசியா எப்போ போனேன்னு யோசிச்சேன்.  அது ஒரு  9 வருசத்துக்கு  முன்னே....    அதுக்கு  நம்ம கருவேப்பிலைச் செடி வயசு  இல்லையோ!

புதுசா மினுக்கி வச்சுருக்காங்க இந்த டெர்மினலை!   ஜிலோன்னு காலியாக்கிடக்கும்  கவுண்ட்டர்கள். நாமே பொட்டிகளையும் நம்மையும் செக்கின் பண்ணிக்கணும்.  அதுக்கு  எட்டெட்டு கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் வச்சு வட்ட வட்டமா மூணு  அமைப்பு. நாமே பேக்கேஜுக்கு  உண்டான  பட்டியை ஒட்டி   கன்வேயர் பெல்ட்டில்  எடுத்து வச்சால் ஆச்சு. பேருக்கு ஒரு உதவியாளர்  (நாம் சரியா நம்ம வேலையைச் செஞ்சோமான்னு பார்க்க) அங்கே தேமேன்னு நிக்கறாங்க. விமானத்தில் ஏறுமுன் அங்குள்ள ஸ்கேனரில் நாமே போர்டிங் பாஸைக் காமிச்சுட்டு  உள்ளே போய் உக்கார்ந்துக்கணும். நல்ல வேளை  நீயே ப்ளேனை ஓட்டிக்கிட்டுப் போன்னு சொல்லலை:-))))

பொட்டியை அனுப்பிட்டு போர்டிங் பாஸோடு  கோரு க்ளப் லவுஞ்சுக்குப் போனோம். அதுக்குப்போகும் முன்  செக்யூரிட்டி செக்  ஆச்சு.  தயிர் ம்யூஸ்லியும் கப்புச்சீனோவும் முடிச்சுக்கிட்டு  நம்ம கேட்  இருக்கும் பாதையில் போனால்..............  அது நம்மை வெளியே கொண்டு வந்து துப்பிருச்சு.  அப்ப செக்யூரிட்டி செக் எல்லாம் அம்பேலா?  யாரு வேணுமுன்னாலும் எதையும் எடுத்துக்கொண்டு போகலாம் போல இருக்கே! இது என்னாங்கடா பாதுகாப்பு?

நாட்டின் தென் கோடிக்குப் போற விமானம் எல்லாம் விமானதளத்தின்  ஒரு கோடியில்  இருக்கு.  அங்கே போய்ச் சேர்ந்தால் பென்சில் போல ஒரு நீண்ட சின்ன விமானம். காத்தாடி முள் போல ப்ரொப்பெல்லர்.  இது சுத்தி,  நம்மைக் கொண்டு போகப்போகுதான்னு ஒரு சம்சயம் !

ரெட்டை இருக்கைகளா ஒரு  18 வரிசை.  72 ஸீட். (எல்லாமே ஃபுல்!) நடுவில் நடைபாதை.  போலிப் புன்னகை  இல்லாத ரெண்டு பணிப்பெண்கள். காஃபி, டீ, தண்ணீர், பிஸ்கெட்(குக்கீஸ்) முட்டாய் கொடுப்பதோடு வேலை முடிஞ்சுருது.  அந்த முட்டாய்  சப்ளை வேலை கூட ப்ளைட்டில் வரும் எதாவது ஒரு பொடிசு கையில்  குட்டிக் கூடையோடு கொண்டு வந்து நீட்டும்போது  கூட நடந்தால் போதும்.

படிக்க வச்சுருந்த ஏர் நியூஸிலேண்ட் மேகஸின்  முழுசும் ஹாப்பிட் புராணம்தான்.  இன்னும் படம் பார்க்கலை.  .  போரடிக்குதேன்னு சும்மா க்ளிக்கிட்டு இருந்தேன்.  கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து டிமரு வரை ஏதோ ரூலர் வச்சுக் கோடு போட்டது போல  நிலத்தின் ஓரம் ஒரே நேர் கோடா இருக்கு!!

சரியா ஒரு மணி நேரப் பயணத்தில் இன்னும்  அரைமணி பாக்கி.  அதுவரை  நாம் போய் இறங்கும் ஊரைப்பற்றிப் பார்க்கலாமே.  இன்வர்கார்கில்,  நியூஸியின்  தெற்குப்பகுதியில் உள்ள கடைக்கோடி  நகரம். இந்தத் தென் பகுதியை சவுத்லேண்ட் ரீஜன் என்று சொல்றாங்க. வியாபார முக்கியத்துவம் உள்ள ஊர். ப்ரிட்டிஷ் அரசாங்கத்துக்கும்  நியூஸி பூமி புத்ரர்களான மவோரிகளுக்கும்  ஒப்பந்தம்  (வைட்டாங்கி ஒப்பந்தம்)  கையெழுத்தாகி அமுலுக்கு வந்தது 1840.  அதுக்குப்பிறகுதான்  மாகாணங்களைப்பிரிச்சு , அங்கங்கே முக்கிய வியாபாரத் தலங்களை  ஒன்னொன்னா உருவாக்கிக்கிட்டு இருந்துருக்காங்க.

நகரத்துக்கான இடம் தெரிவு செஞ்சபிறகு  அதைப்பார்வையிட   சீஃப் சர்வேயர்  ஜே டி.தாம்ஸன் (J.T.Thomson) வந்தார்.  சரியான இடமுன்னு  தோணலை(வாஸ்து சரி இல்லையோ என்னவோ!) ஊஹூமுன்னு தலையாட்டிட்டு அவர் தேடிக் கண்டு பிடிச்ச இடத்தில்தான் இப்போ ஊர் இருக்கு.  படகுத்துறை அமைக்க  ஏதுவா ஒரு இடம் வேண்டி  இருக்கே. வியாபாரம் எல்லாம் கப்பல் போக்குவரத்தை நம்பித்தானே கிடக்கு.

ஊருக்குப்பேரு வைக்க ரொம்ப சிரமப்படலை. ஊர் அமையப்போகும் இடம்  ரெண்டு நதிகளின் கூடல் இருக்கும் சங்கமம். இதுக்கு அவுங்க மொழியில்  'இன்வர்' என்று சொல்வாங்களாம். அப்போ ஒடாகோ (Otago) பகுதியில்  சூப்பரின்டெண்டடாக இருந்தவர் வில்லியம் கார்கில் William Cargill.  ரெண்டையும் சேர்த்து இன்வர்கார்கில் (Invercargill) என்று வச்சுருங்கன்னு  முன்மொழிந்தவர்  அந்தக் காலக்கட்டத்தில்  (1856) நியூஸி கவர்னராக இருந்த ஸர் தாமஸ்   கோர் ப்ரௌன். (Sir.Thomas Gore Browne)

என்ன  கவர்னரோ..... தன் பெயரை வச்சுக்காம  அந்தப்பகுதியில்  இருக்கும் முக்கிய அதிகாரி பெயரைப் போய் வச்சுருக்கார்!  இதே சவுத் லேண்ட் பகுதியில்  Gகோர் என்றொரு ஊர் இருக்கு. ஒருவேளை தன் பெயருக்கு ஒரு ஊர் போதுமுன்னு நினைச்சிருந்துருப்பார் போல:-)

நகரை வடிவமைக்க வேண்டிய பொறுப்பு நம்ம சீஃப்  சர்வேயருக்குத்தான்.  ஒரு சதுர மைல் பரப்பில்  நாலு பார்க்குகளோடு  நெடுக்கு, குறுக்குச் சாலைகளோடு  டிஸைன் செஞ்சார். முக்கிய வீதிகள் எல்லாம்  நல்ல அகலமா  131.232  அடிகள்.(40 மீட்டர்)  முக்கிய வீதிகள் மொத்தமே ரெண்டுதான் கேட்டோ:-)  ஆங்கில எல் வடிவத்துலே  நெடுக்கே ஒன்னு குறுக்கே ஒன்னு.  நெடுக்கே போறது டீ (Dee) தெரு. குறுக்கே போறது டே ( Tay) தெரு. இந்த டீ & டே ரெண்டுமே   ஸ்காட்லாந்தில் ஓடும் நதிகளின் (River Dee  &  River Tay) பெயர்கள்தான். (அதான் சொன்னேன்லெ பேருக்காக  ரொம்ப மெனெக்கெட மாட்டாங்கன்னு)

நாலு பார்க்குகளில் ஒன்னு  ரொம்பப்பெருசா இருக்கட்டுமுன்னு அதுக்கு ஒரு 200 ஏக்கர். மாட்சிமைதாங்கிய  மகாராணிக்கு  சமர்ப்பிக்கணுமுன்னு  முடிவு,அதனால் இதுக்கு குவீன்ஸ் பார்க்ன்னு நாமகரணம் ஆச்சு. (நாடே அவுங்க வசம்தான், இன்னும்! )

விமானம் நிலம் தொட்டது.  பொட்டியை வெளியே போய் எடுக்கணும். வெளியேன்னா உண்மைக்குமே வெளியே!!!!  கட்டிடத்தை விட்டு வெளியேறி கார்பார்க்குக்கு  வந்தால்  அங்கே  வாசல் வச்ச கூடத்துலே பொட்டிகள் வரும் பெல்ட்.  யார் வேணுமுன்னாலும் வந்து நாலு பொட்டிகளைத் தூக்கி வண்டியில் போட்டுக்கிட்டுப் போயிடலாம்!!!  இன்னும் இந்த நிலைக்கு மக்கள் வரலை என்பது நமக்கு மன சமாதானம்.





ரெண்டல் வண்டி கம்பெனி சொன்னதுபோல  கார் பார்க்கில் நின்னு அவுங்களுக்கு  மொபைல் ஃபோன் போட்டால் அங்கெனெதான் இருக்கேன்னு ஒருத்தர் வந்து கூட்டிக்கிட்டுப் போனார்.  மிட்சுபிஷி டயமண்ட் வேகன்.  பழைய்ய்ய்ய்ய மாடல். ரெண்டல் வண்டிக்கான மஞ்சள்  நம்பர் போர்ட் இல்லை.  (கார்க்காரரின்  சொந்த வண்டியாகத்தான்  இருக்கணும். நாலு நாளைக்குக் காசு வரட்டுமேன்னு  கொடுக்கறார்ன்னு தோணல் எனக்கு.  பின்னால் தாராளமா ரெட்டைக் கட்டில் போட இடம் இருக்கு. தெரிஞ்சுருந்தா, தனியா   அறை எடுத்திருக்க வேணாம்,இல்லை?)

எங்களைக் கூட்டிக்கிட்டு  அவருடைய  ஆஃபீஸுக்குப் போனார்.  ஃபார்மாலிட்டின்னு ஒன்னு இருக்கே!  கையெழுத்துப் போட்டதும் வண்டிச் சாவியைக் கொடுத்து  உங்க தங்குமிடம்  எதிர்வாடையில்  வலப்பக்கம் ஒரு நிமிஷ ட்ரைவில் இருக்கு. திரும்பி ஊருக்குப் போகும்போது  போன் பண்ணுங்க. நான்  இங்கே ஆஃபீஸுக்கு வந்துருவேன்.  உங்களைக்கொண்டு போய் ஏர்ப்போர்ட்டில் விட்டுடறேன்னார்.

டீ தெருவும்  டே தெருவும் சந்திக்கும்  மூலையில்  டீ தெருவில் இருக்கு நாம் தங்கப்போகும்  க்வெஸ்ட் சர்வீஸ்ட் அபார்ட்மெண்ட்.  இந்த மூலைக்கு பேங்க் கார்னர் என்று பெயர்.

சரி வாங்க அறைக்குப்போய்  சாமான்களை வச்சுட்டு தோழி வீட்டுக்கு போகலாம்.

தொடரும்..........:-)






















பேட்மேனுடன் ஒரு சந்திப்பு.

$
0
0

அவனை சின்னக்குழந்தையா  போட்டோவில்தான் பார்த்திருந்தேன்.  அதே நினைப்புடன் இவனை சந்திக்கப்போனபோது........... அடேயப்பா.... என்னமா வளர்ந்துட்டான்!!!!! இவனா இவனான்னு  கேட்டு திகைச்சு நின்னதைப்பார்த்து  சுநிதாவுக்கு சிரிப்பு தாங்கலை:-)


க்வெஸ்ட்டில்  நுழைஞ்சதும் வரவேற்புப் பெண்மணி  செக்கின் டைம் பகல் 2 மணிக்குன்னதும்  ஐயோன்னு கூவிட்டேன்(போல). ஆனால் உங்களுக்கு  ஒதுக்கப்பட்ட அறையில் நேற்று யாரும் கெஸ்ட் இல்லாததால் தயாராகவே இருக்குன்னு சாவியைக் கொடுத்து மனசில் பால் வார்த்தாங்க.  வேலை நேரம் முடிஞ்சபிறகு அபார்ட்மெண்ட் உள்ளே வர தனியா ஒரு  பார்கோடு போட்ட அட்டைத்துண்டு வேற.  கெஸ்ட்டுக்கான க்வெஸ்ட்டு பார்க்கிங், கட்டிடத்தின்  வலப்புறம் தனியா இருக்கு. அதுக்கு ஒரு மாதிரி பின் தெரு வழியாச் சுத்திக்கிட்டுப் போகணுமாம்.

கார் பார்க்  கண்ணை நோவடிக்காமல் இருக்க தெருப்பார்த்த அலங்காரம்.


முதல் மாடியில் அறை.  என்ன வ்யூன்னு ஜன்னல் திரைச்சீலையைத் தள்ளினதும்  கட்டிடத்தின் பின்பகுதியின்  மெட்டல்கூரை கண்ணில்பட்டது:(  அறை என்னமோ நல்ல வசதியாத்தான் இருக்கு.  மைக்ரோவேவ்,  டோஸ்டர், எலெக்ட்ரிக் கெட்டில்,  சின்னதா ஒரு ஃப்ரிட்ஜ், சின்ன பாட்டில் பால், காஃபி, டீ போட்டுக்க பொடிகள், சக்கரை,  ஒரு குக்கீ, சமைக்க எலெக்ட்ரிக் ஃப்ரைபேன், கொஞ்சம் பாத்திரங்கள்,  வெவ்வேற  பயனுக்கு நாலைஞ்சு கத்திகள், கட்லெரி, தட்டு  டம்ப்ளர்ஸ்,  கப்புகள்,  கிண்ணங்கள் இப்படிச் சாமான்கள். ஸிங், அதுக்கடியில் உள்ள கப்போர்டில்  சுத்தம் செய்ய க்ளீனிங் ஸ்டஃப்ஸ், கிச்சன் டவல்,  ஃபுட் ராப், காய்கறி வெட்டிக்க பலகை இப்படி சகலமும் அடங்கிய கிச்சனெட்.   டிவி, டிவிடி ப்ளேயர் இப்படி பொழுதுபோக்கும் சாதனங்கள். நாட் பேட்.  அஞ்சு நட்சத்திர  அந்தஸ்த்துன்னு  சொல்லிக்கறாங்க.


எனக்கு என்ன ஆச்சரியமுன்னா  இத்துனூண்டு கப்போர்டில்  சமைக்கத் தேவையான சகலமும் அடங்கிரும்போது  நம்ம வீட்டு 16 சதுர மீட்டர் கிச்சன் ஏன் பத்தமாட்டேங்குது?


தொலைபேசி கூப்பிட்டது. கீழே வரவேற்பில் இருந்துதான். எல்லாம் வசதியா இருக்கான்னு கேட்டாங்க. எல்லாம் இருக்கு ஒன்னு மட்டும் இல்லைன்னேன்.  வியூ !! தெருப்பக்கம்  இருக்கும் அறை வேணுமுன்னா இருக்கு. பகல் 2 மணிக்கு மாத்தித் தரவா?  தெருவில் போக்குவரத்துச் சத்தம் கொஞ்சம் இருக்கும் பரவாயில்லையான்னதும்   வேணவே வேணாம். அமைதியான  அறைதான் வேணுமுன்னுட்டார் கோபால்.  நான் கூடவே இருக்கேன்  தொணப்ப என்பதை  மறந்துட்டார் போல:-)


இந்தப்பக்கங்களில் பாருங்க..... எந்த ஊருக்குப் போனாலும் அதைப்பற்றிய விவரங்கள், அக்கம்பக்கம் பார்க்க வேண்டிய இடங்கள், ஊரோட  வரைபடம், சரித்திர முக்கியத்வம் உள்ள இடங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள்  இப்படிச் சுற்றுலாப்பயணிகளுக்கான தகவல்கள் கொட்டிக்கிடக்கு. இன்ஃபர்மெஷன் இஸ் வெல்த் என்பதை நல்லாவே புரிஞ்சு வச்சுருக்காங்க. எல்லா மோட்டல்/ஹொட்டேல்களிலும்  முக்கிய சாலையின் நடைபாதைகளிலும், தகவல் மையங்களிலும்   வண்ணப்படங்களுடன் அச்சுப்போட்டு  வச்சுடறாங்க.  நம்ம இந்தியாவில் இதெல்லாம்  கொஞ்சம்  காப்பியடிக்கக் கூடாதான்ற ஏக்கம்தான்.


டீ தெருவும் டே தெருவும் நல்ல அலங்காரங்களுடன் நடந்து முடிஞ்ச கிறிஸ்மஸ் விழாவை அடுத்துப் புதுவருசத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கு. பேங்க் ஆஃப் நியூ சவுத்வேல்ஸ் கட்டிடம்  நமக்கு எதிர்ப்புற மூலையில். பேங்க் கார்னரின் விளக்கம் புரிஞ்சது. 1856 ஆண்டு முதல்  வங்கி வேலை செஞ்சுக்கிட்டு இருக்கு.

  ரெண்டு தெருக்களும் சேரும் முனையில்  ஒரு  ரவுண்ட்  அபௌட்டும் நடுவில்  மணிக்கூண்டும் அதன்மேல் நிற்கும் வீரரும்.  ட்ரூப்பர்ஸ் மெமோரியல். சவுத் ஆஃப்ரிகன் போயெர் வார் நடந்தபோது அதில் கலந்து  சண்டை போட்டு வீரமரணம் அடைந்தவர்களின் நினைவுக்காகவும், உயிருடன் திரும்பி வந்த வீரர்களை மரியாதை செய்யவும் வச்ச 28 அடி உயர நினைவுச்சின்னம்.

ரெண்டு முறை இந்த போயெர் வார் நடந்துச்சுன்னாலும் (1880 - 1881  &  1899 - 1902 ) ரெண்டாவது போரில்தான் பிரிட்டிஷ் காலனி நாடுகள் கலந்து சண்டைக்குப் போனாங்க.

1903 வது ஆண்டு நினைவுச் சின்னம் வேணும் என்ற கோரிக்கையை  போரில் மரித்தவர்களின் குடும்பம் வச்சது.  செஞ்சுருவொம்னு  ஏற்பாடுகள் நடந்துச்சு.  வேலை முடிய வருசம் அஞ்சாச்சு. ஜூன் மாசம் 3 ஆம் தேதி  1908 இல்  இங்கே கால்பந்து விளையாட்டுப்போட்டியில்  பங்கெடுக்க வந்த ப்ரிட்டிஷ் ஃபுட்பால் டீம் முன்னிலையில் ஊர்மக்கள் அனைவரும் கூடி  திறப்புவிழாவை நடத்துனாங்க. மதர்லேண்டு பிரதிநிதிகள்ன்னு அந்த டீமுக்கு ஏகப்பட்ட மரியாதை!

ஆரம்பத்தில்  இங்கே கடிகாரம் இல்லை. குடிதண்ணீர்  நீரூற்று அமைப்பு மட்டும் வச்சுருந்தாங்க. மக்கள் தண்ணீர் குடிக்கத் தலை குனியும்போது போரைப்பற்றிய விவரங்கள், இறந்தவர்களின் பெயர்கள் எல்லாம்  அவர்கள் கண் பார்வையில் படும்படி ஒரு ஏற்பாடு.   பட்ஜெட் 800 பவுண்ட். ஆனால்  எந்தக்காலத்தில்தான் பட்ஜெட்படி வேலை நடக்குது? கடைசியில் 2000 பவுண்ட் ஆனது.  இதில்  வீரர் சிலையை தூக்கி வைக்கும்போது தவறி விழுந்து சிலை உடைஞ்சு போய் மீண்டும் ஒரு  புதிய சிலையை வடிக்கும்படி ஆனதும் சேர்த்தி.  பலவருசங்கள் கழிச்சு (1986)தான் கடிகாரம் பொருத்துனாங்க.


இது இல்லாம இன்னொரு வார் மெமோரியலும் இருக்கு இங்கே. இது உலகப்போர்களில் கலந்து வீரமரணம் எய்தியவர்களுக்காக.  இந்தப் பக்கங்களில்  சின்ன ஊரோ பெரிய ஊரோ  அந்த ஊர் மக்களில்  ஒரே ஒருவர் போரில் வீரமரணம் அடைஞ்சு இருந்தால் கூட  ஒரு போர் நினைவுச் சின்னம்  சின்ன அளவிலாவது நிறுவி, பின் வரும் தலைமுறைக்கு  அவர்கள் தியாகத்தை நினைவுபடுத்தறாங்க. இது பாராட்டப்பட வேண்டிய அம்சம்.


நம்ம தங்குமிடத்தையொட்டி  திறந்த வெளியில் ஒரு சின்னச்சதுக்கம் . இதுக்கு  Wachner Place என்று பெயர்.  நகர சபையைச் சேர்ந்தது.  சதுக்கத்தின் ஒரு பக்கம் பஸ்  நிலையம்.  பொதுமக்களுக்கான ஓய்வறைகள், குளிக்கும் வசதியுடன்  இதுக்குள்ளே அமைச்சுருக்காங்க.  சதுக்கத்தில்  ஒரு மணிக்கூண்டு  இருக்கு. கடிகாரத்தின் பாகங்கள் எல்லாம்  நாம் பார்க்கும்படி கண்ணாடி அமைப்பின் உள்ளே. ஒவ்வொரு கால் மணிக்கும் டிங்டாங்  ஒலி எழுப்புது இது.  மணி கூண்டுக்கு நேரெதிரா போகும் தெரு (ESK Street)  சதுக்கத்துக்குள் நுழையுமிடத்தில்  நாலு பக்கமும் பிரமாண்டமான தூண்கள் வேற!


தோழி வீடு இருக்கும் விண்ட்டனுக்கு  டீதெருவில்  நேராப்போய்க்கிட்டே இருக்கணும். அரைமணி ஆனதும் ஊர் வந்துரும். வரைபடம் கையில் இருந்தால் தொலைஞ்சு போக சான்ஸே இல்லை:-) தோழியும் கணவரும் எதிர்பார்த்துக் காத்துருந்தாங்க.  அஞ்சு மாசமாச்சு அவுங்க இங்கே வந்து. இந்த ஊர்  ரொம்பச் சின்னதுதான். மக்கள் தொகை 2000. எல்லாரையும் எல்லாருக்கும் தெரியும்:-)   தெருவில் அங்கங்கே  க்ரெஸெண்ட்  ( பிறை நிலா?) அமைப்பில் உள்தெருக்கள். எல்லாமே ஒருவழிப்பாதை.  அதனால் எல்லார் வீட்டுக்கு முன்னாலும்  தெருவைத்தாண்டுனா பொதுவா ஒரு அரைவட்டத் தோட்டம். ஏதோ பார்க்குலே இருக்கும் உணர்வு. இந்த ஊருக்குக்கூட  சரித்திர பாரம்பரியம்  விவரங்கள் அடங்கிய  ஒரு  ப்ரோஷர் போட்டு வச்சுருக்காங்கன்னா பாருங்க!  ஹெரிட்டேஜ் ட்ரெய்ல்.




தோழியின் மகள் குடும்பமும் வந்து பகல் சாப்பாட்டில் எங்களோடு கலந்துக்கிட்டாங்க. டிஸ்ஸர்ட்க்கு  ச்சீஸ் கேக் . அட்டகாசம்!  இன்னும் நாலு நாளில்  ரெண்டாவது  பொறந்தநாள் கொண்டாடப்போகும் குழந்தை நிஷா எங்களோடு ஒட்டிக்கிச்சு.  நாய்ப்படங்கள் உள்ள புத்தகம் காமிச்சு நாயோட வகைகள் எல்லாம் சொல்றாள்.  அப்பாவும் அம்மாவும் வெட்ஸ்.பின்னே ஏன் சொல்லாது:-))))

 பக்கத்துலே வெட்னரி  க்ளினிக் ஒன்னு,  இன்னும் மூணு வெட்னரி ஃப்ரெண்ட்ஸுடன் சேர்ந்து சொந்தமா நடத்துறாங்க. ஒரே பேட்ச்சில் படிச்சவுங்க.  தோழியின் மகள் மாடு ஸ்பெஷலிஸ்ட்.  இப்போ ஆடுகளின் பிரசவக்காலம் முடிஞ்சு மாடுகளின் பிரசவம் ஆரம்பிக்குதாம்.  இது சம்பந்தமான வேலைக்கு காலை 3 மணிக்குப் பண்ணைகளுக்குப்போய்  பசுக்களுக்கு ஸ்கேன் எடுக்கணுமாம். நாலரைக்குள்ளே முடிஞ்சால்தான் அஞ்சு மணிக்கு பசுக்கள் பால் கறக்க போக சரியா இருக்குமாம்.  அஞ்சரைக்கு பால் வண்டி (டேங்கர்) வந்துருமே.  'ஆ..'ன்னு பிளந்த வாயோடு எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு  இருந்தேன்.  இந்தப் பொண்ணு  எனக்கும் மகள் தான்.  இவுங்க கல்யாணம் பற்றிக்கூட முந்தி ஒருக்கா எழுதி இருக்கேன்.  வேணுமுன்னா சுட்டியை க்ளிக்குங்க:-)))

தோழி மகள் பெரிய குடும்பி.  குழந்தை நிஷா உட்பட  மொத்தம் 17 பேர் வீட்டுலே! தோழியும் கணவரும் இதில் சேர்த்தி இல்லை. அவுங்க தனியா வீடெடுத்து வசிக்கிறாங்க. மற்ற குடும்ப அங்கத்தினர்களைப் பார்க்கணும் எனக்கு. எல்லோரும் கிளம்பிப் போனோம்.  நாம் திரும்பி  இன்வர்கார்கில் போகும் வழியில்  கிளை பிரியும்  தார் ரோடில்  கொஞ்சம் உள்ளே போகணும். இங்கொன்னும் அங்கொன்னுமா  பெரிய காலி இடங்கள், பண்ணைகள். நடுவில்  வீடுகள்.


வண்டியை விட்டு இறங்குனதும்  மிகாவும் வொம்பிளும் ஓடிவந்து மோந்து பார்த்து வாலாட்டினாங்க.  மிகாவை எனக்கு ஏற்கெனவே தெரியும்.  மிலி மட்டும் சின்னக்கால்களால்  வீட்டு வாசக்கதவுவரை  வந்து எட்டிப்பார்த்தது. இவளை எனக்கு ரொம்ப வருசமாவே நல்லாத் தெரியும். மகள் வேறெங்காவது பயணம் போகும்போது  இவளை நம்மூரில் தோழி வீட்டில்  விட்டுட்டுப்போறது வழக்கம்.


கோக்கோ கிட்டே வந்து பார்த்துட்டு தன்னுடைய பீடத்தில் ஏறி உக்காந்துக்கிட்டது. பிர்மன் வகை. கவர்ச்சியான நீலக்கண்கள். வீட்டில் வச்சுருந்த கிறிஸ்மஸ் அலங்காரங்களை  யாரும் ஒன்னும் உபத்திரவிக்கலை!!!! மதியம் முதல் மழையும் குளிரும்தான் சல்லியம். இந்த வாரம் முழுக்க மழைதானாம்.  தெரியாம வந்து மாட்டிக்கிட்டோம். வெய்யில் இருந்தால் லீவு இல்லை.லீவு இருக்கும்போது வெய்யில் இல்லை:(

வீட்டுக்குள்ளே இவுங்க ஏழுபேர். வெளியில்   மற்ற 10 பேர்கள்.  ஹெய்டன்(மருமகன்)  ரொம்ப ஜாலியானவர்.  வேட்டையாடுதல் பொழுது போக்கு. கோபால்  ஷூட்டிங் சமாச்சாரங்கள் எல்லாம்  ஆர்வமாக் கேட்டுக்கிட்டார்.  இவுங்க பேச்சில் மிலி மட்டும் ஓசைப்படாமவந்து கோபாலின் மடியில் சாய்ஞ்சு உக்கார்ந்து ஒரு தூக்கம் போட்டது.  இவரும்  பாண்டு வில்லன் பூனையைத் தடவித்தருவதுபோல்  தலையை நீவிக்கிட்டே (மிலியின் தலையை!)  பேச்சு சுவாரசியத்தில் இருந்தார்.   முகம்  ஒருவித நிறைவை(கோபாலின் முகம்!) காமிச்சது.  பேசாம ஒரு நாக்குட்டி வாங்கிக்க அடிபோடணும்.




ஓனரைச் சட்டைசெய்யாம என்னமோ இவருடைய  நாய் என்பது போல ஒட்டிக்கிச்சு பாருங்க! 


மழை விடாது போல் இருக்கு.  நேரமாகுதுன்னு ஹெய்டனின்  மழைக்கோட்டு போட்டுக்கிட்டு  வீட்டுப்பின்புறம் யார்டுக்குப் போனோம். வொம்பிள் (ஹௌண்ட் இனம்) மாத்திரம் கூடவே வந்தான்.  மத்ததுங்க எல்லாம்  மழைக்கு பயந்து வீட்டுக்குள்ளே. சரியான பயந்தாகொள்ளிகள்.


சுநிதா (தோழியின் மகள்)வைப் பார்த்ததும் பேட் மேன் ஓடி வந்தான். யாக் வகையும்  மாடும் சேர்ந்து செய்த கலவை!  கூடவே ஒரு ஆடும் ஒரு புள்ளி மானும். அடுத்த  பக்கம் ஒரு பெரிய  வராகமும். இன்னொரு பேடக்கில்  சுநிதாவின் குதிரையும்.  இவுங்களுக்கெல்லாம் ஹை அண்ட் பை சொல்லிட்டு அடுத்த பகுதிக்குப் போனோம்.

இங்கே 3 பேர். இதுலே ஒருத்தர்  நிறைய போட்டிகளில் கலந்து பரிசுகள் வாங்கி முதலிடத்தில் இருக்கார். சின்னக் குதிரைகள்  Pony வகை.  பக்கத்து கூண்டில்  கோழிகள் இருந்தன.  மொத்தக்கூட்டமும் செல்லப்பிராணிகளே!




மிகாவின் சோஃபா:-)


மழைக்கு சூடா ஒரு டீ குடிச்சுட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம்.

கொஞ்சநேர ஓய்வுக்குப்பின் கிளம்பிப்போய் மறுநாளைக்கு  ப்ரேக்ஃபாஸ்ட்க்கானவைகளை சூப்பர் மார்கெட்டில் வாங்கிக்கிட்டு ( இட்லி தோசைக்கு அரைக்கலாமுன்னா ஒரு ஆட்டுக்கல்லை , நம்ம  அறையிலே வைக்கலை பாருங்க.....) அப்படியே ராச்சாப்பாட்டுக்கு  ஒரு ஹெல் பீட்ஸா.


இப்போ நியூஸியின்  கோடைகாலமானதால் ராத்திரி பத்தரை வரை  ட்வைலைட் வெளிச்சம் இருக்கும் என்றாலும் இந்த மழை வந்து எல்லாத்தையும் மப்பாக்கி வச்சுருக்கு. நல்லவேளை படுக்கையில் எலெக்ட்ரிக் ப்ளாங்கெட்  இருப்பதால்  நிம்மதியா  தூங்கலாம்.  ரூம் ஹீட்டர்ஸும் ஓடிக்கிட்டுத்தான் இருக்கு.

குட்நைட்.


தொடரும்.............:-)





இதுக்குமேலே வண்டி ஓடாது......

$
0
0
தேசிய நெடுஞ்சாலை  எண் ஒன்று.  இன்றைக்குப்  பயணம் இதில்தான், தென் திசை நோக்கி. சரியா 30 கிலோ மீட்டர்.  அறையைவிட்டுக்  கிளம்புனதும்    ஒரு கிலோ மீட்டரில் இருக்கும் 'மேரி'யம்மன் கோவிலுக்குப்போயிட்டுப் போகலாமுன்னு  போனால் கோவில்  கதவு சாத்திக்கிடக்கு.  படிக்கட்டுவரை போய் கதவைத் தள்ளிப் பார்க்கலாமான்னா  ஒரே மழை.  காருக்குள்  இருந்தே கும்பிடு ஒன்னு போட்டுட்டு ரெண்டு க்ளிக்கிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம்.


 கடலை ஒட்டிய சாலைதான். வளைவுகளில்  இடம் வலமுன்னு கடல்கண்ணில் பட்டுக்கிட்டே இருக்கு.  நல்லநாளிலேயே நாழிப்பால். இப்போ கனத்த  மழை வேற. சாலை ஜிலோன்னு கிடக்கு. எப்பவாவது ஒரு வண்டி நானும் வரேன்னு தலைவிளக்கைப் போட்டுக்கிட்டுக் கடந்து போகும்.


ஊர் எல்லையில் வரவேற்பு போர்டு.  ப்ளஃப் அடிக்காமச் சொல்றேன் ஊர் பேரே ப்ளஃப்தான். இடப்பக்கம் பிரியும்  ரோடு நம்மை துறைமுகத்தில் கொண்டு தள்ளிருது. சௌத் போர்ட்.  சின்ன, பெரிய கப்பல்கள் ரெண்டு மூணு, ஏராளமான படகுகள்,  காற்றின் ஒலியோடு போட்டிப்போடும் கடலலைகள் ஓசை.






கடல்மியூஸியம் ஒன்னு இருக்கு.  10 மணிக்குத்தான் திறப்பாங்களாம்.  35 நிமிசம் இருக்கு. அதுவரை  தேவுடு காக்கணுமா என்ன?  கொஞ்ச தூரத்தில்  Stewart Island  Experience Ferry Terminal இருந்துச்சு. உள்ளே நுழைஞ்சு விவரம் கேட்டுக்கிட்டோம்.  ஒம்பதரைப்படகு  கிளம்ப ரெடி. ஓடிப்போய் ஏறலாமா?  ஊஹூம். நடக்காத காரியம். குறைஞ்சது 20 நிமிசம் முன்னாலே வந்து செக்கின் செய்யணுமுன்னு விதி.  எட்டிப்பார்த்தேன். படகு  சொன்ன நேரத்துக்கு  டாண்ணு புறப்பட்டுப்போகுது!


இன்வர்கார்கிலில் இருந்து  ஆறு பேர் பயணிக்கும் சின்ன விமான சர்வீஸ் ஒன்னு இருக்கு. குறைஞ்சபட்சம் 2 பேர் இருந்தால்தான் வண்டியை வெளியே எடுப்பாங்க.  அதுலே போகலாமான்னு   ஒரு நினைப்பு . ஆனால் இப்படி மழை அடிக்கும்போது நாங்க ரெண்டு டிக்கெட்ஸ் இருந்தாலுமே கேன்ஸலாக வாய்ப்பு உண்டு. பேசாம ஃபெர்ரியே   எடுக்கலாம்.  என்னுடைய ஸீ சிக்னெஸுக்கு  முன் ஜாக்கிரதையா மாத்திரைகள் எல்லாம் பயணத்துக்கு வாங்கி வச்சுருக்கேன்.  அது அறையிலே இருக்கு.  பேசாம நாளைக்கு பதிவு செஞ்சுக்கலாம்.  வருசம் முழுசும் காலை 8 மணிக்கு ஒரு போட்  இருக்குன்னாலும் இப்ப கோடைகாலம்(???!!!) என்பதால் இந்த 9.30 எக்ஸ்ட்ரா  போட்.   எட்டுமணி வேணாமுன்னு கோபால் சொன்னார்.  நானும் சரின்னேன்!!!!  மறுநாளைக்கு டிக்கெட் எடுத்தாச்சு.


சரி, வாங்க கன்யாகுமரி  போகலாமுன்னு தொணப்பி மீண்டும்  ஹைவே 1 இல் வந்து சேர்ந்துக்கிட்டோம்.  இதுலேயே போங்கன்னு சொன்னதோடு இங்கே  ஒரு கோவில் இருந்தால் எவ்ளோ நல்லா இருக்குமுன்னு  சொல்லி வாய் மூடலை.......  சின்னதா கும்மாச்சிக் கோபுரம் கண்ணில் பட்டது!!!  நியூஸியின் கன்யாகுமரி. இன்னும் கொஞ்சதூரம் போனால்.... கோபுரத்துக்குக் கீழே  சின்னதா ஒரு  அறுகோணக் கட்டிடம். அதுக்குப்போகும் பாதை ஒன்னு சரேலுன்னு  இடதுபக்கம் கீழிறங்குது.


எங்கேயும் திரும்பாம நேரா ஹைவேல போங்கன்னு 'ஆர்டர்' போட்டேன்:-) ஸ்டிர்லிங் பாய்ண்ட் ன்னு  தகவல் சொல்லுது. அதையும் தாண்டுனதும்  ஒரு 200 மீட்டரில் இந்த  2047 KM  நெடுஞ்சாலை சட்னு முடிஞ்சு போச்சு.  இதுக்குமேலே வண்டி ஓடாது... நோ நிலம்!!!!!  நேராத் தண்ணியில் போய் விழலாம்.


Signpost ( கைகாட்டி மரம்?) ஒன்னு  வச்சுருக்காங்க. ஆட்டொமொபைல் அஸோஸியேஷன் நியூஸியின் ஏற்பாடு. இதைப்பார்க்கவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கே வர்றாங்களாம்.  ஹிஹி.... சும்மா ஆயிரம் நூறுன்னு  ப்ளஃப் விடுவோம் கேட்டோ:-))))  நாளுக்குப் பத்து, கணக்குன்னு சொல்லிக்கலாம்.  நாங்கபோய்ச் சேரும்போதே ஒரு  ஆறுபேர் இருந்தாங்க.







இதுக்குத்தானே ஒத்தைக்காலில் தவம் இருந்தேன்:-))))

இப்படி ஒன்னு வச்சது 1960 ஆம் ஆண்டுதான். மரத்துலேசெஞ்சு ஒரு ஆறு இடங்களை  அந்தந்தப்பக்கம் இருக்குன்னு கை காட்டிக்கிட்டு இருந்துச்சு.  விஷமிகள் (இங்கெயும் இருக்காங்க!  என்ன விகிதாச்சாரம் கம்மியா இருக்கும். அம்புட்டுதான். கெட்டமனசு, ஒரு நாட்டுக்கு மட்டுமா சொந்தம்?) கைவரிசை காட்டினதால்  நல்ல இரும்புலே செஞ்சு  சிமெண்டு போட்டு உரப்பிச்சுட்டாங்க. ஆறு இடத்துக்கு பதிலா இப்போ பனிரெண்டு இடங்கள் காமிக்குது.   இங்கிருந்து நியூயார்க்கை விட தென் துருவம் ரொம்பவே பக்கம் கே ட்டோ!!!
இந்த ஊருக்கும் ஒரு ஹெரிட்டேஜ் ட்ரெயில்  ப்ரோஷர்  உண்டு. அதுலே கூட இதுதான் கட்டக்கடைசி. 17 வது இடம்! மற்ற இடங்களை(யும்) ஒவ்வொன்னா பார்க்கலாம். கூடவே வர்றீங்கல்லே?)


இந்தப் போஸ்டுக்கு எதிரில்  லேண்ட்'ஸ் எண்ட் நியூஸிலேண்ட் என்ற பெயரில் ஒரு  ஹொட்டேல் இருக்கு வித் பார் & ரெஸ்ட்டாரண்ட். இப்போதைக்கு மூடி இருக்காங்க.  யாவாரம் இல்லை போல:( ஆனால்  பிஸினெஸ் விக்கப் போட்டுருக்கு.  யாருக்காவது கோடிக்கடை போட ஆசைன்னா, இதை வாங்கி நடத்தலாம்.


இந்த  இடத்தை  ஸ்டிர்லிங் பாய்ண்ட்ன்னு   ஏன் சொல்றாங்க.? வில்லியம் ஸ்டிர்லிங்  1840 இல்  இங்கிலாந்தில்  கெண்ட் பகுதியில் பிறந்தவர்.  (அப்போதான் வெள்ளையர்கள் மவோரிகள் ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இப்போ சரியா கொத்ஸ்?)


வில்லியம் தன்னுடைய 20 வயதில் நியூஸிக்கு வந்து சேர்ந்தார். கடலோடி. திமிங்கில வேட்டைக்குழு தலைவர்.  இந்த  ப்ளஃப் பகுதியில்  முதன்முதலா வந்த பைலட் இவரே! ( அப்போ கப்பல் அதிகாரிக்கு கேப்டன் என்றுசொல்றதில்லையோ என்னவோ? அப்படீன்னா   கேப்டன் குக்ன்னு சொல்றாங்களே அது எப்படி? ஆராயணும்) 21 வருசம் வேட்டையாடிட்டு  இங்கே பக்கத்துலே டிவாய்ன்னு இருக்கும் சின்னத்தீவில்   சாமிகிட்டே போயிட்டார். ஆயுசு 41 மட்டுமே!

இவருக்காக இங்கே ஒரு  நடுகல்  (கல்வெட்டு?)  வச்சுருக்காங்க.  பெரிய பாறையில்  ஒரு சரித்திரக்குறிப்பு விவிலியத்தில் வரும் வசனத்துடன்.


வாங்க....கடல் & நில ஓரத்தையொட்டியே கீழிறங்கும் பாதையில் போகலாம்.  வளையம் வளையமா பெரிய சங்கிலி அமைப்பு.  சங்கிலியின் ஒரு கண்ணூடாக பாதை போகுது.   எதுக்கு இம்மாம் பெரிய சங்கிலி?  அதுவும் அலுமினியத்தில்?  ( இவ்ளோ பெரிய சங்கிலி தங்கத்துலே இருந்தால் நல்லாவே இருக்காது . ச்சீச்சீ. புளிச்ச பழம் :-)

சங்கிலிக் கதை ஒன்னு  இப்போ சுருக்கமா :-)))

கடவுளுக்குச் சமமான  சக்தி உள்ள  பாலினீஸிய  கடலோடி ஒருத்தர் இருந்தார்.  ( இங்கே இருந்து  ஆயிரத்துச் சொச்சம் வருசங்களுக்கு  முன்னால் வந்தவர்கள்தான் நியூஸியின் பழங்குடிகள். இங்கே இவுங்களுக்கு மவொரியர்கள்  என்று பெயர். )அவருடைய பெயர் மௌஇ ( MAUI).  தன்னுடைய நீளப்படகிலே  கடலில் வந்துக்கிட்டே இருந்தப்ப  ஒரு சமயம்     மீன் பிடிக்கத் தன்னுடைய படகை நங்கூரம் போட்டு அங்கே  நிறுத்தறார்.  அந்த நங்கூரம் போய் கடலினடியில்  போய் நல்லாப் பதிஞ்சுருது.


பெரிய மீன் (திமிங்கிலமோ என்னவோ?)ஒன்னைப் பார்த்துட்டு அதைப் பிடிக்கும்போது  அது படகை இழுக்க இவர் மீனை இழுக்கன்னு  கொஞ்சம் ' டக் ஆஃப் வார்'  நடக்க நங்கூரம் அப்படியே பதிஞ்சுருந்த பூமித்தரையோடு மேலே வந்துருது. நங்கூரச் சங்கிலியில் ஒட்டி வந்த தரை  'ரகியூரா' ( Rakiura)  என்ற ஒரு  சின்னத் தீவாகவும்  அந்த நீளப்படகு  நியூஸியின் தெற்குத் தீவாகவும், பிடிபட்ட மீன் நியூஸியின் வடக்குத் தீவாகவும் மாறி நிலைச்சு நின்னு போச்சுன்றது   மவொரிகளின் பழங்கதைகளில் ஒன்னு.  அப்புறம் அந்த மௌஇ என்ன ஆனார் என்றதெல்லாம்  இன்னும் பெரிய கதை.

 ( போன வருசம் ,மவொரி கதைகள் புத்தகத்தை மொழி பெயர்க்கலாமுன்னு  வாங்கியாந்துருக்கேன்.  கிடைக்கும் நேரத்தைப்பொறுத்து  வேலையை ஆரம்பிக்கணும்)



உள்ளூர் கம்யூனிட்டி ட்ரஸ்ட் ஆரம்பிச்சு 20 வருசம் முடிஞ்சதையொட்டி   2008 வது ஆண்டு இந்தச் சங்கிலியை  பழங்குடிகளுக்கும்  இந்த ஊருக்கும்  இருக்கும் பாரம்பரிய உறவுகளின் குறியீடா  இங்கே  அமைச்சு இருக்காங்க.  சங்கிலியின் மறு முனை  ரகியூரா தீவில்  (  இதுதான் இப்போ ஸ்டீவர்ட் ஐலேண்ட்)  உள்ள லீ பே  ( Lee Bay) என்ற இடத்தில்   இருக்கு!


அலை வந்து மோதும் சிறு பாறைகளும், கடலோரச்செடிகளும் புதர்களுமா  வளைஞ்சும் நெளிஞ்சும் இருக்கும்  பாதையினூடாக நாம்  நடந்து போறோம்.  பாதிவழியில்  ஒரு கக்கூஸு.  நியூஸி (தெற்குத்தீவின் )யின்  கடைசிக் கழிவறை இதுதான்!  எல்லாம்  பரிசுத்தமாக  இருக்கும் நவீன கழிப்பறை இது.  நாடு அசிங்கப்படக்கூடாது என்பதில் அரசு கவனமா இருக்குன்னு எனக்கு ஒரே பெருமை.  (இந்தியாவைப்பத்தி  நான் வாயைத் திறக்க மாட்டேன் கேட்டோ!)


இன்னும் நாலடி வைக்கக் கோவில் இப்போ நல்லாவே கண்ணுக்குத் தெரியுது.  அது கடலில் இருக்கும் இன்னொரு பெரிய பாறையில் கட்டப்பட்டுள்ளது.   ஒரு நாப்பதடி தூரம் இருக்கும்.  அங்கே போக ஒரு மரப்பாலம். பாலம் கடந்து போய் நாலைஞ்சு படிகளோடு இருக்கும் கோவில் வாசலில் நின்னோம். பூட்டப்பட்டிருக்கு. உள்ளே என்ன ?  அம்மனோ? சாமியோ?  ஊஹூம்.


கடற்பாறைகளில்  படகுகள் வந்து மோதிவிடாமல் எச்சரிக்கை செய்யும் லைட் ஹவுஸா இந்த இடம் 1877 முதல் இயங்குது. இப்போ நாம் பார்க்கும் இந்த அறுகோண வடிவக் கட்டிடம் 1912 ஆம் ஆண்டு,  பழசுக்குப் பதிலா  கட்டப்பட்டது.  வெளியே மரத்தில் டெக் போட்டு கொஞ்சம் சரித்திர பூகோள விவரங்கள் வச்சுருக்காங்க.  படிச்சுப்பார்த்துட்டு க்ளிக்கிட்டு இருக்கும்போது  நாலு பேர் வந்தாங்க.  (ஆஸிகள்) அஸ்ட்ராலியாக்காரர்கள்.  எல்லாம் பைக்கீஸ்.  மோட்டர்சைக்கிளில்  தெற்குத்தீவைச் சுத்தறாங்களாம்.






நல்ல பெரிய பைக். சும்மா ஓட்டிப்பார்க்கலாமான்னு  நினைச்சேன்:-))))
திரும்பி நடந்து  ஸைன் போஸ்டுக்கு வந்து  இன்னும் கொஞ்சம் க்ளிக்கிட்டு  17 இல் ஒன்னு போச்சு இன்னும் 16 இருக்குன்னு புறப்பட்டோம்.



தொடரும்............:-)






காலத்தில் பின் நோக்கிப் போகலாமா?

$
0
0


நியூஸி நாட்டின் வயசு  வெறும் 173 என்பதால்  இருபத்தியஞ்சு வருசத்துக்கு முன்னாலே நடந்ததெல்லாம்கூட சரித்திரம்தான். அதென்ன 25?  அப்பதானே நாங்க இங்கே வந்து குடியேறினோம்:-)இது எங்கள் வெள்ளிவிழா ஆண்டு, கேட்டோ!


தென்கோடி ஊரான  ப்ளஃபைப் பற்றிய சமீபத்திய  அறிக்கை சொல்லுது,  மொத்த சனமே 1938தானாம்.(இந்த எண் வருசத்தைக் குறிக்குதுன்னு தவறா நினைச்சுக்காதீங்க! மக்கள் தொகையே இம்புட்டுதான்)

 கடலின்  கரை ஓரமாகவே   மெரீன் பரேடு சாலை ஓட,  எதிர்ப்புறம்  இருக்கும் 871 அடி  உயரக் குன்று( ப்ளஃப் ஹில்ஸ்)   மேற்கு பார்த்த சரிவு முழுசும்  காட்டுப்பகுதி. கிழக்குப் பார்த்த சரிவிலே வீடுகள்.  எல்லாமே கடலைப் பார்த்தபடி.    பெரிய தெருக்களா ஒரு நாலைஞ்சு. அங்கிருந்து பிரியும் குறுக்குத் தெருக்களா ஒரு பத்திருவது.  முக்கிய கட்டிடங்கள் எல்லாம் இந்த மெரீன் பரேடில்தான். இன்னும் கொஞ்சம் நேரம் கிடைச்சால் வீடுகளை எண்ணிக்கூட பார்த்திருக்கலாம்.!  ஆயிரம் இருக்குமோ?  சிலர் கோடைகால விடுமுறைக்காக  கடல்பார்க்கும் வீடுகளை வாங்கிப்போட்டுருக்காங்க.


இங்கே இந்த துறைமுகம் இல்லைன்னா  இவ்வளவு சனம் கூட இருக்காது; இது நாட்டின் கடைசித் துறைமுகம்.  பக்கத்துலே டிவாய் ( Tiwai)என்னும்  இடம்  ஒன்னு இருக்கு. கரைப்பகுதி கொஞ்சம்  மூக்கு நீண்டுபோய்  கடலில் முடியும் இங்கே. Aluminium Smelter ஒன்னு இங்கே இயங்குது. உலகின் பெரிய 20 ஸ்மெல்ட்டர்களில் இதுவும்  ஒன்னு.  காற்று மாசு படவேணாமுன்னு ரொம்பத்தள்ளிக் கடலுக்குப்பக்கம் வச்சுருக்காங்க போல!   நாம் இங்கே கடற்கரைச் சாலையில் இருந்தே  தொலைவில் இருக்கும் அதைப்பார்க்கமுடிகிறது.  ஊர் மக்களில் பாதிப்பேருக்கு இங்கேதான்  வேலை.

நியூஸி சரித்திரத்திலே பதிவு செய்யப்பட்ட ஒரு சமாச்சரமுன்னா 1813வது ஆண்டு  வியாபாரம் செய்ய எதாவது ச்சான்ஸ் கிடைக்குமான்னு   வெள்ளையர்கள் இந்த ப்ளஃப்  பக்கம் வந்துருந்தாங்களாம். அந்தக் கப்பலின் பெயர்  Perseverance. கிபி 1770  ஆண்டு முதலே எங்கள் அண்டைநாடான  அஸ்ட்ராலியாவை  பிரிட்டிஷ் அரசு  அவர்களுடைய காலனி நாடுகளிலொன்றாக ஆக்கி வச்சுருந்தது.   அங்கே கால் குத்திய  பின்  அக்கம்பக்கம் வேற  புது இடங்களைத்தேடி வந்த கப்பல்தான் இது.


அந்தக்காலக்கட்டத்தில் திமிங்கிலவேட்டைக்கான முக்கிய இடமா இது ஆகிப்போனதால்  அது சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக சனம்  குடிவந்தபோது ஏற்பட்ட ஊர்தான் இது.  கடலில் இருக்கும் முக்காவாசித் திமிங்கலங்களைக் கொன்னு வாயிலே போட்டுருந்தாங்க.  திமிங்கில எண்ணெய் காய்ச்சி எடுத்த   கொப்பரைகள் எல்லாம் ம்யூஸியத்தில் வச்சுருக்காங்க.


ஹெரிட்டேஜ் ட்ரெயில் ப்ரோஷரில்  ஒன்று இரண்டு மூன்றுன்னு வரிசைப்படுத்தி அழகாப்போட்டு வச்சுருப்பதால் நமக்கு அதையெல்லாம் தரிசனம் செஞ்சுக்கிட்டே போவது எளிதுதான். ப்ளஃப்  கன்பிட் பாய்ண்ட் க்கு போனோம்.  நல்ல ஏற்றத்தில் போய் தெற்கு மூலைக்காத் திரும்பணும். இரண்டாம் உலகப்போர்  நடந்துக்கிட்டு இருந்த காலக்கட்டம்.  நாட்டுக்குப் பாதுகாப்பு வேணுமுன்னு  15,085 பிரிட்டிஷ் பவுண்ட்  செலவு செஞ்சு  கட்டுன அதிக உறுதியான காங்க்ரீட்  கட்டிடம்.  குண்டு போட்டால் கூட அழியாது. அப்படி ஒரு ஸ்ட்ராங்.  ஆமாம்..... நாங்க இங்கிருந்து குண்டு போட்டு  எதிரியைத் துரத்துவோமுன்னு பீரங்கி வைக்கும் மேடை அமைச்சு பீரங்கியை ஏத்தி வச்சுக் ஜப்பான்காரனுக்காகக் காத்துக்கிட்டு இருந்த இடம்.

படைவீரர்கள் தங்க, சகல வசதிகளோடு ஃபென்ஸ் கூடப்  போட்டுக் காபந்து  பண்ணி வச்சுருந்தாங்க. கட்டி முடிச்சுக் குடிவந்தது  11 டிசம்பர்  1942.  "வரட்டும்,  அவனை.........."   அவன் வருவான்னு  தேவுடு காத்து அவன்  இனி வரப்போறதில்லைன்னு  1944 ஆகஸ்டு மாசம் இழுத்து  மூடிட்டுப்போன இடம்.  மூடுபனித்திரை  இல்லாத சமயம்   ஸ்டீவர்ட் தீவு தெரிஞ்சாலும் தெரியுமாம். நானும்  பீரங்கி மேடையில் ஏறிப்பார்த்தேன்...ஊஹூம்.....:)




சரித்திரக்குறிப்புகள் எல்லாம் விளக்கித் தகவல்கள் வச்சுருக்காங்க.  படிச்சுப் பார்த்தோம்.


அடுத்த இடம்  வார் மெமோரியல். நாட்டுக்காக உயிரிழந்த  இந்த ஊர் மக்களின் பெயர்கள் பொறிச்ச நடுகல்.  கண்ணில் படாமல் தப்ப முடியாதபடி  கடற்கரைச் சாலையிலேயே இருக்கு.



பே வியூ ஹொட்டேல். 1892 இல்  மாடி வச்சுகட்டினது. நாலு விருந்தினர்  அறைகள். (ஹாஹா..... நாலு பேர் இருந்தால் கூட்டம் என்று கொள்க!!!)  குதிரை லாயம், வொர்க்‌ஷாப். பெரிய புல்வெளி, காய்கறித்தோட்டம்  இப்படி சகல வசதிகளோடு 1908 வரை  நடத்துனவர்  Joseph Metzger.  விருந்தினர்களுக்கு ஹோம்ஸிக் வராமல் அவுங்களே லானைப் புல்வெட்டிப் பராமரிச்சு, (குதிரைகளை மேயவிட்டு?)  காய்கறித் தோட்டத்தில்  விளைச்சல் பார்த்து  ப்ரெஷ் காய்களை ஆக்கித் தின்னுக்கலாம். போல!!!


 Joseph Metzger காலத்துக்குப்பின் பல கைகள் மாறி 1938 வரை தாக்குப்பிடிச்சது  ஹொட்டேல்  பிஸினெஸ். அப்புறம் சரித்திரமா மாறி நிக்குது. இதுவும் இதே மெயின் சாலையில்தான். வண்டியை விட்டு இறங்காமல் பார்த்தோம், க்ளிக்கினோமுன்னு போகலாம்:-)


பட்டியலில் அடுத்த ஐட்டமும் ஒரு ஹொட்டேல்தான்.  க்ளப் ஹொட்டேல். அந்தக்கால ஸ்டைலில் கட்டியது. உள்ளே  ரொம்ப நல்லா இருக்கு(மாம்)  இருக்கட்டும்.  தொட்டடுத்து  பழைய தபால் நிலையக்கட்டிடம். . 1899 வது வருசத்தில் மட்டுமே 75 985 கடிதங்கள்  இந்த ஊரில் இருந்து  வெளியே போயிருக்காம். அரண்டு போயோ என்னவோ  புதுசா தபால் நிலையம் வேணுமுன்னு மறு வருசமே (  1900 )கட்டி இருக்காங்க. படத்தில் உள்ள  கட்டிடத்தைக் காணோமேன்னு தேடுனா...... இப்ப நிறத்தை மாற்றி அலங்காரம் செஞ்சு இது ப்ளஃப் லாட்ஜா  இயங்குது!

இருபதாயிரம்  சாக்குமூட்டை  கோதுமை தானியம் சேகரிச்சுவச்ச இடம், ஒரு லட்சம்  சாக்குமூட்டை ஆட்டு ரோமம், ஆட்டுத்தோல்கள் வச்ச குடோன் இப்படி 'சரித்திரம்'(!!!!) சொல்லும்  சில இடங்களையெல்லாம்  'இன்னொருக்கில் ஆகட்டே'ன்னு விட்டுட்டு எனக்கு  இண்ட்ரஸ்டிங்கா இருந்த  ஒரு இடத்துக்குப் போனோம்.


 உள்ளூர் சரித்திரத்தில் இடம்பெற்றவர்களைவிட  சரித்திரமாகவே ஆகிப்போனவர்கள்  உறங்கும் ப்ளஃப் கல்லறைத்தோட்டம்.  நல்ல சிறு குன்றின்மேல் இருக்கு.  அங்கிருந்து பார்த்தால்  வெட்டவெளியில் தெரியும் கடல்.  அருமையான கடல் காற்று. ஹாய்யா படுத்துருக்கலாம்.



தோட்டத்தின் முகப்பில் வலது பக்கம்  கண்டெய்னர் போன்ற  ( ஐயோ.... எங்கூரில்  நிலநடுக்கம் வந்த பிறகு கண்டெய்னர்கள்தான் ஊர்பூராவும். கடைகள், மால்கள்,  இடிந்த கட்டிடங்கள்  மேலும் சரியாம முட்டுக் கொடுக்க , இன்னும்  சாலை ஓரங்களில்  மதில் சுவர்களாக்கூட  இருக்கு. பொழுதன்னிக்கும் பார்த்துப்பார்த்து,   மெட்டல் ஷெட்டுகள் கூட கண்டெயினராத் தோணுதே!) ஒரு  ஷெட்டில்  கல்லறையில் மீளாத்துயிலிலாழ்ந்திருப்பவர்களைப்பற்றிய விவரங்கள் வச்சுருக்காங்க.  உள்ளுர் நகரசபையில்   1917 வது ஆண்டு தீ விபத்து ஏற்பட்டு  இறப்பு ஆவணங்கள்  முக்கால்வாசி எரிஞ்சு போச்சாம்.  சம்பந்தப்பட்டக் குடும்பத்தினரிடமும்  கல்லறைகளில்  செதுக்கி வச்சுருக்கும்  தனிப்பட்ட விவரங்களையும்  சேகரிச்சு இப்ப இப்படி ஒரு ஏற்பாடு)


கல்லறைகளுக்கு எண்கள் கொடுத்து பக்காவா ஒரு வரைபடம்!  நமக்கு யாரையாவது  பார்க்கணுமுன்னா,  பேர் வரிசையில்  பார்த்து  வரைபடத்தின் உதவியால் டக்ன்னு அங்கே போய் நிக்கலாம்.

சில குடும்பக் கல்லறைகள் ஒரே இடத்தில்  ஏற்பாடு செஞ்சு அங்கே  ஹெட் ஸ்டோனில்  அங்கிருப்பவர்கள் விவரம் எல்லாமும் செதுக்கி வச்சுருக்கு.  அந்தந்தக் குடும்பத்தினரின் பணம் ,மனம் அனுசரிச்சு நடக்கும் சமாச்சாரங்கள் இவை.


இங்கே  முதல்முதலாக புதைக்கப்பட்டவர்  ஜான் ஃபாக்ஸ் ஓவரிங்ஹாம். 3 டிசம்பர் 1860.

 நியூஸியின் பிரதமரா ரெண்டு முறை பதவியில் இருந்த  ஸர் ஜோஸஃப் ஜியார்ஜ் வார்ட்  (Sir Joseph George Ward) கூட இங்கேதான் இருக்கார் , தன் மனைவியுடன்.



இந்தக் கல்லறைத் தோட்டம்  ஹெரிட்டேஜ் ஸைட்டாக  பதிவு செஞ்சுட்டதால் இப்ப புதுசா வர்றவங்களுக்கு  இங்கே இடம் இல்லை.  சமீபத்திய கல்லறைகள்  வேற எங்கோ இருக்கணும். கல்லறைக்கு தொட்டடுத்த தெருவில் வீடுகள் எல்லாம்  ஒன்னுபோல  இருக்கு.


கடல் நோக்கிக் கீழிறங்கும் தெருவின்  கோடியில் மெயின் ரோடு சேரும் இடத்தில் ஒரு ஓரமா  பார்க்க வேண்டிய  வரிசை எண் 4.  பழைய பிரதமர் ஜோஸஃப் வார்ட்  அவர்களின் உருவச்சிலை.  இருக்குமிடம் தெரியாமல்  நிக்கறார்.  நாம் ஊருக்குள் வந்ததும்  துறைமுகத்துக்குத் திரும்பின  அதே  இடம். தலையை வலப்பக்கம்திருப்பி இருந்தால்  கண்ணில் பட்டிருக்கலாம்.


அப்பா சரியான குடிகாரர்.    ஆயுசு வெறும் 31.  அப்ப ஜோஸஃப் வார்டுக்கு 4 வயசு. அம்மா ஹான்னா (Hannah)  கஷ்டப்பட்டு புள்ளையை வளர்க்கறாங்க. பிழைப்பு தேடி  மெல்பெர்ன்(அஸ்ட்ராலியா)  நகரில் இருந்து  7 வயசு ஜோஸஃபோடு   கேம்பெல்டௌன் என்ற  இடத்துக்கு  வந்து சேர்ந்தாங்க.  அப்ப ப்ளஃபுக்கு   இதுதான் பெயர்.


இந்த  ஊரைப்பற்றிய சுவாரசியமான  சேதி ஒன்னு.  1824 ஆம் ஆண்டு  ஜேம்ஸ் ஸ்பென்ஸர் என்பவர் இந்தப்பக்கம் வந்தவர்  திரும்பிப்போய்  இந்தமாதிரி ஒரு நிலப்பகுதியைக் கண்டேன். கடலும் மலையுமா இருக்குன்னார்.  கதை விடுகிறார் என்று நினைச்ச மக்கள்  ' ஓல்ட் மேன்'ஸ் ப்ளஃப்'  என்று சிரிக்க  அதுவே பெயரா நின்னு போச்சு 1856 வரை. அதுக்குப்பிறகு  கேம்பெல்டவுன் என்றாச்சு.   1917 மார்ச் ஒன்று முதல்  மீண்டும் பழைய பெயரின் பின்பாதியை அதிகாரபூர்வமா  மாற்றினாங்க . இன்றுவரை இது ப்ளஃப்.


 திமிங்கில வேட்டையால் ஊரே ஜே ஜேன்னு பிஸியா இருக்கு.  தொழிலுக்கு  வந்து போற மக்கள்  அதிகமா இருந்ததைக் கவனிச்சு, ஒரு ஹொட்டேல் தொடங்குனாங்க  இந்தம்மா.  கொஞ்ச முன்னால் க்ளப் ஹொட்டேல் பார்த்தோம் பாருங்க. அதுதான் இது. வியாபாரம் நல்லா நடந்தது.  ஜோஸஃப் வளர்ந்து வரும்போதே  வியாபார நுணுக்கங்களைத் தெரிஞ்சுக்கிட்டார்.  வயசு 13 ஆச்சு. ஹைஸ்கூல் போறதுக்குள்ளே பக்கத்து கட்டிடமான போஸ்ட் ஆபீஸில் வேலை கிடைச்சது.  வேலை , பிஸினெஸ் இப்படி வாழ்ந்து கடைசியில் அரசியலுக்கு வந்துட்டார். 21  வயசுலே கேம்பெல்டௌன்  கவுன்சிலர்.  அப்புறம் மூணே வருசத்தில்  மேயர்.   ஏழு வருசம் டவுன் தந்தை:-)   இதுக்கிடையில் ப்ளஃப் ஹார்பர் போர்ட் மெம்பரா  1917 வரை சேவை.  இன்னொருக்கா மேயர் ஆகும் சான்ஸ் கிடைச்சு அது ஒரு ரெண்டு வருசம்.  அடுத்ததா   இன்வெர்கார்கில் தொகுதிக்கு  பாராளுமன்ற  உறுப்பினர்.  மந்திரி சபையில் இடம் கிடைச்சது.  அதுக்குப்பிறகு  பிரதமராகவும் ரெண்டு முறை பதவியில் இருந்துட்டார்.  இரண்டாம் முறை பிரதமராக இருந்தப்ப  உடம்பு சரி இல்லாமப்போய், பதவி காலம் முடியுமுன்பே வேலையை ராஜினாமா செஞ்சார்.  நாற்காலியை தூக்கியெறிஞ்ச    ஒன்னரை மாசத்தில் தன்னுடைய 74 வயதில்  மேலுலகம் போயிட்டார்.


 ஊருக்குள்ளே எங்கெ போனாலும் எதாவது ஒரு சம்பந்தம்  இவுங்க குடும்பத்தோடு இருக்கு.

ரொம்ப நல்ல மனிதரா இருந்தாருன்னு கேள்வி.



தொடரும்............:-)


 பதிவுலக நண்பர்களுக்கும், துளசிதளம் வாசகப் பெருமக்களுக்கும் பொங்கல் திருநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.






கப்பலோட்டிய...............

$
0
0
கடல்சார் அருங்காட்சியகம். வாசலில் மூணு கொப்பரை!  உள்ளே போய்ப் பார்க்க கட்டணம் உண்டு, ஐ மீன்  காட்சியகத்துக்குள்ளே  போக! மூணு டாலர்.  நோட்டீஸ் போர்டுலே கறாரா ஒரு  தகவல். இங்குள்ள  ஒன்னு,   ஒன்லி ஃபார் பேயிங்  கஸ்டமர்ஸ்.  அப்படி என்னதான்னு பார்த்தால்  பளிச்சுன்னு மின்னும் படு சுத்தமான கழிவறை!  அதுக்குள்ளே(யும்) ஒரு  நோட்டீஸ் இப்படி.  சுத்தம் சுத்தம். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.


காட்சியகம் ரொம்பப்பெருசொன்னும் இல்லை. இந்தச்  சக்கரம் சுத்தாதுன்ற சின்ன அறிவிப்போடு பெரிய ஸ்டீரிங் 'வீல் ' ஃபார் கப்பல் இருக்கு:-)  மனிதர்களின் சின்ன்ச்சின்ன ஆசைகள் இப்படி.... அதுக்காக சும்மா விடமுடியுமா? இது இல்லேன்னா வேற எதாவது கிடைக்காதா?





அந்தக் காலங்களில் கப்பல்களில் பயன்படுத்திய சாதனங்கள், ராட்சச சைஸ் தாம்புக்கயிறு  முதக்கொண்டு  காப்பர் லைட் வரை அங்கங்கே இருக்கு. சிம்னி விளக்கு, டைப்ரைட்டர்,  சில கப்பல்கள், படகுகளின் மாடல்கள். ஒரு நீராவிக்கப்பலின் முழு எஞ்சின் , நீர்மூழ்குபவர்களின்  உடைகள் , திமிங்கிலத்தின் எலும்புகள்,  அதன் வாய்க்குள் இருக்கும் வடிகட்டி  அமைப்பு (Baleen)முதுகுத்தண்டு வரிசை எலும்பில்   ஒன்னு (நல்ல பெரிய பாத்திரம் மாதிரி  இருக்கே!)




இந்தப் பகுதியில் காணப்படும் பெங்குவின் பறவை இனங்கள்(பாடம் பண்ணியது)


மாட்சிமைதாங்கிய மஹாராணி எலிஸபெத் வந்திருந்தபோது  அவுங்க போட்ட ஆட்டோகிராஃப்!'

கடந்து வந்த காலங்களில் துறைமுகம் எப்படியெல்லாம் இருந்து  இப்ப எப்படி மாறி இருக்குன்னு காமிக்கும் புகைப்படங்கள்,  கப்பல் அதிகாரிகளின் உடைகள்,  சர்வதேச  கோட் சார்ட், இப்படி ஏராளமா வச்சுருக்கங்க.


துறைமுகம் வியாபார மும்முரத்தில்  பயங்கர பிஸி.  ஏற்றுமதி அதிக அளவில் ஆனது ஆட்டிறைச்சிதான். 1984-1985 வருசத்தில் மட்டும் இங்கே ஆடு வெட்டும்  ஒரு கம்பெனியில்  2,464,880 ஆடுகளை வெட்டி அனுப்பியது ஒரு ரெக்கார்ட்.  அப்போ தொழிற்சாலையில் இருந்த  எல்லா ஆடுவெட்டிகளுக்கும்  ஒவ்வொரு கிறிஸ்டல் ஒயின் க்ளாஸ் கொடுத்து கௌரவிச்சாங்க(ளாம்) 48 மில்லியன் ஆடுகளில் கிட்டத்தட்ட ரெண்டரை மில்லியன் போனாப்போகட்டுமுன்னு......  இங்கேயிருந்து போகும் ஆட்டிறைச்சிக்கு  இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் நல்ல மார்கெட் இருக்கு.  மாட்டிறைச்சிக்கும்தான்.   பைத்திய மாடு நோய்  (மேட் கௌ டிஸீஸ்)  இங்கே இல்லை பாருங்க.



கட்டிடத்தின் பின்புறக்கதவை விட்டு வெளியே போனால் பக்கவாட்டில்மோனிகா இருக்கிறாள். 103 வயசு. ஆனாலும் இளமையோடு இருக்காள் என்பதே அழகு!

1909 வது வருசம் இங்கெ எங்க ஊரில் (லிட்டில்டன்  கிறைஸ்ட்சர்ச்) கட்டுன படகு இந்த மோனிகா 2. ( அப்ப மோனிகா 1 யாராக இருக்கும்? ச்சீ ....மனசே அடங்கு!   ஐய்ய.....மோனிகான்னதும்  ...... பெரிய இடத்து விவகாரம் உனக்கு எதுக்கு? ) பத்து வருசம் பேங்க் பெனின்சுலாவில் சுத்தி உழைச்சதுக்குப்பிறகு கை மாறுச்சு. கல் குவாரி வேலை . ரெண்டே வருசம். பாவம் தாக்குப்பிடிக்க முடியலை போல. மீண்டும் கை மாறி   மீன்பிடிப் படகா ஒரு ஏழு வருசம்.  1937 இல் ஸ்டீவர்ட் தீவுக்குப் பக்கம்  சிப்பிப்பண்ணை (Oyster farm) வேலை.  பத்து வருசம் கழிச்சு  1947 இல் நீராவி எஞ்சினை டீஸல் எஞ்சினா மாத்துனதும்  ப்ளஃப் பகுதியில் ஓடும் படகுகளில்  இவள்தான் அதிவேக ராணின்னு பெயர் எடுத்தாள்.




ஆச்சு 100  வயசு. ஓய்வெடுக்கட்டுமுன்னு ப்ளஃப் அருங்காட்சியகத்துக்கு  1999 மே மாசம்  9 ஆம் தேதி , தானம் செஞ்சுட்டாங்க  ஓனர்ஸ்.  அப்ப இருந்து  இது  நம் பார்வைக்கு .  சாலையில் வரும்போதே கண்ணில் பார்க்கிற மாதிரிதான்  இருக்குன்னாலும் உள்ளே போய் பார்க்கணுமுன்னா  ம்யூஸியம்  டிக்கெட் வாங்கித்தான் போகணும்.


நான்  கப்பல் ஓட்ட....  இவர் ' அதோ அந்தப்பறவை போல வாழ வேண்டும்' பாடிக்கிட்டே ஆடினார்:-)))



பட்டியல்படி எனக்கு பார்க்க ஆசையா இருந்தது இன்னொரு சமாதி. இது கப்பல்களுக்கானது.  கடற்கரைச் சாலையில் இருந்து கொஞ்சம்  உள்ளே போகணும். துறைமுகத்தின் இன்னொரு கோடி.   Tide டைட் இல்லேன்னாதான் கண்ணுக்குப் புலப்படுமாம்.  நம்ம அதிர்ஷ்டம்   தண்ணி நிறைய இருக்கு.  நோ சான்ஸ்ன்னு  ப்ளஃபைவிட்டுப் புறப்பட்டோம்.   ஊர் எல்லையைத் தாண்டுமுன்  ஒரு வீட்டு முன்புறப் புல் வெளியில் ரெண்டு பெரிய சிங்கங்கள் ஒய்யாரமா  ஓய்வெடுத்துக்கிட்டு இருந்தன. நல்ல ரசனை  உள்ளவர்கள் வசிக்கிறாங்க போல. கூடவே ஒரு போலார் கரடியும் தவளையும்.

30 கிலோமீட்டர். கூட்டமில்லாத சாலை 20 நிமிசம். பகல் ஒரு மணிக்கெல்லாம் அறைக்கு வந்துட்டோம். பகல் சாப்பாட்டுக்கு  எதிர் சாரியில் இருக்கும்  கடைகளை நோட்டம் விட்டால் ஒரு டர்க்கிஷ் கடை கண்ணில் பட்டது.  இன்னிக்கு வருசக்கடைசி நாள். நாளையும் மறுநாளும் அரசு விடுமுறை என்பதால்  இன்வெர்கார்கில் சமாச்சாரங்களை முடிஞ்ச அளவு இன்னிக்கே முடிச்சுக்கிட்டால் தேவலை. இங்கேயும் ஒரு ஹெர்ரிடேஜ் ட்ரெய்ல்  இருக்கே!



ப்ரோஷரைப்பார்த்தால் 18 இடம்.  ப்ளஃபைவிட ஒன்னு கூடுதல். இருக்காதா பின்னே இது உண்மையிலேயே அதைவிடப்பெரிய ஊர் இல்லையோ!  மக்கள் தொகை  அரை லட்சத்துக்கு மேலே!  ( சமீபத்திய  சென்சஸ் சொல்லுது  50,328 )



பதினெட்டில் ரெண்டு மூணுதான் உள்ளே போய் பார்க்கத் தோதாக இருக்கு.  மற்றவை எல்லாம் போறபோக்கில்தான்.  உள்ளூர் அருங்காட்சியகத்துலே  'டுவடாரா 'இருக்குன்னு கேள்வி. அதுவும் உசுரோட! அதை மட்டும் இன்றைக்கே முடிக்கணும்.  நல்லகாலமா மழை கொஞ்சம் நின்னுருக்கு. டான் தெருவுக்குள் நுழைஞ்சோம்.  அழகான பெரிய குடை.   சௌத்லேண்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி  வச்சுருக்காங்க.    மழைக்கு ஒதுங்கிக்கலாமான்னால்  குடைக்குள் மழை:-)



இந்த  Southland Institute of Technology  தான் உள்ளூர்  Polytech.  ஆர்க்கிடெக்சர், ஃபேஷன், ப்ளம்பிங் தொடங்கி நர்ஸிங் , வெட்நரி நர்ஸிங் உள்பட 34 பகுதிகளில்  படிக்கும் ஏற்பாடு. அட்ராக்‌ஷன் என்னன்னா....இங்கே படிக்க  ட்யூஷன்  ஃபீஸ் இல்லை.  முற்றிலும் இலவசம். ஒரே  ஒரு கண்டிஷன் நியூஸி குடியுரிமை இருக்கணும்.  ஆஸி குடியுரிமை இருந்தாலும் ஓக்கேதான். (ரெண்டு நாட்டுக்கும் இடையில்  ஒப்பந்தம் இருக்கு.  பயணம் செய்யக்கூட  ரெண்டு நாட்டுக்கும்  விஸா வாங்க வேண்டியதில்லை)



எப்படி இப்படி ஸீரோ  ஃபீஸ் வந்துச்சு? கட்டுப்படி ஆகுமா?


1990களின் இறுதிகளில்  இன்வெர்கார்கிலின்  பணநடமாட்டம் குறைய ஆரம்பிச்சது. உலகின் மற்றபகுதிகளைப்போலவே டிப்ரெஷன்.  மக்கள் தொகை  கீழே போய்க்கிட்டே இருக்கு. வேலை தேடி மற்ற ஊர்களுக்கு சனம் போக ஆரம்பிச்சுருந்தது. வீடுகளின் மதிப்பெல்லாமும் அதலபாதாளத்தில் இறங்குது. உள்ளூர் இளைஞர்கள் எல்லாம் எதிர்காலம் என்னவாகுமோன்னு  செய்வதறியாது 'ஙே'ன்னு முழிக்கிறாங்க.


அந்த சமயம் பாலிடெக்கில் புது இன்சார்ஜா வந்த சீஃப் ஆஃபீஸர்  மிஸ் பென்னி சைமண்ட்ஸுக்கு (Southern Institute of Technology chief executive Penny Simmonds) புதுசா ஒரு ஐடியா உதிச்சது. இங்கே வந்து படிச்சால் கல்விக் கட்டணம்  இல்லை. இலவசமுன்னு சொன்னாங்க. ஆனால் இலவசமா கல்வி நிறுவனத்தை நடத்தமுடியுமா என்ன?  நாலுபேர் உதவி செஞ்சாத்தானே ?  அப்படியே ஆச்சு.   கம்யூனிட்டி ட்ரஸ்ட், சிட்டிக்கவுன்ஸில். சௌத்லேண்ட்  மாவட்ட கவுன்ஸில்,  இன்வர்கார்கில்   லைசன்ஸிங் ட்ரஸ்ட் ன்னு நாலுபேர் சேர்ந்து   ஏழேகால் மில்லியன் நிதி(3 வருசங்களில்)  அள்ளிவிட்டாங்க.


நியூஸியில் மாணவர்களுக்குக் கல்விக்கடன் அரசாங்கமே கொடுக்குது. படிச்சு முடிச்சு வேலை செய்ய ஆரம்பிச்சதும் கடன் கட்டத் தொடங்கணும்.  இப்ப கல்விக்கடனுக்கு வட்டி ஏதும் இல்லை. ஆனா  அந்தக்காலக்கட்டத்தில்  வட்டி வேற இருந்ததால் அது பாட்டுக்கு  அசலோடு சேர்ந்து குட்டிப்போட்டுக்கிட்டேப் போகும். வட்டிவிகிதம் ரொம்பக் கொஞ்சமே என்றாலும் கூட:( இதனால்  வேலை செய்ய ஆரம்பிச்சு சுமார் 15இல்லை 20 வருசம் கடனாளியாகவே இருப்பாங்க மாணவர்கள்.


வாழ்க்கையில் செட்டில் ஆகலாமுன்னா,  கல்விக்கடன் இருந்தால் வங்கிகள் வீட்டுக்கடன் கூட  கொடுக்காது. நம்மூர் வழக்கம்போல புள்ளைகளை கடனை உடனை வாங்கிப் படிப்பிக்க வேண்டிய  பொறுப்பு பெற்றோர்களுக்கில்லை. மற்ற செலவுகளுக்கு வாரம் 20 மணி நேரம் பகுதி நேர வேலை பார்த்துக்கிட்டே பசங்க படிச்சு முடிச்சுரும்.



இதையெல்லாம்  மனசுலே வச்சுக்கிட்டு  கல்விக்கடன் வாங்கவே வேணாமுன்னா இதைப்போல ஒரு பாக்கியம் வேறுண்டோன்னு   பாலிடெக்கில் படிக்க மாணவர்கள்  நாடு முழுவதிலும் இருந்து  வந்தாங்க.  ஆரம்பமே 1781 மாணவர்கள்.  அவுங்க மட்டுமா  இடம்பெயர்ந்தாங்க? கூடவே  அவர்கள் குடும்பமும்.  ஊர்  மக்கள் தொகை கூடக்கூட  அவர்கள் தேவைகளுக்கான வியாபாரம் பெருகுச்சு. வியாபாரம் பெருசானதும் வேலை வாய்ப்புகள்  கூடுச்சு. புள்ளைங்க ( மாணவர்களின்  குழந்தைகள்)  பள்ளிக்கூடம் போகணும் என்பதால் பள்ளிகளில் எண்ணிக்கை கூடி புது டீச்சர்களுக்கு வேலை கிடைச்சது. (வரப்புயர! மாதிரின்னு வச்சுக்குங்க)


மாணவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தே கல்வி நிறுவனங்களுக்கு  அரசு நிதி உதவி  கிடைக்கும்  என்பதால்   அவைகளுக்கும் வருமானம் பெருகத் தொடங்கியது.  சுபம் சுபம். என்றானது.  வருசாவருசம் பாலிடெக்  மாணவர்கள் எண்ணிக்கை கூடிக்கிட்டே போய் இப்ப உச்சத்தில் இருக்கு.  12,000 பேர்.  அதுவும் இங்கே எங்கூர் (கிறைஸ்ட்சர்ச்) பாலிடெக்   நிலநடுக்கத்தில் அகப்பட்டு  பலவீனப்பட்டுப்போனதால்  படிக்கும் மக்களில் முக்காவாசிப்பேர்  சௌத்லேண்ட் போயிட்டாங்க.


பாலிடெக் நல்ல வளமையா நடப்பதால் சர்வதேச மாணாக்கர்களுக்கு  கட்டணம்  நியூஸியின் மற்ற தொகுதிகளைவிடக் குறைவு .  இதன் காரணமாகவும் எண்ணிக்கை கூடி இருக்கு.


என்னமா ஐடியா பண்ணிட்டேம்மான்னு  பென்னியின் புகழும் உச்சத்தில்.



இந்த  டொன் தெருவே கலை அழகோடு மின்னுது. மொத்ததில் இது பழைய ஊர் என்பதால் அந்தக்காலத்து கட்டிடக்கலையும் அம்சங்களும் நிறைந்தவைகள்  இன்னும் அப்படியே பராமரிக்கப்பட்டு பார்க்கவே ஒரு அழகா ஜொலிக்குது. பழைய கட்டிடங்களைப் பழுது பார்க்கணும் என்றாலும் ஒரிஜனல்  அழகு கெடாமல்தான் புதுப்பிக்கறாங்க. இவை விக்டோரியன்  அண்ட் எட்வேர்டியன் கட்டிடக்கலைகளாம்.


 ஆமாம்.... குடைக்கும் பாலிடெக்னிக் கல்விக்கும் என்ன சம்பந்தம்?  கல்விக் கொடை என்பதை கல்விக் குடை ன்னு  யாராவது  'முழி' பெயர்த்திருப்பாங்களோ?


தொடரும்.........:-)








தண்ணித்தொட்டி தேடிப்போன ...... ????

$
0
0
கவனமா  பார்த்துப் பறக்கணும். கொஞ்சம் தாழ்வாப் போகும் போது  சிலுவை இடிக்காமப் பார்த்துக்குங்கன்னு  விமான ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விட்டுக்கிட்டே இருக்காங்க. ஊருலேயே  உசந்த  கட்டிடம்.  செப்புத்தகடு  போர்த்திய  கிண்ணக்கூரையும் அதுக்கு மேலே இருக்கும் சிலுவையும்  விமானநிலையத்துலே இறங்கி ஊருக்குள்ளெ வரும்போதே கண்ணில் பட்டுருது.


வெள்ளையர்கள் வந்து குடியேறி நகர் உருவாக ஆரம்பிச்சது  1853.  கோவிலின் தேவையை முன்னிட்டு  1864 இல் கத்தோலிக்கர்களுக்கான கோவில்  உருவாச்சு.  மக்கள் தொகை பெருகப்பெருக  எல்லாமே விரிவடையணும்தானே?  செயிண்ட் மேரீஸ் தேவாலயம்  பெரிய அளவில் 1905 கட்டிமுடிச்சாங்க .


 எங்கூர்   தேவாலயத்தை Cathedral of the Blessed Sacrament  Christchurch Basilica,  (பார்படோஸ் ஸ்ட்ரீட்  சர்ச்சுன்னு  உள்ளுர் மக்கள் சொல்வோம். எங்களுக்கு  கதீட்ரல் என்றால்   நகரின் நட்டநடுவில்  இருப்பது/இருந்தது தான் சட்ன்னு நினைவுக்கு வருது) டிஸைன் செஞ்சு கட்டியவர்தான் இந்த இன்வெர்கார்கில் கோவிலையும்  டிஸைன் செஞ்சு கட்டினார்.



எங்கூர் கோவில் இப்போ இந்த நிலையில் (மேலே உள்ள படங்கள் அன்றும் இன்றும்)இருக்கு. நாற்பது வினாடிகள் நிலம் ஆடுனதில் எங்கூர் சர்ச்சுகளில் ஒன்னு ரெண்டைத்தவிர   எல்லாமே  தரைமட்டம். இப்ப என்னத்துக்கு  அதைப் பற்றின்னா....  பார்க்கப்பார்க்க  மனசு ஆறலையே:(  முழுவிவரம் தெரிஞ்சுக்க  நேரம் இருந்தால்  இங்கே பாருங்க.


காலையில் போனப்ப பூட்டிக்கிடந்துச்சே. இப்பப் போய்ப் பார்க்கலாமுன்னு  போனோம். கோவிலுக்கு முன்னால் குறுக்குவாட்டமா ரயில் பாதை.   யாரும் பயன்படுத்தலைன்னு  பயணிகளுக்கான ரயில்சர்வீஸை நிறுத்தி பலவருசமாச்சு. சரக்கு வண்டிகளுக்கு மட்டுமே  இப்போ.


சின்னக்கோவில்தான். ஆனா அழகா அம்சமா இருக்கு . முன் ஹாலில்  மேரிமாதா கைகூப்பி சுவருச்சி மாடத்தில் நிக்கிறாங்க.  உள்ளே   பெரிய ஹால்.  நேரெதிரா நடுவில் கருவறை. ஆல்டர் மேடையை புதுப்பிச்சுருக்காங்களாம்.  அருமையான புது டிஸைனில் வட்டச் சன்னல்.  சிம்பிள்  அண்ட் ஸ்வீட்.


கிறிஸ்மஸ் பண்டிகைக்கு  அலங்கரிச்ச நேட்டிவிட்டி ஸீன்லே ஒரு நாய்க்குட்டி!!ஹௌ ஸ்வீட்!!


ஆல்டருக்கு ஒரு பக்கம்  உள்ளே தள்ளிய ஒரு பெரிய மாடத்தில்  Our Lady of Fatima  (ஃபாதிமா) சிலை.  இதே சிலை  நம்ம வீட்டில் இருக்கு. நம்ம பழைய வீட்டு பரணில் அகப்பட்டது.  ஹைய்யோ.....ன்னு எடுத்து சாமி அறையில்  வச்சுக்கிட்டேன்.  யாருமில்லாத ஏகாந்த சேவை நமக்கு. கொஞ்ச நேரம் அமைதியா உக்கார்ந்து  நிசப்தத்தை  உணர்ந்தேன்.  மனசு லேசா இருப்பதுபோல் ஒரு உணர்வு.






ஆல்டருக்கு  வெளிப்புறச் சுவரில் ரெண்டு பக்கமும்  வளைவு மாடத்தில்  மேரிமாதாவும்  ஜோஸஃபும் போல  ரெண்டு சிலைகள்.  ஆனா உத்துப்பார்க்கும்போது  மாதா பிதாவாக இருக்காது என்றொரு தோணல்.  யாரையாவது கேட்கலாமுன்னா....யாரை?  கொஞ்சம்  கிளிக்கிட்டு  வெளியே வந்தோம்.


தரையிலும் ஓடுவேன், தண்டவாளத்திலும் ஓடுவேன்னு எதிரில் இருக்கும் ரெயில்வே லைன் சரியா  இருக்கான்னு செக் பண்ணிக்கிட்டுப் போகுது லைன் இன்ஸ்பெக்டர் வண்டி.  ட்ராலி தள்ளும்  ஆட்களையும் லைன்மேன்களையும்  நம்ம நாட்டில் சின்ன வயசில் பார்த்த நினைவு. தண்டவாளத்தின் மேல்  ட்ராலியைக் கையால் தள்ளிக்கிட்டே போய்  வேகம் எடுத்ததும்  தாவிக்குதிச்சு ஏறிக்குவாங்க.



நாம் போற போக்குலேயே   முடிஞ்சவரை ஹெர்ரிடேஜ் இடங்களையும் பார்த்துக்கணும்.  செயிண்ட் மேரீஸ்  பார்த்துட்டுப் பக்கவாட்டில் இருக்கும் தெருவில் திரும்பினால்  நகரத்துக்குள் இருக்கும் நாலு தோட்டத்தில் ஒன்னு இருக்கு.  Otepuni Gardens.பரப்பு 9.4 ஹெக்டேர்.  இதுக்கு நடுவில் வாய்க்கால் ஓடுது.  நடைபாதைகளும் இருக்கைகளுமா  சுத்தமாவும் அழகாவும் இருக்கு.


நகரசபை நிர்வகிக்கும் தோட்டங்களில் இதுவும் ஒன்னு. நகர சபைன்னதும்   நினைவுக்கு வருகிறார்  இந்த ஊர்  மேயர்.   டிம் ஷட்போல்ட். Tim Shadbolt இவர் தந்தையாகவே  (நகரத்துக்கு) இருக்கப் பிறந்தவர்.வேறெந்த வேலையும் செய்யமாட்டார்:-)இவரைப்பற்றி முந்தி ஒரு சமயம் எழுதுனது இங்கே.



வெவ்வேற  ஊர்களில் இருந்துட்டு (மேயராகத்தான்) இங்கே  வந்து  1993 - 95  வரை ஒரு டெர்ம் மேயரானார். அடுத்த டெர்ம் வேற யாரோ ( மிஸ்டர் ஹாரிங்க்டன்) போட்டியில் ஜெயிச்சுட்டாங்க.  அதுக்கு அடுத்த தேர்தல்  1998. மீண்டும்  தேர்தலில் நின்னு வெற்றி பெற்றார்.  இவரே மேல் என்று மக்களுக்குத் தோணியிருக்கும் போல. (இங்கே நியூஸியில் சிட்டிக்கவுன்ஸில் அங்கம், மேயர் எல்லாம் நேரடித் தேர்வுதான். போஸ்ட்டல் ஓட்டுதான் எல்லாமே. வீட்டுக்கு ஓட்டுச்சீட்டு வந்துரும். மூணு வருசத்துக்கு ஒரு முறை  தேர்தல்.) இப்போ அஞ்சு டெர்மா இன்னிக்கு வரை  (15 வருசம்) இவரேதான் மேயர்.


சும்மாச் சொல்லக்கூடாது , ஊரைப் பார்த்தாவே பளிச்ன்னு இருக்கு. கிறிஸ்மஸ் அலங்காரங்கள் கூட இந்த அளவுக்கு எங்க கிறைஸ்ட்சர்ச்சில் இல்லை:( இத்தனைக்கும்  எங்கூர்தான்  தெற்குத் தீவின் மிகப்பெரிய ஊர். மூணரை லட்சம் மக்கள் இருக்கோம். தலைவன் திறமையால்தான் ஊரே ஜொலிக்குது போல.

 இப்போ  எங்கூருக்கு மேயரா இருப்பவர்.........ப்ச்.  அப்பவே அவரைத் தூக்கி இருப்பாங்க. நிலநடுக்கம் வந்து இவர் பதவியைக் காப்பாத்திருச்சு. அவசரக்காலத்தில்  கொஞ்சம் உழைச்சு பேர் வாங்கிட்டார். ஆனா ரொம்ப நாளைக்கு தாங்கமாட்டார். அடுத்த தேர்தலுக்குக் காத்திருக்கோம். பேச்சும் படாடோபமும் அதிகம். ரேடியோ  டாக் ஷோ ஆள். கேக்கணுமா?


டிம் ரொம்ப ஜாலியானவர்.  ஸ்போர்ட்டிவ்.   அடக்கம், பணிவு, உதவும் மனப்பான்மை, எளிமை இப்படி .... சொல்லிக்க்ட்டே போகலாம். போனவருசம்  செயிண்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் சர்வீஸுக்காக   நிதி சேர்க்க , உலகத்துலேயே நீளமான  டிவி நேர்காணலில் பங்கெடுத்து ரெக்கார்ட் உண்டாக்கிட்டார். 28 மணி நேரம்! அம்மாடியோவ்!!!!  28 மணி நேரம் சிரிச்ச முகத்தோடு இருக்கணுமுன்னா......  செத்தேன் நான்:-)

டிம் ஷட்போல்ட் மூணு முறை கல்யாணம் கட்டுனவர்.   சட்டப்படி விவாகரத்துகள் செஞ்சபிறகுதான். இப்ப இருக்கும் மனைவி  இந்தியர்.  வக்கீலமா. (கொசுறுத்தகவல்)

இந்த ஊரின் முதல் ப்ரெஸ்பைட்டீரியன் சர்ச் இது.  பூட்டி இருக்குன்னு வெளியே  சுத்திப்பார்த்தோம்.  (சரித்திரம்  நம்பர் 12.)   10 ஃபிப்ரவரி  1915 வது  வருசம் கட்டிமுடிச்சு முதல் பூஜை.  பத்து லட்சம் செங்கற்கள். மொத்த செலவு  18,181 பவுண்ட்.  பெல் டவர்  32 மீட்டர் உசரம்.  நல்லா ஸாலிடா  நிக்குது.  தெருப் பார்த்த ரெண்டு  நுழைவாசல்களையும்  செங்கல் வச்சு மூடி இருக்காங்க. வாஸ்து தான் காரணமோ?

சுவரில் பதிச்ச சேதி ஒன்னில், 1844 வது ஆண்டு ஜெர்மனி நாட்டு மிஷனரி Rev. J F H  Wohlers  என்பவர் தன் மனைவியுடன் இந்த  ஊருக்குப்பக்கம்  ருஆபுகெ தீவில் ( Ruapuke island  15 KM from Bluff) வந்திறங்கினார். மவோரி இனத்துக்கு நிறைய சேவைகள் செய்தாரென்ற தகவல்  இருக்கு.



ஊருக்கு தண்ணி (குடிதண்ணீர்) சப்ளை செய்ய ஒரு வாட்டர் டேங்க்  வேணுமுன்னு  1888 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிச்சு 1889 இல் கட்டி முடிச்சதுதான் இந்த வாட்டர் டவர்.  முதலில் எல்லா ஊருலேயும் இருப்பதுபோல இரும்புக்கம்பி கட்டி ஏத்தி வச்சதுதான் இந்த மேல்நிலைத் தண்ணித்தொட்டி.  1887 -1888 களில் மேயராக இருந்த டாப்பர்  E.A. Tapper , இதை ஏன் கலை அழகோடு கட்டக்கூடாதுன்னு  ஐடியா கொடுத்தார். ததாஸ்த்து!


நாப்பது மீட்டர் உயரத்துலே தண்ணி உக்கார்ந்திருக்கு.  மூணு லட்சம் செங்கற்கள் என்று சொல்லிட்டுப் போகமுடியாதபடி நல்லாக் கல்லுக்கணக்கு வச்சுருக்காங்க. நல்ல உறுதியானவைகள். சாதாரண செங்கற்கள் 2லட்சம்.  சிகப்பு நிறமுள்ள கற்கள் ஒரு 80 ஆயிரம்.  மஞ்சள் நிறத்திலொரு பதினைஞ்சாயிரம், கறுப்பு நிறத்தில் ஒரு நாலாயிரம், (ஆயிரம் குறையுதே...யாரைக் கேக்கலாம்? ) இப்படி ஸாலிடா கல் கணக்கு.   மேலே ஏறிப்போக  உள்ளேயே 112 படிகள். அங்கிருந்து பார்த்தால் ஊர் முச்சூடும் தெரியுமாம்.


ஹெரிட்டேஜ் ப்ரோஷர் முகப்பில் கூட இதன் படம்தான்.


ஞாயிறுகளில்  மட்டும் உள்ளே போய்ப்பார்க்க ஒரு ஏற்பாடு இருக்கு.  நாம் போனது  திங்கட்கிழமை என்பதில் எனக்குப்  பரம சந்தோசம்.  இல்லைன்னா, நம் வீட்டு கருடர்,  கட்டாயம் ஏறிப்பார்க்கக் கிளம்பி இருப்பார். எல்லாம் போன ஜென்ம வாசனை:-)


பழைய டேங்க் ஒரு பக்கம் கோபுரமா நிக்க, பெருகிவந்த மக்கள் தொகை அனுசரிச்சு இன்னும் புதுசா ரெண்டு வட்ட டேங்குகள்  முன்பக்கப் புல்தரையில் உக்கார்ந்துருக்குகள். பிரமாண்டமான வட்டம். நம்ம கெமெராவில் அடங்காத பிடாரிகள் :-(

தொடரும்..........:-)








110 வயசுலே ஒரு பதிவர்!

$
0
0
என்னதான் சொல்லுங்க.....  வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர்க்கு இண்டியன்  என்ற சொல்லைப் பார்த்தாலோ இல்லை காதுபடக்கேட்டாலோ உடம்புலே ஒரு  கெத்தும் மகிழ்ச்சியும் வந்துருது என்பது உண்மைதானே?


இங்கே கடைவீதிகளில் வலம்வந்தபோது சில கடைகளில்  'பர்ட் மன்றொ இண்டியன் ' என்று இருந்ததைப் பார்த்ததும் இவர் எப்போடா இந்தியன் ஆனார். ஒரு வேளை நம்ம தாமஸ் மன்றோவின் சொந்தக்காரரோ என்ற நினைப்பு. (மர்லின் மன்றோ நினைப்பு வரலையான்னு  யாரும் கேக்கப்பிடாது) 


கோபாலிடம் யாரு இவருன்னு ச்சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்கப்போய்.....  'ஏன் இவரைப்பற்றித் தெரியாதா? என்ஃபீல்ட்  ஓட்டுனவர்' என்றார். (கொஞ்சம் விட்டால் காதுலே பூ சுத்திருவாரே)

 அட நம்மூர் என்ஃபீல்ட் வண்டியா?  நம்ம தோஸ்து ஒருத்தர்கூட அங்கெதானே வேலை செஞ்சுக்கிட்டு இருந்தார்.


"நம்ம அறையிலே படங்கள் இருக்,கே பார்க்கலையா?"
 
அட அவரா இவர்? மூணு படங்கள் தொங்குதே, மோட்டர்ஸைக்கிளோடு!

 "இவர்தான்  உலக ரெக்கார்ட்லே இன்னிக்கு வரை. இப்ப ஒரு ஏழெட்டு வருசத்துக்கு முந்தி சினிமாப்படம்கூட வந்துச்சே"

'ஓ' ன்னு தலையாட்டிட்டு,  அடுத்துப்போற இடம் எதுன்னு  பார்த்துக்கிட்டு இருந்தேன்.


நல்லவேளையா இன்வெர்கார்கில்  நகரத்துக்குள்ளேயே  பார்க்கவேண்டிய இடங்கள் எல்லாம்  அடுத்தடுத்து அமைஞ்சு போச்சு ஒன்னுரெண்டைத்தவிர. பார்க்குகளும் இதில் சேர்த்தின்னாலும்  விடுமுறைநாட்களில் திறந்துதானே இருக்கப்போகுது.  அது அப்புறமுன்னு குவீன்ஸ் பார்க்கின் வளாகத்துலேயே  இருக்கும்  அருங்காட்சியகத்துக்குப் போனோம்.

 வாட்டர்டவர் பார்த்தோம் பாருங்க  அதே தெருவில்  ஒரு நிமிஷ ட்ரைவில் இருக்கு. அப்பாடான்னு மழை வேற கொஞ்சம் தயவு  காமிச்சது.

மியூஸியம்  பகுதியில் நுழைஞ்சதும்    இந்தப்பக்கம் ஒரு பெரிய டுவடாரா.  அதுக்கு ஒரு மவொரி வெல்கம் கொடுத்தேன்.  மில்லினியம் ஆண்டு கொண்டாட்டத்தின் நினைவுக்கு  ரோட்டரி  சங்கம் வச்சுக்கொடுத்த சிலை.  12 வருசமாயும் பளிச்:-)  ம்யூஸியத்துக்கு   வெளிப்புறம் கார்பார்க்கிங்  பகுதியில்  பெண் சிலை கம்பீரமா நிக்குது.  கையில் சிலம்பு(மாதிரி )ஒன்னு!!!   அட!கண்ணகி நீதி கேட்டு இம்மாந்தூரம் வந்துட்டாளான்னு  பார்த்தால், இது அறிவு தேவதை   மினர்வா .  பக்கத்துலே  நம்ம இண்டியன் .  இந்த மியூஸியத்தையே பிரமிட் மாதிரி டிஸைன் செஞ்சுருக்காங்க.  ஆர்ட் கேலரியும்  இதோடு இணைஞ்சுருக்கு என்பதால்  நமக்கு ஒரு கல்லில் ரெண்டு மாம்பழம்.

இந்த டுவடாரா, முதலை, பல்லி, நம்மூர் ஓணான் இப்படி இருக்கும் வகைகளில் இடைப்பட்டதுன்னு சொல்லலாம். அதெல்லாம் பல நாடுகளில் இருந்தாலும் இந்த ஒரு வகை எங்களுக்கே எங்களுக்குன்னு சொல்றாய்ங்க.  அழியப்போகுதே இந்த இனம் என்ற பயத்தோடு கண்ணும் கருத்துமா இவைகளைக் காப்பாற்றி வைக்கணுமுன்னு அரசு சொல்லி  தபால்தலைகூட வெளியிட்டுருக்கு. டுவடாரா என்ற சொல்லே மவோரிகள்  மொழிதான்.  முதுகிலே சிகரங்கள் என்று பொருளாம்!


முழுவளர்ச்சியடைஞ்ச டுவடாரா 80 செ.மீ நீளமும்  1.3 கிலோ எடையும் இருக்கு(மாம்). வெளி முற்றத்துலே இருக்கும்  சைஸுலே அந்தக்கால டுவடாரா இருந்து,  இப்ப  தேய்ஞ்சு போச்சுன்னு  தகவல்.  முதுகுலே  கிரேக்க தொப்பி மாதிரி முள்வரிசை. குத்துமோ?  இருக்காது என்று நம்புவோம். மேல்தாடை அப்படியே கீழ்த்தாடைமேல் கவிழ்ந்து  இருக்கும். சட்னு பார்த்தால் கீழ் உதடுதெரியாது. ப்யூர் நான்வெஜிடேரியன். காடுகளில் புழு பூச்சிகளுகளுக்கு எமன்.
1940 ஆம் ஆண்டு இன்வெர்கார்கில்  ம்யூஸியத்துலே  டுவடாரா வச்சுக்கறோமேன்னு அரசாங்க அனுமதி கேட்டப்ப.....  அதெப்படி உசுரோட இருக்கும் ஒன்னை செத்தகாலேஜுலே வைக்கிறதுன்னு  மறுத்துட்டாங்க.  21 வருசம் விடாமல் நச்சரிச்சுக் கேட்டு 1961 ஆம் ஆண்டு வேற ஒரு ஊரின் உயிர்க்காலேஜுலே  இருந்து ஜியார்ஜ் இங்கே வந்து சேர்ந்தார்.  ரொம்ப ஆடம்பரமான வசதிகள் எல்லாம்  இவருக்குத் தேவையில்லையாம். எளியவர் பாருங்க. அவரு வேணான்னா நாங்க விட்டுருவோமா?

1974 இல் தனியா வெளிப்புறம் ஒரு அமைப்பு ஏற்படுத்தி “Tuatarium” என்ற பெயரும் வச்சாங்க. இதுக்குள்ளே  வெவ்வேற வகைகள் எல்லாம் இங்கே  வந்துருச்சு.  1990 வது ஆண்டு ம்யூஸியத்துக்கு புது உருவம் கிடைச்சது. அதுதான் இந்த பிரமிட் ஷேப். அப்போ நம்ம டுவடாராக்களுக்கும்  வசதி இன்னும் கொஞ்சம் தாராளமா ஏற்படுத்திக்கலாமேன்னு 200 சதுர மீட்டர் இடத்துலே இன்னும் விரிவுபடுத்திக் கட்டினாங்க.  பார்வையாளர்களுக்கு எளிதா இருக்கும்படியும்  உள்வாசிகளுக்கு  தேவையான  வைட்டமின் டி கிடைக்கும்படியாகவும் ப்ளெக்ஸிக்ளாஸ் (Plexiglass UVT acrylic)கூரை அமைப்பு. இதனால்  நம்ம டுவாக்களுக்கு (செல்லப்பெயர்!) நல்ல எலும்பு வளர்ச்சியும் தரமான முட்டையிடும்  வாய்ப்பும் கிடைச்சது. குடும்பங்கள் பல்கிப்பெருகி  சுகமா வாழ்க்கை நடக்குது. iving fossils என்று சொல்லும்படி ரொம்பவே மெதுவான வளர்ச்சிதான். அவசரமே இல்லாத வாழ்க்கை! கொடுத்துவச்சதுகள்!

காட்டு வாழ்க்கையில் இதுகள் இரவு நேரவாசிகள். நகருக்கு வந்ததும் இதுகளுக்குக்கூட வாழ்க்கைமுறை மாறிப்போச்சு பாருங்க.


இங்கிருக்கும்  ஹென்றி ஒரு பதிவர் என்பது கூடுதல் தகவல். இவருக்கு வயசு வெறும் 110தான். முதியோர் இல்லம் போரடிக்குதுன்னு, போன ரெண்டாம் வருசம்தான் பதிவு எழுத ஆரம்பிச்சார். 2011 மார்ச் முதல் வருசக் கடைசிவரை 24 பதிவு.  2012 முழுசும் ஒன்னுமே எழுதலை. புள்ளி பயங்கர பிஸி. புள்ளெகுட்டிகளைப் படிக்கவைப்பதில்  கவனமோ என்னவோ!  ஜூலியட், லூஸி, மைல்ட்ரெட்  என்று மூணு மனைவிகள்.  இவருக்கு 8 ஃபாலோயர்ஸ் கூட இருக்காங்கப்பா!!!

இவர்கள் இனத்துலேயே மூத்த & ஒரே ஒரு பதிவர் இவர்தான் போல. இவருடைய முதல் இடுகை இங்கே!  மேலே படத்தில்  மிஸ்டர் ஹென்றி.


முதல் ஹாலில்  வரவேற்பு, நினைவுப்பொருட்கள்  விற்பனைன்னு  இருக்கு. அடுத்த ஹாலில்  உள்ளூர் கலைஞர்கள்  சிலர் தங்கள் கைவினைப்பொருட்களைக் காட்சிக்கு வச்சுருக்காங்க.  பரவாயில்லாமரொம்ப சுமார் ரகம். அடுத்த ஹாலில் மீண்டும் பர்ட் மன்றோ இண்டியன்! ஆஹா... The Legendary life of Burt Munro .  ஒரு முழு ஹாலே இவருக்காக  ஒதுக்கியிருக்காங்க.


சுவர்களில் இருக்கும் விவரங்களை வாசித்ததில் தெரிஞ்சது இவர் உள்ளூர்க்காரர்.   தச்சர். பொழுதுபோக்கு, பழைய மோட்டர்ஸைக்கிளை  வாங்கி மாற்றியமைச்சு அதில் வேகம் கூட்டுவது. இருபது வருசம் இதே ஜோலியா இருந்துருக்கார். 1000 சி சிக்கும் குறைவான  எஞ்சின்  பவர் உள்ள இண்டியன் பைக்ஸ்.

அந்த இண்டியன், நம்ம இந்தியன் இல்லையாக்கும் கேட்டோ:-)))) Indian Motorcycle Company of America தயாரிப்பு, Indian Scout (motorcycle) வகை. உள்நாட்டுலே ஸ்பீடு ரெக்கார்ட் செஞ்சபிறகு   ஸால்ட் லேக் கரையோரம் உள்ள பாலைவனப்பகுதியில் அதிவேகமாப் போக பலமுறை முயன்று   1962, 1966, 1967 ன்னு  மூன்று முறை தன் வேகத்தை தானே  மீறி ரெக்கார்ட் செஞ்சுட்டார்.  முதல்முறை  அதிவேக ரெக்கார்ட் செஞ்சபோது இவருக்கு வயசு 63!!!!மூன்றாவது முறை  வேகம் காட்டுனது தன் 68 ஆம் வயசில்!!!! 190.07 MPH. இதுதான் இப்போதுவரை உலக ரெக்கார்ட். Land Speed record holder



உனக்கு 47 எனக்கு 68ன்னு, அவருடைய  இண்டியனுக்கு அப்போ 47  வயசு( அய்ய...பழைய வண்டி!)


தன்னுடைய 77 வயசுலே உடம்பு சரியில்லாமப்போய்  ஸ்ட்ரோக் மாதிரி வந்துருச்சு. மனம் உடைஞ்சுபோய் தன்னுடைய மோட்டர்ஸைக்கிள்களை உள்ளுர் டீலருக்கு வித்துட்டார்.  அதையெல்லாம் அரும்பொருளா காட்சிக்கு வச்சுருக்காங்க.


அடுத்த வருசமே தன்னுடைய 78 வது வயசில் சாமிகிட்டே போனதும் இதே இன்வெர்கார்கிலில்தான்.  ஊருக்கே ஒரு ஹீரோ!!!


இங்கே இன்வெர்கார்கிலில்  இவர் புகழ் நிரந்தரமா ஒளிவீசிக்கிட்டு இருக்கு. நிறைய மோட்டர்ஸைக்கிள் கடைகளில் இவருடைய இண்டியன் வண்டிகளைப்போல் செஞ்சு காட்சிக்கு வச்சுருக்காங்க.  பெருமையை போற்றுதும்!


ரொம்ப அஸால்ட்டா  மணிக்கு 200 மைல் ( 320 கிமீ) வேகத்துலேகூட  ஓட்டி இருக்கார். ஸ்பெஷலா   மூணு பட்டை செயின் போட்டுருந்தாராம். ஐ ன் மோட்டர்   ஸைக்கிளுக்கு:-))


The World's Fastest Indian என்ற பெயரில் திரைப்படம் ஒன்னு 2005 ஆம் ஆண்டு வெளிவந்துருக்கு. ஆன்டனி ஹொப்கின்ஸ் நடிச்சது.


ஹெர்பெர்ட் ஜேம்ஸ் மன்றோ என்ற இவர் பெயரை பெர்ட்ன்னு சுருக்கி எல்லோரும் சொல்லிக்கிட்டு இருந்த சமயம்,அமெரிக்க  பத்திரிகை ஒன்னு (American motorcycling magazine)இவரை பர்ட் Burt  என்று  பிழையா அச்சடிக்கப்போய் , போகட்டும்போன்னு இவர் தன் பெயரையும்  பர்ட் என்றே மாத்திக்கிட்டாராம். செருப்புக்கேத்தமாதிரி காலை வெட்டிக்கலாமா?


வாங்க. மாடியேறிப்போய்  அடுத்த பகுதியில் என்ன இருக்குன்னு பார்க்கலாம்.


தொடரும்............:-)))



எப்படி வந்தனரோ!!!!!

$
0
0

மனுசனைப் போல கொடிய  மிருகம் உண்டோ? அதுபாட்டுக்கு தேமேன்னு படுத்திருக்கும் கடல்சிங்கத்தைப் பின்னால் நின்னு  கொல்றான். அது வலியில் அலறுது. ஐயோன்னு இருந்துச்சு எனக்கு. என்னால் முடிஞ்சது அவனை  மனசார சபிக்க  மட்டுமே:(  தோலுக்கும் இறைச்சிக்கும் கொன்னு குவிச்சவைகள் ஏராளம்  ஏராளம்.  நல்லவேளையா இந்தக்கொடுமைகள் 'இப்ப' நியூஸியில் அறவே இல்லை என்பது ஒரு சின்ன சமாதானம்.


சின்னப்பசங்களுக்கான குகை.  அதுலே பூந்து புறப்படும்போது சட்ன்னு ஒரு  டைனோஸார்  புதரில் இருந்து தலைகாட்டி உறுமுது. பசங்க அப்படியே ஸ்தம்பித்து நிற்கும்.  மனித அசைவை  கண்டதும் அதுக்கும்  பயம் வந்துருதுபோல:-)))) சென்ஸர் மூலம் இயக்கம்.




ஆல்பெட்ராஸ் என்ற பறவையினம் ஒன்னு. கடல்புறா (ஸீகல்ஸ்) இனம் என்றாலும் அவைகளோடு ஒப்பிட்டால் இது ராக்ஷஸ சைஸ்.  ரெண்டு  இறக்கைகளையும் விரிச்சால்   அஞ்சு மீட்டர் ! இதனால் காற்றில் மிதந்துகொண்டே வெகுதூரம் போக முடியும்.


சின்னதா இருக்கும் வாசல்வழியா பார்த்தால் கண் எட்டும்தூரம்வரை பெங்குவின்கள். இவர்களைப்பற்றி ஆண்கள் பொல்லாதவர்களா ?  என்று எழுதியது இங்கே.




அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்லின் கண்டுபிடிப்பும் கையெழுத்தும்.







ஆரம்பகால  கேமெராக்கள் ஒரு இடத்தில். நல்லவேளை   நான் அப்போ பதிவர் இல்லை:-)

ஒரு சுவர் முழுசும் சாவியலங்காரம்.  நம்ம வீட்டில் இந்த 25 வருசங்களில் சேர்ந்துபோன சாவிகளுக்கு  விமோசனம்  கிடைக்கலாம். ஐடியா வந்துருச்சுல்லே!


விக்டோரியானா என்ற பகுதியில்  அந்தக்காலத்து  வீடு ஒன்னு. படுக்கை அறையும் சிட்டிங் ரூமுமா  காட்சிகள் கண்முன்னே!   மேரிபாப்பின்ஸ்  உடை அலங்காரம் அப்பெல்லாம்:-)

நேச்சுரல் ஹிஸ்டரி பகுதியில் கற்களும் சிப்பிகளுமா  ரெண்டு ஹால் முழுசும் டிஸ்ப்ளே. இந்த சமாச்சாரங்களை பல இடங்களிலும் ஊர்களிலும் பார்த்துட்டதால்  ஜஸ்ட் ஒரு பார்வையோடு  நகர்ந்துட்டேன்.


இங்கே பறவைகள் , 'இருந்தவைகளும்  இருப்பவைகளுமா' ஏராளம்.  ஒவ்வொன்னும் ஒரு அழகு.

ஒவ்வொன்னையும் க்ளிக்கும்போது  நம்ம கல்பட்டார் நினைவு வந்ததென்னமோ நிஜம். அவர் உசுரோட எடுத்தார். நான்.........

 
மவொரிகள் பகுதியிலே அந்தக்காலத்து தட்டுமுட்டு சாமான்களோடு அவர்கள் பயன்படுத்திய படகு. கனூ என்று சொல்லும் ரகம்.  முழு மரத்தையே குடைஞ்சு செஞ்சுருக்காங்க. இக்கட்டாத்தான் உக்காரமுடிஞ்ச அதுலே ஏறி எப்படித்தான் இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து நியூஸிக்கு வந்தார்களோ என்று நினைச்சுப் பார்த்தால்............. ஹைய்யோ!!!


இந்தப் பக்கங்களில் எங்கே பார்த்தாலும் நங்கூரங்களும் ப்ரொபெல்லர்களுமாத்தான்  போட்டு வச்சுருக்காங்க.  கடலோடிகள் என்பதைக் காமிக்கிறாங்கபோல. ம்யூஸியம்   மூடும் நேரம் வந்தாச்சு.  அதனால் நாங்களும் சட்புட்டுன்னு பார்த்துட்டு கிளம்பிப்போய் நின்னது வார் மெமோரியலில்.


ஊருக்கு ஒன்னுன்னு  சொன்னேன் பாருங்க, இங்கே இது கொஞ்சம் பெரிய அளவில் இருக்கு.  Invercargill Cenotaph. வீரர்களின் விவரங்கள்  முழுசும் கவனமாச் செதுக்கி இருக்காங்க. உலகப்போர்களில் மட்டுமில்லாமல்  அதுக்குப்பிறகு நடந்த போர்களிலும் கலந்துகொண்டு வீரமரணம் அடைந்த மக்களை நினைவுகூறுகிறது. அழகான பரந்த புல்வெளியும் இருக்கைகளுமா அமைதியா இருக்கும் இது மெயின்ரோடுலே (Dee Street ) இருக்குன்னா நம்புங்க. நினைவுத்தூணுக்கு முன்புறம் புல்தரையையே ஒரு டிஸைனாப் போட்டு வச்சுருக்காங்க. சிரத்தை கண்கூடு.


இதே தெருவில்  ரெண்டு பக்கமும் அங்கங்கே  விதவிதமான டிஸைனில் சர்ச்சுகள். இங்கெல்லாம் சர்ச்சுகள் நம்மூர் புள்ளையார் கோவில்கள் போலதான். ஆனால் ஒரே தெருவில் எட்டுப் புள்ளையார் கோவில்கள் இருந்து நான் பார்த்ததில்லை.

ஸேன்டி பாய்ண்ட் (Sandy Point)ன்னு ஒரு இடம்.  இங்கத்து   ஆறு ( Oreti River)    ஃபொக்ஸ்  ஜலசந்தியில் (Foveaux Strait ) சங்கமிக்கும் பகுதி. 2000 ஹெக்டேர் மணல் பரந்து விரிஞ்சுருக்குமிடம். totara மரங்கள் நிறைந்த  ஆற்றுப்பகுதி. இன்வெர்கார்கில்  ஊர்  உருவாகுமுன்னேயே இந்த இடம் மவொரிகள் நிறைஞ்ச பகுதி.  மட்டன்பர்ட் என்று சொல்லும் பறவையினங்கள் இங்கே ஏராளமா இருந்துச்சு. அவைகளை இந்த டோடரா மரத்தின் பட்டைகளைச்சேர்த்து சமைச்சு  இங்கே கிடைக்கும் ஒரு வகை ஓலைகளைக் கூடை போல் முடைஞ்சு அதுக்குள்ளே சமைச்ச இறைச்சியை வச்சுருவாங்க.  மூணு வருசம்வரை கெடாமல் இருக்குமாம்.


இந்தப்பறவைகள்  கடல்புறாக்களில் ஒரு வகை. மவொரி மொழியில் இதை Titi ன்னு சொல்றாங்க.இவைகளை வலைவீசிப்பிடிக்கும் உரிமைகள் மவொரிகளுக்கு மட்டுமே.  36 சிறு தீவுகளில்  இவைகளைப்பிடிச்சுப் பக்குவப்படுத்தி விக்கறாங்க.  இதுக்கு ஆட்டிறைச்சியின் ருசி இருக்காம்.  இப்பவும் உப்பிலிட்ட  மட்டன்பர்ட் வியாபாரம் கொடிகட்டிப்பறக்குது .கிலோக் கணக்கெல்லாம் இல்லை. பக்கெட் இவ்ளோன்னு விலை.

 மட்டன்பர்ட் தீவுன்னு கூட ஒன்னு இருக்கு. ஆனால் Poutama Island Titi தான் பேர் வாங்கி இருக்கு. மார்ச் 15 முதல்  மே மாசம் கடைசிவரை ரெண்டரை மாசத்துக்கு மட்டன்பர்ட் சீஸன். ஹெலிக்காப்டரில் அங்கே போய் இறங்கி, இரவு நேரங்களில் புதர்களில் இருந்து வெளியே உலவவரும்  வளர்ந்த பறவைக் குஞ்சுகளைப் பிடிச்சுப்போட்டுக்கிட்டு வருவாங்களாம்.


இந்தப்பகுதிகளில் ஏராளமான கேப்பேஜ் மரங்கள் (Cabbage Trees) இருக்கு. Native Tree. சும்மா விளைஞ்சு நிக்குது என்பதைத் தவிர வேறொன்னும் எனக்குத் தோணலை. இப்படிக் காடுகரையில் இருந்தால் ஓக்கே. ஆனால் வீடுகளில் சிலசமயம் இருப்பதால் ரொம்ப சல்லியம். அதோட  இலைகள், ஓலைகள் போல இருப்பவை.  நம்ம வீட்டுப் புல்வெளியில் உதிர்ந்து லான் வெட்டும் மிஷினில் மாட்டிக்கும்.  மிஷின் ஓடாது. கழட்டிச் சரி பண்ணனும். இது பேஜார் புடிச்ச வேலை. மரத்தை வெட்டிப் போடலாமுன்னா.......   அதுக்கு நமக்கு ரைட்ஸ் இல்லை.நேடிவ் ட்ரீ என்பதால் இதுக்கு(ம்) பாதுகாப்பு.

பூமி புத்திரர்களான  மவொரிகளுக்கு இந்த மரத்தின் பயன் தெரிஞ்சுருக்கு. இது பூக்கும் சீஸனுக்குக் கொஞ்சம் முன்னால்  மரத்தின் அடியில் தோண்டி அதன் வேர் பாகங்களை எடுத்து  வேகவச்சுத் தின்னுவாங்களாம். நம்ம  பனங்கிழங்கு மாதிரியா!!!! ஆனால் இது ரொம்ப இனிப்பா இருக்குமாம்.

1863 முதலே  திமிங்கில வேட்டைக்கான  whaling stations இந்த முகத்துவாரத்துக்கருகில் அமைச்சதால் எப்பவும் படு பிஸியான இடமா  இருந்துருக்கு.  திமிங்கில எண்ணெயை இங்கே காய்ச்சி எடுத்து  கப்பலில் அனுப்பிக் காசு பார்த்தாங்க.

நல்ல அகலமான ஆறுதான். அடிக்கும் காற்றும் மழையும் நம்மை வண்டியைவிட்டு இறங்கவிடலை. இங்கே வரும்வழியெல்லாம்  மௌண்டன் பைக், கோல்ஃப் க்ளப், ரோயிங் க்ளப், ஆர்ச்செரி அண்ட் போ ன்னு அவுட்டோர் ஸ்போர்ட்ஸ் வகைகள் குத்தகை எடுத்துருக்கு.


வந்த வழியே திரும்பி மெயின்ரோடில் சேர்ந்து இன்னும் கொஞ்சதூரம் போய் இடம் எடுத்தா அது ஒரெடி பீச் ( Oreti Beach) போகும் வழி. இங்கேயும் பிஸ்டல் க்ளப், ஸ்கௌட் க்ளப்ன்னு  வழி நெடுக....  பாதை முடியும்போது கண்ணுக்கு எதிரில் 'ஹோ'ன்னு ஆர்ப்பரிக்கும் கடலும்,  மணல்பரப்புமா  மனசில்  இனம்தெரியாத  லேசான ஒரு பயம் தரும்  காட்சி. பாதைக்கு ரெண்டு பக்கங்களிலும் மணல்குன்றுகள்.


இன்னும் கொஞ்சதூரம் மணலில் வண்டியை ஓட்டிப்போய் கிட்டே பார்க்கலாமுன்னு கோபால் சொன்னதுக்கு தடா போட்டேன். மணலில் கார்ச்சக்கரம் புதைஞ்சால் உதவிக்கு அக்கம்பக்கம் ஒரு ஜீவன் இல்லை. அடிக்கிற பேய்க் காற்றிலும்  விட்டுவிட்டுப் பெய்யும் மழையிலும் மாட்டிக்கிட்டு முழிக்கணுமா?  வண்டியைவிட்டு வெளியே  வந்து ரெண்டு க்ளிக்கலாமுன்னா கதவைத் திறக்க முடியாமல் காற்று தள்ளுது. கூடவே வாரி இறைக்கும் மணலும்.

நல்ல வெய்யில் இருக்கும் நாளில் இங்கிருந்து பார்த்தால் 70 கிமீயில் இருக்கும் ஸ்டீவெர்ட் ஐலேண்ட் தெரியுமாம்.  இடையில்  Foveaux strait  இருக்கே. இங்கே எப்பவும் காற்றில் பனித்துளி கலந்தே இருப்பதால்  மிஸ்ட்டியாகவே இருக்கும். கொஞ்ச தூரத்தில் நடந்துபோறவங்களைப் பார்த்துக்கிட்டே இருந்தால் காற்றில் மிதப்பதுபோல் தெரிஞ்சு அப்புறம் காணாமல் போயிருவாங்க.  நமக்கு அதிர்ஷ்டம் இல்லை காணாமப் போக!!


அறைக்குத் திரும்பினோம்.   அதிகம் ஒன்னும் தூரமில்லை. 11 கிமீதான். வரும்வழியில்  ஆற்றங்கரையில் ஒரு அழகான வீடு,அத்துவானக் காட்டில் எப்படிக் கட்டியிருக்காங்க பாருங்க.


தொடரும்........:-)



பொழுது விடிஞ்சால் புது வருசம்!

$
0
0
பார்ட்டிக்கு வா வான்னு கூப்புட்டுக்கிட்டே இருப்பதை இந்த ரெண்டு நாளாப்பார்த்துக்கிட்டே இருக்கேன்.   சிட்டி கவுன்ஸில்  சதுக்கம். Wachner Place. நாம் முந்தி மணிக்கூண்டு பார்த்தோம் பாருங்க. அதே இடம்தான்.  மூணுபக்கமும் கட்டிடங்களுக்கு இடையில் இருக்கும் திறந்தவெளி முற்றமா இருக்கு.  நாம் தங்கி இருக்கும்  இடத்துக்குத் தொட்டடுத்துதான்.


ராச்சாப்பாட்டுக்கு எதாவது  வாங்கிக்கணும். நேத்து வாங்கின பீட்ஸா பாதி அப்படியே இருக்கு. ஃப்ரிட்ஜ்லே போட்டு வச்சுருக்கேன். நாளைப் பகலுக்கும் இங்கிருந்தே எதாவது லஞ்ச் எடுத்துக்கிட்டுப்போனால் தேவலைன்னு மனசில் சட்னு தோணுச்சு.  பேக் அண்ட் ஸேவ் என்ற சூப்பர் மார்கெட்டுக்குப் போய்ப் பார்த்தால்  நேத்து ஸேலில் இருந்த வாழைப்பழம் இன்னிக்கு உச்சாணிக்கொம்பிலே  போய் உக்கார்ந்திருந்தது.   இன்னும்  கொஞ்சம் (2 நிமிச ட்ரைவ்) தூரத்தில் இருந்த  கௌண்ட் டவுன் சூப்பர்மார்கெட் போய்  மூணு வகை ஸாலட், கொஞ்சம் பழங்கள் எல்லாம் வாங்கினோம்.

 இங்கே சூப்பர்மார்கெட்டுகளும் சரி, மற்ற பெரிய கடைகள் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், ஹார்ட் வேர் இப்படி எல்லாமே நாடு முழுசும் கிளைகள் பரப்பி வச்சுருக்கு.  வடக்கு முனை முதல் தெற்கு முனை வரை  எல்லாம் ஒரே விலை.  ஸேல் ஐட்டங்களும் அப்படித்தான்  எல்லா இடத்திலும் ஒன்னு போல! கடைகளின் உள்கட்டமைப்பு கூட ஏறக்குறைய ஒன்னுபோலவே இருக்குமுன்னா பாருங்க. வேற ஊர்க் கடைகளில் வாங்குவது போலவே இருக்காது. இதுலே ஒரு நன்மை என்னன்னா.....  ஊர் ஊருக்கு ஸ்பெஷாலிட்டின்னு  ஒன்னும் இல்லாததால்  நண்பர்களுக்கு பரிசு அங்கங்கே போய் வாங்கிக் கொடுத்தால் ஆச்சு. இங்கிருந்தே மூட்டை கட்டத் தேவை இல்லை.



சிவிக் தியேட்டர் கட்டிடம்  ஆரம்பகாலத்தில் கட்டுன அதே ஸ்டைலில்  இன்னமும். பாரம்பரிய லிஸ்ட்டில் இதுவும் இருக்கு.  அப்படி அப்படியே மெய்ன்டெய்ன் பண்ணிக்கிட்டு இருக்காங்க  இந்த ஊர் முழுசும் உள்ள விக்டோரியன் ,எட்வர்டியன் காலக் கட்டுமான டிஸைன்களை!


வாங்குன பொருட்களை அறையில் வச்சுட்டு மழைத் தூரலினூடே  குடையும் பிடிச்சுக்கிட்டு அப்படியே டீ தெருவில் ஒரு மெதுநடை. நூலகம்  கண்ணில் பட்டது. ஆனால் சாத்திட்டாங்க. பரவாயில்லை. எல்லா ஊர்களிலும் இருக்கும் நூலகங்களும் ஒன்னு போலவே சேவை.  ஒரு அட்டையில் எத்தனை புத்தகங்கள் வேணுமானாலும் எடுத்துக்கலாம். உள்ளுர்ப் பயணம்  போனால், உள்நாட்டுலே எந்த ஊர் நூலகத்திலும் அதைத் திருப்பிக்கொடுக்கலாம்.டிவிடி சிடி போன்றவைகளுக்கு மட்டுமே  ஒரு கட்டணம் கட்டணும். அதுவும் அதிகமில்லை.  அதுவே அங்கத்தினர் 16 வயசுக்குட்பட்டவரா இருந்தால்  எல்லாமே இலவசம்.   தேவைப்படும் புத்தகம் ஷெல்ஃபில் இல்லைன்னா அது திரும்பி வந்ததும் நமக்கு வேணுமென்று புக் பண்ணிக்கலாம். அதுக்கு ஒரு சின்னக் கட்டணம் உண்டு. பள்ளிக்கூடப்பிள்ளைகள் வீட்டுப்பாடம் செய்ய ஒரு பகுதியும்,  நிறைய கணினிகள் வச்சு  இன்ட்டர்நெட்  வசதிகளோடு  ஒரு பகுதியும் உண்டு, இதுவும் முழுக்க முழுக்க  அனைவருக்கும் இலவசமே.  15 நிமிசம் என்ற கணக்கு உண்டு. யாரும் வரிசையில் இல்லைன்னா எவ்வளவு நேரமுன்னாலும்  வலை மேயலாம்.


 நூலகப் புத்தப் பட்டியல் பார்க்க,  நமக்கு வேண்டியது  எந்த ஷெல்ஃபில் இருக்குன்னு தெரிஞ்சுக்க, இப்ப இருக்கா அல்லது வெளியே போயிருக்கா, அப்படிப்போயிருந்தால் எப்போ திரும்பி வரும்  என்ற விவரங்கள் எல்லாம் தெரிஞ்சுக்க  தனியா ஒரு ஏழெட்டு கணினிகள்.

கண் பார்வை குறைந்துவரும் முதியவர்களுக்காக ,  பெரிய எழுத்து ப்ரிண்ட் உள்ள  புத்தகங்கள்  பல தலைப்புகளிலும்  ஏராளம். நாம் கட்டும் வீட்டு வரிகளில் கணிசமான பங்கு நூலகத்துக்குப் போயிருது.


திரும்பிப் போகும்போது  சதுக்கத்தில்   பார்ட்டி நடப்பதற்கான ஏற்பாடு ஒன்னையும் காணோம்.  எட்டுமணிக்கு மேல்தான் ஆரம்பம் என்பதால் நாங்கள் அறைக்கு  வந்துட்டோம்.  ஒன்னு சொல்லணும். இங்கே மாடியில் நம்ம அறைக்குத் திரும்பும் திருப்பத்தில் ஒரு திராக்ஷை கொத்துப் படம் மாட்டிவச்சுருக்காங்க. சாதாரணமான படம் என்றாலும் அதுக்குள்ளே ஒவ்வொரு  நிமிசத்துக்கும் ஒவ்வொரு நிறம் வந்துக்கிட்டு இருந்தது . எனக்கு ரொம்பப்பிடிச்சுப் போச்சு.

அந்தப்பக்கம் போகும்போதும் வரும்போதும், அறைக்கதவைத் திறக்கும்போதும்  இப்ப என்ன நிறமா இருக்குமுன்னு  ஒன்னை நினைச்சுக்கிட்டு அதே நிறம் அங்கே இருந்தால் மனசு (அல்ப )மகிழ்ச்சி  அடைஞ்சது உண்மை.  ஆரூடம்......  நீலம் வந்தால் போற(?) காரியம் வெற்றி.

ராச்சாப்பாட்டை முடிச்சபின் கொஞ்சநேரம் வலை மேய்ஞ்சுட்டு  'ஆச்சி மசாலா நீயா நானா ?'  பார்த்தோம். மழை வலுக்க ஆரம்பிச்சு பக்கத்து தகரக்கூரையில் பெரும்கூப்பாடு போடவும் அதையும் மீறிய பாட்டுச்சத்தம் ஒலிக்கவும்  சரியா இருந்துச்சு. கச்சேரி ஆரம்பிச்சுட்டாங்க .


ஐயோ....ராத்திரி எல்லாம் தூங்கமுடியாது போலன்னு புலம்பிக்கிட்டே இவர்  பைக்குள்ளே  இயர்ப்ளக்ஸ் தேட ஆரம்பிச்சார். ஜன்னலை அடைச்சதும் சத்தம் குறைஞ்சு போனதென்னவோ உண்மை. நியூஸி வந்த பிறகு  எந்தவொரு நியூ இயர்ஸ் ஈவ் நிகழ்ச்சிக்கும் போனதில்லை. ராத்திரி ஊர் சுற்றல் கிறிஸ்மஸ் ஈவ்  மட்டும்தான். ஆனால் இரவு 12 வரை சும்மானாச்சுக்கும் முழிச்சுருந்து  12 மணிக்கு டிவிக்காரன் ஹேப்பி நியூ இயர் சொல்லி  பட்டாஸ் போட்டு வான /வாணவேடிக்கை காமிப்பதைப் பார்த்துட்டு  தூங்கப்போவோம். இங்கே கோடைகாலம். டேலைட் ஸேவிங்க்ஸ் நடைமுறை இருப்பதால் உண்மையில் அப்போ ராத்திரி 11 மணிதான் ஆகி இருக்கும்.  டேட்லைனில் வேற இருக்கு நியூஸி. ஊருலகத்துக்கு முன்னாடியில் இது இன்னும் முன்னாடி:-)))


வாங்க,  புது வருசப் பார்ட்டிக்குப் போய் வரலாமுன்னா  சோம்பலா இருக்கு மழையில் வெளியே போகன்னார். நல்லாருக்கு. நம்ம கட்டிடத்தைத் தொட்டடுத்து சதுக்கம். இதைவிட வேற சான்ஸ் கிடைக்குமா?


 இன்னிக்கு லஞ்சு முடிச்சுட்டு  நடந்து வேடிக்கை பார்த்துக்கிட்டே போனபோது  'மேக்பேக் ' கடையில் ஸேல் போட்டுருக்குன்னு நுழைஞ்சதுலே  இவருக்கு ஒரு ஜாக்கெட் வாங்கினோம்.  66% கழிவு. ஆனாலும் இதுலேயே அவுங்களுக்கு லாபம் இல்லாமல் போகாது. முதலில் அந்தத் தொழிற்சாலை இங்கே எங்கூரில்தான் இருந்துச்சு. தயாரிப்புச் செலவு கட்டுப்படி ஆகலைன்னு  இப்ப சீனாவுக்கு மாறிட்டாங்க. ரொம்ப லைட் வெயிட். ஆனால் கொஞ்சம்கூட குளிரே தெரியாது. வாட்டர் ப்ரூஃப் வேற. பனிச்சறுக்கு, மலையேற்றம் போன்ற சகல குளிர்கால விளையாட்டுகளுக்கும் தேவையான  உள்ளாடை முதல் பெரிய கூடாரம் வகைகள் வரை இவுங்கதான் ஸ்பெஷலிஸ்ட்.  புது ஜாக்கெட்டைப்போட்டுக்கிட்டுக் கிளம்பினார்.


1942 முதல் 1950 வரை எட்டு வருசம் மேயரா இருந்தவர்  Abraham Wachner. ராணுவ வீரர். முதலாம் உலகப்போரில் தலையில் அடிபட்டு ஸ்டீல்ப்ளேட் வச்சுருக்காங்க. அப்படியும் கல்லிப்போலி போரிலும்  கலந்துக்கிட்டார். இவர் சேவையை பாராட்டி இவருக்கு 1946 இல் O.B.E. (Order of the British Empire) பட்டம் கொடுத்து கௌரவிச்சது அரசு.   நகரசபையும் ,  புதுப்பிக்கப்பட்ட சதுக்கத்துக்கு    Wachner Place என்று இவர் பெயரை வச்சுருக்கு.  தொழில் முறையில் இவர் ஷூ கடை நடத்திக்கிட்டு இருந்துருக்கார்.  இவருடைய கடை ஒரு மாடியில் இருந்துச்சுன்னு நியூஸி சரித்திரக் குறிப்புகள் சொல்லுது.


சின்னதா இருக்கும் மேடைப்பகுதியில்  நால்வர்  இசைக்குழு.  முன்னே சதுக்கத்தில் கொட்டும் மழையில்  இசைக்கேற்ப நடனமாடிக்கிட்டு  பார்ட்டியை அனுபவிக்கும் மக்கள்  மூன்று பேர் உள்ள  கூட்டம். எல்லாம் சின்னப்பசங்க. ஒரு 12 இல்லை 13 வயசு இருக்கலாம்.


சதுக்கத்தின்  ரெண்டுபக்கமும் இருக்கும் கடைகளுக்கான மேற்கூரையின் கீழ் அங்கங்கே சிலர். பசங்களோட அப்பா அம்மாவா இருக்கலாம். "வீட்டுக்கு வா. காலை ஒடிக்கிறேன். இப்படி மழையில் ஆட்டம் போட்டு, நாளைக்கு ஜுரம் வந்தா யார் க்ஷ்டப்படப்போறது? " இப்படி  மனசுக்குள்ளே ஆங்கிலத்தில் பொருமிக்கிட்டு இருந்துருக்க வேணும் அவுங்க. உலகம் எங்கும் பெற்றோர் அநேகமா ஒரே மாதிரிதான் புள்ளைகள் நலத்தில்!

இசைக்குழுவினரைப் பார்த்தால் எனக்கே பாவமாப்போச்சு. யாருக்காக? யாருக்காக .....ன்னு நான் மனசுக்குள்ளே  டி எம் எஸ் குரலில் பாடினேன்.  மழையில் நனையாம ஓரமாவே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமா போய் கொஞ்சம் க்ளிக்கிட்டு (அடாத மழையிலும் விடாமல் கடமையைச் செஞ்சுருவொம்ல) விழா முடிஞ்சு கூட்டம் வீடு போய்ச்சேரணுமுன்னு  பஸ்  மையத்துலே எல்லா ரூட்டுகளுக்கும் வண்டிகள் காத்து நிக்குது. இங்கே  மூணுபேர் இருக்காங்கன்னு  பஸ் செண்டர் அதிகாரி புலம்பினார்.  உள்ளூர் பஸ் ஸ்டாண்டு சதுக்கத்தின் பின்னால்தான்.

 எங்கூர்லே கூட  ஆபீஸ் நேரம் இல்லாத பல சமயங்களில்  மாலை 6 க்கு மேல்  ஆளில்லாமல்தான் பஸ்கள் ஓடிக்கிட்டு இருக்கும். அபூர்வமா சில நாட்களில் ஒருத்தரோ ரெண்டு பேரோ இருப்பாங்க. எப்படிக் கட்டுப்படியாகுதுன்னு  வியப்புதான்.

 பத்து நிமிசத்துக்குமேலே தாக்குப்பிடிக்கமுடியாமல் அறைக்கு வந்துட்டோம். மணி பத்தேகால்கூட ஆகலை. தெருவில் இருக்கும் கிறிஸ்மஸ் அலங்காரங்களில் கலர்லைட்ஸ் எரிஞ்சுக்கிட்டு இருக்கு. ஆஹா.... பெரிய ஊர் என்று சொல்லிக்கும் கிறைஸ்ட்சர்ச்சில் கூட இதெல்லாம் இல்லை:(


நாளெல்லாம் சுத்துனதுலே  உடல் சோர்ந்து தூக்கம் கண்ணைச் சுழட்டிக்கிட்டு வருது.  ரொம்ப லேசா அப்பப்பப் பாட்டு கேட்டுக்கிட்டே இருந்துச்சு. டப் டப்ன்னு ஒரு அஞ்சாறு சத்தம். ஓ.... 12 மணி ஆச்சு. பட்டாஸ் வெடிக்கறாங்க.  அம்புட்டுதான்  நிசப்தம் சூழ்ந்தது.  ஹேப்பி நியூ இயர்  டு த  ஹோல்வொர்ல்ட் னு  நினைச்சுக்கிட்டு  கோபாலுக்கு  வாழ்த்து  சொன்னால்.......   அசைவில்லாம அவர் வேற உலகில் இருந்தார்.

காலையில் சீக்கிரம் எழுந்திரிக்கணும். குட் நைட்.

தொடரும்.............:-)




கடலின் அக்கரை போவோமே...கட்டமரத்துலே போவோமே.....

$
0
0

இன்னொருக்கா   செக் லிஸ்ட்டை சரிபார்த்தேன். பகல் சாப்பாட்டுக்கு சாண்ட்விச், பழங்கள்,  பிஸ்கெட்ஸ் ஓக்கே. இன்ஹேலர்ஸ் ரெண்டு எடுத்து  ஒன்னு தோள்பையிலேயும் ஒன்னு என் ஜாக்கெட்  பைக்குள்ளும்  ஆச்சு.  டேஷ் மாத்திரையை சரியா ஏழரைக்கு ரெண்டுஎடுத்து விழுங்கியாச்சு.  பயணத்துக்கு  இன்னும் ரெண்டு மணிநேரம் இருக்கும்போது  போகும் பயணத்தில் டேஷ் வராமல் இருக்க இதை  முழுங்கணுமுன்னு உத்தரவாகி இருக்கு. எதுக்கும் இருக்கட்டுமுன்னு  அந்த ஸ்ட்ரிப்பை   தோள்பையில் போட்டு வச்சுருக்கு.  நல்லவேளை கோபால் , நம்ம வீட்டில் இருந்து கிளம்பும்போதே  என் ஜாக்கெட், கைக்கான  க்ளவுஸ் எல்லாம்  பொட்டியிலே முன் ஜாக்கிரதையா எடுத்து வச்சுருந்தார்.  எதுக்கு வீண் சுமை? கோடைதானே ஒரு லைட் வெயிட் ஜெர்ஸி போதுமுன்னு இருந்தேன். இப்படி அதீத நம்பிக்கை வைக்கலாமோ?   குடை இருக்கா? இருக்கு.  கேமெராவுக்கு ஒரு ஸ்டேண்டர்ட் லென்ஸ் போதும். நாம் எடுக்கும் அழகுக்கு வர்றது வரட்டும்.


நேற்று இரவு ஆரம்பிச்ச பெருமழை இன்னும் விடலை:(


இன்னிக்கு (Rakiura) ரகியூராவுக்குப் போறோம். இது ஸ்டீவர்ட் ஐலண்டுக்கான மவொரி பெயர். இங்கே நியூஸியில் எல்லா நகரங்களுக்கும் மவொரி பெயர் ஒன்னு இருக்கு. மவொரி மொழியும் இந்த நாட்டு அதிகாரபூர்வமான  மூன்று மொழிகளில் ஒன்று. ஆங்கிலம், மவொரி மொழிகள் மட்டுமே முந்தி இருந்தவை. இப்போ 2006 முதல்  New Zealand Sign Language என்றதை செவிப்புலன் குறைந்தவர்களுக்காக சேர்த்துருக்காங்க.

ஒன்பதரைக்கு படகு புறப்படும். அரைமணிக்கு முன்னே செக்கின் செய்ஞ்சுக்கவேணும்.  நேத்து டிக்கெட் புக் செய்யும்போதே  கால்மணிக்கு முன்னால் வர்றோமுன்னு சொல்லி வச்சுருந்தோம்.  இங்கே அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. இண்டர்நேஷனல் ப்ளைட்டுக்கே ஒரு மணி நேரத்துக்கு முன்னால் போனால் போதும்.


Murihiku (இன்வெர்கார்கில்) வில் இருந்து,  இங்கே    Motupohue (ப்ளஃப் )வரணுமுல்லே  Rakiura ( ஸ்டீவர்ட் ஐலேண்ட்) வுக்குப் போகணுமுன்னா?   சொல்லிப்பாருங்க...நாக்கெல்லாம் சுளுக்கிக்கிது இல்லை? அதான் ஆங்கிலப்பெயர்களே போதுமுன்னு எல்லோரும் இருக்கோம்:-)

இலவசக் கார் பார்க்கிங் ஒன்னும் கிடைக்கலை. போயிட்டுப்போகுதுன்னு  ஒரு நாளுக்கு 7 டாலர் கட்டணம் வசூலிக்கும் கார்பார்க்கில் (இது படக்குத்துறைக்கு எதிரில் இருக்கு) வண்டியை விட்டுட்டு  படகுத்துறை அலுவலகத்தில் நுழைஞ்சு பயணச்சீட்டைக் காமிச்சு, போர்டிங் பாஸ் வாங்கிக்கிட்டோம். ஒரு ஆளுக்கு ரெண்டு பெட்டிகள்வரைதான் அனுமதி. மேற்கொண்டு இருந்தால் கூடுதல் கட்டணம் உண்டு.  Bicycle, Kayak,Dinghy,motorbike விருப்பப்பட்டால் தனிக்கட்டணம் கட்டிக் கொண்டு போகலாம். இதோ இப்பப்போயிட்டு மாலை திரும்பிவரப்போறோம். இதெல்லாம் நமக்கெதுக்கு?

 ஒன்பதரைக்குப் படகு  டாண்ன்னு கிளம்பிருச்சு. சுத்தும் முத்தும் பார்த்தால்  அந்நிய(நாட்டு) முகங்கள். பலர் அருமையான  ட்ரெக்கிங் ஷூஸ் போட்டுக்கிட்டு இருக்காங்க.  காடுமலையேறும் முடிவோடுதான் இருக்காங்க போல.

23 மீட்டர் நீளமுள்ள கட்டமரன். பயணிகளுக்கு 100 இருக்கைகள். கேப்டன் தவிர  மூணு உதவியாளர்கள். பின்னால் உள்ள டெக்கில் லக்கேஜ் அடுக்கும் இடம், டாய்லெட், நின்னு வேடிக்கை பார்க்க  கம்பித்தடுப்புகள். கண் போகும் இடத்தில் எல்லாம் ஸிக் பேக் வச்சுருக்காங்க. நம்மைப்போல் டேஷ் கேஸ்கள் ஏராளம் இருக்கு!

படகினுள்ளே காஃபி, டீ போட்டுக் குடிக்க வசதி. எதாவது சாப்பிடணுமுன்னா  ஸ்நாக்ஸ் விற்பனைக்கு வச்சுருக்காங்க.பிக்னிக் லஞ்சு வேணுமுன்னா டிக்கெட் புக் பண்ணும்போதே சொல்லிட்டால் அதுக்கு தனிக் காசு வாங்கிக்கிட்டு ஏற்பாடு பண்ணி, படகு விட்டு இறங்கும்போது கையில் கொடுத்துருவாங்க.

பாதுகாப்பு வசதிகள். லைஃப் ஜாக்கெட் போட்டுக்கும் முறைன்னு (விமானத்தில்  டெமோ கொடுப்பதுபோல்) இங்கேயும்  காமிச்சார்  ஒரு ஊழியர். நல்லா வேடிக்கை பார்க்கணுமுன்னு முன் வரிசையில் போய் உட்கார்ந்திருந்தோம்.  ஆனா பெஸ்ட் ஸீட் கேப்டனோடதுதான்.

முன்னால் வரிசையில் ரொம்ப தூக்கித் தூக்கிப்போடும். அதனால் கொஞ்சம் பின்வரிசைகளில் பரவலா உக்காருங்கன்னார் கேப்டன்.  100 பேர் போகும் படகில் எண்ணிப்பார்த்br />
்போ வ௮ரு மணி நேரப்பயணம். முப்பத்தியஞ்சு  கிலோமீட்டர். ஹாஃப் மூன் பே (Half Moon Bay) ஓபான்  (Oban) படகுத்துறையில் வந்திறங்கினோம்.  வெளியேஒரு அம்பது மீட்டர் தூரத்தில் தகவல் நிலையம். வழிகாட்டி நம்மை நடத்திக் கூட்டிப்போய் தீவைச்சுற்றிக் காமிக்கும் டூர் ஒன்னு இருக்கு.  ரெண்டு மணி நேரம்.  51 டாலர் ஒரு நபருக்கு. குறைஞ்சபட்சம் ரெண்டு பேர் இருந்தால்தான் டூர் கொண்டு போவாங்க.  ரெண்டு பேர் இருக்கோம். பிரச்சனையும் ரெண்டேதான்.  அடாத மழையும், பொருத்தமான காலணி இல்லாமையும்.

இந்தத் தீவுக்கு நடக்கணுமுன்னே வெளி வேறு வயித்தைக் கலக்குது!

சரியா ஒரு மணி நேரப்பயணம். முப்பத்தியஞ்சு  கிலோமீட்டர். ஹாஃப் மூன் பே (Half Moon Bay) ஓபான்  (Oban) படகுத்துறையில் வந்திறங்கினோம்.  வெளியேஒரு அம்பது மீட்டர் தூரத்தில் தகவல் நிலையம். வழிகாட்டி நம்மை நடத்திக் கூட்டிப்போய் தீவைச்சுற்றிக் காமிக்கும் டூர் ஒன்னு இருக்கு.  ரெண்டு மணி நேரம்.  51 டாலர் ஒரு நபருக்கு. குறைஞ்சபட்சம் ரெண்டு பேர் இருந்தால்தான் டூர் கொண்டு போவாங்க.  ரெண்டு பேர் இருக்கோம். பிரச்சனையும் ரெண்டேதான்.  அடாத மழையும், பொருத்தமான காலணி இல்லாமையும்.

இந்தத் தீவுக்கு நடக்கணுமுன்னே வெளிநாட்டு மக்கள்ஸ் வர்றாங்க.சின்னதா பத்து நிமிட வாக் முதல்  5 நாட்கள்  நடை வரை உண்டு.  அஞ்சு நாள்  நாம் நடக்க கட்டணம் 1995  டாலர் மட்டுமே!

அக்கம்பக்கமா சிலபல தீவுகள் இருக்கு. மட்டன்பர்ட் தீவு   உல்வா தீவு(Ulva Island) Port William, Horseshoe Bay இங்கெல்லாம் போய் பார்த்துவர   Water Taxi கூட இருக்கு. இந்தத் தீவுகளிலு குறிப்பாக தேசிய பூங்காவின்  அக்கரை ஓரங்களிலும்  அஞ்சு வகை பெங்குவின்கள், மூணுவகை ஆல்பட்ராஸ் பறவை இனங்கள், அண்டார்க்டிக் பறவைகள், கிவி பறவைகள்  இப்படி ஏராளமானவைகளைப் பார்க்கலாம். டால்ஃபின்ஸ், ஸீ லயன்ஸ் இப்படி  சிலஇனங்களும் மயம்,  வாரஇந்த ஸ்டீவர்ட்  தீவின் பரப்பளவு  மொத்தம்  1570 கிமீ. இதுலே 85 %  மலையும் காடுகளுமே. ரகியூரா தேசிய பூங்கா.  கடலையொட்டி இருக்கும் சின்ன நிலப்பரப்பில்  சின்னச் சின்ன கிராமங்கள்.பெரிய ஊர் (டவுன்)என்று சொன்னால் இந்த ஓபான் (Oban) தான்.  மக்கள் தொகை இந்த முழுத்தீவுக்கும் சேர்த்து  வெறும் (400) மட்டுமே!

இங்கே அதிகம் விலை உயர்ந்த  ஒன்னு மின்சாரம்! நியூஸியின் மற்ற பகுதிகளைவிட நாலுமடங்கு அதிகம். எல்லாம் டீஸல் பவர் என்பதுதான் காரணம். மற்றபடி ஒரு சூப்பர் மார்கெட், போஸ்ட் ஆஃபீஸ்,  நாலைஞ்சு  சாப்பாட்டுக்கடைகள்,  ஒரு ம்யூஸியம்,  வார் மேமோரியல் , ரெண்டு சர்ச்சுகள் , நூலகம், சில ஹொட்டேல்கள், பேக் பேக்கர்ஸ்க்கு  நாலைஞ்சு லாட்ஜ்கள் இப்படி இருக்கு.  செல்ஃபோன் சர்வீஸ் பல சமயங்களில் வேலை செய்யாது.

டாக்  அலுவலகம்(Doc.  Department ofConservation)  பக்கத்து தெருவில்(!) இருக்குன்னு அங்கே போனோம். எல்லாம் மழையில் முக்கால்வாசி நனைஞ்சுக்கிட்டேதான். சின்ன குடையில் ரெண்டு குண்டூஸ்க்கு இடமில்லை:-)


மழைக்கு இதமா  கதகதன்னு இருக்கு இடம். ஹீட்டர்கள் ஓடிக்கிட்டே இருக்கு. உள்ளே நல்ல கூட்டம்.  காடுசுற்றிகள் அடைமழையில் காடுகளுக்குள் போக முடியாமல் இங்கே வந்து காலநிலை மற்ற விவரங்களுக்காகவும் கொஞ்சம் ஓய்வெடுக்கவுமா காத்து நிக்கிறாங்க. ட்ராக் கண்டிஷன்ஸ், அடுத்த சில நாட்களின் காலநிலை எல்லாம் அப்பப்ப எழுதிப்போட்டுக்கிட்டே இருக்காங்க.


தேசியப்பூங்காவுக்குள் நுழைய அனுமதி இலவசம் என்றாலும் முதலில் டாக் அலுவலக்ம் போய் நம்ம பெயரைப்பதிஞ்சு கொண்டு எதற்காக வந்துருக்கோம். எத்தனை நாளில் காட்டுக்குள் இருக்க உத்தேசம், அங்கிருந்து வெளிவரும்நாள் எப்போது என்றெல்லாம்    இன்டென்ஷன் ஃபார்மில் எழுதிக்கொடுக்கணும். அப்பதான் குறிப்பிட்ட நாளில் நாம் திரும்பி வரலைன்னா தேடிக்கண்டுபிடிக்க ஆள் அனுப்புவாங்க. .

இங்கே ஊர்வன (அதாங்க  பெருசு, பெயர் சொல்லாதது)  சிங்கம் புலி கரடின்னு  ஒன்னும் இல்லாததால் காட்டுக்குள்ளே பயமில்லாமல் போகலாம். மலைகளும் அடர்ந்த காடுகளுமா இருக்கு.  Mount Anglem மலைச்சிகரத்துக்கு  979  மீட்டர் உயரம் ஏறிப்போகணும். இதுதான் அதிக உயரமான சிகரம் இந்தத் தீவில்.

அந்தக்கால காடோடிகள் மலைஏறிகள் கொண்டு போன பொருட்கள். அவுங்க வாழ்க்கைமுறை, இருப்பிடம் இப்படி சில அங்கே டிஸ்ப்ளே வச்சுருக்கு. சாமான்களைப்பார்த்தால்...சிம்பிளான வாழ்க்கைக்கு இதுவே போதுமுன்னு தோணிப்போகுது. மவொரிகள் சமைக்கும் முறை, உணவுகளை ரெண்டு மூணு வருசம் கெடாம எப்படிப் பாதுகாத்து வச்சாங்க என்றெல்லாம் பார்க்கும்போது வியப்புதான் மிச்சம்!!!


மழை நிக்கட்டுமேன்னு கொஞ்ச நேரம் உக்கார்ந்திருந்தால்.... அந்த இளம்சூட்டுக்கு அப்படியே கண்ணைச் சுத்திக்கிட்டு வருது தூக்கம்.  வேலைக்காகாதுன்னு கிளம்பி வெளியே வந்தோம்.  மழை விடாமல் பேய்ஞ்சால் பூமிக்கடியில் இருக்கும் புழுப்பூச்சிகள் வெளியில் வந்துருமாம். வாத்துகளுக்கு நல்ல வேட்டை.

கடலை ஒட்டிப்போகும் தெருவில் நுழைஞ்சு நடக்கும்போது , ம்யூஸியம் போகும் வழின்னு போட்ட அம்புக்குறிக்குள் பாய்ந்தோம். அடிக்கும் மழையில் கெமெராவைக் காப்பாற்றக் கஷ்டப்பட்டுத்தான் போனேன்.

தொடரும்.......:-)

Viewing all 1428 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>