↧
கண்டுபிடி கண்டுபிடி
↧
திருவாரூர் தியாகராஜர்
ஒரு அருமையான பொக்கிஷத்தை, அதோட அற்புதமும், அழகும் தெரியாமல் எப்படியெல்லாம் சிதைச்சுப் பாழாக்கலாம் என்று தெரிஞ்சுக்கணுமுன்னா திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குள் போய் பாருங்க.
முப்பத்தி மூணு ஏக்கர்! பரந்து விரிந்த பிரகாரங்கள். அழகுக்கு அழகு சேர்க்கும் கோபுரங்கள், பிரகாரம் முழுசும் அங்கங்கே இறைந்து கிடக்கும் சந்நிதிகள் (ஒவ்வொன்னும் ஒரு பெரிய அறை போல விஸ்தாரம்) அதுகள் மேலே நாம் சிதம்பரத்தில் பார்த்த மாதிரியுள்ள மேற்கூரைகள் எல்லாம் பொலிவு இழந்து, மேலே அடிச்ச வண்ணங்கள் எல்லாம் உருக்குலைஞ்சு ஐயோன்னு கிடக்கு. என்னதான் காசு பணம் இருந்தாலும் இப்படி ஒன்னைக் கட்டி எழுப்ப முடியுமா? ஆயிரவருசகாலத்துக்கு முந்திய சமாச்சாரம். வயசு ஆயிரம் முதல் ரெண்டாயிரம் வரையும்கூட இருக்கலாமாம்!
மேலே உள்ளது சுட்ட படம்.
திருவாரூருக்குள் நுழைஞ்சு அருள்மிகு தியாகராஜர் கோவிலுக்குள் நுழையும்போதே மணி பதினொன்னே முக்கால். உச்சிகால பூஜைகள் முடிஞ்சு சரியா 12 மணிக்குக் கோவிலைப் பூட்டிருவாங்களேன்னு அரக்கப்பரக்க மூலவரைத் தேடி ஓடறோம்.
மங்கிய விளக்கொளியில் தரிசனம் ஆச்சு. இவருக்கும் முந்தியவர் வால்மீகிநாதர். மணியாச்சேன்னு அவர் சந்நிதியைப் மூடிட்டாங்களாம்.
தேவலோகத்தில் இந்திரன் பூஜை செஞ்சுக்கிட்டு இருந்த மரகத லிங்கத்தை பூலோக மன்னன் முசுகுந்தனுக்குத் தரவேண்டிய நிர்ப்பந்தம். அசுரர்களை எதிர்த்துப்போரிடும் சமயம் உதவுனவர் .
இந்திரனுக்குக் கொடுக்க மனசு வரலை. மயன்கிட்டே சொல்லி அச்சு அசலா அரை டஸன் (போலி) லிங்கங்களை உருவாக்கி 'இந்தா வச்சுக்கோ'ன்னு கைநிறையக் கொடுத்தான். முசுகுந்த சக்ரவர்த்திக்கு எல்லாம் போலின்னு புரிஞ்சு போச்சு.
இப்பக்கூடப்பாருங்க இந்த நகை சமாச்சாரத்துலே போலி நகைகளில் இருக்கும் டிஸைன்களும் அழகும் அசல் தங்கத்துலே இல்லைன்றதைக் கவனிச்சீங்களா?
'என்னப்பா இந்திரா, ஏமாத்தப் பாக்குறயா? இப்படிச் செஞ்சுட்டியே'ன்னதும் இந்திரனுக்கு அசிங்கமாப்போச்சு. அசல் அண்ட் அரை டஸன் போலி எல்லாத்தையும் ராஜாவுக்கே கொடுத்துடறார். அந்த அசல் இங்கே திருவாரூர் கோவிலில் இருக்கு. தினம் அபிஷேகம் அதுக்குத்தானாம். மற்ற ஆறு லிங்கங்களையும் சுத்துவட்டாரத்துலே வெவ்வேற கோவில்களுக்கு அனுப்பிட்டார் முசுகுந்த சக்ரவர்த்தி.
இந்த ஏழு லிங்கங்களும் இருக்கும் கோவில்களுக்கு ஸப்த விடங்கர் தலங்கள்ன்னு பெயர் இருக்காம்.
நால்வர் பாடிய திருத்தலம். மூணு பிரகாரம் , ஒன்பது ராஜகோபுரம், எண்பது விமானங்கள், பதிமூணு பெரிய மண்டபங்கள், பதினைஞ்சு தீர்த்தக்கிணறுகள், மூணு நந்தவனங்கள், கோவில் முழுவதும் அங்கே இங்கேன்னு விரவி நிற்கும் முன்னுத்தி அறுபத்தியஞ்சு சிவலிங்கங்கள் இப்படி எல்லாமே பெரிய ஸ்கேலில்! ஒரு நாள் முழுதும் நின்னு நிதானமாச் சுற்றிப் பார்க்கவேண்டிய கோவில் இது.
சந்நிதிக் கதவைச் சாத்திய கோவில் ஊழியர், இன்னும் ஒரு பத்து நிமிசத்தில் அன்னதானம் இருக்கு. இருந்து சாப்பிட்டுபோங்கன்னு உபசரித்தார். கெமெராவுக்கு அனுமதி வாங்கலாமுன்னா அலுவலகத்தையும் இழுத்து சாத்திட்டு போயே போயாச்சு!
நாங்களே மெள்ள ஒவ்வொரு இடமாப் பார்த்துக்கிட்டே வந்தோம். மண்டப நிழலில் இருந்து பிரகாரங்களுக்கு போகும்போது .... தீமிதித் திருவிழாதான். கடுமையான உச்சி வெய்யில். பிரகாரத்தில் இருக்கும் சந்நிதி நிழல்களில் தாவித்தாவி போய் நின்னு பார்த்துக்கிட்டே போய் ஒரு உசரமான மண்டபத்தில் ஏறி உக்கார்ந்தோம்.
கண்ணைச் சுழற்றியதில் பட்டது, அடடடான்னு கயிறு இழுக்கும் போட்டியில் கலந்துக்கிட்ட ஆடுகளா இருக்கும் சிற்ப வரிசை, கோபுரத்தில்! நியூஸிக்காரங்க சரியான இடமாப் பார்த்துத்தான் உக்காரவந்தோம்:-)
தமிழுக்கு அத்தாரிட்டின்னு சொல்லிக்கும் முன்னாள் முதல்வர் ஊரில் தமிழ் நல்லாத்தான் வாழுது போங்க!
பகல் சாப்பாட்டுக்காக பிள்ளைகுட்டி சகிதம் அங்கங்கே சின்னச்சின்னக் குழுவா பலர் காத்திருந்தாங்க.
கொடிமரம் நோக்கிப்போகும் மண்டபத்தின் ஆரம்பத்தில் மனுநீதி சோழர் தன் தேரை ஓட்டி வர்றார். ஒரு சமயம் தேவலோகத்தில் நீதி தவறாமல் இருப்பவர் யார் என்ற விவாதம் வந்தப்ப எமதருமன் நாந்தான் ஏழை பணக்காரன், நல்லவன் கெட்டவன், படிச்சவன் படிக்காதவன், அறிவுள்ளவன்,முட்டாள் உசந்த சாதி தாழ்ந்த சாதி இப்படி எந்தவிதமான பாகுபாடும் பார்க்காமல் என் கடமையைச் செஞ்சுக்கிட்டு வர்றேன் னு சொல்றார்.
பொழுதன்னிக்கும் பயணம் போய் எல்லா லோகங்களையும் சுத்திப்பார்த்துக்கிட்டே இருக்கும் நாரதர் அப்ப அங்கே வந்து. 'பூலோகத்தில் மனுநீதி சோழன் என்ற அரசன் இருக்கார். அவர்தான் நீதி தவறாமல் இருப்பவர்னு சொல்ல, தேவலோகவாசிகளுக்கு நம்பிக்கை இல்லாமல் அதெப்படி ஒரு மானிடன் நம்மைவிட மேலானவனா இருக்கமுடியுமுன்னு முழிக்க, சரி சோதிச்சே பார்த்துடலாமுன்னு எமன் ஒரு பசுமாடு ரூபம் எடுத்து (ஒய் ,நோ எருமை மாடு?) ஒரு கன்றுக்குட்டியுடன் மனுநீதி சோழன் ஆட்சி செய்யும் ஊருக்கு வந்து சேர்கிறார்.
ராஜவீதியில் அம்மாவும் மகனுமா மெல்ல உலாப்போகும்போது, மன்னரின் மகன் வீதிவிடங்கன் ஒரு தேரில் வேகமா வர்றார். துள்ளிக் குதிச்ச கன்று தேர்ச்சக்கரத்தில் சிக்கிச் செத்துப்போச்சு. அடடா இப்படி ஆகிப்போச்சேன்னு அரசகுமாரன் அரண்மனைக்குத் திரும்பிப்போறான்.
மனுநீதி சோழன் தன் அரண்மனை வாசலில் ஒரு மணியைக் கயிறு கட்டித் தொங்க விட்டுருக்கார். யாருக்காவது குறை இருந்தால் அதை இழுத்து அடிச்சால் உடனே என்ன குறைன்னு கேட்டு அதைத் தீர்த்து வைப்பார்.
கன்றை இழந்த தாய்ப் பசு அழுது புரண்டு கதறுச்சு. துக்கம் தாங்காமல் இது என்ன அநீதின்னு அரண்மனை வாசலுக்கு ஓடிப்போய் மணியில் இருந்து தொங்கும் கயிறை தன் வாயினால் பிடிச்சு இழுத்து மணியை அடிச்சது. மணி ஓசை மன்னரில் காதில் விழுந்துச்சு. அவருக்கு ஆச்சரியமாப் போயிருச்சு.
இதுவரை இந்த மணி யாராலுமே அடிக்கப்படலை. யாருக்காவது குறை இருந்தால்தானே அடிப்பாங்க? யாரா இருக்குமுன்னு பார்க்க வாசலுக்கு வர்றார்.
அதுக்குள்ளே அரண்மனைப் பணியாளர்கள் அரசரிடம் ஓடிப்போய் ஒரு பசு மணியை அடிக்குதுன்னு சொல்றாங்க. மெய்யாலுமான்னு வந்து பார்த்தா.... கண்ணீர் வழிய வழிய வாயில் கயிற்றைக் கவ்வி தலையை ஆட்டும் பசுமாடு! அடடா...பசுவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே ன்னு இருக்கும்போது சம்பவம் நடந்ததைப் பார்த்த சிலர் வந்து சமாச்சாரத்தைச் சொல்றாங்க.மன்னர் போய்ப் பார்த்தார். உயிரிழந்த கன்று தரையில் கிடக்கு. பசுவும் அந்த இடத்துக்கு வந்து கன்றை நக்கிக்கொடுத்துக்கிட்டே கண்ணீர் சிந்தி ம்மா...ம்மா ன்னு கதறுது.
யார் இப்படிச் செஞ்சதுன்னு அரசர் கேட்க, ' தங்கள் மகன் ஓட்டிவந்த தேரில் கன்று துள்ளிப் பாய்ஞ்சு விழுந்துருச்சு'ன்னு சொல்றாங்க.
ஸ்பீட் கில்ஸ்ன்னு சரியாத்தான் சொல்லி இருக்காங்க. அதுவுமில்லாமல் அரசகுமாரனுக்கு ட்ரைவிங் லைசன்ஸ் வாங்கும் வயசு வந்துருச்சா? சின்னப்பயலா இருக்கானே! ராஜவீதியில் (சிட்டி சென்ட்டர்) இவ்ளோ வேகமாப்போகலாமா?
கன்றை இழந்த பசு எவ்வளவு துக்கம் அனுபவிக்குதோ அதே துக்கத்தை நானும் அனுபவிக்கணும். அதுதான் நியாயம். கூட்டிட்டு வாங்க அரசகுமாரனைன்னார். வீதிவிடங்கன் வந்ததும் ஒரே கேள்வி.
"கன்றின் மரணத்துக்கு நீ காரணமா?"
" ஆம் தந்தையே."
கன்றுவிழுந்து கிடந்த இடத்திலே மகனைக் கிடத்திவிட்டு அவன் மீது தேரை செலுத்துங்கள்னு சொல்றார். யாரும் இடத்தைவிட்டு நகரலை. ஐயோ அரசகுமாரனை எப்படிக் கொல்வது....
அரசர் பார்த்தார். சரி நானே தண்டனைகொடுக்கறேன்னு சொல்லி மகன் மீது தேரை ஓட்டிப்போனார். மகனும் மரித்தான். பிள்ளை இறந்த சோகம் தாங்காமல்; அரசரும் கண்ணீரும் கம்பலையுமா இருக்கும்போது...
தாய்ப் பசு தன் சுய உருவம் எடுத்து எமதருமனா காட்சி கொடுத்துச்சு. கன்றும் ஒரு தேவதையா மாறி பக்கத்தில் நின்னுச்சு.' மனுநீதி சோழரே, நீரே நீதியும் நியாயமும் உள்ளவர்'னு சொல்லி அரசகுமாரன் வீதிவிடங்கனையும் திரும்ப உயிர்ப்பிச்சுக் கொடுத்துட்டு எமதருமன் எமலோகம் போறார்.
இந்தக் காட்சியை விளக்கும் பெரிய கல்தேர் ஒரு இடத்தில் வச்சுருக்காங்க. சின்னதா ஒரு பகுதி. அதுக்குள்ளே போய்ப்பார்க்க ஒரு ரூபாய் கட்டணம்! மாடும் இறந்த கன்றும் ஒரு கற்சிலையாக.
தேர்ச்சக்கரத்தின் அடியில் கொல்லப்பட்ட அரசகுமாரன்.
1996 இல்லை 1998 ஆண்டோ இந்த நினைவுச் சின்னத்துக்கு நுழைவாயில் கட்டுனாங்களாம் லட்சரூபாய் செலவில். கல்வெட்டு சொல்லுது.
ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட ஒரு ஷெட்டில் மனுநீதி சோழர் சரிதம் படங்கள். அடிக்கும் வெய்யிலிலும் சூட்டிலும் வண்ணங்கள் அதிகநாள் தாங்காது:(
சங்கீத மும்மூர்த்திகள் பிறந்த ஊரும் இதே! அட! ஒரே ஊரிலா!!!! வியந்தேன்!
நாம் போன நேரம் சரி இல்லை. ஒன்னு அதிகாலை வெயிலுக்கு முன் போயிருக்கணும். இல்லைன்னா மாலை நாலு நாலரைக்கு. ரெண்டுங்கெட்டானா உச்சி நேரத்துலே அங்கே இருந்ததால் சரியாச் சுத்திப்பார்க்க முடியலை. கிடைச்சவரை போதுமுன்னு கிளம்பவேண்டியதாப் போச்சு.
பகல் சாப்பாட்டு நேரம் பாருங்க. சீனிவாசனை சாப்பிட அனுப்பணும். எனக்கு ஓய்வறை போகணும். நல்ல இடமா ரெஸ்ட்டாரண்டு தேடுனதில் ஹோட்டல் காசீஸ் இன் என்று ஒன்னு. வெளியே தோட்டம் அலங்காரச் சிலைகள் எல்லாம் ஓக்கே. ஆனால் மற்ற வசதிகள் சொல்லிக் கொள்ளும்படியா இல்லை:(
இந்தியப்பயணங்களில் தடுமாறித் தத்தளிக்கும் நேரமென்றால் இவைதான். என்னத்தைச் சொல்றது போங்க:(
என்னுடைய ஆதங்கம் என்னன்னா..... இது முன்னாள் முதல்வர் பிறந்த ஊர். அவர் தொகுதி. அஞ்சு முறை முதல்வர் பதவியிலே இருந்துருக்கார். அப்பவாவது சீர் செஞ்சுருக்கலாம் இல்லையா? ஓடாமல் முடங்கிப்போன தேரை ஓடவச்சாருன்னு வாசிச்ச நினைவு. திருவாரூர் தேரழகுன்னு ஒரு சொல்லிருக்கு! கடவுள் நம்பிக்கை இல்லைன்றதுக்காக இப்படி ஒரு கலைப்பொக்கிஷத்தைக் கண்டும்காணாமலும் விட்டுடலாமா? இதை திராவிடர் கட்டிடக்கலை(Dravidian architecture) ன்னு வகைப்படுத்தி இருக்கும்போது அட்லீஸ்ட் அந்த ஒரு சொல்லுக்காவது எதாவது செஞ்சுருக்கலாம்!
அதெல்லாம்முன்னே செஞ்சதுதான்னு யாராவது சொன்னாலும்.... இப்ப இருக்கும் நிலை பார்த்தால் கண்ணில் ரத்தம்தான் வரும் நம்மூர் கால நிலைக்கு என்னதான் பெயிண்ட் அடிச்சு பராமரிச்சாலும் ரெண்டே வருசத்துலே பல்லைக் காமிச்சுரும் என்பது உண்மைதானென்றாலும் இதையெல்லாம் பராமரிச்சுக்கிட்டே இருக்கவேண்டிய சமாச்சாரம் இல்லையோ?
இப்போதைய முதல்வராவது கவனிச்சால் நல்லது.ஆனால் இது ஸோ அண்ட் ஸோ பிறந்த தொகுதி என்பதால்.... கவனிப்பு கிடைக்குமென்ற நம்பிக்கை இல்லை! நோ சான்ஸ்:(
பேசாம இதை தொல்பொருள்துறை எடுத்துக்கிட்டாக்கூடத் தேவலைன்னு எனக்குத் தோணிப்போகுது. குறைஞ்சபட்சம் பராமரிப்பாவது நல்லா இருக்குமே! தனியார் வசம் பராமரிப்பு வேலையைக்கொடுக்கலாம்தான். ஆனால் கமலாயக் குளக்கரை மண்டபத்தின் கூரையில் பெயிண்ட் அடிச்ச கையோடு அதில் தங்கள் விளம்பரத்தை எழுதி வச்ச கொடுமையை என்னவென்பது?
திரு முனிசாமி அவர்கள் வலையேற்றிய வீடியோ க்ளிப். அவருக்கு என் நன்றிகள்.
தினமலர் 360 டிகிரியில் கோவிலைக் காமிக்கும் 10 க்ளிப்ஸ் போட்டுருக்காங்க. சாம்பிளுக்கு ஒன்னு இங்கே!ஆர்வம் இருப்பவர்கள் மற்றவைகளையும் பார்த்து ரசிக்கலாம்.
இப்படியெல்லாம் புலம்பினபடியே மன்னார்குடி போய்ச் சேர்ந்தோம்.
தொடரும்............:-))))
சரணின் பின்னூட்டம் பார்த்ததும்தான் இதையும் இங்கே போடலாமேன்னு தோணுச்சு. இடிஞ்சு கிடக்கும் சுவர். நக்கீரனுக்கு நன்றி.

↧
↧
செங்கமலத்துக்கு ரொம்ப Bபோரடிக்குதாம்!!!!!
உண்மைக்கும் இது நம்ம திட்டத்தில் இல்லாத ஊர். திருக்கண்ணபுரம் எபிஸோட் மிஸ் ஆகிருச்சுன்னு தாம்பரம் அத்தையைக் கூப்பிட்டுச் சொன்னதும்... இப்ப எங்கே இருக்கேன்னு கேட்டாங்க. திருவாரூர். அப்ப அப்படியே மன்னார்குடிக்குப்போய் ராஜகோபாலைக் கண்டுக்கோன்னு உத்தரவாச்சு. எங்கம்மாத் தாத்தா பெயர்கூட ராஜகோபால்தான். நான் பிறக்குமுன் சாமிகிட்டே போயிட்டார். அதுக்காக இவரை விடமுடியுமா? எழுதிட்டேனே!!!
அவர் நினைவுக்காக இருக்கட்டுமுன்னு வண்டியை மன்னார்குடிக்கு விடச் சொன்னோம். திருவாரூரில் இருந்து அதிக தூரமில்லை. வெறும் 30 கிலோமீட்டர். நான் சின்னப்பிள்ளையா இருந்தபோது ரொம்ப தூரத்துலே இருக்கும் ஊர்ன்னு நினைச்சுப் போனதெல்லாம் இப்போ கூகுளில் பார்த்தால் இருவது, இருவத்தியஞ்சு, முப்பதுன்னு இருக்கு. திருமங்கலத்துலே இருந்து மதுரைக்குப் போகும்போது தொலைதூரப்பயணமுன்னு (only 25 KM!!!)ரயில் கூஜாவில் தண்ணி நிரப்பிக்கிட்டுப் போவோமுன்னா பாருங்களேன்!!! வெறும் பஸ் பயணம்தானே அப்பெல்லாம்.
திருவாரூரை விட்டுக் கிளம்பி சரியா முக்கால்மணி நேரத்தில் மன்னார்குடி கோவிலாண்டை வண்டி நின்னுச்சு. நெடுநெடுன்னு ஓங்கி நிற்கும் ராஜகோபுரம்! அதன் நிழலில் ஓய்வெடுக்கும் வெள்ளாடுகள். கோவில் முகப்புக் கம்பி கேட்டை ப்பூட்டி வச்சுக்கிட்டு அந்தாண்டை உக்கார்ந்துருக்கார் வாட்ச்மேன். சீனிவாசன் போய் விசாரிச்சுக்கிட்டு வந்தவர் கோவில் திறக்கும் நேரம் நாலரை என்றார்.
ஐயோ இன்னும் ரெண்டரை மணி நேரம் உண்மையாவே தேவுடு காக்கணுமா? அதுவும் இந்த மொட்டை வெய்யிலில்:( வண்டிக்குள் இருந்து காய்வதை விட குறைஞ்சபட்சம் உள்ளே போய் உக்காரலாமேன்னு கோபால் போய் கேக்கப்போனார். கோவிலில் அன்றைக்கு ஏதோ முக்கிய மீட்டிங் நடந்துக்கிட்டு இருக்கு. எக்ஸிக்யூடிவ் ஆஃபீஸர் உள்ளே இருக்காருன்னு சேதி கிடைச்சதும் அவரையே நேரில் போய் கேக்கறேன்னு சொன்னதும் காவல்காரர் கதவைத் திறந்து அவரை மட்டும் உள்ளே விட்டார். இதையெல்லாம் வண்டிக்குள் இருந்தபடியே கவனிச்சுக்கிட்டு இருந்தேன். நம்ம பக்கத்துலே இன்னொரு வண்டியில் ஒரு நாலுபேர் இருந்தாங்க. சென்னையில் இருந்து வர்றாங்களாம்.
உள்ளே போன கோபால் சிரிச்ச முகத்தோடு வந்தார். முன்மண்டபத்துலே வந்து உக்கார்ந்துக்க அனுமதி கிடைச்சதாம். அங்கே யானை இருக்குன்னார்! ஹைய்யான்னு இறங்கிப்போகும்போது பக்கத்து வண்டியில் இருந்தவர்களையும் வாங்கன்னு உள்ளே கூட்டிக்கொண்டு போனோம். நமக்குப்பின் கம்பிக்கதவு அடைக்கப்பட்டது.
பகல் நேரத்துலே மக்கள்ஸ் கோவிலுக்குள்ளே போய் கண்ட இடத்தில் தூங்குவதும் அசிங்கம் பண்ணுவதுமா இருந்ததால் இப்ப பகல் 12 மணிக்கு கேட் பூட்டும் வழக்கம் வந்துருச்சுன்னு சொன்னார் காவல் பணியாளர்.
ராஜகோபுரம் கடந்து உள்ளே போனால் நேராக இருக்கும் மண்டபத்துக்கு ஒரு அஞ்சு நிலை கோபுரம்! நடுவிலே அகலமான பாதை. ரெண்டு பக்கமும் ஒரு ஒன்னரை அடி உசரத்தில் நெடூக திண்ணை அமைப்பு.
ரெண்டு கோபுரங்களுக்கு இடையில் இருக்கும் வெளிப்பிரகாரத்தின் தெற்கு மூலையில் ஒரு அரங்க மேடை. அதுக்கு அந்தாண்டை இன்னொரு பக்கத்தில் ஹோஸ் போட்டு வச்சுருக்கும் விஸ்தாரமான ஓப்பன் குளியலறை! ஸோ அண்ட் ஸோவுக்காம்.:-)
என்னைப்பார் என் அழகைப்பார்னு கம்பீரமா உசந்து நிக்கும் மன்னார்குடி மதிலழகு! ஹைய்யோ!!!!!
மண்டபத்தின் வலது பக்கம் செங்கமலத்தின் குவார்ட்டர்ஸ். கூரை வேய்ந்து இன்னும் கொஞ்சம் விஸ்தரிச்சு, ஃபேன் எல்லாம் போட்டு வச்சுருக்கு. சின்னக் கண்களால் கூர்ந்து பார்த்து வாடிம்மா, எப்படி இருக்கேன்னு கேட்கும் பார்வை!
எதிர்பக்க மண்டபத்தில் வசதியா உக்கார்ந்து கவனிக்க ஆரம்பிச்சேன். அவளுக்கு ஒன்னும் தின்னக்கொடுக்காதேன்னு போர்டு. பாவம்....அவளுக்குப் படிக்கத் தெரியாதது நல்லாதாப்போச்சு. இல்லேன்னா எப்படி இருந்துருக்கும்?
யானைப் பராமரிப்பு உண்டியல் ஒன்னு அங்கே வச்சுருக்காங்க. இந்தா உன் ஆளுக்குக் கொடுன்னு கோபால் ஒரு நல்ல தொகையை என் கையிலே திணிச்சார். ஓடிப்போய் அவளுக்கு விஷயத்தைச் சொல்லி உண்டியலில் சேர்த்தேன். லேசா சிரிச்சாளோ?
செங்கமலத்தின் அறைக்குப் பக்கத்தில் இன்னொரு தடுப்பு வச்சு சின்னதா ஒரு அறை. அதுலே நல்ல உறக்கத்தில் இருந்தார் ஒருவர். இந்தப்பக்கம் மண்டபத்திலும் முதலில் உக்கார்ந்து இருந்தவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாச் சரிய ஆரம்பிச்சுருந்தாங்க. இதில் கோபாலும் சேர்த்தி:-)
வெய்யில் ஆளை அசத்துது. ஆனால் வெட்டவெளியில் இருந்து கோபுரவாசல் வழியா லேசான இளங்காற்றும் வருது. அதென்னவோ எல்லா ஊர்களிலும் கோபுரவாசல் காற்று அருமைதான்.
பயங்கர போர்! எனக்கில்லை செங்கமலத்துக்குதான். இந்த பாரேன் இந்தச் சங்கிலியை என் காலில் கட்டிப்போட்டுருக்குன்னு அப்பப்ப எடுத்துக் காமிக்கறதும் அதை அவிழ்க்க முயற்சிக்கறதுமா இருந்தாள். தாங்க முடியாமப்போனா..... அவளுடைய ஸ்நாக்ஸை வாரி எடுத்துத் தன் தலையில் போட்டுப்பாள். உடனே தலையை ஆட்டி அதை கீழே தள்ளுவாள். கொஞ்ச நேரத்தில் தும்பிக்கையால் எல்லாத்தையும் கூட்டிப்பெருக்கி வாரி மீண்டும் தலைக் குளியல். அஞ்சு நிமிசத்துக்கு ஒரு முறைன்னு கணக்கு வச்சுக்கிட்டது போல தாங்க முடியாமப் போய்க்கிட்டே இருந்துச்சு அவளுக்கு.
நானும் எதிரில் உக்கார்ந்தபடி அவளோடு மனசால் பேசிக்கிட்டே க்ளிக்கும் வேலையைச் செஞ்சுக்கிட்டு இருந்தேன். வளாகத்தில் அங்கங்கே சின்ன மண்டபமும் குட்டிதேர் ஒன்னுமா இருக்கு. எழுந்துபோய் எக்ஸ்ப்ளோர் செய்யலாமுன்னா.... வெறுங்காலில் தீ மிதிக்கணும்:(
சின்னதா அழகான ஒரு பார்க் செட்டிங் ஒரு பக்கம். அங்கே உக்கார மரத்தண்டுகளைப்போல் உள்ள பெஞ்சுகள்.
ராஜகோபுரம் பதினோரு நிலை. 154 அடி உசரம்! கோபுரச் சிற்பங்கள் எல்லாம் மேலே இருந்து ஆரம்பிச்சு அஞ்சு நிலை வரைதான். மற்ற ஆறு நிலைகளிலும் வெறும் தூண்கள் நிற்பதுபோல் புதுமையா இருந்துச்சு. கிளிகளின் நடமாட்டம் உள்ளே கண்ணுக்குப் புலப்பட்டது. கண்ணை நட்டதில் குரங்கு (மாதிரி)ஒன்னு இங்கும் அங்குமா போகுது. ஒரு வேளை மனுசனோ?
கோவிலுக்கு வயசு ஆயிரத்துக்கும் மேலே! முதலாம் குலோத்துங்க சோழர் தன் ஆட்சி காலத்தில் ( கிபி 1072 -1122)இன்னும் விரிவாக்கிக் கட்டி இருக்கார். 23 ஏக்கர் பரப்பளவு. ஏழுப்ரகாரங்கள். ஏழு மண்டபங்கள். 24 சந்நிதிகள் . கோவில் பாதி குளம் பாதின்னு சொல்ராங்க. அத்தனை பெரிய புஷ்கரணி.
குளத்தைக் குளமுன்னு சொல்லாம இதுக்கு ஹரித்ரா நதின்னு பெயராம்!
தக்ஷிண த்வாரகைன்னு புகழ் பெற்றதன் காரணம், கண்ணன் இங்கே மன்னன்! வடக்கே போக முடியாத முனிவர்களுக்கு தெற்கே வந்து காட்சி கொடுத்துருக்கான்.
ஒரு நாலுமணியான சமயம், உறக்கத்தில் இருந்த யானை ரூம்காரர் எழுந்துபோய் முகம் கழுவி வந்தார். நானும் கொஞ்சம் பேச்சுக்கொடுக்கலாமுன்னு போனேன். இவர் பெயரைத்தான் எப்படியோ மறந்துபோயிருக்கேன். பாபுன்னு சொன்னதா நினைவு. மறுபடி பெயர் நினைவு வரும்வரை பாபுன்னே வச்சுக்கலாம் சரியா?
உள்ளூர்க்காரர்கள் யாராவது இருந்தால் பெயரை நினைவுபடுத்துங்க ப்ளீஸ்.
செங்கமலம்தான் இவருக்கு எல்லாமேன்னார். நான் உசிரோட இருக்கேன்னா அதுக்கு செங்கமலம்தாங்க காரணமென்றார். இவளான்னு என் பார்வை போனதைப் பார்த்துட்டு, இந்த யானை இப்போ கொஞ்ச வருசமாத்தான் இருக்கு. சசிகலா மேடம் கோவிலுக்குக் கொடுத்தாங்கன்னார்!
ஆஹா.... மன்னார்குடின்னதும் இந்தப்பேர் நினைவுக்கு வராம நம்ம மன்னார்குடி மைனர்வாள் ஆர் வி எஸ் நினைவு எப்படி வரப்போச்சு?
அங்கிருந்த மரப்பெட்டி ஒன்னைத் திறந்து ஃபோட்டோ ஆல்பம் ஒன்னு எடுத்து என் கையில் கொடுத்தார். அங்கே இருந்த (அவர் தூங்கின ) பெஞ்சில் உக்கார்ந்து பாருங்கன்னு உபசரிப்பு வேற.
கோவிலுக்குள்ளே இன்னொரு பிரகாரத்தில் கைப்பிடிச்சுவர் இல்லாம மொட்டைக்கிணறு இருந்துருக்கு. இவருடைய அம்மா சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு, இடுப்பில் உக்கார்ந்திருந்த ஒன்னரை வயசுக்குழந்தை பாபுவோடு கை கழுவ கிணத்தாண்டை போறாங்க. கொஞ்ச தூரத்தில் குழந்தையை இறக்கித் தரையில் உக்காரவச்சுட்டு கிணற்றில் வாளியை இறக்கி நீர் மொள்ளும் போது கால் தடுமாறி கிணத்துலே விழுந்துட்டாங்க. குழந்தையோ திடீர்னு அம்மா கண்முன்னே இருந்து மறைஞ்சதில் பயந்து போய் அழுதுக்கிட்டே தவழ்ந்து கிணத்தாண்டை போகுது. இன்னும் துளி இடம் பாக்கி. கிணத்துலே குறுக்கா போட்டுருந்த மூங்கிலைப் பிடிச்சுக்கிட்டு எட்டிப்பார்க்குது. பாதி உடம்பு பள்ளத்தை நோக்கி............இன்னும் ஒரு விநாடி......... தொபீல்ன்னு தண்ணீரில் விழவேண்டிய குழந்தையை யாரோ அப்படியே அலாக்காத் தூக்கிடறாங்க. யாரு? செங்கமலம்!
ஆபத்தை உணர்ந்தவள் சத்தம் போடாம மெல்ல வந்து தும்பிக்கையால் குழந்தையைத் தூக்கிட்டாள். இதுக்குள்ளே கிணற்றில் விழுந்த அம்மாவின் அலறல் கேட்டு ஓடி வந்த அப்பா, மனைவியைக் காப்பாத்த தொபுக்கடீர்ன்னு கிணற்றில் குதிச்சுட்டார். அல்லோலகல்லோலம்! ஆட்கள் ஓடி வந்து கிணற்றில் இருந்த இருவரையும் காப்பாத்திடறாங்க. அம்மாவுக்கு முதுகில் கொஞ்சம் அடி. மற்றபடி ஓக்கே!
குழந்தையைக் காப்பாத்துன செங்கமலம் இவுங்களுக்கு குலதெய்வமாப்போனதுலே என்ன வியப்பு. அப்பாதான் கோவில் யானைப்பாகனா அப்போ வேலையில் இருந்தவர். கோவில் யானையுடன் கூடவே வளர்ந்த பாபுவும் பெரியவனாகி படிப்பை முடிச்சார். பி.காம் பட்டதாரி. தந்தை மறைவுக்குப்பின் செங்கமலத்தைப் பார்த்துக்கும் பொறுப்பை இவர் ஏத்துக்கிட்டார்.
கோவில் விழாக்கள்,நித்யபடி பூஜையில் பங்கேற்புன்னு செங்கமலம் பயங்கர பிஸியானவள்.
2002 லே செங்கமலம் பூவுலக வாழ்க்கையைமுடிச்சுக்கிட்டாள். மனசொடிஞ்சுட்டார் பாபு. அப்புறம்தான் இப்போ இருக்கும் செங்கமலம் வந்து சேர்ந்துருக்காள். கோவிலுக்கு எந்த யானை வந்தாலும் ஒரே பெயர்தான் செங்கமலம். இங்கத்துத் தாயார் செங்கமலவல்லி நாச்சியார்!
நாலரைக்குக் கோவில் திறந்துட்டாங்க, ஆட்கள் உள்ளே போகத் தொடங்கியாச்சு. வாவான்னு கூப்புடறார் கோபால். செங்கமலத்துக்கும் பாபுவுக்கும் இதோ போயிட்டு வர்றேன்னு சொல்லி கோவிலுக்குள் நுழைஞ்சேன். நீண்ட நெடும்பயணம்! என்னப்பா... இப்படிக் கட்டியிருக்காங்க! அதுபாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கு! சட்னு என்னமோ நாச்சியார் கோவில் ஞாபகம் வந்துச்சு.
ஏழெட்டு படிகளேறி அடுத்த மண்டபம் போனால் எல்லோரும் கூட்டமா நிக்கறாங்க. கருவறைச் சாவிப் பொறுப்பாளருக்குக் காத்திருக்காங்களாம்! கொஞ்ச நேரத்தில் அரக்கப்பரக்கக் கலைஞ்சு ஓடும் கூட்டத்தைப் பின்தொடர்ந்தோம். எங்கே இருந்தாங்க இத்தனை பேர்? எப்போ வந்தாங்க? நானும் ரெண்டரை மணி நேரமா முன்வாசலில்தானே இருந்தேன்?
கூட்டம் கொஞ்சம் குறையட்டுமுன்னு 'தேவுடு' காத்தோம். உள்ளே இருந்தவர்கள் வெளியேறுனதும் நாங்களும் எங்களைத்தொடர்ந்து இன்னொரு கூட்டமும்! டூரிஸ்ட் பஸ் ஒன்னு வந்துருக்கு போல!
கண்முன்னே பெரும் ஆளா எம்பெருமாள் நிக்கிறார். 12 அடி உசரமாம். பரவாசுதேவர். அவர் காலடியை சேவிச்சுக்குங்கோன்னார் பட்டர்! அப்படியே நிக்கறார்ப்பா! முன்பக்கம் உற்சவர் ராஜகோபாலன். இடுப்பை ஒரு பக்கமா ஒடிச்சு நிற்கும் ஒய்யாரம். வலது கையில் முணு வளைவுள்ள சாட்டை! அதில் குலுங்கும் மணிகள். சின்னக்குழந்தைக்கு இடுப்பில் மணிச்சரம், காலில் தண்டை கொலுசு , கழுத்து நிறைய பதக்கமும் சங்கிலியுமா நிறைஞ்சு கிடக்கு! நகை பாரம் பிடிச்சு இழுக்குமோ? இடது கை சப்போர்ட்டுக்கு பின்னம்பக்கம் நிற்கும் பசுமாடு. ரெண்டு கன்னுக்குட்டிகள் தலை உயர்த்திக் கண்ணன் முகம் பார்க்கும் போஸில்.
ஒரு ட்ரே மாதிரி இருந்ததை எடுத்துப் பட்டர்ஸ்வாமிகள் என் கையில் கொடுத்தார். வாங்கும்போதே தலையைக்குனிஞ்சு பார்த்தவள் அப்படியே ஆடிப்போயிட்டேன். அழகான க்ருஷ்ண விக்ரஹம். குழந்தை தொட்டிலில் கிடக்கும் போஸ்! ரெண்டு பேருமாத் தாலாட்டுங்கோன்னு ஆக்ஞை! கோபாலும் நானுமா கையில் பிடிச்சுக்கறோம். அவ்ளோதான்.... ஏதோ ட்ரான்ஸ்லே போனமாதிரி இருக்கு! மனசு மட்டும் விம்முது. கண்ணீர் பார்வைக்குத் திரை போட....
எப்ப, எப்படி கருவறை விட்டு வெளியே வந்தேன்? தாயார் சந்நிதியில் என்ன பார்த்தேன்? கருடனுக்குக் கை கூப்பினேனா? ஒன்னுமே நினைவில் இல்லை. மனசுலே ஒன்னுமே இல்லை. மூளையிலும்தான்! இப்ப நினைச்சுப் பார்த்தாலும் சம்பவங்களை ரீகலெக்ட் செஞ்சுக்க முடியலை. கோபாலைத் தொடர்ந்து போய்க்கிட்டே இருக்கேன். ரெண்டாம் பிரகாரமோ இல்லை மூணாம் பிரகாரமோ சுத்தும்போதுதான் தரையில் பாவி இருக்கும் செங்கல்லில் கால் தட்டி சுத்தும் முத்தும் பார்க்கிறேன்.
தரையெல்லாம் களைகளும் புல்லுமா முளைச்சுக் கற்களைத் தூக்கி விட்டுருக்கு. சீக்கிரம் சரி செய்யலைன்னா பிரகாரம் பாழ்:( எத்தனை பேர் கோவிலுக்குச் சிரமதானம் பண்ண ஆர்வமா இருக்காங்க.... அவர்களைக் கேட்டாலாவது களை பிடுங்கி எடுக்க மாட்டார்களா? பாருங்க, இன்னிக்குப் பகல் ரெண்டரை மணி நேரம் சும்மாத்தானே வெளியே உக்கார்ந்திருந்தோம். மக்களை மகேசன் சேவைக்குப் பயன்படுத்திக்கத் தெரியலையே:(
(பழைய குறுக்கு புத்தி துளசி திரும்ப வந்துட்டாள்!!!)
சரி சரி வா. இருட்டுமுன்னே தஞ்சாவூர் போய்ச் சேரலாமுன்னு கோபால் கிளப்பிக்கிட்டு வந்தார். இன்னிக்கு பகல் திருவாரூரில் இருக்கும்போதே தஞ்சையில் தங்க நல்ல இடம் எதுன்னு (வீடு திரும்பல்) மோகன்குமாரிடம் கேளுன்னதால் அலை பேசினோம். அவர் சில இடங்களை எஸெமெஸ் செஞ்சுருந்தார்.
குளிச்சு ஃப்ரெஷாயிட்டேனே!!!!
தொடரும்.........:-))))
![]()

தஞ்சை மாமணிக் கோவில்.
மன்னார்குடி தஞ்சாவூர் சாலையில் போகும்போது கண்ணில் பட்ட ஊர் வடுவூர்! அட நம்ம கட்டுமானத்துறை குமார்! இங்கே ஒரு ராமர் கோவில் இருக்கு. பத்து நிமிசம் பார்த்துட்டுப் போகலாமுன்னு ஊருக்குள்ளே வண்டியைத் திருப்பினோம்.
கோவில் வாசலுக்கருகில் சிலர் தெருவோரமா இருந்தாங்க. நாங்க விடுவிடுன்னு உள்ளே போனோம். கம்பிக்கதவு போட்டு பூட்டி இருந்த சந்நிதியில் நல்ல வெளிச்சத்தில் ராமர் அண்ட் கோ! எல்லோரும் கொள்ளை அழகு! ஏகாந்த தரிசனம். கோவிலில் ஒரு ஈ காக்கா(??) இல்லை. தனியார் கோவிலோ? என்னமோ தெரியலை..... வேதாந்த தேசிகர் மடம் நடத்தும் கோவிலோன்னு மனசுக்குத் தோணுச்சு.
க்ளிக்கப் பரபரத்த கையை அதட்டி அடக்கினேன். சாமி பாக்கிறாரே!
ஹயக்ரீவர் சந்நிதியையும் ஸேவிச்சுக்கிட்டுத் திரும்ப தஞ்சை சாலையைப் பிடிச்சோம்.கொஞ்ச தூரத்தில் வடுவூர் ஏரி. பறவைகள் ஏராளமாவந்து தங்குமுன்னு கேள்விப்பட்டுருக்கேன். போய்ப்பார்க்க வாய்க்கலை:( விர்ர்ர்ரிடும் வண்டியில் இருந்தே ஒரு க்ளிக்.
தஞ்சைக்குள் நுழைஞ்சு ஹொட்டேல் சங்கம் போய்ச் சேர்ந்ததும் ரூம் வித் வ்யூ இருந்தால் கொடுங்கன்னு கேட்டதுக்கு டெம்பிள் வியூ இருக்கு வேணுமா மேடம் என்றார் வரவேற்பாளர். பழம் நழுவிப் பாலில் விழுந்துச்சு.
மாடிக்குப்போனதும் பெட்டிகளை இழுத்து வந்த பணியாளர் அகலமான பெரிய ஜன்னலில் திரைச்சீலையை சர்ன்னு இழுத்து விட்டதும்..........ட்டடா......
ஒரே இருட்டு!!!! என்னப்பா... எங்கே கோவில்?
அந்தப்பக்கம் நேரா இருக்குது மேடம். மேலே லைட் எரியும். இன்னிக்கு என்னமோ எரியலை.... பவர் கட்டு.
ரெண்டு நிமிசம் இருட்டையே பார்த்துக்கிட்டு நின்னேன். ... அம்மா.............
கொஞ்ச நேர ஓய்வு. அண்ணன், அத்தை , தோழின்னு சிலபல அலைபேசி அழைப்பு உரையாடல்கள், மடிக்கணினியில் இ மெயில்கள் எல்லாம் ஆச்சு. சட்னு ஒரு ஷவர் எடுத்து ப்ரெஷானதும் தில்லானாவுக்குப் போனோம்.இது சங்கத்தின் ரெஸ்ட்டாரண்டு. இந்த சங்கம் குறிப்பது சங்கு. பாஞ்சஜன்யம்?
கதவைத் திறக்கும்போதே பூனையின் ஹீனக்குரல்! அடடா.... என்ன ஆச்சு? பிரசவ வேதனையோ?
குட்டியூண்டு மேடையில் இசைக் கலைஞர்கள் இருவர் வயலினும் தபேலாவுமா ட்யூன் பண்ணிக்கிட்டு இருக்காங்க.
இங்கொன்னும் அங்கொன்னுமா மூலைகளில் ஒவ்வொருத்தர். எண்ணி மூணே பேர்!
மேடைக்கு சமீபமா முன்பக்கம் இருக்கும் இருக்கையில் போய் அமர்ந்தோம். ம்ம்..... ஆரம்பிக்கலாம் என்று ஒரு தலையசைப்பு! (வேற யாரு? எல்லாம் நாம்தான்!)
ஆலாபனை விஸ்தரிப்பு இப்படி ஒன்னும் இல்லாமல் சட்னு ஆரம்பிச்சது கீர்த்தனை. நல்லாவே தெரிஞ்ச பாட்டு. பம்டுரீத்தி கொலு வியவைய்ய ..... ராமா............ . தலையை ஆட்டி ரசிக்க நமக்குத் தனியாச்சொல்லித்தரணுமா?
கீர்த்தனை முடிஞ்சதும் கையைத்தட்டிக் குஷிப்படுத்திட்டு ராகம் ஹம்ஸநாதம் தானே?ன்னதும் வயலின்காரர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ்!
சின்னஞ்சிறுகிளியே ஆரம்பிச்சார். வம்பு இல்லாத செலக்ஷன்! முடிச்சதும் நம்மை ஏறிட்டுப் பார்த்தவரிடம் கண்டநாள்முதலாய் .... மதுவந்தின்னதும் பாடம் இல்லைன்னார். போட்டும்.
என்னை நீ மறவாதே ஆகிக்கோட்டே.... அமிர்த வர்ஷிணி! ஓக்கேன்னு தலையாட்டலோடு வாசிக்க ஆரம்பிச்சார். கோபால் உடனே நீ பாட்டுக்கு அது இதுன்னு கேட்டுக்கிட்டே இருக்கே. அவர் பாட்டுக்குத் தன்னிஷ்டப்படி வாசிக்கட்டுமேன்னார். கலைஞர்களுக்கு ரசிகர்கள் ஆர்வத்தோடு கேட்பது பிடிக்கும். சுருக்கமா உங்களுக்குப் புரியும்படிச் சொன்னால் பதிவர்களுக்கு பின்னூட்டம் மாதிரின்னேன். அப்பதான் பின்னூட்டப்ரேமிக்கு மனசிலாச்சு:-))))
செவிக்கு இசையும் வயித்துக்கு உணவுமா சங்கீதசபை அருமையா அமைஞ்சு போச்சு, பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு முத்தாய்ப்பு வச்சது போல்!!
உள்ளூர்க் கலைஞர்கள் தானாம். விஜயன் வயலின் . ரவி தப்லா! சுமாரான வாசிப்புதான் என்றாலும் இது தானாகக் கிடைச்சதில்லையோ? ரெண்டு பேரையும் பாராட்டிட்டு ஒரு சன்மானம் கொடுத்ததும் எல்லோருக்கும் மகிழ்ச்சி.
மறுநாள் பொழுது விடிஞ்சதும் வியூ பார்க்க ஜன்னலில் கண்ணை நட்டத்தில் கோபுரம் தெரிஞ்சது. ப்ரேக்ஃபாஸ்டுக்கு தில்லானா போனோம். அறை வாடகையில் இது சேர்த்தி. ஒரு அஞ்சாறு ஆர்மி ஆஃபீஸர்ஸ் கூடிச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. அதுலே ஒருத்தர் உயர் அதிகாரி. மற்றவர்கள் காமிச்ச பவ்யத்தைப் பார்த்தால் தெரிஞ்சுருது. தென்னிந்திய உணவுப்பகுதி நல்லா இருந்துச்சு.
தஞ்சை மாமணிக்கோவிலுக்குக் கிளம்பினோம். வரவேற்பில் வழி கேட்டதுதான் நாம் செஞ்ச தவறு. எங்கெங்கோ அரைமணி கும்பகோணம் நெடுஞ்சாலையில் போய் ஆற்றுப்பாலம் கடந்து இடது புறம் திரும்பி உள்ளே பயணிச்சு அங்கேயும் இன்னொரு பாலம் ரிப்பேர் வேலை நடக்குதுன்னு வந்த வழியே திரும்பி கண்ணில் பட்ட ஆளையெல்லாம் விடாம சீனிவாசன் போய் விசாரிச்சு கோவிலைக் கண்டோம். நூத்தி எட்டின் வரிசையில் இது மூணாவது. தஞ்சை மாமணிக்கோவில், மணிக்குன்றம், யாழிநகர் என்று மொத்தம் தனித்தனியா மூணு கோவில்கள் இது எல்லாம் சேர்ந்தேதான் திவ்யதேசக்கோவில்களில் ஒன்றாய் இருக்கு. தஞ்சை அரண்மனை தேவஸ்தானம்.
. நீலமேகப்பெருமாள், மணிக்குன்றப்பெருமாள் ,வீர நரசிம்ஹப்பெருமாள் என்ற பெயர்களில் இங்கே சேவை சாதிக்கிறார் எம்பெருமாள். பராசர முனிவர் இங்கே தவம் செய்யும் காலத்தில் தஞ்சகன், தண்டகன், தாரகன் என்ற மூன்று அசுரர்கள் தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அழிக்க ஸ்ரீ மஹாவிஷ்ணு , நீலமேகப்பெருமாளாக இங்கே அவதாரம் செஞ்சார். தஞ்சகன் யானை உருவம் எடுத்து சண்டைபோடவும், பெருமாள் நரசிம்ஹ அவதாரம் எடுத்து அவனை அழித்தார். அவந்தான் அழிஞ்சானே தவிர அவன் பெயர் எப்படி நிலைச்சுப்போச்சு பாருங்க! தஞ்சை!
பயந்து போன தண்டகன் பூமியைப் பிளந்து கொண்டு ஓட, பெருமாள் வராக அவதாரம் எடுத்துப்போய் அவனை மாய்த்தார். அங்கே இருந்த காளிகா தேவி அரக்கன் தாரகன் கதையை முடிச்சு உதவினாள். அப்புறம் எல்லாம் சுகமேன்னு பரசார முனிவர் அங்கே இருந்து தன் தவத்தை வெற்றிகரமாக முடிச்சார். வராக க்ஷேத்ரம் என்ற சிறப்பும் இதுக்கு உண்டு. இந்தத் தலப் புராணத்தை கோவில் உள்பிரகாரத்தில் எழுதிவச்சுருக்காங்க. மூணு கோவில்களுக்கும் ஒரே பட்டர்ஸ்வாமிகள்தான். நாம் போய் சொன்னால் அவரே வந்து மூன்று கோவில்களிலும் தரிசனம் பண்ணி வைப்பாராம்.
நாம் போய்ச் சேர்ந்தப்ப முதல் கோவிலில் யாரும் இல்லை. நின்றபடி இருந்த நீலமேகனை வணங்கிட்டுப் பிரகாரத்தை ஒரு சுத்து சுத்திட்டு அடுத்த கோவில் போனோம். அங்கேயும் பட்டரைக் காணோம். சாமி தன்னந்தனியா இருந்தார். தரிசனம்செஞ்சுக்கிட்டு இன்னும்கொஞ்ச தூரத்திலிருந்த மூனாவது கோவிலுக்குப் போனோம். அங்கேயும் ஏகாந்த ஸேவை. கம்பிக்கதவுக்குப்பின் வீர நரசிம்ஹர்.
மூலவரை விட்டுட்டு அங்கங்கே சில க்ளிக்குகள். திரும்பி முதல் கோவிலில் எட்டிப்பார்த்தால் யாருமே இல்லை பெருமாளைத் தவிர. கோவில் முன்னால் இருக்கும் தெருவோடு போனால் ஒரு தார்ச்சாலையில் கொண்டுவிட்டது. தஞ்சாவூர் என்று அம்புக்குறி. சரியா 3.7 கிலோ மீட்டர். ஆறே நிமிசத்தில் தஞ்சை நகரத்துக்குள் வந்துட்டோம்.
நாலு கிலோ மீட்டர் கூட இல்லாத தூரத்தை நாப்பது நிமிசமாய் அலைஞ்சு கடந்ததை என்னன்னு சொல்ல? இந்த மாமணிக்கோவில் வெண்ணாற்றங்கரையை ஒட்டி இருக்கு.
பெரிய கோவில் விஸிட் ஒன்னு இருக்கு. எதிர்வாடையில் வண்டியைப் பார்க்கிங் செஞ்சுட்டு கோவில் வளாகத்துக்குள் நுழைகிறோம் இப்போ.
தொடரும்.................:-)

தஞ்சைப் பெருவுடையார் .........
நல்ல பிஸியான போக்குவரத்து இருக்கும் சாலைக்கு அந்தாண்டை கோவில் வளாகம் கண்ணுக்குத் தெரியுது. இடையில் காங்க்ரீட் ஸ்லாபுகளை வரிசையா நிக்கவச்சதொரு தடுப்பு. கடந்து போகும்போதே தண்ணி இல்லாத அகழியும் மதிலுமா ....
கோபுரவாசலுக்கு நேரெதிரா பொதுமக்கள் கடந்து போகும் ஸீப்ரா க்ராஸிங், போக்குவரத்துச் சட்டப்படி இருக்கு. ஆனால் அதெல்லாம் எங்களுக்கில்லை என்பதுபோல் வாகனங்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும். நீ பாட்டுக்கு நின்னா...நின்னுக்கிட்டே இருக்கவேண்டியதுதான்னு என் கையைப் பிடிச்சு கோபால் விருவிருன்னு சாலையைக் கடக்க, கூடவே நான் ஓடுறேன்.
சின்னதா அஞ்சுநிலைக் கோபுர வாசல் வழியாக உள்ளே நுழையறோம். இதுதான் ராஜகோபுரமா இருக்கணும். பெரிய கோவில் கட்டி முடிச்சபிறகு எட்டு வருசம் கழிச்சு இதைக் கட்டியிருக்காங்க. ராஜராஜனின் கேரள வெற்றிக்கு அடையாளமாக் கட்டுனதாம். கேரளாந்தகன் திருவாசல் என்ற அறிவிப்பும் கோவில் அமைப்பு பற்றிய தகவல்களும் சரித்திரச் சுருக்கமுமா வச்சுருக்காங்க.
மனசுக்குள்ளே பூதம் பிராண்டத் தொடங்குச்சு.... அப்போ கேரளநாடுன்னா இருந்துச்சு? சேரநாடுன்னுதானே குறிப்பிடுவாங்க. 1956 இல்தானே தனித்தனி சமஸ்த்தானங்களா இருந்த திருவாங்கூர், கொச்சி ,மலபார் பகுதி எல்லாம் சேர்ந்து கேரளான்னு மாநிலமா உருவானதில்லையோ? இதைத்தானே கேரளாப்பிறவின்னு இப்பவும் நவம்பர் முதல்தேதி கொண்டாடுறோம்! அதுவுமில்லாம.... ராஜராஜன் பதவியில் இருந்ததே 1014 வரைதானே? நம்ம பங்குக்கு ஆராயலாமா?
அதைக் கடந்தால் வாம்மா என்று அழைக்கும் போஸில் வெள்ளையம்மாள். 62 வயசுக்காரி. அவளை மறைச்சு நின்னு படம் எடுத்துக்கும் குடும்பம் ஒன்னு. இவளை நான் '89இல் பார்த்திருக்கேன். தஞ்சைக்கோவிலைப் பார்க்கவில்லையே என்ற என் குறை தீர்க்க கோவையில் இருந்து பஸ் பிடிச்சு வந்து பெருவுடையாரைக் கண்டுக்கிட்டு அடுத்த பஸ் பிடிச்சு திருச்சிக்கு ஓடுனது எல்லாம் .... கனவு மாதிரி இருக்கு! அப்போ வெள்ளையம்மாள் இளவயசுக்காரி!
வலது பக்கம் காலணிகள் வைக்கும் இடம். டோக்கன் கொடுத்துக்கிட்டு, அங்கேயே நினைவுப்பொருட்கள், புத்தகம்,சிடின்னு வித்துக்கிட்டு இருக்கார் ஒருத்தர். இராஜராஜேஸ்வரம் ஒரு செய்தி மாலை. நாம் அறிந்த- அறியாத பல சுவையான தகவல்கள். விலை ரூ 100. ஒன்னு வாங்கினோம்.
அடுத்து மூணுநிலை கோபுரம். ஸ்ரீராஜராஜன் திருவாயில் கோபுரவாசலுக்கு ரெண்டு பக்கமும் 18 அடி துவாரபாலகர்கள். உள்ப்ரகாரத்தின் மதில்மேல் வரிசையா நந்திகள். நுண்ணிய அழகோடு செதுக்கி இருக்கும் சிற்பங்கள் நிறைஞ்ச அழகான கோபுரம். வண்ணம் ஏதும் பூசாமல் கல்லின் வண்ணத்திலேயே இயற்கையா இருப்பது(ம்) அழகே! உட்புறச் சுவரில் முழுசும் தகவல்கள் கல்வெட்டுகளா செதுக்கி வச்சுருக்கு. கல்வெட்டு மொழி ஆராய்ச்சியாளர்களுக்கு சக்கரைப்பொங்கல்.
கோவில் முழுசுமே அங்கங்கே ஏகப்பட்ட சமாச்சாரங்கள் நிறைஞ்ச கல்லெழுத்துக்கள் இருக்கு. ராஜராஜன் கோவிலுக்குக் கொடுத்த நகைநட்டு பட்டியல் பார்த்தால் அதிர்ந்து போய்விடலாம். நிறைய ஆபரணங்களின் பெயரே புதுமையா இருக்கு. அதெல்லாம் என்னவா இருக்குமோ? எடுத்துக்காட்டா... லசுநி,பொத்தி, கிம்பிரி, குருவிந்தம்,சோனகச் சிடுக்கி, ஹளஹளமுங்,கொக்கு, நிம்பொளம் இப்படி 55 இருக்கு அந்தப் பட்டியலில்!
தங்கப்பாத்திரங்கள்183 கிலோ, வெள்ளிப்பாத்திரங்கள் 62 கிலோ, செப்புத்திருமேனி 65, கிராமங்கள் 40, நிலபுலன்களின் இருந்து வரும் நெல் 1,16,000 கலம், திருவிளக்கு 158, அது எரிய தேவைப்படும் நெய் 158 உழக்கு, இவைகளை வழங்கும் பசுக்களும் ஆடுகளும்...
எல்லாம் வாங்குன புத்தகத்தில் இருக்கும் விவரங்கள்தான். வேதவல்லி கண்ணன்,என் தம்பைய்யா ன்னு ரெண்டுபேர் நூலாசிரியர். அவர்களுக்கு என் நன்றிகள். தகவல்கள் நம்பிக்கையானதான்னு கேள்வி வந்தால் நம்பக்கூடியதேன்னு சொல்லலாம். புத்தகத்தைத் திறந்தவுடன் கட்டம்போட்ட இடத்தில் விமானத்தின் நிழல் கீழே விழுமா? விழாதா? விழும். காலை மாலை ஆகிய வேளைகளில் விமானத்தின் நிழல் முழுவதுமாக விழும். என்று போட்டுருக்காங்க. ஒரு பானை சோத்துக்கு ஒரு பருக்கைன்னு நினைச்சேன்.
ராஜராஜன் திருவாசல் கடந்து உள்ளே காலடி எடுத்து வச்சால் கண்முன்னே நந்தி மண்டபமும் பின்னணியில் பாதி மறைந்து மேல்பாதி மட்டும் தெரியும் விமானமும். சிவசிவ....
கெமெராவுக்கு ஓயாத வேலைதான் இனி!
அஞ்சடி உயர நந்தி மண்டபத்தில் ஏறி அருகில் போய்ப் பார்க்கலாம். 12 அடி உயரம் இருக்கார். போதும்போதாமல் ஒரு வேஷ்டியைச் சுத்திக்கட்டி இருக்கார். அவரைச்சுத்தி ஒரு கம்பி வேலி.அவர் கண்போகும் பாதையில் நேரெதிரா கொடிமரம். சின்ன மேடையில் நாலுபுறமும் நந்திகள் அமர்ந்திருக்க , நாலு பூதகணங்களும் நாலு யானைகளும் தாங்கிப்பிடிக்க நர்த்தன கணபதி ஆடும் மண்டபத்தின்மேல் ஓங்கி உயர்ந்து நிக்கும் கொடிமரம். கொடிமரம் நோக்கிக் கைகூப்பும் ராஜராஜன் தனியொரு கற்றூணில்.
இந்தப்பெரிய நந்தியும் மண்டபமும் செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர் காலத்துலே கட்டியவை. ஒரிஜனல் நந்தி ஆஃப் ராஜராஜன் அளவிலே சின்னவர். தனியாக சின்ன மண்டபம் ஒன்னில் கோவில் கொண்டு எட்டிப்பார்க்கிறார். பெரிய நந்திக்கு இடப்பக்கம் முற்றத்தில் இவரைப்பார்க்கலாம்
திறந்தவெளி முற்றம் கடந்தால் பெருவுடையார் கோவில் முன்மண்டபம். 15 படிகள் ஏறணும். கெமெராவைச் சுருட்டி வச்சுடணும். முகமண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம் எல்லாம் கடந்து கருவறைமுன்னே நிக்கறோம். சதுர வடிவ அறையில் லிங்கவடிவில் 13 அடி பரமசாமி. ஆவுடையாருடன் இருக்கார். எல்லாம் பெரிய கோவில் என்ற பெயருக்குத் தகுந்தாற்போல பெரிய சைஸ்!
தரிசனம் முடிஞ்சதும் இடப்பக்கம் இருக்கும் வாசல்வழியா வெளியே வர்றோம். கயிறு கட்டி கைடு பண்ணியிருக்கு. வெளிப்புறம் முழுசும் சிற்பங்களும் கோஷ்ட தேவதைகளுமா காணக்கண் கோடி மட்டுமல்ல, நேரமும் நிறைய வேணும் அனுபவிக்க.
படிகள்விட்டுக்கீழே இறங்கி உட்பிரகாரத்தில் இருக்கும் மற்ற சந்நிதிகளுக்குப் போகலை. பிள்ளையாருக்கும் முருகனுக்கும் கருவூர்தேவருக்கும் சந்நிதிகள் இருக்கு. கருவூர்தேவர் ஆலோசனைகளைக்கேட்டு அதன்படி கோவிலைக் கட்டினான் ராஜராஜன் என்கிறார்கள். நேராப்போய் படி ஏறுனது உள்பிரகாரத்தின் மதில்சுவரை ஒட்டியே ரெண்டடுக்கில் கட்டி இருக்கும் திருச்சுற்று மாளிகையில். கவிழ்த்துப்போட்ட 'ப' வடிவில் வலம் வரும்போதே வலதுபக்கம் கருவறை விமானத்தில் ஒரு கண் வச்சுக்கலாம்.
எதுக்கு? ஓடியாப் போகப்போகுது? எந்தப்பக்கம் பார்த்தாலும் அழகா இருக்கேன்னு தான். மத்தபடி கோவிலின் நீள அகலத்தையோ விமானத்தின் உயர அளவையோ சொல்லப்போறதில்லை. இது உண்மையிலேயே பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய கோவில் அம்புட்டுதான்! ராஜராஜேச்வரம்! ராஜராஜனின் கனவு!
என்ன ஒரு கம்பீரம்! ஏழே வருசத்தில் கட்டி முடிச்சுருக்காங்கன்னா எப்பேர்ப்பட்ட அசுர உழைப்பு! கட்டி முடிச்ச வருசம் 1010 கிபி. ஆயிரத்தாவது பொறந்த நாளை அமர்க்களமாக் கொண்டாடிட்டாங்க. தொல்லியல் துறையின் பொறுப்பில் கோவிலிருக்கு. பராமரிப்பு ஓக்கே! ஆனாலும் நம்மாட்கள் அங்கங்கே எண்ணெய் வழிய விளக்கு ஏத்துவதையும் கற்பூரப்புகையை பரப்புவதையும் விடலை. அம்மன் சந்நிதியில் கோஷ்டத்தில்(மகிஷாசுரமர்த்தினி) கரி பிடிச்சு..... இப்படி அழுக்குப்பண்ணா அருள் கிடையாதுன்னு சாமியே நேரில் வந்து சொன்னாலும் கேப்பாங்களான்னு சந்தேகம்தான்:( போதாக்குறைக்கு ஆட்டோக்ராஃப் போட்டு வச்சுட்டுப் போயிருக்கு சனம்:(
உலகின் பாரம்பரியக் கட்டிடங்கள் பட்டியலில் கோவிலை சேர்த்துருக்காங்க. திருச்சுற்று முழுசும் இடதுபக்க சுவரில் அருமையான பழங்கால ஓவியங்கள். தஞ்சாவூர் பாணி? சிதிலமாக ஆரம்பிச்சுருக்கு. இதில் விஷமிகளின் கைவண்ணம் வேற:( கொஞ்சம் கூடுதல் கவனிப்பு கிடைச்சால் கொள்ளாம்.
ஏகப்பட்ட சிவலிங்கங்கள். அக்னிமூலையில் சின்னதா தீ எரிஞ்சுக்கிட்டே இருக்கு. தீ இருந்தால் புகை. புகை இருந்தால் கரிபிடிச்சுரும்.... பிடிச்சிருக்கு:(
ஒரு மணிநேரம் போதாதுதான். ஆனால் ........ இன்னும் ஒரு இடம் கட்டாயம் போகவேண்டியது பாக்கி.
மனசில்லா மனசோடுதான் கிளம்பினேன் என்பதே உண்மை. வாசலில் வருவிருந்து பார்த்து காத்திருந்தாள், வெள்ளையம்மாள்.
தொடரும் ...........:-)

கலைக் கண்களுக்கு ஒரு விருந்து!
ஏராளமான பழங்கால ஓலைச்சுவடிகள் இருக்கு, அற்புதமான தகவல்கள் அடங்கிய நூலகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். நம்ம வீடுதிரும்பல் மோகன் குமார் தன் பதிவிலும் ரொம்ப நல்லா விவரம் கொடுத்துருக்கார். இதையெல்லாம் வாசிச்சதுமுதல் குறைஞ்சபட்சம் ஒரு காலடி எடுத்து வச்சுட்டு வரணுமுன்னு தவிப்பா இருந்துச்சு. இதைவிட்டால் வேற சான்ஸ் கிடைக்காதுன்னு ஓடினேன். சரஸ்வதி மஹால் , பெயர் பொருத்தம் பேஷ் பேஷ்!
கையெழுத்துப்பிரதிகளும், ஓலைச்சுவடிகளும், தொட்டாலே நொறுங்கிப்போகும் நிலையில் இருப்பவைகளும் கண்ணாடிக்குப்பின்! கங்கைகரையின் படித்துறைகள் ஓவியங்களா இருக்கு. மன்னரே வரைந்தவையாமே! படம் எடுக்க அனுமதி இல்லைன்ற போர்டு பார்த்து மனம் ஒடிஞ்சது உண்மை. (நம்ம மோகன்குமார் வலைப்பதிவில் இருந்து சுட்ட ஒன்னு இங்கே. நன்றி மோகன்)
கீழே உள்ள இந்தப்படம் மருதம்சித்தா என்னும் வலைத்தளத்தில் இருந்து கூகுளாண்டவர் காண்பித்தார். நன்றி.
தஞ்சை மன்னரின் அரண்மனைகளும் நூலகமும் ஒரே வளாகத்துக்குள்தான் இருக்கு. அரண்மனையின் ஒரு பகுதி இப்போதைய கலைக்கூடம். நுழைவுச்சீட்டும் கெமெராச் சீட்டும் வாங்கிக்கிட்டோம். பஸ் கண்டக்டர் மாதிரிதான் இங்கே சீட்டு விற்பனை நபரும். எதுக்குமே மீதிச் சில்லறை தரமாட்டார். இல்லையாம்!!! நல்ல கூட்டம் மேயுது உள்ளே! மற்றவர்கள் கொடுத்த ரூபாய்கள் எல்லாம் எங்கே போயிருக்கும்?
பெரியவர்களுக்கு 7 ரூபாய். இதைப்பேசாம பத்து ரூபாய்னு ஆக்கினால் நமக்கும் சரியான கட்டணம் 'சில்லறை'யாக் கொடுத்த திருப்தி இருக்கும். நூல்வெளியீடுகளோ புகைப்பட அட்டைகளோ எதுவுமே இல்லை(யாம்!) அப்ப எதுக்கு போர்டு?ப்ச்... என்னவோ போங்க.....
மொத்த வளாகத்திலும் பழுதுபார்க்கும் வேலை நடக்கும் அடையாளம். சரி. எப்படியோ நன்னாயால் சரின்னு ஒரு திருப்தி.
கலைக்கூடத்தின் உள்ளே முன் பகுதியிலும் புல்தரையும் பூச்செடிகளும் அழகா அமைச்சுருக்கும் உள்முற்றத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளிலும் கற்சிலைகள் தனித்தனி மேடைகளில் ,நின்னு கவனிச்சுப் பார்க்கும்விதத்தில் இருப்பது எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. வலப்பக்கம் தர்பார் ஹால். வாசலில் நம்மாட்கள் ரெண்டு பேர். இருங்கடா மேலே போயிட்டு வரேன்னு மாடிக்குப்போனோம். திமிங்கிலத்தின் எலும்புக்கூடு ஒன்னு தொங்குது! இந்த இடத்தில் இதன் தேவை என்ன? கலைப் பொருளா அது?
மொட்டை மாடிக்குப்போய் கீழே முற்றம் பார்த்தால் அருமையா இருக்கு. பிரமாண்டமான தூண்களும் வளைவுநெளிவுகளும் கண்ணை இழுத்தது உண்மை. நாமிருக்கும் தளத்துக்கு மேல் கோபுரம் போல ஒன்னு. அஞ்சடுக்கு இருக்கு! குறுகலான மாடிப்படிகள். அங்கே போக நமக்குதான் தயக்கம். மூட்டுவலிக்காரருக்கு புத்திமுட்டு:( ஆனால்.... செடிகளுக்கு ஏது தடை? கவனிச்சு உடனே அகற்றலைன்னா ஆபத்துதான்:(
ஹாலின் நடுவில் ஒருமேடை அமைப்பு. கால்களுக்கு ஓய்வு கொடுக்கலாமேன்னு உக்கார்ந்து தலையை நிமிர்த்திப் பார்த்தால் அழகான விதானம். அட்டகாசமான பூ டிஸைன். அதுக்குள்ளே மேலே போய் வந்த ஒரு ஜோடியிடம் என்ன இருக்குன்னு விசாரிச்சால் அங்கே இருந்து ஊரைப் பார்க்கலாமாம். போகட்டும் வியூ!
அப்போதான் மோகன்குமாருடன் அலைபேசிப் பேச்சு. அதுக்குள்ளே நிறைய இடத்தைக் கவர் பண்ணிட்டீங்களேன்னார். காலில் சுடுகஞ்சி இல்லையோ நமக்கு:(
தர்பார் ஹால் நாயக்கர்களின் காலத்தில் கட்டப்பட்டது. செப்புப்படிவங்கள் எல்லாம் அருமையா பெயர், காலக்கட்டம், கண்டெடுத்த இடம் போன்ற தகவல்களுடன் அழகா வச்சுருக்காங்க. உலோகச் சிற்பங்கள் அவைகளுக்கான கண்ணாடி அலமாரிகளில். (படங்கள் எடுக்கும்போது பிரதிபலிப்பு வர்றதைத் தவிர்க்க முடியலை) லக்ஷ்மிநரசிம்மர் ஒருத்தர் சூப்பரா இருக்கார்.
இதே ஹாலில் உயரமான மேடையில் மன்னர் செர்ஃபோஜி(SERFOJI)யின் ஆளுயரச் சிலை. சுற்றிவர இருக்கும் சுவர்களில் ஓவியங்கள் பிரமாதம். அவர் நிற்கும் மேடையே சிற்பங்களோடு அலங்காரமா இருக்கு!
தஞ்சை பெருவுடையார் கோவிலின் ஆயிரத்தாவது பொறந்தநாள் விழாவுக்காக விசேஷமா உருவாக்கி இருந்த மன்னர் ராஜராஜனின் சிலை இங்கே தேமேன்னு ஒரு ஓரத்தில்!!!!
கலைக்கூடம் விட்டு வெளியில் வந்தோம். இதுக்குப் பக்கத்தில்தான் வாட்ச் டவர் போல் உள்ள இன்னொரு கட்டிடம் இருக்கு. அதற்கு எதிரில் கொஞ்ச தூரத்தில் சின்னச்சின்னக் கும்பல்களா பலர் உக்கார்ந்து கண்ணும் கருத்துமா அந்த டவரை வரைஞ்சுக்கிட்டு இருந்தாங்க. கட்டிடக்கலை பயிலும் மாணவர்களாம்.
எதிரில் இருந்த மற்றொரு கட்டிடத்தில் கைவினைப்பொருட்கள் என்றதைப் பார்த்து அங்கே போனோம். வரப்போகும் கொலுவுக்குப் புது பொம்மைகள் வந்து இறங்கி இருக்குன்னு அவைகளைப் பிரித்து அடுக்கிக்கிட்டு இருந்தாங்க. ஹைய்யோ!!!!! என்ன ஒரு அழகு! எல்லாம் காகிதக்கூழ்தான். கனமே இல்லை பாருங்கன்னு கோபாலுக்குக் குறிப்பால் உணர்த்தினேன்.
இந்த ஹிம்சையில் இருந்து தப்பிக்க கோபாலுக்கு ஒரு வழி கிடைச்சுருக்கு. பொம்மை முகத்துலே களையே இல்லையேம்மான்னுவார்!!!! ஓஹோ...... அப்படியா?
எனக்கு ஒரு மாதிரி 'வின்' கிடைச்சது. தஞ்சாவூர் ஸ்பெஷலான தலையாட்டி பொம்மையைக் காணோம். ' வருத்தப்படாதே. நான் இருக்கேனே'ன்னார் கோபால். அப்பப்ப ஆஃபீஸ் போயிடறாரேன்னு இங்கே நம்மூரில் இதே கான்ஸப்ட்லே கிடைச்ச விளக்கு ஒன்னை வாங்கினேன்:-))))) குழந்தைகள் தட்டிவிட்டாலும் ஆபத்து இல்லாமல் எழுந்து உக்கார்ந்துக்குமாம்! பேட்டரி லைட்தான்.
நம்ம ஜீரா ஆசைப்படறாரேன்னு நம்ம கொலுவுக்கு முருகனைத் தேடுனதில் ஒரு மாட்டுக்காரன் அகப்பட்டான். ஆண்டாள் ரங்கமன்னார் செட் ஒன்னு தோழிக்கு வாங்கினேன். இனி கொலுவில் என்னை நினைச்சே ஆகணும்:-)
கலைக்கூடப் படங்களையெல்லாம் ஆல்பத்துலே போட்டுருக்கேன். பாருங்க.
சீனிவாசனை சாப்பிட அனுப்பிட்டு அறைக்கு வந்து சேர்ந்தப்ப மணி ஏறக்குறைய ரெண்டு. நல்லவேளையா காலையில் லேட் செக்கவுட் கேட்டதில் பகல் மூணுவரை கிடைச்சது. அப்பவே இதே ஹொட்டேலின் வேற ஊர் கிளையில் அறைக்கு ஏற்பாடு செஞ்சுக்கிட்டோம்.
பகல் சாப்பாட்டுக்கு தஞ்சாவூர் ஸ்பெஷல் 'தாலி' மீல்ஸ் ஒன்னும் ரெண்டு லஸ்ஸியும் ரூம் சர்வீஸா கொண்டு வரச்சொன்னதும் பத்து நிமிசத்தில் வந்தது. சோழநாடு சோறுடைத்து. தஞ்சைதான் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றெல்லாம் நாலாப்புலே வாசிச்சது நினைவுக்கு வந்துச்சு. ஒரு அஞ்சு ஆள் தின்னும் அளவுக்கு குண்டான் நிறையச் சோறு!!!!
சரியா மூணு மணிக்குக் கிளம்பினோம். ஒன்னேகால்மணி நேரம். நேராத் திருச்சிதான். தங்கல் இதே சங்கம் ஹொட்டேலின் கிளை.
அறைக்குப்போய்ச் சேர்ந்ததும் என்ன ப்ரோக்ராம் என்று கேட்ட கோபாலிடம்.....
வேறென்ன? ஸ்ரீரங்கம் என்றேன்.
தொடரும்.............:-)))))

↧
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!
காவிரிப்பாலம் கடந்து கொஞ்சதூரத்தில் இடதுபக்கம் திரும்பி இன்னும் கொஞ்சதூரத்தில் அம்மா மண்டபம் தாண்டி வலமெடுத்ததும் மனசெல்லாம் ஒரு பரவசம். தூரத்தே கண்முன்னே தெரியும் ராஜகோபுரம். எங்கெ சுத்தியும் ரங்கனை ஸேவிக்கணும் என்பதுதான் நம்முடைய இந்தப் பயணத்தின் மொத்த நோக்கமே! எங்கெ போய் சுத்தினாலும் ரங்கனை வந்து ஸேவிக்கணும். (எங்கும் சுற்றி ரங்கனைச் சேவி)அதான் பழமொழியைப் பொய்யாக்க வேணாமேன்னு சில ஊர்களைச் சுத்திச் சுத்தி வந்தப்பக் கிடைச்சதையெல்லாம் பார்த்து அனுபவிச்சுக்கிட்டே வந்திருக்கோம்.
( அம்மாமண்டபம் ரோடு பார்த்ததும் ஒரு தோழியின் நினைவு தவறாமல் வந்தது. (மீண்டும் )சந்திக்க முடியலை என்பது ஒரு மனக்குறைதான்)
வழக்கம்போல சீனிவாசன் கேட்ட எத்தனையாவதுக்கு நான், 'இதுதாம் நம்பர் ஒன் இன் த லிஸ்ட்'ன்னதும் அப்படியா அப்படியான்னு மாய்ஞ்சுபோயிட்டார்.
கம்பீரமா நிற்கும் தெற்கு கோபுரம் வழியா ஏழு வீதிகள் கடந்து ரங்கனை சேவிக்கணும். ஆனால்.... கோவிலுக்குப்போகும் வழின்னு அம்பு காட்டிய சாலையில் போனால் அது மேற்கு கோபுரம் வழியா வடக்கே போய் இன்னும் சில தெருக்களைக் கடந்து மறுபடி தெற்கே மதில்சுவரையொட்டியே போகும் சாலையில் வந்து இடமெடுத்து கிழக்கே போகும்வழியில் நமக்கிடப்பக்கம் இருக்கும் தெற்கு நோக்கிய கோபுரவாசலில் வந்து இறங்கினோம்.
தெற்கு உத்தரவீதி. கோவிலுக்கு ஏழு பிரகாரமும் ஏழுதெருக்கள் என்றாலும் இங்கே இந்த கோபுரவாசல்தான் கோவிலுக்குள் போகும் முக்கிய நுழைவிடமா இருக்கு. ரங்கா கோபுரம் இதுதான். இதுக்கு நான்முகன் கோபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. ஆனால்.... என்னால் முன்பக்கம் பார்க்க முடியலை. கொஞ்சம் தள்ளி முன்னால் போய்ப் பார்த்திருக்கலாம்தான். ஆனால் தோணலையே.....வாசலில் இறங்குனதும் (ஒப்புக்கு இருக்கும்) எலெக்ட்ரானிக் கேட் கடந்து ஓடினேன்.
நடுவில் ஒரு நாலு கால் மண்டபம். இடது பக்கம் பூராவும் கோவில்கடைகள். வலது பக்கமும் தொண்டரடிப்பொடியார் சந்நிதிக்கு ரெண்டு பக்கமும் கோவில் கடைகள்தான். நாலு கால்மண்டபம் தாண்டி முற்றம் அடைத்து ஒரு பெரிய மண்டபம். ரெங்கவிலாஸ் மண்டபம். இதில் ஒரு கொடிமரமும் நேயுடு சந்நிதியும் இருக்கு.
உள்ளே நுழைஞ்சதும் இடது பக்க ஓரத்தில் மேசைநாற்காலி. மேசையில் சில ரசீது புத்தகங்கள் பார்த்ததும் விசாரிக்கப் போனோம். கெமெரா டிக்கெட் அம்பது ரூ, கோவில் சரித்திரம் 20 ரூ, கோபுர தரிசனம் நபருக்கு 10 ரூ ன்னு வாங்கியதும் கோபுரதரிசனத்துக்கு வழி என்னன்னு விசாரிச்சால் இருக்கைக்குப் பின்புறம் கை காமிச்சாங்க. கண் உயர்த்திப் பார்த்தால் நேராக நம்ம ஆண்டாள் சந்நிதி. அடிச்சது ப்ரைஸ். உள் ஆண்டாள் சந்நிதியாகத்தான் இருக்கணும் இது.
அருமையான தரிசனம். ஆண்டாளுக்கு மாலை சார்த்தணுமுன்னா அம்பது ரூ கொடுத்தால்போதும். மறுநாள் காலையில் நம்ம பெயரில் மாலை சார்த்துவோமுன்னு (பார்த்தாலே ஏழ்மை நிலையில் இருக்கும் )பட்டர் சொன்னார். மாலையை வாங்குன ஆண்டாள் நம் மனக்குறையைத் தீர்த்து வைப்பாளாம். எழுதித்தாங்கோன்னு ஒரு லிஸ்ட் நீட்டுனார். அவரவர் மனக்குறைக்கு பெருமாள் பெயரில் நம் வகையில் ரெண்டு மாலை! காலையில் வந்து ப்ரஸாதம் வாங்கிக்குங்கோன்னார்
கோபுரதரிசனம் பார்க்க மாடிக்கு போகும் வழி கேட் மூடி இருந்துச்சு. ஒருத்தர் வந்து திறந்து விட்டார். கோவிலைச் சுத்திப் பார்க்கன்னு ஆரம்பிச்சவரை..... முதலில் மேலே போயிட்டு வர்றோம். இருட்டப்போறதுன்னு சொன்னதும் சரி அப்புறமா பேசறேன்னு போனார்.
மொட்டை மாடிக்குப்போனோம். கீழே உள்ள ரெங்கவிலாச மண்டபத்தின் தளம்தான் இது. 21 கோபுரம் இருக்காமே! எண்ணி எண்ணிப் பார்த்தபோதும் கணக்கு மிஸ்ஸாகிக்கிட்டே இருந்துச்சு. ப்ளஸ் குறி போல வடக்கு தெற்காவும் கிழக்கு மேற்காவும் கோபுரங்கள் ஒரே வரிசையில். கேமெராக் கண்ணுக்கு ஒரு ஒளிஞ்சாட்டம்! இதுகளுக்கிடையில் உசரம் குறைவாக இருந்தாலும் கண்ணில் தப்பாமல் ஜொலிக்கும் ரங்கவிமானம். தகதகன்னு............ தங்கம் போர்த்தியது! கெமெரா மூலம் கிட்டக்கக் கொண்டு வந்தால்.... ஹைய்யோ!!!!!
மேற்குப்பக்கம் வியூ பாய்ண்ட் / லுக் அவுட் போல இன்னொரு ஏழெட்டுப் படிகளோடு ஒரு இடம். அதுலே ஏறிப் பார்த்தால் இன்னும் கொஞ்சம் நல்லாத் தெரியுமே தவிர ஒளிஞ்சாட்டாம், ஒளிஞ்சாட்டம்தானாக்கும் கேட்டோ!
ரெண்டு பெண்களும் ஒரு சிறுவனுமா இன்னும் மூணுபேர் படியேறி வந்து சேர்ந்துக்கிட்டாங்க. கையில் இருக்கும் செல்ஃபோன் கேமெராவில் பையன் வளைச்சு வளைச்சுப் படம் எடுத்துக்கிட்டு இருந்தான். அம்மாவும் பெரியம்மாவும் போஸ் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. பெயர் விஜய். சிவகெங்கையில் இருந்து பெரியம்மா வீட்டுக்கு விஸிட் வந்துருக்காங்களாம். செல்ஃபோனில் கேமெரா வந்த பிறகு, வளரும் ஒளி ஓவியர்கள் ஏராளம்!
ஃபொட்டோக்ராஃபர் கிடைச்சா விடமுடியுதா? நம்மையும் ஒரு படமெடுக்கச் சொன்னோம். ப்ராப்பர் கேமெரா பரிச்சயமில்லை. குழந்தைதானே! ஆனாலும் படம் நல்லா வந்துருச்சு:-)
கோபுர அமைப்பு விவரம் தேடுனதில் கிடைச்ச படம் இது. கூகுள் ஆண்டவருக்கு நன்றிகள்.
மணி ஆறு ஆனதும் சொல்லிவச்சமாதிரி இருட்டு சட்னு வந்து கவிழ்ந்தது. ட்வைலைட் எல்லாம் ஒன்னும் இல்லை. வெளிச்சம் டு டைரக்ட் இருட்டு. கவனமாக் கீழே இறங்கி வந்தோம். நபர் காத்துக்கொண்டிருந்தார். பெயர் காளிமுத்து. அரசு அங்கீகாரமுள்ள அஃபிஸியல் கைடு. சார்ஜ் இருநூறு ரூ தான். கோவிலைச் சுத்திக் காமிக்கவான்னார். இருட்டில் என்னன்னு பார்க்க? இன்னிக்கு நாங்களே கொஞ்ச நேரம் சுத்திப்பார்த்துட்டு போறோம். நாளைக் காலையில் திரும்ப வருவோம். அப்போ கைடு சேவை வேணும் என்றேன். நம்ம செல் நம்பரை வாங்கிக்கிட்டார்.
ரெங்கவிலாஸைத்தாண்டி அடுத்த பிரகாரம் வந்தோம். இதுவும் ஒரு தெருதான். அலிநாடன் திருவீதி. கண்ணெதிரே ஆர்யபட்டாள் கோபுரவாசல் . இடது பக்கம் சக்ரத்தாழ்வார் சந்நிதி. வலது பக்கம் ஸ்ரீ ராமானுஜர் சந்நிதி, கிழக்கு கோபுர வாசல், கோவில் அலுவலகம் இப்படி போர்டுலே எழுதிவச்சுருக்கு.
சக்ரத்தாழ்வாரையே பார்க்கலாமுன்னு இடது பக்கம் போனோம். அழகான மண்டபம், ஜொலிக்கும் விளக்கில் சக்ரத்தாழ்வார். அருமையான தரிசனம். வலது பக்கம் வசந்தமண்டபத்துக்கு வழின்னு பார்த்ததும் அதில் நுழைஞ்சோம். கோவில் நந்தவனத்திலூடே போகும் பாதையில் நடந்தால் கொஞ்சதூரத்தில் இன்னொரு சின்னகோபுரவாசலுக்குள் நுழைஞ்சு அந்தப் பக்கம் போனால் தாயார் ரங்கநாயகியின் சந்நிதி. பெரிய முன் மண்டபத்தில் செண்பகப்பூவும் தாமரையும் மல்லியுமா பூக்கள் விற்பனை.
எனக்கு செண்பகம் ரொம்பப் பிடிக்கும். ஒரு பத்துப்பூ சேர்த்து கோர்த்து வச்சுருக்கும் செண்டு ஒன்னை நம் தாயாருக்கு வாங்கிக்கிட்டு உள்ளே போனோம். சந்நிதிக்கதவு சாத்தி இருக்கு, ஆனால் கம்பிகள் வழியா தரிசிக்கலாம். கம்பியினூடே கையைவிட்டு செண்பகத்தை தாயாரிடம் சேர்ப்பித்தேன். சந்நிதிக் கதவை ஆறேமுக்காலுக்குத் திறப்பாங்களாம். தரிசன நேரம் இங்கே பார்த்துகுங்க.
திருமஞ்சனக்குட வரிசை!
தாயார் சந்நிதிக்கு நேரெதிரில் ஒரு அழகான மண்டபம். கம்பர் ராமாயண அரங்கேற்றம் நடந்த இடம். வலது பக்கம் உக்ர நரசிம்மர் சந்நிதி. அரங்கேற்றம் நடந்தபோது, ஒரு அதிசயம் நடந்ததாம். கம்பராமாயணத்தில் ஹிரண்யவதம் பகுதி வாசிக்கப்பட, சுற்றி இருந்தோர் அதை ஆட்சேபிக்கவும், யாம் ஏற்றுக்கொண்டோம் என்று விமானத்தின் மேலிருந்து சிம்மக்குரலில் நரசிம்ஹர் கர்ஜித்தாராம். ஓவர் ரூல்ட்!!! அப்புறம் வேற யாராவது வாயைத் திறக்க முடியுமோ!!!
அவர் சந்நிதியை நோக்கி ஒரு கும்பிடு. அடுத்த பக்கம் போறோம். மூடி இருக்கும் வைகுந்த வாசல், வைகுண்ட ஏகாதசிக்குக் காத்து நிக்குது. வாசலுக்கு முன்பக்கம் ஒரு பதினாறுகால் மண்டபம்.
சரியான வழி ஒன்னும் தெரியாமல் அரை இருட்டில் இங்கே அங்கேன்னு சுத்துனதில் நல்ல வெளிச்சம் இருக்கும் ஒரு சந்நிதி கண்ணில் பட்டது. உள்ளே பரவாசுதேவன். ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளுடன் எப்படி இருப்பாரோ அதேபடி காட்சி தர்றார்.
.
இந்தப்பக்கம் தலையைத் திருப்புனதும் அப்படியே 'ஆ' என் வாய் பிளந்தேன். கண்ணாடி முன் ஆண்டாள்! சர்வ அலங்கார பூஷிதையா இருக்காள். ட்ரெஸ்ஸிங் டேபிள் போல் இருக்கும் அடுக்கு வரிசைக் கண்ணாடியில் ராக்கொடி வச்சுப்பின்னிய ,பின்னம்பக்கத்து ஜடையும் சூடி இருக்கும் பூக்களும் கொண்டை அலங்காரமும் அப்படியே ஜொலிப்பு!
சுட்ட படம் ஒன்னு இங்கே. கூகுளாண்டவருக்கு நன்னி.
மனசு நிறைஞ்சு வழிய நடந்தால் இங்கே வாங்கோன்னு அழைப்பு. கோதண்டராமர் சந்நிதி. நல்ல தரிசனம். சேவிச்சுட்டுத் திரும்பும்போது ஒருத்தர் துளசிக்கொத்து ஒன்னை என் முன் நீட்டினார். கையில் கொடுக்க நீட்டிய கை மடங்கலை. எதாவது கொடுங்கோன்னார். அதான் சாமிக்கு முன் இருக்கும் தட்டில் போட்டாச்சேன்னதும், அது எனக்கு வராது. நீங்க கொடுங்கோன்றார். நாம் நடக்க நடக்கப் பின்னாலேயே வந்துண்டுருக்கார். எனக்கு தர்ம சங்கடமாப் போச்சு. ஒரு பத்து ரூபாயும் அந்த துளசிக் கொத்தையும் கொடுத்தேன். வேற யாருக்காவது கொடுங்கோன்னு சொல்லி நடையைக் கட்டுனேன்.
சில சமயம் கோவில்களில் சட் டென்று கைநீட்டும் நபர்களைப் பார்த்தால் என்ன செய்யறதுன்னு புரியாது. பொதுவா என் கையில் கேமெரா மட்டுமே இருக்கு. கைப்பை இருந்தாலுமே சில்லறை நோட்டா ஒன்னும் வச்சுக்கும் வழக்கம் இல்லை. கோபாலும் பொதுவாக் கோவிலுக்குள் நுழையும்போது கொஞ்சம் பத்துக்களாக் கொண்டு வருவார்தான். ஆனால் இங்கே ஸ்ரீரங்கம் பெரிய கோவில் என்பதால் சில பத்துகள் பத்தாது. ஒரு சில நூறு பத்தாவது வச்சுக்கிட்டால்தான் தேவலை.
எப்பவாவது வரும் பக்தர்களுக்கு இது பெரிய தொகை இல்லைன்னாலும் உள்ளூர்வாசிகளுக்கு அவஸ்தையா இருக்காதோ?
தொடரும்............:-)
பி.கு: இன்னும் சில இடுகைகள் ரங்கனைச் சுற்றியேதான் வரப்போகுது. ஒரு இடுகையில் அடங்கமாட்டான் நம்மவன்!!!!

↧
ரங்கன் பட்டபாடு...... த்சு....த்சு.....
பெரிய பெருமாள்,பெரிய கோவில், பெரிய மேளம், பெரிய தளிகைன்னு எல்லாமே பெருசுதான் இங்கே. பூலோக வைகுண்டம் இல்லையோ!!!! கோவில் மட்டுமே 156 ஏக்கர் பரப்பளவு. இந்தியாவில் இது மட்டுமே ஏழு பிரகாரங்கள் உள்ள ஒரே கோவில். ஒவ்வொன்னுக்கும் ஒரு பெரிய மதில் சுவர். மதில் சுவர்களின் மொத்த நீளம் 11.16 கிலோ மீட்டர்! ஏழாம் பிரகாரம் தொடங்கி அஞ்சாம் பிரகாரம் வரை ரெவ்வெண்டு மதில்களுக்கு இடையில் வீடுகள் நிறைஞ்சு ஒரு முழுத் தெருவே இருக்கு. ஒவ்வொரு தெருவுக்குள் போக ஒவ்வொரு கோபுரம்! கோவிலுக்குள்ளே ஒரு ஊர். முந்திக்காலத்துலே கோட்டைக்குள்ளே ஊர் இருக்கும் பாருங்க அதைப்போலத்தான்.
தெற்கு கோபுரத்தின் உயரம் 237 அடி. 13 நிலைகள். (13 என்றது வெள்ளையர்களுக்குத்தான் ஆகாத நம்பர். நமக்கில்லையாக்கும்!) உச்சியில் 13 கலசங்கள். அங்கே நின்னு பார்த்தால் தூரக்க இலங்கை தெரியுமாம். ஆனால் இது உண்மைதான்னு நிரூபிக்க யாருக்கும் மேலே போக அனுமதி இல்லை.
கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் கட்ட ஆரம்பிச்சு அப்படியே பாதியில் வேலை நின்னுபோய் மொட்டைக்கோபுரமாக் கிடந்ததை அஹோபில மடம் பெரிய ஜீயர் (44 பட்டம் அழகியசிங்கர்) முயற்சியால் 1980 இல் மீண்டும் கட்ட ஆரம்பிச்சு 1987 வது ஆண்டு வேலை முடிஞ்சது. பழைய ஆட்களுக்கு இப்பவும் இது ராயர் கோபுரம்தானாம்!
கோபுரத்தில் எதோ விரிசல் வந்துருக்குன்னு அக்கம்பக்கம் 40 மீட்டருக்குக் கடைகண்ணிகளை அகற்ற உத்தரவாகி இருக்குன்னு சேதி. கட்டி முடிச்சு 25 வருசம்தான் ஆறது:(
கோதண்டராமனை தரிசனம் செஞ்ச கையோட, ஏதோ வழியில் எப்படியோ போய் மறுபடி ரெங்கவிலாஸ் மண்டபத்தின் அப்புறத்தாண்டை இருக்கும் (அகல/ளங்கன் வீதி) கார்த்திகை கோபுர வாசலுக்கு வந்திருந்தோம். வாசலின் இருபுறமும் த்வாரபாலகிகளா கங்கையும் யமுனையும்! இங்கே எப்படி.?
ஒருமுறை நம்ம கங்கை, யமுனை காவிரி மூவரும் தேவலோகத்தில் வாக் போய்க்கிட்டு இருந்தாங்க. அப்போ அந்தவழியா பறந்து போன கந்தர்வன் அவங்களுக்கு பொதுவா ஒரு கும்பிடு போட்டுட்டுப் போனான். என்னைத்தான் கும்பிட்டான், என்னைத்தான் கும்பிட்டான்னு மூணுபேரும் தங்களுக்குள் விவாதம் செஞ்சாங்க. ' மகாவிஷ்ணுவின் காலடியில் இருந்து நான் பிறந்ததால் நாந்தான் உசத்தி'ன்னு கங்கை சொல்றாள். நியாயம் கேக்க மகாவிஷ்ணுவிடமே மூணு பேரும் போறாங்க. கங்கை சொன்னது உண்மைதான். அவள்தான் உசத்தின்னு பெருமாளும் சொல்லிடறார். காவிரிக்குக் கண் கலங்கிப் போச்சு. என்னை இப்படிக் கைவிட்டீரேன்னு கடும் தவம் செய்யப்போயிட்டாள். தவத்தின் வலிமை கூடிப்போனதால் பெருமாள் மீண்டும் ப்ரத்யக்ஷமாகி சாமிகள் பொதுவாச் சொல்லும் வசனம் பேசறார். " உன் தவத்தை மெச்சினோம். என்ன வரம் வேண்டுமென்று கேள்!"
'கங்கையைவிட உசந்தவளா என்னை ஆக்கணும் என்றாள்' இவள்.
'சரி இவளே... நோ ஒரீஸ். அவள் காலில் கிடக்கட்டும். நீ என் கழுத்து மாலையா இருந்துக்கோ'ன்னார். அதுக்குப்பிறகுதான் காவேரி ரெண்டாப் பிரிஞ்சு மறுபடி ஒன்னாச் சேர்ந்து ஒரு தீவை உருவாக்கிடறாள்.
இதுக்கு நடுவில் இன்னொரு கதை வரணும். வருது. பாற்கடலில் தோன்றிய ரங்க விமானத்தை அர்ச்சாவதாரமா, ப்ரம்மா வச்சுப் பூஜை பண்ணிக்கிட்டு இருக்கார். தினப்படி பூஜைக்கு சூரியன் உதவிக்கிட்டு இருக்கான். இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த அரசரொருவர் பிரம்மனுக்கு ஒரு சமயம் உதவப் போனார். அப்பெல்லாம் தேவர்களுக்கு மனுஷ்யர்கள் உதவியும் தேவைப்பட்டது. அதுக்கு பிரதி உபகாரமா என்ன வேணுமுன்னு ப்ரம்மா கேட்கப்போய் அவர் , நீங்கவச்சுப் பூஜிக்கும் ரங்கவிமானம் வேணுமுன்னு சொல்லிட்டார். இதைக்கொடுக்கத் தயங்கிய ப்ரம்மா, சூரியனும் இதை தினமும் பூஜிக்கிறான். அவனாண்டை ஒருவார்த்தை கேட்டுட்டுத்தான் முடிவு செய்யணுமுன்னு சொல்லி ஜகா வாங்குறார். உடனே அரசர், 'அட! சூரியனா? பழம் நழுவி பாலில் விழுந்ததுன்னு வச்சுக்குங்கோ. நானும் சூரிய குல அரசன் தான். நானும் உங்களைப் போலவே அனுதினமும் ரங்கவிமானத்தை வச்சுப் பூஜிப்பேன்னு சொல்றார். இப்படியாக ரங்க விமானம் பூலோகம் வந்து சேர்ந்துச்சு. வழிவழியா இதே இக்ஷ்வாகு குலத்தின் தனமா இது தொடர்ந்து பூஜிக்கப்பட்டு வருது. இந்தக்குலத்தில் தோன்றியவர்தான் ஸ்ரீ ராமர். தசரதகுமாரர்.
ராவணனோடு போர் நடந்து முடிஞ்சு சீதையைக் காப்பாற்றிக் கொண்டுவந்து வனவாசம் முடிஞ்சதுன்னு எல்லா க்ளைமேக்ஸும் ஆனபிறகு ஸ்ரீ ராமனுக்கு அயோத்தி நாட்டின் அரசரா முடிசூட்டு விழா நடக்குது . மேற்படி சமாச்சாரம் எல்லாத்திலும் உதவியா இருந்தவங்களுக்கு தேங்ஸ் கிவிங் கிஃப்ட் கொடுக்கும்போது குலதனமான ரங்க விமானம் விபீஷணனுக்குக் கிடைச்சது.
இலங்கைக்குக் கொண்டு போறான். போற வழியிலே , இந்தக் காவிரித் தீவைக் கடக்கும்போது மாலை சந்தியாவந்தனம் செய்யும் சமயமாச்சு. ரங்க விமானத்தைத் தரையில் வைக்க மனமில்லை. சுத்துமுத்தும் பார்க்க ஒரு பையன் கண்ணுக்குத் தென்பட்டான். அவனிடம் ' கொஞ்ச நேரம் இதைப்பிடிச்சுக்கோ இவனே. இதோ வந்துடறேன்னு சொல்லி அவன் கையில் கொடுத்துட்டு அனுஷ்டானம் முடிச்சுத் திரும்பினால் பையன் விமானத்தைத் தரையில் வச்சுட்டு விளையாடிக்கிட்டு இருக்கான்.
விபீஷணன் என்னடா இவனே இப்படிச் செஞ்சுட்டேன்னு திரும்ப விமானத்தைத் தூக்கி எடுக்க முயற்சிக்கிறான். அசைக்கக்கூட முடியலை. அது அங்கேயே இடம் பிடிச்சு உக்கார்ந்துக்கிச்சு. இந்தப்பையனை என்ன பண்ணறேன் பாருன்னு அவனைத் துரத்த அவன் ஓடிப்போய் ஒரு மலையில் ஏறி உச்சிப் புள்ளையாரா மாறி உக்கார்ந்துட்டார்!!
அதென்னவோ தெரியலை அண்ணன் தம்பி ரெண்டுபேருக்குமே கிடைச்ச சாமியை தங்களுடைய ஊர்வரைக் கொண்டு சேர்க்கக் கொடுப்பனை இல்லை. அண்ணனுக்கும் இதே கதைதான். அவருக்கு சிவன்.இவருக்கு விஷ்ணு.
இப்படித்தான் காவிரிக்குக் கொடுத்த வரத்தின்படி விஷ்ணு இங்கே கோயில் கொண்டார். அந்தக்கோவில் கோபுர வாசலுக்கு கங்கையும் யமுனையும் த்வாரபாலகிகளா வந்து நிக்கும்படி ஆச்சு.
கார்த்திகை கோபுரம் கடந்து உள்ளே போனால் ஏகப்பட்ட தூண்களுடன் பிரமாண்டமான மண்டபம். 212 தூண்கள் இருக்காம்! வலது பக்கம் ஒரு சந்நிதியில் தீபாராதனை காமிச்சு அங்கிருந்த சிலர் கண்ணில் ஒத்திக்கிட்டு இருந்ததைப்பார்த்து காலை வீசிப்போட்டு அங்கே ஓடினால்............. பெரிய திருவடி பெருமாளை நோக்கி கூப்பிய கைகள். கூப்பிட்ட நொடியில் கிளம்பும் வகையில் இதோ பறக்க ரெடி என்றதுபோல் இறக்கைகளை விரிச்சு எழும் பாவனையில் இருக்கார்! பெரிய திருவடி என்ற பெயருக்கேத்தமாதிரி பெரிய உருவம். 25 அடி உசரம்! அம்மாடியோவ்!!!! இவருக்கு 30 மீட்டர் வேஷ்டி வேணுமாம். அகல விரிச்ச கண்ணை சுருக்க மறந்தேன். சந்நிதியைப் பூட்டிட்டாங்க. கம்பிக்கதவு என்றதால் நமக்கு பிரச்சனை இல்லை:-) நகை நட்டுக்களா நாகங்களையே போட்டுருக்கார். கருடனைப்பார்த்து பயந்து ஒவ்வொன்னும் கையிலும் காலிலுமா சுத்திக்கிட்டு இருக்கு. மொத்தம் எட்டு!
செப்புச்சிலை மாதிரி ஒரு நிறம்.ஆனால் மரச் சிற்பமாம். இவருக்கு அபிஷேகம் கிடையாது. ஆனால் கொழுக்கட்டை நிவேதனம் உண்டு!!!
மசமசன்னு ஒரு படம் கிடைச்சது. காப்பிரைட் இருக்காம்.இந்தச் சுட்டியில் பாருங்களேன்.
மண்டபத்துக்குள் மண்டபமா இவருக்கு முன் ஒரு மண்டபம். விக்ரம சோழர் காலத்தில்(1070-1125 ) கட்டுனது. இதுக்கே ஆயிரம் வயசு ஆயிருக்கு பாருங்க! இவருக்கு த்வாரபாலகரா சுக்ரீவனும் அங்கதனும்!!! இவர் மண்டபத் தூண்களில் நாயக மன்னர்களின் சிலைகளும் உண்டு.
மாலிக்காபூர் படையெடுப்பில் இவர் மேல் பூசி இருந்த தங்கத்தை அபகரிக்க இவர்மேல் மெழுகு தடவி தீவச்சு அதில் உருகி வழிஞ்ச தங்கத்தைத் திருடிக்கொண்டு போனதாக ஒரு கதை உலவுது. ஒருவேளை அப்போ செப்புத் திருமேனியா இருந்துச்சோ என்னவோ! இல்லை...இந்தக் கதை இன்னொரு பிரகாரத்தில் இருக்கும் அமிர்த கலச கருடாழ்வாருக்கானதா? சின்னக்குழப்பம்.தெரிஞ்சவுங்க சொல்லுங்க. கீதா? சீக்கிரம் மேடைக்கு வரவும் ப்ளீஸ்:-)
இந்தக்கோவிலிலே ஏராளமான மண்டபங்கள் இருந்தாலும் ரொம்ப அழகானதுன்னு இந்த கருட மண்டபத்தைத்தான் சொல்றாங்க. தேவராஜன் குறடு என்று பெயராம். பகல்பத்தில் நம்பெருமாள் மோஹினியா இங்கேதான் எழுந்தருள்வாராம்!
மண்டபத்தின் இரு பக்கங்களிலும் ஆழ்வார்களின் சந்நிதிகள். ஒரு பக்கம் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்களை தரிசிக்கலாம். மறுபக்கம் திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர், ஸ்ரீ வரதராஜ பெருமாள், நவநரசிம்ஹர் சந்நிதிகள். எல்லாமே சாத்தி இருக்கும் கம்பிக்கதவு வழியாத்தான் ....... நாள் நக்ஷத்திர விசேஷத்துக்கு மட்டும் திறப்பார்களோ என்னவோ!
மண்டபம் கடந்து அடுத்த பிரகாரத்துக்கு ஆர்யபட்டாள் கோபுரவாசல் வழியாகப் போனோம். கொடிமரமும் பலிபீடமுமாய் வலதும் இடதும் திறந்த மண்டபமுமாய் இருக்கு. குலசேகரன் வீதியாம். மூலவரை நோக்கிப்போய்க் கொண்டிருக்கோம். அடுத்து நாழிகைக்கோட்டான் கோபுரவாசல். நீண்ட பாதையில் போய் நின்னது ராஜமகேந்திரன் வீதி(!)யில், சந்தனு மண்டபம் முன்னால். மக்கள் நடமாட்டம் கூடுதலா இருக்கு.
திடீர்னு பட் பட் ன்னு ஒரு சப்தம். ரெண்டு பேர் ஒரு தோல்வாரை தரையில் அடிச்சுக்கிட்டே வர்றாங்க. அவர்களுக்குப்பின்னால் பெரிய பாத்திரங்களைச் சுமந்து கொண்டு சிலர். ஓ.... சாமி சாப்பிடப்போறார்! டின்னர் டைம்லே டிஸ்டர்ப் செய்யலாமான்னு யோசனை எனக்கு. இடது மூலையில் இருந்த படிக்கட்டில் போய் உக்கார்ந்தோம். அப்போ அங்கே வந்த பட்டர் ஒருவரிடம் தரிசனம் உண்டான்னு கேட்டதுக்கு ஸ்பெஷல் தரிசனம் 250ன்னு சொன்னார்.
இந்த பிரகாரத்தில் மேற்குப்பக்கம் திண்ணை போன்ற ஒரு அமைப்பு. அதில் பூட்டப்பட்ட சின்னச் சின்ன கதவுகளா இருக்கு. முன்பக்கம் ஒரு கண்ணாடி கவசத்துக்குள் ஆள் உயரச் சிலைகளா சிலர். மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் குடும்பத்துடன். தந்தச் சிற்பமாம். அதுக்குமேல் வர்ணம் பூசி இருக்காங்க.
கோபால் மட்டும் எழுந்து போய் விசாரிக்கறேன்னு போனவர் தர்ம தரிசனத்துக்கு பெரிய வரிசை காத்துருக்கும்மா. பெருமாளை இன்னிக்குப் பார்க்கலாமா இல்லை நாளைக்கான்னு கேட்டார். என்ன கேள்வி இது? இன்னைக்கே.......தான்.
தரிசனச்சீட்டு வாங்கும் இடத்துக்கு ஒருவர் கை காட்டினார். வளைஞ்சு திரிஞ்சு போய் சீட்டு வாங்கியதும் அவர் காமிச்ச வழியில் போனோம். படிகள் இறங்கி, ஏறின்னு போய் கருவறை முன் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்கே ஏற்கெனவே நின்னுருக்கும் தர்ம தரிசனக்கூட்ட ஜோதியில் கலந்தோம்.
காயத்ரி மண்டபம் இது. எங்கே நேராப் பெருமாளைப் பார்த்துடப் போறோமுன்னு வரிசையை இடது பக்கம் கம்பிகளுக்கிடையில் திருப்பி விட்டுருக்காங்க. அங்குலம் அங்குலமா நகர்வு. ஒரு இருபது நிமிஷக் காத்திருப்பு. நாம் குலசேகரன் படியருகில் போகப்போறோம். அப்ப தடுப்புச்சங்கிலியை அவிழ்த்து ஒரு பெண்ணையும் அவர் மகன் போலிருந்த பதின்மவயது பிள்ளையையும் உள்ளே கூட்டிவந்து நமக்கு முன்னால் ஒட்ட வைத்தார் பட்டர் ஒருவர்.
"பெருமாளைப் பார்க்கணுமுன்னா இங்கேயும் தெரிஞ்சவா சிபாரிசு வேணும்போல! நமக்குப் பெருமாளைத்தவிர வேற யாரையும் தெரியாதே" கொஞ்சம் உரக்கவே சொல்லியிருக்கேன். சட்டென்று திரும்பிய பட்டர் (கொஞ்சம் அசடு வழிய) ' அப்படியெல்லாம் இல்லே மாமி. உங்களுக்கும் தரிசனம் பண்ணி வைக்கிறேன்(!!) நீங்க நன்னா சேவிங்கோ' ன்னார்.
(சுட்ட படம்! இவர் கோபுரப்பட்டி ஆதி நாயகப் பெருமாள் . எதுக்குக் கயிறு? அவனைக் கட்டி வலிக்கணுமா என்ன?)
அடுத்து நம் முறை! ஆஜானுபாகுவா 21 அடி நீளத்தில் பதினைஞ்சடி ஆதி சேஷ மெத்தைப் படுக்கையில் கிடக்கிறான்.புஜங்க சயனம். லேசாத் தலை சாய்ச்சு தெற்கு நோக்கிய திருமுகம் குழைச்சாந்தில் செஞ்சு, புனுகுச்சட்டம் சாத்திய மினுமினுப்பான மேனி! படுக்கை நீளம் போறாமல் வெளியே நீட்டி இருக்கும் பங்கஜச் சரணம் காட்சிக்கு இல்லை. போர்த்தி வச்சுருக்கு. காலடியருகே நிற்கும் விபீஷணனும் தரிசனம் கிடைக்கலையேன்னு இருக்கான். புரட்டாசி மாசம் தைலக்காப்பு. தீபாவளிக்குத்தான் பாத தரிசனம் கிடைக்குமாம். பெருமாளை அடி முதல் முடிவரை சேவிக்கணும் என்ற நியமம் இருந்தாலும்..... நம்மைப்போன்ற நாடோடிகளுக்கு கிடைச்சவரை சொர்க்கம்தான் இல்லையா?
ஊனக்கண்ணால் முகத்தையும் ஞானக்கண்ணால் காலடியும் கண்டேன்.
முகலாயர் படையெடுத்து கோவில்களைக் கொள்ளையடிச்ச காலத்தில் நம்பெருமாளை தூக்கிக்கிட்டு ஒளிஞ்சோடிப்போன கதையும் சிலபல வருடங்கள் அவர் திருப்பதியில் அடைக்கலமா இருந்ததும் தெரிஞ்ச கதைதானே? உற்சவரைத் தூக்கிப்போக முடிஞ்சது. சுதைச் சிற்பமா இருக்கும் மூலவரின் கதி? 21 அடி பெரிய ஆளை எப்படி ஒளிக்க? பேசாம கருவறைக்கு முன் சுவரெழுப்பித்தான், வேற வழி? காற்றுமில்லாம கவனிப்பும் இல்லாம காராக்ருஹ வாசம் செஞ்ச தை நினைச்சாப் பாவமாத்தானே இருக்கு?
கருவறை திருச்சுற்றில் சாளக்ராமத்தால் செஞ்ச திருமலை ஸ்ரீநிவாஸன் நிற்கும் கோலம் கண்டு வணங்கி விஷ்வக்சேனரை தரிசனம் செஞ்சுக்கிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தோம். மணி ஏழரை. ஊர் முழுசும் அந்தகாரம். இந்தப் பக்கங்களில் 16 மணி நேரம் பவர் கட்டாம். அதுக்காக இப்படியா?
திருச்சிக்குப் போய் சாப்பிட்டு ஓய்வெடுக்கணும். சங்கீதாவுக்குப் போனோம். சாப்பாட்டுக்கிடையில் செல்லில் ஒரு கால். காளிமுத்து கூப்புடறார்.
"நாளைக்கு நீங்க கட்டாயம் வந்துருவீங்கதானே?"
" கட்டாயம் வர்றோம். காலை ஒரு எட்டரை ஆகிரும். கோவிலுக்கு வந்தவுடன் உங்களை கூப்பிடறேன்"
வாக்குக் கொடுத்தேன்.
தொடரும்...........:-)

ரெங்கா... எனக்கே மூச்சு முட்டுதே.... உனக்கு எப்படி?
மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் எழுந்து நின்னு விஸ்வரூபம் காண்பிக்கும் ராஜகோபுரத்தைக் கண்ணால் கண்டதும் மனசில் பரவசம் உண்டானெதென்னமோ நிஜம். எத்தனை முறை பார்த்தாலும் இதே உணர்வுதான்!
காளிமுத்துவுக்குச் சொல்லணும் னு நினைச்சுக்கிட்டே ரெங்கவிலாச மண்டபத்துக்குள் நுழைஞ்சதும் கண்ணில் பட்டார் அவர்! கேமெராச் சீட்டு ஒன்னு வாங்கிக்கிட்டோம். முதல் ப்ரகாரத்துலே இருந்து ஆரம்பிக்கலாமென்பது போல கார்த்திகை கோபுரவாசலுக்குள்ளே நுழைஞ்சவரைப் பின் தொடர்ந்தோம். கருடமண்டபத்தையும் தேவராஜன் குறடு ரெண்டு பக்கமும் இருக்கும் ஆழ்வார்கள் சந்நிதிகளை கிளிக்கிக்கிட்டே நானும் போறேன். பொதுவாக எல்லா கைடுகளும் செய்வதைப்போலவே காளிமுத்துவும் நம்ம கோபாலிடம் கோவில்கதைகளைச் சொல்லிக்கிட்டே போறார். நம்மவரும் அந்தக்காதில் வாங்கி அதே காதில் வெளியேற்றிட்டு அவர் சொல்வதைக் கேட்டு(!!!) தலையை மட்டும் ஆட்டிக்கிட்டே போறார். படம் எடுக்க ஒரு ரெண்டு விநாடி பின் தங்க வேண்டியிருக்கே!
(புதிய வாசகர்களுக்கு: இடப்பக்கம், நம்ம கோபால்!)
ஒவ்வொரு வாசலாக் கடந்து முன்நோக்கிப்போகும்போது மேளச்சத்தம் கேட்டதும் காலை வீசிப்போட்டு உள்ளே ஓடினோம். புறப்பாடு! ராஜமகேந்திரன் திருவீதியில் (கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரம்) நல்ல கூட்டம். இடது புறம் இருக்கும் திண்ணை அமைப்புலே ஏறிப்போனவரைத் தொடர்ந்தோம். மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் குடும்பத்துடன் இருக்கும் கண்ணாடிப்பெட்டி ஓரமா இருக்கும் கம்பியழி கிட்டே கிடைச்ச இடத்தில் நிக்கறோம். இங்கேயும் ஜனநெருக்கடிதான்.
கீழே ஒரு ஆறேழடி தாழ்வா இருக்குமிடத்தில் மனிதத் தலைகள். எதிரில் சந்தனு மண்டபம் வழியா நம்பெருமாள் தங்கக்குடை பிடிச்சு ஊர்வலம் வரத் தயாரா நிக்கறார். கெட்டிமேளம் கொட்டியதும் விநோதமான தலைப்பாகை அணிஞ்ச ஒருத்தர் (அரையர்?) படியேறிப்போய் பெருமாள் முன் நிற்க, ஏதோ சம்ப்ரதாயம் நடக்க, படியை மறிச்சிருந்த தண்டம் விலகுனதும் மேளச்சத்தம் ஜோராய் ஒலிக்க, ரங்கா ரங்கான்னு மக்கள் கூட்டம் அழைக்க அழகா இறங்கி வர்றார் அழகிய மணவாளர்,எம்பெருமாள் . எல்லாம் நம்ம கண்ணுக்கு முன்னால். நல்ல சமயத்துக்கு வந்து சேர்ந்துட்டோமுன்னு மனசு விம்முது!
தினம் தினம் புறப்பாடுதான். இவனுக்கு(ம்) காலில்சக்கரம். ஊர்சுத்தக் கிளம்பக் காரணமே வேணாம். அதிலும் இன்னிக்கு ஏகாதசி, வாமன ஜயந்தி(யாம்) கேக்கணுமா? தாயாருக்குப் 'படி தாண்டாப் பத்தினி'ன்னு பெருமையா ஒரு பட்டத்தைக் கொடுத்துட்டு ஹாய்யா இவன் மட்டும் சுத்தலாம். பெண்ணுரிமைன்னு போர்க்கொடி உசத்திச் சண்டைபோட அவளுக்கும் தெரியலை பாருங்க:(
புறப்பாடுகளில் ஒன்னு:-)
அடுத்த வீடியோ. இதுவும் கோவில் தேவஸ்தானமே அவுங்க வெப்ஸைட்லே போட்டது. வைகுண்ட ஏகாதசி சமயம்நடந்த புறப்பாடு. நாம் பார்த்தது இது இல்லை என்றாலும் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கட்டுமேன்னு இங்கே சேர்த்துருக்கேன்.ஏறத்தாழ இப்படித்தான் இருந்துச்சு.இந்தக் கோவில் வெப்ஸைட்லே ஏராளமான புறப்பாடுகள் கொட்டிக்கிடக்கு. ஆர்வம் இருப்பவர்கள் பார்த்து மகிழலாம்.
அழைக்கின்றான் அரங்கன் (விஜய் டிவி) தொடர் முந்திபார்த்துக்கிட்டு இருக்கும்போது ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் சொல்வார் குறைஞ்சதுஒரு வருசம் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பாடுகள் உற்சவங்கள் எல்லாம் பார்க்கணும்னு. நமக்கும் ஆசைதான். அதிர்ஷ்டம் வேணாமா? வேலையில் இருந்து ஓய்வு கிடைச்சதும் போய் ஒரு வருசம் இருக்கலாமுன்னு எப்ப வும் நச்சரிப்பேன். காலப்போக்கில் அது ஆறு மாசம், மூணு மாசமுன்னு போய் குறைஞ்சது ஒரு மாசம் பூராவும் இருக்கணுமுன்னு இறங்கி இருக்கு. 16 மணி நேரப் பவர்கட்டை நீ தாக்குப் பிடிக்கமாட்டேன்னுவார். உண்மைதான். சரி ஒரு பத்து நாள் போய் இருக்கலாமுன்னு இப்போதைய நினைப்பு. திருச்சியில் தங்கலாம். ஸ்ரீ ரங்கத்துலே நல்ல ஹொட்டேல் இல்லைன்னு சாதிக்கிறார்.
எனக்கு திருச்சி வேணாம். கோவிலாண்டையே தங்கணும். நினைச்சா ஓடிப்போய் கோவிலுக்குள் நிக்கணும். அதிகாலை இருள்பிரியா நேரத்தில் கோபுரங்களை தரிசிக்கணும். சூரியனுடைய கதிர்கள் மெள்ள மெள்ள கோபுரத்தில் படர்வதைக் கண்டு பரவசமாகணும். தங்க விமானம் புலர்காலைப்பொழுதில் எப்படி இருக்குன்னு பார்க்கணும் இப்படி ஏராளமான ஆசைகள். நல்ல தங்குமிடங்கள் இருந்தால் தெரிஞ்சவுங்க சொன்னால் கோடி புண்ணியம்.
நம்பெருமாள் கிளம்பிப்போவதை வடமேற்கில் இருக்கும் பெரிய நிலைக்கண்ணாடியில் பார்க்கும் வசதி உண்டு. பெருமாள் பின்னாடி முக்கால்வாசிக்கூட்டம் போனதும் மூலவரைப் போய் சேவிக்கலாமான்னு ஒரு ஆசை வந்தது. அங்கே ஏற்கெனவே ஒரு பெரிய வரிசை தரிசனத்துக்குக் காத்திருக்கு. தரிசனம் செய்யணுமான்னு கேட்டார் கே எம்(நம்ம காளிமுத்துதான். இனிமேப்பட்டு கே எம். ஓக்கேவா?) வேணாம், நேத்து ஆச்சுன்னோம்.
நாம் நிற்கும் திண்ணையில் ஒரு பக்கம் பூட்டிய கதவுகளா இருக்கு பாருங்க.கருவூலங்கள். பெருமாளின் நகை நட்டு, கவசங்கள், தங்க வெள்ளி பண்டபாத்திரங்கள் இப்படி உள்ளே வச்சுருக்காங்க. என்னைக்கு, எந்த நேரத்துக்கு என்ன அலங்காரம்., அதுக்குத் தேவையான நகைகள் என்னென்னன்னு வளக்கமான அட்டவணை இருக்காம். அததுக்கு அதது எப்போ வெளியே போகுது, எப்பத் திரும்பிக்கொண்டு வந்து ஒப்படைக்கிறாங்கன்னு எல்லாம் கணக்காக் கவனிக்க தனி அதிகாரி இருக்கார். முத்திரை போட்டு அனுப்பி முத்திரை வச்சு வாங்கணுமாம்.
கொஞ்சம் தள்ளி வடக்குப்பக்கம் இருக்கும் அறைகள் பெருமாளின் ப்ரைவேட் ரூம்ஸ். திருமஞ்சனத்துக்கு வெந்நீர் வைக்க ( முந்தி நம்ம வீடுகளில் பாய்லர் வச்ச வெந்நீருள் ஞாபகம் வருதே! ), தோய்ச்ச துணி உலர்த்த , சந்தனம் அரைக்க, வெள்ளிக்கிழமைகளில் மூலவருக்கு புனுகு சார்த்தவும், கஸ்தூரி திருமண்காப்பு தயாரிப்புகளுக்கும் அரைச்ச சந்தனத்துக்கு வாசனை திரவியம் சேர்க்கவுமுன்னு தனியா சுக்ரவார அறைன்ற பெயரில் ஒன்னு. பெரும் ஆளுக்கு எததனையெல்லாமும் வேண்டி இருக்கு, பாருங்க.
கோவில் கணக்குகளில் சோழ மன்னர் முதலாம் பராந்தகன் (கி பி 907 )பெருமாளுக்கு ஒரு வெள்ளிக்குத்துவிளக்கு காணிக்கையாத் தந்துருக்கார்னு கோவில் கல்வெட்டு சொல்லுது. அந்த விளக்கு நிலயான முறையில் ஏத்தி வைக்கத் தேவையான கற்பூரம், பஞ்சுத்திரி, எண்ணெய் எல்லாம் ஏற்பாடாக்க 51 பொற்காசுகளும் வழங்கி இருக்கார். ரொம்பச் சரி. நியாயமானவர். அந்தக்காலத்தில் யாரையாவது அழிக்கணுமுன்னா அரசர் யானையை மட்டும் தானம் பண்ணிடுவாராம். ராஜா கொடுத்த யானையை காப்பாத்துவதுதானே முறை? அதுலேயே எல்லா செல்வங்களும் கரைஞ்சு நடுத்தெருவுக்கு வந்துருவானாம் தானம் வாங்கியவன். இது எங்க பாட்டி சொல்லிய ஏராளமான கதைகளில் ஒன்னு:-)
ஏழாம் எட்வர்ட் மன்னர் ரங்கனுக்கு ஒரு தங்கப் பாத்திரம் 1875 இல் கொடுத்திருக்கார். இதுக்கு மெயிண்டனன்ஸ் ஒன்னும் தேவை இல்லை:-))))
யானைன்னதும் இன்னொரு கதை நினைவுக்கு வருது.
பாண்டியர்களும் சோழர்களும் விஜயநகரப்பேரரசின் மன்னர்களும் நாயக்கர் கால அரசர்களும் கோவிலுக்குக் கொடுத்த நன்கொடைகளும், செய்த திருப்பணிகளும் கணக்கில் அடங்காதவை! செல்வச்செழிப்பு கண்டு பொறுக்கமாட்டாமல்தான் தில்லி அரசர்கள் கொள்ளையடிக்க வந்துருக்காங்க.
அதிலும் பாண்டிய மன்னர் முதலாம் சடைவர்ம சுந்தரபாண்டியன் (கிபி 1251-1268) கோவிலையே பொன்மயமாக்கினார்னு கல்வெட்டுகள் சொல்லுது. திருவரங்கன் சந்நிதி, விஷ்வக்ஸேனர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, விஷ்ணு நரசிம்மன் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளின்னு கட்டிக்கொடுத்ததுமில்லாம, கருட வாகனம், பிரபை, பீடம், மகர தோரணம்,ஆதிசேஷன் திருவுருவம் இப்படி எல்லாத்தையும் பொன்னால் செஞ்சு கொடுத்தாராம்.
முத்துவிதானம், முத்தங்கி, மரகத மாலை, பட்டாடை, பொற்றேர் , கிரீடம் என்றெல்லாம் கணக்கு வழக்கே இல்லாமல் வாரிக்கொடுத்துருக்கார்! முத்துப்பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம் பெருமாள் இருக்காரே.... அதுகூட இவர்தான் கொடுத்துருப்பார்,போல!
மேலும் தன்னுடைய யானையுடன் ஒரு படகில் ஏறி, அதற்குப் பக்கத்தில் இன்னொரு படகை நிறுத்தி ரெண்டும் சரிசமமான நீர்மட்டத்துக்கு வரும்வரை பொன்னாலும் மணிகளாலும் நிரப்பி எடைக்கு எடை கோவில்கருவூலத்தில் சேர்த்தாராம். தலவரலாறு நூல் இவரைப் போற்றிப் புகழ்கிறது. ஒடிஸா நாட்டு மன்னரை போரில் வெற்றி கொண்டு அங்கே இருந்து கொண்டு வந்தவையாம் இத்தனை பொன்னும்! சிதம்பரம் கோவில் கனகசபைக்கு பொன்னோடு வேய்ந்து பொன்வேய்ந்த பாண்டியன் என்ற பெயர் அடைந்தவரும் இவரே!
திருவரங்கம் திருக்கோவில் என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை போட்டிருக்கும் புத்தகத்தில் இருந்து கிடைத்த விவரங்கள் இவை. ஒரே ஒரு குறை சடையவர்மனை, சடா வர்மனாக்கி இருக்காங்க:(
கொடுத்த லிஸ்ட்டைப் படிச்சபோதும் சரி, இப்போ தட்டச்சு செஞ்சபோதும் சரி மூச்சு வாங்குது ! இவ்வளவா!!! இவ்வளவா!!!!!
பிகு: குலசேகரன் திருவீதி நுழைஞ்சதும் படம் எடுக்கத்தடைன்னு கே எம். சொல்லிட்டார்:( சில படங்களை சுட்டேன். சுட அனுமதி கொடுத்தவர்களுக்கு என் நன்றிகள்.

↧
↧
முப்பது கைகளோடு நரசிம்ஹர்!!!
இது ரேவதி மண்டபம் என்றதும் ஆஹா..... நம்ம ரேவதி, மறக்கவிடமாட்டாகளேன்னு .... பெருமாளின் நட்சத்திரம் ரேவதி(யாம்) அன்றைக்கு அழகிய மணவாளன் ஜோரா இங்கே வந்துதான் பக்தர்களுக்கு அருள்புரிவானாம். எதிரில் இன்னொரு மண்டபம். அர்ச்சுனமண்டபம். பகல்பத்துக் கொண்டாட்டம் இங்கேதான் என்று சொல்லிக்கொண்டு போன காளி முத்துவைத் தொடர்ந்தோம். மல்லிகார்ச்சுன ராயர் கட்டித் தந்த மண்டபம் இது.
மூன்றாம் திருச்சுற்றுக்கு வந்திருந்தோம். துலாபாரம் செலுத்தும் இடம். என்னென்ன பொருட்களை செலுத்தலாமுன்னு சுவரில் எழுதி வச்சுருக்கு. 19 வகை. அதில் ஒன்னைப் பார்த்ததும் 'அட' என்றேன். கடுகு! பெருமாள் தாளிச்சுடுவார் போல!!!!
எனக்கென்னவோ துலாபாரமுன்னு சொன்னாலே குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்தான் நினைவுக்கு வருது. சமீபகாலமா கவனிச்சது புதுக்கோவில்களில் கூட துலாபாரம் வழிபாடு செய்ய ஏற்பாடுகள் உண்டாக்கப்பட்டிருக்கு. ஸ்ரீரங்கத்தில் துலாபாரம் ஆதியில் இருந்தே இருக்கா? இல்லை இடைச்செருகலான்னு பழைய ஆட்கள் யாராவது சொன்னால் தேவலை!
அடுத்து திருக் கொட்டாரம். ஸ்டோர் ரூம்! அடுத்து செங்கமல நாச்சியார் தான்யலக்ஷ்மி, சந்நிதி. மஹாலக்ஷ்மி மந்திர். இவுங்க ரெண்டு பேருடன், கிருஷ்ணர், யோகநரசிம்மர், ராமன் என்று மொத்தம் அஞ்சு பேருக்குத் தனித்தனி சந்நிதிகள். எட்டிப்பார்த்தால் கண்ணில் ரத்தம் வரும் நிலையில்:( தனலக்ஷ்மிக்கே இப்படின்னா.............. ஹூம் .... என்னத்தைச் சொல்வது?
வலப்பக்கம் கொஞ்ச தூரத்துலே உருளை வடிவமா பிரமாண்டமான அஞ்சு களஞ்சியங்கள். நெல், மற்றும் தானியங்களைக் கொட்டி வைக்கும் மெகா ..... மெகா சைஸ் குதிரு! எப்பக் கட்டுனாங்கன்னு தெரியலை. ஆனால் 15 ஆம் நூற்றாண்டு பழுது பார்த்தாங்கன்னு கோவில் குறிப்பு சொல்லுது. இம்மாம் பெரிய சைஸுக்கு அவசியம் என்னவா இருக்கும்? கட்டிவிட்டதோடு விடாமல் கோவிலுக்கு ஏராளமான நிலபுலன்களை அந்தக்காலத்துலே மானியமாக் கொடுத்துருக்காங்க அரசர்கள். அதுலே விளைஞ்சு வரும் தானியங்களைத்தான் கோவிலில் வேலை செய்யும் அனைவருக்கும் ஊதியமாகக் கொடுக்கறார் பெருமாள்.
செய்யும் வேலைகளின் முக்கியத்துவம் கருதி வருசத்துக்கு இம்புட்டுன்னு நெல் அளந்துருவார். ஹையஸ்ட் பெய்டு வேதாந்தம் கற்பிக்கும் ஆசிரியர்கள்தான்! 400 கலம் நெல். அடுத்ததா மீமாம்சம், வியாகரணம் கற்பிக்கும் ஆசிரியர்கள். 300 கலம். பார்த்துக்குங்க, கல்விக்கண்ணைத் திறந்து வைக்கும் ஆசிரியர்களுக்கு அப்போ இருந்த மரியாதைகளை!
(எனக்குத் தெரிஞ்சே பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது 'நல்லாப் படிக்கலைன்னா, கண்ணை விட்டுட்டு தோலை உறிச்சுக்குங்க'ன்னு சொல்வாங்க! )
தலைமைக் கணக்கர், சோதிடர்கள், கூத்தர்கள், நடனக்கலை ஆசிரியர்கள் வகைக்கு 200 கலமும் குழல் வாசிப்போர்க்கு 170 கலமும் கொடுக்கப்பட்டது.
தையற்காரர், தச்சர், பொற்கொல்லர், சிறுபறை வாசிப்போர், வடமொழி தென் மொழி மறை ஓதுவோர் வரிசைக்கு 150, வைகாசித் திருவிழா நாடக நடிகர்கள் 120 ன்னுதான் சம்பளம்.
தண்ணீர் கொண்டு வருவோர், துணி துவைப்போர், குடை பிடிப்போர், சங்கு முழங்குவோர் ,நடன மகளிர், மண்பாண்டங்கள் வினைவோர், காவல்காப்போர் போன்ற மற்ற வேலைகளுக்கு தலா 100 கலமும் மேற்படியாரின் உதவியாளர்களுக்கு 75 கலமுமாய் நிர்ணயம் செஞ்சுருந்துச்சுன்னு கோவில் புத்தகம் சொல்லுது.
உள்ளே படுத்திருக்கும் ஒரே ஒரு (பெரும்)ஆளுக்குப் பணிவிடை செய்ய எத்தனை நூறாட்கள் பாருங்களேன்! ரெங்க ராஜ்ய பரிபாலனம் ரொம்பப் பெருசுதான்!!! அதான் களஞ்சியமும் பெருசாவே இருக்கு! கோவில் நிலத்தில் பயிரிடுவோர், அப்போ கொள்ளை அடிக்கலை என்பதும் முக்கியம்.
வட இந்தியாவில் பயணம் செய்யும்போது அங்கங்கே கோதுமை மூட்டைகளை அடுக்கிப் ப்ளாஸ்டிக் சாக்குப்படுதா போட்டு மூடி வச்சுருப்பதைப் பார்த்திருக்கேன். அந்த சமயம்தான் ஆயிரக்கணக்கான டன்கள் கோதுமை சரிவரப் பராமரிக்காததால் கெட்டுப்போய் வீணாச்சுன்னும் அதை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் கருத்து தெரிவிச்சதும் அதை எடுத்து தானம் செய்ய தங்களுக்கு அதிகாரமில்லைன்னு உணவுப்பொருள் கழகம் சொன்னதாகவும் சேதி வந்துக்கிட்டு இருந்துச்சு.
அரங்கன் கோவில் கொட்டாரத்தில் அந்தக்காலத்தில் கொட்டி வைத்த தானியங்கள் சீக்கிரம் கெட்டுப்போகாத அளவில் அந்த உருளைக் கொட்டாரங்கள் அமைச்சுருந்தாங்கன்னு வாசிச்சதும், ஐயோ! இந்த முறையைப் பயன்படுத்தி உணவு தான்யம் வீணாகாமல் காப்பாத்தக்கூடாதான்னு மனசுக்குத் தோணுச்சு. இப்பேர்ப்பட்ட அற்புதத்தின் அருமை தெரியாமல் அவை இருக்குமிடம் பாழடைஞ்சு புதர்கள் மண்டிக்கிடக்கேன்னு மனசு தவிச்சது உண்மை. 'பூச்சி பொட்டு' தாராளமாப் புழங்குமோன்னு ஒரு சந்தேகம் வேற! உருளைகள் கீழ் பாகம் செங்கற்கள் சரிஞ்சு இடிஞ்சு வேற கிடக்கு:(
இன்னொரு மதில் சுற்றின் வழியாப்போறோம். நம்மை முந்திக்கிட்டுப் போகுது பேட்டரி கார். கோவில் வகையில் ஒன்னும், தமிழகமுதல்வரின் காணிக்கையா ஒன்னும் இருக்காம். நடக்க முடியாதவர்களை மூன்றாம், நாலாம் பிரகாரங்களில் உள்ள முக்கிய சந்நிதிகளுக்குக் கொண்டுபோய் தரிசனம் முடிஞ்சதும் கொண்டு வந்து விடறாங்க. கோவில் அலுவலகத்தில் போய் இந்த இலவச உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.
அருள்மிகு மேல் பட்டாபிராமர் சந்நிதி, வாசுதேவப்பெருமாள் சந்நிதி, தன்வந்திரி சந்நிதி எல்லாம் இந்தத் திருச்சுற்றில்தான் இருக்கு. தரையைப் பழுது பார்க்கும் பணி நடக்குது இப்போ!
ரங்கநாயகித் தாயார் சந்நிதிக்கு வந்தோம். நேத்து தரிசனம் ஆச்சேன்னு இன்னிக்கு உள்ளே போகலை. முன் மண்டபம் கலகல, பூ வியாபாரம் கமகமன்னு ஒரு பக்கம்! பகல் வெளிச்சத்தில் கோவில் பளிச்!. கம்பராமாயண மண்டபத்தின் அருகில் உக்ர நரசிம்மர் இருக்கார்.நேற்று உள்ளே போகலையேன்னு ஒரு நிமிஷம் தரிசனம் பண்ணிட்டு வர்றேன்னு கே எம் கிட்டே சொன்னப்ப, உள்ளே ஒன்னுமில்லை என்றார் அவர்.
போனமுறை இங்கே வந்தப்ப ( அது ஒரு இருபத்திநாலு வருசங்களுக்கு முன்னே!!!) உக்ர நரசிம்ஹர் சந்நிதியில் தரிசனம் செஞ்சுக்கிட்டு இருந்தப்ப அங்கிருந்த பட்டர் நாங்கள் யாருமே எதிர்பாராத ஒரு விநாடியில் பெருமாளின் தீர்த்தத்தைக் கைநிறைய வாரி மகளின் முகத்தில் ஜ்லீர்னு அடிச்சுட்டார். எல்லோருக்கும் திக்ன்னு ஆகிருச்சு. மகள் திகைச்சுப்போய் நின்னுட்டாள். அப்பதான் அவர் சொன்னார் 'இனி பயம் என்பதே இவள் வாழ்விலிருக்காது'ன்னு!!!! இது உண்மைன்னு கூட பல சமயம் நினைச்சதுண்டு!!! அப்ப ஒரு பெரிய நரசிம்மரை அங்கே பார்த்த நினைவு.
என்னடா.... அதெப்படி உள்ளே ஒன்னுமில்லாமப் போகுமுன்னு போய்ப் பார்த்தேன். மூலவருக்கு ஏதோ பழுது. புதுசா ஒன்னு செஞ்சுக்கிட்டு இருக்காங்களாம். திரை போட்டு வச்சுருக்கு. அதுவரை? சின்னதா ஒரு உற்சவர் இருக்கார். அவரை தரிசனம் செஞ்சுக்கிட்டு வெளியே இருந்த ஓவியங்களை க்ளிக்கினேன். ஹிரண்ய வதம், லக்ஷ்மிநரசிம்ஹன், Gகதையுடன் பெருமாள் என்று அழகான ஓவியங்களில் சனம் ஆட்டோகிராஃப் போட்டு வச்சுருக்கு:( சிதிலமாகும் ஓவியங்களைச் சரிப்படுத்தினால் நல்லது.
அச்சச்சோ!!!! ஹிரண்யனுக்கு பதிலா இதை வதம் பண்ணிட்டேனே!!!! அதிர்ச்சியில் கைகளால் வாய் பொத்தும் சிம்ஹன்! 30 கைகள்! எனக்கிது அபூர்வம்!!!
ஏழுகடல் தாண்டி, ஏழு மலை தாண்டி காட்டுக்குள்ளே இருக்கும் குகையில் ஒரு கிளி இருக்கும். ராக்ஷ்ஸனுடைய உயிர் அந்தக்கிளியிலே இருக்குன்னு எங்க பாட்டி சொன்ன கதை போல இவன் உயிர் அதுலேயா????
மேட்டு அழகிய சிங்கர் (உக்ர நரசிம்ஹர்) சந்நிதிக்கு வலப்புறம் போனால் வைகுண்ட வாசல் !
கம்பராமாயண மண்டபத்துக்கு நேரே பின்னால் ஸ்ரீ கிருஷ்ணர் ராதா ருக்மிணி சந்நிதி. ராதா ருக்மிணியா? ருக்மிணி சத்யபாமா இல்லையோ???? இதுவும் சாத்தி இருந்துச்சு. எங்கே பார்த்தாலும் மண்டபங்களும் கோபுரங்களும் ஏராளமான சந்நிதிகளுமா இருந்தாலும் ஒரு சில சந்நிதிகளே முக்கியமா இருக்கோ என்னமோ? இல்லே வெவ்வேற டைமிங்கா இருக்கலாம்.
புஷ்கரணிக்கு மதில் எழுப்பிக் கம்பி வேலியும் போட்டு வச்சது நல்லதுதான். அழுக்கில்லாமல் இருக்கு. பக்கத்துலே கோதண்டராமர், குலசேகராழ்வார் சந்நிதிகள்,
வடகிழக்கு மூலையில் இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்துக்குள் இன்னொரு குட்டியா தேர் போல ஒரு டிஸைனில் திருமாமணி மண்டபம் . ராப்பத்துக்கு நம்பெருமாள் இங்கேதான் எழுந்தருளுவாராம். அகளங்கன் திருவீதி கிழக்குப் பிரகாரம் முழுசும் மணல்வெளியாக் கிடக்கு. கோவில் பீச். விழாக்காலங்களில் மக்கள்ஸ் ஹாயா உக்கார்ந்து ஆயிரங்கால் மண்டப நிகழ்ச்சிகளை ரசிக்கலாம்.
வைகுண்ட ஏகாதசி சமயம் 47 தென்னை மரங்களின் அடிப்பாகத்தை வெட்டிக்கொண்டுவந்து நட்டுப் பந்தல் போட்டுருவாங்களாம். அதென்ன 47ன்னு ஒரு கணக்கு? ஆயிரங்கால் மண்டபத்தில் இருப்பவை 953 (கற்றூண்கள்)கால்கள்தான் . மற்றதெல்லாம் என்ன ஆச்சு? தெரியலை. ஆனால் ஆயிரமுன்னு சொல்லிட்டு அதுக்குக்குறைவா இருந்தால் பெருமாளுக்குப்பிடிக்காது.அதை ஈடு கட்டத்தான் இந்த 47!!! கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் கணக்கு சரி:-)))))
இந்த ஆயிரங்கால் மண்டபமே அடிபாகம் முழுசும் மண்ணில் புதையுண்டு கிடந்ததாம். அப்புறமா மண்ணைத் தோண்டி சரிப்படுத்துனாங்க,இங்கே பாருங்கன்னு காமிச்சார் கே எம்.
வெள்ளைக்கோபுரம் பளிச்ன்னு மின்னுது. தில்லிப்படையினரிடம் இருந்து கோவிலைக் காப்பாத்த உள்ளூர் மக்கள் செய்த தியாகம் ஒன்னா ரெண்டா? வெள்ளையம்மாள் என்னும் பெண், தில்லிப்படைத் தளபதியை அழைச்சுக்கிட்டுக் கோபுரத்தின் மேல் ஏறி அவனையும் அங்கிருந்து தள்ளி, தானும் விழுந்து உயிரை மாய்ச்சுக்கிட்டாள்ன்னு சம்பவம் சொல்லப்படுது. அவள் நினைவாக இந்தக் கோபுரத்துக்கு வெள்ளைக்கோபுரமுன்னு பெயர்னு சொல்றாங்களாம்.
தில்லிப்படையினர் கொள்ளையடிக்க வந்து ஊர் மக்களை விரட்டிட்டு கோவிலுக்குள்ளேயே குடி இருக்கத் தொடங்கியதும், அவர்களை விரட்டவந்த ஊர் மக்களில் பனிரெண்டாயிரம் பேர்களை தில்லிப்படையினர் கொன்று குவிச்சதாகவும் கோவில் சரித்திரத்தில் வாசிச்சப்போ மனம் நெகிழ்ந்து போச்சு. அந்தத் தியாகிகளையும் அவர்கள் தியாகத்தையும் இந்த வெள்ளைக்கோபுரம் நினைவூட்டுதுன்னு நான் நினைக்கிறேன்.
கோபுரப்பட்டி ஆதிநாயகப் பெருமாள் கோவிலில் அரங்கனுக்காக உயிர்நீத்த அந்த பனிரெண்டாயிரம் பேர்களுக்கும் ஆடி அமாவாசை தினம் தர்ப்பணம் செய்யறாங்கன்னு தெரிஞ்சதும் கண்ணும் மனசும் கலங்கிதான் போச்சு. நம்ம 'ரங்கன் பட்டபாடு' பதிவில் காலில் கயிறு கட்டிக்கிடக்கும் பெருமாள் படத்தைப் பார்த்தீங்களே அவர் இவர்தான். கோபுரப்பட்டி ஆதிநாயகன். திருவரங்கத்தில் இருந்து 10 கிமீ தொலைவில்தான் இருக்காராம். உத்தமர்கோவில் தாண்டி மண்ணச்சநல்லூர் பக்கம். முதலிலேயே தெரிஞ்சுருந்தால் போயிருக்கலாம்:(
வெள்ளைக்கோபுர மணல்வெளியில் கோபுரவாசலுக்கு எதிரே ஒரு நாலுகால் மண்டபம் இருக்கு. பகலில் சுடும் மணலில் நடந்து பாதம் கொப்புளிக்காமல் இருக்க எதிர்ப்புறம் மதில் ஓரமா மேற்கூரை ஒன்னு போட்டு வச்சுருக்காங்க.
சிற்பக்கலையை அனுபவிக்க இப்போ நாம் சேஷராயர் மண்டபம் போகிறோம். .
தொடரும்......:-)

கல்லிலே கலை வண்ணம் கண்டேன்........
இன்னையத் தேதிக்கு சரியா 496 வருசங்களுக்கு முன்னே ) மாமன்னர் கிருஷ்ண தேவராயர் திருவரங்கம் பெரிய கோயிலுக்கு வருகை தந்தார். கோவில் கல்வெட்டு சொல்லுது 16-2-1517ன்னு!
பெரிய பக்திமான். 1509 வது வருசம் அரியணையேறியதும் நிறைய கோவில்களுக்குப்போய் தரிசனம் செய்தது மட்டுமில்லாமல் போன இடங்களுக்கெல்லாம் வாரிக்கொடுக்கும் மனம் இருந்துருக்கு.
சில வருசங்களுக்கு முன்னே (2009) இவருடைய ஐநூறாவது ஆண்டு விழா கொண்டாடிய சமயத்தில் திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதிக்கு இவர் முன்பு அளித்த நகைநட்டுக்கள் எல்லாம் மாயம் என்ற சேதி வந்தது:( யாரு ஆட்டையப் போட்டாங்களோ... அது அந்தப் பெருமாளுக்கே வெளிச்சம்!
மன்னர் வரும்போது தனியாவா வருவார்? கூடவே மந்திரிப்பிரதானிகள் ,காவலர்கள், ஆள் அம்புன்னு கூட்டம் வந்துருக்கும்தானே? சேஷராயர் என்ற முக்கியப்ரதானி, கோவிலைச் சுற்றி வரும் சமயம் ஆயிரங்கால் மண்டபத்து எதிரில் காலியா இம்புட்டு இடம் கிடக்கேன்னு நினைச்சாரோ என்னவோ..... ' கட்டு ஒரு மண்டபத்தை'ன்னு கட்டுனவர் வெறும் கோவில் மண்டபமா விடாமல் விஜயநகரப்பேரரசின் வீரத்தைக் காட்டும் வகையில் மண்டபத்தின் முன் வரிசையில் பிரமாதமான கலை அழகுடன் எட்டு தூண்களை வடிவமைச்சுட்டார். இந்த மண்டபமும், குதிரை வீரர்களின் சிற்பங்களும் கட்டிடக்கலை அழகுக்கே சவால் விடும்வகையில் அமைஞ்சுருக்கு! மண்டபத்துக்கு சேஷராயர் மண்டபம் என்ற பெயரும் வந்துச்சு.
வெள்ளைக்கோபுரத்துக்கு தொட்டடுத்து இருக்கும் இந்த சேஷராயர் மண்டபம் பார்த்து மகிழ எல்லா மதத்தினருக்கும் எல்லா நாட்டவர்க்கும் தடை ஏதும் இல்லை. (முதல் நான்கு சுற்றுக்கள், இந்துமதத்தினர்களுக்கு மட்டும் என்ற அறிவிப்பு பார்த்தேன்)
கல்லுலே ஜடை பின்னி விட்டுருக்காங்க!
ஐயோ ...என்னடா செய்யறே? ன்னு கை கொண்டு வாய் பொத்தி இருக்கும் குரங்கன்!
குதிரை வீரனும் வேடுவர்களுமா புலியுடன் போராடிக் கொன்னுட்டாங்கப்பா.......
தசாவதாரத் தூண்களின் வரிசை!
இதென்ன முதலை வயிற்றில்........ ம்ம்ம் என்னவா இருக்கும்? கதை இருக்கு!
ராம ராவண யுத்ததில் மயங்கி விழுந்த லக்ஷ்மணனைக் காப்பாத்த ஹனுமன் சஞ்சீவி மூலிகையைத் தேடிப்போறார். அப்போ அவர் போகும் காரியத்தைக் கெடுக்க ராவணனால் ஏவப்பட்ட அசுரன் முனிவர் வேஷம் போட்டுக்கிட்டு ஹனுமன் போகும் வழியில் காத்துருக்கார். முனிவரைக் கண்ட ஹனுமன் விநயத்தோடு அவரை வணங்கினார். இதோ இந்தப் புனிதக்குளத்தில் நீராடி வந்து ஆசி பெற்றுக்கொள் . ராம காரியம் ஜெயிக்கும் என்றார் முனிவர்.
அதன்படி குளத்தில் நீராடப்போன ஹனுமனை ஒரு முதலை விழுங்கிருச்சு. முதலை வயிற்றைக் கிழிச்சு ஹனுமன் வெளியில் வர்றார். ஆக்ச்சுவலி அந்த முதலை ஒரு தேவன். தான்யமாலி என்ற பெயர். ஒரு சாபத்தால் முதலையாக இங்கே இருந்தான். ஹனுமனால் முதலை கொல்லப்பட்டதும் சாபவிமோசனம் ஆச்சு. (என்ன சாபம்னு தெரிஞ்சவுங்க சொல்லலாம். நான் நினைக்கிறேன், ஈவ் டீஸிங்)
தான்யமாலி தேவலோகத்துக்குக் கிளம்பிப் போகுமுன், ' நீராடச் சொன்ன முனிவர் ஒரு போலி. உண்மையில் அவன் அரக்கன்' என்ற உண்மையைச் சொல்லிட்டுப் போறார். போகும் காரியம் தாமதமாச்சே என்ற கோபத்தில் ஹனுமன் , முனிவரின் சடைமுடியைப் பிடித்து சுழற்றி ஒரே வீச்சாய் வீச, அரக்கனின் உண்மை உருவம் வெளிப்பட்டு, ராவணன் சபையில் சடலமா வந்து வீழ்ந்தான்.
இந்தக் கதை முழுசுமே படம் பார்த்துக்கதை சொல் பாணியில் அங்கே செதுக்கி இருக்கு!!!!
முதல்லேயே கதை தெரிஞ்சுருந்தா நம்ம கே எம்மையே விழி பிதுங்க வச்சுருப்பேன். நல்ல சான்ஸ் போயிருச்சு! இப்ப எப்படிங்கறீங்கதானே? வலை எதுக்கு இருக்கு? வீசுனதில் ஆப்டுச்சு:-) பதிவர் விஜய் அவர்களுக்கு நன்றிகள்.
ராவணன் சபையில் ஹனுமன்! நம்ம சனத்துக்கு ஆஞ்சநேயனைக் கண்டாலே பக்தி பெருகி வெண்ணையா வழிஞ்சுரும்!
உங்க வெண்ணெய் வேணாமுன்னு அவரே வந்து கதறினாலும் கேக்கமாட்டாங்க. பாருங்க எப்படிப் பூசி வச்சுருக்காங்கன்னு:(
சிறிய திருவடிக்கு அப்படின்னா பெருமாளைச் சுமக்கும் பெரிய திருவடிக்கு இப்படி! சந்தனமும் குங்குமமும்!
இதுக்கிடையில் நம்ம கைடு கே எம் மண்டபத்துச் சிற்பங்களைப் பற்றிய விளக்கங்களைச் சொல்லும்போது கலக்கோ கலக்குன்னு ஒரே காக்டெயில். நமக்கு விளக்கம் சொல்லவேண்டியதாப்போச்சு:-) (எ.கா)
இல்லீங்களே.... இது ராமாயணத்துலே வர்ற வாலி வதம். இத பாருங்க, ராமர் (மரத்துக்குப்)பின்னால் நின்னு அம்பு போடறார்! லக்ஷ்மணன் அட, ராமான்னு தலை குனிஞ்சு நிக்கறார்:-)
திருப்பாற்கடல் கடைதல்
குழலூதி மனமெல்லாம்......
வெண்ணெய்க்குத் தப்பிப் பிழைச்சவர்:-)
நின்னவாக்குலேயே ஒரே கிழி!!!
ராமனும் சீதையும்.
வெண்ணெய் உண்ட கண்ணனாம்.... கொழுக் முழுக்ன்னு :-))))
வராகம் என்னத்தை வேணாமுன்னு சொல்லுது?
மோஹினி அமுத குடத்துடன்?
கோபிகைகளின் வஸ்த்ரம் அபகரித்தது:(
கே.எம் சில வருசங்களாத்தான் கைடு வேலை செய்யறாராம். இதுக்கு முன்னே எதோ கடை வச்சு வியாபாரம்.இன்னும் கொஞ்சம் சரித்திரம், புராணம் எல்லாம் தெரிஞ்சு வச்சுக்குங்கன்னு சொல்ல வேண்டியதாப்போச்சு. ஆமாம்.... கொடுக்கற இருநூறுக்கு உபதேசம் வேறன்னு மனசுக்குள்ளே வையாமல் இருந்தால் என் பாக்கியம்.
இவ்வளவு அழகான மண்டபத்தின் தற்காலபயன் பாடு என்னன்னு பாருங்க. டுவீலர் பார்க்கிங் ஸ்பேஸ். (வெளங்கிரும்!)
அசுத்தம் செய்யக்கூடாதுன்னு போர்டு எழுதி வச்சாலும் யாரும் சட்டை செய்யமாட்டாங்க போல:(
என் வகையில் மண்டபத்துக்குக் கொடுக்கும் மரியாதையாக, இந்த இடுகையில் வேறு எந்த இடத்தையும் பற்றி எழுதலை. ஜஸ்டிஃபைடுதானே?

ஸ்ரீ வேணுகோபாலன்

அந்தக்காலத்துலே ஒரு தி க காரர்! ஊன்னா ஆன்னா சிலை செஞ்சுடுவார்!
தசாவதாரம் சினிமா அநேகமா எல்லோரும் (கமலைப்பிடிக்காதவர்களும் இதில் சேர்த்திதான்) பார்த்துருப்பீங்கதானே? குலோத்துங்க சோழன் வைணவத்துக்கு எதிரியாப் போயிட்டான். அரியும் சிவனும் ஒன்னு அதை அறியாதவன் வாயிலே மண்ணு என்றது அவனுக்குத் தெரியலை, பாருங்க!
வைணவத்தைப் பரப்பிக்கொண்டிருந்த ராமானுஜரை எப்படியாவது போட்டுத்தள்ளனுமுன்னு தன்னுடைய ஆட்களை விட்டுத்தேடச் சொல்றான். தேடிப்போன ஆட்கள் யாரும் ராமானுஜரை இதுக்கு முன்னே பின்னே பார்த்ததில்லை. ராமானுஜரும் அவருடைய சீடன் கூரத்தானும் இருக்குமிடம்போய்ச் சேர்ந்த காவலரிடம், நான் தான் நீங்கள் தேடி வந்த ராமானுஜர்னு ஆள் மாறாட்டம் பண்ண, கூரத்தானை பிடிச்சுக்கிட்டுப் போயிடறாங்க. குருவை எப்படியாவது தப்பிக்கவைக்கணுமுன்னு சீடனுக்கு ஆசை.
கூரத்தானைப் பிடிச்சுப்போய் குலோத்துங்கன் முன்னே நிறுத்தினாங்க. இது ராமானுஜர் இல்லைன்னு அவனுக்குத் தெரியவந்துச்சு. (யாராவது ஒற்றர்கள் பத்த வச்சுருப்பாங்க) ராமானுஜர் இருக்கும் இடத்தைச்சொன்னால் உன்னை விட்டுடறேன்னு ஆசை காமிச்சுப் பார்த்தான். கூரத்தான் வாயைத் திறக்கலை. நீ சொல்லலைன்னா உன் கண்ணைப் பிடுங்கிப் போட்டுருவேன்னு பயமுறுத்தறான் சாளுக்கிய சோழ பரம்பரையில் வந்த முதலாம் குலோத்துங்கன். சாளுக்கிய சோழன்( 1070 -1120)
'என்ன ஆனாலும் சொல்லமாட்டேன். நீ என்ன என் கண்ணைப்பிடுங்கறது? நானே பிடுங்கிப் போட்டுடறேன் பார்'னு தன் கண்களைக் குத்திக்கிட்டு பார்வையை இழந்தார் கூரத்தாழ்வார். தப்பிப்போன குரு கர்நாடகத்தில் மேலக்கோட்டை என்ற திருநாராயணபுரம் ஊருக்குப்போய் அங்கே பெருமாளுக்குச் சேவை செஞ்சுக்கிட்டு வர்றார். 12 வருசம் இப்படியே போனது. கோவிலுக்குள் வரக்கூடாது என்று தடை செய்து, தாழ்ந்த இனம் என்று சொல்லி ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்துப்போய் சாமி தரிசனம் செஞ்சு வச்ச புரட்சிக்காரர் இவர்.
உண்மையான வைணவனுக்கு சாதி பேதம் கிடையாது. பெருமாள் எல்லோருக்கும் பொதுவானவன் , அவன் மேல் அன்பு கொண்ட அனைவரும் வைணவர்களே என்பது இவர் கொள்கை. இவர் கட்சியே ஆதி காலத்து தி.க. திருமால் கட்சி!!!!
அங்கிருந்து கிளம்பும் சமயம் ஊர் மக்களும் பக்தர்களும் இவர் பிரிவைத் தாங்க முடியாமல் அச்சு அசலா இவரைப்போலவே ஒரு சிலை செய்து வணங்க ஆரம்பிக்கிறாங்க. சிலையைக் கண்ட ராமானுஜர் மக்களின் அன்பை அனுகிரகிச்சு அந்த சிலைக்கு 'தமர் உகந்த திருமேனி' என்று ஆசி வழங்கறார். அப்பவே அவருக்கு வயசு 80 !
இந்தக் காலக்கட்டத்துக் கிடையில் சாளுக்கிய சோழனுக்கும் புத்தி தெளிவேற்பட்டு செஞ்சது தப்புன்னு உணர்ந்தான். பொதுவா இவன் நல்லவன்தானாம். நிலவரியை மட்டும் விட்டுட்டு பாக்கி எல்லா வரிகளையும் தூக்கிட்டான். சுங்கம் தவிர்த்த சோழன் என்ற புகழுக்கு உரியவன். பார்வை இழந்த கூரத்தாழ்வார் திருமாலிருஞ்சோலைக்குப்போய் அழகனை கும்பிட்டுக் காலம் கழிக்கிறார். 12 வருசத்துக்குப்பிறகு ஒரு சமயம் ராமானுஜரும் கூரத்தாழ்வாரும் காஞ்சியில் சந்திக்கிறாங்க. அப்போதான் இவர் கண் பார்வை போன விஷயமே தெரியுது. மனம் உருகி காஞ்சி பேரருளாளரை வேண்ட, மீண்டும் கண் பார்வை கிடைச்சது.
ராம அவதாரத்தில் லக்ஷ்மணனாகவும், க்ருஷ்ணாவதாரத்தில் பலராமனாகவும், கலியுகத்தில் ராமானுஜனாகவும் (ராமனின் அனுஜன்) அவதாரம் செஞ்சவர் ஸ்ரீராமானுஜர். இவருக்கு யதிராஜர் என்ற பெயரும் அன்பர்களால் அளிக்கப்பட்டது. யதி என்றால் துறவி. துறவிகளுக்குள் இவர் அரசர், யதிராஜர்! (இந்தப்பெயரைத்தான் காலப்போக்கில் எத்திராஜ்ன்னுச் சொல்லிக்கிட்டு இருக்கோம்)
இவர் அவதரிச்ச தலம் ஸ்ரீபெரும்புதூர். இவருக்கு அளிக்கப்பட்ட யதிராஜர் என்ற பட்டப்பெயரையே ஸ்ரீ பெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் தாயாரும் தனக்கானதாக்கிப் இவரைப் பெருமைப்படுத்தி இருக்காங்க. யதிராஜநாதவல்லி. பொதுவாப் பெருமாள் கோவில்களில் இருக்கும் சொர்க்கவாசல் இந்தக்கோவிலில் கிடையாது. ராமானுஜர் அவதார தலம் என்பதால் இது நித்ய சொர்க்கவாசல் தலம்! அவதரிச்ச நாள் பிங்கள வருசம் சித்திரை மாதம் சுக்லபட்சம் பஞ்சமி திதி திருவாதிரை நக்ஷத்திரம் கூடிய திருநாள். (ஏப்ரல் மாசம் நாலாம் தேதி, 1071 ஆம் ஆண்டு)
உலக மக்கள் அனைவரும் விண்ணுலகில் நற்பயன் அடைய வேணுமுன்னு தமக்குத் தன் குருவினால் ரகஸியமாக உபதேசிக்கப்பட்ட எட்டெழுத்து மந்திரத்தை கோவில்மதில்மீது ஏறி ஊர் முழுசும் கேட்க வைத்தவர் இவர். ஓம் நமோ நாராயணாய!!!! இந்த மந்திரத்தை உபதேசித்த குரு இவரை சீடனாக ஏற்குமுன் 17 முறை இவருடைய பொறுமையை சோதனை செய்தாராம். ஒவ்வொருமுறை அவரை அண்டி, சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி யாசிக்கும்போதும் இன்று போய்விட்டு இன்னொருநாள் வா என்று 17 முறை அலைக்கழித்தாராம். பதினெட்டாவது முறைதான் சீடனாக ஏற்றுக்கொண்டார்.
ஊர்மக்களுக்கு ரகசிய மந்திரத்தை உரக்கச் சொல்லிய ராமானுஜர், தன்னுடைய குருவின் வாக்கை மீறிட்டோமேன்னு தண்டனையை எதிர்பார்த்து குருவின் முன் போய் நிற்க, 'நீரே எம்பெருமானார்' என்ற ஆசிகள் குருவிடமிருந்து கிடைச்சதாம்!
பிறந்த ஊரை விட்டு இவர் பிரிந்து போனவுடன், ஊர்மக்கள் மனம் வருந்தி இவரை ஒரு சிலையாக வடித்துவைத்து வழிபடத் தொடங்குனாங்க. அந்த சிலைதான் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் இருக்கும் ஸ்ரீராமானுஜர் சந்நிதியில் மூலவர். தானுகந்த திருமேனி!
இவர் இன்னும் உயிருடன் தங்களிடையில் வாழ்வதாகவே மக்களுக்கு எண்ணம். இந்த ஒரு நம்பிக்கையால் ஐப்பசி மாசம் முதல் தை மூல நட்சத்திரம் வரை இவருக்கு வெந்நீர் அபிஷேகம்தானாம். குளிருக்கு அடக்கமாக் கம்பளிச் சொக்கா, தலைக் குல்லா எல்லாம் உண்டாம். தினமும் காலையில் அவருக்கு நிவேத்தியம் (ப்ரேக் ஃபாஸ்ட் ) சப்பாத்தியும் பாலுமாம்.
காஞ்சியில் இருந்த ராமானுஜரை, நம்ம ரெங்கன் வாவான்னு சொல்லி ஸ்ரீரங்கத்துக்கு வரவழைச்சுட்டான். அங்கே வைணவ மடத்தின் தலைவராகவும் கோவில் நிர்வாகங்களில் பணியெடுக்கும் வாய்ப்பும் வந்து சேர்ந்துச்சு. சீர்திருத்தம் செய்யும் மனசு சும்மா இருக்குமோ?
கோவில் காரியங்களில் அஞ்சு பதவிகள் என்று இருந்ததைப் பத்தாக்கினார். அதிகாரம் ஒரே இடத்தில் குமிஞ்சு இருப்பதைவிட பரவலாக இருந்தால் நல்லது. இன்னும் பொறுப்போடு வேலை நடக்குமே!
திருப்பதியார் ,திருப்பணி செய்வார், நம்பிகள், உள்ளூரார், விண்ணப்பம் செய்வோர், திருக்கரகக்கையார், ஸ்தானத்தார், பட்டர்கள், ஆரியபட்டர்கள், தாசநம்பிகள் இப்படி பத்து குழுக்கள். இதில்லாமல் ஏகாங்கிகள், சத்தாத முதலிகள் என்னும் வகையில் எட்டு வைணவத்துறவிகள், வேத்திரபாணிகள் என்று வகைவகையான குழுக்கள். கருவூலத்தின் தலைமை அலுவலர் வேலைக்கு எடுக்கும் நபர் ஒரு வேளாளராக இருக்கவேண்டும் என்றார். அந்தந்த பிரிவினருக்கு உள்ள கடமைகள். சிறப்புரிமைகள் எல்லாம் வகுத்தவரும் ராமானுஜரே!
ஒவ்வொரு வேலைக்கும் திறமையான ஆட்களைத் தெரிவு செய்வதில் வல்லவரா இருந்தார். சமையலுக்கு உப்பு, மிளகு , மசாலாச் சாமான்கள் எடுத்துக்கொடுப்போர், கோவில் கதவுகளுக்கு முத்திரை இட ,களிமண் அரக்கு தயாரித்தல் , சிற்பிகள், கொடிகள் தோரணம் இவைகளுக்கு வண்ணம் தீட்டும் சம்மியர்கள், ஸ்வாமிக்கு புது நகை செய்யவும் பழையதைப் பழுதுபார்க்கவும் பொற்கொல்லர்கள், கோவில்விளக்குகள் பாத்திரபண்டங்கள் செய்வோர், மடைப்பள்ளியில் ஸ்வாமிக்கு மண்பாண்டச் சமையலுக்கான மண்பாண்டங்கள் செய்து கொடுப்போர் (தினமும் புது பாண்டம்!),பெருமாளின் உடுப்புகளைத் துவைக்கும் ஈரங்கொல்லிகள் என்ற சலவையாளர்கள், தச்சர்கள், நெசவாளர்கள், தைய்யல்காரர்கள், தொங்கும் விதானங்கள், மடிப்புத்தொங்கல்கள் திரைச்சீலைகள் போன்றவைகளுக்கு சரிகை வேலைப்பாடு செய்பவர்கள், பெருமாள் குடை, ஆலவட்டம் பல்லக்கு அலங்கரிக்கும் துணிகள் தயாரிப்பவர்கள் என்று ஒரு வேலையைக்கூட விடாமல் கவனித்து ஒழுங்கு செய்திருக்கார்.
கோவிலில் ஒட்டடை நீக்கிகள், கோவில் கோபுரங்களில் வளரும் புல்லுருவிச் செடிகளைக் கவனித்து அகற்றுவோர் , காவிரியின் அக்கரையிலிருந்து கோவில் மடைப்பள்ளிக்குப் பால்தயிர் கொண்டுவரும் நபர்கள் ஆற்றைக் கடக்கப் பயன்படுத்தும் படகுகளின் படகோட்டிகள் இப்படி ரங்கனுக்கு சேவை செய்யும் ஆட்களில் ஒருவரைக்கூட விடவில்லை!!!! கோவில் ஒழுகு என்னும்கோவில் வரலாற்று நூலில் எல்லாம் விரிவாக இருக்காம்.
அந்தப்புத்தகம் கிடைச்சால் வாங்கிக்கணும் என்று எனக்கு ரொம்ப ஆசையா இருந்துச்சு. திருவரங்கம் திருக்கோயில் புத்தகம் வாங்கும்போது விசாரிச்சேன். அவுங்க அப்படி ஒன்னும் இல்லையேன்னுட்டாங்க. ஏழு பாகங்களாக ”கோயிலொழுகு (ஸ்ரீரங்கம் கோயில் வரலாறு)” என்று ஒரு மாபெரும் புத்தகத் தொகுதியை ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாசாரியார் அவர்கள் எழுதியிருக்கிறார். நான் அலுவலகத்தில் போய்க் கேட்டுருக்கணும். எப்படியோ விட்டுப்போச்சு:(
ராமானுஜரைத் தண்டிக்க அழைத்து வர ஆணையிட்டவனாக வைணவ குருபரம்பரை நூல்கள் குறிப்பிடும் கிருமிகண்ட சோழன் என்பவன் குலோத்துங்கன் அல்ல, அவ்யபதேச்யன் என்று குறிப்பிடப்படும் ஒரு குறுநில மன்னன் என்றும் அந்த நிகழ்வுகளின் பின்னுள்ள உள்நாட்டுக் கலகங்கள் பற்றியும் ஆதாரபூர்வமான செய்திகளை கோயிலொழுகு நூல் வழங்குகிறது என்று வாசிச்சது முதல் அடடா..... உண்மையான சரித்திரம் என்பது இன்னும் எழுதப்படவில்லை என்று சொல்வது எவ்வளவு உண்மை என்று உணர்ந்தேன்.இப்பப்பாருங்க நானே இந்தப் பதிவின் முன்பகுதியில் சாளுக்கிய சோழன் கொடுமை செஞ்சுட்டான்னு எழுதி இருக்கேன். இது நான் வாங்கிய ' திருவரங்கம் திருக்கோயில் 'புத்தகத்தில் உள்ளதே!
தினமும் ரங்கனுக்குள்ள வேலைகளையும் டைம்டேபிள் போட்டு வச்சுருக்கார். காலையில் ஆறேகால் மணிக்குத் திருப்பள்ளி எழுச்சி. வீணை இல்லேன்னா சிதார் இசை கேட்டுத்தான் கண் திறப்பானாம்! கொடுத்து வச்ச மஹராஜன்!
பாரீஸ் பயணத்தில் Palace of Versailles பார்க்கப் போயிருந்தோம். அரசனின் பள்ளியறையில் பட்டுத்துணிகள் உள்ள விதானத்துடன் தங்கக்கட்டில்! கட்டிலின் கால்பக்கம் இடுப்புயரத்தில் ஒரு தடுப்பு. காலையில் இசைக்கலைஞர் குழு ஒன்று வந்து வாசிச்சு மன்னரை எழுப்புவாங்களாம். சின்ன மன்னருக்கே இப்படின்னா ஈரேழுலகங்களையும் படைத்தவரைப் பற்றிச் சொல்லணுமா? ப்ரெஞ்சு மன்னர்களின் வாழ்வு அங்கே புரட்சி நடக்கும்வரை கொண்டாட்டமா இருந்துருக்கு!
திருப்பதியில் பாருங்க 24 மணி நேரம் நிக்கறது பத்தாதுன்னு நிம்மதியாத் தூங்கக்கூட விடமாட்டாங்க. கிட்டத்தட்ட 12 மணிக்குக் கோவிலைப் பூட்டிட்டு காலையில் ரெண்டு மணிக்கெல்லாம் சுப்ரபாதமுன்னு சாமியை எழுப்பிருவாங்க. அதைக்கூட நம்ம எம் எஸ் அம்மா இனிய குரலில் பாடுவதைப்போல் இல்லாமல் .... ப்ச்.
கண் முழிச்சவுடன் எதிரில் தெரியும் காட்சி மங்கலமா இருக்கவேணாமா? இதுக்கு யானையும் பசுவும் வந்து நிக்கும். கோவில் சோதிடர் அன்றைக்கு என்ன நாள், திதி , நக்ஷத்திரம், யோகம், கரணம் னு பஞ்சாங்கம் வாசிப்பார். (அவனுக்குத் தெரியாதா என்ன? எல்லாம் மிதப்புதான்!!!)
அப்புறம் பெருமாளுக்குப் பல் தேய்ச்சு, கை கால் சுத்தம் செஞ்சு கண்ணாடி காமிக்கணும். சரியா இருக்கான்னு பார்த்துப்பார். (தந்த சுத்தி, கர சுத்தி, பாத சுத்தி) அப்புறம் குளியல். வெந்நீராக்கும்! பகல் குளியலுக்கு மட்டும் பச்சத்தண்ணி. அப்புறம் வெண்ணெய் பூசுதல், குங்குமப்பொடி சாத்தல், மார்புக்கும் பாதங்களுக்கும் சந்தனக்குழம்பு .வெள்ளிக்கிழமைகளில் பச்சைக்கற்பூரம் கலந்த எண்ணெய்! அப்புறம் ட்ரெஸ் சேஞ்ச். நெத்தியில் கஸ்தூரி நாமம், நகை நட்டுக்கள், புதுசா அன்றலர்ந்த பூமாலைகள். இவை எல்லாம் இசைக்கலைஞர்களின் வீணை இசை கேட்டபடியே ஜாலியா!
எல்லாம் ரெடின்னதும் திரையை தூக்கிருவாங்க, அதற்குரிய பணியாட்கள். தரிசனம் கொடுக்க ஆரம்பிச்சுருவார். ஒரு மணி நேரம் பார்க்க வர்றவங்களைப் பார்த்தாச்சு. அப்புறம் ப்ரேக் ஃபாஸ்ட். ஆனதும் வெற்றிலைபாக்கு ன்னு தாம்பூலம். சுவைச்சு முடிச்சதும் வாய் கொப்புளித்தல். அப்புறம் ஊர் சுத்தக் கிளம்புதல் இப்படி பயங்கர பிஸி லைஃப்! வருசத்தின் 365 நாளில் 322 நாள் புறப்பாடுன்னா பாருங்க! வாரம் ஒரு நாள் லீவுன்னாலே ஜாஸ்தி.
இப்படியெல்லாம் பெரும் ஆளின் தேவைகளை உணர்ந்து அவன் அரண்மனையின் ராஜ்ய பரிபாலனத்தை ஒழுங்கு செய்தவர் தன்னுடைய 120 ஆவது வயதில், இவர் அவதரித்தபோது இருந்த அதே பிங்கள வருசம், மாசி மாதம், சுக்லபட்சம் தசமி நாளில் சாமிகிட்டே போயிட்டார்!
தர்மோ நஷ்ட என்று அசரீரி ஒலிச்சதாம்! தான் உடுத்திய ஆடையையும், சூடிய துளசி மாலையையும், பொற்கிண்ணத்தில் எண்ணெயையும் ரங்கனே கொடுத்து அனுப்பினாராம்.
இவரைப் பள்ளிப்படுத்த வைணவமடத்தில் இருந்து கிளம்பி பெரிய ஊர்வலம் வருது. அப்போ அசரீரியாக பெருமாளின் வசந்த மண்டபத்துலேயே அவரை வைக்கும்படி உத்தரவாச்சு. அதான் ஏகப்பட்ட மண்டபங்கள் இருக்கேன்னால்... இந்த குறிப்பிட்ட வசந்த மண்டபம்தான் ராமானுஜர் கோவில் விவகாரங்களைப் பார்க்கப் பயன்படுத்திய ஆஃபீஸாக இருந்தது!
இங்கே அவரை திருப்பள்ளிப்படுத்திய பின் இந்த மண்டபத்தையேஅவர் சந்நிதியாக மாற்றி விட்டார்கள். துறவிகளை எரிக்கும் வழக்கம் இல்லை. பள்ளிப்படுத்திய இடத்தின் மேலே மூலவர் சிலை ஒன்று உள்ளது. தானே ஆன திருமேனி என்று சொல்கிறார்கள். இன்னும் உயிரோடு இருக்கிறார். தலை முடி, கை நகங்கள் வளர்கின்றன என்றெல்லாம் வாசித்துள்ளேன். வாசலில் வேற இப்படி ஒரு போர்டு.
ஒருவித எதிர்பார்ப்புடன் சந்நிதிக்குள் நுழைந்தேன். மூலவர் பத்மாசனம் போட்டு சிலையாக உக்கார்ந்துருக்கார். கண்கள் பாதி திறந்த நிலையில் இருக்கிறதோ? (ப்ரமையா இருக்குமோ?) இடது கை மடியிலும் வலது கை உயர்த்தி ஆசி வழங்கும் பாவனையிலும் இருக்கார். லேசா சுவாசம் வருதோன்னு கூடத் தோணுச்சு.
இவருடைய சந்நிதிக்குப் பக்கத்தில் மீசைக்கார பார்த்தசாரதி கோவில் கொண்டுள்ளார்.
இந்தப்பதிவு எழுதுமுன் கொஞ்சம் வலை வீசுனதில் கிடைத்த ஒரு தகவல் அடுத்த பாராவில். அநேக உள்ளூர்க்காரர்களுக்கு இது தெரியுமாம். அதீத ப்ரேமையாலும் மரியாதையாலும் பூவுலகில் இருந்து மறைந்தவரையும் இன்னும் இருக்கார் என்று நினைத்துக்கொள்ளும் மனோபாவத்தால் எழுந்த விஷயம் என்றுதான் நினைத்துக் கொள்ள வேணும். நான் முதலில் Fossil உருவாகுவது போலவோ என்றே நினைத்தேன். ஆனாலும் அப்படி ஆக மில்லியன் வருடங்கள் ஆகவேணுமே. இவர் மறைந்து இன்னும் ஆயிரமாண்டுகள் கூட ஆகலையேன்னு ............
ஸ்ரீரங்கத்தில் உடையவர் சந்நிதியில் மூலவரான இராமானுஜரின் திருமேனி அவர் உயிர் நீத்த உடல் என்று சிலர் நம்புகிறார்கள். உடையவருடைய திருமேனி அந்தச் சந்நிதியில் மூலவருக்குக்கீழ் திருப்பள்ளிப்படுத்தப்படுள்ளது என்பதுதான் உண்மை. உடையவர் திருப்பள்ளிப்படுத்தப்பட்டபின் அந்த இடத்தில் மெழுகால் ஆன விக்ரஹமாகச் செய்யப்பெற்றதுதான் இந்தத் திருமேனி. இந்த விக்ரஹம் உருவாக்கப்பட்டபோது, அவர் திருமேனியில் சாத்தப்பட்ட காவி வஸ்திரங்கள் மெழுகுடன் சேர்த்துக் குழைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்தத் திருமேனிக்கு இரண்டு முறை குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைக்கொண்டு திருமஞ்சனம் செய்து பாதுகாக்கப்படுகிறது.
தரிசனம் முடிஞ்சு நடந்து வரும்போது அருங்காட்சியகமும், தேவஸ்தான அலுவலகமும் கண்ணில் பட்டன. ரெங்கவிலாஸ் மண்டபம் சமீபித்தோம். கொடிமரத்தில் கம்பிகள் போட்டு அதில் ஏராளமான பூட்டுகள் தொங்கிக் கொண்டிருந்தன. அதைப்பற்றிக் கேக்கணுமுன்னு நினைக்கும்போதே கே எம்முக்கு, கோபால் பணம் கொடுத்து 'பைபை' சொல்லிட்டார். 'பாவம் அவரும் காலை ஆறில் இருந்து இங்கேதானிருக்கிறார். வீட்டுக்குப்போய் வரட்டுமு'ன்னு அனுப்பிட்டேன் என்றார்.
பூட்டு சமாச்சாரம்தான் என்னன்னு தெரியலை. பெஸண்ட் நகர் வேளாங்கன்னி கோவிலிலும் இப்படி பூட்டுகளைத் தொங்கவிட்டு வழிபாடு செய்வதைக் கவனிச்சுருந்தேன்.
இந்தத் திருச்சுற்றில்தான் ராமானுஜர் சந்நிதிக்குப்போன வழியில் அன்னதானக்கூடமும் பிள்ளைலோகாச்சாரியார் சந்நிதி என்று எழுதிய மண்டபமும் இருக்கு.இடப்பக்கம் சந்நிதியில் வழக்கம்போல் மூடிய கம்பிக்கதவு
ரெங்க விலாஸின் முன்பக்கம் இருக்கும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் சந்நிதிப்படிக்கட்டில் அமர்ந்து பதிவுலக நண்பரை செல்லில் கூப்பிட்டு 'சுற்றிப் பார்த்துவிட்டோம்' என்ற (அபாய)அறிவிப்பைச் சொன்னதும் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டவர் 'அசையாமல் இரும். இதோ வருகிறேன்' என்றார்!!!!
தொடரும்...........:-)))))
==================================================================
கோவிலொழுகு புத்தகம் பற்றிய மேல் விவரங்கள் இங்கே.
மொத்தம் 7 பாகம்,
வெளியிட்டோர்: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ, 214, கீழை உத்தரவீதி, ஸ்ரீரங்கம், திருச்சி – 620 006.
தொலைபேசி: 0431-2434398, 98842-89887 , 90424-53934.
மின் அஞ்சல்: krishvasu19@gmail.com
அனைத்து பாகங்களும் சேர்த்து, விலை ரூ. 3000 (ஏப்ரல்-30, 2011 வரை சலுகை விலை ரூ. 2400).
ஏப்ரல்-30 வரை தனிப்பட்ட பாகங்கள் 10% தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
தபால் செலவுகள் தனி (பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்).
சென்னையில் கிடைக்குமிடம்:
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ, புதிய எண்: 36, நாயக்கமார் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33.
தொலைபேசி: 044 – 24715120
ஒவ்வொரு பகுதிகளும் பற்றிய சிறு குறிப்பு:
பகுதி 1 (2 பாகங்கள்): புராணக் குறிப்புகள் முதல் ஸ்ரீராமானுஜர் காலம் வரையிலான வரலாறு. மேலும் பராசர பட்டர் தொடங்கி கி.பி 1623 முத்துவீரப்ப நாயக்கன் காலம் வரையிலான வரலாறு.
பகுதி 2 (2 பாகங்கள்): கி.பி 1623 முதல் 1803, கோயில் நிர்வாகம் கிழக்கிந்தியக் கம்பெனி வசம் வரும் வரையிலான வரலாறு. கந்தாடை ராமானுஜ முனி உட்பட இக்காலகட்டத்தில் திருவரங்கத்தில் வாழ்ந்த ஆசாரியர்கள் வரலாறு.
பகுதி 3 (3 பாகங்கள்): கிபி. 1803 முதல் 2003 வரை கோயில் உரிமைகள் தொடர்பாக தென்கலையார் தொடுத்த நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள். சித்திரை முதல் பங்குனி வரை நடைபெறும் பல்வேறு விழாக்கள். ஒழிபியல் என்ற தலைப்பில் கோயில் பற்றிய பல துணுக்குச் செய்திகள்.
பகுதி 4 (2 பாகங்கள்): ஸ்ரீரங்கமஹாத்மியம் நூல் தரும் கோயில் விவரங்கள். பங்குனிப் பெருவிழா மற்றும் அதன் வரலாறு பற்றி விரிவான விவரணங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் திருவரங்கம் தொடர்பான 247 பாசுரங்களுக்கான விளக்கம், பூர்வாசாரியர்கள் உரையின்படி.
பகுதி 5 (2 பாகங்கள்): நாதமுனிகள் முதல் ஸ்ரீராமானுஜர் வரையிலான ஆசாரியர்களின் திருவரங்க அனுபவம். விஜயநகர, மதுரை மன்னர்கள், தஞ்சை நாயக்கர் காலத்து கல்வெட்டுகள், செப்பேடுகள் பற்றிய முழுமையான விவரங்கள்.
பகுதி 6 (3 பாகங்கள்): கூரத்தாழ்வான் திருவரங்க வாழ்வும் பணியும். கூரேச வைபவம் என்ற நூல் கூறும் குறிப்புகள். ஆழ்வான் அருளிய 5 சம்ஸ்கிருத தோத்திர நூல்களின் மூலமும் உரையும்.
பகுதி 7 (2 பாகங்கள்): முதலியாண்டான் தொடங்கி மணமாள மாமுனிகள் வரை இராமானுஜருக்குப் பின்வந்த ஆசாரியர்களின் திருவரங்க அனுபவம். திருவரங்க கோயில் அமைப்பு. கோயிலின் அனைத்து பகுதிகள் (கோபுரங்கள், தூண்கள், மண்டபங்கள், சன்னிதிகள்..), சிற்பங்கள், சித்திரங்கள் பற்றிய விரிவான விவரணங்கள். சில வரலாற்றுப் புதிர்கள் குறித்த பிற்சேர்க்கை.
தனித்தனி பகுதிகளின் விலை & மற்ற விவரங்கள் அறிய பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.
பி.கு: நண்பர் ஜடாயுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவருடைய பதிவில் இருந்து காப்பி & பேஸ்ட் செய்திருக்கிறேன்.
முன் அனுமதி பெறவில்லை. மன்னிக்கணும் ஜடாயு அவர்களே!

தைய்யல் நாயகி இங்கே யாரு?
குழிப்பணியாரச் சட்டி, ஆப்பச் சட்டி, வால் கரண்டி, இரும்பு வாணலி, தோசைக்கல்லு, அருவாமணை, தேங்காய்த்துருவி,மத்து, மோர் மத்து, கேரட் துருவி, பூரிக்கட்டை , கோலாட்டக்குச்சி, இப்படி குறிப்பிட்ட சிலபல சாமான்களுக்குக் கோவில்கடைகளை விட்டா வேற பெஸ்ட் சாய்ஸே கிடையாதுன்னு அடிச்சுச் சொல்லலாம். நான் சொப்பு வச்சு விளையாடிய காலத்தில் அழகழகான வண்ணங்களில் மரச்சொப்புகள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கடைகளில் இருந்துதான் வாங்குவோம். அப்படியே அண்ணனுக்கு பம்பரம், கோலிக்குண்டுன்னு ஒரு பை நிறைச்சுச் சாமான்கள் வாங்கியாருவாங்க எங்க அம்மம்மா.
அடடா.... பல்லாங்குழியைச் சொல்ல விட்டுப்போச்சே:( மகள் சின்னவயசா இருந்தப்ப இந்தியப்பயணம் ஒன்னு வாய்ச்சது. அவளுக்கு துலாபாரம் கொடுக்கும் பிரார்த்தனையை நிறைவேற்ற குருவாயூர் போறோம். திரும்பி வரும்போது கோவை, திருச்சி, ஸ்ரீரங்கம் தஞ்சாவூர் மதுரைன்னு வர்றோம். கோவில்கடையிலே மரச்சொப்பு கேட்டால் கிடைக்கலை! எவர்சில்வருக்கு மாறியிருந்தாங்க. பல்லாங்குழி? சுத்தம். பாத்திரக்கடையில் கேளுங்கம்மா வாம்! முந்தி இங்கேயே பாத்திரக்கடைகள் அண்டா,குண்டா, குடம், தவலை,கோதாவரி குண்டுன்னு கொட்டிக்கிடக்கும். அதெல்லாம் அம்பேல். வெறும் ப்ளாஸ்டிக் பொம்மைகளை நிறைச்சு வச்சுருக்காங்க.
கடைசியில் கோவிலுக்கு வெளியே மேலமாசி வீதியோ என்னமோ ஒரு பாத்திரக்கடையில் விசாரிச்சா அங்கே எவர்சில்வர் பல்லாங்குழி. கோபால் அதை வாங்கக்கூடாதுன்றார். காரணம்? வெயிட் கூடிப்போகுமாம். எக்ஸ்ட்ரா லக்கேஜுக்கு அழ இந்த முறை காசில்லையாம்! ஒரு கிலோ இருக்குமுன்னு ஆடுனார். கடைசியில் பார்த்தால் 200 கிராம்.வெறும் தக்கை:-) அப்புறம் சென்னை மெரினாவில் அதுக்கு சோழி வாங்கித் தந்தாங்க நம்ம பூனா ஃப்ரெண்ட் (கும்மோணம்) கோமளா மாமி. அது கூடவே கொஞ்சம் பெருசா சங்கு ஒன்னும் ஏழெட்டு மீடியம் சைஸ் சங்குகளும் கிடைச்சது. இதுதான் கடைசியில் கிலோவுக்கு மேலே வெயிட்டாச்சு. அந்தப் பொதியை கோபாலுக்குக் காமிக்காம பொட்டியில் அடியில் போட்டு வச்சேன்:-))))
வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். பழசும் புதுசுமா எண்ணங்கள் தலைக்குள் சுழலுது. நல்லவேளையா இங்கேயும் ப்ளாஸ்டிக் பொருட்கள் கொஞ்சம் இருந்தாலும் கோவில்கடை ஸ்பெஷல்ஸ் நிறைய இருக்கு! ரங்கவிலாஸ் முற்றம் ஜேஜே!!
மேலே இருக்கும் அலங்காரத்தில் நித்யசூரிகளுடன் வைகுண்ட வாசனாக, பாற்கடலில் பாம்புப்படுக்கையில் கிடக்கும் பரந்தாமனாக, அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்த தேரோட்டியாக, லக்ஷ்மிவராக மூர்த்தியாக பலவிதங்களில் போஸ் கொடுத்துக்கிட்டு இருக்கார் நம்ம பெரும் ஆள்.
மண்டபத்துத்தூண்களில் யாளியும் யானையுமா நாலு. இப்பத்தான் கவனிச்சுப் பார்க்கிறேன். முற்றத்தின் நடுவில் இருக்கும் நாலு கால் மண்டபம் திருவந்திக்காப்பு மண்டபம். நம்பெருமாள் அழகியமணவாளர் ஊர் சுற்றிட்டு உள்ளே வரும்போது இங்கேதான் அவருக்கு திருஷ்டி சுத்திட்டு உள்ளே கூட்டிக்கிட்டுப் போவாங்க.
கண்ணால் கடையைக் கண்டபின்னும் ஒன்னுமே வாங்காம எப்படின்னு யோசனை. கோபாலுக்கு ஒரே திக் திக். எங்கே தோசைக்கல்லு, இரும்பு வாணலின்னு ஆரம்பிப்பேனோன்னு ! அஞ்சேல் என்று அபயம் காமிச்சுட்டு நகை நட்டுன்னு அலங்காரச் சாமான்கள் விக்கும் கடையில் ரெண்ட ரெண்டு ராக்கொடி . என்ன இருந்தாலும் பழைய ஸ்டைல் சமாச்சாரங்கள் தனி அழகுதான்.
மற்ற ஆழ்வார்கள் எல்லாம் பெருமாள் கோவில்களைத்தேடிப்போய் பாடல்கள் பாடி அவற்றின் புகழை உயர்த்திக்கிட்டு இருந்த காலக்கட்டத்தில் தொண்டரடிப்பொடி ஆழ்வார் மட்டும் ஸ்ரீரங்கத்தையும் ரெங்கனையும் விட்டு வேறெங்கேயும் போக விரும்பாமல் இருந்தார். காலம் எட்டாம் நூற்றாண்டு. இயற்பெயர் விப்ரநாராயணன். பூந்தோட்டம் அமைச்சு பூமாலைகளாலும், வாய் நிறையப் பாமாலைகளாலும் ரெங்கனை, ரெங்கனை மட்டுமே ரெங்கனுக்கு மட்டுமே சூட்டிமகிழ்ந்தவர்.
பெருமாளுக்குத் திருப்பள்ளியெழுச்சியாப் பத்துப்பாடல் பாடியவர். முதல்பாட்டு இது.
கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,
எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,
அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே.
இதுமட்டுமா...... திருமாலை என்று திருமாலை மட்டும் பாடி இருக்கார் பாருங்களேன். 45 மாலைகள்! நமக்கெல்லாம் ரொம்ப பரிச்சயமான பாட்டு இது, இல்லை!
பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !
ஒரே போடாப் போட்டுட்டார்..... வேற எதுவுமே வேணாம், ரெங்கா நீயே போதும்!!!!
குடதிசை முடியை வைத்துக்
குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டித்
தென்திசை யிலங்கை நோக்கி,
கடல்நிறக் கடவு ளெந்தை
அரவணைத் துயிலு மாகண்டு,
உடலெனக் குருகு மாலோ
எஞ்செய்கே னுலகத் தீரே.
எப்படிக் கிடக்கிறான்னு தெள்ளத்தெளிவா பாடியது இப்படி!!!
கங்கயிற் புனித மாய
காவிரி நடுவு பாட்டு,
பொங்குநீர் பரந்து பாயும்
பூம்பொழி லரங்கந் தன்னுள்,
எங்கள்மா லிறைவ னீசன்
கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன்
ஏழையே னேழை யேனே.
காவிரியின் பெருமை! இவள் கங்கையை விட மிகப் புனிதமானவளாம்!!!!
நல்லவேளை, அப்பவே சாமிகிட்டேபோய்ச் சேர்ந்துட்டார். காவிரியின் இப்போதைய நிலையைக் கண்டிருந்தால் அவர் கண்ணில் ரத்தமே வழிந்திருக்கும்:(
இவருக்கான சந்நிதியின் படிக்கட்டில் உக்கார்ந்துருக்கோம். வழக்கம்போல் இதுவுமே சாத்தி இருக்கு. ஸ்ரீ மதுரகவியாழ்வார், யோகநரசிம்ஹர், அஷ்டபுஜ வேணுகோபாலன், சத்யபாமா, ருக்மிணி எல்லோரும் உள்ளே இருக்காங்க.
அஷ்ட புஜம் இருந்தால் கொள்ளாம் என்ற நினைப்போ!!! செல்லுக்கொன்னு, டிவி ரிமோட்டுக்கு ஒன்னு, மடிக்கணினிக்கு ஒன்னுன்னு ஜமாய்ச்சுருக்கலாம்.( அப்படியே ரெண்டு கைகளை எனக்கு வெங்காயம்
உருளைக்கிழங்கு உரிச்சு, வெட்டிக் கொடுக்கன்னு தனியா வச்சுக்கணும்)
தங்கத்தமிழர் ஃப்ரம் தலைநகர் நம்ம வெங்கட் நாகராஜ் ,மகளோடு வந்துட்டார். நான் முன்னாலே போறேன் நீங்க பின்னாலே வாங்கன்னார். மேற்குப்பக்கமாச் சுத்திச்சுத்தி அடுக்கு மாடிக் கட்டிடத்துக்குள் நுழைஞ்சோம். மாடியேறிப்போனவுடன் இன்னொரு பதிவர் வாய் நிறைய சிரிப்புடனும் கண் நிறைய மகிழ்ச்சியுடனும் வரவேற்றார். கோவை2தில்லியின் உரிமையாளர் ரோஷ்ணியம்மா!!!
குட்டிப்பொண் ரோஷ்ணி வரைவதில் கெட்டிக்காரி! தில்லிப் பள்ளியில் இருந்து இங்கே வந்து உள்ளூர்ப்பள்ளியில் சேர்ந்து படிக்கும் சுட்டிப்பெண். முதலில் கொஞ்சம் மிரண்டாலும் பத்து நிமிசத்துலே பயம் போயிருச்சு. பாவம் சின்னப்பெண், யானையைக் கண்டால் பயம் வரத்தானே செய்யும், இல்லையா?
உக்காரச்சொல்லி உபசரிச்சுக் கையில் ஃபேனைக் கொடுத்தாங்க.:-) நேத்துப் பேசிக்கிட்டே இருந்து பாதியில் விட்டுப்போன பேச்சைத் தொடர்வது போல நாங்கள் பேசிக்கிட்டே இருக்கோம்.பதிவர் மாநாடு களை கட்டுது! அப்போ ஒரு மூத்த தம்பதி வந்து சட்னு தரையில் உக்கார்ந்துட்டாங்க. (கட்டிலில் உக்கார்ந்துருக்கேனேன்னு எனக்கே பேஜாராப்போச்சு) .வணக்கம் சொன்னோம். வெங்கட்டின் பெற்றோர். அவுங்களுக்கும் கை ஃபேன் கொடுத்தார் வெங்கட். அம்மா தயவில் கைகளுக்கு நல்ல பயிற்சி.
ரொம்ப மோசம் நான். புது மனிதர்கள் என்ற பயம் வேணாமோ? அவுங்களையும் பேச்சில் இழுத்தாச்சு. என்னைவிட அவுங்க இன்னும் ரொம்பவே மோசம். அப்பதான் முதல்முதலாப் பார்க்கிறோம். ஆனால் தினம் பார்க்கும் பக்கத்து வீட்டுக்காரங்ககிட்டே (??!!) பேசிக்கிட்டே இருக்காங்க. இந்த இணைய நட்பும் பதிவர் குடும்பமும், பதிவரின் எக்ஸ்டெண்டட் ஃபேமிலியும் எப்படிப் பின்னிப் பிணைஞ்சுருக்குன்னு பார்த்தால்..... 'இது என்னாடி அதிசயம்!!' என்று கன்னத்துலே கை வைச்சுக்கணும்:-)
அப்பா, வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதுக்காகச் சும்மா இருப்பாரா என்ன? சோஸியல் சர்வீஸ் செய்யக் கிளம்பியாச்சு. அந்தக் குடியிருப்பில் இருக்கும் மூத்தோருக்கு பவர் பில்(?? அதான் பவரே இல்லையே அப்புறம் என்ன பில்?) கட்டுவது , பில்டிங் சொஸைட்டி சம்பந்தமான வேலைகளுக்கு ஆலோசனை போன்றவைகள். ' இதென்ன பெரிய கஷ்டம்? நம்ம வேலைக்கு நாம் போகுபோது கையோடு அவுங்களுக்கும் உதவுனால் ஆச்சு'ன்றார். நாட்டுலே மழை பொழிய இவர்போல் இருப்பவர்கள்தான் காரணம் !
இதுக்குள்ளே ரோஷ்ணியம்மா ஏலக்காய் டீ போட்டுக்கொண்டு வந்து ஒரே உபசாரம். வேணாமுன்னு சொல்லலாமுன்னா...வாசனை இழுக்குதே!!
கொஞ்சநேரத்தில் கை பழகிப்போச்சு. வாய் பாட்டுக்குப் பேச கை அதுபாட்டுக்கு விசிறிக்குது. வீட்டுக்கு வாங்க, காத்து அப்படியே பிச்சுக்கிட்டுப் போகும் என்றார் அப்பா. மேல் மாடியில் வீடு.
படிகளேறிப் போனோம்.(நல்லவேளை) ஒரு மாடிதான். பால்கனி கதவின் வழி உண்மையாவே அருமையான காற்றடிக்குது. கண் எதிரே பரந்து கிடக்கும் கொள்ளிடம். மெரீனாவுக்குப் போட்டியா ஒரு பீச்:-)))
தலையைத் திருப்பியவள் .... பார்த்த விழி பார்த்தபடி நிக்க, ' யார் இங்கே தைய்யல் நாயகி?'ன்னு கேட்டேன்! ஹப்பா..... இதே போலத்தான் ஒன்னு வச்சுருந்தேன். என் ஆதிகாலத் தோழி. என்னை அரை டாக்குட்டர் ஆக்கியது இதுதான். ஆயிரம் துணியைக் கெடுத்துருக்கேனே:-)
நாந்தான்னாங்க அம்மா. (ரோஷ்ணியம்மா , வெங்கட் அம்மான்னு அங்கே ரெண்டு அம்மாக்கள்!) ப்ளவுஸ் ஸ்பெஷலிஸ்ட். தனக்கும் மகள்களுக்கும் தைச்சுச்சுவாங்களாம். இப்போ மருமகளுக்கும் பேத்திக்கும்! அப்டிப்போடுங்க! எத்தனை மருமகளுக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் சொல்லுங்க!
மருமகள்தான் வீட்டின் உண்மையான மகள். அவுங்க இல்லேன்னா நாம் இல்லை . மருமகளுக்குத்தான் செய்யணும்னு என் ரெண்டு செண்ட்டைச் சொன்னேன்:-)))) அதெப்படி வாயைத் திறக்காம தலையை ஆட்டுவது?
முதல்நாள் மாலை ரெங்கதரிசனம் கதையைச் சொல்லிட்டு இப்படிக் கூட்டம் இருக்கே, எப்படிதான் உள்ளூர்க்காரங்க சாமி பாக்கறதுன்னேன். அதுக்கெல்லாம் வேற டைமிங் இருக்குன்னு குண்டைத் தூக்கிப்போட்டாங்க ரோஷ்ணியம்மா. எப்ப 'அவர் ஃப்ரீ'யா இருக்காரோஅப்பப்போய் சட்னு பார்த்துருவாங்களாம். அட! எப்போ ஃப்ரீன்னு எப்படித் தெரியும்? அதெல்லாம் நியூஸ் வந்துருமாமே. ' கூட்டமே இல்லை.சட்னு போங்கோ'ன்னு. கதவைப் பூட்டிக்கிட்டு அப்படியே போயிட்டு வந்துருவாங்களாம். கோவிலுக்குப் போக ஷார்ட் கட் வேற இருக்கு. ஹைய்யோன்னு இருந்துச்சு எனக்குன்னு சொல்லணுமா?
ஆமாம்.கோவிலில் 'அன்னமூர்த்தி'யை தரிசனம் செஞ்சீங்களான்னார் அப்பா. ஙேன்னு முழிச்சேன். கே எம் ஒன்னும்சொல்லலை:( கட்டாயம் தரிசனம் செய்யணும். நம் வாழ்நாள் முழுசும் உணவுக்குக் குறையே இருக்காதுன்னார். அப்படியே பேச்சு உணவின் ஒருபகுதியான காஃபிக்குப்போச்சு. ஸ்ரீரங்கம் ஸ்பெஷலுன்னா முரளி காபிதானாம். அப்படியொரு அட்டகாசமான காஃபி. விலை ரொம்ப மலிவு. முந்தியெல்லாம் அஞ்சே ரூபாய்தானாம். சும்மா வாக் போறமாதிரி போய் 'வயிறு வேணாமுன்னாலும் அதை சும்மாக்கிட'ன்னு சொல்லிட்டு ஒரு காஃபி குடிச்சுட்டு வந்தாத்தான் மனசுக்கு மகிழ்ச்சின்னார் வெங்கட்.
பெரியவுங்க ரெண்டு பேரும் ஒல்லிக்குச்சியா இருக்காங்க. அப்படியே காத்துலே மிதந்து போகும் உடம்பு. சட்னு உக்காரவும் எந்திரிக்கவும் கால்நொடி . ரொம்பவே எளிய மனசு. அளவில்லாத அன்புன்னு மகனையும் மருமகளையும் அப்படியே கொண்டிருக்காங்க!
இன்னும் கொஞ்சநேரம் இருந்து கதையளக்க ஆசையா இருந்துச்சு. ஆனால் மணியோ 12. பவர் வரும் நேரம். . அது இருக்கும்போதே அவுங்க எஞ்சாய் பண்ணனும். கிளம்பினோம். நேராத் திருச்சி. அதே சங்கீதா. மினி மீல்ஸ் ரெண்டு. கரெக்டா தட்டுக்கு அந்தப்பக்கம் இருப்பவரும் போட்டோவில் விழுந்துடறாரே! நம்பள்கி என்ன சொல்லப்போறாரோ:-)))))
தொடரும்............:-)

↧
↧
ஆனைக்கோவில் அகிலா !
'வெய்யில் மண்டையைப் பொளக்குது.கொஞ்சநேரம்தான் ரெஸ்ட் எடேன். கோவில் எல்லாம் நாலுமணிக்கு மேல்தான் திறப்பாங்க. எதுக்கு இப்பவே கிளம்பு கிளம்புன்னு ஆடிக்கிட்டு இருக்கே'ன்னார் கோபால். மூணரை வரை பொறுமை காத்தேன். ஆச்சு. கிளம்புங்க நாம் போகவும் கோவில் திறக்கவும் சரியா இருக்கும். நாலுமணிக்கு வெளியே வந்தால் இந்த ஹொட்டேலின் அடுத்த பகுதியில் ஏதோ விழாவுக்கு அலங்காரம் நடக்குது.
குடும்பவிழா. கல்யாணமோ இல்லை வேற எதோ! இப்பெல்லாம் இது நல்ல வசதியாப்போச்சுல்லெ.... திருமணமண்டபங்களில் மட்டுமே நடந்த கல்யாணங்கள் எல்லாம் ஹொட்டேல் ஹாலில் நடக்குது. சாப்பாடும் அங்கேயே ஏற்பாடு. மெனு சொல்லிட்டால் எல்லாம் கச்சிதமா நடந்துரும். இடம், பந்தல், மேளம்,சமையல் இப்படி ஒவ்வொருவராத் தேடி அலைவது மிச்சம். என்ன ஒன்னு காசு செலவு கொஞ்சம் கூடுதலா இருக்கும்.இப்போதைய ட்ரெண்ட் இம்மாதிரி விழாக்களில் தங்கள் செல்வச்செழிப்பைக் காட்டுவதுதானே! கூந்தல் இருப்பவர்கள் கொண்டை போட்டுக்கட்டுமே!
காட்டழகிய சிங்கரை தரிசிக்கணும். மத்யானம் வெங்கட் அப்பாவோட பேசும்போது 'சாயங்காலம் போகணும்' என்று சொல்லிக்கிட்டு இருந்தேன். கல்லூரிச்சாலையைக் கடந்து போறோம். செயிண்ட் ஜோஸஃப் சர்ச் நம்ம கேமெராக் கண்ணிலே விழுந்துச்சு. இறங்கிப்போய் பார்த்திருக்கலாமோ! 1792 வது வருசம் கட்டப்பட்டது.
பரபரப்பான சாலை. வண்டி போய்க்கிட்டே இருக்கு. போகும்வழியில் காவிரிப்பாலம் கடக்கும்போது பாலத்தின் கைப்பிடிச்சுவரில் அங்கங்கே பூந்தொட்டிகள் வச்சு அலங்கரிச்சு இருக்காங்க. பாலத்தினிடது பக்கம் ஏதோ சிற்பம் போல ஒன்னு கண்ணில் பட்டது. திரும்பி வரும்போது அந்தப்பக்கம் பாலம் ஆரம்பிக்கும் இடத்தில் இடது பக்கம் திருச்சி மலைக்கோட்டை சிற்பம் வச்சுருக்காங்க. ஓஹோ....அப்ப முந்தி கண்ணில் பட்டசிற்பம் ஸ்ரீரங்கம் கோவிலா இருக்கலாம். குறுக்கே வண்டிகள் ஓடுவதால் சரியாத் தெரியலை.
வலப்பக்கம் ஒரு கோவில் கோபுரம். திரு ஆனைக் கோவில். இங்கேயும் வரணும்தான். ஆனால் முன்னுரிமை சிங்கத்துக்கு! . கொஞ்சதூரத்தில் வலப்புறம் திரும்பிய ரோடுக்குள் நுழைஞ்சது வண்டி. நெல்சன் ரோடு. இன்னும் கொஞ்ச தூரத்தில் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி. அதைத்தாண்டுனதும் ஒரு அரை நிமிசத்தில் கோவில். பெரிய இடமா இருக்கு. உள்ளே நுழைஞ்சு போறோம். இடது பக்கம் ஒரு மண்டபம். கம்பியழி இருந்துச்சுன்னு நினைவு. கோவில் அஞ்சு மணிக்கு மேலேதான் திறப்பாங்கன்னு காவல்காரர் வந்து சொன்னார். முதல்லே மச்சானைப் பார்த்துட்டு வான்னு சிங்கம் விரட்டுதோ?
அப்போ ஆனைக்கோவில் போயிட்டு வரலாமுன்னு போனோம். ஒன்னரை கிமீட்டர் தூரம்தான் இருக்கும் ரெண்டு கோவில்களுக்குமிடையில். அர்ச்சனை, ஸ்பெஷல் தரிசனம் டிக்கெட் ஒன்னும் வேணாமுன்னுட்டு கேமெராச் சீட்டு மட்டும் வாங்கினோம். வளாகத்துலே நுழைஞ்சவுடன் வாங்கோ என்றாள் அகிலா. குளிச்சு முடிச்சு அலங்காரம் செஞ்சுக்கிட்டு சிரிச்ச முகத்தோடு பளிச்!
வலது பக்கம் அவளுடைய மஹால்! பத்து வயசுக்குட்டிப் பொண். அர்ஜுன் நாயரின் கவனிப்பில் இருக்காள். ரொம்பவே சமர்த்து. அஸ்ஸாம் மாநிலத்துக்காரி. இப்போ அட்டகாசமான ஐயராத்துப் பொண்ணாகிட்டாள். மடிசார் கட்டிக்கலை என்ற குறை மட்டுமே! கொஞ்சம் உயரமான மேடையில் நிற்கிறாள். அதில் ஏறிப்போக சின்னதா ரேம்ப்,சரிவான அமைப்பு.
அர்ஜுன் பாப்பான் ஆனதால் சம்ஸாரம் முழுவன் மலையாளத்திலாணு. பாப்பான்(மலையாளம்) = யானைப்பாகன் .காலில் கொலுசு ! படம் எடுக்கும்போது ஞான், 'காலு காணிக்கு மோளே'ன்னதும் அழகா காலைக் கொஞ்சமாச் சரிச்சுக் காமிச்ச அழகு இருக்கே .... ஹைய்யோ!!!
அர்ஜுன் நாயரின் சொந்த ஊர் புனலூர். இவருடைய அச்சன் (அப்பா)ஸ்ரீ பத்மநாபபுரம் கோவிலில் பாகராக இருக்கார். அகிலா இங்கே வருமுன் கொஞ்சநாள் ஸ்ரீ பத்மநாபபுரத்தில் தங்கி இருந்து அர்ஜுன் கூடவே அச்சனிடம் ட்ரெய்னிங் எடுத்துட்டு வந்துருக்காள். வெய்யில் தெரியாமலிருக்க இவளுடைய மஹாலில் முன்பக்கம் தென்னோலைகளால் ஒரு சார்ப்பு இருக்கு.
இதுக்கு முந்தி கோவில் யானையா 48 வருசம் இருந்த சாந்தி, ஜூலை 2010 சாமிகிட்டே போயிருச்சாம்:( எல்லாம் அர்ஜுனோடு இத்திரி மலையாளம் ஸம்ஸாரிச்சதில் கிட்டிய நியூஸாணு.
ரெண்டு யானைகளுக்கிடையில் அர்ஜுன் நாயர்:-)
'கோவில் திறந்து எல்லோரும் போறாங்க, வா சீக்கிரமு'ன்னு கோபால் குரல் கொடுத்தார். நல்ல பெரிய வளாகம்தான். 18 ஏக்கராம். அஞ்சு பிரகாரங்கள். கோவிலுக்கு வயசு ஆயிரத்துக்கும் மேலே!
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் இது நீர். இப்பதானே நாலு நாளைக்கு முன் சிதம்பரம் போனோம். அது ஆகாயம். காவிரியின் கரையோரம் நாவல்மரங்கள் நிறைந்த காடாக இருந்த இந்த இடத்திற்கு வந்த பார்வதி சிவனை பூஜிக்க எண்ணி, ஆற்றுத் தண்ணீரைக் கொண்டே ஒரு லிங்கம் செஞ்சாங்க. அதையே ஒரு நாவல் மரத்தடியில் பிரதிஷ்டை செஞ்சு பூஜையும் முடிஞ்சது. பார்வதி கிளம்பிப்போயாச்சு. அப்போ ஏதோ சாபவசத்தால் யானையும் சிலந்தியுமா ரெண்டு இங்கே வந்து சேர்ந்தன. மரத்தடியில் இருக்கும் சிவலிங்கத்தைப் பார்த்ததும் பக்தி மேலிட்டு யானை காவிரி நீரைத் தன் துதிக்கையால் மொண்டு சிவனுக்கு அபிஷேகம் செஞ்சது.
பார்த்துக்கிட்டே இருந்த சிலந்தி பரபரன்னு சிவலிங்கத்துக்கு மேலே பந்தல் போல வலை பின்னுச்சு. சருகு, குப்பை எல்லாம் லிங்கத்துமேலே விழாமல் காப்பாத்தமே! மறுநாள் யானை திரும்ப அபிஷேகம் செஞ்சதும் வலை பிச்சுக்கிச்சு. உடனே சிலந்தி திரும்பவும் வலை பின்னி வச்சது. தினமிப்படியே யானை அபிஷேகம் செஞ்சதும் வலை பிய்ஞ்சு போவதும் மீண்டும் வலை பின்னுவதுமா ரெண்டுக்கும் இடைவிடாத போராட்டம். இப்படியே விட்டால் வேலைக்காகாதுன்னு தீர்மானிச்ச சிலந்தி ஒருநாள் ஓசைப்படாம யானையின் துதிக்கைக்குள் நுழைஞ்சு அதை இம்சிக்கவும் வேதனை தாங்காத யானை துதிக்கையை ஓங்கி ஓங்கி அடிச்சுச் சுழற்றவுமாய் போராடி கொஞ்ச நேரத்தில் ரெண்டும் செத்துப்போச்சு.
தினமும் தனக்கு அபிஷேகம் செஞ்சதால் மனம்மகிழ்ந்து போன அபிஷேகப்ரியனான சிவன் யானைக்கு மோட்சம் கொடுத்து சிவகணங்களுக்குத் தலைவனாக்கிட்டார். சிலந்தி மனிதனாக ஒரு அரசகுடும்பத்தில் பிறந்தது. கோச்செங்கட் சோழன். பூர்வ ஜென்ம வாசனையோ என்னவோ....யானைகள் முட்டினாலும் தகர்க்க முடியாத நல்ல வலுவானவைகளாகவும், புயல், மழைக்காலங்களில் நாட்டு மக்கள் பாதுகாப்பாக வந்து தங்கிக்கொள்ள வேண்டியும் காவிரிக் கரை ஓரமாகவே 70 சிவன் கோவில்களைக் கட்டினான். கருவறை வாசல்கள் எல்லாம் சிறியதாக யானை புக முடியாதபடி கட்டி இருக்கான். (ஏய் யானைப்பயலே, அபிஷேகமா ? இனி எப்படி வந்து தண்ணீ ஊத்துவே?) இவைகளுக்கு மாடக்கோவில்கள் என்ற பெயர். கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவிலே இந்த ஜம்புகேஸ்வரர் ஆலயம்தான்.
இவ்வளவு கவனமாக இவன் இருந்தும்கூட இந்த இடத்துக்கு ஆனைக்கோவில் என்ற பெயர் வந்திருக்கு பாருங்களேன்! திரு என்ற மரியாதைச் சொல்லுடன் சேர்த்து, திருவானைக்கோவில்.
சின்ன வயசு காலத்துலே அதென்னவோ ரெண்டு பக்கமும் தூண்கள் அணிவகுக்கும் பிரகாரமுன்னாவே எனக்கு ராமேஸ்வரம் கோவில்தான் நினைவுக்கு வரும். அங்கெ மட்டும்தான் அப்படி இருக்குன்னு நினைச்சுக்குவேன். இப்பவும் அந்த நினைப்பு வந்து சிரிக்கவைக்கும்:-)
இங்கே கண்பார்வைக்குள் அடங்காம விரிஞ்சு நீண்டு போகும் பிரகாரத்துக்குள் நுழைஞ்சதும் அந்த நினைப்பு வந்துச்சு:-)))) ஊஞ்சல் மண்டமும் மற்ற சந்நிதிகளுமா அட்டகாசமா இருக்கு !
சமயக்குரவர் நால்வரும் வந்து பாடிய பாடல் பெற்ற ஸ்தலம். ஈசன் ஜம்பு மரத்தடியில் இருந்ததால் ஜம்புகேஸ்வரர். நீரினால் செய்த மூலவர் என்பதால் கருவறையில் எப்போதும் காவிரி நீர் இருந்துகொண்டே இருக்கு. ஆறு வறண்டு போனாலும்கூட இங்கே லேசான ஈரம் இருக்குமாம். வெள்ளம் வரும் காலங்களில் முழங்காலளவு தண்ணீர் தேங்கிவிடுமாம். கருவறையில் மூலவர் தரை மட்டத்தில் இருந்து கொஞ்சம் தாழ்ந்தே இருக்கார்.
மூலவரை தரிசிக்கப்போனால் அங்கே கருவறைக்கு முன் கட்டங்கட்டமா ஜன்னலாட்டம் ஒரு சுவர். எண்ணிப்பார்த்தால் ஒன்பது ஓட்டைகள். அட! நம்ம உடுபியில் ஸ்ரீ கிருஷ்ணனை இப்படித்தானே நவத்வார ஜன்னலில் பார்த்தோம்! ஜன்னல்வழியாக மூலவரைப்பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கிட்டேன். இன்னும் கொஞ்சம் சுவர் தாண்டி அந்தப்பக்கம் போகமுடியுமோ என்னவோ...கம்பித்தடுப்பு அந்தப்பக்கம் இருக்கு. ஸ்பெஷல் தரிசனம் போல!
எனெக்கென்னமோ இந்த நவத்வார ஜன்னல் புதுசா இருக்கோன்னு ஒரு சம்ஸயம். ஒரு 24 வருசத்துக்கு முன்னே இந்தப்பக்கம் ஒரு பயணம் செஞ்சோம். அப்போ சின்னக் கருவறையைக் கிட்டே போய்ப் பார்க்கும் வாசல் ஒன்னு வழியா போன நினைவு. வெளியே வரும்போது தலையைக் குனிஞ்சு போங்கோன்னு அர்ச்சகர் சொல்லிக்கிட்டு இருந்தார்.
உச்சிகாலப்பூஜைக்கு ஒரு ஆரஞ்சுப் புடவையை சுத்திக்கிட்டு இன்னொரு அர்ச்சகர் அம்பாள் சந்நிதிக்குப்போறதைப் பார்த்துட்டு நாங்களும் சந்நிதிக்கு ஓடுனோம். நல்ல கூட்டம். ஆனாலும் அம்பாள் அகிலாண்டேஸ்வரியின் தரிசனம் கிடைச்சது. பெரிய கம்மல் போட்டுருந்தாங்க.தாடகம் என்று சொல்லணுமாம்.
இந்தமுறையும் அம்பாளை நிம்மதியா சேவிக்க முடிஞ்சது. கூட்டமே இல்லை. உள்ளூர் மக்கள்ஸ், பொழுதுசாய வருவாங்களா இருக்கும்.
ஞானம் வேணுமுன்னு தவம் இருந்த ஒருவருக்கு அருள் செய்யத் தாம்பூலம் போட்டுக்கிட்டு சாதாரண மனித உருவில் போன அம்பாளை யாரோன்னு அந்தாள் விரட்டிவிட, இந்த பாக்கியம் இவனுக்கில்லைன்னு கோவில் உள்ளே தூங்கிக்கிட்டு இருந்த வரதன் என்றொரு பேமாலத்துக்கு (அப்பாவி) கிட்டே போய், வரதா வாயைத் திறன்னதும், தூக்கத்துக்கிடையில் கனவுன்னு தன்னிச்சையா வாயைத் தொறக்க அம்பாள் தாம்பூலத்தை அவன் வாயில் உமிழ்ந்துட்டுப் போயிட்டாள். பொழுது விடிஞ்சு பார்த்தால் வரதனுக்கு ஞானம் கல்வி எல்லாம் சித்திச்சுருக்கு. வாயைத் திறந்தால் கவி மழை! கவி காளமேகம்தான் அந்த வரதன்!
இந்த உமிழ்தல் அப்போ அந்தக் காலத்தில் அருவருப்பான விஷயமா இருந்துருக்காதோ என்னவோ!!!!
பாருங்க குழந்தை உடலும் மீசை முகமுமா முயலகன்! ஆனந்த தாண்டவமாடும் ஈசன். விஷ்ணு சங்கு ஊதிட்டார்ப்பா. படவிளக்கத்துக்குச் சமமா உபயதாரர் விளக்கம்:-) போகட்டும் ...இந்த வகையிலாவது அருமையான படங்கள் காணக்கிடைக்குதே!
இந்த நவ சக்திகள் நவ வீரர்கள் படம்.... கதை என்னவோ? தெரிஞ்சவுங்க சொல்லுங்க ப்ளீஸ். எங்கே நம்ம இராஜராஜேஸ்வரி(மணிராஜ்)???
முருகன் சந்நிதிக்குப்போகும் பிரகார மேடையின் உள்சுவற்றில் அமர்க்களமான படங்கள் ஏராளம். சித்திபுத்தியுடன் மயில் வாகனத்தில் புள்ளையார்!
பிரகாரங்கள் எல்லாமே படுசுத்தமா இருப்பது மனநிறைவைத் தந்தது.
பிரகாரங்களின் திண்ணை மேடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தன்னு கம்பித்தடுப்பு வச்சுருக்காங்க. அழகு அழகுன்னு சொல்லிக்கிட்டு இருக்கோமே அதுக்கு திருஷ்டி பரிகாரம் போல! இதைப்பிடிப்பிக்க அந்தக் கல்தரையில் ஓட்டை ப்போட்டு ஆணி அடிச்சுன்னு ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் பாழாக்குனாத்தான் இவுங்களுக்கு நிம்மதி வரும்:(
குரத்தி(??!!) மண்டபத்தூண்களில் அழகிய சிற்பவேலை! ப்ரியா ப்ரொமோட்டர்ஸ் ,போர்டை கொஞ்சம் மேலே உசரத்தில் மாட்டி வச்சுருக்கப்டாதோ? அப்படியே கொஞ்சம் தரையைப் பழுது பார்த்தால் தேவலை.
நம்ம கோவிலில் எடுத்த படங்களை ஆல்பத்தில் போட்டு வச்சுருக்கேன். நேரம் இருந்தால் பாருங்கள்.
ஆமாம்.... இது ஆனை கும்பிட்ட கோவில் என்பதால் திருவானைக்கோவில் என்பதுதானே சரி. அப்ப ஏன் திருவானைக்காவல் என்கிறார்கள்?
தொடரும்.............:-)

↧
மேடும் காடும் வீடும்!
முன்னொரு காலத்துலே அடர்ந்த வனப்ரதேசமா இருந்துருக்கு இங்கெல்லாம். முனிவர்கள் வந்து குடில் அமைச்சுத் தங்கி தவம் செய்வாங்களாம். காட்டுப்பகுதி என்றபடியால் கொடிய விலங்குகளும் யானைகளும் ஏராளம். இதுலே ஒரு யானைதான் ஜம்புகேஸ்வரருக்கு அபிஷேகம் பண்ணியிருக்கணும்!
போற போக்கில் முனிவர்களின் குடிலை தள்ளிவிடுவது, அவுங்க பயிரிட்டு இருக்கும் காய்கனிகளைத் தின்னுட்டுப்போறதுன்னு தொந்திரவு. பிடி சாபம்னு முனிவர்களால் அவைகளை அழிக்கமுடியும் என்றாலும், தவமிருந்து கிடைச்ச தவ வலிமைகள் சக்திகள் எல்லாம் கொடுக்கும் ஒவ்வொரு சாபத்துக்கும் மைனஸ் ஆகிக்கிட்டே போயிருமே! எல்லோருமா பெருமாளை வேண்ட அவரும் யானைகளையும் மற்ற விலங்குகளையும் விரட்டணுமுன்னா சிம்ம ரூபம்தான் சரின்னு நினைச்சார். சிம்ஹம் காட்டரசன் இல்லையோ?
(சுட்ட படம்.நன்றி செங்கோட்டை ஸ்ரீராம்)
நரசிம்ம ரூபத்தில் இங்கே வந்தவர் துணைக்கு , ஐ மீன் பேச்சுத்துணைக்கு மனைவியையும் கூடவே கூட்டியாந்தார். எட்டு அடி உசரம்! இடது தொடையில் மஹாலக்ஷ்மியை உக்காரவச்சு, இடது கையால் சேர்த்து அணைச்சுக்கிட்டு வலது கையால் நமக்கெல்லாம் அபயஹஸ்தம் காட்டும் அழகிய சிங்கர் இங்கே வந்த கதை இப்படித்தான்.
கோவிலுக்கு வயசு ஒரு ஆயிரத்தைஞ்நூறு வருசங்கள் இருக்குமாம். காடெல்லாம் போய் இப்போ நாடாக இருக்கு இடம். 1961 வது வருட மக்கள் கணக்கெடுப்பில் இந்தப்பகுதி(ஸ்ரீரங்கம்) யில் 42 ஆயிரம் பேர்கள்தானாம். இந்த அம்பது வருசங்களில் இது அஞ்சு மடங்கா ஆகி இருக்கு.
ரொம்பவே அமைதியான காடாக இருந்துருக்கும் காலத்தில் மூலவர் முன்னே வந்து நின்னாலே மனசுக்குள் பேரமைதி வந்துருக்கும் இல்லையோ? உள்ளூர்க்காரர் நம்ம ஸ்ரீ பிள்ளைலோகாச்சாரியார் என்னும் மகான் இந்த சந்நிதியில் இருந்துதான் ஸ்ரீ வசநபூஷணம் முதலிய 18 ரஹஸ்ய க்ரந்தகளை இயற்றிப்பாடி இருக்கார். முமுட்சுப்படி, யாத்ருச்சுப்படி என்று இருக்கு, கோவில் புத்தகத்தில். முக்தி அடைய விரும்பினால் கட்டாயம் திருமந்திரம், திவ்யம், சரமஸ்லோகம் என்ற மூன்று விஷயம் தெரிஞ்சுருக்கணுமாம். நாராயணன், நரனுக்கு பத்ரியில் செய்த உபதேசம் திருமந்திரம். மார்பில் உறையும் மஹாலக்ஷ்மிக்கு திவ்ய விபூதியில் உபதேசித்தது திவ்யம், பாரதப்போர் ஆரம்பிக்குமுன் உறவினர்களுடன் சண்டையிட்டு அவர்களைக் கொல்லத்தான் வேணுமான்னு அர்ஜுனன் மனம் கலங்கி நின்ன சமயம் கலங்காதேன்னு சொல்லி உபதேசிச்சது சரமஸ்லோகம். இவை மூன்றும் சாஸ்திர தாத்பர்யம் எனப்படுமாம். முழுவிவரங்களும் அடங்கிய புத்தகம் எதாவது கண்ணில் படுமான்னு பார்க்கணும்.
ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில் சேஷராய மண்டபத்துக்கு சமீபம் ஸ்ரீ பிள்ளை லோகாச்சாரியாருக்கு ஒரு தனி சந்நிதி இருக்கு. உள்ளூரில் பிறந்து வளர்ந்தவர். ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர். தில்லிப்படைகள் கோவிலைச் சீரழித்த காலத்தில், ஒளிச்சு வைக்கக்கொண்டுபோன நம்பெருமாளுடன் கூடவே போன சிலரில் இவரும் ஒருவர்.
முன் முற்றக் கொடிமரம் கடந்து உள்ளே போனால் ஒரே ஒரு ப்ரகாரம். நடுவில் நரசிம்மர் சந்நிதி. வல்லப தேவ பாண்டியன் கட்டுன கோவிலாம். ரெங்கன் இருக்கும் பூலோக வைகுண்டம் நோக்கி, மேற்குப் பார்த்து உக்கார்ந்துருக்கார் மூலவர். உற்சவர் இங்கே இல்லை. அவர் ரெங்கன் கோவிலுக்கே போயிட்டார். நாள் கிழமைன்னா இங்கே வந்துட்டு மறுபடி பெரிய கோவிலுக்கே போய் பாதுகாப்பா இருப்பார் போல!
(சுட்ட படம்.நன்றி.திவ்யதேசம்)
ரெங்கன்னதும் ஞாபகம் வருது இன்னொரு விஷயம். இங்கே இருப்பது காட்டழகி சிங்கர் என்றால் பெரிய கோவிலில் ரங்கநாயகித் தாயார் சந்நிதிக்குப் பக்கத்தில் , கம்பராமாயண மண்டபத்துக்கு அருகில் ஒரு உக்ர நரசிம்ஹர் சந்நிதி இருக்குன்னு எழுதி இருந்தேன் பாருங்க. அவர் மேட்டு அழகிய சிங்கர். அவர் சந்நிதிக்குக் கொஞ்சம் படிகள் ஏறித்தான் போக வேண்டி இருக்கு. பெரிய கோவிலில் படிகளுடன் மேடான சந்நிதிகள் ரெண்டே ரெண்டு. ஒன்னு நரசிம்ஹர். மற்றது தன்வந்த்ரி. சரியா எண்ணிச் சொன்னால் நரசிம்ஹர் ரொம்பவே மேட்டில்தான் இருக்கார்.ரெண்டு நிலையா 20 படிகள் ஏறணும்..
காட்டழகிய சிங்கரை தரிசனம் செஞ்சுக்கிட்டு பிரகாரம் சுத்தி வந்தோம். வெளிப்புறம் கொடி மரத்துக்கு அந்தாண்டை ஒரு மேடையில் வரிசைக்கு மூணா மூணு வரிசையா ஒன்பது துளசி மாடங்கள். அதில் தளதளன்னு நிற்கும் 'நான்'!!! அதென்ன ஒன்பது கணக்குன்னு தெரியலை! ஆனால் மாடங்கள் ஒவ்வொன்னும் பெருசாவே இருக்கு. சைஸ் ரொம்பச் சரி:-))))
வெளியே வளாகத்தில் இருக்கும் மண்டபத்தில் விஜயதசமியன்னிக்கு ரெங்கன் நம்பெருமாள் வந்து எழுந்தருளுவார். வழக்கமான பூஜைகள் தீபாராதனை அமுதுபடி (லஞ்ச்) எல்லாம் ஆனதும் பரிவேட்டைக்குக் கிளம்புவார். எப்படி? வேறெப்படி? அதே பரியின் மீது ஏறித்தான்! தங்கக்குதிரை வாகனம். கையில் வேட்டையாட வில்லும் அம்புமா ஒரு கம்பீரம்! வளாகத்துலே இருக்கும் வன்னி மரத்தைப் பார்த்து ஒரு அம்பு விடுவார். கோவில் தல விருக்ஷமே வன்னி மரம்தான். ஆச்சு! கிளம்பிப் போய்க்கிட்டே இருக்கணும் இனி. நேராப் பெரிய கோவில்தான்!
(சுட்ட படம்.நன்றி செங்கோட்டை ஸ்ரீராம்)
நம்ம சேஷராயர் மண்டபத்துக்குப் பக்கம் இருக்கும் வெள்ளைக் கோபுரத்துக்குள் நுழைஞ்சு கலியுகராமன் கோபுரவாசல்(கிழக்கு ராஜகோபுரம்) வழியா கீழ அடையவளஞ்சான் தெருவழியாப் போனாலொரு கிலோமீட்டர் தூரத்துலே காட்டுக்குள் வந்துடலாமாம்.
காடும் மேடுமா தரிசனம் செஞ்சாப்போதாதுன்னு இன்னொரு நரசிம்ஹர் லக்ஷ்மியோடு அமர்ந்த கோலம் காண்பிப்பது ஆத்து அழகிய சிங்கர் கோவிலில். இதுவு இங்கே பக்கத்தில்தான் இருக்கு.காவிரியின் தென்கரையில் இருக்கார் இவர். இந்த ஆத்தை ஆறாவும் எடுத்துக்கலாம். இல்லைன்னா ஆமாகவும்(அகம்) என்னைப்போல் எடுத்துக்கலாம்:-) அஃபீஸியல் பெயர் என்னமோ ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கப் பெருமாள் திருக்கோவில்.ஓடத்துறை, கீழச் சிந்தாமணின்னுதான் !
(சுட்ட படம்.நன்றி ).
அந்தக் காலத்துலே காவிரிக்கு ஏது பாலம்? படகில்தான் அக்கரைக்குப் போகணும் ரெங்கனை தரிசிக்கணுமுன்னால். அப்படிப் போகும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கணுமுன்னு இங்கே வந்து கோவில் கொண்டாராம். எல்லாரும் நல்லபடியா அக்கரைக்குப் போய்ச்சேர அருள்புரியும் என்று கைகூப்பி வேண்டுவதுபோல இடது தொடையில் அமர்ந்திருக்கும் தாயார் கைகூப்பித் தொழுத நிலையில் இருக்காராம். நாமும் இந்தக் கோவிலுக்குப் போகலை. அதான் பாலமும் வந்தாசு, வாகனமும் இருக்கே! ஆனாலும் அடுத்த முறை 'ஸ்ரீரங்கத்தில் தங்கும் காலம்' ஒரு நடை போய்ப் பார்த்து வரணும். சின்னக்கோவில்தானாம். காலை ஏழரை டு ஒன்பதரை, மாலை ஆறு டு ஏழுதானாம் கோவில் திறப்பதே!
(சுட்ட படம்.நன்றி .)
அடுத்து எங்கேன்னு கேட்ட கோபாலை, 'இது என்ன கேள்வி ?'னு பார்த்தேன். அகிலாவைக் கண்டது முதல் ஆண்டாள் இதுவரை கண்ணுலேயே ஏன் படலை என்று மனசில் ஒரு குடைச்சல். மேலும் அன்னமூர்த்தியைக் கட்டாயம் தரிசிக்கணும். வயசான காலத்துலே சோற்றுப்பஞ்சம் வராமல் இருக்கணுமேடா பெருமாளே! இங்கே எல்லாம் வெறும் ப்ரெட்டாத்தானே கிடக்கு? ஒரு பருப்பு சாதமோ ரசஞ் சாதமோ 'இருக்கும்வரை' கிடைக்கணுமே! அதுவுமில்லாமல் கிளி மண்டபத்தை வேற பார்க்கலை ? எப்படிக் கோட்டை விட்டேன்? ரெங்கா ரெங்கன்னு கொஞ்சுமொழி பேசுமாமே!
கேமெராச் சீட்டு விற்கும் கவுண்டரைக் காணோம். சம்பந்தப்பட்டவர்களுக்கு தனிமடலில் வேண்டுகோள் அனுப்பிட்டு, சில படங்களைச் சுட்டுப் போட்டுருக்கேன்.
தொடரும்..........:-)))
பதிவுலக நண்பர்களுக்கும் வாசகப் பெருமக்களுக்கும், விஜய வருச ஆண்டுப்பிறப்பு அண்ட், விஷுப்பண்டிகைக்குமான இனிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது உங்க துளசிதளம்!
எல்லோரும் நல்லா இருங்க.

↧
சரியாப் பார்க்கலையே......:( இனி எப்போ?
கோவில் புதையுண்டு இருந்த காலத்தில், இந்தப்பக்கமா வேட்டையாட வந்த தர்மவர்மன் காதில் கோவில் இருக்கும் விவரத்தைச் சொன்னதே கிளிதானாம். அதை நினைவு கூறவே கிளிமண்டபம் ஒன்னு கட்டினாராம் அரசர். எப்பவும் ரெங்கா ரெங்கன்னு அழகாக் கிள்ளை மொழிகள் பேசிக்கொண்டிருக்குமாம் அங்கே! ஹைய்யோ!!! மயக்குமோ! மயக்கத்துடன் அனுபவிக்கணும்.
பெரிய கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். இப்பவும் ரங்கா ரங்கா ரங்கா கோபுர முகப்பு கண்ணில் படலை:( சரியா கோபுரவாசலுக்குப் பக்கத்தில் வண்டியை நிறுத்துனா????
ரெங்கவிலாஸ் மண்டபக் கோவில்கடைகள் வெய்யில் தணிஞ்சதால் முன்னேறி இருக்கு. காலையில் கண்ணில்படாத குட்டிக்கல்லுரல்களின் அழகு வரிசை அபாரம். கோபுரதரிசன சீட்டு விற்கும் மேசைக்குப்போய் அங்கிருந்த பெண்ணிடம் அன்னப்பெருமாளைப் பற்றி விசாரிச்சேன். இப்ப மூணாவதுமுறையா நம்மைத் தொடர்ந்து பார்த்ததால் ஓரளவு பரிசயமாகி இருந்தோம். அப்படி ஒன்னு இங்கே இல்லையேன்னு முழிச்சாங்க.
அதுக்குள்ளே நம்ப காளி முத்து அங்கே வந்து சேர்ந்தார். நம்மைப் பார்த்ததும் புன்சிரிப்பு. கிளிமண்டபம் பார்க்கலை விட்டுப் போச்சுன்னேன். அது அங்கெதானே இருந்ததுன்னு சொல்லி எங்ககூடவே வந்தார். 'பச்சைக்கிளிகள் எல்லாம் ரெங்கா சொல்லுதா?'ன்னேன். அங்கே ஏது கிளின்னார். தர்மவர்மனுக்கு கோவிலைக் காட்டுச்சாமே கிளி! அதுக்குத்தானே நன்றி சொல்ல ஒரு கிளிமண்டபமே கட்டியிருக்காங்கன்னதும்..... அப்படியெல்லாம் ஒன்னுமே இல்லை. இது கிள்ளிவளவன் கட்டிய மண்டபம். கிள்ளிமண்டபம் இப்போ கிளிமண்டபமா ஆகி இருக்குன்னார்.
"அப்போ கிளி? "
"சின்ன கூண்டுலே ஒன்னு இருக்கு. அது பொம்மைக்கிளி"
சோகமாப்போயிருச்சு எனக்கு. ரேவதி மண்டபம், அர்ஜுனமண்டபம் இருக்கும் திருச்சுற்றிலே கிளிமண்டபம் இருக்கு. சொன்னாப்படி உள்விதானத்தின் உச்சியில் சின்ன கூண்டும் பொம்மைக் கிளியும்:( அப்பதான் கவனிக்கிறேன் எதிர்மூலையில் குட்டியா ரெண்டு சந்நிதிகள். உள்ளே சிலை ஒன்றுமில்லை. ஓவியம்தான். துலுக்க நாச்சியார்! இன்னொரு சந்நிதியில் சேரகுலவல்லி!
Thanks to Deepak Saagar
தில்லிப்படைகள் கோவிலில் இருந்த செல்வங்களையும் நம்பெருமாளையும் மற்ற விக்கிரங்களையும் கொள்ளையடிச்சுக்கிட்டுப்போய் தில்லி சுல்தானுக்குக் காணிக்கையாக் கொடுத்துட்டாங்க. மனம் மகிழ்ந்த சுல்தான் படைவீரர்களுக்கு செல்வத்தைப் பங்கு பிரிச்சுக்கொடுக்கும்போது அங்கே வந்த சுல்தானின் மகள் சுரதாணி, அழகிய மணவாளனின் அழகில் மயங்கி தனக்கு அந்த 'பொம்மை' வேணுமுன்னு கேட்டு வாங்கிக்கிறாள்.
அல்லும் பகலும் பொம்மைகூடவே பொழுது போறது. இனி அந்த பொம்மையை விட்டு ஒரு நாளும் பிரிஞ்சு இருக்கமுடியாதுன்ற நிலைக்கு வந்துட்டாள்.
Thanks to Deepak Saagar.
இங்கேயோ ரெங்கனை விட்டுப் பிரிஞ்ச துயரில் வாடிக் கிடக்கிறாள் இன்னொருத்தி. கோவிலில் ஆடிப்பாடி இறைவனை மகிழ்விக்கும் பெண்களில் ஒருத்தி. இவளும் நம்பெருமாளைத்தேடி தில்லிப்படைகள் போன வழியாப்போய் கடைசியில் சுல்தான் மகளிடம் அவன் இருப்பதைக் கண்டு பிடிச்சுடறாள். பூஜை புனஸ்காரங்கள் ஒன்னும் இல்லாம விரிச்சோடிக்கிடக்கும் ஸ்ரீரங்கம் வந்து கோவில் பொறுப்பாளர்களுக்கு சேதி சொல்லிடறாள். இவளுக்கு 'பின் சென்ற வல்லி'ன்னு பெயர் உண்டாச்சு.
எப்படியாவது நம்பெருமாளைத் திரும்பிக்கொண்டு வந்துடணுமுன்னு திட்டம் போடறாங்க. பெரிய நடனக்குழு ஒன்னு புறப்பட்டுப்போய் சுல்தான் முன் ஆடுது. மனம் மகிழ்ந்த சுல்தான் பொன்னும் பொருளுமா வாரிக்கொடுக்கிறான். இதெல்லாம் வேண்டாம். விக்கிரஹத்தைத் திருப்பித்தந்தால் போதுமுன்னு கெஞ்சறாங்க. என்ன ஏதுன்னு புரியாமல் முழிக்கும் சுல்தானுக்கு அவனுடைய மகளின் பொம்மை பற்றிய விவரம் கிடைக்குது. கேட்டால் குழந்தை தரமாட்டேன்னு அடம் பிடிக்கிறாள்.
என்ன செய்யலாமுன்னு யோசிச்சுக் கடைசியில் குழந்தை தூங்கும் சமயம் பொம்மையைத் தூக்கிக் கொடுத்துடறார். ஆனந்தத்தோடு அதை வாங்கிக்கிட்டவுங்க ஓட்டமும் நடையுமா ஊருக்குத் திரும்பறாங்க. மறுநாள் பொழுது விடிஞ்சவுடன் பொம்மையைக் காணோமுன்னு குழந்தை அழுது அடம்பிடிக்கறாள். அன்ன ஆஹாரமில்லாமல் அழுது அழுது உடல்நிலை மோசமாகிருது. தாங்க முடியாத நிலைக்குப்போன சுல்தான், திரும்பப்போய் வாங்கி வர படை வீரர்களை அனுப்பறான். குழந்தை சுரதாணியும் கூடவே வர்றாள்.
தொடர்ந்து வரும் தில்லிப்படை வீரர்களிடமிருந்து நம்பெருமாளைக் காப்பாத்த அவனைத் தூக்கிக்கொண்டு போனவர்கள் திருவரங்கம் வராமல் கர்நாடகா மேலக்கோட்டைக்குக் கொண்டு போயிடறாங்க. ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்த சுரதாணி, அவளுடைய பொம்மை இன்னும் இங்கே வந்து சேரலைன்ற விவரம் தெரிஞ்சதும் மயங்கி விழுந்து உயிரை விட்டுடறாள். அவளைத்தான் பெருமாள் மேல் காதல் கொண்ட பீபி நாச்சியார்ன்னு கோவில்கட்டி கும்பிட ஆரம்பிச்சது சனம்,.
Thanks to Deepak Saagar
தில்லிக்காரிக்கு சோறு ஆகாதுன்னு சப்பாத்தி நைவேத்தியம் ஸ்பெஷலா நடக்குது இங்கே! பெருமாள் லுங்கி கூடக் கட்டிக்கறானாம்! எங்காத்துலே பழக்கம் இல்லைன்னு சொல்லி மனசை நோகடிக்காமல் உனக்காக இதையெல்லாம் நான் செய்வேன்னு சொல்லிச் செய்யறான் பாருங்க அந்த அன்புதான் பெருசு.
ஒளிச்சு வைக்கப்பட்ட அழகியமணாளனை ஒரு வழியா பெரிய கோவிலுக்குக் கொண்டு வந்துடறாங்க. இங்கிருந்து போனவன் , திரும்பிவர அறுவது ஆண்டுகளாச்சாம். இதுக்கிடையில் கொஞ்ச நாளுக்கு முன்னாலே பூமிக்கடியில் ஒளிச்சு வைக்கப்பட்ட ரங்கநாயகித் தாயாரின் திருவுருவம், தானே கிளம்பி மேலே வந்துருக்கு! தாயார் சிலை எங்கிருக்குன்னு தெரியாமல் அல்லாடிய அன்பர்களும் அரசனும் வேற ஒரு சிலை செய்து மூலவராக்கிட்டாங்க. இப்ப ஒன்னு மண்ணில் இருந்து கிளம்பியதும் என்ன செய்யறதுன்னு யோசிச்சு, இவர்தான் ஒரிஜினல்னு புரிஞ்சுபோனதால் இவரை மறுபடியும் தாயார் சந்நிதிக்குள்ளேயே ஸ்தாபனம் செஞ்சாங்க. அதுவரை மூலவரா ஆக்ட் கொடுத்தவரை அப்படியே ஒதுக்கித் தள்ளிட முடியுமா? அதனால் தாயார் சந்நிதியில் இப்போ ரெண்டு மூலவர்களும் இருக்காங்க.
இப்பத் திரும்பி வந்த அழகியமணவாளன் கூட ஒரிஜினலா இல்லையான்னு சந்தேகம் வந்துருது. இவன் கூடப்போனவர்கள் யாருமே இப்போ உயிரோடு இல்லை. இவனைத் தெரிந்த பக்தர்கள் யாராவது இருக்காங்களான்னு தேடுனப்ப, 90+ வயசில் ஒருத்தர் கிடைக்கிறார். பெரும்ஆளுக்கு உடைகளைத் துவைச்சுக்கொடுத்த பெரியவர். மூத்து ,வயசாகி இப்போ கண்பார்வையும் இல்லை இவருக்கு. 'பெருமாளைக் குளிப்பாட்டிய திருமஞ்சன நீர் கொடுங்கோ, இவர் நம்மவரா'ன்னு சொல்றேன்னார். அப்படியே ஆச்சு. அதை முகர்ந்து சுவைத்தவர், கரகரன்னு கண்ணில் நீர் வழிய 'இவர் நம்பெருமாளே, நம் பெருமாளே' ன்னு பக்திப் பெருக்கால் கூவினார். அப்போலெஇருந்துதான் அழகியமணவாளருக்கு நம்பெருமாள் என்ற பெயர் கிடைத்தது! அழகியமணவாளரின் திருமஞ்சன நீருக்கு அப்படி ஒரு தனிச்சுவையும் மணமும் உண்டாம்!!!!
சேரகுலவல்லி? நம்ம குலசேகராழ்வாரின் மகள். சேர நாட்டு மன்னர் குலசேகரர் , பெருமாளிடம் அளவில்லாத பக்தி. அவர் 'படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே'ன்னால் அவர் மகள் இன்னும் ஒரு படி மேலே போய் கல்யாணமுன்னு பண்ணிக்கிட்டால் உன்னைத்தான்னு சொல்லிட்டாள். ஒரு நாள் கல்யாணமும் ஆச்சு. அன்னிக்கு ஸ்ரீராம நவமி வேற! பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொடுத்தவர், மாமனார் என்ற ஹோதாவில் அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்காம எதுவும் வேணாம் உன் கோவில் வாசலில் ஒரு படியாகக்கிடந்தாலும் போதும் என்கிறார்.
செடியாய் வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.
இப்படி டௌன் டு எர்த் ஆகி பரமபதநாதனை விட்டால் வேற யாருமில்லைன்னு இருந்தே ஆழ்வார்கள் வரிசையில் சேர்ந்துட்டார் நம்ம குலசேகராழ்வார். திருப்பதி வேங்கடவனுக்கும் திருவரங்கம் ரெங்கனுக்கும் நிறையச் செய்கிறார். பெரிய கோவிலில் மூணாவது சுற்றுக்கே குலசேகரன் திருவீதி என்றுதான் பெயர்.
நம்ம ரெங்கனுக்கு ஏகப்பட்ட நாச்சியார்கள் இங்கே! எண்ணிப்பார்த்தால் பனிரெண்டுன்னு தாளிச்சுட்டாங்க நம்ம ஜெயஸ்ரீ.
அன்னமூர்த்தியைப் பற்றி விசாரிச்சதில் கொஞ்ச நேரம் யோசித்த கே எம் கொடிமரத்துக்கு வலது பக்கத்தில் இருக்குன்னு நினைக்கிறேன் என்றார். இதுக்குள்ளே நாங்க பேசிக்கிட்டே வெளியே நாலாம் சுற்றுக்கு (ரெங்கவிலாஸின் மறுபக்கத்துக்கு )வந்திருந்தோம். சரி. நாங்க பார்த்துக்குறோம். உங்கள் சேவை வேற யாருக்காவது தேவைப்படுமுன்னு அவருக்கு நன்றி சொல்லிட்டு நாங்க தேடிக்கிட்டு இருந்தோம். கடைசியில் கொடிமரத்துக்கு வலது பக்கம் வெளி முற்றத்தை நோக்கி ஒரு மூலையில் சந்நிதி ஒன்னில் தனியா ஆடாம அசையாம உக்கார்ந்துருக்கார் அன்னமூர்த்திப்பெருமாள். ஒரு கை அபய ஹஸ்தம் காண்பிக்க மறு கையில் சோற்றுருண்டை! கொஞ்சம்கூட வருமானமே இல்லாத சந்நிதி போலிருக்கு. ஈ காக்காவைக் காணோம். நமஸ்காரம் செஞ்சு ஃப்யூச்சர் ரசஞ்சாதத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி மன்றாடிட்டு வெளியே அதே ரெங்கவிலாஸின் மறுபக்கத்துக்கு(சக்ரத்தாழ்வார் சந்நிதி இருக்கும் பக்கம்) வந்தோம்.
Thanks to Hindu.
மண்டபத்தில் இருக்காள் ஆண்டாள்! கால்களைக் கொஞ்சம் கொஞ்சமாக் கவனமா வச்சு ரிவர்ஸில் நடப்பதை வியப்போடு பார்த்தேன். மண்டபத்தின் ஓரத்துக்கு வந்துட்டாள். இன்னும் கொஞ்சம் நகர்ந்தால் தொபுக்கடீர் என்று விழநேரிடும். அப்போ ஒரு பணியாளர் பெரிய ப்ளாஸ்டிக் ட்ரம்மைக் கொண்டு வந்து வைக்க,செல்லம் ஒன் பாத்ரூம் போறதுப்பா!!!! கேமெரா டிக்கெட் வாங்கிக்கலையேன்னு இருந்தாலும், பாவம் பொண். எதுக்குப் படமெடுக்கணும்? ப்ரைவஸி வேணாமான்னு இருந்துட்டேன். அவளுக்கு முன் கூட்டம் கூட ஆரம்பிச்சது. நல்லா இருடீம்மான்னு வாழ்த்திட்டு ரங்கா ரங்கா கோபுரத்தை முற்றத்துள்ளிருந்து ஏறிட்டு பார்த்துட்டு வெளியே வந்தோம்.இனி எப்போ வரப்போறோமோன்னு இருந்துச்சு.
கோவில் கோபுரங்களும் மண்டபங்களும் பல பகுதிகளும் தில்லிப்படையினரால் அழிக்கப்பட்டு பலமுறை சேதமாகி இருக்கு. கோவிலுக்குள்ளேயே வந்து குடி இருந்துருக்காங்கன்னா பாருங்க:( பக்தர்களும் அப்போதிருந்த மன்னர்களும் மனம்தளராமல் மீண்டும் மீண்டும் புதுப்பிச்சுக்கிட்டே இருந்துருக்காங்க. அதனால்தான் நமக்கு இவ்வளவாவது காணக்கிடைச்சிருக்கு.
ஸ்ரீ ராமானுஜர் ஏற்படுத்திய ஒழுங்கு முறைகள் எல்லாம் தில்லிப்படை வரும்வரை ஒழுங்காவே நடந்துருக்கு. அப்புறம்தான் சில மாற்றங்கள் சப்பாத்தி சமாச்சாரம் எல்லாம் அப்புறம் வந்தவையே! பொதுவா நாம் வெத்தலை போட்டுக்க சுண்ணாம்பை வெத்தலையின் பின்புறத்தில் தானே தடவுவோம். இங்கென்னன்னா பெருமாளுக்குத் தாம்பூலம் தரும்போது வெற்றிலையின் முன்பக்கத்தில் சுண்ணம் தடவுறாங்களாம். எல்லாம் ஸோ அண்ட் ஸோ படையெடுத்து வந்தபின் ஏற்பட்ட மாறுதலே!
நம்ம கீதாம்மா இருக்காங்களே (கீதா சாம்பசிவம்) அவுங்க இந்தப் படையெடுப்பினால் ரெங்கன் பட்ட பாட்டையெல்லாம் ஆராய்ந்து ரொம்பவே அருமையா ஒரு தொடர் எழுதி இருக்காங்க. ஒரு 27 இடுகைகள் இதுவரை. வரலாறு ஒரு 15 பகுதிகள். அதுக்கப்புறம் அங்கே கொண்டாடப்படும் விழாக்களைப்பற்றிய விரிவான வர்ணனைகள் என்று தொடர் அபாரம்! நான் ரசித்துப் படிக்கும் தொடர்களில் இது(வும்) ஒன்னு. முதல் முகவுரை இது.இப்படியே நூல்பிடிச்சுப்போய் வாசிங்க. உங்களுக்கெல்லாம் கட்டாயம் பிடிச்சுப்போகும்,ஆமாம்!
இங்கே நியூஸி, ஆஸி, சிங்கைன்னு அநேகமா எல்லா வெளிநாடுகளிலும் ஒரு அம்யூஸ்மெண்ட் பார்க் போனால் கூட எதெது எங்கே இருக்குன்ற விவரங்கள் அடங்கிய மேப் ஒன்னைக் கையில் கொடுத்துருவாங்க. நமக்கும் எதையும் விடாமப் பார்த்து அனுபவிச்ச திருப்தி இருக்கும்.
இங்கே இது ஒன்னும் சின்னக்கோவில் இல்லை.156 ஏக்கர்! கிட்டத்தட்ட 80 சந்நிதிகள், கணக்கில்லாத மண்டபங்கள் என்று இருக்கும்போது கோவில் வரைபடம் ஒன்னு அச்சடிச்சு விற்றால்கூட ரொம்பப் பயனாக இருக்கும். நமக்கும் எந்த சந்நிதியையும் விடாமல் பார்த்த மனநிறைவு இருக்கும்தானே?
இப்பப் பாருங்க மூணு முறை வந்தும் பார்க்காமல் கோட்டை விட்டவை அநேகம். ஹனுமன் சந்நிதிக்குப் பக்கம் தங்கவிமானம் பார்க்க ஏறிப்போகும் படிவரிசை கூட இருக்காமே!
ஸ்ரீரங்கம் விட்டுக் கிளம்புமுன் கடைசியா காஃபி ஒன்னு குடிக்கணும். அதுவும் அந்த முரளி கடையில் என்று தோணுச்சு. சீனிவாசன் போய் விசாரிச்சுக்கிட்டு வந்து வண்டியை அங்கே செலுத்தினார். ஸ்ரீரங்கம் போலிஸ் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருக்கு கடை. பயங்கரமான கூட்டம்! வண்டியை நிறுத்த இடமில்லை. ஸ்டேஷன் வாசலில் டபிள் பார்க்கிங் போட முடியுமா? நாங்க மட்டும் இறங்கினோம். கோபால் போய் பத்து ரூபாய் ஒரு கப் என்று ரெண்டு காஃபி வாங்கியாந்தார்.
நல்ல காஃபியா இருந்துச்சு. வெளியே நிறைய மேசைகள் மட்டும் போட்டு, நின்னவாக்குலே குடிச்சுட்டுப் போய்க்கிட்டே இருக்கணும். பெரிய பெரிய பித்தளை ஃபில்ட்டர்களில் டிகாஷன் இறங்கிக்கிட்டே இருக்கு ஒரு பக்கம். பணியாளர்கள் எல்லாம் பயங்கர பிஸி. சுறுசுறுப்பாய் வேலையில் மூழ்கி இருந்தாங்க. பெயர்ப்பலகை கூட இல்லாமல் சிம்பிளா பலவருசங்களா நடக்குதாம் இந்தக் காஃபிக் கடை!
இருளில் வண்டி திருச்சியை நோக்கிப் போனது. கோவிலை சரியாப் பார்க்கவே இல்லைன்னு முணுமுணுத்தேன். மூணு முறை வந்துமான்னார் கோபால். ஆமாம்னு நான் தலையாட்டியது இருட்டில் அவருக்குத் தெரிஞ்சுருக்குமோ?
தொடரும்.............:-)

↧
கில்லாடிப் புள்ளையார்!
நம்ம ரெங்கனிடம் இன்னுமொரு விசேஷம் என்னன்னா....மற்ற கோவில்கள் பகல் 12 முதல் மாலை 4 வரை மூடி வச்சுடறாங்க பாருங்க அதைப்போலில்லாமல் கோவில், காலை 6 மணி முதல் இரவு 9 வரை திறந்தே இருக்கு. முக்கிய சந்நிதிகளான தாயார் சந்நிதியும் ரெங்கநாதர் சந்நிதியும் கூட பகல் தரிசனத்துக்குக் குறிப்பிட்ட நேரங்களில் திறந்துதான் இருக்கு. அதான் உள்ளூர் மக்கள்ஸ் பகல் ரெண்டு மணிக்குப்போய் ஹாயா ஸேவிச்சுக்கிட்டு வந்துடறாங்க. நம்மைப்போல வெளியூர் மக்களுக்கு இந்த ரகசியம் தெரியாததால் பகல் 12 மணிக்கு கோவில் மூடி இருக்குமுன்னு நினைச்சுக்கறோம்.
கோவிலில் கிடைச்ச தகவலை இங்கே பகிர்ந்துக்கறேன். ஒருமுறை பார்த்து வச்சுக்குங்க. உதவலாம்.
ஒரு நாளைக்கு மூணுமுறை பூஜை நேரம் தவிர மற்ற நேரங்களில் பெரியவர் ஃப்ரீதான்.
உற்சவரோ வருசத்துக்கு 322 நாள் பயங்கர பிஸி. அலங்கரிச்சுக்கிட்டு ஊர்வலம் வந்துக்கிட்டும் மக்களுக்குக் காட்சி கொடுத்துக்கிட்டும் இருக்கார்.
பதிவில் அங்கங்கே இருக்கும் படங்களைப் பாருங்களேன். புரிஞ்சுரும்:-)
பெருமாள் சந்நிதி:
Sri Ranganathar Sannathi
Viswarooba Seva - 6.00 to 7.30
Pooja Time[no Seva] - 7.30 to 8.45
Seva - 8.45 to 13.00
Pooja Time[No Seva] - 13.00 to 14.00
Seva - 14.00 to 18.00
Pooja Time[No Seva] - 18.00 to 18.45
Seva - 18.45 to 20.00
Free Seva - 20.00 to 21.00
No Seva after 21.00
Quick Seva Rs. 250/= per head.
Viswarooba Seva Rs. 50/= per head.
General Entrance - Free in all Seva time.
ரங்கநாயகி தாயார் சந்நிதி
Sri Ranganachiar Sannathi
Viswaroobam Paid Seva - 6.30 - 7.15
Viswaroobam Free Seva - 7.15 - 8.00
Pooja Time [No Seva] - 8.00 - 8.45
Paid Seva - 8.45 - 12.00
Free Seva - 12.00 - 13.00
Pooja Time[No Seva] - 13.00 - 15.00
Free Seva - 15.00 - 16.00
Paid Seva - 16.00 - 18.00
Pooja Time[No Seva] - 18.00 - 18.45
Paid Seva - 18.45 - 20.00
Free Seva - 20.00 - 21.00
[No Seva after 21.00. Timings are subject to change during Festival days.]
திருச்சிவரை வந்துட்டு உச்சிப்பிள்ளையாரைப் பார்க்காமல் போக மனசு வரலை. ஆனால் இப்போ இருட்டிப் போச்சு. மணிவேற ஏழாகப்போகுது. மேலும் முழங்கால் வலி. பேசாம தாயுமானவரை தரிசனம் செஞ்சுக்கலாமுன்னு 'நாங்களே' முடிவு பண்ணி மலைக்கோட்டைக்குப் போகச் சொன்னோம் நம்ம சீனிவாசனை.
ரொம்பவே குறுகலான ஒரு தெருவுக்குள் காரைக் கொண்டு போறார். எதிரில் வண்டி வந்தால் அம்பேல். பக்கத்துலே சின்னக்கடைத் தெரு இருக்கு. அதன் வழியா வந்துருக்கலாம். ரெண்டு பக்கமும் வீடுகள். இடையிடையே தேங்காய்பழம் விற்கும் கடைகள்.இங்கேயே வண்டியை நிறுத்துங்க. இனி மேலே போக வழி இல்லை. இப்படி ஓரமா(!!) நிறுத்திட்டு இதை வாங்கிக்கிட்டு போங்கன்னு பூஜைப்பொருட்கள் தட்டை நீட்டுறாங்க. எப்படி நிறுத்தி எப்படி இறங்கறது? கார்க் கதவைத் திறக்கவும் இடம் இல்லையே:( கண் முன் கொஞ்ச தூரத்தில் கார்களின் பின்னால் இருக்கும் சிகப்பு விளக்கு வெளிச்சம்தெரியுது. அப்பவண்டி இன்னும் போகலாம், இல்லையா?
கொஞ்சதூரம் மெள்ள வண்டியைச் செலுத்திக்கிட்டே போனதும் வலப்பக்கம் கடைவீதியின் கலகல! திரும்பாமல் இன்னும் கொஞ்சதூரம் மேலே போனதும் பாதை கொஞ்சம் அகலமா ஆச்சு. வண்டி நிறுத்தவும் இடம் கிடைச்சது. இடது பக்கம் கோவில் வாசல் போல ஒன்னு. சனம் போறதும் வாறதுமா இருக்கு. நாங்களும் இறங்கிப்போனோம்.அருள்மிகு மாணிக்க விநாயகர் கோவில்
கோவில்களுக்கே உரித்தான காவியும் வெள்ளையும் பட்டைகளாப் போட்ட படி வரிசைகள். ஆனால் கீழே போகுது. விடுவிடுன்னு இறங்கிப்போறோம். பேஸ்மெண்ட் போயிட்டோம். தனிக்கோவிலாட்டம் ஒரு சின்ன சந்நிதி. செவ்வகமா மூணு பக்கமும் கம்பித்தடுப்பு. எட்டிப்பார்த்தால் புள்ளையார்! நின்னு ஒரு கும்பிடு போட்டுட்டு இடப்பக்கம் திரும்பினால் ஒரு பெரிய ஹால். பாட்டுக் கச்சேரி நடக்குது ! அருமையான கணீர் என்ற குரல்! ' கணபதியே வருவாய்.....'
பார்க்க ஸாலிடா இருக்கார் பாடகர். உள்ளூர்க்காரர். இளம் கலைஞர். பக்க வாத்தியங்களுடன் தூள் கிளப்பறார். வாசலில் நின்னுக்கிட்டு இருந்தவரிடம் பெயர் விசாரிச்சேன். கஷ்யப் மஹேஷாம். ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களிடம் அவார்ட் வாங்கியவராம்.
விசேஷம் என்னன்னு கேட்டேன். விநாயகச் சதுர்த்தி விழா.பத்து நாள்கோலாகலமா நடக்குமாம். தினம் பாட்டு, ஆன்மிக உபந்நியாசம், பேச்சுன்னு விதவிதமான நிகழ்ச்சிகள். கூட்டம் சுமாரா இருக்கு சபையில். பாட்டு கேக்கலாமுன்னு உக்காரப் போனவளை, சாமி பார்க்க வரலையான்னார் கோபால்.
அவர் கையில் ரெண்டு சீட்டுகள். அர்ச்சனைக்கான்னு கேட்டதுக்கு விசேஷ தரிசனம் என்றார். ரொம்ப நேரம் வரிசையில் நிக்காமச் சட்புட்ன்னு சாமியைப் பார்த்துட்டுப்போகலாம். அம்பது ரூபாய். அதை எடுத்துக்கிட்டு எங்கே எந்தப்பக்கம் போகணுமுன்னு பார்த்தால்.... விநாயகர் சந்நிதிக்கருகில் இருந்தவர் கையில் உள்ள சீட்டைப் பார்த்துட்டுக் கம்பித்தடுப்பைத் திறந்து வழிவிட்டார் . இதில் நுழைஞ்சு தான் மலையேறும் படிக்கட்டுகளுக்குப் போகணும் போலன்னு நுழைஞ்சவளை புள்ளையார் சந்நிதிக்குப்பக்கம் நிக்கச்சொன்னார். அடுத்த பக்கம் இதே போல கோபால். துவாரபாலகனும் பாலகியுமா நிக்கறோம். புள்ளையாருக்கு அபிஷேகம், தீபாராதனை எல்லாம் ஜாம் ஜாம்ன்னு நடக்குது. நம்மைச் சுத்தி இருக்கும் கம்பித்தடுப்புக்கு வெளியில் சனம் நின்னு சாமி கும்பிடுது.
தீபாராதனையை முதலில் நமக்குக்காமிச்சு விபூதி பிரசாதம் வழங்கியபின் மற்ற சனங்களுக்குக் கொண்டு போறார் அர்ச்சகர். அப்பத்தான்புரியுது இந்த விசேஷ தரிசனச் சீட்டு இங்கே இந்தப் புள்ளையாருக்குன்னு!!!! எதுக்கு ஸ்பெஷல் தரிசனச் சீட்டு வாங்குனீங்கன்னு கேட்டால் தாயுமானவரைத் தரிசிக்கன்னு நினைச்சேன் என்று முழிக்கிறார் கோபால்:-))))
புள்ளையார் பலே கில்லாடிதான். கோபாலை எப்படி ஏமாத்தணுமுன்னு தெரிஞ்சுருக்கு:-) முந்தி ஒருக்கில் ஸ்வாமிமலை ஸ்வாமிநாதனைத் தரிசிக்க படிகளேறிப்போனதும் முதல்லே கண்ணில் பட்டவர் புள்ளையார்தான். அங்கிருந்த குருக்களும் வாங்கோன்னு கூப்பிட்டு தீபாராதனை காமிச்சுட்டுத் தட்டை நீட்டறார். கண்ணில் ஒத்திக்கிட்டு தட்சணை போட கோபால் சட்டைப்பைக்குள் கையை விட்டு ரூபாய் நோட்டை எடுத்து தட்டில் வச்சார். அப்பதான் தெரியுது அது அம்பதுன்னு! புள்ளையாரைப் பார்த்தால் சிரிச்சமுகமாத் தெரிஞ்சது. என்ன தாராளப்பிரபுவா இருக்கீங்கன்னு அப்புறம் கேட்டால்..... பைக்குள் பத்து வச்ச நினைவுன்றார்.
மாணிக்கவிநாயகரின் ஒரிஜினல் பெயர் சித்தி விநாயகர். கேட்ட வரங்கள் அனைத்தையும் கொடுக்கும் பெரிய மனசு! ஒரு காலத்தில் மாணிக்கம் பிள்ளை என்ற ஒரு பக்தர் இவருக்குண்டான அனைத்து செலவுகளுக்கும் ஸ்பான்சார் செஞ்சுட்டதால் இவர் பக்தனின் பெயரையே தனக்கும் சூட்டிக்கிட்டார். உண்மையாவே பெரியமனசுதானே!!!
கோவில் கடைகள் ஜேஜேன்னு இருக்கு. பிள்ளையார் பொம்மைகள் கொட்டிக்கிடக்கு. நம்ம கலெக்ஷனுக்கு புதுவகையில் இருக்கும் ஒன்னு தேடிக்கிட்டே இருந்தேன். டக்ன்னு மனம் கவரும் விதமா ஒன்னும் கண்ணுலே ஆப்டலை. புதுமையா இருக்கணும்,கூடவே சின்ன அளவாகவும் இருக்கணும் என்ற கண்டிஷன் வேற இருக்கே:(
மலைக்கோட்டையைச் சுத்தி இருக்கும் கிரிவலப்பாதையில் மட்டும் பதினோரு பிள்ளையார்கள் இருக்காங்க. ஏழைப்பிள்ளையார்னு கூட ஒருத்தர் இருக்கார். ஆனால்...நம்ம மாணிக்க விநாயகர் பணக்காரர். இவர் கோவில் விமானத்துக்குத் தங்கத்தகடு போர்த்தி இருக்காங்க. கோவிலில் அன்னதானம் நடக்குது.சிதர் தேங்காய் உடைக்கத் தனி இடம். விழாக்கள் நடத்தத் தனி ஹால் இப்படி ஜமாய்க்கிறார்.
என்ன ஒன்னு....காலணிகள் பாதுகாக்க இருக்கும் இடம் பிள்ளையார் சந்நிதி கடந்து கடைகள் ஆரம்பிக்கும் இடத்தில் இருப்பது.... கஷ்டம்:( படிக்கட்டுகளில் இறங்கி செருப்புக்காலோடு சந்நிதித் தடுப்பைக் கடந்து போகணும் அங்கே போக. இந்தப்பக்கம் படிகள் இருக்குமிடத்தில் ஏதாவது அரேஞ்ச் செஞ்சுருக்கக்கூடாதோ?
ஒரு வேளை கடைகள் இருக்கும் பகுதிக்கு அப்பால் போனால் கோவில் வாசல் இன்னொன்னு வருதோ? அப்படித்தான் இருக்கும் போல! அந்தப்பக்கம் நாம் போகலையே:( படத்தைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கு. எதா இருந்தாலும் அடுத்த பயணத்தில் கொஞ்சம் எக்ஸ்ஃப்லோர் பண்ணிக்கணும்.
மேலே தாயுமானவரைப் பார்க்கப் போகலாமான்னு கேட்டதுக்கு, 'வேணாம்மா. இப்பவே நேரமாகிருச்சு. நாளைக்கு வேற நீண்ட பயணம் இருக்கு. அறைக்குப்போய் ரெஸ்ட் எடுக்கலாம்.
இன்னொருக்கா பார்க்கலாம் ' என்றார் என் தாயுமானவர்.
தொடரும்.............:-)
இன்று ஸ்ரீ ராமநவமி விழாவைக் கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும் விழாக்கால வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

↧
↧
ஸ்ரீராமநவமி
எனக்கு ரொம்பவும் பிடிச்ச பண்டிகை இது.
'ஓ ராமா நீ ரொம்ப சிம்பிள் அண்ட் ஸ்வீட்'ன்னு கொண்டாடத் தோணும். கொண்டாடுவேன். பிரசாதம் செய்ய மெனெக்கெடவே வேணாம்:-)
ஒரு பானகம், ஒரு நீர்மோர், ஒரு வடபப்பு. வேலை முடிஞ்சது.
அம்மாவீட்டில் வடபப்புவுக்கு ஊறவச்ச பாசிப்பருப்பு. இங்கே நம்ம வீட்டில் அதுலே சின்னமாறுதல். தாளிச்சுக்கொட்டும்போது ஊறவச்ச பருப்பைப்போட்டு அரைவேக்காடாய் எடுப்பேன். ரொம்ப வேக வச்சால் சுண்டலாகிரும். கவனமா இருக்கணும் கேட்டோ:-) அப்புறம் வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக்கிக் கலந்துருவேன். மாங்காயில் ஒரு எழுத்தை மட்டும் நீக்கி தேங்காய் ஆக்கிருவேன். இங்கே மாங்காய் நஹீ:( அம்புட்டுதான்.
சாமிக்குக் கை காமிச்சுட்டு நாம் முழுங்க வேண்டியதுதான்:-)
வெள்ளிக்கிழமை ஆரம்பிச்ச ராமநவமி இப்போதான் முடிவுற்றது.
வெள்ளிக்கிழமை நம்ம வீட்டில் ஆச்சா.... அன்னிக்கு மாலை ஶ்ரீ சனாதன் தரம் (Shree Sanatan Dharam Christchurch) நடத்தும் ஸ்ரீராமநவமி பூஜைக்குப் போயிருந்தோம். நிலநடுக்கம் வந்தபிறகு இங்கே பப்ளிக் ஃபங்ஷன் நடத்த ஹால்கள் கிடைப்பதில்லை. கூட்டம்(?!) கூடும் சமயம் எதாவது நடந்துபோச்சுன்னால் அந்த உயிர்களுக்கு யார் கேரண்டீ? அரசாங்கத்தைப்போட்டுக் காய்ச்சு காய்ச்சு காய்ச்சிருவோம்லெ!
அதனால் ஒரு வீட்டில் பூஜைக்கு ஏற்பாடு. வீடு என்பதால் எல்லோருக்கும் இருக்கைகள் தர முடியாதேன்னு ஹாலில் வெறும் பாய்கள் போட்டு வச்சுருந்தாங்க. நமக்கோ....மூட்டுவலி. முழங்கால் தகராறு. போயிட்டோமேன்னு பல்லைக் கடிச்சுப் பொறுத்துக்கிட்டேன். பண்டிட் ஒரு கதை சொன்னார். இதுவரை எனக்குத் தெரியாத புதுக்கதை. அதை உங்களுக்கு நான் சொல்லணுமுன்னு கோபாலுக்கு ஒரே துடிப்பு:-)
ஒரு சமயம் நாரதர் கடும்தவம் செய்யறார். காமத்தையும் குரோதத்தையும் வெல்லணும் என்பதற்காக இந்த தவம். மஹாவிஷ்ணு தோன்றி உன்னிஷ்டம் போல நடக்குமுன்னு சொல்லிடறார். தவம் முடிஞ்சது. இவ்வளவு நாள் ஒரே இடத்தில் இருந்து தவம் செஞ்சு கைகால் எல்லாம் ஒரே வலி. ஊர் சுத்தும் கால்களுக்குப் போரடிச்சுப் போச்சு. அதுவுமில்லாமல் இத்தனை நாள், எல்லோரும் நான் எங்கேன்னு தவிச்சுக்கிட்டு இருந்துருப்பாங்கன்னு எண்ணம் வேற.
நாராயணான்னு ஸ்ரீவைகுண்டம் போகிறார். 'வாரும் நாரதரே. எங்கே ஆளை ரொம்ப நாளாக் காணோமே' ன்னார் விஷ்ணு.
ஆஹா! சரியான சந்தர்ப்பம் னு நினைச்சுத் தொண்டையை லேசாக் கனைச்சுக்கிட்டு ' நான் தவம் செஞ்சுக்கிட்டு இருந்தேன். கடுமையான தவம் ' என்று சொன்னார்.
"அடடே... அப்படியா? எதுக்காகத் தவம்? எதை வேண்டி?"
"அதொன்னுமில்லை. நான் காமத்தை வெல்லணுமுன்னு தவம்செஞ்சேன். அது நிறைவேறிடுச்சு. இப்போ நானும் சிவனும் ஒன்னுதான். அவரைப்போலவே நானும் காமனைத் தூக்கி எறிஞ்சுட்டேன். அவராவது கோபத்தில் மன்மதனை எரிச்சுட்டார். நான் கோபத்தையும் வென்றுவிட்டேன். உண்மையைச் சொன்னால் நான் இப்போ சிவனை விட ஒரு படி மேல்!"
"ஆஹா.... நல்லதாப் போச்சு. சரி இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்?"
"ஒன்னுமில்லை. ரொம்பநாளா ஒரே இடத்தில் குந்தியிருந்து போரடிச்சுப் போச்சு. ஹாயா உலகை ஒரு சுத்து சுத்திட்டு வரணும். போயிட்டு வரேன்!"
ஆகாயமார்க்கமாப்போகும்போது கீழே ஒரு இடத்தில் கண்ணைப்பறிக்கும் விளக்குகளின் ஒளியோடு அலங்காரமா ஒரு நகரம் கண்ணில் பட்டது. என்னன்னு பார்க்க கீழே இறங்கி நகரத்தில் கால் வச்சார். நாரதரரைப்பார்த்து மக்கள் வணங்குறாங்க. ராஜகுமாரிக்கு சுயம்வரம் நடக்கப்போகுதாம். அதான் நாடே கோலாகலமா இருக்கு!
அதுக்குள்ளே நாரதர் வந்த விவரம் அரண்மனைக்கு எட்டிருச்சு. அரசரே எதிர் கொண்டு வர்றார். நாரதமகரிஷியை வணங்கி வரவேற்று அரண்மனைக்குக் கூட்டிக்கிட்டுப்போய் நல்லா உபசரிச்சார். விருந்து போஜனம் முடிஞ்சபிறகு, ' நாளைக்கு என் மகளுக்கு சுயம்வரம். அவளுடைய எதிர்காலமெப்படி இருக்குமோன்னு மனக்கவலையா இருக்கு. என்ன இருந்தாலும் பெற்ற தகப்பன் இல்லையா? தயவு செஞ்சு அவளுடைய கைரேகை பார்த்து அவளுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்குமுன்னு தேவரீர் சொல்லணும்' என்று வினயமா வேண்டினார்.
'அதுக்கென்ன? பேஷாய்ச் சொல்லிடலாம். மகளை வரச்சொல்' என்றார் நாரதர். இளவரசி வந்தாள். பெயர் விஸ்வமோஹினி. அழகுன்னா அப்படி ஒரு அழகு. இதுவரை நாரதர்கூட இப்படிப்பட்ட அழகியை மூணுலோகத்திலும் பார்த்தது இல்லை. கண் விழியே தெறித்து விழுந்துருமோன்னு இருக்கு அவருக்கு! இப்பேர்பட்ட அழகியை எவனோ ராஜகுமாரன் நாளைக்குக்கல்யாணம் செஞ்சுக்கிட்டுப்போகப்போறானேன்னு மனம் பதைக்குது. இவளை நானே ஏன் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது? காமத்தை வெல்லணுமுன்னு தவம் செஞ்சு எவ்ளோ நாளை வீணாக்கிட்டேன்:( தேவையா அதெல்லாம்? இவளை வேற யாருக்கும் விட்டுக்கொடுக்கவே கூடாது. எப்படியாவது இவளை நானே திருமணம் செஞ்சு தீரணும். மனக்கண்ணில் அவளோடு குடும்பம் நடத்தும் அழகை எல்லாம் நினைச்சுப் பார்க்கிறார். தாங்கமுடியலை!
'அரசே, கவலையே படாதீர். உம் மகள் அறிவிலும் அழகிலும் சிறந்த ஒருவரை சுருக்கமாச் சொன்னால் இதைவிட மேலான வரன் யாருமே இல்லை என்ற அளவுக்கு என்னைப்போல தவவலிமை மிகுந்தவரைத்தான் திருமணம் செய்யப்போகிறாள். அவளது எதிர்காலம் அமோகமா இருக்குமு'ன்னார்.
வேகவேகமா தனி அறைக்குப்போய் மஹாவிஷ்ணுவைக்குறிச்சு ஜெபம் செய்யறார். ' ஓம் விஷ்ணுவே.... நேரம், கடத்தாம சட்னு கண் முன் வாரும்'னு கெஞ்சுனதும் 'டாண்' னு விஷ்ணு ஆஜர்.
"என்னப்பா இவ்ளோ அவசரம்? "
"ஐயோ.... என்னன்னு சொல்வேன். நாளைக்கு இங்கே சுயம்வரம் நடக்கப்போகுது. இந்தப்பேரழகியை நான் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. அவளுடைய அழகுக்குப் பொருத்தமான அழகுள்ளவனா என்னை மாற்றித்தாரும்."
"மன்மதன் ரூபம் வேணுமா? அவன் அழகில் சிறந்தவன்."
"வேணாம் வேணாம்.அவனை விட அழகில் சிறந்த உருவம் வேணும் . ராஜகுமாரியும் அழகில் சிறந்தவனைத்தான் தேர்ந்தெடுப்பாள். அவளுடைய அழகுக்கு ஈடு கொடுக்க உம்மால்தான் முடியும். ஆகவே உம் உருவத்தையே எனக்குத் தரணும். "
'ஓ. நோ ஒர்ரீஸ். இந்தா'ன்னு உருவத்தை மாற்றினார். நாரதர் கண்ணாடியில் பார்க்கிறார் சாக்ஷாத் மஹாவிஷ்ணு!
'தேங்க்ஸ். கல்யாணம் முடிஞ்சு புது மனைவியோடு வைகுண்டத்துக்கு வர்றேன். நீர் உடனே இடத்தைக் காலி செய்யும். ரெண்டு விஷ்ணுவைப் பார்த்தால் குழப்பம் ஏற்படுமு'ன்னு மஹாவிஷ்ணுவை விரட்டினார்.
அடக்கமாட்டாத சிரிப்போடு வைகுண்டம் போறார் மஹாவிஷ்ணு.
மறுநாள் பொழுது புலர்ந்தது. சுயம்வர மண்டபம் முழுசும் போட்டிக்கு வந்த ராஜகுமாரர்களாலும், வேடிக்கை பார்க்க வந்த ஊர் மக்களாலும் நிறைஞ்சு வழியுது. ராஜகுமாரர்கள் வரிசையில் நாரதர் போய் நிக்கறார். மனம் முழுசும் பூரிப்பு! அவரைப் பார்க்கும் மற்றவர்கள் எல்லாம் சுயம்வரம் நடக்கும் இடத்தில் நாரதருக்கு என்ன வேலை? எதுக்காக இங்கே நிக்கறார்ன்னு நினைச்சுக் குழம்பறாங்க. எல்லோர் கண்ணுக்கும் அவர் நாரதராகவேதான் தெரியறார்! அரசரும் வந்தார். ஓஹோ... மகள் யாரை வரிக்கபோறாள் என்று பார்க்க நாரதரும் ஆவலா நிக்கறார்ன்னு நினைக்கிறார்.
மூவுலக அழகும் ஒன்னாய்த் திரண்டு நிற்கும் அழகுச்சிலை போல விஸ்வமோஹினி கையில் மலர் மாலையுடன் அடிமேல் அடி எடுத்து வச்சு ஒவ்வொரு ராஜகுமாரனாய்ப் பார்த்துக்கிட்டே வர்றாள். நாரதருக்கு நெஞ்சு படபடன்னு துடிக்குது. இதோ அடுத்து நம் முன் நிக்கப்போறாள் என்னும் போது அவரை ஏறிட்டுப் பார்த்த ராஜகுமாரி, சட்னு முகத்தைத் திருப்பிக்கிட்டு வேகமா அந்த இடத்தை விட்டு விலகி அடுத்த ராஜகுமாரனை ஏறிட்டுப் பார்க்கிறாள். 'எதுக்கு இந்த சபையில் ஒரு கருங்குரங்கு வந்து நிக்குது'ன்னு அவளுக்குப் பயமும் அருவருப்புமா இருக்கு!
நாரதருக்கு அவள் நம்மை சரியாப் பார்க்கலையோன்னு தோணுது. வரிசையை விட்டு விலகி அவள் போகும் பாதையில் நிற்கும் ராஜகுமாரர்களின் வரிசையில் நைஸா நுழைஞ்சு நிக்கறார். இந்த முறையும் அவரை ஓரக்கண்ணால் பார்த்த விஸ்வமோஹினி, குரங்கு எப்படித் தாவி இங்கே வந்து நிக்குதுன்னு யோசித்தவாறே அடுத்த வரிசை மணமகன்களை நோக்கி நடக்கிறாள்.
அவள் கண்ணுலே நாம் படவில்லையோன்னு நினைச்சு நாரதரும் வெவ்வேற வரிசையில் மாறி மாறிப்போய் நிக்கறார். சபையிலுள்ள சனம் முழுசும் எதுக்காக நாரதர் இப்படித் தாவித்தாவி ராஜகுமாரன்களுக்கிடையில் போய் போய் நிக்கறாருன்னு திகைப்பு.
ராஜகுமாரியைத் தவிர மற்றவர்கள் எல்லோர் கண்ணுக்கும் நாரதராகவும் ராஜகுமாரிக்கு மட்டும் கருங்குரங்குமாக் காட்சி கொடுக்கும் நாரதருக்கு அவர் கண்ணுக்கு மட்டும் தன் உருவம் மஹாவிஷ்ணுவாகவே ஜொலிக்குது.
சுயம்வரத்தில் ஒவ்வொரு முகமாப்பார்த்துக்கிட்டே போன விஸ்வமோஹினி, ஒரு வரிசையில் மஹாவிஷ்ணுவே நிற்பதைப் பார்த்து அவர் கழுத்தில் மாலையைப் போட்டுட்டாள். ஏதோ யோசனையில் இருந்த நாரதர், மக்களின் ஆரவாரம் கேட்டு தன் நினைவுக்கு வந்து என்ன ஆச்சுன்னு பார்த்தால் மஹாவிஷ்ணு மாலையும் கழுத்துமாய் விஸ்வமோஹினி பக்கத்தில் நிக்கறார்.
அவ்ளோதான்...வந்தது பாருங்க ஒரு ஆவேசம் நாரதருக்கு..... விடுவிடுன்னு மஹாவிஷ்ணுவுக்கு எதிரில் போய் நின்னு கோபம் பொங்கும் விழிகளால் முறைச்சுப் பார்த்துத் தகாத சொற்களால் ஏசறார்.
"அடப்பாவி..... அழகிய மங்கையரை அபகரிப்பதே உன் வேலையாப் போச்சா? அன்னிக்கு அப்படித்தான் திருப்பாற்கடலைக் கடைஞ்சப்ப தோன்றிய மஹாலக்ஷ்மியை நீயே எடுத்துக்கிட்டு, அதுலே வந்த ஆலகால விஷத்தை அந்த பேமாலம் சிவனுக்குக் கொடுத்தாய். இப்ப என்னன்னா நான் கல்யாணம் கட்ட நினைச்சுருந்த பெண்ணை உனக்கு மாலை போட வச்சாய். அதான் உனக்கு ஸ்ரீதேவி,, பூதேவி, நீளாதேவி, ஆண்டாள்னு ஏகப்பட்ட மனைவிகள் இருக்க நான் பார்த்து வச்ச பொண்ணையும் நீயே அடையணுமுன்னு எவ்ளோ பேராசை பார் உனக்கு:( எனக்கு வர்ற ஆங்காரத்துக்கு உன்னைச் சும்மா விடப்போறதில்லை. வயிறு எரிஞ்சு கொடுக்கறேன் சாபம். நீ உன் மனைவியைப் பிரிஞ்சு லோலோன்னு அலையப்போறே பார்!"
மஹாவிஷ்ணு சிரிச்ச முகத்துடன், 'அது சரி நாரதரே, நீர்தான் காமத்தை வென்று சிவனைப்போலவே இல்லையில்லை அவரைவிட மேலானவரா ஆகிட்டீரே இப்ப என்ன கல்யாண ஆசை?'ன்னார். அதுவுமில்லாம இப்போ கோபம் வந்து குரோதமாய் என் மேல் சாபம் எல்லாம் விட்டுட்டீரே! காமம் குரோதம் எல்லாம் உம்மிடம் அப்படியே இருக்கேன்னார்.
நாரதருக்கு மானக்கேடாப் போச்சு. கண்ணை மூடி நின்னார். அப்புறம் மெதுவாக் கண்ணைத் திறந்து பார்க்க அவர் ஒரு பொட்டல் காட்டுலே இருக்கார். அழகான நகரம், அரசர், ஊர் மக்கள், அம்பத்தாறு தேசத்து ராஜகுமாரர்கள் ,விஸ்வமோஹினி, மஹாவிஷ்ணு, இப்படி எதுவுமே அங்கே இல்லை. வேகவேகமா வைகுண்டம் போறார்.
சிரிச்சுக்கொண்டே வரவேற்ற மஹாவிஷ்ணுவைப் பார்த்து என்ன ஆச்சுன்னு கேட்க, அவர் சொல்றார் எல்லாமே மாயை. நான் உண்டாக்கிய மாயையில்தான் அரசர், ஊர்மக்கள்,ராஜகுமாரர்கள், விஸ்வமோஹினி எல்லாம் தோன்றினார்கள். நீர் உண்மையாகவே காமத்தையும் குரோதத்தையும் வென்றீரான்னு சோதனை செஞ்சு பார்த்தேன். நீர் ஃபெயில் ஆயிட்டீர் என்று சொல்லிச் சிரிச்சார்.
நாரதருக்கு மானம் மரியாதை எல்லாம் போச்!
ஆனால் அவருடைய சாபம் மட்டும் பலிச்சுருது. பிரம்மச்சாரியின் சாபம் பாருங்க! அதான் ராமாவதாரத்துலே ராமன் சீதையைப் பிரிஞ்சு காடுமேடெல்லாம் லோலோன்னு அலைய வேண்டியதாப் போச்சு!
ஃபிஜி பண்டிட் ரூப் அவர்கள் சொன்ன கதையில் கொஞ்சூண்டு மசாலா லேசாத் தூவி இருக்கேன். கதை துளசிதாஸ் ராமாயணத்துலே வருதாம். ஃபிஜி மக்கள் வால்மீகி வாசிக்கறதில்லை!
மறுநாள் சனிக்கிழமை பகல் 12 மணிக்கு ஹவன்(ஹோமம்) நடத்தி ராமர் பிறந்த நாளைக் கொண்டாடுவதா ஏற்பாடு. கீழே உக்கார பயந்துக்கிட்டு நான் போகலை. அதுக்கு பதிலா அன்றைக்கு மாலை நாம் வழக்கமாப்போகும் இன்னொரு ராமாயண் மண்டலியின் ராம்நௌமி பூஜைக்குப் போனோம். இது ஒரு பள்ளிக்கூட ஹாலில் நடந்துச்சு. எப்படியோ கெஞ்சிக்கூத்தாடி இந்த இடத்தை ஏற்பாடு செஞ்சுருக்கார் நண்பர். அதுவும் பகலில் வேறொரு புக்கிங் இருந்ததால் சாயந்திரத்துக்குத்தான் கிடைச்சது. ராம்நௌமியை ராத்திரியில் கொண்டாடுறோமேன்னு சின்னதா மனக்கலக்கம். பரவாயில்லை இந்திய நேரத்துக்கு இது நண்பகல்தான்னு ஆறுதல் சொல்லிவச்சேன்.
அங்கே அசல் இந்தியாக்காரர்கள் நாம்தான். அதுவும் மந்த்ராஜி (மத்ராஸி) என்பதால் பஜனையில் நமக்காக ஒரு தமிழ்ப் பாட்டு பாடி நம்மை மகிழ்வித்தார்கள். ரொம்ப நேரத்துக்கு அது என்ன பாட்டுன்னே புரியலை.கோபால்தான் கண்டுபிடிச்சார். கற்பூரநாயகியே கனகவல்லி....!!!
இன்னொரு பாட்டு வேணுமுன்னு கேட்டேன். ஆனந்தம் ஆனந்தம் கோபாலா ஆனந்தம் என்று ஒன்னு!!!! ஃபிஜியில் இருந்து தங்கை வீட்டுக்கு விஸிட் வந்த விஜயலக்ஷ்மி மேடம் பாடுனது!
தசரதரின் புத்ரகாமேஷ்டி அத்தியாயம் வாசிச்சு ராமர்பிறந்த நாளைக் கொண்டாடினோம். இன்னிக்கு மட்டும் மொத்தம் அஞ்சு இடத்தில் ராம்நௌமி விழா. எல்லாம் ஃபிஜி இந்தியர்கள் கொண்டாட்டமே! எந்த இந்தியரானால் என்ன நம்ம தேசிய குணத்தையும் ஒருமைப்பாட்டையும் விடமுடியுங்களா? நவகிரகங்கள் போல் ஒன்னா சேர்ந்து இருப்பதுதானே அழகு!
இன்றைக்கு ஞாயிறு மாலை நம்ம ஸ்வாமி நாராயண் கோவிலில் ஸ்ரீராம்நவமி விழா இனிதே நடந்தது. பூஜை முடிச்சு விருந்து சாப்பிட்டுவிட்டு வந்து உங்க எல்லோரும் நடந்தவைகளைச் சொல்லிக்கிட்டு இருக்கேன் இப்போ:-)
குழந்தை ராமனை எட்டிப்பார்த்தேன்.சீதையுடன் இருந்தார்:-)
ராமகதை நடக்குமிடங்களில் எல்லாம் ஒரு முக்கியஸ்தர் ஆஜராவார் இல்லையா. அவருடைய பிரதிநிதியா நானும் மூணு இடங்களுக்குப்போய் கதை கேட்டு வந்தேன்!!!!
ஜெய் ஸ்ரீ ராம்!

மகமாயி.... மஹாமாயா...........
"இப்போ சமயபுரம் போறோம். தரிசனம் முடிச்சுட்டு வேறெங்கேயும் நிக்காம நேர சிங்காரச் சென்னைதான். வேறெங்கேயும் உனக்குப் போகவேணாம்தானே? " யப்பாடா.... என்ன முன்னெச்சரிக்கை. நான் வாயைத் திறக்குமுன் அடுத்த வரி வருது." நாளைக்கு ராத்திரி ஃப்ளைட் இருக்கு, ஞாபகம் இருக்குல்லே?"
ம்ம்...ம்ம்.........
அறையைக் காலி செஞ்சுக்கிட்டுக் கிளம்பும்போது மணி ஒரு ஒன்பது இருக்கும். கொள்ளிடம் பாலம் கடந்து போறோம். இருக்கும் இத்துனூண்டு தண்ணியில் துவைச்சுக் காயப்போட்டுக்கிட்டு இருக்காங்க 'ஈரங்கொல்லிகள்'! வண்ணமயம்தான் போங்க!
அரைமணி நேரப்பயணத்தில் சமயபுரம் வந்தாச்சு. அலங்கார வளைவுக்குள் நுழைஞ்சு போறோம். கொஞ்சம் தூரத்தில் தெப்பக்குளம்! நல்லா சுத்தமா இருக்கே!!! கோவிலை விட்டுக் கொஞ்சம் தள்ளி இருக்கு பாருங்க அதான் சுத்தமா இருக்குன்ற ரகசியம் புரிஞ்சது:-)
கலகலன்னு ரெண்டு பக்கமும் பூஜைப்பொருட்கள் விற்கும் தெருவுக்குள் போனால்.... (வழக்கம்போல) வண்டி இதுக்குமேல்போகாது. இங்கேயே நிறுத்தணுமுன்னு தடாலடியா சொல்லும் சிலர். காதுலே விழாதமாதிரி சீனிவாசன் போய்க்கிட்டே இருக்கார். கோவில் வாசலைத் தாண்டி இருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தினார். இறங்கும்போதே கூட்டமா வந்து மொய்ச்சுக்கறாங்க வியாபாரிகள். கையில் நேர்த்திக்கடனுக்குரிய கண், முகம், கை காலுன்னு உடல் பாகங்கள் நிறைஞ்ச தட்டு.
கோவில் மண்டபம் நிறைய ரெண்டு பக்கமும் கடைகளே கடைகள். கடை வாசலுக்குக் கோலம் போட்டு வச்சுருக்காங்க. பெருக்கித்தள்ளின குப்பைகள் மண்டபம் முழுசும் பக்தர் காலடிகளில் ஒட்டிக்கிட்டு இங்கும் அங்குமாப்போகுது:( ஆரஞ்சும் மஞ்சளுமாத் தாலிக்கயிறு ஒரு கடை முழுசும். விதானத்துலே வரைஞ்சுருக்கும் சித்திரங்களை நின்னு ரசிக்க விடாமல் கடைக்காரர்கள் கூவி அழைக்கிறார்கள். நிக்கவே கூடாது போல:(
நல்ல நீண்ட மண்டபத்தின் பாதியில் நிக்கறாள் சுமி! பெயர் சுமித்ராவாம்! நல்ல அழகிதான்! கடமையே கண்ணாக, காசு வாங்கி ஆசி வழங்கிக்கிட்டு இருக்காள். காவாசிக்கூட்டம் இவளைச் சுத்திதான். மண்டபத்தின் கடைசிக்குப்போறோம்.
நல்ல கூட்டம், தரிசனத்துக்குக் காத்திருக்கு. ஸ்பெஷல்தரிசன வரிசைக்குள் நுழையறோம். டைம் ஈஸ் மணி! கம்பித்தடுப்புகளா நட்டு வச்சுருக்காங்க. கோவில் அர்த்த மண்டபமுன்னு நினைக்கிறேன். தேங்காய் உடைக்க ஒரு அமைப்பு. கோவில் பூஜாரி ஒருத்தர் நின்னு அர்ச்சனைத் தட்டுத் தேங்காய்களை உடைச்சுட்டு தட்டில் போடறார்.
அந்த ஏரியா முழுசும் தேங்காய்த் தண்ணீர் விழுந்து பாசி புடிச்சுக்கிடக்கு. வெறுங்காலை வச்சு அதைக் கடந்து போகும்போது மனசுக்குள் ஒரு சின்ன பயம். வழுக்........ சுத்திவர கல்தரை. ஒரு தேங்காய்நார் நடை விரிப்பு போட்டு வச்சுருக்கலாம். வரிசை வலமும் இடமுமா இருக்க நடுவில் நீண்ட இடம் முழுக்க உண்டியல்களே! சட்னு பார்த்தால் ஏர்லைன்ஸ் கேட்டரிங் தள்ளுவண்டி மாதிரியே இருக்கு! அதே பளபள ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்! ஒன்னு ரெண்டு இருந்தால் சரி. இதென்ன வரிசையா இத்தனை? காணிக்கை போட மறந்துடப் போறாங்களே மக்கள்ஸ்ன்னு நினைவூட்டுறாங்க போல!வலப்பக்கமா சிறப்பும் இடப்பக்கமா பொதுவுமா மெள்ள நகர்ந்து போறோம்.
பக்தர்களுக்கு உதவி வேண்டும் சமயம் டாண்னு வந்து காப்பாற்றும் தேவி என்பதால் சமயபுரம் மாரியாக இங்கே இருக்காள். முன்பொரு காலத்தில் மாரியம்மன் 'அண்ணன் 'வீட்டோட இருந்ததாகவும், இவளுக்கான தனிப்பட்ட பூஜைகளை அங்கே நிறைவேற்ற முடியாமல் இருந்ததாகவும், அதனால் கோபமாவே எப்போதும் இவள் இருந்ததாகவும், இவளைச் சமாதானப்படுத்த அப்போ இருந்த ஜீயர் கொடுத்த ஐடியாவின் படி இவளை இங்கே தனிக்கோவிலில் வச்சதாகவும் ஒரு கதை உலவிக்கிட்டு இருக்காம்.
நம்மூரில் கதைகளுக்கா பஞ்சம். இதோ இன்னொன்னு கேளுங்க.....தில்லிப்படைகளிடம் இருந்து மாரியம்மனின் உற்சவரைக் காப்பாற்ற தூக்கிக்கொண்டு போன சமயம் களைப்பு மிகுதியால் ஓரிடத்தில் இறக்கி வச்சுட்டு பக்கத்தில்ஓடும் கால்வாயில் இறங்கி கைகால்முகம் கழுவிட்டுத் திரும்ப வந்தால் சிலை மாயமாய் மறைஞ்சு போயிருக்கு. தேடிப்பார்த்தும் கிடைக்கலை. ரொம்ப காலம் கழிச்சு ரெண்டு சிறுவர்கள் கண்ணில் பட்டுருக்கு. சேதி தெரிஞ்ச ஊர்ப்பெரியவர்கள் வந்து சேரவும் சிலையை வேறு இடத்துக்குக் கொண்டுபோக உத்தரவாச்சு. யானை மேலே வச்சுக் கொண்டு போறாங்க. ஒரு இடம் கடக்கும்போது யானை நகர மறுக்கவே அங்கேயே அந்தச்சிலையை பிரதிஷ்டை செஞ்சதாகவும் அது ஆதி மாரியம்மன் கோவிலென்றும் சொல்றாங்க.
நதி மூலம் ரிஷி மூலம் மாதிரி இங்கே மாரி மூலமும் கேக்கப்டாது கேட்டோ!
எது எப்படியோ மாரியம்மன் கோவில் கொண்டு, மக்களுக்கு அருள் பாலிக்கிறாள். அதுதான் முக்கியம். இந்தக்கோவில் ஆதியில் நம்ம ரெங்கனின் நிர்வாகத்தில்தான் இருந்தது. அவன் ஒன்பது கோவில்களைக் கட்டிக் காப்பாத்தி வந்துருக்கான். நாம் முந்தி பார்த்த காட்டழகிய சிங்கர் கோவிலும் நம்ம ரெங்கனுடைய அரசாட்சியில்தான். 1984 ஆம் ஆண்டு முதல் சமயபுரம் கோவில் தனியாப் பிரிஞ்சு வந்து தனி ராஜாங்கம் செய்ஞ்சுக்கிட்டு இருக்கு. ஆனாலும் இந்த மாரி, ரெங்கனின் சகோதரியான மாஹாமாயாதேவி என்பதால் இன்றைக்கும் தைப்பூசம் தீர்த்தவாரி சமயம் உடன்பிறந்தாளுக்கு பட்டும் பூவும் தளிகையும் பொறந்த வீட்டு சீர் என்று அனுப்பி வைக்கிறான் நம்ம ரெங்கன்.
கிருஷ்ணாவதாரத்தில் வசுதேவர், குழந்தைக் கண்ணனை கோகுலத்தில் வச்சுட்டு யசோதையின் குழந்தையான மாயாவைக் கொண்டு வந்து இதுதான் எட்டாவது குழந்தைன்னு கம்சனிடம் சொன்ன கதை அநேகமா எல்லோருக்கும் தெரிஞ்சுதான் இருக்கும் இல்லையா? தில்லியில் கூட கல்காஜி கோவில் என்று ஒரு கோவிலுக்குப் போனேன். அது(வும்) மஹாமாயாவின் கோவில்தான். அப்போ அது தெரியாது எனக்கு. சக்திபீடக் கோவில் என்று நினைச்சேன். அதுக்கு வந்த பின்னூட்டங்களால்தான் தெளிவு கிட்டியது.
வரிசை நகர்வது போலவே தெரியலை. பயங்கர சூடு வேற! இத்தனைக்கும் காலை பத்து மணிதான் ஆகி இருக்கு. சூடுன்னதும் ஞாபகம் வருது. சிவன் மன்மதனை எரிச்சார் பாருங்க அந்த சூடு லோகங்கள் முழுசும் பரவி தேவர்களும் கூட சூடு தாங்க முடியாமல் சீதளா தேவியிடம் அபயம் தேடி ஓடி வர்றாங்க. எல்லா சூட்டையும் தானே உள்வாங்கிக்கிட்டாளாம் அம்மன். அதனால் அவள் கருவறையில் எப்போதும் ஈரம் தேங்கிக் குளிர்ச்சியா இருக்கும்படியா அமைச்சுருக்காங்க. காலடியில் தண்ணீர் ஸ்பரிசம் நமக்கும் கிடைக்குது.
ஒரு வழியா கருவறைக்குச் சமீபம் போனது வரிசை. உள்ளே சிவாச்சாரியார்கள் பூஜை செய்யறாங்க. அம்மனின் முகம் சாந்தமா இருக்கு. உக்ர ரூபத்தின் கோரைப்பற்களைப் பிடுங்கி இவளைச் சாந்தப்படுத்திட்டாங்களாம். மூத்த பிள்ளையைக் கூட்டி வந்து கருவறைக்கு ரெண்டு பக்கமும் வச்சவுடன் கோபம் மறைஞ்சே போயிருக்கு! அமைதியான முகத்துடன், எட்டுக் கைகளுடன் இடது காலை மடிச்சு, வலதுகாலைத் தொங்கப்போட்டு அரக்கர்களின் தலையில் வைத்தபடி உக்கார்ந்து இருக்காள். முன்னொரு காலம் நாங்க இங்கே வந்தப்ப அம்மன் காதில் அழகான நட்சத்திர வடிவக் கம்மல் பார்த்துருக்கேன். பளிச்ன்னு ஸ்டார் ஜொலிக்கும்! அதைத் தேடிய என் கண்கள் ஏமாந்து போச்சு. இப்ப வேறென்னமோ நகை போட்டு வச்சுருக்காங்க:( போகட்டும் புது மோஸ்தர் நகை அவளுக்கும்தானே வேணும்!
வலையில் சுட்ட படம்.
மாரியம்மனை கும்பிட்டு விட்டு பக்கவாட்டு கம்பித்தடுப்பு வழியா வெளியே வந்தோம். இப்ப அதிக அளவில் கூட்டம் வருது . என் முன்னொரு காலப்பயணத்தில் நேரா உள்ளே வந்து அம்மனை வெகு கிட்டக்கப் பார்த்த நினைவு. கோவிலுக்கு வயசு ஆயிரத்துக்கும் மேலேன்னுசொல்றாங்க. ஆனால்..... தில்லிப்படைகள் காலக் கட்டம் பார்த்தால்.... அப்படித் தோணலை. போகட்டும் சாமி வயசையே கோவிலுக்குச் சொல்வாங்களா இருக்கும். ஆனா....சாமிக்கு வயசு எவ்ளோன்னு யாரு கணக்குப் போடமுடியும்?
காலையில் அஞ்சு மணியில் இருந்து இரவு ஒன்பது மணிவரை கொஞ்சம்கூட அசராமல் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் அம்மா. எனக்கு இது ரொம்பப் பிடிச்சுருக்கு. நம்மையெல்லாம் காப்பதைவிட அவளுக்கு வேறு என்ன வேலை இருக்காம்? கவர்மெண்ட் ஆஃபீஸ் எம்ப்ளாயியா என்ன? டாண் டாண்ணு காபி ப்ரேக், லஞ்ச் ப்ரேக்ன்னு தவறாமல் எடுத்துக்கிட்டு சாயங்காலம் அஞ்சானதும் கிளம்பிப்போக? பொதுவா எல்லாக் கோவில்களுமே இப்படி பகல் பொழுது முழுசும் திறந்திருந்தால்தானே மக்களுக்கு நல்லது! அர்ச்சகர்களுக்கு ஓய்வு வேணுமுன்னா ஷிஃப்ட் ட்யூட்டி போட்டுக்கலாம்தானே?
தேர்த்திருவிழா,தெப்பக்குளத்திருவிழான்னு விழாக்கள் பல நடந்தாலும் பூச்சொரிதல் விழா ஒன்னு சிறப்பா நடக்குதாம். அப்ப அம்மனே மக்களுக்காக விரதம் இருக்காளாம். கேக்கவே ஆசையா இருக்கு. ஒரு திருவிழா வந்து பார்த்தால் நல்லா இருக்கும். ஆனால் கூட்டத்தை நினைச்சாலே பகீர்:(
மாரியம்மன் கோவில்களில் வழக்கமா மக்கள் நேர்ந்துக்கும் பிரார்த்தனைகள் எல்லாம் இங்கேயும் நடக்குது. குழந்தை வரம் வேண்டும் மக்கள் பிரார்த்தனை நிறைவேற்ற கரும்புத்தொட்டிலில் குழந்தையைக் கிடத்திக் கோவிலைச் சுற்றி வந்து கும்பிடறாங்க. அக்கம்பக்கம் பதினெட்டுப்பட்டிக்கும் ஆத்தாதான் குலதெய்வம்!
இவ்ளோ புகழ் பெற்ற கோவிலை இன்னும் சுத்தமா வச்சுருக்கலாம். ஆனால் எங்கே:(
அசுத்தம் போதாதுன்னு பிச்சைக்காரர்கள் தொல்லையும் அதிகமா இருக்கு. அதிலும் சின்னக்குழந்தைகள் கையேந்தி நிற்பதைப்பார்த்தால் ..........ப்ச். என்னவோ போங்க:( ஒருத்தருக்கு கொடுத்தவுடன் ஒரு படையே திரண்டு ஓடி வருது:(
வண்டியைத் திருப்பி சென்னைக்குப்போகும் ஹைவேக்குக் கொண்டுவந்துட்டார் சீனிவாசன். பரவாயில்லை ஒன்னரை மணி நேரத்தில் தரிசனம் முடிச்சுட்டோம். ஆனால் கோவிலைச் சுத்திப் பார்க்கலை. எல்லா இடத்திலும் கம்பித்தடுப்பு, தூண்களைச் சுற்றிக் கும்பல் கும்பலா மக்கள்!
டோல்ரோடு. அங்கங்கே காசு கட்டிட்டுப் பயணம் தொடர்கிறோம். எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு இடத்தில் கட்டிட்டுப் போகும் வசதி ஏன் வைக்கலை? இந்த அழகிலே பாக்கிச் சில்லறை கொடுக்கவே மாட்டேங்கறாங்க:( முண்டியம்பாக்கம், திண்டிவனம் எல்லாம் கடந்து ஆர்யாஸ் கார்டன் என்ற ரெஸ்ட்டாரண்டில் பகல் சாப்பாடு. பரோட்டாதான். சுமாரா இருந்துச்சு. ஓய்வறையும் சுமார் ரகம். அதாவது இருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்கணும்!
இப்போ பகல் ஒன்னரை மணி ஆச்சு. கிளம்பினோம்.
கொஞ்ச தூரத்தில் ஒல்லியா ஒரு ஹனுமனைப் பார்த்தேன். ஒரு சின்னக்குன்றின் மேல் ஒரு கோவில்கண்ணில் பட்டது. அப்புறம் இன்னும் கொஞ்ச தூரத்தில் தவம் செய்யும்சிவன். ஏதோ ஆஸ்ரமமாம்.
புது ஹைவே தரமா இருக்குன்னு வண்டி பறக்குது. நின்னு விசாரிக்கமுடியாதபடி ஒரு வேகம். மேல்மருவத்தூரைக் கடந்தோம். ஊரே கலகலன்னு இருக்கு. மதுராந்தகம் தாண்டும்போது... 'ராமா.... உன்னைப்பார்க்க இன்னும் வேளை வரலை'னு முனகினேன். கோவில் சாத்தி இருக்கும் நேரம் இப்போ:( எத்தனை முறை இந்தப்பக்கம் போய் வந்திருப்போம்! ஹூம்....
தாம்பரம், தி. நகர் னு அறைக்கு வந்துசேர்ந்தோம். பகல் மணி மூணரை! நல்லவேளை மாலைநேர ட்ராஃபிக்கில் மாட்டிக்கலை:-)
எங்கே மகளைக் காணோமுன்னு ஒரு குரல்! எனக்கொரு சர்ப்ரைஸ் கிடைச்சது அங்கே!
தொடரும்................:-)

↧
ANZAC DAY!
Australia New Zealand Army Corps Day.
ஒவ்வொரு வருசமும் ஏப்ரல் மாசம் 25 ஆம் தேதி இந்த தினத்தை இங்கே
நியூஸிலாந்துலே அனுஷ்டிக்கிறோம். தலைப்பே உங்களுக்கு விஷயத்தைச் சொல்லிடும். ஆனாலும் அப்படியே விட்டுட்டா நான் 'துளசி'யா இருக்க முடியுமா?
உங்க பள்ளி நாட்களிலே அசோகரின் காலம், பொற்காலம் என்று ஏன் கூறப்படுகிறது என்ற கேள்வி, கட்டாயமா எல்லோருக்கும் ஒருமுறையாவது பரீட்சையில் கேக்கப்பட்டிருக்குமே!
இல்லைன்றவங்க கை தூக்குங்க! இதெல்லாம் ஹிஸ்டரிங்க!!!
1915லே உலக மஹா யுத்தம் நடந்ததுன்னு அநேகமா எல்லோரும் சரித்திரப் பாடத்தில் படிச்சிருப்பீங்கதானே! இது முதல் யுத்தம்!
யுத்தம் மஹா மும்முரமா நடந்துக்கிட்டு இருக்கு. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு ஒத்தாசையா இருக்கறதுக்காக நியூஸிலாந்து, அஸ்ட்ராலியாவிலிருந்து ராணுவ உதவியாக போர்வீரர்கள் போறாங்க.என்ன இருந்தாலும் தாய்நாட்டுப் பாச உணர்வு போகாதில்லையா? அங்கிருந்து வந்தவங்கதானே இவுங்க!
இப்ப இந்த நாடுகளிலே அரசாங்கம் சுயேச்சையா நடந்துக்கிட்டு இருந்தாலும், இங்கே நாட்டு அதிபர், முதல் குடிமகனா( ப்ரெஸிடெண்ட் கிடையாது). இப்பவும் கவர்னர் ஜெனரல்தான் இருக்கார்!
இவுங்களுக்கு போஸ்டிங் துருக்கியிலே இருக்கற Gallipoli Peninsula என்ற இடத்துலே. முக்கிய காரணம் கருங்கடலிலே மாட்டிக்கிட்ட கோதுமைக் கப்பலை Dardanelles Straits வழியாக் கொண்டு போகறதுக்கு உதவியா, அந்த ஜலசந்தியைத் திறக்கணும்.
நியூஸியிலே இருந்து 8556 வீரர்கள் புறப்பட்டுப் போனாங்க. அதில் முக்காவாசிப் பேரு இளைஞர்கள்.அங்கே யுத்தத்திலே ஈடுபட்டு 2721பேர் 'வீரமரணம்' அடைஞ்சாங்க! மொத்தம் 260 நாட்கள் யுத்தம் நடந்தது.4852 பேருக்கு காயம்! மீதி ஆட்கள் நல்லபடியா சேதமில்லாம திரும்பி வந்துட்டாங்க!
இவுங்க அங்கே போய்ச் சேர்ந்த நாளுதான் இந்த ஏப்ரல் 25ன்றது! அதுக்கப்புறம் இந்த நாளை நினைவிலே வைக்கணும்,
இவ்வளவு ச்சின்ன நாட்டுலே எவ்வளவு தேசபக்தி, ராஜ விசுவாசம், தைரியம் எல்லாம் இருக்குன்னு வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லணுமுன்னு திரும்பி வந்த ராணுவ வீரர்களும், வீராங்கனைகளும் முடிவு செஞ்சு, அரசாங்கமும் இவுங்களோட தேசபக்தியைப்
பாராட்டும் விதமா இதை அரசாங்க விடுமுறையாக அறிவிச்சது!
மரணமடைஞ்சவங்களை புதைச்சிட்டு,துருக்கியிலேயே ஒரு நினைவு மண்டபம்( வார் மெமோரியல்) கட்டினாங்க.
இங்கேயும் எந்தெந்த ஊர்களிலே இருந்து ராணுவ வீரர்கள் போனாங்களொ அங்கெல்லாமும் நினைவு மண்டபம்
எழுப்பினாங்க. வீரமரணம் அடைஞ்சவங்க பேருங்களையும் அங்கே செதுக்கி வச்சிருக்காங்க.
Returned Service men & women Association (RSA) இதையெல்லாம் செயல்படுத்தறதுலே கவனம் செலுத்தி எல்லாம் முறைப்படி நடக்க உதவிச்சு!
ஒவ்வொரு வருஷமும், இந்த நாளுலே அதிகாலையிலே அந்தந்த ஊர்களிலே இருக்கற நினைவு மண்டபங்களில் விசேஷமான ப்ரேயரும், அங்கங்கே உள்ள ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடக்கும். அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்வார்கள். லோகல் கம்யூனிட்டி ஆட்களும் ஏராளமா இதுலே பங்கெடுத்துக்குவாங்க.
வீரமரணம் அடைந்தவரின் குடும்பத்துக்கு( அவுங்க பரம்பரைக்கு) அன்னைக்கு விசேஷ மரியாதை! அவுங்களும் அவருக்குக் கிடைத்த மெடல் மற்ற சமாச்சாரங்களை நல்லா மினுக்கி எடுத்துக் கொண்டுவருவாங்க!
முதியோர்கள் இல்லத்துலே இருக்கற வயதான ராணுவ வீரர்கள், இந்த நாளுக்கு ஒரு மாசத்துக்கு முன்னேயே அவுங்க மெடல்களையெல்லாம் பாலீஷ் செஞ்சு, அடுக்கி, ராணுவ உடையோட கம்பீரமா இதுலே பங்கெடுக்க
ஆர்வம் காட்டுவாங்க. சக்கர நாற்காலியிலே இருந்தாலும் கம்பீரம் கொஞ்சம் கூட குறையாம, ஒரு பெருமிதத்தோட அன்னைக்கு வலம்வருவதைப் பார்த்தா நமக்குமே ஒரு உற்சாகம் வந்துரும்!
நம்ம ஊர் கொடிநாள் போலத்தான் இதுவும். சிகப்புக் கலருலே இருக்கற பாப்பிப் பூ( ப்ளாஸ்டிக் தான்)சட்டையிலே குத்திக்கிட்டு, உண்டியல் குலுக்குவாங்க. காசு போட்டவுடன் நமக்கும் ஒரு பாப்பிப் பூ கிடைக்கும். அன்னைக்கு டெலிவிஷனில் வர்றவுங்க( செய்தி அறிவிப்பாளர், வானிலை சொல்றவுங்க, விளையாட்டு நியூஸ் சொல்றவுங்கன்னு) எல்லாம் பாப்பிப் பூவோட தரிசனம் தருவாங்க! இந்தக் கூட்டத்துலே நாமும் சட்டையிலே பூவோடு இருப்போம்.
இந்த 'பாப்பி டே'ன்றது ஏப்ரல் 25 க்கு முன்னாலே வர்ற வெள்ளிகிழமை. அதனாலே இந்த வருசத்து'டே' 19 ஆம்தேதியே முடிஞ்சிடுச்சு! நிறைய வாலண்டியருங்களும், பழைய ராணுவ வீரருங்களுமா எங்கே பார்த்தாலும்,
குறிப்பா எல்லா ஷாப்பிங் மால்களிலும் நிறைஞ்சு இருப்பாங்க( இருந்தாங்க!)
அரசாங்க விடுமுறையை எல்லோரும் அனுபவிப்பாங்க. கடைகண்ணிங்கெல்லாம் பகல் 12 மணிவரை மூடி இருக்கணும்.
காலையிலே தேவாலயங்களிலும் விசேஷ பூஜை நடக்கும். இதேமாதிரி அண்டைநாடான அஸ்ட்ராலியாவிலேயும் நடக்குது.
கல்லிபோலியிலே இருக்கற வார் மெமோரியலுக்கு, இந்த நாட்டுப் பிரதமர் வருசாவருசம் போய், அங்கே நடக்கற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, அரசாங்க மரியாதையைச் செலுத்திவிட்டு வருவார்!
நாங்க இருக்கற ஊரான கிறைஸ்ட்சர்ச்சிலே ஊருக்கு நடுவிலே ஒரு வார் மெமோரியல் இருந்தாலும், இங்கே ஓடற நதியின் குறுக்காக ஒரு பாலம் கட்டி, அதுக்கு 'ப்ரிட்ஜ் ஆஃப் ரிமெம்பரன்ஸ்'ன்னு பேரு வச்சிருக்காங்க.
அங்கே ஒரு நுழைவாயில் ஒண்ணு, கற்களால் கட்டி, ஒவ்வொரு கல்லுலேயும் இந்த போரிலே ஈடுபட்ட நாட்டோட பேரையெல்லாம் செதுக்கி இருக்காங்க! வருசாவருசம் இதுக்கு பெயிண்ட் அடிச்சு, இந்த இடத்தை
அழகுபடுத்தி வைப்பாங்க. இதுவும் ஒரு டூரிஸ்ட் அட்ராக்ஷந்தான்!
சமீபத்து நிலநடுக்கத்தால் சிட்டி மாலுக்கு முன்னால் நிக்கும் ப்ரிட்ஜ் ஆஃப் ரிமெம்பரென்ஸ் (Bridge of remembrance) வளைவுக்கு நல்லவேளையா சேதம் ஒன்னும் அதிகமில்லை. (முதலாம் உலகப்போரில் உயிர்நீத்த நியூஸி ராணுவத்தினர் நினைவுக்காக கட்டியது நவம்பர் 11, 1924 ) வயசு தொன்னூறுன்னாலும், இதை, சிட்டிக்கவுன்ஸில் அப்பப்பப் பழுது பார்த்துச் சுத்தப்படுத்திப் புதுசு போல வச்சுருக்கும். ராணுவ வீரர்கள் ஆற்றின் குறுக்கா அப்போ இருந்த மரப்பாலத்தின் மீது நடந்து போருக்குப் போனாங்களாம். அதான் இந்த இடத்தின் விசேஷம்.
எங்கூர் வார் மெமோரியல் (இடது பக்கம் இருப்பது) இடிபாடுகளில் சிக்கிக்கிடக்கு:(
ரெண்டு வருசத்துக்கு முன்னே வந்த நிலநடுக்கம் எங்க வார் மெமோரியலையும் விட்டு வைக்கலை. கிட்டே போகமுடியாத நிலை. கம்பிக்குப்பின் நின்னு பார்க்க வேண்டியதுதான்:(
இங்கிருந்து டூரிஸ்ட்டுங்களைக் கொண்டுபோய், கல்லிப்போலியைச் சுத்திக் காமிச்சு, அங்கே 'அன்ஸாக் வாக்' கொண்டு போய் திருப்பிக் கூட்டிட்டு வர்றதும் இப்ப ஆரம்பிச்சு,நல்ல பிஸினெஸா ஓடிக்கிட்டு இருக்கு!
இப்ப 98 வருசமாச்சு. நூறாவது ஆண்டு விழாவை அட்டகாசமாக் கொண்டாடுறதுக்காக இப்பவே தீவிரமாத் திட்டம் தீட்டறாங்களாம்.
எது எப்படி இருந்தாலும், ராணுவம்ன்னு சொல்றது ஒரு நாட்டுக்கு எவ்வளவு தேவையானதுன்னு உங்களுக்கேத் தெரியும். நியூஸியில் எனக்குரொம்பப்பிடிச்ச விஷயம் என்னன்னா நன்றி மறவாமை. ரொம்பச்சின்ன ஊர்களிலும் கூட ஒரு வார் மெமோரியல் கட்டாயம் இருக்கும். இத்தனைக்கும் அங்கே இருந்து போருக்குப் போன ராணுவவீரர் ஒரேஒருத்தரா இருந்துருப்பார்!
உலக நாடுகளிலே எதுவானாலும் சரி, தாய் நாட்டுக்காக உயிரிழந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தறது அந்தந்த நாட்டுலே இருக்கற ஒவ்வொரு குடிமகன்/மகளுக்கும் கடமை இல்லையா?
ராணுவ வீரர்கள் செய்யற பணி நிஜமாவே மகத்தானதுதான்!!!!
ஜெய் ஜவான்!
PIN குறிப்பு :வேறொரு பேட்டையில் இன்று எடுத்த சில படங்கள் (கடைசி மூன்றும்) இத்துடன்.