Quantcast
Channel: துளசிதளம்
Viewing all 1429 articles
Browse latest View live

Article 0

$
0
0
என்னப்பா....இன்னிக்கு இப்படிப் படுத்தறே ப்ளொக்ஸ்பாட் ஆண்டவா?








கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா? நோ ஒர்ரீஸ்!!!

$
0
0
மன்னிப்பு கேட்கும் தொனியில்  ரெண்டு டாலர் கட்டணம் என்று சொன்னாங்க கவுண்ட்டரில் இருந்த பெண். அதுகூட இந்த இடத்தை மெயிண்டெய்ன் செய்யத்தான் என்று சொன்னதைக் கேக்க எனக்கே பாவமாப் போச்சு.வெறும் 400 பேர் வசிக்கும் ஊரில் உள்ளூர் மக்கள் தினமும் ம்யூஸியம் வந்து போவாங்களா என்ன? (இங்கே வேலை(!) செய்யும் பெண்மணி தவிர)


சின்ன இடம்தான் என்றாலும் வெளிப்புற வெராண்டாவில்  ரெண்டு மூணு பெஞ்சு இருக்கைகள் போட்டு மழைச்சாரல் அடிக்காமல் இருக்க முன்புற மறைப்பும் அதில் மழைக்கோட்டு, குடைகள் எல்லாம் மாட்டி வைக்க வசதியுமா நல்லாவே இருக்கு.


.வெளி வாசலில் ஒரு ப்ரொப்பல்லர். அந்தப் பக்கமா திமிங்கிலக்கொழுப்பு காய்ச்சி எடுக்கும் கொப்பரைகள். கடலும் கப்பலுமா இருக்கும் பகுதி என்பதால் இந்தப்பக்கங்களில் எல்லாம் கப்பல் சமாச்சாரத்தை வாசல் முற்றத்தில் வைப்பது  ஒரு ஃபேஷனாப் போயிருக்கு. இல்லேன்னா  வாஸ்து காரணமோ???)  ஆனா ஒன்னு சொல்லணும். எல்லாவே விதவிதமான டிஸைன்கள்தான்.  ப்ளஃப் மியூஸிய வாசலில் அஞ்சு இதழ் பூ மாதிரி ஒன்னு அட்டகாசமா இருக்கு!

மவொரிகளில் அந்தக்கால உடைகள், மட்டன் பர்ட் சமைச்சுப் பார்சல் செய்ஞ்சு வைக்கும்  ஓலைப்பைகள் , அவர்கள் பயன்படுத்திய  மீன்பிடிக் கருவிகள் இப்படி ரெண்டு மூணு டிஸ்ப்ளே இருக்கு. தவிர... இங்கே மற்றவர்கள் வர ஆரம்பித்தபின் அவர்கள் கொண்டுவந்த,பயன்படுத்திய  பொருட்கள் ஏராளம்.

இங்கத்து சரித்திரம்  ஒரு 200 வருசம்கூட இல்லை என்பதால் அகழ்வாராய்ச்சி எல்லாம் செய்யாமலேயே   அப்போதைய மக்களின் வழிவந்த குடும்பத்தினர்  தானமாக கொடுத்தவைதான். தங்கள் முன்னோர் பயன்படுத்தியவை சரித்திர முக்கியத்துவம் பெற்றது. அவைகளை ஊருலகம் பார்த்து ரசிக்கணும் என்ற ஆர்வமும் பெருந்தன்மையும்தான் காரணமா இருக்கணும். (ஐயோ... எங்க கொள்ளுப்பாட்டி போட்டுருந்த கெம்புக்கம்மல்  இப்ப இருந்துருந்தா நான் நம்மூர் மியூஸியத்துக்குக் கொடுத்துருப்பேனா என்பது சந்தேகம்தான்.  நல்ல மாதுளைமுத்துப்போல் ஜொலிக்குமாம் கம்மல்!! சுத்தத்தங்கம்! )


மைக்கூடும் தொட்டு எழுதும் கட்டைப்பேனாவும்  படிச்சவங்க வீட்டுலே இருக்கும்  அற்புதப்பொருள்!

ஆதிகாலத்து அமெரிக்கன் டைப்ரைட்டர் இது!



டெலிபோன்  எக்ஸ்சேஞ்ச்.  பிபிஎக்ஸ். நீங்க ரிஸீவரை எடுத்தவுடன் இங்கே விளக்கெரியும். ஆபரேட்டர்  என்ன நம்பர் வேணுமுன்னு கேட்டு  கனெக்‌ஷன் தருவாங்க.


இது என்னன்னு சொல்லுங்க?  துருத்தி!  ஹைய்யோ... பார்த்து எவ்ளோ நாளாச்சு!  வத்தலகுண்டு வாழ்க்கையில்  வாசலில் ஈயம் பூசித்தர வருொல்லக் கேட்டுருக்கேன்.



அய்ய... எச்சில் கும்பா!!! சில ஊர்களில் எச்சில்படிக்கம் என்றும் சொல்லக் கேட்டுருக்கேன்.

புகைபிடிக்க பைப் அதுக்கு ஒரு மரக்கவர்!

சிகெரெட் வர ஆரம்பிச்சதும் அதை வச்சுப்பிடிக்க ஒரு ஹோல்டர்.

காஃபி கொட்டை அரைக்கும் மிஷின் இருக்கு. ஃபில்டரைத்தான் காணோம். இல்லேன்னா அடிக்கும் மழைக்கு ஒரு ஃபில்டர் காஃபி போட்டு சூடாக் குடிச்சால் எவ்ளோ நல்லா இருக்கும் இல்லே?

மீசையில் ஒட்டாமல் நுரை ததும்பும் காஃபியைக் குடிக்கணுமுன்னா இது வேணும். என்னமா (உக்காந்து) யோசிச்சு இருக்காங்க பாருங்களேன்!!!!

தையல் மிஷின்கள்!!  கடந்து வந்த தூரம் அதிகம் !!  இப்போ. கண் சரியாத் தெரியாத என்னைப் போன்றோருக்கு தையல் மெஷீனில் தானே ஊசியில் நூல்கோர்க்கும் வசதி கூட வந்துருச்சு. ஒன்னரை வருசத்துக்கு முந்தி நான்  நியூஸி திரும்பினதும்  அட! அப்படியான்னு ஒன்னு வாங்கிக்கிட்டேன்! ரெடிமேடில் விஸ்தரிப்பு வரலாம்!!!)




ஆமாம்..   மேலே உள்ள படம் ,இது என்னவா இருக்குமுன்னு சொல்லுங்க பார்க்கலாம்.


பனிரெண்டரை மணி. லஞ்ச் டைம்.  ம்யூஸியம் வாசல் பெஞ்சில் உக்கார்ந்து  கொண்டு போன சாப்பாட்டை முடிச்சதால் கோபாலுக்கு கனம் குறைஞ்சது நிஜம்:-)




தொடரும்..........:-))

பி.கு: போன இடுகையில் படம் இல்லாத குறையை இந்த இடுகையில் தீர்த்தாச்சு:-))))


























தேவையா உனக்கு இதெல்லாம் .:-)

$
0
0
கடிகாரமுள் நகரமாட்டேங்குதே, நின்னுபோச்சா என்ன? வாய் வலிக்க ஸாண்ட்விச் தின்ன ஆரம்பிச்சு பழத்தோடு லஞ்சை முடிக்க வெறும் பத்து நிமிசம்தான் ஆகி இருக்கு. மழை ஓயாது. பேசாம நடையைக் கட்டலாம்னு ஹாஃப் மூன் பே நடுப்பகுதிக்கு வந்தோம். வர்ற வழியில் கை நீட்டி அணைக்க தயாரா இருந்தார் மரஆள்:-)




வார்மெமோரியல் முன்னே நிக்கும்போது இடமா வலமான்னு கேள்வி. வலம் போவது நல்லதுன்னு பத்து எட்டு நடந்தால் தபால் நிலையம். கராஜ் போல பெரிய ஷெட்டும் அதுக்குள்ளே மெயில் பாக்ஸஸ் இருக்கு. தபால்காரர் வீடுகள் தோறும் போய் விநியோகம் பண்ணமாட்டார் போல. பொட்டி எண் வாங்கி வச்சுக்கிட்டு இந்தப்பக்கம் போகும்போது திறந்து பார்த்து உள்ளே கடிதாசு இருந்தாலெடுத்துக்கணும். மழைக்கோட்டுடன் நாயை வாக் கூட்டிவந்தவர் அவர் பொட்டியைத் திறந்து பார்த்துட்டு தலையை ஆட்டிக்கிட்டார். ரெண்டு நிமிசம் கவுண்ட்டரில் இருந்தவருடன் சின்னப்பேச்சு. மழை இன்னிக்கு நிக்காது. இன்னும் நாலுநாளைக்கு இப்படித்தான்.

தபால் அலுவலகம், இன்னும் சில சமாச்சாரங்களுக்கும் சேர்த்துதான் சேவை செய்யுது போல. இந்தத் தீவு விமான சர்வீஸுக்கும் இங்கேதான் செக்கின் பண்ணிக்கணும். பொட்டிகளை வாங்கிக்கிட்டு போர்டிங் பாஸ் கொடுத்துடறாங்க. பிக்கப் வேன் வந்து எல்லோரையும் வாரிக்கிட்டு ஏர் ஸ்ட்ரிப்லே கொண்டு போய் விட்டுருது.

அங்கே இருந்த கண்டாமுண்டா சாமான்களுக்கிடையில் உக்கார்ந்திருந்தப்ப ' இது உனக்குத் தேவையா? ' ன்னு வடிவேலுபாணியில் மனசு கேட்டது. போச்சு...வருசாபிறப்பன்னிக்கு இப்படி அடைமழையில் லோலோன்னு தெருத்தெருவாத் திரிஞ்சால்.....வருசம் முழுசும் அலையத்தான் போறேனா? ஙே.......

இந்த அழகில் நேத்து டிக்கெட் பதிவு செய்யும்போது காலையில் முதல் படகுலே போய் மாலை கடசிப்படகுலே வரலாமுன்னு கோபாலிடம் சொன்னப்ப...மனுசர் என் பேச்சைக் கேக்கலையே!!! 'படகுத்துறைக்கு வர அரைமணிநேரம் கார் பயணம். அரை மணி முன்னாலே வரணுமுன்னு வேறசொல்றாங்க. காலை எட்டுமணி படகு வேணாம். கொஞ்சம் நிதானமாத்தான் வரலாமே' ன்னுட்டார். பேச்சைக்கேக்காததுகூட நல்லதாப்போச்சு இப்போ:-)))

 கடலுக்கு முகத்தைக்காட்டிக்கிட்டுதான் எல்லா கட்டிடங்களும் ! ஹாஸ்டலிங் இண்டர்நேஷனல். பேசாம இங்கே ஒரு நாள் தங்கி இருந்துருக்கலாமோ?

 பெங்குவின் இருக்கு போர்டு. அட! எங்கே இருக்குன்னு சுத்தும்முத்தும் பார்த்தால் இருந்துச்சு அந்த போர்டுலேயே:-) வழிகாட்டிப் பலகைகள் சொல்லும் ஏஞ்சலிக்கன் சர்ச்சையோ இல்லி அந்த அப்ஸர்வேஷன் ராக்கையோ போய் பார்க்கும் உத்தேசமில்லை இப்போதைக்கு./ கொட்டும் மழையில் ஏற்றத்தில் ஒரு கிலோ மீட்டர் நடக்க என்னாலாகாது.

 அதுக்குப் பதிலா திரும்பி படகுத்துறைக்கு போகும் வழியில் ஒரு சர்ச் தெரியுது பாருங்க அங்கே போகலாமுன்னேன். பொடிநடையா நடந்து சரிவுப்பாதையில் ஏறிப்போனோம். அழகான சின்ன கட்டிடம். பக்கத்தில் தொட்டடுத்து ஒரு அறை. அங்கிருந்தவர் எங்களைப் பார்த்ததும் வெளியே வந்து வரவேற்றார். சர்ச்சைப் பார்க்க வந்திருக்கோமுன்னு சொன்னதும் அவருக்கு பயங்கர மகிழ்ச்சி. பாவம் வேறு மனுஷ அரவமில்லாமல் போரடிச்சுக்கிடந்துருப்பார் போல!

 இவர் பாதிரியார் இல்லை. இந்தப் பக்கங்களில் பாதிரியாருக்கு அடுத்த படியில் உள்ளூர் பெருமக்கள் சிலர் சர்ச்சைப் பார்த்துக்கும் பொறுப்பேத்துக்கறாங்க. இவுங்களை எல்டர்ஸ்ன்னு சொல்றாங்க. பெரிய சர்ச்சா இருக்குமிடத்தில் எல்லாம் சம்பிரதாயப்படி வழிபாடுகள் நடக்குது. எல்டர்ஸ் கூடமாட உதவி செய்யறாங்க. ஆனால் இதுபோல ஆளரவமில்லாத சின்ன இடங்களில் எல்டர்ஸே வழிபாடு நடத்தறதுமுதல் சர்ச்சைக் கவனிப்பதுவரை செய்யறாங்க.

 இந்த ஓபான் சர்ச்சுலேயும் மூணு எல்டர்ஸ் இருக்காங்க. வாரம் ஒருத்தர்ன்னு முறை போட்டு ஆண்டவனுக்கு சேவை செய்யறாங்க. மெயின் லேண்டுலே இருந்து வர்றவங்கதான் எல்லோருமே. ஆனால் இப்படி ஒரு வாரம் முச்சூடும் மோட்டுவளை பார்த்து உக்கார்ந்துருந்தா என்னதான் அழகான இடம் என்றாலுமே மனுஷனுக்கு போரடிச்சுத்தான் போகும்!

 இந்த சர்ச்சுக்கு இப்போ வயசு 109. சண்டே சர்வீஸுக்கு ஒரு இருபதுபேர் வந்தால் அதிசயம். சர்வீஸ் முடிஞ்சதும் காஃபி, டீ, ஸ்நாக்ஸ் எல்லாம் (பிரசாதமா) கொடுத்தாலுமே.......

 ஆறுவரிசை பெஞ்ச் இருக்கைகள் போட்டு அம்சமா இருக்கு உள்ளே! சின்னதா ஒரு ஆல்ட்டர். கிறிஸ்மஸ் அலங்காரங்கள் இன்னும் அப்படியேதான் வச்சுருக்காங்க.. எப்பவும் புது வருசம் பொறந்து கொண்டாடினபிறகுதான் அலங்காரங்களை அடுத்த வருசத்துக்கு வேணுமேன்னு பத்திரமா எடுத்து வைப்பாங்க. நாமும் நம்ம வீட்டில் அப்படித்தானே செய்யறோம். நான் ஜன்னலில் வச்ச அலங்காரங்களை முந்தாநாள்தான் எடுத்து பத்திரப்படுத்தினேன்.

 நேடிவிட்டி ஸீன். பெரிய மரத்தொட்டிலில் வைக்கப்புல்லுக்கிடையில் பெரிய சைஸில் குழந்தை யேசு. ஆல்டருக்கு முன்புறம் உல்லன் நூலால் பின்னிய உடுப்புகளுடன் நேடிவிட்டி ஸீன். அந்த மூன்று ராஜாக்கள் அசப்புலே பார்த்தால் பஞ்சாபிகள் மாதிரி இருக்கு. அச்சு அசல் சர்தார். ஒரு உருவம் அப்படியே சர்தாரிணி. கழுத்தில் துப்பட்டா (போல) கூட இருக்கு.

எல்டர் ஜோவிடம் சர்ச்சைப்பற்றியும் உள்ளுர் மக்களைப்பற்றியும் கொஞ்சம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். இந்தியாவிலிருந்தா வந்துருக்கீங்கன்னு வியந்தார். ஆமாம்.... ஆனால் கிறைஸ்ட்சர்ச்சில் வசிக்கிறோமுன்னு சொல்லி ஆர்வத்தை அணைச்சேன். விஸிட்டர்ஸ் புத்தகத்துலே எழுதிருங்கன்னார். நமக்கென்ன எழுதத்தெரியாதா.:-))))

அங்கங்கே மதங்களுக்கிடையில் சண்டை, ஒரே மதத்தில் இருக்கும் பிரிவுகளுக்கிடையில் சண்டைன்னு உலகம் அமர்க்களமா இருக்கும்போது இந்த சர்ச்சில் உள்ளுர் ரோமன் கத்தோலிக் பிரிவினர் அவுங்க திருச்சபை நடத்திக்க மாசம் ஒரு ஞாயிறு , இங்கே இதே சர்ச்சில் இடம் கொடுத்துருக்காங்க இவுங்க. அதுக்கே ஆட்கள் வந்துட்டாலும்............


சண்டை சச்சரவுகள் இல்லாததுக்கு முக்கிய காரணம் ஒன்னுதான் , மக்கள் கூட்டம் குறைவு. ஆளில்லாத ஊருலே யாரோடு சண்டை போட? அவுங்கவுங்களுக்கு அவரவர் மதநம்பிக்கை. இருந்துட்டுப் போகட்டுமே! மனுசனை சகமனுசனா பார்க்கத் தெரிஞ்சா எதுவுமே பிரச்சனை இல்லை.

கொஞ்ச நேரம் அங்கே தியானம் செஞ்சுட்டு கடவுளே எல்லோரையும் காப்பாத்துன்னு வேண்டிக்கிட்டேன். இன்னும் இரண்டு பேர் சர்ச்சைப் பார்க்க வந்தாங்க. எல்டர் அவர்களை வரவேற்றார்.

கோவில் முற்றத்தில் இருந்து கடலும் படகுமா காட்சி அருமை! இறங்கிவரும் வழியில்தான் கண்ணில்பட்டது இங்கே தியேட்டர் ஒன்னு இருக்கும் சமாச்சாரம். லோக்கல்'ஸ் டெய்ல் என்று ஒரு ஷோ நடக்குதாம்.

 ப்ச்... நேரம் கடத்திட்டோமேன்னு இருந்துச்சு எனக்கு. கதை நாயகனை நேரில் காணும் சான்ஸ் போயே போச்:( தினமும் பகல் 1 மணி, 4, 6 ன்னு மூணு ஷோ. ஞாயிறு மட்டும் அந்த ஆறுமணி ஷோ கிடையாது. 40 நிமிசம் ஓடும் படம். உள்ளூர் ஆட்களையும் சரித்திரங்களையும் நகைச்சுவையோடு காமிக்குதாம் . Photos of Bunkhouse Theatre, Stewart Island
This photo of Bunkhouse Theatre is courtesy of TripAdvisor

சாப்பாடானதும் நேரே போய் படம் பார்த்துட்டு இங்கே வந்துருக்கலாம். கோட்டை விட்டுட்டோம். ஆனா.... தகவல் எதுவும் இதுக்கு முந்தி நம்ம கண்ணில் படலையே.:( இன்ஃபர்மேஷன் ஈஸ் வெல்த் என்பது சரிதான்! நமக்கு மூணரை மணி படகுக்குப் போயாகணும்.

 டாக் ஆஃபீஸுக்குப் போய் கொஞ்ச நேரம் போக்கிட்டு மூணுமணிக்கு படகுத்துறைக்கு வரலாமான்னு கோபாலுக்கு தோணுது. ச்சும்மா சும்மா மழையில் இங்கேயும் அங்கேயும் திரிய வேண்டாம். பேசாம படகுத்துறைக்கே போய் உக்காரலாமுன்னு எனக்குத் தோணுது.

 கடல் ஓரமா தண்ணீரில் நிக்கும் டெர்மினலுக்கு வந்தோம். முழுக்க முழுக்க மரத்தால் கட்டப்பட்ட து. கீழே படகுத்துறைக்கான ஆஃபீஸ், மாடியில் ஒரு கேஃபே. செக்கின் செஞ்சு போர்டிங் பாஸ் வாங்கியதும் மாடிக்குப்போனோம். மூணுபக்கமும் அகல ஜன்னல்கள் வச்சு அருமையான வ்யூ!

 ஒரு மணிநேரம் வேடிக்கை பார்ப்பதும் காஃபி குடிப்பதுமாப் போச்சு. இதுக்கிடையில் நம்ம படகு வந்தது. லக்கேஜ் ஏற்ற ஆரம்பிச்சாங்க. குட்டியா ஒரு க்ரேன். பயணிகளின் ஸூட்கேஸ்களை அடுக்கி, நல்ல டார்ப்பாலின் போட்டு மூடிக்கட்டிய பெரிய உலோகப்பொட்டிகள் ஒன்னொன்னா தளத்துலே அடுக்கினாங்க.

 மூணேகாலாச்சேன்னு கீழே வந்தால் எக்கச்சக்கமான கூட்டம். அடுத்துவரும் நாலைஞ்சு நாட்களும் மழையைத்தவிர வேறொன்னுமில்லைன்னு ஆகிப்போனதால் எல்லோரும் தீவைவிட்டுக் கிளம்பிட்டாங்க. சும்மா தேவுடு காத்து என்ன பயன்?

 படகு முழுசும் நிறைஞ்சு வழிஞ்சது மக்கள் திரளால்! வரும்போது இருந்த ஆட்டமும் தூக்கிப்போடுவதும் காணோம். அப்படியே தன்ணீரைக் கிழிச்சுக்கிட்டு அனக்கம் இல்லாம போகுது. நோ டேஷ் எனக்கு:-)

 நாலரைக்கு ப்ளஃப் வந்து சேர்ந்தோம். என் தென்துருவக் கனவை கிடப்பில் போட்டு வச்சேன். வாய்க்கும்போது வாய்க்கட்டும்.

 எங்கநாட்டு பிரதமருக்கு போனவாரம் வாய்ச்சது. நம்ம ஸ்காட் பேஸ் இப்போ தன்னுடைய 56 வது பிறந்தநாளைக்கொண்டாடுது. அண்டார்க்டிகாவுக்கும் நியூஸிலாந்து மவோரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள உறவை உறுதிப்படுத்தும் வகையில் அங்கே ஒரு நினைவுச்சின்னத்தை திறந்து வைக்கப்போனார். இது இவருடைய ரெண்டாவது விஸிட். (போனமுறை இவர் எதிர்கட்சித்தலைவரா இருந்தபோது (2007) ஒரு ச்சான்ஸ் கிடைச்சது) ஆனால் இந்தமுறை துருவத்தின் மையப்புள்ளியைத் தொட்டுடணுமுன்னு இவருக்கு ஆசை(யாம்) கொடிய பனிக்காற்று காரணம் ரெண்டு நாள் தள்ளிப்போட்டுட்டு அப்புறம் துருவ மையப்புள்ளிக்குப்போய் வந்துட்டார். இதுவரை ரெண்டே ரெண்டு பிரதமர்கள்தான் அண்டார்க்டிகா போய் வந்தது. 2007 இல் ஹெலன் க்ளார்க் போய் வந்தாங்க. 

இந்தப்பக்கம் எப்போ இனி வரப்போறோமோன்னு இன்னொருக்கா 'குமரி அம்மன்' கோவிலையும் ஸைன்போஸ்ட்டையும் (காருக்குள் இருந்தபடியே) தரிசனம் செஞ்சுட்டு இன்வெர்கார்கில் வந்து சேர்ந்தோம்.

 எதிரில் இருக்கும் சினிமா தியேட்டரில் ஒரு படம் பார்க்கலாமான்னு போனால்.... ரெண்டு பேரின் ச்சாய்ஸும் ஒத்து வரலை. அவருக்கு Life of Pi எனக்கு Hobbit. பேசித்தீர்த்துக்க முடியலைன்னு சினிமா போவதை ஒத்திப்போட்டோம். இப்படியாக புது வருசத்தின் முதல் நாள் முடிஞ்சது.

நாளைக்கு வேற இடங்களைப் பார்க்கலாம். நல்லா ஓய்வெடுங்க.

 தொடரும்........:-)

மயிலே மயிலே உன் தோகை எங்கே...........

$
0
0

விட்டுப்போனவைகளை இன்னிக்கு மாலை 4 மணிக்குள்ளே பார்த்து முடிக்கணும்.  சோம்பல்பட்டால் ஆகுமா?  சரியா காலை எட்டேகாலுக்கு அறையைப்பூட்டிக்கிட்டு கீழே வந்தாச்சு.  முதல்லே எதிரில் இருக்கும் சரித்திர சமாச்சாரத்தை எட்டிப்பார்க்கணும். பொதுவா அப்புறம் ஆகட்டுமுன்னு சொல்லிச் சொல்லியே   ரொம்பப்பக்கத்தில் இருக்கும்  இடங்(கள் கடைசியில் விட்டுப்போகும் :( பேங்க் ஆஃப் நியூ  சௌத் வேல்ஸ். நாம் தங்கி இருக்கும் இந்தப்பகுதிக்கு  பேங்க் கார்னர் என்ற பெயரே இதை வச்சுத்தான்.  ரெண்டு மேஜர் தெருக்கள்  டீ  (Dee) அண்ட் டே  (Tay) சந்திக்கும்  இந்த  இடத்தில் மூணு பக்கமும்  பெரிய கட்டிடங்கள். ஒன்னு பேங்க்.ஒன்னு சர்ச், இன்னொன்னு டிவி ஸ்டேஷன்.நாலாவது மூலைதான் நம்ம கட்டிடத்துக்கான கார்பார்க்.  மற்ற மூணுக்கும் முன்னால் இது பரிதாபமா நிக்குதேன்னோ என்னவோ இங்கேயும் நெடிதுயர்ந்த  அலங்கார சுவர் ஒன்னை ஷோவா வச்சுருக்காங்க.

புதுவருச விழா முடிஞ்ச இடம் இப்ப(வும்) வெறிச்சுக்கிடந்துச்சு.  சின்னதா ஒரு ரவுண்டு  டீ தெருவில் போயிட்டு குவீன்ஸ்பார்க் போய் சேர்ந்தோம். சரித்திர முக்கியத்துவம் உள்ள  பூங்கா.  கேட்டுலே இருந்தே ஆரம்பிச்சுருது  ஹிஸ்டோரி.  Feldwick Gates.

ஆமாம் ... 1913  வது வருசம் 20.000 ப்ரிட்டிஷ் பவுண்டுக்கு மதிப்பு அதிகம் இருந்துருக்குமில்லே?  பவுனு  பத்து ரூபான்னு பாட்டி சொல்லுவாங்க!

John  Feldwick     சௌத்லேண்ட் டெய்லி  நியூஸ் என்ற பத்திரிகை நடத்தி வந்தவர்.  திருமணமே செய்து கொள்ளாத இவர் தன்னுடைய உயில் பத்திரத்தில்  இந்த பூங்காவை நல்ல பொழுதுபோக்கு அம்சமாக மாத்தணுமுன்னு கோரிக்கை வச்சு  இருபதாயிரம் பவுண்டு எழுதி வச்சுட்டார். இவர் மொத்த சொத்து  அம்பதாயிரம் பவுண்டுகள். அப்போ மாட்சிமை பொருந்திய மஹாராணி விக்டோரியா , அவர்கள் ஆட்சி செஞ்சுக்கிட்டு இருந்த சமயம்.  இந்தப் பார்க்குக்கு  விக்டோரியா பார்க் என்ற பெயர்தான் இருந்துருக்கு அப்போ.  க்வீன் விக்டோரியான்னு நீட்டி முழக்கிச் சொல்லச் சோம்பல்பட்டோ என்னவோ  முன்பாதியை வச்சுக்கிட்டுப் பின்பாதியை விட்டுட்டாங்க. காசு கொடுத்த புண்ணியவானை கௌரவிக்கும் விதமா  க்வீன் பார்க் கேட்டுக்கு  அவர் பெயரையே வச்சாங்க.


Invercargill's originalCoat ofArms படம் மேலே!  கலப்பை, மக்காச் சோளம், ஆட்டு ரோமம் இதெல்லாம் உள்ளுர்  விளைச்சலுக்கும் இவைகளை கடல்வழி மூலம் ஏற்றுமதி  செஞ்சதால்  பொருளாதார  நிலை உயர்வுக்கும்  சாட்சியா  டிஸைன் செஞ்சுருக்காங்க.




கண்ணுக்கு முன்னால்  ரெண்டுபக்கமும் மரங்கள் வரிசைக்கு நடுவில் நீளமாப்போகும்  பாதை. இதுக்கு காரனேஷன்  அவென்யூன்னு பெயர்.  ரொம்பதொலைவில்  வட்டமா கட்டுமானம் ஒன்னு தெரியுது.  பாதையின் பாதியில்  இடதுபக்கம் ரோஜாத்தோட்டம்.  வலதுபக்கம் கிளை  பிரிஞ்சு   அங்கே வட்ட அமைப்பும் நடுவில்  ஒரு வெண்கலச்சிலையும்.  வனதேவதன்! அவன் காதில் ஓதும் வனதேவதை.  கிளிக்கினது போதுமுன்னு நேர்பாதையில் நடையைக் கட்டுனால் பேண்ட் ஸ்டேண்டுக்கு வந்துருவோம்.

நல்ல விசாலமான பெரிய வட்டம்தான். கச்சேரி செய்ய யாருமில்லைன்னா... கவலைப்படுவானேன்?  மைக் கூட கையிலெயே இருக்கே:-))))


அடர்ந்த மரங்களும் பரந்த புல்வெளியும் நகரின் சந்தடி(??!!)  கொஞ்சமும் செவிக்கெட்டாத விதத்தில்  ஒரு ஆழ்ந்த அமைதியை மனசுக்குள்ளே கொண்டுவந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய்  பறக்கும் பறவைகளும் அவைகளின் ஒலியும்.  பேரொலியுடன் பறந்த பறவை ஒன்னு தலைக்கு மேலே:--)





வலதுபக்கம் போகும் பாதையில் நடந்தால் கடல் சிங்கங்களும், கழுகும்,  சிங்கங்களும் சூழ நீர்நிலையின் நடுவில் சிறுவனின் ஆட்டம்! குழந்தைகள்  பகுதி.  ஒரு பக்கமாக விளையாட்டுக்கான அத்தனை அம்சங்களும் நிறைஞ்சு வழியுது. பூங்காவின் இந்தப்பகுதியில் இருக்கும் வெங்கலச் சிற்பங்கள் அனைத்தையும்   மாட்சிமை தாங்கிய மஹாராணி இரண்டாம்  எலிஸபெத்தின்  அம்மா (குவீன் மதர்) திறந்து வச்சுருக்காங்க 1966 ஆம் ஆண்டு  நியூஸி வருகையின் போது.


ரசித்துக் கொண்டே அடுத்தபகுதிக்குப்போனால்.... ஹைய்யோ.... மரங்களின் வரிசை. நம்ம பிட் போட்டிக்கு அனுப்பி இருக்கவேண்டியவை!


காக்டெஸ் கன்ஸர்வேட்டரி. ரொம்ப சுமார். எங்க கிறைஸ்ட்சர்ச் பொட்டானிக்கல் கார்டனில் அட்டகாசமாக இருக்கும். இருந்தது. நில நடுக்கத்தின் பின்  அந்தப்பகுதியில் சேதாரம் அதிகமுன்னு சொல்லி மூடி வச்சுருக்காங்க இப்போ:(

அங்கங்கு  மனிதனின் இயற்கை அழைப்புகளுக்கான ஏற்பாடுகள்.!


 விண்ட்டர் கார்டன் பகுதிக்குள் நுழைஞ்சோம்.  அல்லிக்குளம், விசிறி வாழை,  ரப்பர் மரங்கள் இப்படி  அருமையாக இருக்குன்னாலும்.... எங்க ஊர்  தோட்டத்தில் இருக்கும்/இருந்த மாதிரி இல்லை. இதுவும் இப்போ மூடப்பட்டவைகளில் ஒன்னு:(

நம்மூரில் இன்னும் நல்லா இருந்துச்சுல்லேன்னு சொல்லி வாய் மூடலை...கண்ணில் பட்டது  இந்த தகவல். ஆஹா..... இது வேறயா? 1998 வது  வருசத்தில் அமைக்கப்பட்டது.


வாத்துகள் நீந்திக் களிக்கும் ஆற்றின் மேல் இருக்கும் பாலம் கடந்து போனால்..... ஆக்டோபஸ் பெண்  எட்டுக்கைகளாலும் பாறையைப்பிடிச்சுக் கவிழ்ந்து கிடக்கிறாள்! அவளுக்கு என்ன சோகமோ!!!!  இந்தப்பக்கங்களில்  வெண்கலம் மலிவா என்ன? எங்கே பார்த்தாலும் கிண் என்று வெங்கலமே!  நம்மூரா இருந்தா  சிலைகளாவும் பாத்திரங்களாவும் விளக்குகளாவும்  ஜொலிச்சுக் கிடக்குமில்லை?

பஞ்சவர்ணக்கிளிகளும் ,பச்சைக்கிளிகளும் மஞ்சள் கிளிகளும் குருவிகளும் கியா என்னும் நியூஸிப்பறவைகளும் இன்னும் பெயர் தெரியாத சில பறவைகளும்  கம்பிவலை அடிச்ச பெரிய பெரிய  திறந்தவெளி  அறைகளில் இருக்கு. அதுலே ரெண்டு காக்கா கூட பார்த்தேன். அவை  இங்கே வந்த காரணம் கீழே!

 கண்ணாடிக்கூரை போட்ட கன்ஸர்வேட்டரியில்  மாடப்புறாக்கள். கிளிகள் எல்லாம் நம்மைச் சுத்தி இருக்க நாம் செயற்கைப்பாலத்தில் நடந்து போகலாம்.  பறவைகளை க்ளிக்கும்போதெல்லாம் நம்ம கல்பட்டார் நினைவுதான்.

ஜாப்பனீஸ் கார்டன்.  அமைதியான அழகு.  ஆனால் கிட்டே போக முடியாது.  தடுப்புக்கு இந்தப்புறம் இருந்து பார்க்கனும்.  இந்த இன்வெர்கார்கிலுக்கு ,  Kumagaya  (Japan ) நகரோடுள்ள  அக்காதங்கை உறவை உறுதிப்படுத்தி கௌரவிச்சது இப்படி.

கொட்டும் மழையில் குடையோடுள்ள நடையில்  அடுத்த பகுதியான பண்ணைவீட்டுப் புழக்கடை (ஃபார்ம்யார்ட் ) போனால்.....   விதவிதமான கோழிகள்!  கொஞ்சம் தொலைவில்  தகர வீட்டில் இருந்து எட்டிப்பார்க்கும் மயில்!!!



'மழை வந்தால் மயில் ஆடணுமே... நீ ஏண்டா ஆடலை'ன்னு கேட்டேன்.

" அபூர்வமா எப்பவாவது மழை வந்தால் ஆடவேண்டியதுதான். இப்படி வாரக்கணக்கா  அடாத மழைன்னால்....  என்னத்தை ஆடறது?  வேணுமுன்னா நீ ஆடிக்கோ.... ஒரு மாறுதலுக்கு நான் பார்க்கிறேன்.  "

"என்னாப் பேச்சு பேசறேடா மயிலா!!!!!"

உழவு வேலைக்கான மரச்சாமான்கள் கலப்பை, மாட்டுவண்டின்னு இன்னபிற  பண்ணைச் சாமான்களுடன் சில  கொட்டகைகள்.  செயற்கை சேற்றில் உழலும் பன்றிகள்,  சில கங்காரு இனங்கள்  நெருப்புக்கோழிகள் இப்படிப் பலதும்  காட்சிக்கு இருக்கு. நகர்புறக்குழந்தைகள் பார்த்துப் படிச்சுக்க எளிது.


இந்தப்பூங்கா.... 200 ஏக்கர் பரப்பளவு.  எங்கூர் பூங்கா இதைவிட கிட்டத்தட்ட ரெண்டு படங்கு! 397 ஏக்கர். ஆனாலும் இவ்வளவு அழகான சமாச்சாரங்கள் ஒன்னுமே இல்லையே:(  இந்த ஊர் மேயர் ரொம்ப கெட்டிக்காரர்ன்னு பாராட்டாமல் இருக்க முடியலை!

இங்கே(யும்)ஒரு பெரிய லேடி பக்.  பர்ட் மன்றோவையும் வீட்டு வைக்கலை:-)வெண்கலமுன்னு தனியாச் சொல்லணுமா!!!!


18 குழி கோல்ஃப் விளையாட்டுக்கான புல்வெளி. க்ரிக்கெட் ஆட்டத்துக்கான  இடம் இப்படி  பரந்து விரியும் பார்க்கைச் சுற்றிவர ஒரு முழுநாள் தேவைப்படலாம். நமக்கு   ஒன்னரை மணிக்கு எவ்வளவோ அவ்வளவு!   காலில் சுடுகஞ்சி!


டே தெருவில் இருந்து க்வீன்'ஸ் ட்ரைவ் வழியே  வடக்கே போனால்  ஊரில் உள்ள நாலு  பூங்காவனங்களும் நேர் கோட்டில் !

தொடரும்........:-)














தெரியாமப் போச்சே.............

$
0
0

ஊரைவிட்டு வெளியே போகும் சாலையில் பறக்கும் கார்.  இந்தப்பக்கம் எங்கே? தோழி வீட்டுக்கா?  இப்ப வரேன்னு சொல்லலையே...     அங்கே போகலைமா. இந்தப்பக்கமொரு பீச் இருக்காம்.அய்ய....போதுமே பீச் பீச்ச்ன்னு.......  இது கல் பீச்சாம்.  பக்கத்துலேதான் ஒரு பத்து கிலோமீட்டரில்.   பெப்பிள் பீச்சா?  ஆஹா.... அப்பப் போலாம். மகளோடு சேர்ந்து எனக்கும்  கல்லாசை வந்து பல வருசங்களாச்சு. என்ன... அவள் வெறுங்கல்லு. நான்  இடைக்கிடை கொஞ்சம்  ப்ரெஷ்யஸ் கல்லு.


இதோ அதோ ன்னு போய்க்கிட்டே இருக்கோம்.  எங்காவது  சாலை பிரியுமிடத்தில் சைன்போர்டு இல்லாமலா போகும்?  ஊர் ஒன்னு வந்துக்கிட்டு இருக்கு. அத்துவானக்காடு வீட்டுவாசலில் அஞ்சாறு சேண்ட்டாக்கள் கைகளையும் தலைகளையும் ஆட்டி னார்கள். வாவான்றாங்களா இல்லை போ போன்றாங்களா?


ரிவர்ட்டன் என்ற ஊருக்குள்ளே நுழைஞ்சோம்.  பெரிய பாவா சிப்பி வரவேற்றது.  இது பத்துகிலோ மீட்டரிலா இருக்கு? ஊஹும்.... நாற்ப(த்)து  கிமீதூரம். ஒரு மெயின் கடைவீதி, கடைசியில் ஒரு  சர்ச்.  நேரெதிரா ஒரு ம்யூஸியம்.  வார் மெமோரியல்,  இடது மூலையில்  ஒரு ஃபயர் ஸ்டேஷன். நேராப்போனால்  பாலம்.  இது ஜேக்கப் நதி கடலுடன் கலக்கும் முகத்துவாரம்.   பாலத்தின் மறுகோடிக்குன்றில் வரவேற்கும் சிலுவை!

ஜேக்கப் ஆறு  ஒரு குளம் கட்டி நிற்கும் வலது பக்கம். அந்தாண்டை  குன்றின் சரிவில் வீடுகள். ஊர் மக்கள் தொகை 1900. இந்த ஊர்  நியூஸியின் பழைய  ஊர்களில் ஒன்னு. இப்போ வயசு 177 வருசம்.

படகுத்துறைதான்  கண்ணை இழுக்குது. அநேகமா படகு இல்லாதகுடும்பம் இருக்கச் சான்ஸே இல்லை போல. மீன்பிடிதான் தொழிலே!




சிலுவையைக் கடந்து போகும்ஹைவேயில் ஒரு மூணு கிலோமீட்டர் போய் வேடிக்கை பார்த்துட்டு, பாலத்துக்குள் நுழையாமல்  இடப்புறம் பிரியும்  சாலையில் போனால் அது கடலுக்கு முன்னால் கொண்டு நிறுத்துச்சு.  கடலைப் பார்த்த வீடுகள் கொஞ்சம். பிள்ளைகள் விளையாட ஒரு சின்ன அமைப்பும் திமிங்கிலமும். எல்லாமே வண்டியை விட்டு இறங்காமல் பார்த்தவையே.


பாலத்துக்குள் நுழைஞ்சு டவுனுக்கு (!!)வந்தோம். நியூஸியின் பெஸ்ட் ம்யூஸியம் என்ற அறிவிப்பைப் பார்த்ததும்...... உள்ளே நுழைஞ்சோம்.  ஊரூருக்கு  அருங்காட்சியகம் இருக்குன்னாலும் உள்ளூர் சரித்திரத்தைக் கொஞ்சமாவது புரிஞ்சுக்கணும், தெரிஞ்சுக்கணுமுன்னா  கட்டாயம்  இவைகளைத் தவறவிடக்கூடாது

தலைக்கு ஆறு டாலர்.  சிறந்ததுன்னா காசுகூடத்தான் கொடுக்கணும் இல்லையா? கயிறு தடுப்பை நீக்கி உள்ளே போனோம். கண்ணுக்கு நேரா கடைசியில் இருந்த அறையில் ஃப்லிம்ஷோ நடக்குது.  இன்னொரு சின்ன தியேட்டரில் மராமத்து நடக்குதுன்னு  இங்கே காமிக்கிறாங்க.  முக்கால்மணி இதுக்கு ஒதுக்கணும்.  நமக்கேது நேரம்? அஞ்சு நிமிசம் நின்னபடியே பார்த்தேன். வெள்ளையர்களும் மவொரி இனத்தவரும் நேருக்குநேர்  சந்திக்கும் நிகழ்ச்சி.  பார்த்தவரை அருமையாத்தான் இருக்கு  காட்சிகள்.

வலப்பக்கம் இருந்த ஹாலில் தடுப்புகளா வச்சு  டேமிங் த லேண்ட் படங்களும் மாடல்களும். ஆஹா.... இது  நம்ம நியூஸி புத்தகத்தில் ஏற்கெனவே விவரிச்சு இருந்தவை என்பதால் சுவாரஸியம் கூடுச்சு.

 கிபி 1840, ஃபிப்ரவரி 6 தேதி ( இன்னிக்குதான்) மவொரியர்களுக்கும்  ப்ரிட்டிஷ் மஹாராணிக்கும் இடையில் ஒப்பந்தம்  கையெழுத்தாச்சு. வைட்டாங்கி என்ற ஊரில் இது நடந்ததால்  வைட்டாங்கி தினம் என்று எங்களுக்கு அரசு விடுமுறை உண்டு வருசாவருசம்.

நீங்க  எங்களை இங்கே  தங்கவிட்டால் நாங்க உங்களைப் பாதுகாப்போம்.  இப்படிச் சொல்லி எங்களை ஏமாத்தி எங்க நிலத்தையெல்லாம் திருடிக்கிட்டாங்கன்னு  இன்றுவரை ஒவ்வொரு   வைட்டாங்கி தினமும் மவொரியர்கள்  பிணங்குவதும், மன்னிப்பு கேக்கறோமுன்னு அரசு சொல்வதும், அதுக்கு பதிலா இந்த உரிமை எங்களுக்கு வேணுமுன்னு அவுங்க கேப்பதும், கேட்டதுலே பாதியை இவுங்க தருவதுமா  ஒரு நாடகம் இன்னிவரை நடக்குது.  எனக்கே இந்த 25 வருசமாப் பழககிப்போச்சுன்னா பாருங்க.

மவொரியர்களின் சமூகக்கூடமான மராய் என்னும் இடத்துக்கு  (இதுவும் ஊரூருக்கு ஒன்னு இருக்குன்னாலும் வைட்டாங்கியில்  இருக்கும் மராய்க்குத்தான்  புகழ் அதிகம் இன்றைக்கு மட்டும்)  பிரதமரும் மற்ற மவொரி நலம் மந்திரியும்.  மற்ற சில மந்திரிமாரும் போவாங்க. வாசலிலே  நிற்கும்  பாரம்பரிய வீரர்களின்  உடை அணிஞ்ச  சில மவொரி  மக்கள் இவுங்களை உள்ளே காலடி வச்சால் தெரியும் சேதின்னு மிரட்டி, பிடிச்சுத்தள்ளுவதும்,  சிலநிமிச கைகலப்புக்குப்பின்  ஒரு மவொரி தலைவர் வந்து தலையிட்டு, 'சண்டை ஒத்து  நைனா, சமாதானங்கா போதே மஞ்சிதி'ன்னு சமாதானம் செய்ஞ்சதும் எல்லாருக்கும் வரவேற்பு பேச்சு மவொரி வெல்கம் இப்படி  நடக்கும் நிகழ்ச்சிகளை   தொலைக்காட்சியில் நமக்குப் போதும்போதுமுன்னு கதறும்வரை இன்னிக் காட்டுவாங்க. நல்லவேளை இங்கே இருக்கும் மூணு சேனலில்  ஒன்னுக்கு  அரசுரிமை இல்லை:-)))

இந்த ஒப்பந்தம் பற்றி முன்பு ஒரிக்கில் துளசிதளத்தில் எழுதியது இங்கே.


நாட்டை சீர்படுத்தறோமுன்னு ஆரம்பிச்சு முதலில்  நிலபுலன்களையெல்லாம்  நம்ம  பயனுக்கு உகந்தமாதிரி  சரி செய்ய ஆரம்பிச்சாங்க. சாலைகள் போடுவது, ரயில்பாதை அமைப்பது, விளைச்சல் நிலங்களை  புதுசா  அமைப்பதுன்னு பலதும் இருந்துச்சே! இதுக்கு வேலைக்கு ஆள் வேணுமுன்னு  டச்சு நாடுகளிலும்,  பிரிட்டனின்  (இங்கிலாந்து,  அயர்லாந்து, ஸ்காட்லாந்து) மற்ற பகுதிகளிலும் இருந்து மக்களை  இங்கே  கொண்டுவந்தாங்க.  கடுமையான உடலுழைப்பு.  அதன் பலனைத்தான் இப்போ நாங்கள் நோகாம அனுபவிக்கிறோமுன்னும் சொல்லலாம்

இங்கிலாந்தில் இருந்து கொண்டு வந்த புல்விதைகளை இங்கே விதைச்சு  மாட்டுத்தீவனத்துக்கான புல்வெளிகளும் தயாராச்சு.  வந்தவங்களும் தங்களுடைய வளர்ப்பு மிருகங்கள், இன்னும் உணவுக்கும் உழைப்புக்கும் தேவையான மற்ற உயிர்களையும் , கொண்டுவந்தாங்கன்னே சொல்லணும்.

மேலே படத்தில் மூன்று சகோதரர்களுடன் அவர்களின் செல்லம்! மரங்களை வெட்டி பலகைகளாக்கி வீடுகள் கட்டினாங்க. இவுங்க வசிப்பு என்னவோ கூடாரத்தில்தான் அப்போது. இப்படி வந்தவர்களில் ஸ்காட்லாந்துக்காரர்கள்தான்  எடுத்த காரியம் முடிப்பதில் கண்ணும் கருத்துமா இருந்தவர்களாம்.  படமும்சேதியுமா விவரம் கொட்டிக்கிடக்கு இங்கே போட்டோ எவிடென்ஸோடு!!



1863 ஆம் ஆண்டு ஹெலன்ஸ்லீ என்ற கப்பல்மூலம் வந்த சில முயல்கள்  ஒரெடி பீச்சுக் கரையில் விடப்பட்டவை, எதிரிகள் எதுவுமே இல்லாத காரணத்தால் பல்கிப்பெருகி ஊரையே தின்னு முடிக்குமளவுக்கு தொல்லையாப் போச்சு/. இப்பவும்  விவசாயிகளின் முதல் எதிரி இவைகளே:( இதை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சியை அன்று மாலையே நம்ம தோழியின் மருமகன் சொன்னார்! 

இரும்பு ஒன்னும் இல்லாமலே மரத் தண்டவாளம் போட்டு வச்சுருக்காங்க பாருங்க!!!!!

பால் கறப்பது கோபன்களும்  வெண்ணை எடுப்பதும் சீஸ் (பால்கட்டி ) உண்டாக்குவதும் கோபியர்களின்  வேலையுமாகவே! பாவம் கடின உழைப்பு:( கூடவே குழந்தை வளர்ப்பு, வீட்டுச்சமையல், மற்ற வீட்டுவேலைகளுமா பெண்டு நிமிர்ந்துதான் போச்சு!!!


மரவெட்டி ஒருவருடன் கோபால்:-))))

சப்பையா ஒரு கண்ணாடி பாட்டில். அதன் பெயரைப்பாருங்க!!!!

சாமிக்கு ஒரு வீடு. ஒருவேளை ஜீஸஸ் என்ற பெயர் கூட இதிலிருந்து மரூவினதாக இருக்குமோ என்னவோ!!!!

1877 இல்பெரிய கம்பெனிகள் இங்கே  வந்து சேர்ந்துச்சாம். தங்கம் இருக்கும் விவரம்  தெரிஞ்சுருச்சு பாருங்க. சுரங்கம் தோண்ட ஆரம்பிச்சாங்க.
ரெண்டு சுரங்கத்தொழிலாளிகள் விபத்தில் மாட்டிக்கிட்டு மரணம் அடைஞ்சதை வாசிச்சபோது ஐயோன்னு இருந்துச்சு:( நண்பர்களாம்!!!

சைனீஸ் ட்ராகனைப்பார்த்ததும் இது எப்படி இங்கேன்னு வியப்பு. ஆஹா... தங்கச்சுரங்க சேதி இவுங்களுக்கும் போயிருந்துச்சே!

தொடக்கத்தில்  சீனர்களை  இங்கே  அனுமதிச்சு வேலைக்கு சேர்த்துக்கிட்டு இருந்தவர்கள்  கொஞ்ச நாளில்  சீனர்களை எப்படி விரட்டுவதுன்னு  யோசிக்க ஆரம்பிச்சாங்க. அரசாங்கத்துக்கு நெருக்கடிகொடுக்க ஆரம்பிச்சதும் சீனர்கள் வருகையை நிறுத்த, குறைஞ்சபட்சம்  குறைக்க ஒரு திட்டம் உருவாச்சு. அதுதான்  போல் டாக்ஸ் என்னும் வரிவிதிப்பு.

1881 இல் இங்கே குடியேற வரும் சீனர் தலைக்கு பத்து  ப்ரிட்டிஷ் பவுண்டு வரி கட்டணுமுன்னு  ஆரம்பிச்சது, அப்பவும் வருகை  எதிர்பார்த்தபடி நிற்காததால்  1896 இல் ஆளுக்கு 100 பவுண்டுன்னு  வரிவிதிப்பு உயர்ந்துச்சு. ஆனால் சீனர்கள் இதுக்கெல்லாமா  அசந்துருவாங்க?  நூறு பவுண்ட் என்பது பெரும்தொகைதான் அப்போ என்றாலும் அசரலையே? கடனை உடனை வாங்கிக்கிட்டு வரத்தான் செஞ்சாங்க.

கடன் வாங்க முடியாதவர்கள் தங்களை கொத்தடிமை லெவலுக்கு ஆளாக்கிக்கிட்டு  வரி கட்டவும் பயணச்செலவுக்கும்  ஒப்பந்தக்காரர்களிடமும்  தரகர்களிடம்  சரணடைஞ்சாங்க. பத்துவருசம்  அடிமை சாஸனம்.

அப்போ இங்கே வந்து குடியேறிய சீனர்களுக்கும் இப்போ சமீபமா முக்கியமா ஹாங்காங் பிரிட்டனிடம் இருந்து சீன அரசுக்குக் கைமாறிய சமயம் (1997)  இங்கே வந்து குடியேறிய  சீனர்களுக்கும்  நிறைய  வேறுபாடுகள் இருக்கு. எல்லாம்  யாரு உசத்தி யாரு தாழ்த்தின்ற  கதைதான்!

நாலு பேர் இருந்தால் கூட்டம் என்று சொல்வேனே...அதுலே  இப்போ நாலில் மூணு சில சமயம் நாலுமே சீனர்களா  இருக்காங்க!   எங்கூரில் ஒரு குறிப்பிட்ட ஏரியா சைனாடவுன் போலவே அவர்களது கடைகள்மட்டுமே உள்ள பகுதியா மாறிக்கிட்டு இருக்கு.  இவர்கள் இடம்பிடிக்க ஆரம்பிச்சதும் அங்கிருந்த வெள்ளைக்காரக் கடைகள் ஒவ்வொன்னா காலிபண்ணிக்கிட்டு போயிருச்சு. இன்னும் பத்தே வருசத்தில்  ஒரு சீனர் பிரதமராக வந்துருவார்!!!

நியூஸியின் முதல் பெண் அரசியல்வாதி க்றிஸ்டினா. 1903 ஆண்டு இங்கே சௌத்லேண்ட் பகுதிக்கு வந்திறங்கிய முதல் மோட்டர்காரின் சொந்தக்காரர்!  இவர் காரோட்டிக்கிட்டு போனதைப்பார்த்து ஊரே அதிசயிச்சது!  இவ்ங்க குதிரை சவாரியிலும் பலேகெட்டி!  ஷம்ராக்ஹொட்டேல் நடத்துனாங்க.


இந்தப்பக்கம் இன்னொரு அறைக்குள் நுழைஞ்சப்ப 'நோ ஃபொட்டொக்ராஃப்' அறிவிப்பு பார்த்ததும்கெமெராவைச் சுருட்டி வச்சேன். உள்ளே பழையகால மவொரி மக்களின் வாழ்க்கை,  சமையலறை,  குடிசைன்னு ஒரு டிஸ்ப்ளே! எல்லாம்  லைஃப் சைஸ் உருவங்கள்.  ஒரு வீட்டின் கணப்படுப்பின் முன் ஒரு ஆள்  அடுப்புக்குள்ளே ஒரு காலை நீட்டுனதுப்போல வச்சுக்கிட்டு  எதிரில் இருந்த இருக்கையில் மயங்கிக்கிடந்தார். ஆஹா...இவர்தான் 'அந்த  ஓவன் மெக்‌ஷேன்!!!!


சௌத்லேண்ட்  சேண்டிபாய்ண்ட் கிட்டே வேலிங் ஸ்டேஷன் ஆரம்பிச்ச சமயம் (1863) திமிங்கில வேட்டைக்காரர் வேலைக்கு  வந்திருந்த வெள்ளையர் இவர்.  ஓய்வா இருந்த சமயம் உக்காந்து யோசிச்சு, இந்தப்பக்கங்களில் ஏராளமா வளந்து கிடக்கும் கேபேஜ் மரங்களின் வேரில் இருந்து ஒரு வகை மதுவைத் தயாரிச்சுப் புகழடைஞ்சுட்டார். கேபேஜ் ட்ரீ ரம், விஸ்கி.

இந்தப்பேட்டையில்  இருக்கும்  மவொரி மக்களின் தலைவருக்கு நண்பராகவும் ஆனார். குடியோ குடி.  லின்க்ஸ் என்ற கப்பல்   தரைதட்டிப்போய் உடைஞ்சு மூழ்கினதுக்கு  அந்தக்கப்பலில் இருந்த மாலுமிகள்  இந்தக்குடியைக் குடிச்சு  மயங்கிக்கிடந்ததே காரணமுன்னு இன்னிவரை சரித்திரம் நம்புவது. உண்மைதான் போல!

இந்த  ஓவன் மெக்‌ஷேன்  அவருடைய தயாரிப்பை அளவுக்கு மீறி அருந்தி, காலை நீட்டிக்  கணப்படுப்புக்குமுன்னால் மயங்கிக்கிடந்ததில்  ஒரு காலில் தீப்பிடிச்சு  கருகியே போச்சு. கரிகாலனுக்கு  அப்படி ஒரு மயக்கம்.  கடைசியில் உணர்வு வந்து பார்த்தால்  வெந்தக் கால்.:(

அது அழுக ஆரம்பிச்சதும் ஏற்பட்ட வலியைத் தாங்கமுடியாமல் போக, மரம் அறுக்கும் வேலைக்கு வந்திருந்த ஒரு மருத்துவர்,  மரம் அறுக்கும் ரம்பத்தால் காலை வெட்டினார். மயக்க மருந்தெல்லாம் ஒன்னும் இல்லை. ஒருவேளை இன்னும் கொஞ்சம் அதிகமாக மதுவை  உள்ளே தள்ளி இருக்கலாம்.

எப்படியோ  வெட்டுப்பட்ட கால் குணமானதும் மரக்கால் ஒன்னை செஞ்சு பொருத்திக்கிட்டாராம் மெக்‌ஷேன். அப்படியும் குடியை விட்டபாடில்லை.  குடி குடியைக் கெடுக்கும் என்ற போர்டு ஒன்னு  வச்சுருக்கலாம் .   நேத்துதான்  ஸ்டெவர்ட் தீவு ம்யூஸியத்தில்  இவருடைய மரக்காலைப் பார்த்தேன்! ஜெய்ப்பூர் காலுக்கு  முன்னோடி!!!!

  அந்த அறையில் இருந்து வெளியேறி கயிறுத் தடுப்புக்கருகில் வந்து  சுவரில் இருந்த படங்களை க்ளிக்கினப்ப.... அங்கே வந்த மியூஸியம் பணியில் இருக்கும் பெண்மணி  அப்பதான் உள்ளே நுழைஞ்சவங்க.... இங்கே ஃபொட்டோ எடுக்கக்கூடாதேன்னு  சொன்னங்க.

அப்படியா? அந்த அறை வாசலில்  கூடாதுன்னு அறிவிப்பு இருந்தது .அங்கே எடுக்கலைன்னு சொன்னேன்.  இங்கே எல்லா இடத்திலும்தான் என்றவுடன்.......... எனக்கு  ...........

தொடரும்............:-)



டோண்டு

$
0
0


அமெரிக்கத்தோழி ஒருவர்  அனுப்பிய மடல் சோகச் செய்தியை சுமந்து வந்தது.  நெசமாவான்னு தமிழ்மணத்துக்குள் பாய்ஞ்சேன்.  என்றென்றும் அன்புடன் பாலாவின்  பதிவு.  மனம் அப்படியே  கலங்கிப்போச்சு.  ரெண்டு நாளா ஒரே குழப்பம்.  இப்படி ஆகிப்போச்சே.......  ராத்திரி தூக்கம்கூட வரலை. அவரிடன் இருந்த நட்புணர்வு, நேர்மை, தன் கொள்கையில் நம்பிக்கை என்ற எல்லாத்தையும் விட பெருமாள் மீதான பக்தி, எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

கோபால் சேதி கேட்டு கொஞ்சம் அதிர்ந்துதான் போயிட்டார். நம்ம கோபாலுக்கு என் நண்பர்கள் எல்லாம்  அவர் நண்பர்களே!  தனித்தனி பேதம் இல்லை.

ச்சும்மாக் குழப்பி எடுக்கும் மனசு கொசுவர்த்தியை  ஏத்தி பாடாய்படுத்திக்கிட்டு இருந்த  சமயம் பகல் சாப்பாட்டுக்கு வந்தவர், ஆமாம். உனக்கு டோண்டுவை எப்படிப் பழக்கம்?  உன் மரத்தடி மக்களில் ஒருவரா?ன்னார்.

ஊஹூம்......நான் ஒரு ஆறுமாசம் மரத்தடியில் குழும அரட்டையினூடே  கொஞ்சூண்டு எழுதிப்பார்த்துக்கிட்டு இருந்தேன்.  சும்மாக்கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தாங்க குழும மக்கள்.  எழுத வருதாம்!!  எழுது எழுதுன்னு என்னை எழுத்துக்காரியா  ஆக்குன பழிபாவத்தை அவுங்க சுமக்கும்படி ஆச்சு.

அப்பதான்  தமிழ்மணம் ஆரம்ப சமயம்.  திஸ்கியை கைவிட்டுட்டு இகலப்பையைக் கையிலே பிடிச்சேன். தமிழ்மணம் காசியின் உயிரை அப்பப்ப வாங்கினேன்னு தனியாச் சொல்லணுமா?

அப்ப தமிழ்மணத்தில்  பதிவு செஞ்சுருந்த பதிவர்கள்  ரொம்பக் குறைவே.  அதனால்  தினமும் தமிழ்மணத்துலேயே குடியிருக்க ஆரம்பிச்சேன்.  யார் புதுசா எழுத வந்தாலும் கண்ணில் படாமப்போக ச்சான்ஸே இல்லை!  உடனே.....வரவேற்பு பத்திரம் வாசிக்கலைன்னா எனக்கு  மூச்சு நின்னுரும்.

தனி வலைப்பதிவு தொடங்கி சரியா  ரெண்டு மாசம் கழிச்சு  டோண்டு எழுதவந்தார். நவம்பர் 8 2004.  பின்னூட்டம் போட்டு அவரை வலை உலகின் வழக்கப்படி வரவேற்றவர்களில் நானும் ஒருத்தி.

 ஒரு ஏழெட்டு மாசம் இப்படிப்போன நிலையில் சிங்கைக்கு ஒரு சின்னப்பயணமா நானும் மகளும் போனோம்.  மரத்தடி குழும மக்கள் பலர் அங்கே இருந்தாங்க. கூடவே தமிழ்மணம் மூலமும் முக்கியமாக எனக்கு வந்த பின்னூட்டங்களின் மூலமும் நட்பு வட்டத்தை  பெருக்கி வச்சுருந்தேன்.  ரம்யா நாகேஸ்வரன் ஏற்பாடு செய்திருந்த  பதிவர் மாநாடு( அப்படித்தான் சொல்லிக்கணும்!) நடந்தப்ப  வந்திருந்த இளைஞர்கள் பலரும் அக்கா அக்கான்னு அன்பைப் பொழிஞ்சாங்க.  அதில் கூடுதலா அன்பாகவும் உரிமையோடும் பேசின இளைஞர் மூர்த்தி.


கொஞ்ச நாளில்  நம்ம டோண்டுவுக்கு போலி டோண்டுவால் தொந்திரவு  ஆரம்பிச்சது.  கூடவே டோண்டுவுக்கு பின்னூட்டம் போடும் பதிவர்களுக்கும்.   டோண்டுவின் பதிவில் நாம் ஒரு பின்னூட்டம் போட்ட அஞ்சாவது நிமிசம் நமக்கு அர்ச்சனை ஆரம்பிச்சுரும். போலி ஒரு செந்தமிழ்ச் செல்வன். அவருடைய சொற்கள் வங்கியில்  இருப்பு ரொம்ப  கம்மி. அதனால்  அவருக்குப் பிரியமான அந்த சில சொற்களையே  அர்ச்சிக்கப் பயன்படுத்துவார்.  போலிக்கு ஆண் பெண் என்றெல்லாம் பேதமே இல்லை. சகலருக்கும் ஒரே அர்ச்சனைதான்.

அசுவாரசியமா நான் சொன்னதையெல்லாம் கேட்டுக்கிட்டிருந்த கோபால், சட்ன்னு நிமிர்ந்து  பார்த்து, இதெல்லாம்  எனக்கு சொல்லவே இல்லையேன்னார்! 

சொன்னால் அவ்ளோதான்.  ஆடிப்போயிருப்பீங்க! 

அதுவுஞ்சரிதான். அப்புறம்? 

இதுக்கிடையில் (2006)  நமக்கொரு சென்னைப் பயணம் வாய்ச்சது.  பதிவுலக நட்புகள் அடிக்கடி  மெரீனாவிலும்,  வுட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன்னிலும் சந்திக்கறாங்கன்னு அப்பப்ப பதிவுகளில்  பார்த்ததால் எனக்கும் நட்புகளை சந்திக்கணுமுன்னு  ஆவல். சந்திப்புக்கு ஏற்பாடு செய்யமுடியுமான்னு கேட்டு டோண்டுவுக்கு ஒரு மடல் அனுப்பினேன். போலியின் அட்டகாசத்தைச் சொல்லி அழ டோண்டுவோடு மின்னஞ்சல் தொடர்பில்  இருந்தேன்.


உங்கள் பயணத்திட்டத்தையும் என்றைக்கு  நீங்கள் தென்தமிழ்நாட்டுக்குப் போயிட்டு மீண்டும் திரும்பி சென்னைக்கு வர்றீங்கன்னு சரியாச் சொன்னால் ஏற்பாடு செஞ்சுடலாமுன்னு  சொன்னார்.  முதலில் ஒருசில நாட்கள் சென்னை. அப்புறம்  மாமியார் வீட்டுப் பயணம் மதுரை வழியாக.  அங்கிருந்து திரும்பியதும் சில நாட்கள் சென்னைன்னு  இருந்துச்சு நம்ம திட்டம்.

நங்கைநல்லூரில் இருக்கும் குடும்ப நண்பரைச் சந்திக்க  (இவர் மகன் நியூஸியில் நம்ம குடும்பநண்பர்) போனப்ப, என்னவோ மனசில் சட்ன்னு டோண்டுவும் இங்கேதானே இருக்கார் என்று தோணுச்சு. அவருக்கு செல்பேசினால்  விலாசம் சொல்லி வீட்டுலேதான் இருக்கேன் வாங்கன்னார்.  எப்படியும் ஆஞ்சநேயர் கோவில் திறக்க இன்னும் நேரம் இருக்கே.  இவரைப்பார்த்துட்டுக் கோவிலுக்கு போலாமேன்னு  டோண்டு வீட்டுக்குப்போய்ச் சேர்ந்தோம்.

நங்கைநல்லூரில் இருக்கும் குடும்ப நண்பரைப் பார்க்கப் போறவரை அன்னிக்கு ஒரு வலைப்பதிவர் சந்திப்பு நடக்கப்போகுதுன்னு மெய்யாலுமே தெரியாது.

நங்கைநல்லூர்ன்னதும் மூளையில் ஒரு மணி அடிச்சுது. பயணம் முழுசும் என்னைவிட்டகலாது இருந்த மூணுதாளைப்பார்த்ததும் புரிஞ்சுருச்சு. நம்மளைச் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்த வலைஞர்கள் விவரம் அடங்குனதுதான் இந்த மூணுதாள் மேட்டர்.அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா... எத்தனை பேர்ங்கறீங்க?

அவர் தந்த தகவலின்படியே போய் இதோ வீட்டுக் கூடத்துலே நுழைஞ்சாச்சு. ஹை... ஊஞ்சல்!!!!ஓடிப்போய் உக்காந்துக்கிட்டேன். அவரோட மகளையும் சந்திச்சோம். பேச்சு பலவிஷயங்களைத்தொட்டுப் போய்க்கிட்டு இருந்தது. எங்க இவர் எப்பவாவது சில பதிவுகளை, நகைச்சுவையா எழுதறவங்களோடது படிச்சிருக்காரே தவிர, தமிழ்மணத்துலே அன்னாட நிகழ்ச்சிகளா(!) நடக்கறதை எதுவுமே அறியாதவர். சில விஷயங்களைக் கேட்டுட்டு இப்படியெல்லாம் கூட நடக்குமான்னு அதிசயப்பட்டுட்டார். போட்டும்,அப்பாவி!!!! பேசிக் களைச்சுட்டோமோன்னுச் சுடச்சுட ஒரு காஃபியும் தன்கையாலேயே(!)போட்டுக் கொடுத்தார் நண்பர். வீட்டுக்காரம்மா கோயிலுக்குப் போயிருந்தாங்க.

அப்படியே 'ஆஞ்சநேயரையும்' பார்த்துட்டுக் குசலம் விசாரிச்சுட்டுப் போகலாமுன்னு நினைச்சுக்கிட்டே, வழியனுப்பிவைக்க கூடவே வந்த நண்பரிடம், உங்களைப் பார்த்ததுலே ரொம்ப சந்தோஷங்க. போயிட்டு வரோம் 'டோண்டு'ன்னுசொல்லி ஆட்டோவுலே ஏறி உக்கார்ந்தாச்சு.

7 ஆண்டுகளுக்கு முன் இந்த சந்திப்பு பற்றி எழுதியது  மேலே.

கொஞ்ச நேரத்தில் டோண்டுவின் மகள் வந்தாங்க. எல்லோருமா கொஞ்ச நேரம் பேசிட்டு  சில படங்களை க்ளிக்கிட்டு கிளம்பிக் கோவிலுக்குப் போனோம்.

இந்த சந்திப்புதான், நான் செஞ்ச  மெஹா தப்புன்னு போலிக்குப் பட்டுருச்சு:(  ஏற்கெனவே  அனுப்பி வச்ச படங்களை சேமிக்கமுடியாமல் போச்சு இன்னொரு முறை அனுப்புங்கள்ன்னு  மெயில் வந்ததும் நான்  ரிப்ளை பட்டனைத் தட்டி படங்களை அனுப்பிட்டேன்.  உண்மையில் டோண்டுவின்  மெயில் ஐடி போலவே  போலி தயாரிச்சது  இது. துளியும் சந்தேகம் வராதபடி அச்சு அசலா டோண்டுவின் நடையும் சொற்களும்.  சாம்பிளுக்கு ஒன்னு கீழே!

அன்புள்ள துளசி அவர்களே,
 நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் இட்ட பின்னூட்டம் என் மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. நாம் கேட்டுக்கொண்டா இந்த இந்த ஜாதியில் பிறக்கிறோம்? எல்லாம் அவன் செயல்.
 பைதிவே, நீங்கள் இங்கு வந்தபோது எடுத்த புகைப்படங்களை மறதியாக என்னுடைய கணினியில் இருந்து அழித்து விட்டேன். தயவு செய்து அந்த புகைப்படங்களை அனுப்பி வையுங்களேன்.
 அன்புடன்,
டோண்டு ராகவன்.


டோண்டுவிடம் இதைப்பற்றி மடல் அனுப்பி  படம்  அனுப்பிய விவரத்தையும் சொன்னதும்தான்  போலி மெயில் ஐடி விவரம் வெளிச்சமாச்சு.  அதுலே கடைசியில் tஇருக்கான்னு பாருங்க. இருந்தால் நான், இல்லைன்னா போலின்னு பொறுமையா விளக்கினார்.

என் பெயரிலும், டோண்டுவின் மகள், மனைவிபெயரிலும் போலித்தளங்களைத் தொடங்கி ஆபாசமா எழுதித்தள்ள ஆரம்பிச்சுருந்தது போலி டோண்டு. இப்படி ஒன்னு நடக்குதுன்னே எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய நலம் விரும்பி  நண்பர்கள் சிலர் உங்க பேரில் இது வந்துருக்கு அது வந்துருக்குன்னு சுட்டிகளை அனுப்புவாங்க. சரியான மன உளைச்சல் காலம் அது:(

உண்மையில் இந்த  போலி யாருன்னே தெரியாத நிலையில் இருட்டுலே கத்தி வீசுவது போலத்தான்!

சாப்பிட்டு முடிச்ச கையைக்கூடக் கழுவாமல்  காஞ்சுபோயிருந்துச்சு கோபாலுக்கு. பயங்கர ஷாக்!  இதெல்லாம்  வேற யாருக்காவது தெரியுமா? சொல்லி இருக்கியா?

 டீடெயிலா  டோண்டுவைத் தவிர யாருக்கும் சொன்னதுல்லை.  பொதுவா மேலோட்டமா பிரச்சனைன்னு சிலரிடம்   சொன்னேன்.

மர்மக்கதையால்லெ  இருக்கு.  அப்ப எல்லாத்தையும் விளக்கமா எழுதி ஒரு பதிவு  போடு. நம்ம டோண்டுவுக்கு மரியாதை செஞ்சமாதிரியும் உங்க பதிவுலக டேஞ்சர்கள்  என்னை மாதிரி ஆட்களுக்குப் புரிஞ்ச மாதிரியும் இருக்குமுன்னுட்டு வேலைக்குக்  கிளம்பிப்போயிட்டார்.

நான் ஒரு 'க கை நா' ( கணினி கை நாட்டு) என்பதால்  என்ன செய்யணுமுன்னு புரியலை.  வலைஉலக நண்பர் ஒருவர் உதவிக்கு வந்தார். பேசாம  மெயிலில் ஃபில்டர் போட்டுருங்கன்னார்.  எனக்கு  ஃபில்டர்  காபிதான் போடத்தெரியும்.  பிறகு அவரே என் பாஸ்வேர்டை கேட்டு ஃபில்ட்டர் போட்டுத்தந்தார்.  போலியின்  vocabulary  ரொம்பவே  limited  என்பதால்  அவருக்கு எளிதாக இருந்துருக்கும்!

மன உளைச்சல் நீங்குனபாடில்லை. பேசாம  எழுதறதையே விட்டுறலாமான்னுகூடத் தோணுச்சு. சில நாட்கள்  டோண்டுவுக்கு  ஃபோன் பண்ணியும் பிரச்சனையைப்பற்றி பேசி இருக்கேன்.  இந்த  ஜாட்டானுக்குப் பயந்துக்கிட்டு  எழுதறதை விட்டுடாதீங்கன்னு  சொன்னார்.  இவ்வளவு ஆனபிறகும் துளசிதளத்தில் தொடர்ந்து எழுத, டோண்டு கொடுத்த தைரியமும் ஒரு காரணம்.

போலியுடன் டோண்டு நடத்திய  போர் விவரங்கள் எல்லாம்  அவர் பதிவுகளில்வரிசையா வரத்தொடங்குச்சு.  தவறாமல் தொடர்ந்து வாசிச்சு வந்தாலும் பின்னூட்ட  ஒரு பயமும் கூடவே  இருந்தது என்றது உண்மை.



அவருடைய  போலியுடன்  Jom Kippur - டோண்டு ராகவனுடையதுஎன்ற  இடுகைக்கு முதல் பின்னூட்டம் போட்டது  நாந்தான்.  (அதுக்கும் கூட  என்னை பயங்கரமா ஏசி அவருக்கு  மடல் போட்டுருந்ததாம் போலி)  இதை அவர் தன்னுடைய அடுத்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

அந்தப்பதிவு இங்கே!  யோம் கிப்பூர் யுத்தம் டோண்டு ராகவனுடையது


இதுலே ரொம்ப வேடிக்கையானது  ஒரு 'நண்பரின்' பின்னூட்டம்தான். போலியிடம் நான் சமரசம் செஞ்சு கொண்டதையும் அதனால்  போலி என்னைப்பற்றி எழுதுவதை விட்டுவிட்டதையும்  கூடவே இருந்து பார்த்துட்டு எழுதி இருக்கார்:-)))))

அதுக்காகவே அவருக்கு அங்கே பதிலும் சொல்லவேண்டியதாப் போயிருச்சு எனக்கு!

நமக்கே  தெரியாத நம் நடவடிக்கை எப்படி இவுங்களுக்கெல்லாம் தெரிஞ்சதாம்?   ஆதாரம் இல்லாமல்  கிசுகிசுக்கள் இப்படித்தான்  எழுதப்படுகின்றன!

கடைசியில் இந்தப்போலி, நம் சிங்கை சந்திப்பில்  கலந்து கொண்டு அக்கா அக்கா என்று அன்பைப்பொழிந்த  அதே மூர்த்தியேதான் என்றதும்............ ' அடச் சீ' ன்னு வெறுப்பு..

போலி யாருன்ற கண்டுபிடிப்பில்  மூர்த்திதான் என்று டோண்டு அடிச்சுச் சொன்னாலும் மனதின் ஒருமூலையில்  அது வேறொரு மூர்த்தியா  இருக்கலாம்.  இந்த மூர்த்தியா இருக்கமாட்டார்ன்னு  எனக்கு லேசா ஒரு எண்ணம்.   அந்த எண்ணம் பொய்யாப்போச்சு. யாரைத்தான் நம்புவது இந்தக் காலத்தில்:(


 தமிழ் வலை உலகில் முதல்முதலாக ஸைபர் க்ரைமில் புகார் கொடுத்து,  கடைசியில் போலியைப் பிடிப்பதில்  எங்கள் அனைவரின் சார்பாக விடா முயற்சி செஞ்சு வெற்றி கண்டவர் நம்ம டோண்டு!  இதில் அவர்கூடவே உறுதுணையா இருந்தவர்  நம்ம உண்மைத்தமிழன். (இன்னும்கூட பலர் இருக்கலாம். ஆனால் எனக்கு விவரம் கிடைக்கலை) இதை என் வாழ்நாள் உள்ள அளவும்  மறக்க  முடியாது! வலை உலகம் உள்ள அளவும் இந்த வெற்றி நிலைச்சு நிற்கும்.


கோபாலின் வேலை காரணம் இந்தியாவில்  கொஞ்சநாள்  வசிக்க வேண்டிய நிலை. அப்பவும் நம்ம டோண்டுவிடம்தான் சில ஆலோசனைகள் கேட்டுக்கிட்டேன். நல்ல குடும்ப நண்பராகவும்  ஆகி இருந்தார்.

சென்னையில்  நம்ம உண்மைத்தமிழன் , பதிவர் சங்கம் ஒன்னு நிறுவவேண்டிய அவசியம் பற்றிக் கூட்டிய  மீட்டிங்கில்  டோண்டுவும் கலந்து கொண்டார்.  ரொம்ப நாட்களுக்குப் பின் பார்த்த மகிழ்ச்சி .

அதுக்குப்பிறகு  2010 இல் அக்கரை/அக்கறை  சந்திப்பில்  அவரைப்பார்த்தேன். நம்ம பாக்கியம் ராமசாமி அவர்களின் மாதமொருமுறை  சந்திப்பு இது.

அவருக்கு உடல்நிலை சரி இல்லைன்னதும்  முதலில் கொஞ்சம் பதறித்தான் போனேன். சிகிச்சைக்குப்பிறகு நலம் என்று  அவருடைய பதிவில் பார்த்ததும் நிம்மதியாச்சு.

போன வருசம் நடந்த கோபாலின் மணி விழாவில் கலந்துக்கணுமுன்னு  டோண்டுவுக்கு  ஃபோன்  செஞ்சேன்.  மற்ற பதிவுலக  நண்பர்களுக்கு  மின்னஞ்சலில் அழைப்பு அனுப்பும்போது  இவருக்கும் அனுப்பி இருந்தேன்.  மின்மடல் வரலைன்னார்.  'மெயில் ஐடியிலே tஇருக்கா  பாருங்க'ன்னார்!   அப்பதான் மறந்துருந்த  கசப்பு நினைவுக்கு வந்துச்சு.  போலீஸ் விசாரணைக்குத் தேவைப்படலாம் என்பதால் அந்த ஐடியை அழிக்காமல்  காண்டாக்ட் லிஸ்ட்டில்  வச்சுருந்தேன்.  இதுகூட டோண்டுவின் ஐடியாதான். போர்கால நடவடிக்கையில் ஒன்னு!

மறுபடி சரியான ஐடிக்கு அழைப்பு அனுப்பிட்டு  செல்லிலும் சொன்னேன்:-)  அவ்வளவா  வெளியில் போறதில்லைன்னும்  தங்க்ஸ் அனுமதிச்சால் பார்க்கலாமுன்னும் சொன்னார்.

குடும்ப நிகழ்ச்சியின்  மாலை விருந்தில்   ஒரு பெரியவர் மெள்ள நடந்து  வந்தார்.  எங்கியோ பார்த்த மாதிரியும் இருக்கு. ஆனால் யாருன்னு தெரியலை.  இதைப்பற்றி அப்ப எழுதின இடுகையில் ஒரு பகுதி இது.

ஹாலுக்குள் நுழைஞ்சப்ப அங்கங்கே சிலர்! நம்ம விருந்தினர்கள் வரத்தொடங்கி இருந்தாங்க. நான்தான் ஸோ அண்ட் ஸோன்னு தன் பேரைச் சொல்லி (சரியா என் காதில் விழலை) அறிமுகப்படுத்திக்கிட்டவரை எங்கியோ பார்த்த நினைவு. அவருடைய இருக்கைக்குப் பின் இருக்கையில் நம்ம நுனிப்புல் உஷா, அப்துல் ஜப்பார் ஐயாவிடம் பேசிக்கிட்டு இருந்தவங்க, முன் இருக்கைக்குக் கீழே கையைக் காமிச்சாங்க. ஒரு மோதிரம்! யானைவால் முடிவச்ச தங்க மோதிரம்.

 யானைக்காரிக்குப் பரிசா யாராவது கொண்டு வந்துருக்கலாம் என்ற சம்ஸயத்துடன் அதை எடுத்து, யாரோடதுன்னு ஏலம் போட்டேன். லதானந்த் கூடப்பேசிக்கிட்டு இருந்த தெரிந்த முகத்துக்காரர் தன்னோடதுன்னு வாங்கிக்கிட்டார். விரலில் இருந்து நழுவி இருக்கு:( அப்பவும் அவரை சட்ன்னு நினைவுக்கு வரலை.

 சபையில் நண்பர்கள் கூடி கலகலப்பான சமயம், என் அருகில் இருந்த நம்ம காவேரி கணேஷிடம், அவரைக் காமிச்சு யாருன்னு தெரியுதான்னா... அவருக்கும் யாருன்னு புரிபடலை. நான் விசாரிச்சுச்சொல்றேன்னவர் வந்து சொன்ன பெயரைக்கேட்டு அப்படியே ஆடிப்போயிட்டேன்:(   நம்ம டோண்டு!!!!!

டோண்டு, நீங்கள் உடல்நலக்குறைவில் இருந்து மீண்டுவர எம்பெருமாளை மனதார வேண்டுகின்றோம்.

மேடையில் கொஞ்சம் பிஸியா இருந்துட்டதால் தனித்தனியா ஒவ்வொருவரோடும் பேசவும் சந்தர்ப்பம் கிடைக்கலை:(  இந்த அழகில்  கோபால்வேற டோண்டுவிடமே  உங்களை எங்கியோ பார்த்தா மாதிரி இருக்கு. நீங்க யாருன்னு கேட்டுருக்கார்!  கடைசியில்  கோபாலிடம் சொல்லிட்டு அவர் சீக்கிரமாக் கிளம்பிட்டாராம். சாப்பிட்டாரான்னு  தெரியலை:(  வெறும் தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டதாக  உண்மைத்தமிழன் பதிவில்தான் பார்த்தேன்.

பரிசுப்பொருட்களைத் தவிர்க்க  வேணும் என்ற வேண்டுகோளை சில நட்புகள் பொருட்படுத்தவே இல்லை. கல்பட்டு ஐயா  தம்பதிகள் கோவில் ப்ரசாதங்கள் ரவிக்கைத்துணி மஞ்சள் குங்குமம் என்று  ஆசி வழங்கினர். நம்ம எஸ் கே. நடராஜன் அவர்கள் என்னைக் குடும்பத்தில் ஒருவராக்கி  புடவை ரவிக்கை வேஷ்டி  அங்கவஸ்திரம் என்று சம்பிரதாயமாக அமர்க்களப்படுத்தி விட்டார்.  நம்ம மரபூராரும், லதானந்தும்  புத்தகங்களைக் கொடுத்தார்கள்.(இதைமட்டும் வேணாமுன்னே சொல்லமாட்டேன்!!)

அப்புறமும்  யார் கொடுத்தார்கள் என்று தெரியாமலேயே  சின்னச்சின்னதா சில பரிசுப்பொருட்கள் ஒரு மேஜையில் சேர்ந்துபோச்சு. நியூஸி வந்தபிறகுதான்   பெட்டியில்   போட்டு வச்சுருந்த குட்டிக்குட்டியா இருந்த யானைகளை எடுத்து  ஷோகேஸில் வச்சேன்.

ஆமாம்.... இதையெல்லாம் இந்தப்பதிவில் ஏன் சொல்றேன்?  காரணம் இருக்கு.

அப்படியும்  ஒரு சின்ன வெள்ளிநிற அட்டைப்பெட்டி ஒன்னு பிரிக்கப்படாமல் அப்படியே சாமி அறை ஷோ கேஸின் மேல் உக்கார்ந்துருந்துச்சு.  அது கண்ணில் படும்போதெல்லாம் உள்ளே என்ன இருக்குன்னு பார்க்கணும் என்று நினைச்சுக்கிட்டே இருந்தும்  மறந்து போயிரும்.

போன மாசம் ஒருநாள் பிரிச்சுப் பார்த்தேன்.  சின்னதா அழகான வெள்ளி ஊதுவத்தி ஸ்டேண்ட். யாரா இருக்குமுனு  தெரியலை. பார்த்துட்டு அப்படியே உள்ளெ வச்சுட்டேன்.  மூணு வாரத்துக்கு முன்னால்  என்னவோ தோணிப்போய்  மறுபடி அந்த அட்டை டப்பாவைத் திறந்து பார்த்தால்..... ஓரத்தில் ஒரு அட்டை.  நம்ம டோண்டுவின் கார்ட்! அட!

நாலு மாசம் கழிச்சு,  பரிசைக்  கொடுத்தவரைக்  கண்டுபிடிச்சுட்டேன். நன்றி சொல்லி ஒரு மடல் அனுப்பணும். இதுவும் நாளை நாளைன்னு  நாட்கள் கடந்து போயே போச்சு. இப்ப  டூ லேட்:(

கண்முன்னே இருக்கும்  பரிசைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு குற்ற உணர்ச்சி:(

அந்த நேர்மை, வெளிப்படையான பேச்சு,  எத்தனை முறை கேட்டாலும் அலுக்காமல் சலிக்காமல் வலை உலகின் ஆபத்தில் இருந்து  எப்படி நம்மைக் காத்துக்கணும் என்று சொல்லிக்கொடுத்த பொறுமை (எலிக்குட்டி சோதனை செஞ்சுக்கணும்) தன்னுடைய  கொள்கையில் தடுமாறாமல் நின்ன  மனத்திண்மை இதெல்லாம்  நினைக்கும்போது........


பதிவுலகம் முழுதுமே  இவர் மறைவு கண்டு கலங்கி நிற்பதில் என்ன வியப்பு?

 டோண்டு,  என்னவொரு மனிதர் ஐயா நீர் !!!!!





பூனை மீசை !

$
0
0
வடை வாசனை மூக்கைத் துளைக்குது தெருவுக்குள் நுழையும்போதே!  நாலுமணிக்கு  வர்றோமுன்னு தகவல் கொடுத்துருந்தேன். போற வழியில்  ஊருக்குள்ளே  நுழையும் இடத்தில் செர்ரிப்பழங்களை வித்துக்கிட்டு இருந்தாங்க. பழம் வாங்க வந்தவரின் வண்டியில் திடீர்னு எஞ்சினில் எதோ தகராறு.  நம்ம சார்பில் கொஞ்சம் தள்ளிவிட்டோம்..... பழக்கடைக்காரருக்கு நம்ம செயல் பிடிச்சுப்போச்சு போல!  எழுதிப்போட்ட விலையில் இருந்து  20% தள்ளுபடி கொடுத்தார்.


அரசு விடுமுறை என்பதால் ஊரே இன்னும் கொஞ்சம் ஜிலோன்னு  கிடந்துச்சு. நம்ம நியூஸியில் வருசத்துக்கு 11 நாட்கள் அரசு விடுமுறை. இதுலே  நியூ இயர், ஈஸ்ட்டர், கிறிஸ்மஸ் இப்படி மத சம்பந்தமான  மூணு சமாச்சாரங்களுக்கும்   ரெண்டு நாட்கள் தொடர்ந்து லீவு விடுவாங்க. ஹேங்க் ஓவர் லீவா இருக்குமோன்னு எனக்கு சம்ஸயம்:-) இந்த நாட்கள் சனி ஞாயிறாப் போயிருச்சுன்னால்  அடுத்த நாட்களான திங்கள் செவ்வாய் லீவு கிடைக்கும். அய்யய்யோ   ஞாயித்துக்கிழமையா அமைஞ்சு  ஒரு நாள் விடுமுறை போச்சே.... ன்ற  கதை இல்லையாக்கும் கேட்டோ:-)


நம்ம கெஸ்ட் ஹவுஸில் கூட ஹவுஸ் கீப்பிங் இந்த  விடுமுறைகளுக்கு  இருக்காது. நீங்களே சமாளிச்சுக்குங்கன்னு  நோட்டீஸ் போட்டுருந்தாங்க.  அதனால் எங்கும் ஒரே அமைதிதான். எல்லா சர்ச்சுகளும் சொல்லிவச்ச மாதிரி மூடிக்கிடந்தன.




மசால் வடை!  கூடவே சில கேக்குகளும் சாயாவும்.

 பூனையார் உருவாகிக்கிட்டு இருந்தார்.  லிக்கொரிஸ் மீசையை ஒட்டிக்கிட்டு இருந்தாங்க தோழியின் மகள். Licorice வாசனை பிடிச்சுப் போச்சுன்னா.... திங்கறதை நிறுத்தவே முடியாது. இது ஒரு செடியின் வேரில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு. மாவு, இன்னும் கொஞ்சம் சீனி எல்லாம் சேர்த்து முட்டாய்களா பண்ணறாங்க. சின்னச் சின்ன முட்டாயா இல்லாம  நீளமா ரோல் செஞ்சு  கயிறுத்துண்டுகள் மாதிரியும் கிடைக்கும். வெவ்வேற நிறங்கள் சேர்த்து  எல்லா கலர்களும் ரெடி.


மீசைக்கு வெட்டுனது போக மீதி இருந்த லிக்கொரிஸை ஒரு கை பார்த்துக்கிட்டு இருந்தது வாண்டு. மறுநாள் அதுக்குப் பொறந்த நாள். ரெண்டு வயசு.  ஒரு பக்கம் காத்து நிறைச்ச பலூன்கள் ! என்னமோ நடக்குதுன்ற  பரபரப்பில் குழந்தை  இங்குமங்குமா ஓடித் திரிஞ்சது. நிஷா, யூ ஆர் ஒன் டுடே , டு டுமாரோன்னதும்  எல்லாம் புரிஞ்சதுபோல ஒரு சிரிப்பு.

நேத்து புதுவருசத்தை முன்னிட்டுக் கொலை பண்ணப் போயிருந்தார் குழந்தையின் அப்பா. தொழில் முறையில் இவர் வெட்.  ஆனால் உபதொழில் கொலை!!!!! இந்தப்பக்கங்களில் முயல் தொல்லை அதிகமுன்னு  விவசாயிகள்  செய்யும் ஏற்பாடு இது. ஷூட்டிங் விருப்பம் உள்ளவர்களைக் கூப்பிட்டு போட்டுத் தள்ளிடுறாங்க,  ஐ மீன் முயல்களை.  Pest வகையாம் :(


தமிழ் சினிமாப்புகழ் குவீன்ஸ் டவுனுக்கு  அருகில் போயிருக்கார்.  158 கிலோ மீட்டர் இங்கிருந்து. அங்கேயும் விடாமல் மழையாம்.  சூட்டிங்கை  பகலோடு  நிறுத்தறாங்களாம்.  இன்றைக்கு இரவு விருந்தில்  கலந்துக்கக் கட்டாயம் வந்துருவேன்னு  சொன்னதால் நாங்கள் அவருக்காக (மசால்வடைகளைத் தின்னுக்கிட்டே) காத்திருந்தோம்.


முதல்நாள் நாங்க போன இடத்தைப்பற்றி விசாரிச்ச ஃபிலிப், நாங்க ஸ்டெவர்ட் ஐலேண்ட் போனோமுன்னதும் .... அங்கே அஞ்சு வித பெங்குவின், ஆல்பி எல்லாம் பார்த்தீங்களான்னார். பார்த்தேன். இன்னும் பலவித பறவைகளையும்  பார்த்தேன் என்றதும் அவருக்கு  ஏற்பட்ட மகிழ்ச்சியை என்  அடுத்த சொல்லால்  இன்னும் அதிகமாக்கினேன். அவரும் அந்தப் பக்கமெல்லாம் இன்னும் போகவே இல்லையாம். இங்கேயே பிறந்து வளர்ந்தவர்!


பார்த்தேன். இன்னும் பலவித பறவைகளையும் ஒன்னுவிடாமப்  பார்த்தேன்  ம்யூஸியத்திலே!


என்ன மழை என்ன மழை ! தண்ணியைத் தவிர எதாவது கண்ணில் பட்டால்தானே?  இப்பக்கூடப்பாருங்க மழை நின்னபாடில்லை:(
ஆமாம்.... இங்கே எப்பவும் குறிப்பா விண்ட்டனில் (தோழி வசிக்கும் ஊர்) மழையே இருக்காது. என்னவோ தெரியலை. இந்த வாரம்தான் இப்படின்னு......... மன்னிப்பு கேக்கும் குரலில் தோழி சொன்னதும்.....  ஹாஹா.... காரணம் தெரியலையாமே:-))))))

ஆறே முக்காலுக்கு வந்து சேர்ந்தார் மருமகன்.  நேத்து இரவு  பத்து மணிக்கு  ஆரம்பிச்சு  பகல்வரை 900 கொலைகள்.  நல்ல இருட்டில்  ஓசைப்படாமல் நின்னு  பளீரென்று வெளிச்சம் அடிச்சவுடன், மிரண்டு போய்  திகைச்சு நிற்கும்  முயல்களை.......... ரெடி ஷூட்:(  இதை விவரிக்கும்போது குரலில் என்னவொரு உற்சாகமுன்னு  நினைக்கிறீங்க!!! எனக்குத்தான் ஐயோ பாவம்ன்னு இருந்துச்சு. ஐ மீன் முயல்களை நினைச்சு.


" ஓ  டுல்ஸி, என்னைப் பார்த்தால் கொலைகாரன் மாதிரியா இருக்கு?"

இல்லையா பின்னே............


இந்தப் பக்கங்களில் DOC ( Department of Conservation)   நேடிவ் பறவைகளைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில்  அவைகளுக்கான எதிரிகளை(Predater, Pest) போட்டுத்தள்ள  தன்னார்வலர்களை உதவிக்குக் கூப்பிட்டுக்கும்.  ஆனால் ஒரு இனத்தைக் காப்பாத்த இன்னொரு இனத்தை அழிப்பதை என் மனசு ஏத்துக்கமாட்டேங்குது:(


ஒருவழியாக சாப்பாடு ஆரம்பிச்சு முடிஞ்சது.  இங்கெல்லாம் சின்னக்குழந்தைகளுக்கு பெட் டைம் ஏழரை. எனக்கே பாவமா இருக்கும். டே லைட் ஸேவிங்ஸ்  வேற இருக்குதா.... (உண்மை நேரம்  6.30தான் ஆகி இருக்கும்)  நல்ல வெளிச்சம் இருக்கும் மாலைப்போதில்  படு படுன்னா அதுகள் என்ன பாடு படும் சொல்லுங்க?


குழந்தையைக் குளிப்பாட்டி...( இங்கே குளியல் கூட இரவு படுக்கைக்கு முந்திதான், கேட்டோ)  எங்களுக்கெல்லாம் குட் நைட் சொல்ல வச்சுட்டு உள்ளே கொண்டுபோய் தூங்க வைச்சாங்க  மகள். கால்மணியில் ஓசைப்படாம எங்களோடு வந்து கலந்துக்கிட்ட தாயின் பின்னே மெல்லடி எடுத்து வச்சு சேர்ந்துக்கிட்டது பிஞ்சு:-)))))


நாங்களும்  டாடா பைபை சொல்லிட்டு கிளம்பினோம்.  திரும்ப உள்ளே போன பிஞ்சு, வண்டியை இவர் ஸ்டார்ட் செஞ்சதும் ஓடிவந்து   ரெண்டு கைகளையும் நீட்டி  தாதா தாதான்னு  அழ ஆரம்பிச்சதும் ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டுக் கொஞ்சியதும் கவிதை! குழந்தைகள்  செயல் ஒரு அழகுதான் இல்லை!!!!!! அதிலும் அடுத்தவர்கள்  குழந்தைன்னா.... இன்னும் அருமை!!!!!


மறுநாள் எங்களுக்கு  காலை ஒன்பதே முக்கால் ஃப்ளைட்.  சிம்பிளான  ப்ரேக்ஃபாஸ்ட்.

 அறையைப் பூட்டிச் சாவியை  வரவேற்பில் இருந்த பெட்டியில் போட்டுட்டு கார்காரருக்கு  சேதி சொல்லிட்டு  கார்காரர் ஆஃபீஸுக்குப் போனால் நல்ல நல்ல வண்டிகள் வெளியே நிறைய இருக்கு. ஆறமர அவைகளைக் கழுவிக்கிட்டு இருக்கார்.  இவ்ளோ நல்ல வண்டிகளை வச்சுக்கிட்டு நமக்குக் கொடுத்ததைப் பற்றிக்கேட்டால்.... எல்லாம் நேத்து இரவுதான் திரும்பி வந்தனவாம். நம்பித்தானே ஆகணும்?  ரெண்டு நிமிசம் பொறுங்க. தோ வந்துடறேன் கை வேலையை முடிச்சுக்கிட்டுன்னார்.  இது  சொந்த வண்டிதான் சந்தேகமே இல்லை:-)


அஞ்சு நிமிச ட்ரைவ் ஏர்போர்ட்.  செல்ஃப் செக்கின் செஞ்சுக்கிட்டு பைலட்டும் ஏர்ஹோஸ்டஸும் வரட்டுமுன்னு காத்திருந்தோம்.  சின்ன ஏர்ப்போர்ட் என்றாலும் அழகா அமைதியா இருந்துச்சு.  மழையில் நனைஞ்சபடியே விமானத்துக்கு சிசுருஷை செஞ்சுக்கிட்டு இருந்தார் ஒருவர். மெயிண்டனென்ஸ்? லக்கேஜ்களை ட்ராலியில் வச்சு இழுத்துப்போய்  விமானத்தில் வயித்தில் ரொப்புனாங்க.  நமக்குத்தான் நேரம் கிடக்கே! அதுவரை வேடிக்கைதான்.


பத்து நிமிசம் இருக்கும்போது 'வந்து ஏறிக்கோ' ன்னதும்  போய் உக்கார்ந்தோம். காலநிலை சரி இல்லாததால்  விடுமுறையை ரத்தாக்கிட்டு வந்த  சோகம் பல முகங்களில். விமானம் கிளம்பி அரை மணி நேரத்தில் மழையைக் காணோம்..காக்கா ஊஷ்...




மலைச்சிகரங்களில் பனி .  எங்கள் கோடைகால(மா)ம் இது!!


எங்கூருக்கு அடையாளமான கட்டங்கட்டமான வயல்களுடன் கேண்டர்பரி ப்ளெய்ன்ஸ்.


பெட்டிக்காக காத்திருந்தபோது  நமஸ்தே சொல்லுச்சு  ஏர்நியூஸிலேண்ட்  பல மொழிகளுக்கு நடுவில். ம்ம்ம்..இருக்கட்டும்........

வீடுவந்து சேர்ந்ததும் வழக்கமான வேலைகள்.  ரஜ்ஜு ஓடி வந்தான்.

சௌத்லேண்ட் பயணம் முடிந்தது. கூட(வே) வந்த அனைவருக்கும்  நன்றிகள்.



மண்கோட்டை கட்டலாமா?

$
0
0

வருசாவருசம் டிசம்பர் ஒன்னு. குளிரோ மழையோ 'டான்' னு  நியூஸி சம்மர் ஆரம்பிச்சுரும். மூணு மாசம் கோடை காலம்.  டிசம்பர் முழுக்க,  வரப்போகும் கிறிஸ்மஸ்  பண்டிகைக்கான ஏற்பாடுகள் ஷாப்பிங் பரிசுப்பொருட்கள் இப்படி அநேகமா எல்லோரும் தலையை பிச்சுக்குவாங்க.

சர்ச்சுக்குக் கட்டாயம் போகணும் என்ற நிர்பந்தம் ஒன்னுமில்லை. அவரவர் விருப்பம். ஆனால் இது ஃபேமிலிக்குண்டான விழா. முக்கியமா குடும்பம் முழுசும் கூடியவரையில் ஒன்னா சேர்ந்து  பகல் லஞ்சு சாப்பிடணும். முதியோர் இல்லத்தில் இருக்கும்   பெற்றோர், மாமனார் மாமியார் எல்லோரும் இன்னிக்கு வீட்டுலே ஆஜர்.  வேறஎதாவது காரணத்துக்காக மருத்துவமனைகளில் இருப்பவர்களுக்கும் பிரச்சனை இல்லை. வீட்டுக்கு விடுவாங்க அன்னிக்கு.

மறுநாள் பாக்ஸிங் டே. அரசு விமுறை. அதுக்காக  குத்துச்சண்டையெல்லாம் போடமாட்டோம்.  பழங்காலத்தில் கிறிஸ்மஸ் விருந்து நடந்து முடிஞ்ச மறுநாள் மீந்து போன உணவு வகைகளையும் கேக்கு வகைகளையும் பெரிய அட்டைப்பெட்டிகளில் நிரப்பி  ஆதரவற்ற பெரியோர், குழந்தைகள் உள்ள  இடங்களுக்கு அனுப்புவாங்களாம்.  பாக்ஸ் அனுப்புவதால் இது பாக்ஸிங் டே!  எங்க நியூஸியில் கிறிஸ்மஸ் அன்னிக்கே  சிட்டி மிஷன்,  விழாக்கொண்டாட முடியாத ஏழ்மையில்(!)  இருப்பவர்களுக்கு கிறிஸ்மஸ் லஞ்ச் ஏற்பாடு பண்ணிருது. சமையல், பரிமாறுதல் எல்லாம்  வாலண்டியர்களே!  அட்டகாசமான  விருந்துணவு. பிள்ளைகளுக்கு  பரிசுப்பொருட்கள் என்று  ஜமாய்ச்சுருவாங்க.


அஞ்சே நாளில் புதுவருசம் வந்துருது பாருங்க.  டிசம்பர் முடிஞ்சது.மீதி இருக்கும் கோடை காலத்தை  மகிழ்ச்சியாக் கொண்டாடி மனசில் நிரப்பிக்கிட்டால் வரப்போகும் குளிரை சமாளிக்க ஒரு தெம்பு வந்துருதுல்லே? கோடை காலத்துக்குன்னு  சில சம்பிரதாயங்கள், சாஸ்த்திரங்கள்  சடங்குகள்  உலகெங்கும் இருக்கே!   பாட்டு, நடனம் நாடகம், ப்ளவர் ஷோ,  கோஸ்ட் டு கோஸ்ட் (Coast to Coast) சைக்கிள்  போட்டி, ட்ரயத்லான் , பஸ்கர்ஸ் ஃபெஸ்டிவல் இப்படி  பலவகைகளை அடுத்துவரும் எட்டு வீக் எண்ட்களில்  கொண்டாடி முடிச்சுக்கணும். மார்ச்  ஒன்னு முதல் ஆட்டம்! Autumn. இலையுதிர் காலம்.




இந்தக் கொண்டாட்டங்களில்  ஒன்னுதான்  மணல்கோட்டை போட்டி.


போனவருசம் போட்டியை மழை வந்து  கெடுத்துருச்சு. ஆனாலும் ஏற்பாடுகள் என்ற வகையில் அருமை. இதுக்கு மட்டும்  கொஞ்சம் தங்கமணல் !  ஆனா...எங்கூரு கடற்கரை கருப்பு மணலால் ஆனது.  போகட்டும் போன்னு இருக்கவேண்டியதுதான்.  நியூஸியின்  அதிகாரபூர்வமான கலர் கூட கருப்புதானே!

'சமீபத்தில்' தான் ரக்பி  ஆட்டத்தில் உலகக்கோப்பையை நியூஸி ஆல் ப்ளாக் டீம்  ஜெயிச்சுருந்ததால்  அவுங்களும், நிலநடுக்கம் வந்து நகர் அழிஞ்சுபோன சம்பவம் நடந்து ஒரு வருசம்கூட முடியாததால்  அதுவும்தான்  மெயின் தீமா பலர்  கையாண்டு இருந்தாங்க.  நாங்க போறதுக்குள்ளே  மழையும் காற்றும் சிதைச்ச மீதிகளைத்தான் க்ளிக்கிட்டு வந்தோம்.

 மேலே உள்ள படங்கள் எல்லாம் போனவருசம் எடுத்தவை.

இந்த வருசம் கால நிலை ஓக்கே. வெய்யில் இருந்த தினம்.(சம்மர் பாருங்க!!!)
 காத்தாடிகள் பல டிஸைன்களில்.



பயங்கரக்கூட்டம். சொன்னா நம்பமாட்டீங்க!  கடற்கரை ஜேஜேன்னு இருக்கு!  இந்த வருசம் 30 குழுக்கள் பங்கேற்றாங்க.  ஒவ்வொன்னுக்கும்   கம்பு நட்டு மூடி போட்ட ஒரு ப்ளாஸ்டிக் வாளி  தொங்கவிட்டுருந்தாங்க இந்த முறை.  சிற்பம் பிடிச்சுருந்தால் ஓட்டு போடவச்சுருக்கும்  ஏற்பாடு. அதிக ஓட்டு கிடைச்சவங்களுக்கு பரிசு உண்டு. ஆனால் பரிசு ஒன்னும் பெருசா இருக்காது.  எங்கியாவது ரெஸ்ட்டாரண்டில்  ரெண்டு பேருக்கோ  இல்லை குழுவுக்கோ சாப்பாடுன்னு இருக்கும். பரிசா நமக்கு முக்கியம்?  பெயர் இல்லையோ!!!! ஆனால் ஓட்டுச்சீட்டும் பேனாவும்  எங்கே? பீச்சுக்குப்போறவன் பேனாவும் பேப்பருமா கொண்டு போவான்? ஒரு கேமெரா போதாதோ?

பல சிற்பங்கள்   ரொம்பவே சுமார் ரகங்கள்.  எனக்குப்பிடிச்சதுன்னா ரெண்டே ரெண்டுதான்.

குரங்கும் குட்டியும்.

இடிஞ்ச கோவிலில் சிவலிங்கமும்

( அப்படித்தான் நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.! ஆனால்  இது டொமட்டோ சாஸ்  வரும்  பாட்டிலும்  பொட்டேட்டோ (ஃபிங்கர்) சிப்ஸுமாம்!!!!)

கெமெராவுக்கு  தப்பான லென்ஸைக் கொண்டு போனதால்  க்ளோஸ் அப் படங்கள் பல சரியா வரலை. பதிவில் போட மகள் எடுத்த படங்களை இரவல் வாங்கினேன்!

இந்த வருசம் முதலிடம் பெற்ற மணல் சிற்பம் இது. Taniwha என்று  மவொரி கதைகளில் வரும்  கடல் மிருகம்!

ஆமாம்.....மணல் கோட்டை ( சேண்ட் காஸில்) போட்டின்னுட்டு மணல் சிற்பம் செஞ்சால்  எப்படி?  பொருட்குற்றம் வந்துருக்கோ!!!!

பார்த்து முடிச்சுட்டு  எதிரில் இருக்கும் ஓப்பன் மாலுக்கு வந்தால்  மார்கெட் டே!  நம்ம ஹரே க்ருஷ்ணா ஆட்கள்  இலவச உணவு  கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. அங்கே சாப்பிடணுமுன்னா தட்டு. டேக் அவே கொண்டு போகணுமுன்னா அழகான பாலிஸ்டைரீன்  பேக்.  கோவிலே இடிஞ்சு விழுந்து அதைத் திருப்பிக்கட்ட  நிதிக்காக ஒரு பக்கம் தவிச்சுக்கிட்டு இருந்தாலும் அன்னதானத்தை நிறுத்தலை பாருங்க! நல்லா இருக்கட்டும்!






கலர் கிறுக்கு....

$
0
0
எனக்குக் கொஞ்ச நாளா ஒரே கலர் கிறுக்கு பிடிச்சிருக்கு. என்னமோ இப்பவே அனுபவிச்சுறனுமுன்னு ஒரு வேகம்.  ஒருசீஸன் மட்டுமோ இல்லை  சிலபல ஆண்டுகள் வாழும் வகைகளோ எதா இருந்தாலும் இப்போதைய ஆசை கலர்ஸ் மட்டுமே!


சம்மர் உள்ளபோதே 'கண்டு'  அனுபவிக்கலைன்னா காலம் போயே போச் என்பதால்  கொஞ்சம் மெனெக்கெடத்தான் வேண்டி இருந்துச்சு. கோபாலும் அவர் பங்குக்குக் கொஞ்சம் (!!!) ஒத்துழைத்தார் என்பதால் அவருக்கும்  என் நன்றிகள்.


அடுக்களை ஜன்னலில் இருந்து பார்த்தால் கண்ணுக்குத் தெரியணும் என்பதுதான் ஒரே கண்டிஷன்.


சரி. வாங்க கலர்ஸ் பார்க்கலாம்.

நம்ம காக்டெஸ் கன்ஸர்வேட்டரியில் பூத்தவை இவை.




பச்சை நிறமே பச்சை நிறமே.....

நம்மூர்லே புரட்டாசிமாசம் கிடைக்கும் சாமந்திப்பூக்கள் வகைதான். ஆனால் நிறம் பச்சை:-) Chrysanthemum




கிறிஸ்மஸ்  பண்டிகைக்கான பூச்செடி இது. இலைகளே பூவாக ஆகிருது.
.
 Poinsettia செடி.

Saxifraga  இதுலே மட்டும் 440 வகை இருக்கு(தாம்)





Zinnia   மலர்களில்  20  வகை. பலவித நிறங்களில்.


லாவண்டர் இது.



Foxglove   நரிக்கான  குளிர்கால ஏற்பாடோ!


Fuchsia இது  பர்ப்பிள் அண்ட் ரெட்,  பிங்க் அண்ட்ரெட், டபிள்கலர்களில்  அட்டகாசமா இருக்கு. நம்மூட்டுலே இது இப்படி.


Impatiens மலர்கள். வெறும்  ஆறு செடிகள் வாங்கலாமுன்னு போனா.... மல்ட்டி மிக்ஸ் 40 செடிகள் ஸேலில் இருக்கு. விடமுடியுதா?  இந்தச்செடிகளில் கிட்டத்தட்ட ஆயிரம் வகைகள் இருக்காம்.! 









பின்குறிப்பு: ரொம்ப  விசேஷமானவை நாளை!

தொடரும்  ..........:-)))))))))) 

கலர் கிறுக்கு.... தொடர்ச்சி:-)

$
0
0

Holly tree

இந்த மரத்துக்கு ஒரு விசேஷம் உண்டு.இதன் அடியில் நின்னு காதலர்கள் முத்தமிட்டுக் கொண்டால் ,  கல்யாணம் உறுதியாகிருமாம். அதுக்காக ஒரு மரக்கிளையை உடைச்சு கையில் பிடிச்சுக்கிட்டு,  கையை தலைக்கு மேல் தூக்கி வச்சுக்கிட்டு  (மரத்தடியில் நிக்கறமாதிரின்னு ) உண்மைக்காதலர்கள்  கிஸ் பண்ணிக்குவாங்க. நம்ம வீட்டு மரத்தில் அப்பப்ப  கிளைகள் ஒடிஞ்சுருப்பதைப் பார்த்தால் இது நெசம்தான் போல!!!!

வெள்ளையும்  பச்சையும்  கலந்த  இலைகள். பச்சை இலையில் வெள்ளை பார்டர் ! இலைகளில் ஓரத்தில் முள் இருக்கும் கேட்டோ! அழகு அவ்வளா இல்லாத சாதாரண வெள்ளைப்ப்பூக்கள். ஆனால்  இதுலே வர்ற பழங்கள்தான் கண்ணைக் கவரும் விதத்தில் இருக்கும்.  மிளகு சைஸில் சிகப்பு நிறத்தில் . ஏராளமான பறவைகள் பழத்துக்காகவே வந்து அம்மும்.


கிறிஸ்மஸ் விழா அலங்காரத்தில் இந்த மரத்தின் ஒரு கிளையை  சாஸ்த்திரத்துக்கு  வைக்கறாங்க(ப்ளாஸ்டிக் செயற்கை கிளை)  சம்ப்ரதாயமான கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளில் இதன் இலைகள்  தவறாமலிடம் பெறும். கிறிஸ்மஸ் ரீத் இந்த இலைக்கொத்துகளை வச்சுத்தான் கட்டுவாங்க.

நம்ம வீட்டு மரம் நான் நட்டது இல்லை.  இந்த  இடத்தின்  பழைய ஓனர்  நட்டு வச்சு வளர்த்தது. ஆனால் அவுங்களுக்கு மரத்தடி எபிஸோடில் நம்பிக்கை இல்லையோ என்னமோ  கடைசிவரை கல்யாணம் கட்டாமல் வாழ்ந்து தன் 80 வது வயசில்   எங்களுக்கு வீட்டை வித்துட்டு முதியோர் இல்லம் போயிட்டாங்க.  பழைய வீட்டில்  95 % இடம் தோட்டமாகவும் நடுவில் ரெண்டு   அறையுள்ள வீடுமா இருந்துச்சு. நாங்க   எல்லாத்தையும் எடுத்துட்டு வீட்டுக்கு 32 %ம்தோட்டத்துக்கு  68%  வச்சுருக்கோம்.



இது மல்லி வகைகளில் ஒன்னு. நல்ல வாசம் இருக்கு. ஆனால் சட்ன்னு வாடிரும்.  தொடுத்துவச்சால் ஒரு மணி நேரத்தில் புளியம்பூ:(



 Lobelia  இதுவும் பலவகை நிறங்களில் இருக்கு.





hollyhock இதுலேகூட 60 வகைகள் இருக்காம்.  அசப்புலே வெண்டைச்செடி இலைகள் பூக்கள் போல இருக்குன்னு இதன் மேல் எனக்கு அலாதியா ஒரு ஆசை.  நெடுநெடுன்னு 12  அடி உசரம்வரை வளரும் தண்டில்  வரிசை பூக்கள் ஒரு அழகு! கம்பத்தில் லௌட் ஸ்பீக்கர் கட்டி வச்சாப்லெ:-))))






Pansy . இதுக்கு நான் வச்ச பெயர் நாய் மூஞ்சு. பொமெரெனியன் நாய் முகம் என்று எனக்குத் தோணும். அதே சிரிச்ச முகம். இதுவும் பல நிறங்களில் உண்டு. முகம் இல்லாத ப்ளெய்னும்  உண்டு.






Flemingo plants இதிலும்  ஒவ்வொரு  மகரந்தத்தண்டையொட்டி வரும் இலைகளே பூவாகிருது. அந்த குறிப்பிட்ட இலை மட்டுமே  சிகப்பு நிறமா மாறிடும்.  நம செடியில் இப்போதான் நிற மாற்றம் உண்டாகுது. நம்ம ராமலக்ஷ்மி, குடியரசு தின மலர்க்கண்காட்சியில்  பார்பி டால்  ட்ரெஸ் Anthurium என்று சொன்னவைகளே இவை.




Petuniaகொஞ்சம் சுலபமா வளர்க்கக்கூடியவை. இதிலும் ஒரு 35 வகை இருக்கு.  ஒன்னோட நிறுத்திக்க முடியாதாமா  இந்த இயற்கைக்கு:-)









Lilyபல நிறங்கள் உள்ளன. கிறிஸ்மஸுக்கு  பூ வேணுமுன்னா சரியா 100 நாளைக்கு முன்  lily Bulb நட்டுவச்சால் போதுமாம்.  தண்ணீர் தேங்கி நிற்காத நிலம் என்றால் ஒரு வருசம் நட்டுவச்சது தொடர்ந்து வருசாவருசம் பூத்துரும்.




Helianthus 52 வகைகள். நமக்கெல்லாம் ரொம்ப பரிச்சயமான பூக்கள்தான்.  சன் ஃப்ளவர் என்று பெயர்:-)  சூரியகாந்தி. நெடுநெடுன்னு வளர்ந்து போகும் தண்டின் உச்சியில்  ஒரு பெரிய பூ ஒன்னே  ஒன்னு, கண்ணே கண்ணுன்னு  வருது. தினம் தினம் அதன் வளர்ச்சியைக் கவனிச்சு  வியந்தேன். மொட்டு இதழ்விரியுமுன் கண்ணாமூச்சிக்குக் கண் பொத்தி வைப்பதைப்போல  இதழ்கள் எல்லாம் ஒன்னையொன்னு அணைச்சு சேர்த்து மூடிபோட்டு வைக்குது.






இதில் டெட்டிபேர் வகைச் செடிகள் குள்ளமா இருந்தாலும்  கிளைவிட்டு வளர்ந்து ஒரு செடியில் ஏழெட்டு பூக்கள் வரை முளைக்குது. ஆரம்பத்தில் மையப்பகுதி வழக்கமான சூரியகாந்தி போல  மேத்தமெடிக்கல் டிஸைன் நடுவில் இருந்தாலும் பூ முழுசுமா மலர்ந்த பிறகு பார்த்தால் செண்டுப்பூ போல இருக்கு.

Hibiscus.  செம்பருத்தி.  பல நிறங்களில் உண்டு. நமக்கு  கிடைச்சது இவைகளே. அதிலும் ஒன்னு  மட்டும் நம்மோடு ஒத்துழைக்கலை. பேபிச் செடியா வாங்கினதுதான், பார்த்தால் செம்பருத்தி மாதிரி இருக்கேன்னு ..... மொட்டு வந்து பூவின் நிறம் தெரியுமுன்  உதிர்ந்து போகுது. சாமிக்குத்தம்  ஆகிருச்சோ?
பீச் கலரில் இப்போ ஒரு மொட்டு . காத்திருக்கிறேன்,க்ளிக்க.






Bougainvillea   கிட்டத்தட்ட 18 வகைகளிருக்காமே!  ஒரு சமயம் கோவை விவசாயக்கல்லூரி சுற்றுச்சுவரை ஒட்டி பல நிறங்களில் காகிதப்பூ பார்த்த நினைவு. இப்பவும் இருக்கான்னு தெரிஞ்சவுங்க (நம்ம பழனி.கந்தசாமி ஐயா)  சொன்னால் தேவலை.


நம்ம வீட்டில் ஒரு  ரெண்டு வகை இருக்குன்னு சொல்லிக்கறேன்.

இந்த பக்கங்களில்  பூச்செடிகள், தோட்ட சம்பந்தமான  பொருட்களும், செல்லங்களுக்கு சாப்பாடுவகைகளும் (Pet Foods) பில்லியன் டாலர் பிஸினெஸ்கள். ஹார்ட் வேர் கடைகளில்கூட சாஃப்ட் வேரா பூச்செடிகளை விக்கறாங்கன்னா பாருங்க.  நாம் விதைகளை வாங்கி விதைச்சு  வருமா வராதான்னு தேவுடு காக்க வேண்டாம்.  அதெல்லாம் ரகம் ரகமா  பூ, கனி, காய் விதைகள் ஏராளமா கிடைக்குதுன்னாலுமே.... குளிரில் சரியா முளைச்சு வருவது கஷ்டம்தான். நோகாம  கார்டன் சென்டர்களில், மார்கெட்டுகளில்    பேபி ப்ளான்ட்ஸ் வாங்கினால்  மலிவு. என்னை மாதிரி கொஞ்சம் சோம்பேறிக்கு  இன்னும் வாகா  கொஞ்சம் வளர்ந்த செடிகள்,  மொட்டு பிடிச்சு வரும் சமயம் கிடைப்பதை வாங்கிக்கலாம். விலை கொஞ்சம் அதிகம், ஆனால் ரொம்ப மெனெக்கெட வேணாம். என்ன நிறமுள்ள பூன்னும் தெரிஞ்சுக்கலாம்:-)))

சிலசமயம்  Exotic plants, Tropical Plants வகைகள் அபூர்வமா கிடைக்கும்.  நம்ம வீட்டு வாழை, கருவேப்பிலை, காஃபிச் செடி,  செம்பருத்தி, போகெய்ன்வில்லா எல்லாம் அப்படி வாங்குனதுதான்.

கட்டக்கடைசி கட்டித்தங்கம்  நம்ம தாமரை!  இந்த வருசம்  நிறைய பூக்கள்.  ஆனா ஒரு பூ பூத்த பிறகு தினம்  இரவில் மூடிப் பகலில் திறந்தாலும் நாலு நாட்கள்தான் ஆயுள்:(



இடம் போதாது. அடுத்தவருசம் பொழைச்சுக்கிடந்தால்  ( ஐ மீன் நான் ) வேற ஒரு பெரிய தொட்டிக்கு ஏற்பாடுகள் செய்யத்தான் வேணும். மகாலக்ஷ்மி இல்லையோ!!!!


இன்னும் சில வகை பூக்களை அப்பாலிக்கா எப்பவாவது பார்க்கலாம். இப்ப எதுக்கு நம்மூட்டு சமாச்சாரமுன்னா..... நாளைக்கு   எங்கூர் மலர்க் கண்காட்சி தொடங்குது.  அதையும் போய் க்ளிக்கிட்டு வரத்தான் போறேன்.  ஆனால்   அரசனைப் பார்த்த கண்ணுக்கு புருசனைப் பிடிக்காமப்போயிருச்சுன்னா?


அதான் முந்திக்கிட்டேன்:-))))

அடுக்களை ஜன்னல் வழியாக:-)


எல்லாம் சேர்ந்து நில்லுங்க  ஒரு க்ரூப்  ஃபோட்டோ எடுக்கலாம். ரெடி ஸ்டடி....க்ளிக்!!!!!




இன்று போய் நாளை வாராய்.......

$
0
0
சொன்னா , சொன்ன நேரத்துக்குக் கிடைக்காம இருப்பதில்  அந்தக்காலத்திலே முதலிடம் தையல்காரருக்கும் தட்டாருக்கும்தான்.  ரெண்டு இடத்திலும் எப்பப்போனாலும் ' இன்று போய் நாளை வா'  தான். சின்னப்புள்ளையா இருந்தப்ப தையக்கடையிலே பழியாக் கிடப்பேன். இம்சை தாங்காம  குறைஞ்சபட்சம் என் உடையையாவது தைச்சே கொடுக்கும்படியா ஆயிரும்   தையக்காரருக்கு.

இப்பப் பாருங்க எல்லாம் ரெடிமெடு. கடைக்குப் போனோமா,  வாங்கினோமா,  போட்டு ' அழகு'  பார்த்தோமான்னு வாழ்க்கை ஓடுது.  துணிக்கடை கூட கொஞ்சம் பரவாயில்லை. இந்த நகைக்கடைகள்தான்...... பழைய நகையை மாற்றிப் புதுசு எடுக்கும்போது  அன்றைய தங்க விலைக்கே எடுத்துக்கறோமுன்னு விளம்பரம் செஞ்சாலும்  ஏதேதோ கணக்குப்போட்டு  என்னத்தையோ  குறைச்சு அதிலும் குறைவாத்தான்  மதிப்பீடு வருது.  முந்தி மாதிரி இல்லாம எல்லாத்தையும் கம்ப்யூட்டரே  தரம் குணம் மணம் பார்த்துட்டுக் கணக்குப்போடுவதால் நாம் வாயைத் தொறக்க முடியலை.

இந்தப்பயணத்தில்  ஜிஆர்டிக்குப்போய் ஒரு செயினை மாத்தி வேற டிஸைன் வாங்கலாமுன்னு  பழைய (வாங்கி  இதுவரை  போடாமலே வச்சுருந்த ஒன்னு) நகையைக் கொடுத்தால் கம்ப்யூட்டர் சொல்லுதாம் அதுக்கு மாத்து கம்மின்னு!  என்னப்பா அநியாயமா இருக்கு. இது சிங்கப்பூரில் முஸ்தாஃபா கடையில் வாங்குனதாச்சேன்னால்..... இதுலே 916ன்னு முத்திரையைக் காணோம் பாருங்க. எப்ப வாங்குனீங்க? அது இருக்கும்  ஒரு ஏழெட்டு வருசம். அப்போ ஒரு வேளை 916 கட்டாயம் போடவேண்டிய ரூல்ஸ் அங்கே இருந்துருக்காதுன்னு பதில்வருது.  நெசமாவா?????

சிங்கை முஸ்தாஃபா இப்படிப்பண்ணுமோன்னு மனசுக்குள்ளே ரொம்ப நாளைக்குக் குடைச்சல்  இருக்கும். அடுத்தமுறை சிங்கை போகும்போது  இதன்கூட வாங்கிய ஜோடிச்செயினைக் கொண்டுபோய் கேக்கணும்.

பேசாம ஜி ஆர் டியில் மாற்றாமல் வேறொரு கடையில்  இதேபோல கம்ப்யூட்டர் பரிசோதிக்கும்  கடையில் கொண்டு போய் மதிப்பு பார்த்திருக்கலாமோ?  ஒரு டபுள் செக்தான்.   கடைசியில்  31 கிராம் செயினுக்கு  3.7 கிராம் வேஸ்டேஜ்ன்னு  போயிருச்சு:(  நகைகள் வாங்கும்போது கேடி எம் பத்தவைப்பு. விக்கும்போது வேஸ்ட் வராதுன்னு  அப்போ ஒரு கூடுதல்விலையை நம்ம தலையில் கட்டிடறாங்க.  இப்ப வேஸ்டேஜ் வந்துருதாம் எல்லாத்துக்குமே! என்னவோ போங்க........... இத்தனைக்கும் அந்த செயின் டிஸைனில் வேஸ்டேஜே வராது. மாத்தி எடுக்கும்போது உங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லைன்னு  விற்பனையாளர் அடிச்சுச் சொன்னாராம் கோபாலுக்கு. எங்கே? சிங்கை முஸ்தாஃபாவிலே!

இதுக்குத்தான் சொல்றது என்னைக் கூடக் கொண்டு போகாமல் நகை எதுவும் வாங்காதீங்கன்னு! ஆனால்  நான் பக்கத்துலே இல்லைன்னா  மட்டும்  இவருக்கு  எனக்குத் தங்கம் வாங்கியே  ஆகணுமுன்னு ஒரு வெறி வந்துருது போல! வாங்கறேன்னு  தொலைபேசியில் கூப்புட்டுச் சொன்னாருதான். கண்ட டிஸைனையும் வாங்கிடப்போறீங்க இப்ப வேணாமுன்னு  (அட! வாழைப்பழம் வேணாமுன்னு சொல்ற யானைகூட இருக்கு பாருங்க!!!) சொன்னதுக்கு  கடைக்காரர் இதுலே வேஸ்டேகிடையாது. எப்ப வேணுமுன்னாலும்   இதே எடைக்கு வேற மாத்திக்கலாமுன்னு  சொன்னதாகச் சொல்லி வாங்கியே வாங்கிட்டார்.  ஆனா ஒன்னு இவ்ளோ தயாள குணம்  என்கூட கடைக்கு வரும்போது(ம்) இருக்கலாம்தானே?

இந்த அழகில்  அந்த ரெட்டைக்கு ஒரு முகப்பு(மோப்பு) வேற!  அது எனக்கு ரொம்பப்பிடிச்சுருந்துச்சு என்பது  உண்மை:-)))

ரெட்டை வடம் சங்கிலியில் இருந்த முகப்பை மாற்ற மனசில்லாமல் அதையே ஒரு பெண்டண்ட்டா ஆக்கினால் என்னன்னு தோணிச்சு. தி நகர்  மங்கேஷ் தெருவில் இருக்கும் சிலபல வருசங்களுக்கு முன்னேயிருந்து  தங்கவேலை செஞ்சுக்கிட்டு இருந்த  ஸ்ரீநிவாச ஆச்சாரி (அவர் பெயரே இதுதான்.'  சாதியைச் சொல்லிப்புட்டாள்' ன்னு குய்யோ முறையோ வேணாம் ப்ளீஸ்)கடையைத் தேடிப்போனோம். போனமுறை கொடுத்த கார்ட் கைவசம் இருந்துச்சு.

அந்த விலாசத்தில் இப்போ இருக்கும் கடை என்னவோ  நடுவில் சுவர் எழுப்பிப்  பாகம் பிரிச்செடுத்த மாதிரி அரையாக் கிடக்கு.  மிஞ்சிமிஞ்சிப்போனால்  ஆறடி அகலம்.  உள்ளே நீளமா  ஒரு  பதினைஞ்சு பதினாறு அடி இருக்கலாம்.  கார்டைக் காமிச்சு இந்தக்கடைதானா ன்னு கேட்டால்...இதுதாங்க. இப்போ வேற புதுக் கார்டு அடிச்சுட்டோமுன்னு சொல்லி  வேறொரு கார்டைக் கொடுத்தார்.  சாயிபாபா பக்தரா மாறிட்டார்ன்னு தெரிஞ்சது.  ஷிர்டி பாபா.

கடையில்  நாலு பேர் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  எல்லோருமே சொந்தக்காரர்கள்தானாம். இந்த வேலையில் புது ஆட்களை வேலைக்கு வச்சுக்கறது ரிஸ்க்காம். நான் எப்படி வேணுமுன்னு சொன்னதைக் கவனமாக் கேட்டுக்கிட்டு,  நம்ம கண்  எதிரில்  சொன்ன டிசைனைச் செஞ்சு கொடுத்தார்.  இத்துனூண்டு கடையில்  ரெண்டு பிளாஸ்டிக் ஸ்டூல் கொண்டு வந்து  போட்டு உபசாரம் வேற !  கையைக் காலை நீட்டாம அடக்க ஒடுக்கமா உக்கார்ந்துக்கிட்டால் நமக்கு நல்லது:-)   குமுட்டி அடுப்பு மாதிரி ஒன்னு இருக்கும் பாருங்க தங்கத்தை உருக்க. அது கடைக்கு வெளியில் ஒரு சாஸ்த்திரத்துக்கு வச்சுருக்கே தவிர ரொம்ப மாடர்னா சின்னதா ஒரு கேஸ் கேன் வச்சு உருக்கல் வேலை நடந்துருது.

அதைப் பத்தவச்சதும் வரும் மெல்லிய தீச்சுவாலையைதொரு சின்னதா இருக்கும்  குழல் ஒன்னை  வச்சு மெள்ள ஊதி தீ நாக்குகளை  தங்கத்தின் மீது செலுத்திய  பத்து நொடிகளில்  தங்கம் அப்படியே உருகிருது!  நடனமாடும்  தீ நாக்குகளை  பார்க்கும்போதே ஒரு அழகு கேட்டோ!  பாபு என்ற இளைஞர் நமக்கான வேலைகளை  வாய் திறக்காமச் செஞ்சு கொடுத்தார்.  பெயர் என்னன்னு கேட்டதுக்கே....  திகைப்பும்  வெட்கமும் முகத்தில் படர'பாபு' ன்னு மெல்லிய குரலில் சொன்னதும் ஒரு அழகு.  உறவினர்தானாம். ஆனால் தனிக்கடை வச்சு நடத்தறாராம் வேறொரு பேட்டையில். இங்கே  கூடுதல் வேலைன்னா   வந்து செய்ஞ்சு கொடுப்பாராம்.

ஒரு நோட்டுப்புத்தகத்தை வச்சுக்கிட்டு அதுலேதான் ஆர்டர் எடுக்கறது, நாம் கொடுக்கும் தங்கத்தின் எடை , கேரட் எல்லாம் எழுதிக்கிறார். பக்கத்துலேயே அதே தெருவில்  தங்கத்தின் தரம் பார்க்கும்  கம்ப்யூட்டர் மெஷீன் கடை ஒன்னு இருக்கு. அங்கே கொண்டுபோய் தரம் பார்த்து எடுத்து, நமக்கு நகையைத் திருப்பிக் கொடுக்கும்போதும் தரம் பார்த்தே கொடுக்கறார். அதனால் நம்பிக்கை ஏற்பட்டுப் போகுது.

கொஞ்சம் ரிப்பேர் பண்ண வேண்டிய நகைகளையெல்லாம் கூட இந்தமுறை கொண்டு போயிருந்தேன்.  த்வாரகைப் பயணத்தில் வாங்குன ரெண்டு  ஜெம் ஸ்டோன்களையும்  வெள்ளியில் பதிச்ச பெண்டெண்ட்டாக   செஞ்சு கொடுத்தார் மகளுக்கு.  இந்தக் கால யுவதிகள் தங்க நகையை விட வெள்ளியை விரும்புவது எனக்கு(ம்) ரொம்பவே பிடிச்சுப்போச்சு:-)

ஸ்ரீநிவாச ஆச்சாரியிடம் ஒரு பழக்கம் நமக்கான  ரிப்பேர் வேலைகளை செய்வதற்கிடையில் தன் பக்கத்தில் இருக்கும்  சின்ன  மேஜை இழுப்பறையைத் திறந்து எதாவது ஒரு சின்ன நகையை   கம்மல், பெண்டன்ட், மூக்குத்தி இப்படி. எடுத்து நீட்டுவார். நான் கைநீட்டி அதை வாங்குனதும்   கோபால்   கண்ணில் திகில் பரவ முழிப்பதைப் பார்க்கும்போது  என்னால் சிரிப்பை அடக்க சிரமம்:-)

சும்மா ... ஒரு  ஐடியாவுக்கு சொல்வார்  ஸ்ரீநிவாசன். நானும்  ரசிச்சுப் பார்த்துட்டு  நம்ம கருத்தைச் சொல்லிட்டுத் திருப்பிக் கொடுப்பேன். பின்னூட்டம் பழக்கமாகிருச்சு பாருங்க:-))) ஒரு நாள் ஒரு செயினை எடுத்துக் காமிச்சார். புது டிஸைனா நல்லா இருந்துச்சு. பார்த்துக்கிட்டு இருக்கும்போதே  அதை ஆர்டர்  செய்தவர்  வாங்கிப்போக வந்துட்டார்.  பக்கத்துலே இருக்கும் சூர்யா  டச் ( Surya Touch.  # 7 Mangesh St)  கடைக்கு  அனுப்பி தரம் பார்த்து வந்தவுடன்  பைக்குள் இருந்த ரூபாய் நோட்டுக் கட்டுகளை மகிழ்ச்சியா  எடுத்துக் கொடுத்துட்டு போனார்.  எல்லாம் கேஷ் பிஸினஸ்தான்.  கார்டு  தேய்க்கும் வசதி ஒன்னும் இங்கே இல்லை. சின்னநகைகளுக்குப் பரவாயில்லை.  அதிக அளவில்  வாங்கணுமுன்னா கொஞ்சம் யோசிக்கணுமோ? சேல்ஸ் டாக்ஸ்க்கு  என்ன ஏற்பாடுன்னு தெரியலை.....

ஏற்கெனவே ரெண்டு முறை  அறுந்து போன  ஒரு செயினை  (இங்கே நியூஸியில் அதைப் பத்த வைக்க  ரொம்ப அலைய வேண்டியதாப் போச்சு. ஒன்பது கேரட்  சமாச்சாரங்கள்தான் இங்கே!  இது ஹை கேரட். எங்களால் ரிப்பேர் செய்ய முடியாதுன்னு சொல்லிடறாங்க) மாத்திட்டு  இந்த டிஸைனில் செஞ்சுக்கலாமான்னு தோணுச்சு. என் செயினை எடுத்துக் கொடுத்ததும்  கடைக்காரப் பையன் தரம் பார்க்கப்போனவன் வாயெல்லாம் பல்லாக வந்தான். ' அசலு!  பூராவும் தங்கமாம் !' என்றதும்  எனக்கும் திருப்தியா இருந்துச்சு. இது  (சமீபத்தில்) 27 வருசத்துக்கு முன்னே பாங்காக்கில் வாங்குனது.

சேதாரம் பற்றிப் பேச்சு வந்தப்ப..... கையால் செய்யும் நகைகளுக்கு சேதாரம் அவ்வளவா இருக்காது. மெஷீன் கட்டிங் அண்ட் பாலிஷிங் என்றால் மட்டும் கூடுதலா வரும்.  தங்கத்தூள் பறக்கும். அதைப்பிடிச்சு எடுப்பது  ரொம்பக்கஷ்டம் என்றார். ஆனாலும்  ஒரு  விதமா துகள்களைப் பிடிப்பீங்கதானேன்னு கேட்டதுக்கு  அப்படிப் பிடிச்சாலும்  அது நமக்கு வராது.  அந்த  மெஷின் வச்சுத் தொழில் செய்றவங்களுக்குத்தானென்றார்.
பேசாம ட்ரெய்னீயா சேர்ந்துக்கிட்டுத் தொழில் படிக்கலாமான்னு  ஒரு யோசனை வந்துருக்கு :-)


 நடுவில் கொஞ்சகாலம்  தொழில் மந்தப்பட்ட நிலையில்  சென்னையின் பிரபல நகைக் கடைகளுக்கு  வேலை செஞ்சாராம். இப்போ அதெல்லாம் இல்லை.  இங்கே நமக்கு வர்ற வாடிக்கையாளர்கள் கொஞ்சம்தான் என்றாலும்  ஒரு மாதிரி குடும்பச்செலவுக்கு  சரிஆகிருது. பிள்ளைகள் படிச்சு வேற வேலைகளுக்குப் போயிட்டாங்க.  என்னாலே முடிஞ்சவரைக்கும்  நகைத்தொழிலை செஞ்சுக்கிட்டே இருப்பேன். அப்புறம் கடவுள் விட்ட வழின்னு  மேலே சாமிப்படத்தைப் பார்த்தார்.  என் கண் அங்கே இருந்த விஸ்வகர்மா படத்தில் நின்னது.  வடக்கே பலகோவில்களிலும்  விஸ்வகர்மா அன்ன வாகனத்தோடு  இருக்கார்.

மூணு நாளில் செஞ்சு தரேன்னு சொன்னவர், மறுநாள் மாலையே  செல்லில் கூப்பிட்டு  உங்க செயின் ரெடி ஆயிருச்சுன்னார்.  அவர் கூப்பிட்டப்பதான் நாங்க  மால்குடியில் சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்.  மறுநாள் வந்து  வாங்கிக்கறேன்னு சொல்லி வச்சேன்.என்னம்மா... நீ பாட்டுக்கு செயினைக் கொடுத்துட்டு வந்துட்டேன்னு  கோபால்தான்   வழியெல்லாம்  நேத்து  புலம்பிக்கிட்டே இருந்தார்.   மறுநாள் போய்  செயினை வாங்கிக்கிட்டோம்.  மகளுக்கும் டிஸைன் ரொம்பப் பிடிச்சதுன்னு சொன்னது எனக்குத் திருப்தி.  கோபாலை எதுக்கு விட்டு வைப்பானேன்னு  அவர்  மோதிரத்தையும்  புது டிஸைனில் மாத்தச் சொன்னேன்.  இப்ப கிண்னுன்னு இருக்கு:-)

திருப்திகரமான சேவை என்பதால்  கொஞ்சம் விலாச அட்டைகளை வாங்கி வச்சுக்கிட்டு அண்ணியிடம் சேதி சொல்லி  அழிச்சுச் செஞ்சதுகளையெல்லாம் காமிச்சவுடன்,  'இவ்ளோ நாளா இங்கே இருக்கோம் இந்தக்கடை விவரம் தெரியலையே'ன்னாங்க.  எல்லா  கார்டுகளையும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்    'நான் பெற்ற இன்பம்'  வகையில்  கொடுத்ததும்தான் மனசு ஆறுச்சு.   தேவைப்படும் பதிவுலக நண்பர்கள்  இவரிடம் தைரியமா நகை செஞ்சு வாங்கிக்கலாம்.



முக்கியமா நம்ம  நேரத்துக்குச் செஞ்சு கொடுக்கறார் என்பதே  நல்ல விஷயம். என்ன ஒன்னு.... கடையில் வாங்கும் பொருள் போல  பஞ்சு எடை இல்லாம, காத்திரமாத்தான் செய்யறார். ராத்திரி தூங்கும்போது  கம்மலைக் கழட்ட வேணாம். கூலி அதிகமா எனக்குத் தெரியலை.  ஒரு மூணரைப்பவுன் செயினுக்கு  ஐநூறு  கொடுத்தோம். (எங்கூர் காசு பனிரெண்டரை. அதுக்கு இங்கே  மிஞ்சிப்போனா  சைனீஸ் டேக் அவேயில் ஒரு ஃப்ரைடு ரைஸ் கிடைக்கும்!)

சென்னைச் சமாச்சாரங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு நாளைக்கு ஆன்மீகப்பயணம் கிளம்பலாம்.  ஒரு அஞ்சாறு நாளைக்கு வேண்டிய துணிமணிகளை எடுத்துக்கிட்டு தயாராகுங்க.

தொடரும்.............:-)




தில்லை (பொன்) அம்பல நடராஜா....

$
0
0

அப்பா அம்மா கல்யாணத்துக்கு வந்திருந்த மகளை நேத்து இரவு  சிங்கை வழியா நியூஸிக்கு விமானமேத்திட்டு  அறைக்கு வந்து சின்ன ஸூட் கேஸ்களில் அஞ்சாறு நாளைக்குத் தேவையானவைகளைத் தனியா எடுத்து வச்சுக்கிட்டுப் பெரிய  பொட்டிகளைக் கட்டி வச்சுட்டோம்.

காலை உணவையும்  கெஸ்ட்ஹவுஸ் கணக்கையும்  முடிச்சுக்கிட்டு, சீனிவாசன்  உதவியோடு சாமான்களை வண்டியில் ஏத்திட்டுப் புறப்பட்டு,  மைத்துனர் வீட்டுக்குப்போய்  டாடா பைபை சொல்லிட்டு அப்படியே அண்ணன் வீட்டுக்குப்போய்  பெரிய பெட்டிகளை வச்சுட்டுக் கிளம்பி தெற்கு நோக்கிய பயணம் ஆரம்பிச்சது.  இதையெல்லாம் செஞ்சுட்டு நகர எல்லையை விடும்போதே மணி  பதினொன்னே கால்.

வண்டலூர்  உயிரியல் பூங்கா வாசலையே இப்போதான் முதல்முதலாப் பார்க்கிறேன்.  வெளிப்புற  அமைப்பு நல்லாவே இருக்கு. ஒரு நாள் உள்ளேயும் போகணும். டோல் ரோடு. சாலை நல்லாவே இருக்கு.  திண்டிவனம் வழியா பாண்டிச்சேரி போறோம் இப்போ.  ஒழிந்தியாம்பட்டு சோதனைச்சாவடியில்  வண்டியை நிறுத்திட்டு பாண்டியுள்ளே போக  பணம் கட்டிட்டு வந்தார் சீனிவாசன்.   மணி ஒன்னேகால். பகல் சாப்பாடு ஹொட்டேல் ப்ரொம்னேட். கடற்கரை காந்தி சிலைக்கு எதிர்வரிசையில் இருக்கு இது. ஓய்வறை வசதிகள் நல்லா இருக்கு என்பதை  போன  பாண்டிச்சேரிப் பயணத்தில் பார்த்து வச்சுக்கிட்டதுதான்.

இன்னிக்கு வீக் எண்டா இருப்பதால்  ரெஸ்ட்டாரண்டில் கூட்டம் நிறைய. குடும்பங்களா வந்து கூடி இருக்காங்க.  பஃபே மெனுதான். வெஜிடேரியன் இருக்குன்னதும்  போய்ப் பார்த்தேன் என்ன நமக்கு உண்டானதுன்னு.  மண் சட்டியில் தயிர் சாதம் வாவான்னு கூப்பிட்டது. ஓக்கே! நோ ஒர்ரீஸ். ரெண்டு தனித்தனி வரிசைகளில்  வெஜ், நான் வெஜ் அழகா வச்சுருந்தாங்க.  விலை கொஞ்சம் கூடுதல் என்றாலும் ப்ரஸன்டேஷன் அருமை.  சூப்பில் தொடங்கி டிஸ்ஸர்ட் வரை ஏகப்பட்ட  வகைகள்.  கடலைப் பார்த்த இருக்கையில்  நிதானமா ரசிச்சுச் சாப்பிட்டலாம்.  ஃப்ரெஞ்சு பீன்ஸ் பொரியல் சூப்பர்!


வெய்யில் அதிகமா இருக்கு, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுக் கிளம்பலாமுன்னு  கோபால் முடிவெடுத்தார். இன்னிக்கு நம்ம  டெஸ்டினேஷன்  சிதம்பரம்.  இங்கிருந்து ஒன்னரை மணி தூரம்.  நம்ம வீட்டு விசேஷத்துக்கு அபி அப்பாவுக்கு அழைப்பிதழ் அனுப்பினால்  பதிலே இல்லை.  விசேஷம் முடிஞ்ச மறுநாள்  ' இப்பதான்  மடல் பார்த்தேன்'னு  பதில்போட்டார். அப்புறம் செல் நம்பர் வாங்கிப் பேசுனப்ப நம்ம சிதம்பரம் யாத்திரையைச் சொன்னதும்  அங்கே நமக்கு  தரிசன உதவிக்கு ஒருத்தரை ஏற்பாடுசெஞ்சுட்டார். அவரைத்தான் ஊருக்குள் நுழைஞ்சதும்  கூப்பிட்டுப் பேசணும்.

எப்படியும் கோவில் திறக்க நாலு மணி ஆகாதான்னு நாங்கள் ரெண்டே முக்காலுக்குப் பயணத்தைத் தொடர்ந்தோம்.  பாண்டிச்சேரி (Basilica of  Sacred Heart of  Jesus)சர்ச்சை இந்தமுறையும்  உள்ளே போய்ப் பார்க்கலை. வெளியே இருந்தே ஒரு க்ளிக். நம்ம மோகன் குமார் பதிவில்தான் உள் படங்களைப் பார்த்தேன். அடுத்தமுறை கண்டிப்பாகப்போகணும். மூளையில் முடிச்சுப்போட்டேன்.

வழியெங்கும் நல்ல 'நீர் 'வளம்! ஒரு பத்துப்பதினைஞ்சு  கிலோமீட்டர் போனதும், ஏதோ கோவில் என்ற நினைப்பில்  ஓங்கி உயர்ந்த குத்துவிளக்குத் தூண்களைப் பார்த்தால் அது  அறுபடை வீடு  மருத்துவக்கல்லூரியின் முகப்பு!  புதுவை ஊர் எல்லைக்கு மிகவும் அருகில் இருக்கு இது. விநாயகா மிஷன் யுனிவர்ஸிடின்னு போர்டு!

சிதம்பரத்துக்குள் நுழைஞ்சதும் நடராஜ தீக்ஷதருக்கு  செல் பேசுனதில்  அவர் சொன்ன இடத்தில்  வண்டியைக்கொண்டு போய் நிறுத்தினார் சீனிவாசன்.   ரொம்பவே ஒல்லியா இருந்தவர், அறுபதாங் கல்யாண வாழ்த்துகள்  சொல்லித்  தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டார்.   அபி அப்பா சொன்னாராம், புதுமணத்தம்பதிகள் வர்றாங்கன்னு:-)))நாலரை ஆச்சேன்னு  சந்நிதித் தெருவில் இருந்த ஒரு ஓட்டலில்  காஃபி குடிச்சோம்.  அகலமாவும் உயரமாகவும்   இருக்கும் ஏழு நிலை கோபுரத்தோடு இருந்தது   கோவில். (கிழக்கு கோபுர வாசல்?)

 பக்கத்துலே  பூஜை சாமான்கள் விற்கும் கடையில் நம்ம காலணிகளை விடச்சொல்லிட்டு  கோவிலுள்ளே கூட்டிக்கிட்டுப் போனார்.  மனுசர் ஒல்லியா இருப்பதால் விசுக் விசுக்குன்னு வேகமா நடக்கிறார்.  நான் மெது ஓட்டமா பின் தொடர வேண்டியதாப் போச்சு. கல்பாவிய தரையில்  தீ மிதிச்சுக்கிட்டே ஓடினேன்னு(ம்) சொல்லிக்கலாம்.

பிரகாரத்தில்  தூண்களோடு இருக்கும்  மண்டபத்தில் மக்களும் ஒரு சில பைரவர்களுமா   நல்ல உறக்கத்தில். கோவில் இன்னும் திறக்கலையாம். வலப்பக்கமா நம்மைக்கூட்டிப்போனபோது  உயரமான ஒரு மண்டபத்தில்  கம்பிகள் போட்ட ஜன்னலின் வழியா எட்டிப்பார்த்தால் சுதைச்சிற்பமா நந்தி. அதுக்கு நேரெதிரா  இல்லாமல் கொஞ்சம் தள்ளி  கோவில் மதிள் சுவரில்  இருந்த வாசலை  சிமெண்ட் வச்சு பூசி இருக்கும் அடையாளம்.  என்னன்னு கேட்டதுக்கு , ஒரு காண்ட்ரவர்ஸி காரணமுன்னு சொன்னார்!  சற்றே விலகி இரும் பிள்ளாய்ன்னு  நானும் ஒன்னும் அதிகமாக் கேட்டுக்கலை.  இருந்தது....  அப்படியே இருக்கட்டும். நாம் என்ன நாட்டாமை?

கேமெராவுக்கு டிக்கெட் எங்கே வாங்கணுமுன்னு கேட்டப்ப  அதெல்லாம் வேணாம். யாராவது கேட்டால் என் பெயரைச் சொல்லுங்கன்னார். இங்கே அப்படி கவுண்ட்டர் ஒன்னும் இல்லை போல!

வெளிப்பிரகாரத்தில்  இருக்கும் புள்ளையார் கோவிலில்  எங்களைக் கொஞ்ச நேரம்  உக்காரச் சொல்லிட்டு  சிவில் உடையில் இருந்து  ஆன்மீக உடை மாற்றிக்கத் தெற்கு கோபுர வாசல் வழியாக வீட்டுக்குப் போனார். நாங்க புள்ளையாரை சேவிச்சுக்கிட்டு  படிகளில் உக்கார்ந்துருந்தோம்.  இஸ்லாமிய சகோதரிகள் அவர்களுக்குரிய  உடுப்போடு  தெற்கு வாசலுக்கும் மேற்கு வாசலுக்கும்  இடையில் போய் வந்துக்கிட்டு இருந்தாங்க.கோவிலைச் சுத்திக்கிட்டுப்போகாம   காலணிகளைக் கையில் பிடிச்சுக்கிட்டு   இப்படி கோபுர வாசல் வழியாக ஷார்ட்கட்  போறது   பல ஊர்களிலும் இருக்கும் வழக்கம்தான். நான் திருவையாறில் இருந்த காலங்களில்  ஐயாறப்பர் கோவில் ஆட்கொண்டார் சந்நிதி வழியா  மேற்கு வாசலுக்கு  குறுக்கே  போன நினைவு வந்துச்சு.

புள்ளையார் சந்நிதிக்கு முன்னால் நல்ல நீளமான படிகள்.  சிதறு தேங்காய்  உடைப்பவர்கள் அப்படியே  தரையில் அடிச்சு உடைப்பதும்  அந்தச் சில்லெல்லாம்  எல்லா பக்கங்களிலும் தெறிச்சு ஓடுவதுமா இருக்கு.  அப்பப்ப தேங்காய்ச்சில்லுகளை  சேகரிச்சுட்டு  தேங்காய்த் தண்ணீரால் பிசுக்குப்பிடிச்சுப் போயிருக்கும் இடத்தை ஜஸ்ட்  விளக்குமாத்தால் பெருக்கி விடறாங்க ஒரு அம்மா. கவனமாக் கால் வைக்கலைன்னா நம்ம தலை சிதறு தேங்காயாக ஆகும்  அபாயம் இருக்கு.  மேலும்  வெகுதூரம் பறந்து போகும் சில்லுத் துணுக்குகள்  காலில் குத்துவதும் நடக்குது. அதான்  கோவில் பிரகாரமாச்சேன்னு செருப்பு இல்லாமல்தானே  எல்லோரும் நடக்கறோம். புள்ளையாருக்கு முன்னால் ஒரு தொட்டி அமைப்பு கட்டி விட்டுருக்கலாம்.  கொஞ்சம் நீட்டாவும் இருக்கும்.  யார்  பூனைக்கு மணி கட்டுவாங்க?

கோவில் திறந்ததும் போய் சாமியைக் கும்பிட்டுக்கணுமுன்னு  வந்த பக்தர் ஒருவர் நம்மபக்கத்தில் உக்கார்ந்து பேச்சுக்கொடுத்தார்.  தினமும் மாலை கோவிலுக்கு வந்து  மூன்று முறை கோவில்  வளாகம் முழுசும் சுற்றுவாராம். பெயர் கலிய பெருமாள். வயசு 77ன்னு தானாய்ச் சொன்னதும் கோபாலுக்கு ஒரே வியப்பு. பார்த்தால் தெரியலையேன்னு அவரைப் பாராட்டிக்கிட்டே இருந்தார்.

நல்ல பெரிய வளாகம். நாற்பது ஏக்கராம்.  தினமும் மூணு சுத்துன்னா கணக்குப் பார்த்துக்குங்க.,  டாக்குட்டர்கள்  சொல்லும் தூரத்துக்கு நடை அமைஞ்சுருது பாருங்க. ஆரோக்கியத்துக்குக் கேட்பானேன்!  பழைய காலத்தில் கோவில் சுத்துவதும், மலையேறி  சாமிதரிசனத்துக்குப் போவதும் இந்தக்கால உடற்பயிற்சியும் சரிக்குச் சரியாப்போச்சு:-)  சும்மா மலையேறிப்போய் இயற்கை எழிலைப் பாருன்னா யாரு மெனெக்கெடுவாங்க?  அதான் சாமி அங்கே போய் உக்காந்துக்கிட்டு வா வான்னு கூப்புடறார்.

அஃபீஸியல் உடுப்போடு நடராஜ  தீக்ஷதர் திரும்பி வந்தார். நாங்களும் அவரைப்பின் தொடர்ந்தோம். வலம் வந்தவாறே   சிவகாமசுந்தரி அம்மன் சந்நிதி, பாண்டியநாயகம் சந்நிதி, நவலிங்கம் சந்நிதின்னு ஒவ்வொரு சந்நிதியா தரிசனம் செஞ்சுக்கிட்டே போறோம். நான்கு திசைகளிலும் கோபுரங்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் நான்கு கோபுரங்களையும் தரிசிக்கலாம்.  எந்த இடமுன்னு எழுதிப்போட்டுருக்காங்க. அஞ்சரை மணிதான் ஆயிருக்கு என்றாலும்  மசமசன்னு  இருட்டிக்கிட்டு வருது.  நவலிங்கங்களுக்கு  ஒரு சின்னக்கோவிலா தனிக்கட்டிடம்.   ஒரு சுவரில் வாசலும், மற்ற மூன்று சுவர்களிலும்  3 ,2, 3  என்ற கணக்கில் ஜன்னல்களுமா அமைஞ்சுருக்கு.  அந்தந்த  கிரகங்களுக்கான  சிவலிங்கங்கள்  ஜன்னல்வழியாப் பார்க்கலாம்.  ஜாதக ரீதியாக  கிரகக்கோளாறு இருப்பவர்கள்  வந்து  பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.



முருகனுக்குத் தனியா  ஒரு சந்நிதி.  தனிக்கோவில் போன்ற அமைப்புதான். விமானக்கூரை வடிவம் குடில்  போல இருக்கு.  கோவிலுள்ளே இருக்கும் இந்த பொன் அம்பலக்கூரையும்  இப்படித்தான் இருக்கு. பொதுவா நாம் மற்ற கோவில்களில் பார்க்கும் கருவறை விமானங்கள் டிஸைனில் இருந்து மாறுபட்டவை இவை.  முருகனைத் தரிசிச்சோம்.  மண்டபத்தில் கண்டாமுண்டா சாமான்கள். இன்னும் கொஞ்சம் நீட்டா வைக்கப்படதோ?

நம்ம நடராஜ தீக்ஷதர்  அவர்பாட்டுக்கு கோபாலுக்கு  கோவிலைப்பற்றிச் சொல்லிக்கிட்டே விடுவிடுன்னு போறார். அதென்னவோ நானும் பார்க்கிறேன் நம்மூரில் கைடு வச்சாலும் சரி, இந்த மாதிரி கோவில்குளங்களை விளக்கிச் சொல்லும்  பண்டிட்கள்  ஆனாலும் சரி... எல்லாத்தையும் ஆண்களுக்குத்தான் சொல்லணும் என்பதுபோல செயல்படுகிறார்கள். சரி அப்போ கோபால் கேட்டுட்டு நம்மிடம் அதைப்பற்றிச் சொல்வார் என்று இருந்தால்  சுத்தம். அந்தக் காதில் கேட்டு 'அதே காதில்'  விட்டுரும் டெக்னிக் கோபாலிடம் இருக்குன்னு அவுங்களுக்கு எப்படித் தெரியும்?



இந்த இடத்தைப்பற்றி என்ன சொன்னாருன்னு கேட்டால்..... சரியா நினைவில்லை என்னமோ சொன்னார் னு சொல்வார்:( போதுமடா சாமின்னு இருக்கும்.  கூடவே ஒட்டிக்கிட்டே போனால் எதோ கொஞ்சம் என் காதில் விழும். ஆனால் படம் எடுக்க அங்கங்கே கொஞ்சம் ஒரு சில நிமிடங்கள் நிற்கும்போது  இவர்கள் எங்கியோ போயிருப்பார்கள். முன்பின் தெரியாத இடமென்றால் தேடி வேற அலையணும் எனக்கு!


கோவில் திருக்குளம் அழகா சுத்தமா இருந்தது. கோவிலுக்குள்ளேயே இருப்பதால் கவனிப்பு இருக்கு போல!  நல்ல பிரமாண்டமான கோவில்தான்.  வயசு ரெண்டாயிர வருசம்  என்கிறார்கள். வெளிப்பிரகாரத்தைச் சுற்றிவந்து கோவிலின் உள்பிரகாரத்திற்குள் நுழைந்தோம். நீங்கள் பூஜையைப் பாருங்கள்.  முடிந்ததும் நான்  வரேன்னு சொல்லி எங்களை நடராஜர் சந்நிதியில் கொண்டு விட்டார் நடராஜ தீக்ஷதர்.

தொடரும்...............:-)



'ஸ்' வர்றது முன்னாலேயா பின்னாலேயா?

$
0
0
நல்ல கூட்டம். நடராஜர் சந்நிதியில் பூஜைகள்  ஆரம்பமாகி இருந்துச்சு.  சுற்றிவர இருக்கும் திண்ணை போன்ற அமைப்பில்தான்  நிற்க  இடம் கிடைச்சது.  ஆனால்   பார்வையின் வீச்சு நேராப்போகும் உயரமான சந்நிதி.  நமக்கிடப்பக்கம் கோவிந்தராஜன்,  'எதுக்கு அங்கே நிற்கிறாய்? இங்கே வா' ன்னான்.   அட! இங்கியா இருக்கேன்னு  ஓடினேன்.  பெருமாள் கோலாகலமாய் ரொம்ப ஹாயாப் படுத்துண்டு சேவை சாதிக்கிறார்.  கூட்டம் முழுசும்   நடராஜரின் தீபாராதனையில்  லயித்திருந்துச்சு.  நான் இங்கொரு கண்ணும் அங்கொரு கண்ணுமாய்!

இசைக்கருவிகளின் ஒலியையும் மிஞ்சும் பக்தர்களின்  குரல்.

  ஓம் நமசிவாயா !!!!

கோவிந்தராஜன் பற்றி வந்த ஒரு சினிமா நீங்க எல்லோரும் பார்த்துருப்பீங்கதானே?  கடலில் போட்டாலும் திரும்பி வந்துட்டார்.  சிவனின் ஆனந்த நடனம் பார்க்க வந்தவர்  இவர். ஷோ முடிஞ்சால் எழுந்து போகலாமுன்னு பார்த்தால்.... எங்கே....  அவர் ஆடுவதை நிறுத்தினால்தானே?
நின்னு பார்த்துக் கட்டுப்படியாகாதுன்னு  கிடந்தார் !  ஒரே படுத்த  படுக்கை.

திருச்சித்திரக்கூடம் என்ற பெயர் இவருடைய கோவிலுக்கு.  அந்த நூத்தியெட்டு (வைணவ திவ்ய தேசம்)  கோவில்களில் இது இருக்கு.   இவரைப்பாடவந்த திருமங்கை ஆழ்வார்,   ஷிவா  டான்ஸுக்கு மேட்சா இருக்கட்டுமுன்னு  சிவனுக்குப்'பிடிச்ச ' சங்கராபரண ராகத்திலேயே  முதல் பத்து பாட்டு பாடிட்டுப்போயிருக்கார்!  இங்கே  அவர் பாடுனது மொத்தம் 32.

ஜோடியா நின்னு  ஆடி  மகிழ்ந்தால் போதாதா?  பாதி உடம்பையே கொடுத்தவனுக்கு  என்ன ஈகோ? "  வர்றியா  ரெண்டு பேரும் ஆடலாம். யார் ரொம்ப நல்லா ஆடறாங்கன்னு ரெண்டுலே ஒன்னு பார்க்கலாம்."

  தீர்ப்பு சொல்ல  மச்சானையே கூப்புட்டு வந்தால்?  ஹாய் மச்சான்! சீக்கிரம் வாரும்!   ஜட்ஜா வந்தவரும் சபாஷ் சரியான போட்டின்னு  ஆட்டம் பார்க்க ஆரம்பிச்சார். நல்லாதான் போய்க்கிட்டு இருந்துச்சு ஆரம்பத்தில். அப்புறம் பெண்களுக்கே  உரிய நளினமான நடன அழகில் எங்கே தங்கைக்கு ஓட்டு போட்டுருவாரோ என்ற  நினைப்பில்  அராஜக ஆட்டம் ஆட ஆரம்பிச்சார் நட 'ராஜர்'.

'சீச்சீ.... இப்படியெல்லாம் என்னால் கால் தூக்கமுடியாது'  என்ற  வெட்க உணர்வில்  பார்வதி தயங்க.....   ' த வின்னர் ஈஸ்.... '  ன்னு சிவன் பெயரைச் சொல்லிட்டார்  கோவிந்த 'ராஜர்'.   ராஜரும் ராஜரும்  ராஜியா(வே)  இருக்காங்க.   பாவம் (திக்கற்ற ) பார்வதி.

வெற்றி தந்த எக்களிப்பில் கனகசபையில் நின்னு,  ஓயாத நடனம்.  இந்த பொன்  அம்பலத்துக்கு பொன் கூரை வேய்ந்து கொடுத்த சோழ மன்னருக்கு  பொன்வேய்ந்த பராந்தகன் என்ற பெயரே நிலைத்துவிட்டதாம்.

21,600 தங்க ஓடுகள் !  அதைப்பொருத்த 72 ஆயிரம் பொன் ஆணிகள்.


 கனகசபையின் மேல் கோபுரத்தைப் பார்த்தால் அங்கே ஒன்பது கலசங்கள் இருக்கு.   வாம சக்தி, ஜ்யேஷ்ட சக்தி, ரெளத்ரி சக்தி, காளி, காலிவிகாரினி, பலி, பாலவிகரணி, பலப்ரமதனி, மனோன்மணி ன்னு நவசக்திகளை  பிரதி்ஷ்டை  செஞ்சுருக்காங்களாம். .

உட்கூரையில் குறுக்கும் நெடுக்குமா 64 விதமான மரத்தாலான  உத்திரங்கள் அதில் வேலைப்பாடுகள்! இவை 64 கலைகளைக் குறிக்கும்.

21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும்.

72,000 ஆணிகள் . நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.
இப்படியெல்லாம் கணக்குச் சொல்லி நம்மை வாய் பிளக்க வைக்கிறார்கள்! .

  கோவிலின் உட்பிரகாரத்தில் படம் எடுக்க வேணாமுன்னு  அடங்கி இருந்தேன்.



மேலே உள்ள மூன்று படங்களையும் அருளிச்செய்த கூகுளாண்டவருக்கு நன்றிகள்.

 வீர வைஷ்ணவர்களும் வீர சைவர்களுமா  ஒருத்தரையொருத்தருக்கு ஆகாம இருந்த  அந்தக் காலக்கட்டத்தில்  சைவமும் வைணவமும்  சேர்ந்து '  ஹம் தோனோ பாய் பாய்' ன்னு கூடிக் குலவுன இடம்  இது என்பது  ரொம்பவே விசேஷம்.எங்க அம்மம்மா (இன்னும் ) இருந்துருந்தால் இந்தக் கோவிலுக்குள் வந்துருப்பாங்களா என்பது சம்ஸயம்தான்.


தீபாராதனை முடிஞ்சதும் நடராஜ தீக்ஷதர் வந்து கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு ஒரு படிக்கட்டைக்  காமிச்சுட்டுப் போனார்.   குடிக்கத்தண்ணி வேணுமுன்னு  கோபால் கேட்டதுக்கு  கொண்டு வரேன்னார். எதுக்கு திடீர்னு இவர் தண்ணி கேட்டாருன்னுகூட எனக்குப் புரியலை.பேசாம உக்கார்ந்து மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.  எழுந்து போய் இன்னொருக்கா கோவிந்தராஜனைப் பார்த்திருக்கலாம். கொஞ்ச நேரம் கழிச்சு,   ஷிவா என்ற பெயருள்ள இளைஞர் தண்ணி பாட்டில் கொண்டு வந்து நீட்டினார். தீக்ஷதரின் மகன். பார்த்தால் ரொம்பச் சின்னவயசாத் தெரியும் நடராஜ தீக்ஷதர்க்கு  இவ்ளோ பெரிய மகனான்னு  வியப்பு.  அதிலும் இவர் இளைய மகனாம்!!!!

அது என்னவோ கண்ணில் விழுந்தது எதுவும்  மனசில் படியாமல்   ஒரு நிலை.  பயணக்களைப்போ, இல்லை  மகள் பத்திரமாப்போய்ச் சேரணுமே  என்ற கவலையோ ....  மணிவிழா  நல்லபடியா நடந்து முடிஞ்சதும்  டென்ஷன் விடுபட்ட தாலோ....  இல்லைன்னா என்னோட நெகடிவ் தாட்ஸ் எதாவது  மூளைக்குள் ஒளிஞ்சுருந்து  ஆடும் ஆட்டமோ... என்னவோ ஒன்னு.

மறுபடி தீக்ஷதர் வந்து  மூலவருக்கு இடப்பக்கம் இருக்கும் வழியாக  படிகள் மேலே ஏறிப்போகச் சொன்னார்.  ஆடும்சிவனை கொஞ்சம் அருகில் இருந்து பார்க்குமிடம்.  நடராஜ தீக்ஷதர் தாமே  பூஜை செய்து  தீபம்  காமிச்சு சிவனின்  வலப்புறம்  இருந்த  சிகப்பு நிற பட்டுத்துண்டை  விலக்கி இது சிதம்பர ரகசியம். நல்லா பார்த்துக்குங்கோன்னு  சொன்னார்.  ஒன்னுமே இல்லை!! ஆனால்ஒரு  இலை போன்ற   ஜொலிப்பு  கண்ணில் பட்டது. அப்புறம் தெரிந்துகொண்டது அது தங்க வில்வ இலை மாலையாம்.

நடராஜரைத்தான்  மூலவர் என்று  நினைச்சேன். ஆனால்  ஒரிஜினல்மூலவர் , லிங்க உருவில் திருமூலநாதர் என்ற பெயரில் சுயம்புவாக வளாகத்திலேயே தனிக்கோவில் கொண்டிருக்கிறார்.  பிள்ளையார் சந்நிதியில் இருந்து  வடக்கு நோக்கிப்போனபோது வலப்பக்கம் இருந்தது இவர்தான்.   அமைதியா இருந்தால் யார் கவனிக்கிறாங்க?  ஆர்ப்பாட்டமும் வேண்டி இருக்கே! சிதம்பரம் கோவிலில்  மவுசு என்னமோ ஆடும் சிவனுக்குத்தான்! 

பஞ்சபூத தலங்களில் சிதம்பரம்  வானம்.  வானத்துக்கு எல்லை இல்லாமல் எங்கெங்கும் விரிந்து பரந்திருப்பது போல  கடவுள்  எல்லா இடத்திலும் நீக்கமற இருக்கிறார் என்று உணர்த்துகிறது இந்த வெற்றிடம்.

ஆடும் சிவனின்  இடப்பக்கம்  சின்னதா ஒரு பகுதியில் அம்பாள் சிலை உருவங்கள் இருந்தன. அலங்காரம் அருமையா இருந்துச்சு.  தரிசனம் முடிஞ்சு அந்தப்படிகள் வழியாகவே கீழே இறங்கி உள்பிரகாரத்தில் நின்னோம். தீக்ஷதர் வந்து  நம்மைக்கூட்டிட்டுப்போய்  பிரகாரத்தின் ஓரத்தில்  பொன் கூரைக்கு எதிரில் உக்காரவச்சு  சின்னதா ஒரு பூச்சரத்தை கோபாலுக்கு மாலையாப்போட்டு குடும்ப நலனுக்கான  மந்திரங்களைச் சொல்லி பிரசாதங்கள் கொடுத்து நம்மை ஆசீர்வதிச்சார். நாங்களும் தட்சிணை கொடுத்து அவரை வணங்கினோம்.

திரும்ப எங்களை கோவிலுக்கு வெளியில் கொண்டு வந்து விட்டவர், தங்க இடம் வேணுமுன்னா  புதுசா ஒரு இடம்  இப்போ திறந்துருக்காங்கன்னார்.  கோபால் ஏற்கெனவே வேற இடம் வலையில் பார்த்து வச்சுருப்பதால் , ' அது சரி இல்லைன்னா  உங்களுக்கு  ஃபோன் செய்யறேன்'னு  சொன்னதும் சரின்னு  அவர் கோவிலுக்கும்  நாங்கள்  கார் நிறுத்ததுக்கும்  கிளம்பினோம்.

இங்கே இந்தக்கோவிலில் அர்த்தஜாம பூஜை மற்ற எல்லா கோவில்களிலேயும் முடிஞ்சபிறகுதான் நடக்குமாம். நடராஜரின் பூஜைக்கு மற்ற எல்லாதெய்வங்களும் தேவதைகளும், ரிஷிகளும் முனிவர்களுமா  வந்து கலந்துக்க உண்டான ஏற்பாடாம் இது.  இந்த பூஜை ரொம்பவே அட்டகாசமா இருக்கும் என்பதோடு அப்போ நாமும் இங்கிருந்தால் அனைத்து தெய்வங்களின் ஆசிகளும் கிடைச்சிருமுன்னு ஒரு ஐதீகம். கட்டாயம் இந்த பூஜையைப் பாருங்கன்னு அபி அப்பா  சொல்லி இருந்தார். இந்தப்பூஜைக்கு வேற ஒரு பெயர்  சொல்லி இருந்தார் அபி அப்பா.  எனக்குத்தான் நினைவில்லை:(   ராத்திரி பத்து மணிக்கு  இங்கிருந்தால் போதும் என்பதால் அறை ஏற்பாடுகளைப் பார்த்துட்டு  வரலாமுன்னு இருந்தேன்.

க்ராண்ட்  பேலஸ் ஹொட்டேல்! பேரே பிடுங்கித் தின்னுது!  கோவிலில் இருந்து ஜஸ்ட் ஒன்னரைக்கிலோ மீட்டர் தூரம்தான்.  ஊருக்கு ஒதுக்குப்புறமா ரயில்வே ஸ்டேஷனைத் தாண்டி  இருக்கு. நமக்குக் கொடுத்த அறையில் என்னவோ (துர்) மணம்:(  மாடியில் இன்னொரு அறையைக் காமிச்சாங்க. அங்கே  பாத்ரூமில் தண்ணிக்குழாய் சரி இல்லை.  டிவியும் வேலை செய்யலை(யாம்) அப்புறம் முதல் மாடியில்  அறை எண் 109.  நாட் பேட்.   ஒரிரவுதான் தங்கல்.   இந்த  அறை அறையா போன கலாட்டாக்களுக்கிடையில் நம்ம சீனிவாசன் ஓசைப்படாமல் போய் சாப்ட்டுட்டு வந்துருக்கார்.

ரூம் சர்வீஸ் ' மெனுத்தாள்'  மேசை மேல் இருந்துச்சு.  கிங்'ஸ் கிச்சன்.  ஓ.....  கண்ணை ஓட்டினேன். ஆஃப்கான் மஷ்ரூம், ஆலுஜீரா, வெஜிடபிள் பால்  மஞ்சூரியன்....   ஊஹூம்..... ராச்சாப்பாட்டுக்கு   வேற எங்கியாவது போகலாமுன்னு  கீழே வந்தால்  ஒரு  ஓட்டல்லே இட்லி ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு  சொல்றார் சீனிவாசன்.  சரி அங்கேயே போகலாமுன்னு  நாங்களும் கிளம்பினோம்.

தில்லை ஸ்ரீ கணேஷ் !  பரவாயில்லாம கொஞ்சம் நீட்டாவே இருக்குன்னு உள்ளே போய் உக்கார்ந்ததும் கண்ணில் பட்டது   நோட்டீஸ்.



சிதம்பரம் (கத்தரிக்காய்) Gகொத்ஸ். இது   நம்ம KothS இல்லையாக்கும் கேட்டோ:-)

பதிவுகளிலும் சாப்பாட்டுக்கடை சமாச்சாரங்களிலும்  மாய்ஞ்சு மாய்ஞ்சு இதைப்பற்றி நிறைய பேர் எழுதிட்டாங்க. அதிலும் நம்ம கீதா சாம்பசிவம் தீக்ஷதர் வீட்டு(லேயே கேட்டு)  செய்முறை விளக்கம் எல்லாம் கொடுத்துருக்காங்க. பதிவு எழுதும்போது அடிக்கடி கீதாவின் ஆன்மிகப் பயணத்துக்குப்போய் வந்தேன்., அங்கே ஹிட்ஸ் எகிறி இருந்தால் அதுக்குக் காரணம் அடியேள்தானாக்கும்:-)  ஆனா... இது கத்தரிக்காய்  சமாச்சாரத்துக்கு இல்லையாக்கும் !!!

சிதம்பரம் நடராஜர் கோவில் சரித்திரம், பூசை முறைகள் விளக்கம் இப்படி ஏராளமான ரகசியங்களை எழுதித்தள்ளி இருக்காங்க நம்ம கீதா. தலைப்பே சிதம்பர ரகசியம்தான்.  கோவிலை சரிவரப் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிட்டதால்  கடந்த ரெண்டு நாட்களா அங்கே(யே) குடியிருந்து எல்லாம் வாசித்து  முடிச்சேன் . 2007 மார்ச்சில் தொடங்கி ,    ஃபிப்ரவரி 3  2009 வரை விடாம அடிச்சு ஆடி இருக்காங்க.  ரெண்டு வருசம் ஒரே சப்ஜெக்ட்டு!  95 இடுகைகள்.   அசுர சாதனை!  பாராட்டத்தான் வேணும்!

சரி வாங்க  கொஸ்துவைப் பார்க்கலாம்.  கொத்ஸ், கொஸ்து இதில் எது சரி? 'ஸ்'எங்கே வருதுன்னு பட்டிமன்றம்கூட வைக்கலாம் போல இருக்கே!

கொண்டு வா(ங்க) அந்த கொஸ்துவைன்னு  சொன்னதும்  சின்ன கிண்ணத்தில்  தளதளன்னு எண்ணெய் மினுக்கலோடு, முழுசா மிதக்கும் சின்ன வெங்காயத்தின்  பளபள ஒளிச்சிதறலோடு வந்துச்சு!  விருப்பத்தோடு உண்ணும்  சோதனை எலியை வியப்போடு பார்த்தேன்.  கண் விழிகள் அப்படியே மேலே போய் செருக,  இமைகள் பாதி மூடிய  தவம்!  ரொம்ப நல்லா இருக்காம்!

இன்னும் ஒரு கிண்ணம் கொண்டுவரட்டா என்று பரிவோடு கேட்ட பரிமாறுகிறவரை நோக்கி, தலை ஆட்ட இருந்த ஒரு விநாடியில் ..... கோபாலுக்கு  மெள்ள ஒரு இடி . ஒரு பிடி அவல் போதும் என்றாளாம் ருக்கு!



பழி வாங்கிட்டார்.  அறைக்குத் திரும்பும்போது  மணி ஒன்பது.   தூக்கம் கண்ணைக் கட்டுதாம்.  அர்த்த ஜாம பூஜைக்கு  கோவிந்தா.... கோவிந்தா!

அடடா.... கோவிந்தராஜன் நாபித் தாமரையில் 'நின்ற நான்முகனாமே'!  கவனிச்சுப் பார்க்கலையேன்னு மனசு கிடந்து அடிச்சுக்கிட்டது நிஜம். சும்மா அங்கே உட்கார்ந்திருந்த  நேரத்தில் கூட  எழுந்துபோய் பார்த்திருக்கலாம். தோணலையே......  ராத்திரிக்கு மீண்டும் வரும்போது  .... என்ற அசட்டை:(

 'இந்த முறை கிடையாது போ' என்ற விதி இருந்துருக்கு. போகட்டும்.

மனதில் அவ்வளவா பதியாத கோவிலின் உள்பிரகாரத்தை  தினமலர் 360 டிகிரியில்  சில முறை நேற்று பார்த்தேன்.  உங்களுக்கு  பார்க்கணுமுன்னா இங்கே:-)


வெளிப்ரகாரம் :  கிழக்கு & தெற்கு கோபுரவாசல்களுக்கிடையில்





உள்ப்ரகாரம்



பொன் அம்பலம்






தொடரும்............:-)






தில்லையில் அவள் பெயர் சிவகாமி. திருக்கடையூரிலே அபிராமி

$
0
0
ரொம்ப வெய்யிலுக்கு முன்னே கிளம்பினால்  நல்லது. ஏழரைக்கு  கீழே டைனிங் ரூம் போனால் பளிச்!  அருமையான மர நாற்காலிகளும் மேசைகளுமா அட்டகாசமா இருக்கு. இவ்ளோ நல்ல ஃபர்னிச்சரான்னு  வியப்போடு சுவரை அலங்கரிச்ச சில படங்களைப் பார்த்தால்.... அட! நம்ம சிவாஜி! இந்த ஹொட்டேலுக்கு  திறப்புவிழா  நடந்த சமயம் எடுத்த படங்கள்.  இன்னும் ரெண்டே வாரத்தில்   அம்பது வயசு நிறையப்போகுது  வாண்டையார் மேன்ஷன் என்ற  இந்த  ஹொட்டேல் பேலஸ்க்கு . (அப்போ அப்படித்தான் பெயர்!.  க்ராண்ட் ஒரு வேளை சமீபத்தில் சேர்த்திருக்கலாம்)


அறை வாடகையோடு காலை உணவும் தர்றாங்க.  ஆனால் நம்மைத்தவிர வேற யாரும் நேற்று இரவு தங்குனமாதிரி தெரியலை. வரவேற்பிலும் சரி, டைனிங்  ஹாலிலும் சரி  எதிர்ப்பட்ட  பணியாட்கள் யாருமே  உற்சாகத்தோடு இல்லை:(  மெனுவைப்பார்த்து  பூரி உருளைக்கிழங்கு கேட்டதுக்கு  ஒரு  கால்மணி நேரம் கழிச்சு  ரொம்பவே சூடாகிட்ட எண்ணெயில்போட்டு பொரித்த 'கரும்பூரி'  வந்துச்சு.  காஃபிக்கு சொன்னோம்.  அதுக்கு ஒரு பத்து நிமிசம்.  அக்கம்பக்கத்துலே வேறெங்கியோ  இருந்து வாங்கி வர்றாங்களோ என்னமோ?  பக்கத்துலேயே ரயில்வே ஸ்டேஷன் கேண்டீன் இருக்கே!

அடுக்களையைப் பார்க்கலாமான்னு  பூரி  பரிமாறின அபுல்ஸன்  கிட்டே கேட்டதும்  ஒருமாதிரி முழிச்சார்.  ஸம் திங் இஸ் நாட்  ரைட் தேர்:(

அரை நூற்றாண்டு பழசுக்கு பராமரிப்பு வேலைகள்  நடந்துக்கிட்டு  இருக்கு போல!  ஆனா மொத்தத்துலேயும் பெஸ்ட் அந்த டைனிங் ஹால்தான். செகண்ட் பெஸ்ட் ஃபோயர் சுவரில் இருக்கும் சாமிப் படங்களும் குத்துவிளக்கும். கண்ணாடியில் மீன் தொட்டியும். தேர்ட் பெஸ்ட், மாடிப்படிகள் முடியும் ஒவ்வொரு தளத்திலும் இருக்கும்  அரைவட்ட டிஸைன் லேண்டிங். தோட்டம் பார்க்கும் வகையில் கண்ணாடி அமைப்பு.

அபி அம்மா சொன்னபடி  தில்லை அம்மன்கோவிலுக்குப்போய்க்கிட்டு இருக்கோம் இப்ப. தங்கிய இடத்தில் இருந்து  மூணு  கிமீ தூரம் இருக்கும்.  பெரிய கோவிலைத் தாண்டிப்போகும்போது ராத்திரி வரமுடியலையேன்னு  என்மேல் எனக்கே  பரிதாபமா இருந்துச்சு. டூர் பஸ்கள்  வரிசைகட்டி நின்னுருக்கு.  ஊரின் வடகிழக்குப்பகுதி.அருள்மிகு தில்லை காளி அம்மன் திருக்கோவில் நுழைவு வாயில், ரெண்டு பக்கமும் கூரைவீடுகளும்  திறந்த சாக்கடையும்,  பராமரிப்பு இல்லாத  தெருவுமா.....   கோடியில்  பாழாகிக்கிடக்கும் திருக்குளத்தின் எதிரே கோவில்.

முன்மண்டபத்தின் நடுவிலொரு  பலிபீடம்.  குங்குமம் கொட்டி இருக்கும் மேடையில் சில அகல்கள் எரியுது. உள்ளே நுழைஞ்சதும் ஆளுயர அம்மன். சாந்தமான முகங்கள்!  ஆமாம்..... நாலு முகங்களோடு இருக்காள். ரொம்பவே அழகான அமைதியான பாவம்!

நடனப்போட்டியில்  தோத்தவங்க ஊரைவிட்டு விலகி இருக்கணுமாமே..... என்னங்கடா இப்படி ரூல்ஸ்:(  கோபாவேசத்தோடு ஊர் எல்லைவரை வந்தவள்  நின்ன இடம் இது.  இப்படி ஆங்காரமா இருந்தால் , கண்டுக்கிட்டுப்போகலாமுன்னு வர்ற மக்களுக்கு எப்படி இருக்கும்?  கோபம் இருக்கும் வீட்டில் கால்குத்த நாமும் கொஞ்சம் யோசிக்கமாட்டோமா?

ப்ரம்மதேவர்,  அம்பாளைச் சாந்தப்படுத்த முயற்சிகள் எடுத்தார்.  அவரிடம் இருக்கும் நான்கு வேதங்களும் துணை செய்ய  மனசமாதானம் அடைஞ்சவள், வேதங்களைக் குறிக்கும்   நான்கு முகங்களோடு  ப்ரம்ம சாமுண்டீஸ்வரியா செட்டில் ஆனாள்.

நான் கோபமா இருந்தப்ப இப்படித்தான் இருந்தேன்னு சொல்லிக்கலாமுன்னா  அந்தக்காலத்தில்  ஃபோட்டோ புடிச்சு வச்சுக்க  ஏது சான்ஸ்?  சம்பவம் நடந்தது 2000 வருசங்களுக்கு முன்பாக இருக்கணும்.  கோவிலுக்கு வயசு அதேதான்.  ஆக்ரோஷ போஸ் ஒன்னு எடுத்து நின்னாள் அம்பாள்.
பயமா இருக்குல்லே?  ஆத்தா...  உள்ளெ போய் உக்காருன்னதும்  சட்ன்னு உள்ளே போய்  கிழக்கு  பார்த்து உக்கார்ந்தாள்.

கோபத்தில் சிவந்த  முகத்துக்கு குங்கும அபிஷேகம்  செய்வதால் தரையெல்லாம் குங்குமம் சிதறிக்கிடக்கு. இந்த சந்நிதியில் காளியைக் கும்பிட்டுக்கிட்டு  கோவிலை வலம் வர்றோம்.  வலம் வரும் பாதையெல்லாம்  சிகப்பு!  நம் உள்ளங்காலும்  சிவந்துதான் போகுது.  இவ்ளோ கோபம் கூடாதுன்னு மறுபடி சாந்த ஸ்வரூபிணியை சேவிச்சோம்.  வீணை ஏந்திய வித்யாம்பிகையையும்  இப்போபார்த்தேன். கோவில் சமாச்சாரம் விளக்கிச் சொல்ல அங்கே பூசாரிகள் யாரும் கண்ணில் படலை:(   தங்க்ஸ் கோபத்தோடு போனதைப்பார்த்து உள்ளூர ஒரு பயம் இருந்துருச்சோ என்னவோ  தட்சிணாமுர்த்தி இங்கே பெண்வேசங்கட்டிக்கிட்டு கடம்பவன தக்ஷண ரூபிணி என்ற பெயரில் இருக்கார்.

கோவிலை வெளிப்புறம் இருந்து  க்ளிக்கிட்டுக் கிளம்பி  ஒரு மணி நேரப்பயணத்தில்  இன்னொரு ஊருக்குள் நுழைந்தோம்.  அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்குப்போகும் வழியிலேயே  ஊரின் பிரசித்தி ஹொட்டேல்கள் பெயரில்  தெரியவந்தது.  ஹொட்டேல் மணிவிழா, ஹொட்டேல்  சதாபிஷேகம் இப்படி.

கோவில் ஒரே  கல்யாணக்கூட்டம்.  எங்கெ பார்த்தாலும் மாலயும் கழுத்துமா பொண்ணு மாப்பிள்ளைகள். கோவிலுக்கும் நுழைந்ததும்  கண்ணில் பட்டவள் அபிராமி.  இங்கே மூலவர்களைவிட பயங்கர பிஸியில் இருக்காள் இவள். கல்யாணங்கட்ட வந்த ஜோடிகளை ஓடோடி வரவேற்பது முக்கிய தொழில். உபதொழில்  நம்மைப்போல வருபவர்களுக்கு  ஆசிகள் அளிப்பது!

ஒரு நிமிசம்கூட அக்கடான்னு ஓய்ஞ்சு உக்கார நேரமில்லைன்னா பாருங்களேன். இங்கே  கல்யாணம் செய்ய வருபவர்கள் நாள் நட்சத்திரம் திதி ஒன்னும் பார்க்க வேணாமாம். அதனால் வருசம் 365 நாட்களும் ஜே ஜேன்னு இருக்கு கோவில்.

உள்பிரகாரம் சுத்திவர  மணவரைகள்தான்.  செல்விருந்து வருவிருந்து  மாதிரி ஒரு கல்யாணம் முடிஞ்சு மணமக்கள் எழுந்த அடுத்த நிமிசமே புது ஜோடி வந்து  மணையில் உட்கார்ந்துருது.  அக்னி கூட புதுசா  வளர்க்க வேண்டியதில்லை போல. அணையாத்தீதான்.   யாருடைய  கல்யாணத்துக்காவது  நாம் போயிருந்தால் புகை மூட்டத்தில் நம்மை அழைச்ச கல்யாண வீட்டாரையோ, இல்லை  மாப்பிள்ளை பொண்ணையோ கண்டு பிடிப்பதும் கஷ்டம்தான்.  வெவ்வேற கல்யாணத்துக்கு வந்த மக்கள்ஸ் கூட  கலந்துகட்டி நெருக்கியடிச்சு உக்கார்ந்துருக்காங்க. தப்பான ஜோடிக்கு மொய் போயிரும் அபாயம் இருக்கு:-)

மூலவர் அமிர்தகடேஸ்வரர்,  எமனுக்கு டெர்ரர்ரா இருந்தவர்!  மார்கண்டேயர் என்றும் பதினாறாக இருப்பதற்கு இவரே காரணம்.  மார்கண்டேயன் உயிரைப் பறிக்க எமதர்மன் வந்து கூப்பிட்டதும் வரமாட்டேன்னு சொல்லி அவர்  அமிர்தகடேஸ்வரரைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டார்.  அப்படியெல்லாம் உயிரை எடுக்காமல் விட்டுட்டுப் போகமுடியாதுனு பாசக்கயிற்றை வீசுனப்ப  அது மார்க்கண்டேயர் கட்டிப்பிடிச்சுருந்த  சிவலிங்கத்தையும் சேர்த்தே சுருக்கு போட்டுருச்சு. அவ்ளோதான்! ' என்னையேவா இழுக்கறே' ன்னு   ஆவேசமா  கால சம்ஹாரமூர்த்தியாக சிவன் தோன்றியதும்  எமனுக்கே பயம் வந்து  மன்னிப்பு கேட்டு அழுதார்.

அப்புறம்  மார்கண்டேயரை  விட்டுட்டுப் போகும்படியாத்தான் ஆச்சு.  இனி லெட்ஜரில்  திருப்பி அவர் பெயரைப் பதிய முடியாமல் போய் , மார்கண்டேயரும் பதினாறாகவே நிலைச்சு நின்னுட்டார்.  எமனின் பாசக்கயிறு விழுந்த அடையாளம் சிவலிங்கத்தின் மேனியிலே இன்னும் இருக்காம். பாலபிஷேகம் செய்யும்போது தடம் நல்லாவே தெரியுமாம்.

மூலவருக்கு முன் இருக்கும்  கொஞ்ச  இடத்தையும் விட்டுவைக்காமல்  அங்கேயும்  கல்யாணங்கள் நடக்குது. ஒரே புகை மூட்டத்தில் எல்லாமே  தேவலோக ஸீன்கள்தான். இதைத்தொட்டடுத்த பிரகாரத்திலும்  திண்ணைகள் ஓடும் அமைப்பில்  கல்யாணத்துக்கு வந்திருந்தவர்களின் கூட்டம்.   மாலையும் கழுத்துமா மக்கள் வெள்ளம்!

இங்கே வந்து  60,  70, 80, 90, 100ன்னு  கல்யாணம் செஞ்சுக்கறவகளுக்கும், ஆயுஷ்ஹோமம்,  ஜாதகரீதியில்கோளாறுன்னு விசேஷ பூஜை செய்யறவங்க  இப்படி எல்லோருக்கும் எம பயம் இல்லாமல் ஆயுசும் ஆரோக்கியமும் நீடிச்சு இருக்கும் என்று ஐதீகம்.  அதான் தமிழ்நாடு முழுவதும்போதாதுன்னு , வெளி மாநிலம்,வெளிநாடுன்னு மக்கள் அறுபதாங்கல்யாணம், எழுபதுக்கு செய்யும் பீமரதசாந்தி, எம்பதுக்கான சதாபிஷேகம், தொன்னூறுக்கான கனகாபிஷேகம், நூறுக்கான பூர்ணாபிஷேகம்ன்னு கொண்டாடி மகிழ திருக்கடையூருக்கு படையெடுக்கறாங்க.

கோவிலுக்குள்ளேன்னு இல்லாமல் பலவித கல்யாண  ஹால்களும்  ஊர் முழுசும்  இருக்கு. எல்லோருக்கு அமோகமா வியாபாரம்!

அபிராமி சந்நிதி தனியா இன்னொரு கோவிலாட்டம் இந்தக் கோயிலுக்குள்ளேயே இருக்கு. அங்கேயும் மக்கள்கூட்டம் அதிகமுன்னாலும் அஞ்சு நிமிசம்  நின்னு தரிசிக்க முடியுது. சக்தி வாய்ந்த அம்மன்.  அபிராமி அந்தாதியே இந்த அம்மனைப் பாடியதுதான்.



கல்யாண விசேஷங்களுக்குக் கோபூஜை பண்ணிக்க வசதியா  கோமாதா குழந்தையுடன் காத்திருக்காள்.  இவளும் பூம்பூம் மாடு போல பழக்கப்படுத்தியவள்தான்.  பயமில்லாம  தொட்டுக்கும்பிட வாகா முதுகை  காமிக்கிறாள்.

இந்தக்கோவிலில் இன்னுமொரு முக்கிய விசேஷம்..... கெமெராவுக்கு டிக்கெட் ஒன்னும் வாங்கிக்க வேணாம். கல்யாணத்தில்   போட்டாகிராஃபர்களுக்கு  என்ன தடை:-))) அதுவும் இப்பெல்லாம் கல்யாணங்களில் டைரக்‌ஷனே  வீடியோக்காரகள்தானே!  தாலி கட்டும் ஸீன் சரியா வரலை ரீ டேக்  இந்தப்பக்கம் பார்த்துச்  சிரிங்க.   ரெடி ஸ்மைல்(  கெமெராவைப்பார்த்து  கையில் தாலியுடன் சிரிச்சால்  பொண்ணு கழுத்து எங்கேன்னு  எப்படி பார்க்க? அதிலும்  மாலையை சரி பண்ணறேன். நெக்லெஸ் சரிஞ்சுருக்கு, தலையை ரொம்பவே குனிஞ்சுட்டாள்ன்னு  சரி செய்ய எத்தனை பெண்கள் மணமகளின் முகத்தருகில் குனிஞ்சு இருப்பாங்கன்னு நினைச்சுப் பாருங்க.

ரொம்ப வயசானவரா இருந்தவரின் ஜோடியை சதாபிஷேகமான்னு கல்யாணம் விசாரிச்சு ,பல்பு வாங்கினபிறகு கப்சுப் ஆனேன். சஷ்டியப்த பூர்த்தியாம். அதுக்குப்பிறகு  எதிர்ப்பட்ட  பல் ஜோடிகளுக்கு  வாழ்த்துக்கள் சொன்னதோடு சரி.எதுக்கும் வாயைத்திறக்கலை:-)))

கோவில்  வாசலில்  வளையல், பூக்கள் மஞ்சள் குங்குமம் என்று மங்கலப்பொருட்கள், பூஜை சாமான்கள்  விற்கும் கடைகளிலும்  கூட்டத்துக்குக் குறைவே இல்லை. அழகழகான மண் உண்டியல்கள் கண்ணைப்பறிச்சது!   தாகத்துக்கு இளநீர் குடிச்சுட்டுக் கிளம்பினோம்.

ஒரு சோக சம்பவம் என்னன்னால்....  இந்த அபிராமி உடல்நலமில்லாமல் போய்  இந்த ஜனவரி 18 காலை (18/1/2013) காலை  சாமிக்கிட்டே போயிட்டாளாம்:(   இத்தனைக்கும் வயசு ஒன்னும் அதிகமில்லை வெறும் 26 தான். நாலு வயசுலே கோவிலுக்கு வந்தவள் . 22 வருசம்  ஓடியோடி உழைச்சுட்டுப் பொழுதோடு போயிட்டாள்:(  ப்ச்.....

இந்நேரம்  புது அபிராமி வந்துருப்பாள் என்றே நினைக்கிறேன். அவளுடைய சேவையும் தேவையும்  அதிகமா இருக்கே!

தொடரும்..............:-)






புள்ளிருக்கு வேளூர் போகலாமா?

$
0
0
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி வழியா வந்துருந்தால் ஒரு  இருபத்தி மூணுகிமீ தூரத்தை  குறைச்சுருக்கலாம். புள்ளிருக்கு வேளூரைப் பார்த்த கையோடு திருக்கடையூர்  என்று இருந்துருக்கலாம்.  இங்கே இப்படி நாள் முழுசும்  கல்யாணக்கொண்டாட்டமுன்னு தெரியாமபோச்சே:( வந்தவழியாவே திரும்பிப்போனோம்.  இது நம்ம பயணத்திட்டத்தில் இல்லாத ஊர். ஆனால்  தானாய் அமைஞ்சு போச்சு!

இந்தப்புள் தான் 'அந்த' ஜடாயு.  ராவணன் சீதையைத் திருடிக்கொண்டு போன சமயம் பார்த்துட்டு அவனோடு சண்டை போட்ட அதே ஜடாயுவேதான். சண்டையில் இறகுகள் வெட்டப்பட்டு குற்றுயிராகக் கிடந்தது. சீதையைத் தேடிக்கொண்டு ராமலக்ஷ்மணர்கள் அந்த வழியில் வந்தபோது சமாச்சாரத்தைச் சொல்லிவிட்டு உயிர் நீத்த அற்புதப் பறவை. அதற்கு சிதை மூட்டி உடலைத் தகனம் செய்த இடம்தான் இந்தக்கோவிலில் இருக்கும் ஜடாயு குண்டம்.

காஞ்சீபுரத்திலிருந்து ஒரு 12 கிமீதூரத்தில் திருப்புட்குழின்னு ஒரு ஊர் உண்டு. அங்கே பெருமாள் ஸ்ரீ விஜயராகவன் கோவில் கொண்டுள்ளார். இது திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலம். அந்த 108 இல் ஒன்னு. இங்கே விசேஷம் என்னன்னா.... ஜடாயுவுக்கு  ஸ்ரீராமர் ஈமக்கடன் செய்தது.  இப்படி ஒரு இடம் இருக்க,   இங்கே சுமார் 235 கிமீ தாண்டி வைத்தீஸ்வரன் கோவிலில் எப்படி ஜடாயுவை  தகனம் செய்த குண்டம் இருக்கு(ம்) என்பது கொஞ்சம் புரியத்தான் இல்லை.  ஆனாப் பாருங்க.... இது  சிவஸ்தலம். இங்கே ஜடாயு குண்டம் என்பது இன்னொரு சிறப்புதான் இல்லையா?  ஒரே சம்பவம் ரெண்டு இடத்துலே ஒருத்தருக்கே சம்பவிச்சதை  ஒரு அதிசயமுன்னு  எடுத்துக்கலாம். இன்னும் நான் திருப்புட் குழி போகலை. பெருமாள் வரச்சொல்லலைன்னு  அர்த்தம்.

நான்கு வேதங்களில் ஒன்றான ரிக் வேதம் இங்கே சிவனை வழிபட்டது.  கையினில் வேல்பிடித்த சிவபாலன்  முத்துக்குமரன் இருக்குமிடம். சூரியன் வந்து ஈசனை  வழிபட்டதும் இங்கேதான்.மேலும்  இந்த 'புள்'ளைத் தகனம் செய்த   குண்டம் இப்படி எல்லாத்தையும்  கலந்து கட்டி இந்த இடத்துக்கு புள்  (ரிக்கு) இருக்கு வேளூர் என்று ஒரு புராணப்பெயர் இருக்கு. ஆனால்  நமக்கெல்லாம்  வைத்தீஸ்வரன் கோவில் என்றதும் சட்ன்னு  தெரிஞ்சுருது பாருங்க.  சிவன் சுயம்புவாக இருக்கிறார். வைத்திய நாதன்.  சென்னை  திருவான்மியூர் மருந்தீஸ்வரர் மாதிரின்னு  வச்சுக்கலாம்.

ஊர் முழுக்க ஏடு பார்த்துச் சொல்லும்  நாடி ஜோஸியம் கொழிக்குது. போனபிறவியும் வரும் பிறவியும் இருக்கட்டும். இந்தப்பிறவியில் பதிவர் அவதாரம். இதுக்கு மேல் வேறென்ன தெரிஞ்சுக்கணுமுன்னு  நாடி பார்க்காம  இருந்தேன்.  எங்க தாடி மாமாவுக்கு இதிலெல்லாம் பயங்கர நம்பிக்கை. கதைகதையாச் சொல்வார். அவருக்கு ரொம்ப வேண்டப்பட்ட நண்பர் இறந்தவுடன்,  தந்தை மரணம் பற்றி  மனம் நொந்துபோயிருந்த நண்பரின் மகன்களை நாடி ஜோஸியம் பார்க்க கூட்டி வந்தாராம். இங்கே ஓலைச்சுவடி வாசிச்சப்போ தெரிஞ்சதாம்  ஒரு குறிப்பிட்ட ஊரில் சலவைத்தொழிலாளி வீட்டில் அப்பா மீண்டும் பிறவி எடுத்துருக்கார்ன்னு.  உடனே அங்கே போய்  அவரிடம் மன்றாடிக்கேட்டு, எங்கப்பாவை திருப்பி எங்களுக்குக் கொடுத்துருங்கோன்னு அழுது புலம்பி  ஒரு தொகை கொடுத்து  வீட்டுக்குக் கூட்டி வந்துட்டாங்களாம். வீட்டின் உள் முற்றத்தில் அப்பாவைக் கட்டிப்போட்டுதினமும் நல்ல புல் கொடுத்து  சேவை செய்ஞ்சாங்களாம். தாடி மாமா ஒரு சுவாரஸியமானவர்.அவரைப்பற்றி முந்தி எழுதியது இங்கே:-)


பிரமாண்டமான  கோவில்தான். இந்தப்பக்கங்களில் அநேகமா எல்லாக் கோவில்களுக்கும் வயசு  கேட்டால் ரெண்டாயிரமுன்னே  பதில்வருது.  மக்கள் தொகை அதிகமில்லாத அந்தக் காலக்கட்டங்களில்  ஊரே கோயிலுக்குள் குடி இருக்கும் அளவுக்குக் கட்டிவிட்டுருக்காங்க  பாருங்க!


 கோவிலுக்கு முன்னால் இருக்கும்  வெளிப்புற முன்மண்டபத்தின் ரெண்டு பக்கமும் வரிசையா இருக்கும் கடைகள் 'அந்தக்கால'  மதுரை மீனாட்சி அம்மன் கோவில்கடைகளை நினைவூட்டியது.

 இதைக்கடந்து  இருக்கும் இன்னொரு வாசலில் நுழைஞ்சால் அங்கேயும் நீண்ட மண்டபம்!

உள்பிரகாரம் இன்னும் ஜோரா இருக்கு!  சிதம்பரம் கோவில் விமானத்தைப்போலவே இங்கும்!

பெரிய முற்றம்போன்ற  அமைப்பில் நடுவில்  அழகான சின்னச்சின்ன கோபுரங்களுடன் தனித்தனிச் சந்நிதிகள்.  வலம் சுற்றிவரும் நமக்கிடப்புறம்  மேலே வெளிச்சம் வர  ஏதுவான பலகணிகளும்  நடையிலமைந்திருக்கும்  கடவுளர்களின்,  தேவர்களின் சந்நிதிகளும்  அருமை!  நிறைய சந்நிதிகள் மூடியே இருந்தன.கிட்டப்போய் கம்பிக்கதவின் உள்ளெ கண்களை அனுப்பினால்........  இருட்டு!






முத்துக்குமரன் சந்நிதியில் தரிசனம் கிடைச்சது. முக்கிய இடங்களில் எல்லாம் பெரிய தாம்பாளத்திலும்  பூக்கூடைகளிலும் , குட்டியா ஒரு பேப்பர் கவரில்   தருமை ஆதீனம், வேளூர் தேவஸ்தானம், வைத்தீஸ்வரன் கோவில், வைத்தியநாத சுவாமி திருச்சாந்துருண்டை, மூலிகை தீர்த்த மண்மருந்துன்னு  ஒரு சிகப்புக்கயிறுடன் ஸ்வாமி பிரசாதமும் கூடவே ஒரு குருக்களும்.

இப்பெல்லாம் கோவில்களில் சின்ன அளவு தட்சிணை பத்து ரூபாய் என்று இருப்பதால்  அந்தத் தட்டுகளிலே  பத்துரூபாய்த்தாள்களா நிறைய கிடக்கு. நாமும்  பிரசாதம் வாங்கிக்கறோம். இது நோய் தீர்க்கும் மருந்துன்னு  ஐதீகம்.  4448 நோய்களைத் தீர்த்து வைக்கிறார்  ஸ்ரீ வைத்தியநாதர் .

 ஜடாயு குண்ட விபூதியுடன்  சித்தாமிர்த தீர்த்த நீரையும் சேர்த்து குழைச்சு, முத்துக்குமரன் சந்நிதி முன்னால் இருக்கும்  குழி அம்மியில் வைத்து  அரைக்கிறாங்க. அரைக்கும்போது  இடைவிடாமல் ஓம் நமசிவாய மந்திரத்தை ஜெபிக்கணும். அரைச்ச  சாந்தை சின்னதா உருட்டி மாத்திரை மாதிரி செஞ்சுடறாங்க.  மாத்திரைகளை அம்பாள்  தையல் நாயகியின் சந்நிதியில் வச்சு  பூஜிச்சவுடன்  மருந்து ரெடி!   ஈசனுக்கு உதவ, மருத்துவகுணமுள்ள தைலத்தை ஏந்தி வந்ததால் அம்பாளுக்குத் தைலநாயகின்னும் ஒரு பெயர் உண்டாம்!


சரி...மருந்துக்கான சித்தா அமிர்த தீர்த்ததுக்கு  எங்கே போறது?   நோ ஒர்ரீஸ். இங்கே இந்தத் தலத்துலேயே அது  நிரம்பி இருப்பது  கோவிலின் திருக்குளத்துலேதான்.  சித்தர்கள் அனைவரும் சேர்ந்து அமிர்தத்தால் ஈசனை அபிஷேகம் செய்தார்கள். அந்த அமிர்தம் வழிஞ்சு நிரம்பி இருக்குது இங்கே.

கோவில் குளம் படு சுத்தமா இருக்கு! காணக் கண் கொள்ளாத காட்சி. ஹப்பா..... எத்தனை நாளாச்சு இப்படி சுத்தமானதொரு குளத்தைப் பார்த்து!!!!  நடுவிலே இருக்கும் நீராழிமண்டபம் அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு!  சிம்பிள் அண்ட் ஸ்வீட் வகை!



  குளத்தைச் சுற்றிலும்  மண்டபத்தோடு கூடிய நடைபாதை.  மனசுக்கு நிம்மதியா இருக்குன்னு அஞ்சு நிமிசம் உக்கார்ந்துட்டு  வந்தோம்.  குமரகுருபரர் இத்தலத்தைப் பாடிய பாடல்களில் ஒன்னு  சுவரில்  பதித்த  கரும்பளிங்குலே செதுக்கி இருக்கு.





கடவுள் என்பது முற்றிலும்  நம்ம நம்பிக்கைதான். நம்பினோர் கெடுவதில்லை என்பதால் நம்பிக்கையோடு அந்த மருந்தை உண்பவர்களுக்கு நோய்களில் இருந்து விடுதலை.  நம்பணும். நம்புனால்தான் சாமி. நமக்கு  வந்த நோய் தீரலைன்னா  ஒன்னு நம்ம நம்பிக்கை வீக்கா இருக்கு. இல்லைன்னா நம்ம வியாதி அந்த  4448 லிஸ்டுலே இல்லை. புதுசாக் கண்டுபிடிச்ச கலிகால நோய்ன்னு வச்சுக்கணும்.

இதேபோல  முத்துக்குமரனுக்கு  அணிவிக்கும் சந்தனக்காப்பு சந்தனமும் ' புழுக்காப்பு ' என்னும் பெயரில் பிரசாதமாக் கிடைக்குது.   போர் புரியக்கிளம்புமுன் தேவசேனாதிபதி முருகன் இங்கே வந்து அம்மை அப்பனை வணங்கியதாகவும் அப்போது அன்னை  பார்வதி  சக்தி வேல்  வழங்கியதாகவும் புராணக்கதை சொல்லுது.

நவகிரகக்கோயில்களுக்கு  ஒரு நாலு வருசத்துக்கு முன்னே யாத்திரை (!!)  போனப்ப இங்கே ஜஸ்ட் எட்டிப் பார்த்துட்டு ஓடுனதோடு சரி. ஒரே நாளில் ஒன்பது கோயில்களுக்கும் போய் வரணுமுன்னா  இப்படித்தான்,  ஹாய் ஹாய் பை பைன்னு  முடியுது. செவ்வாய் கிரகத்துக்கான அங்காரகன் இங்கே இருக்கார்.  செவ்வாய் தோஷமுள்ளவர்கள் வந்து பிரார்த்தனை செஞ்சுட்டுப் போறாங்க.



சுத்து வட்டாரத்தில் நிறையப்பேருக்கு முருகனும், வைத்தியநாதரும்  குலதெய்வம் என்பதால்  கல்யாணங்களும், குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காது குத்தல் விழாக்களும்  கோவிலில் நடந்துக்கிட்டேதான் இருக்கு. நாம் போனது புரட்டாசி மாதம் என்பதால்  எந்த மொட்டையையும் பார்க்கலை!

இன்னும் கொஞ்சநேரம் சுத்திப்பார்க்க ஆசை இருந்தும் நேரக்குறைவால் கிளம்பவேண்டியதாப் போச்சு.  கொலைவெறியோடு அடுத்த ஊரை நோக்கிப் போறார் கோபால். கூடவே  அப்பாவியா நானும்:-)

தொடரும்........:-)

பின்குறிப்பு:  பதிவுலகத்தோழி  ஒருவர்  'அன்று' பின்னூட்டியது இப்படி.

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஒரே ஒரு லைன் தானா? அநியாயம். அந்த கோவில் மரம், காலைல கிடைக்கிற மருந்து, கோவில் குளம், சந்தனக்குழம்பு விரிவா சொல்லாம இப்படி செய்தா எப்படி. சரி உப்பிலியப்பன் கோவில் பத்தியாவது டீடெயிலா எழுதுங்க.

3/30/2009 8:58 AM
 அன்று துளசி கோபால் said...

வாங்க பத்மா.

ரொம்ப விரிவாச் சுத்திப் பார்க்கலைப்பா இந்தக் கோயில்களை.

நவகிரக டூர்ன்னு ஒரே நாளில் முடிச்சுடறாங்க(-:

அப்புறம் தனியாத்தான் இன்னும் ஒருமுறை மனசுக்கு உகந்தவைகளைப் போய் விலாவரியாப் பார்க்கணும்.

இந்த  இடுகை அன்புத்தோழி பத்மா  அர்விந்த் அவர்களுக்கு  சமர்ப்பணம்.

. உப்பிலியை அப்புறம் ஒரு சமயம் பார்க்கலாம் பத்மா.






பயணத்தினிடையில் பதிவர் (குடும்ப) சந்திப்புகள்!

$
0
0
நாங்க சண்டிகரிலிருந்த சமயம், ஒரு நாள்  அபி அப்பா சேட் லைனில் வந்தவர் தங்கம் பார்த்தீங்களான்னு கேட்டார்.  பார்த்தேன்.ஆனால் வாங்கிக்கலை. விலை கூடி இருக்குன்னேன்.  அந்தத் தங்கமில்லை இது  டிவி சீரியல் என்றார். டிவி  சீரியல்ஸ்  எல்லாம் பார்க்கறதில்லைன்னதுக்கு, குலசேகரனை பாருங்க டீச்சர்.  எதுக்கெடுத்தாலும்  ஒரு அலட்டல் நடிப்புன்னார். சரின்னு சொல்லிட்டுப்  பேசாம இருந்துருக்கலாம். விதி யாரை விட்டது?  எத்தனை மணிக்கு வருதுன்னு கேட்டு வச்சேன்.

எட்டரை மணிக்கு டீச்சர்ன்னார்.  எந்த சேனல்?   சன் டிவி தான். என்ன டீச்சர் இதுகூடத் தெரியாம இருக்கீங்க. குலசேகரனைப் பார்த்துட்டு அந்தாள் நடிப்பைப்பத்திச்  சொல்லுங்கன்னு அப்பாவியா கொளுத்திப்போட்டார். அப்ப இது கொளுத்தல்னு எனக்குத் தெரியலை:(

தினமும் மாலை 7 மணிக்குத்தான் கோபால் வேலையில் இருந்து வருவார். உடனே கிளம்பி  நம்ம சண்டிகர் முருகன் கோவிலுக்குப்போயிட்டு அப்படியே   கடைக்கும்போய் காய்கறி பழங்கள் வாங்கியதும் வீட்டுக்கு வரும்போது  மணி  எட்டு எட்டேகால் ஆகிரும்.  ரொம்ப லேட்டால்லாம் வரமாட்டோம். ட்ரைவரும் காலை ஏழு முதல்  வேலை ஆரம்பிக்கும்போது அவரும்   வீட்டுக்குப்போய் ஓய்வெடுக்க வேணாமா?

எட்டரை  நினைவுக்கு வராதேன்னு வந்தவுடன்  டிவியைப் போட்டு வைப்பேன்.  அப்ப வேறு எதோ ஒரு சீரியல் போய்க்கிட்டு இருக்கும்.  அதுலே ஒரு கண் வச்சுக்கிட்டே  சாப்பிட ரெடியாவோம். தங்கம் ஆரம்பிச்சதும் குலசேகரன் வர்றாரான்னு பார்ப்பேன்.  என்னென்னவோ நடக்குது. குலசேகரன் என்ற கேரக்டரைக்  மட்டும் காணோம்.  இளவஞ்சின்னு ஒரு பாத்திரம் சிலசமயம் அசடு போல, சிலசமயம் அப்பாவி, சில சமயம் பெருமைப்பீத்தலோடு  அலைவதுன்னு  நாளுக்கொன்னாய்  வர்றாங்களே தவிர அந்த குலசேகரனைக் காணோம்.

அபி அப்பாவிடம் சேட் லைனில் கேட்டால்...உங்க அதிர்ஷ்டம் இந்த வாரம் குலசேகரன் வரவே இல்லை டீச்சர். கட்டாயம் திங்கக்கிழமை பாருங்க வருவார்னு  அடிச்சுச் சொல்றார். இந்த ஒரு வாரத்துலேயே    இந்த ரெண்டு தொடரிலும் இருக்கும் மக்கள்ஸ், கதை(??!!) எல்லாம் புரிய ஆரம்பிச்சது.

மாமியார் மச்சினன் கொடுமை, புள்ளைத்தாய்ச்சிப்பொண்ணை அடிச்சு விரட்டுனது ஒரு பக்கமுன்னா..... ரெண்டு பொண்டாட்டிகளை ஞாயப்படுத்திக்கிட்டு  இன்னொண்ணு. காசுக்கு நாலு கலெக்டர்கள்  விக்கறாங்களா என்ன?  குடும்ப ரகசியங்கள் ரெண்டுவச்சுருக்கோமுன்னு  நாச்சியாரம்மா கோடிகாட்டிக்கிட்டே இருக்காங்க:-)

நம்ம கோபாலுக்கு  பகலுணவு  நேரம் கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும் ராத்திரி  சாப்பாடு டாண்னு எட்டரைக்கு வேணும். சாப்பாட்டின் ருசியை மறக்க இப்போ டிவி ஆப்டுச்சுன்னு  பார்த்துக்கிட்டே சாப்பிடப்போக ... கொஞ்சம் கொஞ்சமா இந்த ரெண்டு சீரியலும் நம்மைக் கொக்கி போட்டு இழுத்துருச்சு. அப்படியும் சில நாட்கள் பயணத்தின்போது பார்க்காமல்தான் இருந்தோம். ஒரு பெரிய கொடுமை என்னன்னா..... விளம்பரங்கள்.   ஒரு விளம்பரத்தை  ஒரு முறை காமிச்சு விட்டுடமாட்டாங்க.  சுவத்துலே ஆணி அடிச்சு இறக்குறமாதிரி  திருப்பித்திருப்பி  இடைவெளிவிடாமப்போட்டு  நம்ம மண்டையில் அடிச்சு அடிச்சு......    கழுத்துக்கு  மேலே தலைமுடியைக் கொத்தாப்பிடிச்சுக்கிட்டு  நுனிப்பகுதியை  விலுக் விலுக்குன்னு  பிடிச்சு  இழுத்து காமிப்பாங்க  பாருங்க ..... உறுதியான முடியாம் !!!   போதுமடா சாமி!

இந்தியாவை விட்டு நியூஸி திரும்புனதும் சல்லியம் விட்டுச்சுன்னு நிம்மதியா இருந்தேனா.....  நம்ம கோபாலுக்குப் பிடிக்கலை:-) வலையில் அங்கெ இங்கென்னு தேடி தமிழ் டிவி ஷோன்னு  ஒரு இடத்துலே எல்லா டிவி சீரியலும் வருதுன்னு சொல்லி அந்தப் பக்கத்தை காமிச்சார்....  புத்துக்குள்ளே இருந்து ஈசல் வர்றது மாதிரி விதவிதமான பெயர்களில்  கொட்டிக்கிடக்கு. தேடித்தேடி அந்த ரெண்டையும் கண்டு பிடிச்சுட்டார்.   நமக்கு அம்பது ஜிபி  வேற இருக்கே, அதை ஏன் பாழாக்கணுமுன்னு  மீண்டும் குழியில் விழுந்தோம். என்ன ஆறுதலுன்னா....  விளம்பரத்தொல்லை  இல்லை:-)))  நமக்கிஷ்டமான நேரத்தில் பார்த்துக்கலாம், ஒரு நாள் தள்ளி.  அதே எட்டரைக்கு  இங்கேயும் சாப்பாடு  ப்ளஸ் டிவி சீரியல்.  (நல்லவேளை  ஒரு அபத்தம்  முடிஞ்சு தொலைஞ்சது. இன்னுமொன்னு விரைவில்முடியப்போகுதாம். நல்ல சேதி.  ஆனால்புதுசா ஒன்னையும் கோபால் புடிச்சுக்காம இருக்கணுமே! )

இதுக்கெல்லாம் மூல காரணம் யாருன்னு  ஆராய்ந்தால்....   கொலைவெறி வராமல் இருக்குமா? ஞாயமா எனக்கு வரவேண்டியது ,கோபாலுக்கு வந்துருச்சு, அபி அப்பாவை சந்திக்கணும் என்ற வெறி:-))))

சரியா அரைமணி நேரத்துலே  காளியாகுடி கண்ணில் பட்டது. பல பதிவுகளில்  பார்த்துருக்கேன். கட்டாயம் போய்ப் பார்க்கணும். சின்னக்கடைவீதி நோக்கிப்போறோம். இதுக்கிடையில்  நாலைஞ்சு முறை செல்பேசியில்  வழிகள் கேட்டு உறுதி செஞ்சுக்கிட்டோம்.  சித்தி விநாயகர் ஆலயத்தில்  இருந்து ஒரு அஞ்சாறு நிமிசப்பயணத்தில்  அபிஅப்பா வீட்டை அடைஞ்சோம்.  நமக்கு அப்பப்ப செல்லில் வழி சொல்லிக்கிட்டே இருந்த அபி அம்மா  வழியில் எதிர்கொண்டு வந்து வரவேற்றார்கள்.  திருக்கடையூரில் சந்திக்கறதாச் சொன்ன அபி அப்பா  அட்லீஸ்ட்  வீட்டுக்கு வந்துருப்பாருன்னு நினைச்சேன்.  அவர்  சென்னையில்!  வேறொரு வேலை விஷயமாப்போனவர்  இன்னும் திரும்பலையாம். தப்பிச்சார்னு வையுங்க:-)))))

ஆனால்... அபி அம்மாவுக்கு நம்ம வரவைச் சொல்லி பக்காவா எல்லா ஏற்பாடும் செஞ்சுருந்தார்னு சொல்லணும். அபி அம்மா கூடவே நம்ம நட்டுவும்  தன்  இரு சக்கர வாகனத்தில் ஸ்டைலா  வந்து நம்மை வரவேற்றார். அபி அம்மாவைப் பார்த்தவுடன்.... சட் னு எங்கியோ ரொம்ப  நெருக்கமாத் தெரிஞ்ச   உணர்வு.  என்  வாய் மட்டும் நிக்காம  பேசிக்கிட்டே இருந்தாலும்  எங்கே, யார் னு மனசுலே ஒரு ஓட்டம் அலைபாயுது.

கண்கொட்டாமல் பார்த்துக்கிட்டே இருக்கும்போது, ஒரு சின்ன தலை அசைவில் பிடிபட்டது பதில்.  அக்கா! என் பெரியக்கா. ஆமாம்  அப்படியே என் பெரியக்காவேதான்! அப்படியே பொறுமையான பேச்சு.  மூக்கில் ஜொலிக்கும்   அஞ்சு கல் தொங்கட்டான் மூக்குத்தி. மனசே என்னிடம் இல்லை. அக்கா வீட்டுலே உக்கார்ந்திருக்கேன்....  ஒருவேளை அக்காதான்  மறுபிறப்பில் அபி அம்மாவோ!!!!

புது ஆட்களைப் பார்த்த மிரட்சி துளி கூட இல்லாமல் நட்டு வந்து ஒட்டிக்கிட்டு ஆட்டம் பாட்டம் டிவின்னு இன்னொரு பக்கம். அழகான அம்சமான வீடு. அபி அம்மாவின் டிஸைன் & கட்டுமானம். என்ன இருந்தாலும் சிவில் எஞ்சினீயர் இல்லையா!   படிச்ச கர்வம்  இக்கினியூண்டு முகத்தில் காட்டினால் என்னவாம்? ஊஹூம்......

கீழே ஹால்,கிச்சன், பூஜை அறை, ஒரு பாத்ரூம். எனக்கு ரொம்பப்பிடிச்ச வகையில்   மாடிப்படிக்கட்டு  ஹாலின் ஓரமா மேலே போகுது. மாடியில்   ரெண்டு படுக்கை அறைகள். குட்டியா ஒரு பால்கனி. அங்கே சின்னதா ஒரு மண் தொட்டியில் நான் இருக்கேன்னு நினைக்கிறேன். ஒருவேளை அது மல்லியோ? :-)

வீட்டுக்கு எதிரே  காலியா ஒரு பெரிய இடம்.  அநேகமா அக்கம்பக்கத்துப் பசங்க இதை க்ரிக்கெட்  மைதானமா ஆக்கிருவாங்க.  வெட்டவெளியா இருப்பதால் காத்து அப்படியே பிச்சுக்கிட்டுப்போகுது.    வீட்டு முன்கதவையொட்டி  கம்பிகிராதி போட்டு நடுவில்  அகல கேட் வசதியுடன்  ஒரு  இடம். போர்ட்டிகோ .  ஒரு ஓரமா திண்ணை!  முன்வாசக்கதவுக்குமே படிக்கட்டு  நேரா இல்லாம பக்கவாட்டுலே இருக்கு.

புழக்கடையிலும் வீட்டுப்பக்கவாட்டிலும்  கொஞ்சம் வாழைமரங்களுடன் இன்னும் சில மரங்கள்.  திண்ணைப்பகுதியில் மர நிழலும் காற்றுமா ஒரே ஜில்:-)

ஸ்பெஷல் க்ளாஸுக்குப்போன  அபி வந்ததும் இன்னொரு உற்சாக வெள்ளம் பொங்கிப் பெருகியது என்பதே உண்மை.  ஹை அபி!  பேச்சே  எங்கள் மூச்சாகிப் போச்சு.  எத்தனை பதிவர் சந்திப்பு நடந்த ஹால் அது  தெரியுமோ? சாப்பிட உக்கார்ந்தோம்.  தலைவாழை இலையில்   விருந்து!  பரிமாறும் ஸ்டைல்கூட  பெரியக்காவேதான்!  எனக்கு ரொம்பப்பிடிச்ச  புடலைப்பொரியல் சூப்பர்!!!!

எங்களோடு கூடவே சாப்பிடுங்கன்னு நாங்க  வருந்திக்கேட்டுக்கிட்டாலும் கூட  பரிமாறிட்டு அப்புறம் சாப்பிடறேன்னு (பெரியக்கா ஸ்டைலில்)  சொல்லிட்டாங்க.  நட்டு சாப்பாடு இருந்த பக்கமே திரும்பிப் பார்க்கலை.  ஒரே விளையாட்டுதான்.

நம்ம சீனுவாசனுக்கும் சேர்த்தே சமைச்சுருந்தாங்க அபி அம்மா.  இது தெரியாம நாங்க வழக்கம்போல் சீனுவாசனை சாப்பிட அனுப்பி இருந்தோம்.  எங்க சாப்பாடு ஆனதும் தெருக்கதவுப்பக்கம்  மேடையில் ஒரு நாற்காலியைப்போட்டுக்கிட்டு  ஜாலியா காத்துவாங்கிக்கிட்டு இருந்தார்  கோபால். நானும் அபியும் திண்ணையில் உக்கார்ந்து கதை அடிச்சோம்.

நல்ல மெச்சூரிட்டி இருக்கு அபிக்கு. பயங்கர ஸ்மார்ட்.  மேன்மேலும் நல்லாப்படிச்சு  நல்லா இருக்கணும். அம்மாவுக்கு உதவியாகவும் அனுசரணையாவும் இருப்பதைப் பார்த்து எனக்குப் பெருமையா இருந்துச்சு.  தம்பி மேல்  அப்படி ஒரு பாசம்!

அடிக்கும் சிலுசிலு காத்துக்கு அப்படியே தூக்கம் வந்து கண்ணைக்கட்டுது கோபாலுக்கு. ஊஹூம் தாங்காது. நமக்கு இன்னொரு பதிவர் சந்திப்பு(ம்) இந்த ஊரில் இருக்கே!  கிளம்பினால் சரியா இருக்கும்.  அன்று மாயூரத்தில் தங்குவதாக  ஒரு திட்டம். ஆனால்  இடத்தை முடிவு செய்யலை.   ராத்திரி  வீட்டில் பலகாரம் சாப்பிட வந்துருங்கன்னு கண்டிப்பாச் சொன்னாங்க அபி அம்மா.

அதெல்லாம்  ரொம்ப மெனெக்கெடாதீங்க. கோவில்களைப் பார்த்துட்டு நேரம் இருந்தால் அப்புறமா உங்களுக்கு செல்லில் சொல்றேன்னு பிரியாவிடை பெற்றோம். நட்டுவுக்குத்தான்  கண்ணில் மளமளன்னு கங்கை. இங்கேதான்  இருக்கப்போறோமுன்னு  நினைச்சுக்கிட்டு இருந்துருக்குக் குழந்தை.  முதல்முறை பார்ப்பவர்களிடம் இவ்ளோ பாசமா??  நல்ல அழகான குடும்பம். அபி அப்பா ரொம்பவே கொடுத்து வைத்தவர்.

நியூஸி திரும்பியதும் , அபி அப்பாவுக்கு எழுதிய கடிதம் இது:- )
======================================================================
அன்புள்ள அபி அப்பா,

வணக்கம்.

மாயூரத்தில் உங்கள் வீட்டு உபசரிப்பு அபாரம். அபிஅம்மாவைப் பார்த்ததும் எனக்கு என் பெரியக்கா நினைவு வந்துருச்சு. அதே ஜாடை. அதே பொறுமை. நடை உடை எல்லாம்!!!!!!! மூக்குத்தி கூட அதே ஸ்டைல்!!!!!  சமையல் கூட  அக்காவின் கைப்பக்குவம்தான். சட்னு என் சிறுவயதுக்குப் போயிட்டமாதிரி இருந்துச்சு.

அதிலும் அவுங்க ரொம்ப இயல்பா சாப்பாடு பரிமாறிக்கிட்டே பேசிக்கிட்டு இருந்தது  என்னை எங்கியோ கொண்டு போயிருச்சு. இந்த அனுபவத்துக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்????

குழந்தைகள் நல்லா இருக்காங்க.  நட்டு ரொம்ப  காஷுவல். புது முகம் என்ற  மிரட்சி ஒன்னும் இல்லை:-))))

அபி பயங்கர கெட்டிக்காரப்பொண்ணு. நல்ல ஸ்நேகமுள்ள பெண்ணாக வளர்த்தி இருக்கீங்க. எனக்கு என்னமோ எங்க அக்கா வீட்டில் இருப்பதுபோல்தான் இருந்துச்சு அன்னிக்கு. கோபால் காது புளிக்கும்வரை சொல்லிக்கிட்டே இருந்தேன்.

நேரப் பற்றாக்குறையினால் அன்று மாயூரத்தில் தங்க இயலாமல் போச்சு. .

பயணம் முழுசும் அபிஅம்மாவின் நினைப்பு வந்துக்கிட்டே இருந்துச்சு. இந்தப் பயணத்தில் ஒரு முறை விழாவுக்கு முன் ஒரு சின்ன நகைக்கடையில்  (அபிஅம்மா போட்டுருக்கும்) நாலு முத்து மூக்குத்தியை எடுத்துப் பார்த்துட்டு வேணாமுன்னு வச்சுட்டு வந்தவள் பயணம் முடிச்சு சென்னை திரும்புனதும் ஓடிப்போய் அந்த மூக்குத்தியை வாங்கிக்கிட்டேன். அக்காவின் அண்ட்  அபி அம்மாவின் நினைவா இருக்கட்டுமேன்னு!

என் அன்பும் ஆசிகளும் உங்கள் குடும்பத்துக்கு எப்போதும் உண்டுன்னு சொல்லி மடலை முடிக்கிறேன்.

===========================================================

திருமதி பக்கங்கள் கோமதி அரசு அவர்கள் வீட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கோம்.  மாயவரம் ரயில்வே லைனுக்கு  மேல் ' த  ஃபேமஸ் மேம்பாலம்'   கடந்து போறோம். கயல்விழி  முத்துலட்சுமியின் பதிவில் இதைப்பற்றி மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதி இருப்பாங்க.  கோமதி அரசு அவர்கள் செல்லில் சொன்ன வழியை தவறவிட்டு நேராப்போனபோது கண்ணில் பட்டது  சீகாழி ஸ்ரீ சிற்றம்பல  நாடிகள் திருக்கோவில் சித்தர்க்காடு. அச்சச்சோ...காட்டுக்கு வந்துட்டோமேன்னு திரும்ப அவங்களோடு செல்லில் பேசி சரியான வழியைக் கண்டுபிடிச்சுப்போய் சேர்ந்து  வீட்டின் அருகில் வண்டியை நிறுத்தும்போதே  எதிர்கொண்டு வந்து மலர்ந்த முகத்துடன் வாங்க வாங்கன்னு வாய் நிறையக் கூப்பிட்டாங்க.

மாடியில் இருக்கும் வீட்டுக்குப்போனோம்.  யானைப்படையும்  குதிரைப்படையும் புடை சூழ  புள்ளையார் வரவேற்கிறார்!  வீட்டில் ஒரு அறை முழுக்க பொக்கிஷம்!  நாலைஞ்சு அலமாரிகள் நிறைய....  ஆஹா.......

நேரம் மட்டும் இருந்தால்பேசாம அங்கேயே டேரா போட்டுருப்பேன்.  முழுசும் வாசிக்க முடியாதுன்னாலும் ஒவ்வொரு தலைப்பையும் பார்த்து ஆனந்திக்கலாம். நூத்தியொரு வயசான புத்தகம். தொடவே பயமா இருக்கு:(  நொறுங்கிபோச்சுன்னா!!!!!!!!!


குடும்பமே பல தலைமுறைகளாக  தமிழ்ப்பேராசிரியர்களால்  நிறைஞ்சு வழியுது. திரு. திருநாவுக்கரசு அவர்களும் சமீபத்தில் தான்  தமிழ்த்துறைத் தலைவராக  (பூம்புகார் கல்லூரி) இருந்து பணி ஓய்வு பெற்றுள்ளார்! இந்தத் தம்பதிகளைப் பற்றிய சுவாரசியமான கூடுதல்  தகவல்,சிறுமுயற்சி கயல்விழி முத்துலெட்சுமியின் பெற்றோர்!

கயிலை தரிசனம் முடிச்சுவந்த தம்பதியர். இவர்களை வணங்கினாலே  கயிலை போய் வந்த புண்ணியம் கிடைச்சுரும். மானசரோவரில்  இருந்து கொண்டு வந்த  சிறு கற்களைப் பார்த்தேன். கல்பைத்தியமான மகள்  கூட வந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பாள்.

கோமதியின்  'அரசரின்' கைவண்ணம் வீட்டுக்கலைப் பொருட்களில்!  அம்மனின் அழகு கொஞ்சும் முகம் அசரடிக்கிறது!  எல்லாம் இவர்  கைவரிசைதான்!

கண்ணும் மனமும் நிறைஞ்சு இருந்தவளை அப்படியே விட்டுடாமல்   இனிப்பு வகைகளும் நொறுக்கு வகைகளும் கூடவே அருமையான ஃபில்ட்டர் காஃபியும் கொடுத்து  ஒரு விழாவே நடத்திட்டாங்க.  பெரும்பேறு!  மொய் இல்லாத (மணி)விழாவா? கிடைச்சதே!!!!



லௌகீக வகையில்  தேவன் எழுதிய சீனுப்பயல், புதுமைப்பித்தன் சிறு கதைகள் தொகுப்பு! இந்த ரெண்டுமே நான்  வாசிக்காததால்... ரெட்டிப்பு மகிழ்ச்சி!  மெனெக்கெட்டு, பக்காவா லேபிள் எல்லாம் ஒட்டி  சிரத்தை எடுத்தது பார்த்து மனசு அப்படியே நெகிழ்ந்து போச்சு.

ஆன்மீக வரிசையில்  அபிராமி அந்தாதி,  குடும்பப் பெரியவரின் (திருநாவுக்கரசின் தந்தை) நூற்றாண்டு விழா மலர், கோமதி & திருநாவுக்கரசின் மணிவிழா மலர்  என்று மற்றுமொரு அரிய பரிசு. கயிலை பிரசாதங்கள், படங்கள் , கங்கைத்தீர்த்தம் என்று இன்னுமொரு பரிசு.

சுமக்கமுடியாமல் அவர்களின் அன்பையும்,பரிசுகளையும்  மனதிலும் கைகளிலும்  ஏந்தி பிரியாவிடை பெற்று  உள்ளூர்  உயர்மட்ட அதிகாரி  மயூரநாதரை தரிசிக்கக் கிளம்பினோம்.

தொடரும்.........:-)






ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது!!!!

$
0
0

உண்மைதான் போல! உள்ளுர் மக்களுக்கு தங்கள் ஊரைப்பற்றியும்  மாயூரநாதரையும் முக்கியமா அபயாம்பிகையைப் பற்றியும் ரொம்ப  ரொம்ப உசந்த அபிப்பிராயம்!  பெரிய கோவில் என்றால் இந்த ஊர் மக்களுக்கு மாயூரநாதர் கோவில்தான்!  ஊரும் லேசுப்பட்ட ஊர் இல்லை.  காசிக்குச் சமமான ஊராம். காவிரி நதியின் கரையில் இருக்கும்  ஆறு தலங்கள்  காசிக்குச் சமம் என்கிறார்கள்.   திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருவாஞ்சியம், திருசாய்க்காடு வரிசையில்  இந்தத் திருமயிலாடுதுறை.  இதுக்கு மாயூரம். மாயவரம், மயிலாடுதுறைன்னு பல பெயர்கள்.

மாயவரத்தின்  புகழ்பெற்ற  மணிக்கூண்டை க் கடந்து போகும்போதுதான்  அச்சச்சோ  க்ளிக்கலையேன்னு தோணி, க்ளிக் க்ளிக்.  சரியா வரலை.  ஓடும்வண்டியில் இருந்து எடுக்கும் படங்கள்  சொதப்பலாத்தான் ஆகிப்போகுது பலசமயங்களில்:(

இந்தப்பக்கங்களில்  எல்லாக்கோவில்களுக்குமே வயசு ரெண்டாயிரமுன்னு  ஒரே குத்துமதிப்பாச் சொல்றது போலவே இங்கேயும்!  நாம் வேணா ஒன்னு செய்யலாம் உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்..... 1500ன்னு வச்சுக்கலாம்.  சரியான காலம் யாருமே எழுதி வைக்கலை பாருங்க:(  குலோத்துங்க சோழர்காலத்துலே கோவிலை புனரமைப்பு செஞ்சாருன்னு ஒரு சரித்திரக்குறிப்பு  இருக்காம். (அதுவும்  இவர்  ஒன்னாமவரா, ரெண்டாமரா மூணாமவரான்னு தெரியலை:(  தெரிஞ்சவுங்க சொல்லலாம் ப்ளீஸ்) மூணாமவர்ன்னு வச்சுக்கிட்டாலும்  அவர் ஆண்ட  நாற்பது ஆண்டுகாலத்தில் (கி.பி. 1178-1218)  புனரமைப்பு நடந்துருக்கணும்.  ஆனால் கோவில்  இப்பவும் கூட  நல்லா ஸ்ட்ராங்காத்தான் இருக்கு.

கிட்டத்தட்ட ஒரு  முக்காலரைக்கால் ஏக்கர் விஸ்தீரணம். சரியாச் சொன்னால் 85  செண்ட். கிழக்கு பார்த்த ராஜகோபுரத்துக்கு ஒன்பது நிலை !  பிரமிப்போடு பார்த்துக்கிட்டே  நாலேமுக்கால் மணிவாக்கில்  கோவிலுக்குள் நுழைஞ்சோம்.  கோபுர வாசலே கூட அகலம் அதிகமுள்ள கட்டுமானம்.  இந்த ராஜகோபுரத்துக்கு  இந்த வருசம் ஐநூறாவது பொறந்தநாள்!    கட்டிய காலம் கிபி  1513-1515,  கோவில் குறிப்பு சொல்லுது. கருங்கல் பாவிய பாதை நீளமாப்போகுது  கோபுரவாசலின் அடுத்ததிறப்புக்கு வந்தால்  மரங்கள் அடர்ந்த வெளிப்பிரகாரம்.

சட்னு கண்ணில் விழும் குளம். இதுவும் நல்ல சுத்தமாவே இருக்கு.நடுவில்  குட்டியா ஒரு நீராழி மண்டபம். ப்ரம்ம தீர்த்தம். சாக்ஷாத் ப்ரம்மனே உண்டாக்கியது என்று நம்பிக்கை!





அழகான தூண்களுடன் இருக்கும் முன்மண்டபத்து விதானங்களில் கண்ணைப்பறிக்கும் வண்ண ஓவீயங்கள். ஃப்ரேம் போட்டு வச்சமாதிரி இருக்கு!  அதையும் கடந்து நெடும்பாதையில் போறோம். கோவில் உள்பிரகாரத்துக்குள் நுழைஞ்சவுடனே கொஞ்சம் இருட்டா இருந்துச்சு. பவர்கட் கோவிலையும் விட்டு வைக்கலை:(


கண்ணில் பட்ட புள்ளையார் மற்றும்  கடவுளர்களைக் கும்பிட்டபடியே மூலவரையும் தரிசனம் செஞ்சோம். அதென்னவோ  குருக்கள்கூட யாருமில்லை அங்கே. அபி அப்பா ஊரில் இருந்துருந்தால்  நல்ல விளக்கம் சொல்லி இருப்பார்.  கூட்டமும் அதிகமில்லை. அங்கொன்று இங்கிரண்டு என்றுதான்..... ஏகப்பட்ட சிவலிங்கங்கள்!  வழக்கமான சிவன் கோவில்களில் இருக்கும்  சமயக்குரவர் நால்வருடன்  அறுபத்துமூவர்.  நடராஜரும் சிவகாமியும், தக்ஷிணாமூர்த்தியும் ...அப்புறம்..... சரியா நினைவுக்கு வரலை:(

அபயாம்பிகைக்குத் தனிக்கோவிலாகவே அமைஞ்சுருக்கு!  ப்ரகாரத்தின் மதில்சுவரில் உள்ள வாசல் வழியா இங்கே  வந்தோம். சந்நிதி வெளியே கம்பிகேட்.  உள்ளே  கண்ணுக்கு நேரா ரொம்ப தூரத்தில்  இருக்காள்.  கிட்டே போய் தரிசிக்க முடிஞ்சது.  ஹம்மா........நிகுநிகுன்னு கொள்ளை அழகு!   ஆளுயரம். அபய ஹஸ்தம் காண்பிக்கும்  அபயாம்பிகை!

தக்ஷயாகம் நடந்து முடிஞ்சு சிவனின் கோபத்துக்கு ஆளான  தாக்ஷாயணியை  மயிலாகப்பிறந்து என்னை வழிபடுன்னு சிவன் சபிச்சுட்டார்.  மயிலாக இருந்து  தவம் செய்த ஊர் என்கிறார்கள். நம்ம சிங்காரச் சென்னையிலும்  கயிலைக்குச் சமமான மயிலை என்று  கோவில்வாசலில் எழுதி வச்சுருக்கும் மயிலாப்பூரும் இப்படித்தான் அம்பாள் மயிலாக பிறவி எடுத்து ஈசனை  வழிபட்ட தலம் என்று  ஊரின் பெயர்க்காரணம் சொல்லுவதைப்போலவே இங்கும்.

எனக்கு என்ன ஒரு சந்தேகமுன்னா.... தக்ஷனின் யாகத்தில் விழுந்து  உயிரைவிட்ட மனைவியின் உடலை சிவன்  கையில் எடுத்துக்கிட்டு கோபம் கொந்தளிக்க உலகெல்லாம் அலைஞ்சு திரிஞ்சதையும்  அதைக் கண்கொண்டு  காணமுடியாத  விஷ்ணு தன் சுதர்சனத்தால் உடலை துண்டுகளாக்கியதும். அவை தெறித்து (பண்டைய)  பாரதம் முழுசும் சிதறி  விழுந்து  சக்தி பீடங்களானதும் புராணக்கதையாக படித்தும், அந்த இடங்களில் சிலதைப் பார்த்தும் தெளிஞ்சதால்   ஏன் 'தக்ஷயாகம் எபிஸோட்'லே இந்த ஸீன்  இன்னொருக்கா நடந்ததா வருது என்பதுதான்.

குடும்பச்சண்டையில் மனைவி தீக்குளிப்பு விவரம் இங்கே பாருங்க நேரம் இருந்தால்!

ஒருவேளை  பழைய சண்டையெல்லாம்  முடிஞ்சு மறுபடி அம்பாளும் ஈசனுமிணைஞ்சு  கயிலையில்  நிம்மதியா, ஓய்வா இருந்த ஒரு நாளில்....  வேற எதோ ஒரு நிகழ்வைப்  பார்த்து கொசுவத்தி  ஏத்தி இருக்கலாம்.  ஏங்க உங்களை ஒன்னு கேக்கலாமா? இப்படி அன்பா இருக்கும் உங்களுக்கு அப்படி ஒரு கோபம் அன்னைக்கு ஏன்  வந்துச்சுன்னு   பழசைக்கிளற.....  அம்புட்டுதான்.....  சும்மாக்கிடந்த சங்கை  ஊதுன மாதிரி................  பிடி சாபம்.  மயிலாகப் போ! 

மயில் கோலத்தில் தவம் செய்த மனைவிக்கு தரிசனம் தந்து கூடவே கூட்டிப்போக  ஈசனும் மயில் உருவில் வந்தார்.  மனைவியைக் கண்டதும் ஆனந்தமா தோகை விரித்து ஆடியிருப்பார் இல்லையா? அதான் மயில் ஆடும் துறைன்னு   பெயர் வந்திருக்கலாம்.  அப்புறம் ரெண்டு பேரும் தம் சுய உருவில் இங்கே  சுயம்புவாகத் தோன்றிய மாயூர நாதராகவும், அனைத்து உயிர்களுக்கும் அபயம் தந்து காப்பாற்றும் அபயம்பிகையாகவும் இருந்து நமக்கு அருள் புரியறாங்க.

கோயிலில் இருக்கும் முருகன் சந்நிதியை குமரக்கட்டளைன்னு சொல்றாங்க. இது மட்டும் தருமபுரம் ஆதீனத்தின் பொறுப்பிலுள்ளது. பாக்கி  இருக்கும் கோவில் பகுதிகள், சந்நிதிகள் எல்லாம் திருவாவடுதுறை ஆதீனத்தின்  பொறுப்பிலாம்.

வழக்கமான கோவில் திருவிழாக்கள் மட்டுமில்லாமல்  துலாமுழுக்கு ன்னு ஒன்னு இங்கே விசேஷம்.  காவிரியில் முழுகிஎழுந்து வந்து  ஈசனை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் தீரும் என்று ஒரு  ஐதீகம். (வருசாவருசம்  சேரும்  பாவத்தை  வருசத்துக்கு ஒருக்கா  முழுகி தீர்த்துக்கலாமுன்னு நினைக்கப்படாது.  போன பாவம் போச்சு. இனி புதுப்பாவம் செய்யாம இருக்கணுமுன்னு  மனசில் ஒரு தீர்மானம் எடுத்துக்கிட்டு அதன்படி நடக்கணும்,ஆமா!)

துலா முழுக்கு இவ்விதம் புகழ்பெற்றதற்கு   புராணக் கதை ஒன்னு இருக்கு. ஒரு சமயம் கண்வ மகரிஷி கங்கையை நோக்கிப் பயணம் செய்கிறார். வழியில்  மூன்று பெண்கள் தங்கள் அழகெல்லாம் இழந்து உருக்குலைஞ்ச நிலையில் தள்ளாடி நடந்து வர்றாங்க. யாரு என்னன்னு விசாரிக்கிறார். அவுங்க மூவரும் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை,சரஸ்வதி!  இந்த நிலைக்கு என்ன காரணமுன்னு கேக்கறார்.  பூலோக மக்கள் , தங்கள் பாவங்களைப்போக்கிக்க  எங்களிடம் வந்து நீராடறாங்க. அவுங்களை விட்டுப்பிரிந்த பாவச்சுமை எங்கள் மேல் படர்ந்து  எங்களை இப்படி ஆக்கிருச்சு. இதுக்கு பரிகாரம் எதாவது கிடைக்குமான்னு தேடிபோறோமுன்னு அழுதுகிட்டே சொன்னாங்க.

கவலைப்படாதீங்க.  இப்படியே போனா  பாரதத்தின் தென்பகுதியிலே காவேரி என்னும் புண்ணிய நதி ஒன்னு ஓடுது. அது மயிலாடும்துறை என்ற ஊரைக்கடந்து  போகும் இடத்தில் நீங்கள் போய் முழுகினால்   உங்கமேல் உள்ள பாவச்சுமை நீங்கிவிடும்.  சீக்கிரம் போங்கன்னார். துலா மாசம் என்று சொல்லப்படும் ஐப்பசி மாதம் முழுசும் இம்மூவரும் நீராடித் தங்கள் மேல் படிந்திருந்த  பாவங்களைப் போக்கிக்கிட்டு,மாயூரநாதரையும்  அபயாம்பாளையும்  வழிபட்டு, தங்கள் சுய ரூபத்தை அடைஞ்சாங்க. கங்கையினும் புனிதமாம் காவேரின்னு உசத்தியாச் சொல்றாராம் கம்பர்.

இதனால் இந்த ஊரையொட்டி ஓடும்  காவேரியில் துலா ஸ்நானம் செய்ய  பக்தர்கள் ஏராளமா வர்றாங்க. மாசமுழுவதும் முங்க முடியாதவர்கள்,  ஐப்பசி மாச அமாவாசையில் முங்கி எழுந்தால் இதே பலன்.  அமாவாசைக்கு வரமுடியலையா? நோ ஒர்ரீஸ். ஐப்பசி மாசக் கடைசி நாளில் முங்கிருங்க. இதே பலன் கிடைச்சுரும்னு சாஸ்திரங்கள் சொல்லுது. நம்ம மதம் ரொம்பவே ப்ளெக்ஸிபிளா இருக்கு  பாருங்க. கடைசிநாள் முழுகுவதை கடைமுழுக்குன்னு கொண்டாடிடறாங்க.

ஐப்பசி மாசம் முழுக்க ரொம்ப பிஸியாப்போயிருச்சு. என் பாவம் தீரவே தீராதான்னு  அழுது புலம்பாதீங்க யாரும். இருக்கவே இருக்கு கார்த்திகை மாசம்.  ஐப்பசி முடிஞ்சு கார்த்திகை பிறக்கும் நாளுக்கும்  இதே பலன் உண்டு. இதுக்குப்புண்ணியம் கட்டிக்கிட்டவர் நினைவா இதுக்கு முடவன்முழுக்குன்னு பெயர் வச்சுருக்காங்க.

ஐப்பசி மாசம் காவேரியில் மூழ்க ஆசைப்பட்டு ஃபிஸிக்கலி சேலஞ்சுடுஆன ஒருவர்  ரொம்ப தூரத்தில் இருந்து புறப்பட்டு இங்கே வந்துருக்கார்.  அவர் வந்து சேரவும் ஐப்பசி மாசம் கடை(சி) முழுக்கு நடந்து முடிக்கவும் சரியா இருந்துருக்கு!  அடடா.... நமக்குக் கொடுத்து வைக்கலையேன்னு மனம் உருகி இறைவனை வேண்டினார். யாராவது கரைஞ்சால் சிவனுக்குத் தாங்கமுடியாது கேட்டோ!  வருத்தப்படாதே, இன்னிக்குக் கார்த்திகை பிறந்துருக்கு.  அதே பலன் இன்னைக்கும் எக்ஸ்டெண்ட் பண்ணிட்டேன். இப்பவே நீ போய் முங்கி நீராடு ன்னு அசரீரியா அனௌன்ஸ் பண்ணினார்.  அவரும்  நீராடி தன் பாவங்களைப் போக்கிண்டார்!

இன்னும் வேற வெர்ஷன்களும் உண்டு. அதை  இன்னொருசமயம் பார்க்கலாம். மேலே சொன்னதுக்குத்தான் லாஜிக் வொர்கவுட் ஆகுதுன்னு என் தோணல்.

இப்படியாக இத்தனை பெருமைகளை உடைய  ஊரை, ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாதுன்னு  உள்ளூர் ஆட்கள் சொல்லிக்கறதுலே என்ன தப்பு??

சரி, வந்து வண்டியிலேறுங்க. இந்தளூர் போகலாம்.

தொடரும்.......:-)


பரிமளரெங்கநாதர் என்னும் மருவினிய மைந்தனின் வீரசயனம்!

$
0
0

திருஇந்தளூர் போறோம். வழியை விசாரிச்சுக்குங்கன்னு நம்ம ட்ரைவர் சீனிவாசனிடம் சொன்னதும்  அக்கம்பக்கம் இருந்த யாரிடமோ போய் விசாரிச்சவர், அப்படி ஒன்னும் இங்கெ இல்லீங்களாமுன்னார்.  போச்சுரா.....  பரிமள  ரங்கநாதர் கோவில். 108 திவ்யதேசத்துலே  ஒன்னுன்னதும் திரும்பிப்போய் விசாரிச்சவர்  இங்கெ பக்கத்துலேதானாம். வழி  சொல்லிட்டார்னார்.


பதிவர் இனத்துக்குன்னு ஒரு நியமம் உண்டு.எந்தெந்த  ஊருக்குப்போறோமோ அதுக்குச் சம்பந்தமுள்ள  பதிவர்களை நினைச்சுக்கணும்.  இந்த சம்ப்ரதாயத்தின்படி சீமாச்சுவை நினைச்சுக்கிட்டேன்.  இந்தளூர்காரர்.என் நெஞ்சில்பூத்தவை என்று ஒரு வலைப்பதிவு வச்சுருக்கார்.  சுருக்கத்தில் சொன்னால் குறிஞ்சி மலர்.  வருசத்துக்கு  ஒன்னு இல்லே ரெண்டுன்னு எழுதுவார்!  தான் படிச்ச இந்தவூர் பள்ளிக்கூடத்துக்கு  மாய்ஞ்சு மாய்ஞ்சு உதவிகள் செஞ்சுக்கிட்டே இருப்பார்.  அதையெல்லாம் வாசிக்கும்போதே .... நம்ம பள்ளிக்கூடத்துக்கு  நாம் ஒன்னும் செய்யலையேன்னு  இருக்கும்:( நாடோடி  வாழ்க்கையில் வருசாவருசம் புதுப்பள்ளிக்கூடமுன்னா எதுக்குன்னு செய்றது சொல்லுங்க?  அந்தவரை  பள்ளிக்கூடப் பெயர்களைக் கெடுக்காமல் இருக்கேனே..... அது போதும்!

திருவிழந்தூர் என்று இப்போதையப் பெயராம். கடைகளில் பெயர்ப்பலகை இப்படித்தான் சொல்லுது.  அப்ப... திரு இந்தளூர்?  இது புராணப்பெயராம்.  இந்து (சந்திரன்) வந்து பூஜித்த தலம்.  சந்திரனுக்கு தக்ஷன் சாபம் கொடுத்துட்டார்.  ஏராளமா (27)  மனைவிகளைக் கட்டிக்கிட்டு  அவர்களில் பாரபட்சம் காட்டுனதுக்கு தண்டனை.  முழுக்கதை வேணுமுன்னா இங்கே பாருங்க.

நம்ம  துணைக் கடவுளர்கள் அனைவரும் ,  சைவ வைணவப்பிரிவுகள்  வந்ததால்   எதுக்கு வம்புன்னு  ரெண்டு பேருக்கும் பொதுவில் இருக்காங்க. எடுத்துக்காட்டா.... சந்திரனுக்கு  ஒரு சாபவிமோசனம் வேணுமுன்னா  சைவத்துக்கு ஒரு தலம்,  வைணவத்துக்கு ஒரு தலம்னு  போய் நிவர்த்தி தேடிக்குவார். இந்தக் கதையில் சைவப்பிரிவுக்கு சோம்நாத்.  வைணவத்துக்கு  இந்தளூர்.

சந்நிதித்தெருவுக்குள் நுழையறோம்.   வழக்கமா எல்லாப் பெருமாள் கோவில்களிலும் இருப்பதைப்போலவே  முதல்லே நாலு கால் மண்டபம்.  அதுக்கு ஒரு அம்பதடி தள்ளி கோபுரவாசல்.

அழகான அஞ்சடுக்கு ராஜகோபுரம்.  அழகை  முழுமையா  கண்ணுக்குள் போகவிடாமல்  கோபுர வாசலுக்கு ஒரு தகரகூரை. ஐ ஸோர்:(

  கோபுரம் முழுசும்,  கதை சொல்லும் சுதைச்சிற்பங்கள். வெண்ணெய் திருடும் கண்ணனும், அவன் களித்தோழர்களும்கூட இருக்காங்க.  ஒரு அடுக்கில்  இடது புறம்   கருடவாகனத்தில் பெருமாளும்  வலதுபுறம் பள்ளிகொண்ட பரந்தாமனும்.  கொள்ளை அழகு!

திரு பரிமளரெங்கநாதர் சுவாமி திருக்கோயில் . உள்ளே நுழைகிறோம்.  தங்கக்கொடி மரத்தினருகில்  கோயில் பூனை!  நமக்கு சகுனம்  டபுள் ஓக்கே:-)))

இந்தக்கோவிலுக்கும் (வழக்கம்போலவே)  வயசு ரெண்டாயிரமுன்னு  சொல்லிட்டாங்க.  ஒரு காலத்துலே இந்த இடத்தைச்சுற்றி நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த  காடு இருந்ததாம். அதனால் பெருமாளுக்கு சுகந்தவனநாதர்ன்னும் ஒரு பெயர்  இருந்துருக்கு.  அந்த சுகந்தம்தான் பரிமளம் என்று எனக்கும் புரிஞ்சுருச்சு பாருங்க.

இந்தப்பெயர்க்காரணத்தின்  இன்னொரு வெர்ஷன் என்னன்னா.... ப்ரம்மனிடம் இருந்து  அசுரர்கள் வேதங்களைத் திருடிப்போய் கடலில் ஒளிச்சு வச்சுடறாங்க.   பதறிப்போன பிரம்மன் பெருமாளைச் சரணடைய,  அவர்  மத்ஸ்யாவதாரம்  எடுத்துப்போய்  அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டு வந்து அவைகளை மீண்டும் பரிமளிக்கச் செய்தார் என்பதே!
இவருக்கு இன்னுமொரு அழகிய தமிழ்ப்பெயரும் இருக்கு! மருவினிய மைந்தன் !


108 வைணவ திவ்யதேசங்களில்  பஞ்ச ரங்கதலங்கள்னு  ஒரு அஞ்சு கோவில்களுக்கு சிறப்பு இருக்கு. அதுலே இதுவும் ஒன்னு. பரிமள ரங்கம்  . மற்ற நான்கும்.... ஆதிரங்கம்   என்னும் ஸ்ரீரங்கப்பட்டினம்,  மத்ய ரங்கம் என்னும் ஸ்ரீரங்கம் , அப்பக்குடத்தான் இருக்கும் அப்பாலரங்கம் என்னும் கோவிலடி,  சதுர்த்தரங்கம் என்னும்  சாரங்கபாணி கோவில், கும்பகோணம் .

கோவில்  கருவறை விமானம் வேதச்சக்ர விமானம்.  கோவில்  குளம் சந்த்ரப் புஷ்கரணி.

திவ்யதேசம் வரிசைக்கிரமத்தில் இதுக்கு 22 வது இடம். பொதுவா நாம் கோவில்களுக்குப்போகும்போது  சீனுவாசனை ( நம்ம  ட்ரைவர்)  நீங்களும் உள்ளே வந்து சேவிச்சுக்குங்கன்னு கூப்பிடுவேன்.  எதுக்கு அநாவசியமா காரில் காத்திருக்கச் சொல்லணும்?  இந்த ட்ராவல்ஸ் வாகன ஓட்டிகள்  எல்லா ஊர்களுக்கும் போறாங்களே தவிர கோவில்களுக்குள் போவது ரொம்பக்குறைவுன்னு  ஒரு முறை இவரே சொல்லி இருக்கார். இது 108 லே ஒன்னு, அதுவும் 22 வது இடமுன்னதும்  இவருக்கும் சுவாரசியம் தொத்திக்கிச்சு. ஒவ்வொரு கோவிலுக்கும் போகும்போது  எத்தனாவது இடமுன்னு  நம்மகிட்டே கேட்டுப்பார்.

மூலவர் பாம்புப் படுக்கையில்   கிழக்கு நோக்கி, வீரசயனத் திருக்கோலத்தில் இருக்கார். பத்துவித சயனப்போஸில் இந்த சயனம் இங்கே மட்டும்தானோ என்னவோ?  காலடியில் சந்திரனும், தலைமாட்டில் சூரியனும் நின்று  வணங்குகிறார்கள். இதுவே ஒரு தனிச்சிறப்புதான். போதாக்குறைக்கு  இடப்புறம் வலப்புறங்களில் காவேரியும் கங்கையும்!    ஆனால் இன்னுமொரு சிறப்பா ஏகாதசி விரதத்தின் மகிமையைச் சொல்லும்  தலமாகவும் இருக்கு.

 அம்பரீக்ஷன் என்னும்  அரசர் ஏகாதசி விரதங்களை ஒழுங்காகக் கடைப்பிடித்து வர்றார். அவருடைய  நியமங்களைப்பார்த்து தேவர்களுக்கும் பயம், எல்லாம் நல்லபடியாச் செஞ்சு எங்கே இந்த மனுஷ்யர்  தேவர்கள் வரிசையில் சேர்ந்துருவாரோன்னு.... இந்த சமயம் அவர் விரதமிருக்கும் நூறாவது ஏகாதசித் திதியும் வருது.  பயந்து போன தேவர்கள் துர்வாசமுனிவரிடம் போய்  விரதபங்கம் செய்யும்படி வேண்டிக்கிறாங்க. அவரும் இதுக்கு சம்மதிச்சு அம்பரீக்ஷனின் அரண்மனைக்குப் போறார்.

முதல்நாள் முழுப்பட்டினியா ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசி திதி முடியுமுன்   உணவு உண்டு  விரதம் முடிக்கணும் என்பதே நியதி. அரசர் உணவு உண்ண தயாராகும் சமயம்  துர்வாசமுனிவர் அங்கே போய்ச் சேர்ந்தார். முனிவரை வரவேற்று உபசரித்த அரசர் கூடவே சாப்பிடணுமுன்னு அழைக்கிறார். சரி, நான் போய் குளிச்சுட்டு வரேன்னு   நதிக்குப்போனவர் சட்னு திரும்பாம  நேரங்கடத்திக்கிட்டே இருக்கார்.

இங்கேயோ மன்னருக்கு துவாதசி திதி எங்கே முடிஞ்சுருமோன்னு கவலையா இருக்கு.  அதன்பிறகு சாப்பிட்டால் விரத பலன் கிடைக்காதேன்னு  வருந்துகிறார்.  அப்ப அவரது ஆலோசகர்களான  மந்திரிகள்  சாப்பாடு சாப்பிட லேட்டானால் பரவாயில்லை.நீங்க  பெருமாள் தீர்த்தம்   உள்ளங்கையால் மூணு  முறை  குடிச்சுட்டால் விரதபலன் கிடைச்சுரும்.  முனிவர் வந்தபின் அவரோடு சேர்ந்தே உணவருந்தலாமுன்னு சொன்னாங்க.  நல்ல ஐடியா. விரதபங்கமில்லைன்னு அப்படியே செஞ்சுட்டார். துவாதசி திதியும் முடிஞ்சுருது.

ஞான திருஷ்டியால்  இதைத் தெரிஞ்சுக்கிட்ட முனிவர், ஆஹா....என்னை சாப்பிடக் கூப்புட்டுட்டு  எப்படி மரியாதை இல்லாமல் நீ  விரதம் முடிக்கப்போச்சுன்னு  கோபத்தோடு சாபமிட  வேகவேகமா அரண்மனைக்கு வந்து சேர்ந்து, பிடி சாபமுன்னு  பனிஷ்மெண்டைச் சொல்றதுக்குள் அரசர்  பரிமளரங்கனை  சரணடைஞ்சு காப்பாத்தணுமுன்னு வேண்டிக்கறார்.  பெருமாளும் முனிவரின் கர்வத்தையும் கோபத்தையும் அடக்கி, அரசருக்கு அருள் புரிந்து, 'பக்தா என்ன வேண்டுமோ கேள் ' என்று சொல்ல.... அம்பரீக்ஷனும்  தனக்காக ஒன்னுமே கேக்காமல், இங்கேயே இருந்து  மக்கள் அனைவருக்கும்  அருள்புரிய வேணுமுன்னு கேட்க, அப்படியே ஆச்சு.

பெருமாளைச் சேவிச்சுட்டு அப்படியே தாயார் பரிமள ரெங்கநாயகியையும்,  ஆண்டாளம்மாவையும்  வணங்கிட்டு கோவிலை வலம் வந்தோம். மண்டபத்தூண்களில் அற்புதமான சிற்பங்கள் . தசாவதாரம், ஆலிலைக்கண்ணன்  இப்படி  வகைவகையாய்! படம் எடுக்க  அனுமதி வாங்கலாமுன்னா அங்கே ஆபீஸ்ன்னு ஒன்னையும் காணோம்.   கோபுரவாசல் பக்கத்துலே அர்ச்சனை சீட்டுடன் உக்கார்ந்திருந்த நபர்  வெறும் சீட்டு விற்கும் ஆள் என்பது  பார்த்தவுடன் சட்னு புரிஞ்சது.  அவரிடம் போய்க் கேட்டால் நரிக்கு நாட்டாமை கொடுத்தமாதிரி ஆகிருமோன்னு  கேக்கலை. அதனால் உள்ளே படமும் எடுக்கலை. அதுக்காக சும்மா விட்டுற முடியுதா?

வலையில் தேடுனப்ப ஸ்ரீ (எந்தமிழ்) ன்னு ஒருத்தர் வளைஞ்சு வளைஞ்சு படம் எடுத்து வலையேத்தி இருக்கார். அவருடைய பதிவின் சுட்டி இது. விருப்பம் உள்ளவர்கள் அங்கே போய் பார்த்துக்கலாம் நோ ஒர்ரீஸ். அவருக்கு நம் நன்றிகள்.


தரிசனம்முடிஞ்ச கையோடு  மாயவரத்தில்  இரவு தங்கலாமா வேணாமான்னு ஒரு யோசனை.  இடம் ஒன்னும்  அதுவரை பார்த்து வைக்கலை.  மடிக்கணினியில் தேடுனதில்  ஒரு நாப்பது கிமீ தூரத்தில் காரைக்கால் என்றதும்  இருட்டுக்குமுன் போகமுடியுமான்னு சீனிவாசனைக்கேட்டால், நல்ல ரோடுதான்  ஒரு மணி நேரத்துலே போயிறலாமுன்னார்.   சரின்னு கிளம்பிட்டோம்.   கொஞ்ச தூரத்தில் தெருமுனையிலே  ஒரு  கோவில் கண்ணில்பட்டது. மேல் மாடியில்  கண்ணாடித்திரைக்குபின் கடவுளர்களின் சிலைகள்.  ராமலக்ஷ்மணர்கள் மாதிரி தெரிஞ்சது.
கண்ணால் கும்பிட்டு விடை பெற்றேன்.


ச்சலோ காரைக்கால்!

தொடரும்.........:-)






காணி நிலத்திடையே ஒரு மாளிகை....

$
0
0
ஊருக்குள்ளே நுழைஞ்சப்ப மணி ஆறேமுக்கால்.  இந்தளூர் விட்டுக் கிளம்பி  வரும்போதே  வழியில்  சிலபல கோவில்கோபுரங்கள் கண்ணில் பட்டுச்சுன்னாலும்  இருட்டுமுன் காரைக்கால் போய்ச்சேரணுமேன்னு  வேறெங்கேயும் இறங்கலை.  இதுக்குள்ளே  காரைக்காலில் தங்க இடம் வேணுமேன்னு வலையில் தேடுன கோபால்  ஒரு  ரிஸார்ட் இருக்குன்னார்.  ஓக்கேன்னு  அதுக்கு செல் பேசுனப்ப  அறை இருக்கு. நீங்க ஊருக்குள்ளே வந்ததும் ஃபோன் செய்யுங்க. சரியான வழி சொல்றோமுன்னாங்க.  அதே போல் செஞ்சு  வழி கேட்டுக்கிட்டாலும் புது இடமா இருப்பதால்  கொஞ்சம் முழிக்கத்தான் செய்தோம். பாரதியார் சாலையில் போய்க்கிட்டு இருக்கும்போது  அங்கிருந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம்  விசாரிச்சால் ( குட் ஈவ்னிங் ஆப்பீஸர்,. ஹாலிடேஸ் ரிஸார்ட் க்கு எந்தப்பக்கம் போகணும்?)அவர் விவரிச்சுக்கிட்டு இருக்கும்போதே அங்கே இருந்து கிளம்பும் ஒரு ஜோடி, அந்தப்பக்கமாத்தான் நாங்க போறோம். எங்களை ஃபாலோ பண்ணுங்கன்னு சொன்னாங்க.

காரைக்கால் பஸ் ஸ்டாண்டுலே இருந்து  ரெண்டு கிலோ மீட்டர் தூரம். கடற்கரையை ஒட்டிய இடம். அக்கரைவட்டம் மெயின் ரோடு.  முன்னே போன ஜோடி நம்மை வாசல் கேட் வரைக்கும் கொண்டு விட்டுட்டுப்போனாங்க. உள்ளே  ரிஸப்ஷன் கந்தரகோளமா இருக்கு.  பெயிண்டிங் வேலை நடக்குதாம். ஃபார்மாலிட்டி முடிச்சதும்   அறைக்குக்கூட்டிப்போனாங்க.  கீழ்தளம். ஊஹூம்..... சரிப்படாது.   அடுத்த கட்டிடத்து மாடியில் ஒரு அறை. இதுவும் எனக்கு ஊஹூம்.....  சுவர் கலர் சரி இல்லை!  அதே மாடியில்  அடுத்த பக்கத்து அறை ஓக்கே ஆச்சு.  லாவண்டர் (Lilac)நிறம்.

வெளியே நிறைய மரஞ்செடிகள். அதனால் கொசு இருக்குமோன்னு பயந்துக்கிட்டு  சுத்திப்பார்க்க வெளியில் வரலை.  ரூம் சர்வீஸ்லே ராச்சாப்பாட்டை முடிச்சுக்கிட்டோம்.   குளியலறை  ஜன்னலில் பார்த்தால் தூரத்தில் கடல் இருக்கும்போல!  லேசான அலை ஓசை!

காலையில் எழுந்து கடமைகளை முடிச்சோம். இப்பெல்லாம்  இமெயில் பார்ப்பதும் அத்யாவசியமான கடமைகளில் ஒன்னு ! டிவியில்  திருமால் பெருமை பாடல்கள் ஓடிக்கிட்டு இருக்கு.  டிவி இல்லாம கோபாலால் இருக்கவே முடியாது:(



 இன்னைக்குத்தான்  ஆங்கிலத்தேதியின் படி கோபாலுக்கும் நம்ம துளசிதளத்துக்கும் பொறந்தநாள்!  வாழ்த்துகளை பரிமாறிக்கிட்டோம். வெளியே வெராந்தாவுக்கு வந்து நின்னால்....  சுத்திவர சூப்பரான பழ மரங்கள்.  அட! மாங்கான்னு நினைச்சுக்கிட்டே  உத்துப்பார்த்தேன்.  இலைகள் வேறமாதிரி இருக்கேன்னு ... இது இலவம்பஞ்சு  மரம்!  முந்தியெல்லாம்  ஸ்பிண்டில் ()போல நீளக்காய்கள் இருக்கும். இப்ப என்னன்னா  மாங்காய் போலக் கொத்துக்கொத்தாய் காய்ச்சுக்கிடக்கு.  பஞ்சில் வேற வகை!

இந்த ஃபார்ம்ஸ் & ரிஸார்ட்லே மொத்தம் 14 அறைகள் . இதுலே பத்து அறைகள் டீலக்ஸ் ரூம்ஸ்.  மூணு ஃபேமிலி  ரூம்ஸ், ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு  ஒரு ஸ்யூட். தனித்தனியா கட்டிடங்கள். ஒவ்வொரு கட்டிடத்திலும்  மாடியில் ரெண்டு கீழே ரெண்டுன்னு நாலு அறைகள். சுத்திவர அகலமான வெராண்டா, பால்கனி.  நிறைய பூச்செடிகளுக்கிடையில் நடைபாதை, நீச்சல் குளம் இப்படி நல்லாத்தான் இருக்கு.  ஏராளமான தெங்குகள்.



வார இறுதிகளில்  அறைகள் எல்லாம் நிறைஞ்சு போயிருமாம். நாம் ஞாயிறு  மாலை வந்ததால் இடம்  கிடைச்சதாம்.  நடைபாதை வழியா  விடுவிடுன்னு மார்னிங் வாக்  போய்க்கிட்டிருந்தார் ஒருத்தர்.  நம் வீட்டு வாசல் வழியா  ஏழெட்டு ரவுண்டு  வரை  கண்ணில் பட்டார்.  நாங்களும் கீழேவந்து சுத்திப்பார்த்துக்கிட்டே  ரெஸ்ட்டாரண்ட் /டைனிங் ஹால் போனோம்.  அறை வாடகையில்  'ப்ரேக்ஃபாஸ்ட்'ம்  சேர்த்தி.

மற்ற ஹொட்டேல்ஸ் போல இல்லாமல் இங்கே வாகன ஓட்டிகளுக்கும் படுத்துறங்க ஒரு தனி இடம் இருக்கு. வட இந்தியாவில்நாம் பயணம் போனப்ப  எல்லா விடுதிகளிலும்  ஓட்டுனர்களுக்கு உறங்க அறையும்  குளியலறை வசதிகளும் உண்டு.  இது ரொம்ப நல்ல விஷயம்.  ட்ரைவர்கள் தூங்கி ஃப்ரெஷானால் மறுநாள் பயணம்  நல்லதாவே அமைஞ்சுரும். இங்கே தென்னிந்தியாவில்   இந்த வசதிகள் அவ்வளவா இல்லை.  அப்படி இருக்குமிடத்திலும்  நம்ம சீனிவாசன்,  ' வண்டிக்குள்ளேயே படுத்துக்குவேன் மேடம். இதுதான் பழகிப்போச்சு' ன்னுடுவார்.


எட்டரை மணி போல அறையைக் காலி செஞ்சுக்கிட்டு  கிளம்பி ஊருக்குள் போனோம்.  புராதச்சின்னங்களை அப்படியே விட்டு வைக்கணும் என்பதைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு இருக்கு  உள்ளுர் நகர சபையும், யூனியன் கவர்மெண்ட்டும்:(  வீடுகளுக்கு முன் ஓடும்(!) திறந்த சாக்கடை. யக்:(
சாக்கடையைக் கடந்து வீட்டுக்குப்போக வீடுகளுக்கு முன்னால் மட்டும் கற்பலகை.  குறைஞ்சபட்சம்  இதையே  வரிசையா வச்சு  தெருவோரத்தை மூடி வைக்கலாம்.  திருட்டுபயம்(?) இருக்குன்னா  இப்பதான்  மூணு மீட்டர் நாலு மீட்டர்ன்னு நல்ல நீளமான காங்க்ரீட்  ஸ்லாப்கள் வருதபதையாவது வச்சு மூடலாம்.  கொஞ்சம் கவனிக்கப்டாதோ?  மற்றபடி வாச்ல்பக்கம் சின்னத் திண்ணைகளும் தூண்களும் அமைஞ்ச ஓட்டு வீடுகள் நல்லாத்தான் இருக்கு.  அந்தத் திண்ணையில் உக்கார்ந்து (சுத்தமான) காத்து வாங்க முடியுமா ன்னு இன்னொரு கேள்வி!

நேத்து ஊருக்குள்ளே வந்த அதே பாரதியார் சாலை.  இந்தத்தெருவில் பரவாயில்லை. அங்கங்கே சாக்கடை மூடிபோல ஒன்னு இருக்கு. மெயின் ரோடு என்பதால்  கொஞ்சம் கவனிப்பு இருக்குமோ என்னவோ?

இதே சாலையில் கொஞ்ச தூரத்தில் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவில்!  பெரிய  முன்வாசல்கதவுகள்.  தெருவில் இருந்து பார்த்தாலே  தெரியும் கொடிமரம். கடந்தால் குட்டிவிமானத்தோடு பெரியதிருவடி  பெருமாளைப்பார்த்தபடி.  கோவில் முகப்பின் மேல் அரவணையில் துயிலும் அரங்கன் காட்சி தர்றார்.


சுவையான கோவில் நிகழ்வின் கல்வெட்டு!  போனவருசம்( நம்ம பயணம் 2012 செப்டம்பர்) ஆகஸ்ட் 4 2011 கருடபஞ்சமி. அன்றைக்கு அக்கம்பக்கத்து ஊர்க்கோவில்களில் ஏழில் இருந்து (திவ்ய தேசங்கள்) எம்பெருமான்கள் கருடவாகனத்தில் ஒன்னாய்ச்சேர்ந்து  இங்கே எழுந்தருளி இருக்காங்க. திருமஞ்சனமும் தீபாராதனையுமா அமர்க்களப்பட்டுருக்கு!  ஸப்த கருட சேவைத் திருவிழா!!!!   ஹைய்யோ!!!!  எழு பேரா!!!  இதுவரை நான் கேட்டதும் இல்லை பார்த்ததுமில்லை:(

தெப்பத்திருவிழா வேற 37 வருசமா நின்னு போயிருந்துச்சாம்.அதுவும் அந்த வருசம் (2011)மாசி மாதம்  மீண்டும் தொடங்கியிருக்கு!  ரொம்ப மகிழ்ச்சி!

பிரமாண்டமான அளவில் கோவில் இல்லை என்றாலும்  அழகா அம்சமான கோவில்தான் இது.  மூலவர் ரங்கநாதரை சேவிச்சுக்கிட்டோம். நல்ல தூக்கம்! கிடந்தாரே கிடந்தார்.  நமக்கோ....ஏகாந்த சேவை!  கோவிலில் இருந்த  நபர்கள் எல்லாம்  பக்கத்து சந்நிதியின் முன்னே கூடி  இருந்தனர். ஸ்ரீ ரங்கநாயகித் தாயார்.  முன் மண்டபத்தில்  திரைக்குப்பின் உற்சவர்களுக்கு  அலங்காரங்கள்  நடக்குது. நேற்றுமுதல் நாலு நாளைக்கு  திருப்பவித்ரோத்ஸவம்

ஒரே பிரகாரம்தான் கோவிலை வலம் வந்தோம்.   கருவறை சுவர்களின் வெளிப்புறம் எல்லாம்  புடைப்புச் சிற்பங்கள் , அவை சொல்லும் சேதிகள்!  சூப்பர்.  பிரம்மன்  உலகில்  படைத்த முதல் பெண்ணும் ஆணும் கூட!

கருவறையின் மேல் குட்டி விமானம்.  ஏதோ விழா நடந்து முடிஞ்சுருக்கு.  மக்களை வரிசை கட்டி அனுப்பக் கட்டிவைத்த மூங்கில்கள்   இன்னும் அங்கங்கே!

சக்கரத்தாழ்வார் சந்நிதி  சேவித்து மறுபக்கம் திரும்பினால் நம்ம ஆண்டாளம்மா.  கருவறைச் சுவர்களில்  பளிங்கில் செதுக்கிய  திருப்பாவைகள் முப்பதும். எனக்கு ரொம்பப் பிடிச்சுருந்தது.  அல்லிக்கேணியில் கல்லில்  செதுக்கியது  உள்பிரகாரத்தில் ஆண்டாள் சந்நிதிப்பக்கம்   மேற்கூரையுள்ள மண்டபச் சுவரில். சிங்கை ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில்  கருவறைச் சுற்றும்போதே  மூணு பக்கமும்  பாட்டு ஸீன்களுடன் புடைப்புச் சிற்பங்களோடு  வெள்ளைப்பளிங்கில் கருப்பெழுத்துக்களாய் இருந்ததை  சமீபகாலமாக் காணோம். வெறும் சிற்பங்கள் மட்டுமே இருக்கு. புண்ணியவான்கள் எவரோட ஆலோசனையோ எழுத்து மிஸ்ஸிங்:(

தசாவதார வரிசையில்  புத்தரும் இருக்கார். அப்ப ஏகாதசாவதாரமோ ?  குருவாயூரப்பன், பாண்டு ரங்கன், , திருப்பதி வெங்கடாசலபதி,  பூரி ஜகந்நாதன் இப்படி யாரையும் விட்டு வைக்கலை.  ஸ்ரீ வைகுண்டத்தில் பரமபத நாதர் நித்யசூரிகளுடன் காட்சி தருகிறார்.



சின்னதா ஆஃபீஸ் போல இருந்த இடத்தில் நின்னுருந்தவரிடம் படம் எடுக்கலாமான்னு அனுமதி கேட்டதுக்கு அவர் இன்னொரு பெரியவரைக் கை காமிச்சார்.   அவர் திரு ரங்கநாதன். தலைமை பட்டர்.  மூலவரை விட்டுட்டு  படம் எடுத்துக்க அனுமதித்தார்.

கோவிலுக்கு இடப்பக்கம்  புஷ்கரணி. சந்திர தீர்த்தம்.   நல்ல அழகான பெரிய, சுத்தமான குளம். சுத்திவர  கல்பாவிய தரையும்  ஒழுங்கான படிக்கட்டுகளுமா  அருமை. நடுவிலே ஒரு நீராழி மண்டபம். நடைப்பயிற்சி செய்ய வர்றவங்களுக்கு  நடந்த தூரம் தெரியும் வகையில்  ஒரு தகவல் பலகை. மூணுதரம் சுத்துனா ஒரு கிலோ மீட்டர்!

 மூணுமுறை கண்ணால் சுத்திட்டு குளத்தைத் தாண்டி அடுத்தபக்கம் போனால்  இன்னொரு கோவில் இருக்கு.  என்னன்னு பார்க்கலாமேன்னு  கம்பிக்கதவைத் திறந்து போனோம். ஆஹா....என்ன ஒரு இன்ப அதிர்ச்சி!  காரைக்கால் அம்மையாரின் சந்நிதி!!!!   இந்தப்பக்கம்  இன்னொரு சந்நிதியில் புள்ளையார்  இருக்கார்.

காரைக்கால் அம்மையார் புனிதவதியின் சரிதம் சொல்லும் ஓவியங்கள்.  சொன்ன கதையைப் படம் பார்த்துப் புரிஞ்சுக்கிட்டார் கோபால். மாங்கனித் திருவிழாவின் முக்கியத்துவம் சொன்னேன்.  மாங்கனித் திருவிழான்னதும்  அவர் பாட்டுக்கு  ஹரியானாவின் மேங்கோ ஃபெஸ்டிவலை நினைச்சுக்கப்போறாரேன்னு .... எனக்குக் கவலை.


(நேத்து மாலை  காரைக்கால் வந்துட்டியான்னு கேட்ட கோபாலுக்கு  வந்துட்டேன்னு சொல்லி, காரைக்கால் அம்மையார் யாருன்னு கேட்டால்.... பனிரெண்டு அவதாரங்களில் ஒன்னுன்னார். ஆமாம். உங்களையும் சேர்த்துன்னேன். வாத்தியார் வூட்டு ஆளுங்க மக்குன்னு சும்மாவா சொல்லி இருப்பாங்க:-)))))))))

நம்பதிவர்களில் யாருக்காவது காரைக்கால் அம்மையாரைப்பற்றித் தெரியலைன்னா இங்கேபாருங்க. பதிவின் நீளம் கருதி நம்ம நடையில்  இங்கே இந்த முறை கதை சொல்லலை:(  அடிச்சுச்சொல்லணுமுன்னு  நாக்கு துடிக்குது. அப்புறம் ஒரு 'தனி'  வாசிக்கலாம்)

 நன்றி விக்கியண்ணன்.


சந்நிதிகள் ரெண்டும்  ஒரு மூலையில் இருக்க , இந்த இடம் ஒரு பெரிய  ஹால் போல பரந்து கிடக்கு.  ஒரு பக்கம்  மேடை.  ,  ஆஹா....   ஆன்மிகச் சொற்பொழிவு, திருமணம் போன்ற  நிகழ்ச்சி, விசேஷங்களுக்கான அரங்கம்.  என்ன ஒரு ஐடியா !!!  இப்படி இந்த ரெண்டு இடத்துக்கும் நடுவில்  குளம் அமைச்சது!  குளத்து நேரடியா வர  ஒரு பெரிய  கம்பி கேட் தெருவைப் பார்த்தபடி.  சாமி கும்பிட வேணாமுன்னா  நடக்கவாவது வந்து போன்னு சொல்றமாதிரி இல்லே?



சாலையின் எதிர் சாரியில்  இன்னுமொரு கோவில். அஞ்சு நிலை கோபுரத்துடன்  ஸ்ரீ கயிலாசநாத சுவாமி திருக்கோவில். சாலையைக் கடந்து போகலாமான்னு  நினைக்கும்போதே  மேள வாத்தியம்  கேட்டுச்சு. ஆஹா... அலங்காரம் முடிஞ்சுருச்சு போல ! அங்கே ஓடினேன்.  பெருமாள் தாயார்களுடன் ஜொலிக்கிறார்.  கோஷ்டி சொல்லி தீபாரதனை முடிஞ்சதும்  ஆரத்தியை கண்ணில் ஒத்திக்கிட்டுக் கிளம்பினோம்.



தலைமைப் பட்டர் திரு ரங்கநாதன் அவர்களிடம் கோவிலைப்பற்றி எழுதப்போறேன். உங்கள் படம் போடலாமான்னு அனுமதி கேட்டதுக்கு, தாராளமாப் போடுங்க. நீங்க சொல்லாமலே போட்டாலும் எனெக்கென்ன தெரியவா போகுதுன்னு சொல்லிச் சிரிச்சார்.  ரெங்கனின்   முத்தங்கி படம் ஒன்றையும் கொடுத்து வாழ்த்தினார்.

 அழகா  ..  தோ..... வந்துக்கிட்டே இருக்கேன்.   பரிமளன்  செஞ்சதுபோல  கதவைச் சாத்திராதே......

ஆமாம்...பெரிய திருமங்கைன்னு நினைப்பு!

தொடரும்.........:-)


அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்து(க்)கள்.


அச்சச்சோ! சௌந்தர்ய ராஜன் இப்படி தன் அழகால் மயக்கிட்டானே.........

$
0
0
இடத்தைக் கடந்தபிறகுதான்  சட்னு தோணுச்சு...அடடா.... கோட்டை விட்டுட்டோமேன்னு. பேசாம  ஒரு ரவுண்டு போய் கிட்டே நின்னாவது பார்த்திருக்கலாம். கெமெராவில்  ரிவ்யூ செஞ்சு மினாராவைப் பார்த்து சேவிச்சுக்கிட்டேன்.   முதலிலேயே சீனிவாசனுக்கு குறிப்பு கொடுத்துருந்தா நிறுத்தி இருப்பார்! அவரும் காலையில் இருந்தே திருநள்ளார் போகலையான்னு கேட்டுக்கிட்டே இருந்தார். நாந்தான்  முந்தியே போய் வந்தாச்சுன்னேன். திரும்பத்திரும்பப்போனா எனக்குப் பிடிச்சிருக்குன்னு நினைச்சு, மீண்டும்  என்னைப் பிடிச்சுக்கிட்டா?


நாகைக்குள் நுழையும்போதே புலியின் நினைவு!  கலகலன்னு நெரியும் பஸ் ஸ்டாண்டு. ஆளைப்பிடிக்கக் காத்திருக்கும் ஆட்டோக்களின் வரிசை,  குடும்பவிழாக்களைப் பெருமிதத்தோடு அறிவிக்கும் வைனல் போஸ்டர், விஸ்வரூபம் காமிக்கும் அம்மான்னு  அமர்க்களம்தான்!


 புத்தகக்கடை கண்ணில் பட்டதும்  போய் தமிழ்நாடு வரைபடமும் road Map ரெண்டு வகை வாங்கிக்கிட்டேன்.  கோவில் பத்தி விசாரிச்சுக்கிட்டு வந்த சீனிவாசன் வழக்கம்போல் இது  எத்தனை நம்பர் என்று கேட்டார். 19 ன்னு சொன்னேன். அஞ்சே நிமிசத்தில் கோவில் முன்!   அக்கம்பக்கம் இருக்கும் கட்டிடங்களுடன் கை கோர்த்து  நிக்குது.

அழகான   ஏழடுக்கு ராஜகோபுரம்.  ஆனால் உயரம் சரியாத்தெரியாதபடி என்னமோஅடக்கி வாசிச்சாப்போல் இருக்கு. காரணம் இண்டு இடுக்கு இடம்  ரெண்டு பக்கமுமில்லாததோ ? இதே ஒரு  பரந்தவெளியில்  நின்னுருந்தால்  அட்டகாசமா இருக்காது?

வாசலிலேயே ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயார் உடனுறை  ஸ்ரீ சௌந்தர்யராஜ  பெருமாள். 19.வது திவ்ய தேசம் என்ற போர்டு!


கோபுரவாசலைக் கடந்து  போறோம்.  வலப்பக்கம்  வாகனங்களுக்குத் தங்கத்தகடு(?) போர்த்தும் வேலை நடக்குது.சில இளைஞர்கள் நகாசு வேலை செய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க, கண்ணெதிரே  நேராப்பார்த்தால் தூரத்தில்  கருவறை .  அட! வெளியே இருந்து இந்தக் கோவிலைப் பார்த்தால்  இவ்வளவு தூரம் உள்ளே  போறது போலத் தெரியலையே!

'ஓம் நமோ நாராயணாய'

வெளி மண்டபத்தைக் கடந்து படிகளேறி  உள்ளே பாய்ஞ்சேன்.   பளீர்னு போகஸ் செய்யும் ஒளி வெள்ளத்தில் ஜிலுஜிலுன்னு  நிக்கிறார் பெருமாள்.  நேரேப்போய் ரொம்பக் கிட்டக்கவே நின்னு பார்க்கும் வசதி!  அடடா..... கண்ணைப் பறிச்சுக்கிட்டுப் போகும் அழகு!  கிழக்கே பார்த்து கையில்  Gகதையுடன் நின்ன கோலத்தில்  ஸேவை  சாதிக்கிறார்.  ஆஜானுபாகுவா ஏழடி உசரம்   இருக்கார்னு நினைக்கிறேன்.  தன்னுடைய  தசாவதாரங்களையே   தகடுகளில் அச்சடிச்சு ஒட்டியாண  மாலையா இடுப்பிலே  அணிஞ்சுருக்கார்!  காணக் கண் கோடி வேணும்!

திருமங்கை ஆழ்வார் இவனுடைய அழகில் மயங்கி  பத்துப்பாடல் பாடி இருக்கார். அச்சோ ஒருவர் அழகியவா  என்று ஒன்பது பாடல்களை முடிச்சுக் கடைசிப்பாடலில்தான்   நாகை அழகியாரை ன்னு  ஊரையும் பேரையுமே சொல்றாருன்னா பாருங்க.

 இதுக்கு அச்சோப்பதிகமுன்னே பெயர்.  பத்தும் வேணுமுன்னா இங்கே:-)


மூலவருக்குப்பெயர்  நீலமேகப் பெருமாள். உற்சவ மூர்த்திதான் சௌந்தர்ய ராஜன்.  நாகை அழகியார். ஆனால் ரெண்டு பேருமே  அழகால் நம்மை அசத்திப்புடறாங்க.   ஹைய்யோ ஹைய்யோன்னு வச்ச கண் வாங்காமல் கண்ணாலவன் அழகை உள்வாங்கி மனசில் நிறைக்க முயற்சிக்கிறேன்.  இன்னும் இன்னும்  வேணும் என்றிருக்கே தவிர போதும்  என்று  கண்ணைத் திருப்ப முடியலை. திருப்தியே வரமாட்டேங்குது.  எல்லாம் எனக்கே வேணும் என்ற கொதி( மலையாளம். Greed)

அதுக்குள்ளே கருவறை மண்டபத்தில் நம்முடன் இருந்த சிலர் வெளியேறி இருந்தாங்க. ஏகாந்த ஸேவை லபிச்சது   நமக்கு ! சடாரி ,தீர்த்தம், திருத்துழாய் எல்லாம்  ஆச்சு. அப்போ கோபாலிடம் சொன்னேன்....'இப்ப என்னை வான்னு கூப்புட்டால்  வேறெதையும் யோசிக்காம அப்படியே போயிருவேன்'    சாமி முகம் பார்த்துக்கிட்டே  'கூப்புடுறா....'

"நீ சொன்னா? உடனே அவன் கேட்டுருவானா?"

தாம்பாளத்தை உள்ளே வச்சுட்டுத் திரும்பிய பட்டர் ,  'நம்ம பெருமாள்,  பக்தன் சொன்னபடியெல்லாம் கேட்பார் ' என்று சொல்லியபடி

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டாம்
துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும்

நான்   சட்னு ' உன் பைநாகப் பாயை சுருட்டிக்கொள்' னு முடிச்சு வச்சேன்.  பட்டர் கண்ணிலொரு மகிழ்ச்சி. கோபால் கொஞ்சம் திருதிருன்னு முழிச்சார்.

 பட்டர் தொடர்ந்து,  'இதையும் கேட்டான் அப்புறம்....

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ நிற்க வேண்டாம்
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தான் நீயும்
உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள் என்றதும் அதையும் கேட்டானேன்னு  சிரிச்சபடி சொன்னார் .

'சரி நீங்க பிரதக்ஷணம் பண்ணிட்டு வாங்க . பிரஸாதம்  எடுத்துக்கலாம்'னார். வெளியே படம் எடுத்துக்கலாமான்னு கேட்டதுக்கு  சரின்னு தலையை ஆட்டினார்.  பிரகாரம்  சுத்தும்போதே   க்ளிக் ஒரு பக்கம், கோபாலுக்கு  பாயைச் சுருட்டுன கதை ஒருபக்கமா நடந்துச்சு.





சம்பவம் நடந்தது இந்த ஊரில் இல்லை. திரு வெஃப்கா என்ற  ஊர். நம்ம காஞ்சீபுரம் இருக்கு பாருங்க, அங்கே வரதராஜர் கோவிலில் இருந்து  ஒரு கிமீ தூரத்தில் !  சொன்னவண்ணம் செய்த பெருமாள் ! (இவ்ளோ சொல்றேனே தவிர நான் இன்னுமங்கே போகலை)  நம்ம  திருமழிசை   ஆழ்வாருக்கு ஒரு சிஷ்யப்பிள்ளை இருந்தார். பெயர், கணி கண்ணன்.  ஆசானும் சீடருமா காஞ்சியில் இருந்து பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.  அப்ப இவுங்க சேவையில் பங்கெடுத்து உதவி செய்த ஒரு  மூதாட்டியை, ஆழ்வார்  தன்னுடைய   சக்தியைப் பயன்படுத்தி   பேரழகுள்ள இள மங்கையா மாத்திடுவார்.

விவரம் தெரியாத  அவ்வூர் மன்னன் பேரழகியைக் கல்யாணம் பண்ணிக்குவார். கொஞ்ச நாள் கழிச்சு பேச்சு வாக்கிலே   மனைவி இந்த அதிசயத்தை  மன்னரிடம் சொல்லப்போக, அவரும் திருமழிசையைப் பார்த்து என்னையும் இளைஞனா மாத்தியே ஆகணுமுன்னு கேட்டுக்கறார்.  முடியாத காரியம்னு திருமழிசை மறுக்க,அப்படீன்னா இந்நாட்டை விட்டு  வெளியேறுன்னு கடுமையா ஆணை போட்டார்.

குரு கிளம்புனதும் சிஷ்யனும் கூடவே கிளம்பறார்.  இவுங்க போயிட்டா நமக்கு யாரு  ஸேவை செய்யப்போறாருன்னு பெருமாள் முழிக்க,

'இதா பாரு...  கணிக்கண்ணன்  (என்னோடு) கிளம்பிட்டான்.நீ என்னத்துக்கு இன்னும் இங்கே படுக்கைப் போட்டபடி கிடக்கே? உன் பாம்புப் பாயைச் சுருட்டிக்கிட்டுக் கிளம்பு'ன்னு  சொன்னதும்  மறு பேச்சுப்பேசாம  பாயைச் சுருட்டிக்கிட்டுக் கிளம்பிட்டான் எம் பெருமாள். பெருமாள் கிளம்புனதும் கூடவே மஹாலக்ஷ்மியும்  கிளம்பிட்டாள்.  மச்சான் போறதைப்பார்த்துக்கிட்டுச் சும்மா நிக்க முடியுமா? சிவன் & ஃபேமிலியும்  மூட்டையைக் கட்டிருச்சு. மற்ற தேவர்கள் எல்லாம் படை போல்  கூடவேகிளம்பிப் போறாங்க.

எல்லாம் கிளம்பி வரிசையாப்போறாங்க. ஸ்ரீதேவி  போனதும் நாட்டின் செல்வம், அழகு எல்லாம்  சட்னு மறைஞ்சுருது.  தரித்திர தேவதையான அக்கா மூதேவி  இடம்பிடிக்க வர்றாள்.  எல்லாத்தையும் பார்த்த மன்னனுக்கு  திகிர்னு கிலி பிடிச்சுக்குது. ஐயோ வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இல்லாமல்  நானே அழிவைத்  தேடிக்கிட்டேனேன்னு  ஓடிப்போய்  திருமழிசை காலில் விழுந்து என்னை மன்னிச்சுடுங்கோ.அறியாமையால்  இப்படி அசட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்னு அழறார்.

போயிட்டுப்போறது போன்னு மன்னிச்சுட்டு,  சிஷ்யப்பிள்ளையைப்பார்த்து  'வா, நாம் இந்த ஊருலேயே  இருக்கலா'முன்னு சொல்லித் திரும்பி வர்றார். கூடவே போன பெருமாளும்,பாயும், பட்டாளமும்  கூடவே திரும்பி வர்றாங்க.

  கக்கத்துலே சுருட்டிவச்ச பாயுடன் பெருமாள்  இப்ப என்ன செய்யணும்னு தெரியாம திருதிருன்னு முழிக்கிறார்.  சுருட்டச் சொன்னவர் விரிக்கச் சொல்லலையே?  இப்படியே நிக்கணுமான்னு யோசனை. ஆழ்வார் பார்த்தார். அடடா....

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ நிற்க வேண்டாம்
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தான் நீயும்
உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள்

ஓக்கேன்னுட்டு பாயை விரிச்சுட்டு அப்பாடான்னு  கிடந்தான். அவசரமாப் பாயைப்போட்டதில் இடப்பக்கம் இருக்க வேண்டிய தலையணையும் அரவக்குடையும்   வலது பக்கம்  வந்துருச்சு. அப்படியே ஓடிப்போய் படுக்கையில் விழுந்தவன் இன்னிக்கும்  அப்படியே  கிடக்கிறான்.  இதேபோலத்தான் திருவெட்டாறு ஆதிகேசவனும் மேற்கே பார்த்துப் புஜங்க சயனத்தில் கிடக்கான். அவனுக்கு அங்கே கதை வேற போல!:)

எப்பவாவது இந்தியாவுக்கே திரும்பி வந்துடலாமுன்னு நினைச்சால்.... எங்கே போய் செட்டில் ஆகலாமுன்னு ஒரு எண்ணம் வந்துக்கிட்டே இருக்கும். நம்ம ஆக்டிவிட்டீஸ்க்கு சென்னைதான்  சரின்னு கோபால் சொல்வார். ஆனால்.... அழுக்கும் புழுக்கும் கூட்டமும் சீன்னு போகுது. நமக்கான விஷயங்கள் எல்லாம்  மயிலை, தில்லக்கேணி, அடையார்ன்னு  இருக்கு.  அங்கெல்லாம் ரிட்டயர் லைஃப்லே வீட்டுக்கு வாடகை கொடுத்துக் கட்டுப்படி ஆகாது.

ஸ்ரீ  ரங்கம் போயிடலாமுன்னா அம்மாவின் அருளால்   நாளின் முக்கால், இருட்டில்:( அதுவுமில்லாம பெருமாளை தினம் ஸேவிக்க பயங்கர கிராக்கியால்லெ கிடக்கு!

திருப்பதியில் இருட்டுக் கருவறையில்  பெருமாளை வச்சுட்டு, ஒரே  நொடியில் பார்த்துக்கோன்னால்....  கண்ணை ட்ரெயின் செஞ்சு  இருட்டுக்குள்ளே அனுப்புமுன்  என் கண்ணையும் கட்டி விட்டுட்டான்  அந்தப் பெரும் ஆள் :( பளீர்னு ஒரு விளக்குப்போட்டுருந்தால்   கொஞ்ச தூரத்தில் இருந்தாவது முகம் பார்த்துருக்கலாம்.   இப்ப நம்ம அல்லிக்கேணியில் பெருமாள் பார்த்தஸாரதிக்கு இப்படி ஒரு  ஃபோகஸ் லைட் போட்டு வச்சுருக்காங்க.  ரொம்ப தூரத்திலே இருந்துகூட அந்த முட்டைக் கண்களையும் முரட்டு மீசையையும் தரிசிக்க முடியுது!

பேசாம  இங்கே நாகப்பட்டினம் வந்துறலாம்.  கடற்கரை வேற இருக்கு.  மூணு பெரும் மதங்களின் சங்கமம் அக்கம்பக்கத்தில். அழகனை அருகில் நின்னு பார்க்கலாம்.நோ ஜருகு. நோ இருட்டு ஐமீன் கோவிலில்.  ரொம்பவே புராதன ஊர்தான் இது.  சோழர்கள் காலத்தில் பிஸியான துறைமுகநகர்.  பொன்னியின் செல்வனில்  வாசிச்ச நாகை சூடாமணி விஹாரம்,  அப்போ  வந்த கடல் சீற்றம் எல்லாம் மனசுலே அப்படியே பதிஞ்சு கிடக்கு!  பெருமாளும் இங்கே நாலு யுகமா இருக்கார்!


சுத்தமான பிரகாரத்தை வலம் வந்தோம். வடமேற்கு மூலையில் குட்டியா ஒரு கிணறு.  பிரசாதம் சாப்பிடும் சின்னக் குழந்தைகளுடன் ஒரு குடும்பம். சீனிவாசனையும் கூப்பிடலாமேன்னு பார்த்தால் அவர் ஒரு பக்கம் நின்னு பிரசாதம் சாப்புடறார்.   மர பெஞ்சில் அடுக்கி இருக்கும் பளபளன்னு தேய்ச்சு மினுங்கும் பிரசாதப் பாத்திரங்களுக்குப் பின்னால் பட்டர்  உக்கார்ந்துருக்கார்.



நெடுநெடுன்னு உசரம். கிள்ளி எடுக்க ஒரு சதை கிடையாது உடம்பில்.   அத்தனை உசரத்துக்கு ஒரு கூன் கீன் போடணுமே! ஊஹூம்... சட்டம்போல் நிமிர்ந்த உடம்பு.   தோளில் தொங்கும் ஒரு அடி நீள சாவிகள் . தினமும் வெயிட் தூக்கிகிட்டே நடக்கறார்  பாருங்க. அதான் உடம்பு ஃபிட்டா இருக்கு!  பட்டர்ஸ்வாமிகள் பெயர் ரெங்கராஜன்.

மூலவரை  சேவிக்க   பக்தர்கள்  யாரும்  வரலைன்னா   உடனே சந்நிதிக்  கம்பிக் கதவை  மூடி பூட்டுப் போட்டுட்டு மற்ற வேலைகளை கவனிக்கப் போயிடறார் .  பெருமாளையுமே  காபந்து பண்ணத்தானேவேண்டி இருக்கு. கலிகாலமில்லையோ!

மந்தாரை இலை நிறைய   சுடச்சுடச் சக்கரைப்பொங்கலும் வெண்பொங்கலுமாய்.....ருசி அபாரம்!   வயிறும் மனமும் நிறைஞ்சு போச்சு. கை கழுவி வந்தபின்  பட்டர் ஸ்வாமிகள் ரெங்கராஜனுக்கு  நன்றி சொல்லி, இன்னிக்கு கோபாலுக்கு  ஆங்கிலத்தேதியின் படி பொறந்தநாள். பெருமாளுடைய  தரிசனம் அற்புதமாய் கிடைச்சதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே.... எத்தனையாவது பொறந்தநாள் என்றார். நாலு நாள் முன்னே சஷ்டியப்த பூர்த்தி சென்னையில் நடந்ததுன்னேன்.  ஆரம்பமா இல்லை கடைசியான்னார். கடைசிதான்னேன்.

அறுபது வயது  பூர்த்தியாகும் பொறந்த நட்சத்திரத்துக்குப் பொதுவா  அறுபதாங் கல்யாணம் என்னும் சஷ்டியப்தபூர்த்தி விழா  செய்வது வழக்கம் என்றாலும்  சில பல காரணங்களால் அன்றைக்குச் செஞ்சுக்க முடியலைன்னா  அடுத்த பிறந்த நாள் வரைக்கும்  இடையில் எந்த ஒரு மாதத்திலாவது  பிறந்த நட்சத்திரம் வரும் தினம் செஞ்சுக்கலாமுன்னு  சாஸ்திரம் விதிமுறைகளைத் தளர்த்தித்தான்   வச்சுருக்கு.  நமக்கும் இது  ரொம்ப  நல்லதாப் போச்சுன்னு வையுங்க.

உடனே உதவியாளரைக் கூப்பிட்டு என்னவோ மெலிதாச் சொல்லி அனுப்புனார். அடுத்த நொடி ஒரு ப்ளாஸ்டிக் பையுடன் அவர் ஆஜர்.  பைக்குள் கையை விட்டு ஒரு லட்டு எடுத்து கோபாலை ஆசீர்வதிச்சுக் கையில் கொடுத்தார். கண்ணா லட்டு திங்க ஆசையா!!!!!

பிரமிச்சு நின்ன என் கையில் அந்தப்பையை அப்படியே கொடுத்து ஆசிகள் வழங்கினார். பெருமாள் சந்நிதியில் கிடைச்ச ஆசிகளை எம்பெருமாளே வழங்குனதா நினைச்சு சந்தோஷத்தோடு அவரை வணங்கிட்டுக் கிளம்பினோம்.

என்னவொரு திவ்யமான தரிசனம்! நின்றும் இருந்தும் கிடந்தும் மூணு விதங்களில்  தனித்தனி சந்நிதிகளில்  இருந்து  அடடா.... எதைச் சொல்ல எதை விடன்னு பண்ணிப்புட்டானே!!!!

வெளி மண்டபத்தைச் சுற்றினால் கோவில் புஷ்கரணி. நல்ல சுத்தமாவும்  அழகாவும் இருக்கு!  இந்தப்பக்கம்  நம்ம பேவரிட் கஜ வாகனத்துக்கு தகடு போர்த்தும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு.  பாஸ்கர பத்தர்   உலோகத்தைக் காய்ச்சி ஊத்தி, மோல்ட் பண்ணிப் பத்தவச்சிக்கிட்டு இருக்கார்.










பசுக் கொட்டடியில் கோமாதாவும் குழந்தையும்.!

எல்லாம் அம்சமா நிறைஞ்ச கோயில். நல்ல சுத்தமான பராமரிப்பு.

கிளம்பிப்போகும்போது   எங்க வீட்டு வேளுக்குடிக்கு  (தாம்பரம் அத்தை )  தரிசனம் நல்லபடி கிடைச்சதுன்னு  சொன்னப்ப,  அங்கே பக்கத்துலேதான் திருக்கண்ணபுரம் இருக்கு. அதையும் விட்டுறாதேன்னாங்க.  அதுக்குள்ளே நாங்க   ஒரு பதினைஞ்சு கிலோமீட்டர் போயிருந்தோம். கீழ்வேளூர்.  நாலுபேர் நின்னுக்கிட்டு இருந்ததைப் பார்த்துட்டு, விசாரிக்கிறேன்னு சொல்லி சீனிவாசன் இறங்கிப் போனார்.

நாகப்பட்டினத்துக்கு வருமுன்னேயே ரைட்டுலே போயிருக்கணுமாம்!  இனி  என்ன செய்யமுடியும்? சரி அப்புறம் எப்பவாவது ஆகட்டும்.  அப்பப்பார்த்து நம்மை செல்லில் கூப்பிட்டாங்க ஹாலிடேய்ஸ் ரிஸார்ட்டில் இருந்து.  கோபால்  வார்ட்ரோபிலொரு ஷர்ட்டை விட்டுட்டு வந்துருக்கார்.

புதுசான்னேன். ஆமான்னு தலையாட்டிட்டு, அங்கே   யாருக்காவது கொடுத்துருங்கன்னார்.

இன்னும் அரைமணியில்  திருவாரூர்!

தொடரும்...............:-)






Viewing all 1429 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>